Jump to content

வாலிப வயதுக் குறும்பு. பாகம் 6


Recommended Posts

இப்பதிவை தொடரவேண்டி இருப்பதால் வரும் பதிவு வாலிபவயதுக் குறும்புக்கு சற்றும் பொருத்தமற்றுத் தோன்றுகிறது ஆகவே தொடரப்போகும் பதிவை "மஞ்சு என் உயிர் நீதானடி" என்ற தலைப்பில் பதியவுள்ளேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
 
 
"உன்னுடைய அப்பாவின் ஆட்கள்தானே நீதவான்! அவரிடமும் ஒரு நற்சான்றுப் பத்திரம் வாங்கினால் உன்னைத் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்த்துவிடுவதற்கு உதவியாக இருக்கும்." மாமாவின் ஆலோசனை அவனை நீதவான் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. சொந்தம்தான் , ஆனாலும்! அவன் முன்விறாந்தை தாண்டி உள்ளேபோய்ப் பழகமுடியாத ஒரு தராதரப் பந்தம். அங்கிருந்த வாங்கில் போய் இருந்தான். சிறு மங்கை ஒருத்தி வந்து விசாரித்தாள். அவள் போனதும், அவர் வந்தார். வந்த விபரம் சொன்னான். ஓ அப்படியா! நீர் இன்னாருடைய மகனா! சரி இரும் வருகிறேன். சொந்தம் என்று தெரிந்தபின்பும் அதனைப் பாராட்டப் பச்சைத் தண்ணீரும் வரவில்லை. ம்... ம்... எனக்கும் காலம் வரும்தானே..! சிந்தனை சுவாசத்தில் புகுந்து பெருமூச்சை வெளியே அனுப்பியது. "டேய் ஆனந்தன்!" யாரோ அவசரமாக அழைத்தது வெளிப்புறத்தில் கேட்டது. நீதவான் வீட்டு முன்கேற்றில் அவன் நண்பர்கள் மூவர். இரு துவிச்சக்கர வண்டிகளில்.... பதட்டம் அவர்களின் முகத்தில் தெரிந்தது. அவர்களிடம் செல்வோமா! அதற்குள் நீதவான் வந்துவிட்டால்? தயங்கினான். "டேய் வாடா" நண்பன் பாலா பல்லை நெருமிக் கூப்பிட்டது ஆச்சரியமாக இருந்தது!. "முக்கியமான வேலைஒன்று..." சத்தமின்றி மெதுவாகக் கூறினான். "நீ வாறாயா நான்வரட்டா!!" பாலா வண்டியைக் கோபத்துடன் கீழே போடப் போனான். வேறு வழியின்றி வீட்டின் உட்கதவைத் திரும்பித் திரும்பிப் பார்த்துச் சென்றவனை, "ஏறடா" என்றான் பாலா.  "டேய் அவர் இருக்கச் சொன்னவர், நான் இல்லாட்டில் என்ன நினைப்பார்..." அவன் முடிக்கவில்லை. பாலா ஆனந்தன் சட்டையைப் பற்றிப் பிடித்து இழுத்து முன்னால் ஏற்றி அழுத்திப்பிடித்தபடி, வண்டியை மிதித்து ஓட்டினான். "டேய்  டேய் என்னடா செய்யிறியள் அந்தாள் என்ன நினைக்கும்! என்ரை வண்டி..."  "அதைச் சீலன் கொண்டுவருகிறான். சத்தம்போடாமல் வா..." துவிச்சக்கர வண்டிகள் அவன் வீடுநோக்கிப் பறந்தன. 
 
அவர்கள் விபரம் சொல்லாதது... கோபம் உச்சம் தலலைக்கு ஏறியது. ஆனாலும் உயிர் நண்பன், தடியன், பாலாவின் அழுங்குப்பிடி அவனை அசைய விடவில்லை. சே... நீதவானிடம் அவன் எப்படித் திரும்பப் போகமுடியும்? நற்சான்றுப் பத்திரம் வாங்க முடியும்? அவர் என்னை, என்ன நினைப்பார், நண்பர்கள் ஏன் இப்படி...? அவன் வீடு தெரிந்தது. வீட்டின் முன்னால் கூட்டம்!!... "என்னடா நடந்தது?..."  நீதவானுக்கு வரப்போகும் சினம், நற்சாட்சிப்பத்திரம் எல்லாம் நினைவிலிருந்து பறந்தது. அவன்பதறினான்!. விழி பிதுங்க ஏதோவெல்லாம் ஒரு கணத்தில் நினைவில் வர நடுங்கினான். அருகே வந்தபோது அது தன்வீடல்ல, பக்கத்து மஞ்சுவின் வீடு எனத்தெரிந்தது. மாமிக்கு ஏதேனும்... மாமாவைப் பறிகொடுத்து இரண்டுமாதமாகத் தவித்த அவரும் போய்விட்டாரா..?  மஞ்சு துடித்துப்போவாளே... சற்றுப் பதறியவனுக்கு வரப்போவது பேரிடி என்று அப்போது தெரியவில்லை. சனக்கூட்டம் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் அலைமோதியது. அழுகைக் குரல்களும் ஒப்பாரிச் சத்தமும் அனைவரையும் பரிதவிக்க வைத்தது. என்ன நடந்தது?... ஏது நடந்தது..? என்பதை அறியவேண்டி அனைவரும் ஆலாய்ப்பறந்தனர். அழுகைக் குரல்களில் ஒரு குரல் பாடிய ஒப்பாரிப் பாட்டு மட்டும்தான் ஆனந்தன் காதுகளுள் பழுக்கக் காச்சிய கம்பியாகத் துளைத்து. அவன்  ஐயோ! என்மஞ்சு!!... எனக் கதறினான்.
 
அவன் கதறலை யாரும் கேட்பதற்கு முன்பாகப் பதறி, ஆனந்தனின் வாயைப் பொத்தினான் பாலன். அவனை அவன் வீட்டிற்குள் இழுத்துச்சென்று அறைக்குள் தள்ளி, கதவு யன்னல் எல்லாம் இழுத்துப் பூட்டினான். "மச்சான் மஞ்சுவின் அப்பாவும் அம்மாவும் எல்லாவற்றிற்கும் நீதான் காரணம் என்று கொதித்துப்போய் உள்ளனர். ஆனாலும் மானம் கருதி ஊருக்குமறைக்க பொங்கும் கோப தாபங்களை எல்லாம் பெரும் பாடுபட்டு அடக்கி வைத்துக்கொண்டு உள்ளே குமுறுகின்றனர். இப்போது நீ இருப்பது அறிந்தால், உன் குரல்கேட்டால், அவர்கள் வெடித்துச் சிதறுவது உண்மை. நடந்தது வெளிவந்தால்..!!! ஊரே உன்னைக் காறித்துப்பும். உன் மஞ்சு இறந்துவிட்டாள் என்று இரக்கப்படாது அவள் உயிரற்ற உடலிலும் துப்புவார்கள். இரு வீட்டாரினதும் குடும்ப மானமும் போய்விடும்,.கொஞ்சம் அமைதியாக இருடா." ஆனால் ஆனந்தனுக்கு இனி அமைதியா..! வாழ்வா...! அது எங்கே இருக்கிறது...? இதயத்தை யாரோ பிய்த்தெடுத்துவிட  அங்கு பாயவந்த இரத்தம் இதயத்தைக் காணாமல் மேலே ஓடிக் கண்வழியாக் கொட்டியது. 
 
ஆயிற்று! மஞ்சுவின் அடக்கம் விரைவாகவே நடந்து முடிந்தது. மஞ்சு; அவள் தன் மாமனை சிங்களக் காடையர் துண்டு துண்டாக வெட்டும்போது தன் கண்களால் பார்த்தவள். மாமி மயக்கமடைந்து கிடந்தபோதும், பக்கத்து வீட்டு அப்புகாமியின் துணையுடன் அவரை அனுராதபும் கச்சேரிக்குக் கொண்டுசென்று, பின் வீடுவரை தன்னந் தனியனாக நின்று கொண்டுவந்து சேர்த்தவள். அத்தனை உறுதியும் துணிவும் கொண்ட பெண் அவள்... ஏன் இப்படி??... மாமாவின் கொடூர மரணம், மாமி இன்றும் உணர்வில்லாதவராய்!.. அனுராதபுர அவலங்களை நினைப்பதில்லை என்று அவன் தலையில் அடித்துச் சத்தியம் செய்தாளே!!.. எப்படிக் கோழையானாள்...! அவனுடைய ஆதரவான அணைப்பிலும், நம்பிக்கைதரும் உறுதிமொழிகளிலும் கவலைகளை மறந்து, தன்னையும் மறந்த இன்பநிலையில் பூரித்துக் கிடந்தவள்... எப்படி! இன்று தன்னையே அழித்துவிட எண்ணினாள்? விளைவுகள் வெளிவந்து அவளுக்கு அவமானம் தந்தாலும்! அந்த அவமானங்களைத் தான் ஏற்று, அவளைத் தன் உயிருக்கும் மேலாக வாழவைப்பேன் என்று அவனும் சத்தியம் செய்தானே!! சத்தியத்தை அவள் நம்பவில்லையா...? அவன்மீது அவளுக்குள்ள நம்பிக்கை அவ்வளவுதானா..? ஏன் இப்படிச் செய்தாள்? அவன் துயர்தாங்க முடியாது தவித்தான் 'அவலச் சா என்றால் எரிக்கக் கூடாதாம். சடங்கும் கூடாதாம்.' ஆனால்! மஞ்சுவின் சாவு அவலச்சாவல்ல!!. "அவள் வயிற்றில் வளர்ந்த கல்லை அவளும் அறியவில்லையாம்!! அது இன்று வெடித்துவிட்டதாம்." மஞ்சுவின் தந்தை தன் செல்வாக்கால் வைத்திய அறிக்கைபெற்று, அவள் உடம்பை வெட்டிக் கீறிக் கிழிக்காது, முறைப்படி சடங்குசெய்து சாம்பலாக்கிவிட்டவர் அனலாகத் தகித்தார். ஆனந்தனைப் பழிவாங்கத் துடித்தார், அது மஞ்சுவின் அம்மாவில் தெரிந்ததையும் பாலன் அறிந்ததால்தான் ஆனந்தனை அறையில் பூட்டி அடைத்தான்.
    
அறைக்குள்ளே முடக்கப்பட்ட ஆனந்தன் உயிரும் எரிந்து சாம்பலாகியது. அவன் உடல் அசைவைக் கண்டுதான் அவனைப் பெற்றவர்களும் நண்பர்களும் ஆறுதலடைந்திருந்தனர். ஆனால் ஆனந்தனுக்கோ.! அவன் உயிரான மஞ்சுவின் இறுதிக்  கிரிகைகளைக்கூட காணக் கொடுத்துவைக்காத அவலம் வதைத்தது, வறுத்தெடுத்தது. இரவும் வந்தது. ஒரு கணம்கூட அவனை விட்டுப் பிரியாதிருந்த பாலன்கூட பிரியவேண்டி வந்தது. நேற்று இரவு, இதேநேரம்.... அவன் மஞ்சுவின் அணைப்பில் யாருக்கும் தெரியாது ஆனந்தமாக இருந்த நினைவு இப்போது வந்து வாட்டி வதைத்தது. இன்று அவள் இல்லை. இந்த உலகில் அவனுக்கென்று எதுவுமில்லை... அவன் ஒரு முடிவிற்கு வந்துவிட்டான்! உலகத்தை உணர்ந்த வேதாந்திபோல் பேசியது, கூடியிருந்தவர்களின் பயத்தையும், மனப்பாரத்தையும் சற்றுப் போக்கியது. ஒரு வாய் தண்ணீர் அருந்தமாட்டானா!... என்று தவித்த தாய் கொடுத்த தேனீரையே தாயை அணைத்தபடி குடித்தான். இரவு உணவும் சிறிது உட்செல்லவே, ஆறதல்பெற்ற அந்தத்தாய், "விதியை யாரால் வெல்லமுடியும்? எதையும் யோசிக்காமல் படுராசா. காலம் ஆறுதல்படுத்தும்" என்று அவனுக்குப் படுக்கைபோட்டுவிட்டு, மஞ்சுவையும் மகனையும் நினைத்து அவள் உள்ளம் அழுவதை வெளிக்காட்டாமல், அவன் தலையைக் கோதிவிட்டு, அவன் கண்ணயர்ந்ததும் எழுந்து வெளியேசென்று தேம்பித் தேம்பி அழுதாள். தன் மகனுக்கு இப்படி ஒரு அவலமும், அவப்பெயரும் ஏற்படுமென்று அவள் கனவிலும் கருதியதில்லை. அவன் ஆசைகளைத் தவறென்று தடுக்காது விட்டது அவள் தவறோ..? மஞ்சுமீது அவள் எத்தனை நம்பிக்கை வைத்திருந்தாள்!. அவள்கூட ஏமாற்றி விட்டாளே!!. 
 
செத்தவீட்டு அரவங்களும் அடங்கி அனைவரும் உறங்கச் சென்றுவிட்ட நேரம். கவலைகள் எத்தனை கனதியாக இருந்தாலும், அவற்றைச் சுமக்கும் உள்ளத்தைக் கொண்ட உடல், நித்திரையுடன் போராடி வெல்வது என்பது கடினமானது. மஞ்சுவின் பெற்றோருக்கு ஆறுதலளிக்க அங்கு தங்கியவர்களின் குறட்டையையும் மீறி மஞ்சுவின் அம்மாவின் தீனக்குரல்மட்டும் அந்தக் காரிருளையும் அழவைத்துக் கொண்டிருந்தது. அவன் உயிரும் உடலும் மஞ்சுவை வா! வா! என்று அழைத்தது. அவள் மறுத்தாள். பதிலாக, "நீ என்னிடம் வா என் உயிரே!" என்றழைத்தாள். அவன் புறப்பட ஆயத்தமானான். அவனது அறையில் அவனுடன் வந்து படுக்கும் தம்பி தங்கைகளும் அன்று படுக்க  வரவில்லை. அவர்கள் முகத்தில் அன்று அவன் பயத்தைக் கண்டான். அந்தப் பயத்தினாலோ என்னவோ, அனைவரும் அம்மாவின் அறையில் அம்மாவோடு ஒட்டிக்கொண்டு படுகப் போய்விட்டார்கள். அப்பா கவலையை மறக்க மருந்ததைக் கொஞ்சம் அதிகமாகவே அருந்தியிருப்பார். பாவம் மஞ்சுவின் அப்பா அம்மா முகத்தில் விழிப்பதற்கும் முடியாது செத்தவீட்டுக்கும் போகமுடியாத கவலை. குறட்டையும் அவலமாகவே விறாந்தையில் கேட்டது. 
 
ஆனந்தன் எழுந்தான் அவனறையில் இருந்த சாமிப்படத்தின்  தூண்டாமணி விளக்கு மெல்லிய ஒளியை அறையில் வீசியது. மருந்து அலுமாரியை மெள்ளத் திறந்தான். அப்பா சேகரித்து வைத்திருக்கும் மருந்துகள் அத்தனையும், அங்குதான் வரிசையாக இருந்தன. குடும்பத்துக்கும், அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் வரும் சிறு சிறு வருத்தங்களுக்கு அவர்தான் வைத்தியர். தவிர நுளம்பு, பல்லி, பூச்சி, எலிகளுக்கு வேண்டிய மருந்துகளும் இடம்பெற்றிருந்தன. பூச்சிமருந்து கைக்கு வந்தது. தாய் தந்தை, தம்பி தங்கைகள், நண்பர்கள் இந்த உலகத்தையே மறந்தான். மஞ்சுமட்டுமே நினைவில் நின்றாள். அவளிடம் நான் செல்லவேண்டும். மெதுவாகக் கதவை உட்புறம் தாழிட்டவன், சாமிப்படத்துக்கு முன்னால் நின்று, "இறைவா என்னை என் மஞ்சுவிடம் சேர்த்துவிடு"  மன்றாடியபடி மூடியைத்திறந்து அடித்தொண்டைக்குள் ஊற்றியவன், நாற்றமும் எரிவும் தாங்க முடியாது துடிதான். மஞ்சுவிடம் போகப்போகிறேன் என்ற எண்ணம் அதனைத் தாங்கவைத்தது. மெள்ளவந்து படுத்தவனுக்கு எரிவு மேலும் அதிகமாகி வயிறு, நெஞ்சு, தொடங்கி உடலெல்லாம் தகித்தாலும், விரைவாக உயிர் போகவேண்டும் என்றுதான் அதிகம் தவித்தான்.
 
சாவு இன்னமும் வரவில்லை! அதனை விரைவுபடுத்த மீண்டும் மருந்து அலுமாரியைத் திறந்தபோது, எலிமருந்து மங்கலாகத் தெரிந்தது. எடுத்தவன் கைகள் மூடியைத்திறக்க வலுவின்றிப் போனதுகண்டு பல்லினால் கடித்துத் திறந்தான். அத்தனையும் ஒரே மூச்சில் குடித்தான். முன்போல் இப்போது எரிவில்லை, நாற்றமும் தெரியவில்லை, கசப்பும் பெரிதாக இல்லை. இனி இறந்துவிடுவேன்!.. மஞ்சுவை அதிவிரைவில் காணவேண்டும்! ஆவல்பொங்கியது!! ஆட்டம்கண்ட உடலைச் சாய்த்துப் படுக்கையில் கிடத்தினான். இறந்துவிட்டேனா? என்று அவன் எண்ணியபோது.... மணி ஒன்று  அடித்த ஒலி மெல்லியதாகக் கேட்டது. இன்னும் இறக்கவில்லையா! பூமியில், அதுவும் என் அறையில்தான் இருக்கிறேனா..?? வயிற்றைப் பிசைகிறது. வாந்திவரும்போல் ஒரு குமட்டல். வயிறு, நெஞ்சு, கழுத்து, உடலே நெருப்பில் எரிவதுபோல் வேதனை. தாங்கமுடியவில்லையே..! என்னைமறந்து கத்திவிடுவேனா..! ஐயோ..! கத்தினால் என்னைக் காப்பாற்றி விடுவார்களே!! நான் மஞ்சுவிடம் போகவேண்டும். பல்லைக் கடிக்கவும் பலமின்றிக் கடித்து வேதனையைத் தாங்கமுயன்றான். முடியவில்லை!!... எப்படியும் சிறிதுநேரத்தில் இறந்துவிடுவேன். கண்ணை மூடி, நம்பிக்கையை இறுகப்பற்றியபோது மணி இரண்டு அடித்தது. இன்னுமா நான் சாகவில்லை!!. ஏன்? ஏன்?
 
எப்படியும் செத்துவிடுவேன். அம்மாவின் ஞாபகம் வந்தது. பாவம் அம்மா! நான் மஞ்சுவைக் கல்யாணம்செய்து, அவள்மடியில் பேரப்பிள்ளைகளைத் தவழவிடுவேன் என்று எத்தனை கனவுகள் கண்டாளோ...! நான் இறந்துவிட்டதை எப்படித்  தாங்கிக்கொள்வாள்..! தாயை நினைக்கப் பரிதாபமாக இருந்தது. அவனுக்குத் தம்பி தங்கைகள் நினைவுக்கு வந்தனர். அவர்களைத் தவிக்கவிட்டுப் போகிறேனே.! கவலையை எண்ணங்கள் கலைத்தது. இரண்டுநாள் என்னைக் காணாது அழுவார்கள். அப்புறம் அண்ணா சாமியயிடம் போய்விட்டார். திரும்பி வந்துவிடுவார். என்று சமாதானமடைவார்கள். விளையாட்டு அனைத்தையும் மறக்கடித்துவிடும். எப்போவாவது நினைவுவரும்போது தேடுவார்கள்.... அப்பா! அவர் எத்தனை பாசமாக, நம்பிக்கையோடு இருந்தார். தனக்குப்பிறகு தன் குடும்பத்தை ஓகோ என்று வைத்திருப்பான்...!நம்பிக்கை உடைந்து, அவரும் உடைந்துவிடுவாரோ...! நண்பர்கள்.!!! அவர்களை நினைக்க ஏனோ பயந்தான். குறிப்பாகப் பாலனை!!..  என்ன இது.... மணி மூன்று அடிக்கிறதே! இன்னுமா நான் இறக்கவில்லை...!! அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆச்சரியத்தினூடே பழைய ஞாபகங்கள்..!! அந்த நிலையிலும் வந்து பூச்சரம்கட்டத் தொடங்கின.  
 
 
 
வளரும்....
 
Link to comment
Share on other sites

இல்லை தெரியாமல்தான்.. கேக்கிறன்.. இது வாலிப வயது குறூம்பா? :o:(

Link to comment
Share on other sites

இல்லை தெரியாமல்தான்.. கேக்கிறன்.. இது வாலிப வயது குறூம்பா? :o:(

குறும்புகள் சிலவேளைகளில் கவலைகளைத் தருவித்து விடுவதும் உண்டு. அந்த எண்ணத்தில் இந்தத் தலைப்பின் கீழ் கதையைப் பதிந்தேன்.  :unsure: 

 

இருந்தாலும் என் வழி தவறிப்போகாது அக்கறையுன் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.  :rolleyes:

Link to comment
Share on other sites

குறும்புகள் சிலவேளைகளில் கவலைகளைத் தருவித்து விடுவதும் உண்டு. அந்த எண்ணத்தில் இந்தத் தலைப்பின் கீழ் கதையைப் பதிந்தேன்.  :unsure:

 

இருந்தாலும் என் வழி தவறிப்போகாது அக்கறையுன் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.  :rolleyes:

 

அதனாலென்ன பரவாயில்லை.. :D ஒரே தலைப்பின்கீழ் பதியும் உங்கள் அனுபவக் கதைகளைப் படித்து இரசிக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தொடருங்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூச்சி மருந்து  சுத்தம் , எலிமருந்து கலப்படமா...!  கெதியாய் சஸ்பன்சை  பஞ்சாக்குங்கள்  பாஞ்ச்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை வாலிப வயதுக்  குறும்பாக  இல்லாமல் சஸ்பென்ஸ் நிறைந்த கனவாக  இருக்கிறது :D

Link to comment
Share on other sites

பூச்சி மருந்து  சுத்தம் , எலிமருந்து கலப்படமா...!  கெதியாய் சஸ்பன்சை  பஞ்சாக்குங்கள்  பாஞ்ச்...! :)

எலி மருந்தும் போலியில்லை. முதல் சிப் சாராயம் பருகும்போது பருகுபவர் முகம் போகும் கோணல்களைக் கவனிக்கலாம். தொடர்ந்து அவர் பிராண்டி, விசுக்கி என ஊற்றும்போது அந்தக் கோணல்கள் வருவதில்லை. அதுபோலத்தான் பூச்சிமருந்தும், எலி மருந்தும். என்மீது நம்பிக்கை இல்லையென்றால் நீங்களும் மருந்துகளைப் பரீட்சித்துப் பார்க்கலாம். தப்பேயில்லை சுவி அவர்களே..!! :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சர், மனுஷருக்குப் பிறசரை, ஏத்திக் கொண்டிருக்காமல், கெதியாக் கதையைத் தொடருங்கோ! :icon_idea:

 

அந்தக்காலத்துப் 'பொலிடோலை' முயற்சித்துப் பார்த்திருக்கலாம்!  :o

 

காதல் தோல்வியா?

 

பரீட்சையில் எதிர்பார்த்த 'பெறுபேறுகள்' கிடைக்கவில்லையா?

 

கடன்காரர்கள் தொல்லையா?

 

கைமேல் பலன் காண, பல வாடிக்கையாளர்களின் சான்றிதழ்களுடன், (சான்றிதழ்கள் உபயோகத்தின் முன்பு பெறப்பட்டவை) இன்றே வாங்குங்கள்.......பொலிடோல்! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எலி மருந்தும் போலியில்லை. முதல் சிப் சாராயம் பருகும்போது பருகுபவர் முகம் போகும் கோணல்களைக் கவனிக்கலாம். தொடர்ந்து அவர் பிராண்டி, விசுக்கி என ஊற்றும்போது அந்தக் கோணல்கள் வருவதில்லை. அதுபோலத்தான் பூச்சிமருந்தும், எலி மருந்தும். என்மீது நம்பிக்கை இல்லையென்றால் நீங்களும் மருந்துகளைப் பரீட்சித்துப் பார்க்கலாம். தப்பேயில்லை சுவி அவர்களே..!! :lol: :lol:

 

எனக்கொண்டும் ஆட்சேபனை இல்லை, ஆனால் இந்த ஆஸ்பத்திரியில வாந்தி எடுக்க ஏதோ ஒன்டைக் குடுப்பாங்களே , அந்தக் கறுமத்தை நினைச்சுத்தான் யோசிக்கிறன்...! :lol:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.