Jump to content

அன்புத் தோழியின் மரணம் தரும் துயரோடு....!


Recommended Posts

அன்புத் தோழியின் மரணம் தரும் துயரோடு....!
 
2zxDk-EISl-1_zps394482c1.jpg
 
05.03.2014..,
அழகிய வாழ்வை - மரணம் 
அள்ளிக் கொண்டு போகக் காத்திருக்கிறது.
அழகான உனது புன்னகையும் 
இனிமையான உனது குரலின் கீதமும்
எங்கள் காதுகளிலிருந்து இறங்கி
மெல்ல மெல்லத் - தனது 
இறுதிப்பயணத்தின் கதையை
எழுதத் தொடங்கியிருக்கிறது.....!
 
1990....,
மாற்றத்தின் பெறுமதிகள் 
மண்விடுதலை யாகத்தில் வரியுடுத்திய
தலைநிமிர்வின் அடையாளம் 
நீயுமாய் உனது நிமிர்வின் வீரம்
இன்னும் நிழலாய் தொடர்கிறது....!
 
1991....,
ஆனையிறவும் அகிலன் வெட்டையும் 
அந்த உப்பளக்காற்றின் ஈரமும் 
உன் தோழ் சுமந்த
கனரகத்தின் கனவுகளையும்
காலம் தன் கைகளில் பொத்தி வைத்துக் 
காக்கும் பொக்கிசம் நீ.
 
எல்லோர் போலவும் 
உனக்கான வாழ்வும் வசந்தங்களும்
ஆற்றல் மிக்க குழந்தைகளும்
உன் வாழ்வின் துணையும் உனது தோழனும்
கண்களில் ஈரமும்
உன்னோடான ஈர நினைவுகளோடு
இன்றுன்னை இழந்து மீளாத் துயரோடு 
உனது மீளும் நினைவுகள் தாங்கிய
நினைவுகளோடு.....!
 
இன்றைப் போலொரு நாள் 
விடியக்கூடாதென்ற வேண்டுதல் 
விதியை வெல்ல முடியா வலியைத் தரும்
உனது மரணத்தின் துயர் சொன்ன இந்நாள்
கண்ணீரோடு கழிகிறது தோழி.
 
அக்காவாய் தோழியாய் 
அம்மாவாய் ஆசிரியையாய்
எத்தனை வடிவம் நீ...!
கொடுமை தரு புற்றுநோய் உன்னை
கொண்டு போய்விட்ட துயரிலிருந்து
விடுபட முடியா நாளாய் 
இன்று விடிந்திருக்கிறது...!
 
அமைதியின் பெயரை 
உன்பெயரில் கொண்டவளே
உன் வாழ்வை வரலாறாய் எழுதென்றாய்
எதுவும் எழுதப்பட முடியாதபடி
உனது மரணம் இன்றென் பொழுதை
அமைதியைப் பறித்துக் கொண்டு போயிருக்கிறது.
அமைதியாய் உறங்கு என் தோழி – உன்
ஆத்ம அமைதிக்காய் பிரார்த்திக்கிறோம்.
 
03.04.2014 (சாந்தினி அற்புதசீலன் அவர்கள் புற்றுநோயோடு சில ஆண்டுகளாக போராடி இன்று தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டுள்ளார். சாந்தினி அக்காவை இழந்து துயரில் வாடும் மகள் சர்மியா, மகன் குகஜித், துணைவர் சீலண்ணா உங்கள் துயரில் நாங்களும் பங்கேற்கிறோம்)
 
Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

யாழ்களத்தில் பலர் வாசகர்களாக இருக்கிறார்கள். அதேபோலொரு வாசகியாக சாந்தினியக்கா இருந்தார். ஒருமுறை கதையோடு கதையாக யாழ் பற்றி சொன்னேன். அன்றிலிருந்து யாழின் வாசகியாகினார். ஆனால் தமிழ் தட்டச்சு செய்ய முடியாமையால் தனது கருத்துக்களை ஒவ்வொரு முறையும் பேசும் போது தெரிவித்துக் கொள்ளுவார். 

 
அம்மாவுக்கு நிகரான ஒரு அக்கா. சாந்தினியக்கா விடுதலைப்போராளியாகவும் குறிப்பிட்ட காலம் வாழ்ந்திருந்தார். விடுதலைப் போராளியாக அறிமுகமானதிலிருந்து புலம்பெயர்ந்த பின்னர் விடுபட்டுப்போன தொடர்பு மீள புதுப்பிக்கப்பட்ட போது அக்கா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தா. தனது மரணத்தை அறிந்திருந்தும் தனது தன்னம்பிக்கையால் 2வருட காலம் போராடிய ஒரு தாய். 
 
சாந்தினி அற்புதசீலன் அவர்களின் துயரில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகள்.
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.