• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

putthan

உவங்கள்

Recommended Posts

தலைக்கு கறுப்பு சாயம் பூசி ஒவ்வொரு நாளும் முகச்சவரம் செய்து 80 வயதிலும் 60 வயது தோற்றத்தில் இருப்பார் கந்தசாமி சிவசாமிப்பிள்ளை.அவுஸ்ரேலியாவில் அவரின் பெயர் கந்ஸ் ஆனால் ஊர்காரர் ஆசையாக கந்தர் என்று அழைப்பார்கள்.சுரேஸ் அவரை கந்ஸ் அண்ணே என்று செல்லமாக அழைப்பான்.ஊரில் அங்கிள் என்றுதான் கூப்பிட்டவன் அப்படி கூப்பிட ஒரு காரணமிருந்தது.காரணத்தை கதை வாசிச்ச பின்பு அறிவீர்கள்.சுரேஸும் கந்தரும் ஒரே ஊர்,ஒரே சாதி அத்துடன் தூரத்து உறவு வேறு ,இருவரின் பாசப்பிணைப்பை பற்றி சொல்வதற்கு வேறு விடயங்கள தேவையில்லை. இப்ப மகளுடன் இருக்கின்றார் ..இரண்டும் பெட்டைகள் மூன்றாவது பெடியனாக பெறவேண்டும் என்று கோவில் குளமெல்லாம் ஏறிய புண்ணியம் 7வருடத்தின் பின்பு கடவுள் அவருக்கு ஒரு ஆண்குழந்தையை கொடுத்திட்டார்.பெடியனை பொத்தி பொத்தி வளர்த்தார்.அவரின்ட பெயர் சொல்ல அவன் தான் வாரிசு என்ற ஒரு காரணம் ஆகும்.

சுரேஸும் கந்தரும் வயசு வித்தியாசம் பாராமல் விவாதிப்பார்கள் அதாவது இருவரும் அலட்டுவார்கள் .வெளியே இருந்து பார்ப்பவர்கள் நினைப்பார்கள் எதோ முக்கியமான விடயம் பற்றி கலந்தாலோசிக்கினம் எண்டு ஆனால் ஒரு சதத்திற்கும் பிரயோசணமில்லாத விடயமாக இருக்கும்.இவர்களின் இந்த அலட்டல் ஊரில் தேர்முட்டியடியில் தொடங்கினது. இப்ப சிட்னியில்முருகன் கோவில்,நண்பர்களின் வீட்டுதண்ணி பார்ட்டி ,தமிழ் பாடசாலை வரை தொடர்கிறது.

கந்தரின் இளமைக்காலம் யாழ்ப்பாணத்தில் பின்பு வேலை கொழும்பில், இளமை குடும்பவாழ்க்கையும் கொழும்பில் .ஊர் கோவில் திருவிழாவுக்கு குடும்பமாக வந்து இரண்டு கிழமை ஊரில் நிற்பார்.சாமி தீர்த்தம் ஆடி முடிந்த அடுத்த நாள் கந்தர் தீர்த்தம் ஆடி பூங்காவனதன்று உச்சநிலையில் இருப்பார். அதற்கு அடுத்தநாள் கந்தர் தாயாரின் வீட்டில் பெரிய விருந்தும் வைப்பார்.

புலத்தில் வீடுகளில் நண்பர்கள் ஒன்று கூடுவது போல ஊரில் ஒன்று கூடுவதில்லை.தேர்முட்டியடி ,வாசிகசாலை போன்றவற்றில் தான் ஒன்றுகூடுவார்கள் .இலவசமாக கிடைக்ககூடிய இடமும் இதுதான்.

மாலை நேரங்களில் தேர்முட்டியடியில் ஐந்தாறு பெரிசுகள் நாலைந்து இளசுகள் கூடி ஊர் விடுப்பு,அரசியல் கதைப்பது வழக்கம் .கந்தர் ஊரில் நின்றால் நிச்சம் கலந்து கருத்தும் பகிர்ந்து கொள்வார்.தமிழர்கள் தனிநாடு கேட்டு போராட தொடங்கிய காலகட்டம்.

"உவங்கள் தனிநாடு கேட்கிறாங்கள்,உதால கொழும்பில் இருக்கிற எங்களுக்குதான் பிரச்சனை" என கந்தர் தன்னுடைய மனக்குறையை கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இருந்த பெரிசுகள் சிங்களவனோட வாழ முடியாது எங்களை அவன் கல்வி,குடியேற்றம்,மற்றும் சந்தைகட்டிடங்களை தீ வைத்து பலவழிகளில் ஒதுக்கதொடங்கிவிட்டான் ஆகவே தனிநாடு தான் தீர்வு என்றார்கள் .இளசுகலும் உணர்ச்சிவசப்பட்டு தனிநாடுதான் ஒரே வழி என்றார்கள்.

கந்தர் ஊர் திருவிழா முடிவடைந்து கொழும்பு திரும்பினார்.இரண்டு கிழமையால் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு குடும்ப சகிதமாக கப்பலில் ஊர் வந்து சேர்ந்தார். அன்று மாலையே தேர்முட்டியடிக்கு வந்தார்.

"உவங்களாட வாழ ஏலாது தனிநாடுதான் ஒரே வழி .நான் இனி திரும்பி போக மாட்டேன் ஊரோடதானிருக்க போகிறேன்" என்று கூறியவர் பிள்ளைகளை எந்த பாடாசாலைக்கு அனுப்பலாம்,மற்றும் எந்த டியுட்டரி,டியுசன் மாஸ்டர் திறம் போன்ற விபரங்களை சுரேஸிடம் இருந்து அறிந்துகொண்டார்.

சுரேஸும் தான் போகும் டியுட்டரியும்,கல்விகற்கும் ஆசிரியர்கள், சிறந்தது என சொல்லிவைத்தான் .இதில் ஒரு உள் நோக்கமும் இருந்தது. கந்தரின் பிள்ளைகள் ஆரம்பகல்வியை கொழும்பிலுள்ள பிரபலமான கிறிஸ்தவ பாடசாலையில் படித்தார்கள். அதுமட்டுமன்றி கொழும்பு நாகரிகமும் அவர்களிடம் அதிகம் காணப்பட்டது.ஊர் இளைஞர்களை திரும்பி பார்க்க வைக்கும் ஒருவித கவர்ச்சி இருந்தது.பெண்களை இரட்டை சடையுடனும், அரைப்பவாடை பிளாவுஸ்,மற்றும் சுருக்குவைத்த முழுச்சட்டையுடன் பார்த்த ஊர் இளைஞர்களுக்கு ,மேலாடயை ஜீன்ஸுக்குள் விட்டு அங்கங்கள் ஒரளவு தெரியும் படி வீதியில் செல்லும் பெண்களை நிச்சமாக இளைஞர்களை திரும்பி பார்க்க வைக்கும்.சுரேஸின் உணர்வுகளையும் அந்த கவர்ச்சி தூண்டியது.

சுரேஸும் கண்ணனும் அனேகமாக ஊரில் ஒன்றாக ஊர்வலம் வருவார்கள்.கன்ன உச்சி வைத்து தலைமுடியை பக்கவாட்டில் இழுத்திருப்பான் சுரேஸ் கண்ணாடி முன்னால் நின்று அழகு பார்ப்பது குறைவு.கண்ணன் தலைமுடியைமேவி இழுத்து நாலுபேர் மத்தியில் தன்னை மற்றவர்கள் வித்தியாசமாக பார்க்க வேணும் என்று உடையணிந்து தன்னை அழகு படுத்திகொள்வான்.படிப்பிலும் சுரேசைவிட கேட்டிக்காரன்.கண்ணனின் இந்த தோற்றமும் கல்வியறிவும் கந்தரின் மூத்தவள் பிரியாவை கவர்ந்துவிட்டது.

கந்தருக்கு உலக அரசியல் ,கொழும்பு அரசியல் தெரிந்தளவுக்கு ஈழ அரசியலில் அறிவில்லை.ஈழநாடு,வீரகேசரி ,பத்திரிகை,கொழும்பு ஆங்கிலபத்திரிகை செய்திகளை படித்துவிட்டு தேர்முட்டியடி அரசியல் விமர்சனம் செய்வார்.அத்துடன் இயக்கங்களின் பெயர்களோ,அதன் தலைவர்கள் யார் என்பது பற்றிய அறிவுமில்லை.பாதுகாப்பு படைகளுக்கு எதிராக எதாவது தாக்குதல் நடந்தால் ,"பெடியள் அடிச்சு போட்டாங்கலாம் ,நல்ல அடியாம் மகே அம்மே என்று ஆர்மிகாரன் ஒடிட்டானாம்" என சொல்லி புலங்காகிதம் அடைவார்.அவங்களுக்கு உவங்கள் பெடியள் செய்யிறதுதான் சரி என நற்சான்றிதழ் வழங்குவார்.

இப்படிதான் ஒருநாள் கந்தரின் வீட்டுக்கு அருகாண்மையில் பொலிஸ் வணடிக்கு கிரனைட் தாக்குதலை செய்துவிட்டு பெடியள் தப்பி சென்றுவிட்டார்கள்.ஒரு பொலிஸதிகாரி மரணமடைய எனையோர் தலைமையகத்திற்கு தகவல் அனுப்பிவிட்டார்கள்.முப்படையும் ஸ்தலத்திற்க்கு விரைந்துவந்தனர்.மக்கள் வீடுவாசலைகளையும்,உடமைகளையும் விட்டு வேறு கிராமத்திற்கு ஒடினார்கள்.கந்தரும் குடும்பத்தோடு வெளிக்கிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார்.

முப்படையினர் தங்களது ஆத்திரத்தை கிராமமக்களின் வீடுகளை,உடமைகளை தீ வைத்தும்,கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்தும் தீர்த்து கொண்டார்கள்.பின்பு இரு நாட்கள் ஊரடங்கு சட்டம் போட்டு ஊரை காவல் காத்தார்கள்.

பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதிப்படைந்த கிராம மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும்,அத்துடன் இளைப்பாரிய உச்சநீதிமன்ற நீதி பதியின் தலைமயில் விசாரனை நடை பெறும் என பத்திரிகையில் செய்திகள் வந்தன,ஆனால் நீதியும் ,நிதியும் மக்களுக்கு கிடைக்கவில்லை.மக்கள் தங்களது முயற்ச்சியால் இயங்கத்தொடங்கினார்கள். மீண்டும் தேர்முட்டி அரசியல் வியாக்கியானதை தொடங்கினார்கள்.

"உவங்கள் பெடியள் கிரனைட்டை காட்டுப்பகுதியில் போட்டிருந்தால் ஆர்மிக்காரன் எங்கன்ட இடத்தை உப்படி நாசம் பண்ணியிருக்கமாட்டாங்கள்"... அங்கும் இங்கும் திரும்பி பார்த்துவிட்டு " உவங்கள்பெடியள் செய்தது சரியான பிழை"என்றார் கந்தர்.

"அண்ணே கெரில்லா போர் என்றால் உப்படித்தான் இருக்கும்"

"அடே! பாதிக்கப்பட்டது நாங்கள்"

"அண்ணே நோகாமல் நொங்கு குடிக்கப் பாக்கிறீங்கள்"

ஊர் நிலமைகள் சரியில்லை என அறிந்த கந்தர் மீன்டும் கொழும்பு திரும்பினார் .மூத்தமகள் பிரியாவை மேல்படிப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். இரண்டாவது மகளும்,மகனும் ஊரில் தாயாருடன் இருந்தார்கள்.லண்டனுக்கு ஒப்பின் விசா என அறிந்து விடியற்காலை பிரித்தானியா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் தவம் இருந்து விசா பெற்று உடனடியாகவே லண்டன் பயணமானார்.

குடும்பத்தை லண்டன் அழைப்பதற்கான ஆயத்தங்களை செய்யத்தொடங்கினார்.மூத்தவளுக்கு அவுஸ்ரேலியா மாப்பிள்ளையை கட்டி கொடுத்தார். இரண்டாவது மகளும் ,மகனும் மருத்துவர்களாக லண்டனில் இருக்கின்றார்கள் .கந்தரும் மனைவியும் சிட்னிக்கும் லண்டனுக்கும் காலநிலைக்கு ஏற்றமாதிரி மாறிமாறி குடியிருப்பினம்.லண்டனில் வின்டர் என்றால் சிட்னியில் குடியிருப்பு. சிட்னியில் இருக்கும் பொழுது பேரப்பிள்ளைகளை தமிழ் பாடசாலைக்கு கந்தர் அழைத்து வருவார்.சுரேஸும் தனது பிள்ளைகளை அதே பாடசாலைக்கு அழைத்து செல்வான்.

"டேய் சுரேஸ் உவங்கள் ஒழுங்கா தமிழ் படிப்பிப்பாங்களோ"

"ஏன் அண்ணே அப்படி கேட்கீறீங்கள் என்ட பிள்ளைகள் உயர்தரம் வரை இங்க படிச்சவயள் அவர்கள் இப்ப நல்லா தமிழ் பேசுவினம்"

"உவங்கள் என்ட பேத்திக்கு போனமுறை மார்க்ஸ் போடும்பொழுது குறைச்சு போட்டாங்கள் அதுதான் கேட்டனான்"

"உவங்கள் இப்ப உந்த கேட்டை பூட்டிப்போடுவாங்கள் நான் போய் காரை உள்ள விடப்போகிறேன்" காரை உள்ளே விட்டுவிட்ட பின்பு வந்த கந்தர் மீண்டும் அரசியல் பக்கம் கதையை தொடங்கினார்

"ஐ.நா தீர்மானம் இந்த முறை உவங்களுக்கு வெற்றி கிடைக்கும்"

"யாருக்கு அண்ணே"

"கூட்டணிக்குத்தான்டா"

"அண்ணே , யாரை நீங்கள் உவங்கள்,உவங்கள் என்று இப்ப 40 வருசமாக சொல்லி கொண்டிருக்கிறீங்கள்.......எப்ப சொல்லப்போறீங்கள் நாங்கள் ,எங்கன்ட......என்று"

Share this post


Link to post
Share on other sites

"யாருக்கு அண்ணே"

"கூட்டணிக்குத்தான்டா"
"அண்ணே , யாரை நீங்கள் உவங்கள்,உவங்கள் என்று இப்ப 40 வருசமாக சொல்லி கொண்டிருக்கிறீங்கள்.......எப்ப சொல்லப்போறீங்கள் நாங்கள் ,எங்கன்ட......என்று"  :icon_idea: 

Share this post


Link to post
Share on other sites

தமிழ்நாட்டுத் தமிழன் சொல்வான் நான் இந்தியன் என்று!

இலங்கைத் தமிழன் சொல்வான் நான் சிறீலங்கள் என்று!

 

உவங்கள் என்றால் யார்? அவர்கள்தான் தமிழர்களோ??

 

புத்தனே உங்கள் ஆராச்சி அபாரம்!!!
 

Share this post


Link to post
Share on other sites

எங்கட ஊரிலயும் இப்பிடி ஒருத்தர் இருந்தார்.. முதலில் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவு.. ஒருமுறை ஏதோ ஒரு இயக்கம் பெற்றோல் தாங்கியை கடத்த.. ஹெலியில் வந்து முழங்கினான். அப்ப ஊரில் இல்லாத அரிச்சனை எல்லாம் இயக்கங்களுக்கு விழுந்தது. :wub:

Share this post


Link to post
Share on other sites

புத்தன், இந்தமுறை 'மேட்டுக்குடியை' ஒரு கை பாக்கிறதெண்டு முடிவெடுத்திட்டியள்! :D

 

என்னுடனும், சில பிரபலமான கூட்டணி 'எம்பி மாரின்' பிள்ளையள் படிச்சிருக்கினம்!

 

அந்தப் பெரியமனுசனின் குடும்பத்தை, ஒரு நல்லூர் திருவிழாவில் சந்தித்தேன்! நான் அவரது மகனுடன் நின்றிருந்தாலும், அவரும் என்னுடன் ஆங்கிலத்தில் தான் கதைத்தார்.

 

எங்கடை ஆங்கிலம் உங்களுக்குத் தெரியும் தானே....  what I mean..... If.... But .... So... எல்லாம் போட்டு ஒரு மாதிரி, மேடு பள்ளம் விழாமல் கதைச்சு முடிச்சம்! :lol:  

 

பிறகு கவனித்தால், அந்த முழுக்குடும்பமும், அங்கு 'சர்பத்' குடிச்சு முடியும்வரைக்கும் தனி ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடி முடித்தது! :icon_mrgreen:

 

இப்ப, இவங்களை 'எங்கடை' எண்டு எப்பிடிச் சொல்ல, மனம் வரும்!

 

அவங்கள் எப்பவமே, அவங்கள் தான்!  :o

 

கிறுக்கல் அருமை...! :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

உவன் கண்ணன்  உவள் பிரியாவை முடித்து  உவர் கந்தருக்கு மருமோன் ஆயிட்டாரோ ...! :)

Share this post


Link to post
Share on other sites

சூப்பர் புத்தன் .

வெளியில் நின்று வெடி வாணம் விடுபவர்கள் தானே எங்கடை ஆட்கள் .அப்ப உவங்கள் என்றுதானே வரும் .

Share this post


Link to post
Share on other sites

கதைக்கு நன்றி புத்தன்.  எப்பவும் மற்றன் தியாகியாக போக நாங்கள் (அகதியாக) வெளிநாடு போக வேண்டும் என்பதுதானே எங்கள் வழக்கம். :)

 

 

ஒரு விடயம்

 

புலத்தில் வீடுகளில் நண்பர்கள் ஒன்று கூடுவது போல ஊரில் ஒன்று கூடுவதில்லை.

 

 

இந்த வரி கொஞ்சம் தவறு என்று நினைக்கின்றன். புலம் என்றால் நிலம் என்றுதான் பொருள். புலத்தில் என்று சொல்லும் போது அது ஊரைத்தான் குறிக்கும், வெளிநாட்டை அல்ல. (புலம் பெயர்ந்தவர்கள் என்பது ஊரை விட்டு பெயர்ந்தவர்கள்)

 

மற்றது, வரிகளுக்கிடையில் கொஞ்சம் இடைவெளி விட்டால் வாசிக்க இன்னும் கொஞ்சம் இலகுவாக இருக்கும் என்று நினைக்கின்றன். கண் சில நேரங்களில் வழி தவறி விடுகின்றது (அல்லது எனக்கு கண் பிரச்சனையோ தெரியாது)

 

Share this post


Link to post
Share on other sites

"யாருக்கு அண்ணே"

"கூட்டணிக்குத்தான்டா"

"அண்ணே , யாரை நீங்கள் உவங்கள்,உவங்கள் என்று இப்ப 40 வருசமாக சொல்லி கொண்டிருக்கிறீங்கள்.......எப்ப சொல்லப்போறீங்கள் நாங்கள் ,எங்கன்ட......என்று"  :icon_idea: 

 

நன்றிகள் விசுகு வருகைக்கும் பச்சைக்கும்....

தமிழ்நாட்டுத் தமிழன் சொல்வான் நான் இந்தியன் என்று!

இலங்கைத் தமிழன் சொல்வான் நான் சிறீலங்கள் என்று!

 

உவங்கள் என்றால் யார்? அவர்கள்தான் தமிழர்களோ??

 

புத்தனே உங்கள் ஆராச்சி அபாரம்!!!

 

 

நன்றிகள் பாஞ் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

எங்கட ஊரிலயும் இப்பிடி ஒருத்தர் இருந்தார்.. முதலில் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவு.. ஒருமுறை ஏதோ ஒரு இயக்கம் பெற்றோல் தாங்கியை கடத்த.. ஹெலியில் வந்து முழங்கினான். அப்ப ஊரில் இல்லாத அரிச்சனை எல்லாம் இயக்கங்களுக்கு விழுந்தது. :wub:

 

நன்றிகள் இசை வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

புத்தன், இந்தமுறை 'மேட்டுக்குடியை' ஒரு கை பாக்கிறதெண்டு முடிவெடுத்திட்டியள்! :D

 

என்னுடனும், சில பிரபலமான கூட்டணி 'எம்பி மாரின்' பிள்ளையள் படிச்சிருக்கினம்!

 

அந்தப் பெரியமனுசனின் குடும்பத்தை, ஒரு நல்லூர் திருவிழாவில் சந்தித்தேன்! நான் அவரது மகனுடன் நின்றிருந்தாலும், அவரும் என்னுடன் ஆங்கிலத்தில் தான் கதைத்தார்.

 

எங்கடை ஆங்கிலம் உங்களுக்குத் தெரியும் தானே....  what I mean..... If.... But .... So... எல்லாம் போட்டு ஒரு மாதிரி, மேடு பள்ளம் விழாமல் கதைச்சு முடிச்சம்! :lol:  

 

நன்றிகள் புங்கை ஐயா ...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

உவன் கண்ணன்  உவள் பிரியாவை முடித்து  உவர் கந்தருக்கு மருமோன் ஆயிட்டாரோ ...! :)

 

உவர் கந்தர் விட்டாத்தானே :D

சூப்பர் புத்தன் .

வெளியில் நின்று வெடி வாணம் விடுபவர்கள் தானே எங்கடை ஆட்கள் .அப்ப உவங்கள் என்றுதானே வரும் .

 

நன்றிகள் அர்ஜூன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

சூப்பர் புத்தன் .

வெளியில் நின்று வெடி வாணம் விடுபவர்கள் தானே எங்கடை ஆட்கள் .அப்ப உவங்கள் என்றுதானே வரும் .

 

நன்றிகள் நிழலி ....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்....நீங்கள் கூறியவற்றை கவனத்தில் எடுக்கிறேன்..

Share this post


Link to post
Share on other sites

இது கிறுக்கல் மாதிரி தெரியலையே..?

நியாயத்தை தானே சொல்லியிருக்கிறீர்கள்..?

Share this post


Link to post
Share on other sites

யாழ்ப்பாணியம் தனது இருப்புக்கு எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கும் என்பற்கு உங்கள் கதை ஓர் உரைகல் வாழ்த்துக்கள் புத்தன் .

Share this post


Link to post
Share on other sites
அவங்கள் உவங்கள் உதுகள் எங்கடையள் அதுகள் எல்லாம் எங்களுக்கு இப்ப நோமலாய்ப்போச்சுது.......வாற சோசல்காசு ஒழுங்காய் வந்துதெண்டால்  எனக்கு அது வந்தவரைக்கும் லாபம்  :lol:
 
புத்தன்! கடிச்சு குதறிட்டியள்... :D

Share this post


Link to post
Share on other sites

உவங்கள் என்று ஒரு சாதாரண தலைப்பிட்டு அழகிய கருவைத் தந்தவருக்கு வாழ்த்துகள்.

Share this post


Link to post
Share on other sites

உதுகளை, வெருட்டி வைச்சிருக்கிறதுக்குத் தன்னும்... புலி வேணும். புத்தா....
இல்லாட்டி... உதுகளை, திருத்திறது... "கல்லிலை, நார் உரிக்கிற மாதிரி" இருக்கும். :D

Share this post


Link to post
Share on other sites

உவங்கள் வளமைபோல புத்தனின் கைவண்ணம் அசத்தல். எண்டாலும் உவங்கள் ஆரெண்டு சொல்லாமல் போயிட்டியள்: :mellow:

Share this post


Link to post
Share on other sites

இது கிறுக்கல் மாதிரி தெரியலையே..?

நியாயத்தை தானே சொல்லியிருக்கிறீர்கள்..?

 

நன்றிகள் ராசவன்னியன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

யாழ்ப்பாணியம் தனது இருப்புக்கு எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கும் என்பற்கு உங்கள் கதை ஓர் உரைகல் வாழ்த்துக்கள் புத்தன் .

 

நன்றிகள் கோமகன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

உவங்கள் திருந்தமாட்டாங்கள் புத்தன். :rolleyes:

 

நன்றிகள் முதல்வன்

அவங்கள் உவங்கள் உதுகள் எங்கடையள் அதுகள் எல்லாம் எங்களுக்கு இப்ப நோமலாய்ப்போச்சுது.......வாற சோசல்காசு ஒழுங்காய் வந்துதெண்டால்  எனக்கு அது வந்தவரைக்கும் லாபம்  :lol:
 
புத்தன்! கடிச்சு குதறிட்டியள்... :D

 

நன்றிகள் கு.சா

உவங்கள் என்று ஒரு சாதாரண தலைப்பிட்டு அழகிய கருவைத் தந்தவருக்கு வாழ்த்துகள்.

 

நன்றிகள் கறுப்பி

உதுகளை, வெருட்டி வைச்சிருக்கிறதுக்குத் தன்னும்... புலி வேணும். புத்தா....

இல்லாட்டி... உதுகளை, திருத்திறது... "கல்லிலை, நார் உரிக்கிற மாதிரி" இருக்கும். :D

 

நன்றிகள் தமிழ்சிறி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

உவங்கள் வளமைபோல புத்தனின் கைவண்ணம் அசத்தல். எண்டாலும் உவங்கள் ஆரெண்டு சொல்லாமல் போயிட்டியள்: :mellow:

 

நன்றிகள் சாந்தி..... யாரெண்டு சொன்னால் எனக்கு அடி விழும்....:D

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • நரேந்திர மோதியின் சுதந்திர தின உரை: 'விரைவில் கொரோனாவுக்கு மருந்து, காஷ்மீரில் தேர்தல்' - முக்கிய தகவல்கள் - BBC News தமிழ் PIB  வேளாண் உள்கட்டமைப்புத் திட்டத்துக்காக 1 லட்சம் கோடி ரூபாய் கொண்ட நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு கோடி வறியநிலை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது.  ஆறு லட்சம் கிராமங்கள் இன்று ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டு தொலைத்தொடர்பு வசதியைப் பெற்றுள்ளன. 2014 ஆண்டுக்கு முன்புவரை ஐந்து டஜன் கிராம பஞ்சாயத்துகள் மட்டுமே அத்தகைய வசதியைப் பெற்றிருந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கிராம பஞ்சாயத்துகள் ஆப்டிக் ஃபைபர் இன்டர்நெட் வசதியைப் பெற்றுள்ளன.  விண்வெளி துறையை இந்தியா தனியார் துறை பங்களிப்பை வழங்க திறந்துவிட்டுள்ளது. இந்திய விண்வெளி வளரும்போது, நாம் மட்டுமின்றி நமது நட்பு நாடுகளும் அதன் மூலம் பலன் பெறும். இந்தியா முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்ற புதிய முறையை நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது. அத்தகைய முறையில் ஏற்கெனவே 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்துள்ளது.  ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அதன் வளர்ச்சிக்காக மிகச்சிறந்த ஒத்துழைப்பை சர்பாஞ்ச்கள் வழங்கி வருகிறார்கள். அங்கு விரைவில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் . லடாக்கில் கார்பன் சமநிலையை உருவாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் லடாக்கியர்களுடன் சேர்ந்து புதுமையான வழிகளில் வளர்ச்சியை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தியர்களின் தாரக மந்திரம் வோக்கல் ஃபார் லோக்கல் (உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்பது) என்றவாறு இருக்க வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளுக்கு நாம் முன்னுரிமை தர வேண்டும். அதை செய்யாவிட்டால் அந்த பொருட்களுக்கு வாய்ப்பு குறைவதுடன் அந்த முயற்சி ஊக்கம் பெறாமல் போகலாம். இப்போது நாம் மேக் இன் இந்தியாவில் (இந்தியாவிலேயே தயாரிப்போம்) இருந்து மேக் ஃபார் (வோர்ல்ட் (உலகுக்காக தயாரிப்போம்) என்ற அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறோம்.   https://www.bbc.com/tamil/india-53788679  
  • பாடகர் எஸ்பிபிக்கு எக்மோ சிகிச்சை! மின்னம்பலம்   கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பி சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 13 இரவு முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இது திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அனைவரும் எஸ்பிபி மீண்டு வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்த மருத்துவமனையின் அறிவிக்கையை எதிர்நோக்கித் திரை உலகமே காத்திருக்கிறது. இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிப்பது தெரியவந்துள்ளது. Extracorporeal Membrane Oxygenation எனப்படும் இந்த கருவி, உடல்நிலை மோசமாக இருக்கும் நோயாளிகளுக்கு மூன்றாம் கட்டத்தில் சிகிச்சை அளிக்க உதவுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   தீவிர மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் மற்றும் இதயம் செயல்படாதபோது, எக்மோ கருவி பயன்படுத்தப்படுகிறது. இது, பாதிக்கப்பட்டவரின் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட ரத்தத்தை மீண்டும் உடலுக்கு அனுப்புகிறது. இதயம் மற்றும் நுரையீரலுக்கு உரிய ரத்தம் செல்வதை இந்த கருவி உறுதிப்படுத்துகிறது. தற்போது இந்த கருவி மூலம் எஸ்பிபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே எஸ்.பி.பி மகன் சரண், தனது தந்தையின் உடல் நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.     https://minnambalam.com/public/2020/08/15/30/spb-health condition-ecmo-treatment
  • காரட் பணியாரமா... செய்து பார்திட்டப்போச்சு.. இங்கு காரட் களி கிடைக்கும்👍
  • நாங்கள் ஓட்டுக்கானவர்கள் அல்ல