• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Paanch

மட்டுநகர் மந்திரமும் காதலும் !!!

Recommended Posts

"உண்மையாகவா! அவள் உன்னைக் காதலிக்கிறாளாடா..?" கேட்ட நண்பர்களின் முகத்தில் அவநம்பிக்கை, ஆச்சரியம், அதிசயம், அதற்கும் மேலாக அது பெரும் வியப்பாக இருந்தது. "சும்மா கதைவிடாதை."  "சத்தியமா மச்சான், வேண்டுமென்றால் இன்றைக்கே புறூவ்பண்ணிக் காட்டவா." அவன் காதல் மன்னனின் அழகு கொண்டவன். எங்கள் நண்பன்தான். ஆனாலும்! உயிரோடு ஒட்டிய நண்பனல்ல!!. காரணம்! அவன் நடத்தையில் பெண்கள் சம்பந்தப்பட்ட சந்தேகம்.... ஆனாலும் அவன் இருக்குமிடம் கலகலப்பும் சிரிப்புமாகத் திகழ்வதாலும், கூடப்படிப்பதாலும், நண்பனாகியிருந்தான். 
 
இவனையா அந்தப் பேரழகி காதலிக்கிறாள்!!. பெரும் பணமும், படிப்பும் நிறைந்த குடும்பத்தில் பிறந்த அவள் எங்கே?. இவன் எங்கே? இவனைப்பற்றிய உண்மை அறியாமலா அவள் இவனைக் காதலிக்கிறாள்..!!. காதலுக்குக் கண்ணில்லை!. அவள் இவனைக் காதலிப்பதை நம்பித்தான் ஆகவேண்டும்!. தவறான வழிசென்ற அருணகிரிநாதர், நாயன்மார்களில் ஒருவராக ஆகவில்லையா!!!. அவனும் நல்லவனாக மாறலாம் அல்லவா!. நாங்களும் காதல் கடிதங்கள், பரிசுப் பொருட்கள் காதலர்களுக்கிடையே பரிமாறிக்கொள்ள உதவினோம். காதலனின் நண்பர்கள் என்று அந்த மங்கை தன் நண்பிகளோடு, எங்களைப் பார்க்கும் சகோதரப் பார்வையில்... ஒரு கிளுகிளுப்பு, உற்சாகம், அனுபவித்தால் தெரியும்!!. காதலர்களைச் சேர்த்துவைப்பதிலும் ஒரு இன்பம்.! அதனைக் கொண்டாடுவதில் ஒரு மகிழ்ச்சி..... காலம் காலமாக மனித வாழ்வில் ஊறிவந்துள்ள உற்சாகம்தானே அது!, எங்களைமட்டும் விட்டுவிடுமா!!. 
 
சில வீம்பு கொண்டதுகள் காதலை எதிர்ப்பது!... எங்களைப் போன்றோரை வீர சாகசங்கள் செய்ய வைத்துவிடும்..!! அவர்களின் காதல் விதை முளையாகி வெளியே தெரியவந்தபோது, அதனை முளையிலேயே மேய்ந்துவிட சொந்தம் பந்தமென்றும், மேல்மட்ட விசுவாசம் என்றும் வந்தவர்களை விடவும்... சமூக சீர்திருத்த வாதிகள் எனச் சமூகநலப் போர்வைக்குள் புகுந்திருக்கும் பினாமிகள், கட்டறுத்துப் பாய்ந்து வந்ததுதான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்படிப் பாய்ந்து வந்ததுகளால் மிதிபட்ட எங்கள் காதல் தேவதைகளில் பெண்தேவதையே முதலில் பாதிப்பை அடைந்து வாடத்தொடங்கியது. பெண்களை மலருக்கு ஒப்பிடுவார்கள். சிறு துன்பம் ஏற்பட்டாலும் அது உடனே வாடிவிடுவது இயல்புதானே. தான் மேலும் மிதிபடாது தன் காதல் வளர்ச்சியை நிறுத்த அவள் முயன்றாள். சகோதரி பாசத்தில் உருகிய எங்களையுமே பார்க்க மறுத்தது அந்தத் தேவதை. நண்பன் நிலைகண்டு எங்கள் இதயம் பரிதாபப்பட்டது. மாற்று வழிகளை, சாகசங்களைத் தேடியது. அறிவு; பினாமிகளை அழைத்து விருந்தும் வைத்துப் பார்த்தது. பலன் எதுவும் கிட்டவில்லை.  பொருள்தான் விரயமானது. 
 
பொருளையே பிரதானமாகத் தேடும் இன்றைய உலகப் பிரதிநிதிகள்  எங்களுக்குள்ளும் இருப்பது புரியாமல் செலவுசெய்தோம். "பலநூறுரூபாய் உதவிசெய்தவரை அடுத்தவர் அறியாது இருக்கும்போது, ஒரு ரூபாய் உதவிசெய்து, அதனை அனைவரையும் அறியவைத்து, அவர்களின் பாராட்டையும் பெற்றுவிடும் திறமை ஒரு சிலருக்கு உண்டு. அது ஒருவரம். அப்பபடி வரம்பெற்றவர்தான் எனது ஒன்றுவிட்ட அண்ணன் . அண்ணன் என்று சொல்வதைவிட நண்பன் என்று சொல்வதே பொருந்தும். அப்படி ஒரு பழக்கம். அவருக்கு மட்டக்களப்பில் தொழில்ப் பயிற்சிக்கூடம் கிடைத்து அங்கு போயிருந்தார். இடையிடையே வருவதுண்டு. வரும்போதெல்லாம் அங்குள்ள மாந்திரீகக் கதைகள் சொல்லிக் கள்ளுக் கொட்டிலில், தான் குடிக்கும் கள்ளுக்கும் எங்களைக் கொண்டே காசு செலுத்திவிட வைப்பதிலும் வல்லவர். 
 
பில்லி சூனியம், வசியம், செய்வினை எதுவேண்டுமோ? "பாயுடன் ஒட்டவைக்க வேண்டுமா? பாம்பு விசம் இறக்வேண்டுமா? விரும்பியவளை அடையவேண்டுமா? அனைத்துக்கும் மட்டக்களப்பில் மந்திரமுள்ளது." கதைகளை ஆதாரத்தோடு சொல்லுவார். ஊடகங்களும் அதனை உறுதிப்படுத்தி எழுதுவதால் எங்களுக்கும் சற்று நம்பிக்கை.... நண்பனிடம் கேட்டார்? "உனக்கு எப்படி வேண்டும்.?" நண்பனும் சொன்னான். "அவளை வீட்டைவிட்டு வெளியேறி ஓடிவரச் செய்தால் போதும். மற்றதை நான் பார்த்துக்கொள்வேன்."  ஆகும் பொருள்செலவு பெரிதல்ல, நண்பர்களும் அவனுக்கு உதவக் காத்திருந்தனர். போராட்டம் என்று வரும்போது அதற்குப் புறமுதுகு காட்டுவதும் அழகல்லவே. "அவள் தலைமயிர் ஒன்று வேண்டும்." நண்பன் ஆசையோடு சேகரித்து வைத்திருந்தது அப்போது உதவியது. 
 
அண்ணன் அன்று மட்டக்களப்பால் வந்தவர் எங்களை அழைத்தார். "செலவு சற்று அதிகமாகிவிட்டது" அறியத்தந்தார். கவலையில்லை, கேட்டதை நாங்களும் சேர்ந்துக் கொடுத்தோம். நடுநிசி! எங்கள் சாட்சியுடன், மருந்துச் சரை ஒன்று அவள் வீட்டிற்குள் பறந்தது!!. மறுநாள் ஊரில் சிறிது கலவரம். அவள் வீட்டைவிட்டு ஓடிவிட்டாள்..!! செல்வந்தர்! மேட்டுக்குடி! ஊர் "ச்சூ" கொட்டியது. எங்களுக்கோ புல்லரிப்பு! மகிழ்ச்சி! அண்ணரை நினைத்து எனக்கும் பெருமிதம்!. நம்பிக்கையில்லாத மந்திரத்தின் மகிமையில் ஓர் நம்பிக்கை. மதியம் உச்சி வெயில். நண்பன் வந்தான். வாழ்த்த ஓடிச்சென்றோம். அவன் முகம் மகிழ்ச்சிக்குப் பதில் வாடிக்கிடந்தது. வெயிலால் வாடவில்லை. பெரும் துயரால் வாடியிருந்தது தெரிந்தது. ஏமாற்றமும், வேதனையும் அவனில் வியர்வையுடன் வழிந்தோடியது. "என்னடா மச்சான் அவள் எங்கே?" என்றோம். "அவள் தன் சொந்த மச்சானுடன் ஓடிவிட்டாளாம்." அதிர்ந்துபோனோம்!!!. 
 
அண்ணனை வரிந்து கட்ட, அண்ணன் அமைதியாகச் சொன்னார்.... "அவள் என்னுடன்தான் வரவேண்டும் என்று நீ சொல்லவில்லையே!. வீட்டைவிட்டு வெளியே ஓடிவரச் செய்தால் போதும் என்றுதானே சொன்னாய்!!. அதையே நான் மந்திரவாதியிடம் சொல்ல அவர் மந்திரித்துத் தந்தார். இதில் என் தவறு ஒன்றுமில்லை. மந்திரத்திலும் தவறில்லை!." அடுத்த கேள்வி எங்களிடமும் இல்லை..!! அண்ணனின் கையில் புதிய மணிக்கூடு ஒன்று மின்னியது!!!. 
 

Share this post


Link to post
Share on other sites

நல்ல படிப்பினை கதை.

 

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பில்லி, சூனியத்தில் வல்லவர்களா? சிறுவயதில் செட்டியார் தெருவில் இருந்தபோது இவர்களில் பலர் நகை செய்யும் தொழிலில் (பொற்கொல்லர்களாக) சிறந்த தேர்ச்சி பெற்றவர்களாக கன்டுள்ளேன். 

Share this post


Link to post
Share on other sites

நல்ல படிப்பினை கதை.

 

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பில்லி, சூனியத்தில் வல்லவர்களா? சிறுவயதில் செட்டியார் தெருவில் இருந்தபோது இவர்களில் பலர் நகை செய்யும் தொழிலில் (பொற்கொல்லர்களாக) சிறந்த தேர்ச்சி பெற்றவர்களாக கன்டுள்ளேன்.

 

கொடிய நச்சுப் பிராணிகளால் தீண்டப்பட்டு இறக்கும் தறுவாயில் உள்ளவர்களையும். கொடும்நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் ஆன்ம பலத்தோடு, இயற்கை மூலிகைகளையும் கொண்டு காப்பாற்றும் வல்லமை படைத்தவர்கள் வாழும் இடம் மட்டுநகர். அப்படித் திறன் கொண்டவர்களின் ஆன்ம பலத்தை அனைவரும் அறிந்துகொள்வதும் கடினம். இச்செயற்பாடுகளைத் தவறானமுறையில் பாவித்துப் பொருளீட்டும் அற்பர்களுக்கும் குறைவில்லை. அதனை வெளிப்படுத்தவே உண்மைச் சம்பவம் ஒன்றினைச் சிறிது கற்பனை கலந்து பதிந்தேன்.

Share this post


Link to post
Share on other sites

பாஞ்சும் இப்ப பிசி.  எழுதித் தள்ளுங்கோ. வாழ்த்துக்கள். :D

Share this post


Link to post
Share on other sites

பாஞ்சின் கதைகள் தனிரகம் தொடர்ந்து எழுதுங்கள், வாசிக்க மிக ஆவல்!! :D 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this