Sign in to follow this  
நிழலி

எல்லா இரவுகளையும் போல சில இரவுகள் இருப்பதில்லை: கவிதை - நிழலி

Recommended Posts

எல்லா இரவுகளையும் போல

சில இரவுகள் இருப்பதில்லை

 

வானில் அலையும்

ஒற்றைக் குருவியின்

துயர் அப்பிய

குரலை போல

சில இரவுகள்

காரணமின்றி

துயரால் நிரம்புகின்றன

 

எங்கோ அறுந்து போன

ஒரு இழை

ஞாபகத்தில் வந்திருக்கலாம்

என்றோ காணாமல் போன

நண்பனின் குரல்

மீண்டும் கேட்டு இருக்கலாம்

அல்லது

எப்போதோ எவருமற்று

தனித்து விடப்பட்டதின்

துயரம் தீண்டி இருக்கலாம்

 

புரண்டு படுக்கையில்

நிரடிப் போகும் ஒரு

நொடி நினைவுத் துளியால்

சில இரவுகள்

காரணமின்றி

துயரத்தில் மூழ்கி விடுகின்றன

 

ரயில் பயணங்களில்

இரா வேளையில்

குளிர் காற்றிடை பாடும்

விழியற்ற பாடகனின்

குரலில் வழியும்

வேதனையைப் போல

இருக்கின்றன

இந்த இரவுகள்

 

பின்னிரவொன்றில்

விளக்கற்ற வீதி ஒன்றில்

விற்று முடிந்து செல்லும்

கடலைக்காரனின் வண்டியில்

லாம்பு வெளிச்சம் போல

இருக்கின்றன

இந்த இரவுகள்

 

கரை ஒதுங்கி

இயக்க எவருமற்று

தொடுவதற்கும் நாதியற்று

குப்புறக் கிடக்கும்

ஒரு படகின்

பெரு மூச்சுப் போல

கழிகின்றன

இந்த இரவுகள்

 

எதையோ ஒன்றை இழந்து விட்டதாக

ஏதோ ஒன்று அறுந்து விட்டதாக

எவரோ விட்டுப் பிரிந்து விட்டதாக

கடக்கின்றன

இப்படியான இரவுகள்

 

நேற்றும் இப்படித்தான்

ஒரு பாரமிக்க இரவொன்று

கடந்து போனது

 

-------------------------

 

ஏப்ரல் 08, 2014

Edited by நிழலி
ஒரு பந்தி விடுபட்டு விட்டது..
  • Like 11

Share this post


Link to post
Share on other sites

நாம் வாழுகின்ற ஒவ்வொரு நிமிடங்களும், நாட்களும் இயற்கையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டதே என நினைக்கிறேன்!

 

அதிகாலைப்பொழுதில் மிகவும் அழகாக விடிகின்ற ஒரு பொழுதும், அமைதியாக உயர்ந்தும் தாழ்ந்தும் ஒரு ஆவர்த்தனத்தில் நகர்கின்ற கடலலைகளும், எந்த நிமிடத்திலும், காலநிலையில் ஏற்படும் சிறிய சலனமொன்றினால், தலை கீழாக மாறிப்போகலாம்!

 

அதைப் போன்றது தான் எமது வாழ்வு!

 

வழக்கம் போல உங்கள் கவிதை, இரவு நேரத்துப் பூபாளம் போல, அளவில்லாத சோகத்தை அள்ளித் தெளிக்கின்றது, நிழலி!

 

கரை ஒதுங்கி

இயக்க எவருமற்று

தொடுவதற்கும் நாதியற்று

குப்புறக் கிடக்கும்

ஒரு படகின்

பெரு மூச்சுப் போல

கழிகின்றன

இந்த இரவுகள்! 

P1040824.jpg

எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்களப்பா?  :o

 

 

Share this post


Link to post
Share on other sites

எதையோ ஒன்றை இழந்து விட்டதாக

ஏதோ ஒன்று அறுந்து விட்டதாக

எவரோ விட்டுப் பிரிந்து விட்டதாக

கடக்கின்றன

இப்படியான இரவுகள்

 

நேற்றும் இப்படித்தான்

ஒரு பாரமிக்க இரவொன்று

கடந்து போனது...........

 

 

அடிக்கடி  என்னை  இவ்விரவுகள் கடப்பதுண்டு

அதை நான் தவிர்ப்பதில்லை

ஏனெனில்

அவை என்னுள் ஆளமாக வேரூன்றணும்

அதை அடுத்த  சந்ததிக்கும் கடத்தணும் என நினைக்கின்றேன்

 

நன்றி  நிழலி 

கவிதைக்கும் தேவையான  பதிவுக்கும்

 

 

 

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites

வெறுமை  அல்லது விச்ராந்தி என்று சொல்லலாம் ...  ஆனாலும் இதுவும் அவசியம் அடுத்துத் துடிப்பாகச் செயல்படுவதற்கு...! :)

 

 

Share this post


Link to post
Share on other sites

 பின்னூட்டங்கள் இட்ட புங்கை, விசுகு, சுவி ஆகியோருக்கும், விருப்புகளை தந்தவர்களுக்கும், கவிதையை வாசித்தவர்களுக்கும் என் நன்றி. புங்கை போட்டிருக்கும் படகுப் படம் அழகாக இருக்கு. அது இன்னும் ஒரு கவிதைக்கு ஊற்றாக மாறும்.

 

சில இரவுகள் ஏன் என்று தெரியாமல் மனதில் பாரமாக இருக்கும். அதுவும் இடையில் விழிப்பு வந்து விட்டதென்றால் பிறகு திரும்பி படுக்கும் வரைக்கும் நினைவுகள் எங்கெங்கோ எல்லாம் சுற்றி சுற்றி வரும். முந்தநாள் இரவும் அப்படி இருந்தது. அதைத்தான் கவிதைக்கு கொண்டு வந்தேன். சரியாக 6 நிமிடங்களில் எழுதிய கவிதை இது.

Share this post


Link to post
Share on other sites

6 நிமிடத்தில் எழுதிய கவிதை நன்றாக வந்துள்ளது நிழலி அண்ணா.

 

Spoiler
எனக்கொரு சின்ன சந்தேகம்: அன்றிரவு நித்திரை வராமைக்கு காரணம் அமலா பாலின் அதிரடி செய்தியாக இருக்குமோ என்று :lol:

Share this post


Link to post
Share on other sites

------

பின்னிரவொன்றில்

விளக்கற்ற வீதி ஒன்றில்

விற்று முடிந்து செல்லும்

கடலைக்காரனின் வண்டியில்

லாம்பு வெளிச்சம் போல

இருக்கின்றன

இந்த இரவுகள்

------

எதையோ ஒன்றை இழந்து விட்டதாக

ஏதோ ஒன்று அறுந்து விட்டதாக

எவரோ விட்டுப் பிரிந்து விட்டதாக

கடக்கின்றன

இப்படியான இரவுகள்

----

 

"எல்லா இரவுகளையும், போல சில இரவுகள் இருப்பதில்லை."

தேர்ந்தெடுத்த தலையங்கமும், அதற்குள் அடங்கிய கவிதையும்... எதை மேற்கோள் காட்டுவது என்று தடுமாறும் அளவிற்கு கவிவரிகள்.

 

சில இரவுகளில்... கண்விழித்தால், ஓடும் யோசனை... மிகக் கொடுமையானதாக இருக்கும்.

கவிதைக்கு நன்றி நிழலி.

---

Spoiler
எனக்கொரு சின்ன சந்தேகம்: அன்றிரவு நித்திரை வராமைக்கு காரணம் அமலா பாலின் அதிரடி செய்தியாக இருக்குமோ என்று :lol:

 

எப்பிடியெல்லாம்... யோசிக்கிறாங்கப்பா. :D

Share this post


Link to post
Share on other sites

கவிதைக்கு வாழ்த்துக்கள் நிழல் .

Share this post


Link to post
Share on other sites

நன்றாகவுள்ளது நிழலி... பச்சை நாளை.....

Share this post


Link to post
Share on other sites

நான்கு வருடங்களுக்கு முன்னர் எழுதிய கவிதை

Share this post


Link to post
Share on other sites

நான்கு வருடங்களாக கண்ணில் படாமல் எங்கே ஒளித்திருந்தது இந்தக் கவிதை. வரிக்கு வரி இழையோடும் சோகம் எம் மனங்களில் பல செய்திகளை எடுத்துச் செல்கின்றது. எல்லா இரவுகளும் ஒன்றுபோல் இருப்பதில்லை. எல்லா இரவுகளையும்போல சில இரவுகள் அமைதியைத் தருவதுமில்லை. நல்லதொரு கவிதை பாராட்டுக்கள் நிழலி.

Share this post


Link to post
Share on other sites

தமிழினியின் கேள்விக்கு நான்கு வருடங்களாக பதில் வரவில்லை.....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

எல்லா இரவுகளையும் போல சில இரவுகள் இருப்பதில்லை: கவிதை - நிழலி

சில இரவுகளில்... கண்விழித்தால், ஓடும் யோசனை... மிகக் கொடுமையானதாக இருக்கும்...


ம்ம்ம்....இரவுகளில் யாழில் உலாவதும் நித்திரைக் குளப்பத்தினால் தான்..?

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this