Jump to content

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் - ஜய வருஷப் பிறப்பின் சிறப்புகள் - 14.04.2014


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எதைப்பற்றி பேசினாலும் சிங்களவனையும் போராட்டத்தையும் இழுத்து மற்றவனை முட்டாளாக்கும் போக்கத்தவர்களுக்கு.. பாரதிதாசனின் கருத்தை இங்கு முன் வைக்கிறேன். 

 

“நித்திரையில் இருக்கும் தமிழா

சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு

அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே”

“அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழருக்கு

தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”

 

மற்றும் தமிழும் வட மொழியும் கலந்திருப்பதால் பிரபாகரன் என்ற பெயர்கூடத்தான் தமிழ் இல்லை. அதற்காக அவர் தேசியத் தலைவர் இல்லையா என முட்டாள்தனமாக கேள்வி கேட்க நான் தயாரில்லை. ஆக, சில மேதாவிகளின் கூற்றுப்படி பாரதிதாசன் மானம்கெட்ட வாழ்வு வாழ்ந்திருந்தால் அதுவே எனதாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்.

 

சிங்களவனை இழுத்து எழுதியவர் நிழலி என்பதால் அவர் தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும். அவர் எழுதிய அடிமை என்ற வார்த்தைக்கு பொத்தம்பொதுவாகத் தான் இந்தப் பதில்.

பெயரை வைத்து நீங்கள் 60 ஆண்டு காலமும் தமிழ் இல்லை, அதனால் சித்திரை ஆண்டுப் பிறப்பு தமிழில்லை என்றால், உங்களின் பெயரும் தமிழில்லை. ஆதனால் நீங்கள் தமிழரில்லையா என்று நான் கேட்ட கேள்வியைத் திருப்ப என்னிடமே கேட்கின்றீர்களே... தேசியத்தலைவர் பெயர் தமிழில்லை அதனால் தமிழரல்லை என்ற வாதம் நீங்கள் 60 ஆண்டு காலப் பெயர் பற்றிச் சொன்ன விடயங்களோடு தான் பொருந்துகின்றது....

பாரதிதாசன் ஒரு வரலாற்று ஆய்வளரா என்றால் அது இல்லை என்பது இருக்கட்டும். ஆனால் பாரதிதாசன் சொல்லீட்டார் என்றால் அதை எந்த விளக்கமில்லாமில்லாமல் பின்பற்ற என்ன மந்தைகளா? அவர் ஆரியன் தந்தார் என்கின்றார். ஆனால் சித்திரையில் புத்தாண்டு கொண்டாடுகின்ற தமிழர், மலையாளிகள், சீக்கியர், அசாமியர், தாய்லாந்து, வியட்னாம், சிங்களவர்..... தவிர, வேறு எந்த ஆரியன் கொண்டாடுகின்றான் இதை? இந்துப் புத்தாண்டு என்றால் கூட அது தப்பு. இந்துப்புத்தாண்டு என்பது பங்குனி மாதம் தான் வருகின்றது. தவிர, மேலே கொண்டாடுகின்ற மக்களில் சீக்கியர் தவிர, மற்றய எல்லோருக்கும் தமிழர்களோடு தொடர்பு இருக்கின்றது. தமிழர் ஆண்ட பகுதிகள்...

மற்றும்படி நான் இப்படி இருப்பேன். மானம் இல்லாமல் இருப்பேன் என்று சொல்லுவது எல்லாம் நழுவல் போக்கு.. முடிந்தால் தைப்பொங்கல் தமிழர் புத்தாண்டு ஆக இருப்பதற்கு 4 சான்றுகளை வைத்து விட்டுப் போங்கள்.. இல்லாதபடியால் தான் இப்படித் தப்பியோட்டம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இன்றும் இது ஒரு தீராத குழப்பம் தான். நான் படித்தவற்றையும் இணையத்தில் கண்டவற்றையும் உங்களுக்கு தருகிறேன். உங்களது மறுமொழியை காண ஆவலாக உள்ளேன்.
 
தை தமிழ்ப் புத்தாண்டு எனக் கூறக் காரணம் 
1. மறைமலையடிகளார் தலைமையில் 1921 ஆம் ஆண்டு  பச்சையப்பன் கல்லூரியில் 500 தமிழ்ப் புலவர்கள் கூடி தை முதல் நாள் தான் திருவள்ளுவர் ஆண்டு; அதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று முடிவெடுத்து அறிவித்தார்கள்.
 
2. 1937 டிசெம்பர் 26 இல் திருச்சியில் ‘அகில இந்திய தமிழர் மாநாடு’ சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிர மணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க. மறைமலை அடிகளார், பி.டி. இராசன், ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உட்படப் பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும் பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் பறைசாற்றியது.  
 
3. பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது என்பது தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நர்ச்சினார்க்கினியர் எழுதிய உரை மூலம் தெரிகிறது. இரண்டு நூற்றாண்டுக்கு முன் சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.
 
4. கழக இலக்கியங்களில் காணப் பெறும் சான்றுகள்  சில:-
 
  ""தைஇத் திங்கள் தண்கயம் படியும்""  (நற்றிணை)
 
 ""தைஇத் திங்கள் தண்ணிய தரினும்""  (குறுந்தொகை)
 
 ""தைஇத் திங்கள் தண்கயம் போல்""  (புறநானூறு)
 
 ""தைஇத் திங்கள் தண்கயம் போல""  (ஐங்குறுநூறு)
 
 ""தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ""          (கலித்தொகை)
 
"தைப் பிறந்தால் வழி பிறக்கும்', "தை மழை நெய் மழை' முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன.
 
இப்படி தொண்மையாக தையில் பின்பற்றி வந்த தமிழ்ப் புத்தாண்டை ஏன் சித்திரையில் கொண்டாட வேண்டும்?
 
சித்திரை தமிழ்ப் புத்தாண்டு எனக் கூறக் காரணம் 
1. ஆண்டின் தொடக்கம் வசந்தமாக (இளவேனில்) இருப்பதற்காகக் கணிக்கப்பட்டதே சித்திரைப் புத்தாண்டு எனக் கொள்ளப்பட்டது.
2. பஞ்சாங்கம் கணக்குப் படியும்  சித்திரைப் புத்தாண்டு எனக் கொள்ளப்பட்டது
3. முக்கியமான பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும்தங்களுடைய புத்தாண்டு வாழ்வைதங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்லசீனர்களும்ஜப்பானியர்களும்,கொரியர்களும்மஞ்சூரியர்களும் எனபல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

 

தமிழர்கள் கூடினார்கள். அறிவித்தார்கள், பேசினார்கள் என்பது எல்லாம் வேண்டாமே.... என்ன பேசி, எதுக்காக இந்த முடிவு எடுத்தார்கள் என்பது பற்றி ஒரு அர்த்தம் கொண்டு எவரும் பதிலளிக்கத் தயாராக இல்லை. எதற்காக இந்த முடிவு என்பதற்கு ஏதாவது ஒரு பதில் இவர்களால் சொல்ல முடிகின்றதா? அது தான் எனக்குத் தேவை. மற்றும்படி 100, 1000 என்று ஆட்களைக் கூடிப் பேசுவது என்பது ஒரு பிரச்சனையே இல்லை. இப்படி இலட்சம் பேர் முடிவெடுத்தாலும் எதற்கு என்று ஒரு விளக்கம் கூடக் கொடுக்கக்கூடாதா?

பழந்தமிழர் மாதமாகத் தை இருந்தது என்பதற்கும் எந்தச் சான்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஆவணியில் புத்தாண்டு கொண்டாடியதாகத் தொல்காப்பியம் கூறுவதாகச் சொல்கின்றார்கள். அப்போது லீப் வருடம் இல்லாததால் 1000 ஆண்டுக்கு 1 மாதம் முன்நகருமாம்.அப்படிப் பார்த்தால் தொல்காப்பியம் 5000 ஆண்டுக்கு முதல் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும்.

இந்தத் தமிழ் வரலாற்று அறிஞர்களாகச் சொல்லிக் கொள்பவர்கள் காலத்துக்குக் காலம் பொய்விடுவார்கள். ஆனால் காரணம் சொல்ல மாட்டார்கள். கொஞ்சக்காலம் நக்கீரன் வடநகர்பு, தென்நகர்வு என்று காரணம் சொன்னார். ஆனால் வடநகர்வு திசம்பர் 20ம் திகதி வருவதால் அவரது அந்தக் கணிப்பும் பொய் ஆகிவிட்டது. தவிர, அப்படிப் பார்த்தாலும் தைப்பொங்கல் போயும், போயும் மகர ராசிக்குள் போவதை வைத்து ஏன் வரவேண்டும் இதற்கும் ராசிக்கணக்கு எப்படி வந்தது என்பதற்கும் பதிலில்லை. தவிர, வடமுனை - தென்முனை பற்றி அனுபவிப்பவர்கள் துருவப்பகுதியோடு நெருக்கமாக உள்ளவர்களால் தான் முடியும். மத்தியகோட்டுக்கு அருகே உள்ளவர்களால் அதை உணர்வது என்பது கடினமானதே. நீங்கள் மேலே இணைத்த இலக்கியமாதங்களில் தையில் பொங்கினான் என்றோ, அல்லது அது சார்ந்தோ வரவில்லையே. தவிர, தை என்பது சந்திரமாதம், நாங்கள் ஆரம்பத்தில் சூரியமாதத்தை வைத்துத் தான் கணித்தோம் என்கின்றார்கள்...

Link to comment
Share on other sites

சிங்கள இனமான ஆரியனுடன் சேர்ந்து தமிழ் புத்தாண்டை கொண்டாடி தன்னையும் ஒரு அடிமை என்று உணரும் அத்தனை தமிழர்களுக்கும் என் ஆழ்ந்த கவலைகள்.

இன்னும் சில வருடங்களில் விடுதலை போராளிகளை அழித்த மே 18 இனை அல்லது அவ் வாரத்தினை சிங்களவர்களுடன் சேர்ந்து கொண்டாடும் நாளையும் திருநாள் என்று நீங்கள் போற்றி கொண்டாடும் போது எங்கோ ஒரு மூலையில் உங்களுக்காக போராடி தன் உயிரை ஆகுதியாக்கிய போராளியின் ஆத்மா கண்ணீர் சிந்தும் சத்தம் கூட உங்களுக்கு கேட்காது

தமிழன் நத்தார், ஈஸ்ட்டர் போன்றவற்றை கொண்டாடினால் உங்களுக்கு தவறாக தெரியாது , இவையெல்லாம் என்ன திராவிடனின் பண்டிகைகளா?? அதைவிட தமிழ் புத்தாண்டு ஆரிய்நுடையதானால் அதை ஏன் வட இந்தியன் பிகாரிலும், மத்திய பிரதேசத்திலும் , உத்தர் பிரதீச்ச்த்திலும் கொண்டாடுவதில்லை ??

அதை விட தமிழ் நாட்டிலும் புது வருட பிறப்பை கொண்டாடீனம் அவையும் சிங்களவன் சொல்லியா செய்யீனம்? நீங்கள் மாவீரரை காட்டி எல்லோரையும் மிரட்டி உங்களுடைய அரசியல் எண்ணங்களை திணிக்கிறியல்

Link to comment
Share on other sites

தமிழர்கள் கூடினார்கள். அறிவித்தார்கள், பேசினார்கள் என்பது எல்லாம் வேண்டாமே.... என்ன பேசி, எதுக்காக இந்த முடிவு எடுத்தார்கள் என்பது பற்றி ஒரு அர்த்தம் கொண்டு எவரும் பதிலளிக்கத் தயாராக இல்லை. எதற்காக இந்த முடிவு என்பதற்கு ஏதாவது ஒரு பதில் இவர்களால் சொல்ல முடிகின்றதா? அது தான் எனக்குத் தேவை. மற்றும்படி 100, 1000 என்று ஆட்களைக் கூடிப் பேசுவது என்பது ஒரு பிரச்சனையே இல்லை. இப்படி இலட்சம் பேர் முடிவெடுத்தாலும் எதற்கு என்று ஒரு விளக்கம் கூடக் கொடுக்கக்கூடாதா?

 

நீங்கள் கூறுவது ஏற்புடையதே.

 

என்னென்ன விவாதிக்கப்பட்டது ?? ஏன் இந்த முடிவுக்கு வந்தார்கள்?? எனபது பற்றி முறையான காரண காரியங்கள் ஏதுமின்றி பொத்தாம் பொதுவாக கூறுவதினால் குழப்பம் நீடிக்குமேயன்றி தீர வாய்ப்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவிர ஆரியம்- திராவிடம் பிரச்சனை என்றால் அதற்குள் ஏன் தமிழன் அவதிப்பட வேண்டும். ஆரியனுக்கு எதிரானது என்றால் தையைத் திராவிடப் புத்தாண்டு என்று கொண்டாடி விட்டுப் போங்கள்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.