Jump to content

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் - ஜய வருஷப் பிறப்பின் சிறப்புகள் - 14.04.2014


Recommended Posts

”ஜய வருஷம்” எனும் புதிய புத்தாண்டு எதிர்வரும் 13.04.2014 ஞாயிற்றுக்கிழமை கனடா, அமெரிக்கா போன்ற வட-அமெரிக்க நாடுகளிலும்;14.04.2014 திங்கட்கிழமை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் பிறப்பதாக சோதிடம் கணித்துள்ளதுஇராசி மண்டல வலயத்தில் உள்ள மேஷ ராசியில் சூரியன் உதயமாகும் தினமே தமிழ்-இந்துக்களின் புது வருடப்பிறப்பாக கொண்டாடப் பெறுகின்றது. சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசிக்கு வரும் வரை உள்ள காலம் ஓர் தமிழ்-வருஷமாகும்.

 

ஆலயத்தில் நாம் அங்கப்பிரதஷ்டை செய்யும்போது நாமும் சுழன்று கொண்டு ஆலயத்தையும் சுற்றி வலம்வருவதுபோல்; பூமியானது தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வலம்வருவதும், ஒருமுறை சுற்றிவர ஒரு வருட காலம் எடுக்கும் என்பதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள்.

 

பூமி சூரியனை சுற்றும் போது சோதிடம் கூறும் 12 ராசிகளில் முதல் ராசியாகிய மேடராசியில் சூரியன் பிரவேசிக்கும் தினமே வருடப் பிறப்பாக கணிக்கப்பெறுகின்றது. இத்தினத்தையே சிங்கள பௌத்த மதத்தினரும் இந்து மதத்தினரைப்போல் தமது புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். (இயற்கையாகவே பூமியும் எல்லாக் கிரகங்களும் சூரியனை சுற்றி வருகின்ற போதிலும்; பூமியை  சுற்றியுள்ள  Zodiac என ஆங்கிலதில் அழைக்கப்படும் கற்பனையான இராசி மண்டல வலயத்தினூடாக சூரியன் உள்ளிட்ட எல்லாக் கிரகங்களும் பூமியை சுற்றி வருவதாக சோதிடம் கணிக்கின்றது.)

 

இப் பூவுலகம் தோன்றியதில் இருந்து பூமியானது சூரியனைச் சுற்ற ஆரம்பித்தது. சூரியனும், பூமியும் கோள வடிவினதாகவும், ஈர்ப்பு விசையுடன் சுழன்று கொண்டு இருப்பதனால் அவை குறிப்பிட்ட காலத்தின் பின்னர் சுற்றத் தொடங்கிய இடத்திற்கு வந்து சேர வேண்டும் என்பது இயற்கையின் நியதி. அப்படி வந்தும் (திரும்பவும்) தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருப்பதனால்  சுற்று ஆரம்பித்த அந்த நிகழ்வானது பிறப்பாகவும், அச்சுற்றை திரும்பத் திரும்ப ஆரம்பிக்கும் தினம் பிறந்த தினமாகவும் கொண்டாடுவதாக கூறலாம். அதாவது, மீண்டும் ஒருமுறை சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் நாளே (பூமியின் பிறந்த நாளே) சித்திரை வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

 

 

 

 

சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் நிகழ்வானது வருடத்தில் ஒருமுறை நிகழ்கின்ற போதிலும், எல்லா நாடுகளுக்கும் வெவ்வேறு நேரங்களாக அமைந்து விடுகின்றன. எல்லா நாடுகளுக்கும் இடையே அனுசரிக்கப் பெறும் நேர வித்தியாசங்களுக்கு ஏற்ப நிகழ்வின் நேரம் மாற்றமடைகின்றது.

 

அதாவது சூரியன் மேடம் இராசியில் பிரவேசிக்கும் நிகழ்வானது இவ்வருடம் இலங்கை நேரப்படி 14.04.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 6:10 மணியாக இருக்கும்போது நிகழ இருப்பதால்; அப்போது கனடா-ரொறொன்ரோவில் 13.04.2014 சனிக்கிழமை இரவு 8.40 மணியாக இருக்கும்.

 

அதனாலேயே கனடாவில் இருப்போருக்கு வருடப் பிறப்பானது 13.04.2014 அன்று நிகழ்வதாக கணிக்கப்பெறுகின்றது. இயற்கை நிகழ்வுகள் யாவும் எல்லா நாடுகளுக்கும் பொதுவான ”கிறீன்விச்” நேரத்திற்கு அமைவாகவே கணிக்கப் பெற்று, மற்றைய நாடுகளின் அமைவிடங்களுக்கு ஏற்ப நேரம் கணக்கிடப்பெறுகின்றது.

 

அத்துடன்; பொதுவாக ஒரு குறிப்பிட்ட நாட்டின் சூரிய அஸ்தமனத்தின் பின்னர் சூரியன் மேஷம் ராசியில் பிரவேசிக்கும் நிகழ்வு நிகழ்ந்தால்; மறுநாளே வருடப் பிறப்பாக கணிக்கப்பெற்று ஆலயங்களில் விசேட பூசைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கத்தில் உள்ளது. ஆகவே கனடாவில் வசிப்போருக்கு 13.04.2014 (சூரியன் மேடராசிக்கு புகுந்தாலும்) வருடம் பிறந்தாலும் 14.04.2014 அன்றே புது வருடமாக கொண்டாடப் பெறுகின்றது.

 

பூமியில் வாழும் எல்லா உயிர்களிடத்தும் சூரிய பகவான் ஆதிக்கம் செலுத்துவதால், இந் நாளில் சூரிய வழிபாடு மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றது. இந்த புனித நன்னாளில் புத்தாடை அணிந்து பெரியோர்களின் ஆசிர்வாதம் பெற்று, கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது சைவ மக்களின் மராபாகும். மேலும் தான, தர்மங்கள் செய்வதுடன், உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி, பொங்கல், பலகாரங்கள் பரிமாறி அனைவரும் மகிழ்வோடு கொண்டாடுவது வழக்கமாகும். 

 

புது வருடத்தில் செய்யப்பெறும் அனைத்துச் செயல்களும் காலமறிந்து சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக அன்றைய தினத்தில் நாம் அனைவரும் பஞ்சாங்கங்கத்தில் குறிப்பிட்டதன் பிரகாரம், குறிப்பிட்ட சுப நேரத்தில்(விஷூ புண்ணிய காலம்)  மருத்து நீர் வைத்து, தோய்ந்து புத்தாடை தரித்து ஆலயம் சென்று வழிபடுவதோடு. குறிக்கப்பெற்ற சுபநேரத்தில் பெரியோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதம் பெறுவதும், கைவிசேஷம் பெறுவதும் தொன்று தொட்டுவரும் வழக்கமாக உள்ளது, வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் எமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது இந்துக்களின் ஐதீகம்.

 

தமிழ் மாதக் கணிப்பானது சூரியன் மேட இராசிக்குள் நுழைவது முதல் அவ் இராசியை விட்டு விலகும் நாட்களை சித்திரை மாதம் எனவும்; சித்திரை மாதமே (இந்துக்களின்) தமிழ் மக்களின் வருடத்தின் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும்.

 

இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இலங்கையில் தமிழ்- சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாக புதுவருடப் பிறப்பு இருப்பதால் இது ஒரு தேசியப் பெருவிழாவாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.

 

விஷூ புண்ணிய காலம் 

இதுவரை காலமும் நம்மை பீடித்துள்ள தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கான பரிகாரங்கள் செய்வதற்கான புண்ணிய காலமாக சோதிடம் கணிக்கும் காலமாகும். இப் புண்ணிய காலம் கனடாவில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:40 முதல் 12:40 வரை  அமைவதாக சோதிடம் கணித்துள்ளது. அதுவே அவ்விடத்தின் விஷூ புண்ணிய காலமாகும். இக் காலத்தில் மருத்துநீர் தேய்த்து தோய்தலும், புத்தாடை தரித்து, இறைவனை வணங்க்கி பெரியோர்களின் ஆசி பெறுதலும் நிகழ்கின்றது. அன்றைய தினம் அணியும் ஆடைகள் கூட அதிஷ்டம் உள்ளதாக இருப்பதற்காக சோதிடம் அதன் வர்ணங்களை பரிந்துரைக்கின்றது. அதன் பிரகாரம் இவ் வருடம் சிகப்பு அல்லது இளஞ்சிகப்பு பட்டாடைகள் அணிவது சிறப்பானது என கூறியுள்ளது.

 

சங்கிரமதோஷ நட்சத்திரங்கள்

இவ் வருடம் பிறக்கும் நேரத்தின் கோசர நிலையில் சில நட்சத்திரங்கள் தோஷமடைகின்றன. தோஷமடையும் நட்சத்திரங்களின் விபரங்களை கண்டறிந்து பரிகாரம் செய்வதன் மூலம் நிவர்த்தி செய்யலாம். 

 

ரோகிணி, உத்தரம் 2,3,4; அத்தம் சித்திரை 1,2; திருவோணம், பூரட்டாதி-4, உத்தராட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தோருக்கு சங்கிந்தி தோஷம் ஏற்படுவதால் மருந்துநீர் தேய்த்து ஸ்நானஞ் செய்து தான, தருமங்கள் செய்வது சிறந்தது

 

மருத்து நீர்

மருத்து நீர் வைத்தல் என்பது முக்கிய விடயமாக புதுவருட தினத்தில் கருதப்படுகிறது. இம்மருத்துநீர் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சி எடுக்கப்பெறும் ஒரு கஷாயமாகும். மருத்து நீர் வைத்து நீராடினால் புத்தாண்டின் நல்ல பலன்களை பெறலாம் என்பது நம்பிக்கை ஆகும். இவற்றுள் பூவகை கிடைக்காவிடின் அவைகளின் இலை, பட்டை, வேர், கிழங்கு ஏதாவது உபயோகிக்கலாம். விஷூ புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்பபூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் வேண்டும்.

 

தலையில் கொன்றை இலையும், காலில் புங்கமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக பார்த்து நின்று தேய்ப்பித்து அதன் பின்னர் ஸ்ஞானம் செய்தல் சிறப்புத் தரும். இலங்கையில் இரு இனங்களுக்கும் பொதுவான தமிழ், சிங்கள புத்ததாண்டாக கொண்டாடப்படுகின்றது. சைவ சமயத்தவர்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் பிள்ளையாரை வணங்கி (பூசைசெய்து) ஆரம்பிப்பது வழக்கம். 

 

அதன் காரணமாக இப் புத்தாண்டு தினத்திலும் முதலில் பிள்ளையார் ஆலயங்களில் சிறப்புப் பூசைகளும் மஹோற்சவ விழாக்களும் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணத்தில், மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம், தாவடி விநாயகர் ஆலயம், நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலயம் ஆகியவற்றில் புத்தாண்டு தினத்தில் தேர்த்திரு விழா நடைபெறுவது வழக்கம். மருதடி விநாயகர் ஆலயம் தற்போழுது புனர் நிர்மாணம் செய்யப்பெற்று வருவதனால் அலங்காரத் திருவிழா நடைபெறுவதாக அறிய முடிகின்றது. இத் தினத்தில் பிள்ளையார் ஆலயங்களில் மட்டுமன்றி எல்லா ஆலயங்களில் விசேட அபிஷேக ஆராதனைகளும், பூசைகளும் நடைபெறும். இத்தினத்தில் அனேகமான ஆலயங்களில் பிரதம குரு கைவிசேஷம் வழங்கும் வழக்கமும் வழக்கத்தில் உள்ளது. 

 

இந்தியாவில் வருடத்திற்கு ஆறுமுறை அபிஷேகம் காணும் தில்லை நடராஜருக்கு வசந்த காலமான சித்திரை மாத திருவோண நட்சத்திர தினத்தன்று அந்த ஆண்டிற்குரிய அபிஷேகம் நடத்தப்படுகின்றது. 

 

வருடப்பிறப்புக் கருமங்கள்: 

புத்தாடை தரிசனம்

ஸ்ஞானம் செய்த பின் மஞ்சள் நிறப்பட்டாடையாயினும் அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய வஸ்திரங்களை அணிந்து கொள்ளுதல் நன்மை தரும். மஞ்சள் நிற ஆடை அமையா விடில், ஆடையில் ஒரு சிறு பகுதிலாவது மஞ்சள் அரைத்துப் பெற்ற கலவையை பூசி விடுவதும் நன்மை தரும்.

 

பின்னர் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், இஷ்டகுல தெய்வ படங்களை தரிசித்து, தாய், தந்தையர், பெரியோர்களிடம் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் உயர்வினை அளிக்கும். 

 

தெய்வ வழிபாடு 

வீடுகளில் இஷ்ட குலதெய்வங்களை வழிபட்ட பின், தமது கிராமத்தில் உள்ள ஆலயங்களுக்கு சென்று பூசை வழிபாடுகளை செய்வதுடன் தான, தருமங்களையும் மேற்கொள்ளுதல் சிறப்பினைத் தரும். சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபடுதல் சாலச் சிறந்தது.

 

நாம் பொதுவாகவே சூரியனின் சுழற்சியைக் கொண்டுதான் காலங்களைக் கணிக்கிறோம். சூரியனின் தேர்ச்சக்கரம் சம்வத்திர ரூபம் என்று சொல்லுவார்கள். காலை, நடுப்பகல், பிற்பகல் என்கிற தினப் பிரிவுகளாகிய மூன்றும் இருசுக் கோர்த்திருக்கும் இடமாயிருக்கும் ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடா வஸ்த்ரம், அநுவஸ்தரம், இத்வத்ஸரம் ஆகிய ஐவகை வருஷங்கள், அந்தச் சக்கரத்தின் ஆரக் கால்கள் ஆகும். 

 

இளவேனில் (வசந்த ருது), ருதுவேனில் (கரிஷ்ம ருது), கார் காலம் (வர்ஷ ருது), குளிர் காலம் (சரத் ருது), முன்பனிக் காலம் (ஹேமந்த ருது), பின் பனிக் காலம் (சிசிர ருது). ருதுக்கள் ஆறும் வட்டக் கால்கள். காயத்திரீ, ப்ருஹதீ, உஷ்ணிக், ஜகதீ, திருஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி ஆகிய ஸப்த சந்தஸ்ஸுகள் ஏழு குதிரைகளாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் வாரத்தின் ஏழு நாட்கள் பெயரிடப்பட்டன, துருவனை ஆதாரமாகக் கொண்ட சிறிய அச்சு. தேரின் பெரிய அச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. சூரியனே `தேவயான மார்க்கம்’ அது அர்ச்சிராதி மார்க்கம் எனவும் சொல்லப்படும். புண்ணிய கர்மாக்கள் செய்பவர் சொர்க்கம் செல்லப் பயன்படும் வழி `பித்ருயாணம்’ என்றும் `தூமாதி மார்க்கம்’ என்றும் அழைக்கப்படும். 

 

வராஹமிஹிரர் என்னும் வானியல் நிபுணர் “ப்ருஹத் சம்ஹிதையில்“ மேஷ சங்க்ரமண காலத்திலே சூரிய பகவானை நமஸ்காரம் செய்வது மிகவும் விசேஷம் என்று சொல்லுகிறார். சைத்ர விஷு புண்ணியகாலம் என்பது சித்திரை மாதப் பிறப்பைக் குறிக்கும், அதாவது சூரியன் முதல் ராசியான மேஷத்தில் ப்ரவேசிப்பது. சித்திரை முதல் நாள்தான் ராமபிரான் ராவணனை வெல்ல அகஸ்திய முனிவரிடம் உபதேசம் பெற்று, ஆதித்ய ஹ்ருதயம் படித்தார். ஆகவே இந்தப் புனித சித்திரை நன்நாளில் காலையில் எழுந்து நீராடி, சுத்தமான மனதுடன் இறைவனைப் ப்ரார்த்தித்து, ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது மிகுந்த பலனைத் தரும். 

 

சித்திரை மாதத்து உதய சூரியனின் கதிர்கள் தொடர்ந்து பனிரெண்டு நாட்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பா சமுத்திரம் பாபநாசம் கோயிலில் உள்ள பாபநாச ஸ்வாமியின் மீது படுவதால், அந்த நேரத்தில் அங்கு வந்து வணங்கும் பக்தர்களின் பாபங்களையெல்லாம் தீர்க்கீறார் என்பது ஐதீகம். 

 

இந்த தினத்தைக் கேரள மக்கள் “விஷுக்கனி“ என்று கொண்டாடுகிறார்கள். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்கிற எந்த பேதமுமில்லாமல், முதல் நாள் இரவே குருவாயூர் கோயிலுக்குச் சென்று, அங்கேயே தங்கி, நள்ளிரவுக்குப் பின் சித்திரை மாதப் பிறப்பன்று விஷுக்கனி காணல் என்று வருஷ ஆரம்பத்திலே குருவாயூர் கிருஷ்ணனைக் கண்குளிரத் தரிசித்து, வருடம் முழுவதும் இனியதாக இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் மகிழ்வார்கள்.

 

பஞ்சாங்கம் பார்த்தல்:

சித்திரை புதுவருடமன்று நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி அதற்கு சந்தனம், குங்குமம் ஆகியன இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும். பின்னர் குடும்ப சோதிடரையோ, புரோகிதரையோ கொண்டு புத்தாண்டுப் பூஜைகளை செய்யவேண்டும். பூஜை முடிந்த பின்பு அவர் புத்தாண்டுப் பஞ்சாங்கத்தைப் படிப்பார். அதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம். சில தோஷங்களையும் நீக்கி கொள்ளலாம்.

newyearx.jpgபுதுவருட தினத்தில் தான தருமங்கள் செய்வது வழக்கம். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும். சித்திரை பிறப்பதற்கு முந்தைய நாள் இரவு சாப்பாடு முடிந்தபிறகு பூஜை அறையை தூய்மை செய்து கோலமிட்டு வைத்து விட வேண்டும். வீட்டிலுள்ள பொன், வெள்ளி நகைகள், உட்பட அனைத்து ஆபரணங்களையும் பணம், நிலைக்கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், மலர்கள் முதலிய மங்கலப் பொருள்களையும் தயாரித்து, ஒரு மனையின் மீது இட்டு அதற்கு அழகியகோலமிட்டு, பூஜைக்குரிய தெய்வத்தின் முன் வைக்க வேண்டும்.

அரிசி, பருப்பு, வெல்லம், பலா, மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றையும் வைத்து மறுநாள் காலை, சித்திரை மாதப்பிறப்பன்று அதிகாலையில் முதன் முதலாக வீட்டில் மூத்த பெண்மணி எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி இறைவன் முன்பு குத்துவிளக்குகளையும், ஊதுவத்திகளையும் ஏற்றி வைப்பார். அதற்கு பின்பு, அவர் வீட்டில் தூங்கும் ஒவ்வொருவரையும் எழுப்பி, கண்களை மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு அழைத்துச் சென்று, கண்களை திறக்கச் சொல்வார். பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார். இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் எனவும் மங்கலப் பொருள்கள் செழித்து இருக்கும் என்பது நம்பிக்கை.

 

அறுசுவை உணவு

சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர்.

 

மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம்பெறுதல் அவசியம். வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை. இதற்காகவே இந்த உணவு உண்ணப்படுகிறது. அத்துடன்  உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும் என்பது மக்களின் முக்கிய நம்பிக்கையாகும். இதற்காகவே விருந்தினர் வருகையும் விருந்தோம்பலும் நம் பாரம்பரியமாக மாறியது.

 

கைவிஷேடம்

சித்திரை முதல் நாளன்று பெருவாரியாக மக்கள் கோயில்களுக்கு சென்றும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டும் மற்றும் பல வகைகளிலும் வருடப் பிறப்பை சிறப்பாக கொண்டாடுவர். சித்திரைப் புதுவருடத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் கைவிசேடமாகும். ஆரம்ப காலத்தில் வீட்டின் தலைவி உரிய சுப நேரத்தில் சிறிய மூலிகைப் பொட்டலம் ஒன்றினை கிணற்றுக்குள் போட்டுவிட்டு பிறக்கும் புத்தாண்டு நிமித்தம் முதல் முறையாக தண்ணீரை கிணற்றிலிருந்து வெளியில் எடுப்பதையே கை விசேடமாக கருதப்பட்டது. ஆயினும் நாளடவில் கைவிசேடம் என்பது சுபமுகூர்த்தத்தில் பணத்தை கொடுப்பதும் எடுப்பதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 

2.gifநல்ல நேரத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத் தலைவரிடமிருந்தும், வயதில் மூத்தவர்களிடமிருந்தும், அலுவலகங்கள், விற்பனை நிலையங்கள், தொழிற்சாலைகள் என்பவைகளில் வேலை செய்வோர் தங்கள் வேலை கொள்வோரிடமிருந்தும் புதுவருடத்தில் முதல் அன்பளிப்பாக வெற்றிலையில் பாக்கு, நெல்லு காசு என்பவற்றை வைத்து குத்து விளக்கின் முன்னாலே வைத்து கொடுப்பர்கள். பணத்தை கைவிசேடமாக பெற்றுக்கொள்வார்கள். கொடுக்க பட்ட எல்லாவற்றையும் எண்ணி (நெல்லு உட்பட) அது ஒற்றை விழுந்தால் நல்ல பலன் என்பது ஐதீகம். கைவிசேடம் பரிமாறிக்கொள்வது என்பது ஒரு பாரம்பரியமான வழக்கமாகும்.

 

மூத்தோர்களிடமிருந்து கைவிசேடம் பெற்றால் அந்த ஆண்டு முழுவதும் பணவரவும் பல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கைவிசேடமாக பெற்ற பணத்தை அந்த ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பதும் நம்பிக்கையாக கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.

 

சித்திரைப் புதுவருடம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பெருவிழாவாக இங்கு சிறப்புப் பெறுவதுடன், தமிழ், சிங்கள மக்களுக்கு இடையிலான நெருங்கிய தொடர்புகளை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருந்தாலும் கொண்டாடுவதில் சில தனித்தனியான பாரம்பரிய கலாசார நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறார்கள்.

 

சமாதானம் சந்தோஷம் ஆகியவற்றை சுமந்து வெள்ளைநிற வண்டியில் வரும் இந்திரதேவ குமரனின் வருகையினை கொண்டாடும் விதத்திலேயே சித்திரை புத்தாண்டை சிங்கள பெளத்தர்கள் கொண்டாடுவதாக வரலாறு கூறுகின்றது. புத்தாண்டு பிறக்கும் செய்தியினை ‘குயில்’ தன் குரலால் உலகறியச் செய்வதாக நம்பப்படுகின்றது.

 

சிங்கள மக்கள் தமது புதுவருடத்தில் புத்தாண்டுக்கான ஏற்பாடுகள் அதற்கான சுபநேரத்தில் அரிசி இடித்து அடுப்புக்கட்டி பலகாரம் சுடுவதுடன் ஆரம்பிக்கப்படுவது வழக்கமாகும்.அடுத்ததாக பழைய வருடத்திற்கான ஸ்நானம் இடம்பெறும். உடலையும் உள்ளத்தையும் சுத்தப்படுத்தும் நோக்கி இடம்பெறும் இந்த குளியில் பழைய வருடத்திற்கான இறுதிக் குளியலாகும். புத்தாண்டுக்கான விசேட நீராடல் சிங்களவர் மத்தியில் வழக்கத்தில் இருந்து வருகின்றது.

 

புத்தாண்டு பிறப்பதற்கு முன் எழுந்து மருந்து எண்ணை வைத்து குளிப்பார்கள். விகாரைக்கு சென்று வழிப்பட்டு புத்தாண்டு பிறப்பு நேரத்தில் பட்டாசு கொளுத்துவர். புத்தாடை உடுத்தி பால் பொங்குதல், பால்சோறு சமைத்தல் அத்துடன் தின்பண்டங்கள் தயாரித்தலில் ஈடுபடுவர். இத்துடன் பணியாரம், வாழைப்பழம் மற்றும் தின்பண்டங்களும் வைத்து படையல் இடுவர்கள். இப் படையலில் முக்கியமாக பால்சோறு (பால்ப்புக்கை) இருக்கும். நல்ல நேரத்தில் குத்து விளக்கேற்றி ஊதுவர்த்தி கொழுத்தி சாம்பிராணிப் புகைப் பிடிப்பர். குடும்பத்துடன் உணவு பரிமாறி உண்பர். அயலவர்களிடமும் உணவு பரிமாறிக்கொள்வர்.

 

பெரியோரை மதித்து வணங்குவர் அத்துடன் கைவிசேடம் பெறுவர். புண்ணியக் காலம் என்று குறிக்கப்பட்டிருக்கும் நேரத்திற்கு முன்பாக கொடுக்கல் வாங்கல்கள் செய்வர். ஒரு சம்பிரதாயத்திற்காக தத்தமது வேலை/தொழில் செய்வர். பின்னர் அநேகமானோர் புத்தர் விகாரைகளிற்கு “பண” (பௌத்த உரை) கேட்பதற்காகவும் வேறு விசேட நிகழ்வுகளுக்காகவும் செல்வர். இப் புண்ணியக் காலம் முடிந்தப் பிறகு, புத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளையாட்டுப் போட்டிகளை நடத்துவர். பெண்கள் “றபான்” அடிப்பர். இது தமிழரிடம் இல்லாத ஒரு வழக்கமாகும். சிலவேளை புண்ணியக்காலம் இரவில் முடிவடையுமாயின், இந்நிகழ்வுகள் அடுத்த நாளிலோ அல்லது அடுத்து சில நாட்களிலோ தமது வசதி்க்கேற்ப வைத்துக்கொள்வர்.

 

சிங்கள பெளத்தர்கள் சித்திரைப் புத்தாண்டை பகைமை ஒழிப்புக்கான சிறந்த வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்வது வழக்கத்தில் இருந்து வருகின்றது. நீண்ட காலமாக பகைமை கொண்டிருந்த நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை பார்க்கச் சென்று பகைமை தீர்த்துக் கொள்ளப்படும்.

 

கலை கலாச்சார நிகழ்வுகள்

நாட்டின் முக்கிய பகுதிகளிலும் கலை, கலாசார, இசை நிகழ்ச்சிகளுடன் சித்திரைப் புதுவருடம் சிறப்பாகவே கொண்டாடப்படும். இடத்துக்கு இடம் அந்தந்தப் பிரதேச கலாசார மரபுகளுக்கு அமைய வைபவ நடைமுறைகள் வேறுபட்டிருந்தாலும் பாரம்பரியமான நிகழ்ச்சிகளான போர்த்தேங்காய் அடித்தல், சேவல் சண்டை, கிளித்தட்டு, சடுகுடு போன்ற விளையாட்டுகள் எல்லா இடங்களிலும் நடைபெறும் சிறப்பு அம்சங்களாகும்.

இத்துடன் ஊஞ்சலாட்டம், கும்மியடித்தல், கொக்கான் வெட்டுதல், பல்லாங்குழி, ராபான் அடித்தல், சொக்கட்டான் போன்ற பெண்கள் கலந்து கொள்ளும் விளையாட்டுகளும் இடம்பெறுவதுண்டு. அத்துடன் மாட்டு வண்டிச் சவாரி, துவிச்சக்கர வண்டி ஓட்டம், மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம், தலையணை சண்டை வழுக்கு மரம் ஏறுதல் போன்ற போட்டிகளும் சித்திரைப் புதுவருடத்தையொட்டி நடைபெறுவது வழக்கம்.

புதுவருடத்திற்காக அடுப்பு மூட்டுவதும் ஒரு பழக்கமாகும். பழைய வருடத்தின் முடிவில் அனைத்து அடுப்பு வேலைகளும் முடிவிற்குக் கொண்டுவரும் வீட்டுத் தலைவி அடுப்புச் சாம்பலையும் அப்புறப்படுத்தி அடுப்பை தூத்துவிடுவான். அதன் பின் புத்தாண்டு பிறக்கும் வரை வீட்டில் அடுப்பு பத்த வைப்பதில்லை. உரிய நேரம் காலம் பார்த்து மீண்டும் புதுப்பானை வைத்து பொங்குவதற்காக வீட்டுத் தலைவி சுபமுகூர்த்தத்தில் அடுப்பை பத்த வைப்பதே வழக்கத்தில் இருந்து வருகின்றது.

 

குடும்பத்தினர், உறவினர்களுடன் ஒன்றிணைந்து பட்டாசு வெடிகளுடன் புதுவருடத்தை வரவேற்று குதூகலமாகக் கொண்டாடும் நிலைமையானது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியதாகும். புதுவருடத்தின் சுபநேரம் பார்த்து தங்கள் தொழிற்கருமங்களை ஆரம்பிப்பதும், பொதுமக்கள் ஒவ்வொருவரும் நல்ல நாள் பார்த்து தங்கள் உறவினர்களினதும் நண்பர்களினதும் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டு விருந்துபசாரங்களில் கலந்து கொள்வதும், பெரியோர்களைச் சந்தித்து நல்லாசிகளைப் பெற்றுக் கொள்வதும் சிறப்பான பாரம்பரிய நிகழ்வுகளாகும்.

 

புதுவருடம் பிறந்ததன் பின் பஞ்சாங்க கணிப்பின்படி சுப தினத்தில் சுப நேரத்தில் தொழிலிலுக்குச் செல்வது அல்லது தொழிலை ஆரம்பிப்பதன் மூலம் தொழில் விருத்தி அடையும் என்பதே எதிர்பார்ப்பாரும், ஆரம்ப காலத்தில் முற்றத்தில் விளக்கேற்றி வைத்து, அதன் அருகே வைக்கப்பட்டிருக்கும் மண்வெட்டியைக் கொண்டு வீட்டிjavascript:;ன் தந்தை மண்ணை வெட்டி கத்தியால் ஒரு பிலா மரத்தின் கிளையினை வெட்டுவதே வழக்கத்தில் இருந்து வந்தது. காலப் போக்கில் அந்தந்த ஆண்டிற்கு ஏற்ப பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்ட வர்ண உடைகளை அணிந்து, சுப திசை சுப நேரம் ஆகியவற்றுக்கு அமைய அலுவலகத்திற்குச் செல்வதே வழக்கமாகி விட்டது.

 

வருடப்பிறப்பு என்பது வருடத்தினுடைய பிறந்தநாள். அதை நம் மனம் போல மாற்றிக் கொள்ள முடியாது. நம் பிறந்த நாளை நம்மால் மாற்றிக் கொள்ள முடியுமா? அதுபோலத்தான். நாம் என்றைக்குப் பிறந்தோம் என்பதை நம் பெற்றோர் சொன்னதைக் கேட்டுத்தான் நாம் தெரிந்து கொள்கிறோம். நாம் பிறந்தது முதல் நம் பெற்றோர் நம் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டு வரவே, நம்முடைய பிறந்த நாள் என்றைக்கு வருகிறது நமக்குத் தெரிகிறது. அதுபோலவே வருஷம் பிறக்கும் நாளை சித்திரை மாதத்தில் நம் முன்னோர்கள் வழி வழியாகக் கொண்டாடிக் கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே அதை அப்படியே பின்பற்றி, சித்திரை மாதத்தில் கொண்டாடுவதுதான் சரியான செயலாகும்.

 

பிறந்த நாள் என்பதே ஜோதிடம் சம்பந்தப்பட்டது. இப்பொழுதெல்லாம் நாம் ஆங்கில மாதம், ஆங்கிலத் தேதி என்று பின்பற்றி வந்தாலும், குழந்தை பிறந்தவுடன், ஜோதிடரிடம் சென்று அந்தத் தேதியில் என்ன நாள், என்ன நட்சத்திரம் என்று கேட்டுக் கொண்டுதான், பிறந்த நாளை நிர்ணயம் செய்கிறோம். அந்தக் குழந்தை நல்ல ஆயுசுடனும், அமோகமாகவும் இருக்க வேண்டும் என்று அந்த நட்சத்திரத்தில்தான் ஆயுஷ் ஹோமம் செய்கிறோ.ம். கோவிலில் அர்ச்சனையும் செய்கிறோம். இதே முறையில் தமிழ் வருஷப் பிறப்பும் அமைந்துள்ளது.

 

தமிழ்ப் புத்தாண்டு என்று நாம் சொல்லும் வருஷப் பிறப்பு, உலகத்துக்கே பிறந்த நாள் ஆகும். உலகம் என்றால் மக்கள் சமூகம் மற்றும் பிற உயிரினங்களும் சேர்ந்த ஒரு தொகுப்பாகும். இவை அனைத்தும் தோன்றிய நாள் உலகத்துக்குப் பிறந்த நாள் ஆகிறது. அந்தப் பிறந்த நாள் முதற்கொண்டு சதுர்யுகங்கள் கணக்கிடப்பட ஆரம்பித்தன. அன்றைக்கு சூரியன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும், (ராகு, கேது நீங்கலாக) மேஷ ராசியில் பூஜ்யம் பகையில் இருந்தன. அந்த இடத்தில் ஆரம்பித்து விண் வெளி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர சூரியன் எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு வருடம் என்பதாகும். விண்வெளி மண்டலம் வட்ட வடிவமாக இருக்கவே, அதில் 360 பாகைகள் உள்ளன. அவற்றை 12 ஆகப் பிரித்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதமாகக் கணக்கிடப்படுகிறது. அதாவது 30 பாகை கொண்டது ஒரு மாதமாகும். 12 மாதங்கள் கொண்டது ஒரு வருடமாகும். இந்தப் பயணம் ஆரம்பித்த நாளை வருஷப் பிறப்பு என்று வழி வழியாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர்.

 

இதில் தமிழ் வருஷப் பிறப்பு, தெலுங்கு வருஷப்பிறப்பு என்று வித்தியாசங்கள் இருக்கின்றனவே என்று கேட்கலாம். இரண்டும் ஒன்றுதான், தெலுங்கு வருஷப் பிறப்பை ‘யுகாதி’ என்று சொல்வதிலிருந்து சதுர் யுகம் ஆரம்பித்த முதல் நாளையே அது குறிக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். சதுர் யுகம் ஆரம்பித்த நேரத்தில் சூரியனும், சந்திரனும் ஒன்றாக இருந்தனர். சூரியனும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் அது அமாவாசை ஆகும். அதற்கு மறுதினமான வளர்பிறை பிரதமையில் யுகங்கள் ஆரம்பித்தன. அது மேஷ ராசியின் பூஜ்யம் பாகையில் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு அனைத்துக் கிரகங்களும் அதே இடத்தில், மேஷ ராசியின் பூஜ்யம் பாகையில் சந்தித்துக் கொள்வதில்லை. ஒவ்வொறு கிரகத்துக்கும் இருக்கிற வேக வித்தியாசத்தால் இப்படி இருக்கிறது. தமிழ் நாட்டில் சூரியனது நிலையை மட்டுமே நாம் கணக்கில் கொள்கிறோம், தெலுங்கர்கள் உட்பட பிற மாநிலத்தவர்கள் சந்திரன் இருந்த இடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சூரியன் மேஷ ராசியின் பூஜ்யம் பாகையில் நிழைவதற்கு முன், சூரியனும், சந்திரனும் சேரும் நாளின் அடிப்படையில் அவர்கள் வருடப் பிறப்பு கொண்டாடவே, தமிழர்கள் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டுக்கும், மற்ற மாநிலத்தவர் கொண்டாடும் யுகாதிப் பண்டிகைக்கும் சிறிது வித்தியாசம் வருகிறது. ஆனால் இரண்டுமே சித்திரையில் சூரியன் நுழைவதை முன்னிட்டுக் கணக்கிடப்படுகின்றன.

 

சித்திரை வருஷப் பிறப்பைப் பொறுத்தே, நாடு, மக்கள், பிற உயிரினங்கள், விலை வாசி, விவசாயம், செல்வப் பெருக்கு என்று எல்லாவற்றையும் கணிக்க முடியும். முற்காலத்தில் ராஜாக்கள் சித்திரை வருஷப் பிறப்பின் போது பயபக்தியுடன் கடவுளை வழிபட்டு, பஞ்சாங்கப் பலனைக் கேட்டார்கள். அந்தப் பலன்களின் அடிப்படையில், நாடு நலம் பெற என்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்.

 

 

 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 

 

http://www.panippulam.com/index.php?option=com_content&view=article&id=10332:x&catid=58:football&Itemid=386

Link to comment
Share on other sites

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..! ♥ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..! ♥ (இனிமேல் கொப்பிபண்ணுறத விட்டிரவேணும்)

Link to comment
Share on other sites

அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகள் அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

அனைவருக்கும் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

சிங்கள இனமான ஆரியனுடன் சேர்ந்து தமிழ் புத்தாண்டை கொண்டாடி தன்னையும் ஒரு அடிமை என்று உணரும் அத்தனை தமிழர்களுக்கும் என் ஆழ்ந்த கவலைகள்.

 

இன்னும் சில வருடங்களில் விடுதலை போராளிகளை அழித்த மே 18 இனை அல்லது அவ் வாரத்தினை சிங்களவர்களுடன் சேர்ந்து கொண்டாடும் நாளையும் திருநாள் என்று  நீங்கள் போற்றி கொண்டாடும் போது எங்கோ ஒரு மூலையில் உங்களுக்காக போராடி தன் உயிரை ஆகுதியாக்கிய போராளியின் ஆத்மா கண்ணீர் சிந்தும் சத்தம் கூட உங்களுக்கு கேட்காது

 

 

Link to comment
Share on other sites

சிங்கள இனமான ஆரியனுடன் சேர்ந்து தமிழ் புத்தாண்டை கொண்டாடி தன்னையும் ஒரு அடிமை என்று உணரும் அத்தனை தமிழர்களுக்கும் என் ஆழ்ந்த கவலைகள்.

 

இன்னும் சில வருடங்களில் விடுதலை போராளிகளை அழித்த மே 18 இனை அல்லது அவ் வாரத்தினை சிங்களவர்களுடன் சேர்ந்து கொண்டாடும் நாளையும் திருநாள் என்று  நீங்கள் போற்றி கொண்டாடும் போது எங்கோ ஒரு மூலையில் உங்களுக்காக போராடி தன் உயிரை ஆகுதியாக்கிய போராளியின் ஆத்மா கண்ணீர் சிந்தும் சத்தம் கூட உங்களுக்கு கேட்காது

 

இது தமிழ்ப் புத்தாண்டு அல்ல.

சித்திரைப் புத்தாண்டு.

சுழற்சிமுறையில் வரும் 60 ஆண்டுகளில் ஒன்றுகூட தமிழ் இல்லாதபோது இதை எவ்வாறு தமிழ் புத்தாண்டு என்று கூற முடியும்?

 

விடுதலைப் புலிகளால் அன்று வெளிநாட்டு பிரதிநிதிகள் என்று நியமிக்கப்பட்ட பலர் இன்று தனவந்தராக தினமும் சொகுசு வாழ்வு வாழும்போது.. நாங்கள் எப்போதாவது வரும் இவ்வாறான சில தினங்களிலாவது முறுவலிப்பதில் தப்பென்ன?!

கண்டுகொள்ளாதீங்க!!  :)

Link to comment
Share on other sites

சிங்கள இனமான ஆரியனுடன் சேர்ந்து தமிழ் புத்தாண்டை கொண்டாடி தன்னையும் ஒரு அடிமை என்று உணரும் அத்தனை தமிழர்களுக்கும் என் ஆழ்ந்த கவலைகள்.

 

இன்னும் சில வருடங்களில் விடுதலை போராளிகளை அழித்த மே 18 இனை அல்லது அவ் வாரத்தினை சிங்களவர்களுடன் சேர்ந்து கொண்டாடும் நாளையும் திருநாள் என்று  நீங்கள் போற்றி கொண்டாடும் போது எங்கோ ஒரு மூலையில் உங்களுக்காக போராடி தன் உயிரை ஆகுதியாக்கிய போராளியின் ஆத்மா கண்ணீர் சிந்தும் சத்தம் கூட உங்களுக்கு கேட்காது

இது தமிழர்களுக்கானது என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆண்டுகளின் பெயர்கள் வட மொழியில் உள்ளன. இது முதன்முதலில் தமிழில் ஏற்பட்ட கலப்பு என எண்ணுகிறேன். ஆனாலும், சிங்களவனும் கொண்டாடுவதால் அதை தமிழர்கள் கொண்டாடக்கூடாது என்பதை ஏற்க மாட்டேன்.

சிங்களத்தின் கலாச்சாரத்திலும், மொழியிலும் தமிழர் கலாச்சாரம் கலந்துள்ளது. அவர்கள் அதை பின்பற்றி எடுத்துக் கொண்டதால் நாம் கைவிட வேண்டும் என்றால் அதில் எனக்கு உடன்பாடில்லை.

ஆங்கிலப் பாடலை பிரதியெடுத்து, பார்த்த ஞாபகம் இல்லையோ என்று எம்எஸ்வி அவர்கள் மெட்டுப் போட்டால், மூலத்துக்குச் சொந்தக்காரர் அந்தப் பாடல் தன்னுடையது அல்ல என்று கூறி வெளியேறவேண்டுமா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

”ஜய வருஷம்” எனும் புதிய புத்தாண்டு எதிர்வரும் 13.04.2014 ஞாயிற்றுக்கிழமை கனடா, அமெரிக்கா போன்ற வட-அமெரிக்க நாடுகளிலும்;14.04.2014 திங்கட்கிழமை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் பிறப்பதாக சோதிடம் கணித்துள்ளது

 

pot.gif[/imagescadgnv171.jpg?w=535

 

ஜேர்மனியில்... 13´ம் திகதியா, 14´ம் திகதியா.... வருசம் பிற‌க்கின்றது.

அனைவருக்கும்... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனமான ஆரியனுடன் சேர்ந்து தமிழ் புத்தாண்டை கொண்டாடி தன்னையும் ஒரு அடிமை என்று உணரும் அத்தனை தமிழர்களுக்கும் என் ஆழ்ந்த கவலைகள்.

 

இன்னும் சில வருடங்களில் விடுதலை போராளிகளை அழித்த மே 18 இனை அல்லது அவ் வாரத்தினை சிங்களவர்களுடன் சேர்ந்து கொண்டாடும் நாளையும் திருநாள் என்று  நீங்கள் போற்றி கொண்டாடும் போது எங்கோ ஒரு மூலையில் உங்களுக்காக போராடி தன் உயிரை ஆகுதியாக்கிய போராளியின் ஆத்மா கண்ணீர் சிந்தும் சத்தம் கூட உங்களுக்கு கேட்காது

 

இவர்களாவது பறவா இல்லை..தங்கள் பாட்டில் வாழ்த்துக்களை பரிமாறி விட்டு போய் கொண்டு இருக்கிறார்கள்..மே மாதப் பகுதியில் குறிப்பிட்ட தினங்களிலயே பிறந்த நாள்,திருமண நாள், இறந்தவர்களின் 25 ஆவது நினைவு தினம் எல்லாம் மண்டபம் எடுத்து கொண்டாடுபவர்களை என்ன செய்வது..அதுவும் நடக்கிறது தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனமான ஆரியனுடன் சேர்ந்து தமிழ் புத்தாண்டை கொண்டாடி தன்னையும் ஒரு அடிமை என்று உணரும் அத்தனை தமிழர்களுக்கும் என் ஆழ்ந்த கவலைகள்.

 

இன்னும் சில வருடங்களில் விடுதலை போராளிகளை அழித்த மே 18 இனை அல்லது அவ் வாரத்தினை சிங்களவர்களுடன் சேர்ந்து கொண்டாடும் நாளையும் திருநாள் என்று  நீங்கள் போற்றி கொண்டாடும் போது எங்கோ ஒரு மூலையில் உங்களுக்காக போராடி தன் உயிரை ஆகுதியாக்கிய போராளியின் ஆத்மா கண்ணீர் சிந்தும் சத்தம் கூட உங்களுக்கு கேட்காது

 

நாளை சிங்களவன் தைப்பொங்கலைக் கொண்டாடினால் அதையும் விட்டுக் கொடுத்து இன உணர்வாகக் காட்டிக் கொள்வீர்களா? சிங்களவர்களை ஆண்ட மன்னர்கள் பலர் தமிழ் மன்னர்கள் என்பதால் எங்களைப் பின்பற்றும் வழக்கத்தை அவன் எடுத்திருக்கலாம்.அவன் எங்களைப் பின்பற்றுவது என்பது எங்களின் பிரச்சனை அல்ல.

மே 18 இல் மறைந்த மாவீர்களின் மறைவோடு சித்திரையை எங்களம் ஒப்பீடு செய்கின்றீர்கள் எனத் தெரியவில்லை. ஆனால் அப்படி ஒப்பீடு செய்வதாக இருந்தால், தை 14ம் திகதி ஆரியப்பண்டிகையான மகரசங்கராந்தியைக் கொண்டாடினால், தை 16ம் திகதி அதே இந்தியப்படைகளினால் நயவஞ்சமாகக் கொல்லப்பட்ட கேணல் கிட்டு, உற்பட்ட 10 போராளிகளின் தியாகம் வீணாகாதா என்ன? நேரடியாகச் சித்திரையைத் தமிழ்ப் புத்தாண்டு என்று மறுப்பதற்கு உங்களிடம் நியாயமான காரணம் இருந்தால் வாதாடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழ்ப் புத்தாண்டு அல்ல.

சித்திரைப் புத்தாண்டு.

சுழற்சிமுறையில் வரும் 60 ஆண்டுகளில் ஒன்றுகூட தமிழ் இல்லாதபோது இதை எவ்வாறு தமிழ் புத்தாண்டு என்று கூற முடியும்?

 

விடுதலைப் புலிகளால் அன்று வெளிநாட்டு பிரதிநிதிகள் என்று நியமிக்கப்பட்ட பலர் இன்று தனவந்தராக தினமும் சொகுசு வாழ்வு வாழும்போது.. நாங்கள் எப்போதாவது வரும் இவ்வாறான சில தினங்களிலாவது முறுவலிப்பதில் தப்பென்ன?!

கண்டுகொள்ளாதீங்க!!  :)

 

ஐயா, மகரசங்கராந்தியைப் போய்த் தமிழ்ப் புத்தாண்டு என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தபோதே கேட்டேன். முடிந்தால் வாதிடத் தயாரா என்று.. இப்போதும் சும்மா குழந்தைப்பிள்ளைகள் கதை போலக் கருத்து எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள்.. தமிழ்ப்பெயர் இல்லாவிடின் அது தமிழ் இல்லை என்று சொல்வது எல்லாம் விவாதமா என்ன? ஏன் உங்களுடைய இயற்பெயரும் கூடத் தமிழ் இல்லை. நீங்கள் தமிழர் இல்லையா? மகரசங்கந்தியைத் தமிழ்ப் புத்தாண்டு எனச் சொல்கின்ற மானம் கெட்டவாழ்வை விட, இதைக் கொண்டாவது எவ்வளவோ மேலானது. சிங்களவனிடம் மோதுண்டு, இத்தனை மக்கள் வாய்மேச முடியாமல் தவிக்கும்போது வராதா அடிமை உணர்வு, சித்திரைப் புத்தாண்டு என்று சொன்னவுடன் பொத்திக் கொண்டு வருவது, பொய்மையின் அடையாளம்...

Link to comment
Share on other sites

ஈழத்தமிழினம் போன்ற அதி சிறப்பான இனம் உலகில் இல்லை. ஏனென்றால் வருசத்தில் 3 தரம் தவணை முறையில் புத்தாண்டு கொண்டாடும் அடி முட்டாள் இனம் நாம் தான்:

 

சனவரி 1: நடு இரவு 12 மணி வரைக்கும் முளிச்சு இருந்து ஊரில் இருப்பவருக்கும் (அங்கு அப்ப நடு இரவு 12 கழிந்து பல மணி நேரம் போயிருக்கும்) ''கப்பி நியு இயர்' என்று ஆங்கிலத்தினையும் கொலை செய்து வாழ்த்து தெரிவிப்பர்.

 

 

சனவரி 14 அல்லது 15: தமிழ் நாட்காட்டியில் (கலண்டர்) தை 1: புதுப் பானை வாங்கி பொங்கல் வைத்து பூரிப்படைந்து இனிய தைப்பொங்கல் என்று சொல்லாமல் Happy pongal என்று சொல்வர்.

 

ஏப்ரல் 13: அல்லது 14: இன்னொரு புத்தாண்டு. இதை ஏன் புத்தாண்டாக கொண்டாடுகின்றீர்கள் என்று கேட்டால் முழி பிதுங்க நின்றாலும் அவன்/ள் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லாமல் விடமாட்டான்/ள். அவ்வளவு அறிவு.

 

இப்ப சொல்லுங்கள் நாங்கள் எப்பேர்ப்பட்ட அறிவாளிகள். ஒரே வருடத்தில் 3 தரம் புத்தாண்டு கொண்டாடும் அறிவாளிகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகரசங்கராந்தியைத் தமிழ்ப் புத்தாண்டு என வீம்புக்குப் புகுத்தினவர்கள் தான் இது பற்றிச் சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க உடன் பிறப்புகளைத் தவிர இங்கே யாரும் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடுவது இல்லை.

பெரியார் சீர்திருத்த முறை என்ற பெயரில் தொன்று தொட்டு எழுதிவந்த சில தமிழ் எழுத்துக்கள் பறிபோன கதை போலத் தான் இந்த தமிழ்ப் புத்தாண்டு நாளின் தேதி மாற்றக் கூத்தும். sour.gif

 

23px-Tamil_old_letter_Naa.png - ணா

 

14px-Tamil_old_letter_r_aa.png - றா

 

18px-Tamil_old_letter_n_aa.png - னா

 

37px-Tamil_old_letter_No.png - ணொ

 

35px-Tamil_old_letter_Noo.png - ணோ

 

28px-Tamil_old_letter_r_o.png - றொ

 

26px-Tamil_old_letter_r_oo.png - றோ

 

32px-Tamil_old_letter_n_o.png - னொ

 

30px-Tamil_old_letter_n_oo.png - னோ

 

27px-Tamil_old_letter_Nai.png - ணை

 

23px-Tamil_old_letter_n_ai.png - னை

 

17px-Tamil_old_letter_lai.png - லை

 

19px-Tamil_old_letter_l%2Cai.png - ளை

 

 

இன்னும் சில காலங்களில் 'அம்மா' என்ற சொல்லை எவனாவது 'யம்மே' என கூறுவதுதான் சரி என மாற்றினாலும் வாய் பொத்தி வரவேற்பார்கள் தமிழ் பேக்குகள்.

 

தலைவிதி! angrysmiley18.gif

 

.

Link to comment
Share on other sites

ஐயா, மகரசங்கராந்தியைப் போய்த் தமிழ்ப் புத்தாண்டு என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தபோதே கேட்டேன். முடிந்தால் வாதிடத் தயாரா என்று.. இப்போதும் சும்மா குழந்தைப்பிள்ளைகள் கதை போலக் கருத்து எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள்.. தமிழ்ப்பெயர் இல்லாவிடின் அது தமிழ் இல்லை என்று சொல்வது எல்லாம் விவாதமா என்ன? ஏன் உங்களுடைய இயற்பெயரும் கூடத் தமிழ் இல்லை. நீங்கள் தமிழர் இல்லையா? மகரசங்கந்தியைத் தமிழ்ப் புத்தாண்டு எனச் சொல்கின்ற மானம் கெட்டவாழ்வை விட, இதைக் கொண்டாவது எவ்வளவோ மேலானது. சிங்களவனிடம் மோதுண்டு, இத்தனை மக்கள் வாய்மேச முடியாமல் தவிக்கும்போது வராதா அடிமை உணர்வு, சித்திரைப் புத்தாண்டு என்று சொன்னவுடன் பொத்திக் கொண்டு வருவது, பொய்மையின் அடையாளம்...

 

 

எதைப்பற்றி பேசினாலும் சிங்களவனையும் போராட்டத்தையும் இழுத்து மற்றவனை முட்டாளாக்கும் போக்கத்தவர்களுக்கு.. பாரதிதாசனின் கருத்தை இங்கு முன் வைக்கிறேன். 

 

“நித்திரையில் இருக்கும் தமிழா

சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு

அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே”

“அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழருக்கு

தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”

 

மற்றும் தமிழும் வட மொழியும் கலந்திருப்பதால் பிரபாகரன் என்ற பெயர்கூடத்தான் தமிழ் இல்லை. அதற்காக அவர் தேசியத் தலைவர் இல்லையா என முட்டாள்தனமாக கேள்வி கேட்க நான் தயாரில்லை. ஆக, சில மேதாவிகளின் கூற்றுப்படி பாரதிதாசன் மானம்கெட்ட வாழ்வு வாழ்ந்திருந்தால் அதுவே எனதாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்.

Link to comment
Share on other sites

நேரடியாகச் சித்திரையைத் தமிழ்ப் புத்தாண்டு என்று மறுப்பதற்கு உங்களிடம் நியாயமான காரணம் இருந்தால் வாதாடுங்கள்.

 

 

எனக்கு இன்றும் இது ஒரு தீராத குழப்பம் தான். நான் படித்தவற்றையும் இணையத்தில் கண்டவற்றையும் உங்களுக்கு தருகிறேன். உங்களது மறுமொழியை காண ஆவலாக உள்ளேன்.
 
தை தமிழ்ப் புத்தாண்டு எனக் கூறக் காரணம் 
1. மறைமலையடிகளார் தலைமையில் 1921 ஆம் ஆண்டு  பச்சையப்பன் கல்லூரியில் 500 தமிழ்ப் புலவர்கள் கூடி தை முதல் நாள் தான் திருவள்ளுவர் ஆண்டு; அதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று முடிவெடுத்து அறிவித்தார்கள்.
 
2. 1937 டிசெம்பர் 26 இல் திருச்சியில் ‘அகில இந்திய தமிழர் மாநாடு’ சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிர மணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க. மறைமலை அடிகளார், பி.டி. இராசன், ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உட்படப் பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும் பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் பறைசாற்றியது.  
 
3. பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது என்பது தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நர்ச்சினார்க்கினியர் எழுதிய உரை மூலம் தெரிகிறது. இரண்டு நூற்றாண்டுக்கு முன் சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.
 
4. கழக இலக்கியங்களில் காணப் பெறும் சான்றுகள்  சில:-
 
  ""தைஇத் திங்கள் தண்கயம் படியும்""  (நற்றிணை)
 
 ""தைஇத் திங்கள் தண்ணிய தரினும்""  (குறுந்தொகை)
 
 ""தைஇத் திங்கள் தண்கயம் போல்""  (புறநானூறு)
 
 ""தைஇத் திங்கள் தண்கயம் போல""  (ஐங்குறுநூறு)
 
 ""தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ""          (கலித்தொகை)
 
"தைப் பிறந்தால் வழி பிறக்கும்', "தை மழை நெய் மழை' முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன.
 
இப்படி தொண்மையாக தையில் பின்பற்றி வந்த தமிழ்ப் புத்தாண்டை ஏன் சித்திரையில் கொண்டாட வேண்டும்?
 
சித்திரை தமிழ்ப் புத்தாண்டு எனக் கூறக் காரணம் 
1. ஆண்டின் தொடக்கம் வசந்தமாக (இளவேனில்) இருப்பதற்காகக் கணிக்கப்பட்டதே சித்திரைப் புத்தாண்டு எனக் கொள்ளப்பட்டது.
2. பஞ்சாங்கம் கணக்குப் படியும்  சித்திரைப் புத்தாண்டு எனக் கொள்ளப்பட்டது
3. முக்கியமான பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும்தங்களுடைய புத்தாண்டு வாழ்வைதங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்லசீனர்களும்ஜப்பானியர்களும்,கொரியர்களும்மஞ்சூரியர்களும் எனபல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு! சித்திரை முதல்நாள் சித்திரைப் புத்தாண்டு என்று கொண்டாடலாம்! நக்கீரன்

 

சித்திரை முதல்நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக இந்துசமயத் தமிழர்கள் கொண்டாடி வந்திருக்கின்றனர். அது எப்போது தொடக்கம் கொண்டாடப்பட்டு வருசிறது என்பது தெரியாவிட்டாலும் அதன் காலம் இருநூறு ஆண்டுகளுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள எவனும் அவற்றைத் தமிழ் ஆண்டுகள் என்று ஒப்புக் கொள்ளமாட்டான். இந்த 60 ஆண்டுகளை கடவுளர்களோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் புராணிகர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

 

நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளே 'பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்' என்று தமிழ்க் கலை களஞ்சியமான 'அபிதான சிந்தாமணி' கூறுகிறது. இதற்குப் புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61 ஆவது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் 'பிரபவ' ஆண்டிலிருந்து தான் தொடங்க வேண்டும். இதனால் ஆண்டுகளை 60 க்கு அப்பால் எண்ணமுடியாது இருக்கிறது. இது அறிவுக்கு ஒவ்வாததாகும்.

இப்போது வழங்கும் 'பிரபவ' தொடங்கி 'அட்சய' ஈறாக உள்ள 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டதனால் அவற்றின் பெயர்கள் வட மொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம்7 இந்து 10-03-1940)

இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் இரண்டையும் எண்ணிப் பார்த்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்து மூன்று முக்கிய முடிவுகளை எடுத்தார்கள்.

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைப் பின்பற்றுவது

2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது

3. திருவள்ளுவர் காலம் கி.மு. 31. வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31 யைக் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு.

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை. இந்த முடிவை எடுத்தவர்களில் தமிழகத்தின் மூத்த தமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க., சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

அதன் பின் 1937 டிசெம்பர் 26 இல் திருச்சியில் 'அகில இந்திய தமிழர் மாநாடு' சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிர மணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க. மறைமலை அடிகளார், பி.டி. இராசன், ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உட்படப் பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும் பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் பறைசாற்றியது. தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் சான்றுகளுடன் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம், பொங்கலே தமிழர் விழா என்று அறுதியிட்டுப் பேசினார்.

இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் "மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்' என்று விளக்கம் கொடுத்தார்.

தமிழ்ப் புத்தாண்டு குறித்து ஈழத்து அறிஞர் பண்டிதர் க.பொ. இரத்தினம் அவர்கள் "சித்திரை வருடப்பிறப்பு என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன்மூலம்) தமிழினத்தின் பழமையையும் பண்பையும் சிறப்பையும் செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும் தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன'' என மிகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

1969 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று ஏற்று அரசு விடுமுறை அளித்து ஆணை பிறப்பித்தது.

1971 இல் கலைஞர் கருணாநிதி ஆட்சி திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. இம்முறையை 1971 முதல் அரசு நாள்குறிப்பிலும் 1972 முதல் அரசிதழிலும் வெளியிட்டது. 1981 முதல் எம்ஜிஆர் ஆட்சி அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றுமாறு ஆணை பிறப்பித்தது.

தமிழ்ப் புத்தாண்டு தையா அல்லது சித்திரையா என்ற விவாதத்திற்கு தமிழக சட்ட மன்றத்தில் சனவரி 28, 2008 இல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்ட அடிப்படையில் ஒரு முற்றுப் புள்ளி வைத்தது. தை முதல் நாள் தமிழ்த் புத்தாண்டு என்றும் அதுவே திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் எனவும் அந்தத் தீர்மானம் மொழிந்தது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தார்கள்.

ஆனால் ஜெயலலிதா மட்டும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. "நான் ஒரு பிராமண இனத்தைச் சேர்ந்தவள். சாத்திரங்களின்படி அமைந்துள்ள புதுவருடத்தைத் தமிழ் என்ற போர்வையில் களங்கம் செய்வது தவறு. இது பிராமணிய இனத்தினையே அவதூறு செய்வது போல் உள்ளது. எனவே நான் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலை இந்நடை முறையைத் தடைசெய்வேன்" என்று பேசினார். பேசியது போலவே ஆரியப் பண்பாட்டின் அடையாளமாக, தமிழர் மீது தொடுக்கப்பட்ட பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பின் வாள் வீச்சாகப் புதிய சட்டம் 23.8.2011 அன்று பாய்ந்துவிட்டது.

2011 இல் மறுபடியும் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா கலைஞர் கருணாநிதி ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்ட சட்டத்தை இல்லாதொழித்தார். வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது. இதன் மூலம் ஜெயலலிதா தன்னை ஒரு இந்து அடிப்படைவாதி என்பதோடு ஆரியர் - திராவிடப் போர் தொடர்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டிக் கொண்டார்.

கலைஞர் கருணாநிதி எதைச் செய்தாலும் - அது நல்லதோ கெட்டதோ - அதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்ப்பது அல்லது மாற்றி அமைப்பது என்பதை ஜெயலலிதா ஒரு நோன்பாகக் கொண்டிருக்கிறார். இந்தக் காழ்புணர்ச்சி காரணமாகவே ஆட்சிக் கட்டில் ஏறிய அடுத்த வினாடி சமச்சீர் கல்வி, அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழக அரசு தலைமைச் செயலகம் ஆகியவற்றை மாற்றப் போவதாக அறிக்கை விட்டார். அண்ணா நூற்றாண்டு நூலகம் தெற்காசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் ஆகும். நல்ல காலமாக சமச்சீர் கல்வியை மாற்ற முடியாது என உயர் நீதி மன்றம் அவர் தலைமீது குட்டியது. அதன் பின்னர் பாடப் புத்தகங்களில் இருந்த திருவள்ளுவர் படம் உட்பட பல கட்டுரைகளைக் கிழித்தெறிந்துவிட்டுப் பாடப் புத்தகங்களை வெளியிட்டார். பின்னர் அண்ணா நூற்றாண்டு நினைவாகக் கட்டப்பட்ட நூலகத்தை ஜெயலலிதா இழுத்து மூடிவிட்டார். அது போலவே 1,200 கோடி செலவில் கட்டிய தமிழ்நாடு தலைமைச் செயலகத்தைச் சிறப்பு மருத்துவ மனையாக மாற்றிவிட்டார்.

அண்ணாவின் பெயரைக் கட்சியிலும் அண்ணாவின் படத்தைக் கொடியிலும் வைத்திருக்கும் ஜெயலலிதா அண்ணா நூற்றாண்டு நுாலகத்தை குழந்தைகள் மருத்துவமனை ஆக்கத் தீர்மானம் எடுத்தது பேரறிஞர் அண்ணாவுக்குச் செய்யும் பச்சை இரண்டகமாகும். அண்ணா பிறந்த நாளில் அவரது நினைவுச் சிலைக்கு மாலையிடுவது அரசியல் நாடகமாகும். தமிழ்ப் புத்தாண்டை தை முதல் நாளில் இருந்து சித்திரை முதல் நாளிற்கு மாற்றியதை நியாயப்படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா நீண்ட அறிக்கை ஒன்றினை அப்போது சட்டசபையில் படித்தார். அதில் தமிழ்ப் புத்தாண்டுச் சட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் சுயவிளம்பரத்துக்காக இயற்றப்பட்டது என்றும் இதனால் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை என்ற கண்டுபிடிப்பை ஜெயலலிதா வெளியிட்டார்.

அப்படிப் பார்க்கப்போனால் தந்தை பெரியார், தமிழ்க்கடல் மறைமலை அடிகளார், தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் எல்லாம் தங்கள் சுயவிளம்பரத்திற்காகத் தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தார்களா?

சென்னை Convent Church Park பள்ளிக்கூடத்தில் ஆங்கிலமொழி மூலம் பல்கலைக் கழக புகுமுகத் தேர்வு வகுப்பு மட்டும் படித்த முதல்வர் ஜெயலலிதா சைவ சித்தாந்தி தமிழ்க் கடல் மறைமலை அடிகளார், முத்தமிழ் அறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் போன்ற அறிஞர்களைவிடத் தனக்கு அதிகம் தெரியும் என்பது அறிவுடமை அன்று. அஃது அவரது அறியாமையை அல்லது ஆணவத்தைக் காட்டுகிறது எனலாம்.

பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது என்பது தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நர்ச்சினார்க்கினியர் எழுதிய உரை மூலம் தெரிகிறது. இரண்டு நூற்றாண்டுக்கு முன்பின்னாகச் சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தமிழ்ப் புத்தாண்டைச் சித்திரைக்கு மாற்றியதற்கு இன்னொரு காரணத்தையும் மொழிந்தார். அது ஆண்டின் தொடக்கம் வசந்தமாக (இளவேனில்) இருப்பதற்காகக் கணிக்கப்பட்டதே சித்திரைப் புத்தாண்டு எனக் கூறினார். இந்தக் காரணம் அவருக்கு வானியல் பற்றிய அறிவு பற்றாது என்பதையே காட்டுகிறது. சோதிடர்களைக் கேட்டால் ஞாயிறு புவியைச் சுற்றி வருவதாகவே சொல்வார்கள். அதன் அடிப்படையிலேயே சாதகம் கணிக்கப்படுகிறது. உண்மையில் புவிதான் ஞாயிறைச் சுற்றிவருகிறது.

புவி தனது அச்சில் சுற்றும் அதே வேளை ஞாயிறையும் ஒரு நீள் வட்ட வடிவான ஓடு பாதையில் (ecliptic) சுற்றிவருகிறது. புவி தனது அச்சில் தன்னைத்தானே விநாடிக்கு 30 கிமீ (மணிக்கு 108,000 கிமீ) வேகத்தில் சுழல்கிறது. ஒருமுறை புவி ஞாயிறைச் சுற்றிவர 365.242 நாட்களை எடுக்கிறது. சனவரி 3 இல் புவி ஞாயிறுக்கு அண்மையில் (147.3 மில்லியன் கிமீ) காணப்படுகிறது. யூலை 4 இல் புவி ஞாயிறுக்கு சேண்மையில் (152.1 மில்லியன் கிமீ) காணப்படுகிறது. ஆனால் பருவமாற்றத்துக்குப் புவியின் தொலைவு காரணமல்ல. அதே போல் கோள்கள், நட்சத்திரங்களும் காரணமல்ல. புவியின் அச்சு ஓடுபாதையின் செங்குத்துக் கோட்டிற்கு (perpendicular) 23.45 பாகை ஒருக்களித்துக் காணப்படுகிறது. இந்தச் ஒருக்களிப்பில் மாற்றம் ஏற்படுவதில்லை. இதுவே பருவ மாற்றங்களுக்குக் காரணமாகும்.

பருவ மாற்றங்கள்

வட கோளத்தில் செப்தெம்பர் 22 அல்லது 23 (இலையுதிர் சமபகலிரவு) வட துருவம் ஞாயிறுக்கு அண்மையாகவோ சேண்மையாகவோ இல்லாமல் இருக்கும். அதே போல் வட கோளத்தில் மார்ச்சு 20 அல்லது 21 இல் (வேனில் சமபகலிரவு) வட துருவம் ஞாயிறுக்கு அண்மையாகவோ சேண்மையாகவோ இல்லாமல் இருக்கும். இந்தச் சமபகல் இரவு குறுக்குக் கோட்டில் எங்கிருந்தாலும் வேறுபடாது.

இந்த வேனில் சமபகலிரவு நாளே வடகோளத்தில் வேனில் காலத் தொடக்கமாகும். அஃதாவது மார்ச்சு 20 அல்லது 21 வேனில் காலத் தொடக்கமாகும். எனவே ஞாயிறு சித்திரை முதல் நாள் (ஏப்ரில் 13 அல்லது 14) மேட இராசியில் அசுவினி நட்சத்திரத்தில் புகுகிறது (வானியல் கணிப்பின்படி ஞாயிறு வான் நடுக்கோட்டைக் கடக்கும் நாள் ஏப்ரில் 19 ஆகும்) என்பது சரியான கணிப்பே. ஆனால் வேனில் (வசந்த) காலம் ஏப்ரில் 14 இல் தொடங்குகிறது என்பது பிழையான கணிப்பு. வேனில் காலம் மார்ச்சு 20 அல்லது 21 இல் தொடங்குகிறது என்பதுதான் சரி!

சித்திரைப் புத்தாண்டுக்கு வானியல் அடிப்படை இருப்பது போலவே தை புத்தாண்டுக்கும் வானியல் அடிப்படை இருக்கிறது. தை முதல் (January 14/15) நாள் ஞாயிறு தனது தென்திசை செலவை முடித்துக் கொண்டு தனு இராசியில் இருந்து விலகி - மகர இராசியில் உட்புகுந்து வடதிசைப் பயணத்தத் தொடங்குகிறது.

மேலே கூறியவாறு புவி ஞாயிறை ஒரு நீள்வட்டத்தில் சுற்றிவருகிறது. இது எமது கண்களுக்கு ஞாயிறு புவியைச் சுற்றுவது போன்ற மாயையை ஏற்படுத்துகிறது. ஒரு வட்டத்துக்குத் தொடக்கமும் முடிவும் இல்லை. அதன் தொடக்கம் எந்தப் புள்ளியிலும் தொடங்கலாம். ஞாயிறின் வடதிசைப் பயணத்தில் தனு இராசியில் இருந்து மகர இராசிக்கு (பாகை 270) உட்புகும் நாளும் (மகரசங்கராந்தி) வானியல் அடிப்படையில் ஆனதுதான்.

புவி தனது அச்சில் சுழலும் போது ஞாயிறு ' நிலா இரண்டின் ஈர்ப்பாலும் அதன் நடுப்பகுதி புடைத்து துருவங்கள் சிறிது தட்டையாக இருப்பதாலும் அதன் அச்சில் தளம்பல் (wobble) ஏற்பட்டு சுற்றும் வேகம் குறைகிறது. இதனால் புவி தனது பாதையில் ஆண்டொன்றுக்கு 50.26 ஆர்க் வினாடிகள் (20 மணித்துளி 14 வினாடி) மேற்குத் திசையில் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. 71.5 ஆண்டுகளில் இந்த வேறுபாடு 1 பாகை (ஒரு நாள்) ஆகக் கூடிவிடும்.

இந்தப் பின்னேகலை (Precession of Equinoxes) நட்சத்திரத்தை வைத்து ஆண்டைக் கணிக்கும் இந்திய சோதிடர்கள் கணக்கில் எடுப்பதில்லை. வானியலாளர்களும் மேற்குலக சோதிடர்களும் இந்தப் பின்னேகலை கணக்கில் எடுக்கிறார்கள். இந்திய பஞ்சாங்கங்களில் கடந்த 2000 ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் அயனாம்ச வேறுபாடு திருத்தப்படவில்லை. இதனால் பருவகாலங்கள் பிந்திப் போகின்றன. அயனாம்ச வேறுபாட்டைத் திருத்தி இருந்தால் சித்திரைப் புத்தாண்டு வேனில் தொடங்கும் மார்ச்சு 20-21 ஆம் நாள் கொண்டாடப் பட்டிருக்கும். இது போலவே ஏனைய சமய விழாக்கள் பிழையான நாள்களில் கொண்டாடப் படுகின்றன.

தென்னாட்டுப் பஞ்சாங்கக் கணிப்பாளர்கள் கிபி ஏழாம் நூற்றாண்டில் வராகமிகரர் வகுத்துத் தந்த காலக்கணிப்பை அப்படியே இன்றும் பின்பற்றி வருகின்றனர். அதனால் 24 நாள்கள் காலக்கணக்கில் பிற்பட்டதாகி இருக்கிறது.

இயற்கையை வழிபட்ட தமிழன் தனது ஆண்டுத் தொடக்கத்தையும் அப்படியே வகுத்துக் கொண்டான். ஒரு நாள் என்பது, சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம். ஒருமாதம் என்பது, ஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதனால் தான் மாதம் என்பதற்கு திங்கள் என்ற தமிழ் சொல் உள்ளது. திங்கள் என்றால் நிலவு என்று பொருள். திங்களை (நிலவை) அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் மாதம் திங்கள் என்று அழைக்கப்பட்டது.

அதேபோல் ஆண்டு என்பது, சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி நகர்வதாய்த் தோன்றும் (உத்ராயணம் தொடங்கும்) நாள் முதல் மீண்டும் அதே நிலை (உத்ராயணம் மீண்டும்) தொடங்கும் வரையுள்ள கால அளவு ஓர் ஆண்டு.

அதாவது பஞ்சாங்கக்காரர்களுக்கு சித்திரை மாதம் முதல் நாள், மத்திய அரசிற்குப் - பெரும்பாலான வட இந்தியப் பஞ்சாங்கங்களின் கணக்குமுறைக்கு - சித்திரை 24 ஆம் நாள் ஆக இருந்து வருகிறது. 1957 இல் இந்திய நடுவண் அரசினால் இலாகிரி என்பவரது தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையமே அயனாம்சத்தைக் கணக்கில் எடுத்து புதிய நாள்காட்டியை உருவாக்கியது.

தமிழ் இந்துக்கள் சித்திரை முதல்நாளை சித்திரைப் புத்தாண்டு என்று தாராளமாகக் கொண்டாடலாம். ஆனால் அது தமிழ்ப் புத்தாண்டல்ல. தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அறிக. அதள் காரணமாகவே "தைப் பிறந்தால் வழி பிறக்கும்' "தை மழை நெய் மழை' முதலான பழமொழிகள் இன்றும் வாழையடி வாழையாக வந்த வாய்மொழிப் பழமொழிகளாகும்.

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல் 
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று
பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தை முதல் நாள் பொங்கல் நன்னாள்; நித்திரையில் இருக்கும் 
தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்கவந்த ஆரியக்கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டு
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு

 

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

 

www.seithy.com

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகள் அனைவருக்கும்

எனது இனிய சித்திரை திருநாள்

நல்வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

சனவரி 1: நடு இரவு 12 மணி வரைக்கும் முளிச்சு இருந்து ஊரில் இருப்பவருக்கும் (அங்கு அப்ப நடு இரவு 12 கழிந்து பல மணி நேரம் போயிருக்கும்) ''கப்பி நியு இயர்' என்று ஆங்கிலத்தினையும் கொலை செய்து வாழ்த்து தெரிவிப்பர்.

-----

ஏப்ரல் 13: அல்லது 14: இன்னொரு புத்தாண்டு. இதை ஏன் புத்தாண்டாக கொண்டாடுகின்றீர்கள் என்று கேட்டால் முழி பிதுங்க நின்றாலும் அவன்/ள் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லாமல் விடமாட்டான்/ள். அவ்வளவு அறிவு.

----

 

15-1397539960-10003500-586820178092902-5

:D  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.