• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
nedukkalapoovan

எவண்டா சொன்னது தமிழ் சாகுமுன்னு...! (ஒரு "வெரி" குட்டிக் கதை)

Recommended Posts

10155625_10152013170022944_1662542588660

 

உலகம் சுற்றும்.. குருவிகளுக்கு ஒரு திமிர் இருந்தது.. தமிழில "டிஸ்ரிங்சன் - (Distinction) எடுத்தது என்று. அந்தத் திமிரோட.. புலம்பெயர்நாடுகளில் ஆண்டு தோறும் நடக்கும் தமிழ் மொழி பொதுப்பரீட்சைக்கான ஆயத்தம் நடந்து கொண்டிருக்கிறது... அதில்.. ஆண்டு 7 பயிற்சி வினாக் கொத்து ஒன்று குருவிகளின் கண்ணில் பட அதைக் குருவிகள் கொத்தி பார்க்கத்துடிச்சுதுங்க.. சும்மா இல்ல..show off க்குத்தான்.. தமிழில.. படம் காட்ட.

முதல் கேள்வியே.. ஈழத்தில் வன்னிப் பகுதி எத்தனை "பற்று"களாகப் பிரிக்கப்பட்டிருந்தது..??!

போச்சே வடை போச்சே. டிஸ்ரிங்சன் கிழிஞ்சு போச்சு.

சிங்களவன் டிசைன் பண்ணின தமிழைப் படிச்சிட்டு.. தமிழிலை டிஸ்ரிங்சனை எடுத்திட்டு... சோ காட்ட வெளிக்கிட்டா..தமிழன் டிசைன் பண்ணின பேப்பரில கவுண்டு கொட்டின்னத் தான் செய்யும்.

 

மணிக்கு மணி.. வன்னி வன்னின்னு வாய் கிழியப் பேசினால் போதுமா. அதன் வரலாறு தெரிய வேணா. குருவிகளை வெட்கம் கொன்னுகிட்டே இருந்தது. உடன குருவி கூகிளில் தேடிப் பார்த்திச்சு. பகிடி என்னான்னா.. கூகிள் ஆண்டவருக்கே பதில் தெரியல்ல. அது ஒரு ஆறுதல். ஆனால் புலம்பெயர் நாடுகளில் பிறந்த தமிழ் படிக்கிற பிள்ளைங்களுக்கு விடை தெரியுது. அது பெருமைப்பட வேண்டிய விசயம் தான்.

 

எவண்டா சொன்னது தமிழ் சாகுமுன்னு. அது இன்னும் வாழும். :)

Share this post


Link to post
Share on other sites

நானும் நெடுக்கர் போலவே கேட்கிறேன்... "எவண்டா சொன்னது தமிழ் சாகுமுன்னு." ?? நான் என்பிள்ளைகளை யேர்மன் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பிப்பதற்கு சென்றபோது. இவர்கள் தமிழர்கள், எங்கிருந்து வருகிறார்கள் எனக் கரும்பலகையில் இலங்கைப்படம் கீறி, அது எங்கே இருக்கிறது என்றும், யேர்மன் பிள்ளைகளுக்கு காண்பித்தார்கள். இன்று அதே யேர்மன் பெண்ணொருத்தி, தமிழாலயத்தில் தமிழ் படிப்பிக்கும் ஆசிரியராக உள்ளதை யாழ்களமும் காண்பித்தது. எவண்டா சொன்னது தமிழ் சாகுமுன்னு ??

Share this post


Link to post
Share on other sites

என்னுடைய மனைவி தமிழ்ப்பாடசாலையில் தமிழ் படிப்பிக்கின்றார்.எனது மகளும் (17 வயது)ஜேர்மனியில் பிறந்து இப்பொழுது இலண்டனில் உதவி ஆசிரியராக தமிழ் படிப்பிக்கின்றார்.தமிழ் புத்தகத்தில் சில கடுமையான பாடங்கள் புறநானூறு,அகநானூறு போன்ற பாடங்கள் புலம்பெயர்ந்த மாணவர்களின் பாடப்புத்தகத்தில் அமைத்திருப்பது பெரும் பிழை என்றே நினைக்கிறேன்.பிள்ளைகள் தமிழை விரும்பிப் படிக்க வர வேண்டும்.இத்தகைய பாடங்களை பட்டப்படிப்புக்கு வேண்டுமானால் வைக்கலாம்.பிள்ளைகளுக்கு தமிழ்மேல் வெறுப்பு வரும்படி பாடங்களை அமைக்கக் கூடாது.இது சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லியும் அவர்கள் காதில் வாங்குவதாகத் தெரியவில்லை.தங்கள் புலமையை காட்டும் இடம் இதுவல்ல.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நானும் புலவருடன் உடன்படுகின்றேன்!

 

எனது மகளும், தமிழும் சமயமும் படிக்க வெளிக்கிட்டாள்! ஒரு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்குமென நினைக்கிறேன்!

 

அவளுக்கு, இலங்கையிலிருந்த வந்த ஒரு ஆசிரியை, ஆங்கிலத்தில் எழுதிக்கொடுத்து, இரண்டு நாட்களுக்குள் பாடமாக்கி ஒப்பிக்க வேண்டுமென்று கொடுத்தது இது தான்!

 

'தொல்லையிரும்பிறவிச் சூழும் தளை நீக்கி,

அல்லலறுத்து ஆனந்தமாக்கியதே,

எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூரன்

கொல் திருவாசகம் என்னும் தேன்....!

 

நமச்சிவாய வா அழ்க,

நாதன் தான் வா அழ்க,

 

முடிவு வரை தொடர்கிறது...!

 

என்னே அந்த ஆசிரியையின், அதிமேதாவித் தனம்?  :D

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தமிழ் சாகாது, சாகக் கூடாது. ஒவ்வொரு பெற்றோரும் கவனமெடுத்தால் எங்கள் தாய்மொழி என்றும் வாழும்!!!!

Share this post


Link to post
Share on other sites

i3tk.jpg

 

 

 

xhtn.jpg

எம்மால் முடிந்ததற்கும் மெலாக   நாம் செய்தே வருகின்றோம்

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136864

 

 

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this