Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

எவண்டா சொன்னது தமிழ் சாகுமுன்னு...! (ஒரு "வெரி" குட்டிக் கதை)


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

10155625_10152013170022944_1662542588660

 

உலகம் சுற்றும்.. குருவிகளுக்கு ஒரு திமிர் இருந்தது.. தமிழில "டிஸ்ரிங்சன் - (Distinction) எடுத்தது என்று. அந்தத் திமிரோட.. புலம்பெயர்நாடுகளில் ஆண்டு தோறும் நடக்கும் தமிழ் மொழி பொதுப்பரீட்சைக்கான ஆயத்தம் நடந்து கொண்டிருக்கிறது... அதில்.. ஆண்டு 7 பயிற்சி வினாக் கொத்து ஒன்று குருவிகளின் கண்ணில் பட அதைக் குருவிகள் கொத்தி பார்க்கத்துடிச்சுதுங்க.. சும்மா இல்ல..show off க்குத்தான்.. தமிழில.. படம் காட்ட.

முதல் கேள்வியே.. ஈழத்தில் வன்னிப் பகுதி எத்தனை "பற்று"களாகப் பிரிக்கப்பட்டிருந்தது..??!

போச்சே வடை போச்சே. டிஸ்ரிங்சன் கிழிஞ்சு போச்சு.

சிங்களவன் டிசைன் பண்ணின தமிழைப் படிச்சிட்டு.. தமிழிலை டிஸ்ரிங்சனை எடுத்திட்டு... சோ காட்ட வெளிக்கிட்டா..தமிழன் டிசைன் பண்ணின பேப்பரில கவுண்டு கொட்டின்னத் தான் செய்யும்.

 

மணிக்கு மணி.. வன்னி வன்னின்னு வாய் கிழியப் பேசினால் போதுமா. அதன் வரலாறு தெரிய வேணா. குருவிகளை வெட்கம் கொன்னுகிட்டே இருந்தது. உடன குருவி கூகிளில் தேடிப் பார்த்திச்சு. பகிடி என்னான்னா.. கூகிள் ஆண்டவருக்கே பதில் தெரியல்ல. அது ஒரு ஆறுதல். ஆனால் புலம்பெயர் நாடுகளில் பிறந்த தமிழ் படிக்கிற பிள்ளைங்களுக்கு விடை தெரியுது. அது பெருமைப்பட வேண்டிய விசயம் தான்.

 

எவண்டா சொன்னது தமிழ் சாகுமுன்னு. அது இன்னும் வாழும். :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நானும் நெடுக்கர் போலவே கேட்கிறேன்... "எவண்டா சொன்னது தமிழ் சாகுமுன்னு." ?? நான் என்பிள்ளைகளை யேர்மன் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பிப்பதற்கு சென்றபோது. இவர்கள் தமிழர்கள், எங்கிருந்து வருகிறார்கள் எனக் கரும்பலகையில் இலங்கைப்படம் கீறி, அது எங்கே இருக்கிறது என்றும், யேர்மன் பிள்ளைகளுக்கு காண்பித்தார்கள். இன்று அதே யேர்மன் பெண்ணொருத்தி, தமிழாலயத்தில் தமிழ் படிப்பிக்கும் ஆசிரியராக உள்ளதை யாழ்களமும் காண்பித்தது. எவண்டா சொன்னது தமிழ் சாகுமுன்னு ??

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய மனைவி தமிழ்ப்பாடசாலையில் தமிழ் படிப்பிக்கின்றார்.எனது மகளும் (17 வயது)ஜேர்மனியில் பிறந்து இப்பொழுது இலண்டனில் உதவி ஆசிரியராக தமிழ் படிப்பிக்கின்றார்.தமிழ் புத்தகத்தில் சில கடுமையான பாடங்கள் புறநானூறு,அகநானூறு போன்ற பாடங்கள் புலம்பெயர்ந்த மாணவர்களின் பாடப்புத்தகத்தில் அமைத்திருப்பது பெரும் பிழை என்றே நினைக்கிறேன்.பிள்ளைகள் தமிழை விரும்பிப் படிக்க வர வேண்டும்.இத்தகைய பாடங்களை பட்டப்படிப்புக்கு வேண்டுமானால் வைக்கலாம்.பிள்ளைகளுக்கு தமிழ்மேல் வெறுப்பு வரும்படி பாடங்களை அமைக்கக் கூடாது.இது சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லியும் அவர்கள் காதில் வாங்குவதாகத் தெரியவில்லை.தங்கள் புலமையை காட்டும் இடம் இதுவல்ல.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நானும் புலவருடன் உடன்படுகின்றேன்!

 

எனது மகளும், தமிழும் சமயமும் படிக்க வெளிக்கிட்டாள்! ஒரு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்குமென நினைக்கிறேன்!

 

அவளுக்கு, இலங்கையிலிருந்த வந்த ஒரு ஆசிரியை, ஆங்கிலத்தில் எழுதிக்கொடுத்து, இரண்டு நாட்களுக்குள் பாடமாக்கி ஒப்பிக்க வேண்டுமென்று கொடுத்தது இது தான்!

 

'தொல்லையிரும்பிறவிச் சூழும் தளை நீக்கி,

அல்லலறுத்து ஆனந்தமாக்கியதே,

எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூரன்

கொல் திருவாசகம் என்னும் தேன்....!

 

நமச்சிவாய வா அழ்க,

நாதன் தான் வா அழ்க,

 

முடிவு வரை தொடர்கிறது...!

 

என்னே அந்த ஆசிரியையின், அதிமேதாவித் தனம்?  :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சாகாது, சாகக் கூடாது. ஒவ்வொரு பெற்றோரும் கவனமெடுத்தால் எங்கள் தாய்மொழி என்றும் வாழும்!!!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

i3tk.jpg

 

 

 

xhtn.jpg

எம்மால் முடிந்ததற்கும் மெலாக   நாம் செய்தே வருகின்றோம்

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136864

 

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழரின் அபிலாசைகளை நிறைவேற்றுகின்ற மாதிரி பெரிய அதிகாரங்கள் எல்லாம் அந்த கண்ணாம்ப்பூச்சி பதின்மூன்றாந் திருத்தச் சட்டத்தில் ஒன்றும் இல்லை இருந்தாலும், அதற்கு மேல் போய் தமிழர் அதிகாரங்களை கேட்காமல் இருப்பதற்காக ஏதோ அதைக்கொடுத்துவிட்டால் தமிழீழம் மலர்ந்துவிடும் என்பதுபோல் பிகு காட்டிவிட்டு எந்த பிரயோசனமுமில்லாத அந்த திருத்தச்சட்டத்தை இந்தியாவின் வற்புறுத்தலால் கொடுப்பதுபோல் கொடுக்க கூடும். அதோடு  இந்தியாவும் இலங்கையை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம் என்னும்   பெருமிதத்தோடு அடங்கிவிடும். அதிலிருக்கும் சில அதிகாரங்களையும் பறிக்கும் இன்னொரு சட்டத்தை இயற்றி, மாற்றி செயற்படுத்துவார்கள். அதோடு எல்லாம் நிறைவு. சிங்களவன் எவ்வளவு மோசக்காரன் என்பதை எம்மால் அன்றி  வேறு யாராலும் விளங்கிக்கொள்ள முடியாது. 
  • தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 
  • தமிழீழ விடுதலைப்போரில் தமிழ் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமான ஒரு நிலையில் இருந்த காலம் தியாகி திலீபனின் உண்ணாவிரதமிருந்த காலகட்டம்தான், மக்கள் தம் கண் முன்னே ஒருவரின் மரணத்தின் சாட்சியாக இருந்து, தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலையில் அவர்களிடமிருந்து ஏற்பட்ட இயலாமையினால் உருவான கோபம் ஒரு மக்கள் புரட்சியாக வெடித்து விடும் நிலையில் இருந்தது, தியாகப்பயணத்தில் திலீபனுடன் 12 நாட் கள் என்னும் நூலை (நூலின் தலைப்பு தவறாக இருக்கலாம்) மு வே யோ வாஞஞிநாதன் எழுதியநூலை கட்டாயம் ஒருதடவையாவது வாசித்தால் அந்த நேரம் மக்களின் மனநிலை எவ்வாறிருந்தது என்பதை உணரலாம்,தியாகி திலீபனை அன்று பெரியவர்கள் தமது மகனாகப்பார்த்தார்கள், இளையவர்கள் தமது சகோதரனாகப்பார்த்தார்கள், புலியாகவோ அல்லது போராளியாகவோ அல்ல. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதான கொலை முயற்சி தியாகி திலீபனின் உண்ணாவிரதத்திற்கு முன்பாக ஒரு முறையும் (மற்றவர்கள் கூறகேட்டது) புலேந்திரன் குமரப்பா உட்பட 12 போராளிகளின் மரணத்தை தொடர்ந்து வடமராட்சிக்கு சென்ற புலிகளின் தலைவரை கொலை செய்ய இரண்ட்டாவது முறையாக முயற்சி செய்யப்பட்டது. தியாகி திலீபன் மரணம், பன்னிரு போராளிகள் மரணம் தமிழ் மக்களின் போராட்ட தலமைய அழிக்க முற்பட்ட நிலை அனைத்தும் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு இந்திய இராணுவத்திற்கெதிராக போரிட வேண்டும் என்றும் அதற்கு உடன்பாடில்லாதவர்கள் தாரளமாக விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகி செல்லலாம் என்று கூறப்பட்டதாம் அதில் பல போராளிகள் அமைப்பிலிருந்து விலகி சென்றார்களாம் அதில் பசீர் காகாவும் ஒருவர் (மற்றவர்கள் கூறகேட்டது). இங்கு பல கருத்தாளர்களின் உணர்வுகள் புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது அஞ்சலி செலுத்துவர்களின் மேல் சேறு பூசுவதினூடாக மறைமுகமாக தியாகி திலீபனை கொச்சைப்படுத்துவதாகவுள்ளது. 90 களில் (கால கட்டம் சரியாகநினைவில்லை)பிரித்தானியாவினால் மாகாத்மா காந்தி இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் பிரித்தானிய காலனித்துவ அரசிற்கு எழுதிய கடிதங்களை வெளியிடுவதற்கெதிராக அங்கு வாழ்ந்த இந்திய மக்களினால் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது ( பல சர்ச்சைக்குரிய கடிதங்கள்)  நேரடியாக தியாகி திலீபனின் மேல் சேறு பூசுவதற்கு ஒன்றுமில்லாவிட்டால் என்ன அவருக்கு அஞ்சலி செலுத்துபவர்கள் அயோக்கியர்கள் என்பதினூடாக கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறது, ஆனால் அதற்காக இவ்வளவு மோசமாக கீழ்த்தரமாக தரம்தாள வேண்டுமா?
  • இயற்கை காவலன் கடலோரப் பகுதியில் பனை விதைகள் நடுதல் நிகழ்வு! | தமிழ் திருநாடு  
  • அண்ணாவுக்கு திமுக செய்த துரோகங்கள்  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.