Jump to content

என் வீட்டுச் சுவர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"வீட்டுக்கு வீடு வாசல் படி" என்பது மாதிரி...
இந்தத் தலைப்பில்... பதிந்துள்ள, ஒவ்வொருவரின் கருத்தையும் வாசிக்கும் போது,
சிரித்து... நாமும் அப்படியே... இருக்கின்றோம் என்ற, மகிழ்ச்சியை... தருகின்றது.
இதிலாவது... தமிழர் ஒற்றுமையாய்.... இருக்கிறதே.. பெரிய, விசயம்.
"நாவூறு படப் போவூது... மிளகாய் சுத்திப் போடுங்கப்பா...."

Link to post
Share on other sites

அந்த சோகத்தை ஏன் கேட்பான். இரண்டு சைனீஸ் ஆட்கள் வந்து பார்த்துவிட்டு உந்த வேலை தானோ. நாங்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் வர முடியும் என்றுவிட்டார்கள். இன்னும் இரண்டு பேரைக் கேட்டுப்பாப்பம் என்று கூறிவிட்டு நான் வேலைக்கு வந்திட்டன். வீட்டிலிருந்து போன். அம்மா பெயின்ற் டின் எங்கே என்ரூ கேட்டு மகள். என்னம்மா செய்யப் போகிறீர்கள் என்றதற்கு வரவேற்பறையில் இருக்காமல் எனக்கு விசர் பிடிக்கப் போகுது. நான் இன்று பெயின்ற் அடிச்சு முடிச்சு கதிரைகளை அடுக்கப் போறான் என்று விட்டு என் பதிலையும் எதிர் பார்க்காது மகள் வைத்துவிட்டாள். இன்னும் ஏழரைச் சனியன் முடிஞ்ச பாடில்லை

உங்கள் மகள் சரியாகச் செய்து முடிக்கத்தான் போகிறார். இந்த தலைமுறை தன்னைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கும் தலைமுறை. உங்களின் முடிவுகளை விட அவர் சரியாக எடுப்பார் என்று நம்புகின்றேன். :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கவலைப்படவேண்டாம் அக்கா இதை நீங்களேசரி செய்யலாம் என நம்புகிறேன் பள்ளமான் இடத்தில் பில்லரை போட்டு அதனை ஸ்க்ரேப்பரால் முடிந்த அளவு அளுத்தமாக (தட்டையாக)செய்து விடவும் காய்ந்த பின் வெள்ளை வர்ணத்தை உபயோகித்து ஒரு படலம் இடவும் பின்னர் மிகவும் நுணுக்கமாக ஏதாவது சமச்சீரின்மை உள்ளதா என அவதானித்து மிகவும் நேர்தியான மண் கடதாசி மூலம் மேடான பகுதியை நீக்கவும் அப்பகுதி வெள்ளை நிறம் இழந்து காணப்படும் பின்னர் மேலால் இன்னுமொரு வெள்ளை படலம் இட்டுவிட்டு உங்கள் விருப்பமான நிறத்தை பூசலாம் கட்டாயம் யூ ரியூப்பில் இது தொடர்பான ஒளிப்பதிவுகள் கிடைக்கும்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.