Jump to content

அரசியல் வெறுமை = உதால் விடுதல்.


nallavan

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பூர் இழப்பை இராஜதந்திரப் பின்வாங்கல் என்றுதான் நானும் சொல்கிறேன். ஆனால் அதைவைத்துச் செய்யவேண்டிய இராஜதந்திரத்தை ஏன் இதுவரை செய்யவில்லை?

உண்மையில் புலிகள் இதைவைத்து இராஜதந்திர நகர்வைச் செய்வார்கள் என்று நான் நம்பவேண்டுமென்றால் மாவிலாறு விசயத்திலயே செய்திருக்க வேணும்.

மாவிலாறை ஒரு பிரச்சினையாக்கி நகர்வு செய்யாதவர்கள் சம்பூரை என்ன செய்வார்கள் என்ற கேள்வி இருக்கு.

மாவிலாறை விட்டு இராணுவம் பின்வாங்க வேண்டும் என்ற ஒரு வசனத்தை நோர்வேயின் வாயிலிருந்தோ கண்காணிப்புக் குழுவின் வாயிலிருந்தோ வரவைக்க முடியவில்லை புலிகளால். அப்படிச் செய்யாததை எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கவில்லை.

சரி. புலிகள் யாழ்ப்பாணத்தில் தாக்குதல் தொடங்கியதால் மாவிலாறைப் பிரச்சினையாக்கவில்லை என்று ஒரு காரணத்தை நானெ சொல்லிக் கொள்கிறேன்.

சம்பூர் இழக்கப்பட்டு 3 முழு நாட்கள் முடிந்துவிட்டன. அதற்குப்பிறகு நோர்வேத்தரப்புடன் கிளிநொச்சியில் கொஞ்சிக் குலாவி ஒரு சந்திப்பும் முடித்தாயிற்று.

இராணுவம் அப்பகுதிகளைவிட்டு உடனே பின்வாங்க வேண்டும் என்ற அறிவிப்பை இன்னும் நோர்வேயும் கண்காணிப்புக்குழுவும் விடுக்கவில்லை. அவர்கள் ஏன் விடுக்கவில்லை என்று அவர்களை நோக்கி நான் நொந்து கொள்ளப்போவதில்லை. அவர்களின் அரசியல் எனக்குத் தெரிகிறது. எனக்குத் தெரிகிறது யாரில் தவறென்று.

நோர்வேயையும் கண்காணிப்புக்குழுவையும் சினந்துகொண்டு செவ்வியளிக்கிறார் எழிலன். அதுதான் சரியான உணர்வு. என்வரையில் அதுதான் இராஜதந்திரம். எழிலன் யாரைக் கடிந்தாரோ அவர்களோடு கிளிநொச்சியில் நடந்த சந்திப்பு கிட்டத்தட்ட அதற்கு நேர்மாறாக நடக்கிறது. அரசபடை பின்வாங்க வேண்டுமென்று நோர்வேயை அறிக்கைவிட வைப்பது புலிகளின் வேலை. அது நோர்வேயின் வேலை என்று கருதினால் அதைச் செய்யாததையிட்டு அவர்களைக் கேள்வி கேட்டிருக்க வேண்டும். (அவர்கள் உள்ளே பேசியது உனக்கெப்படி தெரியும் என்று தயவு செய்து கேட்காதீர்கள். ஒன்று நடந்திருந்தால் அதற்குரிய எதிர்வினை இப்போது நடந்திருக்க வேண்டும். அல்லது அப்படிக் கதைத்ததையாவது வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.)

நோர்வேக்கு இருக்கும் பிரச்சினை அவர்களின் நற்பெயர். அதைச் சுண்டும் விதமாக புலிகள் கேள்வி கேட்க வேண்டும். புலிகள் கேள்வி கேட்க வேண்டியதும் எச்சரிக்க வேண்டியதும் நோர்வேயையும் கண்காணிப்புக்குழுவையும்தான

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக உங்கள் ஆதங்கத்தை மறுக்கவில்லை. ஆனால் இராஜ தந்திர நகர்வுகள் பகிரங்கமாக எல்லோருக்கும் தெரியவைத்து வெளிப்படையாகத் தான் நடக்க வேண்டும் என்ற விதியிருப்பதாச் சொன்னால் நம்ப முடியாது.

இலங்கையரசிற்கு உதவி செய்ய மாட்டோம் என்று, சொல்லாமல் உதவி செய்தால் யாருக்கும் தெரியப்போவதில்லை. இலங்கையரசும் அவ்வாறன நிபந்தனையோடு சொல்லாமல் செய்து கொள்ள முடியும். இது ராணுவம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், அரசியல் விளையாட்டுக்களும் அவ்வாறே இருக்கும்.

எரிக் சொல்கையுமோ, அல்லது யகுசி அகாசி இலங்கை வருகின்றார், கதைக்கின்றார் என்றால் வெறுமனே சமாதானப் பேச்சுவார்தை தொடர்பாக என்று தான் பத்திரிகையில் வந்தாலும், எத்தனையோ கொடுக்கல்வாங்கல்கள் நடை பெறும்.

அதை எல்லாத் தரப்புமே மௌனமாகத் தான் செய்து கொள்ளும். எனவே என்ன நடக்கின்றது என்று தெரியாமல் வெளிப்புூச்சினைப் பற்றிக் கதைப்பது உண்மையில் தவறு. ஆனால் வேறு வழியும் இல்லை!

Link to comment
Share on other sites

சம்பூர் இழப்பை இராஜதந்திரப் பின்வாங்கல் என்றுதான் நானும் சொல்கிறேன். ஆனால் அதைவைத்துச் செய்யவேண்டிய இராஜதந்திரத்தை ஏன் இதுவரை செய்யவில்லை?

உண்மையில் புலிகள் இதைவைத்து இராஜதந்திர நகர்வைச் செய்வார்கள் என்று நான் நம்பவேண்டுமென்றால் மாவிலாறு விசயத்திலயே செய்திருக்க வேணும்.

மாவிலாறை ஒரு பிரச்சினையாக்கி நகர்வு செய்யாதவர்கள் சம்பூரை என்ன செய்வார்கள் என்ற கேள்வி இருக்கு.

மாவிலாறை விட்டு இராணுவம் பின்வாங்க வேண்டும் என்ற ஒரு வசனத்தை நோர்வேயின் வாயிலிருந்தோ கண்காணிப்புக் குழுவின் வாயிலிருந்தோ வரவைக்க முடியவில்லை புலிகளால். அப்படிச் செய்யாததை எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கவில்லை.

சரி. புலிகள் யாழ்ப்பாணத்தில் தாக்குதல் தொடங்கியதால் மாவிலாறைப் பிரச்சினையாக்கவில்லை என்று ஒரு காரணத்தை நானெ சொல்லிக் கொள்கிறேன்.

சம்பூர் இழக்கப்பட்டு 3 முழு நாட்கள் முடிந்துவிட்டன. அதற்குப்பிறகு நோர்வேத்தரப்புடன் கிளிநொச்சியில் கொஞ்சிக் குலாவி ஒரு சந்திப்பும் முடித்தாயிற்று.

இராணுவம் அப்பகுதிகளைவிட்டு உடனே பின்வாங்க வேண்டும் என்ற அறிவிப்பை இன்னும் நோர்வேயும் கண்காணிப்புக்குழுவும் விடுக்கவில்லை. அவர்கள் ஏன் விடுக்கவில்லை என்று அவர்களை நோக்கி நான் நொந்து கொள்ளப்போவதில்லை. அவர்களின் அரசியல் எனக்குத் தெரிகிறது. எனக்குத் தெரிகிறது யாரில் தவறென்று.

நோர்வேயையும் கண்காணிப்புக்குழுவையும் சினந்துகொண்டு செவ்வியளிக்கிறார் எழிலன். அதுதான் சரியான உணர்வு. என்வரையில் அதுதான் இராஜதந்திரம். எழிலன் யாரைக் கடிந்தாரோ அவர்களோடு கிளிநொச்சியில் நடந்த சந்திப்பு கிட்டத்தட்ட அதற்கு நேர்மாறாக நடக்கிறது. அரசபடை பின்வாங்க வேண்டுமென்று நோர்வேயை அறிக்கைவிட வைப்பது புலிகளின் வேலை. அது நோர்வேயின் வேலை என்று கருதினால் அதைச் செய்யாததையிட்டு அவர்களைக் கேள்வி கேட்டிருக்க வேண்டும். (அவர்கள் உள்ளே பேசியது உனக்கெப்படி தெரியும் என்று தயவு செய்து கேட்காதீர்கள். ஒன்று நடந்திருந்தால் அதற்குரிய எதிர்வினை இப்போது நடந்திருக்க வேண்டும். அல்லது அப்படிக் கதைத்ததையாவது வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.)

நோர்வேக்கு இருக்கும் பிரச்சினை அவர்களின் நற்பெயர். அதைச் சுண்டும் விதமாக புலிகள் கேள்வி கேட்க வேண்டும். புலிகள் கேள்வி கேட்க வேண்டியதும் எச்சரிக்க வேண்டியதும் நோர்வேயையும் கண்காணிப்புக்குழுவையும்தான

Link to comment
Share on other sites

சம்பூர் இழப்பை இராஜதந்திரப் பின்வாங்கல் என்றுதான் நானும் சொல்கிறேன். ஆனால் அதைவைத்துச் செய்யவேண்டிய இராஜதந்திரத்தை ஏன் இதுவரை செய்யவில்லை?

உண்மையில் புலிகள் இதைவைத்து இராஜதந்திர நகர்வைச் செய்வார்கள் என்று நான் நம்பவேண்டுமென்றால் மாவிலாறு விசயத்திலயே செய்திருக்க வேணும்.

மாவிலாறை ஒரு பிரச்சினையாக்கி நகர்வு செய்யாதவர்கள் சம்பூரை என்ன செய்வார்கள் என்ற கேள்வி இருக்கு.

மாவிலாறை விட்டு இராணுவம் பின்வாங்க வேண்டும் என்ற ஒரு வசனத்தை நோர்வேயின் வாயிலிருந்தோ கண்காணிப்புக் குழுவின் வாயிலிருந்தோ வரவைக்க முடியவில்லை புலிகளால். அப்படிச் செய்யாததை எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கவில்லை.:

ஏனையா சும்மா வெடியை கொழுத்துறீங்கள்....! மூதூர்ரை புலிகள் பிடித்த போது சண்டையை நிறுத்துங்கோ எண்ட உலகம் இப்ப சம்பூரை பிடித்த போது வாய்மூடி மௌனித்து இருக்கிறது...!

உண்மையில் சர்வதேசம் விரும்பி எதிர்பார்க்கும் வெற்றி முடிவாக இரு இருக்கிறது.... புலிகள் வெற்றி கொள்கிறார்கள் எண்டால் அதை எதிர்த்து பேசப்போங்கள் என்பதும் இலங்கை படைகள் இடங்களை பிடிக்கிறார்கள் எண்டதும் வாய்மூடி மௌனமாக இருந்து செய்திகளாய்க்கி செய்தி நிறுவனங்களூடாக உலகமக்களுக்கும் சொல்வதும் வளக்கமாகி விட்டது...!

அதனால்த்தான் சம்பூர் விடுபட்ட அண்று எழிலன் விட்ட அறிக்கையுடன் வன்னிக்கு நோர்வே தூதர் ஓடிப்போய் வந்துள்ளார்... கண்காணிப்பு பேச்சாளர் போர்நிறுத்தம் அமுலில் இருக்கு எண்று அறிக்கையையும் விட்டு புலிகள் அவசரப்பட்டு விடக்கூடாது எண்டு கஸ்ரப்படுகிறார்கள்....! அப்படியானால் விடயம் இத்தோடு முடியவில்லை... என்பதாகும்....

ஐரோப்பிய யூனியன் தடை செய்த போது கண்காணிப்பு பணிகளில் இருந்து அந்த நாடுகளை விலக்க வேண்டும் எண்று முடிவெடுத்த புலிகள். அவர்களை இரவோடு இரவாக அனுப்பவில்லை... கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகுதான் அனுப்பி வைத்தார்கள்... உடனடியாக போகச்சொல்லி இருந்தால் புலிகளின் செயலை போர்நிறுத்தை சீர் குலைக்க புலிகள் சொல்லிய நொண்டிச்சாக்காகத்தான் உலகம் கண்டிருக்கும்.... இண்று அப்படி அல்லாமல் உலக ஊடகங்கள் எல்லாம் தங்களை தடை செய்த நாடுகளை நடுநிலை பேணமுடியாது என்பதால் போகச்சொன்னார்கள் என்கிறார்கள்...!

இன்னியும் போர் தொடங்க வேண்டுமானால் உடனடியாக தொடங்க முடியாது... இலங்கையின் நிலைப்பாட்டை உலகறிய செய்து வேறு வளி இல்லாத்தால்த்தான் புலிகள் சண்டைக்கு போகிறார்கள் என்பதை உலகுக்கு புரிய வைத்து வாய் அடைக்க செய்துதான் சண்டை பிடிக்க முடியும்.... அப்படி இல்லாமல் சண்டையை பிடிப்பதானாலும்... இடங்களை பிடித்தாலும் எந்த வித நன்மையையும் பெற முடியாத மக்களாக எங்கள் மக்களின் எதிர்காலம் அமைந்து விடும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தல,

"புலிகள் மூதூரைப் பிடித்தபோது திரும்பிப் போங்கள் என்று சொல்லிய நோர்வே இப்போது அமைதியாக இருப்பதை ஏன் புலிகள் வெளிப்படையாகக் கேள்வி கேட்கவில்லை" என்பதே என் கேள்வி.

நோர்வேயின் வாயிலிருந்து அப்படியொரு கட்டளையை சிறிலங்கா அரசை நோக்கிச் சொல்ல வைத்திருக்க வேண்டிய தேவை புலிகளுக்கு உள்ளது. அதைத்தான் நான் இராஜதந்திரம் என்கிறேன். தனியே இடங்களை விட்டுவிட்டு இருப்பதன்று.

ஆம். சிங்கள அரசின் முகத்திரையை அம்பலப்படுத்த வேண்டும். அதைத்தான் புலிகள் (சந்தர்ப்பம் கிடைத்தும்) செய்கிறார்களில்லை என்று ஆதங்கப்படுகிறேன்.

//இன்னியும் போர் தொடங்க வேண்டுமானால் உடனடியாக தொடங்க முடியாது... இலங்கையின் நிலைப்பாட்டை உலகறிய செய்து வேறு வளி இல்லாத்தால்த்தான் புலிகள் சண்டைக்கு போகிறார்கள் என்பதை உலகுக்கு புரிய வைத்து வாய் அடைக்க செய்துதான் சண்டை பிடிக்க முடியும்....

//

அதைத்தான் நானும் கேட்கிறேன். ஏன் புலிகள் சிங்கள அரசின் நிலைப்பாட்டை உலகறியச் செய்யும் வேலையைச் செய்யவில்லை?

தாங்கள் மட்டும் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதா உலகறியச் செய்யும் வேலை?

சரி, சம்பூரை இழந்தும் நாங்கள் உலகறியச் செய்யவில்லை, நீங்களே சொன்னபடி சண்டையும் தொடங்க முடியாது, இன்னொரு 'கொழுத்த' இடமாக கைவிட்டால் இன்னும் நன்றாக உலகறியச் செய்யலாம் என்று சொல்லலாமா?

அது எந்த இடம்?

நோர்வேயின் நடுநிலைப் பம்மாத்தைக் கிழிக்கும் வேலையைப் புலிகள் தொடங்க வேண்டும். புலிகளிடம் முழு நியாயமும் உண்டு. ஏனைய நாடுகள் போல நோர்வே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்துச் சொல்லவோ பாராமுகமாக இருக்கவோ முடியாது. தனது நற்பெயருக்கு ஏற்படும் இழுக்கை நிச்சயம் நோர்வே அனுமதிக்காது.

வெளிப்படையான கேள்விகள் தேவை. வெளிப்படையான அழுத்தங்கள் தேவை.

Link to comment
Share on other sites

தவறுதலாக இரு தடவை பதிவான பதிவு நீக்கப்படுகிறது. தவறுக்கு வருந்துகின்றோம்..!

Link to comment
Share on other sites

நல்லவன்..அது அரசு..இது புலிகள்.!

அரசுக்கு அரசுகள் ஆதரவு தருவது தார்மீகக் கடமை. அதில மனித உரிமைகள் மீறப்பட்டா என்ன மிதிபட்டா என்ன..! அமெரிக்கா செய்யாத மனித உரிமை மீறல்களா..இல்ல தேச இறையான்மை மீறல்களா..எவர் தட்டிக்கேட்டார். சட்டாம்பிள்ளை செய்தா தப்பில்லை..! தம்பிப்பிள்ளை செய்தாத் தான் தப்பு..!

இந்த உலகம் எப்ப கண் திறக்கும்..திறக்காது...காரணம்..

Link to comment
Share on other sites

Lankan state media slams peace brokers

http://www.thepeninsulaqatar.com/Display_n...06090934756.xml

The state-run Daily News said Norwegians had “failed” as peacebrokers and took exception to reported remarks from Norwegians that they disagreed on an international crackdown on the rebels. The paper, which reflects government policy, attacked Oslo envoy Jon Hanssen-Bauer’s remarks that he disapproved of Sri Lanka’s policy “to brand the Tigers as terrorists and isolate them internationally.”

“By these naive and irresponsible or perverse and dishonest utterances, the Norwegians have publicly exposed themselves as propagandists of, or apologists for, the LTTE and left no room for doubt that they are not, and never have been, a balanced, genuine or honest facilitator,” the paper said.

The report signed by lawyer S L Gunasekera and Gomin Dayasiri, a member of the government’s February peace delegation to Switzerland, accused Oslo of campaigning to block a European Union ban on the Tamil Tigers in May.

“It is common knowledge that the Norwegians strained every nerve, muscle and fibre in their efforts as emissaries for the LTTE before the EU countries to save them from being branded as terrorists,” the paper said.

There was no immediate reaction from the Norwegians. The criticism came two days after Norway’s ambassador to Sri Lanka Hans Brattskar held talks with the Tigers in the rebel-held town of Kilinochchi in a bid to inject new life into the collapsing peace process.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.