Archived

This topic is now archived and is closed to further replies.

vasee

அகதிகள்

Recommended Posts

பேரூந்தில் அவனுக்கு நேர் எதிரே அடுத்த வரிசையில் அமர்ந்திருந்த அந்த வெள்ளையின மூதாட்டி பார்வையில் ஓர் அருவருப்பு தெரிந்தது.அந்த பார்வயை தவிர்க்க அவன் இடது புறமாக திரும்பி யன்னல் ஊடாக வெளியே பார்வையை ஒட விடுகிறான்.

 

மழை வெளியே பெய்து கொண்டிருந்து வானம் இருட்டிக்கிடந்தது யன்னல் கண்ணாடியில் இன்னமும் அந்த வெள்ளையின மூதாட்டி இவனை பார்த்து கொண்டிருப்பது தெரிந்தது. அந்த விம்பத்தின் விழிகளைப்பார்க்க சக்தியற்றவனாக் பார்வையை தாழ்த்திக்கொள்கிறான்.

தனது கைத்தொலைபேசியை எடுத்து நோட்டம் விட்டான் அதில் கடைசியாக வந்த அழைப்பு கரன் என்றிருந்தது,அழைப்பு பத்து நிமிடங்களுக்கு முன்னர்தான் வந்திருந்தது.உரையாடலை நினைவுக்கு கொண்டுவர முயன்றான்.

பொதுவாக பதினேழு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக உறங்காமல் விழித்திருந்தால் மது போதைக்கு ஆளானவர்களின் நிலைக்கு சமமாக மூளை செயற்படும் என கேள்விப்பட்டிருக்கின்றான்.தொடர்ச்சியாக இரண்டு வேலைகள் சனி காலையில் இரண்டாவது வேலை முடிந்திருந்தது,இன்று நாள் முளுவதும் ஓய்வு ஞாயிறு இரவுதான் வேலை மீண்டும் ஆரம்பம் , தொடர்ந்து வேலை மீண்டும் அடுத்த சனிகாலை வரை.

இன்னும் இரண்டு நிறுத்தங்களில் அவனது இடம் வந்துவிடும் தூங்காமல் இருக்க முயற்சித்தான் அதற்குள் மீண்டும் கரனிடமிருந்து அழைப்பு வந்திருந்து. கரன் அவுஸ்திரேலியாவில் கண்க்காய்வாளராக இருப்பவர் மனதில் பட்ட எதையும் முகத்திற்கு நேராக சொல்லிவிடுவார் இவனது நண்பன் மூலமாக அறிமுகமானவர் முதல் சந்திப்பிலேயே கடுமையாக நடந்து கொண்டார்.இவர்களது அறிமுகம் நல விசாரணையுடன் ஆரம்பிக்கவில்லை மாறாக கரன் இவனைப்பார்த்து ஏண்டா நீங்களெல்லாம் அகதிகளாக இந்த நாட்டிற்கு வாறியள் உங்களால உள்ள சிறிலங்கன்ஸ் எல்லாரையும் உங்கள மாதிரியெல்லோ நினைக்கிறாங்கள் உங்களால எங்களையும் அகதிகளாக கேவலமாக பார்க்கிறங்கள். இவனிடம் அதற்கு சரியான பதிலிருக்கவில்லை அண்ணை ஊரிலை பிரச்சினை அதால என்று இழுக்கவும் கரன் சாம்யாட தொடங்கவும் சரியாக இருந்தத்து

ஒரு மாதிரி அவனை சமாதானப்படுத்தவே பெரும்பாடாயிற்று சரி வேற நாட்டிற்கு போறதுதானே ஏன் இங்க வந்தனி என்று கேட்டான் அவனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. ஆரம்ப அறிமுகத்திலிருந்தே பந்து கரன் பக்கமேயிருந்தது கரனது அடுத்த கேள்வி அவன் எதிர்பார்த்ததுதான் முகாமில் இருந்து வெளியே வந்தது முதல் அந்த கேள்வி அவனை துரத்துகிறது ஆனால் அதற்கு பதில் சொல்ல விருப்பமிருக்கவில்லை காதில் வாங்காமல் நின்றவனிடம் மீண்டும் அதிகார தொனியுடன் என்ன படிச்சிருக்கை இவன் நிமிர்ந்து கரனின் கண்களைப்பார்த்தான் ஆதில் ஏளனம் தெரிந்தது அவனுக்கு தெரியும் இவனிடம் பறைசாற்ற எதுவுமில்லை என்று நிலமையின் இறுக்கத்தை குறைக்க அதற்கு நகைச்சுவையாக பதிலளித்தான் குமுதம் ஆனந்த விகடன் அவன் முடிக்க முன்னர் இங்க அவுஸ்திரேலியாவில் படிச்சாக்கள்தான் இருக்கினம் மற்ற நாடுகள் மாதிரியில்லை,இவன் நகைச்சுவை கரனது ஆளுமையை அடித்திருந்திருக்கும் அதனாலேயே அவன் சீற்றமாக அதை குடிவரவு அதிகாரி மாதிரி சொல்லி முடித்தான்.

இப்பொழுது அவனுக்க்கு புரிந்தது ஏன் இந்த நாட்டிற்குள் இவன் வந்திருக்ககூடாது என்ற அவனது ஆதங்கம்.அவர்களது அறிமுகம் கேள்வி பதிலாக தொடர்ந்தது கரனது சீற்றம் அவன் கண்களில் தெரித்த காரணமற்ற வெறுப்பு எல்லாம் அவனை சிறிது நிலகுலைய வைத்தது கொப்பர் என்ன விவசாயமோ கேள்வி பறந்தது கரனிடமிருந்து இல்லை பல தொழில் செய்தவர் எல்லாம் பிரச்சனையால நஸ்டம் இப்ப சும்மா இருக்கிறார்

கொஞ்சம் இடைவெளிவிட்டு கரன் கேDகாமலேயே அண்ணை நாங்கள் உயர்ந்த சாதி இல்லை (?) சாதி என்றான் இப்ப கரன் மெதுவக இயல்புக்கு வந்தான் முரட்டு குதிரை ஒன்றை அடக்கிய கர்வம் கண்ணில் தெரிந்தது,

தொலைபேசியில் கரனின் குரல் இரைந்தது இவன் பழைய நினவுகளிலிருந்து மீண்டான் கரனது முந்தய அழைப்புக்கு உறக்கத்திலிருந்து அலறி அடித்து கொண்டு ஏதொ பதிலளித்திருக்கிறான் என்பது புரிந்தது. கரன் எதற்காக அழைத்திருந்தான் என்பதும் புரிந்தது

முதல் சந்திப்பின் பின் இவனை கரன் தனது காரில் ஏற்றி அவனை அவனது இடத்தில் இறக்கிவிடுவதாக அழைத்து சென்றான் போகும் வழியில் தனது தொழில் சம்பந்தமாக ஒருவரை சந்திக்க வேண்டும் என்று கூறி இவனது இருப்பிடத்தை தாண்டி நகரை நோக்கி வண்டி வேகம் எடுத்தது,போகும் வழியெல்லம் எவ்வாறு வெள்ளையர்களுடன் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதையும் கரன் சொல்லிக்கொண்டே வந்ததிலிருந்து புரிந்து கொண்டான் சந்திக்கப்போவது ஒரு வெள்ளையினத்தவர் என்று,

அவள் பெயர் அலிஸ் என்பதை கரன் அறிமுக வணக்கத்தில் புரிந்து கொண்டான் கரன் கைகளை குலுக்க முற்பட்ட போது அவள் செய்கை இவன் கவனத்தை திசை திருப்பியது கரனது மேலாதிக்க கை குலுக்கலை தவிர்க்க தனது வலது காலை முன்வைத்து கரனது அந்தரங்க வளையத்திற்குள் நுழைந்து மேலாதிக்க நிலையில் கை குலுக்கினாள்,

அவுஸ்திரேலியா வரும் எம்மவர்களுக்கு எவ்வாறு கணக்கியல் மிகைப்படுத்தப்பட்ட கல்வியோ அதே போல் மேலைத்தேயத்தவர்களுக்கு உளவியல் கல்வி அலிஸ் உளவியல் படித்தவள் என்பது புரிந்தது இப்போது இவனது முறை கை குலுக்கல் , இவனுக்கு தெரியும் இவனை பறை சாற்ற ஒரு சந்தர்ப்பம் அவள் வலது கால் எடுத்து இவனது அந்தரங்க வளையத்திற்கு நுழையும் போது இவன் வலது கால் ஒரு தப்படி முன்னேறினால் தானாகவே இவன் கை மேலாதிக்க நிலையில் கை குலுக்கலாம் ஆனால் தோள்களை விறைப்பின்றி உள்ளங்கை வானம் பார்க்க அவளை மேலாதிக்கம் செலுத்த அனுமதிதவாறே வணக்கம் அலிஸ் என்றன் அவள் பொங்கி வந்த சிரிப்பை அடக்க முயற்சிக்க இவனாலும் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தான் அவள் இவனது கையை நிமிர்த்தி நேராக வைத்து இருவரது அளுமையையும் சரிசமமாக்கி விட்டு என்றைக்குமே உன்னை தாழ்த்தாதே என்று அறிவுரை சொன்னாள்.

அந்த சந்திப்பின் பின் காரில் வரும்போது கரன் மவுனமாகவே வந்தான் திடீரென கரன் அலிஸ் இப்பவும் அகதி முகாமில் வெலை செய்கிறாளா உனக்கெப்படி அவளை தெரியும் அவள் இரண்டு வருடத்திற்கு முன்னே அந்த வேலையை விட்டுவிட்டேன் என்று சொன்னாளே?

முற்றும்.

Share this post


Link to post
Share on other sites

வாசித்தவரையில் நன்றாக இருந்தது. இதற்குமேலும் வருமா? :D

Share this post


Link to post
Share on other sites

இல்லை எனக்கு கதை சொல்ல வராது என்பது எனக்கு தெரியும் ஆனால் எனது கருத்தை சொல்லும் ஒரு முயற்சிதான் இது. நன்றி இசை உங்கள் கருத்திற்கு

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்து எழுதி முடியுங்கள் வசி. நீங்களாகவே எழுத வராது என்று முடிவு செய்யாது எழுத முயற்சி செய்யுங்கள். முதலில் மேலே போட்ட மொக்கை என்பதை மாற்றி நல்ல ஒரு பெயரை வையுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

நன்றி அக்கா உங்கள் கருத்திற்கு,கதை சொல்லும் விதத்தில் உள்ள குறைபாடே கதையின் முடிவை புரிந்து கொள்ள முடியாது இருக்கிறது என் நினைக்கிறேன் கரனும் ஓர் முன்னாள் அகதி.

Share this post


Link to post
Share on other sites

vasee உங்கள் உணர்வை சொல்வதற்கு தடைகள் எதனையும் கவனிக்கக்கூடாது. அதுவும் இலக்கிய வடிவமென ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் அமைய வேண்டுமென்று எதிர்பார்க்காமல் எழுதுங்கள். நீங்கள் எழுதிய அகதிகள் என்ற இக்கதையானது கதைக்கான சகல கட்டுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கதையை வாசித்து முடிக்கிற போது கைதேர்ந்த ஒரு கதை சொல்லி உங்கள் கதையில் தன்னை பதியமிட்டுள்ளான். 

 
ஒரு சின்ன வேண்டுகோள் :- பந்தி பிரித்து விடுங்கள். வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

இல்லை எனக்கு கதை சொல்ல வராது என்பது எனக்கு தெரியும் ஆனால் எனது கருத்தை சொல்லும் ஒரு முயற்சிதான் இது. நன்றி இசை உங்கள் கருத்திற்கு

உங்கள் கருத்துக்கள், பின்னூட்டங்களில் வரும் சொல்லாடல்களைப் பார்க்கும்போது "எனக்கு கதை சொல்ல வராது என்பது எனக்கு தெரியும்" என்று நீங்கள் சொல்வது... நம்புவதற்கில்லை. தொடருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

நன்றி சாந்தி அக்கா,பான்ச் பல த்டவை பந்தி பிரிக்க முயன்றேன் முடியவில்லை மாற்ற, செய்த பின் மீண்டும் இவ்வாறே வருகிறது.எமது இனம் மட்டுமே ஒற்றுமையில் வேற்றுமை பார்க்கும் நான் இந்திய தமிழன், நான் இலங்கைத்தமிழன், நான் இன்ன சாதி, நான் இன்ன அணி இப்படியே போகும் இதற்கு நானும் விதி விலக்கல்ல ,அதன் பிரதிபலிப்பே இந்த கதையை எழுத தூண்டியது.அதனை இலை மறை காயாக சொல்ல வேண்டும் அது வாசிப்பவர்களை உறுதியாக சென்றடைய கூடியவாறு கதை சொல்லப்படவில்லை.

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் வசி

Share this post


Link to post
Share on other sites

நன்றி ரதி.

Share this post


Link to post
Share on other sites

ஆரம்பமமே மிக அருமையாக இருக்கு, பல புதிய விடயங்கள் சொல்லி இருக்கின்றீர்கள் .

பந்தி விட்டு எழுதுங்கள் வாசிக்க இலகுவாக இருக்கும் . தொடருங்கள் .

 

Share this post


Link to post
Share on other sites

நன்றி அர்ஜூன் அண்ணா.

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் இன்று.! ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.இந்நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து விவாதம் இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு கடந்தவருடம் விஜயம் செய்த சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணரின் அறிக்கையே இதன்போது ஜெனிவா மனித உரிமை பேரவையில் வெளியிடப்படவுள்ளது ஏற்கனவே விசேட நிபுணரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதலில் விசேட நிபுணர் அந்த அறிக்கையின் சாராம்சத்தை வெளியிடுவார். சாராம்சம் சபையில் வெளியிடப்பட்டதும் விவாதம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.vanakkamlondon.com/மனித-உரிமை-பேரவையின்-44ஆவத/
  • நுணாவிலான் நீங்கள் இணைத்த கட்டுரையில் உள்ள விடுதலை புலிகளின் நேர்மறையான விடயங்கள் குறித்து எனக்கு எந்ந கருத்து வேறுபாடும் இல்லை. தமிழீழம் உருவாக்க உலக நாடுகள் விரும்பவில்லை அவர்களின் விருப்பமில்லாமல் அது சாத்தியமில்லை என்பது கறுப்பு வெள்ளையாக தெரிந்த நிலையில் அதற்கு அடுத்த alternative  எதுவும் செய்யாமல்  இறுதிவரை போராடி தாம் அழிந்து போனது மிக மோசமான அரசியல் முடிவாகவே நான் பார்க்கிறேன்.  சிறப்பாக செயற்பட்டிருந்தால் அந்த நிர்வாகத்தை அமைத்த விடுதலை புலிகளின் ஆளுமைகள் இன்று தமிழரின் தலைமை அரசியலை கொண்டு நடத்தி இருக்கலாம். அதை விடுத்து  தாம்  அழிக்கபட்ட பிறகு,  தமது வீரமான போராட்டதின் மூலம்  கொம்பு சீவப்பட்டு ஆக்ரோஷத்துடன் இருக்கும் ஒரு  எதிரி எவ்வளவு மோசமாக தமிழ் மக்களை நடத்துவான் என்பதை சிந்திக்காது  செயற்பட்டு  அழிந்து போனது தமிழரின் போராட்டத்தில் மிக பெரிய தவறு என்பதே எனது கருத்து. 
  • கொழும்பில் மீண்டும் கொரோனா! மூடப்பட்டது ஜிந்துபிட்டி வீதி..!   கொழும்பு − ஜிந்துபிட்டி பகுதியில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில், வீட்டில் 14 நாள் சுயதனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அந்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது. இங்கு 29 குடும்பங்களை சேர்ந்த 143 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.   https://newuthayan.com/கொழும்பில்-மீண்டும்-கொரோ/
  • சிறப்புற நடைபெற்ற நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தினது இரதோற்சவம்!   வரலாற்று சிறப்பு மிக்க யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய மஹோற்சவத்தின் முத்தேர் திருவிழா இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவரையில் வீற்றிருக்கும் ஸ்ரீ நயினை நாகபூசணி அம்மனுக்கும், வசந்த மண்டபத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் விநாயகர் மற்றும் முருகன், வள்ளி – தெய்வானை என சகதெய்வங்களுக்கு விசேட அபிஷேகங்கள், ஆராதனைகள் இடம்பெற்று உள்வீதியூடாக வலம் வந்து காலை 06 மணியளவில் வெளிவீதி வந்து 07 மணியளவில் மஹோற்சவ தேரில் வீற்று அருள்பாலித்தனர். இம் மஹோற்வத் திருவிழா, கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகியது. இன்று இரதோற்சவம் நடைபெற்றது. நாளை தீர்த்த உற்சவத்துடன் மஹோற்சவம் நிறைவடையும் தற்போது நாட்டில் எற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக பெரும் அளவான பக்தர்கள் ஆலயத்தில் கலந்துகொள்ளவில்லை. தீவக மக்களும், மற்றும் ஆலய சுற்றுப்புற மக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/வரலாற்று-சிறப்பு-மிக்க-ஸ/
  • உலக வங்கியின் புதிய தரப்படுத்தலில் இலங்கையின் நிலை….!   உலக வங்கியின் புதிய தரப்படுத்தலுக்கு அமைய, இலங்கை உயர் மத்திய வருமானம் கொண்ட நாடுகள் பட்டியலில் இருந்து கீழ் மத்திய வருமானம் பெறும் நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு பின்னர் உலக வங்கி இலங்கையை கீழ் மத்திய தர வருமானம் பெறும் நாடு என வகைப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. உலக வங்கியின் இந்த தரப்படுத்தல் வருடாந்தம் ஜூலை முதலாம் திகதி புதுப்பிக்கப்படும். பல்வேறு நாடுகளின் வருமானங்களுக்கு அமைய அந்நாடுகள் தரப்படுத்தப்படும். இதனடிப்படையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு வேறு தரப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 10 நாடுகளுக்குள் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இலங்கையின் மொத்த தேசிய தனிநபர் வருமானம் 4 ஆயிரத்து 60 டொலர்களாக இருந்ததுடன் இந்த ஆண்டு அது 4 ஆயிரத்து 20 டொலர்களாக குறைந்துள்ளது. உலக வங்கி, ஆயிரத்து 36 டொலர் முதல் 4 ஆயிரத்து 45 டொலருக்கும் குறைந்த தனிநபர் வருமானங்களை கொண்டுள்ள நாடுகளை கீழ் மட்ட வருமானம் பெறும் நாடாக வகைப்படுத்துகிறது. 4 ஆயிரத்து 46 டொலர் முதல் 12 ஆயிரத்து 535 டொலர்களுக்கு மேல் தனிநபர் வருமானம் கொண்ட நாடுகளையே உயர் மத்திய வருமானம் கொண்ட நாடுகளாக உலக வங்கி வகைப்படுத்துகிறது. https://newuthayan.com/உலக-வங்கியின்-புதிய-தரப்/