Sign in to follow this  
மெசொபொத்தேமியா சுமேரியர்

களவாய் ஒரு படம்

Recommended Posts

எனக்கு மனதில் பயத்துடன் கூடிய ஒரு பெருமிதமும் தோன்றியது. செய்வது திருட்டு. இதற்குள் என்ன பெருமிதம் என்று மனதில் எண்ணம் எழ மனதுக்குள்ளேயே சிரித்தும் கொண்டேன். என்றாலும் இது ஒரு அசட்டுத் துணிவு என்பதும் தெரிந்தே தான் இருந்தது.

அம்மாவுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பா என்று ஒரு பயம் ஏற்பட்டாலும் இப்படி திருட்டுத்தனமாய் பள்ளிக்கூடத்தைக் கட் பண்ணிவிட்டு படம் பார்க்க வருவது ஒரு திரில்லான அனுபவமாகத்தான் இருக்கு என எண்ணிக் கொண்டது மனது.

இருந்தாலும் அடிமனதில் யாராவது ஊரவர்கள் பார்த்துவிடுவார்களோ என்னும் அச்சம் ஓடிக்கொண்டே இருந்தது. தனிய நான் வரவில்லைத்தான். இன்னும் மூன்றுபேர் மாலி, நந்தினி, ஹேமா, ரதி இத்தனை பேருடன் தான் வந்திருக்கிறேன். பாடசாலைக்குப் பக்கத்தில் இருக்கும் மாலியின் வீட்டில் ஆடைகள் கொண்டுவந்து நாகரிக ஆடைகளை மாற்றிக் கொண்டு தான் வந்தது எனினும், சீற்றில் வந்து அமர்ந்ததுமே, என்னடா வகுப்பைக் கட் பண்ணிவிட்டு வந்திட்டியோ என்று பின் வரிசையில் இருந்து  ஒருவன் கூறுவது கேட்டது.

கட்டாயம் கட் அடித்துவிட்டுத்தான் இந்தப் படம் பார்க்கவேண்டும் என்றில்லை. சில நேரம் அம்மாவைக் கேட்டிருந்தால் அவவே கூட்டிக் கொண்டும் வந்திருக்கலாம். ஆனால் கமலகாசனின் வாழ்வே மாயம் படத்தை அம்மாவோட வந்து பார்த்தால் ரசிச்சே இருக்கும்  ???

அந்த வயதில் எந்த ஹீரோ என்றாலும் கற்பனை செய்து கொண்டு, மற்ற நண்பிகளுடன் அவர்களைப் பற்றி அரட்டை அடிப்பதில் உள்ள சுகம் வேறெதிலும் இல்லைத்தான்.

படம் தொடங்கி லைட் எல்லாம் நிப்பாட்டின பிறகு யாராவது தெரிஞ்ச ஆட்கள் வந்திருக்கினமோ என்று பார்க்கத் தலையைத் திருப்பி சுற்றிவரப் பார்க்க, நல்ல காலம் ஊர்க்காரர் ஒருத்தரும் இல்லை. பின்னால இருந்த ஹீரோக்கள் தங்களைத்தான் திரும்பிப் பாக்கிறன் எண்டு நிமிர்ந்து இருந்து பல்லைக் காட்டினதையும் இண்டைவரை மறக்க முடியேல்ல.

இடைவேளையின் போது நான் பயத்தில எழும்பி எதுவும் வாங்கப் போகவுமில்லை. குனிஞ்ச தலையை நிமிர்த்தவுமில்லை. மாலியும் ரதியும் தான் துணிவாப் போய் ஒறேஞ் பார்லியும் உறைப்புக் கச்சானும் வாங்கிக் கொண்டு வந்தது. எப்பிடித்தான் அவர்களுக்கு அந்தத் துணிவு அங்கே அப்பவே எண்டு எத்தனையோ நாட்கள் வியந்தும் இருக்கிறன்.

படத்தின்ர கடைசிக் கட்டத்தில படம் எண்டு தெரிஞ்சும் லேன்சி நனையும் அளவு அழுததும், இனிமேல் கமலகாசன் திரும்பி வரமாட்டார் என்ற அளவில் பீல் பண்ணியதும் இப்ப நினைச்சாலும் சிரிப்பா இருக்கு.

படம் முடிஞ்சு உடன எழும்ப கேமாதான் இழுத்து இருத்தினவள். எல்லாரும் போகட்டுமடி என்று. களவு செய்த ஆட்கள் மாதிரி ஏனடி வாறாய் இயல்பாய் இரு என்று மாலி சொன்னாலும் யாழ்ப்பாணம் பஸ்டாண்டுக்கு வந்து பஸ் எடுத்து நெஞ்சிடியோட வீட்டை போய்ச் சேர்ந்த பிறகும் பயம் போகவில்லை.

அம்மா ஏன் லேட் என்று கேட்கவில்லை. ஏனென்றால் முதல் நாளே பள்ளியில் விளையாட்டுப் போட்டிக்கு பயிற்சி என்று சொல்லி வச்சதில் தப்பினது.

அடுத்த நாள் டீச்சர் கேட்டதுக்கு முதலே பிளான் பண்ணினபடி ஒரே சாட்டுச் சொல்லாமல் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரிச் சொன்னதை டீச்சர் நம்பினாவோ இல்லையோ ஒன்றும் கதைக்கவில்லை.

ஒரு வாரம் செல்ல ஒரு சனிக்கிழமை. எங்கள் ஒழுங்கைக்கு அடுத்த ஒழுங்கையில் இருக்கும் பத்மா அக்கா, நான் டியூசனுக்குப் போகும் போது  சில நேரங்களில் நின்று அவவுடன் கதைத்துவிட்டுப் போவேன். அன்றும் வழமைபோல கதைத்தபோது என்ர தம்பி உம்மை தியேட்டறால வெளியில வரேக்குள்ள கண்டவனாம் என்றவுடன் நெஞ்சு உடனே திடுக்கிட்டதுதான்.

ஆனாலும் சமாளிச்சுக் கொண்டு, ஓமக்கா நானும் இன்னும் மூண்டு பெட்டையளும் போனனாங்கள். நல்ல படம் அக்கா என்று எந்த விதப் பதட்டமும் இல்லாமல் கூறியதில் அவரின் வாய் அடைபட்டுப் போனது. அத்தோடு அடுத்த முறை எங்களோட நீங்களும் வாங்கோவன் என்று விட்டு நான் சென்றதை அவர் வாய் பிளந்தபடி பார்த்துக்கொண்டு நின்றிருப்பா என்பதிலும சந்தேகம் இல்லை.

இரண்டு நாள் போக அவவின் தம்பி ரமேஸ், என்னைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தபடி கடந்து போனான். நான் கூட சிரித்து வைப்போமா என்று ஒருகணம் எண்ணிவிட்டு மறுகணம் வேண்டாம் என்று மனம் சொல்ல சிரிக்காமலே அவனைக் கடந்து போனேன்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Like 14

Share this post

Link to post
Share on other sites

மாலி,நந்தினி,ஹேமா,ரதி  இப்ப எங்கை இருக்கினம்?

Share this post

Link to post
Share on other sites

மாலி,நந்தினி,ஹேமா,ரதி  இப்ப எங்கை இருக்கினம்?

குட்டிகளும்(பிள்ளைகள்) குடித்தனமாகவும் புலம் பெயர்ந்து இருக்கினம் :D

மூன்றுபேர் மாலி, நந்தினி, ஹேமா, ரதி
நாலு பேரா? மூன்று பேரா?

Share this post

Link to post
Share on other sites
நல்ல அனுபவக் கதை சுமேரியர், எதோ சிங்கள பெண்கள் பெயர்போல் தெரிகிறது, உங்கள் நண்பிகளிம் பெயர்கள்.
 
பின்னால இருந்த ஹீரோக்கள் எல்லோரும் தேவி.... ஸ்ரி தேவி
கையில் மணியை பிடித்தே தினமும் ஆட்டும் பக்தனம்மா...... சூடம் ஏற்றி மேலும் கீழும் காட்டும் பித்தனம்மா :D .. :lol: .. :lol: .... என்று பாடி இருப்பார்கள்.
 
இந்த பாட்டு இந்தப் படத்த் என நினைக்கிறேன்.. :D
 
Share this post

Link to post
Share on other sites

படம் தொடங்கி லைட் எல்லாம் நிப்பாட்டின பிறகு யாராவது தெரிஞ்ச ஆட்கள் வந்திருக்கினமோ என்று பார்க்கத் தலையைத் திருப்பி சுற்றிவரப் பார்க்க, நல்ல காலம் ஊர்க்காரர் ஒருத்தரும் இல்லை. பின்னால இருந்த ஹீரோக்கள் தங்களைத்தான் திரும்பிப் பாக்கிறன் எண்டு நிமிர்ந்து இருந்து பல்லைக் காட்டினதையும் இண்டைவரை மறக்க முடியேல்ல.

சுமோ அக்கா (மனதுக்குள்): பொறுக்கிப் பயலுகள்.. பல்லைக் காட்டுதுகள்

ஹீரோக்கள் (மனதுக்குள்) : இடுக்கண் வருங்கால் நகுக.. :D

அனுபவப்பகிர்வுக்கு நன்றி சுமோ அக்கா.. :D

Share this post

Link to post
Share on other sites

சுமோக்கா...இப்ப தான் தெரியுது நாங்க இப்படி எத்தனை விடயங்களை பள்ளிபருவத்தில் கோட்டைவிட்டு இருக்கின்றோம் என்று :(:)

பகிர்வுக்கு நன்றி.

Share this post

Link to post
Share on other sites

படிக்கவிட என்னெல்லாம் செய்திருக்கிறீர்கள் சுமே!  :lol: வம்படி பெட்டைகளை பற்றிச் சொல்லி வேலை இல்லை  :D

Share this post

Link to post
Share on other sites

நல்லா இருக்கு கதை . :icon_mrgreen: .

மேசோ கொஞ்சம் அசாத்திய பேர்வழி போலத்தான் இருக்கு .

நினைத்தாலே இனிக்கும் பார்க்கும் போது இப்படித்தான் முன் வரிசையில் இருந்த கொஞ்ச கேர்ல்ஸ் படம் தொடங்கி கமல் மைக்குடன் வர

"சோ சுவீற்றப்பா சோ சுவீற்றப்பா"  என்று விட்டபாடில்லை 

"என்னையோ சொல்லுறிங்கள் தாங்க்ஸ் " என்று நாம திருப்பி போட அத்தோட  ஆட்கள் கப்சிப் . :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

உண்மைதான்

சிறு சிறு  தப்புக்களுக்கே  பெரிய எடுப்பெடுத்து

அதிலும் கோட்டைவிடுவதே  வழமை :D

நன்றி  அனுபவப்பதிவுக்கு  சுமே

ஆனாலும் வயசு அதிக வித்தியாசமில்லை

நானும் இதே படத்தை

அதே நேரம்  பாடசாலைமுடிய  பார்த்தேனே........ :lol:  :D  :D

2014-1983+16 = ?? :D

Share this post

Link to post
Share on other sites

3 வருடம் எங்கோ உதைக்கிறதே :lol::icon_idea:

அடக்கடவுளே... உண்மையாவா? :huh:  :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

துணிச்சலுக்கு  வேம்படியை அடிச்சுக்க ஆளே கிடையாது...! :)

பயத்தில எத்தனை பேராய் படத்துக்கு போனது என்டதை மறந்திட்டீங்கள்...!! :)

Share this post

Link to post
Share on other sites

2014-1983+16 = ?? :D

இதில  எல்லாம் சரி

ஆனால் 16 என்பது கொஞ்சம் மரியாதை கருதி :lol:  (இந்த வயசிலேயே  குழப்படியா? :lol: )  கொஞ்சம்  குறைக்கப்ப்பட்டு இருக்கலாம்

Share this post

Link to post
Share on other sites

2014-1983+19 :D:lol:

19 இல் படத்துக்கு பாடசாலையில்(??) இருந்து போவது திறில்லா?  ^_^  :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

19 இல் படத்துக்கு பாடசாலையில்(??) இருந்து போவது திறில்லா?  ^_^  :icon_idea:

இதில் ஏதோ தில்லுமுல்லு நடந்திருக்கு :) படம் 1982 ல் வந்திருந்தாலும் 18 வயதாக இருந்திருக்கும் :rolleyes:  விசுகு அண்ணா விளக்கம் பிளீஸ் :) :)

Share this post

Link to post
Share on other sites

விசுகு அண்ணாவுக்கு அந்த படம் வரும் போது[82] 20,21 வயசு இருக்கும் என்று நினைக்கிறேன்.சுமோவுக்கு 17,18 இருக்கும்

Share this post

Link to post
Share on other sites

ஆக ஒரு படமா களவாக பார்த்தீர்கள் சுமோ :icon_mrgreen:  வேம்படியில் படித்ததுக்கு ஒரு படம் காணாது :o:lol:

Share this post

Link to post
Share on other sites

விசுகு அண்ணாவுக்கு அந்த படம் வரும் போது[82] 20,21 வயசு இருக்கும் என்று நினைக்கிறேன்.சுமோவுக்கு 17,18 இருக்கும்

இது தானே  வேண்டாம் என்பது....... :D

30/09/1963

1982 இன் முற்பகுதி  என்றால் எனக்கும் 18 தான்

பிற்பகுதி  என்றால் 19...

அப்போ

நான் சொன்ன  கணக்கு (பெரிய  வித்தியாசமில்லை) சரியாக வருகுதெல்லே  ரதி. :D

Share this post

Link to post
Share on other sites

வருகை தந்த உறவுகள் குமாரசாமி, புத்தன், கொழும்பான், இசை, தமிழினி,அலை, அர்யுன், விசுகு, சுவி அண்ணா, ரதி, நவீனன், கரன் ஆகிய உறவுகளே நன்றி.

மாலி,நந்தினி,ஹேமா,ரதி  இப்ப எங்கை இருக்கினம்?

அவை எல்லாம் எல்லாஇடமும் செட்டில் ஆயிட்டினம் :D

குட்டிகளும்(பிள்ளைகள்) குடித்தனமாகவும் புலம் பெயர்ந்து இருக்கினம் :D

நாலு பேரா? மூன்று பேரா?

நாலு பேர்தான். கை தடுமாறி எழுதினா உடன அதைப் பிடிச்சுக் கொண்டு :D

நல்ல அனுபவக் கதை சுமேரியர், எதோ சிங்கள பெண்கள் பெயர்போல் தெரிகிறது, உங்கள் நண்பிகளிம் பெயர்கள்.
 
பின்னால இருந்த ஹீரோக்கள் எல்லோரும் தேவி.... ஸ்ரி தேவி
கையில் மணியை பிடித்தே தினமும் ஆட்டும் பக்தனம்மா...... சூடம் ஏற்றி மேலும் கீழும் காட்டும் பித்தனம்மா :D .. :lol: .. :lol: .... என்று பாடி இருப்பார்கள்.
 
இந்த பாட்டு இந்தப் படத்த் என நினைக்கிறேன்.. :D
 
துணிவில்லாத பயல்கள் அப்பிடி ஒண்டுமே செய்யேல்லை.
 
Share this post

Link to post
Share on other sites

வருகை தந்த உறவுகள் குமாரசாமி, புத்தன், கொழும்பான், இசை, தமிழினி,அலை, அர்யுன், விசுகு, சுவி அண்ணா, ரதி, நவீனன், கரன் ஆகிய உறவுகளே நன்றி.

அவை எல்லாம் எல்லாஇடமும் செட்டில் ஆயிட்டினம் :D

இதுவரை என்னை விசுகு அண்ணை  என  அழைத்த சுமே

இன்று தம்பியாக்கியுள்ளார்

எனவே எனது வயசுக்கு மூத்தவர் என ஒத்துக்கொண்டுள்ளார். :D

எனவே  இங்கு சந்தேகப்பட்டவர்களுக்கு விடை  கிடைத்துள்ளது

நன்றி  சுமே அக்கா... :D

Share this post

Link to post
Share on other sites

சுமோ அக்கா (மனதுக்குள்): பொறுக்கிப் பயலுகள்.. பல்லைக் காட்டுதுகள்

ஹீரோக்கள் (மனதுக்குள்) : இடுக்கண் வருங்கால் நகுக.. :D

அனுபவப்பகிர்வுக்கு நன்றி சுமோ அக்கா.. :D

அப்ப எல்லாம் எல்லாரையும் திட்ட மாட்டம் எல்லே :D

சுமோக்கா...இப்ப தான் தெரியுது நாங்க இப்படி எத்தனை விடயங்களை பள்ளிபருவத்தில் கோட்டைவிட்டு இருக்கின்றோம் என்று :(:)

பகிர்வுக்கு நன்றி.

வீணாக்கிப் போட்டியளே தமிழினி. :lol:

படிக்கவிட என்னெல்லாம் செய்திருக்கிறீர்கள் சுமே!  :lol: வம்படி பெட்டைகளை பற்றிச் சொல்லி வேலை இல்லை  :D

உமக்கு வயித்தெரிச்சல் :lol:

Share this post

Link to post
Share on other sites

ஆக ஒரு படமா களவாக பார்த்தீர்கள் சுமோ :icon_mrgreen:  வேம்படியில் படித்ததுக்கு ஒரு படம் காணாது :o:lol:

ஏன் இந்தக் கொலை நவீனன்?? :D

Share this post

Link to post
Share on other sites

ஏன் இந்தக் கொலை நவீனன்?? :D

ஏன் நீங்களும் ஒரு ஆளா அந்த மாலி,நந்தினி,ஹேமா,ரதி  இல்? :D:lol:

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this