"இந்த வகையில், தமிழரசுக் கட்சி கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் தவறாக வழிநடத்த முனைகிறதா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும்."
அது நடக்கும் வரை ... இந்த கட்சி தமிழ் மக்களையும் ஏமாற்றி தங்களையும் ஏமாற்றுகின்றது.
"அரச தலைவர் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் அவர் சுவிஸ் தூதரகத்தில் நுளைவு அனுமதியை பெற்று வைத்திருந்தாரா என்பதே சிறீலங்கா அரசின் தற்போதைய கேள்வி. எனவே தான் நுளைவு அனுமதிப் பிரிவில் பணியாற்றும் பெண்ணை கடத்தும் முயற்சிகள் மேற்ககொள்ளப்பட்டுள்ளன."
ஆம் என அனுமானிக்க கூடியதாக உள்ளது. குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி நிசந்தா அவர் குடும்பம் நாட்டை விட்டு வெளியேற சுவிஸ் அரசு முன்கூட்டியே விசாவை வழங்கியிருக்க வேண்டும்.
"ஆனால் சிங்கள மக்களின் அந்த அச்சத்தை போக்கியுள்ளது இந்தியா. ஆம் தனது பொருளாதாரம் இந்த காலாண்டு பகுதியில் எதிர்பார்த்த 6 விகிதத்தை எட்டாது 4.5 விகிதமாக வீழ்ச்சி கண்டபோதும், தனது 5 பில்லியன் டொலர் இலக்கை கைவிட்டு அதில் ஏறத்தாள 10 விகிதத்தை சிறீலங்காவுக்கு இந்தியா வழங்கியுள்ளது."
500 மில்லியன்களையும் பணமாக வழங்கப்போவதில்லை. வீடுகள் கட்ட மற்றும் 100 மில்லியன்கள் வரை சூரிய மின்கலம் என பலமடங்காகாக பெரிப்பித்து கணக்கை காட்டுவார்கள். இருந்தாலும் உதவிதான் .