Jump to content

கைவினைத் திறனாளிகள் நிறுவனம்.


Recommended Posts

நோக்கம்

போரால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடும் தமிழர்களுக்கான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல். ஏழை மாணவர்களுக்கு கல்வி அளித்தல்.

 

logo.png

ஊக்கம்

சிறு சிறு முதலீடுகள் மூலம் தொழில் முயற்சிகளை, வியாபாரங்களை ஆரம்பித்தல். கிடைக்கும் வருமானத்தின் மூலம் ஏழை மாணவர்களுக்கான கல்விக்கு உதவுதல்.

 

ico_creative.png

ஆக்கம்

செயற்றிட்டங்களை விரிவுபடுத்தி, சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி, எம் மக்களை பொருளாதார ரீதியில், கல்வியில் தன்னிறைவு நிலையை எட்டி வலுவடையச் செய்தல்.

ico_technical.png

 

வியாபாரத்தில் இணையும் பங்குதாரருக்கான உரிமைகளும் நிபந்தனைகளும்.

BY ADMIN IN 

1) முதலீட்டாளர் எமது சமூகப்பணிகளில் இணைந்திருக்க முடியும். அதாவது நாம் முன்னெடுக்கும் சமூகப்பணிகளில் தங்களது உதவிகளை வழங்குவதன் மூலம் இணைந்திருக்கமுடியும்.

 

2) முதலிடும் தொகையிலிருந்து கிடைக்கும் இலாபத்திலிருந்து பணியாளர்கள் சம்பளம் மற்றும் எமது நிறுவனம் மேற்கொள்ளும் சமூகப்பணிக்கு 15வீதம் பெறப்படும்.மீதி முதலீட்டாளருக்கு வழங்கப்படும்.

 

3) முதலீட்டாளரின் நடவடிக்கை தேவையற்ற தலையீடுகள் எமது பணியில் குறுக்கிடும் பட்சத்தில் முதலீட்டாளர்களை நீக்குவதோடு அவர் முதலிட்ட பணமும் திரும்பி வழங்கப்படும். முதலிட்ட தொகை எமக்கு கிடைக்கப்பெற்ற பெறுமதி மட்டுமே திருப்பி வழங்கப்படும். அதாவது இலங்கை ரூபாவில் எமது நிறுவனத்தில் முதலீட்டாளராக பணத்தை முதலீட்டாளர் முதலிட்டிருப்பின் இலங்கை ரூபாவிலேயே வழங்கப்படும். இதர அன்னிய நாட்டு நாணயப் பெறுமதியில் தரப்படமாட்டாது.

 

4) முதலீட்டாளர் எமது தொழில்களில் ஒரு பங்கினை மட்டுமே ஏற்றுக் கொள்வதால் எமது நிருவாக செயற்பாடுகளோ அல்லது இதர வழிகளிலோ நிர்வாகத்தினர் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது.

‚’அதாவது எம்மால் நிருவாகத்தில் நியமிக்கப்பட்ட நிருவாகிகளுடன் முதலிடும் ஒருவர் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு இடைஞ்சல் கொடுப்பது தவிர்க்கப்படுகிறது.முதலீட்டாளர் என்ற உரிமையில் தேவையற்று நிருவாக ஒழுங்கில் தலையிடும் உரிமையில்லை.

 

5) முதலீட்டாளர் எமது வியாபாரத்தில் இணைந்த பின்னர் தங்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள் வியாபாரம் நடைபெறும் இடங்களுக்கு எமது அனுமதியின்றிச் சென்று வர அனுமதிக்கப்படமாட்டார்கள். விரும்பின் எழுத்து மூலம் எம்மிடம் அனுமதிகோரிய அனுமதிக் கடிதம் பெறப்பட்டு முற்கூட்டியே செல்லும் நபர் செல்லும் நாள் என்பவை எழுத்து மூலம் அறிவித்தே செல்ல முடியும். பார்வையிடச் செல்பவர் மேற்பார்வையாளராக செயற்பட அனுமதி மறுக்கப்படுகிறது. அதேவேளை ஒருவருக்கு அனுமதி பெற்றுக் கொண்டு மேலதிகமானவர்களை தொழில் நடைபெறும் இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் முடியாது.

 

6) எமது நிர்வாக அல்லது முகவர்களுடன் ஏதாவது மனக்கசப்பு அல்லது முரண்பாடுகள் இருந்தால் அவற்றை உங்களது முதலீட்டை பெற்றுக் கொள்ள தொடர்பாளராக செயற்பட்டவர் மூலமே அனைத்து முறைப்பாடுகளையும் நிர்வாகத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

 

7) முதலீட்டாளருக்கு எமது நிறுவனத்துடனான தொடர்புகளில் அல்லது வியாபாரத்தில் சந்தேகங்கள் இருப்பின் அதனையும் எழுத்து மூலம் எம்மிடம் விசாரித்து உண்மைகளை எழுத்து மூலமே பெற்றுக் கொள்ள வேண்டும்.

 

8) எமது நிபந்தனைகளை மீறி முதலீட்டாளர் ஒருவர் எம்மீது சந்தேகித்தோ அல்லது சந்தேகமான வகையில் நடந்து கொண்டால் அவரை நாமாகவே எமது பங்குதாரர் உரிமையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படுவர்.

 

9) எமது நிறுவனத்தின் நிருவாக தொடர்பாளர்களுடனான தொடர்புகளை பேணுவதற்கு விரும்பும் முதலீட்டாளர் தொடர்பை பேணுவதற்கான காரணத்தை எமக்கு எழுத்து மூலம் அறிவித்து எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய வகையிலான தொடர்பாலுக்கே மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

 

http://hmclk.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.