Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய பாடம்......... புலத்து வயோதிபம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெரியத்தார் வைத்தியசாலையில் அனுமதீக்கப்பட்டிருப்பதாக அறிந்து

அவரைப்பார்க்க  சென்றிருந்தேன்.

 

அவருடைய  அறை இரு  கட்டில்களைக்கொண்டது

அறைக்குள் போனதுமே இருவர் தமிழில் வணக்கம் சொன்னார்கள்

அத்தாருடன் பேசிக்கொண்டிருந்தபோது

பக்கத்திலிருந்தவரும் சேர்ந்து கொண்டார்

 

இவர் வயோதிபர் இல்லத்திலிருந்து இங்கு வந்துள்ளார் என அத்தார் அறிமுகப்படுத்தியதால்

கொஞ்சம் அவரைக்கவனிக்கத்தொடங்கினேன்

எனக்கு இது புது அனுபவம்.

 

நீங்கள் இன்னாரின் மகனல்லவா  என  என்னைக்கேட்டு

எனது தகப்பனாரது பெயரைச்சொல்லி என்னை  அதிசயிக்க  வைத்தார்

அவரை எப்படித்தெரியும் என்பதற்கு

அவரைத்தெரியாமல் இருக்கமுடியுமா என்றார்.

இத்தனைக்கும் அவர் யாழ்ப்பாணத்தில் வேறு  ஒரு  ஊரைச்சேர்ந்தவர்.

 

பிரான்சிலுள்ள ஒரு பெரும்  வர்த்தகரின் தாய் மாமன்.

இரு பிள்ளைகள்

இருவரும் கனடாவில்.

இங்கு இவர் தனியே வயோதிபர் இல்லத்தில்.

இது என்னை  ஒன்றும் செய்யவில்லை

ஏனெனில் இனி இது தான் வாழ்க்கை என்பதை நான் உணரத்தொடங்கியிருப்பதால்

கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டேன் அவரது செய்கைகள் சார்ந்து....

 

 

சில  சில  ஏக்கங்கள் தெரிந்தன தான்.

ஐயா தேனீர் குடிக்க கீழே  போகின்றேன்

உங்களுக்கு என்ன  கொண்டுவர  என்ற  போது

கோப்பி கொண்டு வாருங்கள்

சீனி  சேர்க்கின்றனீங்களே ஐயா  என்றபோது

ஓமோம் 2 கட்டி என  சிரித்தபோதும்....

 

தம்பி  தொலைபேசி  இருக்கே

எனது தங்கச்சியின் மகளுக்கு ஒருக்கா அடித்து  தாறீரே கதைப்பம் என்ற போதும்

சில  ஏக்கங்கள் எனக்கும் அழுத்தின.

 

ஆனாலும்  இவை  அனைத்தையும் மீறி

பிரெஞ்சு மொழியையும் புரிந்து பேசிக்கொண்டு

அவர்களது பழக்கவளக்கங்களையும்  

உணவுப்பழக்கங்களையும் உள் வாங்கிக்கொண்டு

அதன்படி நடந்து............

 

84 வயசு

2 கால்களும் இயங்காது

கொழுப்பு சீனி என அத்தனை  வருத்தங்களுமுண்டு.

ஆனால் அவரது முகத்தில் பேச்சில்  எந்த வருத்தமும் இல்லை

எந்த நேரமும் சிரித்தபடி.

பொருள்பட

மற்றவர் ரசிக்க பேசியபடி.

அந்தளவு குரல் வளம்.

இன்றும் நினைக்கின்றேன் கொஞ்ச நேரம் போய் அவருடன் பேசிக்கொண்டிருக்கலாமா என.

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.