Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

உங்களின் நினைவுகள்…..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
காற்தடம் கரைத்து
உப்பளக் காற்றிடை மிதந்து
போர்த்தடம் தேடி
உப்புக்காற்றின் உதைப்பில்
உங்களின் நினைவுகள்.....!
 
நெஞ்சினில் நிறைந்த
நண்பரின் ஞாபக ஊற்றினில்
நாட்குறிப்பினில்
காற்றழுத்தக் காற்றழுத்தக்
கரைதொட்ட அலையின்
கரைமணலில்
உங்களின் நினைவுகள்.....!
 
நேற்று இவ் வெளியினில்
நெஞ்சுயர்த்திப் போகிறோம்
என்ற என் தோழியர்
முகங்களில் பூத்திருந்து அப்
புன்னகை அரும்பலில்
உங்களின் நினைவுகள்....!
 
காற்றில் நுளைந்து
கடலில் கரைந்து – என்
மூச்சில் நிறைந்து
முகவரி மறுத்துப்
பெயருமில்லாப் பொருளுமில்லா
மெளனக் கிடக்கையில்
மாவீரப் பெருமைகள் குவிய
போனவென் தோழமைக் குரல்களில்
உங்களின் நினைவுகள்.....!
 
போற்றிட உம் பெருமைகள் பேசிடப்
பேராயிரம் கவிதைகள் தோற்றன
ஈற்றில் தொலையாத உங்களின்
ஆற்றலைக் கடலலை
அள்ளாப் பெருமைகள்
அனைவரின் நினைவிலும்
ஆனையிறவின் நினைவுகள்
அனைத்திலும்
உங்களின் நினைவுகள்.
 
06.05.2003

 

(ஆனையிறவு நினைவுக்கவிதை. 11வருடங்கள் முன்னர் எழுதியது மீளும் நினைவாய்)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
அனைவரின் நினைவிலும் ஆனையிறவின் நினைவுகள் அனைத்திலும் உங்களின் நினைவுகள்
கவிக்கு நன்றிகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு நன்றிகள் புத்தா.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.