Jump to content

வெள்ளிக் கிழமை விசேட பதிவு: தத்துவ விசாரம்: ஐந்து வகை கோசங்கள் என்றால் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 வேதாந்தம் எனப்படும் தத்துவம் உபநிடதங்களின் சாரம். வேதங்களின் அந்தமாக விலங்கும் உபநிடதங்கள் இந்தப் பிரபஞ்சம் குறித்தும் அதன் ஆதாரம் குறித்தும் தேடலை மேற்கொள்கின்றன. இந்தத் தேடலில் பல்வேறு தத்துவங்களும் கருதுகோள்களும் முன்வைக்கப்படுகின்றன. கவித்துவமான முறையில் மிகச் சுருக்கமாகச் சொல்லப்படும் இந்தக் கருத்துகள் பல விதமான விவாதங்களுக்கும் விளக்கங்களுக்கும் வழிவகுக்கின்றன.

மனித வாழ்வையும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் அதற்கும் உள்ள தொடர்பையும் பற்றிச் சிந்திக்க விரும்புபவர்களுக்குப் பல விஷயங்களை அள்ளித் தருவது வேதாந்தம். ஆத்மா, பிரம்மம் ஆகிய விஷயங்கள் பற்றியும் உபநிடதங்கள் ஆழமாகப் பேசுகின்றன.

 

உபநிடத சிந்தனைகள் ஆத்மாவைப் பற்றி விளக்குவதற்கு முன்பு நம் உடலைப் பலவாறாகப் பகுக்கின்றன. மனித உடலை ஐந்து கோசங்களாகப் பிரித்துப் பார்க்கும் ஒரு பகுதி தைத்ரிய உபநிடதத்தில் வருகிறது.

 

பஞ்ச கோசங்கள் என்று இவை குறிப்பிடப்படுகின்றன. கோசம் என்றால் உறை; பஞ்ச என்றால் ஐந்து. அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகியவையே இந்த கோசங்கள். இவற்றைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

 

அன்னமய கோசம்

நம் ஸ்தூல உடல் அன்னம் அதாவது உணவால் தோன்றி, உணவால் வளர்ந்து, உணவின் மூலமாகிய மண்ணில் சிதைந்து அழிகிறது. இதுவே அன்னமய கோசம் எனப்படுகிறது. உடலுக்கும் வாழ்வுக்கும் உணவின் முக்கியத்துவம் என்னவென்பதை இது உணர்த்துகிறது.

 

பிராணமய கோசம்

வாயு (காற்று) உடலின் உள்ளும் புறமும் இருக்கிறது. உடலுக்குள் இது மூச்சுக் காற்றாக உள்ளது. இதன் இயக்கத்தாலேயே உடலின் எல்லா உறுப்புகளும் இயங்குகின்றன. இதன் மூலம் செயலாற்றும் புலன்கள், உயிர் வாழ்வதற்கு அவ்சியமான உள் உறுப்புகள், அவற்றின் இயக்கங்கள், ஆகியவை பிராணமய கோசம் என வகைப்படுத்தப்படுகின்றன.

 

மனோமய கோசம்

உணர்ச்சிகள், உணர்ச்சிகளுக்கு ஆதாரமான மனம், அதன் பல்வேறு அடுக்குகள், செயல்பாடுகள் ஆகியவை மனோமய கோசம் எனப்படும்.

 

விஞ்ஞானமய கோசம்

 

எது சரி, எது தவறு? எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது? எது உண்மை, எது பொய்? எது நிலைக்காது, எது நிலைக்கும்? இதுபோன்ற தர்க்க ரீதியான தேடல்களை நம் பகுத்தறிவும் சிந்தனைத் திறனும் மேற்கொள்கின்றன. அறிவின் இந்த இயல்புகளும் செயல்பாடுகளும் அடங்கிய உறை விஞ்ஞானமய கோசம் எனப்படும்.

 

ஆனந்தமய கோசம்

ஆனந்தமய கோசம் என்பது இந்த அடுக்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இருக்கும் நிலை. இந்த நிலையை உணர்வதும் அடைவதும் ஆன்மிகத்தின் லட்சியம் என்று சொல்லலாம்.

 

மனித வாழ்வு என்பது இவை ஐந்தையும் உள்ளடக்கியது. ஐந்தாவது கோசம் நம் புலன் அறிவுக்கு அப்பாற்பட்டது. மற்ற நான்கு கோசங்களையும் நாம் உணரவும் அறியவும் முடியும். ஒவ்வொருவரும் உடல், மனம், அறிவு இதில் ஏதேனும் ஒன்றுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதற்கு மாறாக இவை ஒவ்வொன்றும் ஒரே உடலின், ஒரே வாழ்வின் வெவ்வேறு அடுக்குகள் என்பதை உணர்ந்தால் ஒருங்கிணைந்த விதத்தில் நம்மை நாமே அணுகிப் புரிந்துகொள்ளலாம்.

 

எல்லாமே சேர்ந்ததுதான் நம் வாழ்வு என்பதையும் எந்த ஒன்றுடனும் நாம் நின்றுவிடக் கூடாது என்பதையும் அனுபவபூர்வமாக உணர்பவர் எல்லாக் கோசங்களையும் தாண்டி ஆனந்தமய கோசத்தை உணர முடியும் என்பது இதன் உட்பொருள்.

 

தைத்ரிய உபநிடதத்தில் எது பிரம்மம் என்னும் தேடலில் அன்னமே பிரம்மம் என்று முதலில் உணரப்படும். பிறகு இது படிப்படியாக நகர்ந்து பிரணனே பிரம்மம், மனமே பிரம்மம், விஞ்ஞானமே பிரம்மம் என்ற முடிவுகள் எட்டப்படும். கடைசியில் ஆனந்தம் பிரம்மணோ வியஜானாத் (ஆனந்தமே பிரம்மம் என அறிக) என முடியும்.

 

http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article5942571.ece?homepage=true

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிவ சிவ...!

விட்டல விட்டல பாண்டுரங்க விட்டல...!!

 

:D :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

vanakkam.gif

 

நல்ல பயனுள்ள பதிவு.
இணைப்பிற்கு... நன்றி, பிழம்பு. :D

Link to post
Share on other sites

எல்லாமே சேர்ந்ததுதான் நம் வாழ்வு என்பதையும் எந்த ஒன்றுடனும் நாம் நின்றுவிடக் கூடாது என்பதையும் அனுபவபூர்வமாக உணர்பவர் எல்லாக் கோசங்களையும் தாண்டி ஆனந்தமய கோசத்தை உணர முடியும் என்பது இதன் உட்பொருள்.

 

 

actress-meghna-naidu-hot-bikini-desi-act

 

"நன்றி பிழம்பு..!" :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

actress-meghna-naidu-hot-bikini-desi-act

"நன்றி பிழம்பு..!" :D

நூலிலையில் தப்பிவிட்டத.,இசை
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரங்கே?  அழைத்து வாருங்கள் இசையின் மனைவியை. அவரும் இந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்து மகிழட்டும்.    :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாரங்கே?  அழைத்து வாருங்கள் இசையின் மனைவியை. அவரும் இந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்து மகிழட்டும்.    :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

பாவம், விட்டுவிடுங்கள்!

 

அவர் இப்போது மனோமய கோசத்தில் நிற்கிறார்..! :D

Link to post
Share on other sites

ஆளாளுக்கு மிரட்டுறாங்கப்பா.. :huh: மக்களே.. இனிமேலும் இந்தத் தொண்டை நான் செய்யவேண்டுமா என்கிறதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேணும்.. மக்களே :D

Link to post
Share on other sites

ஆளாளுக்கு மிரட்டுறாங்கப்பா.. :huh: மக்களே.. இனிமேலும் இந்தத் தொண்டை நான் செய்யவேண்டுமா என்கிறதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேணும்.. மக்களே :D

 

:o தலைவர் தொண்டை நிறுத்தி விட்டால் தொண்டரடிப் பொடிகளான நாம் குளிப்போம் என நான் எச்சரிக்கிறேன்! :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாரங்கே?  அழைத்து வாருங்கள் இசையின் மனைவியை. அவரும் இந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்து மகிழட்டும்.    :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

 

 

தமிழச்சி  மீது

மக்களின் சுகமோகங்களுக்கு தடையாய் நின்றமைக்காகவும்

எமது தலைமையை அதிகாரத்தைக்காட்டி  பயப்படுத்தியமைக்குமாக 

இடர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது :lol:  :D  :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு மிரட்டுறாங்கப்பா.. :huh: மக்களே.. இனிமேலும் இந்தத் தொண்டை நான் செய்யவேண்டுமா என்கிறதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேணும்.. மக்களே :D

தலைவா கைய வுட்டுறாத
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தலைவா கைய வுட்டுறாத

 

எனக்கென்றால் நம்பிக்கை போச்சுது.. :lol:

சும்மாவே  நடுங்குவார்..... :D  :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மனுசி ஏது பிரச்சனை குடுத்தா இந்தப் படம் தான் பார்த்தனான் என்டு சொல்லவும் இசை.

 

 

545237-1cc4f000-cddf-11e3-ae84-eacdfc097

 

 

Link to post
Share on other sites

ஈசன் இணைச்ச படத்தில அவ போட்டு இருக்கிற உடுப்பு நல்லாயிருக்கு ஆனால் ஆள் நல்லாயில்லை:lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு மிரட்டுறாங்கப்பா.. :huh: மக்களே.. இனிமேலும் இந்தத் தொண்டை நான் செய்யவேண்டுமா என்கிறதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேணும்.. மக்களே :D

 நான் தெளிந்து வரும் வரை தொடருங்கள் நண்பா ...............விரைவில் உங்களிடம் இருந்து இந்தப்பணியை பொறுப்பேற்பேன் என்பதை உறுதி செய்கிறேன் .......... :D  :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

actress-meghna-naidu-hot-bikini-desi-act

 

"நன்றி பிழம்பு..!" :D

 

இதிலை எங்கே உட்பொருள் இருக்கு ?
எல்லாம் வெளியாய் தானே இருக்கு ...... இதுக்குள் எப்படி உட்பொருள் காண்பது ?
Link to post
Share on other sites

இதிலை எங்கே உட்பொருள் இருக்கு ?

எல்லாம் வெளியாய் தானே இருக்கு ...... இதுக்குள் எப்படி உட்பொருள் காண்பது ?

நீங்கள் எதையெல்லாம் கண்டுபிடித்ததாக நினைத்தீர்களோ.. அதையெல்லாம் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை.. :o எல்லாமே ஒரு மாயை..! :rolleyes::D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எதையெல்லாம் கண்டுபிடித்ததாக நினைத்தீர்களோ.. அதையெல்லாம் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை.. :o எல்லாமே ஒரு மாயை..! :rolleyes::D

 

இதை நியனி அண்ணா அவர்கள் நம்புவார் என்றே .....
நானும் நம்புகிறேன் !

இதையெல்லாம் பாக்கிற பாவத்தை செய்கிறோமே ... அப்படி என்று ஒரு சலனம் நெஞ்சுக்குள் இதுவரையிலும் இருந்தது.
 
நன்றி இசையண்ணா!
 
எதையெல்லாம் பார்த்தோமோ ..... அதையெல்லாம் நாம் பார்க்கவில்லை. எல்லாம் மாயை!
Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ‘பாலை நிலமாகும் யாழ்ப்பாணம்’ May 8, 2021   — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — “வலு கெதியில யாழ்ப்பாணம் பாலையாகி விடும்” என்று சில ஆண்டுகளாக எச்சரித்துக் கொண்டு வருகிறார்கள் சூழலியலாளர்கள். இது சீரியஸான உண்மையே. ஆனால், யார்தான் உண்மையை மதிக்கிறார்கள்! பாலையாகினால் என்ன? சோலை வரண்டால் என்ன? கிடைப்பது பொக்கிஷம். எடுப்பதையெல்லாம் அதற்குள் எடுத்துக் கொள்வோம் என்று பனைகளை வெட்டுகிறார்கள். மணலை அகழ்கிறார்கள். காடுகளை அழிக்கிறார்கள். போதாக்குறைக்கு கடலோரங்களையும் களப்புக் கரைகளையும் கூடத் தங்கள் இஸ்டத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். போதாக்குறைக்கு வளமான செம்மண் தோட்ட நிலங்களையெல்லாம் கடைகளுக்கும் குடியிருப்புகளுக்குமாக எடுத்துக் கொள்கிறார்கள். இப்படியெல்லாம் செய்து கொண்டே போனால் இந்தச் சின்னஞ்சிறிய யாழ்ப்பாணக் குடாநாடு பாலையாகாமல் வேறு எப்பிடியாகும்?  இதில் உண்மையும் வேடிக்கையும் ஒன்றுண்டு. இந்த அநியாயங்களையெல்லாம் செய்வது வேறு யாருமல்ல. நம்மவர்கள்தான். நமக்கும் இவர்களைப் பற்றித் தெரியும். நம்முடைய அயலில் – ஊரில் – உள்ளவர்களே இதையெல்லாம் செய்கிறார்கள். அல்லது அக்கம் பக்கத்து ஊர்களில் இருப்பவர்கள். இதெல்லாம் தவறென்று நமக்கும் தெரியும். நமக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே தெரியும். இது எதிர்காலத்தில் உண்டாக்கப்போகும் பேராபத்தைப்பற்றியும் நமக்குத் தெரியும். அதைத்தான் சூழலியலாளர்கள் தொடக்கம் சமூக அக்கறையுள்ளோர் அனைவரும் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனாலும் இதைத் தடுப்பதற்கு யாருமே இல்லை. படித்தவர்களாக இருக்கிறோம். பலதையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். அதிகாரிகளாக, கல்விமான்களாக, துறைசார்ந்தோராகப் பலர் இருக்கிறார்கள். நமக்கான தேசத்தைப் பற்றிக் கனவு வேறு காண்கிறோம். ஊர்களில் கிராம முன்னேற்றச் சங்கம், சனசமூக நிலையம், விளையாட்டுக்கழகம், இளைஞர் கழகங்கள், மாதர் சங்கங்கள், ஆலய நிர்வாகங்கள், ஆன்மீக சபைகள் என ஏராளம் பொது அமைப்புகள் எல்லாம் இருக்கின்றன. இப்படியெல்லாம் இருக்கும்போது இந்தப் பகற் கொள்ளை நடக்கிறது.  மண்கும்பானில் தொடர்ந்து மணல் அகழ்ந்தால் மண்டைதீவு உட்பட அல்லைப்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்கள் எல்லாமே முற்றாகப் பாழடைந்து விடும் என்கிறார் புவியியற் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை. இதேநிலைதான் மணல்காட்டிலும். மணல்காட்டை இப்பொழுது போய்ப் பாருங்கள். அங்கே மணலுமில்லை. பனைகளும் கடலோரக் காடுகளுமில்லை. எல்லாமே பாழாகி, அந்த நில அமைப்பே கெட்டு விட்டது. இனி அந்தப்பிரதேசம் முழுவதும் உவராகி விடும். மணல் ஒன்றும் பெருகி நிரவுவதில்லை. அல்லது மரம், செடியைப்போல வளர்வதில்லை. ஒரு அளவுக்கு மேல் மணலை அகழ்ந்தால் நிலப்படிகத்தின் தன்மையே மாறி விடும். அது சுற்றயலையே கெடுத்து விடும். இது விஞ்ஞானபூர்வமான உண்மை.  இப்படித்தான் குடாநாட்டின் களப்புக்காடுகளும் அழிக்கப்படுகின்றன. களப்புக் காடுகள் (அலையாத்திக் காடுகள்) அந்தக் களப்புகளில் உள்ள உயிரினங்களுக்குப் பாதுகாப்பும் அவற்றின் உயிர் வாழ்வுக்குமானது. இந்தக் களப்புகள்தான் நம்முடைய சூழலை உயிர்ப்புடன் –ஈரலிப்புத்தன்மையுடன் வைத்திருக்கின்றன. இந்தக் காடுகள் இயற்கை அழகு மட்டுமல்ல, இயற்கையின் வளமுமாகும். இவற்றை அழித்து விட்டால் களப்புகளின் தன்மையே மாறி வெறும் நீர் வெளியாகி விடும். காலப்போக்கில் அந்த நீர்வெளி சேற்றுப் பரப்பாகி நாற்றமெடுக்கத் தொடங்கி விடும். பிறகு களப்புகள் மட்டுமல்ல, அதை அண்மித்த பகுதிகளும் கெட்டு விடும்.  இதே நிலைதான் யாழ்ப்பாணத்தில் உள்ள பனைகளுக்கும் ஏற்பட்டுள்ளது. ஒரு காலம் பனையில் தங்கியிருந்த வாழ்க்கை இன்றில்லை. முன்பு பனையிலேயே யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை மையம் கொண்டிருந்தது. பெட்டி, கடகம், பாய், பட்டை, உமல், தூக்குப் பை, ஓலை, மட்டை, கிழங்கு, ஊமல், பனாட்டு, ஒடியல், புழுக்கொடியல், மரம், சலாகை என்று நூறுக்கு மேலான தேவைகளைப் பனை நிறைவேற்றியது. இப்பொழுது அது மாறி விட்டது. என்பதற்காக பனைகளை முற்றாகவே அழிக்கத் துணிந்து விட்டார்கள் எல்லோரும்.  ஆனால், “யாழ்ப்பாணத்தின் ஒரே காடு, மரங்களின் தோப்பு பனைகள்தான் என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பனை விஞ்ஞானி. இந்தப் பனைகளை இழந்தால் நிச்சயமாக யாழ்ப்பாணம் பாலையாகி விடும்” என்று எச்சரிக்கிறார் அவர்.  அவர் சொல்வது உண்மையே. யாழ்ப்பாணத்தின் காடு மட்டுமல்ல, யாழ்பாணத்தின் முகம், யாழ்ப்பாணத்தின் அடையாளம், யாழ்ப்பாணத்தின் வளம் எல்லாமே பனைதான். அந்தப் பனைக்குக் கேடு வரும் என்றால் அது யாழ்ப்பாணத்துக்கான கேடுதான்.  இப்பொழுதே யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீருக்குப் பெரிய பிரச்சினை. இருக்கின்ற நிலத்தடி நீரும் கெட்டு விட்டது. அதை எப்படிச் சீர்ப்படுத்துவது, மேம்படுத்துவது என்று யாருக்குமே தெரியவில்லை. ஏற்கனவே பல இடங்களில் நல்ல தண்ணீருக்குப் பெரிய பிரச்சினை. தீவுப்பகுதிகள், வடமராட்சி, வலிகாமம் மேற்கில் சில பகுதிகள், தென்மராட்சியில் சில பிரதேசங்களில் எல்லாம் நீர்ப் பிரச்சினை உண்டு.  இந்தத் தண்ணீர்ப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு – யாழ்ப்பாணத்துக்கு – எங்கே இருந்து தண்ணீரைக் கொண்டு வருவது என்று யாருக்குமே தெரியவில்லை. கிளிநொச்சியில் உள்ள இரணைமடுக்குளத்திலிருந்து தண்ணீரைக் கொண்டு வரலாம் என்று திட்டமிட்டார்கள். இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனைப் பெற்று 23000 மில்லியனில் குளத்தை விரிவாக்கிக் கட்டினார்கள். நீரின் கொள்ளளவு கூட்டப்பட்டது. ஆனாலும் அங்குள்ள விவசாயிகள் நீரைத் தர முடியாது என்று சொல்லி விட்டார்கள். விவசாயிகளுக்கு செடில் குத்தி உஷாரேத்தி ஆட விட்டிருக்கிறார்கள் சில அரசியல்வாதிகள். எனவே அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.  இதற்குப் பதிலாக ஒரு மாற்று வழியைக் கண்டு, மருதங்கேணி –தாளையடியிலிருந்து கடல் நீரைச் சுத்திகரித்து, நன்னீர் விநியோகத்தைச் செய்யலாம் என்றொரு மாற்றுத்திட்டம் உருவாக்கப்பட்டது. அதுவும் நிறைவேறவில்லை. புதுக்காட்டுச் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் பொருத்தப்பட்ட நீர்க்குழாய்களில் மூன்றாண்டுகளுக்கு மேலாக நிரம்பி வழிகிறது காற்று.  இனப்பிரச்சினையைத் தீர்த்தாலும் இந்தத் தண்ணீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது போலிருக்கு என்கிறார் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்.   யாழ்ப்பாணத்துக்கான தண்ணீரைப்பற்றிச் சிந்திப்பவர்களில் சிவச்சந்திரன் முக்கியமானவர்.  சிவச்சந்திரன் இன்னொன்றையும் சொல்கிறார். “யாழ்ப்பாணக் குடாநாட்டில் மிஞ்சியிருக்கும் ஒரேயொரு காடு இயக்கச்சி –பளைப்பிரதேசத்தில் உள்ள காடுதான். அதை என்ன பாடுபட்டாவது நாம் காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் யாழ்ப்பாணம் பாலையாகிவிடும்” என்று. இப்பொழுது அந்தக் காடும் அழிக்கப்படுகிறது. ஏறக்குறைய இனி அங்கே காடே இல்லை என்றாகி விட்டது. இதில் வனவளப்பிரிவுக்கும் நிலச் சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் அரச காணிகளில் உள்ள காடுகளே அதிகமாக அழிக்கப்படுகின்றன. ஏறக்குறைய 4000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள காடுகள். இதைத் தடுத்து நிறுத்துவார் யாருமில்லை. உரிய தரப்புகள் என்று சொல்லப்படும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு, பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், மக்கள் பிரதிநிதிகள் என்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் போன்ற எல்லாத்தரப்புகளுக்கும் இதைப்பற்றி எடுத்துச் சொல்லியும் எதுவும் நடக்கவில்லை. வேலியே பயிரை மேய்ந்தால் யார் தான் என்ன செய்ய முடியும்? காடழிப்பு, மணல் அகழ்வு, மரக்கடத்தல் போன்றவற்றில் பெரிய கைகளே சம்மந்தப்பட்டுள்ளன என்பது ஊரறிந்த சேதி.  எனவேதான் நாமும் சொல்கிறோம், யாழ்ப்பாணம் பாலையாகிக் கொண்டிருக்கிறது என்று. இந்தப் பாலையில் சோலையைக் காண்பது எப்படி? பாலையில் வாழ்வை நடத்துவது எப்படி? நாம் வீடுகளையும் கோயில்களையும் கல்யாண மண்டபங்களையும் பென்னாம்பெரிய மாடங்களையும் பிரமாண்டமாகக் கட்டலாம். பாலையில் எப்படி வாழ்வது?  பாலையில் அபாய மணிகள் நம்முடைய காதுகளில் கேட்கிறது. தயவு செய்க, செவி கொள்க!    https://arangamnews.com/?p=4978  
    • வழக்கமான எதிர்க்கருத்தாளர்கள் இப்படித்தான் சொல்கிறார்கள் ஆனால் காறி  துப்புவது தமிழ் மேல்தான் என்பதை விளங்குகிறார்கள் இல்லை நீங்களும் நான் அவதானித்ததில் அந்த பத்தில்  ஒன்றுதான் . புலியை  தமிழை எதிர்த்து கொள்வது ஒருவிதமான மனஆற்றுதல். புலம்பெயர் தேசங்களில் ஒவ்வொரு காரணம்களில் இங்கு வந்த அனேகருக்கு 45 தாண்டி விட்டது வயது போக நாட்டில் நடந்த போராட்டமும் மவுனித்து  போன பின் ஊரில் நேரே போனவர்களில் பலருக்கு அங்கு நடந்த உண்மைகளையும் அவர்கள் மனதில் கட்டி இருந்த பிம்பமம் வேறு வேறாக போன அதிர்ச்சியை தங்க முடியாமல் புலி எதிர்ப்பு வாதிகளாக திரும்ப விமானம்களில் வந்து இறங்கும்போது மாறி இருந்தார்கள்  கடும் அதிர்ச்சியை தாங்க  முடியாமல் பயித்தியம் ஆன  கதை போல் .😃 ஆனால் உண்மை அப்படியொன்று நடக்கையில் சிங்களவன் தமிழர்களை தங்க தட்டில் வைத்து கவனிக்க மாட்டான் பல பாரிய பிரச்சனைகள் வரும் வந்தது வந்து கொண்டும் உள்ளது அதே போல் பாரிய  கொடுமைகளும்  உரிமை என்றால் என்ன என்றே தெரியாமல் அங்கு ஒரு சந்ததியே உருவாகும் உருவாகி  உள்ளது . இங்கு நாமதான் முதலில் எழுந்து கொள்ளணும் . எதிரிக்கு நாம மீண்டும் எழுந்து விடக்கூடாது என்பதில் கவனம் சண்டை முடிந்து பத்து வருடமாகி விட்டது இன்னும் கீழே விழுந்து கிடந்து அழுது  கொண்டு கிடக்கிறம் எழுந்து நிற்பவர்களையும் கீழே விழுந்து அழுது கொண்டு இரு அப்பத்தான் ஏதாவது தருவதை தருவார்கள் என்று இலவச ஆலோசனை . புலம்பெயர் தமிழராகிய நாங்கள் முதலில் எழுந்துகொள்ளுவோம் இன்னும் பத்தோ  பதின்ஐந்து வருடம் தான் நாங்க நினைத்த வாழ்க்கை அதன்பின் மறதியிலும்  நோயிலும் விழுமுன் . எழுந்து கொள்ள முயற்சிப்பம் . உங்களுக்கு புரியாது என்றால் அப்படியே போங்க ஆனால் எனக்கு உங்களின் கருத்துக்களை விமரிசிப்பதுக்கு உரிமை உள்ளது தொடரும் .
    • தமிழ்நாட்டு அரசியல் எல்லாம் அத்துப்படி ஆனால் ஹரோவில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் இருக்கிறீங்களே!! இந்த முகநூல் பதிவில் உள்ளது.. https://www.facebook.com/635787883455314/posts/1410192879348140/?d=n It's an absolute honour to welcome Harrow's ex-Labour Council Leader, Thaya Idaikkadar, to the Conservative Party today!  
    • அதில் என்ன இருக்கிறது சிந்திப்பதற்க்கு?எல்லாச்சந்தர்ப்பங்களிலும் கருத்தும்.  விருப்பமும்.  ஒன்றாகயிக்க முடியாது. ...இது  புரியாத உங்களுடன்  எப்படி கருத்தாட முடியும்?
    • உங்களுக்கு அதுக்கு மேல் உள்ள வரிகளை படித்து சிந்திக்க முடியவில்லை  கீழே உள்ளதை படித்து விட்டு அழுகிரியல் . உங்களை என் கருத்துக்கு கொண்டுவரமுடியாது ஆனால் என்னை கொண்டுவரலாம் எப்படி என்றால் தமிழனாய் சிந்தித்து கருத்தை இடுங்கள் நானும் உங்கள் ஆள்தான் என்று வருவேன் அதை விட்டு அவ நம்பிக்கையான கருத்துக்கள் உங்கள் இடம் இருந்து தொடர்ந்து வரும் என்றால் நாம நம் வழி .
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.