Jump to content

நேர்காணல்:எவ்வகையினராயினும் அனைவரும் மானுடனாகிய சமூக விலங்கு - பொ. கருணாகரமூர்த்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேர்காணல்:எவ்வகையினராயினும் அனைவரும் மானுடனாகிய சமூக விலங்கு - பொ. கருணாகரமூர்த்தி

பொ. கருணாகரமூர்த்தி, ஈழத்திலிருந்து (புத்தூரிலிருந்து) 1980 இல் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து அங்கேயே வாழ்கிறார்.

ஈழத்தின் புனைகதையாளர்களில் பொ. கருணாகர மூர்த்திக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. கதை சொல்வதில், சுவாரஷ்யத்தை அளிப்பதில் அ. முத்துலிங்கத்தைப்போல வல்லாளர். இவரும் புலம்பெயர் படைப்பாளிகளில் முதன்மை யானவர். வாழ்க்கை எதிர்கொள்ளும் சவால்களை, மனித நடத்தைகள் உருவாக்கும் நன்மை தீமைகளை பொ. கருணா கரமூர்த்தியின் கதைகள் வெளிப்படுத்துகின்றன.

1985இல் கணையாழி நடத்திய தி. ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற “ஒரு அகதி உருவாகும் நேரம்’’ மூலம் கவனிப்பைப் பெற்ற பொ. கருணாகரமூர்த்தி, இன்று தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். இதுவரையில் கிழக்கு நோக்கி சில மேகங்கள் (சிறுகதைத் தொகுப்பு) - ஏப்ரல் 1996, ஒரு அகதி உருவாகும் நேரம் (மூன்று குறுநாவல்கள்) - ஏப்ரல் 1996, அவர்களுக்கு என்று ஒரு குடில் (சிறுகதைத் தொகுப்பு) - 1999, கூடு கலைதல் (சிறுகதைத் தொகுப்பு) - டிசம்பர் 2005, பெர்லின் இரவுகள் - டிசம்பர் 2005, பதுங்குகுழி - சிறுகதை டிசம்பர் 2010 என ஆறு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அநேகமானவை சிறுகதைகளும் குறுநாவல்களும். வாடகை வண்டி ஓட்டும் அனுபவத்தைக் கொண்டு எழுதப்பட்டது, பெர்லின் இரவுகள்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2010 இல் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான தேர்வினை “பதுங்கு குழி’’ என்ற இவருடைய தொகுதிக்கு வழங்கியது. இந்த நேர்காணல் இணையத்தின் வழியே பெறப்பட்டது.

- கருணாகரன்

ஒரு எழுத்தாளரின் உருவாக்கம் பொதுவாக எப்படியான சூழலில் உருவாகிறது? நீங்கள் எத்தகைய சூழலில் எழுதத் தொடங்கினீங்கள்?

வாசிக்கும் பழக்கந்தான் எழுதவும் தூண்டுகிறது. எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் வாசிக்கும் பழக்கம் இருக்கிறது. குமுதம், கல்கி, ஆனந்தவிகடன்,கலைமகளிலிருந்து ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி,லஷ்மி, அசோகமித்திரன் ஆகியோரது பலசிறுகதைத்தொகுதிகளும், நாவல்களும் வீட்டில் இருந்தன. இன்னும் எமது புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்த கல்லூரி நூலகத்திலும் அரிய பலநூல்கள் வாசிக்கக்கிடைத்தன.படித்த பல நல்ல படைப்புகளைவிடவும் , சில மோசமான படைப்புகளே ‘அட இவர்களைவிடச் சிறப்பாக உன்னால் எழுதமுடியுமே’யென என்னைத்தூண்டின. எமது கல்லூரியின் தமிழ்மன்றம் ’புதுவை’என்னும் ஆண்டுமலரை 1974 இல் வெளியிட்டபோது அதில் என் கன்னிப்படைப்பாகிய ’ ஏழை ’ வெளியானது. அப்போது எங்கள் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த எழுத்தாளர் க. சட்டநாதன் அவர்கள் என்னை அழைத்து அக்கதையின் குறைநிறைகளை விவாதித்தார். அதன் பின்னர் குறுநாவல் ஒன்றை எழுதினேன். அதன் பிழிவு இப்படியிருக்கும்.

யாழ்ப்பாணத்தில் நல்ல வசதியான குடும்பத்துப்பெண் ஒருத்தி ஒரு ஓவியனைக் காதலிப்பாள். அந்த ஓவியன் தமிழகத்துக்கு ஒரு ஓவியக்கண்காட்சிக்குச் சென்றிருந்த சமயம் அப்பெண்ணின் பெற்றோர் அவளை ஒரு இஞ்ஜினியர் மாப்பிள்ளைக்கு வலுக்கட்டாயமாகத் திருமணம் முடித்துவைக்கின்றனர்.முதலிரவில் உற்சாகமின்றிச் சோர்வாக இருந்த பெண்ணை மாப்பிள்ளை “ உன் பிரச்சனைதான் என்ன?” என்று விசாரிக்கின்றான். அவள் தன் காதல்கதை முழுவதையும் அவனிடம் சொல்லிவிடுகிறாள். அந்தமாப்பிள்ளையோ அவளுக்குத் தெரியாமல் அந்த ஓவியனுக்குத் தந்திகொடுத்து வரவழைத்து அவர்களைச்சேர்த்து வைக்கிறான். இக்கதையைப் படித்துப்பார்த்த என் சகோதரி ‘தாலியேறிய பின்னால் இன்னொருவனுடன் வாழப் போவதென்பது நடைமுறைச் சாத்தியமில்லை, இது ஒரு சாத்தியமற்ற கதை’ என்று சொல்லி அதை நிராகரித்துவிட்டார். அதன் பின் ஏறத்தாழப் பத்து ஆண்டுகள் எதையும் எழுதவில்லை.

1980இல் புலம்பெயர்ந்து ஜெர்மனி வந்தேன். அங்கே எங்களை ஜெர்மன் அரசு 1982 வரையில் பணிசெய்ய அனுமதிக்கவில்லை. இரவும் பகலும் ஹோட்டல் அறைகளிலேயே மண்டிக்கொண்டு இருந்தோம். அக்காலத்தில் பார்க்கக்கிடைத்த, 1982 இல் பாரதிராஜா - பாக்கியராஜா கூட்டுழைப்பிலான ‘புதியவார்ப்புகள்’ என்னும் சித்திரத்தில், பெண்ணுக்கு (ரத்தி) இஷ்டமில்லாத (ஜி.ஸ்ரீவாஸன்) ஒருவனால் கட்டப்படும் தாலி பிடுங்கி எறியப்பட, பெண் தான் விரும்பியவனையே (பாக்கியராஜ்) கைப்பிடிக்கிறார். அட இதைத்தானே நான் 1975 இல் எழுதினேன் எனும் எண்ணம் நடுமண்டையைக் குடையத் தொடங்கவும் மீண்டும் எழுதச்சொல்லி என் கைகள் பரபரக்கத்தொடங்கின. அடுத்தடுத்து ஏழெட்டுக்கதைகள் எழுதினேன். ஆனால் அவற்றை வெளியிடப் பொருத்தமான பத்திரிகைகள் எதுவும் புகலிடத்தில் வெளிவரவில்லை.தமிழகச்சஞ்சிகைகள் என் கதைகளைப் பிரசுரிக்குமோ என்னும் சந்தேகமும், தயக்கமும் இருந்த தால் என் படைப்புகளை எந்தச் சஞ்சிகைகளுக்கும் அனுப்ப முயற்சிக்கவில்லை. 1984 இல் பெர்லினில் நடைபெற்ற இலக்கியச்சந்திப்புக்கு பேராசிரியர் மு.நித்தியானந்தன், கலைச்செல்வன், கவிஞர் நா.சபேசன், ‘அ ஆ இ’ ஆசிரியர் குழுவிலிருந்து சாள்ஸ் குணநாயகம் ஆகியோர் வருகை தந்திருந்தனர். என் வீட்டுக்கு விருந்தாட வந்திருந்த அவர்கள் என் கதைகளை எதேச்சையாகப் படித்துப்பார்த்துவிட்டு “கதைகள் தரமாகவும், வித்தியாசமாகவும் இருக்கின்றன இவற்றை நீங்கள் தயங்காமல் பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள்” என்று உற்சாகந்தந்தனர். கூடவே கவிஞர் நா.சபேசன் அவற்றுள் ‘கலைஞன்’ என்கிற கதையை உருவி எடுத்து லண்டனுக்கு எடுத்துப்போய் தன்னுடைய ‘பனி மலர்’ பத்திரிகையில் உடனடியாகவே பிரசுரித்தார். அடுத்ததாக நெதர் லாந்திலிருந்து வெளிவந்த ‘அ ஆ இ’ சஞ்சிகையில் ‘தரையில் ஒரு நட்சத்திரம்’ கதை வெளியானது. அடுத்து என் ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ குறுநாவலை துணிவுடன் கணையாழிக்கு அனுப்பிவைத்தேன். அப்போதைய அதன் ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் ‘உங்கள் படைப்பு பிரசுரத்திற்குத் தேர்வாகியுள்ளது, தொடர்ந்து எழுதுங்களென்று’ அடுத்த ‘கணையாழியில்’ சிறுகுறிப்பு எழுதி அனுப்பினார். அந்த ஆண்டின் தி. ஜானகிராமன் நினைவுப்போட்டியில் அக்கதையைஇரண்டாவது இடத்தை கணையாழி அறிவித்தது.

தொடர்ந்து பாரீஸிலிருந்து வெளிவந்த ‘மௌனம்’ ‘அம்மா’ ’ஈழமுரசு’ ’ஈழநாடு’ ஜெர்மனி ‘பூவரசு’ ஆகிய பத்திரிகைகளிலும், கனடா ‘காலத்திலும்’ எனது கதைகள் வெளிவந்தன. இன்னும் லண்டனிலிருந்துபத்மநாப அய்யரின் முனைப்பில் வெளிவந்த இலக்கியமலர்கள் ‘கிழக்கும் மேற்கும்’, ‘யுகம்மாறும்’, ‘கண்ணில் தெரியுது வானம்,’ ‘இன்னொரு காலடி’, 23வது ஐரோப்பிய ‘இலக்கியச்சந்திப்பு மலர்’ ‘இனியும் சூல் கொள்’, ஷோபாசக்தி-சுகனின் தொகுப்பு ‘கருப்பு’ ஆகிய மலர்களிலும், தாமரை, கணையாழி சஞ்சிகைகளிலும் எழுதலானேன். இப்படித்தான் ஆரம்பமாகியது என் எழுத்துப்பயணம்.

‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ முக்கியமான ஒரு படைப்பு. ஈழப் போராட்டம் அல்லது இலங்கை அரசியலின் விளைவாக தமிழ்ச் சமூகத்தின் புலப்பெயர்வு நிகழ்ச்சியை, அதனால் ஏற்படும் குடும்பங்களின் வலியை, நாட்டை விட்டு வெளியேறுவோரின் அவலத்தை, முகவர்களால் பாதிக்கப்படு வோரின் கதையை வெளிப்படுத்திய முக்கியமான படைப்பு. கடந்த காலத்தின் ஈழத்தமிழ் அவலக் கதைகளில் அது வகை மாதிரியாக நிச்சயம் இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. அந்தக் கதையை எழுதிய மனநிலை, சூழல், அந்தக்கதையின் மையம் எல்லாம் எப்படியமைந்தது?

ஐரோப்பாவுக்குள் நுழைவதற்கு 1980 களிலிருந்து 1990 வரை பெர்லின் முக்கிய நுழைவாசலாக இருந்ததை நாம் அறிவோம். காரணம் அந்தக்காலகட்டத்தில் கிழக்கு ஜெர்மனி சுற்றுலாப்பயணிகளுக்கான விசாவை வழங்கிகொண்டிருந்தது. ஐரோப்பாவை நோக்கிப்புலம்பெயர நினைப்போர், அவ்விசாக்களை லேசாக எடுத்துக்கொண்டு கிழக்கு பெர்லினை அடைந்து வேக மற்றும் சுரங்கத் தொடருந்துகள் மூலம் மேற்குபெர்லினை அடைந்துவிடுவர். இது ஒருவகையான நுழைவுத்தி எனலாம். 1989 இல் ஜெர்மனி இணைப்புக்குப்பின்னர் ஜெர்மனிக்கான விசா வழங்கல்முறை முற்றாக நிறுத்தப்பட ஜெர்மனிக்குள் நுழைவதற்கு நம்மவர் பகீரதப்பிரயத் தனம் செய்யவேண்டிய தாயிற்று. வாழ்வு அனுமதியுடைய வேறொருவரின் கடவுச்சீட்டில் நுழைவது, போடிங்காட்டை மாற்றிப் பிரயாணியை விமானமேற்றி விடுவதென எம்மவர் டெக்னிக்குகளும் மாற்றமடைந்தன. இவ்வழிகளில் பயணச் செலவுகள் புலம் பெயர்வோருக்கு முன்னர் இருந்ததை விடவும்மும் மடங்காகியது. வாழ்விட அனுமதியுடைய கடவுச்சீட்டை வைத்திருந் தோர் தமது கடவுச்சீட்டுக்கள் பாவிக்கப்படும் ஒவ்வொரு தடவைக்கும் 10 -15 லட்சமென விலை வைத்திருந்தனர். அக்காலகட்டங்களில் 20லட்சத்திலிருந்து 25 லட்சம்வரை செலவு செய்யமுடிந்தவர்களாலேயே புலம்பெயரமுடிந்தது. 1980களில் பெர்லினூடாகப் புலம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு எனது பெர்லின் அடுக்ககம் ஒரு இலவச தங்கு மடமாகவும், தரிப்பிட மாகவும் இருந்தது. நூற்றுக்கு ஐவர் அதை இன்னும் ஞாபகத்தில் வைத்துக் காணுமிடங்களில் குசலம் விசாரிக்கையில் சந்தோஷமாகவே இருக்கும்.

1988ம்ஆண்டில் நான் பெர்லினில் பணிபுரிந்தேன். அங்கு பணிபுரிய நேர்ந்த கீலீவீtமீ கீமீபீபீவீஸீரீ என்கிற விusவீநீ சிணீயீங த காலத்தில்தான், ‘தரையில் ஒரு நட்சத்திரம்’, ‘சுண்டெலி’ ஆகிய கதைகளை எழுதினேன்.அவ்விடத்தில் அரசு ஒரு பெரிய பல்பொருள் அங்காடியை (விணீறீறீ)ஐ நிர்மாணிக்கமுடிவுசெய்து விusவீநீ சிணீயீமீயின் சொந்தக்காரரிடம் அது இருந்த நிலத்தையும், அயலிலிருந்த நிலங்களையும் வாங்கிவிட நானும் என்னுடன் கூடப்பணிப் புரிந்த சந்திரசேகரன் என்னும் தோழரும் பணியை இழந்தோம். சந்திரனின் ஆலோசனைப்படி பயண முகவராக பணிசெய்து பார்க்கலாமே என்னும் நோக்கத்துடன் நானும் சந்திரனும் சிங்கப்பூர் பயணமானோம். நாம் நினைத்தது போன்று சிங்கப்பூர் சொர்க்கபுரியாக எமக்கு இருக்கவில்லை. பிற முகவர்களால் சிங்கப்பூரிலும், பாங்கொக்கிலும், கொண்டு வந்து விடப்பட்டு அல்லாடிக்கொண்டிருந்த தமிழர்களின் அவலங்கள், பணத்தை முகவர்களிடம் கொடுத்து ஏமாந்து போனவர்களின் சோகங்களைப் பார்த்துக்கொண்டும் எம்மால் ஒரு மூன்று மாதங்கூட எம்பணியில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. திரும்பிவந்தோம். சிங்கை சென்றதன் மூலம் அங்கே சில முகவர்களால் கொண்டுவரப்பட்டு, அம்போவென நடுத்தெருவில் விசாவுமில்லாமல் பணமுமில்லாமல் விடப்பட்டு அல்லாடிய சில சகோதரிகளை ஐரோப்பாவில் கொண்டுவந்து சேர்த்த நிறைவு இன்னமும் இருக்கிறது.

அந்த மூன்று மாத காலத்திலும் சேர்த்துக்கொண்ட அனுபவங்களால் விளைந்தவையே... ‘ஒரு வண்ணத்துப்பூச்சியுடன் வாழமுற்படுதல்’, ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’, ‘மாற்றம்’, ஆகிய படைப்புக்களாகும். ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ படைப்பில் வரும் சட்ட நாதனுடன் நாம்பட்ட அல்லாடல்கள் அத்தனையும் எமது நிஜ அனுபவங் களாதலால், அவ்வனுப வங்களே அக்கதையின் சம்பவங்களையும் இயக்கங்களையும் தத்ரூபமாக அமைப்பதில் உதவியிருக்க வேண்டும்.

ஒரு அகதி உருவாகும் நேரத்திற்கும் தற்போதைய சூழலுக்கும் இடையிலான வேறுபாடுகள், பிந்திய புலம்பெயர்வு, புலம்பெயர் வாழ்வு, மனநிலை, புலம்பெயர் சமூக நிலையெல்லாம் எப்பிடியிருக்கின்றன?

புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை நிலை அச்சிலும் காலத்தை கிடை அச்சிலுமாக வைத்து ஒரு வரைபை வரைந்தோமாயின் அவ்வரைபு ஒரு சைன் வரைபில்கிடையான ‘எஸ்’ வடிவத்தில் அமைந்திருப்பதைக் காணலாம். 1980களில் தாராளமாக இலகுவாக பெர்லினூடு நுழையமுடிந்தது என்று ஏற்கனவே கூறியிருந்தேன்.

ஐந்திலிருந்து பத்துவரையிலான பயணிகளுடன் பயணமுகவர்களும் சேர்ந்துவந்து எல்லாக் கண்டாயங்களையும் கடந்து வந்து மேற்கு பெர்லின்வரையும் கொண்டுவந்து இறக்கி விட்டுத் திரும்பவும் கொழும்பு சென்றுவிடு வார்கள். பணத்தின் ருசிகண்டவர்களுக்குப் பாமரமக்கள் பலர் இரையானார்கள். இம்முகவர்கள் ஒவ்வொரு பயணிகளிடமும் தமது பயணச்சீட்டுக்கான பணத்தையும் தனியாக உருவிக்கொண்டார்கள்; ஜெர்மனிபோய் இறங்கின உடனே வேலைதானேயென ஆசை காட்டி ஆட்களை அழைத்து வந்தவர்களு முண்டு.

1980 ஜூலை மாதம், இலங்கையிலிருந்து வரும் தமிழ் அகதிகள் அனைவரும் பொருளாதார அகதிகள். எனவே அவர்களுக்கு இங்கே வேலை செய்ய அனுமதி இல்லை என்று அறிவித்தது ஜேர்மனி. அவ்வறிவிப்பால் அகதிகளின் படையெடுப்பு அலை கொஞ்சம் தணிந்தது உண்மை. 1982ம்ஆண்டு அப்போதைய பாராளுமன்ற உறுப் பினர் அமிர்தலிங்கம் மகனைப் பார்க்க லண்டன் வந்தவர், திரும்பிப்போகும் போது ஜெர்மனி, பிரான்ஸினூடாக ஒரு சுற்றுச்சுற்றிக்கொண்டு தாயகம் திரும்பினார். உடனேயே ‘அமிர்தர் போய்க் கதைச்சிட்டு வந்திருக்கிறார், இனித்தமிழர்கள் அங்கே போயிறங்கின உடனே வேலைதான்’ என்றொரு புரளியை கொழும்பின் பயணமுகவர்கள் கிளப்பிவிட, வாரத்துக்கு இரண்டு சார்டேர்ட் விமானங்களில் நிரம்பிக் கொண்டு தமிழர்கள் மீளவும் வந்து குவிந்தார்கள்.

யாழ் மாநகர சபையில் உயர்மட்ட அலுவலராகப் பணிபுரிந்த, நான்கு பெண்குழந்தைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் பயணமுகவரின் ஆசைவார்த்தைக்கு எடுபட்டுப் பணியைத் துறந்துவிட்டு புறப்பட்டு இங்கே வந்துவிட்டார். னுழஅவைசல ஹொட்டல்களில் அடுக்குக் கட்டில்களில் இரண்டாண்டுகளாக வேலை யில்லாது வெட்டியாகபடுத்திருந்தவர் களைப் பார்த்தவருக்கு பேரதிர்ச்சி. அவருக்கு ஆறுதல் சொல்லி மறு வாரமே செஞ்சிலுவைச் சங்கம் மூலம் விமானச்சீட்டு எடுப்பித்து ‘போய் ஊரிலுள்ள உமது தொழிலையே பாருமைய்யா’என்று அனுப்பி வைத்தோம். இவரைப்போலவே தொழிலைவிட்டு, விட்டுவந்த மறுவாரமே விமானமேறி மீண்டவர்கள் பலருண்டு.

சமூக சேவை அலுவலகங்களில் வந்திறங்கும் ஜனத்தொகைக்கு ஈடுசெய்யும் எண்ணிக்கையில் நிஜமாகவே ஹொட்டல்கள் இல்லாதிருக்க அவர்கள் அகதிகளிடமே ஹொட்டல்களுக்கான பணத்தைக் கொடுத்து ‘நீங்களே உங்களுக்கான ஹொட்டல்களைத் தேடிக்கொள்ளுங்கள்’ என்று விட்டுவிட்டார்கள். அத்தனை பணத்தைக் கொண்டு போய் ஹொட்டலில் கொடுத்து அறைகளை வாடகைக்கு எடுத்துத் தூங்க எம்மவருக்கு என்ன பைத்தியமா? சனம் கிவிணிஸிமிசிகிழி-ணிஙீறிஸிணிஷிஷி ஐக் கண்டுபிடித்து அதன்மூலம் கிடைத்த பணம் அவ்வளவையும் ஊருக்குத்தள்ளிவிட்டு குடும்பம் குடும்பமாக ஞீஷீஷீறீஷீரீவீநீணீறீரீணீtமீஸீ தொடருந்து நிலையத்தை ஆக்கிரமித்தார்கள். அதுதான் அத்தனை பேரையும் உள்ளடக்கக்கூடிய கூரையும், உஷ்ணமுமுள்ள ஒரே நிலையம். 500, 600 பேர் தொடருந்து நிலையத்தின் பொதுத்தரை முழுவதையும் ஆக்கிரமித்திருக்க ஜெர்மன்காரர்களுக்கு ஒன்றுமாகப் புரியவில்லை. எதுக்கு இத்தனை பேர் வந்திருக்கிறீர்கள்? எப்படி வந்தீர்கள்? உங்கள் உயிருக்கு பயமுறுத்தல் ஆபத்து ஏதும் உண்டா? உங்கள் பிரச்சனை தான் என்ன? எனப் பத்திரிகைகளும் சூழ்ந்து கொண்டு துருவத்தொடங்கினார்கள். ஆங்கிலம் பேசத்தெரிந்த சில பேரறிவாளர்கள் திருவாய் மலர்ந்து. “சாச்சாய்... எங்களுக்கு அப்பிடி உயிரா பத்தான பிரச்சனைகள் என்று ஒன்றுமில்லை... இந்தப் பயண முக வர்கள்தான் எங்களுக் கிங்கே போனவுடன் வேலை கிடைக்கு மென்று ஆசைகாட்டிக் கூட்டி வந்து இறக்கி விட்டார்கள்.” என்றார்கள்.

“யார் அந்தப் பயணமுகவர்கள்” என்றால் அவர்கள் என்ன இவர்களுடன் ஒட்டிக்கொண்டா இருப்பார்கள்? அனைவரும் மாயமாய் மறைந்திருப்பர்.

அரசுப்பணிகளில் இருந்த சிலரும், தனியார் ஸ்தாபனங்களில் பணிபுரிந்தவர்களுள் சிலரும் தாம்தாம் போட்டுவந்த மீள்பயணச் சீட்டுக்களிலேயே நாடு திரும்பினர். அப்படி நாடு திரும்ப விமானத்துள் ஏறியிருந்த ஒருவரை ஜெர்மனியின் மூத்தபத்திரிகையாளர் ஒருவர் செவ்வி கண்டார்: “கடைசியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” அவரும் அலம்பினார்: “நேஎநச யபயவீஸீ கழசநபைஸீ உழரவெசநைள வீஸீஅல டுகைந”. இருந்தும் ஜெர்மன் அரசு அப்போது எவரையும் புலம் பெயர்ந்தவரின் ஒப்புதலின்றித் திருப்பி அனுப்பவில்லை. எண்பத்துமூன்றில் இனக்கலவரம், வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகளின் பின்னால் அரசின் கரிசனையும் அனுதாபமும் எம்மீது விழுந்தது. 1983ஐ அடுத்து வந்த ஆண்டுகளில் மிகக்குறைவானவர்களே திருப்பி அனுப்பப்பட்டனர். அகதியாக வந்து அகதி விண்ணப்பங்கள் செய்தவர்களின் 97 வீதமானவர் களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 1984களின் பின்னர் அகதிகள் மெல்லமெல்ல புதினப்பத்திரிகை விநியோகம், உணவகங்களில் (அநேகமாக குசினியில்) உதவியாளர்கள் போன்ற சிறுபணிகள் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். தமிழர்கள் நகரத்தில் அவ்வப்போ நலன்புரி சங்கங்கள், கல்விக்கழகங்கள், தமிழாலயங்களின் ஏற்பாட்டில் இடம்பெறும் கலை நிகழ்ச்சிகளிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினங்களிலும், அரங்கேற்றங்களிலும்,தம் சந்திப்புக்களை ஏற்படுத்திக்கொள்ளுவர். தமிழீழ விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியின் பின்னர் ஈழக்கனவுகள் கலைந்ததுடன் ஒருவகைச் சோர்வுடன் அவர்கள் இயங்குவதும் நிஜமே.

ஒரு விதேசத்தில் குடியேறும் விதேசிகளின் கலத்தலை அல்லது ஒரு சிறுபான்மைச்சமூகம் பெரும் பான்மையினரால் உள்வாங்கப்படுதலை விணீ அடையவ ழைஸீ அதாவது நுழைதல், கலத்தல், உள்வாங்கப்படல் என 3 அவஸ்த்தை நிலைகளில்

சமூக ஆய்வாளர்கள் குறிப்பிடுவார்கள். குறுந்திணை சொல்வதுபோலும் மழைநீரும் செம் புலப்புயநீரும் ஒன்றாகக் கலந்தோடுவதுபோன்ற கலத்தல் உலகில் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே நிறம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, விழுமியங்கள் அனைத்தையும் கொண்டிருந்தும் தமிழர்கள் நாம் இன்றும் தாயகத்தில் ஒன்று கலந்திருக்கிறோமா. ஊர், குறிச்சி, பேர், சமயம், சாதி, கோத்திரம், பரவணி என்று பிரிந்துதானே இருக்கிறோம். மலையகம், மட்டக்களப்பு, வன்னி, யாழ்ப்பாணம் என்று இயங்கும் பேதம்போல் இங்கும் தமிழர்களுக்கேயான அந்தகுழு, ஊர், சாதி, சமயமென்றான வட்டங்களுள் வாழும்போக்கும், சாமத்தியச் சடங்குகள், சீட்டுப்பிடித்தல்கள் என்ற வாழ்வுமுறையே இன்னமும் தொடர்கிறது.ஜெர்மானியருடன் அல்லது வேறுபிறநாட்டவருடன் திருமணபந்தங்கள் ஏற்படுத்திக் கொண்ட தமிழர்கள் 1மூ என்றாலே அது மிகை. ஜெர்மானியரும், ஜெர்மன் அல்லாதோர் பலரும் இன்னமும் என்னிடம்“எதற்கு நீ ஜேர்மனியில் இருக்கிறாய் ”என்று உசாவுவதுண்டு. “வேறு போக்கிடம் இல்லாததால் ” என்பேன்.

இன்று புலம்பெயர் தமிழ்ச் சமூகம் என்ற அளவில் பல நாடுகளில் ஈழத்தமிழர்கள் செறிவாகியுள்ளனர். இவர்களுடைய அரசியல், கலாச்சாரம், வாழ்க்கை, எதிர்காலம் குறித்த உங்களின்அவதானங்கள் என்ன?

நம் நாட்டின் வாழ்க்கைமுறை போலவேதான் அநேகமானோருக்கு இங்கும் பொருளாதார நெரிசலுடன் கூடிய வாழ்க்கை. வீட்டைத்திருத்த, தளபாடங்கள், குளிர்சாதனப்பெட்டி, உடைகழுவும் சாதனம், அல்லது மகிழுந்தொன்றை வாங்க வங்கி யில் கடன் எடுத்திருப்போம். அதற்கான பிடித்தங்கள், வாடகை, மின்சாரக் கட்டணங்கள், எல்லாம்போக மிகச் சொற்பப்பணம் கைக்குக் கிடைக்கும், கிடையாமலும் விடும். மாதம் முடிய ஏதாவது எஞ்சினாலும் பிரதிமாதமுமுள்ள ஏனைய செலவுகளைச் சரிக்கட்ட அல்லாடவேண்டும். குளிருக்கான ஜக்கெட்டுக்கள் பழசாகிவிட்டாலோ, சப்பாத்துக்கள் தேய்ந்து நிலத்தைத் தொட்டாலோகூட அடுத்த மாதம் வாங்கலாம், அடுத்த மாதம் வாங்கலாமென்று பின்போட்ட படியிருப்போம். ஒன்றைச்செய்தால் ஒன்றை இழக்கவேண்டியிருக்கும். அதிகமானவர்களுக்கு அடிக்கடி குடும்பத்துடன் தாய்நாட்டுக்கே வந்து போகமுடியாமலிருப்பதே இப்பொருளாதார நெருக்கடிகளால் தான். ஒரு சிறு விகிதத்தில் கணவனும் மனைவியும் வேலை பார்க்கும் குடும்பங்கள் அல்லது வியாபாரம்போன்ற முயற்சிகளில் அதிக வருமானமீட்டுவோர் பொருளாதார விதிவிலக்காகவும் உள்ளனர். ஒருவருக்கு பணியில்லாதபோதிலும் சமூக உதவிகள் சிறகத்தினால் வழங்கப்படும் ஆகக்குறைந்தசமூக (பொருளாதார) உதவிகள், மருத்துவம், குழந்தைகளுக்கான கல்விமுறையில், கல்விகற்றோருக்கான வேலை வாய்ப்புக்களில் சுதேசி-விதேசி பாரபட்சமின்மை அபேதம் போன்ற அனுகூலங்கள் உள்ளமையை ஒத்துக்கொள்ளவே வேண்டும்.

பொதுவாக புலம் பெயர்ந்தவர்கள், பெயராதவர்கள் அனைவருக்கும் தமிழினத்தின் அரசியல், கலாச்சாரம், வாழ்க்கை அதன் எதிர்காலம் குறித்த ஒரு பயம் ஈழப்போரின் தோல்வியின் பின்னர் அதிகரித்திருப்பதை உணரமுடிகிறது. ‘நினைவில் காடுள்ள விலங்கு’ என்று ஒருசொற்றொடர் உண்டு. அதாவது ஒருவன் எந்த ஒரு கண்டத்தில்தான் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தனது மொழி பண்பாடு, கலாச்சாரம் எதையும் மறந்து வாழ்ந்துவிடமுடியாது. இதற்கு யூதர்களையும், முஸ்லிம்களையும் பலர் முன்னுதாரணமாகச் சொல்லு வார்கள். பாலைவனத்தில் நின்றாலும், சந்திரனில்தான் இறங்கி நின்றாலும் தொழுகைநேரம் வந்துவிட்டால் அவன் தொழுகைப்பாயை எடுத்துக்கொண்டு போய்விடுவான்.

தமிழீழ விடுதலைப்புலிகளிடம் குறைகள், நிறைகள், அரசியல் யுக்திகளில் தப்புகள், தவறுகள் பல இருந்தபோதிலும் தமிழர்களுக்காகப் போராடக்கூடிய மாபெரும்சக்தி என இருந்தனர். என்றைக்கும் அவர்கள்தான் எமது மீட்பர்கள் என்பதை நம்பிக்கொண்டு புலம் பெயர் தமிழர்களில் 80 விதமான பேர் அவர்களுக்கு ஆதரவளித்துக் கொண்டு இருந்தனர்.ஆனால் விடுதலைப்புலிகளின் தோல்விக்குப் பின்னர் பலருடைய எண்ணமும் தாம் அரசியல் அநாதைகளாகப் போய்விட்டதான சலிப்புடன் இருப்பதைத்தான் அவதானிக்க முடிகிறது. இன்னொருவகையில் சொன்னால் தமிழர்களின் சிறிய கட்சிகளோ, அல்லது சிங்களப் பெரிய கட்சிகளின் அரசியலினா லேயோ தமிழர்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை என்பதை ஒவ்வொரு தமிழரும் நம்புகிறார் கள். ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ என்னும் அமைப்பின் உருவாக்கம் கூட தமிழனுக்கு நல்லது நடக்குமா என்கிற ஆதங்கத்தில் அமைந்தது தான். இன்று அவர்களும் தமக்குள் ஒற்றுமையாக இல்லை. ஒருகூறு பிரிந்து வேறுதிசையில் நோக்கிக் கொண்டிருக்கிறது. தனிநபர்களின் முயற்சிகளால் மேலெடுக்கப்பட்ட சமூக நலன்புரியக்கூடிய அசைவியக் கங்கள் புலிகளால் மெல்ல மெல்ல உள்வாங்கப்பட்டன.

தனிப்பட்ட முயற்சியாலும், கூட்டுச்சேர்ந்தும் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப் பாட சாலைகள், வானொலிகள், கோவில்கள், சங்கங்கள் என சமூக ஊடாட்ட அமைப்புகளையெல்லாம் புலிகள் அமைப்பு மெல்ல மெல்லக் கையகப்படுத்தியது. இந்த கையகப்படுத்தல் தொலைக்காட்சிவரை போய்ச் சேர்ந்தது பழையகதை. இடதுசாரிச் சிந்தனைகொண்ட பலரால் அங்கங்கே சிறுபத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டன. புலிகள் புகழ் பாடும் பத்திரிகைகளும் இருந்தன. சிறுபத்திரிகைகள் பலவும் புலிகளை விமர்சிப்பதோடு அரசு, மற்றைய இயக்கங்கள், பேரினவாதக் கட்சிகள், தமிழ்க் கட்சிகள், ஜேவிபி என அரசியல் சக்திகளையும் விமர்சித்தன. முஸ்லிம் மக்கள்மீதான தமிழ் இனவாத செயற்பாடுகள் பற்றியும் பேசின. இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசின் தலையீடு மற்றும் அதன் இராணுவத் தலையீடு என்பன பற்றியும் பேசின. அத்தோடு தாம் வாழும் நாடுகளில் முகங்கொடுத்த நிறவெறி, பண்பாட்டுப் பிரச்சினைகள் என்பனவும் அவைகளின் பேசு பொருளாக இருந்தன. சாதி ஒடுக்குமுறை, பெண் ஒடுக்குமுறை போன்ற சமூக ஒடுக்குமுறைகள் பற்றியும் அவை பேசின.குழந்தை வளர்ப்பு, தமிழ்க் கல்வி முறைமைகள், மதம் பரப்பும் அமைப்புகள், பண்பாட்டின் பெயரில் நடந்த கொண்டாட்டங்களின் விகாரங்கள் என்பன பற்றியும் பேசின. பெண்ணியச் சிந்தனைகொண்டவர்களால் பெண் கள் வட்டம், நமது குரல், கண், ஊதா, ஊடறு, சக்தி போன்ற பெண்கள் சஞ்சிகைகள், பெண்கள் சந்திப்பு இலக்கிய மலர்கள் பெண் களின் முழுமையான உழைப்புடன் வெளிவந்தன.இந்த பன்முக உள்ளடக்கம் கொண்ட சிறுபத்திரிகையாளர்களினதும், அதன் வாசகர்களினதும் சந்திப்பு என்பது ஒரு பன்முகப் பார்வைகளுடனும் வித்தியாசங்களுடனும் சந்தித்து உரையாடும் களமாக இலக்கியச் சந்திப்புக்கள் இருந்தன. அதில் புலிகள் உட்பட எவரும் பங்குகொள்ளவும் கருத்துச்சொல்லவும் கோட்பாட்டளவில் வாசல்கள் திறந்திருந்தன.

புலம்பெயர் தேசத்தின் அரசி யல் என்று சொன்னால் ஆங்கிலம் பேசும் கனடாவிலும், அவுஸ்திரேலியா விலும், ஐக்கிய இராச்சியத்திலும் தவிர ஏனைய ஐரோப்பியாவில் வாழும் தமிழர்களுக்கு (குறிப்பாக ஜெர்மன், பிரான்ஸ்) அவ்வந்நாடுகளின் அரசியலுடன் பெரிய அளவில் ஈடுபாடு கிடையாது. மிகமிகக் குறைந்த வீதத்திலேயே அவ்வந்த நாட்டின் இடதுசாரி, பசுமை மற்றும் மாற்றுக்கட்சிகளில் இணைந்து பணியாற்றும் தமிழர்கள் உள்ளனர். இரண்டாந்தலைமுறையினருள் அரசியலைக்கற்கும் மாணவர்களிடம் உள்நாட்டு அரசியல் ஈடுபாடிருப்பதை கொஞ்சம்போல அவதானிக்க முடிகிறது. ஆனாலும் அவர்களின் எண்ணிக்கை சொல்லிக்கொள்ளும் படியாயில்லை.

கலாசாரம் எனும்போது அதனுடன் எப்போதும் சேர்ந்து வரும் பிறிதொரு வார்த்தை பண்பாடு என்பது.

அறிவுசார் தளத்தில் பார்க்கும் போது இரண்டுக்குமிடையில் பண்பாடு - கலாச்சாரம் இரண்டு விஷயங்களுக்கும் உலகம் பூராவும் ஆயிரம் வரைவிலக்கணங்களும் விளக்கங்களும் இருந்தாலும் நான் இரண்டுக்கிடையேயும் ஒரு நூல்போன்ற இடைவெளியிருப்பதை உணர்கின்றேன். மனிதன் உலகத் தின் எந்த மண்மேடையில் வாழ்ந்தாலும் அவனது ஆழசயடள களின் ஏறுமுகத்தை அதன் உச்சக்கட்ட வளர்ச்சியை அல்லது மனிதன் என்கிற வகையில் மா மனிதனாவதின் திசையில் பண்பாட்டின் வளர்ச்சி பரிணாமமடைவதைக் காணலாம். இது ஆதியானதும் மனிதனின் இயல்பூக்கமும் சார்ந்த ஒரு படிநிலை.

பொதுவாக ஒரு சமூகம் வாழும் முறை, சம்பிரதாயங்கள், உணவு, உடை, பாவனைகள், பழக்க வழக்கங்கள், நடைகள் இவற்றைத் தொகுத்தால் அவை அச்சமூகத்தின் பண்பாடு எனக் கொள்வோமாயின் நான்வாயைத்திறந்து வைத்துச் சாப்பிடாமல் இருப்பது, பிறர் முன்னிலையில் மூக்கினுள் விரலை நுழைக்காமல் இருப்பது, பெரியவர் ஒருவர் வந்தால் எழுந்து அவருக்கு வணக்கம் சொல்வது எனது சம்பிரதாயம்,என் பண்பாட்டின் வளர்ச்சி, செம்மை, மனதின் வளம் வளர்த்தெடுப்புடனும் (ஊரடவரசந,) அறிதலுடனும் நேர்விகித சமனாகச்செல்லும்.

பண்புகளைப் பிணிக்கும் மனிதன் கலைகளை வரித்துக்கொள்வது இரண்டாவது நிலை. ஆங்கிலத்தில் ஊரடவரசந என்பதற்கு நாம் உயர்விளைச்சலுக்கான பண்படுத்தல், வளப்படுத்தல் என்று அர்த்தம் கொள்வோமாயின் மனிதமன மும் கலைகளும் சிuறீtuக்ஷீமீ உடன் பிணிப்புக்குள்ளாவதையும் பரிணாமமடைவதையும் ஒத்துக் கொண்டேயாகவேண்டும். கலைகளின் ஊரடவரசந அவற்றுக்கு நியமங்களைத்தருகின்றன. அதாவது மரபார்ந்த கலைகளும் பரிணாமத்துக்கும் அதன் நியதிகளுக்கு மாளாகின்றன. காலத்தோடு மாற்றி அமைத்துக்கொள்ளப்படுகின்றன, செம்மைப்படுத்துகின்றன, செவ்வியதாகின்றன. அதைத்தான் நான் கலச்சாரம் என்பதாகப் பார்க்கிறேன்.

மண்மேட்டுக்கு மண்மேடு, மானுட குழுமத்துக்கு குழுமம், கலைக்குக் கலை அதற்கு வரம்புகள் நியமங்கள் இருப்பதைப்போல், அவர்தம் கலைகளின் நியமங்களில் திரிபுகள் இருப்பதுவும் நியதி. ஆனாலும் புத்தனுக்கு வள்ளலார் எப்படித் தாழ்ந்தவர் இல்லையோ கலாச்சாரத்திலும் உயர்ந்ததும் தாழ்ந்ததும் கிடையாது. பண்பாட்டின் தாக்கம் மனிதனின் உறவுகள், மொழி, உடை, வாழ்மனைகள் அனைத்திலும் பாய்வதும் நியதியே.

ஈழத்தைவிடவும் கவின்கலைகளின் குருமார்கள், குருத்தினிகள் எண்ணிக்கையளவில், விகிதாசாரத்தில் புலம்பெயர்நாடுகளில் அதிகமாக உள்ளனர். மத்திய, உயர் மத்தியதரக் குடும்பங்களுக்கே கிடைக்கக் கூடிய கௌரவப் படிப்பாக, ஈடுபாடாக இருந்த நுண்கலைகள் இங்கே ரொம்பப் பொதுமைப்படுத்தப்பட்டுவிட்டன. கவின் கலைகளின் இரண்டாந்தலைமுறை ஆசிரியர்களே உருவாகிவிட்டனர். பெர்லினைப் பொறுத்தமட்டில் 5 ஈழத்து ஆசிரியர்களும் 4 தமிழக ஆசிரியர்களும், அநேகமாக இந்தியாவிலிருந்து அவ்வப்போ வருகை தரும் ஆசிரியர்களும் 150 வரையிலான மாணவர்களுக்கு இசை, நாட்டியம், மிருதங்கம், தபேலா, வயலின் என்பனவற்றைப் பயிற்றுவிக்கிறார்கள். ஐக்கிய இராச்சியத்தில் இவ்வெண்ணிக்கை இன்னும் அதிகம். அங்கே கவின்கலை வகுப்புகள், பரீட்சைகள், அரங்கேற்றங்களும் ஒப்பீட்டளவில் மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட அதிகம். புலம்பெயர் நாடுகள் முழுவதிலும் சினிமாப் பாடல்களை நகல் எடுத்துப்பாடுவதும், சினிமா நடனங்களை நகலெடுத்து அரங்கேற்று வதிலுங்கூட இளசுகளின் ஈடுபாடு மிகவும் அதிகரித்துள்ளது. கலைவளர்ச்சியில் இது ஏற்றதிசையா அல்லவா என்பது விவாதத்துக்குரிய விஷயம். பெருநிலமளவுக்கு இல்லாவிட்டாலும், ஒவ்வொருநாட்டிலும் ஒழுங்காகவும் ஒழுங்கற்றும் வெளிவரும் வணிக நோக்கற்ற இலக்கியப் பத்திரிகைகள், மற்றும் சோதனை நாடகங்கள், குறும்படங்கள், முழுச் சினிமா முயற்சிகள் எல்லாமும் உண்டு. அத்திசையில் ஈடுபட்டிருக்கும் கலைஞர்கள், அமைப்புக்களின் விபரங்களை பதிலின் விரிவு கருதி இங்கே தவிர்க்கிறேன்.

மனிதனின் உடைவிஷயம் அவன் வாழும் இடத்தின் காலநிலை, பண்ணும் தொழில், அவனது அவளது வசதிக் கேற்றவாறு தேர்வு செய்வதில் ஒரு தவறும் கிடையாது. கலாச்சாரத்தின் காவிகளாக பெண் களை எதிர்பார்க்கும் முட்டாள்தனம் எம்பொதுப் புத்தியில் உண்டு. தமிழ் கல்விக்கழ கங்கள், கலைக்கூடங்கள் நடத்தும் கலைநிகழ்வுகள், கலை வகுப்புப் பட்டறைகள், தமிழ்வகுப்புகள், மற்றும் போட்டிகள் என்பனவற்றுக்கு ஆசிரியைகள் சேலைகட்டிக் கொண்டே வரவேண்டுமென்று வற்புறுத்தப்படுகின்றனர். ஆனால் ஆசிரியர்கள் வேஷ்டி, சட்டையில்தான் வரவேண்டும் என்கிற நிபந்தனைகள் கிடையாது.

தமிழர்கள் தாம் நம்புகிற அல்லது இலகுவாக முன் எடுத்துச் செல்ல விரும்பும் சம்பிரதாயங்களில் கோவில்களும் அவை சார்ந்த சடங்குகளையும் கைவிட்டுவிடாது தொடர்வதில் பெரும் பிரீதி கொள்கின்றனர்.காவடியாட்டம், கரகாட்டம், பால் சொம்பு எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், முள்பாதரக்ஷையில் நடத்தல், தூக்குக்காவடி என்றாகி அது ஜெர்மனி ஹாம் அம்மன் கோவிலில் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியதில் தடைசெய்யப்பட்டு விட்டதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். ஐரோப்பா வில் மதரீதியான அனுஷ்டானங்களையோ, சடங்குகளையோ அனுஷ்டிக்க தடைகள் எதுவுமில்லை. லண்டன், பாரீஸ், பெர்லின், டென்மார்க்கில் அரசின் அனுமதிபெற்றுக்கொண்டு வீதியை அடைத்துக்கொண்டு இந்துக் கோவில்களின் தெய்வங்கள் தேர் வீதி வருவதும், அதன் முன்பாக பக்தகோடிகள் நூற்றுக்கணக்கில் அங்கப்பிரதக்ஷணம் செய்வதுவும், பலநூறு தேங்காய்கள் உடைபடுவதும் உண்டு. தேர்வலத்தில் பெண்கள் ஜரிகைச்சேலை உடுத்துக்கொண்டு முழு அலங்கார பீபூஷிதைகளாகவும், 10 பவுண் சங்கிலி அணிந்த ஆண்கள் அது நன்கு தெரியும்படியாக சட்டைகளை கழற்றிவைத்துவிட்டு வெள்ளைவேஷ்டியில் கலந்து கொண்டு பக்தி இயற்றுவதை யும் காணொளிகளில் கண்டிருப்பீர்கள். முடியுடன்கூடிய தேங்காய், தர்ப்பைப்புல், அறுகம்புல், நெய் எல்லாம் இச்சடங்குகளுக்காக விமானத்தில் வருகின்றன. இத்தரவுகளிலிருந்து எமது பண்பாட்டுமரபு எவ்வாறு விருத்தியுற்று ஓங்குகின்றதென்பதை நீங்கள் அனுமானித்துக்கொள்ளலாம்.

நாம் எமது ஆசிரியர்களை பெற்றோரைவிடவும் உயர்வாகவே என்றைக்கும் எண்ணுகிறோம், மரியாதை செய்கிறோம். ஜெர்மனியில் அவர்களுடன் பேசும்போதுகூடனுர ஃனுசைஃ னுநவீஸீ என்று ஒருமையில்தான் விளிப்போம். இன்னும் அவர்களையும் ஒரு நண்பனைப்போல பெயர் சொல்லியே அழைப்போம். அதாவது எம்நாட்டில் நாம் ஆசிரியர், பெற்றோர் வந்தால் எழுந்து மரியாதை செய்வோமல்லவா, இத்தகைய நடப்புகள் எதுவும் இங்கில்லை. அதாவது எமது பிள்ளைகளும் அதையே தொடர்கின்றார்கள். ஐரோப்பிய இளைஞர்களைப்போல தமிழ்ப்பிள்ளைகள் தமக்குப் பிடித்தமான தோழர்களுடன் வெளியில் உலாத்துவதுக்குச் (டேட்டிங்) செல்வதெல்லாம் இல்லை. ஒரு தேசத்திலோ, மாநிலத்திலோ, நகரத்திலோ ஓரிருவர் உலாத்தினார்களாயின் அதைப் பொருள் செய்ய வேண்டியதில்லை. இன்னும் தமிழர்களிடம் பண்பாட்டுச்சிதைவு, அழிவு வருகிறது என்றெல்லாம் அஞ்சவேண்டிய தில்லை.

இலங்கை அரசியலில் தமிழர்களுடைய போராட்டங்கள் தீவிரடைந்திருந்த சூழலில் - குறிப்பாக ஆயுதப்போராட்டம் முனைப்புற்றிருந்த போதில்தான் அதிகமானவர்கள் புலம்பெயர்ந்தனர். அடுத்தகட்டமாக புலிகளுடன் முரண்பட்டு வெளியேறியோர் இருந்தனர். தொடர்ந்து புலிகளுடைய போராட்ட வழிமுறைகளில் தம்மை ஈடுபடுத்த முடியாத நிலையில் தங்களுடைய சொத்துக்களைக் கையளித்து வெளியேறியோர் இன்னொரு சாராராக இருந்தனர். இவர்கள் எல்லாம் பாதுகாப்பான ஒரு வாழ்தளத்தில் தம்மை ஸ்திரப்படுத்திக்கொண்ட பின்னர் புலிகளையும் ஈழப்போராட்டத்தையும் ஆதரிக்கத் தொடங்கினர். நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்காமல் வெளியேறிச் சென்றபின் போராட்ட நியாயங்களையும் வலியுறுத்தி -புலிகளின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி அதை ஆதரிப்பது எத்தகைய அரசியல் தர்மம்?

இலங்கைத் தமிழர்கள் பலகட்டங்களில் பல்வேறு காரணங்களுடன் வெளியேறினர் என்பது உண்மை. இப்போது ஒரு புரிதலின் வசதிகருதி அவர்களை வெளியேறியவர்கள் - வெளியேறாதவர்கள் என்று மாத் திரம் வகைப்படுத்துவோம்.

வெளியேறாதவர்களையும் தாமாக வெளியேறுமளவுக்கு பொருளா தார வசதிகிட்டாமையால் வெளி யேறாதவர்கள், போராளிகள் அனுமதிக்காமையால் வெளியேறாதவர்கள், விரைவில் தனி ஈழம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடும் தேசப்பற்றுடனும் போராட்டத்துடன் தம்மை இணைத்துக் கொண்டதால் வெளியேறாதவர்கள் என வகைப்படுத்தலாம்.

இனி வெளியேறியவர்களின் கதைக்கு வருவோம். இவர்களை முன்னர் சொன்னதைவிடவும் பல வகைக்குள் அடக்கலாம்.

விடுதலைப்புலிகளுடன் முரண்பட்டதால் வெளியேறியவர்கள், விடுதலைப்புலிகள் தவிர்ந்த மாற்று இயக்கங்களில் இயங்கி புலிகள் அவர்களை ஒடுக்கிய தால் வெளியேறியவர்கள், அமைதிப் படையின் வெளியேற்றத் தின் பின்னால் இந்தியா ‘அம்போ’வெனக் கைவிட்டு விட்டதால் வெளியேறியவர்கள், சுதந்திரமான ஒரு தேசம் இனிக்கிடைக்காது என்கிற அவநம்பிக்கையில் வெளியேறியவர்கள், குடும்பச்சுமை தாளாது பொருளீட்டம் கருதி சிங்கை, மத்தியகிழக்கு நாடுகளை நோக்கி வெளியேறியவர்கள், எதிர்காலத்தில் தமது இருப்பையிட்டு அவநம்பிக்கையடைந்ததால் பார்த்துக்கொண்டிருந்த சிறு சிறுதொழில்களையும் உதறிவிட்டுக் குடும்பத்துடன் இடம்பெயர்ந்த மத்திய தரக்குடும்பங்களைச் சேர்ந்தவர்களென இவர்கள் எண்ணிறைந்த வகைப்படுவர். இவர்கள் எவ்வகையினராயினும் அனைவரும் ‘மானுடனாகிய சமூகவிலங்கு’ என்கிற பெரும் பிரிவுக்குள் வருவார்கள்.

இம்மானுடன் விலங்குக்குரிய பல இயல்புகளைக்கொண்டிருந்தாலும் தன் குடும்பம், தன் உறவு, தன் இனம், தன் வட்டம், தன் சமூகம், தன்நாடு என்கிற சிந்தனையால் - கரிசனையால், அக்கறையால் விலங்கினின்றும் மாறுபடும் மானுட விழுமியங்களைப் பிணித்தவனாக இருக்கிறான். இது இயல்பானதும் இயற்கையுமாகும். இந்தக் கருமூலத்திலிருந்துதான் அவன் புவிக்கோளத்தின் எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் தனது சமூகம், தனது இனம், தனது தேசம் என்பன பற்றிய எண்ணங்களிலிருந்து விடுபடமாட்டாதவனாக இருக்கிறான். தமிழர் விடு தலைக்கூட்டணியின் தமிழ் தலைவர்கள் சத்தமாகப் பேசிய காலங்களில் அவர்களைவிடச் சிறந்த கட்சிகள், மாற்றுக்கட்சிகள் களத்தில் இல்லாத காரணத்தால் அவர்களை ஆதரித்தார்கள். அதே மக்கள் பெயர்ந்திருக்கும் புதிய புலத்திலிருந்து கொண்டு விடுதலைப்புலிகள்தான் பலம் பொருந்திய சக்தியாக இருக் கிறார்கள், அவர்கள் தான் அர்ப்பணிப்புடன் போராடுகிறார்கள் அவர்களைத் தானே ஆதரிக்கவேண்டும்என்று நம்பியதால் அவர்களை ஆதரித்தார்கள். இதில் ஆதரிக்காதவர்கள், புலிகளுக்கு பொருளாதார பங்களிப்பு கொஞ்சங் கூடச் செய்யாதவர்களும் அடக்கலாக அனைவரும்பாதுகாப்பான ஒரு வாழ்தளத்தில் வாழ்பவர்களே.

அதில் மாற்றுக்கருத்தில்லை. இவர்கள் அனைவரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து தாய்நிலத்திலேயே வாழ்ந்திருந்தால் சூரியக் கதிர் தாக்குதலிலான இடப்பெயர்வின் போதும், முள்ளிவாய்க்கால்அவலங்களின்போதும் அழிவுகள்,உயிரிழப்புகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். அவர்கள் போராட்ட நியாயங்களை ஆதரிப்பதும், விடுதலையை அவாவுவதும் அவர்கள் இயல்பான மானுடர்களாக இருப்பதால்தான். அது இயல்பானது, இயற்கை யானது. எவ்வித மானுட தர்மங்களுக்கும் விரோதமானது அல்ல.

புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களிற் பெரும்பாலானவர்களும் அங்கிருந்து இயக்கப்படும் ஊடகங்களும் தமிழ்த் தேசியம் என்ற பெயரில் அதிதீவிர நிலைப்பாடுகளை - ஒற்றைப்படையான நியாயங்களை முன்வைக்கின்ற போக்கைக் காணலாம். ஜனநாயகத்தின் அடிப்படையான பன்மைத்துவத்தை, அதன் விரிவான உள்ளடக்கத்தை நிராகரித்து விட்டு, தங்கள் நிலைப்பாடுகளையே எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். இதை மீறுவோரும் மாற்றுப்பார்வை உள்ளோரும் தூற்றப்படுகிறார்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்டு நிராகரிக்கக் கோரப்படுகிறார்கள். இவர்கள் தாங்கள் வாழ்கின்ற நாடுகளில் தாராள ஜனநாயகத்தை அனுபவித்துக் கொண்டு, அதற்கு முற்றிலும் மாறான யதார்த்தத்தில், வாழ்க்கைச் சூழலில் உள்ளவர்களை எவ்வாறு தீவிர அரசியலுக்கான பிராணிகளாக (தமீழப்போராட்டத்துக்கான தியாகத்தை நிபந்தனையின்றிச் செய்யுமாறு) வரையறுக்க முடியும்? இதுவரையான போராட்டத்தில் சந்தித்த நெருக்கடிகளையும் இழப்புகளையும் கடந்து மேலும் சுமைதூக்குமாறு எவ்வாறு கேட்கவியலும்?

பொதுவில் இலங்கைத் தமிழர் களைப் பொறுத்தவரையில் அவர்களிடம் தமிழ்த்தேசியவாத சிந்தனைகள் எவ்வாறு ஊன்றப்பட்டன, உரமிட்டு வளர்த்தெடுக்கப்பட்டன என்பது ஒன்றும் இரகசிய மானவை அல்ல. தனிச்சிங்கள சட்டம், பௌத்தமதத்துக்கு அரசியல் சாசனத்தில் முன்னுரிமை ஏனைய இனங்களும் மதங்களும் இளைத்தவர்களே என்னும் எள்ளல். அடுத்தடுத்து கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரங்கள், அறத்துக்கு அப்பாற்பட்டு எமது கல்வியில் செய்யப்பட்ட தரப்படுத்தல், திட்டமிட்ட குடியேற்றத் திட்டங்கள் என்பவற்றால் தனித்தமிழீழம் அமைந்தாலொழிய தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று எண்ணத் தலைப்படவைத்தது. அதாவது சிங்களத் தேசியவாதந்தான் தமிழ் தேசியவாதத்தை வளர்த் தெடுத்தது. இருந்தும் தேசியவாதச் சிந்தனைக்குள்ளிருந்து வெளியே நோக்க முடியாதபடி ஆக்குவதில் அரசுத் தலைவருக்கும் அவரது அரசுக்கும் பங்குண்டு. இனப்பிரச் சனையை ஆராய அரசுத் தலைவர் தானே கூட்டிவைத்த திஸ்ஸ விதாரணவின் தலைமையிலான அனைத்துக்கட்சிக் குழுவின் பரிந் துரைகளைத் தூக்கி குப்பையுள் இட்டதிலிருந்து அரசுத் தலைவரிடங் கூட இனப்பிரச்சனைக் கான தீர்வு என்னவென்பதில் தெளிவில்லாமல் இருப்பதையே காட்டுகிறது. அதனால் அவர்மீது நம்பிக்கை வைக்க தமிழர்கள் தயங்குகிறார்கள். ஒரு முறை 13வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பாலும் செல்வோமென்பதுவும், மறுநாள் குடும்பத்தில் இன்னொருவரைவிட்டு ‘அதெல்லாம் தமிழர்களுக்கு தேவையில்லை, சரிப்பட்டுவராது, தமிழர்களுக்கு அப்படியொரு பிரச்சனையுமிங்கில்லை’ எனச் சொல்ல வைப்பதுவும் அரசிடமும் தலைவரிட மும் என்ன வகையான தீர்வைத் தருவதென்பதில் தடுமாற்றம் இருப்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

சரி ஜனநாயக பன்மைத்துவம் என்பதுதான் எம்மைப் பொறுத்த வரையில் என்ன? எதிர்த் தேசியவாதிகளுக்கு பன்மைத்துவ சாத்தியங்களின் என்ன சமிக்கையைத்தான் அரசு தருகின்றது? தேசியவாதிகள் எதிர்த் தேசியவாதிகள் அனைவரும் அரசை சந்தேகக்கண் கொண்டுதான் பார்க்கின்றனர். அரசில் அங்கம் வகிக்கும் தமிழர்களுக்காவது அரசின் நோக்கங்கள் திட்டங்கள் பற்றிய உணர்வோ தெளிவோ இல்லை. ஒழுக்குக்கு வைத்த சட்டிகள்போன்று வானத்தைப் பார்த்தபடிதான் காலங்கடத்துகின்றனர்.

அதி தீவிரநிலைப்பாடென்றே வைத்துக்கொண்டாலும் அந்த இன விடுதலைப்போரில் தோல்வியடைந்தோம். உள்ளக - சர்வதேச நிலைமைகள் மாறிவிட்டன. உண்மைதான். இராணுவத்தைத் தொடர்ந்து தமிழ் நிலப்பகுதிகளில் நிலைகொள்ள வைத்திருக்கிறது அரசு. தமிழர்களின் காணிகளை அபகரித்து இராணுவ முகாம்களை விஸ்தரித்துக் கொண்டிருக்கின்றது, நானே உங்கள் நண்பன் என்று சொல்லும் ஜனாதிபதி நொந்துபோயிருக்கும் இழந்துபோயிருக்கும் லட்சக் கணக்கான மக்களை ஆற்றுப்படுத்துவதைவிட போரின் வெற்றி விழாக்களைக் கொண்டாடி இரண்டு லட்சம் இராணுவத்தைக் குஷிப்படுத்துவதும், ஆங்காங்கே புத்தர் சிலைகளை நாட்டுவதுமாக முதிர்ச்சியற்ற நடவடிக்கைகளைத் தொடர்வதுமாக தனது பாசிஸ முகத்தை மறைத்துக் கொஞ்சம் நடிக்கக்கூடத்தெரியாத நிலையில் இருக்கிறார்.

இந்தக்கண்ணாமூச்சி விளையாட்டுக்களை நிறுத்திக்கொண்டு சர்வவல்லமை பொருந்திய தலைவரும் அவரது அரசும், எந்தக்கட்சியுடைய அனுசரணையின்றியும் ஒரு தார்மீகத் தீர்வைநோக்கி நகரலாம். அதை அமுல்படுத்தலாம். ஆனால் அப்படியான அதிசயங்கள் எதுவும் நடைபெறுவதில்லை. நிலைமைகள் தலைகீழாக மாறியபின்னாலும் அரசு நடந்துகொள்ளும்விதந்தான், புலம்பெயர்ந்த தமிழர்களிடம் தனிஈழத்தைக்கோரும் -தேசிய வாதம் - தேசம் எனும் கருத் தமைவு தீவில் வாழும் தமிழ் மக்களின் மனங்களிலுள்ளதை விடவும் அழுத்தம் பெறுவதற்கும் விஞ்சியுள்ளமைக்குமான காரணங்கள்.

மிதவாதத்தலைவர்கள் மறைந்தனர், எஞ்சியிருந்தவர்கள் தேசிய வாதிகளாலேயே மறைக்கப்பட்டனர். தமிழீழம் அதோ இதோ என்று நம்பிக்கையூட்டி கடுந்தேசியவாதத்தை முன்னெடுத்த தலைவனும் இப்போது இல்லை. தமிழ்த்தேசியமென்கிற பேரில் தமிழினவாத அரசியல்தான் எம்மின அழிவுக்கு இட்டுச்சென்றது. விலைபோபவர்களையும், அடிவருடிகளையும் விட்டால் அனைத்து தமிழர்களையும் அரசியலால் ஒருங்கிணைக்கும் ஒரு தத்துவமோ தலைமையோ இல்லாத அரசியல் சூனியவெளியே வியாபிக்கிறது. அதில்வரும் சிறுசிறுசலசலப்புகள்கூட தமிழர்களின் முழுக்கவனத்தையும் ஈர்க்கின்றன.

புலம்பெயர்நாடுகளின் காட்சி ஊடகங்கள் அனைத்துமே தமிழ்த் தேசியவாதிகளால் உருவாக்கப்பட்டவையும், அவர்களால் கையகப்படுத்தப்படவையுமாகும். அவை அவர்களின் குரலைவெளிப்படுத்துவதில் ஆச் சர்யமில்லை. அவர்கள் ஊடக அமைப்புக்களில் இருந்த கொள்கை முரண்களையிட்டு அவர்களின் தத்துவ ஆசான்கள் மௌனம் காத்தார்கள் அல்லது அறியாமலிருந்தார்கள். இங்கே இரண்டு சிறிய உதாரணங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழக சினிமாக்கள் தடைசெய்யப்பட்ட போது இலங்கைக்கு வெளியில் இயங்கிய அவர்களது ஊடகங்கள் எதுவும் ஒருவிநாடிகூட சினிமாப் பாடல்களையோ முழுசினிமாவையோ தவிர்ந்துவிட்டு தங்கள் சேவையைத் தொடரவில்லை. ஜோதிடப்புரட்டர்களினதும், சினிமா முகவர்களினதும் விளம்பரங்களை தங்கள் பொருண்மியலாபம் கருதி விருப்பத்துடன் செய்துகொண்டிருந்தார்கள். தங்கள் முரண்களை தாங்களே சமரசம் செய்துகொள்ளப் பழக்கப்படுத்தியிருந்தனர். தத்துவ ஆசான்கள், சரித்திர ஆய்வாளர்களின் நெறிப்படுத்துதல்கள் இருந்தும் ஊடகம், பொதுக்கருத்து, மாற்றுக் கருத்து, இலக்கியம் என்பவற்றைக் கையாள்வதில் அவர்களிடம் ஒரு பூர்ஷ்வாத்தன்மையே இருந்தது. அவர்களுக்கு ‘ஜால்ரா’ போடாத மாற்றுக்கருத்து சொல்பவர்கள் எல்லாம் விடுதலைவிரோதி எனக் கணிக்கப்பட்டனர். அதன் விளைவுகள் எப்படி இருந்தன, எத்தனை கொலைகளுக்கு இட்டுச் சென்ற தென்பதை நான் விளக்க வேண்டியதில்லை. தலைமைக்கு அணுக்கமாயிருந்த ஒருவரிடம் ‘சந்திரிகாவுடனான சமாதானத்தை முறித்தது ஒருமுட்டாள் தனமென்று இப்போதாவது புரிகிறதா?’ என்று கேட்டபோது ‘உன்னை இன்னும் பேசவிட்டால் அதிகாரங்கள் எதுவுமற்ற இடைக்கால மாநில அரசையே ஏற்றுக்கொண்டிருக்கலாம் என்பாய்’ என்றவர் என்னைத்தாக்க முனைந்தார். அதாவது அவர்கள் தம்நிலைப்பாட்டைக் கருத்தளவில் கூட மீள்பரிசீலனை செய்யத் தயாராக இருக்கவில்லை.

தேசியவாதத்தையும் எதிர்த் தேசியவாதத்தையும் வெறுமனே வெறும் கறுப்பு வெள்ளை என்கிற மாதிரி நோக்கிவிடலாகாது. சாத்தியமானவற்றைப்பற்றி விவாதித்தல், எம்நிலைப்பாட்டைச் சுயவிசா ரணைக்குட்படுத்தல் போன்றன பின்னோக்கிப் பயணித்தல் அல்லது சரணாகதியையொத்த அகௌரவமென நினைக்கிறார்கள். தேசியவாதத்திலிருந்து தமிழர்களை விலக்கிச் செலுத்தக் கூடிய பன்மைத்துவ சமிக்ஞைகள் எவற்றையும் அரசு எழுப்புவதில்லை. பன்முகப் பார்வையின்மையால்தானே பலபேருந்துகளையும் தவறவிட்டோம். தமிழ்த்தேசியவாதம் தமிழீழம் என்பன ஒரு கருத்தியல்தான்.

எதிர்தேசியவாதிகளை விடவும் தமிழ்த்தேசியவாதிகள் விகிதாச்சாரம் உயர்வாயுள்ளதென்பது ஒரு பிரமையிருக்கலாம். இனிமேலும் ஒரு ஆயுதப்போராட்டத்துக்கான சாத்தியங்கள் இல்லை. அதிசய மாக தனித்தமிழ்நாடுதான் அமைந்து விட்டாலும் புலம்பெயர்ந்த தமிழர் களில் எத்தனை சதவீதம் பேர் அச்சுதந்திர பூமியில் வாழவந்து விடுவார்கள் என்றொரு கேள்வி இருக்கிறது. ஆனாலும் தேசிய வாதம் எனும் கருத்தியலிருந்து போராட்டத்தின் திசையில் அல்லது போராட மக்களைத் தூண்ட வல்ல பலம்பொருந்திய மாயக்கரங் கள் எழுந்து இன்னும் தமீழப் போராட்டத்தையோ தியாகங்களையோ நிபந்தனையின்றிச் செய்யுமாறு எவரையும் நிர்பந்திக்கும், தம் கருத்துச்சாட்டைகளை வீசி விரட்ட முடியுமென்று நான் நம்பவில்லை. பொருந்தாத தொப்பிகள் தூர வீசப் படுவதுதானே வாழ்வியல் நியதி.

நீங்கள் ஜெர்மனிக்குச் சென்ற போது அங்கிருந்த அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள், தற்போதுள்ள நிலைமைகள் எப்படி யானவை?

மிகவும் விரிந்ததளத்தில் நோக்க வேண்டிய கேள்வி, எனினும் சுருக்க மாகப்பதில் தர விழைகிறேன். ஜெர்மனி ஒரு முதலாளித்துவ பொருளாதாரநாடு என்பது இரகசியமல்ல. அங்கேயும் இலங்கையின் ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஒப்பிடக்கூடிய 2 பிரதான கட்சிகள் உள்ளன. ஒன்று, ஷிஷீக்ஷ்வீணீறீபீமீனீஷீளீக்ஷீணீtவீsநீலீமீ றிணீக்ஷீtமீவீ (ஷிறிஞி) மற்றையது சிலீக்ஷீவீstறீவீநீலீ ஞிமீனீஷீளீக்ஷீணீtவீsநீலீமீ ஹிஸீவீஷீஸீ (சிஞிஹி).

இச்சிங்களக் கட்சிகளைப் போலவே அங்கேயும் இத்தனை காலமும் மாறிமாறி ஆட்சி அமைத்துக் கொண்டிருப்பவையும் அவைதான். இவை தவிர சிஷிஹி, திஞிறி என்கிற இரு சிறிய கட்சிகளுமுள்ளன. அதில் சிஷிஹி எப்போதும் சிஞிஹி அரசுடனும், திஞிறி எப்போதும் ஷிறிஞி அரசுடனும் கூட்டணி சேர்ந்திருக்கும். இன் னும் றிஞிஷி என்கிற இடதுசாரி இயக்கமும், (இப்போது ஞிவீமீ லிவீஸீளீமீ இடது என்கிற பெயர்), நிக்ஷீமீமீஸீ ஜீணீக்ஷீtமீவீ, எனும் சூழல் விழிப்புணர்ச்சிமிக்க இயக்கமும், ஸிமீஜீuதீறீவீளீணீஸீமீக்ஷீ ஜீணீக்ஷீtமீவீ எனும் நாஜிக் கட்சியும் உள்ளன. இலங்கையைப் போலவே அங்கேயும் வீதாசாரப் பிரதிநிதித்துவந்தான். மத்திய அரசில் பிரதிநிதித்துவம் பெற வேண்டி குறைந்தது 5% வாக்குகளைப்பெற்று இருக்க வேண்டும் என்பது விதி. ஆதலால் பல சிறிய கட்சிகள் மாநில அளவிலேயே நின்றுகொண்டுள்ளன. நாங்கள் இடம்பெயர்ந்த காலங்களில் 1980 இல் ஷிறிஞி/ திஞிறி கூட்டணி அரசு இருந்தது. அதன் தலைவர் பிமீறீனீut ஷிநீலீனீவீபீ தலைசிறந்த மானுடத்துவவாதி. குடியேற்றவாசிகள், அரசியல் அகதிகள் விஷயத்தில் மிகவும் மென்போக்கைக் கடைப்பிடித்த நல்லவர். வெளிநாடுகளுடனான அவர் ஊடாட்டம், பொருளாதாரக் கொள்கைகள் என்பவற்றை அவரது அரசிலிருந்த திஞிறி கூட்டணியினர் கடுமையாக எதிர்த்ததால் 1982இல் அவரது கூட்டணி அரசு உடைந்து அவரும் பதவி விலக நேர்ந்தது. 95 வயசாகும் பிமீறீனீut ஷிநீலீனீவீபீ இன்னும் உயிர்வாழ்கிறார். ஜெர்மனியின் சரித்திரத்திலேயே நீண்டநாள் உயிர்வாழும் அரசுத் தலைவர் இவர்தான். அடுத்து 1983இல் பிமீறீனீut ரிஷீலீறீஇன் தலைமையில் சிஞிஹி/சிஷிஹி அரசு பதவியேற்றது. அவரது அரசு 1998 வரையில் நிலைத்தது. அதாவது 15 ஆண்டுகள் தொடர்ந்த ஆட்சியைத் தந்தவர். கட்சியின் பணத்தை தன் சொந்த வங்கிக்கணக்குக்கு மாற்றினாரென்று அவர்மீதும் குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்பட்டது. பின்னர் அது கட்சியின் சம்மதத்துடன்தான் நிகழ்ந்ததென்று தப்புவிக்கப்பட்டார்.

ஜெர்மனியின் வெளிநாட்டு விவகாரக் கொள்கைகளில் பிமீறீனீut ரிஷீலீறீ பெரிய மாற்றங்களைச் செய்தாரெனச் சொல்ல முடியாது. இவரது நீண்டகால ஆட்சிக்குப் பின் அடுத்து 1998இல் மீண்டும் பதவி ஏற்றது ஷிறிஞி , நிக்ஷீமீமீஸீ ஜீணீக்ஷீtமீவீகளின் கூட்டணி அரசு. அதன் தலைவர் நிமீக்ஷீலீணீக்ஷீபீ ஷிநீலீக்ஷீஷீமீபீமீக்ஷீ மிகவும் துணிச்சல் மிகுந்தவர். அமெரிக்காவின் விசிலாக இருந்து சத்தம்போட மறுத்தார். ஈராக்குடன் அமெரிக்கா வலுச்சண்டை தொடுத்தபோது தனது படைகள் அங்கே வராது என்றார். கொசோவோவில் மட்டும் பாரிய மனிதப்படுகொலைகள் நடைபெறுவதைத் தடுக்கும் முகமாக அதாவது மிலேஷெவிச் கட்டவிழ்த்துவிட்ட செர்பியக் கொலைப் படைகளிடமிருந்து கொசோவியர்கள் மேலும் கொல்லப்படுவதைத் தடுப்பதற்காக நேட்டோப் படைகளுக்கு ஆதரவாக தனது படைகளையும் ஆயுதங்களையும் தந்து உதவினார். சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் நடைபெற்ற முக்கியமான போர் இதுதான். ஜெர்மனியின் சித்தாந்தம் இன்னொரு கிusஷ்வீtக்ஷ் வேண்டாம், நாடுகளிடையே போரும் வேண்டாம், மக்கள் வாழவேண்டும் என்பதுதான். ஜெர்மனியில்செனெட்சபையை ஒத்த ஒரு அமைப்புள்ளது. அதை ஙிuஸீபீமீsக்ஷீணீt என்பர். அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றினாலும் ஙிuஸீபீமீsக்ஷீணீt அனுவதித்தாலே அதைச் சட்டமாக்கலாம். ஷிநீலீக்ஷீஷீமீபீமீக்ஷீ அரசுக்கு ஙிuஸீபீமீsக்ஷீணீtஇல் அதிக அளவில் வலுவுடனிருந்த சிஞிஹி கட்சியும், அதன் தோழமைக்கட்சிகளும் அவரது பாராளுமன்றம் இயற்றும் சட்டங்களை அனுமதிக்காமலும், நடைமுறைப்படுத்தவிடாமலும் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கவும் ஷிநீலீக்ஷீஷீமீபீமீக்ஷீ தனது அரசை 2005இல் அதன் ஆட்சிக்காலம் முதிர்வுற முன்னரே கலைத்துவிட்டுப் பொதுத்தேர்தலை அறிவித்தார். அடுத்து 2005 நடைபெற்ற தேர்தலிலிருந்து இன்றுவரை கிஸீரீமீறீணீ விமீக்ஷீளீமீறீ அம்மையாரின் சிஞிஹி/சிஷிஹி/ திஞிறிஇன் கூட்டணி அரசு ஆட்சியிலுள்ளது. இவர் பதவிக்கு வந்தவுடன் சில காலத்திலேயே விணீக்ஷீரீக்ஷீமீt ஜிலீணீtநீலீமீக்ஷீஇன் பாணியில் பொது வருமானவரி, பொது உற்பத்திப் பொருட்களின் விற்பனைவரி, மருத்துவக் காப்புறுதி என அனைத்தையும் உயர்த்தினார். ஆனாலும் கிஸீரீமீறீணீ விமீக்ஷீளீமீறீ இரண்டாந்த டவையாகவும் ஆட்சிசெய்தார். கடந்த 2013 செப்டெம்பரில் நடந்த பொதுத் தேர்தலில் மீண்டும் அவரது கட்சியே அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றியீட்டியுள்ளதை அறிந்திருப்பீர்கள்.

பொருளாதாரத்தைப் பொறுத்த மட்டில் எப்போதும் ஏறுமுகந்தான். ஐரோப்பிய நாடுகளிலேயே இரசாயனங்கள், மகிழுந்துகள், பாரவுந்துகள், இதர இயந்திரவகை, உலோகங்கள், நிலக்கரி என ஏற்றுமதியில் முன்னிலை வகிப்பது ஜெர்மனிதான். ஆனால் ஜெர்மனியின் தனித்த பொருளாதார வளர்ச்சியை ஒரு வரைபுமூலம் பார்த்து அதிசயப்பட முடியாது, ஐரோப்பிய யூனியன் எனும் பொருளாதார இணைவுக்குப் பிறகு எல்லா நாடுகளின் கூட்டு வளர்ச்சியையும் கருத்தில் கொள்ளவேண்டும். வளர்ச்சியை விடவும் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையைப் பேணுவதிலேயே ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கவனங்கள் குவிந்துள்ளன.

ஐரோப்பிய நிலைமைகளுக்கும் (அரசியல், பொருளாதாரம், பண்பாடு, அறிவியல், வாழ்க்கை ஒழுங்கு போன்றவற்றில்) ஆசிய நிலைமைகளுக்கும் இடையில் காணப்படும் பெருவெளிகள் -சிறு வெளிகள் எத்தன்மையானவையாக உள்ளன? நீங்கள் இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்பவர் என்ற அடிப்படையில் உங்கள் அவதானங்கள்?

ஒரே வகையான பிரச்சனைக்கு ஐரோப்பிய நாடுகள் எடுக்கும் ட்றீட் மெண்டும், ஆசிய நாடுகள் எடுக்கும் ட்றீட்மெண்டும் பாரிய அளவில் வேறுபடுகின்றன. உதாரணத்துக்கு கூடங்குளம்அணுவுலை நிர்மாணம் அல்லது சேதுகால்வாய்த் திட்டத்தை எடுப்போமே. விஞானிகள், இயற்கை, சூழலியல் அறிஞர்கள் அவை மனுக்குலத்துக்கு ஆபத்தனவை என அறிவித்தால் அறிவுள்ள ஆளுங்கட்சியும் எதிர்க் கட்சி, இடதுசாரிகள், இன்னுமுள்ள உதிரிக்கட்சிகள் எல்லாமே பிரச்சனையைப் புரிந்து கொண்டு அந்த அறிவியல் அறிக்கையை ஏற்றுக்கொள்ளும். ஆளுங்கட்சி ஏற்றுக்கொள்கிறதே என்பதற்காக எதிர்க்கட்சி நிராகரிப்பதோ, எதிர்க்கட்சி ஏற்றுக் கொள்கிறதே என்பதற்காக ஆளுங்கட்சி நிராகரிக்கும் சித்து விளையாட்டுக் களைச் செய்வதில்லை. மக்களுக்கு எது நல்லதோ, எது ஆபத்தில்லாததோ அதன் பக்கம் கட்சிகளும் நிற்கும், நல்ல விஷயமொன்றைச் சட்டமாக்கும் மசோதா பாராளுமன்றத்தில் வரும் போது புரிந்துணர்வுடன் அதை எதிர்க்கட்சிகளும் அதை ஆதரிக்கும்.

இன்னொரு உதாரணம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் க்ஷிஷீறீளீsஷ்ணீரீமீஸீ என்னும் கார்த்தயாரிப்புக் கொம்பனி ஒன்றுக்கு அதன் விற்பனையைவிடவும், உற்பத்திச் செலவு அதிகமாகி அதனால் ஈடுகட்ட முடியாத நஷ்டம் ஆண்டுதோறும் ஏற்பட்டது. அது தன் 6,000 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது. ஆசிய நாடுகளைவிட மக்கள் நலனில் அக்கறைப்படும் ஐரோப்பிய நாடுகளில் ஒருவர் தன் தொழிலை இழந்தால் அவர் தன்னை ஒரு புதிய வேலையில் பொருத்தும்வரைக்கும், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அவரது சம்பளத்தின் 80%ஐ தொழிலிழப்பீட்டுக் காப்புறுதி வழங்கவேண்டும். 3 ஆண்டுக்குள் அத்தொழிலாளி தனக்கான பணியையைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் தொடர்ந்தும் அவருக்கு சமூக உதவிகள் ஸ்தாபனம் அதாவது அரசே அவரது வீட்டு வாடகை, மின்சாரம், சாப்பாடு மற்றும் உடைகளுக்கான குறைந்தபட்ச உதவியை வழங்கவேண்டும். அதுவும் ஒருவகையில் அரசுக்குப்பாரமான விஷயம்தான். அரசு க்ஷிஷீறீளீsஷ்ணீரீமீஸீ கார்த் தயாரிப்புக் கொம்பனியுடன் ஒரு உடன்படிக்கைக்கு வந்தது. அதாவது ஆண்டுதோறும் அக்குழு மத்துக்கு நஷ்டமாகும் தொகையை அரசு மானியமாக வழங்கும். நீங்கள் தொடர்ந்து அத்தனை தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து பணியை வழங்குங்கள் என்பதுதான் அது!

அ.தி.மு.கவின் ஆட்சிக்காலத்தில் நியாயமான கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்ஆயிரக் கணக்கில் வேலை யிலிருந்து நீக்கப்பட்டனரல்லவா? இரண்டு சம்பவங்களையும் சீர்தூக்கிப் பாருங்கள். இதுதான்இருவித அரசுகளின் ட்றீட் மென்டுகளுக்கு முள்ள வித்தியாசம்.

அரசியல் கட்சிகளில் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் துறைசார்ந்த அறிஞர்களின்றி, நடிகர் மன்றம் வைத்திருப்போர், கட்டிட ஒப்பந்தம் செய்வோர், செங்கற்சூளைகள் கல்குவாறிகள், மதுபானக்கடைகள் வைத்திருப்போருக்கெல்லாம் கட்சிகளில் இடமில்லா திருப்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். சென்ற தமிழகத் தேர்தல் பிரசார நிகழ்வின்போது விஜயகாந்த் தன்கட்சி வேட்பாளர் ஒருவரை அத்தனை மக்கள் மத்தியில் தாக்குவதைப் பார்த்தேன். இப்படி ஒரு நிகழ்வு இங்கே நடைபெற்றிருப்பின் விஜயகாந்த் இன்றுவரை கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்க வேண்டி இருந்திருக்கும்.

வாழ்வமைப்பைப் பொறுத்த வரையில் இறுக்கமான குடும்ப அமைப்புகள் ஐரோப்பாவில் இல்லை. 18 வயசுக்குமேல் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து கல்வி, தொழில், மற்றும் சேர்ந்து வாழுதல் போன்ற காரணங்களால் பிரிந்து விடுகிறார்கள். ஐந்து அறைகள் கொண்ட வளமனையுடன் ஒரு வசதியாக வாழும் பெற்றோரிடமிருந்து பிரிந்துபோக அவர்களது ஒரே மகன் மறுத்தான். அவனை ஞிணீநீலீக்ஷ்வீனீனீமீக்ஷீ எனும் அவ்வீட்டின் கூரை அறையிலேயே அவனது பெற்றோர்கள் வாழ அனுமதித்தனர். இதுபோன்ற விசித்திரங்களும் இங்கு உள்ளன. மனிதன் அவனாகவே தனிமையின் திசையில் வேகமாகச் சென்று கொண்டிருப்பதை ஆசியாவை விட ஐரோப்பாவில் அவதானிக்க முடிகிறது.

ஈழத்தமிழரின் (புலம் பெயர் தமிழர்கள், இலங்கையில் வாழ்கின்ற தமிழர்கள்) எதிர்காலம் குறித்து உங்களுடைய புரிதல் என்ன? தமிழ் பேசும் இலங்கைச் சமூகங்களில் இலங்கைத் தமிழர்கள் என்பதையும் இதில் இணைத்துக் கொள்ளுங்கள்.

எதிர்காலம் பற்றிய எதிர்வுகூறல் மிகச்சிரமமான காரியமும். பாரதியின் வழியில், சிந்தனை முறையில் றிஷீsவீtவீஸ்மீ ஜிலீவீஸீளீவீஸீரீ கே நல்லதென நினைப்பவன். அவ்வாறே சிந்திக்கவும் முயல்கிறேன். புலம்பெயர்ந்த தமிழர்களில் நடுவயதைக் கடந்து விட்டவர்கள் ஐரோப்பிய இடுகாடுகளில் தங்களுக் கான நிலங்களை வாங்குவது, ஒதுக்குவது பற்றியே சிந்திக்கின்றனர். இளைய தலைமுறை யினரிடம் திவீக்ஷீst தீமீ லீமீக்ஷீமீ. எனும் ஜிக்ஷீமீஸீபீ டே, நடைமுறையே காணக்கிடைக் கிறது, எதிர்காலம் பற்றிய அலட்டல்கள் இல்லை. எல்லாத் தமிழர்களுக்கும் நடப்பவற்றைப் பார்ப்போமெனும் மனநிலையில் மீதிப்பேர். நம்மவரின் எதிர்காலம் பற்றிய சிந்தனையில் ஏதாவது நல்லது நடக்கவேண்டுமென்கிற எண்ணத்தில் கவலையில் இருப்பவர்கள் கொஞ்சப்பேரே. எந்த விலங்குதான் தன் குட்டிக்கு இரையைத் தேடிவைத்துச் சாகிறது? தனி ஈழத்துக்கு ஆசைப்பட்டோம், முடியவில்லை, இப்போ சுதந்திரமான ஒரு தனிஅலகென வந்து நிற்கிறோம். அதுவும் கிடைத்துவிட்டதெனெ வைப்போமே. இருக்கவே இருக்கின்றன மலையகத் தமிழ்மக்களின் பிரச்சனைகளும், ஒடுக்கப்பட்ட எம் தமிழ்மக்களின் பிரச்சனைகளும், பெண்ணியப் பிரச்சனைகளும். அதாவது வாழ்வும் பிரச்சனைகளும் மானுடத்தின் தொடர்கதைதானே?

(ட்றீட்மென்ட் என்பதற்கான பொருத்தமான தமிழ் வார்த்தை இருந்தால் சொல்லுங்கள்)

யுத்த காலத்திலும் யுத்தத்திற்குப் பிறகும் இலங்கைக்கு வந்து சென்றிருக்கிறீங்கள். அப்போதெல்லாம் சனங்கள் எதைப்பற்ற்றியெல்லாம் சிந்திக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள்? நீங்கள் வந்தபோது உங்களுக்கு ஏற்பட்ட உணர்வும் அனுபவமும் என்ன?

போர்காலத்தில் வவனியா வரைக்கும் தொடருந்தில் வந்தேன். அப்பாலே யாழ்ப்பாணம் வரைக்கும் ஒரு மிதியுந்தை மிதித்துக்கொண்டே பயணிக்கவேண்டியிருந்தது. யாழ்ப் பாணத்தில் நின்ற அத்தனை நாட்களும் அப்போது சகடை என்று சொல்லப்பட்ட விமானத்தின் குண்டுவீச்சிலிருந்து உயிர்தப் பப் பெரும்பாடுபட்டேன். திரும்பி வருகையில் இரண்டுநாட்களை நெடுங்கேணியில் கழிக்க வேண்டியிருந்தது. ஒருபகல்பொழுதில் விடுதலைப்புலிகளின் டிறக் ஒன்று முல்லைத்தீவு நோக்கி மிகவேகமாகப் பாய்ந்து சென்றது. ஏதோ ஒருகளியாட்டத்துக்குப் போவதுபோல போராளிகள் அனைவரும் சிரித்தபடி சென்றார்கள். ஒரு மணி நேரங்கூடச்சென்றிருக்காது. சென்றவர்களில் நால்வரை வெறும் உடல்களாக மீண்டும் சுமந்து வந்தது அதே டிறக்வண்டி. எதுவும் நடவாதது போல மீண்டும் மேலும் போராளிகள் முல்லையின் திசையை நோக்கிப் பாய்ந்தார்கள். அவர்கள் முகத்திலும் அதே குதூகலம். கிஞ்சித்தும் பயமிருக்கவில்லை. அந்தக்காட்சியின் அனுபவத்தை என்றைக்கும் என்னால் மறக்கமுடியுமென்று தோன்ற வில்லை. முன்னர் மக்களுக்கு பெரும் நம்பிக்கை இருந்தது. அதாவது தனிஈழம் எப்படியும் கிடைத்துவிடும் என்று. ஒரு லிட்டர் மசகு எண்ணை 3000 ரூபாய் விற்றதையும், மாவின் விலை 300 இருந்ததையும் சகித்துக்கொண்டார்கள்.

இத்தனை பாடுகளின் பின்னாலும் இப்போது போரில் ஏற்பட்ட இழப்பு அவர்களுக்கு இன்னும் ஜீரணிக்க முடியாமலுள்ளது. தட்டுப்பாடுள்ள பொருள்களெல்லாம் இப்போது கிடைப்பதில் சற்றே ஆசுவாசம் அடைந்துள்ளனர். எல்லா பிரதான வீதிகளும் பாலங்களும் நவீன முறையில் திருத்தப்படுகின்றன. முழு வதுவதுமே வெளிநாட்டிலிருந்து வருபவை என்று எதிர்வுகூறமுடியாது. ஆனாலும் ஜனங்களிடம் பணப் புழக்கம் அதிகமாக இருப்பது தெரிகிறது. தொழில் செய்பவர்கள், வெட்டியாக இருப்பவர்கள் அனைவரிடமும் விசையுந்துகளும், எடுப்புத் தொலைபேசிகளும் உள்ளன. மேசன், தச்சுவேலையன்ன கைவினைபுரிவோர்களுக்கு நிறைய தொழில்கள் குவிந்துள்ளன. ஒரு மேசனின் உதவியாளுக்கே 1000 வரையில் சம்பளமிருப்பதை அறிந்தேன். நல்லூர், திருநெல்வேலி, கல்வியங்காட்டுப் பகுதிகளில் நிறைய சிங்களச் சகோதரர்கள் வீடு வளவு துப்புரவாக்குதல், வேலியடைத்தலாகிய பணிகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்டேன். புலம்பெயர்ந்துவிட்ட எம்மிடம் என்ன பணியாயினும் செய்வது என்கிற போக்கு நன்கு வளர்ந்து விட்டது. தோட்டங்களில் ஆப்பிள் பறிக்கவும், பண்ணைகளில் புல்லு வெட்டவும், உணவகங்களில் கோப்பைகளைக் கழுவவும், அலுவலகங்களைத் துப்புரவு செய்யவும் நாம் தயங்குவதில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் வீட்டில் நாலு இளைஞர்கள் இருந்தாலும் அதுபோன்ற பணிகளைக் கூலி கொடுத்தே செய்விக்கும் போக்கும் பழக்கமும், அவற்றை நாமே செய்வது இழிவானது என்னும் மனோபாவமும் இன்னமும் காணக்கிடைக்கிறது. சில யாழ் இளைஞர்களிடம் இன்னமும் எப்படியாகவேனும் வெளி நாடுகளுக்கு வந்து சேர்ந்துவிட்டால் ராஜபோக வாழ்க்கை வாழலாம் என்கிற கனவுகள்இருப்பதையும் உணர்ந்தேன்.

வன்னியில் மல்லாவி - யோகபுரம், சிவபுரம், துணுக்காய் ஆகிய பகுதியில் பயணித்திருந்தேன். அரசும், பொதுத்தொண்டு நிறுவனங்களும் அமைத்துக்கொடுத்தஎளிமையான சிறிய வீடுகளில் நான் கைந்து பேராகவும், கூட்டுக் குடும்பமாகவும் குறைவான வசதிகளுடன் வசிக்கின்றார்கள். அங்கே தடையறாத மின்சாரம் கிடைக்கின்றது. வங்கி களின் கைங்கரியத்தால் 40 வீதமான வீடுகளில் ஒருவிசைந்தேனும் நிற்பது ஆச்சர்யமூட்டுவதாக இருந்தது. வன்னிப் பகுதியில் பலரும் விடுதலைப் புலிகளைப் பற்றிய பேச்சை எடுக்க விரும்பவில்லை. அதிகமான மக்களிடம் அரசு எதைச் செய்தாலும் சரிதான் அல்லது அதை ஏற்று கொள்வது என்கிற சித்தன் போக்கே காணப்படுகிறது. கடந்தகாலச் சிங்களத் தலைவர்களின் போக்கையேபின்பற்றி நிறைவேற்று ஆளுமைமிக்க தற்போதைய தலை வரும், அவரது அரசும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு நம்பிக்கை உண்டுபண்ணக்கூடிய எந்த நகர்வமில்லாது, நட்டாமுட்டியாகச் செல்லாமல் தொலைநோக்குடனும், தார்மீகச் சிந்தையுடனும் எதையாவது உருப்படியாகச் செய்யலாமே என்கிற ஆதங்கம் ஏற்பட்டதும் நிஜம்.

புலம்பெயர்ந்து சென்றோர் தாம் வாழும் நாடுகளில் எதிர்கொள்கின்ற பண்பாட்டு நெருக்கடிகளும் மாறுதல்களும் ஒருவகையானது. இதில் நன்மைகளும் தீமைகளும் உண்டு. முக்கியமாக ஜனநாயக விரிவு, பன்மைத்துவம், அறிவியல் ரீதியான முன்நகர்வு போன்றவை உள்ளன. இது தமிழ்ப்பண்பாட்டை வளப்படுத்த ஓரளவு உதவும் என நினைக்கிறேன். ஆனால், இலங்கையில் இந்திய (தமிழக) அரசியல் பண்பாட்டாதிக்கம் பலமாக தாக்கம் செலுத்துகிறது. இவை பற்றி உங்களின் அபிப்பிராயம் என்ன?

தமிழர்கள் என்ற வகையில் இலங்கை, சிங்கை - மலேசியத் தமிழர்களுக்கும், பெருநிலப்பரப்பின் தமிழர்களுக்கும் பொதுவான பண்பாடுகளும், கலாச்சாரமும்தான் காணப்படுகின்றது. ஆனாலும் வாழ்நிலப்பரப்புக்கள் வேறுபட்டிருப்பதால் அவ்வப்பரப்புகளில் இருக்கக்கூடிய பிற கலாச்சார மாதிரிகளால் பாதிக்கப்பட்டு சிற்சில திரிபுகளுக்கு ஆளாகியிருந்தாலும் அவை புரியப்படக்கூடியவையே. ஆனால்சமையல் முறைகளிலிருந்து உடுத்தும் ஆடைவரை இலங்கை, சிங்கை - மலேஷியத் தமிழர்களிடம் பெருநிலத்தமிழர்களின் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையுமே பெரிதும் ஒத்திருக்கின்றன. இலங்கைத் தமிழர்களிடம் இங்குள்ள முஸ்லிம் மக்களின் பண்பாடோ, சிங்களவர்களின் பண்பாடோ அல்லது சிங்கை - மலேஷியத் தமிழர்களிடம் மலே சீன மக்களின் பண்பாடுகளோ பெரிதும் பாதித்திருப்பதாகத் தெரியவில்லை. சேலை உடுத்துவதை எடுத்துக்கொள்வோமே. சிங்களப் பெண்களைப்போல தமிழ்ப் பெண்கள் உடுத்துவதில்லை. இந்தப்பண்பாடு, பழக்கவழக்கங்களின் காவிகளாக இருப்பது ஊடகங்கள்தான். சினிமாவில் வரும் பெண்கள் வலது புறமாக முன்புறமாக தாவணியைப் போட்டால் இங்குள்ள தமிழர்களும் மறுநாளே தாமும் அவ்வாறேபோட ஆரம்பிக்கிறார்கள். அவ்வளவு தூரம் ஊடகங்கள் எம் வதியும் அறைவரை புகுந்து ஆட்சி செலுத்துகின்றன.

60களின் நடுப்பகுதியிலிருந்து ஈழத்துப் பாடல்கள், ஈழத்து மெல்லிசையென்று பலமுயற்சிகளை ஈழத்துக்கலைஞர்கள் முன்னெடுத்தனர். சினிமாவிலும் தனிமுயற்சிகள் இருந்தனவெனினும் அதில் எம்மால்பெரும் வெற்றியை எட்டிவிட முடியவில்லை. இப்போது இசை, நாட்டியம், சினிமா எனத் தயாரிக்கப் புறப்படும் கலைஞர்களுக்கு நமக்கான இசையை, நாட்டியத்தை, சினிமாவையே தயாரிக்க வேண்டும் என்கிற முனைப்பு இல்லை. ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கும் முயற்சிகளை ஆராயவோ அவர்களின் அனுபவங்களைச் சேர்த்துக் கொள்ளவோ முயற்சிப்பதுமில்லை. புலம்பெயர்ந்த மண்ணில் ஒரு தமிழ் சினிமாவைத் தயாரிக்க முயலும் ஒருவர் 20 பேர் சேர்ந்துகொண்டு ஆடும் காதல் காட்சிகளையும், குத்து - கானா வகையிலான பாடல்களையும், நடப்பிலிருந்து விலகி யிருக்கும் அடிதடி சண்டைக் காட்சி களையும் சேர்த்தே தங்கள் சினிமாவை உருவாக்க முனைகிறார்கள் விதிவிலக்காக அமைந்த சில முயற்சிகளும் இல்லாமலில்லை.

ஈழத்துக்கான கூத்துமுறைகள், ஈழத்துக்கான நாட்டியம், ஈழத்துக்கேயான நாட்டாரியல், ஈழத்துக் கலைகள், ஈழத்து சினிமா என்று செய்யப் படும் முயற்சிகள் ஆய்வுகள், அவற்றின் வெளிப்பாட்டு முன்னிறுத்தல்கள் பல்கலைக்கழக மட்டத் திலோ, குழுமமாகவோ, தனியார் முயற்சி யிலோ எங்குதான் முகைக் கினும் அவை பெரிதும் ஊக்குவிக்கப் படவேண்டியன.

பிற மொழிகளில் இன்று எழுதப்படுகின்ற சிறுகதைகள், நாவல் போன்றவற்றுக்கும் தமிழில் உள்ள சிறுகதைகள், நாவல்களுக்குமிடையில் உள்ள வேறுபாடுகள் எப்படியிருக்கு?

நான் தமிழ்மொழிமூலம் விஞ்ஞானம் பயின்றவன். கல்லூரியில் ஆங்கிலத்தையோ, ஆங்கில இலக்கியத்தையோ விஷேசமாக எடுத்துப்படித்தவனுமல்ல. பிறமொழி இலக்கியங்கள் எனும்போது ரஷ்ய, ப்ரெஞ்ச், லத்தீன் அமெரிக்க செவ்விலக்கியங்களே அவற்றின் தமிழ்மொழிபெயர்ப்பிலேயே எனக்குப் படிக்கக் கிடைத்தன. ஜெர்மனியில் இவ்வளவுகாலம் வாழ நேர்ந்திருந்தும் ஹெர்மன் ஹெஸ்ஸயையும், எறிக் ஃப்றொம்மையும், எடித் ஹெர் மனையும், பெர்தோல்ட் பிறெட்சையுங்கூட ஆங்கில மூலமாகத்தான் அறிந்தேன். இந்த வரிசையில் அல்பேர் காம்யூ, மாப்பஸான், சிமோன் பியுவோ, அன்டன்செக்கோ ஆகியோரும் வருவார்கள். காரணம் ஃப்ரெஞ், ஜெர்மன் இலக்கியங்களை அவற்றின் மூலமொழிகளிலேயே புரிந்துகொள்ளுமளவுக்கு அம்மொழி களில் எனக்குப் பாண்டித்தியம் இன்னும் ஏற்படவில்லை. தொடர்ந்த முயற்சியினால் ஆர்.கே.நாராயணில் தொடங்கி ஹெமிங்வே, காப்ரியேல் கார்ஸியா மால்க்கேஸ் என வந்து கொஞ்சம் நாவல்களைப் புரிந்து கொள்ளுமளவுக்கு ஆங்கிலத்தை பரிச்சயமாக்கிக் கொண்டேன். சுஜாதாவின் மொழியில் சொல்வ தானால் ஆங்கிலத்தில் இலக்கியப் பம்மாத்துக்கள் விடும் முயற்சிகள் எதுவும் கிடையாது. என் பிள்ளைகள் தாம் ஜெர்மனிலோ, ஃப்ரெஞ்சிலோ படித்த படைப்புகள் பற்றி என்னிடம் சிலாகிக்கும்போது மேலும் மேலும் அவைபற்றி அவர்களிடமே கேட்டு அறிந்து கொள்வேன். ஆக என் சமகால பிறமொழி இலக்கியங்கள் மீதான வாசிப்புப்பரப்பு எல்லைகள் உடையது.

முயன்றால் இரண்டொரு படைப்புக்களை ஒப்பீடு செய்யலாம். பிறமொழி இலக்கியங்களை உடனுக்குடன் முழுவதும் படிப்பதென்பதுவும், அவற்றைத் தமிழ்மொழியில் வெளிவருபவையுடன் ஒப்பிடுவ தென்பதுவும் தனியொருவனால் ஆகக்கூடிய விஷயமல்ல. தமிழிலேயே எத்தனையோ படைப்புக்கள் படித்து முடிக்காமல் இன்னும் பாக்கியிலுள்ளன என்பேன். தனியொரு வனாக பிறமொழி இலக்கியங்களை எல்லாம் படித்து மதிப்பீடு செய்வதற்கும்; அவற்றை தமிழ் சிறுகதைகள், நாவல்களுடன் ஒப்பீடு செய்வதற்குமான அமானுக்ஷசப் பேராளுமையும், தகமையும், வித்தகமும் கொண்டிருப்பவனாக என்னைக் கருதவில்லை.

ஒரு வாசகனாக தமிழில் ஏற்பட்டிருக்கிற நவீன மாற்றம் அரசியல், இலக்கியம், பண்பாடு, சினிமா உள்ளிட்ட பிற கலை வெளிப்பாடுகள், சிந்தனை முறை, வாழ்க்கை பற்றி?

மிகவும் விரிந்த தளத்தில் பதிலளிக்கவேண்டிய விஷயம் இது. எனினும் சுருக்கமாக... 1980 வரையில் நாவல்கள் சிறுகதைகள் அடங்கலாக தமிழ் இலக்கியத்தில் என்னவென்ன மாற்றங்கள் நவீனங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை பல இலக்கியர்கள் தத்தம் கோணங்களில் அவதானித்துப் பதிவுகள் செய்துள்ளனர். அவைகளில் சிட்டி ரூ சிவபாத சுந்தரம், சாலை இளந்திரை யன், தொ.மு.சி ரகுநாதன், வேத சகாய குமர், எம்.ஏ.நுஃமான், கா.சிவத்தம்பி ஆகியோரது பதிவுகள் காத்திர மானவையும் மனம்கொள்ளவும் தக்கன. இன்னும் தமிழிலக்கியத்தில் பின் நவீனத்தின் பிரவேசம், தலித்திய, பெண்ணிய இலக்கியத்தின் வியாபகம் என்பன புதிய விஷயங்களாகும். பின் நவீனத்துவத்தில் ‘பெருங்கதையாடல்’ எனும் விஷயம் முதன்மையானது. எளிமையாக அது எடுத்துச் சொல்லபடும் ஒரு விஷயம் அதைச் சொல்லும் உத்திகள், சொல்லல் முறை என்பவை பற்றிப் புதுமையும் கவனமும் கொள்ளும். விஷயங்களில் கூட இதுவரையில் பேசப்படாதிருந்த பலவிஷயங்கள் தமிழிலக்கியத்தில் பேசு பொருளாக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு புலம்பெயர் எழுத்தாளர் ஷோபாசக்தி அவர்கள் தனது ‘...ம்’ என்கிற புதினத்தில் ஒரு தந்தைக்கும் மகளுக்குமான பாலியலுறவை பதிவுசெய்திருக்கிறார்.இதுபோன்ற முயற்சிகளையும் வரவையும் பின் நவீனத்தின் குணமான பெருங்கதையாடலின் அம்சமாகக்கொள்ளலாம். ஒருகாலம் வரையில் படைப்புகளைப்பற்றிப் பேசப்பட்ட கரு - உருவம் - உத்தி ஆகிய முறைமைகளைக் கட்டுடைத் துக் கொண்டு நவீன படைப்புக்கள் பல சர்ரியலிசம், நொன்-லீனியர் எனப்பலப்பல வெளிப்பாட்டு முறைகளில் வெளிவந்துள்ளன. வர்த்தகப் பத்திரிகைகளின் தேவைக் கேற்ப இலக்கியம் என்கிற பெயரில் பல சக்கைக்குவியல்களும் விளை விக்கப்பட்டிருகின்றன. வானொலிகளில் வரும் இசையும்-கதையும் பாணியிலான விஷயங்கள். இலக்கியங்களைப் பொறுத்தமட்டில் சிறுபத்திரிகைகளின் பங்கு விரிந்ததளத் தில் ஆராயப்படவேண்டியது.

தமிழ்சினிமாவில் பின் நவீனத்துவத்தின் தாக்கத்தைப்பெரிதும் அவதானிக்க முடியவில்லை. வகை மாதிரியான சினிமாவிலிருந்து விலகும் புதிய முயற்சிகள் மிக அரிதாகவே நடந்துள்ளன. சினிமா என்பது பலகோடி ரூபாய்கள் முதலீட்டுடன் சம்பந்தப்பட்ட விஷயமாகவும், பலபேர் சேர்ந்து கொண்டு செய்யவேண்டிய கூட்டு முயற்சியாகவும் இருப்பதால் அப்படியான புது முயற்சிகளை முயல்வோரிடத்திலும் தயக்கம் ஏற்பட்டுவிட விநியோகம், விட்ட முதலுக்குப் பயந்துகொண்டு சமரசமாகி இறுதியில் ஜனரஞ்சக சினிமாவின் அம்சங்களான 20 பேர் சேர்ந்துகொண்டு ஆடும் நடனக் காட்சிகளையும், வெட்டுக்குத்து சண்டைக்காட்சிகளையும் வலிந்து சேர்த்துக் கொண்டுவிடுகின்றனர்.

வர்த்தக நோக்கம்கொண்ட பகுதிகளை நீக்கிவிட்டுப் பார்த் தால் சில நல்ல படங்கள் அங்கொன்று மிங்கொன்றுமாக வெளிவந்துதான் உள்ளன. பாலு மகேந்திரா, மகேந்திரன், ருத்திரய்யா இவர்களின் நிரையில் வசந்தபாலன், அமீர், வெற்றிமாறன் போன்ற மனம்கொள்ளத்தக்க இயக்குனர்களை அவதானிக்க முடிகிறது. எந்தவொரு படைப்பிலும் அதன் இயக்குனரோ, ரசிகனோ முழுத்திருப்தி அடைந்துவிட முடியாதென்பதும் இயல்புதானே?

இன்றைய கணினி யுகத்தில் வாழும் மனிதனுக்கு தகவல்கள் ஏராளம். மனித மூளையில் வந்துகுவியும் தகவல்கள் அவன் சிந்தனை முறையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில புத்திசாதுர்யமான முடிவுகளை எடுக்கவைக்கின்றன. தத்துவநோக்கில் பொருள்தேடும் உலகில் மனிதனையும் அவன் சிந்தனை முறைமையயும் நோக்கின் ஓசோவின் பார்வையைத் தவிர்த்துவிடமுடியாது. புத்தம்புதிய பங்களாவீட்டில் இருப்பவன் அயல்வீட்டுக்காரனைப் பார்த்து அவனிடம் புதியவீடில்லை. ஆனால் நிச்சயம் அவனிடம் வங்கியில் பெரியதொகை இருக்காமல் போகாது என நினைப்பதுவும், அயல்வீட்டுக்காரனோ பங்களாவில் இருப்பவனைப்பார்த்து எத்தனை வசதியாக இருக்கிறான். பங்களாவும் மகிழுந்துமாக, உலகிலேயே அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவன் இந்தப்பயல்தான் என அவன் பொருமுவதும் என்றைக்கும் மாறாமலேயே இருக்கிறது. நிஜத்திலும் நடப்பிலும் எது தேவையோ அது இல்லாமல் இருவரும் இங்கே பக்கிரிகளாகவே இருக்கிறார்கள். ஆக வாழ்க்கை எப்போதும்போலத்தான் செல்கிறது.

யாழ்ப்பாணத்தின் கலை மரபாக நீங்கள் அடையாளம் காணும் அம்சங்கள்? அவற்றின் நேற்றைய - இன்றைய மதிப்பும் நிலையும்?

கலைமரபு என்னும் சொல்லாடலின் மூலம் நீங்கள் கலாச்சாரத்தினதும் அதனோடு பிணித்துள்ள அதன் மரபுகளையும் கருதுவீர்களாயின் யாழ்ப்பாணக் கலாச்சாரம் பெருவிகிதமும் பெருநிலக்கலாச் சாரத்துடன் ஒத்துள்ளதையே காணலாம். ஏனெனில் யாழ்ப்பாணத் தமிழர்களின் கலாச்சாரத்தின் வேர் தமிழ்நாட்டிலேயே முகிழ்க்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. தமிழகத்தில் எப்படி பரதநாட்டியத்தை ஆடுகிறர்களோஅதே வண்ணந்தான் யாழ்ப்பாணத்திலும் ஆடுகின்றார்கள். பரதநாட்டியம் தமிழர்களது நாட்டி யமா, பரதமுனிவர் தமிழர்தானா என்றெல்லாம் கேள்விகள் இப்போது எழுகின்றன. ஆடலரசியும், ஆய்வாளருமான ருக்மணிதேவி அருண்டேல் அவர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலுள்ள ஒடிஸி, குச்சிப்புடி, கதகளி, கதக், மோகினியாட்டம் இவைகளின் சாரங்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு இந்துக்கோவில்களின் சிற்பங்களில் கண்ட பரத முனிவரின் கரணங்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகியவற்றில் கூறப்பட்ட ஆடல்முறைகள், தமிழ் நாட்டிலிருந்த தேவதாசிகளின் சதுர் என்கிற சிருங்கார ரசம் விஞ்சிய ஆடல்முறைகளையும் சேர்த்து -பரதநாட்டியம் - எனும் ஆடல்முறையை 1936 களில் தானே மீளுருவாக்கி அரங்கேற்றினார். அவரால் உருவாக்கப் பட்ட கலாஷேத்திரா ஆடல்கலைக் கல்லூரி மூலம் இந்தியா முழுவதும் பரதநாட்டியம் பரவ ஆரம்பித்தது. அதிலும் அவை மேலத் தூரார் பாணி, பந்தநல்லூரார் பாணி எனப்பிரிவடைந்தன. ஏரம்பு சுப்பையா என்கிற ஆடற்கலைஞரால் பரதநாட்டியம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு திரிபுரசுந்தரி யோகானந்தம் போன்ற குருத்தினி களால் மேலும் பரப்பபடலாயிற்று.

நாட்டாரியலை எடுத்தோமாயின் ஈழத்தின் தெருக்கூத்துகளும் கூத்துமரபில் வடமோடி தென்மோடி என்கிற அதன் வகைமைகளும் முக்கியமானவை. யாழ்ப்பாணத்துக் கிறிஸ்தவர்கள் விவிலியத்தில் வருகிற கதைகளையும் அதில் வரக்கூடிய பாடல்களையும் தென்மோடி முறையிலேயே ஆடியும் பாடியும் தமக்கேயான ஒரு ஒருபாணியை வளர்த்தெடுத்துக்கொண்டுள்ளனர்.

சிங்களவரும் தமது சப்பிரகா முவா மாகாணம் பஹத என்னும் தாழ்நிலப்பிரதேச, கண்டிய நடன முறைகளையும், இந்திய நடன வகைகளுடன் கலந்து சிங்கள நாட்டியம் என்னும் என்னும் ஒரு வகைமையை வரித்துக்கொண்டு அதை பல்கலைக்கழகங்களிலும் பயிற்றுவிக்கின்றனர்.

இலங்கைத்தமிழர்களுக்கான பாரம்பரியக்கூத்துமுறைகள், இந்திய நாட்டியங்களிலுள்ள நல்ல அம்சங்களையும் சேர்த்துக்கொண்டு ஈழநாட்டியம் என்கிற ஒரு வகை மையை உருவாக்குவதில் பேராசிரியர்கள் மௌனகுரு, பால -சுகுமார் ஆகியோர் முனைப்புடன் ஈடுபட் டுள்ளனர். இசைக்கும் அது பொருந் துமா என்பது ஆய்வுக்குரிய விஷயம்.

இறுக்கமான ஜாதியக் கட்டுமானமுள்ள சமூக அமைப்பாக யாழ்ப்பாணம் இயங்குவதால் ஒடுக்கப்பட்ட மக்களை இந்தக்கலை கள் பெரிதும் அடையவில்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து இசைக்கலைஞர் கள்கூட விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்தனர். போராட்ட காலங்களில் மக்கள் இத்தகைய மரபுக் கலைகளில் ஆற்றுகைகளில் ஈடுபடு தலைக் குறைத்துக்கொண்டும், அவற்றைக் கற்றலையும் பின்னடைந்திருந்தனர். அல்லது அவையை விட்டுத் தூர இருந்தனர். இனிமேல் மரபுக்கலைகளின் மேலான ஆர்வங்களுக்கு என்னாகும், எந்தத் திசையில் செல்லும் என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இலங்கையில் புத்தூரில் பிறந்தவர் என்ற வகையில் இலவசக் கல்விக்கு ஆரம்பப் புள்ளியை உருவாக்கிய சோமஸ்கந்த நிறுவனர் திரு. மழவராயரின் நோக்கு, புத்தூர் மற்றும் அதனையண்டிய அயற்பிரதேசங்களில் எத்தகைய விளைவுகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது? புத்தூர் சோமஸ்கந்தாவில் அதிக நன்மை களைப் பெற்றவர்கள் யார்?

புத்தூரில் அமெரிக்க கிறிஸ்தவ மிஷன் 1900களின் ஆரம்பத்தில் அமைத்த தேவாலயமும் பாடசாலையும் ஏற்கெனவே இருந்தன. ஆனால் அங்கே ஐந்தாவது வரையிலேயே வகுப்புக்கள் இருந்தன. அதற்கு மேலும் படிக்க விரும்பிய வசதியான வீட்டுப்பிள்ளைகள் கோப் பாய் கிறிஸ்தவக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, பருத்தித்துறை ஆகிய பிற நகரங்களிலுள்ள கல்லூரிகளுக்கும்போய் படித்தார்கள். மழவராயர் 1931 இல் ஸ்ரீ சோமாஸ்கந்தக்கல்லூரியை ஆரம்பித்ததும் புத்தூர் மாணவர்களுக்கு கல்வியைநாடிப் பிறநகரங்களுக்குப் போகவேண்டியிருக்க வில்லை. கூடவே நீர்வேலி, அச்சுவேலி, இருபாலை,மட்டுவிலன்ன அயற் கிராமங்களிலிருந்து மட்டுமல்லாமல் தொலைவான ஊர்களிலிருந்து வந்தும், சோமாஸ்கந்தக்கல்லூரியின் விடுதியில் தங்கியும் கல்விகற்க ஆரம்பித்தனர்.

அந்தக்கல்லூரியை மழவ ராயர் கந்தையா மட்டும் ஸ்தாபிக்காதிருந்தால் புத்தூர் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்திருக்கும். இவ்வளவு சமூக சிந்தனை வாய்ந்த ஒரு மனிதராக இருந்திருந்தும் எமது சமூகத் தின் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விமேம்பாட்டை மழவர் குடும்பம் கருத்தில் எடுத்துக் கொள்ளாதது ஒரு பெரும் குறையே. கல்வி மேட்டுக்குடி மக்களுக்கேயானது என்கிற விஷயம் தொடர்ந்தது. எம் கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் அக்கறை கொண்டுழைத்த அதிபர்கள் திரு. வீரசிங்கம், குமாரசுவாமி போன்றவர்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி தொடர்பாக என்ன எண்ணம் இருந்தது எனக்கூற முடியவில்லை. அவர்களுக்கு புரட்சிகரமான எண்ணங்கள் இருந்திருந்தாலுங்கூட இறுக்கமான சாதிக்கட்டமைப்பும் மேலாண்மையும் மிக்க புத்தூரின் மேட்டுக்குடியினர்அவர்களைத் தம்பாட்டுக்கு இயங்க அனுமதித்து இருக்கமாட்டார்கள். 1972 இல் துணிச்சல் மிக்க அதிபர் திரு.பொ.கனக சபாபதி அவர்கள் பதவியேற்றதும் முதற்காரியமாக ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளையும் பெரும் எதிர்ப்புக்கு மத்தியிலும் கல்லூரியில் சேர்த்துக்கொண்டார். இப்போது இலவசக்கல்வியின் பெரும் பயனை ஜாதிய வேறுபாடுகளின்றி எல்லோராலும் அடையமுடிகிறது.

உங்களுடைய கதைகளை எதிலிருந்து ஆரம்பித்தீர்கள். பின்னர் எப்படிப் பயணித்து, இப்போது எங்கே வந்து சேர்ந்திருக்கிறீங்கள். இனி உங்களின் கதைகள் செல்லும் இடம் என்னவாக இருக்கப்போகிறது?

புலம்பெயர்ந்த பின்னால்தான் அதிகக் கதைகளை எழுதினேன். முதலில் எமது நாட்டில் காணமுடியாத சில விசித்திரமான காட்சிகளையும் நடப்புகளையும் என் கதைகளில் பதிவுசெய்தேன். எமது ஹொட்டல்களில் ஒரு நிமிஷம் பிந்தினாலே துடித்துப்பதைத்து எழுந்து தொழுகைப்பாயை விரிக்கும் பாகிஸ்தானியரும், பங்களா தேஷியரும் இரவுமுழுவதும் பொருட்பெண்களை இட்டுவந்து சம்போகிப்பது. சிலர் போதைப் பொருட்களின் வியாபாரத்தில் இறங்கி பணம் பிடிபட்டதும் மாஃபியாக்கள் பாணியில் பண்ணிய அராஜகங்கள், நம்மவர்கள் வேலைதேடி அலைதல், எதுகிடைத்தாலும் செய்தல், அவர்கள் வாழ்க்கைமுறை, குடி, கும்மாளம், சினிமா படக்காட்சிகளுக்காக ஹொட்டல்மாறி ஹொட்டலாக அலைதல் என்பவற்றைப் பதிவு செய்தேன். மேலும் அக்கால கட்டத்தில் புலம்பெயர்தலில் இருந்த நடைமுறைக் கஷ்டங்கள், அபாயங்கள், அவர்கள் வந்திறங்கிய பின்னால் புதிய ஒரு நாட்டில் எதிர் கொண்ட பிரச்சனைகள், அரசு அவர்களை எப்படி நாடு முழுவதிலு முள்ள முகாம்களுக்கு பகிர்ந்து விநியோகித்தார்கள், அவர்களை பொருண்மிய அகதிகள் என்றுகூறி பணிகள் ஏதும் செய்யவிடாமல் தடுத்து வைத்தார்கள், இன்ன பிற விஷயங்களைப் படைப்புகளில் பதிவுசெய்தேன்.

அடுத்த கட்டத்தில் நான் சந்தித்த விசித்திரமான மனிதர்கள், இலங்கையரல்லாத பிறநாட்டவர்கள். அவர்கள் போக்குகள், நடத்தைகள் என்பன பேசுபொருளாயின. தொடர்ந்து எம் சமூக அமைப்பிலுள்ளஆணாதிக்கம், ஜாதியம் என்பவற்றின் பாதிப்பால் ஏற்பட்ட அனுபவங்களைப் பதிவு செய்தேன். ஜாதியம் தொடர்பாக நான் எழுதிய ‘ஜெயலலிதா’ என்கிற கதை நான் விரும்பிய கோணத்தில் எவராலும் இன்றுவரை பார்க்கப்படவே இல்லை. அதேபோல் ‘பால்வீதி’யையும் சொல்லலாம். என்சூழலில் நான் கற்றுக் கொண்டவை, என் குழந்தைகளிடம் நான் கற்றுக்கொண்டவை எனப் படைப்புகள் விரிந்தன. அனுபவிக்க நேர்ந்த சில விஷயங்கள், கண்ணுற்ற காட்சிகள் தம்மை எழுதச்சொல்லி வந்து வந்து நடுமண்டையில் நெருக்கும். அப்போது அவற்றை எழுதாமலிருக்க முடியாது. ஆனாலும் எப்போது எதைப்பற்றி எழுதுவது என்பதில் என்னிடம் ஒரு திட்டமோ தீர்மானங்களோ இற்றைவரை இல்லை. சில எழுத்தாளர்கள் ஒரே மூச்சில் எழுதி முடித்துவிடுவார்கள், அப்படி எழுத என்னால் முடியவே முடியாது. ஒரு கதையை எழுதிக்கொண்டுபோய் முடிக்க ஒரு பத்தியே இருக்க, அதிகம் மனதில் காட்சிகளாக விரிந்து விரிந்துகொண்டிருக்கும் இன்னொரு கதையின் பகுதியை எழுதுவதுமுண்டு. கணினியில் எழுத ஆரம்பித்தபிறகு காட்சிகளையும் கதைகளையும் முன்பின்னாக நகர்த்தும் வசதி வந்துவிட்டதும் படைப்பாளிக்கு அனுகூலமான விஷயங்கள். நீண்ட தொடருந்துப் பயணங்களின்போது சிலர் மாய்ந்து மாய்ந்து புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பார்கள். இரவாயிருந்தால் சரி எனக்கு தொடருந்து இட்டுச்செல்லும் உலகத்தின் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பதே வாசிப் பதைவிடவும் பிடிக்கும்.நான் இன்னும் படிக்க எண்ணியிருக்கும் நூல்கள் அனைத்தையும் எனது ஆயுளுக்குள் படித்து முடிப்பேனோ என்ற சந்தேகம் வந்துவிட்டது.

எழுத்து முயற்சிகள் எதுவும் வாசிப்புக்கு இடையில்தான் நிகழ்கின்றன. ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பெற்றோரின் அலரகவையாள் ஒருத்தி இரண்டு வாழ்க்கைமுறைகள் அல்லது பண்பாடுகளுக்கிடையில் எப்படி அல்லாடுகிறதென்பதை இப்போது ஒரு நாவலில் பதிவு செய்துவருகிறேன். தொழில்முறை எழுத்தாளர்கள்போல் தினமும் 50 பக்கங்கள் எழுதிக்குவிக்கும் வல்லபங்கள் என்னிடம் இல்லை. எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றோரிடம் அவர்களின் எழுத்தைவிடவும் நான் கண்டுவியப்பது அவர்கள் இடையறாது எழுதிக்கொண்டிருப்பதைத்தான். இன்னும் தீர்க்கமாகச் சொன்னால் நான் எழுததொடங்கிய காலத்தால் எழுதிய படைப்புக்களின் எண்ணிக்கையை வகுப்பின் ஆண்டுக்கு ஐந்து தேறினாலே அதிசயம். எமது பௌதீக உடலைவிடவும் எமதுபடைப்புகளுக்கு ஆயுள் இருந்தால் மேலும் சிலகாலங்கள் நின்றுபிடிக்கும். இப்போது எங்கே வந்து நிற்கிறேன் என்று என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. அதை வாசகர்கள் விமர்சகர்கள்தான் துணியவேண்டும். பெண் என்கிற அதிசயத்தைப் பற்றியும், போட்டிகளும், கபடங்களும், கால்வாரல்களும், உலோகாயுத ஈட்டத்தில் வாஞ்சையும்

விஞ்சியுள்ள உலகில் இன்னமும் மானுடத்தைக் கைவிடாது வாழும் உண்மை மனிதர்களைப் பற்றியும் நான் இன்னும் போதிய அளவு எழுதவில்லை. இலக்கியங்கள் நல்லவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை சமுதாயத்துக்கு வழங்குகிறதோ இல்லையோ, எக்காலத்தும் சிந்தனையாளர்களும், மானுடநேயர்களும், இலக்கியர்களும் ஒரு இலட்சிய சமூகம் மீதான தமது அவாவினை, ஆதங்கத்தை, கனவுகளை பதிவுசெய்யாமலிருப்பதில்லை. இத்திசையில் இனிமேலும் எழுத முடிகிறவரை நான் விரும்புகிற, அவாவுகிற, கனவுகாண்கிற ஒரு உலகத்தையே என் படைப்புகளில் நிர்மாணிக்க விரும்புகிறேன்.

http://www.kalachuvadu.com/issue-172/page24.asp

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.