Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

வழிகாட்டும் மனிதர்கள், முன்னுதாரண மானிடர்.


Recommended Posts

பார்வையற்றோருக்கு படியளக்கும் பாரதி யுவகேந்திரா- மதுரை மண்ணில் ஒரு மகத்தான சேவை

 

nellai2_1923691g.jpg

பார்வையற்ற பெண்ணுக்கு அரிசி வழங்குதல்

‘ஊருக்கு உழைத்திடல் யோகம்’ - மகாகவி பாரதியாரின் இந்த வைர வரிகளுக்கு பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறது மதுரையில் உள்ள ’பாரதி யுவகேந்திரா’.
 
பார்வையற்ற 250 குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ அரிசியும் ஆண்டு தவறாமல் புதுத்துணியும் எடுத்துக் கொடுத்து அந்த குடும்பங்களின் பசியாற்றிக் கொண்டிருக்கிறது பாரதி யுவகேந்திரா.
 
மாணவர்களுக்கு விருது
 
இந்தச் சேவையை தொடங்கியதன் நோக்கம் குறித்து விளக்குகிறார் பாரதி யுவகேந்திராவின் நிறுவனர் நெல்லை பாலு. ’’கல்லூரியில் படிக்கும்போதே பேச்சுப் போட்டிகளில் அதிகமாக பங்கெடுப்பேன். 1982-ல் அகில இந்திய அளவிலான பேச்சுப் போட்டியில் குடியரசுத் தலைவர் விருதும் பெற்றேன். அப்போது என்னை எல்லோரும் பாராட்டியது போல் நாமும் இளைஞர்களை ஊக்குவித்து பாராட்ட வேண்டும் என்பதற்காகத்தான் பாரதி யுவகேந்திராவை தொடங்கினேன். எங்கள் அமைப்பின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் ’யுவஸ்ரீ கலாபாரதி’ விருதுகளை கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறோம்.
 
இந்தப் பணியை செய்துகொண் டிருக்கும்போதே எங்களின் கவனம் பார்வையற்றோர் பக்கம் திரும்பியது. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பார்வையற்றவர்கள் கொத்துக் கொத்தாய் வசிக்கிறார்கள். மதுரை மாநகரம்தான் இவர்களுக்கான பிழைப்புக் களம். இவர்களில் பலர் பிச்சையெடுக்கிறார்கள்.
 
எஸ்.டி.டி. பூத், வயர் சேர் பின்னுதல் உள்ளிட்ட தொழில்களுக்கு இப்போது வேலையில்லாமல் போய்விட்டதால் பிழைப்புக்கு வழி தெரியாமல், பார்வையற்ற அப்பாவி ஜீவன்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தோம்.
 
டோனர்கள் மூலம் நிதி
 
அதன் தொடக்கமாக 25 பார்வை யற்ற குடும்பங்களுக்கு மாதம் 25 கிலோ அரிசியை வழங்குவது என தீர்மானித்தோம். இதற்கும் ஆண்டுக்கு ஒருமுறை அவர்களுக்கு புத்தாடைகள் வழங்குவதற்குமான நிதியை டோனர்கள் மூலமாக பெற்று செய்ய ஆரம்பித்தோம். சேவை உள்ளம் கொண்ட பலரும் உதவ முன்வந்தார்கள். அதனால், 25 குடும்பங்கள் என்று இருந்ததை 250 குடும்பங்களாக உயர்த்தி அவர்களுக்கு தலா 10 கிலோ அரிசியை மாதந்தோறும் வழங்கி வருகிறோம்.
 
லேப்டாப் உதவி
 
இதுமட்டுமில்லாது, பார்வையற்றோர் குடும்பங்களில் உள்ள குழந்தை களின் படிப்புக்கும் எங்களால் ஆன உதவிகளை செய்துவருகிறோம். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மாற்றுத் திறனாளி ஒருவர் பல ஆண்டுகளாக பிச்சையெடுத்து வருகிறார். அவருக்கு செயற்கை கால் பொருத்த ஏற்பாடு செய்யலாமே என்று அவரை அணுகினேன். ஆனால் அவரோ, ‘கஷ்டப்பட்டு எனது மகளை இன்ஜினீயரிங் படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு காலுக்கு செலவு செய்யும் பணத்தில் எனது மகளுக்கு லேப்டாப் வாங்கிக் கொடுங்கள்’ என்று சொன்னார்.
 
எனது நண்பர் ஒருவரிடம் இந்தச் செய்தியை பகிர்ந்து கொண்டேன். அடுத்தநாளே அவர் நாற்பதாயிரம் ரூபாயில் லேப் டாப் வாங்கிக் கொண்டுவந்து அந்தத் தகப்பனிடம் கொடுத்தார். இதேபோல், கோபி கண்ணன் என்ற மாற்றுத்திறனாளி சிறுவன் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஒன்றே கால் லட்சத்தை வசூல் பண்ணிக் கொடுத்தோம். அந்தச் சிறுவன் 4 தங்கப் பதக்கங்களோடு வெளிநாட்டிலிருந்து திரும்பினான்.
 
இப்படி எங்களால் ஆன சிறுசிறு உதவிகளை செய்து கொண்டிருக்கிறோம். திருமண நாள், குழந்தைகள் பிறந்த நாள் இவைகளுக்கு எல்லாம் ஆடம்பர பார்ட்டிகளுக்கு செலவு செய்பவர்கள், அந்தப் பணத்தை இது போன்ற இயலாத மக்களுக்கு செலவு செய்தால் எத்தனையோ பேரை கைதூக்கிவிட முடியுமே’’ என்று சிந்திக்க வைக்கிறார் நெல்லை பாலு. தொடர்புக்கு 9442630815.
 

 

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/article6063380.ece?homepage=true

Link to comment
Share on other sites

 • Replies 106
 • Created
 • Last Reply
சிறுகச் சிறுக சேமித்து ஏழைகளின் சிகிச்சைக்கு பணம் அனுப்பும் மாணவன்: ஐந்து வயதில் தொடங்கிய சேவை

 

xsanjay_1927435h.jpg.pagespeed.ic.NZ2GSH
பெற்றோருடன் சஞ்சய்குமார்

எத்தனையோ நல்ல உள்ளங்கள் ஏழைகளின் உயிர் காக்கும் மருத்துவ சேவைக்காக ஓடோடி வந்து உதவுகின்றனர். சஞ்சய்குமாரின் சேவை சற்றே வித்தியாசமானது.

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். வட்டார போக்குவரத்து அலுவல கம் தொடர்பான ஆலோசகராக இருக்கிறார். இவரது மகன் சஞ்சய்குமார். பிளஸ் 1 வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கும் இவன் இதுவரை 210 ஏழைகளின் உயிர்காக்க உதவி செய்திருக்கிறான். எப்படி? விவரிக்கிறார் வேணுகோபால்..

11 ஆண்டாக தீபாவளி கொண்டாடுவது இல்லை

சஞ்சய்க்கு அப்போ அஞ்சு வயசு இருக்கும். பேப்பர் படிச்சுட்டு இருந்தேன். அதுல, ஒரு சின்னப் பொண்ணுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவி கேட்டு போட்டோவுடன் விளம்பரம் வெளியாகி இருந்துச்சு. அதை பார்த்த சஞ்சய், ‘பேப்பர்ல எதுக்குப்பா இந்த அக்கா படத்தைப் போட்டிருக்காங்க?’ன்னு கேட்டான். ‘இந்த அக்காவோட இதயத்துல கோளாறுப்பா. அறுவை சிகிச்சைக்கு உதவி கேக்குறாங்க’ன்னு சொன்னேன். ‘நாம ஏதாச்சும் உதவி பண்ணலாமே’ன்னான். ‘அதுக் கேத்த வருமானம் நமக்கு இல்லியே’ என்றேன். அவங்க அம்மாகிட்டப் போயி ஏதோ பேசிட்டு அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்தான்.

‘ஏம்பா.. எனக்கு தீபாவளிக்குப் பட்டாசு, புதுத் துணி எடுக்க எவ்வளவு செலவு பண்ணுவே?’ன்னான். ‘2 ஆயிரம் ஆகும்’னு சொன்னேன். ‘அப்படின்னா.. இந்த வருஷம் எனக்கு பட்டாசும் வேண்டாம், புதுத் துணியும் வேண்டாம். அதுக்கு செலவு செய்யுற பணத்தை இந்த அக்காவுக்கு அனுப்பி வைச்சிருப்பா’ன்னு சொல்லிட்டு பதிலுக்குக்கூட காத்திருக்காம வெளிய ஓடிட்டான். அவன் சொன்ன மாதிரியே அந்தப் பொண்ணோட அறுவை சிகிச்சைக்கு 2 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைச்சோம்.

அந்த வருஷத்துலருந்து சஞ்சய் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கிறதில்லை. புதுத் துணி போடுறது இல்லை. அதுக்கு செலவாகும் பணத்தை கணக்குப் பண்ணி கேட்டு வாங்கி வச்சுக்குவான். அவங்க சித்தி பட்டாசு வாங்கித் தர்றேன்னு சொல்லுவாங்க. அவங்கட்டயும் ரூபாயைக் கேட்டு வாங்கிருவான். சஞ்சய் இந்த முடிவு எடுத்துட்டதால நாங்களும் பதினோரு வருஷமா தீபாவளியை ஏறக்கட்டி வைச்சிட்டோம்.

8 விருதுகள் பெற்ற சஞ்சய்

பிறந்த நாளுக்கு புது டிரெஸ் போடுறதோ, கேக் வெட்டிக் கொண்டாடுறதோ இவனுக்குப் பிடிக்காது. அதுக்குப் பதிலா, இவன் படிக்கிற வேலம்மாள் பள்ளியில ஒவ்வொரு வருஷமும் இவனோட வயதின் எண்ணிக்கைக்கு ஏற்ப மரக்கன்றுகள் நடுவான். இவனது சேவையைப் பாராட்டி இதுவரை 8 விருதுகள் கொடுத்திருக்கிறார்கள்.

இவ்வாறு கூறினார் வேணுகோபால்.

அப்பாவின் தோளைப் பிடித்துத் தொங்கியபடி அருகில் நின்று கொண்டிருந்த சஞ்சய்குமார் நம்மிடம் சொன்னான்..

210 பேருக்கு உதவி

யாருக்காச்சும் உயிர்காக்கும் சிகிச்சைக்கு உதவணும்னு பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன்னா அப்போதைக்கு என் சேமிப்புல எவ்வளவு பணம் இருக்கோ அதை எடுத்து அனுப்பி வைச்சிருவேன். ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை என இதுவரை 210 பேருக்கு ஏதோ என்னால் முடிஞ்ச சிறு உதவியைச் செஞ்சிருக்கிறேன்.

டீச்சர் தரும் டியூஷன் ஃபீஸ்

இப்பகூட 2 ஆயிரம் ரூபாய் சேமிச்சு வைச்சிருக்கேன். நாலாம் வகுப்புலருந்து மஞ்சுளா டீச்சர்கிட்ட டியூஷன் படிக்கிறேன். நான் இந்த மாதிரி உதவி செய்றேன்னு தெரிஞ்சு, ‘எனக்கு டீயூஷன் ஃபீஸ் வேண்டாம் சஞ்சய்.. அந்த பணத்தையும் உன் பணத்தோட சேர்த்து, கஷ்டப் படுறவங்க சிகிச்சைக்கு அனுப்பி வைச்சிரு’ன்னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கு நல்ல மனசு.

மருத்துவ உதவிக்காக நான் அனுப்பிய பணம் கிடைச்சதும், அவங்க எல்லாரும் மறக்காம எனக்கு நன்றி தெரிவிச்சு கடிதம் போடுவாங்க. அதையெல்லாம் பத்திரப்படுத்தி வச்சிருக்கேன். ‘எங்களைப் போன்ற ஏழைகளுக்கு உதவுவதற்காக இந்த தம்பி நல்லா படிச்சு டாக்டரா வரணும். அதுக்காக தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம்’ என்றுகூட சிலர் எழுதி இருக் கிறார்கள்.

ஆனால், ஐ.ஏ.எஸ். படிச்சு கலெக்டராகி ஏழைகளுக்குச் சேவை செய்யணும்கிறதுதான் என் விருப்பம், கனவு, ஆசை, லட்சியம் எல்லாம்!

உறுதிபடச் சொன்னான் சஞ்சய்குமார். வாழ்த்திவிட்டு விடைபெற்றோம்.

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/article6071779.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

 • 3 weeks later...

அடுத்த தலைமுறைக்கு வளமான விடியலைத் தேடும் ‘ஆக்கம்’: அறிவுஜீவிகளின் ஆக்கப்பூர்வமான சேவை

 

 

education_1959030h.jpg

 

 

யாரிடமும் நிதி வாங்காமல், பெரிய அளவில் செலவும் செய்யாமல், உடல் உழைப்பையும் கற்ற அறிவையும் வைத்து, அடுத்த தலைமுறையை ஆக்கபூர்வமாக பட்டைத் தீட்டிக் கொண்டிருக்கிறது மதுரையிலுள்ள ’ஆக்கம்’ அமைப்பு.
 
மதுரையைச் சேர்ந்தவர் விஞ்ஞானி சங்கர். இவரும் இவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து உருவாக்கியதுதான் ’ஆக்கம்’ அமைப்பு. 1995-க்கு முன்புவரை, பிளட் க்ரூப்பிங் பார்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட சொல் யூஷன்கள் வெளிநாட்டிலிருந்துதான் தருவிக்கப்பட்டன. 95-ல் அந்த சொல்யூஷனை இந்தியாவிலேயே உருவாக்கித் தந்ததில் முக்கியப் பங்கு சங்கருடையது. 15 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஆய்வறிஞராக இருந்த இவர், இந்தியா வில் காசநோய், இருதய நோய்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளராகவும் இருந்தவர்.
 
இப்போது கிராமப்புறத்து மாணவச் செல்வங் களை வீரியம் கொண்ட விதையாக உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதுகுறித்து நம்மிடம் பேசினார் சங்கர். ’’ராஜஸ்தான் மாநிலத்தில் நான் பணியில் இருந்தபோது அங்குள்ள அடித்தட்டு மக்களின் நிலைமை ரொம்ப பரிதாபமாக இருந்தது. விஞ்ஞானம் மட்டுமே அவர்களை மேம்படுத்திவிடாது என்பதால் அந்த மக்களுக்காக வேலை செய்ய நினைத்தேன். ஆனால், ’இன்னும் கொஞ்ச நாளைக்கு சம்பாதித்துக் கொடுத்துவிட்டு அப்புறம் சமூக சேவைக்குப் போ’ என்று எனது வீட்டில் முட்டுக்கட்டை போட்டார்கள்.
 
இங்கே இருந்தால் திசைமாறி விடுவேன் என்பதற்காகவே, என்னை அமெரிக்காவுக்கு அனுப்பினார்கள். அங்கு பணிசெய்து கொண்டே இந்திய கிராமங்களில் இருக்கும் அடித்தட்டு மக்களைப் பற்றிச் சிந்தித்தேன். நான்கே வருடத்தில் தமிழகம் திரும்பிவிட்டேன். பெரியவர்களுக்குப் பாடம் சொல்வதைவிட பள்ளிக் குழந்தைகளை பக்குவப் படுத்தினால் அடுத்த தலைமுறைக்கே நல்லதொரு விடியலைக் கொடுக்க முடியும் என்று நம்பினேன். அதற்காக கிராமத்துப் பள்ளிகளின் பக்கம் எனது கவனத்தைத் திருப்பினேன்.
 
இப்போதெல்லாம், புத்திசாலி பிள்ளைகளாக இருந்தாலும் கணக்கும் ஆங்கிலமும் வரவில்லை என்றால் அவர்களை பின்னுக்குத் தள்ளிவிடுகிறார்கள். இந்த அவலத்தை மாற்ற வேண்டும் என நாங்கள் நினைத்தோம். அதற்காக கிராமப்புற பள்ளிகளை தேடிப்போய் அந்தப் பள்ளி மாணவர்களின் தனித் திறமைகளை கண்டுபிடித்தோம். அவர்களுக்காக ’கோடை கால முகாம்’களை நடத்தினோம்.
 
அந்த முகாம்களில் அந்த மாணவர் களை கூச்சமில்லாமல் பேசத் தயார்படுத்தினோம். முகாம்களில் ’மொபைல் லைப்ரரி’களை வைத்து அந்த மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டினோம். வாழ்க்கைக் கல்வியை கற்பதோடு மட்டுமில்லாமல் அந்த மாணவர்களை கேள்வி கேட்கவும் வைத்தோம்.
 
நிறைய பிள்ளைகள் விண்வெளியைப் பற்றியும் விலங்குகள், பறவைகளைப் பற்றியும்தான் ஆர்வத்துடன் கேள்விகளைக் கேட்பார்கள். அவர்கள் கேட்கும் அத்தனை கேள்வி களுக்கும் பதில் கொடுப்போம்.
 
எந்தச் சூழலிலும் இலவசங்களை எதிர்பார்க்கக் கூடாது என்பதும் அவர் களுக்கு நாங்கள் கற்றுக் கொடுக்கும் முக்கியப் பாடம். தெருக்களில் கிடக்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனியாக பிரித்து எடுத்து எக்ஸ்னோராவிடம் ஒப்படைத்து அதற்காக அவர்கள் தரும் பணத்தில் மரக்கன்றுகளை வாங்கி பள்ளிகளில் நட்டு வளர்த்து வருகிறார்கள் எங்கள் மாணவர்கள். இவர்களுக்குள் இருக்கும் தனித் திறமைகளை கண்டுபிடித்து அந்தத் திறமையை மேலும் வளர்த்துக் கொள்வதற்கான அத்தனை வழிகளையும் நாங்கள் ஏற்படுத்தித் தருகிறோம்.
 
தமிழ்நாடு அறிவியல் இயக் கத்துடன் சேர்ந்து நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளால் இதுவரை 250 மாணவர்களுக்கு மேல் தங்களது கண்டுபிடிப்புகளுக்காக மத்திய அரசின் ’இளம் விஞ்ஞானி’ விருதை பெற்றிருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருமே அரசு பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
 
விரைவில் ’சயின்ஸ் பார்க்’ ஒன்றை அமைத்துக் கொடுத்து கிராமப்புற மாணவர்களின் அரிய கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் தேடிக் கொடுப்பதுதான் எங்களது அடுத்த திட்டம்’’ மகிழ்ச்சி பொங்கச் சொன்னார் சங்கர்.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதுவும் நீங்கள் சத்தமின்றி செய்யும் பேருதவிதான் ஆதவன்... தொடரட்டும் உங்கள் பணியும்...!! :)

Link to comment
Share on other sites

மனிதநேயத்துடன் மருத்துவம்: மக்கள் பாராட்டும் மயிலாடுதுறை டாக்டர் வி.ராமமூர்த்தி

 

manidham_1971074h.jpg

மனைவி நீலாவுடன் டாக்டர் ராமமூர்த்தி. படம் : எஸ். கல்யாணசுந்தரம்.

பணம், காசு என அலையும் இந்த காலத்திலும் பணத்தை ஒரு பொருட் டாகப் பார்க்காமல் கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு மனிதநேயத்துடன் மருத்துவம் பார்த்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த டாக்டர் வி. ராமமூர்த்தி.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் வசித்து வரும் இவருக்கு சொந்த ஊர் முடிகொண்டான் கிராமம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது வயது 79. மயிலாடுதுறையில் அதே இடத்தில் 1959-ம் ஆண்டு முதல் மருத்துவம் பார்த்துவரும் இவரை தெரியாதவர்கள் அந்த ஊரில் யாரும் இருக்க முடியாது.

இன்றும் அதே துடிப்புடனும் அக்கறையுடனும் சிகிச்சைக்கு வருபவர்களை அணுகி மருத்துவம் செய்கிறார். சிகிச்சை பெற கட்டணமாக இவ்வளவு தர வேண்டுமென இவர் கேட்பதில்லை. அவர் பணத்தை கைநீட்டியும் வாங்குவதில்லை. தங்களால் எவ்வளவு முடியுமோ (ரூ.5 அல்லது ரூ.10 தான்) அவரது மேஜை மீது வைத்துச் செல்லலாம். காசு இல்லை என்றாலும், போயிட்டு வா என தோளைத் தட்டி அனுப்பி விடுவார். இவர் எழுதும் மருந்துகளும் ரூ.20 அல்லது ரூ.30-க்குள்தான் இருக்கும்.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்தால் நீ எந்த ஊரு, என்ன படிக்கிற, எங்க தங்கியிருக்கிற என வாஞ்சையோடு விசாரித்து விட்டு, ஊருக்கு செல்ல செலவுக்கு பணம் வைத்திருக்கியா, இந்தா இதை வைச்சுக்கோ என ரூ.10 அல்லது ரூ.20 கொடுத்து அனுப்புவார் டாக்டர் ராமமூர்த்தி.

எப்படி உங்களால் இது முடிகிறது என அவரிடமே கேட்டதற்கு அவர் “தி இந்து” நிருபரிடம் கூறியது:

சென்னை மருத்துவக் கல்லூரியில்தான் மருத்துவம் படித்தேன். அங்கு பேராசிரியர்களாக இருந்தவர்கள் மருத்துவத் துறையில் மிகப்பெரிய ஜாம்பவான்கள். இவர்கள் யாரும் தனியாக கிளினிக் வைத்து பணம் சம்பாதித்தவர்கள் அல்லர். இவர்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்ததெல்லாம் மருத்துவத்தை மனிதாபிமான அடிப்படையில் செய்யுங்கள், பணத்துக்காக செய்யக் கூடாது என்பதுதான்.

ஏழைகளிடம் காசு வாங்காதே, ஒத்தாசையாக இரு என 45 ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சி மகா பெரியவர் கூறினார். அதை இன்றும் கடைப்பிடித்து வருகிறேன்.

என்னிடம் வரும் மக்கள் பாசத்துடன் வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்கிறேன். மருத்துவத் தொழில் இன்று அப்படி இல்லை. பணம் கொடுத்துதான் மருத்துவராக வேண்டியிருக்கிறது. அந்த பணத்தை திரும்ப சம்பாதிக்க மக்களிடம் பணம் அதிகமாக வாங்க வேண்டியிருக்கிறது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 20 ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது பல்வேறு பணிகளுக்காக ஏராளமானோருக்கு லட்சக்கணக்கான கையொப்பங்களை (அட்டெஸ்டெட்) இலவசமாகவே போட்டிருக்கிறேன்.

நான் பெற்ற பெரும் பாக்கியமே எனது மனைவி நீலாதான். எனது மனிதாபிமான சேவைக்கு எனது மனைவியும் முக்கிய காரணம். திருமணமானதிலிருந்து இதுவரையில் பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென அவர் கேட்டதில்லை. அதனால்தான் மருத்துவத் தொழிலை சேவையாக செய்ய முடிகிறது. நான் சொத்துகள் எதுவும் சேர்க்கவில்லை, ஆனால் ஏழை மக்களின் பாசத்தைத்தான் சொத்தாக சேர்த்துள்ளேன்.

எனது மகன் சீனிவாசன் மருத்துவம் படித்துவிட்டு சென்னையில் சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறையிலிருந்து வருகிறோம் என யார் சென்றாலும், அவர்கள் மீது தனி அக்கறை எடுத்து மருத்துவம் செய்கிறார். பலரும் இங்கு வந்து அதை என்னிடம் சொல்லும்போது எனக்கு பெருமையாக இருக்கும். அவன் கார் வாங்கியுள்ளான், பங்களா வாங்கியுள்ளான் என்பதில் எனக்கு திருப்தி இல்லை. அவனும் ஏழைகளுக்கு உதவுகிறான் என்பதில்தான் எனக்கு திருப்தி என்றார் மனிதநேய மருத்துவர் ராமமூர்த்தி.

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/article6154524.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

இயலாதவர்களுக்கும் இயற்கைக்கும் சேவை: கோவை கால்டாக்ஸி டிரைவரின் கருணை நிறைந்த மனம்

 

xtree_1973899h.jpg.pagespeed.ic.t2RSCRZl
நிழல் மைய அமைப்பாளர்களுடன் முருகன். (நிற்பவர்களில் இடமிருந்து நான்காவது.)

‘மரத்தை வெட்டாதீர்கள் என்று வெறும் வார்த்தைகளால் சொல்லிக் கொண்டே இருப்பதைவிட, முடிந்தவரை மரக் கன்றுகளை நட்டுப் பழகுங்கள்’என்கிறார் கால்டாக்ஸி டிரைவரான முருகன். கோவை பகுதியில் இவர் நட்டு வளர்த்திருக்கும் மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? பத்தாயிரம்.

சென்னை சூளைமேடு ஏரியாவைச் சேர்ந்தவர் முருகன். 1992-ல் பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்தவர், குடிகாரத் தந்தையின் இம்சை தாங்காமல் வீட்டிலிருந்து 300 ரூபாயை எடுத்துக் கொண்டு கிளம்பினார். கண்காணாத் தூரத்தில் போய் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் முருகனுக்குள் அப்போது இருந்த எண்ணம். கையில் இருந்த காசெல்லாம் கரைந்து முடிந்தபோது, கோவை சிறுமுகையில் ஒரு பிள்ளையார் கோயிலில் படுத்துக் கிடந்தார் முருகன். பிறகு என்ன நடந்தது? அவரே விவரிக்கிறார்.

‘‘பிள்ளையார் கோயிலில் அந்த இரவில் என்னைச் சுற்றி ஆதரவற்ற வயதான பெரியவர்கள் சிலரும் படுத்திருந்தனர். அப்போது லேசாக மழை தூர ஆரம்பித்தது. அங்கிருந்த செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர், என்னுடைய கதையைக் கேட்டு விட்டு என்னை சமாதானப்படுத்தி அங்கிருந்த திண்ணையில் படுக்க வைத்தார்.

அன்று இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. வயதான இந்தப் பெரியவர்களுக்கு எல்லாம் ஒரு வாழ்க்கை இருக்கும்போது, பதினாறு வயதில் நாம் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். பொழுது விடிந்ததும், அங்கிருந்தவர்கள் 500 ரூபாய் வசூல் செய்து கொடுத்து என்னை சென்னைக்கே போகச் சொன்னார்கள். ‘எனக்கு பணம் வேண்டாம். ஏதாவது வேலை வாங்கிக் கொடுங்கள்’ என்றேன். ஓட்டலில் சப்ளையர் வேலை வாங்கிக் கொடுத்தார்கள். மூன்று மாதம், ஒரே பேன்ட், சட்டையைப் போட்டுக் கொண்டு வேலை பார்த்தேன். அதன்பிறகு கூரியர் சர்வீஸ், பேப்பர் பாய், லாட்டரிச் சீட்டு, ஊதுபத்தி சேல்ஸ் இதெல்லாம் பார்த்து விட்டு ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டேன்.

ஆட்டோ ஓட்டியதும் மாதம் 3 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது. அதில் ஒரு பகுதியை, இயலாதவர்களுக்கு சோறுபோட ஒதுக்கினேன். வாரத்தில் ஒருநாள் வீட்டில் நானே சமைத்து வீதியோரத்து ஆதரவற்றோர் 50 பேருக்கு மதிய உணவு கொடுக்க ஆரம்பித்தேன். நான் ஆட்டோ ஓட்டிய ஹார்டுவேர்ஸ் கம்பெனி முதலாளி சபீர் இமானியிடம் ‘இயலாதவங்க ளுக்கு உதவி பண்றதுக்காக இன்னும் அதிகமா வேலை செய்யணும்னு நினைக்கிறேன்’னு சொன்னேன். அவர், மேலும் மூன்று குட்டியானை வண்டிகளை வாங்கிக் கொடுத்து ‘இதில் கிடைக்கிற வருமானத்தையும் ஆதரவற்றோருக்கு சேவை செய்ய வெச்சுக்கப்பா’ என்றார்.

அத்துடன் குழிவெட்டும் மெஷின் ஒன்றையும் வாங்கிக் கொடுத்தவர், ‘கோவையில் 25 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டுட்டா இந்த மெஷின் உனக்கே சொந்தம்’ என்று சொன்னார். மளமளன்னு மரக் கன்றுகளை வைக்க ஆரம்பிச்சேன். எனக்கு ஜிம்முக்குப் போகும் பழக்கம் உண்டு. அங்கு வரும் மது அருந்தாத, புகை பிடிக்காத இளைஞர்கள் சிலரை நண்பர்களாக்கிக் கொண்டு ‘நிழல் மையம்’ என்ற அமைப்பை உருவாக்கினேன். இப்போது, கால்டாக்ஸி ஓட்டுகிறேன். இதில் கிடைக்கும் வருமானத்தில், ஞாயிறுதோறும் கோவையில் 11 ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள 600 பேருக்கு மதிய உணவு கொடுக்கிறேன்.

இந்த ஜீவன்களுக்கு இன்னும் நிறைய உதவ வேண்டும் என்பதற்காக வருஷம் 365 நாளும் உழைக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவைப் பகுதியில் 32,200 மரக் கன்றுகளை இலவசமாக வழங்கி இருக்கிறோம். நாங்களே 15 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டு, அதில் பத்தாயிரம் கன்றுகள் நல்ல நிலையில் வளர்ந்து நிற்கின்றன. இதுமட்டுமில்லாமல், கோவையை பிச்சைக்காரர்கள் இல்லாத மாநகராக மாற்ற வேண்டும் என்பதற்காக 5 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

எங்களது முயற்சியால்தான் கோவையில் பிச்சைக்காரர் களுக்காக அரசு தரப்பில் ஒரு காப்பகம் தொடங்கப்பட்டது. இடையிடையே, ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கும் எங்களால் ஆன உதவிகளை செய்கிறோம். பெரிய அளவில் வருமானம் இல்லாவிட்டாலும் ஏதோ, இருக்கின்ற வருமானத்தை வைத்து இயலாதவர்களுக்கும் இயற்கைக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறோம்…’’ என்று சொல்லி முடித்தார் முருகன்.

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article6159786.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
இலவச மரக்கன்றுகள்: செலவின்றிச் சாதிக்கும் ஆசிரியர்

 

x2_1989693h.jpg.pagespeed.ic.4HQdmXYwWo.

மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கே.பி.ரவீந்திரன்

நமது பாட்டன், முப்பாட்டன் காலத்தில் நேரில் பார்த்த பாரம்பரிய மரங்கள் எல்லாம், மழை வளம் இல்லாமல் அழிந்துவரும் அரிய வகை மரங்கள் பட்டியலில் இடம்பிடித்து வருவதாக அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் அருகே மாணவர்களின் உதவியுடன் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறார் ஒரு பள்ளி ஆசிரியர். அவரது முயற்சியைப் பாராட்டித் தமிழக அரசு ‘சுற்றுச்சூழல் செயல் வீரர்', ‘சாதனையாளர்' விருதுகளை வழங்கியுள்ளது. மத்திய அரசு ‘பசுமை மனிதர்' என்ற விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.

செலவில்லா நர்சரி

திண்டுக்கல் அருகேயுள்ள பட்டிவீரன்பட்டியில் உள்ள என்.எஸ்.வி.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேசியப் பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கே.பி. ரவீந்திரன்தான் அவர். தேசியப் பசுமைப் படை மாணவர்கள் மூலம், பள்ளியிலே 2 ஏக்கரில் நர்சரி அமைத்து, பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களின் விதைகளைச் சேகரித்து, எந்தச் செலவும் இல்லாமல் மரக்கன்றுகளை உற்பத்தி செய்கிறார். இந்த மரக்கன்றுகளை வனத்துறை, அரசு அலுவலகங்கள், மற்ற பள்ளிகள், கல்லூரிகள், சுற்றுவட்டார 50 கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறார்.

இவர்களது நர்சரியில் தேசியப் பசுமைப் படை மாணவர்கள் மூலம் தினசரி 200 முதல் 300 புதிய மரக்கன்றுகள் உருவாகின்றன. மாதம் 8,000 மரக்கன்றுகள் வரை இலவசமாக வழங்குகிறார்கள். இந்த மரக்கன்றுகளை உருவாக்க ஒரு பைசாகூட செலவு செய்யப்படுவதில்லை. நர்சரி அமைக்கத் தேவையான நிலத்தையும் தண்ணீரையும் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது.

20 லட்சம் கன்றுகள்

"எங்கள் பள்ளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வேம்பு, பூவரசு, மயில் கொன்றை, சரக்கொன்றை, நாவல், தூங்குமூஞ்சி மரம், நாகை உள்ளிட்ட 11 வகை மரங்கள் உள்ளன. பள்ளியில் உள்ள மரங்களில் இருந்து விழும் ஒரு விதையைக்கூடக் குப்பைக்குப் போகவிடாமல் எடுத்து, காய வைத்துப் பதப்படுத்தி மரக்கன்றுகளை உருவாக்குகிறோம்.

பிளாஸ்டிக்கையும் ஒரு வகையில் ஒழித்து வருகிறோம். மரக்கன்றுகளை வளர்க்கப் பிளாஸ்டிக் பைகள் தேவைப்படுகின்றன. அதற்கு பழைய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்துகிறோம்" என்கிறார் ரவீந்திரன்.

கடந்த 15 ஆண்டுகளில் இதுவரை 20 லட்சம் மரக்கன்றுகளை இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 10 லட்சம் மரங்கள் நட்டு வளர்க்க இவர்கள் காரணமாக இருந்துள்ளனர். திண்டுக்கல் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 1,500 மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்கள். திண்டுக்கல் நீதிமன்றம், மதுரை காந்தி மியூசியம், மதுரை வேளாண்மைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பள்ளிகள், கல்லூரிகளில் இவர்கள் வழங்கிய மரக்கன்றுகள் தற்போது மரங்களாக வளர்ந்து நிற்கின்றன.

காடு காப்போம்

“நாடு சுதந்திரம் பெற்றபோது நமது நாட்டில் 60 சதவீதம் காடு இருந்தது. தற்போது வெறும் 22 சதவீதம் காடு மட்டுமே இருக்கிறது. நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காட்டு வளம் இருந்தால் மட்டுமே சராசரி மழையளவுக்கு உத்தரவாதம் உண்டு. தற்போது மழையளவு குறைந்திருப்பதற்குக் காடுகள் குறைந்ததும் ஒரு காரணம்.

நாங்கள் 15 ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்து வருகிறோம். ஒரு மரக்கன்றைத் தினசரித் தண்ணீர் ஊற்றி 2 ஆண்டுகளுக்குப் பராமரித்தால், அந்தக் கன்று தானாகவே வளர்ந்துவிடும். நாம் அனைவரும் இதைப் பின்பற்றினால் விரைவிலேயே 33 சதவீதக் காடுகளை உருவாக்கலாம். மழை வளமும் பெறலாம்'' என்கிறார் இந்தப் பச்சை மனிதர்.

 

http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/article6189774.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

 • 2 weeks later...

மழைநீர் சேகரிப்பின் மகத்துவம் அறிந்த தேனி தொழில் அதிபர்: 2 கோடி லிட்டர் தண்ணீர் சேகரிப்பு.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=142850

Link to comment
Share on other sites

பழங்குடியின மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்குகிறோம்- கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத் தலைவர் பெருமிதம்

 

x5_2003928h.jpg.pagespeed.ic.tHQ2U_VmpW.

பள்ளி சேர்க்கைப் பிரச்சாரத்தில் கருப்புசாமி

‘‘பழங்குடியின மக்களின் பிள்ளைகளை பட்டதாரிகளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத் தலைவர் கருப்புசாமி.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி. அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவரும் இவரது நண்பர்களும் சேர்ந்து சத்தியமங்கலத்தில், ‘கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம்’ (READ) என்ற அமைப்பை 13 ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதுவரை இந்த அமைப்பு என்ன சாதித்தி ருக்கிறது? கருப்புசாமியே விளக்குகிறார்.

‘‘கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வெளியில் வந்த நானும் எனது நண்பர்களும் அடிக்கடி போஸ்ட் கார்டு மூலம் எங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வோம். அப்போதுதான், தலித் மற்றும் பழங்குடியின குழந்தை களின் கல்விக்காக ஏதாவது செய்தால் என்ன என்று சிந்தித்தோம். உடனே நண்பர்கள் 7 பேர் சேர்ந்து கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தை உருவாக்கினோம்.

முதல்கட்டமாக தாளவாடி, சத்தியமங்கலம், நம்பியூர், பவானி, டி.என்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 6 ஒன்றியங்களில் உள்ள தலித் மற்றும் பழங்குடியின குழந்தைகளை கணக்கெடுத்து அவர்களுக்கு மாலை நேர பயிற்சி வகுப்புகளை தொடங்கினோம். 2 மணி நேரம் நடக்கும் வகுப்பில் தமிழ், கணிதம், ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க அந்தந்தப் பகுதி இளைஞர்களையே தன்னார்வலர்களாக நியமித்தோம். கூடவே சமுதாயம் சார்ந்த பாடல்கள், விளையாட்டுகளையும் சொல்லிக் கொடுத்தோம்.

பொதுவாக இந்தக் குழந்தைகள் மற்ற குழந்தைகளோடு ஒட்ட மாட்டார்கள்; ஒதுங்கியே இருப்பார்கள். அவர்களின் தாழ்வு மனப்பான்மையை போக்கு வதற்காக, பெங்களூரில் உள்ள மத்திய அரசின் ‘நிம்பன்ஸ்’ மனநல மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மூலம் கவுன்சலிங் கொடுக்கிறோம். பேராசிரியர்கள் எங்களுக்கு பயிற்சி கொடுப்பார்கள். அதை பிள்ளைகளுக்கு பயிற்றுவித்து அவர்களது கூச்சத்தை போக்கு வோம்.

தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க அரசே கட்டணம் செலுத்துகிறது. அதன்படி, இந்த ஆண்டு மட்டும் 6 யூனியன்களைச் சேர்ந்த 327 பேரை கல்லூரிகளில் சேர்த்திருக்கிறோம். முதல்முறையாக இந்த ஆண்டு எங்கள் பகுதிகளைச் சேர்ந்த அருந்ததியர் மாணவர்கள் நான்கு பேருக்கு மெடிக்கல் சீட் கிடைத்திருக்கிறது. இவர்கள் எங்களது மாலை நேர பயிற்சி வகுப்புகளில் படித்தவர்கள். கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் என்பதால் நான்கு பேருக்குமே கல்விக் கட்டணத்தை நன்கொடையாளர்கள் மூலம் நாங்களே வாங்கிக் கொடுத்திருக்கிறோம்.

பெரும்பாலான துப்புரவுப் பணியாளர்கள், தகுதிக்கு மீறி கந்துவட்டிக்கு கடன் வாங்கி குடித்துவிட்டு அவதிப்படுகின்றனர். அவர்களால் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிவிடக் கூடாது என்பதற்காக ‘விடியல் சொஸைட்டி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம். இதில் சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம் உள்ளிட்ட நகராட்சிகளைச் சேர்ந்த 320 துப்புரவு தொழிலாளர் குடும்பங்கள் உறுப்பினர்களாகி இருக்கிறார்கள்.

இவர்கள் ஒவ்வொருவரும் மாதம் 100 ரூபாயை கட்டாயம் சொஸைட்டிக்கு செலுத்த வேண்டும். அந்தப் பணத்தைக் கொண்டு அவர்களது குழந்தைகளின் படிப்புத் தேவைகள் உள்ளிட்டவைகளை கவனிக்க வைக்கிறோம். படிப்பைத் தொடர முடியாதவர்களுக்கு இட்லி, பேல்பூரி கடை வைக்கவும் அந்த நிதியிலிருந்து கடன் வாங்கித் தருகிறோம். வாரந்தோறும் ஏதாவதொரு கிராமத்தில் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் டாக்குமென்ட்ரி படங்களை திரையிடுவோம்.

எங்களது மாலை நேர பயிற்சி மையத்தில் படித்த சின்னையன், வழக்கறிஞராகி இருக்கிறார். நான்கு பெண்கள் நர்ஸ்களாகவும் இன்னொருவர் டீச்சராகவும் உள்ளனர். ஒருவர் ஈரோட்டில் சின்னதாக டெக்ஸ்டைல் கம்பெனி வைத்திருக்கிறார். எங்களிடம் படித்தவர்கள் அனைவரையும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை வரவழைத்து அவர்களது அனுபவங்களையும் எதிர்கால திட்டங்களையும் பகிர்ந்து கொள்வோம்.

ஹாஸ்டலில் களி தின்று வளர்ந்த எனக்கு பசியின் கொடுமையும் படிப்பின் அருமையும் தெரியும். ஆனால், இந்த அருமை புரியாமல் என் பெற்றோரைப் போலவே அருந்ததியர் மற்றும் பழங்குடியின மக்களில் பலர் தாங்களும் கொத்தடிமைகளாக இருந்துகொண்டு தங்களது பிள்ளைகளையும் படிக்க வைக்காமல் முடக்கிப் போட்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளை முன்னேற்றும் வேலையில்தான் நானும் எனது நண்பர்களும் ஈடுபட்டிருக்கிறோம்.

தற்போது 6 யூனியன்களைச் சேர்ந்த சுமார் 3,500 குழந்தைகள் எங்களது கண்காணிப்பில் படித்துக் கொண்டிருக்கின்றனர். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு அவர்களை தயார்படுத்துவதற்கான பயிற்சி மையம் ஒன்றை தொடங்குவதுதான் எங்களின் அடுத்த திட்டம்’’ என்றார் கருப்புசாமி.

 

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article6215741.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

மதியம் வரை சேவை.. மதியத்துக்கு மேல் வேலை.. - மதுரை இளைஞர்களின் மனம் நிறைந்த தொண்டு

 

1_2017770h.jpg

மருத்துவ சேவை புரியும் அஜ்மல் ஹுசைன், பிரசன்னா.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை - அது ஒரு மிகப்பெரிய மருத்துவக் கடல். வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் என எப்போதும் ஜனத் திரளாய் இருக்கும் இந்த மருத்துவமனையில் யார் எங்கே அட்மிட் ஆகி இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பதே பெரிய காரியம். அதுவும் கிராமத்து மக்கள் மருந்து, ரத்தம் தேவை என அலைவதை பார்க்கவே பரிதாபமாக இருக்கும். இவர்களுக்கு எல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய் நிற்கிறார்கள் பிரசன்னாவும் அஜ்மல் ஹுசைனும்.

பிரசன்னா டெலி மார்க்கெட்டிங் கில் டெலிவரி பிரதிநிதி, அஜ்மல் ஹுசைன் வெப் டிசைனர். காலை ஒன்பது மணிக்கெல்லாம் இந்த இரு இளைஞர்களையும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பார்க்கலாம். உதவிக்கு ஆள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் உள் நோயாளிகளுக்குத் தேவையான சிறு சிறு உதவிகளை செய்து கொடுப்பது. இயலாதவர்களின் அறுவைச் சிகிச்சைகளுக்கு தேவையான ரத்தத்தை டோனர்களிடமிருந்து பெற்றுக் கொடுப்பது இவைதான் இவர்களின் முக்கியப் பணி. மதியம் 2 மணி வரை மருத்துவமனையில் சேவையாற்றிவிட்டு அதன் பிறகுதான் தங்களது பிழைப்பைப் பார்க்கப் போகிறார்கள். போன பிறகும் யாருக்காவது அவசர உதவி தேவையெனில் இவர்களில் யாராவது ஒருவர் பறந்தோடி வந்துவிடுவார்கள். தங்களது சேவை குறித்து நமக்கு விளக்கினார் அஜ்மல் ஹுசைன்.

“எனக்கு முந்தி பிரசன்னா மட்டும்தான் ஜி.ஹெச்-சுக்குள்ள போயி அங்கிருக்கிற நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளை செஞ்சு குடுத்துட்டு இருந்தார். ஒருநாள், அவருக்கு துணையாக நான் போனேன். அங்க இருந்த நிலைமைகளை பார்த்துவிட்டு அன்றிலிருந்து நானும் இந்த சேவையில இறங்கிட்டேன். தினமும் காலையில் போனதும் அனைத்து வார்டுகளிலும் இருக்கும் நோயாளி களை போய் பார்ப்போம். குறிப்பாக, உதவிக்கு ஆள் இல்லாமல் தனியாக வந்து அட்மிட் ஆகி இருக்கும் அப்பாவி ஜீவன்களுக்குத்தான் நாங்கள் முன்னுரிமை கொடுப்போம்.

போதிய அளவு ரத்தம் கிடைக்காததால் மதுரை ஜி.ஹெச்-சில் பல பேருக்கு அதிகபட்சம் மூணு மாசம் வரைக்கும் கூட ஆபரேஷன்கள் தள்ளிப் போயிருக்கு. இதைப் புரிந்து கொண்டு, சில புரோக்கர்கள் ஒரு யூனிட் ரத்தம் 1500 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வார்கள். அதைக் கொடுத்து ரத்தம் வாங்கமுடியாத மக்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்காக நாங்களே டோனர்களை தேடிப் பிடித்துக் கொண்டுவந்து ரத்தம் கொடுக்க வைக்கிறோம்.

நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளை செய்துவிட்டு எங்களது மொபைல் எண்ணையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்துவிடுவோம். ஏதாவது அவசர உதவி தேவையெனில் அவர்கள் எங்களை போனில் அழைப்பார்கள். யாராவது ஒருவர் ஓடிப்போய் அவர்களுக்குத் தேவையானதை செய்து கொடுப்போம்.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு என்ன மாதிரி எல்லாம் பிரச்சினைகள் வருகின்றன, அவர்களுக்கு உதவி செய்ய எங்களைப் போன்ற ஆட்கள் இருந்தால் அது எந்த அளவுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்பது குறித்து இப்போது நாங்கள் ஒரு சர்வே எடுத்துக் கொண்டிருக்கிறோம். அது முடிந்ததும் இன்னும் சில நல்ல நண்பர்களை துணைக்கு சேர்த்துக் கொண்டு முழுவீச்சில் மதுரை ஜி.ஹெச்-சுக்குள் இயலாத நோயாளிகளுக்குத் தேவையான உணவு மற்றும் அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கப் போகிறோம்.

அதற்கு முன்பாக கல்லூரி மாணவர்களை வாரம் ஒருமுறை இங்கே கூட்டி வந்து, இங்குள்ள நோயாளிகள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு நம்மால் எப்படி உதவி செய்யமுடியும் என்பதை அவர்கள் உணரும்படி செய்யப் போகிறோம். சில சமயம் காலையில் வீட்டிலிருந்து ஜி.ஹெச்-சுக்குக் கிளம்புவதற்கு லேட்டாகிவிட்டால், ‘ஏம்பா இன்னும் நீ கிளம்பலையா?’ என்பார் அப்பா. இரவு வீடு திரும்பும்போது, ‘தம்பி.. இன்னைக்கி எத்தன பேருக்கு ரத்த தானம் வாங்கிக் குடுத்தே?’ என்பார் அம்மா. ‘உன்னிடம் உதவி கேட்பவர்களிடம் நீ ஒரு கூல்டிரிங்க்ஸ் கூட வாங்கிக் குடிக்கக் கூடாதுப்பா’ என்று இருவருமே சொல்வார்கள். எல்லா பெற்றோரும் இப்படி இருந்துவிட்டால் சேவை செய்யும் இளைஞர்களுக்கு பஞ்சமே இருக்காது’’ அழகாய் சொன்னார் அஜ்மல். (தொடர்புக்கு: 9500001402).

 

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article6240291.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

நிழல் தரும் ‘பகல் வீடு’: மூத்த குடிமக்களுக்கு மதுரையில் ஒரு வசந்த வாசல்

pagal_2023978h.jpg

‘பகல் வீட்டில்’ தங்கியிருக்கும் மூத்த குடிமக்கள்.

என்னதான் லட்ச லட்சமாய் சம்பாதித்துக் கொடுத்திருந்தாலும் வயதான காலத்தில் பெற்றோரை வீட்டைக் காக்கும் வாட்ச்மேனாக வும், தங்களது பிள்ளைகளை பராமரிக்கும் ஆயாக்களாகவும்தான் பெரும்பாலான பிள்ளைகள் பாவிக்கிறார்கள். ஆடி ஓய்ந்த வயதில் அவர்களின் தேவை என்ன.. அவர்களின் உணர்வுகள் எதை நோக்கிப் பயணிக்கின்றன என்பது குறித்து எவரும் கவலைப் படுவதில்லை. ஆனால், மதுரையி லுள்ள ‘பகல் வீடு’ இதுமாதிரியான மூத்த குடிமக்களுக்காகவே தனது வசந்த வாசலை திறந்து வைத்திருக் கிறது.

மதுரை பாத்திமா கல்லூரி அருகே இருக்கிறது ‘பகல் வீடு’. ஜெபசுரேஷ் என்பவர் 2009-ல் இதை உருவாக்கினார். பணி செய்யும் காலத்தில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தவர்கள் ஓய்வுக்குப் பிறகு வீட்டுக்குள் முடங்கிப் போகும்போது தனிமை அவர்களை வாட்டும். இதனால் அநேகம் பேர் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். அந்த வாட்டத்தைப் போக்க வேண்டும் என்பதுதான் ‘பகல் வீட்டின்’ நோக்கம் என்கிறார் அதன் இணைப்பாளர் ஜெபி விக்டோரியா.

மூத்த குடிமக்களுக்காக ‘பகல் வீடு’என்ன செய்கிறது? தொடர்ந்து பேசினார் ஜெபி விக்டோரியா. ‘‘ஓய்வு பெற்றவர்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் தனிமையில் விடப்படுகிறார்கள். அவர்களுக்கு பொழுது போக்குக்கும் வாய்ப்பிருப் பதில்லை. எங்களது ‘பகல் வீடு’ காலை பத்து மணியிலிருந்து மாலை நான்கு மணிவரை திறந்திருக்கும். அந்த நேரத்தில், தனிமையை தொலைத்து மனதை லேசாக்கி கொள்ள விரும்பும் மூத்த குடிமக்கள் இங்கு வருகிறார்கள். தாங்களாக வரமுடியாதவர்களை நாங்களே வாகனம் வைத்து அழைத்து வருகிறோம்.

இங்கே ஒரு செவிலியர், சமூக சேவகர், உதவியாளர் இருக்கிறார் கள். காலை பத்து மணியிலிருந்து அரை மணி நேரம் பிரேயர் நடக்கும். வயதானவர்களுக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டு உடம்பு இறுகிக் கிடக்கும். அந்த நிலையை போக்கி ரிலாக்ஸ் ஏற்படுத்துவதற்காக அவர்களுக்குச் சின்னச் சின்ன உடற் பயிற்சிகளை கொடுப்போம். காலை பதினோரு மணிக்கு தேநீர் வேளை. அதன் பிறகு மூளைக்குப் பயிற்சி. வயதான வர்களுக்கு ஞாபக மறதி அதிகமாக இருக்கும். அதை போக்குவதற்காக அவர்களுக்கு குறுக்கெழுத்துப் போட்டிகள் உள்ளிட்ட சின்னச் சின்னப் பயிற்சிகளைக் கொடுப் போம்.

மதியம் நாங்களே மதிய உணவு கொடுப்போம். இங்கு நூலகம் ஒன்றும் இருக்கிறது. விருப்பமானவர்கள் புத்தகங்கள் படிக்கலாம். வயதானவர்கள் விளையாட வசதியாக இண்டோர் கேம்ஸ்களையும் வைத்திருக்கி றோம். மதியத்தில் ஓய்வெடுக்க படுக்கை வசதியும் உண்டு. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை யாராவது ஒரு மருத்துவரை அழைத்து வந்து இவர்கள் மத்தியில் பேச வைப்போம். அப்போது தங்களின் உடல்நிலை தொடர்பான சந்தேகங்களை இவர்களே நேரடி யாக மருத்துவரிடம் கேட்டு தெளிவு பெறுகிறார்கள்.

இங்குள்ளவர்களை மாதம் ஒருமுறை ஷாப்பிங்கும் அழைத்துச் செல்வோம். நல்ல சினிமா ஏதாவது வந்தால் சினிமா தியேட்டருக்கும் இவர்களை மொத்தமாக அழைத்துச் செல்வோம். இதில்லாமல் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை இவர்களை, மதுரைக்கு அருகிலேயே எங்கா வது ஒரு இடத்துக்கு பிக்னிக் அழைத்துச் செல்வோம். ‘பகல் வீட்டில்’ இருக்கும் முதியவர்களிடம் நாங்கள் எதற்காகவும் பணம் வாங்குவதில்லை. அத்தனையை யும் இலவசமாகவே செய்து தருகிறோம்.

அதேசமயம் மது, சிகரெட், பாக்கு பழக்கம் உள்ளவர்களை நாங்கள் இங்கே அனுமதிப்ப தில்லை. இப்போது ‘பகல் வீட்டில்’ ஆண்களும் பெண்களுமாக மொத்தம் 54 பேர் இருக்கிறார்கள். இவர்களில் டாக்டர், தாசில்தார், தலைமையாசிரியர் என பலதரப் பட்டவர்களும் இருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அவர்களால் பெற்றோரை சந்தோஷ மாக வைத்துக்கொள்ள முடிய வில்லை. ஆனால், இங்கே அவர் கள் தங்களது பகல் பொழுதை மன அழுத்தம் இல்லாமல் சக தோழர் களுடன் மகிழ்ச்சியாய் கழித்து விட்டுப் போகிறார்கள். பள்ளிக்கூடத் துக்கு வந்து போகும் குழந்தை களைப்போல இவர்கள் இங்கு வந்து போகிறார்கள். வயதானவர்களும் குழந்தைகள் தானே’’ புன்முறுவ லுடன் முடித்தார் விக்டோரியா.

 

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/article6251884.ece

 

Link to comment
Share on other sites

பிறர் பசியாறவே எங்களின் வாழ்நாள்..! - ரெங்கராஜ தேசிக அறக்கட்டளை அன்பர்களின் தொண்டுள்ளம்.

2_2029606g.jpg

 

மரத்தடியில் அமர்ந்து சாப்பிடும் நோயாளிகளின் உறவினர்கள். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

 

1_2029605g.jpg

 
அன்னதான வாகனத்தில் வழங்கப்படும் உணவை வரிசையில் நின்று வாங்குகின்றனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
 
 
“அன்னதான வண்டி வந்துருச்சு சீக்கிரமா வாங்க...” திருச்சி அரசு பொதுமருத்துவமனை எதிரே உள்ள சிறிய தெருவில், இப்படி குரல்கள் ஒலிப்பதை தினமும் காலை 6 மணிக்கும் மதியம் 12 மணிக்கும் கேட்கமுடியும்.
 
அன்னதான வாகனம்! ஆம், தினமும் காலையில் 300 நோயாளிகளுக்கு கஞ்சி, மதியம் சுடச்சுட 300 முதல் 400 பேருக்கு உணவு என 22 ஆண்டுகளாக தொடர்ந்து தொய்வின்றி வழங்கி வருகின்றனர் ரெங்கராஜ தேசிக அறக்கட்டளை அன்பர்கள். ஒரு மதிய வேளையில் மிகுந்த அக்கறையுடன் சாம்பார் சாதம் வழங்கி கொண்டிந்த அறக்கட்டளை நிர்வாகி ரவீந்திரகுமாரிடம் பேசியபோது:
 
சுடுதண்ணீருக்காக
 
இப்போதெல்லாம் அரசு மருத்து வமனைகளில் ஏராளமான வசதிகள் உள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன் நோயாளிகளுக்கு கொடுக்க சூடான தண்ணீருக்காக, நோயாளிகளின் உறவினர்கள் டீக்கடைகளைத் தேடி அலைவர். இதைப் பார்த்த என் தந்தை கோவிந்தராஜ், மருத்து வமனை எதிரே இருக்கும் தெருவில் சூடான தண்ணீரை தினந்தோறும் இலவசமாக வழங்கி வந்தார்.
 
அப்போதுதான் அவருக்கு தெரியவந்தது. நோயாளிகளுக்கு எளிதில் செரிக்கும் உணவாக மருத்துவர் பரிந்துரைக்கும் கஞ்சி மட்டும் மருத்துவமனையை சுற்றி எந்த கடையிலும் கிடைக்கவில்லை என்று. அதையடுத்து சில அன்பர்கள் உதவியுடன் தினமும் காலை 6 மணிக்கு இஞ்சி, பூண்டு கலந்த அரிசிக் கஞ்சி வழங்க ஆரம்பித்தவர், அன்பர்கள் பலரின் ஆதரவு கிடைக்கவே மதிய உணவும் வழங்க ஆரம்பித்து விட்டார்.
 
அதிகாலை 3 மணிக்கு எழுந்து
 
அன்று அவர் ஆரம்பித்தது இன்று வரை தொடர்கிறது என்றவர், “ஆரம்பத்தில் தந்தைக்கு உதவியாக சென்ற நான் பசியில் வருபவர்களுக்கு அன்னதானம் வழங்குவதில் ஏற்படும் மனதிருப்தியால் ஈர்க்கப்பட்டு, தற்போது முழு நேரமாக இச்சேவையில் ஈடுபட்டுள்ளேன். கஞ்சி தயாரிக்க அதிகாலை 3 மணிக்கே எழுந்து விடுவேன். சமையலில் என் மனைவி உதவுகிறார்.
 
ஏழை எளியவர்கள், பெரும் பாலும் சிகிச்சைக்கு வரும் அரசு மருத்துவமனையில் ஒரு வாரம் முதல் 15 நாள் வரை நோயாளிகள் தங்குகின்றனர். இவர்களை பார்த்துக்கொள்ளும் உறவினர்கள் கையில் கொண்டு வரும் பணம் ஒருசில நாட்களில் காலியாகிவிடும் அப்புறம் எங்கள் அன்னதான வாகனத்தைப் பற்றி பயனடைந்தவர் சொல்லக் கேட்டு இங்கு வருபவர்கள் சிகிச்சை முடிந்து செல்லும் வரை அன்னதான வாகனத்தின் வருகைக் காக காத்திருப்பது வழக்கம்.
 
அழுகையே வந்துவிட்டது
 
ஒரு மனிதனின் பசியை மட்டும் போக்கி விட்டால் அவனுக்கு அடுத்து தவறான சிந்தனை ஏதும் தோன்றாது என்பது என் கருத்து. நல் உள்ளம் கொண்ட பலர் தங்களின் திருமணம், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நோயாளிகளுக்கு கஞ்சி மற்றும் உணவு வழங்க உதவி செய்து எங்களுக்கு தோள் கொடுக்கின்றனர்.
 
பொருளாதார சிக்கலால் சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் மதியம் உணவு வழங்க செல்லவில்லை. அடுத்தநாள் வழக்கம் போல் சாதம் எடுத்துச் சென்றபோது, உணவு வாங்க காத்திருந்த ஒருவர் ‘‘நேற்று நீங்கள் வராததால் சாப்பிடவில்லை, கையில் காசும் இல்லைங்க ஐயா” என்றார். இதைக் கேட்டு நான் அழுதுவிட்டேன்.
 
அன்றுமுதல் எப்பாடுபட்டாவது ஒரு மாதம் உணவு வழங்க தேவையான அரிசி உள்ளிட்ட பொருட்களை சேமிப்பாக வைத்து விடுவேன். பண உதவி மட்டுமின்றி பொருட்களாக வழங்குபவர்கள், அன்னதானம் வழங்கும்போது உதவி செய்வது என பல அன்பர்கள் இருப்பதால் தொடர்ந்து தொய்வின்றி வழங்க முடிகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் சாப்பிடும் சாப்பாடு என்பதால் மிகவும் கவனமாக சமைக்கிறோம்’’ என்கிறார் கனிவுடன்.
 
அன்னதானம் வழங்குவதற் காகவே அர்ப்பணிப்புடன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டுவரும் இவர்களின் சேவை மேலும் சிறக்க வாழ்த்துவோமே...!
 

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/article6262762.ece?homepage=true

Link to comment
Share on other sites

 • 1 month later...

உலகெங்கும் மணக்கிறது நம்மூர் தோசை...

 

8_2086771h.jpg

 

தமிழக கிராமத்திலிருந்து மும்பைக்கு கிளம்பி சர்வர் வேலை பார்த்தவர் இன்று உலகெங்கும் தனது ஹோட்டல் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியிருக்கிறார்!

சமீபத்தில் சென்னையில் தனது கிளையை நிறுவ வந்திருந்தவரைச் சந்தித்தோம்.

“பேரு கணபதிங்க. சொந்த ஊர் தூத்துகுடி பக்கம் நாகலாபுரம். அப்பாவுக்கு அடுப்புக் கரி வியாபாரம். ஏழு குழந்தைகள். குடும்பத்துல வறுமை. சின்னப் பையனா இருக்கிறப்பயே சென்னைக்கு ரயில் ஏறிட்டேன். காபிக் கடையில வேலை. டம்ளர் கழுவணும். மாசம் 200 ரூபாய் சம்பளம். கடைக்கு வர்ற ஒருத்தர், ‘மும்பையில வேலை வாங்கித்தர்றேன், ரெண்டாயிரம் ரூபாய் சம்பளம். ஆனால், எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்கணும்’னு சொன்னார். சரின்னு கிளம்பிட்டேன். மும்பை ரயில்வே ஸ்டேஷன் இறங்கிப் பார்த்தா அவரைக் காணோம். கையில் சில்லறைக் காசுதான் இருந்துச்சு. ஒரு தமிழ் டாக்ஸிக்காரர் இரக்கப்பட்டு தாராவி மாரியம்மன் கோயில் வீதியில் இறக்கிவிட்டார்.

ரோட்டோரக்கடை

அங்க இருந்த ரோட்டோர சாப்பாட்டுக் கடை அம்மாகிட்ட வேலை கேட்டேன். தட்டுக் கழுவச் சொன்னாங்க. சம்பளம் கிடையாது. வயித்துக்கு சாப்பிட்டுக்கலாம். ராத்திரி மாரியம்மன் கோயில் திண்ணையில படுத்துக்குவேன். அப்புறம் ஒரு டீக்கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். சமோசாவுக்குப் பதிலா வெங்காய பஜ்ஜி, உளுந்து வடை, கீரை போண்டாவை அறிமுகப்படுத்தினேன். வியாபாரம் நல்லா போனது. கஸ்டமர் ஒருத்தர் பார்ட்னர்ஷிப்பில் கடை போடலாம்னு கூப்பிட்டார். அப்ப அந்த ஏரியா எல்லாம் சப்பாத்தி, புரோட்டா மட்டும்தான். நாங்க இட்லி, தோசை, பணியாரம் போட்டோம். வியாபாரம் பிச்சுக்கிட்டுப் போச்சு. ஒரு மாசம் கழிச்சு கணக்கு பார்க்கலாம்னு கேட்டேன். மனுஷன், ‘சம்பளம் ஆயிரம் ரூபாய்; இஷ்டம் இருந்தா இரு’னுட்டாரு.

வண்டிக்கடை

கோபத்துல கிளம்பி வாஷி ரயில்வே ஸ்டேஷன் பக்கம் வண்டிக் கடையைப் போட்டேன். ஊர்ல இருந்த ரெண்டு அண்ணன்களை அழைச்சுக்கிட்டேன். இட்லி, தோசை மட்டும்தான். ஆனால், தொட்டுக்க கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி, கேரட் சட்னி, காய்கறி சட்னி, சாம்பார், பொடின்னு நிறைய வெரைட்டி கொடுத்தோம். ரோட்டோரக் கடைன்னாலும் நாங்க பேண்ட், சர்ட் போட்டுக்கிட்டு கைக்கு உறை எல்லாம் மாட்டிக்கிட்டு சப்ளை செஞ்சோம். நாலைஞ்சு மாசம் வியாபாரம் நல்லா போச்சு.

அப்பதான் எதிர்ல மெக் டோனால்டு கடையை ஆரம்பிச்சாங்க. அது வந்ததும் என் கடையில் வியாபாரம் படுத்துக்கிச்சு. அப்படி என்னதான் அங்கிருக்கும்னு போய் சாப்பிட்டுப் பார்த்தோம். நூடுல்ஸ், கோபி மஞ்சூரியன்னு வெளிநாட்டு அயிட்டங்க... நம்மூர் தோசையிலேயே இதை எல்லாம் கொண்டு வந்தால் என்னன்னு யோசிச்சோம். பேப்பர் ரோஸ்ட்டுல நூடுல்ஸ் பரப்பி இஞ்சி, பூண்டு, வெங்காயம் அரைச்சு வதக்குன பேஸ்ட், தக்காளித் தொக்குத் தடவி மொறுமொறுன்னு சுட்டு, சுருட்டி அழகா கட் பண்ணிக் கொடுத்தோம். சாப்பிட்டவங்க ஏதோ பெரிய ரகசியம் மாதிரி ‘அப்படி என்ன உள்ளே வெச்சிருக்கீங்க?ன்னு கேட்டாங்க. ஏரியா எல்லாம் பரபரப்பா எங்க தோசையைப் பத்தி பேச்சு. உடனே அதே ஸ்டைல்ல பன்னீர் தோசை, கோபி மஞ்சூரியன் தோசைன்னு அடிச்சு விட்டோம். பக்கத்து ஸ்டேஷன்ல இருந்து எல்லாம் ரயில் ஏறி வந்து சாப்பிட்டுப் போனாங்க.

ஓடிய மெக் டோனால்டு

மெக் டோனால்டு கடைக்குக் கூட்டம் குறைஞ்சு, கொஞ்ச நாள்ல அவங்க கடையைக் காலி பண்ணிட்டாங்க. பக்கத்துலயே நாங்க ஒரு கடையை பிடிச்சோம். தோசை மட்டும்தான். ஆனா, வெளிநாட்டுக்காரன் எதை எல்லாம் வெச்சு நம்மளை மயக்கினானோ அதே அயிட்டங்களை நம்ம தோசையில புகுத்தினேன்.

அமெரிக்கன் சாப்ஸி தோசை, சில்லி, சோயா நூடுல்ஸ் தோசை, சிஸ்வான் தோசை, ஜிஞ்சர் தோசை, பன்னீர் தோசை, ஸ்பிரிங் ரோல் தோசை, சாலெட் ரோஸ்ட் தோசை, ஹாராபாரா தோசை (பாலக் கீரை தோசை), மகாராஜா தோசைன்னு மொத்தம் 104 வகை தோசைகளை அறிமுகப்படுத்தினோம்.

கிளைகள்

நாலைஞ்சு வருஷத்துல மும்பையில ஐந்து கிளைகள் திறந்தோம். டெல்லி, ஜெய்ப்பூர், சூரத், பூனா, நாக்பூர் ஆகிய ஊர்களிலும் கிளைகள் திறந்தோம். அப்படியே நியூசிலாந்து, அரபு எமிரேட்ஸ், ஓமன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கட்டார், பக்ரைன், தான்சானியா ஆகிய ஊர்களிலும் இப்ப எங்கள் கிளைகள் இருக்கு. சொந்த ஊரை மறக்கக் கூடாதேன்னு இப்போ சென்னையில் கிளை திறக்கும் முயற்சியில் இருக்கோம்.” என்றார்.

7_2086772a.jpg

கணபதி

 

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88/article6369089.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

வீட்டு வேலை செய்யும் பெண்ணின் சாதனை! இன்று உலகம் அறிந்த எழுத்தாளர் 
 
writer%20465458.jpg
 
புதுடில்லிக்கு அருகில் உள்ள குர்கானில் வீட்டு வேலைகள் செய்து வரும் பேபி ஹெல்டர், உண்மையிலேயே 'வாளின் முனையைவிட பேனாவின் முனை கூர்மையானது' என்கிற முதுமொழியை அறியாமல் இருக்கக்கூடும். ஆயினும் அவர் எழுதிய சுயசரிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுதும் சென்றபின் அந்த முதுமொழி முற்றிலும் உண்மை என்பதை அவர் மெய்ப்பித்து விட்டார்.
 
பேபி ஹெல்டர் வங்கத்தில் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தவர், வாழ்க்கையின் அனைத்துவிதமான கொடுமைகளுக்கும், ஒடுக்குமுறைக்கும், அவமதிப்புகளுக்கும் உள்ளானவர். கல்வி மறுக்கப்பட்டதுடன், சிறுமியாக இருக்கும்போதே கர்ப்பிணியாக்கப்பட்டார். இத்தகைய கொடூரமான அனுபவங்கள் ஒருவரை சின்னா பின்னமாக சிதைத்துவிடக்கூடும். ஆயினும், பேபி ஹெல்டர் வித்தியாசமானவராக இருந்ததால், அவற்றையே அவர் தன் சுயசரிதையாக எழுதியதன் மூலம் இன்று உலகின் கவனத்தையே ஈர்த்துள்ளார்.
 
39 வயதாகும் பேபி ஹைதர் புதுடில்லி அருகேயுள்ள குர்கானில் வீட்டு வேலையாளாகப் பணிசெய்து வருகிறார். இவ்வாறு கூறுவது என்பது, பேபி ஹெல்டரின் ஒட்டுமொத்த அடையாளத்தின் ஒருசிறு துளியேயாகும். உலகத்தின் கண்களுக்கு, அதிலும் குறிப்பாக, அவரது வாசகர்களுக்கு, அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். 
 
இளமையில் கொடுமை
 
விரைவில் வெளிவரவிருக்கும் அவரது மூன்றாவது நூலை வாங்குவதற்காக அவரது வாசகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பேபி ஹெல்டரின் முதல் புத்தகம், வங்க மொழியில் வெளியான 'ஆலோ ஆந்தாரி' என்பதாகும். பின்னர் இது ஆங்கிலத்தில் 'மிகவும் சாதாரணமானவள் வாழ்க்கை' (லைஃப் ஆஃப் அன் ஆர்டினரி வுமன்) என்னும் பெயரில் வெளியானது. 2002இல் ஊர்வசி புட்டாலியா என்பவர் மொழியாக்கம் செய்து சுபான் புக்ஸ் என்னும் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.
 
இதில் அவர் தன் கதையை அனைவரது நெஞ்சத்தையும் தொடும் வண்ணம் சித்தரித்துள்ளார். இந்நூலில் தனக்கு தன் வாழ்வில் ஏற்பட்ட கொடூரமான அனுபவங்களைத் தன் வாசகர்களுடன் பேபி பங்கிட்டுக் கொள்கிறார். எப்போதும் தன்னைத் திட்டிக் கொண்டிருக்கும் தந்தை மற்றும் தன்னை நிராதரவாக விட்டுவிட்டு ஓடிச்சென்ற தாய். அவரது அக்கா, அவருடைய கணவரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்படுகிறாள். பேபிக்கும் கூட 12 வயதிலேயே திருமணம் ஆகிவிடுகிறது. குடிகாரக் கணவன்மார்களின் கொடுமைகளிலிருந்து தப்பிப்பதற்காக எல்லாப் பெண்களும் செய்வதுபோலவே பேபி ஹெல்டரும் ரயிலேறி குர்கானில் உள்ள தன் சகோதரரின் வீட்டிற்கு வந்தார்.
 
ஆயினும் வாழ்க்கை மேலும் கொடூரமாக மாறியது. அவர் வீட்டு வேலையாளாகச் சேர்ந்த வீட்டின் உரிமையாளர்கள் அற்ப ஊதியம் கொடுத்து அதிக வேலை வாங்கினார்கள். இரவு வெகுநேரம் கழித்துதான் வேலையை முடித்துவிட்டு அனுப்பி வைத்தார்கள். அதன் காரணமாக தன் குழந்தைகளையே அவரால் பார்க்க முடியவில்லை. தன் தாய் வரும் வரைக்கும் சிறிய பொந்து மாதிரி இருந்த அறைக்குள்தான் அவர்கள் அடைபட்டுக் காத்துக் கொண்டிருந்தார்கள். எனவே அந்த வீட்டில் வேலை செய்வதை விட்டுவிட பேபி தீர்மானித்தார். -
 
 
விடிவைக் கொடுத்த ஆண்மகன்
 
பின்னர் ஓய்வுபெற்ற ஒருவரின் வீட்டில் வேலையாளாகச் சேர்ந்தார். அவர் பெயர் பிரபோத்குமார். கல்வியாளரான அவர் நாளடைவில் பேபி ஹைதரின் நண்பராகவும், வழிகாட்டியாகவும், குருவாகவும் மாறி, பேபி ஹைதரை ஒரு சிறந்த பெண்மணியாக உருவாக்கினார்.
 
வீட்டில் நூலகத்திலிருந்த வங்க புத்தகங்கள் சிலவற்றை பேபி ஹைதர் பார்த்துப் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த பிரபோத்குமார், பேபி மீது கோபம் அடைந்து அவரைத் திட்டவில்லை. மாறாக, அவரிடம் இருந்த அறிவு தாகத்தைத் தூண்டும் விதத்தில், அவர் படிக்கும் வண்ணம் எண்ணற்ற புத்தகங்களை அவருக்குப் பரிந்துரைத்தார். அதில் தஸ்லீமா நஸ்ரினின் எழுதிய அமர் மெய்பெலா என்னும் நூல் பேபி ஹைதரின் சிந்தனையிலும் ஒரு தெளிவைக் கொண்டு வந்தது. 
 
வாழ்வைப் புரட்டிப்போட்ட புத்தகம்
 
தஸ்லீமா நஸ்ரினின் அந்த நூல் கிட்டத்தட்ட தன் வாழ்க்கையையே பிரதிபலிப்பதாக அவர் கருதினார். எனவே ஏன் நாமும் அதுபோல் நம் வாழ்க்கையை எழுதக்கூடாது என்று சிந்தித்தார். சிந்தித்ததை பிரபோத் குமாரிடம் பகிர்ந்துகொண்டபோது அவர் எழுதச் சொல்லி ஊக்கமளித்தார்.
 
தான் ஒரு சிறந்த எழுத்தாளராக மிளிர்வோம் என்று பேபி ஹைதர் கனவிலும் எண்ணிப்பார்த்ததில்லை. "என் துன்ப துயரங்களை என்னுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதத்தில்தான் நான் எழுதத் தொடங்கினேன். இவ்வாறு எழுதுவது என்னைச் சற்றே சாந்தப்படுத்தியது.
 
எனவே எழுதுவதைத் தொடர்ந்தேன்" என்று பேபி ஒப்புக்கொள்கிறார். ஆயினும் அவரது முதல் புத்தகத்தை ஒரு பதிப்பகம் வெளியிட்டு, அது பின்னர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, உலக அளவில் நடைபெறும் இலக்கிய விழாக்களில் விவாதம் செய்யக்கூடிய அளவிற்கு உயர்ந்தது. பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங் ஆகிய நாடுகளில் நடைபெற்ற இலக்கிய விழாக்களுக்கு அவர் வரவழைக்கப்பட்டு உலகின் சிறந்த எழுத்தாளர்களுக்கு இணையாக அவரும் சிறப்பிக்கப்பட்டார். 
 
வழிகாட்டியை மறக்காத ஹெல்டர்
 
writer%20465461.jpg
எழுத்தின் மூலம், பேபி ஹெல்டர் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டார். அவர்கள் நன்கு படித்து முன்னேறியுள்ளனர். மூத்தபெண் தற்போது ஒரு நல்ல வேலையில் இருக்கிறார். இவ்வாறு பேபி ஹெல்டர் உலகப் புகழ் பெற்ற போதிலும் பிரபோத்குமார் வீட்டில் தான் பார்த்து வந்த வேலையை மட்டும் அவர் இன்னமும் விடவில்லை.
 
அவருடைய வீட்டு வேலையாளாகத் தொடர்கிறார். தன்னுடைய இவ்வளவு புகழுக்கும் அவர்தான் காரணம் என்றும் என்றென்றும் நான் அவருக்குக் கடன்பட்டிருக்கிறேன் என்றும் ஹெல்டர் கூறுகிறார். கடந்தகால கசப்பான அனுபவங்கள் குறித்து அவரிடம் வினவுகிறபோது பேபி ஹெல்டர், "என்னைத் துன்பத்திற்குள்ளாக்கிய எவரையும் இப்போது நான் குறைகூறமாட்டேன். என்னைப் போன்றவர்களின் துன்ப துயரங்களுக்கு இந்தச் சமூகம்தான் பொறுப்பேற்க வேண்டும். பெண்கள் குறித்தபொதுவான அணுகுமுறை மாற வேண்டிய தேவையிருக்கிறது" என்கிறார்.
 
பேபி ஹெல்டர் மேலும் கூறுகையில், "என்னுடைய புத்தகங்கள் என்னைப் போன்ற துர்ப்பாக்கியசாலிகள் தைரியம் பெறவும், தங்களைச் சுற்றியுள்ள இருட்டிலிருந்து வெளியே வரவும் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடவும் ஊக்கத்தைக் கொடுக்கும்," என்று தான் நம்புகிறார் எனவும் கூறினார். மேலும் அவர்களும் இதுபோன்று தங்கள் கதைகளை எழுத வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஹெல்டரும் அவருக்கு வழிகாட்டிய பிரமோத்தும் மனிதநேய வரலாற்றிலும் என்றும் இருப்பார்கள்.
 
'மலரும்' இணையத்துக்காக யதுகுலன்​ -
 
writer%20465460.jpg
 
writer%20465459.jpg
 
 
 
 
 
Link to comment
Share on other sites

நானே எனக்கு வழியானேன்...

 

Tamil_News_large_1068569.jpg

 

பிறந்தது முதலே நடக்கமுடியாத ஒருவர், மற்றவர் சிரமமின்றி நடப்பதற்கான காலணி கடை வைத்து நியாயமான விலையில் விற்பது மட்டுமல்லாமல் யாரையும் சார்ந்திராமல் , யாருக்கும் பாராமாக இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.

கோவையைச் சேர்ந்த அவர் பெயர் ரமேஷ் குமார், வயது 34.வெங்கடாசலம், பழனியம்மாள் தம்பதியினரின் பிறந்த செல்ல மகன்.
பிறவியிலேயே இவருக்கு காலில் குறைபாடு உண்டு. ஆனால் அந்த குறை தெரியாதபடி பாசம் காட்டி வளர்த்தனர்.
படிக்கப்போன இடத்தில் கேலி கிண்டல் எழவே பள்ளிக்கூடம் போவதை விட்டு விட்டார், பரவாயில்லை என்று குடும்பத்தில் உள்ளவர்களே பாடம் எடுத்தனர். இதனால் தமிழ், கணிதம் ஆகியவை நன்றாக வரும்.
 
முதல் இடி; முதல் தவிப்பு:
 
மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த ரமேஷின் வாழ்க்கையில் முதல் இடி இறங்கியது, இவரது தாயும், தந்தையும் அடுத்தடுத்து இறந்த போதுதான்.
தாயும், தந்தையும் திடீரென இறந்துவிட, முதல் முறையாக தனிமைப்படுத்தப்பட்டார், முதல் முறையாக தவித்துப்போனார், முதல் முறையாக எதிர்காலத்தை எண்ணி மிரண்டு போனார்.
கலங்கி நின்ற இவரை மகேந்தினின் ஈரநெஞ்சம் அமைப்பினர் ஒரு காப்பகத்தில் சேர்த்து விட்டனர்.
காப்பகத்தில் தான் யாருக்கும் பிரயோசனமில்லாமல் இருப்பதும், இலவசமாக உணவு வாங்கி சாப்பிடுவதும் இவருக்கு நெருடலாகவே இருந்தது, நாம் இவர்களுக்கு பாராமாக இருக்கிறோமோ என்ற உணர்வு அடிக்கடி ஏற்பட ஏதாவது சொந்தமாக தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்று எண்ணினார்.
தந்தை தந்துவிட்டு போன பணத்தையும், உறவினர்கள் மற்றும் ஈர நெஞ்சம் அமைப்பு போன்றவர்கள் கொடுத்து உதவிய நன்கொடைகளையும் கொண்டு கோவை சாய்பாபா காலனி, செந்தில் நகர், கல்பனா திருமண மண்டபம் அருகே ஒரு செருப்பு கடையை துவக்கிவிட்டார். மறைந்த தாயார் பழனியம்மாள் என்றால் இவருக்கு உயிர் ஆகவே அவரது பெயரின் முதல் எழுத்தையும், இவரது பெயரின் முதல் எழுத்தையும் இணைத்து கடைக்கு பிஆர் டிரேடர்ஸ் என்று வைத்துவிட்டார்.
 
தொண்டு செய்ய ஆசை:
 
இவருக்கு அதுவரை செருப்பு வியாபாரம் பற்றியும் தெரியாது. ஆனாலும் துணிந்து உழைப்போம், இதைவைத்து பிழைப்போம் என்ற இவரது முயற்சிக்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. தன்னை கௌரவமாக காப்பாற்றி கொள்வதற்கு ஏற்றவாறு வருமானம் வருகிறது. இன்னும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஊனமுற்ற இவர் கடையில் ஒரு உதவியாளரை வேலைக்கு நியமிக்கலாம் என்ற நிலை வந்தபோது தன்னைப்போலவே ஆதரவில்லாத கருணை இல்லத்து நண்பரையே வேலைக்கு வைத்துள்ளார்.
வாரத்தின் ஏழு நாளும் கடை உண்டு காலை ஏழு மணிக்கு கடைக்கு வந்தால் இரவு 9 மணி வரை கடையில்தான் இருப்பார். இவரது நேர்மையான வியாபாரம் பலருக்கு பிடித்து போனதால் இப்போது நிறைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர். வருகிறவர்கள் ஷூ மற்றும் கொஞ்சம் காஸ்ட்லியான பிராண்டில் காலணிகள் கேட்டால் கொடுக்கமுடியாத சூழ்நிலையில் உள்ளார். பாங்க் உதவி கிடைத்தால் தொழிலையும்,கடையையும் விரிவு பண்ணி வியாபாரத்தை பெருக்க வேண்டும் வரும் வருமானத்தை கொண்டு நிறைய தொண்டு செய்யவேண்டும் என்று எண்ணியுள்ளார்.
 
இவரது எண்ணம் ஈடேற வாழ்த்துவோம்.
 
இவரது தொடர்பு எண்: 9944871680.
- எல்.முருகராஜ்
 
Link to comment
Share on other sites

குறுங்காடு தங்கசாமி

 

treestory_jpg_1620059g.jpg

குறுங்காடு தங்கசாமி

 

treestory2_jpg_1620058g.jpg

 

 

தமிழ்நாட்டில் இயற்கை ஆர்வலர் மத்தியில் பிரபலமான ஒரு பெயர் சேந்தங்குடி தங்கசாமி. ‘மரம் தங்கசாமி’என்று சொன்னால், பெயர் எளிதில் விளங்கும்.
 
ஒரு சாதாரண விவசாயியான தங்கசாமி ஏராளமான மரங்களை வளர்த்துப் பணக்காரர் ஆன கதை எல்லோராலும் எழுதப்பட்டது. அது சுயமுன்னேற்றக் கதை. தங்கசாமியிடம் நம் சமூகம் கவனிக்காமல் விட்ட இன்னொரு கதை உண்டு - எதிர்கால இந்திய விவசாயத்தின் மறுமலர்ச்சிக்கான விதை அது - குறுங்காடு வளர்ப்பு!
 
பத்து ஏக்கர் நிலம். அதில் ஒரு வீடு. வீட்டையொட்டி சின்னதாய்க் காய்கறித் தோட்டம். சுற்றிலும் குறுங்காடு. ஆமாம், சின்னக் காடுதான் அது. புன்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, அழிஞ்சி, நாட்டு வாதுமை, புங்கன், பெருங்காலி, தங்கபட்டி, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, செண்பகம், கறிவேப்பிலை, வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியம், வாகை, கொண்டைவாகை, இயல்வாகை, வாதநாராயணம், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி, நாவல், நெல்லி, பலா, வில்வம், மா, இலுப்பை, கொடுக்காப்புளி, சப்போட்டா, இலந்தை, சீதா, மாதுளம், அரநெல்லி, கரம்போலா, கொய்யா, கம்பளி, அகத்தி, அத்தி, அழிஞ்சி, பூமருது, அசோகா, மயில் கொன்றை, திருவாட்சி, மந்தாரை, கொக்கு மந்தாரை, மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, நெருப்புக் கொன்றை, தேக்கு, சந்தனம், ஆலம், அரசம்... நூற்றுக் கணக்கான மரங்கள் அல்ல; வகைகள். ஏழாயிரத்துச் சொச்ச மரங்கள். கூடவே, சிறிதும் பெரிதுமான பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள்... இதுதான் தங்கசாமியின் குறுங்காடு.
 
ஒருகாலத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தின் வெம்மைக்கும் வறட்சிக்கும் சரியான உதாரணம் தங்கசாமியின் ஊரான சேந்தங்குடி. இன்றைக்கு அந்தப் பிரதேசத்துக்குள் நுழையும்போதே காற்றில் குளுமையை உணர முடிகிறது. எங்கும் பசுமை வியாபித்திருக்கிறது. 46 ஆண்டுகளில் தங்கசாமி உருவாக்கிய மாற்றம் இது.
 
“பாரம்பரியமான வெவசாயக் குடும்பம். எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு முடிச்சதும் வெவசாயத் துறையிலேயே வேலை கிடைச்சுது. வீட்டுல சொன்னாக, ‘யப்பா... வீட்டுக்கு நீ ஒரே புள்ள. நீ பாட்டுக்கு வேலைக்குப் போயிட்டீன்னா, குல வெவசாயம் செத்துப்போகும்’னு. சரிதான்னுட்டு, பயிற்சியை மட்டும் முடிச்சுப்புட்டு வயக்காட்டுக்கே வந்துட்டேன். படிச்ச ஆளு, அதுவும் அப்ப வெவசாயப் பயிற்சி வேற எடுத்துக்கிட்ட துடிப்பு, ஊரு முழுக்கப் பச்சைப் புரட்சியைப் பேசுறான்... சும்மா பழைய வழியிலேயே போவ முடியுமா? நவீன வெவசாயம்… நவீன வெவசாயம்னு கூவிக்கிட்டு உரம், பூச்சிக்கொல்லில தொடங்கி பட்டுப்பூச்சி, தேனீ வளர்ப்பு வரைக்கும் போய்ட்டேன். கொஞ்ச நாள்தான். எல்லாம் காலி. 30 ஆயிரம் கடன். 1960-ல 30 ஆயிரம் எவ்வளவு பெரிய தொகை? ஒரு குடியானவன் சேத்து அடைக்குற காசா அது? மனசு விட்டுப்போச்சு. தற்கொலைதான் கடைசி வழின்னு தோணுச்சு. ஒடிஞ்சு உட்கார்ந்துட்டேன்.
 
அப்போதான் ரேடியோல ஒரு குரல். சீனிவாசன் ஐயா பேசுறார். ‘மரப் பயிறும் பணப் பயிரே...’, ‘தோப்பில்லா குடும்பத்துக்குக் காப்பில்லை’னு. அப்படியே கடவுளே வந்து சொன்ன மாதிரி இருந்துச்சு. அன்னைக்கு மரத்தைக் கட்டிக்கிட்டேன். வெவசாயம் பண்றதுக்குத்தானே தண்ணியோட்டம் உள்ள பூமியா இருக்கணும்? மரம், பூமிக்கேத்த மாதிரி நடலாம். அங்கேயும் இங்கேயுமா இருந்த வயவாய்க்கால் எல்லாத்தையும் பங்காளிங்ககிட்டே கொடுத்துட்டு, கடனை அடைச்சேன்; ஒரே இடத்துல பத்து ஏக்கராவா சேர்த்து வாங்குனேன். மரக்கன்னா நட்டேன். கொஞ்ச வருஷம். நட்டேன். வெட்டுனேன். நட்டேன். வெட்டுனேன். தேவையான காசு வந்துடுச்சு. ஒரு நா விடியக்காலையில முழிச்சுப்பார்க்குறேன். அது நா வரைக்கும் நான் மரமா பார்த்தது எல்லாம் திரண்டு காடா நிக்குது. சத்தியமா அன்னைக்கு வரைக்கும் மரத்தைக் காசாத்தான் பார்த்தான் இந்தத் தங்கசாமி; ஆனா, காடு காசு இல்லை; அது சாமி. பொறி தட்டிடுச்சு. ‘தங்கசாமி இனி உனக்கு வேலை இதுதான்டா’ன்னு.
 
அன்னைக்கு ஆரம்பிச்சு இன்னைக்கு வரைக்கும் காடுதான் என் மூச்சுலேயும் பேச்சுலேயும் கலந்துகெடக்கு. யாரு என் வீட்டுக்கு வந்தாலும் சரி; யாரு வீட்டுக்கு நான் போனாலும் சரி... மரக்கன்னு ஒண்ணைப் புடிச்சு நட்டுடறது. வீட்டுல எந்த விசேஷ நாள்னாலும் மரக்கன்னை நட்டுப்புடுறது. இன்னைக்கு என் கை பட்ட மரக்கன்னு உலகம் முழுக்க முளைச்சுக் கெடக்கு. நம்புவீங்களா, கோடி வெதை, கன்னுங்களைத் தன் கையால கொடுத்திருக்கான் தங்கசாமி. என் மவன் கல்யாணத்து அன்னைக்கு மட்டும் ஊருல 10 ஆயிரம் கன்னுகளைக் கொடுத்தேன். அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இஸ்ரேல்னு எங்கெங்கோ இருந்து வர்ற புள்ளைங்க இந்த வெவசாயிகிட்டே இருந்து பாடம் கத்துக்கிட்டுப்போவுதுங்க.
 
ஆனா, இந்தக் கதை எல்லாம் இப்போதான். ஆரம்பத்துல சுத்தி நின்ன அத்தனை பேரும் என்ன சொன்னான் தெரியுமா? தங்கசாமி ஒரு லூஸுப் பையன்னான். அப்புறம், தங்கசாமி மாதிரி நம்மளும் மரம் நட்டுக் காசு பார்க்கலாம்னு எல்லாரும் மரம் நட்டான். இங்கே நான் சுட்டிக்காட்டணும்னு நெனைக்குற விஷயம் ஒண்ணு உண்டு. மரம் வளர்க்குறதுக்கும் குறுங்காடு வளர்க்குறதுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. மரம் வளர்க்குறது நீங்க ஒரு வீடு கட்டுற மாதிரி; குறுங்காடு வளர்க்குறது ஒரு அரண்மனையையே கட்டி எல்லாருக்கும் இடம் கொடுக்குற மாதிரி. ஒரு ஆச்சரியம் என்னன்னா, வீடு கட்டுறதைவிட அரண்மனை கட்டுறதுதான் எளிமையான விஷயம்கிறதுதான். மரம் வளர்க்குறது ஒரே மாதிரி மரங்களா பத்திவிடறது. குறுங்காடு வளர்க்குறது எல்லா வகை மரங்களுக்கும் இடம் கொடுக்குறது.
 
மரங்கள்ல பூமிக்குச் சத்து கொடுக்குற மரங்களும் உண்டு; பூமிகிட்டே இருந்து சத்தை எடுத்துக்குற மரங்களும் உண்டு. குறுங்காடுங்கிறது இந்த ரெண்டு வகை மரங்களையும் உள்ளடக்கினது. மனுஷங்களுக்கான பூ மரங்கள் - பழ மரங்கள் மட்டும் இல்லை; பறவைங்க விரும்பி வர்ற மரங்களும் இங்கே இருக்கும். காரண காரியங்கள் இல்லாம வளர்க்குற மரங்களுக்கு இடையிலேயே செஞ்சந்தனம், தேக்கு, ரோஸ்வுட், வாழை, தென்னைனு காசு பார்க்க என்னென்ன மரங்கள் வேணுமோ அதுகளையும் நாம வளர்த்துக்கலாம்.
 
ஒரு முத்தின செஞ்சந்தன மரம் விலை இரண்டரை லட்சம். இங்கே பல நூறு செஞ்சந்தன மரம் நிக்குது. நான் எவ்வளவோ பெரிய கோடீஸ்வரன்? பாம்பு, பல்லியில ஆரம்பிச்சு எந்தெந்த மூலையில இருந்தோ இங்கே வர்ற பேர் தெரியாத பறவைகள் வரைக்கும் இந்தக் காட்டுல ஆயிரமாயிரம் உயிரினங்கள் வாழுது. எனக்கு எவ்வளவு சொந்தஞ்சோளி?
 
நம்ம வெவசாயிகளுக்கு நான் சொல்றது சின்ன யோசனைதான். உங்க நெலம் எவ்வளவு இருக்கோ, அதை மூணாப் பிரியுங்க. ரெண்டு பங்குல மாத்தி மாத்தி விவசாயம் பண்ணி நாசமாப் போங்க - அது உங்க உரிமை, கடமை. மிச்ச ஒரு பங்குல மட்டுமாவது கண்டிப்பா மரங்களை நடுங்க. உங்க சந்ததி பொழைச்சுக்கும். விவசாயிங்க மட்டும் இல்லை; அரசாங்கமும் இதை யோசிக்கணும். பெருகுற மக்கள்தொகையால கெடுற சுற்றுச்சூழலையும் உணவுத் தேவையையும் சமாளிக்கணும்னா, தரிசாக் கெடக்குற நெலத்திலெல்லாம் பல வகை மரங்களை நடணும்” - தீர்க்கமான குரலில் பேசுகிறார் தங்கசாமி.
 
பக்தர்கள் மலைக்கு மாலை போடுவதுபோல, தங்கசாமியும் மாலை போடுவது உண்டு. இது 18-வது வருடம். ஆண்டுதோறும் மாலை போட்டு, 48 நாட்கள் விரதம் இருந்து, குடுமியான்மலை, ஆடுதுறை என்று வேளாண் மையங்களுக்குச் சென்று விரதம் முடிக்கிறார். போகும் வழிநெடுக குறுங்காடு பிரச்சாரம். “இந்த நாடு விவசாயிகளின் நாடு; இந்த நாட்டின் மறுமலர்ச்சி கிராமங்களில் இருந்துதான் தொடங்கும்” என்கிற காந்தியின் வார்த்தைகள்தான் தங்கசாமியின் இயக்கத்துக்கான ஆதார சுருதி. தன்னுடைய பயணத்தில் தங்கசாமி தவறாமல் வலியுறுத்தும் காந்தியின் வார்த்தைகள் இன்னும் சிலவும் உண்டு: “எல்லாருடைய ஆசையையும் நிறைவேற்றும் வல்லமை இந்த பூமிக்கு உண்டு; ஆனால், எல்லாருடைய பேராசையையும் நிறைவேற்றும் திராணி அதற்குக் கிடையாது!”
 
சமஸ் - 

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/article5239584.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி இந்தப் பகுதியை வந்து பார்த்து செல்பவர்களில் நானும் ஒருத்தி என்று நினைக்கிறன்..உங்கள் இணைப்புக்களுக்கு மிக்க நன்றி ஆதவன்.ஒவ்வொரு இணைப்பும் ஒவ்வொரு விதமான கதையை சொல்லி நிற்கிறது..

Link to comment
Share on other sites

பூ மாலையும்,செருப்பு மாலையும்சகஜம்!

 

Tamil_News_large_1075163.jpg

 

பூ மாலையும்,செருப்பு மாலையும்சகஜம்!
தைரியமும், தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் எனக் கூறும், ரயில் இன்ஜின் ஓட்டுனர் அனிதா: மதுரை, என் சொந்த ஊர். அரசினர் பெண்கள் பாலிடெக்னிக்கில், 'எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்' படித்து, ரயில்வே தேர்வு எழுதி, 'பாஸ்' ஆனேன். தமிழகத்தின் பல இடங்களில், ஆறரை மாத கடின பயிற்சி ரயில்வே கொடுத்து, 2011 அக்டோபரில் வேலையில் நியமித்தனர்.சின்ன வயதில் சொன்னதை, அப்படியே நிரூபித்தவள் நான். அதனால், இந்த வேலையை, நான் ரொம்பவே நேசிக்கிறேன். நாகர் கோவிலில், 15 லோகோ பைலட், 35 அசிஸ்டன்ட் லோகோ பைலட் இருக்கின்றனர். என்னைத் தவிர, எல்லாருமே ஆண்கள் தான். மூன்று ஆண்டு களில் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். பலரின் உயிரை தாங்கி செல்லும் பொறுப்பு உணர்ந்து செயல்படுகிறேன்.இன்ஜினில் எரிபொருள் இருக்கிறதா என்பதையும், பாதையிலுள்ள சிக்னலை கவனிப்பதும், என்னுடைய வேலை.
 
ஒவ்வொரு அசிஸ்டன்ட் லோகோ பைலட்டும், குறைந்த பட்சம் ஐந்து ஆண்டு கள் பைலட்டுக்கு உதவியாக இருந்து, வேலை கற்றுக் கொள்ள வேண்டும்; பின் தான், தனியாக ரயிலை இயக்க அனுமதிப்பர். இன்னும் இரு ஆண்டுகளுக்கு பின், நானே தனியாக ரயிலை ஓட்டுவேன். அந்த நாளுக்காக காத்து இருக்கிறேன்.என் அப்பா, அம்மா மற்றும் என் கணவரும் ரயில்வே ஊழியர்கள். தினமும் குழந்தைகளை தயார்படுத்தி, உறவினர் வீட்டில் விட்டு விட்டு போய் விடுவேன்.
 
வார இறுதி நாட்களில், கணவரும் வந்து விடுவார். குழந்தைகளுக்கு இது பழக்கமாகிப் போனதால், சிரமம் இல்லாமல், வாழ்க்கை வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.சில ஹீரோக்கள், 'ஏய் லேடி டிரைவர் டா...' என, காதில் விழும் படி கூறி நடப்பர். வேலைக்கு என வந்துவிட்டால், கழுத்தில் பூமாலை யும் விழும்; செருப்பு மாலையும் விழும். இரண்டையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சிறுவயதில் இருந்தே அப்பா, அம்மா அந்த மனப்பக்குவத்தை எனக்குள் விதைத்து விட்டனர்.என்னுடன் வேலை செய்பவர்கள், எனக்கு பல வகையிலும் உதவியாக உள்ளதால், இந்த வேலை எனக்கான தன்னம்பிக்கையையும், சந்தோஷத்தையும் கொடுத்து வருகிறது.
 
 
Link to comment
Share on other sites

சிவக்குமார்

 

sivakumar2_jpg_1636101h.jpg

 

பிரதமர் மன்மோகன் சிங் அபூர்வமாக, “இந்தியாவின் தேசிய அவமானம் இது” என்று ஒப்புக்கொண்ட பிரச்சினை ஒன்று உண்டு ஏழ்மை, இந்தியக் குழந்தைகளைச் சூறையாடுவது. வளர்ச்சிபற்றி வாய் கிழியப் பேசும் இந்நாட்டில்தான் ஒவ்வொரு நாளும் 3,000 குழந்தைகள் பசிக்கொடுமையால் உயிரிழக்கின்றன; 42% குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் எடை குறைந்தவையாக இருக்கின்றன. இந்தியாவில் ஏழ்மை ஒழிப்புக்கான முயற்சிகளும் வறுமை ஒழிப்புக்கான போராட்டங்களும் அவ்வளவு எளிதானதல்ல.

 

பல ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி வீதிகளில், குழந்தைகளுக்காக உதவி கேட்டு நின்ற அந்த எளிய மனிதரை முதன்முதலில் பார்த்தபோது ஆச்சரியம். அவர் ஒரு விரிவுரையாளர். குமுழூர் அரசு ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றுபவர். ஒரு மளிகைக் கடைக்காரரிடம் அவர் உதவி கேட்டுக்கொண்டிருந்தார். அவர் கேட்ட உதவி ஒன்றும் அவ்வளவு பெரிய உதவி அல்ல. 25 குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு அளிக்க அந்த மளிகைக் கடைக்காரர் ஏதாவது பொருட்கள் தர வேண்டும். அவ்வளவுதான். மளிகைக் கடைக்காரர் மறுத்துவிட்டார். அசராமல் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அடுத்த கடையை நோக்கிச் சென்றார் விரிவுரையாளர். அங்கும் உதவி கிடைக்கவில்லை. இன்முகத்துடன் இன்னொரு நன்றி. அடுத்த கடையை நோக்கிப் பயணம். இன்னொரு நாள் அவரை, ஒரு காய்கறிக் கடையில் பார்த்தேன். சலுகை விலையில் அதே சமயம், காய்கறிக் கடைக்காரருக்கு நஷ்டம் ஏற்படாத விலையில் காய்கறி கேட்டுக்கொண்டிருந்தார். மற்றொரு நாள் உள்ளூர் பிரமுகர் ஒருவர் வீட்டில் பார்த்தேன். மறுநாள் அந்தப் பிரமுகரின் பிறந்த நாள். எவ்வளவோ செலவுகளுக்கு மத்தியில், “ஏன் 30 குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு தரக் கூடாது?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

 

நாட்டிலேயே குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம்தான் முன்னோடி என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். காலை உணவுத் திட்டத்துக்கும் முன்னோடியாகிறது தமிழகம், விரிவுரையாளர் எஸ். சிவக்குமாரால். திருச்சியின் 25 அரசு சார் பள்ளிகளைச் சேர்ந்த பல நூறு ஏழைக் குழந்தைகளின் பசியைத் தீர்க்கிறது சிவக்குமார் அறிமுகப்படுத்திய ‘சமுதாயக் காலை உணவுத் திட்டம்’.

 

“நான் படிச்சது அரசுப் பள்ளிக்கூடங்களிலும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களிலும்தான். எங்க வீட்டில் பெரிய கஷ்டங்கள் எதையும் நான் சந்திக்கலை. அதே சமயம், கூடப் படிச்சவங்களோட கஷ்டத்தைப் பார்த்திருக்கேன். பலரோட படிப்பு அரசாங்கம் கொடுக்குற மதிய உணவுலதான் ஒட்டிக்கிட்டு இருந்ததுங்கிறதை நேரடியா உணர்ந்திருக்கேன். ஆனா, இன்னமும் எவ்வளவு குழந்தைகளைப் பசி கொன்னுக்கிட்டு இருக்குங்கிறதை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்து, ஒவ்வொரு பள்ளிக்கூடமா ஆசிரியர்களைச் சந்திக்கப் போனப்பதான் உணர்ந்தேன்.

 

அரசுப் பள்ளிக்கூடங்கள்ல காலை வேளைல பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போறப்பவெல்லாம் குழந்தைங்க மந்தமா நிக்குறதை அடிக்கடி பார்த்திருக்கேன். அதே மாதிரி காலை நேர வகுப்புகள்லயும் சில பிள்ளைங்க ரொம்ப சோர்வா உட்கார்ந்திருப்பாங்க. ஒருநாள் அப்படிப்பட்ட குழந்தைங்ககூடப் பேச ஆரம்பிச்சப்பதான் ஒரு விஷயம் தெரிஞ்சுது. காலையில வெறும் டீயும் பன்னும்தான் அவங்களோட உணவுங்கிறது. ‘சில பிள்ளைங்க மயக்கம் போட்டுக்கூட விழுந்துடுவாங்க; நாங்கதான் டீயோ வடையோ வாங்கிக் கொடுப்போம்’னு ஆசிரியர்கள் சொன்னாங்க. அன்னைக்கு முழுக்க நான் சாப்பிடலை. சாப்பாட்டுல கையை வைக்கும்போதெல்லாம் அந்தக் குழந்தைங்களோட முகம் வந்து மனசை வதைச்சுடுச்சு.

 

எப்போதுமே என்னோட பகல் பொழுது என்னோட தொழிலுக்கானதுன்னா, சாயங்காலப் பொழுது பொதுப் பணிக்குன்னு வகுத்துக்கிட்டு வாழறவன் நான். அதுக்கு முன்னாடி எவ்வளவோ விஷயங்கள்ல நான் ஆர்வம் காட்டியிருக்கேன். படிக்காத குழந்தைகளுக்கான ‘வீதிப் பள்ளிகள்’, ‘வீடு தேடிக் கல்வி’ங்கிற மாதிரியான முயற்சிகள் அதெல்லாம். இதுக்குப் பின்னாடி, பசியைத் துடைக்குறதுதான் முதல் கடமைன்னு இறங்கினேன்.

முதன்முதலா சேவா சங்கம் பள்ளிக்கூடத்துல, அங்குள்ள தலைமை ஆசிரியை விசாலாட்சி உதவியோட இணைஞ்சு இந்தத் திட்டத்தைத் தொடங்கினேன். இன்னைக்குத் திருச்சியில மட்டும் 25 பள்ளிகள்ல காலை உணவு கொடுக்குறோம். இன்னும் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, ஏராளமான ஊர்கள்ல பலரும் இந்தத் திட்டத்தை முன்னெடுக்குறாங்க” என்று சொல்லும் சிவக்குமாரின் திட்டம் எளிமையானது.

 

“ஒவ்வொரு பள்ளியின் ஆசிரியர்களும் தங்களால் இயன்ற ஒரு தொகையைப் பள்ளிக் குழந்தைகளுக்காக அளிக்க வேண்டும். கூடவே, அந்தப் பகுதியில் உள்ள கொடையாளிகளை அடையாளம் கண்டு, உதவி கேட்க வாரத்தில் ஒரு நாள் மாலைப் பொழுதை ஒதுக்க வேண்டும். இவ்வளவுதான். எல்லாப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்துவிடலாம்” என்கிறார் சிவக்குமார்.

 

“உள்ளூர்ப் பிரச்சினைகளுக்கு உள்ளூர் வளங்களை வைத்தே தீர்வு காண்றதுதான் இதோட முக்கியத்துவம். அந்தந்தப் பகுதியில உள்ள வசதியானவங்களைத் தேடிப் பிடிப்போம். அவங்களோட பிறந்த நாள், அம்மா அப்பா நினைவு நாள் மாதிரியான முக்கியமான நாட்கள்ல குழந்தைகளுக்கு உணவு கொடுக்கச் சொல்லிக் கேட்போம். தவிர, அரிசி கொடுக்குறவங்க அரிசி கொடுக்கலாம்; மளிகைச் சாமான்கள் கொடுக்குறவங்க மளிகைச் சாமான்கள் கொடுக்கலாம். விறகுன்னு சொல்லி ரெண்டு மரத்துண்டுகளைக் கொடுத்தால்கூட வாங்கிப்போம். மளிகைக் கடைக்காரர்கள், காய்கறிக் கடைக்காரர்கள்கிட்ட சலுகை விலையில பொருட்களைக் கேட்டு வாங்குவோம். நன்கொடையாளர்களை நேரடியா கடைக்காரர்கள்கிட்டே பணத்தைக் கொடுக்கச் சொல்லிடுவோம். மதிய உணவு சமைக்கிற ஆயாக்களே கொஞ்சம் முன்னாடி வந்து சமைச்சுத் தந்துடுவாங்க.”

இந்தத் திட்டத்தின் முக்கியமான இன்னோர் அம்சம்: முறைகேடுகளுக்கு வழி இல்லாமல் நடத்தப்படுவது.

“உதவியை ஒரு ரூபாய்கூடப் பணமா வாங்குறது இல்லை. ஒண்ணு, உணவை நேரடியா சமைச்சு நீங்களே வந்து தரலாம்; இல்லைன்னா, பொருளா தரலாம். பொருட்கள் எல்லாமே பள்ளிக்கூடங்கள்ல எல்லோர் பார்வையிலேயும் இருக்குறதாலேயும் எல்லோரோட பங்களிப்பாலும் இது நடக்குறதாலேயும் வரவுசெலவுல முறைகேட்டுக்கு வழி இல்லை” என்கிறார்.

 

“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுங்களா? உலகத்துல இருக்குற எடை குறைவான குழந்தைங்கள்ல சரிபாதிக் குழந்தைங்க நம்ம இந்தியக் குழந்தைங்க. பல ஆப்பிரிக்க நாடுகளைவிட மோசமான சூழல்லதான், பசி பட்டினியில இன்னைக்கும் நாம இருக்கோம். 100 ரூபாய் இருந்தா போதும்; 20 பிள்ளைகளுக்கு ஏதோ ஒரு கட்டுச்சாதமும் துவையலும் கொடுத்துடலாம். 50 ரூபாய்தான் இருக்குன்னாகூட கூழ் காய்ச்சிக் கொடுத்துடலாம். பசிக்குற நேரத்துல எதுவுமே அவங்களுக்கு தேவாமிர்தம்தான். நாங்க உணவு கொடுக்க ஆரம்பிச்ச பிறகு, பல பள்ளிக்கூடங்கள்ல குழந்தைங்களோட வருகைப் பதிவு கூடியிருக்கு. நேரத்துக்குப் பள்ளிக்கூடம் வர்றாங்க. படிப்புல காட்டுற ஆர்வம் அதிகரிச்சு இருக்கு. முன்னைவிடக் குழந்தைங்க தெளிவா இருக்காங்க” என்று சொல்லும் சிவக்குமார், காந்தியிடம் சுட்டிக்காட்டுவது அவருடைய எளிமையை.

“தன்னைக் கடையனிலும் கடையனாகத்தான் எப்போதும் நெனைச்சுக்கிட்டு இருந்தார் காந்தி. அந்த நெனைப்பு இருந்தா போதும். யாரிடமும் இணைஞ்சுக்கலாம். நான் என்னை அப்படித்தான் நெனைக்குறேன். நீங்க உதவின்னு சொல்றதைத்தான் நான் இணைஞ்சுக்குறதுன்னு சொல்றேன்; ஏன்னா, சமூகத்துல எல்லா நல்ல காரியங்களுமே நாலு பேர் கூடுறதாலதான் சாத்தியமாகும்” இணையக் கூப்பிடுகிறார் சிவக்குமார்.

 

சமஸ் - தொடர்புக்கு: writersamas@gmail.com

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article5287901.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

 • 2 weeks later...

காப்பக குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம்: ‘படிக்கட்டுகள்’ அமைப்பு இளைஞர்கள் ஏற்பாடு

 

2_2143459f.jpg

தீபாவளிக்கு புத்தாடைகளுடன் காப்பக குழந்தைகள்.

’படிக்கட்டுகள்’ தன்னார்வ அமைப்பின் இளைஞர்கள் இந்த ஆண்டு தீபாவளியை சமயநல்லூர் சக்தி டிரஸ்ட் காப்பகத்தின் குழந்தைகளோடு கொண்டாடுகிறார்கள்.

 

2012-ம் ஆண்டில் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து உருவாக் கிய அமைப்பு ‘படிக்கட்டுகள்’ இயலாதவர்களுக்கு வலியப் போய் உதவுவதுதான் ‘படிக் கட்டு’களின் நோக்கம். குறிப்பாக அநாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங் களில் உள்ளவர்களோடு உடனிருந்து பண்டிகை நாட்களை கொண்டாடுவதும் இந்த இளைஞர் களின் போற்றுதலுக்குரிய செயல் பாடுகளில் ஒன்று.

 

இதன்படி, இந்த ஆண்டு மதுரை அருகிலுள்ள சமயநல்லூர் சக்தி டிரஸ்ட் காப்பக பெண் குழந்தைகள் 29 பேருடன் ‘படிக்கட்டுகள்’ இளைஞர்கள் தீபாவளியை கொண்டாடு கிறார்கள். இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய ’படிக்கட்டுகள்’ அமைப்பின் உறுப்பினர் கிஷோர் குமார் கூறியதாவது: ‘‘சக்தி டிரஸ்ட் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் இதுவரை தீபாவளிகொண்டாடியதே இல்லை. வழக்க மாக இதுபோன்ற காப்பகங்களில் உள்ள குழந்தைகளுக்கு புத்தாடை எடுத்துக் கொடுக்க நினைப்பவர்கள், ஏதோ ஒரு கலரில் ஏதோ ஒரு துணியை எடுத்துக் கொடுப்பார்கள். ஆனால், நாங்கள் அப்படி இருக்கக் கூடாது என நினைத்தோம். குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தமான ஆடையை தாங்களே தேர்வு செய்ய வேண்டும் என முடிவு செய்தோம்.

 

இதற்காக அந்தக் குழந்தைகள் 29 பேரையும் மதுரையில் உள்ள பிரபல ஜவுளிக்கடைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டிச் சென்றோம். அங்கு அவர்களுக்குத் தேவையான ஆடைகளை அவர்களே தேர்வு செய்தனர்.

இந்தப் பணியில் எங்கள் அமைப்பைச் சேர்ந்த 40 தன்னார்வ இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டார்கள். அந்தக் குழந்தைகள் தேர்வு செய்த ஆடைகளுக்கான பில் தொகை ரூ.29,500-யை தன்னார்வ தொண்டர்கள் செலுத்தினர். ஆடைகளை வாங்கிய பிறகு அந்தக் குழந்தைகளை அப்படியே திருமலை நாயக்கர் மஹாலுக்கு அழைத்துச் சென்று மஹாலை சுற்றிக் காட்டினோம்.

 

முடிவில், ‘உங்களுக்கு வேறு ஏதாவது ஆசை இருக்கிறதா?’ என்று கேட்டபோது, ‘இந்த ஆண்டு தீபாவளியை நீங்கள் எங்களோடு சேர்ந்து கொண்டாட வேண்டும்’ என்று அந்தக் குழந்தைகள் தங்களது விருப்பத்தைச் சொன்னார்கள்.

அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்த ஆண்டு தீபாவளியை ‘படிக்கட்டுகள்’ இளைஞர்கள் சக்தி காப்பகத்தில் உள்ள குழந்தைகளோடு சேர்ந்து புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, உணவு உண்டு நாள் முழுக்க கொண்டாடி மகிழ தீர்மானித்திருக்கிறோம்.’’

இவ்வாறு கிஷோர்குமார் தெரிவித்தார்.

 

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/article6479165.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

கிராமங்களில் கழிவறை வசதி: இந்திய இளைஞருக்கு 'குளோபல் சிட்டிசன்' விருது

 

anoop10_2145834f.jpg

வலது: அனூப் | இடது: களப்பணி - படங்கள்: http://www.humanurepower.org/

கிராமங்களில் குறைந்த செலவில் கழிவறை வசதிகள் ஏற்படுத்தித் தந்தமைக்காக இந்திய இளைஞர் அனூப் ஜெயினுக்கு `குளோபல் சிட்டிசன்' விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 60 லட்சம்) ரொக்கப் பரிசும் அளிக்கப்பட்டுள்ளது.

இவர் 2011ம் ஆண்டு பிஹாரில் `ஹியூமேன்யூர் பவர்' எனும் அமைப்பைத் தொடங்கி, அதன் மூலம் இந்தியக் கிராமங்களில் சுகாதாரமான கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தரத் தொடங்கினார். கடந்த வாரம் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி குளோபல் சிட்டிசன் விழாவின்போது 2019ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து வீடுகள் மற்றும் பள்ளிகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்துவது தனது இலக்கு என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே தனது அமைப்பு மூலம் சுமார் 17,000 பயனாளர்களுக்குக் கழிவறை வசதிகள் ஏற்படுத்தித் தந்துள்ளார் அனூப் ஜெயின். குடியுரிமை, புதிய கண்டுபிடிப்பு, புதிய கண்டுபிடிப்பின் பயன் மற்றும் அக்கண்டுபிடிப்பின் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் வாக்களித்து இறுதியில் அனூப் ஜெயின் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனூப் அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைதளம் http://www.humanurepower.org/

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/article6482709.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

அரசு ஊழியர்களை உருவாக்கும் அரசு ஊழியர்கள்: ஏழை பட்டதாரிகளுக்காக கட்டணமின்றி சேவை

 

1_2145906f.jpg

டாக்டர் அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயிலும் மாணவ, மாணவிகள்.

அரசு, வங்கிப் பணிக்கான தேர்வுகளை மையப்படுத்தி வணிக ரீதியாகப் புற்றீசல் போல தனியார் பயிற்சி மையங்கள் பெருகி வரும் வேளையில், ஏழை பட்டதாரி மாணவர்களை அடையாளம் கண்டறிந்து எவ்விதக் கட்டணமும் வாங்காமல் அவர்களை அரசு ஊழியர்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அகில இந்திய ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள்.

கோவையில் உள்ள திருச்சி சாலையில் எல்.ஜி.தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது சரோஜ்பவன். அகில இந்திய காப்பீட்டு ஊழியர்களுக்கு சொந்தமான அந்த கட்டிடத்தில் டாக்டர் அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் எண்ணற்ற பட்டதாரி மாணவர்கள் புத்தகமும், கையுமாக வந்து செல்கின்றனர்.

வங்கித் தேர்வு, எல்.ஐ.சி., ரயில்வே, டி.என்.பி.எஸ்.சி. போன்ற அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இங்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இங்கு படிக்க வரும் மாணவர்களிடம் கட்டணம் வாங்குவதில்லை என்பதுதான் இந்த பயிற்சி மையத்தின் சிறப்பு.

 

இங்கு வழங்கப்படும் வினாத்தாள்களுக்குக்கூட மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. படிக்க வரும் பட்டதாரிகள் அனைவரும் அரசு வேலை வாய்ப்பைப் பெற வேண்டும் என்கிற குறிக்கோளுடன் இடைவிடாத பயிற்சி வழங்கப்படுகிறது.

பல பயிற்சி மையங்களில் கொள்ளைக் கட்டணம் வசூலித்துவிட்டு வாரத்தின் அனைத்து நாள்களிலும் போட்டியாளர்களுக்கு சொல்லிக் கொடுப்பது இல்லை. ஆனால், அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் கட்டணம் வாங்காமல் வாரத்தின் அனைத்து நாள்களிலும் பயிற்சி வழங்கி வருகின்றனர். இதில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர பயிற்சியை வழங்குகின்றனர். சில நேரங்களில் புத்தகம் வாங்க முடியாத ஏழை பட்டதாரிகளுக்கு புத்தகத்தையும் கொடுத்து படிக்க வைக்கின்றனர்.

பயிற்சி மையத்தின் செலவுகளை அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் ஏற்றுக் கொள்கிறது. ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியரான கே.கணேஷ், டாக்டர் அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து ஒரு முழு நேர சேவையாக செய்து வருகிறார்.

 

வாரத்தில் ஒருநாள், துறை சார்ந்த திறமையாளர்களை அழைத்து வந்து பயிற்சி பெறும் மாணவர்களிடம் பேச வைத்து உத்வேகத்தை அளிக்கின்றனர். இவ்வளவும் செய்து கொடுக்கும் அவர்கள், மாணவ, மாணவிகளிடம் வைக்கும் கோரிக்கை ஒன்று மட்டும்தான். விரைந்து படித்து அரசு வேலையை வாங்குங்கள். அரசு வேலையை பெறாமல் ஓயாதீர்கள் என்பதுதான்.

இது குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கே.கணேஷ் கூறியது:

 

கடந்த காலங்களில் கிராமப்புற ஏழை மாணவர்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அரசு பணிகளில் வேலை வாய்ப்பு பெறுவது குறைந்து இருந்தது. தற்போது சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்தாலும் அடுத்த கட்டமாக ஏதாவது ஒரு தனியார் வேலைக்குச் சென்று குடும்பத்தை ஓட்டும் அளவுக்கு மாத வருமானம் ஈட்ட வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதில் குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு அரசு ஊழியராக வேண்டும் என நினைக்கின்றனர்.

அவ்வாறு, குறிக்கோளுடன் வரும் மாணவர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடைக்கல்லாக இருக்கிறது. வணிக ரீதியில் செயல்பட்டு வரும் மையங்களில் சென்று முழுமையாக பயிற்சி பெற முடியாமல் பாதியிலேயே விட்டுவிடுகின்றனர். அந்த மாணவர்களை கருத்தில் கொண்டுதான் எங்களது பயிற்சி மையத்தை கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஆரம்பித்தோம்.

அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம், பயிற்சி மையம் இயங்குவதற்கு தேவையான இடவசதி, பொருள் உதவிகளை அளித்து வருகிறது. தற்போது, சுமார் 70-க்கும் மேற்பட்டோரை அரசு பணியாளர்களாக உருவாக்கி உள்ளோம். கோவையில் மட்டும் இல்லாமல் திருப்பூர், உதகை, மதுரை, திருச்செங்கோடு, தருமபுரி, சேலம் ஆகிய இடங்களிலும் மையத்தை அமைத்து பயிற்சி வழங்கி வருகிறோம்.

 

எங்களது நோக்கம் எல்லாம் பின்தங்கிய ஏழை மாணவர்கள், அரசு வேலை பெற வேண்டும். சமூகத்தில் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். வேலை பெற்று செல்பவர்களிடம் உங்களால் முடிந்தால் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் என்று கேட்கி றோம். தற்போது, வங்கித் தேர்வு, காப்பீட்டுத் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு என்பதோடு மட்டும் இல்லாமல் ஐ.ஏ.எஸ். பயிற்சியையும் தொடங்கி உள்ளோம் என்றார்.

இலவச பயிற்சிக்கு வித்திட்டு வரும் அகில இந்திய காப்பீட்டு சங்கத்தின் கோட்ட பொதுச் செயலாளர் வி.சுரேஷ் கூறியதாவது:

தகுதி வாய்ந்த ஏழை மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுதான் எங்களது ஒரே நோக்கம். அதற்காகத்தான் இந்த சேவையை வழங்கி வருகிறோம். மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்ட மாணவர் ஒருவரை வரவழைத்து அரசுப் பணிக்கான தேர்வுகளுக்குப் பயிற்சி வழங்கி வந்தோம்.

 

அவரது தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர். திடீரென ஏற்பட்ட விபத்தில் தந்தையால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை. இதனால் பயிற்சிக்கு செல்ல வேண்டாம். ஏதாவது ஒரு வேலைக்கு உடனே சென்று குடும்பத்தை காப்பாற்றச் சொல்லுங்கள் என அந்த பட்டதாரி மாணவனின் தாயார் எங்களிடம் வந்து முறையிட்டார்.

நாங்கள் சொன்னது எல்லாம், அம்மா நீங்கள் 2 மாதம் காத்திருங்கள் வங்கித் தேர்வு முடிந்து விடும். அதுவரை அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம். அதற்குள் நிச்சயம் நல்லது நடக்கும் என்றோம். நாங்கள் கூறியது போலவே அந்த மாணவருக்கு கனரா வங்கியில் வேலை கிடைத்தது.

 

குடும்பச் சூழ்நிலையால் தேர்வுக்கு முன்னதாக ஏதோ ஒரு தனியார் வேலைக்கு அனுப்பி இருந்தால் நிச்சயம் அவரால் வெற்றி பெற்றிருக்க முடியாது. தற்போது அவரது குடும்பச் சூழ்நிலையே மாறிவிட்டது. இந்த மகிழ்ச்சியே எங்களுக்குப் போதும். இதுபோன்று பின்தங்கிய பொருளாதார மாணவர்களை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் அவர்களுக்கு அரசு வேலையை உறுதிப்படுத்திக் கொடுக்கிறோம் என்றார்.

 

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/article6484989.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளித்த பள்ளி மாணவர்கள்

 

வெயிலடிக்கும் மரத்தடியில், கோவில் நுழைவாசலில், மக்கள் நெரிசல் மிகுந்த தெருக்களில் என, சென்னையின் பெரும்பான்மையான இடங்களில், பிச்சைக்காரர்களை பார்க்க முடியும். சோகம் வழியும் அவர்களின் குரல்களுக்கு என்றாவது நாம் காது கொடுத்திருப்போமா? அவர்களிடம் நிறைய கண்ணீர் உண்டு. நம்மிடம் தான் காதுகளில்லை. ஆனால், சிறியவர்கள் என, நாம் நினைக்கும் பள்ளி மாணவர்கள், அவர்களுக்கு பெருவாழ்வு தந்திருக்கின்றனர். பெரம்பூர், 'கல்கி ரங்கநாதன் மான்போர்டு மெட்ரிகுலேஷன்' பள்ளி பிளஸ் 1 மாணவர்கள், அந்த சாதனையை செய்திருக்கின்றனர்.

 

gallerye_001243532_1089106.jpg

 

 

gallerye_001247675_1089106.jpg

 
 
எப்படி சாத்தியமாயிற்று?
 
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இயங்கி வரும் 'மாற்றத்துக்கான வடிவங்கள்' என்ற அமைப்பு, உலகம் முழுவதும் பரவி உள்ளது. நாட்டை மாற்றும் வகையிலான செயல்களை மாணவர்கள் எப்படி உருவாக்குகின்றனர் என்பது குறித்து, ஆண்டு தோறும் அந்த அமைப்பு போட்டி நடத்தி வருகிறது.
அந்தப் போட்டிக்காக, தங்கள் பள்ளியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்து, லண்டனில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழகத்தில், சிறப்பு சான்றிதழ் பெற வைத்தனர். அதையே போட்டிக்கு அனுப்பி வைத்தனர்.உலகம் முழுவதிலும் இருந்து, பல்வேறு நாட்டு மாணவர்கள் பங்கேற்ற அந்த போட்டியில், முதல், 20 பள்ளி மாணவர்களின் செயல்பாடுகள் தேர்வாகின. அதில், இந்தப் பள்ளி மாணவர்களின் செயல்பாடும், ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டுக்கான போட்டிக்கு, பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.
 
 
நிம்மதியான வாழ்க்கை:
 
பள்ளி தலைமை ஆசிரியர், அனிதா டேனியல் கூறுகையில், ''மாணவர்களின் ஆலோசனைப்படி, பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம் வகுக்கப்பட்டது. மாணவர்களே கள ஆய்வு செய்து, பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்தனர். கள ஆய்வுக்கு செல்லும் போது, பள்ளியின் சீருடை, அடையாள அட்டை கட்டாயம் இருக்க வேண்டும் என,உத்தரவிட்டேன். மற்ற செய்திகளை மாணவர்களிடமே கேளுங்கள்,'' என்றார்.
 
இதுகுறித்து, மாணவர்கள் கூறியதாவது:பெரம்பூர், அயனாவரம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில், மாலை நேரங்களில் பிச்சைக்காரர்களை தேடி அலைந்தோம். அதில், 13 பேரை தேர்ந்தெடுத்தோம்.அவர்களின் செயல்பாடுகள் குறித்து கண்காணித்தோம். சிலர், போதை மற்றும் பிற தீய பழக்கங்களுக்கு அடிமையானோராக இருந்தனர். அவர்களில், சூழல் காரணமாக பிச்சை எடுக்கும், நான்கு பேரை தேர்ந்தெடுத்தோம். பெரம்பூரில் உள்ள நாகர், சிவகாமி, அண்ணாநகரில் உள்ள, யமுனா, சந்தான கிருஷ்ணன் ஆகியோர் தேர்வாகினர்.எங்களால் முடிந்த அளவு, சிறுதொகையை அளித்து, நால்வருக்கும் சிறிய கடை வைத்து கொடுத்துள்ளோம். இப்போது அவர்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். இருப்பினும், அவர்களை நாங்கள் ரகசியமாகவே கண்காணித்து வருகிறோம்.எங்களின் செயல்பாடுகளை அறிந்த மேயர், அவர்களின் மறுவாழ்வுக்கு, மாநகராட்சி சார்பில், 20 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.ஒருவரின் வாழ்க்கை, எங்களால் மாற்றம் அடைகிறது என்றால், அதை விட வேறு என்ன பெரிதாக ஜெயித்து விடப்போகிறோம், இந்த வாழ்க்கையில்?இவ்வாறு, அவர்கள் கூறினர்.
 
 

ஒருவரின் வாழ்க்கை, எங்களால் மாற்றம் அடைகிறது என்றால், அதை விட வேறு என்ன பெரிதாக ஜெயித்து விடப்போகிறோம், இந்த வாழ்க்கையில்?இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.