Jump to content

தாயகக் கனவுகளுடன் ....... மே 2014


Recommended Posts

தாயகக் கனவுகளுடன்  ....... [1]

 " நான் பெரிது,நீ பெரிது என்று வாழாமல், நாடு
பெரிது என்று வாழுங்கள். நாடு பெரிதானால் நாம்
எல்லோரும் அதற்குச் சிறியவர்களே.எமது நிலையற்ற‌
வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது."

            ‍‍‍----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன்


 

--------------------------------------------------------------------------------
  • Like 2
Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன்  ....... [2]

"நாம் துணிந்து போராடுவோம்.சத்தியம் எமக்குச்
சாட்சியாக நிற்கிறது. வரலாறு எமக்கு வழிகாட்டியாக‌
நிற்கின்றது."
                             ‍‍‍----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன்

Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன்  ....... [3]

"அடக்குமுறையாளர்கள் போராளிகளை அழிப்பதில்
காட்டும் தீவிரத்தைவிட பொதுமக்களின் ஆன்மஉறுதியை
உடைக்கவேண்டும் என்பதில்தான் அதிக அக்கறை
காட்டுகின்றனர்."
                              

    ----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன் ....... [4]

"சுதந்திரம் இல்லாத மனிதவாழ்வில் அர்த்தமே இல்லை."

"சுதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனிதவரலாற்றுச்
சக்கரம் சுழல்கிறது."

"உழைக்கும் மக்களின் உழைப்புச் சக்தியே ஒரு
தேசத்தின் ஜீவாதார சக்தி."

----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன்

Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன்  ....... [5]


"உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை
சாவு அழித்து விடுவதில்லை.எமது தேசத்தின் ஆன்மாவில்
அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு"

                   ----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன்

Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன்  ....... [6]

"ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ,
ஆயுதபலமோ அல்ல. அசைக்கமுடியாத மனவுறுதியும்,
வீரமும், விடுதலைப்பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும்
குணாம்சங்கள்."
                             ----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன்

Link to comment
Share on other sites

 தாயகக் கனவுகளுடன்  ....... [7]

 "தன்னிறைவான, தன்னில்தானே தங்கிநிற்கும்,
பொருளாதாரவாழ்வுடைய சமூகமாக எமது தேசம்
உருவாகவேண்டும் என்பதே எனது விருப்பம்." 

                ----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன்

Link to comment
Share on other sites

 தாயகக் கனவுகளுடன்  ....... [8]

"மாவீரர்களது அற்புதமான இலட்சியவாழ்க்கை,அவர்களது
தியாகங்கள்,அவர்கள் அனுபவித்த துன்பதுயரங்கள்,
ஏக்கங்கள்,அவர்கள் கண்ட கனவுகள்,இவை
எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடாகவே எமது
போராட்டவரலாறு முன்னேறிச்செல்கிறது."

             ----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன்

  • Like 2
Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன்  ....... [9]

"அன்றுதொட்டு இன்றுவரை தமிழரின் போராட்டம்
அறவழியைத் தழுவி நிற்கிறது.அகிம்சைவழியிலும்சரி,
ஆயுதவழியிலும்சரி,தமிழர் வரித்துக்கொண்ட போராட்டம்
தர்மத்தின் நியமத்தில் நெறிப்பட்டிருக்கிறது.இந்தத்
தார்மீக அடிப்படையே எமது போராட்டத்தின் ஆன்மீக‌
பலமாகவும் இருந்துவருகிறது."

             ----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன்

  • Like 1
Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன்  ....... [10]
 

"இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சிகொண்ட மக்களை
எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது."

 
" எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின்
நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது."
 

                               ----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன்

  • Like 3
Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன்  ....... [11]

"நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள்,என்னோடு
தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள்,நான்
பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள்,
களத்தில் வீழும்போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும்.
ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்துபோவதில்லை.
இந்த இழப்புகள் எனது இலட்சியஉறுதிக்கு மேலும்
உரமூட்டியிருக்கின்றன."



                               ----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன்

  • Like 1
Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன்  ....... [12]

" மக்களின் துன்பதுயரங்களில் பங்குகொண்டு, அவர்களது
கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டு செயலாற்-
றுவதுதான் உண்மையான அரசியல் வேலை."

"வியர்வை சிந்தி,கண்ணீர் சிந்தி,தாங்கொணாத்
துன்பத்தின் பரிசாகப் பெறுவதுதான் சுதந்திரம்."


                               ----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன்

  • Like 1
Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன்  ....... [13]

" விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி."

" இந்த யுத்தத்தில் எமது போராளிகளும்,பொதுமக்களும்
செய்துள்ள அற்புதமான தியாகங்கள் உலக வரலாற்றில்

ஓர் ஒப்பற்ற வீரகாவியமாகப் பொறிக்கப்பட்டுவிட்டது."

"வரலாறு என்பது மனிதவிடுதலையை நோக்கி நகரும்
ஒரு பேரியக்கம்."

"மனிதஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே
மனிதனிடம் சுதந்திரதாகம் பிறக்கிறது."

                               ----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன்

Edited by nunavilan
Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன்  ....... [14]

" விடுதலைப்போராட்டம் என்பது இரத்தம் சிந்தும்
புரட்சிகர அரசியல்பாதை."


"எமது மொழியும் கலையும் பண்பாடும் எமது நீண்ட‌
வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக‌
வேரூன்றி நிற்பவை.எமது தேசியவாழ்விற்கு
ஆதாரமாக நிற்பவை."

"இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப, வரலாற்று
ஓட்டத்திற்கு அமைய, கலைஇலக்கிய கர்த்தாக்கள்
புதுமையான,புரட்சிகரமான படைப்புகளைச்
சிருஷ்டிக்கவேண்டும்."


                               ----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன்

Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன்  ....... [15]

"மனித நாகரீகம் தோன்றிய காலந்தொட்டே மனிதர்கள்
விடுதலைக்காகப் போராடிவருகிறார்கள்.அடக்குமுறைக்கும்,

அநீதிக்கும் எதிராக,யுகம்யுகமாக விடுதலைப்போராட்டங்கள்
நிகழ்ந்து வந்துள்ளன.உலகில் அநீதியும் அடக்குமுறையும்
தொடரும்வரை விடுதலைப்போராட்டங்களும் தொடரும்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய‌
பயணமாகவே மனிதவரலாறு நகர்கிறது.ஒடுக்கப்படும்
சமுதாயங்களிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற‌
அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள்.எமது சமூகத்தில்
பிறந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்."

     --- தமிழீழத் தேசியத்தலைவர்  வே.பிரபாகரன்
Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன்  ....... [16]


"விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம்.
அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து,அதற்காக
வாழ்ந்து,அதற்காகப்போராடி,அதற்காக மடிந்த எமது

மாவீரர்கள் மகத்தான மனிதப்பிறவிகள்.அவர்களது
வாழ்வும் வரலாறும் எமது விடுதலைக் காவியத்தின்
உயிர்வரிகள்."

" அமைதிவழியில்,மென்முறை தழுவி,நேர்மையுடனும்
நெஞ்சுறுதியுடனும் நாம் எமது போராட்ட இலட்சியத்தை
அடைய முயன்றுவருகிறோம்.காலத்திற்கு ஏற்ப,வரலாற்றுக்
கட்டாயத்திற்கு அமைய, எமது போராட்டவழிமுறைகள்
மாறலாம்.ஆனால் எமது போராட்டஇலட்சியம் மாறப்
போவதில்லை.

சத்தியத்தின் சாட்சியாக நின்று,எமது மாவீரர்களின்
தியாகவரலாறு எமக்கு வழிகாட்டும். அந்தச் சத்தியத்தின்
வழியில் சென்று, நாம் எமது இலட்சியத்தை அடைவோம்
என்பது உறுதி."

   --- தமிழீழத் தேசியத்தலைவர்  வே.பிரபாகரன்
  • Like 2
Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன்  ....... [17]

"சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள்
என்றுமே சாவதில்லை.அவர்கள் ஒவ்வொருவருமே
தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.

மாவீரர்களே,உங்களது ஒப்பற்ற தியாகவரலாறுகளின்
ஒன்றிணைப்பாகவே
எமது தேசத்தின் வீரவிடுதலைக்
காவியம் படைக்கப்படுகிறது."

"சிங்கள தேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில்,
அந்தப்புராணக் கருத்துலகிற் புதைந்துபோய்க் கிடக்கிறது.
இலங்கைத் தீவானது தேரவாதப் பௌத்தத்தின் தெய்வீகக்
கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான
சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட‌
புனைகதையில் சிங்களமக்கள் இன்னும் சிக்குண்டு
கிடக்கிறார்கள்.
அடிமனதில் ஆழமாக உறைந்து,அசைவற்றதாக‌
இறுகிப்போன இந்தப் புராணக் கருத்துநிலையிலிருந்து
சிங்களதேசம் விடுபடப்போவதில்லை.இந்தக் கருத்தியற்
குருட்டுத்தனத்தால் இலங்கைத்தீவின் உண்மை
வரலாற்றையும் அங்கு நிலவும் சமுதாய மெய்நிலை--
களையும் சிங்களமக்களாலும்,அவர்களது அரசியல்,மதத்
தலைமைகளாலும் தெளிவாகப் புரிந்துகொள்ள
முடியவில்லை."

   --- தமிழீழத் தேசியத்தலைவர்  வே.பிரபாகரன்

Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன்  ....... [18]

"தர்மத்தின் வழி தழுவி,ஒரு சத்திய இலட்சியத்திற்காகச்
செய்யப்படும் தியாகங்கள் என்றுமே வீண்போவதில்லை.

எமது தேசத்தின் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை
ஒப்பற்றது.உலகவிடுதலை வரலாற்றில் நிகரற்றது.இந்த‌
அளப்பரிய ஈகத்தின் ஆன்மீகசக்தி இன்று உலகத்தின்
மனச்சாட்சியை உலுப்பிவிட்டிருக்கிறது.எமது மாவீரர்களின்
சுதந்திரதாகம் சாவுடன் தணிந்துபோகவில்லை.அது எமது
இனத்தின் வீரவிடுதலைக் குரலாக உலககெங்கும் ஒலித்துக்
கொண்டிருக்கிறது.
சாதி,மதம்,வர்க்கம், என்ற வேறுபாடுகளுக்கு அப்பால்,ஒரு
விடுதலை இயக்கத்தின்கீழ்,ஒரு விடுதலை இலட்சியத்தின்
கீழ், ஒன்றுபட்ட சமூகமாக எமது மக்கள் இன்று அணிதிரண்டு
நிற்கிறார்கள்.வீரம் செறிந்த எமது விடுதலைப் போராட்டமும்
அந்த விடுதலைப்போராட்டத்தில் எமது போராளிகள் ஈட்டிய‌
அபாரமான சாதனைகளும், அவர்கள் புரிந்த அற்புதமான‌
தியாகங்களுமே எமது மக்களை எழுச்சியூட்டி,உணர்வூட்டி,
ஒரே அணியில்,ஒரே இனமாக,ஒரே தேசமாக ஒன்றுதிரள‌
வைத்திருக்கின்றன. எமது மாவீரர்களின் மகத்தான
தியாகங்களும் அர்ப்பணிப்புகளுமே எமது தேசத்தின்
ஒருமைப்பாட்டிற்கு ஆதாரசக்தியாக விளங்குகின்றன."

 
   --- தமிழீழத் தேசியத்தலைவர்  வே.பிரபாகரன்
 

  • Like 1
Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன்  ....... [19]

"இந்த உலகைத் துறந்து,இளமையின் இனிமையான‌
உணர்வுகளைத் துறந்து,சாதாரணவாழ்வின் சகலவற்றையும்
துறந்து,எமது மண்ணுக்காக,எமது மக்களுக்காக,எமது
மக்களின் உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான‌
உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம்
சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்.

எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.தேசிய‌
விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து
அந்த இலட்சியத்திற்காக தமது வாழ்வைத் தியாகம்
செய்தவர்கள்.இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்-
களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள்,உயர்ந்து நிற்கிறார்கள்.
எம் தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்.

தோற்றம்,மாற்றம்,மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே
காலம் நகர்கிறது.ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக்
காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றி மறையும் நீர்க்-
குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு
முடிந்துபோகிறது;முற்றுப்பெறுகிறது.ஆனால் எமது

 மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவை-
யல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு
தொடர்கிறது.சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்
போகவில்லை.அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில்
நித்தியவாழ்வு வாழ்கிறார்கள்.சத்தியத்தின் சாட்சியாக‌
நின்று,மனவலிமையின் நெருப்பாக எரிந்து,எம்மைச்
சுதந்திரப் பாதையில் வழிகாட்டி,நெறிப்படுத்திச்
செல்கிறார்கள்."


   --- தமிழீழத் தேசியத்தலைவர்  வே.பிரபாகரன்
  • Like 1
Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன்  ....... [20]

"ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண‌
நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு.ஒரு
உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு.
உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை.அவனது
உயிராக இயங்கிவந்த இலட்சியநெருப்பு என்றுமே
அணைந்து விடுவதில்லை.அந்த இலட்சியநெருப்பு ஒரு

வரலாற்றுச்சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்
கொள்கிறது. ஒரு இனத்தின் தேசியஆன்மாவைத்
தட்டியெழுப்பி விடுகிறது."


   --- தமிழீழத் தேசியத்தலைவர்  வே.பிரபாகரன்

  • Like 1
Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன்  ....... [21]

"மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கின்றேன்.
தாய்நாட்டின் விடுதலையென்ற பொதுமையான
பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள் தமது தனிமையான‌
பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.
சுயவாழ்வின் சுகபோகங்களை கைவிட்டு பொதுவாழ்வின்
அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள்.அந்தப்
பொதுவான இலட்சியத்திற்காகத் தமது சொந்த வாழ்வையும்
அர்ப்பணிக்கத் துணிகிறார்கள்.இதனை ஒரு புனிதமான‌
துறவறமாகவே நான் கருதுகிறேன்.இந்தப் புனிதத்
துறவறத்திற்கு  இலக்கணமாக விள‌ங்கும் மாவீரர்களை
நாம் புனிதர்களாகவே பூசிக்கவேண்டும்."


--- தமிழீழத் தேசியத்தலைவர்  வே.பிரபாகரன்

  • Like 1
Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன்  ....... [22]

"அணையாத நெருப்பாக சுவாலை விட்டெரியும் எமது
வீரவிடுதலைப் போரில் நாம் புரிந்துவரும் அதியுயர்
தியாகங்களும் அற்புதமான அர்ப்பணிப்புகளும் இன்று
முழு உலகத்தையுமே வியப்பில் ஆழ்த்தியுள்ளன.இந்த‌
வீரவிடுதலை வரலாற்றின் கதாநாயகர்களாகத் திகழ்பவர்கள்
எமது மாவீரர்களே.

எமது தேசத்தின் விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்த‌
ஒவ்வொரு சுதந்திரப் போராளிக்கும் எமது தேசத்தின்
வரலாற்றில் அழியாத இடமுண்டு.இவர்கள் சாதாரணர்-
களாகச் சாவைத் தழுவவில்லை.எமது இனத்தின்
இருப்பிற்காக,இவர்கள் தமது சுயத்தை அழித்தவர்கள்.
இந்த அற்புதமான துறவறத்தால் இவர்களது அடையாளங்கள்
என்றுமே அழிவதில்லை.
இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு
தனிமனித சரித்திரம்.ஆயிரமாயிரம் மாவீரர்களின்,
ஆயிரமாயிரம் தனிமனித சரித்திரங்கள் சங்கமமாகிய‌
பெருநதியாகவே எமது தேசத்தின் வரலாறு வீறுகொண்டு
ஓடுகிறது."

--- தமிழீழத் தேசியத்தலைவர்  வே.பிரபாகரன்

  • Like 1
Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன்  ....... [23]

"தமிழரின் பிரச்சினைக்கு சமாதானவழியில் நிரந்தரமான‌
அரசியற்தீர்வு காணப்படவேண்டுமாயின்
தமிழர் பற்றிய‌
சில அடிப்படை உண்மைகளை சிங்களதேசம் ஏற்றுக்
கொண்டே ஆகவேண்டும்.அத்தோடு தமிழ்மக்கள் எத்தகைய‌
தீர்வை விரும்புகிறார்கள் என்பதையும் அவர்களது அடிப்படை
அபிலாசைகள் என்ன என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

ஈழத்தமிழர்கள் தனித்துவமான இனஅடையாளத்தைக்
கொண்டவர்கள்.ஒரு தேசிய இனக்கட்டமைப்போடு,அந்த‌
இனத்துவப் பிரக்ஞையோடு வாழும் ஒரு மக்கள் சமூகம்.
அவர்களுக்கு வரலாற்றுரீதியான தாயகமண்ணாக சொந்த‌
நிலம் உண்டு.எமது மக்கள் விரும்புவதெல்லாம் ஒன்றுதான்.
தமது சொந்தமண்ணில் நிம்மதியாக நிறைவாக‌ வாழ
வேண்டும் என்பதுதான்.மற்றையவர்களின் அதிகாரஆதிக்கமோ,
நெருக்குவாரங்களோ இல்லாத ஒரு அரசியற் சூழலில்
தம்மைத்தாமே ஆட்சிபுரிந்து கௌரவமாக வாழவேண்டும்
என்பதே எமது மக்களின் ஆழமான அபிலாசையாகும்.
சிங்களமக்கள் இதனைப் புரிந்துகொள்ளவேன்டும். இந்தப்
புரிந்துணர்வின் அத்திவாரத்திலிருந்துதான் ஒரு நியாயமான,
நிரந்தரமான தீர்வைக் கட்டியெழுப்புவது சாத்தியமாகும்."

--- தமிழீழத் தேசியத்தலைவர்  வே.பிரபாகரன்

 

-------------------------------------------------------------------------------------------------------


தாயகக் கனவுகளுடன்  ....... [24]
 

"குட்டக்குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக அவமானத்துடன்
வாழ்ந்த தமிழனைத் தலைநிமிர்த்தி தன்மானத்துடன் வாழ-
வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்."

 
"விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்க-
வில்லை.வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக்
கையளித்தது.சுதந்திரம் வேண்டுவதைத்தவிர வேறு வழி
எதையும் வரலாறு எமக்கு விட்டுவைக்கவில்லை."
 
"கரடுமுரடான பாதைகள் நிறைந்த இந்த இலட்சியப்பயணத்தில்
எமக்கு ஒரேயொரு ஊன்றுகோலாக இருப்பது எமது உறுதிதான்."

--- தமிழீழத் தேசியத்தலைவர்  வே.பிரபாகரன்

 

 

Edited by மகம்
  • Like 2
Link to comment
Share on other sites

தாயகக் கனவுகளுடன்  ....... [25]
 

"பெண்விடுதலை என்ற இலட்சியப்போராட்டமானது எமது
விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை."
 
"பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத
எந்த ஒரு நாடும்,எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக
விடுதலையைப் பெற்றதாகக் கூறமுடியாது."
 
"நாம் தமிழீழப்பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை
நிகழ்த்தியிருக்கின்றோம்.தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத
புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது."
 
"வீரத்திலும் தியாகத்திலும், விடுதலை உணர்விலும்
ஆண்களுக்கு எவ்வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள்
இல்லை என்பதை பெண்போராளிகள் தமது வீரச்சாதனைகள்
மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்."

"பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்கு முறைகளிலிருந்தும் விடுதலைபெற்று ஆண்களுடன் சமத்துவமாக கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல்."
 

--- தமிழீழத் தேசியத்தலைவர்  வே.பிரபாகரன்

 

-------------------------------------------------------------------------------------------------------------

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்

ஒவ்வொருநாளும் வந்து போகின்றோம்.........

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.