Jump to content

வரப்புயர (விவசாயம்/கைத்தொழில் சார்ந்த பதிவுகள்)


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
வரப்புயர‌ (விவசாயம்/கைத்தொழில் சார்ந்த பதிவுகள்) 
 
எமக்குப்  பயண்படக்கூடிய விவசாய மற்றும் கைத்தொழில்கள் சம்மந்தமான செய்திகளை இத்திரியில் பதிவதற்கு எண்ணியுள்ளேன், நீங்களும் தகவல்களை இணையுங்கள். இத்திரி  ஆக்கபூர்வமானதாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை. இத்திரி உருவாவதற்கான  ஆலோசனை  வழங்கிய சுவைப்பிரியனுக்கு நன்றிகள்

 

 

 

Link to post
Share on other sites
 • Replies 162
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்
உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள, அகர் மரம் வளர்ப்பு- ஒரு கிலோ எண்ணெய் விலை ஒரு லட்சம் ரூபாய்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=139353

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கையளவு நீரில் பையளவு லாபம்!

Tamil_News_large_969831.jpg

குறைந்தளவு நீரில், முந்திரியோடு மற்ற பயிர்களையும் சாகுபடி செய்து லாபமீட்டும் வழிமுறைகளை கூறும், டேவிட் பியூலா ராஜா: நான், நெல்லை மாவட்டம், மேலநீலிதநல்லுார் வட்டத்தில், தோட்டக்கலை உதவி இயக்குனராக பணியாற்றுகிறேன். சித்திரைப்பட்ட உழவில், விவசாயிகள் மும்முரமாக இருந்தாலும், கடுமையான வறட்சியில் என்ன பயிர் செய்வது என்ற குழப்பமும், தயக்கமும் பலரிடம் உள்ளது. மேலும், இங்கு காற்றின் வேகமும் அதிகம்.எனவே, காற்றின் வேகத்தை குறைத்து, குறைந்த நீரில் லாபகரமான விவசாயம் செய் யும் சோதனை முயற்சியில் ஈடுபட்டேன். டென்மார்க்கில், டேனிஷ் சர்வதேச வளர்ச்சி மையத்தில், இயற்கை சார்ந்த நுண் பொருளாதாரம் குறித்த பயிற்சியை, நேரடியாக பெற்ற அனுபவம், எனக்கு ஏற்கனவே உண்டு.அந்த அனுபவத்தில், மேலநீலிதநல்லுார் வட்டத்தில், அரசு நிதியுதவியுடன், 1,000 எக்டேர் தரிசு நிலத்தில் முந்திரி சாகுபடி செய்தேன். ஏனெனில், முந்திரியை பயிரிட்டால், காற்றின் வேகத்தை பெருமளவு கட்டுப்படுத்த முடியும். பானையில் தண் ணீர் நிரப்பி, அதில் சிறு துளையிட்டு முந்திரி செடிக்கு நீர் பாய்ச்சி, நீரின் தேவையை குறைத்தேன். முந்திரி மரத்தின் நிழலில், பருவ காலங்களில் கிடைக்கும் நீரின் அளவை பொறுத்து, என்ன பயிர் சாகுபடி செய்ய முடியுமோ, அதை விவசாயிகளுக்கு நேரடியாக பயிரிட்டு காட்டினேன். இம்முறையில், பல விவசாயிகள் லாபமடைந்தனர்.இம்முறையை பின்பற்றி, செந்தில் என்ற விவசாயி மட்டுமே ஆண்டிற்கு, 3 லட்சத்திற்கும் மேல் லாபமீட்டி வருகிறார். இவருக்கு, 10 ஏக்கர் நிலம் உள்ளது. இவர், மழைக் காலங்களில் மட்டும், உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு போன்றவற்றை பயிரிட்டு, ஆண்டிற்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை லாபமீட்டினார்.ஒரு பயிரை பயிரிடுவதற்கு முன், அதன் சந்தை வாய்ப்பு, சுற்றுப்புறச்சூழல், நீரின் அளவு, மண்ணின் தன்மை என, அனைத்தையும் விவசாயிகள் கவனிக்க வேண்டும்.அதன்படி, முதலில் செந்திலின் நிலத்தில், 100 முந்திரிச் செடிகளை நட்டோம். இதன் நிழலில், வழக்கமாக பயிர் செய்யும் பயிறு வகைகளை, பருவத்திற்கு ஏற்ப சாகுபடி செய்தோம். மேலும், அங்கேயே ஆடு, மாடு, கோழி போன்றவற்றையும் வளர்க்க செய்தோம். பயிறு வகை பயிர்களிலிருந்து கிடைக்கும் கழிவுகள் மாட்டுத் தீவனமாகிறது. இப்படி, முந்திரி, பயிறு வகைப்பயிர்கள், கால்நடை, பிராய்லர் கோழி மூலம், தற்போது ஆண்டிற்கு, 3.37 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த இணையத்தளங்களில் பல வகைப்பட்ட விவசாய / கால்நடை வளர்ப்பு சம்மந்தமான  செய்திகள் (தமிழில்)உள்ளன.

http://gttaagri.relier.in/ , http://mygreenindiaa.blogspot.ch/  , http://www.agriinfomedia.com/

 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஆதவன்.அண்மையில் வட மாகண அமைச்சர் திரு.   பொ.ஜங்கரநேசன்    அவர்களை சந்தித்த போது எமது நிலங்கள் உபயோகம் இல்லாமல் இருப்பதையும் தெற்கில் உள்ளவர்கள் வந்து குறைந் விலையில் அவற்றை வாங்குதைப்பற்றி குறிப்பிட்டார்.அத்துடன் விவசாயம் கால்நடை வளர்ப்பில் எம்மவர்கள் அதிக ஆர்வம் காட்டாமையால் வரும் பொருளாதார இழப்புகள் பற்றியும் குறிப்பிட்டார்.பாபர்போம் இந்த திரிக்கு எப்படி ஆதரவு என்று.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அதிக மகசூல் தரும் நவீன மிளகாய் சாகுபடி!

 

chilli.jpg

விழுப்புரம் அருகே பிடகாத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி மோ.அறிவழகன் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெற்று சாதனை படைத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிளகாய் பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் மிளகாய் பயிரிடும் விவசாயிகள் பாரம்பரிய வாய்க்கால் முறைப்படிதான் பயிர் செய்கின்றனர். ஆனால் தற்போது மிளகாய் சாகுபடியில் தோட்டக் கலைத் துறை நவீன முறையை புகுத்தியுள்ளது.

இந்த முறையில் மிளகாய் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும் என்று விவசாயத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னோடி விவசாயி: விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், பிடாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மோ.அறிவழகன். இயற்பியல் பாடத்தில் பி.எஸ்.சி. பட்டம் பெற்றுள்ள இவர், கடந்த 2012-ம் ஆண்டு யு.எஸ். 344 என்ற வீரிய ஒட்டு ரக மிளகாயை சொட்டு நீர் பாசன முறையில் பயிர் செய்தார்.

குழிநாற்று முறையில் மிளகாய் நாற்றுகளை பராமரித்து பின்னர் அதை நடவு செய்தார். மிளகாய்க்கு தேவையான உரங்களை சொட்டு நீர் பாசன முறையில் நீரில் கலந்து அளித்தார். இதனால் அவருக்கு அதிக மகசூல் கிடைத்தது.

இதுகுறித்து விவசாயி அறிவழகன் கூறியது:

சாதாரண முறையில் மிளகாய் சாகுபடி செய்த போது எனக்கு ஏக்கருக்கு 10,890 நாற்றுகள் தேவைப்பட்டன. ஆனால் சொட்டு நீர் பாசன முறையில் 4,444 நாற்றுகள் மட்டுமே தேவைப்பட்டன. களை நிர்வாகமும் இந்த முறையில் மிகவும் குறைவாகவே தேவைப்பட்டது.

3 மடங்கு வருமானம்: சாதாரண முறையில் ஏக்கருக்கு 9 மாதங்களில் 20 டன் மிளகாய் கிடைத்தது. ஆனால் சொட்டு நீர் பாசன முறையில் ஏக்கருக்கு 45 டன் மிளகாய் கிடைத்துள்ளது. சாகுபடி செலவு சாதாரண முறையில் 9 மாதங்களுக்கு ரூ.1,25,000 ஆனது. ஆனால் இம் முறையில் ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் ஆனது. செலவு அதிகம் ஆனாலும் நிகர வருமானம் 3 மடங்கு அதிகம் கிடைக்கிறது. சாதாரண முறையில் ரூ.2.75 லட்சம் வருமானம் கிடைத்து. ஆனால் சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தி நவீன முறையில் பயிர் செய்தபோது ரூ.9 லட்சம் வருமானம் கிடைத்தது. இன்னும் அறுவடை முடியாததால் மேலும் 2 டன் அளவுக்கு மிளகாய் கிடைக்கும்.

இந்த வீரிய ஒட்டு ரக மிளகாய் சாதாரண மிளகாய் போன்றே இருக்கும். ஆனால் அதிக மகசூல் கிடைக்கும். தரமாகவும் இருக்கும். கோலியனூர் வட்டாரத்தில் உள்ள மற்ற விவசாயிகளும் அரசின் மானிய உதவியுடன் சொட்டு நீர் பாசனத்தை அமைத்து, மிளகாய் சாகுபடி செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

நீர் சேமிப்பு: இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் க.வீரசாமி கூறுகையில், சொட்டு நீர் பாசன முறையில் பயிர் செய்வதன் மூலம் நாற்றுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

அதேபோல் 40 சதவீத அளவுக்கு நீரையும் சேமிக்க முடியும். நீரை சேமிப்பதன் மூலம் கூடுதல் பரப்பில் சாகுபடி செய்யலாம் என்றார்.

http://www.dinamani.com/agriculture/2013/10/09/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE/article1827744.ece

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த இணையத்தளங்களில் பல வகைப்பட்ட விவசாய / கால்நடை வளர்ப்பு சம்மந்தமான  செய்திகள் (தமிழில்)உள்ளன.

http://gttaagri.relier.in/ , http://mygreenindiaa.blogspot.ch/  , http://www.agriinfomedia.com/

 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
வானம் பார்த்த பூமியில் முருங்கையை பயிரிடலாம்!

 

Tamil_News_large_968218.jpg

 

வறட்சி, மழை என, எந்த காலமாக இருந்தாலும், முருங்கையை லாபகரமாக பயிரிட்டு வரும், விவசாயி மணிசேகரன்: நான், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சிக்கு அருகில் உள்ள, மீனாட்சி வலசு கிராமத்தை சேர்ந்தவன். என்னிடமுள்ள, 60 ஏக்கரில், 20 ஏக்கர், முருங்கை மட்டுமே பயிரிட்டுள்ளேன். இப்பகுதி, மழை அதிகம் பெய்யாத, கடும் வறட்சியானது. இதனால், 'போர்வெல்' அமைத்து, 'சொட்டு நீர் பாசனம்' மூலம் தண்ணீர் பாய்ச்சுகிறேன்.வானம் பார்த்த பூமியில் கம்பு, சோளம், கேழ்வரகு ஆகியவை மட்டும் தான், விவசாயம் செய்ய வேண்டும் என்பதில்லை. அதே வானம் பார்த்த பூமியில், முருங்கையை நட்டுப் பாருங்கள். உங்களுக்கு, வாரத்துக்கு வாரம் பணம் கிடைக்கும். வறட்சி, மழை என, எந்த காலமாக இருந்தாலும், விவசாயியை ஏமாற்றாமல் பணம் கொடுப்பது, முருங்கை விவசாயம் மட்டும் தான். நாட்டு முருங்கை, செடி முருங்கை, கரும் முருங்கை என, பல வித முருங்கை இருக்கிறது. மரமுருங்கையை நடுவதாக இருந்தால், நன்றாக வளர்ந்து காய் கொடுத்து கொண்டிருக்கும் மரத்தின் குச்சியை எடுத்து, 'பதியன்' போட வேண்டும். வைகாசி மாதம் நட்டு வைத்தால், மரம் செழிப்பாக வளரும். ஒரு மரத்திற்கும், இன்னொரு மரத்திற்கும், 10 அடி இடைவெளி விட்டு நட வேண்டும். பக்கவாட்டில், 25 அடி இடைவெளி விட வேண்டும்.பிறகு, 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றினால் போதும், உரம் பெரிதாக தேவையில்லை. முதல், 15 நாட்களுக்கு மாட்டுச்சாணம் வைத்தால் போதும். இலைகளில் பூச்சி இருந்தால், பூச்சிமருந்து அடிக்கலாம். மாட்டின் சிறுநீரை தெளித்தாலும் பூச்சி பிடிக்காது.செடி முருங்கைக்கு, 5 அடி இடைவெளி விட்டு நட வேண்டும். இதற்கான தண்ணீரை, வாரம் தவறாமல் பாய்ச்ச வேண்டும். இது ஒரு ஆண்டு மட்டுமே வளரும். பிறகு, வேறு செடி வைக்க வேண்டும். செம்மண், சிறிதளவு களிமண் கலந்த வறட்சி பகுதியில் தான், வியாபார நோக்கில் இதை பயிரிட முடியும். எவ்வளவு வறட்சி இருந்தாலும், ஆண்டிற்கு இரண்டு போகம் காய் விளையும். முருங்கை மரத்தின் கீழ், எப்போதும் தண்ணீர் நிற்க கூடாது. இதனால், குறைந்தளவு தண்ணீரே தேவைப்படும். முருங்கை மரத்திற்கான பராமரிப்பும் மிக மிக குறைவு. முருங்கையை, எவ்வளவு குறைவாக விற்றாலும், 1 ஏக்கரில் ஒரு சீசனுக்கு, செலவு போக, 50 ஆயிரத்திலிருந்து, 60 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பார்க்கலாம். ஆண்டுக்கு மூன்று சீசனும் நன்றாக இருந்தால், நிச்சயம் ஒரு ஏக்கருக்கு, 1.5 லட்சம் ரூபாய் லாபம் பார்க்கலாம்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=968218

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த இணையத்தளங்களில் பல வகைப்பட்ட விவசாய / கால்நடை வளர்ப்பு சம்மந்தமான  செய்திகள் (தமிழில்)உள்ளன.

http://gttaagri.relier.in/ , http://mygreenindiaa.blogspot.ch/  , http://www.agriinfomedia.com/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
ஊதுபத்திக் கைத்தொழில்
 
எமது நாட்டில் ஊதுபத்தி மிகவும் தேவை உள்ள ஒரு பொருளாகும், ஆணால் நாம் ஊதுபத்தியை இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்கிறோம். மாறாக நாம் இதை எமது பிரதேசங்களில் கைத்தொழிலாக ஊக்குவிக்கலாமே ! மூலப்பொருள் பிரச்சனை வராது என நினைக்கின்றேன்.
ஊதுபத்திக் கைத்தொழில் சம்மந்தமாக இணையத்தில் வாசித்த செய்தி ஒன்றை இணைத்துள்ளேன்.
 

ஊருக்கு மணம் பரப்பும் ஊதுபத்தி தொழில் ஊக்குவிக்கப்படுமா? உற்பத்தியாளர் ஏக்கம்

 

பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்டம், பாளை யம் கிராமத்தில் தயாரிக்கப்பட்டு ஊர் முழுக்க மணம் பரப்பும் ஊதுபத்தித் தொழில் ஊக்குவிக்கப்படு மா என்று உற்பத்தியாளர் கள் ஏக்கத்தில் உள்ளனர்.
இறை வழிபாட்டில் இன்றிமையாதது ஊதுபத்தி. ஊதுபத்தியின் மணம் பக்தியை வரவழைப்பதோடு, தெய்வீகச் சூழலையும் உருவாக்குவது விந்தையே. மன அமைதிக் கும், மன மகிழ்ச்சிக்கும் மருந்தாகும் இந்த ஊதுபத்தித் தொழில் தற்போது குடிசைத் தொழிலாகத் திகழ்கிறது.
பட்டாசு என்றால் சிவகாசி என்பது போல், பத்தி என்றால் பாளையம் என்பதை  நினைவுக்கு கொண்டுவரும் வகையில் பெரம்பலூர் அருகேயுள்ள பாளையம் கிராமத்தில் இத் தொழில் நடந்துவருகிறது. இதனால் பலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தொழில் வளமே இல்லாத பெரம்பலூர் மாவட்டத்தில் குடிசைத் தொழில் மூலம் ஊதுபத்தி தயாரிப்பது உள்ளூர் காரர்களுக்கே தெரியாதிருந்த நிலையில், தற்போது மாவட் டம் முழுக்க ஊதுபத்தித் தொழில் மணம் பரப்பத் தொடங்கியுள்ளது.
பாளையம் கீழ வீதியைச் சேர்ந்த நடராஜனின் மகன் மணி (30). இவரும், இவரது மனைவி லோகாம்பாளும் (24) ஆரம்பத்தில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், தங்களது வீட்டில் குடிசைத் தொழிலாக ஊதுபத்தித் தயாரிக்கும் தொழிலில் இறங்கினர். கரித் தூள், மரத் தூள், ஜிகட் பவுடர் ஆகியவற்றைக் குறிப்பிட்ட சதவீதத்தில் முறையாகக் குழைத்து மாவு தயாரித்து, அதனுடன் வாசனைத் திரவியங்களை சேர்த்து இயந்திரத்தின் உதவியுடன் ஊதுபத்திகளை தயாரி க்கின்றனர்.
கிரைண்டரை போல் ரூ.22 ஆயிரத்தில் மாவு தயாரிக்கும் இயந்திரத்தையும், ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான ஊதுபத்தி தயாரிக்கும் 5 இயந்திரங்களையும் வாங்கி ஆரம் பித்தத் தொழில் தற்போது கமகமவென மணம் பரப்புகிறது.
நாளொன்றுக்கு 5 பேர் 8 மணி நேரம் பணிபுரிந்து, 15 கிலோ என மாதம் ஒன்றரை டன் எடையில் ரூ1.10 லட்சம் மதிப்பிலான ஊதுபத்தி தயாரிக்கப்பட்டு வருகிறது. இத் தொழிலுக்கு மாவட்டத் தொழில் மையத்தில் வங்கிக் கடனுதவி கேட்டு விண்ணப்பித்து தகுதியுடையோர் பட்டியலில் தேர்வாகியுள்ள மணிக்கு இன்னும் வங்கிக் கடன் கிடைத்தபாடில்லை. இந்த கடன் தொகை விரைவாகக் கிடைத்தால் குறைந்தது 10 பேருக்காவது வேலைவாய்ப்பு வழங்கி அவர்களையும் வாழ வைக்க முடியும் என்றார் மணி. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஊதுபத்தி தயாரிக்கும் மூலப் பொருட்களான கரித்தூர், மரத்தூள் ஆகியவற்றையும், மூங்கில் குச்சிகளையும் மொத்தமாக சென்னையிலும், பெங்களூரிலிருந் தும் வரவழைக்கிறோம். கவர்களை மட்டும் சிவகாசியில் ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்கிறோம். நாங்கள் விண்ணப்பித்துள்ள வங்கிக் கடனுதவியும் விரைந்து கிடைத்து விட்டால் ஒரு மாதத்திற்கு ரூ2.80 லட்சம் மதிப்பிலான 4 டன் ஊதுபத்திகளைத் தயாரிக்க முடியும் என்றார்.
கிராமத்தாரை குறிவைத்து வியாபாரம்
பெரம்பலூர் மாவட்டம், பாளையம் கிராமத்தில் தயாரிக்கப்படும் ஊதுபத்திகள் ரூ.5, ரூ.10, ரூ.30 வீதம் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகின்றன. 5 ரூபாய் டப்பாவைத் தயாரிக்க ரூ2.25 செலவாகும் நிலையில், விற்பனைக்காக 50 காசு சேர்த்து ரூ2.75 வீதம் விற்கப்படுகிறது. குறிப்பாக நகரத்துக்குச் செல்லுகிற கிராமத்தாரை குறிவைத்து கிராமங்களுக்கு நேரில் கொண்டு சென்று விற்கப்படுகிறது.

 

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=265359&cat=504

 

Link to post
Share on other sites

நல்லதொரு பதிவு ஆதவன்.

 

வரப்புயர என்பதில் முக்கியமானது நீரைச் சேமித்தலும் அதனைச் சிக்கனமாகவும் அதிக பயனுள்ளதாகவும் பயன்படுத்துதலாகும்.

 

தொடர்ந்து பயனுள்ள தகவல்களைப் பதியுங்கள். நன்றி.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தென்னையில் தாய் மரம் தேர்வு செய்வது எப்படி?

 

 • coconut_tree.jpg

தென்னை சாகுபடியில் தாய் மரம் தேர்வு செய்வது பற்றி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது:

 

தென்னை கடந்த 3,000 ஆண்டுகளாக இந்தியாவில் பயிரிடப்பட்டு வருகின்ற, பாரம்பரியம் மிக்க பண்ணைப் பயிராகும். இந்திய தேசிய வருமானத்தில் ரூ. 8,300 கோடி வரை தென்னை மூலம் கிடைத்துவருகிறது. தென்னைசார் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ரூ. 1,300 கோடி அந்நியச் செலவாணி கிடைத்து வருகிறது.

 

குறைவான காய்ப்புத்திறன்: ஆரம்ப காலத்தில் தென்னை சாகுபடிக்கான விதைக்காய்கள் தேர்வு, விவசாயிகளின் தென்னந்தோப்புகளில் தான் நடைபெற்று வந்தது. தென்னந்தோப்புகளிலுள்ள அதிகமான காய்கள் காய்க்கின்ற தென்னைகளிலிருந்து முற்றின தேங்காய்களைப் பறித்துவந்து விதைக் காய்களாகப் பயன்படுத்தி, காய்ப்புத்திறன் மிக்க தென்னை பயிரிடப்பட்டது.

ஆனால் அந்த முறையில் அதிக தேங்காய் மகசூலைப் பெற முடியவில்லை. அதிக தேங்காய் மகசூல் என்றகாரணியை மட்டுமே கவனத்தில் கொண்டு சேகரிக்கப்பட்ட விதைக்காய்களைப் பயன்படுத்திப் பயிரிடப்பட்டத் தென்னைகளில் அதிக பட்சமாக 15 சதவீத அளவில் தான் காய் மகசூலை அதிகரிக்க முடியும் என்றும், தென்னையின் மரபியல் மகசூல் திறனில் சுமார் 50 சதவீதம் மட்டுமே அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

 

நிச்சயமற்ற காய்ப்புத்திறன்: இந்தியாவில் பெருமளவில் பயிரிடப்படுகின்ற நெட்டை ரகத் தென்னைகளில், ஒரு தென்னையிலுள்ள பெண் பூக்கள் வேறு ஒரு தென்னையிலிருந்து வெளிவரும் மகரந்தங்கள் மூலம் கருத்தரித்து, அதாவது அயல் மகரந்த சேர்க்கை செய்து தேங்காய்களை உற்பத்தி செய்கின்றன.

 

அந்தத் தேங்காய்களை விதைக் காய்களாகப் பயன்படுத்தி தென்னை பயிரிடப்பட்டு வருகிறது. அத்தகைய தென்னைகளின் காய்ப்புத் திறன் பற்றி எதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது.

ஏனெனில் அந்த விதைக்காய்களின் தந்தை மரங்கள் பற்றி எதுவும் தெரியாது. அந்தத் தந்தை மரங்கள் குறைந்த காய்ப்புத்திறன் கொண்டவையாக இருந்தால் அவற்றின் மகரந்தங்கள் மூலம் கருத்தரித்து உருவான விதைக்காய்களைக் கொண்டு பயிரிடப்படும் தென்னைகள் பெரும்பாலும் குறைந்த மகசூலையே தருகின்றன.

 

விதைக்காய்கள் மூலம் பயிரிடப்பட்டுள்ள தென்னையில் 67 சதவீதத் தென்னை மரங்கள் ஆண்டுக்கு 40 காய்களுக்கும் குறைவாகவே காய்க்கின்றன. இத்தகைய குறைந்த மகசூலுக்கு முக்கிய காரணம், தென்னையில் நடைபெறும் அயல் மகரந்தச் சேர்க்கை தான்.

இந்த அயல் மகரந்தச் சேர்க்கை காரணமாக, அதிகமாகக் காய்க்கின்ற தென்னைகளில் சேகரிக்கப்பட்ட விதைக்காய்களைக் கொண்டு பயிரிடப்பட்டுள்ள தென்னைகளிலும் கூட அதிகமான காய் மகசூல் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

அண்மைக்கால ஆராய்ச்சிகளின்படி காய் மகசூலுடன் வேறு பல தாவரவியல் பண்புகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு சரியான தாய்த் தென்னை மரங்களையும், விதைக்காய்களையும் தரமான தென்னங்கன்றுகளையும் தேர்வு செய்து தென்னை பயிரிடுவதன் மூலம் தென்னைகளின் காய்ப்புத்திறனை கணிசமாக அதிகரிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

தாய்மரத் தோப்புகள் தேர்வு: தாய்த் தென்னை மரங்களைத் தேர்வு செய்வதற்கு, முதலில் அதற்குத் தகுதியான தென்னந் தோப்புகளைத் தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் கீழ்க்கண்ட தகுதிகளைக் கொண்டுள்ள தென்னந்தோப்புகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

* மானாவாரிப் பயிராக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னந்தோப்புகள்.

*அதிக அளவு ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படாத தென்னந்தோப்புகள்.

*பூச்சிநோய்த் தாக்குதல் இல்லாத தென்னந்தோப்புகள்.

*அதிக அளவு தேங்காய் மகசூலை தொடர்ந்து தருகின்ற தென்னை மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள தென்னந்தோப்புகள்.

தென்னந்தோப்புகளைத் தேர்வு செய்த பின்னர், அந்தத் தோப்புகளில் தாய்மரத் தென்னைகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஒரு தென்னந்தோப்பிலிருந்து 10 சதவீதத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே தாய் மரங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

 

தென்னையில் தாய்மரங்கள் தேர்வு: தென்னை விதைக் காய்களைச் சேகரிப்பதற்கு கீழ்க்கண்ட குணநலன்களைக் கொண்டுள்ள தென்னை மரங்களை மட்டுமே தாய்மரங்களாகத் தேர்வு செய்ய வேண்டும். தென்னையின் தாய்மரத் தேர்வுக்கு, தென்னையின் வயது மிகவும் முக்கியம். தாய்மரத் தென்னையின் வயது 25-க்கு மேல் 60-க்குள் இருக்க வேண்டும்.

தாய்மரத் தென்னைகள் நன்கு தடித்துள்ள நேரான தண்டுபாகத்தையும் அதில் நெருக்கமான ஓலைத்தழும்புகளையும் கொண்டவையாக இருக்க வேண்டும். தென்னை மட்டைகளின் நீளம் 6 மீட்டருக்குக் குறைவாக இருக்க வேண்டும். குட்டையான மட்டைகளால் தான் தென்னங்குலைகள் சரிந்து விடாமல் நல்லவிதமாகத் தாங்கிப் பிடித்துக் கொள்ள முடியும். தாய்த் தென்னை மரங்களின் தலைப்பாகம் முழுக்கோளம் அல்லது அரைக் கோளம் வடிவத்தில் இருக்க வேண்டும்.

 

ஒரு தென்னையில் தோன்றக்கூடிய பூம்பாளைகளின்எண்ணிக்கை அதிலுள்ள ஓலைகளின் எண்ணிக்கைக்கேற்பக் காணப்படுகிறது. தாய் மரங்களில் அதன் மத்திம வயதில் 30-40 நன்கு விரிந்த ஓலைகள் இருக்க வேண்டும். தென்னங்குலைகளின் குலைக்காம்புகள் கட்டையாகவும் திடமாகவும் இருக்க வேண்டும்.

தாய் மரங்களாகத் தேர்வு செய்யப்படும் தென்னைகள் வருடத்திற்கு 80 காய்களுக்குக் குறையாமல் காய்க்கின்றவையாக இருக்க வேண்டும். வருடத்தில் எந்த சமயத்திலும் தென்னை மரத்தின் தலைப்பாகத்தில் 10 குலைகளுக்குக் குறையாமலும், ஒவ்வொரு குலையிலும் 8 காய்களுக்கு (பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில்) குறையாமலும் காணப்பட வேண்டும்.

மத்திம அளவுள்ள காய்களையும், உருண்டை வடிவமுள்ள காய்களையும் தரக்கூடிய மரங்கள் சிறந்தவை. உருண்டையான அல்லது கோளவடிவமுள்ள காய்கள் மற்ற வடிவக் காய்களை விட விரைவில் முளைக்கின்றன. உரித்த தேங்காய்களின் எடை 600 கிராமுக்குக் குறையாமலும், கொப்பரையின் எடை 150 கிராமுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.

தாய் மரங்கள் ஒவ்வொரு வருடமும் அதிக காய் மகசூலைத் தொடர்ந்து தருகின்றவையாக இருக்க வேண்டும். குறும்பிகள் கொட்டுவது குறைவாக இருக்க வேண்டும். ஒல்லிக்காய்கள் காய்க்காத மரங்களாக இருக்க வேண்டும்.

 

சரியான தாய்மரத் தேர்வு ஒன்றினால் மட்டுமே, தென்னையின் காய்ப்புத் திறனை 50 சதவீதம் வரையில் அதிகரிக்க முடியும். எனவே சொந்தமாக பதியன் போட்டு தென்னங்கன்றுகள் வளர்க்க விரும்பும் விவசாயிகள், மேற்கண்ட பண்புகள் கொண்ட தாய் மரங்களிலிருந்து விதைக்காய்களை எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.

 

http://www.dinamani.com/agriculture/2013/09/25/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-/article1803448.ece

 

தென்னையில் ஊட்டச்சத்து மேலாண்மை

 

E_1402396411.jpeg

 

தென்னையின் வளர்ச்சிக்கும் அதன் விளைச்சலுக்கும் பேரூட்டகங்கள் மற்றும் நுண்ணூட்டகங்கள் பெரிதும் உதவுகின்றன. தென்னையில் காணப்படும் ஒவ்வொரு சத்துக்களின் குறைகளும் அதன் நிவர்த்திகளைப் பற்றியும் காண்போம்.

தழைச்சத்து :

 தென்னை மரத்தின் வளர்ச் சியை ஊக்குவிக்கின்றது. பெண் பூக்கள் உற்பத்தியாவதற்கு பெரும் பங்கு வகிக்கின்றது. இதன் பற்றாக்குறையால் தென்னை மரத்தின் வளர்ச்சியை பாதித்து இளம் மற்றும் முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாகின்றன. தென்னையில் 14வது இலையில் இதன் அளவு 1.8-2.0 விழுக்காடு இருக்க வேண்டும்.

மணிச்சத்து : 

தென்னை மரத்தின் அடித்தண்டு பருமனாவதற்கு பயன்படுகிறது. மண் ணில் இதன் பற்றாக்குறையால் வேர்களின் வளர்ச்சியை பாதிக்கப்படுகின்றது. மேலும் பூக்கள் உண்டாவதும், தேங்காய் முதிர்ச்சி அடைவதும் தாமதமாகும். தென்னை இலைகளில் மணிச்சத்து 0.12 விழுக்காடு இருக்க வேண்டும்.

சாம்பல் சத்து : 

தேங்காயில் பருப்பு மற்றும் எண்ணெய்ச்சத்து உருவாகுவதற்கு பெரிதும் பயன்படுகிறது. மேலும் அதிக காய்கள் பிடிப்பதற்கும் பருப்பு தடிமனாவதற்கும் உதவுகின்றது. சாம்பல்சத்து மரத்திற்கு பூச்சிநோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றது. இதன் பற்றாக்குறை இலையில் ஆரஞ்சு நிற புள்ளிகள் அல்லது ஒளி ஊடுருவக்கூடிய சிறு வெளிரிய மஞ்சள் புள்ளிகள் போன்று தென்படும். சாம்பல் சத்து பற்றாக்குறை அதிகரிக்கும் நிலையில், மரத்தின் இலைகள் சிறுத்தும், வளர்ச்சி குன்றியும், நுனி சிறுத்தல் போல் காணப்படும்.

கால்சியம் : 

தண்டு மற்றும் இலைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. பொதுவாக இதன் குறைபாடு நெட்டை தென்னை ரகத்தில் காணப்படுவதில்லை. ஆனால் குட்டை ரக தென்னை மரங்கள் இதன் குறைபாடு தென்படுகிறது. தென்னையில் 14-ம் இலையில் இதன் அளவு 0.30.-0.40 விழுக்காடு இருப்பது வளர்ச்சிக்கு உகந்தது. தென்னை மரத்திற்கு கால்சியம் அடங்கிய உரங்களான சூப்பர் பாஸ்பேட் மற்றும் ராக்பாஸ்பேட் இடுவதன் மூலம் இதன் தேவையை பூர்த்தி செய்யலாம்.

மெக்னீசியம் : 

நெட்டை இரகங்களை விட குட்டை தென்னை இரகங்கள் மெக்னீசிய பற்றாக்குறை அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றது. பற்றாக்குறையால் அடி இலைகள் மஞ்சளாக மாறும். மர வளர்ச்சிக்கு தென்னையின் 14-வது இலையில் 0.24 விழுக்காடு மெக்னீசியம் அவசியம். மெக்னீசியம் சத்து குறைபாட்டிற்கு மரம் ஒன்றுக்கு ஆண்டிற்கு 500 கிராம் மெக்னீசியம் சல்பேட் இட வேண்டும். சமமாகப் பிரித்து ஆறு மாதத்திற்கு 250 கிராம் வீதம் இடவேண்டும்.
கந்தகம் : தென்னை இலையில் கந்தகத்தின் அளவு 0.12 விழுக்காடு கீழே இருக்கும்பொழுது இதன் குறைபாடு மரத்தில் தென்படுகிறது. ஆகவே, இதன் உகந்தநிலை 0.12லிருந்து 0.19 விழுக்காடு வரை இருப்பது மர வளர்ச்சிக்கு ஏற்றது. இலைகள் இளம் மஞ்சள் நிறமாக மாறும். மேலும் பருப்பின் அடர்த்தி குறைந்து திடமாக இருக்காது.

துத்தநாகம் : 

இதன் பற்றாக்குறையால் தென்னையில் இலைகள் சிறுத்தும் உருமாறியும் தென்படும். இதன் குறைபாட்டினை தவிர்க்க ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 500 கிராம் துத்தநாக சல்பேட் இட வேண்டும்.

போரான் :

 பாளையில் உற்பத்திற்கும் மகரந்தம் முளைப்பதற்கும் போரான் பெரிதும் உதவுகின்றது. இதன் பற்றாக்குறை மரத்தின் திசுவளர்ச்சியை பாதிக்கின்றது. மேலும் இலைகள் நீளமாக வளர்வது தடைப்பட்டு இலைகளின் நுனி மடங்கியும், "V' வடிவத்திலும் தோன்றும். மரத்தில் குருத்து இலைகள் பிரியாமல் ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படும். தேங்காய்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன் கீழே விழுந்துவிடும். போரான் 10லிருந்து 13பிபிஎம் வரை 14வது இலையில் இருப்பது தென்னை வளர்ச்சிக்கு உகந்ததாகும். இதன் பற்றாக்குறையை நீக்க மரம் ஒன்றிற்கு போராக்ஸ் 200 கிராம் இட வேண்டும்.

எரு மற்றும் உரம் இடுதல் :

 நெட்டை ரக தென்னைக்கு வருடத்திற்கு 1.2 கிலோ யூரியாவும், 2 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும், 2 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் உரமும், 50 கிலோ தொழுஉரமும் மற்றும் 1 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இடவேண்டும்.

வீரிய ஒட்டு ரக தென்னைக்கு வருடத்திற்கு 2.25 கிலோ யூரியாவும், 1.5 கிலோ சூப்பர் பாஸ்பேட், 3.00 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் 50 கிலோ தொழுஉரம் மற்றும் 2 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். மேற்குறிப்பிட்ட உர அளவுகளில் முதல் ஆண்டு 1/4 பங்கும், இரண்டாம் ஆண்டு 1/2 பங்கும், மூன்றாம் ஆண்டு வயதுள்ள கன்றுகளுக்கு 3/4 பங்கும் இட வேண்டும். மொத்த உர அளவுகளை இரு சமமாகப் பிரித்து ஆடி மற்றும் மார்கழி - தை மாதங்களில் இட வேண்டும்.
மரத்தினை சுற்றிலும் எடுக்கப்பட்ட 6 அடி ஆரமுள்ள வட்டப்பாத்தியின் மேற்பரப்பில் எருவினையும் இரசாயன உரங்களையும் இட்டு மண்வெட்டியால் பொத்தி விட்டு பின்பு நீர்பாய்ச்சவும். தென்னை நுண்ணூட்ட கலவையினை ஒரு ஆண்டிற்கு 1 மரத்திற்கு 1 கிலோ வீதம் இட வேண்டும். அல்லது 200 மிலி தென்னை டானிக்கினை ஒரு மரத்திற்கு 6 மாதத்திற்கு ஒருமுறை வேர் மூலம் கட்டி செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் குறும்பை உதிர்வது கட்டுப்படுத்தப்பட்டு மகசூல் அதிகரிக்கும்.
வட்டப்பாத்தியில் 100 கிராம் சணப்பினை விதைத்து பூக்கும் தருவாயில் அறுவடை செய்து வட்டப்பாத்தியில் இட வேண்டும். இவ்வாறு ஆண்டிற்கு மூன்று முறை செய்தால் தனியாக மரத்திற்கு 50 கிலோ தொழுஉரம் இடவேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு செய்வதால் குரும்பை உதிர்வது கட்டுப்படுத்தப்பட்டு மகசூல் அதிகரிக்கும்.
- கொ.பாலகிருஷ்ணன்
மதுரை.

dinamalar

 

தொடர்புடைய இணைப்பொன்று

 

தரமான விதை தென்னை எடுக்கும் வழிமுறைகள்

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=139168

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மாடுகளில் உண்ணிகளைத் தவிர்ப்பது எப்படி

 

கோடைக்காலங்களில் மாடுகளை அதிகமான அளவில் உண்ணிகள் தாக்கும். இந்த உண்ணிகள் பெரும்பாலும் மாடுகளில் அவற்றின் காதுகளின் உள்ளேயும் பால்மடிப்பகுதியில் வாலுக்கு அடியிலும், உடலின் மேற்புறத்திலும் இருக்கும். இதனாலே என்ன பிரச்னை என்று கேட்கிறீர்களா? உண்ணி இருந்தால் நாங்கள் கையில் பிடித்து நெருப்பில் போட்டுவிடுவோம் என்று சொல்கிறீர்கள். இங்க பாருங்க! 

இந்த உண்ணிங்க ரத்தத்தை குடிக்க கடிப்பதால் கொசுக்கள் மனிதர்களை கடித்து மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலை பரப்புவதுபோல உண்ணிகளும் மாடுகளில் நிணநீர் கட்டிநோய் (தெய்லீரியோசிஸ்), ரத்த சிறுநீர் நோய் (பேபிசியோசிஸ்) போன்ற நோய்களை பரப்பும். இந்த தெய்லீரியோசிஸ் நோய் பாதிக்கப்பட்ட மாடுகளில் அதிகமான காய்ச்சல், ரத்தசோகை, தீவனம் எடுக்காமை, கண், மூக்கில் இருந்து நீர் வடிதல், மூச்சு விட சிரமப்படும். மேலும் 20 லிட்டர் கறக்கும் மாடுகூட அரை லிட்டர் பாலுக்கு வந்துவிடும். பேபிசியோசிஸ் நோய் பாதிக்கப்பட்ட மாடுகள் அதிக காய்ச்சல், ரத்தசோகை, சிறுநீரானது ரத்தம் போல வரும். எனவே இந்த நோய்களிலிருந்து மாடுகளை காப்பாற்ற வேண்டுமென்றால் உண்ணிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 
அதாவது உண்ணிகள் ரத்தத்தில் ஓரணு ஒட்டுண்ணி நோய்களை பரப்புவதோடு மட்டுமல்லாமல் உண்ணிகள் அதிகமாக இருந்தால் ஆடு, மாடுகள் தலையை ஆட்டிக் கொண்டும், சுவற்றில் தேய்த்துக்கொண்டும், தீவனம் உண்ணாமல் மெலிந்தும் காணப்படும். நீங்கள் சொன்ன மாதிரி உண்ணிகளை கையில் பிடித்து நெருப்பில் போடுவது, மாடு மேல் மண்ணெண்ணெய் தடவுவது போன்று செய்யாமல் பூடாக்ஸ் மருந்தை வாங்கி 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி மருந்து சேர்த்து கலந்து துணியில் நனைத்து மாடுகளின் எல்லா பாகத்திலும் தேய்க்க வேண்டும். குறிப்பாக மாடுகளின் காதுகளின் உட்புறம், மடிப்பகுதியில் நன்கு தேய்க்க வேண்டும். 
மேலும் இந்த மருந்து கலந்த தண்ணீரை கொட்டகையினுள் தரை, சுவற்றிலும் தெளிக்க வேண்டும். ஏனெனில் உண்ணிகள் ரத்தத்தை குடித்துவிட்டு தரையில் முட்டைகளை இட இருக்கும். ஒரு உண்ணி சுமார் 18,000 முட்டைகளை இடும். ஒரு உண்ணியை விட்டாலும் அதிலிருந்து 18,000 உண்ணிகள் பெருகி கால்நடைகளில் ஏறிக்கொள்ளும். எனவே உண்ணிகளை தடுக்க மாடுகளின்மேலும் கொட்டகையின் தரை மற்றும் சுவற்றிலும் உண்ணிநீக்க மருந்தை தெளிக்க வேண்டும். (தகவல்: முனைவர் .சௌந்தரராஜன், பேராசிரியர், கால்நடை ஒட்டுண்ணியியல் துறை, சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, சென்னை-600 007. போன்: 044-2530 4000. விரிவு: 2042. மின்னஞ்சல் soundarvet 1970@yahoo.com.
முனைவர் தே.தியாகராஜன், பிஎச்.டி.,
சென்னை-600 051

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=17689&ncat=7

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மண் பொன்னாக சித்திரையில்உழுதிடுங்கள்!

 

கோடைக்காலமானசித்திரைமாதத்தில், விவசாயநிலங்களில் வெடிப்புஏற்படுவதை தடுக்க, நிலத்தைகட்டாயம் உழ வேண்டும் என்கிறார்,ராமசுப்பிரமணிய ராஜா: நான், தமிழ்நாடு உழவர் தொழில்நுட்பக் கழகத்தின், நெல்லை மாவட்டச் செயலராக பணியாற்றி வருகிறேன். தமிழ்நாடு முழுவதும், கடும் வறட்சி மற்றும் நீர்ப்பாசனத் தட்டுப்பாடு நிலவுவதையொட்டி, விவசாயிகள், பருவப் பயிர்களை சாகுபடி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.இந்த காலகட்டத்தில், விளைநிலங்களை அப்படியே போட்டுவிட்டால், நிலம் வறண்டு போய், வெடிப்புடன் காணப்படுவதுடன், களைகள் ஆக்கிரமிப்பு மற்றும் பூச்சிநோய் தாக்குதலால் மண்வளம் பாதிப்படைகிறது.எனவே, இந்நேரத்தில் கோடை உழவு செய்து, விளைநிலங்களை பராமரிக்க வேண்டும். 'கோடை உழவால் கோடி நன்மை; சித்திரை உழவு பத்தரை மாற்றுத்தங்கம்' போன்ற பழமொழிகள், கோடை உழவின் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன.நெல் அறுவடைக்கு பின், வயலில் ஏராளமான நெல் தாள்கள் தேங்குவதுடன், களைச்செடிகளும் வளர்கின்றன. இவை பூச்சிகளுக்கு உணவாகவும், உறைவிடமாகவும், முட்டைகள் இடும் பாதுகாப்பு இடமாகவும் அமைகின்றன.கோடை உழவு செய்வதால், களைச்செடிகள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட தாள்கள் அழிக்கப்பட்டு, மக்கி, மண்ணில் உரமாகின்றன. மேலும், கோடை உழவின் மூலம் களைகளின் இனவிருத்தி அழிக்கப்படுவதால், இதை சார்ந்து வாழும் பூச்சிகள், அதிகம் பெருகாமல் கட்டுப்படுத்தப்படுகின்றன.
ஒருவேளை, கோடை மழை பெய்தால், மழை நீரானது வழிந்தோடி வீணாகி விடாமல் தடுத்து, மண்ணுக்குள் உள்வாங்கி, நிலத்தடி நீரைச் சேமிக்கவும், மண் அரிப்பைத் தடுக்கவும், கோடை உழவு உதவுகிறது.மேலும், கோடை உழவு செய்யப்பட்ட நிலத்தில் மழை நீரானது, 6 செ.மீ., ஆழம் வரை செல்கிறது. இதன் காரணமாக, மண் ஈரம் ஆவியாக்கப்படுவது குறைகிறது. வெடிப்பு இல்லாமல், மண் நன்கு பொலபொலப்பாகி, மண்ணின் தன்மை மேம்படுவதுடன், விளைச்சலின் தரமும், அளவும் அதிகரிக்கின்றன.மேலும், மண்ணில் இறுக்கம் தளர்ந்து, நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது. இதனால், நுண்ணுயிர்கள் நன்றாக பெருக்கமடைந்து, பயிர்களுக்கு சத்துகள் கிடைக்க வழிவகை செய்கின்றன. அடுத்து வரும் பருவ மழைக்கு முன்பாகவே, நிலத்தை தயார் செய்ய இதுவே சிறந்த தருணம்.வேர்கள் நன்றாக வளர்ந்து, மண்ணின் ஆழத்திலுள்ள நீரையும், சத்துக்களையும் எடுத்து, செழிப்பாக வளர ஏதுவாகிறது. கோடை உழவு மூலம், நெற்பயிர் சாகுபடிக்குத் தேவையான நீர்த்தேவையை, 20 சதவீதம் அளவிற்கு குறைக்க முடியும்.எனவே, விவசாயிகள் அனைவரும், சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்து, மண்வளத்தை பாதுகாக்க வேண்டும்.

 

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93


 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
 
பண்ணைக்குட்டை (FARM POND)
 

இது ஒரு சிறிய குளம்/கேணி போன்ற அமைப்பு,வயல்களிலும் தோட்டங்களிலும் இது போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி மழைக்காலங்களில் நீரைச் சேமிக்கிறார்கள் பின்னர் கோடை காலங்களில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் போது இதிலிருந்து நீரை எடுத்து விவசாயம் செய்கிறார்கள். அத்துடன் மீன் வளர்ப்பையும் மேற்கொள்கிரார்கள். இவ்வமைப்பனது மழை நீர் வீணாவதை தடுப்பதுடன், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதிலும்  முக்கிய பங்கு வகிக்கின்றதாம். எமது தாயகத்தில் இவ்வாறான அமைப்புகள் உள்ளனவா என தெரியவில்லை ? இவை சம்மந்தமாக இணையத்தில் வாசித்த கட்டுரைகளை கீழே இணைத்துள்ளேன்

 

பண்ணைக்குட்டை அமைக்க அழைப்பு

 

நாமக்கல் : "பண்ணைக்குட்டை அமைத்து மழைநீரை தேக்கி சுழற்சி செய்தால், மானாவாரி நிலத்திலும் பசுமைப்போர்வை உருவாக்கலாம்' என, உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : விளை நிலங்களிலும் மற்றும் தரிசு நிலங்களிலும் பண்ணைக்குட்டை மழைநீர் சேமிப்புக்கும், மண் அரிப்பை தடுக்கவும்  ஏற்றது. பண்ணைக்குட்டை அமைப்பதால் பசுமை போர்வை எளிதில் ஊக்குவிக்கப்பட்டு பூமி வெப்பமாதலை தணிக்க உதவுகிறது.  அதிக மழை பெறும் காலங்களில் வெள்ளமும், மண் அரிமானமும், மண் அரிமானத்தால் மண் வளம் பாதிப்பும் தவிர்க்க முடியாதது. சரியான இடத்தில் பண்ணைக்குட்டை அமைத்து மழைநீரை தேக்கி சுழற்சி செய்தால், மானாவாரி நிலத்திலும் பசுமைப்போர்வை உருவாக்கலாம். பண்ணைக்குட்டை வெள்ள சேதத்தைக் குறைக்கவும், வறட்சியை சமாளிக்கவும் வழிகோலும் தொழில் நுட்பம்.

 

ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தது 1 சென்ட் பரப்பளவில் 8 மீ., 5 மீ., அல்லது 10 மீ., 4 மீ., அல்லது 20 மீ., 2 மீ., நீளம்- அகலத்தில் 1.5 மீ., ஆழத்துக்கு குழி வெட்ட வேண்டும். சமமான நிலங்களில் சாலை வசதி இருப்பின் சாலை ஓரங்களிலோ அல்லது வயலின் நடுவிலோ வெட்டலாம். லேசான சரிவு உள்ள நிலங்களில் தாழ்வான பகுதியை அறிந்து வெட்ட வேண்டும். வெட்டி எடுக்கும் மண்ணில் பெரும் பகுதியை வயல் பரப்பினை பலப்படுத்தவும் சுற்றி அணை கட்டவும் மிகுதியை தேவைப்படும் இடங்களில் வயலை சமப்படுத்தவும் பயன்படுத்தலாம். ஒரு சென்ட் பரப்பரளவில் அமைக்கப்படும் பண்ணைக்குழியின் கொள்ளளவு 60 ஆயிரம் லிட்டர். பண்ணைக்குழியை குறைந்த செலவில் அமைக்க ஜே.சி.பி., பொக்லையன் இயந்திரத்தை பயன்படுத்தலாம்.

 

தென்னை, கரும்பு, வாழை வயலில் பண்ணைக்குட்டை அமைக்கலாம். நிலக்கடலை, மக்காச்சோளம், பருத்தி, மிளகாய் போன்ற பயிர்களை சாகுபடி செய்யும் நிலத்திலும் வெட்டலாம். பண்ணைக்குட்டை அமைப்பதால் நிலத்தில் விழும் ஒவ்வொரு துளியும் வீணாகாமல் சேமிக்க உதவுகிறது. பண்ணைக்குட்டை உள்ள ஒவ்வொரு வயலும் சிறிய நீர் தேக்கமாக செயல்படுகிறது. அதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். பசுமைப்போர்வையால் பூமி குளிர்ந்து, வாயு குளிர்ந்து மழை கொடுக்கும்.குழியின் நடுவில் அல்லது விளிம்பு பகுதி சுற்றிலும் பகுதிக்கேற்ப இலந்தை, நெல்லி, மா, பலா, எலுமிச்சை, சப்போட்டா, தேக்கு, இலவு, மூங்கில், வேம்பு, கருவேல், புங்கம், குமிழ் தென்னை, சந்தனம் போன்ற மரக்கன்றுகளை தேர்வு செய்து நட்டு பயன்பெறலாம்.

 

புஞ்செய் நில பகுதியில் பண்ணைக்குட்டை அமைப்பதில் ஒருங்கிணைந்து செயல்பட விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும். அதிக மழைபெறும் நாட்களில் வழிந்தோடும் மழைநீர் சேமிப்பும், அதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வும் உறுதி செய்யப்படுகிறது. இதை அனைத்து விவசாயிகளும்  ஏற்று செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=91014&Print=1

 

பண்ணைக் குட்டைகளில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு!

 

 
 • fish.jpg

நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் வேளாண்மை பொறியியல் துறை மூலம் பண்ணைக் குட்டைகளில் மீன் குஞ்சுகள் வளர்க்க அரசு மானியம் வழங்குகிறது.

மானிய உதவிகள்: பண்ணைக்குட்டையில் வளர்ப்பதற்கான இளம் மீன்குஞ்சுகள் 30 ஆயிரம் எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய ரூ.6 ஆயிரம் மானியம் வழங்கப்படும். மீன் தீவனத்துக்காக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

இளம் மீன்குஞ்சுகளை 45 நாள்கள் வரை பண்ணைக் குட்டைகளில் விரலிகளாக வளர்த்து ரூ.18 ஆயிரம் வரை லாபம் ஈட்டலாம். மேலும், விரலிகள் அறுவடை செய்த பின் மீன் வளர்ப்பு மேற்கொள்வதன் மூலம் கூடுதல் லாபம் ஈட்டலாம்.

நில மீன் விதை வங்கி அமைத்தல்: நில மீன் விதை வங்கியில் 3 நாற்றாங்கால் குளங்கள், 6 மீன் வளர்ப்பு குளங்கல், தன்னிலைப்படுத்தும் தொட்டி, சிப்பக் கூடம் ஆகியவை ரூ.2.55 லட்சத்தில் அமைத்துக் கொடுக்கப்படும். மேலும், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பண்ணை உபகரணங்கள் மானியமாக வழங்கப்படும். முதலாம் ஆண்டு உள்ளீட்டு மானியமாக ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள நுண் மீன்குஞ்சுகள், ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள மீன் தீவனம் ஆகியவை மானியமாக வழங்கப்படும். இந்த இரு திட்டங்களிலும் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.

http://www.dinamani.com/agriculture/2013/10/31/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/article1865048.ece

 

புஞ்சை செழிக்க உதவும் பண்ணைக்குட்டைகள்
farmpondss.JPG

ற்போது நமது விவசாயிகள் பயிரிடும் நிலங்களின் மொத்தப்பரப்பில் 60 சதவிகிதத்திற்கும் மேலாக இருப்பவை மானாவாரி புஞ்சை நிலங்கள் தான். "புஞ்சை விளைந்தால் பஞ்சமில்லை" என்பார்கள். அதாவது, இந்த நிலங்களில் விளைச்சலை அதிகரித்து மானாவாரி விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்தி ஆண்டு தோறும் நிலையான வருவாய் கிடைத்திட பண்ணைக்குட்டை மற்றும் கசிவு நீர்க்குட்டை அமைத்து பயன்பெறலாம். 
தரிசு நிலத்தில் மேல் ஓடும் நீரை சேகரிக்க இந்த பண்ணை குட்டைகள் உதவும். இதில் தேக்கப்படும் நீரை தேவைப்படும் நேரத்தில் மரக்கன்றுகளுக்கோ அல்லது பயிர்களுக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொதுவாக தரிசுநிலங்களில் இயற்கையாகவே தாழ்வாக அமைந்துள்ள பகுதிகளில் குறைவான செலவில் நீர்வரத்தில் பகுதிகளை செம்மை செய்தும், தூர் வாரியும் பண்ணைக் குட்டைகளை அமைக்கலாம். இதை கால்நடைகளுக்கு குடிநீர் வழங்கும் குட்டையாகவும் பயன்படுத்தலாம். பண்ணைக்குட்டையின் அளவு 30 மீட்டருக்கு நீளம் அகலம் உடையதாக அமைக்கலாம். பண்ணைக்குட்டையின் வரப்புகளில் கொடிப்பயிரை நடலாம். பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பும் செய்யலாம்.

கசிவு நீர்க்குட்டை  என்பது, தரிசு நிலங்களில் வழிந்தோடும் நீரை மண்ணில் சேமித்து வைத்தும், குட்டையில் தேங்கியது போக உள்ள உபரி நீரை கசிவு நீர்க் குட்டையின் நிலத்தடி நீரை வலுப்படுத்த பயன்படுத்தலாம். இதனால் குட்டைக்கு கீழ் உள்ள கிணறுகளுக்கு அதிக நீர் கிடைக்கும். மேலும் நிலத்தடி நீர் மட்டத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ளவும் உதவும். இந்த பண்ணைக்குட்டைகளால் சுமார் 1 கிலோமீட்டர் விட்டத்தில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் சிறப்பாக இருக்கும். 

இது தவிர மண்அரிப்பு தடுக்கப்பட்டு வழிந்தோடும் நீரின் மூலம் மேல் மண் அரிக்கப்பட்டு இடம் மாறிச் செல்வதை தடுக்கிறது. இயற்கை வளங்களையும், உயிரினச்சமநிலையையும் நன்றாக பராமரிக்க முடியும். ஆகவே விவசாயிகள் பண்ணைக்குட்டைகளை அமைத்து பயிர்வளர்ச்சிக்கும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் முன்வர வேண்டும்.

தகவல்: பி.எஸ்.காதிரி,நீர்மேலாண்மை பயிற்சி நிலையம், மதுரை .

 

http://greenindiafoundation.blogspot.ch/2011/11/blog-post_3566.html

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தில் விவசாயிகள் நலனுக்காக  பண்ணைக்குட்டைகள் அமைத்தல்

DSC_0126.jpg

 

DSC_0138.jpg

http://kilankundalpanchayat.blogspot.ch/p/blog-page_6541.html

 

ஆங்கில இணையத்தளமொன்றின்  இணைப்பு

http://www.fao.org/docrep/005/y4100e/y4100e08.htm

 

மாத வருமானம்தரும் பண்ணைகுட்டைகள்!

பண்ணை குட்டைகள் மூலம், சிறிய விவசாயிகளுக்கு மாத வருமானத்தை ஏற்படுத்தி தந்ததுடன், நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்திய ஊராட்சி மன்ற தலைவர், கண்ணன்: 

நான், தஞ்சாவூர் மாவட்டம், தோட்டக்காடு ஊராட்சி மன்றத்தின், தலைவராக பணியாற்றி வருகிறேன். தமிழகத்தில், நம் பாரம்பரியத்தின் அடையாளமாக, பல 
சின்னங்கள் உள்ளன. அவற்றில், தலையானதாக கருதப்படுவது ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தான். அந்த காலத்தில், போர்க் காலங்கள் போக, மீதி நேரங்கள் அனைத்தி லும், ஏரி, குளங்கள் வெட்டுவது, துார் வாருவது போன்ற பணிகளில் தான், போர் வீரர்கள் ஈடுபடுவர்.38 ஆயிரத்திற்கும் மேல் இருந்த ஏரிகளின் எண்ணிக்கை, படிப்படியாக அழிந்து, இன்று சரிபாதியாக குறைந்து விட்டது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீரின் அளவு, அதல பாதாளத்தை அடைந்து விட்டது. ஏரிகளை துார்வாரி செப்பனிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் இச்சூழலில், பண்ணை குட்டைகளால் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முயற்சித்தேன்.இதனால், எங்கள் பஞ்சாயத்தில் உள்ள விவசாயிகளுக்கு, அரசு உதவியுடன் பண்ணை குட்டைகளை அமைத்து தந்து உள்ளேன். இதன் மூலமாக, எங்கள் ஊரின் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. முன்பெல்லாம் கோடை காலத்தில், 50 அடி ஆழத்தில் தான் தண்ணீர் கிடைக்கும். ஆனால், தற்போது, 25 அடியிலேயே தண்ணீர் கிடைக்கிறது.மேலும், பண்ணை குட்டைகளால், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்து வருகிறது. அதாவது, விவசாயத்தால் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் வருமானம் கிடைக்கும். ஆனால், பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பதால், அவர்களுக்கு தொடர்ச்சியான வருமானம் கிடைக்கிறது. மேலும், குட்டைகளின் ஓரங்களில் கால்நடை தீவனங்கள் வளர்ப்பதால், இப்பகுதியில் கால்நடைகளின் எண்ணிக்கையும், படிப்படியாக அதிகரித்து வருகிறது.தண்ணீர் உபரியாக இருக்கும் நாட்களில் வீணாகும் தண்ணீரை சேமித்து வைத்து, வறட்சி காலங்களில் தண்ணீர் குறைவாக தேவைப்படும் பயிர்களை பயிரிட்டு விவசாயிகள் பயன்பெறகின்றனர். நிலம் + களம் + குளம் = வளம் என்பதை, நாங்கள் நெடுங்காலமாக வலியுறுத்தி வருகிறோம். பண்ணை குட்டைகள் மூலம், ஒரு சிறிய விவசாயி, தன் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதே நேரத்தில், அரசு ஏற்கனவே உள்ள ஏரி, குளங்களையும் துார் வாரும்போது, கண்டிப்பாக நம் தண்ணீர் பிரச்னையும், பாதியாக குறையும்.

dinamalar 16.06.2014

 

 

 

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பண்ணை விவசாயத்தில் மாதம் 30 ஆயிரம்!

 

ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து, 2 ஏக்கர் நிலத்தில், மாதம், 30௦ ஆயிரத்திற்கும் மேல் லாபம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கூறும், ஜெயராமன்: நான், சேலம் மாவட்டம், புத்திர கவுண்டன் பாளையத்தின், அபிநவம் கிராமத்தை சேர்ந்தவன். என்னிடம் உள்ள, 9 ஏக்கர் நிலத்தில், ஒருங்கிணைந்த பண்ணை முறையில் ஈடுபட்டு, ஆண்டிற்கு ஒன்பது லட்சம் ரூபாய் அளவில், லாபமீட்டி வருகிறேன்.குறைந்த நிலம் உள்ளவர்களுக்காக, 2 ஏக்கர் நிலத்தில், ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் திட்டத்தை அமைத்தேன். இத்திட்டத்திற்கான மொத்த செலவு, 5 லட்சம் ரூபாய். இதற்கு, வங்கி கடனும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு, 15 லி., குறையாமல் பால் தருகிற, 3 பசு மாடுகள், 50 ஆடுகள், 100 கோழிகள், 10 வாத்து அல்லது வான்கோழி, இரண்டு தேனீ பெட்டி, இரண்டு அசோலா தொட்டி, இரண்டு மண்புழு உரம் தயாரிக்கிற தொட்டி இருந்தால் போதும்.மேலும், 10க்கு, 24 அடி அளவில், ஒரு மாட்டு கொட்டகையும், 10க்கு, 20 அடியில் ஒரு ஆட்டு கொட்டகையும் அமைக்க வேண்டும். இதை, 25 சென்ட் நிலத்திற்குள் அமைக்கலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் ஆட்டுக்கு தேவையான, கோ-4 தீவனப்புல், கோ.எப்.எஸ்-29 தீவன சோளம், சூபாபுல், அகத்தி மாதிரியான பசுந்தீவனங்களை வளர்க்க வேண்டும். மீதியிருக்கும் இடத்தில், நீர் வசதியை பொறுத்து, அந்தந்த பகுதிகளில் சிறப்பாக விளையும் காய்கறி, வாழை, நெற்பயிர்களை சாகுபடி செய்யலாம். மாடுகளை, நிறை மாத சினையில் வாங்கி, நம் இடத்திற்கு வந்த பின்பே, கன்றுகள் போட வேண்டும்.ஒரு மாடு, 15 லி., வீதம், மூன்று மாடுகள் மூலம் தினமும், 45 லி., பால் என, மாதத்திற்கு, 1,350 லி., கிடைக்கும். ஒரு லிட்டர் பால், 20 ரூபாய் வீதம் விற்றால், 1,200௦௦ லி., மூலம் மாதம், 24 ஆயிரம் வரும். இதில், 50 சதவீதம் தீவன செலவு போக மீதம், 12 ஆயிரம் மாதந்தோறும் லாபம் வரும். ஆடுகளை, குட்டிகளாக வாங்குவது நல்லது. அதுவும், அந்தந்த பகுதியில் எந்த ரகம் நன்றாக வளருமோ, அந்த ரக வெள்ளாடுகளை வாங்கி வளர்ப்பதே சிறந்தது. மேலும், 2,500 ரூபாய் விலையில், 10 குட்டிகள்; 2,000 விலையில், 10 குட்டிகள்; 1,500 விலையில், 10 குட்டிகள் என, மொத்தம், 30 கிடா குட்டிகளாக வாங்க வேண்டும்.இவற்றை, ஒரு மாதம் வளர்த்த பின், 2,500 விலையில் வாங்கிய இரண்டு குட்டிகளை மட்டும், ஒன்றுக்கு, 3,000 முதல் 6,000 விலையில் விற்க வேண்டும். அந்த பணத்தில், 1,500 ரூபாய் விலையில், இரண்டு சின்ன குட்டிகளை வாங்க வேண்டும். இப்படி, வாரா வாரம் செய்தால் மாதம், 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். கோழி, தேனீ மற்றும் விவசாயத்தின் மூலம், 6,000 ரூபாய் என, மொத்தம், 30,000௦ ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

 

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு! குறைந்த விலையில், நீண்ட காலம் உழைக்கும், 'ஸ்டீல் பர்னிச்சர்'கள் 

Tamil_News_large_975899.jpg

 

 

குறைந்த விலையில், நீண்ட காலம் உழைக்கும், 'ஸ்டீல் பர்னிச்சர்'கள் தயாரிக்கும் தொழிலில், நல்ல லாபம் கிடைப்பதாக கூறும், செல்வராஜ்: நான் திருச்சியில், 'ஐஸ்வர்யா ஸ்டீல் கார்ப்பரேஷன்' என்ற கடையை நடத்தி வருகிறேன். ஸ்டீல் பர்னிச்சர்கள், மர பர்னிச்சர்களை விட, நீண்ட காலம் உழைப்பவை, விலை குறைவானவை என்பதால் தான், மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பு உள்ளது. ஸ்டீல் பர்னிச்சர்கள் தயாரிக்க, 'கோல்டு ரோல்டு ஷீட்' எனும், சி.ஆர்., இரும்பு ஷீட்கள் பயன்படுகின்றன. இத்தொழிலுக்கு தகடு வெட்டும் இயந்திரம், மடக்கும் இயந்திரம், பவர் பிரஸ், வெல்டிங் இயந்திரம், கம்பிகளை வளைக்கும் இயந்திரம், ஹேண்ட் கிரைண்டிங் இயந்திரம், ஹேண்ட் வெல்டிங் இயந்திரம், பெயின்டிங் மற்றும் புவுடர் கோட்டிங் அமைப்பு என, இதனோடு சில சில்லரை உபகரணங்களும் தேவைப்படும். இந்த இயந்திரங்களுடன், மின் இணைப்பும் அமைத்துக் கொள்ள, 16 லட்சம் ரூபாய் செலவாகும். இதற்கு, 25 சதவீத அரசு மானியத்துடன், வங்கி கடனும் கிடைக்கும். இரும்பு பீரோ தயாரிக்க, சி.ஆர்., ஷீட்களை, தேவையான தடிமனில் தேர்ந்தெடுத்து, நம் வடிமைப்புக்கேற்ப, வெட்டும் இயந்திரத்தில் துண்டுகளாக வெட்டி, வளைக்கும் இயந்திரத்தில் தேவைக்கேற்ப வளைக்க வேண்டும். இந்த அமைப்புகளோடு கீல், தாழ்ப்பாள், பூட்டு, கைப்பிடி, மூடும் ராடு என, தேவையான அனைத்தையும் அத்துடன் இணைத்து, பற்ற வைக்க வேண்டும். இந்த வேலைகள் அனைத்தும் முடிந்த பின், 'பிரைமர் பெயின்ட்' அடித்து, அதன் பின் தேவையான கலர் பெயின்ட்டை அதன் மீது, 'ஸ்ப்ரே' செய்ய வேண்டும். இப்படி, பல வடிவங்களில், பல சைஸ்களில் இரும்பு பீரோ செய்யலாம். மேலும், இந்த இயந்திரங்களை வைத்தே கட்டில், நாற்காலிகள் என, பல வகையான ஸ்டீல் பர்னிச்சர்களை செய்யலாம். ஒரு நாளில், 10 பீரோ தயாரிக்கலாம். ஒரு பீரோ செய்ய, 80 கிலோ சி.ஆர் ஷீட்கள் தேவை. ஒரு கிலோ ஷீட்டின் விலை, 60 ரூபாய். மேலும், இதற்கு தேவையான ராடு, கைப்பிடி, கீல்கள், இதர இணைப்பு பொருட்கள் மற்றும் பெயின்ட் அடிக்க என, ஒரு பீரோ தயாரிக்க, 6,800 செலவாகும். ஒரு நாளில், 10 பீரோ என, மாதத்திற்கு, 250 பீரோக்கள் வரை செய்யலாம். மொத்த விற்பனை விலையாக ஒரு பீரோவை குறைந்தபட்சம், 8,500க்கு விற்கலாம். இப்படி எல்லா செலவுகளும் போக இத்தொழிலில் மாதம், 73 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்.

 

dinamalar

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பொட்டாஷ் பாக்டீரியா.

 

பொட்டாசியம் எனப்படும் சாம்பல்சத்து, தழை, மணிச்சத்துக்களுக்கு நிகரான நன்மைகளாய் பயிர்களுக்கு அளிக்கிறது. பொட்டாசியம் செடிகளில் பல வகைகளில் செயல்படுகிறது. வேர் உறிஞ்சி சேர்க்கும் நீர், தாது உப்புக்கள் இலை பாகங்களில் சென்று சேருவதற்கும் மேலும் இலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் செடிகளின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கும் பெரும்பங்கு வகிக்கிறது.

பொட்டாசியத்தை கரைக்கவல்ல பாக்டீரியாக்கள் "சிலிகோ பாக்டீரியா' எனப்படுகின்றன. அதன் ஆற்றலானது களிமண்ணோடு இணைந்து காணப்படுகிறது. சிலிக்கா, அலுமினியம், பொட்டாசியம் ஆகிய அயன்களின் கூட்டுக் கலவைகளிலிருந்து சிலிக்காவை கரைத்து பொட்டாசியத்தை களிமண்ணிலிருந்து விடுவிக்கிறது. அவ்வாறு விடுவிக்கப்படும் பொட்டாசியம் நீரில் கரைந்து செடிகளினால் எளிதில் உட்கொள்ளும் நிலையில் மாற்றப்படுகிறது. பரிமாற்ற நிலையிலுள்ள பொட்டாசியம், இவ்வகை பாக்டீரியாக்களினால் அதிக அளவில் குறுகிய காலத்தில் கரைக்க வழிசெய்கின்றது. பரிமாற்றம் இல்லாத நிலையில் கூறுகளாக விளங்கும் பொட்டாசியம் சில ஆண்டுகளில் இவ்வகை பாக்டீரியாக்களின் ஆக்கிரமிப்பு பரிமாற்ற விலைக்கு மாற்றப்படுகிறது. இச்செயல்கள் பாக்டீரியாவிலிருந்து வெளியாகும் அங்கக அமிலங்கள் பாலிசாக்கரைட் போன்றவையினாலும் நேர்மின் அயன், எதிர்மின் அயனியில் பரிமாற்றங்களிலும் நிகழ்கிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலும் நுண்ணுயிர் துறையில் இரண்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டன. இவ்வாய்வின் முடிவாக இரண்டு சிறந்த பொட்டாஷ் பாக்டீரியாக்கள் (கே.ஆர்.பி.1 கே.ஆர்.பி.9) கண்டறிந்து, அதன் திறன் ஆராய்ந்து நெற்பயிரில் பரிசோதிக்கப்பட்டது. கே.ஆர்.பி. 1 பேசில்லஸ் பிளக்சிஸ் எனவும், கே.ஆர்.பி.9 பேசில்லஸ் மியூசிலாஜினோசஸ் என்ற பிரிவுகளில் சேர்ந்த இராசிகள் எனவும் கண்டறியப்பட்டது. இந்த இராசிகளை மண்ணில் இட்டும், அதன் பொட்டாசியம் விடுவிக்கும் தன்மை ஆராயப்பட்டது.

மேலும் கே.ஆர்.பி.9 என்றும் இராசியை நெற்பயிரில் விதைநேர்த்தி, நாற்றங்கால் வேர் நனைத்தும் மண்ணில் இட்டும் பரிசோதிக்கப்பட்டது. கே.ஆர். பி.9, 75 சதம் பொட்டாசியம் உரம் இட்ட நெற்பயிரில் ஒரு எக்டருக்கு கே.ஆர்.பி.9 இடாத செடிகளைக் காட்டிலும் 33.6 சதம் நெல் விளைச்சலும், 28.87 சதம் வைக்கோல் விளைச்சலும் அதிகரித்தது என இந்த ஆராய்ச்சியின் முடிவில் கண்டறியப்பட்டது. மேலும் நெற்பயிரில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்கள் அதிகரித்துக் காணப்பட்டது.

நெற்பயிர், பருத்தி, நிலக்கடலை, முட்டைகோஸ், கத்தரிக்காய், வெள்ளரி, சோளம், கோதுமை, வெங்காயம், கரும்பு ஆகிய பயிர்களில் பல இடங்களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் பேசில்லஸ் மியுசில்லாஜினோசஸ் ராசியைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டதில் அதிக விளைச்சல், பயிர்களின் தரம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்த ராசியானது சாம்பல் சத்து மட்டுமல்லாது மணிச்சத்து, சிலிக்கா போன்ற சத்துக்களையும் கரைக்கக்கூடியதாகும். மேலும் இவை அசோஸ்பைரில்லம் அசட்டோபேக்டர், பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றுடன் கூட்டாக இடும்போது அதன் திறன் மேலும் சிறந்து விளங்குகிறது.
இத்தகைய நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை பயன்படுத்துவதால் நாம் பொட்டாஷ் உரத்தேவையை 25 முதல் 50 சதம் வரை குறைத்து இடலாம். மேலும் இவ்வகை நுண்ணுயிர்கள் இடுவதினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் இயற்கையாக சத்துக்களின் சுழற்சி மற்றும் மண்ணின் விளையும் திறன் மேம்படும். 

தகவல்: முனைவர் இரா.பிருந்தாவதி, முனைவர் க.கோபாலசாமி, நுண்ணுயிரியல் துறை த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -641 602. போன்: 0422 - 661 1294.

டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

 

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20409&ncat=7

 

 

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
ஒருங்கிணைந்த கால்நடை - வேளாண்மை - மீன் வளர்ப்பில் அதிக வருவாய்

 

 

 • fish.jpg

தரிசாக இருக்கும் நிலங்களை சீர்படுத்தி வேளாண்மை பயிர் வளர்ப்பதற்கும், பண்படுத்த முடியாத நிலப்பகுதியில் கால்நடைகள், கோழி, வாத்து, பன்றி போன்றவற்றுக்கு இருப்பிட வசதியினை ஏற்படுத்திக் கொண்டு வளர்த்தால் வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை ஈட்ட முடியும். ஒருங்கிணைந்த தொழிலில் இருந்து பல நன்மைகள் பெற முடியும் என்று குன்றக்குடி வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ம. பழனிச்சாமி, பா. கணேசன் ஆகியோர் யோசனை கூறியுள்ளனர்.

ஒருங்கிணைந்த கால்நடை - மீன் வளர்ப்பு:

இம் முறைகளில் கால்நடைகளுக்கான இருப்பிடத்தினை குளங்களின் ஓரங்களில் அமைத்து, அவற்றின் கழிவுகள் குளங்களை வந்து அடையுமாறு குழாய்கள் அமைக்க வேண்டும். குளங்களின் கரையோரங்களில் கால்நடைகளுக்குத் தேவையான புற்களை வளர்க்கலாம். கால்நடைகளின் கழிவுநீர், சிறுநீர், உரம் போன்றவற்றை குளங்களுக்கு குழாய் வழியே கொண்டு வருவதால் இவற்றுக்காகச் செலவாகும் சக்தி, கூலி போன்றவை குறையும். இம் முறையினால் மீன் பண்ணையாளர்கள் மீன் மற்றும் பால் முதலியவற்றையும் சந்தைப்படுத்த முடியும்.

ஒரு ஹெக்டேர் பரப்பளவில் 6 பசுக்களோ அல்லது எருமைகளையோ வளர்க்கலாம். கால்நடைத் தொழுவத்தை கான்கிரீட் தரையாக அமைத்திட வேண்டும். அப்போதுதான் கழிவுநீர் மற்றும் சாணத்தை நேரிடையாக குளங்களுக்கு அனுப்ப முடியும். மேலும், இவ் வகையான திட்டத்தில் பராமரிக்கப்படும் குளங்களுக்கு பிற உரங்கள் தேவையில்லை என்பதால், குறைந்த செலவில் அதிக மீன் உற்பத்தியினை பெற முடியும். கால்நடை இருக்கும் இடத்தில் கழிவுநீர் தேங்கி இருந்தால் அவற்றில் கொசுக்கள் மற்றும் பிற நுண்ணுயிர்கள் வளருவதற்கு காரணமாகி விடும். மேலும், இவை நோய்களையும் பரப்பிவிடும். எனவே, இக் கழிவுகளை சரியான முறையில் மீன் குளங்களுக்கு உரமாக இடுவதால் நோய்கள் ஏற்படுவதை தடுப்பதோடு, மீன்களையும் நல்ல முறையில் வளர்க்கலாம்.

நெல்- வயல் மீன் வளர்ப்பு:

இம் முறை முக்கியமாக விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களின் வருமானத்தை பெருக்குவதற்கு ஏற்றது. இதில் மீன் குளங்கள் முக்கிய அங்கமாக திகழ்கிறது. மீன் குளங்களுக்காக தோண்டும்போது அங்கே கிடைக்கும் மண்ணை தடுப்புச் சுவர் அமைப்பதற்கும், நிலத்தினை சீர் செய்வதற்கும் பயன்படுத்தலாம். குளங்களின் கரையோரங்களில் பழ வகைகள், செடிகள், புற்கள் போன்றவற்றை வளர்க்கலாம். இதுவும் வருமானம் தரும் பயிர்களாகும். வண்டல் மண் நிரம்பிய குளங்கள், காளான் வளர்ப்புக்கும் பயன்படுகிறது. அதனால் குளிர் காலங்களில் காளான் வளர்ப்பினை மேற் கொள்ளலாம்.

முக்கியப் பயிர்களான மல்பெரி, கரும்பு போன்றவற்றையும் வளர்க்கலாம். மல்பெரி செடிகளினால் பட்டுப் பூச்சிகளுக்கு உணவும், மல்பெரி மரப்பட்டையில் இருந்து பேப்பரும் தயாரிக்கலாம். பட்டுப் பூச்சிகளின் கூட்டிலிருந்து நூல் தயாரிக்கலாம். கூட்டுப் புழுவின் கழிவு மற்றும் இறந்த புழுக்கள் மீன்களுக்கு உணவாக மட்டுமல்ல, குளங்களுக்கு உரமாகவும் பயன்படுகிறது.

ஒருங்கிணைந்த கால்நடை - மீன் வளர்ப்பின் நன்மைகள்:

ஒருங்கிணைந்த கால்நடை - மீன் வளர்ப்பில் கழிவுகளை குளத்தில் உரமாகப் பயன்படுத்துவதால் சுற்றுப்புறச் சுகாதாரம் காக்க முடியும். மேலும் மண் வளத்தினை உயர்த்த முடியும். மீன் உற்பத்தியை அதிகரிப்பதால், கிராம மக்களின் வருவாயை உயர்த்த முடியும். இதில் வேலைவாய்ப்பு வசதிகளும் அதிகரிக்கும் என்று பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

http://www.dinamani.com/agriculture/2014/05/15/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88---%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3/article2225098.ece

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி

 

கோடைப் பட்டத்தில் பலவிதமான பணப்பயிர்களை சாகுபடி செய்யலாம். இருப்பினும் கோடைப் பட்டத்தில் பயிர் சாகுபடிக்கு அபரிமிதமான பாசன நீர் கிடைக்காது. இருக்கும் நீரினை உபயோகித்து மார்க்கெட்டில் நல்ல விலை போகும். மற்றும் விளைச்சலை கொடுக்கும் பயிர்களை சாகுபடி செய்து பணம் சம்பாதிக்க வேண்டும்.

கோடைப் பட்டத்தில் நல்ல வருவாயினை தருவது வெள்ளரி சாகுபடி ஆகும். இந்தப் பயிர் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றது. இந்த விவசாயிகளுக்கு அதிக நிலப்பரப்பு இருக்காது. இவர்கள் வெள்ளரி சாகுபடியை அரை ஏக்கர் அல்லது ஒரு ஏக்கர் தான் செய்ய இயலும். கிணற்றுப் பாசனம் இருந்தால் டீசல் இன்ஜின் கொண்டு பாசனம் செய்யும் வசதி தான் இருக்கும். கிணற்றில் தண்ணீர் இல்லை என்றால் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயப் பணிகளை தொடரலாம். இந்த சிறு விவசாயி கள் கடும் கோடை வெய்யிலில் கடுமையாக உழைக்கத் தயாராக இருக்கிறார்கள். இவர்கள் சாகுபடிக்கு கூலி ஆட்கள் வைத்தாலும் அவர்களோடு குடும்ப நபர்களோடு இணைந்து வேலை செய்வார்கள். ஆதலால் விவசாயம் மிகுந்த அக்கறையோடு செய்யப்படுகின்றது. விவசாயப் பணிகள் குறிப்பிட்ட சமயத்திற்குள் செய்து முடிக் கப்படுகின்றது. இதனால் சாகுபடியில் இவர்களால் நல்ல லாபத்தினை எடுக்க இயலுகின்றது.
வெள்ளரி சாகுபடி காலம் 90 நாட்கள் ஆகும். பிஞ்சினை அப்படியே விட்டால் அது மிகப்பெரிய காயாக மாறி அதிக விதைகளைக் கொண்டு இருக்கும். இதனை விற்று லாபம் எடுக்க முடியாது. நுகர்வோர்கள் இக்கட்டத்திலுள்ள காய்களை விரும்புவதில்லை. இந்தக் காய்கள் சுவைப்பதற்கு ஏற்று வராது. ஆனால் இதில் அதிசயம் என்னவென்றால் வெள்ளரி காய்த்து பிஞ்சாக இருக்கும்போது அது சுவைமிக்கதாக இருக்கும். பிஞ்சு வெள்ளரி மூன்று தரம் கொண்டதாக இருக்கும். மிகச் சிறிய பிஞ்சுகள் நீளம் ஆறு அங்குலத்திற்குள் இருக்கும். இவைகள் மிகச் சுவை கொண்டதாக இருக்கும். ஒருவிதை கூட காயில் இருக்காது. இத்தகைய காய்களை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கிலோ ரூ.8 கொடுத்து வாங்கி பின்னால் தாங்கள் காய்களை கிலோ ரூ.25 வரை விற்கின்றனர். இரண்டாம் தரக்காய்கள் இவைகள் 9 அங்குலம் நீளம் வரை இருக்கும். இதன் விலை ரூ.15 வரை இருக்கும். பெரிய பிஞ்சுகள் இவைகளின் நீளம் 10 - 11 அங்குலம் இருக்கும். இதன் விலை கிலோவிற்கு ரூபாய் 10 வரை இருக்கும்.
முதல் இரண்டு தரம் கொண்ட காய்கள் சிரமம் இன்றி விற்பனையாகி விடும். மூன்றாம் தரக்காயில் விற்பனை சில சமயம் பிரச்னையாக இருப்பதுண்டு. பிஞ்சு வெள்ளரி தமிழ்நாட்டில் சிறப்பாக சாகுபடி செய்யப்படுகின்றது. சொட்டுநீர் பாசனத்திலும் சாகுபடி செய்யப்படுகின்றது. மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள் வண்டியில் கிராமத்திலுள்ள விவசாயிகள் நிலங்களுக்கு நேரில் சென்று பிஞ்சு வெள்ளரியை விலைக்கு வாங்குகின்றனர். விவசாயிகளுக்கும் மார்க்கெட்டிற்கு எடுத்துச் சென்று விற்கின்றனர்.

சாகுபடி விவரங்கள் : 

விவசாயிகள் தனது டீசல் ஆயில் இன்ஜின் செட்டினை உபயோகித்து பாசனம் செய்து வெள்ளரி சாகுபடி செய்கின்றனர். விவசாயி ஒரு ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்ய தேவையான விதையினை தயார் செய்து கொள்கிறார். ஏக்கருக்கு 150 கிராம் விதையினை உபயோகப்படுத்த வேண்டும்.
விவசாயி தனது நிலத்தை டிராக்டர் கொண்டு ஒரு உழவு இட்டு அதனை வயல் பூராவும் மண்ணோடு சீராக கலந்து உழுது கொள்ள வேண்டும். பிறகு ஏக்கரில் 600 குழிகள் போட வேண்டும். நிலத்திற்கு அடியுரமாக 1-1/2 மூட்டை பேக்ட் அம்மோபாஸ் உரத்தைப் போட்டு மண்ணோடு கலக்க வேண்டும். நிலத்திலுள்ள குழிகளில் இயற்கை உரமும், ரசாயன உரமும் உள்ளது. உடனே குழிக்கு மூன்று விதைகள் விதைத்து தண்ணீர் விடுகின்றார்.
இவ்வாறு 15 நாட்கள் செய்து விட்டு பிறகு நிலத்தில் கால்வாய் போட்டு பாசனம் செய்ய வேண்டும். குழிகள் அனைத்திற்கும் ஏக்கருக்கு 1-1/2 மூட்டை பாரமாபாஸ் 20:20 உரம் இட வேண்டும். குழிகளில் களைச்செடிகளை குச்சிகளை உபயோகித்து அகற்ற வேண்டும். செடிகள் நன்கு பூக்கள் பிடித்து காய்கள் காய்க்கத் தொடங்கும். சாகுபடி சமயம் விவசாயி தனது பயிரினை பூச்சிகள், பூஞ்சாளங்கள் தாக்காமல் இருக்க தக்க பயிர் பாதுகாப்பு முறைகளை அனுசரிக்க வேண்டும்.
வெள்ளரி சாகுபடியில் பயிரில் விதைத்த 45-வது நாளிலிருந்து ஒரு நாள் விட்டு ஒருநாள் அறுவடையில் வருமானம் கிடைக்கின்றது. கோடை காலத்தில் குறுகிய நாட்களில் பலன் தரும் பிஞ்சு வெள்ளரி சாகுபடி ""சிறு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்'' என்று சொல்வது பொருத்தமாகும்.
எஸ்.எஸ்.நாகராஜன்.

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20491&ncat=7

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Tamil_News_large_98561020140529064432.jp

 

விவசாயத்திலும் இரட்டை லாபம்!

மரவள்ளி கிழங்குடன், ஊடுபயிராக உளுந்து பயிரிட்டு, ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் லாபமீட்டி வரும் விவசாயி, ஆரோக்கியசாமி: நான், தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானுார் பட்டியை சேர்ந்தவன். முதன் முதலில், கரும்பை சாகுபடி செய்து வந்தேன். தண்ணீர் மற்றும் வேலையாட்கள் பற்றாக்குறை காரணமாக, கரும்பை பயிர் செய்வதில் அதிக கஷ்டம். இதையும் தாண்டி தொடர்ந்து கரும்பு பயிரிட்டதால், அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டது.நஷ்டத்தில் விவசாயம் செய்வதை விட, வேறு என்ன செய்யலாம் என, யோசித்த போது, 'மாற்றுப்பயிர்' தொடர்பான சரியான தகவல் கிடைத்தது. இதனால், 20 ஏக்கர் நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட ஆரம்பித்தேன். ஏனெனில், தண்ணீர் அதிகம் தேவையில்லை. 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். களைச்செடிகளும் அதிகம் முளைப்பதில்லை என்பதால், வேலையாட்களின் தேவையும் மிக குறைவு.மாற்றுப்பயிர்கள், மிகவும் சவாலானவை. அவற்றை முறையாக பயிரிட்டால் தான், வெற்றிகரமாக சாகுபடி செய்ய முடியும். எனவே, முதலில் நிலத்தை நன்கு பண்படுத்தி, விதைக்கிழங்குகள் வாங்கி நடவு செய்தேன். மரவள்ளி கிழங்கை பொறுத்தவரை, செடி வைத்து வளரும் வரை, களையை கொத்தி விட வேண்டும்.செடி ஓரளவு வளர்ந்து, மரவள்ளி கட்டையின் இலைகள் கீழே விழ ஆரம்பித்தால், அந்த நிழலில் களை செடிகள் எதுவும் முளைப்பதில்லை. இதனால், களையெடுக்கும் செலவு படிப்படியாக குறைந்து விடுகிறது.நான், சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துள்ளதால், தண்ணீரின் தேவை குறைவதுடன், நேரமும் மிச்சப்படுகிறது. பயிரிட்ட, எட்டு மாதத்திலிருந்தே அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். ஆனால், பன்னிரண்டு மாதத்தில் அறுவடை செய்யும் போது, நல்ல சதைப்பற்றுடன் கிழங்குகள் இருப்பதுடன், நல்ல விலையும் கிடைக்கிறது. மரவள்ளிக்கிழங்கு ஏக்கருக்கு, 9 முதல் 15 டன் வரை விளையும். தற்போது ஒரு கிலோ கிழங்கு, 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதற்கு, கேரளாவிலும் நல்ல வரவேற்பு உள்ளது. ஏனெனில், அங்கு தான் மரவள்ளிக்கிழங்கு பிரதான உணவாக இருக்கிறது. மேலும், மரவள்ளி கிழங்கு பற்பசை, சேமியா, ஜவ்வரிசி, சோப்பு போன்ற பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.இதில், ஊடுபயிராக உளுந்தும் சாகுபடி செய்யலாம். மரவள்ளி கிழங்கிற்கு என, பட்டம் எதுவும் இல்லாததால், எப்போது வேண்டுமானாலும் பயிரிடலாம். அதனால், நவம்பர் மாதத்தில் உளுந்து சாகுபடி செய்யலாம். 75 நாட்களே வளர்க்க வேண்டிய உளுந்தை ஊடுபயிராக விளைவிக்கும் போது, களை எடுக்கும் செலவும், தண்ணீர் செலவும் மிச்சம். இதனால், ஒரே நேரத்தில் இரண்டு பயிர்கள் செய்து, இரட்டை லாபம் 

 

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

நலிவடைந்து வரும் விவசாயத்தில், இது போன்ற தொழில்நுட்பங்கள் தான் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=141189

 

பசுமைக்குடில் தொழில்நுட்பம்

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=141280

 

உணவு உற்பத்தியைப் பெருக்க ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள்

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=141103

 

 

சக்சஸ் தரும் சாக்லெட் மரம்!

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=141322

 

 

 

லாபம் தரும் பழக்கூழ்!

 

மாம்பழம், கொய்யா, தக்காளி போன்ற பழங்களில் இருந்து, பழக்கூழ் தயாரித்து விற்றால், நல்ல லாபம் கிடைப்பதாகக் கூறும் மாதவன்: 

 

நான், கிருஷ்ணகிரியில், 'பையூர் பல்ப் இண்டஸ்ட்ரீஸ்' என்ற பெயரில், பழக்கூழ் தயாரிக்கும் ஆலையை, 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். நவீன வாழ்க்கை முறையில், மக்களின் உணவு பழக்கங்கள், தினந்தோறும் மாறி வருகிறது. பரபரப்பான இவ்வாழ்க்கை முறையில், தயார் நிலையில் உள்ள உணவுகளுக்கே, மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இது மாதிரியான தொழில்களை அடையாளம் கண்டு, அதை வெற்றிகரமாகச் செய்வதன் மூலம், நல்ல லாபம் பார்க்க முடியும். அப்படிப்பட்ட ஒரு தொழில் தான் பழக்கூழ், சாஸ் மற்றும் எசென்ஸ் தயாரிப்பு தொழில். ஓட்டல்கள், பலசரக்கு கடைகள், ஏற்றுமதி என, இதற்கான சந்தை வாய்ப்புகள் பெரிய அளவில் உள்ளன. இத்தொழிலில் போட்டியாளர்களும் குறைவு என்பதால், நல்ல லாபம் பார்க்கலாம். எல்லா வகையான பழங்களில் இருந்தும், பழக்கூழ் தயாரிக்கலாம். இதனால், ஒரே யூனிட்டை பயன்படுத்தி, சீசனுக்கு ஏற்ப, நமக்கு தேவையான பழக்கூழை உற்பத்தி செய்யவும், இதில் வாய்ப்பு உள்ளது. அதாவது, கோடை காலத்தில் மாம்பழம் சீசன். எனவே, இச்சமயத்தில், அதிகளவில் மாம்பழத்தை கொள்முதல் செய்து, அதிலிருந்து மாம்பழ கூழ் தயாரிக்கலாம் தக்காளி சாஸ் தயாரிப்பதற்கான திட்ட அறிக்கையை பார்ப்போம். நன்கு பழுத்த தக்காளிகளை வாங்கி, சுத்தம் செய்து, சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி, வேக வைத்து, இதற்கான பிரத்யேக இயந்திரத்தில் கொட்டி, தக்காளி சாற்றை பிழிந்தெடுக்கலாம். இவ்வாறு பிழியப்படும் சாற்றை, சர்க்கரை, உப்பு, வினிகர் மற்றும் இதர பொருட்களை சேர்த்து, 190 டிகிரி வெப்பநிலையில் மீண்டும் கொதிக்க வைத்து, 'பிராசஸ்' செய்ய வேண்டும்.இதற்கான உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் விளம்பரச் செலவுகள் என, 28 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்கு, வங்கி கடனாக, 70 சதவீதமும், அரசு மானியமாக, 25 சதவீதமும் கிடைக்கும். மீதி, 5 சதவீதத்தை தான், நாம் முதலீடு செய்ய வேண்டும்.ஒரு நாளைக்கு, 500 கிலோ தக்காளி சாஸ் உற்பத்தி செய்ய, 4,000 கிலோ தக்காளி தேவைப்படும். ஒரு கிலோ தக்காளியை, 10 ரூபாய்க்கு வாங்கினால், 40 ஆயிரம் செலவாகும். மாதத்திற்கு, 25 நாட்கள் வேலை செய்தால், 10 லட்சம் ரூபாய் செலவாகும். 
 

ஒரு கிலோ தக்காளி சாஸ், 170 ரூபாய்க்கு பாட்டிலில் அடைத்து விற்றால், தினமும், 45 ஆயிரம் லாபம் கிடைக்கும். கடை வாடகை, ஊழியர் சம்பளம், வங்கி கடன், மூலப்பொருட்கள் வாங்கிய செலவுகள் போக மாதம், 2 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும்.

 

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93&dtnew=6/6/2014&Print=1

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

xwatre_1946246h.jpg.pagespeed.ic.KKU2LQS
 

சாகுபடியை சிரமமின்றி மேற்கொள்ள விவசாயிகளுக்கு மிக முக்கியத் தேவையாக உள்ளது தண்ணீர். தமிழ்நாட்டில் காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை என தண்ணீர் சார்ந்த பிரச்சினைகளே மாநிலத்தில் பிரதான பிரச்சினைகளாக உள்ளன. இந்த சூழலில் சொட்டு நீர் பாசன முறை தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த பெரும் உதவியாக உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் உள்ள வயலூர் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி எம்.சதாசிவம். இவர் தற்போது சொட்டு நீர் பாசன முறையைப் பயன்படுத்தி கரும்பு சாகுபடி மேற்கொண்டுள்ளார். “வாய்க்கால்கள் மூலம் நேரடியாக வயலுக்குப் பாய்ச்சும்போது 5 ஏக்கர் வயல்களுக்கு தேவைப்படும் தண்ணீரை, சொட்டு நீர் பாசன முறையைப் பயன்படுத்துவதன் மூலம் 25 ஏக்கர் பரப்பளவுள்ள வயல்களுக்கு பாய்ச்ச முடிகிறது” என்கிறார் சதாசிவம்.

“மேலும், பயிருக்கான உரங்களையும் நீரில் கரைத்து சொட்டு நீர் பாசனம் மூலமே விநியோகிப்பதால், உரமிடுவது போன்ற பணிகளுக்கான ஆள் செலவு கணிசமாகக் குறைகிறது. சொட்டு நீர் பாசன முறையால் தண்ணீரின் தேவை பெருமளவு குறைவதோடு, சாகுபடி செலவும் குறைகிறது. கூடுதல் மகசூலும் கிடைக்கிறது. மேலும் சொட்டு நீர் பாசன முறையை அமைத்ததற்காக அரசின் மானிய உதவியும் எனக்கு கிடைத்துள்ளது” என்கிறார் அவர்.

சொட்டு நீர் பாசன முறையை ஏற்படுத்தும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீதமும் அரசின் மானிய உதவி வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் சரகத்தைச் சேர்ந்த வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டால் தேவையான வழிகாட்டுதல்களை அவர்கள் வழங்குவார்கள்.

 

http://tamil.thehindu.com/business/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article6107605.ece?homepage=true

 

புதிய நெல் ரகங்கள்

 

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோ-51 என்ற புதிய நெல் ரகத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் சாகுபடி செய்வதற்கு ஏற்ற நெல் ரகம் கோ-51 என்கிறார் திருவாரூர் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவரான பேராசிரியர் க.சோழன்.

“105 நாள் வயது கொண்ட குறுகிய நாள் பயிர் கோ-51. மிகவும் சன்ன ரகம். சாயாமல் பயிர் நிலைத்து நிற்கும். பூச்சி தாக்குதலை எதிர்கொள்ளும் தன்மை நிறைந்தது. ஹெக்டேர் ஒன்றுக்கு 6,500 கிலோ மகசூல் தரக் கூடியது” என்கிறார் அவர்.

“மோட்டா ரகத்தைச் சேர்ந்த திருப்பதி சாரம்-5 என்ற நெல் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறுகிய கால பயிரான இந்த நெல் ரகமும் நல்ல விளைச்சலைத் தரக் கூடியது” என்று சோழன் கூறுகிறார்.

மேலும் விவரங்களை அறிய அவரை 94438 47067 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

http://tamil.thehindu.com/business/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6107609.ece?homepage=true

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்ஸ்டன்ட் சப்பாத்திக்கு நல்ல வரவேற்பு! 

 

இன்ஸ்டன்ட் சப்பாத்தி தயாரிக்கும் வழிமுறைகளை கூறும், பாலகிருஷ்ணன்:

 

நான், கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில், ஆர்.பி., புட் புராடக்ட்ஸ் என்ற இன்ஸ்டன்ட் சப்பாத்தி தயாரிக்கும் கடையை நடத்தி வருகிறேன். கடந்த, எட்டு ஆண்டுகளாக இத்தொழிலை செய்து வரும் எனக்கு, அனைத்து செலவுகளும் போக மாதம், 50 ஆயிரத்திற்கும் மேல் வருமானம் கிடைக்கிறது. கோதுமை மாவு தான், இன்ஸ்டன்ட் சப்பாத்தி தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருள். இதை, மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம். குறிப்பிட்ட அளவு கோதுமை மாவை, மாவு பிசையும் இயந்திரத்தில் கொட்டி, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் எண்ணெய் விட்டு, பிசைந்து கொள்ள வேண்டும். பிசையப்பட்ட மாவை, சிறிய உருண்டைகளாக உருட்டும் இயந்திரத்தில் விட்டு, உருட்டிக் கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை, சப்பாத்தி சுடும் இயந்திரத்தில் இட்டு சப்பாத்தியாக மாற்ற வேண்டும். பின், தயாரித்த சப்பாத்திகளை குளிரவைத்து, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.

 

'பேக்கிங்' கவரில், தயாரித்த தேதி மற்றும் பயன்படுத்தும் காலம் போன்றவற்றை குறிப்பிட வேண்டும். மாவு பிசையும் இயந்திரம், உருண்டை பிடிக்கும் இயந்திரம், சப்பாத்தி செய்யும் இயந்திரம், குளிரூட்டும் கன்வேயர்கள், ஏர் கம்ப்ரசர், தொடர் சீலிங் இயந்திரம் என, இயந்திரங்கள் வாங்க, ஏழு லட்சம் ரூபாய் செலவாகும். ஒரு இயந்திரத்தின் மூலம், தினசரி, 10 ஆயிரம் சப்பாத்திகள் வரை உற்பத்தி செய்யலாம். நாம், 8,000 சப்பாத்திகள் தயாரித்து பாக்கெட்டிற்கு, 10 என, 800 பாக்கெட்களில் அடைக்கலாம். ஒரு கிலோ கோதுமை மாவு, 22 முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனோடு தண்ணீர், உப்பு, எண்ணெய் சேர்க்கும் போது, 1,700 கிராம் எடையாக மாறும்; ஆறு ரூபாய் கூடுதலாக செலவாகும். ஒரு சப்பாத்தி, 45 கிராம் எடை என்ற அளவில் தயாரிக்க வேண்டும். இதன்படி கணக்கிட்டால், 1 கிலோ கோதுமை மாவிற்கு, 38 சப்பாத்திகள் கிடைக்கும். நாம், 35 சப்பாத்திகள் என, கணக்கிட்டால், இதன்படி ஒரு சப்பாத்தியின் உற்பத்தி செலவு, 88 பைசா. ஆக, 10 சப்பாத்திகள் வீதம், 'பேக்கிங்' செய்ய ஒரு பாக்கெட்டுக்கு, 2.50 ரூபாய் என, தினசரி மொத்த உற்பத்தி செலவு, 9,040 ரூபாய். மாதம், 25 வேலைநாட்கள் வேலை செய்தால், மாத உற்பத்தி செலவு, 2.26 லட்சம் ரூபாய். 10 சப்பாத்திகள் கொண்ட ஒரு பாக்கெட், 25 ரூபாய்க்கு விற்பனை செய்தால் தினசரி, 800 பாக்கெட்கள் மூலம், 20 ஆயிரம் ரூபாயும், மாதத்திற்கு, 5 லட்சம் ரூபாயும் விற்பனை வரவாக கிடைக்கும். வங்கி கடன், கூலி, உற்பத்தி செலவு என, அனைத்து செலவுகளும் போக மாதம், 85 ஆயிரம் லாபம் கிடைக்கும்.

 

dinamalar

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மக்காச்சோளம் சாகுபடி

 

E_1402396418.jpeg

 

நல்ல வடிகால் வசதியுள்ள மண் தேவை. களிமண் நிலமும், நீர் அதிகம் தேங்கும் நிலமும் உகந்தது அல்ல. கோடை உழவு செய்வதால் மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது.
நவீன சாகுபடி முறையில் தொடர்ந்து கனரக இயந்திர பயன்பாடு, தொடர் பயிர் சாகுபடி, பாசனம் ஆகியவற்றின் நிலப்பரப்பிலிருந்து 40-50 செ.மீ ஆழத்தில் கடினதட்டு உருவாகி இருக்கிறது. நிலத்தில் இதனை 2-3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உளிக்கலப்பை கொண்டு 
50-60 செ.மீ இடைவெளியில் கிழக்கு- மேற்கு, தெற்கு - வடக் காக உழவு செய்வதால் கடின தட்டுப்பகுதி உடைக்கப்படுகிறது.
மக்காச்சோளம் மானாவாரியாக ஆடிப்பட்டத்திலும் (ஜூன் - ஜூலை), புரட்டாசி பட்டத்திலும் (செப்டம்பர் - அக்டோபர்) இறவைப் பயிராக தைப்பட்டத்திலும் (ஜனவரி - பிப்ரவரி), சித்திரைப் பட்டத்திலும் (ஏப்ரல் -மே) சாகுபடி செய்யப்படுகிறது. தொழு உரம், கம்போஸ்ட், மக்கிய தென்னை நார்க்கழிவு, சர்க்கரை ஆலைக்கழிவு இவற்றில் ஏதேனும் ஒன்றை எக்டருக்கு 12.5 டன் அளவில் அடியுரமாக இடவேண்டும். இத்துடன் எக்டருக்கு 10 பொட்டலம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இட வேண்டும்.
விதைப்புக்கு எக்டருக்கு 15 கிலோ வீரிய ஒட்டு ரக விதைகள் தேவைப்படும். பாசனப்பயிருக்கு 60 செ.மீ ஙீ 20 செ.மீ இடைவெளியிலும், மானாவாரி பயிருக்கு 45 செ.மீ ஙீ 20 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். கரிசல் மண்ணில் விதையை ஆழமாக நடக்கூடாது. குறைந்த ஆழத்தில் (2செ.மீ) நடவேண்டும். செம்மண் பூமியில் சற்று ஆழமாக (3 செ.மீ- 4 செ.மீ) நட வேண்டும்.
வரிசை முறையில் விதைப்பு செய்ய விதைப்பு கருவியை பயன்படுத்தலாம். பார்கள் அல்லது ஆழச்சால் அகலப்பாத்தி அமைத்து விதைப்பு செய்வது சிறந்த முறை. விதைப்பு செய்த 7-8ம் நாளில் தரமான நாற்றுகளை விட்டு விட்டு தேவையற்ற மற்ற செடிகளை நீக்கி விடவேண்டும். வெதுவெதுப்பான சுடுநீரில் விதைகளை 3 மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி பின்னர் விடுபட்ட இடத்தில் விதைப்பு செய்வதால் விதைகள் நன்கு முளைப்பதோடு மட்டுமல்லாமல் குருத்து பூச்சி தாக்குதலும் குறைகிறது.
வீரிய மக்காச்சோள பயிருக்கு பரிந்துரை செய்யப்படும். 135: 62.5:50 கிலோ / எக்டர் என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடவேண்டும். இவற்றில் 100 சத மணிச்சத்து, 25 சத தழைச்சத்து, 50 சத சாம்பல் சத்தினை ஒன்பதாவது கணு நிலையிலும் (45ம் நாள்) மேலுரமாக இட வேண்டும். 6வது முதல் 9வது கணு உருவாகும் நிலையில் பயிரின் வளர்ச்சியினைக் காட்டிலும் வேரின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். நீரில் கரையும் தன்மையுள்ள 19:19:19 எனும் உரத்தினை 0.5-1.0 (5-10 கிராம்/ லிட்டர்) சதக் கரைசலாக 30ம் நாள், 45ம் நாள் தெளிப்பதால் உரப்பயன்பாட்டுத்திறன் அதிகரித்து விளைச்சல் பெருக்கம் ஏற்படுகிறது.
களைகளைக் கட்டுப்படுத்த அட்ரசின் களைக்கொல்லியை எக்டருக்கு 500 கிராம் அளவில் தேவையான அளவு தண்ணீரில் கலந்து தெளிப்பானில் விசிறி நாசியை பயன்படுத்தி விதைப்பு செய்த 3வது நாள் தெளிக்க வேண்டும். பின்னர் 40-45 நாளில் களை எடுக்க வேண்டும். மக்காச்சோள பயிருக்கு 600-700 மி.மீ. தண்ணீர் தேவைப்படுகிறது. நீர் பற்றாக்குறை உள்ள காலங்களில் நெற்பயிரை அதிக பரப்பளவில் பயிரிடுவதைத் தவிர்த்து மக்காச்சோளம் பயிரிட வேண்டும். இறவை மக்காச்சோள சாகுபடியில் சொட்டுநீர் உரப்பாசன முறையை நடைமுறைப்படுத்துவது சிறந்தது.
மானாவாரி சாகுபடி பகுதிகளில் பண்ணைக்குட்டைகள் அமைத்து மழைநீரினை அறுவடை செய்து தெளிப்பு பாசனத்தின் மூலம் வறட்சியான சூழ்நிலையில் 20-30 ஆவது நாளில் பாசனம் செய்வதால் அதிக விளைச்சல் பெறலாம்.
த.வே.ப.கழகம் உருவாக்கியுள்ள "மக்காச்சோள மேக்சிம்' எக்டருக்கு 7.5. கிலோ அளவில் 500 லிட்டர் தண்ணீரில் தேவையான, ஒட்டும் திரவம் கலந்து ஆண்மஞ்சரி, மணி உருவாகும் பருவத்தில் தெளிப்பதால் மணிபிடிக்கும் திறன் அதிகரித்து 20 சதம் வரை கூடுதல் விளைச்சல் கிடைக்கிறது. உளுந்து, பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு, சோயா மொச்சை போன்றவற்றை ஊடு பயிராக பயிரிடலாம்.
இயந்திரங்களைப் பயன்படுத்தி அறுவடை செய்வது, மணிகளை சேமிக்கும் நிலையில் 12 சத ஈரப்பதத்தில் சேமிப்பது மிக அவசியம். (தகவல் : முனைவர்கள் ரெ.கவிமணி, ரெ.பாஸ் கரன், கி.பாரதிகுமார், தீ.ஆனந்த், பருத்தி ஆராய்ச்சி நிலையம், வேப்பந்தட்டை-621 116. பெரம்பலூர் மாவட்டம். போன்: 04325 - 264 046.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

 

dinamalar

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
வருவாய் தரும் கோழி வளர்ப்பு!

 

 • hens.jpg

கால்நடை வளர்ப்பு தொழிலில் தமிழகத்தில் பொதுவாக அனைவரின் பங்களிப்பும் இருப்பது கோழி வளர்ப்பில்தான். பசு, ஆடு, முயல் வளர்ப்பு போன்றவற்றைக் காட்டிலும் கோழி வளர்ப்பு மிக எளிது. இறைச்சிக்கான பிராய்லர் கோழி வளர்ப்பு பெரிய பண்ணைகளுடன் முடிந்துவிடுகிறது. ஆனால், நாட்டுக்கோழி வளர்ப்பு வீடுதோறும் இருந்து வருகிறது.

எனினும், நாட்டுக்கோழியையும் சிறிய பண்ணை முறையில் வளர்த்தால் அதிக லாபம் பெறலாம். தரமான நாட்டுக்கோழி முட்டைகளைத் தேர்ந்தெடுத்து, கருவிகள் மூலம் நாமே பொரிக்கச் செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின், அடை காத்த முட்டைகளைப் பொரிக்கச் செய்ய கேட்சர் மெஷின் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். புதிதாக தொழில் தொடங்குவோர் குறைந்த முதலீட்டில் நாட்டுக்கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்ப்பதே சிறந்தது.

கரையான்கள் கொடுக்கலாம்:  முதன்முதலாக கோழி வளர்ப்பில் ஈடுபட விரும்புவோர் தோட்டங்களில் 20 முதல் 50 கோழிக்குஞ்சுகளை 10 கூடுகளைப் பயன்படுத்தி வளர்த்துப் பார்க்கலாம். நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் பராமரிப்பு மிகவும் முக்கிய இடம் பெறுகிறது. பொதுவாக வேறு பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

முதல் 48 நாள்களுக்கு புரோட்டின் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு கொடுக்க வேண்டும். அதன் பிறகு தீவனத்துடன் கீரை, கரையான்களைக் கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை நீரில் கலந்துகொடுக்கலாம்.

கேரட், பெரிய வெங்காயம் போன்றவற்றைப் பொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாள்களுக்கு மேல் கடைசிவரை ஏதாவது ஒரு கீரை வகையைப் பொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின் ருசி அதிகரிக்கும்.

கோழிக் கூண்டுகளிலும் பண்ணைகளில் பயன்படுத்துவதைப்போல தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரை முதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகாமலிருக்க அடிக்கடி கிளறிவிட வேண்டும். கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதைத் தவிர்க்க, 20 முதல் 30 நாள்களுக்குள்ளாக குஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும்.

மொத்தமாக 80 முதல் 100 நாள்களில் சேவல், கோழிகளை விற்பனைக்கு அனுப்ப முடியும். இறைச்சி விற்பனையாளர்கள், ஹோட்டல்கள் போன்றவை நாட்டுக்கோழிகளை நேரடியாக வாங்கிச்செல்லும் நிலை உள்ளது. இதன் மூலம் அதிக வருவாய் பெறலாம்.

நாட்டுக்கோழி வளர்ப்பு, அதுகுறித்த கூடுதல் விவரங்களை விவசாயிகள் அறிந்துகொள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீபுரம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு நேரில் சென்று பல்கலைக்கழகட்க் பேராசிரியர்களைச் சந்தித்து விளக்கம் பெறலாம்.

dinamani

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாவல் சாகுபடியில் சாதனைரூ. 6 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி

 

Tamil_News_large_999171.jpg

 

நிலக்கோட்டை:தமிழ் இலக்கியங்களில் நாவல் பழத்திற்கு முக்கிய இடம் உண்டு. சுட்ட பழமா...சுடாத பழமா எனக்கேட்டு, மாடு மேய்க்கும் சிறுவனுக்கும் புத்திசாலித்தனம் உண்டு என்பதை அவ்வை பாட்டிக்கு உணர்த்த, முருகக் கடவுள் பயன்படுத்தியது நாவல் பழத்தை தான். பழம் சிறியது தான்; அதன் மூலம் கிடைத்த ஞானம் பெரிதல்லவா...

அவ்வை பாட்டிக்கு கிடைத்த ஞானத்தை போல, நாவல் பழத்தின் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மெட்டூர் விவசாயி ஜெயக்குமார். இவரது, பண்ணையில் 1.5 ஏக்கரில் குட்டை ரக நாவல் மரங்களையும், மீதி இடத்தில் நெல்லியும் வளர்க்கிறார். தனது நர்சரிக்காக, ஆந்திராவிற்கு செடிகள் வாங்கப் போன போது, பெரிய நாவல் கனியை பார்த்து சாகுபடி செய்ய ஆவல் கொண்டார்.

ஒன்றரை ஏக்கரில் 80 செடிகளை 22 அடி இடைவெளியில் நட்டு, சொட்டு நீர் பாசனம் அமைத்தார்; மரமாகும் வரை இயற்கை உரங்களை மட்டுமே அளித்தார். அடுத்த நான்கு ஆண்டுகளில், மரத்திற்கு 5 கிலோ பழம் கிடைத்தது. படிப்படியாக விளைச்சல் அதிகரித்து, 11 வது ஆண்டிலிருந்து மரத்திற்கு 60 கிலோ பழம் கிடைக்கிறது.

பொதுவாக, நாவல் மரம் 40 அடி வரை வளரும்;

பழங்களை பறிப்பது சிரமம். இவரது தோட்டத்தில் தொடர் கவாத்து மூலம் மரம் அதிக உயரம் வளரவில்லை; தரையில் அமர்ந்து கொண்டு பழங்களை பறிக்கலாம்.

ஒவ்வொரு பழமும் 15 கிராம் எடையில், தித்திப்பு அதிகம்.

ஜெயக்குமார் கூறுகையில்,

ஒவ்வொரு மரத்திலிருந்தும் 60 கிலோ பழங்களை தாராளமாக பறிக்கலாம். கிலோ 150 ரூபாய்க்கு விற்கிறேன். இரண்டு மாதத்தில் 6.75 லட்ச ரூபாய் சம்பாதித்துள்ளேன். செலவு போக 6 லட்ச ரூபாய் கிடைக்கும். ஒரு பழத்தின் விலை 2 ரூபாய்,” என்றார். இவரிடம் பேச - 98659 25193.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=999171

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கவலையில்லாத மனிதன்               சந்திரபாபு அவர்கள் முக்கியக்  கதாபாத்திரமாக நடித்து 1960 ம் வருடம் வெளியான படத்தின் தலைப்பு. இத்தலைப்புக்கு முழுத்தகுதியான ஒரு மனிதரை நெடுங்காலம் எனக்கு மிக அருகிலேயே பார்த்திருக்கிறேன். எனது அடுத்த வீட்டின் உரிமையாளரும் அங்கேயே நீண்ட காலம் வசித்தவருமான திரு. ரங்கசாமிதான் அவர். அந்தக் குடியிருப்புப் பகுதியில் 1982ல் முதலில் வீடு கட்டி வந்தவர் அவர்தான். 12 வருடங்கள் கழித்து அவருக்கு அண்டை வீட்டுக்காரனாகும் பேறு பெற்றவன் நான். அவர் உயர்ந்த கொள்கை பிடிப்புள்ளவர் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த விஷயங்கள் ஒன்றிரண்டு உண்டு. அதனால் அவர் சில விஷயங்களில் எனக்கு முன்மாதிரி என்றே இன்றளவும் வைத்துள்ளேன்.               நான் அங்கு குடிவந்தபோதே அவரது ஐந்து பிள்ளைகளும் வேலையிலோ திருமண பந்தத்திலோ கட்டுண்டதால், அவரும் அவரது மனைவியும் மட்டுமே அவ்வீட்டில். பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் அவ்வப்போது வந்து போவார்கள். அவரும் அவரது மனைவியும் அரசுப் பணியில் இருந்தார்கள் அப்போது. துணைவியார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் நமது கதாநாயகர் வருவாயித்துறையில் இளநிலை உதவியாளராகவும் இருந்தனர். “முப்பத்தி மூணு வருஷ சர்வீஸ்” என்று அவர் பெருமையாகக் கூறியதும் நான் தயங்கியபடி கேட்டேன், “சார், உங்கள் துறையில் இத்தனை வருஷமாகவா பதவி உயர்வு தராமல் Junior Assistant ஆகவே வைத்திருப்பார்கள்?” பொதுவாக ஒருவரின் பதவி நிலை, பணி உயர்வு போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்குள் போவது அநாகரிகம் என்று நினைக்கும் நானே அடக்கமாட்டாமல் கேட்டு விட்டேன். முப்பத்து மூன்று வருடங்கள், ஆரம்ப நிலையான இளநிலை உதவியாளர் என்னும் கொடுமையை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் மனிதர் ஒரு மந்தகாசச் சிரிப்புடன் அக்கேள்வியைக் கடந்து சென்றார் பாருங்கள், “தம்பி, நான் அந்த நேரத்தில் நியமனம் ஆன முறைப்படி (ஏதோ 10A1, வழக்கு, கோர்ட் தீர்ப்பு என்றெல்லாம் சொன்னார்) Junior Assistant தான் எனக்கு கியாரண்டி. அடுத்த நிலைக்குச் செல்ல ஏதோ டெஸ்ட் எழுதணுமாம். அதெல்லாம் படிக்க எனக்குப் பொறுமையில்லை; சரக்குமில்லை. அப்புறாம் பதவி உயர்வு கொடுத்து இடமாற்றம் வேற பண்ணுவான். போதும் தம்பி ! நமக்கு என்ன குறை?” என் தந்தை இதே துறையைச் சார்ந்தவர். இவரைப் போலவே இளநிலை உதவியாளராய்ச் சேர்ந்து படிகள் சில கடந்து அப்போது வட்டாட்சியராய் இருந்தார்கள். அவர்கள் சொன்னது, “ஒரு முறை அலுவலக நண்பர்கள் ரங்கசாமியை வலுக்கட்டாயமாகத் தேர்வு எழுத வைத்து, புத்தகங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, காபி டிபனெல்லாம் வாங்கி வந்து எழுத வைத்தார்கள். மனிதர் சாவகாசமாய் அமர்ந்து அவற்றையெல்லாம் சாப்பிட்டு விட்டு, “வே! உங்களையெல்லாம் மறக்க முடியாது வே!” என்று உணர்ச்சிப்பூர்வமாக நன்றி சொல்லி, விடைத்தாளில் ஏதோ கிறுக்கிவிட்டுச் சென்று விட்டார். நான் அதுகுறித்துக் கேட்டேன். “தம்பி ! அந்தப் புத்தகங்களில் விடை எங்கே இருக்கிறது என்று எவனுக்குத் தெரியும்? அவற்றைக் கொண்டு வந்த நம்ம ஃப்ரெண்ட்ஸ்கே தெரியல!”. பொதுவாக இப்படிப்பட்டவரை ‘சோம்பேறி’ என்றுதான் உலகம் விளிக்கும். அவரை அருகிலிருந்தே பார்ப்பதால் எனக்கு என்னவோ அப்படித் தோன்றவில்லை. பதவி உயர்வுகளை உரிய நேரத்தில் பெற்ற என் தந்தையாரை விட அவர் மகிழ்ச்சியாகவே தோன்றினார். பணியில் சேர்ந்த நாள் முதல் ‘Enterprising’, ‘Active’ என்ற பெயரில் எதையோ விரட்டிக் கொண்டே திரியும் நிம்மதியிழந்த ஜீவன்களை விட அவர் ஒரு உயிர்ப்புள்ள மனிதராகவே தெரிந்தார். சரி, இதிலிருந்து கிடைத்த பாடம்? பணி மேம்பாடு பக்கமே போகாமல் நானும் சித்தராகத் திரிந்தேனா? அவ்வளவு நான் முத்தி அடையவில்லை. அடுத்த நிலைக்கான சிறிய முயற்சியை மேற்கொள்ளாமல் இல்லை. ஆனால் அதையே நினைத்து வாழ்க்கையை வீணாக்காமல் தப்பினேன். ஒரு விரிவுரையாளனாய்ப் பணியில் சேர்ந்த நான் அதே நிலையில் ஓய்வு பெறும் மனநிலை பெற்றேன். அதையும் மீறி வந்த உயர்வினை ‘இலாபம்’ என்று எழுதினேன். அலுவலகம் எனும் உலகில் அமைதியான வாழ்வைப் பெற்றேன். உபயம் : உயர்திரு. ரங்கசாமி அவர்கள். பயன் : அதிகார வர்க்கத்திடம் தேவையில்லாமல் நான் சமசரம் செய்ததில்லை; மனநிறைவுடன் ஒரு தொழிற்சங்கவாதியாய் வாழ்ந்தேன். இளைய தலைமுறைக்கும் இத்தாரக மந்திரத்தைக் கடத்த முற்பட்டேன். அதன் பொருள் புரிந்தோர் பேறு பெற்றோர்.               சரி. மீண்டும் புகைப்படக் கருவியை (Camera) ரங்கசாமியின் பக்கம் திருப்புவோம். பிரச்சினையே இல்லாத மனிதன்தான் கவலையில்லாத மனிதனாய் வாழ முடியும் என்று நீங்கள் நம்பினால், ஒரு நொடி உங்களைக் கண்ணாடியில் பார்த்து நீங்களே சிரித்து விட்டுத்  தொடருங்கள். இல்லறம் நல்லறமாய் அமையாத துர்பாக்கியசாலி அவர். அதற்கு அவரும் காரணமாய் இருந்திருக்கலாமே! இருக்கலாம். இல்லை என்று தீர்ப்பு வழங்க நான் நீதிமான் இல்லை. எது எப்படியாயினும் அது அவருக்கும் துன்பம்தானே ?               இங்கு ஒரு நிகழ்வைப் பதிவு செய்ய விழைகிறேன். அவர்கள் வீட்டில் தென்னை நன்றாகக் காய்த்து என் வீட்டு மாடியில் தண்ணீர்த்தொட்டியின் குழாயை அவ்வப்போது பதம் பார்த்தது. ஒரு நாள் முற்றத்தில் நின்று கொண்டிருந்த அந்த அம்மாவிடம் சொன்னேன். உடனே சீற்றத்துடன், “நீங்கள் புதுசு புதுசா ரூம் எடுப்பீர்கள். எங்களுக்கு வேறு வேலையில்லையா?” என்றார் அந்த அம்மா. “என்னது, சம்பந்தமில்லாமல் பேசுகிறார்?” என்று யோசித்த பின்தான் தெரிந்தது; என் வீட்டில் அந்தப் புதிய தண்ணீர்த் தொட்டியே மாடியில் புதிய அறை கட்டியதால்தானே வந்தது ! பின்னர் ரங்கசாமி ஆளை அழைத்து வந்து தேங்காய்  பறிக்கச் செய்தார். என்னிடம் சொன்னார், “தம்பி ! அவளிடம் பேசி உங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். என்னிடம் சொல்லுங்கள்”. இந்த நிகழ்வை நான் இப்போது சொன்னது, வாசிக்கும் உங்கள் நியாயத் தராசு ஒரு பக்கமாய்ச் சாயட்டுமே என்ற எனது அரசியலாக இருக்கலாம்.               24x7 அந்த அம்மா கரித்துக் கொட்டுவதைச் சட்டை செய்யாமல், தேய்த்து வாங்கிய சட்டையை மடிப்புக் குலையாமல் எடுத்து அணிவார். சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட வாசனைத் திரவியத்தை அள்ளித் தெளித்து, தினமும் சவரம் செய்து பளபளப்பாக வைத்திருக்கும் முகத்தில் பவுடரால் (அதுவும் வாசனையுடன்) மெருகேற்றிக் கிளம்பி விடுவார். அது அலுவலகத்திற்கு அல்லது கடைத்தெருவில் நட்பு வட்டத்துடன் அரட்டையடிக்கும் தேநீர்க் கடைக்காக இருக்கலாம். அவருக்கு மகிழ்ச்சி எங்கே கிடைக்கிறதோ அங்கேதானே போக முடியும்! வெளியே செல்ல முடியாத நேரமாயிருந்தால் அவரும் குரலை உயர்த்துவார். கவலையில்லாத மனிதர் ஒருவரை சந்திக்கக் கிடைத்தது எனக்கு வாய்த்த பேறு என்றால், தினமும் அவர்களுக்கு இடையில் பரிமாறப்படும் வசவுகள் என் காதில் விழுவது நான் செய்த பாவம். பிள்ளைகள், பேரன், பேத்தி எல்லாம் ஏற்படுவதற்கு மனதளவில் கணவன் - மனைவி  ஆக வேண்டிய அவசியமில்லை என்பதை அவர்களிடம் தெரிந்து கொண்டேன். எல்லா வீடுகளிலும் கோப தாபங்கள் எல்லாம் சகஜம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஹலோ ! உங்கள் வீட்டில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குப் பெயர் ஊடல். அது உளவியல் அறிவியல் சார்ந்தது. இவர்கள் வீட்டில் நடப்பதற்குப் பெயர் யுத்த காண்டம்; வெகு சில வீடுகளிலேயே இது அரங்கேறும்.               கொதி நிலை என்ற ஒன்று உண்டே ! இருவரும் பணி ஓய்வு பெற்றபின் விவாகரத்து வழக்கு நீதிமன்றம் சென்றது. ஒரு மகள் மட்டும் அவர் பக்கமும், மூன்று பிள்ளைகள் தாயின் பக்கமும், ஒரு மகள் நடுநிலை வகித்தும் குடும்பம் சின்னா பின்னமாகியது. வீட்டின் மீது உரிமை கோரும் வழக்கும் பதிவானது. வழக்கு முடியும் வரை தம் பக்கம் நின்ற மகள் வீட்டோடு சென்றார் ரங்கசாமி. அந்த அம்மா மட்டும் இவ்வீட்டில். அவருக்கு யாருடனும் ஒத்துவராது என்று அவரே சொல்லிக் கொள்வார். ஆகையால் மற்ற பிள்ளைகள் அவரவர் வீட்டில். ஒரு நாள் திடீரென்று இரவில் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அந்த அம்மா நீள்துயில் கொண்டார். அண்டை வீடு என்பதால் முதலில் கண்டுபிடித்த துர்பாக்கியசாலி நானேதான். அந்த அம்மாவைச் சார்ந்து நின்ற பிள்ளைகளுக்குத் தகவல் கொடுத்தேன். வந்தார்கள். வீட்டுக் கதவை உடைக்கத் தயங்கினார்கள். அப்பா போலீஸில் பொய் வழக்குக் கொடுத்துத் தங்களுக்குப் பிரச்சனை ஏற்படுத்துவார் என்று பேச ஆரம்பித்தார்கள். நான் அவரிடம் சென்று பேசினேன். ‘அக்கம் பக்கத்தார் சாட்சியாக உங்கள் முன்தான் கதவு உடைக்கப்பட்டது என்று இருக்கட்டும்’ என்று அழைத்தேன். “தம்பி ! நீங்கள் வந்து அழைப்பதால் வருகிறேன். மற்றபடி அந்த உறவெல்லாம் எனக்கு முடிந்துவிட்டது. அவளுடன் வாழ்ந்து வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தொலைத்தது போதும்” என்று கிளம்பினார். சுமார் முப்பத்தைந்து வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்காக இல்லாமல், ‘அவருக்கு யாரோ’ எனும் நான் அழைத்ததால் வந்தார் என்பது அவர்களுக்கு இடையில் உள்ள வெறுப்பின் குறியீடு. கதவை உடைத்த பின் அவர் வீட்டின் உள்ளேயே செல்லாமல் போய் விட்டார். “இனி இந்தப் பயலுக என்னை அநாகரிகமாகப் பேச ஆரம்பிப்பானுக. நான் போறேன், தம்பி!” என்று மட்டும் சொன்னார்.               வீடு அவருக்கே உரியது என நீதிமன்றத்தில் தீர்ப்பானது. சில நாட்களில் வீட்டை விற்றுவிட்டார். அப்புறம் எங்கே சென்றார் என்று எனக்குத் தெரியாது. சுமார் மூன்று வருடங்கள் கழித்து ஒரு நாள் சந்தடி மிகுந்த சாலையில் நான் நடந்து செல்லும் போது ஒரு கார் என்னருகில் வந்து நின்றதை உணர்ந்தேன். அதிலிருந்து முன்பு போல் ‘மேக்-அப்புடன்’ நம் கதாநாயகர் இறங்கினார். “தம்பி, நல்லா இருக்கீங்களா?” என்று கை குலுக்கினார். சில வருடங்கள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியை நானும் வெளிப்படுத்தினேன். “ஏய் ! கொஞ்சம் இறங்கு” என்று காரில் அமர்ந்திருந்த சுமார் 55-60 வயது மதிக்கத்தக்க அம்மணியிடம் கூறினார். அந்த அம்மா இறங்கி எனக்கு வணக்கம் தெரிவிக்க, நானும் புன்னகையுடன் வணக்கம் சொன்னேன். “தம்பி! இவள் என் மனைவி. நாங்கள் திருமணம் செய்து ஒரு வருஷம் ஆகுது. இவளும் டீச்சர்தான். இன்னும் ரெண்டு வருஷம் சர்வீஸ் இருக்கு.” நான் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தேன். அந்த அம்மாவிடம் சொன்னேன், “நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்த உலகில் மிக சந்தோஷமான மனிதரைக் கல்யாணம் பண்ணி இருக்கிறீர்கள்”.                                                                                                      - சுப. சோமசுந்தரம்                           
  • நான் இறந்தால் சீமானை சிக்க வைக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள் -விஜயலஷ்மி பகீர் வாக்குமூலம்.    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.