Jump to content

வரப்புயர (விவசாயம்/கைத்தொழில் சார்ந்த பதிவுகள்)


Recommended Posts

  • Replies 162
  • Created
  • Last Reply

குறைந்த செலவில் நிறைந்த லாபம் தரும் பரங்கி!

 

பரங்கி சாகுபடி செய்து, லாபம் ஈட்டி வரும் லட்சுமி: தஞ்சாவூர் அடுத்த கண்டியூர், என் சொந்த ஊர். பரங்கிக் கொடி, எல்லா வகை மண்ணிலும், எந்த சூழலையும் தாங்கி வளரக் கூடியது. இருந்தாலும், களிமண் மற்றும் வண்டல் மண்ணில், அதிக மகசூல் கொடுக்கும்.எந்த வகை மண்ணாக இருந்த போதும், நன்கு உழவு செய்து, வயலில் தண்ணீர் தேங்காத வகையில் சமப்படுத்த வேண்டும். இல்லை யெனில், மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி, பரங்கிக் கொடிகள் அழுகி விடும். வயலை சமப்படுத்தி உழவு செய்த பின், 5க்கு 5 அடி இடைவெளி இருக்கும் வகையில் விதைக்குழிகள் அமைத்து, ஒரு விதைக்குழிக்கு ஐந்து விதைகள் ஊன்றலாம்.விதை ஊன்றிய பின், நன்கு கொடி படர ஆரம்பிக்கும் வரை, குறைவான தண்ணீரும், பிறகு கொஞ்சம் அதிக அளவில் தண்ணீரும் பாய்ச்சலாம். கொடிகள் காற்றில் உடைந்து விடாமல், கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். விதைத்த நாளிலிருந்து, 70 நாட்களுக்கு பின் காய்களை அறுவடை செய்யலாம்.

பரங்கிக்காய் நம்முடைய நாட்டுக்காய் என்பதால், தண்ணீர் இருந்தாலும் வள ரும்; தண்ணீர் இல்லாத போதும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு வறட்சியை தாங்கி, நல்ல மகசூல் கொடுக்கும். அதேபோல், இதற்கு உரச் செலவோ, பராமரிப்புக்கு ஆள் செலவோ கிடையாது. விவசாயியே நேரடியாக பராமரிப்பு செய்யலாம்.பரங்கிக்கு ஊடுபயிராக, வெள்ளரியை பயிர் செய்யலாம். அதாவது, பரங்கி விதை ஊன்றிய, 10 நாட்களுக்கு பின், வெள்ளரி விதையை ஊன்றலாம். பரங்கிக் கொடி, நீண்ட துாரம் படரும் தன்மை கொண்டது. ஆனால் வெள்ளரி, விதைக்குழியின் அருகிலேயே படரும் தன்மை கொண்டது.அதனால் இரண்டை யும் இணைத்து பயிரிட்டால், நல்ல லாபம் கிடைக்கும் என்பது நிச்சயம். பரங்கியும், வெள்ளரி யும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும் என்பதால், அறுவடை செலவும் குறையும்.பரங்கிக்காய் அல்வா செய்யப் பயன்படுவதால், வெளிமாநிலங்களில் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி, சீக்கிரம் வீணாகாது என்பதால், நம் ஊர் ஓட்டல்களிலும் பரங்கிக்காய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. பெரும்பாலும் வியா பாரிகள், வயலுக்கு வந்து பரங்கி, வெள்ளரியை வாங்கி செல்கின்றனர்.ஒரு ஏக்கர் நிலத்தில் பரங்கி, வெள்ளரி பயிரிட்டதன் மூலம், 50 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைத்தது. மூன்று மாத கால பயிரான இதில், குறைந்த செலவில், நிறைந்த லாபம் கிடைப்பது நிச்சயம்.
 
Link to comment
Share on other sites

இலைகள் மூலம் நாற்று உற்பத்தி

 

ilai_2090028h.jpg

 

நாற்று உற்பத்தியில் இலைகள் மூலம் செடி வளர்ப்பு எனும் புதிய நடைமுறையைக் கண்டுபிடித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ராஜரத்தினம்.

கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் வெளிப்பாளையம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜரத்தினம். 4 ஏக்கரில் நர்சரி தோட்டம் அமைத்து நாற்று உற்பத்தியை மேற்கொண்டு வருகிறார். நாற்று உற்பத்தியில் இலைகள் மூலம் செடி வளர்ப்பு எனும் நடைமுறையைக் கண்டறிந்துள்ளார்.

இந்த தொழில்நுட்பம் குறித்து அவர் கூறியதாவது: “கடந்த 1998-ம் ஆண்டில் இருந்து நாற்று உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறேன். பூ வகைகளில் மல்லி, முல்லை, ஜாதி ரோஜா, அரளி, காக்கடா ஆகியவையும், பழ நாற்றில் ஈடன் எலுமிச்சை (குளோன் நாற்று), மாதுளை, பப்பாளி ரகம் ஆகியவையும், மர வகைகளில் மலை வேம்பு, சந்தனம், செஞ்சந்தனம், பெருமரம் போன்றவற்றையும் உற்பத்தி செய்து வருகிறேன்.

நாற்று உற்பத்தியில் விதைகள் மூலம் நாற்று உற்பத்தி, கட்டிங் முறை, விண் பதியம், மண் பதியம், ஒட்டுக் கட்டுதல், மொட்டுக் கட்டுதல், பட்டிங், கிராஃபிங், திசு வளர்ப்பு போன்ற முறைகள்தான் இருந்து வருகிறது. இலைகள் மூலம் நாற்று உற்பத்தி என்பது புதிய முறையாகும்.

மண் நிரப்பிய பாலிதீன் பைகளை பனிக் கூடாரத்தினுள் அடுக்கி வைக்க வேண்டும். அதன் மீது தண்ணீர் விட்டு நன்றாக ஈரம் செய்ய வேண்டும். அடுத்து விருப்பமான செடிகளில் இருந்து இலைகளை பறிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு கொய்யா இலையை எடுத்துக் கொண்டால், அந்த இலையை பூஞ்சானைக் கொல்ல பயன்படும் திரவத்தினுள் போட்டு எடுக்க வேண்டும். அடுத்து வேர் தூண்டும் பவுடரை இலைக் காம்பில் மட்டும் தொட்டு, அந்த இலையை பாக்கெட் மண்ணில் நட வேண்டும். கூடாரத்தின் வெப்ப நிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். முதல் 5 வாரத்தில் காம்பு பகுதியில் இருந்து வேர் வரும். பின்னர், வேர் முடிச்சில் இருந்து புதுச்செடி உருவாகிவிடும். இதையடுத்து, பாக்கெட்டில் இருந்து செடியை வெளியே எடுத்து நடலாம்.

இந்த முறையில், விவசாயிகள் அதிகம் பயிரிடும் கொய்யா, குண்டு மல்லி, திருச்சி மாவட்டத்தில் அதிகம் பயிரிடக் கூடிய இட்லி பூ, காக்கடா, வெற்றிலை ஆகிய பயிர்களை பயிரிட்டு வெற்றி அடைந்துள்ளேன். கட்டிங் மூலம் வராத தாவர வகைகளிலும் இந்த புதிய முறையின் மூலம் நாற்று உற்பத்தி செய்ய முயற்சித்து வருகிறேன். தற்போது, இந்த புதிய முறை மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நாற்றுகளை விவசாயிகளுக்கு சோதனை அடிப்படையில் இலவசமாகக் கொடுத்து வருகிறேன்.

விதை வளர்ப்பு முறையில் விளைச்சல் ஒரே மாதிரி இருக்காது. திசு வளர்ப்பு முறையில் ஒரு செடிக்கு ரூ. 12-க்கு குறையாமல் நாற்று உருவாக்க முடியாது. இதற்கெல்லாம் மாற்றாக இருப்பதுதான் இலைகள் மூலம் செடிகள் உற்பத்தி முறையாகும்” என்கிறார் ராஜரத்தினம்.

தொடர்புக்கு: 94860 94670

http://tamil.thehindu.com/business/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/article6375721.ece

 

 

Link to comment
Share on other sites

பயனளிக்கும் பல பயிர் பண்ணையம்.

 

E_1409649782.jpeg

 

முயற்சி என்பது விதை போல, அதை விதைத்து கொண்டே இரு... முளைத்தால் மரம், இல்லையென்றால் மண்ணிற்கு உரம்'' என்கிறார் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். காய்கறி சாகுபடி, நெல் சாகுபடி, எள் சாகுபடி, கடலை சாகுபடியில், அசத்தி வருகின்றனர், சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை பனம்பட்டியை சேர்ந்த விவசாயிகள்.
 
காரைக்குடியிலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது இந்த பனம்பட்டி. 10 ஏக்கரில் பல பயிர்களை, ஆண்டு முழுவதும் சாகுபடி செய்து வரும் சித.உடையப்பன் கூறியதாவது: ஒரு ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளோம். மூன்று ஏக்கரில் தென்னை, அரை ஏக்கரில் கேழ்வரகு, அரை ஏக்கரில் மக்காசோளம், 20 சென்டில் மரவள்ளி கிழங்கு, தலா 30 சென்டில் கத்தரி, வெண்டை, கீரை, மிளகாய் பயிரிட்டுள்ளோம். 3 ஏக்கர் கடலை பயிரிட்டுள்ளோம்.
 
30 நாளில் பலனை தருவது கொத்தவரங்காய், தட்டைபயிறு, 60 நாளில் பலன் தருவது கத்தரி, 45 நாளில் பலன் தருவது மிளகாய், 120 நாளில் பலன் தருவது கேழ்வரகு, 90 நாளில் பலன் தருவது கடலை, 9 மாதத்தில் பலன் தருவது வாழை. இவை அனைத்தையும் இங்கு பயிரிட்டுள்ளோம்.
கடலை, நெல், தென்னை, வாழை மட்டுமே மொத்தமாக அறுவடை செய்யப்படுகிறது. காய்கறிகள் அன்றாடமும், வாரத்துக்கு ஒரு முறையும் அறுவடை செய்து வருகிறோம். தினமும் பறிக்கும் காய்கறிகள் மூலம் ரூ.300 முதல் 500-ம், வாரத்துக்கு ஒரு முறை சந்தைக்கு செல்லும் காய்கறி மூலம் ரூ.5 ஆயிரமும் வருமானம் கிடைக்கிறது. வெளியே வேலைக்கு சென்றால், ரூ.300 வருமானமாக கிடைக்கும். அதே நம் நிலத்தில் வேலை செய்தால் ரூ.500 தினந்தோறும் வருமானமாக கிடைக்கும். நானும், என்னுடைய அண்ணன் விஸ்வலிங்கமும், வீட்டு உறுப்பினர்களும் தான் உழைத்து வருகிறோம்.
 
30 சென்ட் கத்தரி மூலம், ரூ.40 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். செலவு போக ரூ.25 ஆயிரம் வருமானமாக கிடைக்கும். நோய் தாக்கம் தான் கத்தரியின் வீழ்ச்சிக்கு காரணம். நோய் தாக்காதவாறு ஒவ்வொரு நாளும் இதை கண்காணிக்க வேண்டும். கொத்தவரங்காய்க்கு உரம், மருந்து அதிகம் தேவைப்படாது. தொழு உரம் மட்டும் இட்டால் போதும்.
 
ஒரே பயிரை பயிரிட்டு, அதை மட்டுமே நம்பியிருக்காமல், இருக்கின்ற நிலத்தை பல பிரிவாக பிரித்து, பல வகை பண்ணையம் மேற்கொண்டால், பலன் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைக்கும். வீட்டு தேவையும், இதன் மூலம் நிறைவேற்றி கொள்ளலாம், என்றார். கடன்படா வேளாண்மைக்கு கலப்பு சாகுபடி செய்து அசத்தி வரும் இவரை போல், இல்லாவிட்டாலும், இருக்கின்ற இடத்தில், இயன்றவரை தோட்டக்கலை பயிர்களை விவசாயம் செய்து, நம் தேவையை நாம் பூர்த்தி செய்து கொள்ள முன்வர வேண்டும்.
 
ஆலோசிக்க : 94420 43575
டி.செந்தில்குமார், 
காரைக்குடி
 
Link to comment
Share on other sites

பாகற்காய்பயிரிட்டால்பணம் அள்ளலாம்!
 
கடந்த நான்கு ஆண்டுகளாக, லாபகரமாக பாகற்காய் பயிரிட்டு வரும், தர்மபுரி ஆத்மா இயற்கை விவசாயப் பண்ணையைச் சேர்ந்த சிவலிங்கம்: ஆடி, ஆவணி, தை மற்றும் சித்திரையில் முன்பு, பாகற்காயை பயிர் செய்து வந்தனர். தற்போதைய சூழலில், எல்லா மாதங்களிலும் பாகற்காய் பயிரிட முடிகிறது.நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் கரிசல் மண், பாகற்காய் சாகுபடிக்கு ஏற்றது. விதையிட்டதிலிருந்து சராசரியாகவும், காய் பிடிக்கும் காலத்தில் அதிக அளவிலும், தண்ணீர் ஊற்ற வேண்டும். சொட்டு நீர் பாசனத்திலும், பாகற்காய் சாகுபடி செய்யலாம்.பாகற்காய் விதைப்பதற்கு முன், தேவையான அளவு தொழு உரத்தை நிலத்தில் இட்டு, மடித்து உழ வேண்டும்.
 
ஒரு ஏக்கர் நிலத்திற்கு, 700 கிராம் விதைகள் தேவைப்படும். தற்போது, 50 கிராம் விதைகள், 300 ரூபாய் வரை கிடைக்கிறது.தரமான மண்ணாக இருந்தால், 5 அடியிலும், சாதாரண மண்ணாக இருந்தால், 3 அடியிலும், குழிக்கு இரண்டு அல்லது மூன்று விதைகள் போட வேண்டும். வேர் பிடித்த பின், 5 லிட்டர் கோமியம், 5 கிலோ சாணம், ஒரு லிட்டர் கரும்புப் பாலை கலந்து தெளிப்பது, செடிக்கு நல்ல உரமாக அமையும்.செடி வளரும் போது, மாதத்திற்கு மூன்று முறை, ஐந்து இலைக்கரைசல் எனப்படும் ஐ.சி.சி., கரைசலை, 9 லிட்டர் தண்ணீருடன், 0.5 லிட்டர் அளவு சேர்த்து தெளித்தால், பூச்சிகளின் தாக்குதல் இருக்காது. இதையும் மீறி பூச்சி தாக்குதல் ஏற்பட்டால், 'சூடோமோனாஸ்' மோர்க் கரைசல், அக்னி அஸ்திரம் எனப்படும் இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டை, மிக்சியில் அரைத்துத் தெளிக்கலாம்.செடி நன்றாக வந்ததும், 10க்கு 8 அடி அளவிற்கு பந்தல் போட்டு, கொடியை பந்தலில் ஏற்றி விட வேண்டும். பந்தல் போட, 7,000 ரூபாய் வரை செலவாகலாம். இந்தப் பந்தல், பாகற்காய் சாகுபடி முடியும் காலம் வரை சேதமடையாது. பந்தலுக்குத் தேவையான கல்லுக்கு, தோட்டக்கலை துறை, 60 சதவீதம் வரை மானியம் அளிக்கிறது. இரண்டு மாதங்களில், காய் வரத் துவங்கி, எட்டு மாதங்கள் வரை பலனளிக்கும். ஒரு ஏக்கருக்கு, வாரம் இரு முறை என, ஒவ்வொரு முறையும், 1.5 டன் வரை பறிக்கலாம். தற்போது, ஒரு கிலோ பாகற்காய், 18 முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது.பாகற்காயை இயற்கை முறையில் பயிரிடும் விவசாயி, வாரந்தோறும், 60 முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். பாகற்காயை, பந்தல் முறையில் மட்டுமல்லாது, தரையிலும் ஊடுபயிராக சாகுபடி 
செய்யலாம்.
 
தொடர்புக்கு: 
97875 45231
 
Link to comment
Share on other sites

குலை குலையாய் பணம் தரும் வாழை: புதிய உத்தியால் லாபம் ஈட்டும் திருச்சி விவசாயி

 

vazhai_2100592f.jpg

 

திருச்சி அருகே அடர் நடவில் புதிய உத்தியைக் கையாண்டு ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலத்தில் 2,676 வாழைக் கன்றுகளை சாகுபடி செய்து பிற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார் 33 வயதே ஆன இளம் விவசாயி ஆர். கிருஷ்ணகுமார்.

திருச்சி அருகிலுள்ள மேலக் கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் இவர். ஆலத்தூரில் இவருக்கு நிலம் உள்ளது. பரம்பரை விவசாயியான இவர், குறைந்த இடத்தில், குறைந்த செலவில் அதிக மகசூல் பெற வேண்டும் என்பதற்காக அடர் நடவு முறையைப் பின்பற்றி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கற்பூரவள்ளி ரகத்தை பயிரிட்ட இவர், தற்போது ஏலரசி என்ற வாழை ரகத்தை பயிரிட்டுள்ளார். இந்த வகை வாழைப் பழத்துக்கு பெங்களூர், மும்பை, சென்னை ஆகிய இடங்களில் நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது என்கிறார்.

அடர் வாழை சாகுபடி பற்றி அவர் கூறியதாவது:

“அடர் நடவில் ஜோடி வரிசை என்ற முறையில் ஒரு குத்தில் ஒன்றரை அடி இடைவெளியில் 2 கன்றுகள் வீதம் ஒவ்வொரு குத்துக்கும் நீளவாக்கில் 5 அடியும், பக்கவாட்டில் 7 அடியும் இடைவெளி விட்டு நடவு செய்துள்ளேன்.

முதலில் நல்ல கன்றுகளை தேர்வு செய்து நட வேண்டும். நடவு செய்து 90 நாள்களில் தாய் கன்று மற்றும் பக்கவாட்டு கன்றுகள் அனைத்தும் ஒரே உயரத்தில் இருக்குமாறு வைத்து நறுக்கி விட வேண்டும். வழக்கமாக தாய் மரத்துடன் ஒரு கன்றைத்தான் விடுவார்கள். நான் 3 முதல் 4 கன்றுகள் வரை விட்டுள்ளேன். அனைத்து மரங்களும் தார் ஈனும். இந்த வகையில் ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலத்தில் ஜோடி வரிசை முறையில் 2,000 கன்றுகளும், பக்கவாட்டில் விட்ட கன்றுகள் 676 என மொத்தம் தற்போது 2,676 கன்றுகள் உள்ளன. (தோட்டக்கலைத்துறை பரிந்துரைப்பது ஏக்கருக்கு 1,000 கன்றுகள் தான்)

மண்ணை வளப்படுத்தி விட்டால், அதில் எதை வேண்டுமானாலும் பயிரிட்டு, நல்ல மகசூல் எடுக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் இயற்கை உரம் (மாட்டு சாணம்) மற்றும் பாஸ்போ பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் உரம் ஆகியவற்றை வயலில் இட்டு அதன் பின்னர்தான் கன்றுகளை நடவு செய்வேன்.

கன்றுகள் அதிகமாக இருப்பதால் மரம் மற்றும் காய்கள் வளர்ச்சி இருக்காது என்பதில்லை. மேலும், அடர் நடவில் மரங்கள் நெருக்கமாக இருப்பதால் காற்று அதிகமாக வீசினாலும் மரங்களுக்கு பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படாது. இருந்தாலும், தேவையான இடங்களில் சவுக்கு கம்புகள் மூலம் முட்டுகள் கொடுப்போம். தாய் கன்றுகளை நோய் தாக்கினாலும் கூட, பக்கவாட்டு கன்றுகளை தாக்காது.

வாழைக் கன்றுகளை நடவு செய்தவுடன் ஊடுபயிராக உளுந்து, புடலை, பீர்க்கை உள்ளிட்டவைகளையும் பயிரிடு வேன். வாழை மரம் வளர்வதற்குள் இந்த பயிர்களிலிருந்து நமக்கு வருமானம் கிடைக்கும்.

மேலும், வறட்சியால் மரங்களுக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளேன். மேலும், தோகைமலையில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளின் ஆலோசனைபடி உர நிர்வாகத்தை பின்பற்றி வருகிறேன். மேலும், மரத்தில் உள்ள காய்ந்த மட்டைகளை வெட்டி வயலிலேயே போட்டு விடுவேன். இதனால் களைகள் அதிக அளவில் முளைக்காது. மட்டைகள் மக்கி வயலுக்கு உரமாகி விடும் என்கிறார் கிருஷ் ணகுமார்.

ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலத்தில் வாழை சாகுபடியை மேற்கொள்ள ஓராண்டுக்கு ஏறத்தாழ ரூ 1.75 லட்சம் செலவாகிறது. அடர் நடவில் புதிய உத்தி மூலம் முறையாக சாகுபடியை மேற்கொண்டால் ரூ.7 லட்சம் வரையில் லாபம் கிடைக்கும். ஏலரசி வாழை குறைந்தபட்சம் கிலோ ரூ.30 முதல் அதிகபட்சமாக ரூ.54 வரையில் விற்பனை செய்துள்ளேன். நான் பயிரிட்டுள்ள 2,676 மரங்களில் 2,300 தார்களாவது நிச்சயம் கிடைக்கும்.

கடின உழைப்பும், தொழிலில் ஈடுபாடும் இருந்தால், மண்ணை யும் பொன்னாக்கலாம் என்பது தான் விவசாயி கிருஷ்ண குமாரின் தாரக மந்திரம். இவரது உழைப்பு, உத்தியைக் கவுரவிக்கும் வகை யில் தேசிய ஆராய்ச்சி மையம் சிறந்த வாழை விவசாயி விருதை வழங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு 96777 09902 என்ற எண்ணில் அவரை தொடர்பு கொள்ளலாம்.

 

http://tamil.thehindu.com/business/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF/article6395485.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

கால்நடைகளின் நோய்களை விரட்டும் மூலிகை மசால் உருண்டை

 

kaalnadai_2111663f.jpg

 

விவசாயிகளின் உயிர்த் தோழனாகவும், விவசாயம் பொய்த்துப் போகும்போதும் அவர்களின் வாழ்வாதரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் சிறப்பு பெற்றவை கால்நடைகள். ஆடு, மாடு, என விவசாய பணிகளோடு இணைந்துள்ள கால்நடைகளுக்கு தற்போது புதிது புதிதாய் நோய்கள் தாக்குவது விவசாயிகளை அச்சப்படுத்தி வருகிறது.

அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோமாரி போன்ற கால்நடைகளுக்கான நோய்களைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையே தொடர்கிறது.

கிராமப்புற பொருளாதாரத்தின் முக்கிய அங்கமான கால் நடைகளின் நலனை காக்க ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் இயங்கி வரும் ஜெயம் பிராணிகள் நல அறக்கட்டளை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோமாரி உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து கால்நடைகளைக் காக்க ஜெயம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கே.வி. கோவிந்தராஜ் கூறும் வழிமுறைகள்:

கால்நடைகளுக்கு அன்றாடத் தேவைக்குண்டான அடர்தீவனம், பசுந்தீவனம் போதுமான தண்ணீர் கொடுத்து பராமரிக்க வேண்டிய பொறுப்பும் அவசியமும் நமக்கிருக்கிறது. அதேபோல் கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த பாரம்பரியமாக நாம் கையாண்டு வந்த வழிமுறை களைத் தெரிந்து, அவற்றைப் பின்பற்றுவது நலம் பயக்கும். அந்த வகையில், கால்நடைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய மூலிகை மசால் உருண்டை.

ஆடு, மாடு போன்ற கால்நடை களுக்கு மூன்று மாதங்களுக்கொரு முறை மூலிகை மசால் உருண்டை தயார் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி, கோமாரி, தொண்டை அடைப்பான், சப்பை நோய் இன்ன பிற தொற்று நோய்களும் தாக்காது. சாப்பிடுகின்ற தீனி எளிதில் ஜீரணமாகும். இதனால் விவசாயிகளுக்கு தேவையற்ற செலவுகளும் பொருளாதார இழப்புகளும் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

1.அருகம்புல் 2. ஆவாரம் பூ இலை 3. வெள்ளை மற்றும் மஞ்சள் கருசலாங்கண்ணி 4. சோற்றுக்கற்றாழை 5. ஆடாதோடா 6. வாத நாராயணன் இலை 7. ஓரிதழ் தாமரை 8. செம்பருத்தி 9.தும்பை 10. அழுதாழை 11. பெரியா நங்கை 12. சிறியா நங்கை 13. அமுக்காரா 14. அம்மாள் பச்சரிசி 15. வாழைப்பூ 16. வெற்றிலை 17.பிரண்டை 18. துத்தி 19.மாவிலை 20.வல்லாரை 21.துளசி 22.முடக்கறுத்தான் 23. மணத்தக்காளி 24. புதினா 25. நெருஞ்சி 26. நெல்லிக்காய் 27. நுணா 28. பொன்னாங்கண்ணி 29.நல்வேளை 30.நாய்வேளை 31. பால்பெருக்கி 32.குப்பைமேனி 33. கோவை இலை 34. மொசு மொசுக்கை 35. கருவேப்பிலை 36. கீழாநெல்லி 37. அகத்தி 38. சரக்கொன்றை 39. நிலவேம்பு 40. வேலிப்பருத்தி 41. வெட்டிவேர் 42.மருதாணி 43. வில்வஇலை 44. விஷ்ணுகிரந்தி 45. மாதுளம் பழம் தோல் 46. தவசி முருங்கை 47. அப்பக்கோவை 48. அல்லி 49. தாமரை 50. அரசு இலை 51. வேப்பிலை 52. தூதுவாளை 53. தொட்டாச்சிணுங்கி 54. எலுமிச்சை இலை 55. கொய்யா இலை 56. ஆல் இலை போன்ற மூலிகைகள் மசால் உருண்டை தயாரிக்க தேவைப்படும்.

மேலும், 1.சுக்கு 2. மிளகு 3. திப்பிலி 4. பூண்டு 5. அகில் 6. மிளகாய் வற்றல் 7. கிராம்பு 8.ஜாதிக்காய் 9. கடுக்காய் 10. வெந்தயம் 11. அதிமதுரம் 12.சீரகம் 13. கசகசா 14. ஓமம் 15. உப்பு 16.தண்ணீர் விட்டான் கிழங்கு 17. சிறிய வெங்காயம் 18. கொத்தமல்லி விதை 19. பெருங்காயம் 20.தேங்காய் 21. பனைவெல்லம் 22. ஏலக்காய் 23. மஞ்சள்தூள் ஆகிய சமையலறைப் பொருள்களும் தேவைப்படும். மூலிகைச் செடிகளை தனியாகவும், சமையலறைப் பொருள்களை தனியாகவும் மிக்ஸி, கிரைண்டரில் இட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இரண்டையும் ஒன்றாகக் கலந்து நன்கு பிசைந்து ஆரஞ்சுப் பழ அளவிற்கு உருட்டிக் கொண்டு மஞ்சள் தூளில் பிரட்டிக் கொள்ள வேண்டும். இந்த மூலிகை மசால் உருண்டைகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கால்நடைகளுக்கு கொடுத்து வந்தால் கால்நடைகளில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

மூலிகைகளை அந்தந்த ஊர்களில் கிடைப்பதைக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். இருக்கும் மூலிகைகளைக் கொண்டே அந்த மூலிகை மசால் உருண்டைகளாய் தயார் செய்து கொள்ளலாம். மூலிகைகள் கிடைக்கும் பொழுது அவற்றை சேகரித்து, நிழலில் உலர்த்தி நன்கு காய்ந்ததும் மிக்ஸியில் இட்டு அரைத்தும் மசால் உருண்டைகளாகத் தயார் செய்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் கோவிந்த ராஜ்.

மேலும் விவரங்களுக்கு 98427 04504 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ​

http://tamil.thehindu.com/business/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/article6418177.ece?widget-art=four-rel

 

 

Link to comment
Share on other sites

மண் வளத்தை காப்பது அவசியம்!

 

விவசாயத்திற்கு தகுதி யற்ற நிலத்தையும், தகுதி யுள்ளதாக மாற்றலாம் எனக் கூறும், தமிழ்நாடு மண் மற்றும் நீர் ஆராய்ச்சி நிலைய மண்ணியல் துறை வல்லுனர் பாபு: ஒரு மண்ணில் கார, அமிலத்தன்மை, உப்புத்தன்மை போன்றவை, சரியான அளவில் இருப்பதோடு, ஊட்டச் சத்தும் மண்ணுக்கு அத்தியாவசியமானது.

 

உயர் விளைச்சல் ரகங்கள் மற்றும் அதிகள வில் ரசாயன உரங்களை பயன்படுத்து வதால், மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்து, மண் வளம் பாதிக்கப்படுகிறது. மண் வளத்தை அதிகரிக்க, வயலில் அதிக அளவு இயற்கை இடு பொருள்களை இடுவதோடு, மண் புழுக்கள் அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
 
மேலும், வயலில் கிடைக்கக்கூடிய இலை, தழைகளை வெட்டிப் போட்டால், மண்ணில் மக்கி அது உரமாக மாறும். பசுந்தாள் பயிர்களை விதைத்தால், அது மண்ணின் கட்டமைப்பையும், தன்மையையும் பாதுகாக்கும். அசோலா, பாஸ்போ, பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் உரங்களைத் தெளித்தால், அவை பயிர்களுக்கும், மண்ணுக்கும் நிறைய நன்மைகளை செய்கின்றன.
 
களர் நிலம் மற்றும் உவர் நிலம் அல்லது களர் உவர் நிலங்கள், பயிர் சாகுபடி செய்ய தகுதியில்லாத நிலங்களாக கருதப்படுகின்றன. களர் நிலமாக இருந்து, அதில் சோடியம் உப்பு அதிகமாக இருந்தால், பாதிக்கப்பட்ட நிலத்தை நன்கு உழுது, அதில் இருக்கும் சோடியம் உப்புக்குத் தகுந்த அளவு ஜிப்சத்தை கொட்டி, 48 மணி நேரம் ஊற வைத்து, அங்குள்ள நீரை வெளியேற்ற வேண்டும்.
 
இவ்வாறு, ஒரு முறை வெளியேற்றியவுடன், ஏதாவது ஒரு பயிர் செய்து, அதிக அளவில் இயற்கை உரங்களையும், தழைச்சத்தையும் இட வேண்டும். பின், அடுத்த முறையும் ஜிப்சத்தைக் கொட்டி, மேற்கூறிய முறையை செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்யும் போது, மண்ணின் உப்புத்தன்மை மாறிவிடும்.
அதேபோல், அனைத்து உப்புகளும் அதிகம் உள்ள உவர் மண்ணின் மேற்பகுதி யில், வெள்ளை வெள்ளை யாக உப்புக்கள் படிந்திருக்கும். இந்த மண், எல்லா பயிர்களையும் எரித்துவிடும் தன்மை உடையது. எனவே, வேறு ஏதாவது பகுதி யில் நாற்றுவிட்டு, நன்கு முற்றிய நாற்றை இதில் நடவு செய்யலாம். உவர் மண்ணில் எல்லா உப்புக்களும் அதிகம் உள்ளதால், அதை தனித்தனியாகப் பிரித்து, வெளியில் எடுக்க வேண்டும். இதுவும் சாத்தியமாகக் கூடிய முறை தான். இருந்தும், இந்த மண்ணை சரி செய்ய, கொஞ்சம் செலவு ஆகும்.
மேலும், ஒரே பயிரை தொடர்ந்து செய்யாமல், பயிர்களை மாற்றி செய்யும் போது, மகசூலும் அதிகமாகக் கிடைக்கும்; மண்ணின் வளமும் அதிகமாக இருக்கும். அதேபோல், வயலை கொஞ்ச நாள் தரிசாகப் போட்டு வைக்கும் போது, மண்ணில் நுண்ணுயிர்கள் அதிகமாகும்; நல்ல காற்றோட்டமும் கிடைக்கும். இதனால், அடுத்தடுத்த பருவங்களில் கூடுதல் மகசூல் பெறுவதோடு, மண்வளத்தையும் காக்கலாம்.
 
தொடர்புக்கு: 94423-44461
 
Link to comment
Share on other sites

கொத்தமல்லியை விற்பது எளிது!

 

கொத்தமல்லி கட்டு மூலம், கட்டுகட்டாக லாபம் ஈட்டுவது குறித்து கூறும் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை அபிவிருத்தி மைய இயக்குனர் கணேஷ்: நிலத்தை நன்றாக உழுது, ஏக்கருக்கு, 10 டன் தொழு உரம் இட்டு, மீண்டும் உழுத பின், மேட்டுப் பாத்திகள் அமைத்து, பாத்தியின் மீது விதைகளைப் போட்டு, மண்ணை மூட வேண்டும். ஏக்கருக்கு, 4 முதல், 5 கிலோ கொத்தமல்லி விதைகள் தேவைப்படும்.

 

கொத்தமல்லியை, சொட்டு நீர்ப் பாசன முறையிலும் பயிரிடலாம். மானாவாரியாக, கொத்தமல்லியை சாகுபடி செய்தால், ஏக்கருக்கு, 10 கிலோ விதைகள் தேவைப்படும்.விதைப்பதற்கு முன், 'பொட்டாஷியம் - டை - ைஹட்ரஜனை' ஒரு லிட்டர் நீருக்கு, 10 கிராம் வீதம் கலந்து, விதைகளை, 16 மணி நேரம் ஊற வைத்து, விதை நேர்த்தி செய்ய வேண்டும். அதன்பின், விதைகளை வெயிலில் உலர்த்தி, அவற்றை இரண்டாக உடைத்து விதைக்க வேண்டும். அப்போதுதான், விதைகள் முளைக்கும்.நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்திலும், கார அமிலத் தன்மை, ஆறு முதல் எட்டு வரை இருக்கும் மண் வகையிலும், கொத்தமல்லியை சாகுபடி செய்யலாம். 25 முதல், 28 டிகிரி வெப்பத்தில் வளரக்கூடிய இவற்றை, அனைத்துப் பருவத்திலும் சாகுபடி செய்யலாம்.விதை விதைத்த, 10முதல் 15 நாட்களுக்குள், கொத்தமல்லிச் செடிகள்முளைத்து விடும்.

 

விதைத்த மூன்றாம் நாளும், அதன்பின், வாரம் ஒரு முறையும் செடிகளுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 30வது நாள், தழைச்சத்து அடங்கிய மருந்தைத் தெளிக்க வேண்டும்.கொத்தமல்லி சாகுபடியில், அசுவனிப்பூச்சி தென்பட்டால், 'மீதைல் டெமட்டான்' மருந்தையும், பயிர்களில் வேர் அழுகல் நோய் தென்பட்டால், 'ட்ரைக்கோடர்மாவிரிடி, சூடோ மோனஸ், அசோஸ்பைரில்லம்' போன்ற மருத்துகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். நோய் தாக்கிய செடிகளை, வேரோடு பிடுங்கி விடுவது நல்லது.

 

சாம்பல் நோயை கட்டுப்படுத்த, வேப்பெண்ணெய் மற்றும் கந்தகப் பொடி அல்லது பஞ்ச காவ்யா கரைசலையும் செடிகளுக்குத் தெளிக்கலாம். மேலும், 15 நாட்களுக்கு ஒரு முறை, களையெடுக்க வேண்டும்.மொத்தத்தில், 30 முதல் 45 நாட்கள் வரை வளர்ந்த கொத்தமல்லிச் செடிகளிலிருந்து, ஏக்கருக்கு, 3 முதல், 4 டன் வரை கொத்தமல்லித் தழைகளையும், 90 நாட்கள் வரை வளர்ந்த செடிகளிலிருந்து, 200 முதல் 300 கிலோ வரை, கொத்தமல்லி விதைகளையும் அறுவடை செய்யலாம்.சமையலில் கொத்தமல்லி முக்கிய அங்கம் வகிப்பதோடு, கொலஸ்ட்ரால் மற்றும் நீரழிவு நோய்க்கு சிறந்த மூலிகையாக திகழ்வதால், இதற்கு, 'டிமாண்ட்' அதிகம். அதனால், மிக எளிதாக சந்தைகளில் கொத்தமல்லியை விற்பனை செய்து விடலாம்.

 

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Link to comment
Share on other sites

சோலார் பவர் விவசாயத்தில் சாதித்த விவசாயி: இரு மாதங்களில் ரூ. 50 ஆயிரம் லாபம்
 
Tamil_News_large_107996920140927011802.j
 
அருப்புக்கோட்டை:வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆலோசனைப்படி, "சோலார் பவர்' பம்ப் செட் விவசாயத்தில், காய்கறிகள் பயிரிட்டு, இரு மாதங்களில் ரூ. 50 ஆயிரம் லாபம் ஈட்டி சாதித்துள்ளார், காரியாபட்டி அருகே மேல துலுக்கன்குளத்தை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன்.
 
விருதுநகர் மாவட்ட விவசாயம் மானாவாரி விவசாயம். மழை பெய்தால் தான் விவசாயம் நடக்கும். இருந்தபோதிலும் கிராமங்களில் தங்கள் தோட்டங்களில் உள்ள கிணறுகளில் இருக்கின்ற ஓரளவு தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக, பம்ப் செட் மூலம் தண்ணீர் இறைக்க முடியாமல் போகிறது. இதை கருத்தில் கொண்டு, அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் தமிழ்நாடு வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பால்பாண்டியன் தலைமையில், விஞ்ஞானிகள் ஜெகதீஸ்வரி, ராமகிருஷ்ணன், தீபாகரன், வீரணன், அருண்கிரிதாரி, குமார் ஆகியோர் கொண்ட குழு, மாவட்டத்தில் உள்ள விவசாய சூழ்நிலைகளையும், நிலங்களையும் பார்வையிட்டனர். விவசாயிகளுக்கு, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
 
இதன்படி, காரியாபட்டி அருகே மேல துலுக்கன்குளத்தை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன், விஞ்ஞானிகள் ஆலோசனை பெற்று, தனது 15 ஏக்கர் நிலத்தில், சூரிய ஒளி மூலம் மின்சாரத்தில் இயங்கும் பம்ப் செட் மோட்டாரை பயன்படுத்தி லாப நோக்கத்துடன் விவசாயம் செய்து வருகிறார். நெல், கடலை பயிர்களை விதை பண்ணையம் செய்து வேளாண் துறைக்கு அளித்து வருகிறார். கத்தரி, தக்காளி, வெண்டை, சீனி அவரக்காய் காய்கறிகளையும் பயிரிட்டுள்ளார். கடந்த இரு மாதங்களில் 25 சென்ட் நிலத்தில் காய்கறிகளை பயிரிட்டு 50 ஆயிரம் ரூபாய் வரை விற்று லாபம் பார்த்துள்ளார்.
 
ராமகிருஷ்ணன் கூறுகையில்,"" வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கூறிய ஆலோசனை கேட்டு, சோலார் பவர் மூலம் இயங்கும் பம்ப் செட் வாயிலாக விவசாயத்தில் நல்ல பலன் கிடைக்கிறது. சீசனுக்கு தக்கவாறு, காய்கறிகளை பயிரிட்டு, நல்ல நிலைக்கு விற்று வருகிறேன். தோட்டம் வைத்துள்ள விவசாயிகள் மின்சாரத்தை மட்டும் நம்பி இருக்காமல், சோலார் பவர் பயன்படுத்தி, விவசாயம் மேற்கொள்ளலாம்,'' என்றார்.இவரை தொடர்பு கொள்ள 95977 16650.
 
Link to comment
Share on other sites

நிலத்தின் தன்மைக்கேற்ப திட்டமிடுங்கள்!
 
குறைவான தண்ணீ ரில், அதிக விளைச்சலை அள்ளும் நெல் சாகுபடி முறைகள் குறித்து கூறும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மண் மற்றும் நீர் ஆராய்ச்சி மைய தலைவர், முனைவர் வெ.ரவி: திருந்திய நெல் சாகுபடி முறை மூலமாக, குறைந்த அளவு நீர் மற்றும் குறைந்த அளவு நாற்றுகளைப் பயன்படுத்தி, அதிக அளவிலான மகசூல் பெறலாம்.இந்த முறையில் ஒவ்வொரு நாற்றுக் கும், 25க்கு 25 செ.மீ., இடைவெளி இருக்கு மாறு, 15 நாட்கள் வளர்ச்சி அடைந்த நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். மேலும், அதிக அளவு நாற்றுகளைப் பயன்படுத்தாமல், ஒற்றை நாற்றை நடவு செய்தால் போதுமானது.இதற்கு, நிலம் சமமானதாக இருக்க வேண்டும். இதனால், களை அதிகம் மண்டாது.
 
இந்த முறையில் ஒரு ஏக்கருக்கு, இரண்டு கிலோ விதை போதுமானது. அதேபோல், நாற்றங்கால் பரப்பும் குறைவு என்பதால், விதைச் செலவு, நாற்று பறிக்கும் செலவு குறையும். மேலும், நடவில் நாற்றுகளுக்கிடையே அதிக இடைவெளி இருப்பதால் அதிக துார்கள் வெடித்து, அதிக மகசூல் கிடைக்கிறது. நீர் அதிகம் கிடைக்காத கடைமடைப் பகுதிகளுக்கு ஏற்றது, புழுதி மண்ணில் நேரடி நெல் விதைப்பு முறை; நன்கு புழுதியடையும்படி நிலத்தை உழவு செய்து, பின் விதைப்பானைக் கொண்டு நெல்லை விதைக்க வேண்டும். இவ்வாறு விதைப்பதற்கு, ஏக்கருக்கு, 10 முதல் 15 கிலோ விதை நெல் போதும்.தண்ணீர் விடும்போது, நெல்லுடன் களைச் செடிகளும் அதிக அளவில் முளைக்கும் வாய்ப்புள்ளதால், சரியான முறையில் களை கட்டுப்பாடு செய்ய வேண்டும். இந்த முறையில் விதைக்கும் போது, விதைச் செலவு, நாற்றங்கால் செலவு, நடவுச் செலவு, தண்ணீர் செலவு அனைத்தும் குறைகிறது; நடவுக்கு இணையாக மகசூலும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.சேற்றில் நேரடி நெல் விதைப்பு மூலம், ஓரளவு தண்ணீர் வசதியுள்ளவர்கள், நாற்றங்கால் பதத்திற்கு வயலை உழுது, விதைப்பான் மூலம் நேரடியாக விதைத்து விடலாம். இந்த முறையிலும், களைச்செடிகள் அதிகம் உண்டு. மற்ற நடவு முறைகளுக்கு இணையாக, மகசூல் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.வேளாண் பொறியியல் துறை மூலம், குறைந்த வாடகைக்கு, புழுதி மண்ணில் விதைக்கும் இயந்திரம், சேற்றில் விதைக்கும் விதைப் பான், லேசர் நிலம் சமன்படுத்தும் இயந்திரங்கள் கிடைக்கின்றன.கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கான, சொட்டு நீர் பாசன முறையிலான நெல் சாகுபடி முறை ஆய்வு நிலையில் உள்ளது.
 
Link to comment
Share on other sites

ஒரு ஏக்கரில் 3,875 கிலோ நெல் விளைச்சல்: கால் கிலோ விதையில் நடவு நட்ட பெருமாளின் சாதனை

 

perumal_2135370f.jpg

ஆர். பெருமாள்

ஒரு ஏக்கரில் நெல் நடவு செய்ய கால் கிலோ விதை நெல் மட்டும் பயன்படுத்தும் விவசாயி ஆர். பெருமாள் பற்றிய கட்டுரை கடந்த ஜூன் 25-ம் தேதி `நிலமும் வளமும்’ பகுதியில் வெளியானது. `தி இந்து’ தமிழ் நாளேட்டை தொடர்ந்து மேலும் சில பத்திரிகைகளில் கால் கிலோ விதை நெல்லை மட்டும் பயன்படுத்தும் பெருமாளின் சாகுபடி தொழில்நுட்பம் தொடர் பான செய்திகள் வெளிவந்தன.

 

இவற்றைப் படித்த தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இவரது நெல் வயலுக்கு நேரடியாகவே வந்து, இவரது சாகுபடி தொழில்நுட்பத்தின் சிறப்பை நேரில் பார்த்துச் சென்றதாக பெருமாள் தெரிவிக்கிறார்.

 

நாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள ஆலங்குடி கிரா மத்தில் உள்ள அவரது நெல் வயலுக்கு நேரில் சென்று பார்க்கும் போதுதான் அவரது சாகுபடி தொழில்நுட்பம் எவ்வளவு மேன்மையானது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.

 

கால் கிலோ விதை நெல் விதைக்க ஒரு சென்ட் நாற்றங்காலைப் பயன்படுத்துகிறார். அந்த ஒரு சென்ட் நிலத்தில் விதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவலாக விதைக்கிறார். நன்கு இடைவெளி விட்டு முளைக்கும் அந்த நாற் றுக்கள் நிறைய தூர்களுடன் செழித்து வளர்கின்றன. 25 நாள்களுக்குப் பிறகு நடவு நடுகிறார். ஒரு நெல்லிலிருந்து முளைத்து வளர்ந்த தூர்களை மட்டும் ஒரு பயிராக நடவு செய்கிறார். அவர் பின்பற்றும் மிக முக்கிய தொழில்நுட்பம் ஒரு பயிருக்கும், இன்னொரு பயிருக்கும் இடையே 50 செ.மீ. இடைவெளி விட்டு நடுவதுதான். பொதுவாக இப்போதும் பல ஊர்களில் நாற்றுகளை மிக நெருக்கமாக நடும் போக்குதான் உள்ளது. ஆனால் பயிர்களுக்கு இடையே 50 செ.மீ. இடைவெளி விட்டு நடவு செய்யும் பெருமாளின் தொழில்நுட்பம் பற்றி கூறினால், அதனை பலரும் நம்ப மறுக்கின்றனர். இவ்வாறு நடவு செய்தால் விளைச்சல் குறையும் என்றே பலரும் கருதுகின்றனர்.

 

ஆனால் யாரும் எதிர்பாராத விளைச்சல் கிடைக்கும் என்பதை பெருமாள் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு ஒரு ஏக்கரில் 3 ஆயிரத்து 875 கிலோ மகசூல் அவருக்கு கிடைத்துள்ளது. அவரது அறுவடையை சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பலர் நேரில் சென்று பார்த்துள்ளனர்.

 

இது பற்றி பெருமாள் கூறியதாவது: “எனது சொந்த அனுபவத்தில் இருந்தே இந்த தொழில்நுட்பத்தை கண்டறிந் தேன். கடந்த 10 ஆண்டு காலமாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். தொடக்கத்தில் மற்றவர்களைப் போலவே நானும் ஏக்கருக்கு 30 கிலோ விதை நெல்லைதான் பயன்படுத்தினேன். அதன் பிறகு 15 கிலோ, 10 கிலோ, 5 கிலோ, 2 கிலோ எனக் குறைத்து கடந்த சில ஆண்டுகளாக ஏக்கருக்கு கால் கிலோ விதை நெல்லை மட்டும் பயன்படுத்தி வருகிறேன்.

மேலும், 50 செ.மீ. இடைவெளி விட்டு நடும்போது சூரிய ஒளி நன்றாக நிலத்தில் படுவது, பயிர்களுக்கு இடையே நல்ல காற்றோட்டம், புகையான் போன்ற பூச்சித் தாக்குதல் அறவே இல்லாதது என பல நன்மைகள் கிடைக்கின்றன. மேலும் பயிர்கள் நன்கு தாராளமாக வேர் விட்டு வளர்வதற்கு ஏற்ற நிலப் பகுதி கிடைக்கிறது. இதனால் ஒவ்வொரு விதை நெல் பயிரிலிருந்தும் ஏராளமான தூர்கள் வெடிக்கின்றன.

 

இந்த ஆண்டு எனது வயலில் ஒவ்வொரு நெல்லில் இருந்து முளைத்த பயிரிலும் குறைந்தது 70 முதல் அதிகபட்சம் 120 தூர்கள் வரை வெடித்திருந்தன. ஒவ்வொரு நெற்பயிரிலும் 60 முதல் 110 கதிர்கள் கிடைத்தன. ஒவ்வொரு கதிரிலும் 100 முதல் 350 நெல் மணிகள் வரை இருந்தன. மொத்தத்தில் ஒரு ஏக்கரில் 3 ஆயிரத்து 875 கிலோ மகசூல் கிடைத்து” என்கிறார்.

இந்த மகத்தான சாதனையை புரிந்துள்ள பெருமாளின் வயலுக்கு நேரில் சென்று பார்த்தவர்களில் ஒருவரான மன்னார்குடியைச் சேர்ந்த விவசாயியும், `காவேரி’ என்ற விவசாயிகளுக்கான விழிப்பு ணர்வு அமைப்பின் துணைத் தலை வருமான வ.சேதுராமன் கூறியது:

“50 செ.மீ. இடைவெளியில் நடவு என்று சொன்னவுடன் முதலில் நானும் நம்ப மறுத்தேன். நேரில் சென்று விளைச்சலைப் பார்த்த பிறகுதான் நம்ப முடிந்தது. பொதுவாக இப்போது ஒற்றை நாற்று சாகுபடி பரவலாகி வருகிறது. ஆனால் ஒற்றை நாற்று சாகுபடியில் 15 நாளில் நடவு செய்கிறார்கள். இளம் நாற்றாக இருப்பதால் பயிர்கள் அழிவு என்பதும் அதிகமாக உள்ளது.

 

ஆனால் விவசாயி பெருமாள் 25 நாளிலிருந்து 40 நாள் வரை நடவு செய்கிறார். ஒரு நாற்று என்பதற்கு பதிலாக ஒரு நெல்லிலிருந்து முளைத்து வந்த தூர்களை ஒரு பயிராக நடவு செய்கிறார். 50 செ.மீ. இடைவெளி என்பதுதான் அதிக விளைச்சலுக்கு முக்கிய காரணம். அவரது வயலில் நான் சில பயிர்களை எண்ணிப் பார்த்தேன். ஒவ்வொரு பயிரிலும் சுமார் 120 தூர்கள் வரை இருந்ததை அறிய முடிந்தது.

 

நான் அறிந்த வரை ஏக்கருக்கு 2 ஆயிரத்து 500 கிலோ மகசூல் என்பதுதான் பெரும் விளைச்சலாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் ஏக்கருக்க 3 ஆயிரத்து 875 கிலோ மகசூல் என்பது பெருமாளின் மிகப் பெரும் சாதனை.

அவரது இந்த சாதனையையும், பல ஆண்டு கால தனது சொந்த அனுபவத்தில் அவர் கண்டறிந்த இந்த தொழில்நுட்பத்தையும் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை அங்கீகரிக்க வேண்டும். விவசாயி பெருமாளை உரிய வகையில் கவுரவப்படுத்த வேண்டும். இதன் மூலம் அவரது தொழில்நுட்பத்தை பரவலாக்க முடியும். நமது மாநிலத்தில் நெல் உற்பத்தியையும் அதிகப்படுத்த முடியும்” என்றார் சேதுராமன்.

 

மேலும் விவரங்களுக்கு 94868 35547 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

http://tamil.thehindu.com/business/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3875-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article6464024.ece?widget-art=four-rel

 

 

Link to comment
Share on other sites

லாபம் தரும் சுய தொழில் கால்நடை வளர்ப்பு: அனுபவ பகிர்வில் நெகிழும் விவசாயிகள்

 

மழையின்மை, நகரமயமாதல், இடம்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 20 ஆண்டுகளாக, விவசாய நிலங்கள் சுருங்கி கொண்டே வருவது கண்கூடு. சேற்றில் கால் பதிக்க தயங்கும் இளைய சமுதாயம், சோற்றுக்காக, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட துரித உணவகத்தை நோக்கியே படையெடுக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், விவசாயமும், கால்நடை வளர்ப்பும், படங்களால் காட்சிப்படுத்த வேண்டிய நிலை வரும்.

 
இதை மாற்றவும், இளைய சமுதாய யாத்தினரை, கால்நடை வளர்ப்பில் ஈடுபடுத்தவும், சரவணம்பட்டி, கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில், பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டுக்கோழி, மாட்டுப்பண்ணை, ஆடு வளர்த்தல், காடை வளர்ப்பு என, மாதந்தோறும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதோடு, ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறது.தவிர, பயிற்சி பெற்ற விவசாயிகள், லாபகரமான முறையில் தொழில் செய்வதால், தங்களுக்கான சந்தைப்படுத்துதல் விலையை, தாங்களே நிர்ணயித்து கொள்ளவும், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், 'தனுவாசு கால்நடை வளர்ப்போர் சங்கம்' உருவாக்கப்பட்டது. இதன் உறுப்பினர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி, கால்நடை பயிற்சி மையத்தில் நடந்தது. அதில், கீரணத்தம் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி, பகிர்ந்து கொண்டவை...
 
''பண்ணை நடத்த, கொஞ்சம் விவசாய பூமியும், உழைக்கணும்கிற எண்ணமும் தான் மூலதனம். நான், ஆரம்பத்தில் தனியார் பஞ்சாலையில் சொற்ப ஊதியத்திற்காக பணிபுரிந்தேன். பின், ஐந்து மாடுகளை கொண்டு, சிறிய பண்ணை ஆரம்பித்தேன். அதிக தீவன செலவு, சினைப்பிடிக்காமல் இருத்தல், நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பண்ணையை மூட நினைத்தேன்.அப்போது, நண்பருடன் ஒருமுறை, பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட போதுதான், பல்வேறு யுக்திகளை அறிந்து கொள்ள முடிந்தது; பண்ணை நடத்த ஆரம்பித்தேன். மாடுகளின் தீவனத்துக்காக, 'கோ-4' ரக புல் கரணைகளை பயிரிட்டு, மாதிரி தீவன பண்ணை உருவாக்கியதோடு, கலப்பு தீவனம் தயாரித்தல், தாது உப்பு கலவை பயன்படுத்துதல் என, தீவனத்துக்கு முக்கியத்துவம் அளித்ததால், மாடுகள் ஆரோக்கியமாக வளர ஆரம்பித்தன.முறையாக தடுப்பூசி போடுதல், சுகாதார முறையில் பராமரித்தல் உள்ளிட்டவற்றால், தற்போது, 1,000மாடுகளை கொண்டு, தினசரி, 1,000 லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறேன். வீட்டில் இருப்போரின் உதவியே, மாடுகள் பராமரிக்க போதுமானது. அக்கறையும், ஈடுபாடும் இருப்பதால், பண்ணைத்தொழிலால் நிறைய காசு பார்க்க முடிகிறது. மாடுகளின் சாணத்தை கொண்டு, தயாரிக்கப்படும் மண்புழு உரம் வீட்டுத்தோட்டத்துக்கு பயன்படுவதோடு, விற்பனையும் செய்கிறோம்,'' என்றார்.
 
இப்படியாய், அனுபவ பகிர்வில், ஏராளமானோர் கலந்து கொண்டு, தொழில்நுட்ப யுக்திகள் குறித்து பகிர்ந்து கொண்டனர். இச்சங்கத்தில் இளைஞர்களது எண்ணிக்கை வெகு குறைவு. பட்டங்களை சுமந்து கொண்டு, சம்பந்தமில்லா வேலைக்காக காத்திருக்கும், இளைஞர்கள் கால்நடை வளர்த்தால், பெரும் முதலீட்டாளர்களாக முடியும் என்பதே பலரது கருத்து.கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் சிவக்குமார் கூறுகையில், ''கால்நடை வளர்ப்பு, மிகுந்த லாபம் தரும் சுயதொழில். இதில், இளைஞர்களது பங்கை இணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒருமுறை பயிற்சிக்கு வந்தாலே, அடுத்தடுத்த பயிற்சி வகுப்புகள் குறித்த தகவல்கள், கால்நடை பண்ணை அமைப்பதற்கான உதவிகள், தடுப்பூசிகள் என, அனைத்து ஏற்பாடுகளும், இலவச ஆலோசனை பெயரில் செய்து தரப்படும். எந்த நேரமும், பண்ணையாளர்கள் தொடர்பு கொண்டு, தங்களுக்கான சந்தேகங்கள், ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். 'விவசாய பூமியும், பண்ணை வைப்பதற்கான சூழலும் இருக்கும் பட்சத்தில், இளைஞர்கள் வேலை தேடி அலைய வேண்டிய அவசியமே இருக்காது,'' என்றார்.
 
Link to comment
Share on other sites

குறைந்த நீரில்அதிக விவசாயம்!
 
காய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர் கொடுத்தால் தான் விளைச்சல் அபரிமிதமாக இருக்கும் எனக் கூறும், தமிழ்நாடு மண் மற்றும் நீர் ஆராய்ச்சி நிலைய நீர் மேலாண்மை வல்லுனர் முனைவர் பொற்பாவை: 
நமக்குக் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி, அதற்குத் தகுந்த பயிர்களைத் தேர்வு செய்து, பயிர் செய்தால், நல்ல மகசூல் எடுக்க முடியும்.உதாரணத்திற்கு, 1 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய தேவையான நீரை வைத்து, 3 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம். இதுபோல கிடைக்கும் தண்ணீருக்கு ஏற்ப திட்டமிட்டு விவசாயம் செய்யும்போது, விவசாயம் லாபகரமான தொழிலாக மாறும்.மேலும், நமக்குக் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி, அதற்கேற்ப நாம் நடவுமுறையைப் பயன்படுத்தலாம்.
 
திருந்திய நெல் சாகுபடியில் நடவு செய்யும்போது, நாற்றங்கால், நடவு போன்றவற்றில் பெருமளவு தண்ணீர் தேவை குறையும்; அதிக லாபமும் ஈட்ட முடியும்.டெல்டா மாவட்டங்களில் எப்போதெல்லாம் தண்ணீர் குறைவாக வந்ததோ, அப்போதெல்லாம் விளைச்சல் அதிகமாக இருந்திருக்கிறது. நீர்க்கட்டு என்பதுதான், நெல்லுக்கு தாரக மந்திரம். நெல் நடவு செய்த வயலில் தூர் கட்டும் வரை, 2 முதல் 2.5 செ.மீ., உயரம் தண்ணீர் கட்டினால் போதும். தூர் கட்டும் பருவத்தில் நீரை வடிகட்ட வேண்டும்; அப்போதுதான் அதிக அளவில் தூர் வெடிக்கும்.அதுபோல, பூ பூக்கும் சமயத்தில், பூ பூப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பும், பூத்த பின்பும், 5 செ.மீ., தண்ணீர் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல முறையில் பூக்கள் பூத்து, பால் வைக்கும்.அதன் பின், தொடர்ச்சியாக, 2 செ.மீ., உயரம் தண்ணீர் இருந்தால் போதுமானது.
 
அதுபோல அவ்வப்போது தண்ணீரை வடித்து, வயலை நன்கு காயவிட்டு, பின் தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும்; அப்போதுதான் அதிக அளவில் விளைச்சல் இருக்கும்.தொடர்ச்சியாக வயலில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது, பயிரின் வேர்களுக்கு காற்றோட்டம் செல்வதில்லை. மேலும், தண்ணீரை வடித்து வடித்துக் கட்டும்போது, அதிக விளைச்சல் கிடைக்கும்.தண்ணீர் சிக்கனத்திற்கு உளுந்து சிறந்த பயிராக உள்ளது; இது, 65 நாட்கள் பயிர் தான். இதற்கு, 300 மி.மீ., தண்ணீர் போதுமானது.கரும்பு சாகுபடி செய்யும்போது, தண்ணீர் சிக்கனத்திற்காக சொட்டுநீர்ப் பாசனம் செய்யலாம். அதுபோல தென்னை, வாழை போன்ற நீண்ட காலப் பயிர்களுக்கும், சொட்டுநீர்ப் பாசன முறை சிறந்த பயன் தருகிறது.இதுபோல சிறு தானியங்கள், காய்கறிகள், பூ வகைகள் போன்றவற்றை மாற்றுப்பயிராக செய்யும்போது, குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு அதிக அளவில் விவசாயம் செய்ய முடியும்.
 
Link to comment
Share on other sites

கீரையில் மாதம் ரூ.45 ஆயிரம்: சிவகங்கை சாதனை விவசாயி

 

E_1412677790.jpeg

 

முன்னோர்களிடம் கீரையை உணவில் அதிகம் சேர்க்கும் பழக்கம் இருந்தது. இதற்காக, வீட்டு தோட்டங்களிலேயே முருங்கை, அகத்தி, சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரைகளை பயிரிட்டனர். காலப்போக்கில், வீட்டு தோட்டங்கள் மறைந்து, உணவில் கீரை சேர்க்கும் பழக்கம் குறைந்தது. இதனால் உடலில் பாதிப்பு அதிகரித்தது. டாக்டர்களின் ஆலோசனைப்படி, இன்றைக்கு "வாக்கிங்' செல்வோர், வீட்டிற்கு திரும்பும் போது, "கீரை கட்டுகளை' வாங்கிச் செல்கின்றனர்.
அதற்கேற்றார் போல், சிவகங்கை அருகே மேலசாலூரை சேர்ந்த விவசாயி பி.போஸ், தனது நிலத்தில் முற்றிலும் கீரை பயரிட்டு, லாபம் பார்த்து வருகிறார்.
 
அவர் கூறியதாவது; கடும் வறட்சிக்கு இடையே கிணற்றில் உள்ள தண்ணீரை வைத்து, கீரை பயிரிட்டு வருகிறேன். நான் மட்டுமின்றி, எனது சகோதரர்களும் சேர்ந்து, ஒட்டு மொத்தமாக 1.5 ஏக்கரில் கீரை நடவு செய்துள்ளோம். நான் மட்டுமே 50 சென்ட்டில்,200 பாத்தி அமைத்துள்ளேன். ஒரு பாத்திக்கு 50 கிராம் விதையை தூவ வேண்டும். விதை தூவிய பின், தினமும் தண்ணீர் பாய்ச்சுவதோடு, களையெடுப்பு, உரம், பூச்சி மருந்து தெளித்து, "கண் இமையை' பராமரிப்பது போல் முறையாக கவனித்து வரவேண்டும்.
ஒரு மாதத்திற்கு பின் கீரை நன்கு வளர்ந்து, அறுவடைக்கு தயாராகும். இங்கு தண்டுகீரை, அரைக்கீரை, சிறு கீரை, பாலைக்கீரை, பருப்பு கீரை, வெந்தயகீரை, புளிச்சகீரை, பொன்னாங்கண்ணி கீரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை போன்று, மருத்துவ குணமுள்ள கீரைகளை அதிகளவில் பயிரிட்டுள்ளேன்.
மாதம் ரூ.45 ஆயிரம்: நாள் ஒன்றுக்கு, 300 முதல் 500 கட்டு (ஒரு கட்டு 250 கிராம்)அறுவடை செய்து விற்பேன். ஒரு கட்டு ரூ.5க்கு விற்கிறது. இதன் மூலம், நாள் ஒன்றுக்கு ரூ.2,500 வருவாய் கிடைக்கும். உரம், பூச்சி மருந்து, விவசாய கூலியாட்கள் சம்பளம் என்ற விகிதத்தில் ரூ.1,000 செலவு போக, தினமும் கீரை மூலம் ரூ.1,500 வீதமும், மாதம் ரூ.45 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். நல்ல மழை பெய்தால் இன்னும் அதிக நிலங்களில் கீரை பயிரிடலாம், என்றார்.
 
ஆலோசனைக்கு- 97869 48567. 
என்.வெங்கடேசன், 

 

சிவகங்கை.

 

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22239&ncat=7

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான பயிர்களைப் பற்றி, நல்ல தகவல்களை திரட்டித் தரும் ஆதவனுக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

ஆரோக்கிய அறுவடைக்கு வழி காட்டும் வீட்டுத் தோட்டம்

 

garden_2143452f.jpg

வீட்டுத் தோட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன்

மக்களின் ஆரோக்கிய உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் வீட்டுத் தோட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.வீட்டு முற்றத்தில், புழக் கடையில், மாடியில் தோட்டம் அமைக்க வழிகாட்டி வருகிறார் ஓய்வு பெற்ற வேளாண்மை அதிகாரி ஒய்.ராஜகுமார்.

 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த ராஜகுமாரை ஒரு காலைப் பொழுதில் சந்தித்தோம்.“தூத்துக்குடி மாவட்ட தோட்டக் கலை துணை இயக்குநராக பணியாற்றி ஒரு ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றேன். ஓய்வுக்கு பின்பு வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

இயற்கை வழி வேளாண்மையில் வீட்டுத் தோட்டம் அமைத்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். வீட்டு தோட்டம் அமைக்கும் போது முன்புறத்தை அழகு பூச்செடிகளுக்கு ஒதுக்க வேண்டும். அதிக இடமிருந்தால் சிறிய பாத்திகளாக பிரித்து காய்கறி சாகுபடி செய்யலாம். பாதை ஓரங்களில் கீரைவகை காய்கறிகளை வளர்க்கலாம். காய்கறி தோட்டத்தை சுற்றிலும் வேலி அமைத்து அதில் படரும் கொடிவகை காய்கறி பயிர்களான பாகல், கோவைக்காய், பிரண்டை, தூதுவளை, பீர்க்கு, புடல் போன்றவைகளை பயிர் செய்யலாம். இது உயிர் வேலியாகவும் உபயோகப்படும். வீட்டுத் தோட்டம் அமைக்கும் முன்பு மண்ணை நன்கு பக்குவப் படுத்த வேண்டும்.அடியுரமாக தொழுவுரம், மக்கிய இலை, தழைகளை போட வேண்டும்.

 

தாவரங்களின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி அவசியம். அதனால் நிழல் தரும் மரங்கள் அருகில் இருக்கக் கூடாது. தோட்டத்தில் நாம் பாய்ச்சும் தண்ணீரோ, மழை நீரோ தேங்கும் நிலையில் இருக்கக் கூடாது. எளிதில் வடிந்து ஓடும் வகையில் அமைக்க வேண்டும். பாத்திகளை மேடாக அமைக்க வேண்டும்.

 

காய்கறி தோட்டங்களை பொறுத்தவரை 15 நாள்களுக்கு ஒருமுறை உரம் இட வேண்டும். மண்புழு உரம், கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றை ஒன்றாக கலந்து செடி ஒன்றுக்கு ஒருபிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு மண்ணை கொத்தி விட வேண்டும்.

 

இடையிடையே பஞ்சகவ்யா வளர்ச்சியூக்கியையும் தெளிக்க வேண்டும். திட்டமிட்டு காய் கறிகளை நடவு செய்தால் வீட்டுக்கு தேவையான காய்கறி களை நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம். வீட்டு முன்பு இடம் இல்லாதவர்கள் மாடியிலும் மாடித் தோட்டம் அமைக்கலாம். பொதுவாக இப்போது சந்தைக்கு வரும் காய்கறிகள் பெரும்பாலும் ரசாயனத் தன்மை நிறைந்ததாக உள்ளது. உணவே மருந்து என்று இருந்த நிலை மாறி, இப்போது ரசாயன உரங்களின் பெருக்கத்தினால் சாப்பிட்ட உணவுக்கு மருந்து தேடி அலையும் சூழல் ஏற்பட்டுவிட்டது.

உலகத்துக்காக இல்லா விட்டாலும், அவரவர் உடல் நலனில் அக்கறை கொண்டவர்கள் இயற்கை முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமும் கூட” என்று அழுத்தமான வார்த்தைகளில் முடிக்கிறார் ராஜகுமார்.​

 

http://tamil.thehindu.com/business/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6479158.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

இயற்கை வழியில் மலர் சாகுபடி: பெரம்பலூர் விவசாயி ஆறுமுகம் சாதனை

 

flower_2143458h.jpg
தனது சம்பங்கி தோட்டத்தில் விவசாயி ஆறுமுகம்

இயற்கை வேளாண்மை என்றாலே உணவுப் பயிர்கள்தான் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறார் பெரம்பலூர் ஆறுமுகம். அவர் ஈடுபடிருப்பது அங்கக மலர் சாகுபடியில்.

ரசாயன உரம், பூச்சிக்கொல்லி இவையற்ற இயற்கை வேளாண் மையில் விளைந்த தானியம், காய் கனிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது கண்கூடு. ஆனால் மலர் சாகு படிக்கு ஆறுமுகம் இயற்கை வேளாண் மையை நாடியதிலிருந்து வேளாண் ஆர்வலர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

பெரம்பலூரை அடுத்த எளம் பலூரில் மலர்ச்சியோடு சம்பங்கி வயலில் மலர்களை கொய்து கொண்டிருந்தார் ஆறுமுகம், “உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது என்பதால் இயற்கை வேளாண்மையில் உணவு பயிர்களை சாகுபடி செய்வதில் அர்த்தமுண்டு. ஆனால், மலர் சாகுபடியில் அதுபோன்ற அவசியம் எதுவும் இல்லையே என்று என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள்.

ஆனால் எனது வெற்றிகரமான அனுபவம் சொல்வதெல்லாம் எந்தவொரு சாகுபடி என்றாலும் அது இயற்கை வழிவந்தால் மட்டுமே உழவனுக்கும் நுகர்வோ ருக்கும் உண்மையான பலனைத் தர முடியும் என்பதுதான்.

இதே சம்பங்கி மலர் சாகுபடியில் ஈடுபடும் ரசாயனங்களைப் பயன்படுத்தும் ஒரு விவசாயி ரூ1000 செலவழித்தால் ரூ. 1100 மட்டுமே கிடைக்கும். ஆனால், நான் மாதம் 4 கிலோ வெல்லம், சிறுதானிய மாவு தவிர்த்து, உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாக செலுத்தும் எனக்கு ரூ.500 லாபமாகவே கிடைக்கிறது” என்கிறார் ஆறுமுகம்.

அவர் மேலும் கூறும்போது, “2 சால் உழவோட்டி, சாம்பல் சத்து, தொழு உரம் ஆகியவற்றை ஏக்கருக்கு 8 யூனிட் அடித்தேன். பின்னர் புழுதி உழவோட்டி, கரை பிடித்ததும் மேட்டுப்பாத்தி அமைத்து அதில் சம்பங்கி கிழங்கு நட்டேன். இணை சாகுபடியாக உளுந்து, பாசிப்பயறு, கொத்துக்கடலை நடலாம். ஏனெனில் சம்பங்கி பூ காண 4 மாதமாகும் என்பதால் அதுவரை 3 மாதங்களுக்கு இந்த ஊடு பயிர்கள் கைகொடுக்கும். இவை இருக்கும்போது உயிர் மூடாக்காவும் பயன்படும்.

உளுந்து செடிகளை பிடுங்கி வயலிலேயே போடுவதன் மூலம் சிதைந்த மூடாக்காகவும் பலன் கொடுக்கும். களையை கட்டுப் படுத்த, மண்ணின் ஈரப்பதத்தை தேக்க, நுண்ணுயிர் பெருக்க, மொத்தத்தில் மண் உயிர்ப்போடு இருக்க இந்த மூடாக்குகள் உதவும்.

 

5 முதல் 12 மாதங்கள் வரை ஏக்கருக்கு தினசரி ஒன்றிரண்டு கிலோவாக மலர் மகசூல் கிடைக்கும். 18 மாதங்களுக்குப் பிறகு 25 கிலோ வரை மகசூல் உயரும். உள்ளூர் மலர் சந்தையில் சராசரியாக கிலோ சம்பங்கிக்கு ரூ. 40 கிடைக்கிறது. மலர் மாலை வியாபாரம் சுத்தமாக படுத்துக்கொண்டாலும் கூட, வாசனை திரவிய தொழிற் சாலைகளுக்கு அப்படியே அனுப்பி விடலாம் என்பதால் சம்பங்கி மலர் சாகுபடியில் வருமான இழப்புக்கு இடமில்லை.

 

வேர் வழி உணவூட்டமாக சாணம், கோமியம், வெல்லம், சிறுதானிய மாவு உள்ளடக்கிய ஜீவாமிர்த கரைசலை நானே தயாரித்து பாசன நீரில் கலந்து விடுவேன். அதே போல இலைவழி உணவூட்டமாக பஞ்சகவ்யம் தயாரித்து தருகிறேன்.

இதே சம்பங்கி சாகுபடியை ரசாயன வழியில் மேற்கொள்ளும் சக விவசாயிகளின் நிலத்தையும் கவனித்து வருகிறேன். இயற்கை வேளாண்மை வறட்சிக்கு ஈடுகொடுக்கும் என்பதால் அவர்களை போல தாராள பாசன நெருக்கடியில்லை. பூக்களை மார்க்கெட்டில் விற்ற கையோடு அந்த காசுக்கு உரம் பூச்சிக்கொல்லி வாங்கவே அவர்களுக்கு சரியாக இருக்கும்.

என்னுடைய வருமானமோ முழுதாக வீடு திரும்பும். உரம் பூச்சிக்கொல்லி பயன்படுத் தாததால் சம்பங்கி தட்டைகளை கால்நடை வளர்ப்போர் நல்ல விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர்” என்று மலர்ச்சியாக பேசும் ஆறுமுகம், இயற்கை வேளாண் ஆர்வலர் களுடன் இணைந்து ஏராளமான இளம் விவசாய ஆர்வலர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

 

தொடர்புக்கு: 98650 95097

http://tamil.thehindu.com/business/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article6479159.ece?widget-art=four-rel

 

 

Link to comment
Share on other sites

மண்ணுக்குள் சொட்டுநீர் பாசனம்!

 

மண்ணுக்குள் சொட்டுநீர் பாசனம் செய்வதன் மூலம், கரும்பு சாகுபடியில் விளைச்சலும் பெருகும், லாபமும் பெறலாம் எனக் கூறும், திண்டிவனம் வேளாண் பொறியியல் துறை உதவிப் பொறியாளர் முருகன்: கரும்பு ஓராண்டு காலப் பயிர் என்பதால், நிலத்தின் மேற்பரப்பிலுள்ள சொட்டு நீர் பாசனக் குழாய்கள் எலிகளால் சேதமடைகின்றன. அதேபோல் கரும்பு அறுவடையின் போதும், சொட்டுநீர் பாசனக் குழாய்கள் வெட்டுப்பட்டு சேதமடைகின்றன.

 

இவற்றை தவிர்ப்பதற்காக, நிலத்தடி சொட்டுநீர் பாசனத் தொழில்நுட்பத்தை வேளாண் பொறியியல் துறை அறிமுகம் செய்துள்ளது. வழக்கமான சொட்டுநீர் பாசனம் போல் அல்லாமல், மண்ணுக்குள் சொட்டுநீர் பாசனக் குழாய்களை புதைக்க வேண்டும். நிலத்தை நன்றாக உழுது, 1 அடி ஆழமும், 1.5 அடி அகலமும் உள்ளவாறு நீளவாக்கில் வாய்க்கால் வெட்டுவது போன்று அகழி வெட்ட வேண்டும். அதனுள் சொட்டுநீர் பாசனக் குழாய்களை வைத்து, அதன் சொட்டுவான் மேற்புறம் உள்ளவாறு அமைத்து, மண்ணை அதன் மேல் மூடி விட வேண்டும்.
 
இப்படி, வரிக்கு வரி, 5 அடி இடைவெளியில் அகழிகளை வெட்டி, நிலத்தடி நீர் பாசனத்திற்கான குழாய்களை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பின், மின்மோட்டாரை இயக்கச் செய்து, நிலத்தில் ஈரமாக உள்ள இடங்களில் கரும்பு நாற்றுகளை, 'ஜிக் ஜாக்' முறையில் பக்கவாட்டில் நடவு செய்ய வேண்டும். நிலத்தடி சொட்டுநீர் பாசன முறையைப் பயன்படுத்துவதன் மூலம், பயிரின் வளர்ச்சி சீராக இருக்கும். பயிருக்குத் தேவையான நீரை நேரடியாக வேர்ப் பகுதிக்கு அளிப்பதால், விளைச்சலும் அதிகரிக்கும். பயிர் உள்ள பகுதிக்கு மட்டும் நீர் அளிப்பதால், களைகள் வளர்வதைக் கட்டுப்படுத்தலாம். குறைந்த நீரில் அதிக மகசூல் பெறலாம். அதுமட்டுமின்றி, செடிகளுக்குத் தேவையான உரம், பூச்சிக் கொல்லி போன்றவற்றையும் வேர்ப்பகுதிக்கு நேரடியாக அளிப்பதால், நோய்த் தாக்குதல் இல்லாமல் செழுமையாக வளரும்; இயந்திரம் மூலம் கரும்புகளை அறுவடை செய்யலாம். குறைந்த நீரில் பயிர் சாகுபடி செய்து, விவசாயிகள் அதிக மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், சொட்டுநீர் பாசன முறையை வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்தோம்.
 
நிலத்தடி சொட்டுநீர் பாசன முறையை நிலத்தில் அமைக்க விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதியில் அமைந்துள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகி, அதற்கான கருவிகளை மானிய விலையில் பெறலாம்.
 
Link to comment
Share on other sites

கால்நடைகளின் இனப்பெருக்கத்துக்கு தனுவாசு தாது உப்புக் கலவை

 

cattle_2154941h.jpg

 

கறவைமாடு வளர்ப்புத் தொழிலில் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் அதிக வருமானத்தை பெருக்கவேண்டும் என்ற நோக்கில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பெரும்பாலான கறவையினங்கள் உரிய தருணத்தில் பருவத்திற்கு வருவதில்லை, சினை பிடிப்புத்திறன் குறைவாக உள்ளதாகவும், ஒரு மாட்டிலிருந்து கிடைக்கும் பாலின் அளவும் குறைவாக கிடைக்கின்றது எனவும் கண்டறியப்பட்டது.

 

இதன் அடிப்படையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் நவீன தொழில்நுட்பங்களில் ஒன்றான தனுவாசு - தாது உப்புக் கலவையின் மூலமாக இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகான முடியும் என்ற நோக்கத்தில் திருநெல்வேலி மாவட்ட கறவைமாடு வளர்ப் போர்களிடையே தனுவாசு தாது உப்புக்கலவையை பிரபலப்படுத்தும் திட்டம் வடிவமைக்கப்பட்டு, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) நிதியுதவியுடன் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கால்நடை விரிவாக்கக் கல்வித்துறையில் செயல்படுத் தப்பட்டு வருகிறது.

 

தாது உப்புகளின் வகைகள்

இத்திட்டத்தின் பல்வேறு பயன்கள் குறித்து இக் கல்லூரி உதவி பேராசிரியர் சே.செந்தில்குமார் கூறியது:

தாது உப்புக்களில் மிகுதியாக தேவைப்படுவை மற்றும் குறைந்த அளவு தேவைப்படுபவை என இருவகை உண்டு. கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், கந்தகம் போன்றவை மிகுதி யாகத் தேவைப்படும் தாது உப்புக்களாகும்.

இரும்பு, மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், அயோடின், கோபால்ட், செலீனியம், மாலிப்டினம் போன்ற தாது உப்புக்கள் குறைந்த அளவே தேவைப்படும் தாது உப்புக் களாகும். தாது உப்புக்கள் தாவரங்கள், பசுந்தீவனப் பயிர்கள், விலங்குகளின் எலும்புத்தூள், ரத்தத்தூள், இறைச்சித்தூள் மற்றும் தாதுப் பொருள் கலவை போன்றவை மூலம் கிடைக்கின்றன.

 

தனுவாசு தாது உப்புக் கலவையின் மூலப்பொருள்கள்

தாது உப்புகள் அளவு (விழுக்காடு) -கால்சியம் 23, பாஸ்பரஸ் 12, மெக்னீசியம் 6.5, இரும்பு 0.5, அயோடின் 0.026, தாமிரம் 0.077, மாங்கனீசு 0.12, கோபால்ட் 0.012, துத்தநாகம் 0.38, ப்ளோரின் 0.07 (அதிக பட்சம்), செலீனியம் 0.3, கந்தகம் 0.5.

வளரும் கால்நடைகளுக்குப் போதுமான அளவு கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை தீவனத்தில் அளிக்காவிட்டால் எலும்புருக்கிநோய் ஏற்பட்டு எலும்பை பலவீனமாக்கும். சினை மாடுகளில் கன்று உற்பத்திக்கும் பால் உற்பத்திக்கும் இந்த இரு தாதுக்களும் மிகவும் தேவைப்படுகின்றன.

 

கறவை மாடுகளில் கன்று ஈன்ற 72 மணி நேரத்திலிருந்து 15 நாட்களுக்குள் பால்சுரம் என்ற நோய் ஏற்பட்டு பால் உற்பத்தி மிகவும் பாதிக்கப்படும். இதற்குக் காரணம் கால்சியம் பற்றாக்குறை ஆகும். ஏனெனில் அதிக பால் சுரக்கும் பசுக்களில் ரத்தத்தில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், தாது உப்புக்கள் மூலம் தொடர்ந்து வெளியேறுகின்றன. அதாவது ஒரு கிலோ பால் உற்பத்தி செய்ய 2.8 கிராம் கால்சியம் மற்றும் 2 கிராம் பாஸ்பரஸ் சத்து தேவைப்படுகிறது.

ஆகவே இச்சத்துக்களை கறவை மாடுகளுக்கு தொடர்ந்து தேவையான அளவு அளிப்பதன் மூலம் அப்பற்றாக்குறையைச் சரிகட்ட முடியும். பாஸ்பரஸ் சத்துப் பற்றாக்குறை ஏற்படும் போது பசுக்களில் சினையுறுதல் சம்பந்தமாக பிரச்சினைகள் ஏற்படுவதால் பாஸ்பரஸ் சத்து தினசரி தீவனத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். பயறுவகைத்தீவனத்தில் பயிர்களில் சுண்ணாம்புச் சத்து அதிக அளவிலும் பாஸ்பரஸ் சத்து குறைந்து அளவிலும் உள்ளன.

குறிப்பாக நன்கு வளர்ந்த பசுந்தீவனப் பயிர்களில் பாஸ்பரஸ் சத்து குறைவாக இருப்பதால், பாஸ்பரஸ் சத்து போதிய அளவில் கிடைக்கத் தவிடு வகைகளை கால்நடைகளுக்கு அளிக்கலாம்.

 

இனவிருத்திக்குத் தாது உப்புக்களின் அவசியம்

தாமிரம், துத்தநாகம், கோபால்ட், இரும்பு, மாங் கனீசு, அயோடின், மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் கால்நடைகளுக்கு மிகக் குறைந்த அளவே தேவைப்படுகின்றன. இந்த குறைந்த அளவு, கூடுதல் தீவனம் மூலம் சரிவர கிடைக்காவிட்டால் கால்நடைகள் பலவகையில் பாதிக்கப்பட்டு பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும்.

ஆகவே இத்தாதுக்களின் பற்றாக்குறை ஏற்படின், நொதிப் பொருட்களின் செயல்திறன் பாதிக்கப்பட்டு அதனால் மலட்டுத் தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு அளிப்பதாக தனுவாசு - தாது உப்புக் கலவை விளங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு 9486258393 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

http://tamil.thehindu.com/business/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88/article6501272.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

மாற்றம் தரும் மாற்று நெல் சாகுபடி முறை

 

rice3.jpg
 திருந்திய நெல் சாகுபடிக்காக தயாரிக்கப்படும் நாற்றங்கால்.
 
rice2.jpg
திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்யப்பட்டுள்ள வயல்.
 
rice1.jpg
திருந்திய நெல் சாகுபடி முறையில் அதிக விளைச்சல் கண்டுள்ள நிலத்தில் விவசாயி. உடன், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் முருகன் (வலது).
 
 

தமிழக வேளாண்மையில் நெல் சாகுபடி ஒரு முக்கிய அங்கமாகும். கடந்த சில ஆண்டுகளாக மொத்த ஆண்டு நெல் உற்பத்தியில் ஒரு தேக்க நிலை இருந்து வருகிறது.

மக்கள் தொகை தொடர்ந்து பெருகி வருவதால், நெல் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நெல் சாகுபடியில் மற்றொரு கவலைக்குரிய நிலை சாகுபடிக்குத் தேவையான நீரின் அளவு குறைந்து பற்றாக்குறை இருப்பதுதான். ஆகையால் நெல் சாகுபடியில் தற்போதைய தேவை, குறைந்த நீரில் அதிக உற்பத்தித் திறன் கொடுக்கக் கூடிய தொழில்நுட்பம். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதுதான் திருந்திய நெல் சாகுபடி முறை.

திருந்திய நெல் சாகுபடி குறித்து காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) பெ. முருகன் கூறியது: திருந்திய நெல் சாகுபடி என்பது சிக்கன நீர்ப் பாசனத்தில் இளநாற்றை அதிக இடைவெளியில் சதுர முறையில் நடவு செய்து களைக் கருவி உபயோகித்து விளைச்சலை அதிகரிக்கும் மாற்று நெல் பயிர் சாகுபடி முறையாகும். இந்த தொழில்நுட்பம், நடைமுறை சாகுபடி சிபாரிசுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். இந்த சாகுபடி முறையால் மகசூல் அதிகரிப்பது மட்டுமல்லாமல் வேறு பல நன்மைகளும் விவசாயிகளுக்கு கிடைக்கிறது.

 

சாகுபடியின் முக்கிய அம்சங்கள்: 14 நாள்கள் வயதுடைய வாளிப்பான நாற்றுகளை நட வேண்டும், ஒரு குத்துக்கு ஒரு நாற்றை சதுர முறையில் நடவேண்டும். அதிக இடைவெளி விட்டு சதுர நடவு (25-க்கு 25 செ.மீ.) ரோட்டரி கோனோ வீடர் மூலம் களைகளை அமுக்கி சேற்றைக் கலக்குதல் வேண்டும்.

நீர் மறைய நீர் கட்டி பாசன நீரின் அளவை குறைத்தல் பச்சை வண்ண இலை நிற அட்டை மூலம் தழைச் சத்தை நிர்வகித்தல் அவசியமாகும்.

 

நாற்றங்கால் தயாரிப்பு: நடவு வயலின் ஓரத்தில் 1-க்கு 5 மீ. அளவுள்ள எட்டு மேடைகளை தகுந்த இடைவெளியில் உருவாக்க வேண்டும். மேடைகளை தகுந்த இடைவெளியில் உருவாக்கும்போது இடையே இருக்கும் மண்ணை வெட்டி எடுத்து மேடையை அமைக்க வேண்டும்.

நிலப்பரப்புக்கு 5.செ.மீ. உயரம் மேடை அமைந்தப் பின் மேடை மேல் பாலிதீன் தாளையோ அல்லது பிரித்த உரச் சாக்குகளையோ பரப்பி விட வேண்டும்.

பிறகு நாற்று மேடை ஒன்றுக்கு 95 கிராம் வீதம் 8 நாற்று மேடைகளுக்குத் தேவையான 760 கிராம் டி.ஏ.பி. உரத்தை நன்கு பொடி செய்து மண்ணுடன் கலந்து நாற்று மேடைகளில் 4 செ.மீ. உயரத்துக்கு நிரப்பி விட வேண்டும்.பின் மூங்கில் குச்சிகளை மேடை ஓரங்களில் படுக்கையில் ஊன்றிவிட்டால் மண் மேடை ஓரங்களிலிருந்து கரைந்து விடாமல் இருக்கும். முளை கட்டிய விதையை (ஒவ்வொரு 5.ச.மீ. மேடைக்கு 375 கிராம் விதை பரவலாக விதைக்க வேண்டும்.

நாற்று மேடையை காய்ந்த மண் கொண்டு தயாரித்தால் விதைத்தப் பின், விதைகள் மூடியிருக்குமாறு 1.செ.மீ. உயரத்துக்கு மண்ணை தூவி விடலாம்.

பூவாளி கொண்டு நீர் தெளிக்கலாம் அல்லது சுற்றியிருக்கும் பள்ளங்களில் நீர் நிரப்பலாம். பிறகு நாற்றங்காலை வழக்கமான முறையில் பராமரிக்க வேண்டும்.

 

நடவு வயல் மற்றும் நாற்று நடவு: நடவு வயல் தயாரிப்பில் திருந்திய நெல் சாகுபடிக்கான மாற்றங்கள் ஏதும் இல்லை.

நடவுக்கு 10 நாள்களுக்கு முன்பாக நடவு வயலில் ஏக்கருக்கு 5 டன் நன்கு மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்டு உரத்தை சீராகப் பரப்பி நீர்ப் பாய்ச்சி சேறு உழவு செய்ய வேண்டும். பதினைந்து நாள்கள் வயதுடைய நாற்றுகளை நடவுக்கு உபயோகிக்க வேண்டும். நாற்றுகளை பத்தைகளிலிருந்து பிரித்து எடுத்து 25-க்கு 25 செ.மீ. இடைவெளியில் ஒவ்வொரு நாற்றாக சதுர நடவாக நட வேண்டும்.

வேர்கள் மேல் நோக்கி இல்லாமல் 3 செ.மீ. ஆழத்துக்கு மிகாமல் மேலாக நடவு செய்ய வேண்டும். இவ்வாறு நடவு செய்வதற்கு நடவுக் கயிற்றில் 25 செ.மீ. இடைவெளியில் அடையாளத்துக்கு கலர் துண்டு துணிகளைக் கட்டி, நடவுக் கயிற்றை 25 செ.மீ. என்ற அளவில் மாற்றி மாற்றி போட்டு நடவு செய்யும்போது 25-க்கு 25 செ.மீ. என்ற அளவில் இடைவெளி அமையும். களைக்கருவி உபயோகிப்பது அவசியமாதலால் வரிசை சதுர நடவு முக்கியமானதாகும்.

 

நீர் மேலாண்மை: 2-க்கு 2.5 செ.மீ. உயரம் நீர் கட்டி, பின் மண்ணின் மேல் பரப்பில் லேசான கீரல் வெடிப்புகள் தோன்றியபின் மறுபடியும் 2-க்கு 2.5 செ.மீ. நீர் கட்ட வேண்டும். இந்த முறையை பஞ்சு கட்டும் பருவம் வரை மட்டும் செய்ய வேண்டும். அதன் பின், அறுவடைக்கு முன்பு வரை, 2-க்கு 2.5 செ.மீ. நீர் கட்டி மண்ணின் மேற்பரப்பில் நீர் மறைந்தபின் மண்ணைக் காய விடாமல் மறுபடியும் அதே அளவு நீர் கட்ட வேண்டும்.

 

களை நிர்வாகம்: திருந்திய நெல் சாகுபடியில், களைகளை அவைகளின் இளம் பருவத்திலேயே மண்ணிலேயே அழுத்தி விடப்படுவதால், களைகளால் எடுக்கப்படும் சத்துக்களின் அளவு குறைந்து, நெற்பயிருக்கு சத்துக்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் சத்துகள் அனைத்தும் அந்த மண்ணிலேயே சேர்க்கப்படுகின்றன. உருளும் களைக்கருவி (ரோட்டரி வீடர்) கொண்டு நட்ட 15, 25, 35 நாள்களில் செடிகளுக்கு ஊடே குறுக்கும் நெடுக்குமாக உபயோகித்தல் வேண்டும். சீரான அளவு நீர் இருக்கும்போது களைக் கருவியை உபயோகிக்க இலகுவாக இருக்கும்.

 

ஊட்டச்சத்து மேலாண்மை: நெல்லைப் பொருத்தவரை தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, துத்தநாகம் ஆகியவை முக்கிய ஊட்டச்சத்துக்கள் ஆகும்.

திருந்திய நெல் சாகுபடியில் தழைச்சத்து மேலாண்மை மாற்றியமைக்கப்பட்டு பயிருக்குத் தேவையாக இருந்தால் மட்டுமே மேலுரமாக தழைச்சத்தை அளிக்கும் இந்த தொழில்நுட்பம் இலை நிற அட்டையை உபயோகப்படுத்தி செய்யப்படும்.

 

நெற்கதிர் எண்ணிக்கை மற்றும் மகசூல்: ஒரு குத்தில் அதிகபட்ச அளவு மொத்த தூர்கள் (40-க்கு 45) உண்டாக வாய்ப்புண்டு.

ஒவ்வொரு கதிரிலும் மணிகள் அதிக எண்ணிக்கையில் இருக்கும். சரியான ஊட்டச்சத்து நிர்வாகத்தினால் ஏக்கருக்கு 4.0-க்கு 4.5 டன் வரை மகசூல் கிடைக்கின்றன.

 

விவசாயிகள் பெறும் பலன்கள்: குறைந்த விதையளவு, நாற்று பறிக்கும் செலவு குறைவு, களைக்கொல்லி தேவையற்றது, உருளும் களைக்கருவி உபயோகிப்பதால் கூட்டுப் பயன்கள், 50 சதவீதம் வரை நீர் சேமிப்பு, கதிர்கள், தானியங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, நெல், வைக்கோல் விளைச்சல் அதிகரிப்பு, அதிக வருமானம் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை 044-2745 2371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

திருந்திய நெல் சாகுபடிக்கும், சாதாரண நெல் சாகுபடிக்கும் உள்ள வேறுபாடுகள்:

வேறுபாடுகள்     திருந்திய நெல் சாகுபடி     சாதாரண நெல் சாகுபடி

1.விதையளவு    ஏக்கருக்கு 3 கிலோ    ஏக்கருக்கு 25 கிலோ

2.நாற்றாங்கால் பரப்பு    ஏக்கருக்கு 1 சென்ட்    ஏக்கருக்கு 8 சென்ட்

3.நாற்று வயது    14 நாள்கள்    21 - 30 நாள்கள்

4.இடைவெளி    25-க்கு 25 செ.மீ.     5-க்கு 10 செ.மீ. (குறுவை)

20-க்கு 10 செ.மீ. (சம்பா)

5.நடவு முறை    குறியீட்டுக் கருவி    சாதாரண நடவு முறை

6.நாற்றுகளின் எண்ணிக்கை    குத்துக்கு ஒரு நாற்று    குத்துக்கு 3 - 4 நாற்று

7.நீர்ப்பாசனம்    2 -2.5 செ.மீ. உயரத்துக்கு நீர் கட்டுதல்.பஞ்சு கட்டும் பருவம் வரை முதலில் கட்டிய நீர் வடிந்து மண்ணில் மேற்பரப்பில் சிறு கீரல் வெடிப்புகள் தோன்றிய பின் முதலில் கட்டிய நீர் மறைந்த பின் மண்ணைக் காய விடாமல் மறுபடியும் நீர் கட்டுதல்   

8.களை நிர்வாகம்     களைக்கருவியை, நட்ட பிறகு 10- 12 நாள் இடைவெளியில் 4 முறை நடவு வரிசைக்கிடையே குறுக்கும் நெடுக்குமாக உபயோகித்தல்.    நட்ட 3}5ம் நாளில் களைக்கொல்லி உபயோகித்து அல்லது நட்ட 15ம் நாள் கைக்களை எடுத்தல் பின் 30}35 ம் நாள் கைக்களை எடுத்தல்

9. உர நிர்வாகம்     இலை வண்ண அட்டையை பயன்படுத்தி குறைந்த அதிக அளவு தழை, மணி,

சாம்பல் சத்து இடுதல்    அதிகளவு தழை, மணி, சாம்பல் சத்து இடுதல்

10. பூச்சி, நோய் தாக்குதல்     குறைவாக இருக்கும்     அதிகமாக இருக்கும்

11.மகசூல் ஏக்கருக்கு    ஏக்கருக்கு 4.0- 4.5 டன்     ஏக்கருக்கு 2.5- 3.0 டன்

 

http://www.dinamani.com/agriculture/2014/10/16/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE/article2479547.ece

 

Link to comment
Share on other sites

களைகளை கட்டுப்படுத்துவதுஅவசியம்!

 

விவசாய நிலத்தில், களைகளைக் கட்டுப்படுத்தும் கருவியின் அவசியத்தை வலியுறுத்தும், புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தின் விதை அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் கதிரவன்:

 

'லேசர் லெவலர்' கருவி என்பது, ஒளிக்கற்றை மூலம், நிலத்தை சமன் செய்யும் கருவி. டிராக்டரில் உழவுக் கலப்பையை மாட்டி உழுவது போல, லேசர் லெவலரை மாட்டி, நிலத்தை சமன் செய்ய வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, இதுபோல நிலத்தை சமப்படுத்தினால் போதுமானது.ஏற்கனவே, நிலத்தை உழுதுதான் விதைக்கிறோம். அப்படியிருக்க, ஏன் சமப்படுத்த வேண்டும் என்ற கேள்வி வரலாம்.

 

டிராக்டர் கொண்டு நிலத்தை உழும்போது, நிலத்தின் மொத்தப் பரப்பும் சமமாக இல்லாமல், சில இடங்களில் மேடாகவும், சில இடங்களில் அதைவிட தாழ்வாகவும் இருக்கும். நேரடி விதைப்பில், விதைகள் சமமாக எல்லா இடத்திலும் பரவாது. களைக்கொல்லி பயன்படுத்தும்போது, பள்ளமான இடத்தில் அதிகமாகவும், மேடான இடத்தில் குறைவாகவும் விழும். இதனால், ஒரே சீராகக் களைகளை கட்டுப்படுத்த முடியாது.நீர் பாய்ச்சும் போது, இந்தப் பிரச்னை இருக்கும். லேசர் லெவலரை வைத்து சமன்படுத்தும்போது, இந்தப் பிரச்னைகள் எதுவும் வருவதில்லை.

 

இந்தக் கருவியைப் பயன்படுத்துவதற்கு முன், சரியான அளவில் உழுது ரோட்டவேட்டர் கருவியைக் கொண்டு நிலத்தை புழுதியாக்கி விட வேண்டும். நிலத்தின் மட்டத்தைக் கண்டுபிடிக்க ஒளிக்கற்றையை, 10, 15 இடத்தில் வைத்து, ஒவ்வொரு இடத்திலும் நிலம் எந்த அளவில் உள்ளது (மேற்பரப்பு அளவு) என்பதை, அளக்க வேண்டும். கிடைத்த அளவுகளில் இருந்து, சராசரி அளவை எடுத்து, அந்த அளவிற்கு நிலம் முழுவதையும் சமன் செய்ய வேண்டும்.லேசர் லெவலரை டிராக்டரில் பொருத்தும் போது, டிராக்டரின் இழுவைத் திறன், 50க்கு மேல் இருந்தால் நல்லது.

 

இழுவைத்திறன் அதிகம் இருந்தால்தான், மண்ணை நன்றாக இழுத்து, ஒரே சமமாக ஆக்க எளிதாக இருக்கும். சமப்படுத்திய நிலத்தில், உரங்களை போடும் போது, சமமாக பரவி, விளைச்சல் கணிசமாக இருக்கும் என்பதோடு, நீரை 30 சதவீதம் வரை சேமிக்கவும் முடியும்.கோவை இன்ஜினியரிங் கல்லுாரி மையத்தில் இருந்து, இந்தக் கருவியை ஏறக்குறைய, 3 லட்சம் ரூபாயில் வாங்கியுள்ளோம். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், வேளாண் அறிவியல் நிலையம் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு இலவசமாக பயிற்சி தருகிறோம்.

 

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93


Tamil_News_large_1098865.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.