Sign in to follow this  
நிலாமதி

அன்னையர் தினம் உருவானதெப்படி..?

Recommended Posts

உலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் 'அன்னையர் தினம்' (மதர்ஸ் டே) மற்ற சர்வதேச தினங்களை போல ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. பல நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படும் 'அன்னையர் தினம்' இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, கனடா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

 
இந்நிலையில், 'அன்னையர் தினம்' உலகெங்கும் கொண்டாட காரணமாக இருந்ததன்

பின்னணி என்ன? என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்வது முக்கியமாகும்.

பழங்காலத்தில் கிரேக்கர்கள் வசந்த காலத்தின் துவக்கத்தை தாய் தெய்வத்தை வணங்கியே கொண்டாடினார்கள். ரோமர்களும் 'சைபெலி' என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர். கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்பு இந்த கொண்டாட்டம் 'மாதா' திருக்கோவிலுக்கு மரியாதை செய்வதாக மாறியது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது நவீன காலத்தில் 'மதர்ஸ் டே' கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் உருவான வரலாற்றின் பின்னணி வித்தியாசமானது.

இன்றைக்கு உலகெங்கும் கொண்டாடும் 'அன்னையர் தினம்' அமெரிக்காவில் தான் உருவானது.

அனா ஜார்விஸ் என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தில் 'கிராப்டன்' என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அப்போது அங்கு நடந்த யுத்தக் களத்தில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து நாலாபுறமும் சிதறிப் போனது. அப்படி பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், சமாதானத்துக்கும் கடுமையாக போராடியவர் தான் அனா ஜார்விஸ். இறுதியில் அவருடைய பார்வையற்ற மகளுடன் தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904-ம் ஆண்டில் மறைந்தார்.

 

 

அந்த பார்வையற்ற மகள் அன் ரீவ்ஸ் ஜார்விஸ் முதன்முதலாக தன் தாயின் நினைவாக உள்ளூரில் உள்ள 'மெத்தடிஸ்ட் சர்ச்'சில் 1908-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று 'சிறப்பு வழிபாடு' ஒன்றை நடத்தினார். தன் தாயாரின் நினைவை போற்றியதைப் போலவே, எல்லோரும் அவரவர் அன்னையை கௌரவிக்க வேண்டும், எல்லோருடைய இல்லங்களிலும் அன்றைய தினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.

இந்நிலையில, 1913-ம் ஆண்டு தன் வேலை நிமித்தம் காரணமாக பார்வையற்ற அன் ரீவ்ஸ் ஜார்விஸ் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிலடெல்பியாவில் குடியேறினார். அவருடைய தாயார் விட்டுச் சென்ற சமூக சேவையை ஒரு கடமையாகவே எண்ணி அதை தொடர்ந்தார். சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் அமைப்பில் தன்னை இணைத்து கொண்டார்.

அதன் பிறகு, நீண்ட நாட்களாக தன் மனதில் உறுத்தி வந்த எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்கு தெரிவிக்க அரசாங்கமும் அவருடைய கருத்தை ஏற்று 1913-ம் ஆண்டு முதல் அன்னையர் தினத்தை அங்கீகரித்து அறிவித்தது.

 

 

அதன் பிறகும், ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் 'அன்னையர் தினம்' கொண்டாடப்பட வேண்டும், அந்த நாளை அரசின் 'விடுமுறை' நாளாக அறிவிக்க வேண்டுமென அப்போது அமெரிக்க அதிபராக இருந்த உட்ரோ வில்சனுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் வருடம்தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வ அன்னையர் தினமாக அறிவித்தார்.

அமெரிக்காவை அடுத்து கனடா அரசும் இதனை அங்கீகரித்தது. அதுமட்டுமல்ல, ஆப்கானிஸ்தானில் இருந்து கோஸ்டாரிகா வரை 46 நாடுகள் இதே நாளை 'அன்னையர் தினம்' என அறிவித்து நடைமுறைப்படுத்தியது.

 

 

ஆனால், அங்கு அன்னையர் தின கொண்டாட்டங்கள் வணிகமயமாக மாறியது. எதையும் வியாபாரமாக்கி பணம் சேகரிக்கும் அமைப்பு அன்னையர் தினத்தன்று அன்னையின் படம் பொறித்த கொடியை விற்று பணம் சேர்த்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜார்விஸ். 1923-ம் ஆண்டு இத்தகைய கொடி விற்பனையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். ''அன்னையர் தினம் உணர்ச்சிபூர்வமான நாளாகவே இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். பணம் சேர்க்கின்ற நாளாக இருக்கக் கூடாது. இத்தகைய வசூலுக்குத் தடை விதிக்க வேண்டும்'' என்று வாதாடி வென்றார்.

தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் அவர் இறப்பதற்கு முன்னதாக, ''உலகம் முழுவதும் அன்னையர் தினம் அனுசரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பது தான் என் ஆசை'' என்று தன் கடைசி ஆசையை சொல்லிவிட்டு இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.

 

அவருடைய ஆசை பூர்த்தியாகும் விதமாக இன்று உலகம் முழுவதும் மதர்ஸ் டே கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (11 ஆம் தேதி) இந்தியாவில் அன்னையர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

 

 

thanks  Seithy.com

Share this post


Link to post
Share on other sites

எனது தனிபட்ட  கருத்துப்படி அம்மா எனும் உறவு விலைமதிப்பில்லாதது  ... தினம் தினம் அன்னையர் தினம் தான்

கவலையிலும் அம்மா மகிழ்விலும் அம்மா நோயிலும் அம்மா மொத்தத்தில் இன்பத்திலும் துன்பத்திலும்.   இருந்தாலும் இல்லாமல்   போய் விட்ட  பின்னாலும்   அம்மாவே தான்...இறந்த பின் காண  கொடுத்து வைக்க வில்லை .. இன்னும் அம்மா என்னை பொறுத்தவரை ...ஒவ்வொரு நினைவிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்

 

 

இருக்கும்போது மகிழ்வாக  வைத்திருங்கள் பின்பு கவலைபடுவீரகள் .அம்மாவை மறந்தவர்களுக்கு  அவளை நினைக்க  ஒரு நாள்  அன்னையர்  தினம்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இன்று, அமேரிக்காவின் வெள்ளிமாளிகை, முக உறை ஊடாக பரப்புதலை குறைக்க முடியும் என கூறியது. பிரதான வைத்தியான பாவ்ச்சி, இந்த முக உறை அணிபவரால் பரவுவதை, குறிப்பாக தமக்குள் கொவிட் 19 உள்ளது என தெரியவர்கள், குறைக்க முடியும் என்கிறார்.  குறிப்பு : அமெரிக்க நாட்டில், எல்லோரையும் அணிய வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது.    
  • சரியான முறையில் மாஸ்க்கைப் பயன்படுத்தவில்லையென்றால் அது தொற்றுநோய்க்கான ஆதாரமாகவும் மாறும். உடல்நிலையில் கவனம்கொள்ள வேண்டியவர்கள் மட்டுமே உபயோகித்துக்கொண்டிருந்த மாஸ்க், தற்போது உலகளவில் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா வைரஸிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காக, சிறியவர்கள் முதல் வயதானவர்கள்வரை அனைவரும் மாஸ்க் அணிந்துகொள்கிறார்கள். டிமாண்ட் அதிகமானதால், ஐந்து ரூபாய்க்குச் சாதாரணமாகக் கடைகளில் கிடைத்துக்கொண்டிருந்த மாஸ்க், இப்போது ரூ.50 வரை விற்கப்படுகிறது. இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு, 'காய்ச்சல், இருமல், அல்லது மூக்கு ஒழுகுதல் போன்ற சுவாசப் பிரச்னை அறிகுறிகள் இல்லாதவர்கள், மாஸ்க் அணியத் தேவையில்லை. ஆரோக்கியமாக இருக்கும் மக்கள் மாஸ்க் அணிவதால் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. மேலும், சரியான முறையில் மாஸ்க்கைப் பயன்படுத்தவில்லையென்றால் அது தொற்றுநோய்க்கான ஆதாரமாகவும் மாறும்' என்று அமெரிக்க சர்ஜன் ஜெனரல் மற்றும் உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டது. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில், மாஸ்க்குக்கு எந்தளவுக்குப் பங்கிருக்கிறது என்பது குறித்து எந்தவோர் ஆராய்ச்சியும் அதுவரை செய்யப்படவில்லை என்பதே நிதர்சனம். இந்நிலையில் 'முகக்கவசம் அணிவதால் நோய்த்தொற்றை எந்தளவுக்குக் குறைக்க முடியும்?' என்பது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் முடிவை வெளியிட்டிருக்கிறது maskssaveslife இணையதளம். அவர்களின் ஆய்வு முடிவில், 'ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது மேற்கத்திய நாடுகளே கொரோனாவின் நோய்த்தொற்றால் அதிக பாதிப்படைந்து வருகின்றன. அதற்குக் காரணம் அவர்கள் முகக்கவசம் அணிவதில் காட்டிய அலட்சியம்தான். உலகளவில் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, உலக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும்' என்று குறிப்பிட்டிருக்கின்றனர். மேலும், 'பொதுவாகவே மாஸ்க் அணியும் கலாசாரத்தைப் பின்பற்றுபவர்கள் ஜப்பானியர்கள். இவர்கள், உலகளவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிப்படைந்தவர்களில், மிகக் குறைந்த விகிதத்தைக் கொண்டிருக்கிறார்கள். இங்கு, மக்கள் தொகையில் வயதானவர்கள் அதிகம் என்பதால் நோய்த்தொற்று எளிதாகப் பரவுவதற்கு அதிகம் வாய்ப்புண்டு. ஆனால், தொற்று மற்றும் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக் குறைவாக இருப்பது ஜப்பானில்தான். இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,387. சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய அதே நேரத்தில்தான் இங்கும் நோய்த்தொற்று பரவ ஆரம்பித்தது. மார்ச் 18 முதல் செக் குடியரசு, மக்கள் பொதுவெளியில் இருக்கும்போது முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியது. அங்கு இதுவரை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,942, மற்றும் 23 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. மற்ற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது பாதிப்பு விகிதம் இங்கு மிகவும் குறைவு. இதற்குக் காரணம் அங்கு அமல்படுத்தப்பட்ட கட்டாய முகமூடி அணியும் சட்டம்தான்' என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். "முன்பு காய்ச்சல், சளி இருப்பவர்கள் மட்டுமே மாஸ்க் பயன்படுத்த அறிவுறுத்தினோம். தற்போது நம்மிடம் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அந்த நிலைப்பாட்டை மெல்ல மெல்ல மாற்றிவருகிறோம். என்றாலும், மாஸ்க் அணிவதன் மூலம் 100% நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்திவிடலாம் என்றும் சொல்லிவிட முடியாது. மாஸ்க் உபயோகம் முழுக்க முழுக்க தனிமனிதப் பாதுகாப்புக்காக மட்டுமே. எனவே, மாஸ்க் அணிவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், எந்த மாஸ்க் அணியவேண்டும் என்பதில் கவனம் தேவை. அதைச் சரியாகப் பராமரிப்பதும் அவசியம். N95, சர்ஜிக்கல் மற்றும் துணி என மூன்று வகையான மாஸ்க்குகள் மார்க்கெட்டில் இருக்கின்றன. பொதுமக்கள் நிச்சயம் N95 மாஸ்க்குகளைப் பயன்படுத்தக்கூடாது. நோய்த்தொற்று உள்ளவர்களைக் கவனித்துக்கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே N95 மாஸ்க்குகளை பயன்படுத்தவேண்டும். சாதாரணமாகக் கடைகளில் கிடைக்கும் சர்ஜிக்கல் மாஸ்க்கை, நோய்த்தொற்றாளர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டிய சூழலிலிருக்கும் பொதுமக்கள் பயன்படுத்தலாம். அதைச் சரியான முறையில் அணியவும், அப்புறப்படுத்தவும் வேண்டும். சர்ஜிக்கல் மாஸ்க் இல்லாத பட்சத்தில், சுத்தமான, தரமான பருத்தித் துணியில் தயாரித்த மாஸ்க்குகளை உபயோகப்படுத்தலாம்" என்றவர், ''மாஸ்க் அணிவதால் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தப்பிவிடலாம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கண்கள் வழியாகவும் பரவக்கூடும். மேலும், ஏரோசால்ஸ் (aerosols) எனும் சிறிய வைரஸ் துகள்கள் மாஸ்க்கிலும் ஊடுருவக்கூடும். இருப்பினும், கொரோனா வைரஸின் முக்கியப் பரிமாற்றப் பாதையாக இருக்கும் நீர்த்துளிகளைத் தடுப்பதில் மாஸ்க்குகள் பயனுள்ளதாக இருக்கும். எனவே, சரியான மாஸ்க்கை முறையாகப் பயன்படுத்துவது சிறந்தது'' என்றார் டாக்டர். https://www.vikatan.com/news/healthy/less-corona-prevalence-in-asian-countries-compared-to-western-countries  
  • தாய்மையை மறந்து தாய் நிலத்தை சிந்தையில் கொண்டு தன்னுடைய இரண்டு வயது பெண் குழந்தையை அருகிலிருந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டு தன் தளபதி பிரிகேடியர் விதுஷா அக்காவிற்கு துணையாக ஆனந்தபுர முற்றுகைக்குள் களம் புகுந்தவள் தான் எம் தமிழ்ச்செல்விஅக்கா...!!! இதே போல் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் தியாக வரலாறு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கு கண்ணீராலும் செந்நீராலும் எழுதப்பட்டும், பலரின் தியாகங்கள் வெளிஉலகிற்கு தெரியாமலேயே புதைந்தது இறுதியில்! மறந்தும் மறவாதே தமிழினமே எமக்காய் மாண்டவர்களையும் போராடியவர்களையும்!!!!!  
  • மதம் மாறியவர்கள், அந்த நினைப்பில் வாழ்கிறார்கள் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்? வெளி நாட்டுக்கு போக இயலாதவர்கள் அந்த நினைப்பில் இருந்துவிட்டு போகட்டுமே. அதில் உங்களுக்கு என்ன நட்டம்? சோற்றுக்கு வழியில்லை என்கிறீர்கள், சாதியில் தாழ்ந்ததால் மாறினார்கள் என்கிறீர்கள். இன்னும் எவ்வளவுக்கு அவர்களை தாழ்த்துவீர்கள்?  ஆக, இன்னொரு அடிமையை, என் அதிகாரத்தினால் ஏற்படுத்தி, போட்டி திருவிழா நடத்தி பழிவாங்கல் நாடகம் நடக்க வேண்டும்.  ஒரு கருத்தைத்தான் சுற்றி சுற்றி வருகிறீர்கள்.  என்னை நானாக எனது குறைகளுடனும், இயலாமையுடனும் ஏற்றுக்கொள்ளும் சமுதாயத்தில் இருப்பதே எனக்கு சவுகரியமானது, நிலையானது. "என்நிலைக்கு நீ ஏறிவா, அப்போ நான் உன்னை எனக்கு சமமாக ஏற்றுக்கொள்கிறேன்." என்று ஒரு சமுதாயம் சொல்லுமானால், அது எனக்குரிய சமுதாயமல்ல. எனது படிப்பை, பதவியை மட்டும் ஏற்றுக்கொள்ளும் சமுதாயமே  தவிர என்னையல்ல. எனக்குப்பின்னால் "பதவி, படிப்பு வந்தாப்போல் தாங்கள் ஏதோ பெரிய சாதிகாரர் என்ற நினைப்பு." என்று சொல்லாது என்று என்ன நிட்சயம்? இல்லை எனது பதவி கைவிட்டுப் போனால் அதே சம உரிமை கிடைக்குமா? அதற்குள் எனது சந்ததி அழிக்கப்பட்டு விடும்.     நீங்கள் சொல்வது போல் நடக்க வேண்டுமென்றால் நாங்கள் வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்கிறீர்கள். வெளி நாட்டுக்கு போய்  கோயில் வைத்தாற்போல் பெரிய சாதிகாரர் என்று நினைப்பு என்று சொல்லி விட்டால்? வெளிநாட்டுக்காரி நீங்கள் அப்பிடி ஒரு வார்த்தையை விட்டுட்டீங்களே?  சுத்தி வளைக்காமல் பதில் தர வேண்டும். சோத்துப்பாசலுக்காக அவர்கள் மதம் மாறவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?