Jump to content

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் இன்று நடாத்தப்பட்ட குறும்படத்தேர்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தால் நடாத்தப்படவிருக்கும் முத்தமிழ் விழாவில்

பரிசுக்காக தேர்வு செய்யப்படவுள்ள  குறும்படங்களை  தெரிவு செய்யும் நிகழ்வு இன்று நடந்து முடிந்துள்ளது.

எல்லாமாக 24 குறும்படங்கள் உலகெங்குமிருந்தும் வந்திருந்தன

அவற்றில் 5  குறும்படங்கள் தாயகத்திலிருந்து வந்திருந்தன  என்பது புதிய  உற்சாகமூட்டும்  செய்தி.

 

நடுவர்களாக

இயக்குனர் சசி  அவர்களும்

நோர்வேயிலிருந்து சஞ்சீவனும்

பிரான்சிலிருந்து  இன்னொருவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

தெரிவுகள் முடிவடைந்த நிலையில்

வரும் ஞாயிறு (11/05/2014)  முத்தழிழ் விழாவில் பரிசளிப்பு நடைபெறும்

 

முதலாவது பரிசாக 1500 ஈரோக்களும்

 

இரண்டாவது பரிசாக 1000 ஈரோக்களும்

 

மூன்றாவது பரிசாக 750 ஈரோக்களும்

 

துறைசார்  தொழில்நுட்ப  கலைஞர்கள் 5பேருக்கு ஆளுக்கு 250 ஈரோக்களும்  வழங்கப்படும்.

 

அத்துடன்  இவ்விழாவில்

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட

அறிவுத்திறன்  போட்டிகளில்  பங்குபற்றி வெற்றி  பெற்றவர்களுக்கான பரிசில்களும்

பங்கு பற்றிய  அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்......... 

 

தகவல்

யாழுக்காக விசுகு........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1 வது பரிசு 1500
2 வது பரிசு 1000
3 வது பரிசு 750
எவர் முதலாவது இரண்டாவது என்று விழாவிலை தான் அறிவிப்பீங்களோ விசுகு அண்ணை

இன்னும் பல துறைகளிலும் ஊக்கங்களை அளிக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 வது பரிசு 1500

2 வது பரிசு 1000

3 வது பரிசு 750

எவர் முதலாவது இரண்டாவது என்று விழாவிலை தான் அறிவிப்பீங்களோ விசுகு அண்ணை

இன்னும் பல துறைகளிலும் ஊக்கங்களை அளிக்க வாழ்த்துக்கள்

 

ஆம்

அது தெரிவுக்குழுவுக்கு மட்டுமே தெரிந்தவிடயம்

நிர்வாகம் இதில் தலையிடாது

இறுதிக்கணங்கள்வரை

இது இரகசியமாக வைக்கப்படும்

 

 

வந்த  படங்களில்

ஒன்பது படங்கள் விழா மேடையில்  பார்வையாளருக்கு காட்டப்படும்

(நேரமின்மையால் முழுப்படங்களையும் திரையிடமுடியாது)

அவை  குலுக்கல் முறையிலேயே  முடிவெடுக்கப்படும்

இல்லையென்றால்

அவரவர்  தமது படங்கள் மக்களுக்கு காட்டப்படுவதைத்தானே  விரும்புவர்

 

காலையில்  தொடங்கி

தற்பொழுது தான் முடிவடைந்தது

24 படங்களையும்  பார்க்கும் வாய்ப்புக்கிட்டியது.

தாயகத்திலிருந்து வந்திருந்த ஒரு படம்

முன்னாள்போராளிகள் இன்று தாயகத்தில் படும் பாட்டை

5 நிமிடத்தில்  தெளிவாகச்சொல்லியது எல்லோர் கண்களையும் கலங்கவைத்தது.

 

இந்த ஒரு படம் போதும்

எமது வேலைக்களைப்பெல்லாம் பஞ்சாக பறந்துவிட்டது

எமது நோக்கம் அதுதான்......

Link to comment
Share on other sites

விசுகு அண்ணை

நல்ல செய்தி. புங்குடுதீவு ஒன்றியம் தொடர்ந்து செய்யும் இச்செயற்பாடுகள் பாராட்டப்படக்கூடியவை.  பாராட்டுகிறேன்.

இன்னும் பல துறைகளிலும் ஊக்கங்களை அளிக்க வாழ்த்துக்கள்  இதில் ஒரு சிறு சந்தேகம்.

....பிரான்சிலிருந்து  இன்னொருவரும் ...

இன்னொருவர் அவரின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை.  ஏன் இருட்டடிப்புச் செய்கிறீர்கள். 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணை

நல்ல செய்தி. புங்குடுதீவு ஒன்றியம் தொடர்ந்து செய்யும் இச்செயற்பாடுகள் பாராட்டப்படக்கூடியவை.  பாராட்டுகிறேன்.

இன்னும் பல துறைகளிலும் ஊக்கங்களை அளிக்க வாழ்த்துக்கள்  இதில் ஒரு சிறு சந்தேகம்.

....பிரான்சிலிருந்து  இன்னொருவரும் ...

இன்னொருவர் அவரின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை.  ஏன் இருட்டடிப்புச் செய்கிறீர்கள். 

 

 

 

வணக்கம் செம்பகன்

 

நன்றி  வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும்...

 

அவரது பெயர் கௌதம்

அவரது பெயர் நான் எழுதியபோது வரமறுத்தது

பலமுறை  முயன்றும்.

 

தாயகத்தில் படத்துறையில் படித்து

அங்கேயே  படங்களை  இயக்கியவர்

இங்கும் தொடர்ந்து அது சம்பந்தமாக படித்துவருகிறார்

எனது நேரமின்மையால் தங்களது மனதுக்கு கவலை  தரும்படியாக  நடந்திருந்தால்

எல்லோரும் மன்னியுங்கள்

நன்றி

 

வேலைப்பளுவால்  எல்லோருக்கும் எழுதமுடியவில்லை

பின்னர் (செவ்வாய்)  எழுதுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்" என்னும் பெயரில்.....
நண்பர் விசுகு, யாழ்களத்தில் விளம்பரம் கொடுத்ததிலிருந்து,
பல குறும்பட போட்டிகளை... நடத்துவது, மகிழ்ச்சிக்குரியது.

பதிவிற்கு.... நன்றி, விசுகு. :)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல துறைகளிலும் ஊக்கங்களை அளிக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாழ்த்துக்கள் விசுகு...! :)

Link to comment
Share on other sites

பலரும் இதனை முன் மாதிரியாக கொண்டு எமது கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று  மிகவும் உற்சாகமாக

மண்டபம் நிறைந்து மகிழ்ச்சியான  முறையில்

விழா  நடைபெற்றது

 

முதலாவது பரிசை

திணிப்பு  என்ற  படமும்

இரண்டாவது பரிசை

2 நிமிடக்கதை சொன்ன

பிரதி  என்ற  படமும்

மூன்றாவது இடத்தை

உபதேசம் என்ற  படமும் பெற்றுக்கொண்டன.

அத்துடன் 13  தொழில்நுட்ப  கலைஞர்களுக்கும் பரிசளிப்பு கொடுத்து இயக்குநர் சசியினால்  கௌரவிக்கப்பட்டார்கள்.

 

இன்று கலைஞர்களுக்கும்

இயக்குநர் மற்றும் நடுவர்களுக்குமிடையிலான  ஒரு  சந்திப்பு நடாத்தப்பட  உள்ளது

இது வழமையாக  புங்குடுதீவு  மக்கள்  ஒன்றியத்தால்

குறும்படப்போட்டி  பரிசளிப்பு  முடிவுற்றதும் நடாத்தப்படும் பட்டடையாகும்

இதன் மூலம்

பரிசில்களை  பெற்றவர்களுக்கும்

பெறமுடியாது   போனவர்களுக்குமான  பட்டடையாக

சரி

பிழை

மற்றும் தவறுகள் 

அடுத்தகட்டத்துக்கான ஆலோசனைகள் நடுவர்களால் வழங்கப்படும்

கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும்.....

கலைஞர்கள்  எல்லோரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

 

 

 

 

 

Link to comment
Share on other sites

நேற்று நாவலர் குறும்பட விழாவுக்கு ஏன் போனோம் என்றிருந்தது. நீங்களே போட்டியை வைத்து நீங்களே தூக்குவதென்றால் அதற்கு ஏன் இந்த அமர்க்களம். ஆனால் நீங்கள் விட்ட பெரும் தவறு 9 படத்தையும் போட்டுக் காட்டியது தான். கிட்டத்தட்ட வந்திருந்த 300 க்கு மேற்பட்ட சனமும் Sokka Vigithan ன் “வப்பு“ தான் முதல் இடம் என்று கத்தியது தான் இவர்களுக்கு கொடுத்த முதல் செருப்படி. ஆனால் அப்படம் மூன்றுக்குள் கூட வரவில்லை.
இந்த நகைச்சுவையை பாருங்கள் தல ஒவ்வொரு விருது பெற்ற படங்களே முதல் மூன்று இடங்களையும் பிடிக்க 5 விருதெடுத்த படம் மூன்றுக்குள் கூட வரவில்லை.
அதுமட்டுமல்லாமல் வந்திருந்த படங்களுக்குள் பலரை கண்கலங்க வைத்த படமான MaThi Sutha ன் “தழும்பு“ க்கு எதுவுமே கிடைக்கவில்லை. வெளிநாட்டிலிருந்து கூட யாருமே இதுவரை தொடாத கதை. குறியிடுகளால் நகர்ந்த திரைக்கதை. உயர் சினிமா லெவலுக்கு அமைந்த ஒளிப்பதிவு என பல இருந்து வந்திருந்த மக்கள் மனதில் பல விருதுகளுடன் இரண்டாம் இடம் பிடித்த படமது.
நல்ல காலம் வெளிநாட்டில் எந்தப்படத்திலும் உருப்படியான நடிகை வராததால் Magiltharan Sivarajah ன் “சுனிய வலயம்“ நாயகிMithuna Mithu வுக்கு போய் சேர்ந்தது. இந்த ஒன்று மட்டும் தான் ஈழத்துக்கு போய் சேர்ந்த விருது.
மற்றையபடி இறுதிப் போட்டியில் நின்ற 9 படங்களில் “தழும்பு“ தவிர மிகுதி அனைத்துக்கும் தலா ஒவ்வொரு விருதுகள் பங்கிட்டு அளிக்கப்பட்டது. கூட இருந்த நண்பர்கள் பேசிக் கொண்டதன் படி முதல் இடத்தை போட்டி ஏற்பாட்டாளர்களது படமும் இரண்டாவதை அவதாரத்தின் படமும் (முதல் இரண்டும் அவதாரம் படம் தான்) மூன்றாவது இடத்தை அதே பிரான்சை சேர்ந்த ஒரு படமும் பெற்றுக் கொண்டதை சுட்டிக் காட்டினார்கள்.
உங்களுக்குள்ளேயே நடுநிலமை இல்லாத போது எதுக்கடா சிங்களவனிட்டை போய் அதைப் பற்றி கதைக்கிறீர்கள்.
பிரான்ஸ் தேசத்தில் இது தான் நான் போகும் கடைசி குறும்பட விழாவாக இருக்கும். எனக்கு ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. ஈழத்தவன் இத்துறையில் வளரக் கூடாது என்பதில் நீங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறீர்கள். அதற்கு பெரிய உதாரணம் உங்களால் ஒதுக்கப்பட்ட “தழும்பு“ குறும்படமாகும்.
தலைவர் இருந்திருந்தால் நீங்கள் இந்த வேலை செய்திருக்கமாட்டீர்கள். அடுத்த முறை இப்படி கூப்பிட்டு எமாற்றாமல் நீங்களே விருதுகளை எடுத்துக் கொண்டு படங்களை போடுங்கள் நாங்கள் முகநூலிலேயே பார்த்துக் கொள்கிறோம்.
இதில் நான் மிகவும் மனம் வருந்திய விடயம் இந்த நடுவர் குழாமில் சர்வதேச விருது பெற்ற அவதாரத்தின் சதாபிரணவனும் இருந்தார் என்பது தான்
இப்படிக்கு-
கேவலம் கெட்ட போட்டிக்கு போய் நேரத்தை தொலைத்தவன்.
மேலும் தகவல்கள் இருந்தால் இன்பொக்ஸில் கூறுங்கள்.

 

-சபேசன் முகபுத்தகத்தில் இருந்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனுக்கு கோலா கொடுக்காமல் விட்டது பெரிய தப்பு. ஒரு ஓரமா.. ஒரு கப்பில வார்த்துக் கொடுத்திருந்தா.. ஏனிந்தப் பதிவு வரப் போகுது. :D:lol:

Link to comment
Share on other sites

நேற்று நாவலர் குறும்பட விழாவுக்கு ஏன் போனோம் என்றிருந்தது. நீங்களே போட்டியை வைத்து நீங்களே தூக்குவதென்றால் அதற்கு ஏன் இந்த அமர்க்களம். ஆனால் நீங்கள் விட்ட பெரும் தவறு 9 படத்தையும் போட்டுக் காட்டியது தான். கிட்டத்தட்ட வந்திருந்த 300 க்கு மேற்பட்ட சனமும் Sokka Vigithan ன் “வப்பு“ தான் முதல் இடம் என்று கத்தியது தான் இவர்களுக்கு கொடுத்த முதல் செருப்படி. ஆனால் அப்படம் மூன்றுக்குள் கூட வரவில்லை.

இந்த நகைச்சுவையை பாருங்கள் தல ஒவ்வொரு விருது பெற்ற படங்களே முதல் மூன்று இடங்களையும் பிடிக்க 5 விருதெடுத்த படம் மூன்றுக்குள் கூட வரவில்லை.

அதுமட்டுமல்லாமல் வந்திருந்த படங்களுக்குள் பலரை கண்கலங்க வைத்த படமான MaThi Sutha ன் “தழும்பு“ க்கு எதுவுமே கிடைக்கவில்லை. வெளிநாட்டிலிருந்து கூட யாருமே இதுவரை தொடாத கதை. குறியிடுகளால் நகர்ந்த திரைக்கதை. உயர் சினிமா லெவலுக்கு அமைந்த ஒளிப்பதிவு என பல இருந்து வந்திருந்த மக்கள் மனதில் பல விருதுகளுடன் இரண்டாம் இடம் பிடித்த படமது.

நல்ல காலம் வெளிநாட்டில் எந்தப்படத்திலும் உருப்படியான நடிகை வராததால் Magiltharan Sivarajah ன் “சுனிய வலயம்“ நாயகிMithuna Mithu வுக்கு போய் சேர்ந்தது. இந்த ஒன்று மட்டும் தான் ஈழத்துக்கு போய் சேர்ந்த விருது.

மற்றையபடி இறுதிப் போட்டியில் நின்ற 9 படங்களில் “தழும்பு“ தவிர மிகுதி அனைத்துக்கும் தலா ஒவ்வொரு விருதுகள் பங்கிட்டு அளிக்கப்பட்டது. கூட இருந்த நண்பர்கள் பேசிக் கொண்டதன் படி முதல் இடத்தை போட்டி ஏற்பாட்டாளர்களது படமும் இரண்டாவதை அவதாரத்தின் படமும் (முதல் இரண்டும் அவதாரம் படம் தான்) மூன்றாவது இடத்தை அதே பிரான்சை சேர்ந்த ஒரு படமும் பெற்றுக் கொண்டதை சுட்டிக் காட்டினார்கள்.

உங்களுக்குள்ளேயே நடுநிலமை இல்லாத போது எதுக்கடா சிங்களவனிட்டை போய் அதைப் பற்றி கதைக்கிறீர்கள்.

பிரான்ஸ் தேசத்தில் இது தான் நான் போகும் கடைசி குறும்பட விழாவாக இருக்கும். எனக்கு ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. ஈழத்தவன் இத்துறையில் வளரக் கூடாது என்பதில் நீங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறீர்கள். அதற்கு பெரிய உதாரணம் உங்களால் ஒதுக்கப்பட்ட “தழும்பு“ குறும்படமாகும்.

தலைவர் இருந்திருந்தால் நீங்கள் இந்த வேலை செய்திருக்கமாட்டீர்கள். அடுத்த முறை இப்படி கூப்பிட்டு எமாற்றாமல் நீங்களே விருதுகளை எடுத்துக் கொண்டு படங்களை போடுங்கள் நாங்கள் முகநூலிலேயே பார்த்துக் கொள்கிறோம்.

இதில் நான் மிகவும் மனம் வருந்திய விடயம் இந்த நடுவர் குழாமில் சர்வதேச விருது பெற்ற அவதாரத்தின் சதாபிரணவனும் இருந்தார் என்பது தான்

இப்படிக்கு-

கேவலம் கெட்ட போட்டிக்கு போய் நேரத்தை தொலைத்தவன்.

மேலும் தகவல்கள் இருந்தால் இன்பொக்ஸில் கூறுங்கள்.

 

-சபேசன் முகபுத்தகத்தில் இருந்து 

நடந்து முடிந்த நாவலர் போட்டி தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் உலாவுகின்ற நிலையில் கலைஞர்களுக்குள் குழப்பமேற்படுத்தும் தோற்றப்பாடு ஒன்று உருவாக்கப்படுகிறது. அதில் பங்கு பற்றிய போட்டியாளர்களுக்குள் நல்ல திறமை இருப்பதை எவராலும் மறுக்க முடியாது.

அதே போல பல போட்டியாளர்களுக்குள் நல்ல உறவு நிலையும் இருந்தது அதை தயவு செய்து சிதைக்க வேண்டாம். எம் நோக்கம் நல்லதொரு சினிமாத்துறை வேண்டும் என்பதே தவிர இந்த குத்து வெட்டுப்பாடுகள் அல்ல உதாரணத்துக்கு 2 ம் இடம் பிடித்த ஜனாவின்

படமாகட்டும் அல்லது 3 ம் இடம் பிடித்த அகீபனின் படமாகட்டும் இரண்டினதும் கதை கலந்தாலோசனைக் குழுவுக்குள் நானும் இருந்தேன். அதே போல ஜனாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் இங்கிருந்து இணைகிறேன். இப்படி ஒரு கூட்டு படைப்பு ஈழப் புலம்பெயர் தளத்தில் இது தான் முதல் தடவை அதே போல என் படம் ஒன்றில் அகீபன் இணைகிறார். இது உதாரணத்துக்காகவே தான். தயவு செய்து எம் நோக்கத்தில் உறுதியாக இருப்போம். எம் போட்டியாளர் எமக்குள் நாமல்ல எம் இன அடையாளம் தான். எம்மால் இயலக் கூடிய எல்லைக்குள் எம் பலமாக இருப்பது கல்வியும் கலையும் மட்டும் தான் அதை புரிந்து நடப்போம். —Akeepan Brownmedia மற்றும் Ns Jana உடன்.

 

 

 

தாயகத்தில் பல நெருக்கடிகள் மத்தியிலும் எம் கலையையும் அதனூடு எம் அடையாளத்தையும் தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் கலைப்பணியினை மேற்கொள்ளும் இயக்குனர் அன்புச்சசகோதரன் மதி சுதாவின் பதிவு முகப்புத்தகத்தில் இருந்து 

காலத்தின் தேவைக்கேற்ப புரிந்துணர்வு சகோ [மதி சுதா ] நன்றிகள்....
 
 இந்த உண்மை ,யத்தார்த்தத்தை உணர்ந்து இவற்றை குழப்பும் மனப்பான்மையில் இணையத்தில் எழுதும் கதாநாயகர்களே அன்பாக வேண்டுகிறேன் .நிறுத்துங்கள் இதுவரை நீங்கள் எழுதி கிழித்தவை போதும் .கலைக்குள்ளும் உங்கள் மகாஜால வித்தைகளை காட்டாதீர்கள் .காட்டினால் மாரித்தவளைபோல தான் உங்கள் நிலைமை முடியும் என்பதே உண்மை 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சபேசன்

நீங்களோ

அல்லது இதனை  எழுதியவரோ பகிரங்க  விவாதத்துக்கு வரமுடியுமா???

அவரது படம் எதனால் தெரிவு செய்யப்படவில்லை  என்பதை ஆராயாது

(அவர் விரும்பினால் யாழில் போட்டு எல்லோரிடமும் விமர்சனம் கேட்கலாம்)

எட்டாப்பழத்துக்கு விமர்சனம் போல் எம்மை  நாமே  தாழ்த்திக்கொண்டிருக்காமல் நேரே  விமர்சித்து முடிவுக்கு வரலாம்

 

நேற்று நடந்த பட்டறையில் எல்லாவற்றிற்கும் நடுவர்கள் விளக்கம் கொடுத்தார்கள்

அதே நேரம் பரிசு என்பதை ஒருவருக்குத்தானே  கொடுக்கமுடியும்?

24 படத்துக்கும் முதல் பரிசு என்றால் போட்டி  எதற்கு??

 

அடுத்து

நான்  நடுவராக  இருந்தால் தளும்புக்குத்தான் பரிசு கொடுத்து இருப்பேன்

ஏனெனில் அது என்னுடன் ஒட்டியிருந்தது

ஆனால் நடுவர்களைக்கேட்டபோது

அதை  வேறு விடயங்களில்  பல படங்கள்  பின்னுக்கு தள்ளிவிட்டன  என்றார்கள்.

 

மற்றது சதாபிரணவன்  பற்றி  எழுதியது  முழுப்பொய்

அவர்   நடுவராகவோ  படம்  தெரிவு செய்யப்பட்டபோது அந்த இடத்தில் கூட இருக்கவில்லை

ஒரு நல்ல திறமையான  கலைஞனோடு

அதே திறமையால் மோதுங்கள்

இது போன்ற  பொய் முகங்களும் பொய்க்குற்றச்சாட்டுகளும் வேண்டாம்.

இழப்பு  எமக்கல்ல

உங்களுக்கே..................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று

அநேகமாக அனைத்து இயக்குநர்களும் கலந்து கொண்ட கேள்வி  நேரம்  மற்றும் பட்டறையை  நடாத்தியிருந்தோம்

இயக்குநர்  சசி  அவர்கள் இந்த மாதிரி  ஒரு திறந்த போக்கை  தமிழகத்தில் கூட தான் இதுவரை  கண்டதில்லை  எனவும்

இனிமேல் இவ்வாறான ஒரு போட்டிக்குப்பின்னான கருந்துரையாடலை  தமிழகத்திலும் செய்ய  முனைவேன் எனவும் குறிப்பிட்டார்.

 

திணிப்பு என்கின்ற  படத்தக்கு முதலாவது இடம் வந்திருந்தது

அதன் கதை

இரு தாய்மார்

ஆளுக்கு ஒரு பெண் பிள்ளை

 

இரு  தாய்மார்களும்

தமக்கும் பிள்ளைகளுக்கும்  வீட்டில் வைத்து முகத்துக்கு முகமூடி போட்டுக்கொள்வார்கள்

(இனம் நிறம் மதம் ஏற்றத்தாழ்வு  சாதி ஆண் பெண்..........................)

முகமூடியுடனேயே  வெளியில் வருவார்கள்

பூங்காவில் விளையாடும் போது இரு பிள்ளைகளும் ஒன்றாக விளையாடுவார்கள்

தாய் மார் உற்றுக்கவனித்தபடியே  இருப்பார்கள்

ஒரு பிள்ளை  மற்றைய  பிள்ளையின் முகமூடியை விரலால் தொடும்போது

பூசியுள்ள நிறம் மறைந்து அந்த இடத்தில் சிவப்புத்தெரியும்

 

உடனே அந்தத்தாய் மகளை வீட்டுக்கு கொண்டு போய்

மீண்டும் கலரடிப்பார்

அடித்துவிட்டு அவர் அதை அழித்துப்பார்ப்பார்

அது அழியாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்வார்.

 

மீண்டும்  வெளியில் வரும்போது

ஒரு பிள்ளை  மற்றய  பிள்ளைக்கு இனிப்புக்கொடுப்பார்

மீண்டும் முகத்தில் தொட்டுப்பார்ப்பார்

முகமூடி அழியும்

சிவப்பு தெரியும்

இருவரும் ஓடி ஒழிந்து கொள்வார்கள்

தாய் தேடி ஓடுவார்

ஒரு மூலையில் இருவரும் மாறிமாறி  முகமூடியை  அழித்துவிட்டு

ஒரே சிவப்பு நிறமாக (முகம்) நிற்பார்கள்.

இது தான் கதை

 

இது ஒரு ஊமைப்படம்

மொழி  இல்லை

நடிகர்களது முகமும் தெரியாது

 

வேறு படங்களில் நல்ல  பாடல்கள் இருந்தும் இந்தப்படத்து  ஏன் இசைக்கான விருது கிடைத்தது என்று

எனக்கு ஒரு சந்தேகம் இருந்தபடியே  தான் இருந்தது

அதற்கு நடுவர்கள் நேற்று  தந்த விளக்கம்  எனது கண்களையும் திறந்தது

இந்த படத்தை கொண்டு சென்றதே இசை  மட்டும் தானே.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் உங்கள் பணி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.