Sign in to follow this  
நிலாமதி

படித்து சிரித்தவை ...3

Recommended Posts

"ஏன்டா... பாயைப் பார்த்து ரொம்ப பயப்படறே...!?''
-
"எங்க டீச்சர்தான் சொன்னாங்க... "பாயும் புலி'ன்னு...!''
-
-லட்சுமி ஆவுடைநாயகம்,
-

---------------------------------
-
"ஏம்பா ராப்பிச்சை இவ்வளவு சாப்பாடு வாங்கறயே
கெட்டுப் போயிடாதா...?''
-
"வீட்ல பிரிட்ஜ் இருக்கு தாயே...!''
-
-க. நாகமுத்து,
-
---------------------------------
-
"எதுக்காக இண்டர்வியூ நடக்கிற இடத்துல வந்து
"எனக்கு கண்ணில கோளாறு இருக்கு'ன்னு சொல்றே?''
-
"இங்கே நல்லா "ஐ வாஷ்' பண்றதா சொன்னாங்களே..''
-
-ம. அக்ஷயா,

-
-------------------------------------
-
டேய்! தினமும் இரண்டு முறை இந்த தொப்பை
குறைப்பு மையத்திற்கு போனால் போதுமாம்.
ஒரே மாதத்தில் தொப்பை குறைந்து ஸ்மார்டா
ஆகிவிடலாமாம்! பேப்பர்ல விளம்பரம் போட்டுருக்கு,
குறையுமாடா?
-
ஆமாண்டா! கண்டிப்பாக குறையும். முகவரியைப்
படிக்கிறேன் கேளு, அகல்யா அபார்ட்மெண்ட்,
23-வது மாடி. (பின் குறிப்பு: லிப்ட் இல்லை. படியில்
ஏறி வரவும்).
-

-ஐ. சுரேஷ்,
-
-----------------------------------
-
"ஊசியால குத்துனா ரத்தம் வெளியில வருதே.
ஏன் தெரியுமா?''
-
""நம்மள குத்துனது யாருன்னு பாக்கதான்!''
-
-கே. அம்மு,

-
-----------------------------------
-
"நீங்க வாரம் 4 நாட்டுக் கோழி முட்டை சாப்பிடணும்!''
-
"டாக்டர் எனக்கு அவ்வளவு வசதி இல்ல... நம்ம
நாட்டுக் கோழி முட்டை மட்டும் சாப்பிடட்டுமா?''
-
-பெ. ராம்சுந்தர்,

-

Share this post


Link to post
Share on other sites

-----------------------------------

-

"ஊசியால குத்துனா ரத்தம் வெளியில வருதே.

ஏன் தெரியுமா?''

-

""நம்மள குத்துனது யாருன்னு பாக்கதான்!''

-

-கே. அம்மு,

-

-----------------------------------

-

-

 

ரசித்தேன்

நன்றி  தொடருங்கோ

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • மோல்கா - spy Camera  தென் கொரியாவின் அசுர தொழில் நுட்ப வளர்ச்சி புதிய பிரச்சனையினை கிளப்பி விட்டுள்ளது. அதுவும் பெண்களுக்கு. மோல்கா - (ஸ்பை கேமரா) எனப்படும் இந்த கிரிமினல் வேலையினால், பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த வகை காமெராவின் அளவு சிறிதாகி, குண்டூசியின் தலை அளவுக்கு வந்து விட்டதால், இது எங்கே வைக்கப்பட்டுள்ளது என்று அவசரத்தில், பப்ளிக் வாஷ்ரூம் போகும் பெண்களும், சிலவேளை ஆண்களும், பாதிக்கப்படுகின்றார்கள். மேலும், மணித்தியால கணக்கில் அறைகளை வாடகைக்கு விடும் மோட்டல்களில் பாலியல் நோக்கத்துடன் ஜோடிகள் வரும் போது அவர்களுக்கு, இந்த வகை கமெராக்கள் இருப்பது தெரிவதில்லை. அவர்களது நடவடிக்கைகள் லைவ்வாக, உலகின் வேறு பகுதியில் பணம் கொடுக்கும் வாடிக்கையாளர்கள் பார்த்துக் கொள்கின்றனராம். சில பெண்கள், பழிவாங்கபப்டும் நோக்கத்துக்காக, அவர்களது கழட்டி விடப்படட முன்னாள் காதலர்களால் ரகசியமாக எடுக்கப்படும் ஸ்பை கேமரா படங்கள் கூட அந்தவகை தளங்களில் பணத்துக்காக காட்டப்படுகின்றன. சில பெண்கள் தற்கொலை வரை போன பின்னர், தென் கொரியா, விசேட போலீஸ் படை அமைத்து நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது. எனினும் இத்தகைய வேளைகளில் கிரிமினல் குழுக்கள் ஈடுபட்டாலும், கைதாகுபவர்கள், மனோநோய் கொண்ட, சிகிச்சை வழங்கப் படவேண்டியவர்கள் என்ற ரீதியில், தொடர்ந்து நான்காவது முறை செய்தால் மட்டுமே சிறை என்கிற நிலைமை இருக்கும் வரை இது தீராது என்கிறார்கள் அங்குள்ள அமைப்புகள். கைதானவர்களில், நீதிபதி, பேராசிரியர் என பலரும் உள்ளனர் என்பதே கவலைப்படும் விடயம். பிபிசி இது தொடர்பான டாக்குமெண்டரி இங்கே பிபிசி ஐ ப்ளயரில். UK க்கு வெளியே இது தெரியும் என்று நினைக்கவில்லை.  https://www.bbc.co.uk/iplayer/episode/p0872g59/stacey-dooley-investigates-spycam-sex-criminals?xtor=CS8-1000-[Discovery_Cards]-[Multi_Site]-[SL02]-[PS_IPLAYER~N~~P_StaceyDooley_SpyCam]
    • இத்தாலியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், வசதியில்லாதவர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவில்லாமல் தவிப்போருக்காக புதிய முயற்சியை இத்தாலி மக்கள் கையில் எடுத்துள்ளனர். மனித நேயத்தை போற்றும் வகையில் நேப்பிள்ஸ் நகரில் வீடுதோறும் உணவுக் கூடைகள் தொங்க விடப்பட்டுள்ளன. அந்த கூடைக்குள் இத்தாலியின் பாரம்பரிய உணவான பாஸ்தாவுடன் தக்காளி, எலுமிச்சை போன்ற காய்கறிகளும் கூடையில் இடம்பெறுகின்றன. பசியால் தவித்துக் கொண்டிருப்போர், இந்த கூடையை பயன்படுத்தி பசியாறிச் செல்கின்றனர். இத்தாலி மக்களின் இந்த முயற்சி இணையத்தில் பெரும் வரவற்பை பெற்றுள்ளது. உதவும் விருப்பம் கொண்டவர்கள் இந்த உணவுக் கூடைக்குள் உணவுப் பொருட்களை போட்டுச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருவோரும் போவோரும் தம்மால் முடிந்த அளவு உணவுப் பொருட்களை கூடையினுள் வைத்துவிட்டு செல்கின்றனர். இந்த உணவுக்கூடை முயற்சியை, ‘பேனரா சோலிடேல்' என்று இத்தாலி மக்கள் அழைக்கின்றனர். மனிதநேயம் காக்கும் இதனை ஏஞ்செலோ பிகோன் என்பவர்தான் தொடங்கி வைத்துள்ளார்.   இந்த முயற்சி குறித்து பிகோன் அளித்த பேட்டியில், ‘எனக்கு திடீரென்றுதான் இந்த யோசனை வந்தது. எனது பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படித்தான் உணவுப் பொருட்களை வழங்கினேன். அப்படியே இந்த யோசனை அனைத்து மக்களுக்கும் பயன்படுவதுபோல் ஆகி விட்டது. கொரோனாவால் எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வீட்டுற்குள் இருந்து கொண்டு நம்மை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே நாம் கவனம் செலுத்தக் கூடாது. மற்றவர்கள் நலனையும் எண்ணிப் பார்க்க வேண்டும்' என்றார். உலகளவில் கொரோனா பாதிப்பால் அதிக உயிர்களை இழந்த நாடாக இத்தாலி உள்ளது. இங்கு 13,915 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 61 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பிலிருந்து மீளவில்லை. https://www.ndtv.com/tamil/italians-hang-food-baskets-from-balconies-to-help-the-homeless-2205696
    • வாணியம்பாடி அடுத்த பசீராபாத்தில், இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்களின் வீடுகளுக்கு கொரோனா காய்ச்சல் பாதிப்பு குறித்து கணக்கெடுக்க சென்ற சுகாதார பணியாளர்களை சிறைப்பிடித்து ரகளை செய்த இளைஞர் ஒருவரை போலீசார் சிறப்பு கவனிப்புடன் விசாரணைக்காக இழுத்து சென்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் இருந்து தப்லீக் ஜமாத் மாநாட்டிற்காக டெல்லிக்கு சென்று வந்தவர்கள் 8 பேரை தனிமைப்படுத்தியுள்ள மாவட்ட சுகாதாரதுறை, சம்பந்தப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய 150 பணியாளர்களை கொண்ட 75 இருவர் குழு அமைக்கப்பட்டு, வீடு வீடாக கணக்கெடுப்பு பணி வாணியம்பாடி பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள வீடுகளில் இருப்பவர்களின் விவரம், வெளியூர் மற்றும் வெளினாடு சென்று வந்த விபரம், சளி, இருமல் காய்ச்சல், என பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் உள்ளார்களா? என்பது குறித்து கணக்கெடுப்பில் கேள்விகள் கேட்கப்பட்டன.</p> <p>இந்நிலையில், வாணியம்பாடி பஷீராபாத் பகுதிக்கு கணக்கெடுப்புக்கு சென்ற சுகாதார பணியாளர்களை அப்பகுதியில் உள்ளவர்கள் தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்து கணக்கெடுப்பு சீட்டை பறித்து கிழித்துப் போட்டு அவர்களுடைய ஐடி கார்டு களையும் பறித்துக் கொண்டு சிறை பிடித்ததாக கூறப்படுகின்றது. தகவல் குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினரையும் அப்பகுதியினர் சிறை பிடித்துக் கொண்டு வம்பு செய்ததால், தகவலறிந்து சென்ற வாணியம்பாடி காவல்துறையினர் கணக்கெடுப்பு பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினரை மீட்டனர். அது மட்டுமல்லாமல் சுகாதார பணியாளர்களிடம் வம்பு செய்து விட்டு வீட்டுக்குள் சென்று ஒழிந்து கொண்ட இளைஞர் ஒருவரை விசாரணைக்கு அழைத்த போது, அவர் வீட்டுக்குள் இருந்து கொண்டு போலீசுடன் செல்ல மறுத்தார். போலீசார் முறையாக பேசி அழைத்தும் வராமல் அடம்பிடித்த அந்த இளைஞர், வீட்டில் இருந்தவர்களின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்ட நிலையில் அவரை இழுத்து பார்த்த போலீசார் ஒரு கட்டத்தில் ஆவேசம் ஆனார்கள்..! போலீஸ்காரர் ஒருவர், அடம்பிடித்த இளைஞரின் தலைமுடியை கொத்தாக பிடித்து இழுத்ததால், அந்த இளைஞர் வீதிக்கு வந்தார். அவரை அதிரடியாக போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அவரை போலவே மேலும் ஒரு இளைஞரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். சுகாதார பணியாளர்கள் தங்கள் நலனுக்காக வந்துள்ளார்கள் என்பது கூட தெரியாமல் எதிர்ப்பது, போராடுவது என அனைத்தும் கொரோனா பரவலை அதிகப்படுத்துமே தவிர கொரோனா வைரஸின், சமூக பரவலை தடுக்க உதவாது என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர், முன் எச்சரிக்கை கணக்கெடுப்பிற்கு தொடட்புடையவர்கள் ஒத்துழைக்க வேண்டும். மீறி வம்பு செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளனர்.    https://www.polimernews.com/dnews/105722/ஒத்துழைக்க-மறுத்து-எல்லைமீறினால்-இது-தான்-நடக்கும்..!நம்ம-போலீஸ்-கெத்து