Jump to content

ஊழிக்காலம் (நாவல்) - தமிழ்க் கவி


Recommended Posts

விட்ட பிழையில் இருந்து பாடம் படிக்கலாம்.இனி மேல் அப்படி ஒரு தவறு நிகழாமல் தவிர்க்கலாம்.

இறுதி யுத்தத்தின் இறுதி நேரம் வரை அங்கே இருந்த கர்ணன்,நிலாந்தன்,கருண்கரன் சொல்வது பிழை.தற்போது தமிழ்க்கவியையும் இங்கே இருந்து கொண்டு எம்மால் விமர்சிக்கத் தான் முடியும்.அதைத் தவிர எம்மால் என்ன செய்ய முடியும்

உண்மை..! படிக்கக்கூடிய ஒரே பாடம் ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை எதிர்த்து ஒரு நாளும் ஆயுதம் தூக்கக்கூடாது. :huh: மிகுதி எல்லாம் அதன் பக்க விளைவுகள்தான்.. :rolleyes::unsure:

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் விட்ட இடத்திலிருந்து ஒரு துரும்பை  நகர்த்திவிட்டு

பாடம்  எடுக்கலாம்

அதுவரை.........

எல்லாம் மனிதக்கோலம்.............. :(  :(  :(

Link to comment
Share on other sites

அவர்கள் விட்ட இடத்திலிருந்து ஒரு துரும்பை  நகர்த்திவிட்டு

பாடம்  எடுக்கலாம்

அதுவரை.........

எல்லாம் மனிதக்கோலம்.............. :(  :(  :(

 

அவர்கள் விட்ட இடம், ஆரம்பித்த இடத்திலிருந்து பல நூறு மைல்களுக்கும் அப்பால். ஆரம்பிக்க முன்னர் இருந்த இடத்திற்கு மீண்டும் நகர்வதற்கே பல காலம் எடுக்கும். அதற்குள் சிங்களம் தான் செய்ய வேண்டிய அனைத்தினையும் செய்து முடித்து விடும். இது தான் யதார்த்தம்.

Link to comment
Share on other sites

ரதி அக்கா,
கருணாகரன்,நிலாந்தன்,கர்ணன் ஆகியோர் இறுதிவரை அங்கு (முள்ளிவாய்க்கால்)இருக்கவில்லை. முடிந்தால் அவர்கள் சொல்லட்டும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் விட்ட இடம், ஆரம்பித்த இடத்திலிருந்து பல நூறு மைல்களுக்கும் அப்பால். ஆரம்பிக்க முன்னர் இருந்த இடத்திற்கு மீண்டும் நகர்வதற்கே பல காலம் எடுக்கும். அதற்குள் சிங்களம் தான் செய்ய வேண்டிய அனைத்தினையும் செய்து முடித்து விடும். இது தான் யதார்த்தம்.

 

 

ஆயுதத்தின் தோல்வியை  மட்டும் பார்த்து

அளந்து கொண்டு

இது   போன்ற  சோர்வைத்தரும் கருத்துக்களை வைப்பது தவறு.

முதலில் தமிழர் தம்மை உணரணும்

 

முள்ளிவாக்காலில்

எம்மைவிட

தமிழரது விடுதலைப்போராட்டம் சார்ந்து

சிங்களம் விட்ட பிழைகள்   எமது போராட்டத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தள்ளியுள்ளன.

ஆனால் சிங்களம் அதை மறைக்க ஒன்றுபட்டு பாடுபட்டு அதைச்செயற்படுத்துகிறது

மாறாக

நாம் எம்மை  நாமே காட்டிக்கொடுத்து

சிங்களத்துக்கு உதவுகின்றோம்... :(  :(  :(

Link to comment
Share on other sites

உண்மையில் தமிழ்க்கவியின் எழுத்து அவருடைய இழப்புகளுக்கே அர்த்தம் இல்லாமல் போய்விட்டது.....

இப்பொழுது எல்லாம் முள்ளிவாய்காலில் நின்றோம் என்ற போர்வையில் தங்கள் எழுத்துக்களால் சம்பாதிக்கவே முயல்கின்றார்கள் மற்றும் தமிழர்களை ஒரு சோர்வு நிலைக்குள் தள்ள தங்கள் எழுத்துக்களை பயன்படுத்துகின்றார்கள் குறிப்பா சொன்ன தாங்கள் சார்ந்துருந்த ஒரு விடுதலை இயக்கத்தை தங்கள் பிரபல்யத்துக்கும் .... பணம் சம்பாதிப்பதற்கும் பயன்படுத்துகின்றார்கள்.....

Link to comment
Share on other sites

இறுதி யுத்தத்தில் 3லட்சம் மக்களும் கடைசி சாட்சியம் தான் இப்படி ஆளுக்காள் புத்தகம் எழுதினா பக்கம் பக்கமா தான் ஈழம் விற்கப்படும் போல ..

(நான் இல்லாத போது ஈழத்தை மொத்தமாவோ சில்லறையாகவோ விற்கலாம் நான் இருக்கும்போது அதுக்கு அனுமதிக்க மாட்டேன் ...தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன்)

காசுக்காலம் ..

 

மனுசி சும்மாவே கதை விடும் இதில புத்தகமா வேறையா ஷப்பா.. :D

Link to comment
Share on other sites

சூப்பர் அஞ்சரன் அண்ணா

இதுக்குள்ள இதான் சாட்டெண்டு சேத்தை அள்ளி பூச ஒரு கூட்டம் கெளம்பி இருக்கு.... ஐயகோ புதுசா புலி பாசம் வந்திருக்கு சில பேருக்கு

Link to comment
Share on other sites

ஏதோ தமிழ்கவி சொல்லித்தான் இந்த விடயங்கள் வெளியில் வரப்போகின்றது என்பது போலிருக்கு பலரின் கருத்துக்கள் .

முள்ளிவாய்கால் முடிவிற்கு முன்னரே சர்வதேசம்  இதை சொல்லிவிட்டது .அவர்கள்தான் கிணற்றுக்குள் இருந்தார்கள் புலம் பெயர்ந்த நீங்களுமா ?

போர்குற்ற விசாரணை அறிக்கையை எடுத்து பாருங்கோ .அரசிற்கு எதிராக  குற்றங்கள் விடுதலை புலிகளுக்கு எதிராக மூன்று குற்றங்கள் தாக்கல் பண்ணியிருக்கு .

நிலாந்தனும் ,யோ கர்ணனும் ,தமிழ்கவியும் சொல்லித்தான் புலிகளை பற்றி தெரியவேண்டுமோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ தமிழ்கவி சொல்லித்தான் இந்த விடயங்கள் வெளியில் வரப்போகின்றது என்பது போலிருக்கு பலரின் கருத்துக்கள் .

முள்ளிவாய்கால் முடிவிற்கு முன்னரே சர்வதேசம்  இதை சொல்லிவிட்டது .அவர்கள்தான் கிணற்றுக்குள் இருந்தார்கள் புலம் பெயர்ந்த நீங்களுமா ?

போர்குற்ற விசாரணை அறிக்கையை எடுத்து பாருங்கோ .அரசிற்கு எதிராக  குற்றங்கள் விடுதலை புலிகளுக்கு எதிராக மூன்று குற்றங்கள் தாக்கல் பண்ணியிருக்கு .

நிலாந்தனும் ,யோ கர்ணனும் ,தமிழ்கவியும் சொல்லித்தான் புலிகளை பற்றி தெரியவேண்டுமோ ?

 

உங்கள் கருத்துப்படி

 

புலிகள் செய்தவை 

சிறீலங்கா அரசு செய்த அநியாயங்களைவிட அதிகம் என்று கணித்து

அதற்க ஒத்துழைத்திருப்பார்களாயின்.

சர்வதேசம் தான் கிணற்றுக்குள் இருந்துள்ளது.... :(  :(  :(

Link to comment
Share on other sites

ஆமா இதே சர்வதேசம் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் செய்தது எங்களுக்கு தெரியாதாக்கும் சும்மா போங்க சார் லொள்ளு பண்ணிட்டு இருக்காம.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புலியில கொஞ்ச காலம் இருந்து போட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக இடையில போராட்டத்தை விட்டுட்டு ஓடி வந்து போட்டு நான் அண்ணெயோட இருந்தனான்,பொட்டரின்ட குழுவில இருந்தனான்.அப்படி நடந்தது,இப்படி நடந்தது என்று புலத்தில ஓரளவுக்கு வசதியாய் இருந்து கொண்டு நீங்கள் கதையளக்கலாம்.ஆனால் அங்கேயே கடைசி வரை இருந்த ஒரு அம்மா நடந்ததை சொல்ல வேண்டும் என்பதற்காகவோ அல்லது அவரது வருமானத்திற்காகவோ ஒரு நூல் எழுதினால் அது தப்பு
 
நீங்கள் எல்லோரும் இப்படி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை கவனிச்சி இருந்தால் அந்த அம்மா ஏன் வருமானத்திற்காக புத்தகம் எழுதப் போறா[உங்கட கதைப்படி] கேவலம் புலியில இருந்து போராடின போராளிகளை கூட உங்களால் காப்பாத்த முடியல்...ஜந்சோ,பத்தோ அனுப்பிப் போட்டு கணணிக்கு முன்னாலா இருந்து கொண்டு வீரம் கதைக்கத் தான் சரி
 
சுண்டல் எல்லாராலும்,எல்லாத்தையும் செய்ய முடியாது.அதே போல தான் எல்லாராலும் எழுத முடியாது.எழுதக் கூடிய ஆற்றல் எல்லோருக்கும் இருக்காது.அந்த அம்மாவுக்கு இருக்குது எழுதுகிறார்.அங்கே இருக்கிறவர்கள் உயிரைக் கொடுத்து போராட வேண்டும்.ஆனால் எதைப் ப்ற்றியும் விமர்சிக்காமல் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்ல உங்களைப் போல ஆட்களால் மட்டுமே முடியும்
 
புத்தகத்தை வாசிச்சுப் போட்டு விமர்ச்சனத்தை வையுங்கள்.ஒன்றை தெரிந்து கொள்ளாமல் விமர்சனத்தை வைப்பது கேடு கெட்ட தமிழனின் பழக்கம்
 
நான் தமிழ்கவி எழுதின நூல் சரி/பிழை விவாதத்திற்கு வரவில்லை.காரணம் நான் இன்னும் நூல் வாசிக்கவில்லை.நான் சொல்ல வருவது தமிழ்கவியை எழுத வேண்டாம்/கூடாது என்று சொல்லும் தகுதி யாருக்கும் இல்லை நான் உட்பட.புத்தகம் பிடிக்கா விட்டால் வேண்ட வேண்டாம்.யாராவது கெஞ்சினார்களா வாங்கச் சொல்லி :)
 
ஆனால் ஒன்று எப்படித் தான் உண்மையை மறைக்க வேண்டும் என்டு நீங்கள் நினைத்தாலும் வெளியில் வந்து தான் தீரும்.எல்லாத்துக்கும் மேலே கடைசி யுத்தத்தில் தப்பிய மக்கள் இன்னும் அங்கு இருக்கிறார்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதியின் வரைவிலக்கணப்படி........

 

இன்றைய  அமைச்சர் முரளிதரன்வரை

தற்பொழுது செய்வது சரி....

 

ஆனால்

தமிழர்கள் பார்ப்பது

தலைவர் சொன்னதை கடைசிவரை  மதிப்பவர்கள்

நானாக  இருந்தாலும்

இலட்சியத்தை காட்டிக்கொடுத்தால் சுடு.........

அதை ஏற்றவர் மட்டுமே 

அவர்களை  விமர்சனம் செய்யமுடியும்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊழிக்காலம் புத்தகத்தில் என்ன எழுதியிருக்கின்றது என்பதை அந்தப் புத்தகத்தை எழுதிய தமிழ்க்கவி மீது அவதூறு செய்பவர்கள் ஒருபோதும் அறியப்போவதில்லை. இலவசமாகக் கொடுத்தால்கூட படிக்கப்போவதில்லை. ஆனால் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற பெருநோக்கின் காரணமாக என்ன விமர்சனம் வந்தாலும் அவற்றை அழிக்கவேண்டும் என்ற கொள்கைப்பிடிப்போடு இருக்கின்றார்கள். இன்னும் கொஞ்சக் காலத்தில் முள்ளிவாய்க்காலில் சண்டை நடந்தது, சரணடைந்தது எல்லாம் கட்டுக்கதை என்று நம்பவைப்ப முயல்வார்கள். தமிழ்ச்சனம் நாலுகால் பிராணிகள்தான் என்று திடமான நம்பிக்கையில் இருக்கும்வரை மேய்ப்பர்களாக இருக்கவேண்டும் என்ற ஆசை பலரிடம் தொடர்ந்தும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஊழிக்காலம் – ஒரு பரிதவிக்கும் நாவல்

சயந்தன்

தமிழ்கவி அம்மாவிற்கு இப்பொழுது வயது 64. அவர் எனது சிறுவயதுகளில் புலிகளின் குரல் வானொலியூடாக குரல்வழியில் அறிமுகமாயிருந்தார். வானொலி நாடகங்களில் வட்டாரப்பேச்சு வழக்கில், ‘அப்பிடியாமோ’ ‘மெய்யாமோ’ என்ற அவரது வார்த்தைகள் நினைவில் நிற்கின்றன. நாட்டார் பாடல்கள் பற்றிய நிகழ்ச்சிகளும் செய்திருந்தார். தமிழ்கவி அம்மாவை இதுவரை நான் நேரிற் சந்தித்துப் பேசியதில்லை. ஒருமுறை நேரிற் கண்டிருக்கிறேன். 2005இல் கிளிநொச்சி திருநகரில் அமைந்திருந் த.தே.தொ அலுவலகத்திற்கு நானும் சோமிதரனும் ஒருதடவை போயிருந்தோம். தவபாலன், கருணாகரன் ஆகியோரோடுதான் உரையாடல். அப்பொழுது வீதி வாயிலில் மடித்த இரட்டைப்பின்னலோடும், புலிச் சீருடையோடும் மோட்டர்சைக்கிளிலிருந்து (MD 90?) இறங்கி வந்தார் தமிழ்கவி. அங்குநின்ற ஒன்றிரண்டு பெண்போராளிகளை “என்னடி பிள்ளைகள்..” என்று விளித்துச் சிரித்தபடி வந்ததாக நினைவு. (அப்பெண்போராளிகளில் இசைப்பிரியாவும் ஒருவராயிருந்தார் என்பது துயர நினைவு)

புலம்பெயர்ந்த பிறகு, தொலைக்காட்சிகளிலும் தமிழ்கவி அம்மாவைக் கண்டேன். அம்பலம் என்றொரு நிகழ்ச்சி செய்தார். வேலிக்கதியாலில் குழை பறித்துக்கொண்டோ, அல்லது கோடாரியால் விறகு கொத்திக்கொண்டோ.. “பின்ன உவன் மகிந்தவுக்கு உது தெரியாதாமோ” எனத்தொடங்குகிறமாதியான நாட்டு நடப்பு உரையாடல்கள் அந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன. அதன்பிறகு 2009 மார்ச்சில், இறுதிக்காலத்தில் யுத்தகளத்திலிருந்து வெளியான காணொளி ஒன்றில் அவர் பேசிக்கொண்டிருந்தார். அதன்பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை.

0 0 0

ஊழிக்காலம் நாவலை நான் படித்து முடித்தபோது, மிகச்சரியாகச் சொன்னால், ஓரிடத்தில் தரித்து நிற்கமுடியாமல், உயிர்ப் பயத்தோடு ஓடி அலைந்த ஒருவன் கடைசியாக சகல நம்பிக்கைகளையும் தின்னக்கொடுத்துவிட்டு நடப்பது நடக்கட்டும் என்ற மாதிரயான மனநிலையில் ஒரு மரநிழலில் குந்தியிருந்த்தைப்போல உணர்ந்தேன். அத்தனை அலைக்கழிவு நாவலில்..

ஊழிக்காலம் 2008இற்கும் 2009இற்கும் இடையிலான குறுகிய காலமொன்றில் நடந்த நீண்டபயணத்தின் கதை. அறுபது வயதில் உள்ள ஒரு தாய்/பேத்தியார் தனது பிள்ளைகளோடும் பேரப்பிள்ளைகளோடும், தெருவில் பொங்கி வழிந்து துரத்திய தீக்குழம்பின் முன்னால், அத் தீ நாக்குகளில் அகப்பட்டுவிடக்கூடாது என்ற பரிதவிப்போடு ஓடுகிற கதை. அப்படி ஓடுகிறவர், ஈழப்போரில் தன்னையும் ஒருவிதத்தில் இணைத்துக்கொண்டிருந்தார் என்பது மேலுமொரு அழுத்தமான பின்னணியாயிருந்த்து. நாவல் முழுவதிலும், பார்வதி என்ற மூதாட்டிக்குள் இருக்கின்ற ஒரு தாயின் மனதும், ஒரு போராளியின் மனதும், முரண்பட்டும், உடன்பட்டும் சமயங்களில் முரண்டுபிடித்தும் செல்கின்றன. வெகு நிச்சயமாக இது தமிழ்கவி அம்மாவின் கதை என்பதை படிக்கிற எவராலும் புரிந்துகொள்ள முடியும். அவரது முதல் நாவலான வானம் வெளிச்சிடும் எப்படியோ அப்படியே…

0 0 0

2009 இறுதி யுத்தநாட்கள் பற்றி அழுத்தமான கவிதைகளும் சிறுகதைகளும் வெளிவந்திருக்கின்றன. என்ன நடந்தது என்பதைச் சம்பவங்களாகப்பதிந்த கதைகளைத் தாண்டி அக்காலம் முழுதிலுமான மக்களுடைய உணர்வுகள், மனப் பிறழ்வுகள், சிறுவர் குழந்தைகளது வாழ்வு, சாவு நிச்சயமென்றான பிறகும் அதுவரைக்கு வாழவேண்டிய நிர்ப்பந்தம், பசி எனப் பலவற்றை அவை பேசின. யோ.கர்ணனின் அரிசி – என்ற சிறுகதை அந்த நிர்ப்பந்தத்தினையும் அத்துயரை அனுமதிக்கும் மனதையும் அழுத்தமாகப்பதிவு செய்த ஒரு கதை.

ஊழிக்காலம் நாவல் அப்படியான உணர்வுகளுக்கூடாகவே பயணிக்கிறது. மரணத்தை மிகச்சாதாரணமாக எதிர்கொள்ளப்பழகிய மனங்களை அது சொல்கிறது.

“இரணைப்பாலையால வெளிக்கிட்டாச்சா?” என்றாள் ராணி.

“ம்.. பிள்ளையள் சாமான்கள் எல்லாம் கொணந்திட்டம், நான் இப்ப கடைசியாக் கிடந்ததுகள கொண்டுபோறன்.”

“அங்கால நீங்க இருந்த பக்கம் ஷெல் வருகுதே..”

“பின்ன.. எங்கட பங்கருக்குள்ள ஒரு பிள்ளைக்கு பீஸ் அடிச்சிட்டுதெல்லே..”

“பிறகு..”

“பிறகென்ன.. அது செத்திட்டுது.”

“ஆரும் காயமே..”

“பங்கர் பிறத்தியில விழுந்தது. இந்தப் பிள்ளை தற்செயலா எட்டிப் பாத்திட்டுது. கழுத்தைச் சீவிக்கொண்டு போட்டுது. நீங்க அக்காவையளக் கண்டனீங்களா..?”

0 0 0

மரண வெளியின் நடுவில் நின்றுகொண்டும், தன் சாதி மதிப்பினைப் பேணுகின்ற, அதனை விட்டுக்கொடாத, ஆதிக்க மனங்கள் நாவலில் பல் இளிக்கின்றன.

“அம்மம்மா…! தண்ணிக்கு போகினமாம் வாறீங்களா எண்டு கேக்கினம்” அபிராமி சத்தமிட்டாள்.

“எங்க?”

“அங்க புதுக் குடியிருப்பு ரோட்டில, செந்தூரன் சிலையடிக்குக் கிட்ட குழாய்க் கிணறு இருக்காம்.”

வளவில் கிணறு ஒன்றும் இருந்தது. கட்டாத கிணறு. குளிக்க மட்டும் பாவிக்கலாம். அயலில் உள்ள வீடுகளில் கட்டுக் கிணறுகள் ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்தன. ஆனால் அவற்றின் வாயிற் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. பார்வதிக்குக் காரணம் புரிந்திருந்தது. “சாதி என்னவாக இருக்குமோ எண்டதுதான்..” என நினைத்துக்கொண்டாள்.

“கட்டையில போகும்போதும் திருந்த வாய்ப்பில்லை”

வாளியை எடுத்துக் கொண்டு அந்தச் சிறுவர்களுடன் பார்வதியும் புறப்பட்டாள். பின்னே வந்த சிறுவனொருவன் எதிரேயிருந்த வளவைக் காட்டினான். “அங்க நல்ல தண்ணி இருக்கு அள்ள விடமாட்டினம்” என்றான்.

0 0 0

சாவினை எதிர்கொண்டிருந்த காலத்திலும் கூட பதவியின் அதிகாரச் சுகத்தோடு மனிதர்களை எதிர்கொண்ட அலுவலர்களை இனங்காட்டுகிறது.

இருபது முப்பதுபேர் சாமான்களை வாங்கிச் சென்றிருப்பார்கள். பார்வதியின் முறை இன்னமும் வரவில்லை. பெயர் கூப்பிடுமட்டும் சற்றுத் தள்யிருந்தாள். “படீர் படீர்” என்று எறிகணைகள் விழத்தொடங்கின. கண்ணுக்கெட்டிய தூரத்தில் கரும்புகை மேலெழுந்தது.

நிவாரணத்திற்காக காத்திருந்த பெண்கள் “ஐயோ பிள்ளையள் தனிய” என்றவாறே புகை வந்த திசை நோக்கியோடினார்கள். பார்வதி அமைதியாயிருந்தாள். நிவாரணம் வாங்காமல் போறதில்லை.

கொஞ்ச நேரத்தில் மூன்று பேர் செத்திட்டினம். ஆறேழு பேர் காயமாம் என்ற செய்தி வந்தது. பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ராமச்சந்திரன்! ராமச்சந்திரன்.. ஆரப்பா ராமச்சந்திரன்” மனேச்சர் சத்தமிட்டான். ஆளில்லை. அந்த மட்டையை ஓரமாக வைத்துவிட்டு அடுத்த மட்டையை எடுத்தான். “செல்வராசா! செல்வராசா! மட்டைய வச்சிட்டு வாய் பாக்கிறாங்கள் போல, செல்வராசா, ச்சிக்.. நாயளோட கத்திறதில தொண்டைத்தண்ணி வத்திப் போகுது. அங்கால போடு மற்றாள் வா..” மானேச்சர் கொதிதண்ணிர் குடித்தவன் போல சீறினான். “சாமான் எடுத்தாச்செல்லே. ஏன் இதில நிக்கிறாய்..”

“ஐயா எனக்கு ரெண்டு காட்டையா, பிள்ளையின்ரயும் கிடக்கு”

“பிள்ளைய வரச் சொல்லு போ..”

“ஐயா.. அவள் கால் ஏலாத பிள்ளை. இஞ்ச ஆக்களுக்கும் தெரியும், சொல்லுங்கவனப்பா” என்று அந்தத் தந்தை அருகிலுள்ளவர்களை சாட்சிக்கு அழைத்தான். “ஓமோம் அந்தப் பிள்ளை நடக்க மாட்டுது..” என்றனர்.

“பெரிய கரைச்சலப்பா உங்களோட மற்றவைய மனிசராக மதிக்கிறியளில்ல..”

பார்வதியின் முறை வந்தது. தன் சிட்டையை வாங்கிக் கொண்டு நகர, செல்வராசா, ராமச்சந்திரன் அட்டைகளுக்குரிய பெண்கள் வந்து சேர்ந்திருந்தார்கள்.

“உங்கள கூப்பிட்டவர். நீங்க முன்னுக்குப் போங்க” என்று பார்வதி அவர்களை மனேச்சரிடம் அனுப்பினாள்.

“கூப்பிடேக்க எங்க போனனீங்கள்?”

“ஷெல்லடிச்சது பிள்ளையள் தனிய.. பாக்க..” அவர்களில் ஒருத்தி வார்த்தையை முடிக்குமுன் மனேச்சர் கத்தினான்.

“அப்ப போய் செல்லைப்பாத்திட்டு ஆறுதலா வாங்க..”

“பிள்ளையள் தனிய ஐயா”

“இஞ்ச.. ஒண்டில் பிள்ளையளப் பார்.. இல்லாட்டி இதைப் பார். எங்கள என்ன விசர் எண்டே நினைச்சியள்…” இப்படிப் பேசினானேயொழிய அவர்களுடைய நிவாரணக் காட்டை அவன் எடுக்கவேயில்லை.

0 0 0

இரத்தச் சேற்றில் காதல்களும் மலர்ந்தன. உடல்களும் இயல்பான பசியாறப் பிரயத்தனப்பட்டன.

ஒரு நூறு மீற்றர் நடந்திருப்பாள். தெருவில் சனங்கள் இலையான்கள் போல மொய்த்திருந்தனர். திடீரென்று எறிகணையொன்று கூவி இரைந்து அருகிலெங்கோ வீழ்ந்து வெடித்தது. சத்தம் கடலலைபோல இரைந்தது. ‘குத்துற சத்தமும் கேக்காதாம், வெடிக்கிற சத்தமும் கேக்காதாம்’ எனப் புறுபுறுத்தவாறே தெருவோரத்தில் வெட்டியிருந்த ஒரு அகழியுள் குதித்தாள்.

அகழிக்கு முன்னால் ஒரு மினி பஸ் நின்றது. அதற்குள் ஒரு குடும்பம் வசிக்கின்றது போலும். பொருட்கள் தெரிந்தன. ஒரு இளம்பெண் அவளுக்கு பதினேழு பதினெட்டு வயதிருக்கும். பஸ் வாசலில் உட்கார்ந்து கிடங்கினுள் குதிக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக்கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்புறமாக ஒரு ஆணின் கை அவள் தோளைத் தொட்டு உள்ளே இழுத்தது. அவள் சிணுங்கினாள். அடுத்த எறிகணை அவர்களைக் கடந்தது.

“செல் வருது..” என்று அவள் சிணுங்கினாள். “இஞ்ச வராது.. நீ வா…” மறுபடியும் அவளை உள்ளே இழுத்தான் அவன். அவளது உடலில் கைகளால் அளையத்தொடங்கினான்.

மரணத்தின் வாசலில் மாலை மாற்றத் துடிக்கும் அந்த ஜோடியைப் பார்வதி வியப்போடு பார்த்தாள். அவளுக்கும் சிரிப்பு வந்தது. “இண்டைக்கோ, நாளைக்கோ ஆர் கண்டது. வாழ்ந்தனுபவிக்கட்டும்” என்று நினைத்துக் கொண்டாள்.

0 0 0

இறுதி யுத்தகாலத்தில், புலிகளால் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அத்துமீறல்களை இந்நாவலில் மிக நுணுக்கமாக இந்நாவலில் விபரித்திருப்பதானது தமிழ்கவி மீதும், இந்நாவல் மீதும் பலமான தாக்குதல்களை ஏற்படுத்தக் கூடும். நாவலின் போக்கில் குறுக்கிடுகின்ற சம்பவங்களாக அவை குறிப்பிடப்படுகின்றன. “வன்னியில் இவர்கள் சொல்வதுபோல எதுவும் நடக்கவில்லை” என்று இப்பொழுதும் நம்புகின்ற பலரைக் கொதிப்படையச் செய்யும் சம்பவங்களை நாவலாசிரியர் துயரம் ஒழுகும் எழுத்துக்களினால், விபரித்திருக்கிறார். நாவலின் பிரதான பாத்திரமான பார்வதி (இனி வானம் வெளிச்சிடும் நாவலின் பிரதான பாத்திரமும் பார்வதிதான்) சந்திக்கின்ற மனிதர்கள், போராளிகள், என்போருடனான உரையாடல்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பாலகுமாரனுடனான உரையாடல் ஒன்று இப்படிச் செல்கிறது.

ஆளுயரத்துக்கு ஆழமான, ஒரு ஆள் நீட்டி நிமிர்ந்து படுக்கக் கூடிய திறந்த பதுங்குகுழி. அதனுள் ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தார் பாலகுமாரன். எதிரில் ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது. பார்வதிக்கு முன்பே வேறு யாரோ அவரை சந்தித்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.

பார்வதி “வணக்கம்” என்றவாறே படிகளில் இறங்கினாள்.

“ஓ.. வணக்கம், வாங்கோ, இருங்க..” காயமடைந்த இடது கையை மடக்கித் தொங்கவிட்டிருந்தார்.

“இப்ப..எப்படியிருக்குது கை…” என்றாள் பார்வதி.

“பரவாயில்லை. நேற்றே என்னை இவ கொண்டு வந்து தங்கட சொந்தக்கார வீடொண்டில் விட்டிருந்தா..

“இஞ்ச..?”

“இல்ல நான் மருத்துவமனையில தான் நிண்டனான்.. நேற்று முன் நாள் இரவு தான் வெளியால வந்தனான்..”

“பிறகு.. நேர இஞ்ச வந்திட்டியள்?….”

“இல்ல… அதான் சொன்னனே இரணைப்பாலைக்க ஒரு வீட்டில் விட்டவா..ச்ச..” என்றவர் கவலையுடன் முகத்தைச் சுழித்தார். அவரே பேசட்டும் என பார்வதி மௌனமாகவிருந்தாள்.

“காது குடுத்துக் கேக்கேலாது எனக்கு. முகங்குடுக்கேலாத கதையள், நாயள் பேயள், எண்டு.. ம்..விடுங்க. அதுகள இப்பயேன்? வேதனையளச் சுமக்கத் தயாரா இருக்கவேணும்” அமைதியானார்.

“வெண்டிருந்தால் இந்தக் கதை வராது” பார்வதி ஏதோ பேசவேண்டும் என்பதற்காகத்தான் பேசினாள்.

“வெற்றி எண்டது எது? அது சண்டையில எடுக்கிறதில்ல. யுத்தத்தில வெற்றி தோல்வி சகசம். ஆனால் மக்களை வென்றிருக்க வேணும். அதைச் செய்யாமல் விட்டிட்டாங்கள்.”

“மெய்தான் இப்ப என்ன நடக்குதெண்டே தெரியேல்ல.”

“இதில்ல, இன்னுமிருக்கு. கண்டாலும் கதைக்க மனமில்லாம . முகத்தத் திருப்பிக் கொண்டு போவாங்கள். ஒரு சொப்பிங் பாக்கோட ஓட வேண்டிவரும். ஆர் எவரெண்டில்ல, எல்லாரும் சமம் எண்டுவரும், அதிகாரம் போட்டி எல்லாம் அழியும். வல்லமை பேசினவை வாயடங்கிப் போவினம். மக்களக் காப்பாற்ற எடுத்த ஆயுதத்தை மக்களுக்கு எதிராகத் திருப்புவாங்கள். நண்பர்களக்கூட பாக்க மனமில்லாமப் போகும். கண்டாலும் தெரியாத மாதிரி போகிற நாள் வரும். உது நடக்கும்” நிறுத்தி நிறுத்தி மெதுவாகப் பேசினார்.

0 0 0

புலிகளது அத்துமீறல்களைப் பதிவு செய்கிற அதேநேரம், இச்சம்பவங்களால் இயக்கத்தின் ஆன்மா காயமுறுகிறது என நாவல் பரிதவிப்பதையும் வாசகனால் புரிந்துகொள்ள முடியும். புலிகள் அமைப்பிலிருந்த தன்னுடைய 2 மகன்களில் ஒருவனை துணுக்காயிலும் இன்னொருவனை ஆனையிறவிலும் இழந்த தமிழ்கவிக்கு, அதுமட்டுமன்றி ஒரு போராளியாகவே வாழ்ந்த தமிழ்கவிக்கு இயல்பாகவே எழக்கூடிய மேற்சொன்ன பரிதவிப்பு நாவல் முழுவதிலும் ஊடு பாவியிருக்கிறது. இதெல்லாம் ஆரைக்கேட்டு நடக்குது என்று கோபமாக, விரக்தியாக பல்வேறு பாத்திரங்கள் நாவலில் பேசிக்கொள்கின்றன. ஒரு கட்டத்தில் நம்மையும் கேட்க வைக்கின்றன.

0 0 0

oozhi_copyநாவலில் பிரதான பாத்திரங்கள் தவிர்த்து மற்றயவர்கள் வந்த வேகத்தில் நகர்ந்து மறைகிறார்கள். கதை நிகழும் சூழலும் பிரதேசமும் ரயிலின் ஜன்னலோரத்தில் மறைந்து நகர்வதைப்போல மறைந்துகொள்கின்றன. புதிய களமொன்றிற்குள் புகும் வாசகன் அச்சூழலையும் மாந்தர்களையும் நின்று கிரகித்துக்கொள்வதற்குள், கிரகித்து உள்வாங்குவதற்குள் நிலங்கள் இழக்கப்பட்டு புதிய நிலங்களுக்குள் புகவேண்டியிருக்கிறது. மாந்தர்கள் சிலர் செத்துப்போக பலர் காணாமற்போய்விடுகிறார்கள். அவர்களில் பலர் நாவலில் மீள வரவே இல்லை. அவர்களது பின்னணித்தகவல்கள் பலமாக கட்டப்படவில்லை என்பது ஒரு பலவீனமாக கருதப்படுகிற நேரத்தில், மறுவளமாக இத்தகைய பண்புகள் வாசகனையும் ஓர் இடம்பெயர்ந்து ஓடுகிறவனாக உணரச் செய்துவிடுகின்றன.

0 0 0

தமயந்தி சிவசுந்தரலிங்கம் என்னும் இயற்பெயரைக் கொண்ட தமிழ்கவி 1949இல் வவுனியாவில் பிறந்தவர். ஈழ விடுதலைப் போரில் தன்னையும் இணைத்துக்கொண்ட ஒரு மூத்த பெண் எழுத்தாளர். போராளிகளாலும், மக்களாலும் மம்மீ, என்றும் அன்ரீ என்றும் அன்பாக அழைக்கப்படும் தமிழ்கவி புலிகள் அமைப்பில் இணைந்து, ஈழப்போரில் உயிரை ஈந்த இரண்டு மாவீரர்களின் தாய். இவரது முதலாவது நாவல் இனி வானம் வெளிச்சிடும் 2002 இல் ஈழத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

-கனடா உரையாடல் இதழில் வெளியான கட்டுரையின் சில பகுதிகள் –

http://sayanthan.com/index.php/2014/02/ஊழிக்காலம்-ஒரு-பரிதவிக/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நூலை பற்றி ஒருவர் விமர்சனம் செய்யும்போது அதை முழுவதுமாக வாசித்தபின்னர் விமர்சிப்பதே சரியானது. அப்படியிருக்க அரைகுறையாகக் கேட்டுவிட்டு பலர் இத்திரியில் இப்படி எழுதுவதைப் ,பார்க்கச் சிரிப்பாக வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கனடாவில் "ஊழிக்காலம்" நூலை எங்கு வாங்கலாம்?

Link to comment
Share on other sites

 கனடாவில் "ஊழிக்காலம்" நூலை எங்கு வாங்கலாம்?

 

கனடாவில் வெளியீடு நடைபெற இருக்கின்றது அங்கு பெறலாம்.விபரங்கள் விரைவில் இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

பாரிஸில் எங்க வாங்கலாம் 'ஊழிக்காலம் 'அண்ணே .. :D

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தின் நெடி ( ‘ஊழிக்காலம்’ )

– லிவின் அனுஷியன்

ஈழப் போராட்டத்தின் இறுதி நாட்கள் பற்றிய மிக முக்கியமான புதினம், தமிழ்க் கவியின் ‘ஊழிக்காலம்’ . ஊழிக்காலம் நான்காம் ஈழ ஆயுதப் போராட்டத்தின் கடைசி நாட்களை பதிவு செய்கிறது. இந் நாவல் பெண் நோக்கில் தன் பார்வையை விவரிக்கிறது .தமிழ்கவியிடம் இருப்பது பாமர சொல்லாடல்களுடன் எழுந்து, உலகத்தைப் பார்க்கும் தரிசனம். ஊழிக்காலம் நான்காம் ஈழப்போரின் தொடக்க நாட்களில் இருந்து முள்வேலி முகாம்களுக்குள் அடைபடுவதுடன் முடிகிறது. ஊழிக்கால‌ம் முழுவதுமே ஒரு பயணம். தொடர்ந்த இடம்பெயர்தல். யுத்தத்தின் ஊடாக நகர்த்தப்படும் வாழ்க்கை. கபீர் விமானங்கள், ஷெல்லடிகள், பதுங்குக் குழிகள் தினசரி நாட்களின் அன்றாட அத்தியாவசியங்களாக மாறிவிட்ட வாழ்க்கையைச் சொல்கிறது. தமிழ்க்கவியின் காதாப்பாத்திரங்கள் எந்தவித தனித்திறமையையும் கொண்டவர்களில்லை. அவர்கள் யுத்தத்தினூடாக வாழ்பவர்கள். அவர்கள் சொற்களும் இலக்கியத் திறம் படைத்தவகைகள் இல்லை. இந்த சாராசரியான காதாப்பாத்திரங்களின் மூலம் தமிழ்ச் சமூகத்தின் உளவியலை குறிப்பாக மனிதன் வாழ்வதற்கான நெருக்கடிக்குள் இருக்கும் பொழுது வெளிப்படும் விழுமியங்களை, குழப்பத்தை, குரூரத்தை, மனிதத் தன்மையை, காமத்தை ஆராய்வதாக‌ச் செல்கிறது. இதுவே இந்தாவலை தனித்தன்னையுடம் வைக்கிறது.

சாக்கிரட்டீஸ் விஷத்தை குடித்துவிட்டார். அதைத் தாளாமல் அவரின் சீடர்களான பிளாட்டோவும் கிரிட்டோவும் கண்ணீர் வடிக்கிறார்கள். மற்றொரு மாணவரான அப்பலோடோரஸால் அடக்க முடியாமல் அழுகை வெடித்து வெளிப்படுகிறது. சாக்கிரட்டீஸ் “அங்கு என்ன சத்தம், ஒரு மனிதன் அமைதியாகச் சாக வேண்டும் என்பதற்காகத் தான் எல்லாப் பெண்களையும் வெளியே அனுப்பினேன். அமைதியாக இருங்கள். கொஞ்சம் பொறுத்திருங்கள்” என்றார். அவர் கால் தடுமாறும் வரை நடந்து சென்றார். பின்னர் அவ்விடத்திலே படுத்தார். விஷத்தை கொடுத்தவன் கால்களை அழுத்தி “உணர முடிகிறதா ?” என்றான். “இல்லை” என்றார். தொடர்ந்து “எப்பொழுது விஷம் இதயத்தை சென்றடைகிறதோ, அதுதான் முடிவாக இருக்கும்” என்றார். அவர் உடல் குளிர்விடத் தொடங்கியது. அவரின் இறுதி வார்த்தைகளை உச்சரித்தார். “கிரிட்டோ, நான் ஒரு சேவல் அஸ்க்லெப்பியஸுக்கு கடன் பட்டிருக்கிறேன். அதை மறக்காமல் அடைப்பாயா ?” என்றார்.

சாக்கிரட்டீஸுக்கு ஏன் சாகும் தருவாயிலும் தான் கொடுக்கப்பட வேண்டிய சேவலைப் பற்றிய நினைப்பு வந்தது. மனித மனம் என்ன என்பதை புரிந்து கொள்ள மேற்சொன்ன உரையாடல் தள்ளுகிறது. ஊழிக்காலம் நாவலும் அத்தகையது தான் விஷத்திற்கு பதிலாக யுத்தம் அதில் மனித மனங்களின் ஊசலாட்டங்கைளைப் பதிந்திருப்பதுதான் நாவலின் வெற்றி.

மனித இருத்தலுக்கான கேள்விகளை தொடர்ந்து நடைபெறும் அழிவுகள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன். மனித விழுமியங்கள் அல்லது மனித உளவியல் எத்தகைய வகையில் இங்கே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது? அதீத அழிவுகளுக்குள்ளாக நெருக்கடியின் பாதாள விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கம் மனிதனின் மன நிலையின் உட்கூறுகள் வெளிப்படத் தொடங்கும் போது அவன் தனியொரு புதிரான நிலைக்குள் உழன்று கொண்டிருக்கிறான். பொய்த்துப் போன விழுமியங்களை எப்படி வைத்துக் கொண்டு வாழ்வது.

ஊழிக்காலத்தில் சக மனிதர்கள் வாழ்வை பதிந்ததினூடாக நமக்கு விளங்குவதெல்லாம், எக்காலத்திலும் மனிதத் தேவைகள் இருத்தல் என்பதுடன் நின்று விடுவதில்லை. நிலம், பசி, உடல், விழுமியம், பணம், சமூகம், மரணம் என்பதைக் காவிக்கொண்டு தான் இருத்தல் என்பதே சாத்தியமாகிறது.

வீட்டைப் போன்றதொரு இடம் வேறெங்கும் இருக்க முடியாது. காடு வனமிருகங்களின் குடிலைப் போலத் தான் இருக்கும். நாடென்பது நிலத்தின் எல்லைக் கோடுகள் மட்டுமே. நாடு என்றல்ல மாநிலம், நகரம், கிராமம், வீடு என எல்லாமும் கற்பனை எல்லைகளால் வகுபட்டிருக்கிறது. வீடென்பது எல்லைக் கோடோடு நிற்பதல்ல. அது தனிமனிதனது அதிகாரத்தின் கீழ் நேர்ப்பார்வையில் இருக்கும் மண். ஓயாத இடப்பெயர்வுகளுக்கு நடுவில் தாங்கள் அன்றைய நாளை வாழ்வதற்ககான நிலத்தை காணியை கூடாரம் இடுவதற்காக தேடிக்கொண்டிருக்கிறார்கள். யுத்தம் தொடங்கியவுடன் ஆரம்பத்தில் நடக்கும் இடப்பெயர்வுகளுக்கு தங்கள் வீட்டின் கூரையை, கதவை தூக்கிக் கொண்டே செல்கிறார்கள். இருப்பே கேள்விக்குறியான நேரத்தில் மனித மனம் நினைவிலிகளில் எதை வைத்துக் கொண்டிருக்கும்?

நாவலை உரையாடல்களும் சம்பவங்களும் நகர்த்தினாலும். ஊழிக்காலத்தின் பெரும்பலம் அதன் உரையாடல்கள். நாவலில் பல பகுதிகளில் இருண்ட நகைச்சுவையை அதன் போக்கில் மிகச் சாதாரணமாகச் சொல்லிக் கொண்டே போகும். அதற்கு உதாரணம் கீழேயுள்ள உரையாடல்கள்.

// ”இதுல ஒரு வீடு போடலாம் போல” என்றான் சுதன்.

அதற்கு நேரே தனது கொட்டிலுள் சாப்பிட்டுக் கொண்டிருந்த கிழவியொருத்தி எட்டிப் பார்த்தாள். “உதிலயோ..நாங்கள் போற வாறதில்லையோ…?”

அப்பால் நகர்ந்து இன்னொரு இடத்தில் நின்றார்கள்.

”இதில பரவாயில்லை” என்றான் தினேஸ்.

”அதிலதான் நாங்கள் ரொய்லட் போடப்போறம்” என்றான் பக்கத்தில் கூடாரமிட்டவன்.//

……………

//பார்வதி யாரையும் மிச்சம் வைப்பதில்லை என் நினைத்து, ஒவ்வொரு வளவாக வீடாகக் கேட்கத் தொடங்கினாள்.

“எங்கட பிள்ளையள் வருகினம். அவயளுக்குத்தான் இடங்காணும்”.

“இஞ்ச சிஸ்ரர்மார் வருகினம்”

“இஞ்ச ஆக்கள விடுறதில்ல” என்ற வளவுக்காரர் வளவின் கிடுகு வேலிக்குக் கீழே தெரிந்த சிறிய இடைவெளியையும் கிடுகு வைத்து அடைத்துக் கொண்டிருந்தார்.//

……………………………….

// ஒரு இடத்தில் பதுங்குக் குழுகளுக்காக மண் கிடைக்கக் கூடிய இடத்தில் வெட்டிக் கொண்டிருப்பார்கள்.

சாந்தினி ஓடிவந்தாள். “ ஆசை ஆசையா நட்ட முருங்க மரமும் பூக்கண்டும் ..அதைக் கெடுத்துப் போடாதையுங்க” என்றாள்.//

………………………….

//”அங்க வளவுக்கார மனிசி பேசுது. நீங்கள் நாலுபக்கமும் குழி வெட்டி வைச்சிட்டுப் போயிருவியள், பிறகு நான் அதை மூட மண்ணுக்கெங்க போறது எண்டா. அள்ள வேண்டாமாம்”//

நம் அதிகாரத்தோடு தொடர்புடைய எதையும் நம்மால் விட்டுவிட இயல்வதில்லை. பெருமூச்சோடு வரும் துயரப் புன்னகையை வரவழைக்கத் தயங்காத சம்பவங்கள் அவை.

நிற்காத போராட்டத்திற்குள் மனிதர்கள் பசியையும் விழுமியங்களையும் கூட்டிக் கொண்டே செல்கின்றனர்.. ஒரு மனிதனின் குற்றத்திற்கும் ஒட்டு மொத்த சமூகத்தின் புரட்சிக்கும் அடிப்படைக் காரணிகளில் ஒன்றாக பசி இருந்தே தீரும். முதலாளித்துவம் எந்தெந்த மனிதர்கள் எம்மாதிரியான உணவுகளை உண்ணலாமென தேர்ந்தெடுத்தே வைத்திருக்கிறது. பணம் என்பது உள்ளீடாக இருந்து வந்து கொண்டேயிருக்கிறது. இடப்பெயர்வு வீடோடு மட்டும் நின்று விடுவதில்லை கடைகள், மருத்துவமனை, வங்கியென பழக்கப்பட்ட வாழ்விற்கான எல்லா விடயங்களையும் தான் தன்னுடன் அழைத்துக் கொண்டே வருகிறது.

கீழே குறிப்பிடப்படும் சம்பவத்தை கொஞ்சம் மூச்சை இழுத்துக் கொண்டு படியுங்கள்.

…………………………………

//“ எறிகணைகள் அறம்புறமாக வந்து வீழத் தொடங்கின.

வாங்கிய பால் மாப் பையை மார்போடு அணைத்தபடி விழுந்துகிடந்தாள் ஒரு தாய். “அர்ச்சுனா..அர்ச்சுனா..” என்று அவள் அரற்றியபடியிருந்தன. ஷெல் வீச்சுக் குறையவில்லை. எங்கிருந்தோ ஓடிவந்த ஒருவன் குனிந்து அவளிடமிருந்த பால்மாவைப் பற்றிக் கொண்டு ஓடினான். அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. “ஐயோ, என்ரை பிள்ளைக்கு. ஆறு மாசப் பிஞ்சு அது…பசி தாங்காது “ என்று தலையிலடித்துக் கத்திக்கொண்டு அவனைத் துரத்தினாள். அவன் ஓடிச்சென்று விட்டான். வெப்பியாரத்தில் நிலத்தில் விழுந்துகிடந்து குழறினாள் அந்த தாய். யாரும் அவளைப் பொருட்படுத்தவில்லை. அவளை மட்டுமல்ல, ஷெல் வீச்சைக்கூட. ஆளாளுக்குப் பால் மாப் பைகளை தூக்கிக் கொண்டோடினார்கள். //

நெஞ்சம் தாளாத சம்பவம் முதன்முறை படிக்கையில் உறுத்தியது. இரண்டாம் முறை படிக்கையில் குற்ற உணர்வு நெஞ்சை அடைத்தது. கண்களை மூடினால் அவளின் ஓலம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது. மனித விழுமியம் பசியால் செத்துப் போன கதையிது.

………………..

//”பசி ஒரு கொடிய மிருகமாகத் துரத்தியது. அதிலிருந்து ஓடித் தப்ப ஈச்ச மரங்களையும் வடலிகளையும் வெட்டிப் பிளந்து அவற்றின் குருத்துகளைச் சாப்பிடத் தொடங்கினார்கள். வடலிகளைத் தேடி அலைந்தார்கள். பசியாற முடியாத சிறுவர்கள் பச்சைக் குருத்துகளைச் சாப்பிடப் பழகினார்கள்.

கொல்லப்படாமல் தப்பி ஒளிந்து ஓடித் திரிந்தாலும் பசியிலிருந்து தப்ப முடியவில்லை. கொடிது கொடிது மரணத்தை விடக் கொடிது பசி”//

பணமும் தோற்றுப் போகும் நிலை கொடிய யுத்தத்தால் வந்தது

// காசிந்தால் வாங்கலாம் என்று நினைத்த அரிசி, மா என்பன காசிருந்தாலும் வாங்க முடியாத நிலைக்கு வந்தன//

………..

//சில்லறைக் காசு வாங்க மாட்டாங்கள். கொண்டு திரியேலாதாம். தாளாத்தான் கேப்பாங்கள்//

…………….

//சிலருக்கு ஆயிரம் ரூபாவுக்கும் அரிசி கிடைக்கவில்லை. அரிசி ஆலையின் கழிவு உமியைத் தூற்றி குறுணியும் அரிசியுமாகச் சேர்த்தனர்//

………

பார்வதி கடை பரப்பி விற்பவனிடம் சாமான் வாங்கிக் கொண்டிருக்கிரும்போது எறிகணை விழத் தொடங்குகிறது. இருவரும் பக்கத்து பக்கத்து பதுங்குக் குழிக்குள் ஒளிந்து கொள்கின்றனர். அந்த நிலையிலும் கடைக்காரன் மறவாமல் மிச்சக் காசைத் தூக்கி பார்வதியின் பதுங்குக் குழிக்குள் எறிகிறான்.அதைப்போன்ற மற்றொரு சம்பவம். யுத்தத்தின் நாட்களில் ஆசுவாசவாசமாக ஒரு நாளில் தொலைக்காட்சியை போடும்பொழுது தினேஷ் மக்கள் தொலைக்காட்சியில் செய்தியை கேட்க எத்தனிக்கும் பொழுது, கலா கலைஞர் தொலைக்காட்டியைப் போடு படம் போகும் என்பாள். வாழ்வின் அபத்தத்தை எண்ணத் தொடங் வைத்தது. வாழ்வு முழுவதுமே வெறும் அபத்த நாடகம்.

மனிதனுக்கு தனிமை என்பது எப்பொழுதும் பயமுறுத்திக் கொண்டிருப்பது. தனியாக வாழ துணை ஒன்று மட்டும் போதாது. அவனை ஒட்டிய அண்டை அயலோடு சண்டை பிடித்துக்கொண்டோ ஒன்று சேர்ந்தோ உறவுகளுடன் வாழ்வதையே பாதுகாப்பாக உணர்கிறான். இந்நாவல் ராணி கலா இருவரது உறவுச்சிக்கலைத் தொட்டுக் கொண்டே நகர்கிறது. யுத்தம் உறவுகளில் அதிக மாற்றத்தை உண்டு பண்ணுவதில்லை. இறுதியில் ராணியின் பக்குவமடைந்த மன நிலைக்கு யுத்தமே காரணமாயிருக்கிறது. எல்லா இடப் பெயவர்களின் போதும் குடும்பத்தை பிரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். மரணம் என்பது நிகழுமானால் ஒன்றாகச் சாவோம் என்ற மன நிலையே மையக்கதாப்பாத்திரமான பார்வதிக்கும் தினேசுக்கும் இருக்கிறது. இருந்த போதும் பார்வதியின் கணவரை மட்டும் தவறவிடுகிறார்கள். ஒரு நாள் அவரும் மரணம் அடைந்த சேதி கிடைக்கிறது.

உடல் தன் தேவைகளை எக்காலத்திலும் மறைத்தது இல்லை. உடல்களை குறிப்பாக பெண்களின் உடலை கண்ணுக்குள் புலப்படா சமூகம் கட்டுப்படுத்துவதே சமுதாயாமாகவும் அந்த இனத்தின் பண்பாடாகவும் கற்பிக்கப்படுகிறது. அழியப் போகிற உடலுக்கு உயிர் ஒப்புக்குத் தான். காமம் உடலில் கிளர்ந்தெழுந்தால் மரணமும் துச்சமாகப் போகிறது. தொடர் இடப் பெயர்வால் பார்வதியை தன் கூடாரத்தில் தாங்கிக்கொள்ள அழைக்கிறாள். இரவின் நிசப்த்தில் காமத்தின் முனகல்கள் கேட்கிறது. இந்த நிகழ்வு ஒரு கவிதையைப் போல நகர்கிறது. அடுத்த நாள் காலையில் பார்வதியில் தெரிந்து கொள்ள முடிகிறது தன்னை அழைத்தவள் கணவனை இழந்தவள் என்று. அதைப் போல் ஏவுகணைக்கு பயந்து பதுங்குக் குழிக்குள் பார்வதி கிடக்கும்பொழுது, பேருந்தில் இருந்து காதல் புரிகிறார்கள் இருவர். நிச்சயமற்ற வாழ்வில் இரு உடல்களின் சேர்க்கை பொத்தி பொத்தி மறைத்தும் பொங்குகிற நீராகவே சுரக்கிறது காமம்.

தமிழ்ச் சமூகத்தில் செத்த வீடு என்பது எல்லாக் கொண்டாட்ட நிகழ்வுகளைப் போலவும் முக்கியமானதொன்று. ஆனால் தினம் தினம் மரணங்கள் சாதாரணமாக இருக்கும் நாட்களில் செத்தவீடு ஒன்றும் புதிதாக இருந்துவிட இயலாது. நாவல் முழுவதும் எறிகணைகள், ஷெல்லடிகள், கிபீர் விமானங்கள், துவக்குச் ரவைககள் என தனிக் கதாப்பாத்திரங்களாக நிறைந்திருக்கிறது. கீழ்வரும் சம்பவங்கள் யுத்தத்தின் உக்கிரத்தை அசட்டையாகச் சொல்லும்.

//“அங்கால மழை எப்படி? என்ற காலம் போய்விட்டது. இப்போதைய ஒரே கேள்வி – அங்கால ஷெல்லடி எப்படி?”

………………..

”ஆறு பேர் மடிந்து போயினர். ஒரு குழந்தையை இறுக்கி அணைத்தபடி பெண்ணொருத்தி வயிறு சிதைந்து கிடந்தாள். குழந்தையும் செத்திருக்க வேண்டும். நெஞ்சில் தூங்குவது போலிருந்தது”

…………………………

“தேவிபுரத்திலிருந்தே இறந்தவர்களை அவ்விடங்களிலேயே உள்ள பதுங்குகுழிகளில் புதைப்பது வழக்கமாகிவிட்டது. பாதுகாப்புக்கென வெட்டும் குழிகளே அநேகருக்குப் புதைகுழியாகவும் மாறிக்கொண்டிருந்தன”

…………………………..

”பாக்க மாட்டீங்க. வெளியால வராமாட்டாம பங்கருக்க கிடந்தா அவ்வளவுதான். ஆமி கடகடண்டு பங்கருக்க சுட்டுப்போட்டுத்தான் எட்டிப் பாக்கிறாங்கள்”

…………………………….

“பசியும் சிலரை பலியெடுக்கத் தொடங்கியது

காயமடைந்தவர்கள் குருதி இழப்பாலும் தூக்க யாருமின்றியும் செத்து முடித்தனர்.

செத்துக் கிடப்பவரையோ கடுமையான காயத்துடன் கிடப்பவரையோ யாரும் திரும்பிப் பார்க்காமல் ஓடினார்கள்.

முதியவர்களும் சிறுவர்களும் என கைவிடப்பட்டவர்கள் ஏராளம்.

குழந்தைகள் வீதிகளில் வீறிட்டு அழுதன.

தவறிய குழந்தைகளுக்காக தாய்மாரின் ஓலம் நெஞ்சை உருக்கி எரித்தது”

…………………………

தமிழ்க்கவி நாவலில் புலிகளை விமர்சிக்கத் தவறவில்லை. சொல்லப்போனல் நாவல் முழுவதுமே அவர்கள் செய்த தவறுகளை சொல்லிக் கொண்டே செல்கிறார். மக்களுக்காக துவக்கப்பட்ட இயக்கம் இப்படி மக்களையே அழிக்கத்தொடங்கியதே என விசனப்படவும் செய்கிறார். எல்லாத் தவறுகளும் அவர்கள் புரிந்தாலும் யுத்தம் முடிந்த இறுதி நாட்களுக்குப் பின்னர் நிகழ்வாக வரும் நாவலின் இறுதி வரிகள் இவை

//“இன்னுமொரு நாட்டுக்குள் வந்த உணர்வு மனதெங்கும் பரவ, அந்த வெக்கையிலும் உடல் சில்லிடத் தொடங்கியது.//

இறுதி வரிகளில் வரும் சொற்கள் மிகக் கவனத்தில் கொள்ளத்தக்கவை. இது கிளர்த்தும் உணர்வுகளை எப்படி வரையறுத்தும் கூற இயலவில்லை. இவ்வளவு அழிவுகளுக்குப் பின்னரும் வேறொரு நாட்டுக்குள் வந்த உணர்வு என்பதை எப்படி விளங்கிக் கொள்ள முடியும்.

அடுத்த நாளின் நம்பிக்கையின்மையால் ஊழிக்காலம் படித்துக் கொண்டிருக்கும் போதே ‘தூக்குமேடை குறிப்புகள்’ புத்தகம் படிக்கும் மன நிலைக்குள் இழுத்துச் செல்லும். நிச்சயமற்ற தன்மையிலிருக்கும் வாழ்வை அப்பயணத்தின் ஊடாக நீங்களும் வாழ்ந்ததொரு நிலைக்குள் இட்டுச் செல்லப்படுவீர்கள். யூத இன அழைப்பை பற்றிக் கட்டுரைகள், நாவல்கள், திரைப்படங்கள் எனத் திகட்டத் திகட்ட வந்து விட்டது. உலக மொழிகளிலெல்லாம் இன்னும் வந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் சமகாலத்தில் நடந்த மிகப் பெரும் இன அழிப்பை மையமிட்ட புத்தகங்களையும் திரைப்படங்களையும் கைவிரல்களால் எண்ணிவிடலாம்.

மரண நெடி ஊழிக்காலத்தின் இறுதி பக்கங்கள் முழுதும் வியாபித்திருக்கிறது. ’அபத்தவியல்’ கோட்பாட்டோடே உலகம் படைக்கப்பட்டிருக்கிறதோ? என்ற சந்தேகத்தைக் கிளறும். நாவலை படித்து முடித்த பின்னர் கொடுங்கனவில் இருந்து விழித்ததொரு நினைவு மேலெழும். அது கனவாக இல்லை என்பது மிகப்பெரிய சோகம். தமிழின் ஆகச்சிறந்த நாவல்களில் முதலாவதாக “ஆழி சூழ் உலகை” வைப்பேனென்றால் இரண்டாவது இடம் “ஊழிக்காலம்” ஆகவே இருக்க முடியும். ‘ஊழிக்காலம்’ குறித்து விரிவாக எழுத்துக்கள் இனிமேல் தொடர்ந்து வரும் என நம்புகிறேன்.

http://malaigal.com/?p=4194

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அரைவாசிப் பத்தகம் வசித்து முடித்தபோது பெரிதாக எந்தத் தாக்கமும் இருக்கவில்லை. ஆனால் அன்று இரவு முழுதும் நானும் என் குடும்பமும் இடம்பெயர்ந்த போது பட்ட துன்பம் இருக்கிறதே ........... நேரில் அனுபவித்திருந்தால் ......... கனவு என்பதனால் அடுத்தநாள் எழும்பப் பெரிய நின்மதியாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே நீங்களும் இந்த புத்தகத்தை வாங்கி வாசிக்க விரும்பினால், லண்டன் வாழ் உறவுகள், சுமே அக்காவை தொடர்பு கொள்ளுங்கள்.

 

இன்னும் அவவிடம் ஆறு புத்தகங்கள் மட்டுமே உள்ளன. உங்கள் பதிவிற்கு முந்துங்கள். நன்றி.
 

 

சுமே அக்கா,உங்களின் அனுமதி இல்லாமல் இந்த பதிவை இடுவதற்கு மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே நீங்களும் இந்த புத்தகத்தை வாங்கி வாசிக்க விரும்பினால், லண்டன் வாழ் உறவுகள், சுமே அக்காவை தொடர்பு கொள்ளுங்கள்.

 

இன்னும் அவவிடம் ஆறு புத்தகங்கள் மட்டுமே உள்ளன. உங்கள் பதிவிற்கு முந்துங்கள். நன்றி.

 

 

சுமே அக்கா,உங்களின் அனுமதி இல்லாமல் இந்த பதிவை இடுவதற்கு மன்னிக்கவும்.

 

எனக்குக் கூட இந்த மூளை வரவில்லை. நன்றி முதல்வன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’

பாவண்ணன்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஜெயமோகனின் விஷ்ணுபுரம்’ புதினத்தின் இறுதிப்பகுதியாக இடம்பெற்றிருந்த பிரளயத்தின் காட்சிகளை ஒருபோதும் என்னால் மறக்க முடிந்ததில்லை. அக்காட்சிகள் பல நாட்கள் என் கனவில் தோன்றித்தோன்றி என்னை அச்சுறுத்திக்கொண்டே இருந்தன, இடைவிடாது பொழியும் மழை. கடல்போல வெள்ளம் பொங்கி வந்து விஷ்ணுபுரத்தையே சூழ்ந்துகொள்கிறது. வயல்வெளிகள், தோப்புகள், சின்னச்சின்ன குன்றுகள் எல்லாமே மெல்லமெல்ல வெள்ளத்தில் மூழ்கி மறைகின்றன. கால்நடைகளின் பிணங்கள் மிதந்து செல்கின்றன. மனிதர்களின் பிணங்கள் மரக்கிளைகளில் சிக்கி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு கரையுள்ள இடங்களில் ஒதுங்கிக் கிடக்கின்றன, தெருக்களில் புகுந்த வெள்ளம் வீடுகளையும் பெரிய பெரிய மாளிகைகளையும் மூழ்கவைத்துவிடுகிறது. தப்பித்து திசைக்கொருவராக ஓடும் சிறுவர்களும் வயதானவர்களும் பெண்களும் எங்கெங்கோ சிக்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழக்கிறார்கள். நகரம் அழிந்த பிறகும் அந்நகரத்தின் பெருமையை நாட்டுக்கெல்லாம் அறிவித்தபடி விண்ணை முட்டும் கோபுரங்களைக் கொண்ட ஆலயமும் மூழ்கத் தொடங்குகிறது. கலசங்களும் மூழ்கி, வெள்ளக்காடாகிவிட்ட நகரிலிருந்து விலகி, மீட்சியைத் தேடி மலையை நோக்கி நடக்கும் நீலி மட்டுமே உயிர் பிழைக்கிறாள். நடந்துபோன அழிவுக்கும் எஞ்சியுள்ள வாழ்க்கைக்கும் அவள் ஒருத்தியே சாட்சி. புனைவான அந்தக் காட்சிகள் இலங்கை மண்ணில் இன்று உண்மையாகிவிட்டன. கையறு நிலையில் மனிதகுலமே மெளனசாட்சிகளாக நிற்க, மானுட வரலாற்றில் அழிக்கமுடியாத ஒரு பெருங்கறையாக ஒரு பேரழிவு நிகழ்ந்துவிட்டது. வலிமிகுந்த அந்த வரலாற்றின் காட்சிகளை ’ஊழிக்காலம்’ நாவலாக எழுதியுள்ளார் தமிழ்க்கவி. விஷ்ணுபுரம் நாவலைப் படித்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஊழிக்காலம் நாவலிப் படித்ததும் மீண்டும் என் இரவுப்பொழுதுகள் மீண்டும் தூக்கமற்றவையாக மாறிவிட்டன. அடிக்கடி மூளும் கொடுங்கனவுகளின் துயரத்திலிருந்து மீளமுடியவில்லை. கனவிலிருந்து எழும் ஒவ்வொரு தருணத்திலும் உடலும் மனமும் நடுங்கத் தொடங்கிவிடுகின்றன.

ஊழிக்காலம் என்பது எவ்வளவு பொருத்தமான சொல். இனி ஒருபோதும் திரும்பமுடியாத வரலாறாகிவிட்டது அந்த வாழ்க்கை. எல்லாமே பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மாறிவிட்டது. கசப்பான உண்மையாக ஈழத்தின் வரலாறு செதுக்கப்பட்டுவிட்டது. பிரளயத்துக்குப் பதிலாக இங்கே நிகழ்ந்திருப்பது போர். ஒருபுறம் அரசு ராணுவம். மறுபுறம் போராளிகளின் துப்பாக்கிகள். கணந்தோறும் மரணங்கள். ஓலங்கள். அழிவுகள். வாழ்வதற்காக இடம்பெயர்ந்து செல்லும் ஒவ்வொரு இடமும் போர்க்களமாக மாறிவிடுகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் தினந்தோறும் மரணம் நிகழ்கிறது. ஒருநாள் தந்தை. இன்னொருநாள் மனைவி. ஒரு இரவில் குழந்தைகள். மற்றொரு இரவில் பெரியவர்கள். இலைகள் உதிர்வதுபோல எங்கெங்கும் பிணங்கள் விழுகின்றன. அடக்கம் செய்யக்கூட ஆளின்றி ஒவ்வொரு உடலும் அனாதைப்பிணங்களாகக் கிடக்கின்றன. தெருவோரங்களிலும் மரத்தடியிலும் பள்ளங்களிலும் கரையோரங்களிலும் என பார்வை படரும் இடங்களிலெல்லாம் பிணங்கள் மட்டுமே குவியல்குவியலாகக் கிடக்கின்றன. ஊரே பிணக்காடாக மாறிவிடுகின்றது. அழக்கூட நேரம் இல்லாமல் மக்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். விமானத்திலிருந்து பொழியப்படும் குண்டுகளும் ஷெல்களும் அவர்களைத் துரத்தியபடியே உள்ளன. உயிர்பிழைக்க பதுங்குகுழிகளில் ஒளிந்துகொண்டவர்களைத் தேடிவரும் ராணுவத்தினர் காக்கை குருவிகளைச் சுடுவதுபோலச் சுட்டுத் தள்ளுகிறார்கள். ராணுவத்தின் பாதுகாப்பிடம் தேடி ஓடத் தொடங்குகிற்வர்களை, சொந்த மக்களென்றும் பாராமல் போராளிகள் சுட்டுக் கொல்கிறார்கள். யார் சுட்டாலும் சுடவல்லவைதாமே இந்தத் துப்பாக்கிகள். முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற்ற இந்தப் பிரளயத்திலிருந்து நீலிபோல பிழைத்துவரும் பார்வதியம்மாளின் நினைவோட்டங்களே ஊழிக்காலம் என்னும் நாவலாக மாறியுள்ளது. இந்த நாவலை எழுதியவர் தமயந்தி சிவசுந்தரலிங்கம் என்னும் பெயரைக் கொண்ட தமிழ்க்கவி.

ஆன்றி என்றும் மம்மி என்றும் சகமனிதர்களால் அன்புடன் அழைக்கப்படும் பார்வதி அம்மாள் அறுபது வயதைத் தாண்டிய பெண்மணி. அவருடைய வானொலிப்பேச்சாலும் நாடக நடிப்பாலும் கவரப்பட்ட விரிவான நட்புவட்டத்துடன் வாழ்பவர் அவர். அனைத்துக்கும் மேலாக அவரும் ஒரு போராளி. தாயக விடுதலையைக் கனவாகக் கொண்டு களத்தில் உழைத்தவர். தன் இரண்டு பிள்ளைகளை களப்பலியாக இழந்தவர். அசைக்கமுடியாததாகக் கருதப்பட்ட கிளிநொச்சியை ராணுவம் சூழ்ந்து கைப்பற்றி அழிக்கத் தொடங்கியதும் அவருடைய நம்பிக்கை தளரத் தொடங்குகிறது. மருமகளையும் பெண்ணையும் பேரப்பிள்ளைகளையும் நடக்கவியலாத கணவனையும் காப்பாற்றும் பொறுப்பைச் சுமந்தாகவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிவிடுகிறார். அவர்களிடம் இருப்பதோ இரண்டு உந்துருளிகள்மட்டுமே. மிக அவசியமான துணிமணிகள், அவசியமான சமையல் பாத்திரங்கள், உணவுப்பொருட்கள், அடையாள அட்டைகளோடு அவர்கள் தோட்டமும் வீடும் கொண்ட பெரிய வசிப்பிடத்திலிருந்து வெளியேறத் தொடங்குகிறார்கள். கிளிநொச்சி, கோட்டைகட்டியகுளம், விசுவமடு, கண்டாவளா, சுதந்திரபுரம், தேவபுரம், இரணிப்பாலை, பொக்கணைக்களப்பு, முல்லைத்தீவு, வட்டுவாசல், முள்ளிவாய்க்கால் என ஒவ்வொரு இடமாக அவர்கள் இடம்பெயர்ந்தபடியே இருக்கிறார்கள். செல்லும் இடங்களிலெல்லாம் துப்பாக்கிச்சூடும் விமானத்திலிருந்து வீசப்படும் கொத்துக்குண்டுகளும் உயிர்களைப் பலிவாங்கியபடியே இருக்கிறது. இடைவிடாது பொழியும் மழை இன்னொரு பக்கத்தில் வதைக்கிறது.

கூடாரம் அடிப்பது, பதுங்குகுழி அமைப்பது, குழிக்குள் விரிக்க தார்ப்பாய்க்கும் உரப்பைகளுக்கும் தேடி அலைவது, மணற்பைகளை அரணாக வைப்பது, கழிப்பிடக்குழி வெட்டுவது, குடிநீருக்கும் பால் பவுடருக்கும் மாவுக்கும் அலைவது என ஒவ்வொரு இடத்திலும் வதைமிகுந்ததாக வாழ்க்கை மாறிவிடுகிறது. ஏற்கனவே வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்கு வேண்டும் என அழைத்துச் சென்றுவிட்ட போராளிகள் களப்பணிகளின் பற்றாக்குறையைச் சமாளிக்க, கூடாரங்களில் புகுந்து இளஞ்சிறுவர்களையும் சிறுமிகளையும் வலுக்கட்டாயமாக ஏற்றிச் செல்லும் கொடுமையும் நடக்கிறது. இப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எல்லோரும் எங்கே இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்னும் தகவலே தெரியாமல் பெற்றவர்களும் உறவினர்களும் தவித்துக் கொண்டிருக்கும்போது, என்றோ ஒருநாள் வானொலிச் செய்தியில் வாசிக்கப்படும் தியாகிகள் பட்டியலில் அவர்களுடைய பெயர்கள் படிக்கப்படுகின்றன. ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை உலுக்குகிறது.

ஒரு காட்சி. பதுங்கு குழிக்குள் குடும்பத்தோடு உடலைக் குறுக்கிக்கொண்டு எல்லோரும் ஒளிந்திருக்கிறார்கள். இடைவிடாது பொழிந்த மழையால் குழிக்குள் நீர் தேங்கி சேறாக இருக்கிறது. சேற்றின்மீது உரச்சாக்குகளை விரித்து, அவற்றின்மீது உட்கார்ந்திருக்கிறார்கள். எதிர்பாராத கணத்தில் விமானத்திலிருந்து வீசப்படும் கொத்துக்குண்டுகள் அந்த வட்டாரத்தில் மழையாகப் பொழிகின்றன. குண்டுமழை நின்று விமானம் வெளியேறிப் போன சத்தத்தைக் கேட்ட பிறகு குழியிலிருந்து எட்டிப் பார்க்கிறார்கள். பத்தடி தொலைவில் இருந்த மற்றொரு பதுங்குகுழிக்குள் குண்டு விழுந்து, அதற்குள் ஒளிந்திருந்தவர்கள் அனைவரும் துண்டுதுண்டாகச் சிதறி மரணத்தைத் தழுவிவிடுகிறார்கள். கழுத்தோடு சீவப்பட்டு தனியாகக் கிடந்த உடல் கண்முன்னால் துடித்து அடங்குகிறது.

இன்னொரு காட்சி. தினந்தோறும் இடம்பெயர்ந்து வாழும் சிக்கலில் நடக்கவியலாத நிலையில் உள்ள கணவனை மறுநாள் வந்து அழைத்துச் செல்வதாகச் சொல்லிவிட்டு புதிய இடம் தேடி நடக்கிறது குடும்பம். புதுக்கூடாரம் அமைத்துவிட்டு அவரை அழைத்துச் செல்ல அதற்கடுத்த நாள் வந்தபோது அவர் காணாமல் போய்விடுகிறார். தேடித்தேடி களைத்துப் போன மனைவி, விசாரணை அலுவலகத்தில் சொல்லி வைக்கிறாள். எந்தத் தகவலும் அவளுக்குத் தரப்படுவதில்லை. பல கூடாரங்கள் மாறிய பிறகு, அங்கிருந்த விசாரணை அலுவலகத்தில் சென்று கையில் இருந்த புகைப்படத்தைக் காட்டி, கண்டுபிடிக்க முடிந்ததா என்று கேட்கிறாள். தகவல் மையத்தில் இருந்தவன், ‘இவர் ஷெல் அடித்து இறந்துபோனார். நான்தான் எடுத்து அடக்கம் செய்தேன்’ என்று சொல்கிறான். நெஞ்சு பதற கூடாரத்துக்குத் திரும்பிய மனைவி என்றோ இறந்த கணவனுக்கு இறுதிச் சடங்கு செய்கிறாள்.

மற்றொரு காட்சி. ஒரு தற்காலிக மருத்துவமனையின் முன்னால் கூட்டம் கூட்டமாக ஈரத்தரையில் படுத்துக் கிடக்கிறார்கள். ரத்தம் ஒழுகும் உடல்கள். கையும் காலும் அறுந்துபோனவர்கள். ஏற்கனவே இறந்துபோய் அப்புறப்படுத்தப்படாத உடல்கள் ஒருபுறம். குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடப்பவர்கள் மறுபுறம். தமக்கு மருத்துவம் செய்யப்படுமா அல்லது மறுக்கப்படுமா என்று புரியாமல் ஏங்கிய கண்களோடு காத்துக் கிடக்கும் மக்கள் இன்னொருபுறம்.

இப்படி ஏராளமான காட்சிகள். கர்ப்பிணிப்பெண் கதறியழ குண்டடிபட்டு இறந்துபோகும் கணவன். கால் அறுந்துபோன குழந்தையையும் தலை சிதைந்துபோன குழந்தையையும் தோள்களில் சுமந்தபடி ‘கடற்கரைக்குச் செல்ல எது வழி? கடற்கரைக்குச் செல்ல எது வழி?’ என்று தப்பித்துச் செல்ல பார்வையில் பட்டவர்களிடமெல்லாம் வழி கேட்கும் தந்தை. மனைவியிடமிருந்து வலுக்கட்டாயமாக போர்முனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சில நாட்களிலேயே உயிரிழந்துபோன கணவன். உயிரோடு இருந்தால் ஏதோ ஓர் இடத்தில் சந்திப்போம் என்று சொல்லிவிட்டு பெற்றவர்களிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் சிறுவர்கள். பயிற்சியில்லாதவர்களை முனைமுகத்துக்கு அனுப்பிவிட்டு பாதுகாப்பான பதுங்குகுழி வீட்டுக்குள் குடும்பத்துடன் வசிக்கும் தளபதிமார்கள். நிவாரணத்துக்கு என வழங்கப்பட்ட உணவுப்பொருட்களை முறையாக வினியோகிக்காமல் போர்முனைக்குத் தேவைப்படுகிறது என எடுத்துச் செல்லும் போராளிகள். சொந்த மக்களையே இரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளும் வீரர்கள். எரிந்த வீட்டில் பிடுங்கியதுவரை லாபம் என மிக அதிக லாபத்தில் உணவுப்பொருட்களை விற்றுப் பணம் சம்பாதிக்கும் கயவர்கள். அணிமாறி கூட்டாளிகளையே காட்டிக் கொடுக்கும் துரோகிகள். எல்லோருடைய சித்திரங்களும் அடங்கிய தொகுப்பாக இருக்கிறது இந்த நாவல்.

மே மாதம் பதினேழாம் தேதி. வட்டுகாலைக் கடந்தபோது தடுத்து நிறுத்தப்பட்ட கூட்டத்தில் அந்த அம்மம்மா பார்வதியும் நிற்கிறார். சோதனைச் சாவடிக்கு அழைத்துச் செல்லப்படும் அவர்களில் போராளிகளையும் அவர்களுடைய குடும்பத்தாரையும் அடையாளம் காட்டிப் பிரித்து ராணுவத்திடம் ஒப்படைக்க அங்கே ஒரு துரோகி நின்றிருக்கிறான். அவனால் அடையாளம் கண்டுபிடிக்கப்படும் அம்மம்மா விசாரணைத் தனியறைக்கு அனுப்பப்படுகிறார். படல்களாலும் மணல்மூட்டைகளாலும் சுற்றி அடைக்கப்பட்ட தனித்தனி கூடுகள். அதன் பின்புறத்தில் துப்பாக்கியுடன் குறிபார்த்தபடி நிற்கும் ஒரு பெண் சிப்பாய். அந்தக் கூடாரத்தின் சிறிய துவாரத்தின் வழியே தன் துப்பாக்கி முனையை கூடாரத்துக்குள் நீட்டிப் பிடித்திருக்கிறாள். ஒருபுறம் விசாரணை மேசை. மறுபுறம் துப்பாக்கிமுனை. இரண்டுக்கும் இடையில் நின்றிருக்கும் அம்மம்மா பல வாரங்களுக்கு முன்னால் கிளிநொச்சியிலிருந்து கிளம்பிய தருணத்திலிருந்து சோதனைச் சாவடிக்கு வந்து சேர்ந்த கணம் வரைக்குமான நிகழ்ந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நினைத்து பார்க்கிறார். அந்த நினைவுகளின் தொகுப்பே நாவலாக மலர்ந்திருக்கிறது. இன்னும் விசாரணை நிகழவில்லை. விசாரணைக்குப் பிறகு அம்மம்மாவின் முடிவு என்ன என்பதை வாசகர்களின் ஊகத்துக்கே விட்டுவிடுகிறார் தமிழ்க்கவி.

தமிழ்க்கவியின் எழுத்தாளுமை, ஒவ்வொரு காட்சியையும் எவ்விதமான உணர்ச்சி வேகத்துக்கும் இடம் கொடாமலும் தன்னிரக்கத்துக்கு இடம் கொடாமலும் புகார்களை முன்வைக்கும் குரலுக்கு வழிகொடாமலும் ஒரு தகவல் தெரிவிப்பதுபோன்ற தொனியில் முன்வைத்தபடி செல்லும் தன்மையில் வலிமை பெற்றிருக்கிறது. ஒருவகையில் இந்த நாவல் சிதைந்துபோன ஒரு சரித்திரத்தின் ஆவணம். ஒரு வாக்குமூலம்.

காலம்காலமாக துன்பங்களைக் கடந்து வருவதே பெண்களின் வரலாறாக உள்ளது. அசோகவனத்துச் சீதை. புகார் நகரத்துக் கண்ணகி. பிள்ளையைப் புதைக்க சுடுகாட்டுப் பணமின்றி, வெட்டியானிடம் தாலியைக் கழற்றித் தரும் சந்திரமதி. பட்டினியால் தவிக்கும் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க இயலாத துயரோடு, ஒவ்வொரு பிள்ளையையும் கிணற்றுக்குள் தள்ளிக் கொல்ல முடிவெடுத்த நல்லதங்காள். இப்படி கோடிக்கணக்கான பெண்களின் கதைகளாகவே நம் புராணங்களும் வரலாறுகளும் எழுதப்பட்டுள்ளன. அவ்வரிசையில் வைத்துப் பார்கக்த்தக்கவரே பார்வதி அம்மாள் என்கிற அம்மம்மா. அவருடைய வரலாற்றை எழுதி நமக்கு நாவலாக அளித்துள்ளார் தமிழ்க்கவி. வாழ்க்கையும் வரலாறும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் காட்டாறு. அதைக் கடந்துவர அடியெடுத்து வைத்தவர் ஆன்றி என்கிற அம்மம்மா என்கிற பார்வதி அம்மாள். சொல்லப்பட்ட பார்வதி அம்மாளின் வரலாற்றுக்குப் பின்னே சொல்லப்படாத லட்சக்கணக்கான பார்வதி அம்மாள்களின் வரலாறுகளும் புதையுண்டு கிடக்கின்றன.

(ஊழிக்காலம். நாவல். ஆசிரியர் தமிழ்க்கவி. தமிழினி பதிப்பகம் வெளியீடு. 25-ஏ, தரைத்தளம், முதல் பகுதி, ஸ்பென்சர் பிளாசா. 769, அண்ணா சாலை, சென்னை-2. விலை. ரூ.270)

http://puthu.thinnai.com/?p=24645

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரே மூச்சில், 'ஊழிக்காலம்' நாவலை வாசித்து முடித்தேன்!

 

இறுதிப்போரின் ஒவ்வொரு சம்பவமும், அக்கு வேறு, ஆணி வேறாக அலசப்பட்டுள்ளது போல உள்ளது!

 

எமது இனத்துக்காக, இறுதிவரை போராடி மரணத்தைத் தழுவியவர்களின் கதை ஒரு பக்கம்!

 

தமது குழந்தைகளை, இயக்கம் பறித்துக்கொண்டு போய் விடுமே, எனப் பயந்து தமது குழந்தைகளைப் பதுங்கு குழிகளில், புதைத்து வைத்து, அவர்களது 'காலைக் கடன்களைக்கூடக் கழிக்க' வெளியே செல்ல விடாமல், அவற்றை கூடச் 'சட்டிகளில்' ஏந்திச் சென்று , கடற்கரையில் கொட்டிய, பெற்றோரின் அவலம் ஒரு பக்கம்!

 

தனது ஆறுமாதக் குழந்தையின் பசிக்காக, கால்கடுக்க வரிசையில் நின்று, ஒரு பக்கட் பால் மா கிடைத்தும், அதனைப் பெற்றுக்கொள்ளும் போது, 'செல்' வெடித்ததால், கீழே விழுந்த தாயிடமிருந்து, இன்னொருவர் பால்மாவைப் பறித்துக் கொண்டாடிய அவலம்!

 

பாலகுமாரனின் மனைவி 'படகில்' உயிருக்காகத் தப்பிச் செல்லும் போது, அந்தப்படகு நோக்கிச் சுடப்பட்டு, 'அவர்கள்' கரைக்குத் திரும்பிய அவலம்!

 

கடைசியில் ஒரு மாதிரித் தப்பி வெளியே வரும்போதே, வரிசையில் வரும்போது, காட்டிக்கொடுக்கப்பட்டு, மயிரிழையில் தப்பிய 'பார்வதியின்' அவலம்!

 

வீட்டு வளவினுள், பலமான பங்கர்கள் இருந்தும், 'செல்' விழும்போது, தமது படலைகளை, இறுகக் கட்டிவிட்டு, உள்ளே பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்திருந்த, 'சக தமிழர்களின்' மனிதாபிமானம்!

 

ஊடகவியலாளர் ' சத்தியமூர்த்தியின்' மரணம்!

 

எல்லோரும் படலைகளை இழுத்துக் கட்டிவிட்டபோதும், தனது வளவினுள் 'இடங்கொடுக்க' முன்வந்த, 'ஆடு வெட்டுபவன் ஒருவனது' மனிதாபிமானம்!

 

இறுதி நேர யுத்தத்தில், 'தான் தோன்றித்தனமான' சில மேலாளர்களின், நடத்தையும், சுயநலத் தன்மையும்!

 

நிவாரணத்துக்காகவென மக்களுக்காக வழங்கப்பட்ட உணவுகளையும், அத்தியாவசியப் பொருட்களையும் 'பதுக்கி வைத்தோ' அல்லது ' அறா விலைக்கு' விற்றோ, பணம் பண்ணிய 'மனிதாபிமானமற்ற நடத்தை'!   

 

இவற்றைக் கண்ணால் கண்டும், எதுவும் செய்யவியலாமல் தவித்த போராளிகளின் 'அங்கலாய்ப்புகள்'!

 

ஒரு புறம் இராணுவத்தின் 'அடாவடி தாக்குதல்கள்'! மறு புறம், சில 'மேலாளர்களின்' சுயநலமான, தான்தோன்றித்தனமான 'அடக்குமுறை' !

 

நடுவில், பசி, பட்டினி, நோய்கள், மருந்தின்மை, சொந்தங்களை இழந்துவிட்ட அல்லது தொலைத்துவிட்ட சோகம், மழை, காற்று, என்பனவற்றால் பாதிக்கப்பட்ட குடிமக்கள்!

 

தனிப்பட்ட அரசியல்களை, உணர்வுகளை, அபிப்பிராயங்களை ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்து விட்டு, அனைவரும் நிச்சயமாக, வாசிக்க வேண்டிய நாவல்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.