sayanthan

ஊழிக்காலம் (நாவல்) - தமிழ்க் கவி

Recommended Posts

xtamil_1893101h.jpg.pagespeed.ic.h7o6WxZ

 

பெற்றெடுத்த பிள்ளைகளில் இருவரைக் களத்தில் பலி கொடுத்துவிட்டு, பேரப் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக அடிக்கடி இடம்பெயர்ந்து, கடைசியில் ‘அயல்மண்ணில்’ மனம் கூசி நிற்கும் அறுபதைக் கடந்த ஓர் அம்மம்மாவின் கதையைச் சொல்கிறார் தமிழ்க் கவி.

குழந்தைகளை மட்டும் தூக்கிக் கொண்டு முதியோர்களையும் ஆடு மாடு களையும் அப்படியே கைவிட்டுச் செல்ல நேரும் துயரம். உணவுப் பொருட்களையும் எரிபொருளையும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல். கைகால்களை நீட்டிப் படுப்பதும்கூட நிறைவேறாத கனவாகிப் பதுங்கு குழிகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை. குழிகளுக்கு உள்ளே மழை நீர் நிறைந்து நிற்கும் அவலம். எறிகணைச் சத்தம் கேட்டு அலறியபடி அருகில் ஓடிக்கொண்டிருப்பவர்களை அழைத்துத் தங்களது பங்கருக்குள் இருத்திக்கொள்ளும் நேயம்...

இவற்றுக்கிடையில் காதலும் மலர்கிறது. அடுத்த நொடியிலோ அடுத்த நாளிலோ மரணம் காத்திருக்கும் நேரத்தில் இணைகளை மனதார வாழ்த்தி நகரும் கருணை மனங்களும் உண்டு. உயிர் போகும் வேளையிலும் உடைமைப் பற்றையும் உயர் சாதி மனோபாவத்தையும் இழக்க மனமில்லாதோரும் உண்டு.

ஆண், பெண் என்று அடையாளம் காண முடியா வண்ணம் உடலைக் கரிக் கட்டைகளாக்கிவிடும்புதுவித எறிகணை களின் தாக்குதல் தொடங்குகிறது. பாதுகாப்புப் பகுதிகளென்றோ மருத்துவ மனைகளென்றோ அது பார்ப்பதில்லை.

உயிர் வாழும் ஆசையை முந்திக் கொண்டுவிடுகிறது பசி. தலைக்கு மேலாக எறிகணைகள் பறந்து கொண்டிருக்கையிலும் நிவாரணப் பொருட்களுக்கான வரிசை நீண்டு கொண்டே இருக்கிறது. இடம்பெயரும் வேளையில் தங்களது பிள்ளைகளைக் கட்டாயச் சேவையிலிருந்து பாதுகாத்தாக வேண்டும் என்ற பரிதவிப்பும் கூடிக் கொள்கிறது.

நிவாரணப் பொருட்களைப் பங்கிட்டு வழங்காமல் இயக்கத்தவர்கள் தங்களுக் குள்ளேயே தாராளமாகப் புழங்கிக் கொள் கிறார்கள். அனுபவப்பட்ட படைவீரர்கள் பொறுப்பாளர்களின் வீட்டில் பணிபுரிய, அனுபவம் இல்லாத சிறுபிள்ளைகளைக் களத்திற்கு அனுப்பிவைக்கிறார்கள். பொறுப்பாளர்களில் சிலர் மனைவி மக்களுடன் பாதுகாப்பாகவே தங்கியிருக் கிறார்கள். உயிராசையால், மக்கள் யாரைப் பாதுகாவலர்களாகக் கருதினார் களோ அவர்களையே பகைவராய்க் கருதும் நிலை. கூடாரத்தின் அருகே இயக்கத்தவர்கள் ஒதுங்கினால், அவர் களை நோக்கிவரும் விமானங்களால் தாங்களும் தாக்கப்படலாம் என்று அஞ்சி விலகும் நிலை.

எறிகுண்டுகளின் இடைவிடாத சத்தத்திற்கு இடையில், சோலாரின் துணை கொண்டு தொலைக்காட்சியும் பார்க்கிறார்கள். சென்னையில் நடந்த உண்ணாவிரதக் காட்சிகள் வந்து போகின்றன. அந்நிலையில் கேலி பேசி சிரித்திடவும் ஒரு வாய்ப்பு.

எறிகணை ஆபத்துக்கிடையிலும் பிறந்த நாளுக்குப் பலகாரம் செய்து பகிர்ந்துகொள்கிறார்கள். பூச் செடிக்கு இடம் விட்டுப் பதுங்குகுழி வெட்டுகிறார்கள். இடம்பெயர்ந்து உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது என்று மதம் மாறுகிறார்கள்.

ராணுவத்தின் கைகளில் சிக்கினால் ஒருவேளை உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கலாம் என்றெண்ணித் தப்பிக்கையில் சுடப்பட்டுச் சாகிறார்கள். இனி யுத்தத்திற்கு வாய்ப்பில்லை என்றானதும் சீருடையைக் களைந்து விட்டு பங்கருக்குள் கிடக்கும் யாருடைய உடைகளையோ எடுத்து அணிந்து கொண்டு சரணடைய வரிசையில் நிற் கிறார்கள். மொத்தத்தில் வாழ விரும்பிய, வாழ்வோம் என்று நம்பிய மக்களின் கதையை ஊழிக்காலமாக்கியிருக்கிறார் தமிழ்க் கவி.

ஊழிக்காலம் (நாவல்), தமிழ்க் கவி, 
தமிழினி, ஸ்பென்ஸர் பிளாஸா, 769 அண்ணா சாலை, சென்னை-2. கைபேசி: 9344290920, 
விலை: ரூ.270

 

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article6008111.ece?homepage=true

Share this post


Link to post
Share on other sites

1956-ல் வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மாநாடு நடந்தபோது எனக்கு எட்டு வயது. அப்பு அந்த மாநாட்டு ஊர்வலங்களிலெல்லாம் என்னைத் தனது தோள் மீது ஏற்றி நடந்துசென்றார். ‘துப்பாக்கிக் குண்டு விளையாடும் பந்து’, ‘சிறைச்சாலை பூஞ்சோலை’ என்ற கோஷங்களிலெல்லாம் நானும் குரல் கொடுத்திருக்கிறேன்...

...பலநாட்கள், பலமாதங்கள், பலமுகாம்கள் என அலைந்தேன். அவன் இன்னமும் இவர்களிடம் கைதியாகத்தான் இருக்கிறானோ என்ற சந்தேகமும் என்னைக் கலங்க வைத்தது. இந்நிலையில் விடுதலைப் புலிகளால் விடுவிக்கப்பட்ட சிலரை நான் சந்தித்து அவர்களிடம் மகனைப் பற்றிக் கேட்டேன். அவர்களில் யாரும் அவனைப் பார்த்திருக்கவில்லை. எனினும் புலிகளிடமுள்ள சித்திரவதை முறைகள், விசாரணை முறைகள் பற்றி அவர்கள் கதைகதையாக என்னிடம் சொன்னார்கள்.

‘கடவுளே! என்மகன் புலிகளிடம் கைதியாக இருந்தால் அவனைக் கொன்றுவிடு’ என்று கோயில் வாசலில் கிடந்து கதறினேன்.

...ஒரு பாடலில் ‘முருகனுக்கே அவன் நிகரானவன்’ என்ற வரி இடம் பெற்றிருந்தது. தலைவர் மிகுந்த வேதனையுடன் ‘இதெல்லாம் என்ன பேத்தல், இந்தப் பாடலை ஒலிபரப்ப வேண்டாம்’ என்றார். யார் கேட்டார்கள்! எந்த ஒலிநாடாவிலும் அவரைப்பற்றி ஒரு பாடல் கட்டாயம் போட்டார்கள். அவரிடமிருந்தது புகழ்ச்சிக்கு மயங்கும் குணம் என்ற பிரமை எனக்கும் உண்டு. அவர் காதலித்த பின்பாக காதல் சரி என்றது போல, அரசனுக்குப் பின் இளவரசன் என்ற கொள்கையும், முன் வழுக்கையை மறைக்க அவர் தொப்பி அணியவேண்டி இருந்தபோது அனைத்துப் போராளிகளுக்கும் தொப்பி சீருடையின் ஒரு பகுதியானது எனவும் நான் நினைக்கிறேன். அவரும் சாதாரண மனிதர்தானே....

...புலிகள் போரிட்டு நாட்டைப் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. இது ஒரு வெல்லப்பட முடியாத யுத்தம் என்பதை நான் இயக்கத்தில் இணைவதற்கு முன்பே என்னால் உணர முடிந்தது. தலைவரே ஒரு தடவை “நாம் இப்படித் தாக்குதல்களைச் செய்து நாட்டை அடையமுடியாது. அது ஒரு பேச்சுவார்த்தையில் தான் முடியும். நமது தாக்குதல்கள் மூலம் ஒரு நெருக்கடியை அரசாங்கத்துக்குக் கொடுத்து அதைப் பேச்சுவார்த்தைக்கு இழுப்பதே எனது நோக்கம்” என்றார்...

...ஆயினும் வெளியே தெரிந்த புலிகளின் பிரமாண்ட பிம்பம்போல உள்ளே நிலைமைகள் இருக்கவில்லை. இவர்கள் வெல்லப்போவதில்லை. சாண் ஏற முழம் சறுக்கும் நிலையே இருந்தது. தலைவருடன் முன்னரங்கக் காவல் நிலைகளில் சாவை எதிர்பார்த்து எதிரிக்காகக் காத்து நின்றவர்களை மட்டுமே போராளிகள் எனக் கருத முடிந்தது. அதேவேளையில் இயக்கத்தின் உள்ளே அதிகாரப்போட்டி, பொறாமை ,தகடுவைத்தல் (கோள்சொல்லுதல்), காத்து இறக்குதல் (பதவி பறிப்பது), அதிகாரமுள்ளவருக்கு யாரையாவது பிடிக்காது போனால் பிடிக்காதவரை முன்னரங்கக் காவல் நிலைக்கு அனுப்புவது எனப் பல சீர்கேடுகள் நிறைந்து கிடந்தன...

...புலிகளின் மட்டு - அம்பாறை பகுதிதான் முதலில் கட்டாய ஆட்சேர்ப்பை 2003-2004 காலப்பகுதியில் செய்தது. வன்னியில் 2006-ன் பிற்பகுதியில் வீட்டுக்கொருவர் கட்டாயம் எனவும், இயக்கத்திலிருந்து விலகியவர்கள் கட்டாயமாக மீண்டும் இணைக்கப்பட்டதும் நடந்தது. இயக்கத்திலிருந்து விலகக் கடிதம் கொடுத்து, தண்டனைக் காலம் இரண்டு வருடங்கள் முடிந்து வீட்டுக்குப் போனவர்கள் வர விரும்பவில்லை. அவர்களைக் காவற்துறையினர் வேட்டையாடிப் பிடித்தனர். அகப்பட்டவர்கள் கைதிகள் போல் ட்ரக்குகளில் ஏற்றப்பட்டு மணலாற்று காட்டுப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வீதியில் இந்த ட்ரக்குகளில் பெண்கள் தனியாகவும், ஆண்கள் தனியாகவும் கொண்டு செல்லப்படும்போது அழுதுகொண்டே செல்வார்கள். அப்போதெல்லாம் என் மனம் அழியும்...

...ஒரு போராளி புதிய போராளியாக இணைந்த பெண்ணொருவரை பலாத்காரம் செய்த சம்பவம் ஒன்றும் பிடிபட்டது. எனினும் அவன் சிறு விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டான். காரணம், பிள்ளை பிடியில் அவனை மிஞ்ச ஆளில்லை என்பதாகும். ஈற்றில் ஒரு சந்தர்ப்பத்தில் மக்கள் அவனைக் கொன்றனர். அவனுக்கு லெப்.கேணல் விருது கூட வழங்கப்பட்டது. இப்படி நிறையச் சம்பவங்களுண்டு...

...இன்பம்- துன்பம் எல்லாமே சமமாகிவிட்டது. அவமானம் என்று எதையும் கருதவில்லை. அவை எனக்களித்த பாடங்கள் தெளிவானதாக இருந்தன...

http://www.shobasakthi.com/shobasakthi/?p=1157

Share this post


Link to post
Share on other sites

தமிழ்க்கவி அம்மாவை சிறிய வயதில் வரிச்சீருடையுடன் தெருக்களிலும் கூடட்டங்களிலும் சிவப்பு எம்.ரி.நையின்டி மோட்டார் சைக்கிளில் கம்பீரமாக சொல்லுவதைப் பார்த்திருக்கிறேன். நான் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் பணியாற்றிய காலங்களில் அன்றைய அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் மாதாந்தம் நடக்கும் கூட்டங்களில் அடிக்கடி குறுக்கிட்டு பேசிக் கொண்டிருப்பார். அவர் அங்கு பேசிய விடயங்கள் பல இன்னமும் எனக்கு நினைவிருக்கின்றன. விபத்தில் இறந்தவர்களின் படங்களை விபத்து விழிப்புணர்வு படமாக போடக்கூடாது. அது அவர்களின் குடும்பத்தினரின் மனதைப் பாதிக்கும் என்றார் ஒருநாள். 

இயக்கத்தை வளர்ப்பது பற்றிய ஆலோசனைகளை நெடுகச் சொல்வார். விதவிதமான சாப்பாடுகள் செய்வது, பழைய கதைகள் என்று தமிழ்க்கவி அம்மா என்ன பேசினாலும் அதை முழுவதுமாக சிரித்தபடி கேட்டுக் கொண்டிருப்பார் தமிழ்ச்செல்வன். “நான் அமைப்பில் விரும்பித்தான் சேர்ந்தேன். மறுபடியும் கழற்றிக்கொள்ள முடியாமல் நன்கு மாட்டிக்கொண்டேன்.” என்று இன்றைக்குச் சொல்பவர் அன்று விரும்பி முழுக்க முழுக்க உடன்பட்டு இயக்கத்துடன் வாழ்ந்தவராகவே பேசுவதைப் பார்த்திருக்கிறன். தமிழ்க்கவி அம்மா பேசுவதில் பெரும்பாலானவை இயக்கம்மீதான பாராட்டுக்கள். இயக்கத்தை விட்டு கழற முடியாது தவித்தவர் போல அன்றைக்குத் தெரியவில்லை. 

ஷோபாசக்தியுடனான உரையாடலில் சில இடங்களில் இயக்கம் குறித்து அவதூறுகளை இட்டுக்கட்டி முரண்படுவதாக காட்டிக்கொள்ளும் தமிழ்க்கவி அம்மா அன்றைக்கு எப்படி? எதற்காக? ஒன்றியிருந்தார்? 

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் ஒருநாள் சுடரொளியில் தமிழ்க்கவி அம்மா எழுதிய கதை ஒன்றைப் படித்தேன். தன்னுடைய நிலையை, போராட்டத்தை, நியாயத்தை, இயக்கத்தைப் பற்றிய தன் அபிப்பராயங்களை அந்தக் கதையில் எழுதியிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அரசின் தடுப்புமுகாங்களுக்குள் இருந்து கொண்டே இப்படி எழுதியிருக்கிறாரே என்று நினைத்தேன். பம்பமடுமுகாம் தடுப்பிலிருந்து விடுதலை பெற்ற ஒரு போராளியை வவுனியாவில் சந்தித்போது தமிழ்கவி அம்மா எங்கே என்று கேடடேன். அவரின் அந்த சிறுகதை பற்றியும் சொன்னேன். 

முன்னாள் போராளிக்கு தமிழ்கவி அம்மாவின் பெயரைக் கேட்டவுடன் முகம் மாறியது. அவர் இராணுவத்தினருடன் நல்ல மாதிரி. சிங்களமும் தெரியும்தானே. அவரால் எங்களில் சிலருக்கு பிரச்சினைகள் ஏற்பட்டன என்றார். வெற்றிச்செல்வி அக்காவைச் சந்தித்போதும்கூட இதை அவர் எனக்குச் சொல்லியிருக்கிறார். ஏதும் நிர்பந்தம் காரணமாக அவர் அவ்வாறு இயங்கினாரா என்றும் அவர்களிடம் கேட்டேன்?

தமிழ்நாடு வந்தபோது அவரது தொலைபேசி எண் வாங்கி பேசினேன். மண் ஈழத் திரைப்பட நாயகன் தேவர் அண்ணாவின் வீட்டில் வைத்து சந்தித்தோம். அன்றைக்கு தமிழ்கவி அம்மாவுடன் நிறைய விடயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். இன்றைய ஷோபாசக்தியின் உரையாடலில் பேசிய விதத்திற்கும் அன்று தேவர் அண்ணாவின் வீட்டில் பேசியதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருந்தது. தலைவர் இருக்கிறார். அவரை ஒன்றும் செய்ய இயலாது. அவர் வருவார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். 

புலி எதிர்ப்பு அரசியல் குறித்து பேசினோம். எங்கள் பல்லை குத்தி நாங்கள் மணக்ககூடாது என்றார். இயக்கம் பற்றிய குற்றச்சாட்டுக்கள் பலவற்றை நிராகரித்தார். இறுதி யுத்த நாட்களில் நடந்த பல கதைகளை சம்பவங்களை சொல்லிக் கொண்டிருந்தார். இன்றைக்கு வேறொரு தமிழ்கவி அம்மாவைப் பார்க்கிறோம். இயக்கமாக இருந்து எழுதுகிறேன் என்று சொல்லிக் கொண்டு புலிகளுக்கு வெளியில் நின்று பேசுகிறார். அன்றைக்கு புலிகளின் குரலிலும் தேசியத் தொலைக்காட்சிகளிலும் பார்த்த தமிழ்கவி அம்மாவை தேவர் அண்ணாவின் வீட்டில் நான் சந்தித்தேன். 

அன்றைக்கு தமிழ்க்கவி அம்மா மீண்டும் புலிகளின் குரலில் பணியாற்றவும் இந்தியாவுக்கு நிரந்தரமாக வரவும் விரும்பினார். புலிகளின் குரலில் மீண்டும் வேலை கிடைத்திருந்தால் தொடர்ந்தும் அந்தத் தமிழ்கவி அம்மாவைப் பார்த்திருக்க முடியும். இந்த நேர்காணலில் பதில்கள் வேறு மாதிரி அமைந்திருக்கும். இப்படித்தான் கர்ணனும் தடுப்பை விட்டு வெளியில் வந்தபோது என்னை ஷோபாசக்தி எடுத்த நேர்காணலை பாராட்டி பேஸ்புக்கில் கடிதம் எழுதினார். வெளியில் வந்து சில மாதங்கள் ஆக மெல்ல மெல்ல சிலரால் புலி எதிர்ப்பாளராக மாற்றப்பட்டார். அவ்வாறுதான் தமிழ்கவி அம்மாவும் மாற்றப்பட்டிருக்கிறார். முள்ளிவாய்க்காலை கடந்து முள்வேலி முகாமை கடந்தும் வந்தவர்கள் ஷோபாசக்தி போன்றவர்களை கடந்து வர முடியாமல் போகிறது. 

முடிந்தவரை புலி எதிர்பாளர்களை உருவாக்குவதுதான் ஷோபாசக்தி போன்றவர்களின் கடமை. புலிகள் இயக்கத்திற்கு எதிரான அவதூறுகளை எழுதுவதும் மற்றவர்களை சொல்லத் தூண்டுவதும்தான் அவர்களது தொழில். அதற்காக அவர்கள் தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். என்னிடம் கேட்ட சில கேள்விகளும் தமிழ்கவி அம்மாவிடம் கேட்ட சில கேள்விகளும் ஷோபாசக்தியின் குரூரத்தின் வெளிப்பாடுகளே. சில கேள்விகள் ஷோபாசக்திக்கு புலிகள் தொடர்பாக எந்த அறிவு இருந்திருக்கிறது என்ன பார்வை இருந்திருக்கிறது என்பதை எல்லாம் தெளிவாகக் காட்டுகிறது. 

புலிகளையும் ஈழத்தையும் காலத்தையும் அறியாத - உணராத ஒருவர் வேறு எப்படிக் கேட்பார்? தமிழ்கவி அம்மாவின் ஊழிக்காலத்தில் புலிகள் பற்றி சொல்லப்பட்டவை குறித்து என்னிடம் “சொல்லு சொல்லு” என்று சீண்டிக்கொண்டிருந்தார் ஷோபாசக்தி. தமிழ்கவி அம்மாவையும் துரோகி என்று சொல்ல வேண்டும் என்றே அவர் எதிர்பார்த்தார். அதன்மூலம் தமிழ்கவி அம்மா புலிகளை எதிர்க்கும் தீவிர புலி எதிர்பப்பாளராக மாறுவார் என்பதும் அவர் கணக்கு. 

ஒரு காலை இழந்ததாலும், இரண்டு பிள்ளைகளை இழந்ததாலும், நான்கூட என் சகோதரனை களப்பலி கொடுத்ததினாலும், இன்றைய இலங்கை அரசாங்கத்தின் அமைச்சராக உள்ள கருணா அம்மான் போராளியாக பல போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தாலும் இன்று பொய்களை சொல்ல - அவதூறுகளைச் சொல்ல முடியாது. 

தமிழ்க்கவி அம்மா இயக்கத்தில் இணைந்திருந்தபோதும் நேரடியாக அரசியல் செயற்பாடுகளிலோ போர் நடவடிக்கைகளிலோ ஈடுபட்டவர் இல்லை. கலைத்துறைச் செயற்பாட்டிலேயே ஈடுபட்டார். அன்றைக்கு சீருடை அணியாமல் தமிழ்க்கவி அம்மா செய்த வேலைகளைச் செய்த பல எழுத்தாளர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் இன்னமும் ஈழ மண்ணில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்க்கவி அம்மா இயக்கத்தில் தன்னை முன்னிலைப்படுத்தி சற்று அதிகமாகவே பேசுவார். அதைப் போல சில விடயங்களை உண்மைக்கு புறம்பாக சொல்லியிருக்கிறார். 

தமிழ்கவி அம்மா ஏதும் நிர்பந்தங்கள் காரணமாக நாட்டு சூழ்நிலை காரணமாக இவ்வாறெல்லாம் எழுதுகிறார் பேசுகிறார் என்றே நான் நினைத்தேன். யுத்தம் முடிந்து சில மாதங்களில் என் வாயிலிருந்து புலி எதிர்ப்பை எதிர்பார்த்த ஷோபாசக்தி இப்போது சூழ்நிலைக் கைதியாக வாழும் தமிழ்கவி அம்மாவையும் இவ்வாறு பேச வைத்திருப்பது பெரும் அரசியல் நோக்கம் கொண்டது. இதன் மூலம் ஷோபாசக்திக்கு ஒரு புலியெதிர்ப்பாளரும் இந்த வார சர்ச்சைக்கான விடயமும் கிடைக்கும். 

தமிழ்க்கவி அம்மா தனது புதிய நாவலை ஊழிக்காலத்தை வெளியிட்ட பதிப்பகத்திற்குக் கொடுத்திருக்கிறார். அந்தப் பதிப்பகம் அந்த நாவலை வெளியிட மறுத்துள்ளது. தடுப்பில் இருந்தபோது இராணுவம் பாலும் தேனும் கொடுத்தது என்ற ரேஞ்சில் அந்த நாவல் எழுத்தப்பட்டிருந்ததாம். அந்த நாவலை வெளியட்டு இராணுவத்தால் இறுதியுத்த களத்தில் துப்பாக்கிகளால் பிடரிகளில் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளுக்கு நான் துரோகம் இழைக்கவில்லை என்று அந்த பதிப்பாளர் நாவலை வெளியிட மறுத்திருக்கிறார். தடுப்புமுகாம் பற்றிய அம்மாவின் வெளிவராத அந்த நாவல் குறித்து அறிந்தபோது பம்பைமடுவிலிருந்து வெளியில் வந்த போராளிகள் தமிழ்க்கவி அம்மா பற்றி சொல்லியது நினைவுக்கு வந்தது. 

ஊழிக்காலத்தை வெளியிடுவதாக சொல்லி வாங்கிய இன்னொரு பதிப்பகம் வெளியிட மறுத்தபோது எனது நாவலை மகிந்த ராஜபக்ச வெளியிடுவார் என்று தமிழ்க்கவி அம்மா சொன்னராம் என்பதை நான் அப்போது நம்பவில்லை. ஆனந்தவிகடன் பேட்டி வந்த அன்று இரவு அவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது எனக்கு பொறுப்பதாக இருந்த இராணுவ அதிகாரியே இந்த நாவலை இஞ்ச வெளியிடுவம் என்று கேட்டவர் என்று சொன்னார். பிரச்சினை வராதா என்று நான் கேட்டபோது இராணுவத்திற்கு சொன்ன கதையைத்தான் நாவலாக எழுதியதாகவும் சொன்னார். 

முதன் முதலில் தமிழகத்திற்கு வந்தபோது ஆனந்தவிடகனுக்கு கொடுத்த பேட்டியும் (எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்! http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=14894) ஊழிக்காலம் நாவலுக்குப் பிறகு இந்த வருடம் ஆனந்த விகடனுக்கு கொடுத்த பேட்டியும் (“இப்படித்தானே வாழமுடியும்?” http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=91472) தமிழ்க்கவி அம்மாவின் மாற்றத்தை தெளிவாக காட்டுகிறது.

தமிழ்க்கவி அம்மாவின் இந்தச் சடுதி மாற்றங்களும் தக்கெணப் பிழைத்தல்களும் எதற்கானவை? அன்றைக்குப் பேசியவை உண்மையா? இன்றைக்குப் பேசுபவை உண்மையா? இந்த புனைவுகளின் நோக்கம் என்ன? தமிழ்க்கவி அம்மா அனுபவித்தவை, எதிர்கொண்டவை, இழந்தவை கொஞ்சமல்ல. பெரும்பாலான ஈழச்சனங்களும் அதை சந்திருக்கின்றன. அவர் இந்த நேர்காணலில் ஷோபாசக்தியின் அரசியலுக்கு பலியாக்கப்பட்டிருப்பதும் சாதாரணமான விடயமல்ல. அதைப்போல புலிகள் இல்லை. உதவிகள் இல்லை. வருவாய் இல்லை. பணம் இல்லை என்பதற்காக மாற்றிப் பேசுவர்களும் மிக மிக ஆபத்தானவர்கள். அவர்களின் நிலைப்பாடுகள் அதிகாரத்துடனும் லாபங்களுடனும் சம்பந்தப்பட்டது. 

"தலையையும் வாலையும் காட்டிக் கொண்டுதான் வழலாம் - இப்பிடித்தானே வாழ முடியும்" என்று நீங்கள் சொன்னது நீங்கள் வாழும் நிலையைத்தான் சொல்லியிருக்கிறியள் என்று அப்போது தமிழ்க்கவி அம்மாவுக்குச் சொன்னேன். வேற என்ன தம்பி செய்யிறது? என்றார். ஷோபாசக்தி உரையாடலில் எந்தளவுக்கு தலையையும் வாலையையும் காட்டியிருக்கிறார் என்பது தமிழ்க்கவி அம்மாவுக்குத்தான் தெரியும். 

தீபச்செல்வன்

Share this post


Link to post
Share on other sites

ஏதோ தமிழ்கவி சொல்லித்தான் இந்த விடயங்கள் வெளியில் வரப்போகின்றது என்பது போலிருக்கு பலரின் கருத்துக்கள் .

முள்ளிவாய்கால் முடிவிற்கு முன்னரே சர்வதேசம்  இதை சொல்லிவிட்டது .அவர்கள்தான் கிணற்றுக்குள் இருந்தார்கள் புலம் பெயர்ந்த நீங்களுமா ?

போர்குற்ற விசாரணை அறிக்கையை எடுத்து பாருங்கோ .அரசிற்கு எதிராக  குற்றங்கள் விடுதலை புலிகளுக்கு எதிராக மூன்று குற்றங்கள் தாக்கல் பண்ணியிருக்கு .

நிலாந்தனும் ,யோ கர்ணனும் ,தமிழ்கவியும் சொல்லித்தான் புலிகளை பற்றி தெரியவேண்டுமோ ?

 
மோடி அவர்களுக்கு கொலைவெறி காரன் என்று விஸா வழங்க மறுத்த சர்வதேச நாடுகள் அதை இப்போ அகற்றி இருக்கிறார்கள்.
சர்வதேசம் எல்லாவற்றையும் உத்து கவனித்து கொண்டு இருக்கிறது.
சர்வதேசத்தின் காதில் பூ சுற்ற பார்த்த இந்திய பாகிஸ்தானிய பத்திரிக்கைகள் முகத்தில் இன்று நன்றாக கரி பூசி  இருக்கிறது சர்வதேசம்.
அன்று குஜாரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வெறும் பொய்செய்தி.
 
இன்று சர்வதேசம் அதை கண்டுபிடித்திருக்காவிட்டால் எல்லோரும் முஸ்லிம் மக்கள் குயாரத்தில் கொலை செய்யபட்டார்கள்  என்பதை நம்பி கொண்டிருந்திருப்போம்.
 
அச்சா பிள்ளை மோடி அவர்களின் புனிதம் இன்றாவது வெளியில் வந்திருக்கிறது. ஒரு இந்துவாக இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
 
சர்வதேச [பணிகள் தொடரவேண்டும் என்று காளி அம்மனுக்கு காவடி ஆட இருக்கிறேன். 

Share this post


Link to post
Share on other sites

போறா போக்கில அமிர்தலிங்கம் புல் தடுக்கி விழுந்து செத்தார் ,திருச்செல்வம் புட்டு தின்று விக்கி செத்தார் ,சிறி சபாரட்ணம் புகையிலை தோட்டத்தில் பாம்பு கடித்து செத்தார் முஸ்லிம்கள் யாழ்பாணம் பிடிக்காமல் தாங்களாகவே  ஓடினார்கள் என்று எல்லாம் எழுதுவீர்கள் போல கிடக்கு ,  அடி எங்கயோ பலமாக விழுந்திருக்கு போல  :D  

எங்கட பிரச்சனையை இன்னொருவன் சொல்லி கேட்க வேண்டிய தேவை எனக்கு இல்லை ஆனால் சிங்களத்தை சர்வதேசத்திற்கு இழுக்கும் போது சர்வதேசம் எம்மை பற்றி பதித்திருப்பதையும் பார்க்கவேண்டும் .

Share this post


Link to post
Share on other sites

போறா போக்கில அமிர்தலிங்கம் புல் தடுக்கி விழுந்து செத்தார் ,திருச்செல்வம் புட்டு தின்று விக்கி செத்தார் ,சிறி சபாரட்ணம் புகையிலை தோட்டத்தில் பாம்பு கடித்து செத்தார் முஸ்லிம்கள் யாழ்பாணம் பிடிக்காமல் தாங்களாகவே  ஓடினார்கள் என்று எல்லாம் எழுதுவீர்கள் போல கிடக்கு ,  அடி எங்கயோ பலமாக விழுந்திருக்கு போல  :D  

எங்கட பிரச்சனையை இன்னொருவன் சொல்லி கேட்க வேண்டிய தேவை எனக்கு இல்லை ஆனால் சிங்களத்தை சர்வதேசத்திற்கு இழுக்கும் போது சர்வதேசம் எம்மை பற்றி பதித்திருப்பதையும் பார்க்கவேண்டும் .

 
இவளவு நாளும் சர்வதேசம் சொல்லிபுட்டுது என்று ஒரு தாம்பாள தட்டுடன் அலைந்தீர்கள்.
 
இப்போ யாரும் சொல்ல தேவை இல்லை என்று புதிதா ஒரு தட்டு எடுத்து பிடிக்கிறீங்கள் .....
 
என்னும் எத்தனை தட்டு வைத்திருக்கிறீர்கள் ??
 
உங்களை நினைத்தால் ஒருபக்கம் பாவமாகமும் இருக்கிறது.
எதனை தட்டுடன் அலைய வேண்டிகிடக்கு.....

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.