• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • வந்தால் சுடுவேன் என்கிறாரோ.....! எப்படிப் பயணிகள் வருவார்கள்...?? 
    • ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை- சுமந்திரன் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அறிவித்திருந்தன.இதனையடுத்து குறித்த கோரிக்கைகள் உள்ளிட்ட ஆவணத்துடன் வந்தால், அது தொடர்பாக பேசத் தயாரில்லை என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்துரைத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசும் முடிவு ராஜபக்ஷ அணியினருக்கு இருந்ததென்றும் அந்த முடிவு தற்போதும் இருந்தால் அவர்களை சந்திக்கத் தயார் என தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை என்றும் இறுதி முடிவை எட்டுவதற்கு முன்பு அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள 13 அம்ச கோரிக்கைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மறுத்தாலும் அவரை சந்திக்க தாங்கள் தயாராகவே இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது   http://www.samakalam.com/செய்திகள்/ஜனாதிபதித்-தேர்தலில்-யார/
    • அமெரிக்காவில் இந்த இலக்கத்தில் கட்டடமும் உள்ளது. https://en.m.wikipedia.org/wiki/666_Fifth_Avenue தவிர உலக அரசியல்வாதிகள் பலரும் இந்த இலக்கத்தை ஏற்றுக்கொண்டு தான் அரசியலுக்கு வருபவர்கள். 
    • யாழில் 15 வயது பாடசாலை மாணவியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது   வலிகாமத்தை சேர்ந்த 15வயது பாடசாலை மாணவிக்கும், 19வயது முஸ்லிம் இளைஞனிற்குமிடையில் காதல் ஏற்பட்டு, பெண்ணின் உறவினர் வீடொன்றில் அவர்கள் தங்கியிருந்துள்ளனர்.இவ்விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.குறித்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மாணவியையும் இளைஞனையும் யாழ்ப்பாணம் நகரிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவியை மருத்துவ சோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸார் சேர்த்துள்ளனர்.இந்நிலையில் இளைஞனும் அவருக்கு தங்குமிடம் வழங்கி உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.இருவரும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர். இதன்போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனையும் உடந்தையாக இருந்த பெண்ணையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. http://www.samakalam.com/செய்திகள்/யாழில்-15-வயது-பாடசாலை-மாணவ/
    • தனித்துப் பேச்சுக்கு வரமாட்டோம் கூட்டணியாகவே பேச வருவோம் -ரணிலுக்கு விக்னேஸ்வரன் தெரிவிப்பு நான் தனித்துப் பேசவர முடியாது. நாங்கள் ஐந்து கட்சிக் கூட்டணியாகவே இவ்விடயங்கள் குறித்து பேசுவது என முடிவு செய்துள்ளோம். எனவே, ஐந்து தரப்புகளுக்கும் பொருத்தமான ஒரு நேரத்தில் சந்திக்க அழைப்புக் கிடைத்தால் வருவோம் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேலும் தென்னிலங்கைத் தரப்புகள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், வரவேற்றாலும் வரவேற்காவிட்டாலும் ஐந்து தமிழ்க் கட்சிகளின் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 13 அம்சங்கள் அடங்கிய தமிழர்களின் கோரிக்கைப் பட்டியல் ஜனாதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் விக்னேஸ்வரன் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   தற்போது கொழும்பில் தங்கியுள்ள விக்னேஸ்வரன், ஏனைய நான்கு தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், ஏனைய தலைவர்களையும் சந்தித்துப் பேசிய பின்னரே – பெரும்பாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ். திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.ஏனைய நான்கு கட்சிகளின் பிரதானிகளான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்), சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) ஆகியோருடன் உரையாடி அவர்களுக்கு ஏற்ப ஒழுங்குகளைச் செய்யும்படி விக்னேஸ்வரன் தெரிவித்த பதிலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.   http://www.samakalam.com/செய்திகள்/தனித்துப்-பேச்சுக்கு-வரம/