Jump to content

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?


Recommended Posts

வைக்கோ விற்கு ராஜ்ய சபா சீட்டு கொடுத்து பா ஜ க அழகு பார்க்குமா இருந்தால் அந்த கட்சி மீது மரியாதை இன்னும் கூடும்......

வேறு மாநிலத்தில் இருந்துதான் தெரிவாக வேண்டும். தமிழகத்தில் இருந்து தெரிவாக வாய்ப்பில்லை. இது சாத்தியமா என்பது பெரும் கேள்விக்குறி.

Link to comment
Share on other sites

  • Replies 474
  • Created
  • Last Reply

சென்னை: தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திய ராஜினாமா விவகாரம் உண்மையிலே பக்கா நாடகமாம்...அதுவும் 'ஆலய' ஜோதிடர்கள் அறிவுரைப்படி அரங்கேற்றப்பட்டதுதானாம். தேர்தலில் முட்டை வாங்கிய பெரிய கட்சியின் லெப்டினன்ட் , முடிவுகள் வந்து மூன்று நாட்கள் கழித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார் என்று தகவல்.. அப்படியெல்லாம் கொடுக்கவே இல்லை என்று கேப்டன் மறுக்க.. நேற்று முழுவதும் ஒரே பரபரப்புதான்.. இந்த பரபரப்பு திட்டமிட்டே உருவாக்கப்பட்டதுதானாம்.. கட்சியில் போஸ்டிங் என்னவோ கணக்குப் பிள்ளையாக இருந்தாலும் ஆக்டிங் என்னவோ ஆல் இன் ஆல் அழகுராஜாதான். அதுவும் தேர்தலில் சூறாவாளியாக சுழன்றடித்து அதகளப்படுத்தியதில் ஆயிரத்தெட்டு கண்ணுபட்டுவிட்டதாம்.. அதற்கு திருஷ்டி பரிகாரம் செய்தாக வேண்டும் என்று லெப்டினன்ட் வீட்டு அடுப்படி சர்க்காரிடம் ஒருவர் சொன்னாராம். லெப்டினன்ட் வீட்டு அடுப்படி சர்க்கார் நாள் தோறும் சென்று வணங்கும் வடை விரும்பி ஆண்டவன் கோயில் குருதான் கண்ணுபட்டு இருக்கும்.. திருஷ்டி செய்யுங்கோ என யோசனை சொன்னவராம். இதனால் ஜோதிடர்களிடம் லெப்டினன்ட் வீட்டு அடுப்படி சர்க்கார் ஆலோசனை கேட்டிருக்கிறார். இருக்கிற பதவியை ராஜினாமா செய்து ஒரு கடிதம் கொடுத்துவிடுங்கள்.. அந்த பதவி போன மாதிரி இருக்கும். ராஜினாமாவை வாபஸ் வாங்கினா புதுசா பதவி கிடைச்சமாதிரி இருக்கும்.. அப்படியே செய்துடுங்கோ என்று அந்த ஜோதிடரும் யோசனை தெரிவித்தாராம். இதன்படியேதான் நேற்று எல்லாமும் நடைபெற்றதாம்... அத்தோடு அப்படியெல்லாம் நடக்கவே இல்லை என்று சொல்கிறவர்கள் வேப்பேரி பத்திரிகை அலுவலகத்துக்கு ஏன் போன்போட்டு ராஜினாமா நாடகத்துக்கு வாங்கன்னு சொல்லி டிக்கெட் கொடுத்தார்கள் என்றும் பதில் கேள்வி எழுப்புகிறார்கள் ஊடக பட்சிகள்.. நன்னா நடத்துங்கோண்ணா!

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/behind-the-scene-resignation-drama-201399.html

Link to comment
Share on other sites

வேறு மாநிலத்தில் இருந்துதான் தெரிவாக வேண்டும். தமிழகத்தில் இருந்து தெரிவாக வாய்ப்பில்லை. இது சாத்தியமா என்பது பெரும் கேள்விக்குறி.

மேலும் டெல்லியில் இன்று மதிமுக பொதுச்செயலர் வைகோ ராஜ்நாத்சிங்கை சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக மதிமுக தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றதையொட்டி, இன்று வைகோ, பா.ஜ.க. தேசியத் தலைவர் ராஜ்நாத்தை சந்தித்து வாழ்த்துக்கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சந்திப்பின் போது வைகோவின் தியாகத்தை பொறுமையை பாராட்டிய ராஜ்நாத்சிங் வேறு ஒரு மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக்குகிறோம் என்றும் உறுதியளித்ததாகவும் தெரிகிறது.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/vaiko-will-get-rs-seat-201369.html#slide669381

Link to comment
Share on other sites

இதையெல்லாம் நம்பாவிட்டாலும், நம்பியமாதிரி நடித்து ஏமாந்துகொள்வார்கள் தொண்டர்கள்..! :D

Link to comment
Share on other sites

இன்று புதிய தலைமுறையில் பாஜகவின் மீது நம்பிக்கை வைத்து பேசினார் நாம்தமிழர் கட்சியின் கா. அய்யநாதன் அவர்கள். காங்கிரசை போல பாஜக நடந்துகொள்ளாது என்பதை தெளிவான முறையில் விளக்கினார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒருமாதிரியும், இப்போது இந்த மாதிரியும் பேசுவதற்கு காரணம் ஜெயாவின் நிலைப்பாடு தேர்தலுக்கு முன்பும் பின்பும் வேறுவிதமாக மாறியதை அடிப்படையாக வைத்தா ?

Link to comment
Share on other sites

நாம் தமிழரின் யாழ் கள கொள்(கை)ளை பரப்பு செயலாளர் இசை அண்ணா தான் வந்து சொல்லணும் :D

Link to comment
Share on other sites

இன்று புதிய தலைமுறையில் பாஜகவின் மீது நம்பிக்கை வைத்து பேசினார் நாம்தமிழர் கட்சியின் கா. அய்யநாதன் அவர்கள். காங்கிரசை போல பாஜக நடந்துகொள்ளாது என்பதை தெளிவான முறையில் விளக்கினார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒருமாதிரியும், இப்போது இந்த மாதிரியும் பேசுவதற்கு காரணம் ஜெயாவின் நிலைப்பாடு தேர்தலுக்கு முன்பும் பின்பும் வேறுவிதமாக மாறியதை அடிப்படையாக வைத்தா ?

காங்கிரசுடன் ஒப்பிடும்போது வேறு எந்த தேசியக்கட்சியும் மேலானது என்பது தெரிந்ததுதானே..

ஆனால் தேசியக் கட்சிகள் எவற்றுக்குமே வாக்களிக்கக்கூடாது என்பது நாம்தமிழர் கட்சியின் நிலைப்பாடு.

Link to comment
Share on other sites

காங்கிரசுடன் ஒப்பிடும்போது வேறு எந்த தேசியக்கட்சியும் மேலானது என்பது தெரிந்ததுதானே..

ஆனால் தேசியக் கட்சிகள் எவற்றுக்குமே வாக்களிக்கக்கூடாது என்பது நாம்தமிழர் கட்சியின் நிலைப்பாடு.

ஆனால் காங்கிரஸ்  நாலு வீத வாக்கு இன்னும் தமிழ்நாட்டில் இருக்கு .

 

அவர்களின் கணிப்பு பிழை தானே அம்மாவை வெல்ல வைப்பதன் மூலம் ஒரு பேரம் பேசலை மத்தியில் உருவாகஎண்ணியே  களமாடி நின்றவ ஆனால் நடந்தது வேறு அதிக பெருன்பாமையா பாஜக வந்திட்டு இப்ப 37 வீண் இரண்டு சீட்டு பெற்றவன் மந்திரி ஆக போறான் .

Link to comment
Share on other sites

ஆனால் காங்கிரஸ் நாலு வீத வாக்கு இன்னும் தமிழ்நாட்டில் இருக்கு .

அவர்களின் கணிப்பு பிழை தானே அம்மாவை வெல்ல வைப்பதன் மூலம் ஒரு பேரம் பேசலை மத்தியில் உருவாகஎண்ணியே களமாடி நின்றவ ஆனால் நடந்தது வேறு அதிக பெருன்பாமையா பாஜக வந்திட்டு இப்ப 37 வீண் இரண்டு சீட்டு பெற்றவன் மந்திரி ஆக போறான் .

நீங்கள் வேந்தனின் நேற்றைய பதிவு ஒன்றை தவறவிட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.

பாஜவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்துவிட்டது. அதனால் அவர்களது ஆட்சி நிலையாக இருக்கும். ஆனால் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தையோ, அல்லது சட்ட மாற்றத்தையா நிறைவேற்ற மூன்றில் இரண்டு ஆதரவு தேவை. இங்கேதான் மற்றக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

நேற்று ராஜ்நாத் சிங் லேடியை வாழ்த்திய செய்தி ஒன்றும் வந்திருந்தது. :D

Link to comment
Share on other sites

என்ன தான் சொன்னாலும் லேடிக்கு மத்திய அமைச்சரவையில் நோ இடமாம்.......:D

Link to comment
Share on other sites

மோடி தொலைபேசியில் வாழ்த்து சொன்னாராம் லேடிக்கு.. மத்திய அரசுக்கும், தமிழ்நாடு மாநிலத்துக்கும் இடையில் முழுமையான ஒத்துழைப்பு நிலவுமாம். :D

Modi assures Jayalalithaa of absolute cooperation

18-jayalalithaa-modi-600.jpg

Chennai, May 18: India's soon-to-be prime minister Narendra Modi on Sunday assured Tamil Nadu Chief Minister J. Jayalalithaa of his government's "absolute cooperation" with her state.In a statement issued here, the Tamil Nadu government said the Bharatiya Janata Party leader called Jayalalithaa Sunday afternoon and thanked her for her wishes.He congratulated Jayalalithaa on her AIADMK's remarkable victory in the general elections. The party won 37 of the 39 Lok Sabha seats in Tamil Nadu.Modi assured Jayalalithaa that there will be "absolute cooperation between the government of India and the government of Tamil Nadu", the statement said.On her part, Jayalalithaa wished Modi a successful tenure as the prime minister.

Read more at: http://news.oneindia.in/india/modi-assures-jayalalithaa-of-absolute-cooperation-lse-1450090.html

Link to comment
Share on other sites

நீங்கள் வேந்தனின் நேற்றைய பதிவு ஒன்றை தவறவிட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.

பாஜவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்துவிட்டது. அதனால் அவர்களது ஆட்சி நிலையாக இருக்கும். ஆனால் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தையோ, அல்லது சட்ட மாற்றத்தையா நிறைவேற்ற மூன்றில் இரண்டு ஆதரவு தேவை. இங்கேதான் மற்றக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

நேற்று ராஜ்நாத் சிங் லேடியை வாழ்த்திய செய்தி ஒன்றும் வந்திருந்தது. :D

 

இசை அந்த கட்டுரை சும்மா அம்மாவுக்கு சாமரம் வீச எழுதிய கட்டுரையாகவே உள்ளது...

நல்ல சட்டங்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையென்றால்..காங்கிரசுமே ஆதரவளிக்கும்....எந்த கட்சிகளும் முட்டுகட்டை போடாது..... இதற்க்கு முந்தைய ஆட்சியில் காங்கிரஸ் 2/3 உருபினர்களையா கொண்டிருந்தது?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
India’s Modi Wave And Lanka’s Moda (Foolish) Wave

 

 

 

Colombo Telegraph,Opinion | Posted by: COLOMBO_TELEGRAPH

 

By Shyamon Jayasinghe

 

Sharp on the heels of the Modi electoral phenomenon that swept mighty India, Sri Lankan leaders from their humble podium have had the guts to add their two cents’ worth. Inasmuch as these imbecilic utterances did not generate serious response from anyone it did add to the unending fodder for comic relief and wind- release that ordinary powerless people in Lanka have been experiencing over the whole period of the current regime: what with the antics of Dr Mervyn, Maranthika Upawasage Wimal Weerawansa, and the High King himself.

Yes, BJP leader Modi won a landslide sending home most of the Congress parliamentarians and their kith and kin; bag and baggage. Indians have such a luxury which we Sri Lankans lost after JR introduced the Executive Presidency and the PR system and Mahinda Rajapaksa (MR) executed the Bahubootha Vyawasthawa to its logical end. That logical end has been so bizarre and ugly and dysfunctional that there is massive public demand for reverting to the old system. Modi has ample power to rule sans coalition restrictions. His only real-politic limitation would be Jayalalitha in Tamilnadu who will rule that state with less discretion and more rough muscle. Of course Vaiko is mercifully gone but that is because Jayalalithaa stole the latter’s constituency.

How possibly sinister the combination of a formidable central government and forbidding Tamilnadu could be for our little island has not been detected by the Lankan government. The stage is set for another Rajiv Gandhi-type threat of invasion if Lanka fails to toe the Indian line.  Yet our ruling class prefers to see no evil and hear no evil. President Mahinda Rajapaksa went on record stating that it would be easier to deal with the new dispensation in India than it was with the former. Yes, in a sense and no in a stronger sense.

However, the highlight of the moda wave from Lanka was the very first utterance from Vasudeva Nanayakkara who we know has never been sane. Vasu states emphatically that the rise of Modi will signal a dark age in Asian politics. Mad people give no reason and Vasu doesn’t. It’s his inspired vision. After Vasu, came the UPFA powerful sibling Minister, Basil Rajapaksa who blurted out that Modi was “another Mahinda Rajapaksa.” Modi will never forgive him for that assessment. At least Basil, his image showing with his thumb trying to plug a hole, gives reasons: Mahinda Rajapaksa is a “doer” like Modi, says Basil.

Modi has indeed been a doer but in the right direction. He did falter in his younger days by fanning nationalistic ‘Hindutva” sentiments. On the other hand, Modi ran Guajarat three times in succession as Chief Minister into a non-corrupt state yielding great development outcomes. Gujarat was also fiscally sound. A solid achievement portfolio constituted Modi’s launching base. Having been a chaiwala Modi belonged to a strongly disadvantaged community. Yet, he had the showing ability of Premadasa and was similarly able to break through the claustrophobic Indian hierarchical system.

MR had no such disadvantage and he plugged his way up through maneuver within the party. Modi has an ideology; MR never had and doesn’t intend to have. ‘Mahinda Chinthanaya is more a fun document. The only drive that MR has displayed is to keep firming his and his family’s hold at any cost. The War he achieved but soon got rid of the man who fought the ground battle with blood sweat and tears. Nor has he been able to salvage his government from serious international charges. With all the public backing MR had after the war victory he could have translated that victory to meaningful governance. Have you heard MR speak one word over his nine long years against corruption? Corruption has been institutionalized in Lanka. Modi, on the other hand, spoke and achieved a corrupt-free administration. Of course, MR has done construction infrastructure. That, again, has to be seriously qualified by questions with regard to their usage and benefits to the economy and their transparency. There is a nice Facebook joke going around that MR is a ‘sellam (fake) Janadhipathias he has built sellam harbours, sellam ports etc.” The finances of the nation are in a perilous state as the debt burden skyscrapes by the day. The ordinary person wails under the cost of living burden while not one cent has been given as increase to salaries and pensions over the entire duration of the Rajapaksa regime. Income inequality is gaping in size.

Proceeding further on the Basil comparison is evidently a waste of time. Let’s hope MR will turn a new leaf inspired by Modi’s famous Varodara speech delivered after his electoral triumph: “There are no enemies in politics and democracy, only competitors. That’s the beauty of democracy. The strength of democracy lies in taking everyone together. Despite a clear mandate we want to keep everyone together,” he said.

The “DNA” of his “work culture” was “sabka saath, sabka vikas [support and development of all],” Mr. Modi said.

Even at this late stage cannot MR reintroduce our democratic institutions by abolishing the Executive Presidency and returning checks and balances and the rule of law?  Can’t be honest and without malice to dissent?

Link to comment
Share on other sites

அருமையாக இணைத்தீர்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனிமேஷனும், பாடலும்.... அழகாக உள்ளது. :D

Link to comment
Share on other sites

இந்தியாவின் திருப்புமுனை தேர்தல்

 
கடந்த வாரத்தின் இந்திய தேசிய தேர்தலில் இந்து வகுப்புவாத பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) அதிகாரத்திற்கு வந்துள்ளது. குஜராத்தில் 2002 முஸ்லீம்-விரோத படுகொலையை தூண்டிவிட்டதில் அவர் வகித்த பாத்திரத்திற்காக இந்தியாவிலும் உண்மையில் சர்வதேச அளவிலும் இழிபெயர் பெற்ற குஜராத் முதல் மந்திரியும், சுய-பாணியிலான இந்து இரும்புமனிதருமான நரேந்திர மோடி பிரதம மந்திரியாகவுள்ளதுடன், அவர் பொருளாதார "வளர்ச்சிக்கு" இட்டுசெல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
மக்கள் விரோத, சுதந்திர-சந்தை நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் மற்றும் இந்தியாவை இன்னும் நெருக்கமாக அமெரிக்க வெளியுறவு கொள்கையோடு இணைக்கும் கருவியாக ஏற்று இந்திய மற்றும் சர்வதேச மூலதனம் BJP'ஐ அரவணைத்து உள்ளது. சமூக சேவைகளின் மீது ஆழ்ந்த வெட்டுக்கள், உணவு, எரிபொருள் மற்றும் உரம் விலை மானியங்களைக் குறைத்தல்; அரசுடமையான நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல்; அன்னிய முதலீடுகள் மீது மிஞ்சி இருக்கும் வரம்புகளை நீக்குதல்; வரிச் சுமையை தொழிலாளர்களுக்கு மாற்றுதல்; மற்றும் வங்கிகளுக்கு பாரிய அரசு உதவிகள் ஆகியவை அந்த கட்சியின் வேலைத்திட்டத்தில் உள்ளடங்கும்.
 
நூறு மில்லியன் கணக்கான இந்திய மக்களுக்கான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியை இல்லாதொழிக்கும் திட்டங்களும் இலக்கு வைக்கப்பட்டிருப்பவற்றில் உள்ளடங்கும். வர்க்க போராட்டத்தின் எழுச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது.
 
முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு முழு நாடாளுமன்ற பெரும்பான்மையை வென்றிருக்கும் முதல் கட்சியாக பிஜேபி உள்ளது என்ற போதினும், இந்திய மக்கள் தீவிரவலதிற்கு மாறியுள்ளனர் என்று பத்திரிகைகள் வாதிடுவது ஒரு மோசடி ஆகும். காங்கிரஸ் கட்சி மற்றும் ஒரு வரலாற்று உடைவினை சந்தித்த இரண்டு ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது வைத்திருந்த பாரிய நப்பாசைகள் பூர்த்திசெய்யப்படாததால் பிஜேபி அதிலிருந்து ஆதாயமடைந்தது.
 
சுதந்திர இந்தியாவின் 67 ஆண்டுகளில் 13 முறை தேசிய அரசாங்கத்திற்கு தலைமை ஏற்றிருந்த காங்கிரஸ், இப்போது 545 மக்களவை இடங்களில் வெறும் 44 இடங்களைக் கொண்டுள்ளது. இது உத்தியோகபூர்வ எதிர்கட்சியாக அங்கீகரிக்கப்பட கூட போதுமான எண்ணிக்கை இல்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய நாடாளுமன்றத்தில் 60 இடங்களுக்கு மேல் வென்ற ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னணி, உடனடியாக தம்மை காங்கிரஸிடம் ஒப்படைத்துவிட்டது. இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களவையில் ஒரேயொரு இடம்தான் கிடைத்துள்ளது, மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெறும் 9 இடங்களைப் பெற்றுள்ளது.
 
காங்கிரஸ் இப்போதும் சரி, எப்போதுமே ஒரு முதலாளித்துவ கட்சியாக இருந்துள்ளது. மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு தலைமையின் கீழ், அது பாரிய ஏகாதிபத்திய-எதிர்ப்பு போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தது மற்றும் ஒடுக்கியது. 1947இல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் அது ஒரு உடன்பாட்டை எட்டியது, அதன் அடிப்படையில் அந்த துணை கண்டம், மில்லியன் கணக்கானவர்களை உயிரிழிக்க செய்த மற்றும் இடம் பெயர செய்வித்த இந்தியாவின் இன மற்றும் பிரிவினைவாத சமூகங்களுக்கு இடையிலான சண்டைக்கு இடையே, ஒரு முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் இந்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு இந்தியா என்று வகுப்புவாதரீதியில் பிரிக்கப்பட்டது.
 
இருந்த போதினும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் இணைந்திருந்ததன் காரணமாக, காங்கிரஸ் இந்தியா எங்கிலும் பரந்துபட்ட பல்வேறு இன மற்றும் வகுப்புவாத குழுக்களிடம் ஓரளவிற்கு ஆதரவைப் பெற்றிருந்த ஒரே முதலாளித்துவ கட்சியாக விளங்கியது. அவ்வாறு இருந்தாலுங்கூட, அதை இந்திய முதலாளித்துவத்திடம் இருந்து பிரிக்க முடியாது என்பதை நிரூபித்திருந்தது. இறக்குமதிக்கான மாற்றீடு மூலமும், பிரதான தொழில்துறைகளை அரசு உடைமையில் வைத்திருந்தமை மற்றும் சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்துடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகள் மூலமாகவும் அது ஏகாதிபத்திய அழுத்தங்களை சமப்படுத்திக்கொள்ள முனைந்தது.
 
1970களில், இந்த மூலோபாயம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. தொழிலாள வர்க்கத்துடன் கண்மூடித்தனமான மோதலுக்கு வந்த இந்திரா காந்தியின் காங்கிரஸ் அரசாங்கம், 1974-75 இரயில்வே துறை வேலை நிறுத்தத்தை நசுக்க இராணுவத்தைப் பயன்படுத்தியதோடு, இரண்டு ஆண்டுகள் அவசரகால சட்டம் பிறப்பித்து,  அக்காலகட்டத்தில் மக்கள் சுதந்திரங்கள் ஒடுக்கப்பட்டன.
 
1991இன் சோவியத் ஒன்றிய பொறிவில் இருந்து, காங்கிரஸ் இந்திய முதலாளித்துவத்தின் "புதிய பொருளாதார கொள்கையில்" முன்னனி பாத்திரம் வகித்துள்ளதோடு, இந்தியாவை உலக முதலாளித்துவத்திற்கு ஒரு மலிவு-உழைப்பு உற்பத்தியாளராக மாற்றியது. 1991-96 வரையிலான நரசிம்ம ராவ்வின் காங்கிரஸ் அரசாங்கம், அன்னிய மூலதனங்களை ஈர்க்க ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி மற்றும் சுதந்திர-சந்தை கொள்கை ஆகியவற்றிற்கு சாதகமாக தேசிய பொருளாதார நெறிமுறைகளை அழித்து, இந்த மாற்றத்தைத் தொடங்கி வைத்தது.
 
கடந்த தசாப்தத்தின் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் இந்தியாவின் சுதந்திர-சந்தை மறுகட்டமைப்பை மேற்கொண்டு விரிவாக்கி, நீட்டித்தது. பிரதம மந்திரி மன்மோகன் சிங் செப்டம்பர் 2012இல் தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், மேலதிக அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்திய மக்கள் "அவர்களின் வயிற்றை கட்டுப்படித்திக்கொள்ள வேண்டும்" என்று கூறுமளவிற்குச் சென்றார்.
 
இந்திய முதலாளித்துவம் பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு மலிவு உழைப்பை வழங்கி அதனை அதுவே செல்வ செழிப்பாக்கி கொண்ட நிலையில், காங்கிரஸூம் அமெரிக்கா உடன் அதன் உறவுகளை ஆழப்படுத்தி இருந்தது. ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியா உட்பட பல நாடுகளை வாஷிங்டன் அடுத்தடுத்து ஆக்கிரமித்திருந்த நிலையில், மீண்டும் காங்கிரஸின் தலைமையில், இந்தியா 2000இல் இருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு "உலகளாவிய மூலோபாய கூட்டுறவை" மேற்கொள்ள முனைந்துள்ளது. இந்தியா உடனான அமெரிக்க உறவுகள், சீனாவைத் தனிமைப்படுத்தி "ஆசியாவினை நோக்கி திரும்புதலின்" பாகமாக இருந்துள்ளன.
 
காங்கிரஸின் பேரழிவுகரமான தோல்வி எதை பிரதிபலிக்கிறது என்றால், இதுபோன்ற கொள்கைகளை ஒரு கால் நூற்றாண்டிற்கு நடைமுறைப்படுத்திய பின்னர், அது இந்திய தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் மொத்த நம்பகத்தன்மையையும் இழந்துள்ளது என்பதையே ஆகும்.
 
இதற்கு இணையாக ஏற்பட்டுள்ள ஸ்ராலினிச சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் பொறிவு, ஏதோ சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்ததல்ல. 1930களில் சிபிஐ உருவாக்கப்பட்டதில் இருந்தே, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் எடுத்துக் காட்டப்பட்டதைப் போல, ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தால் முன்னெடுக்கப்பட்ட சோசலிசத்திற்கான போராட்டத்தை எதிர்த்துள்ளனர். அது மட்டுமின்றி, அவர்கள் தொழிலாளர்களை திட்டமிட்டபடி முதலாளித்துவ கட்சிகளுக்கு அடிபணிய செய்தார்கள்.
 
1991க்கு முன்னர், அவை சோசலிசம் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் இன்னும் இல்லை என்று வலியுறுத்தினார்கள். "தேசிய ஜனநாயக புரட்சியை" நடத்த அவர்கள் இந்திய முதலாளித்துவத்தின் "முற்போக்கான,” “நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான" அல்லது "ஏகாதிபத்தியத்திற்கு எதிரான" பிரிவுகளிடம் ஆதரவு கோரி அழைப்பு விடுத்தார்கள். 1991க்கு பின்னர் இருந்து, இந்திய முதலாளித்துவம் கூர்மையாக வலதிற்கும், ஏகாதிபத்தியத்தை நோக்கியும் நகர்ந்த போது, ஸ்ராலினிஸ்டுகளும் அவர்களோடு வலதை நோக்கி சாய்ந்தார்கள்.
 
அடுத்தடுத்த அரசாங்கங்கள் சுதந்திர-சந்தை மற்றும் ஏகாதிபத்திய-சார்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள், BJP'ஐ எதிர்க்கிறோம் என்ற பெயரில், முட்டுக் கொடுத்தார்கள்.
 
சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்து தொழிலாள வர்க்கத்தை ஸ்ராலினிஸ்டுகள் தடுத்து, காங்கிரஸ் மற்றும் பல வலதுசாரி ஜாதி-அடிப்படையிலான மற்றும் பிராந்திய கட்சிகளுக்கு (இந்த கட்சிகள் அனைத்தும் ஸ்ராலினிஸ்டுகளால் "மதசார்பற்ற இந்தியாவின்" பாதுகாவலர்களாக புகழப்பட்டன) அதை அடிபணிய செய்ததால், காங்கிரஸ் மீதும் மற்றும் ஒரு கால் நூற்றாண்டு கால சந்தை-சார் "சீர்திருத்தம்" மீதும் ஏற்பட்டிருந்த பாரிய வெறுப்பை பிஜேபி சுரண்டிக் கொள்ள சுதந்திரமாக விடப்பட்டது.
 
இந்தியாவின் பிஜேபி-தலைமையிலான அரசாங்கம் ஆழ்ந்த நெருக்கடியின் ஒரு ஆட்சியாக இருக்கும். அது பாசிச, இந்து-மேலாதிக்கவாத ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பிற்கும், பாதுகாப்பு படைகளின் யுத்தம் நாடும் உட்கூறுகளுக்கும், மற்றும் பெரு வணிகத்தின் மிகவும் பேராசை கொண்ட பிரிவுகளுக்கும் கடமைப் பட்டுள்ளது. மக்கள் விரோத சமூக நிகழ்ச்சி நிரலைத் திணிக்க முயல்கின்ற போதே, அது அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கி திரும்புதலின்" மற்றும் பெருமளவிலான யுத்தத்திற்கான தயாரிப்புகளுக்கு பொறுப்புகளை எடுத்துக்கொண்டு, ஏகாதிபத்தியத்துடன் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஜப்பான் உடன் நெருக்கமான உறவுகளை பின்தொடரும்.
 
தொழிலாள வர்க்கம் மிகத் தெளிவாக மரணகதியிலான அபாயங்களை முகங்கொடுத்துள்ளது. இருந்தாலும், பிஜேபி வெற்றியும காங்கிரஸ் மற்றும் ஸ்ராலினிஸ்ட் கட்சிகளின் பொறிவும் வர்க்க போராட்டத்தின் பரந்தளவிலான தீவிரமயமாக்கலுக்கு மட்டுமல்லாது, தொழிலாள வர்க்க அரசியலின் ஒரு அடிப்படை மறுஒழுங்கமைவிற்கும் அறிகுறி காட்டுகிறது.
 
அதுபோன்ற ஒரு மறுஒழுங்கமைவு, "சுதந்திர கால" முதலாளித்துவ ஆட்சி மற்றும் இந்திய ஸ்ராலினிசம் கவிழ்ந்து போனதன் மீது ஒரு வரலாற்றுரீதியிலான இருப்புநிலை கணக்கை வரைய கோருவதுடன், லியோன் ட்ரொட்ஸ்கியால் விவரிக்கப்பட்ட மற்றும் 1917 ரஷ்ய புரட்சியில் உயிரூட்டப்பட்ட நிரந்தர புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய பாரிய கட்சியைக் கட்டுவதும் அவசியமாகின்றது.
 
துணைக் கண்டத்தின் மக்களை ஐக்கியப்படுத்துவது, ஜாதி ஒடுக்குமுறையை மற்றும் நிலப்பிரபுத்துவத்தைக் இல்லாதொழிப்பது, மற்றும் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை ஆகியவை உட்பட அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக கடமைகளை தீர்க்க முதலாளித்துவம் இலாயக்கற்று இருப்பதை இந்தியாவின் ஒட்டுமொத்த அனுபவமும் எடுத்துகாட்டி உள்ளது. இந்த பணிகளை ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே நிறைவேற்ற முடியும்.
 
Keith Jones

19 May 2014

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

22-1400745576-nostradamus6565-600-jpg.jp

 

"வாஜ்பாயம்.. அத்வானம்.. நரேந்திரம் மோடம்"...400 வருடத்திற்கு முன்பு நாஸ்ட்ரடாமஸே சொல்லிட்டாரமே...!!!

 

டெல்லி: நரேந்திர மோடி மிகப் பெரிய உயரத்திற்கு வருவார் என்பதை 400 ஆண்டுகளுக்கு முன்பே, பிரபலமான பிரெஞ்சு ஞானி மைக்கேல் டி நாஸ்ட்ரடாமஸ் சொல்லியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மோடி தலைமையில் இந்தியா மிகப் பெரிய வல்லரசாக உருவெடுக்கும் என்பதையும் நாஸ்ட்ரடாமஸ் தனது கணிப்புக் குறிப்பில் சொல்லி வைத்துள்ளாராம்.

இதுகுறித்த தகவலை பிரான்காய்ஸ் காதியர் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காதியர் கூறியுள்ளதாவது...

 

பாஜக குறித்தும்.. இந்தியா குறித்தும்.. மோடி குறித்தும்!

இந்த நாஸ்ட்ரடாமஸ்தான் தனக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத பாஜக குறித்தும், இந்தியா குறித்தும், நரேந்திர மோடி குறித்தும் எழுதி வைத்துள்ளார்.

 

"பரதஸ் ஜனதஸ் இன்டிகஸ்..."

அதில் ஒரு வரியில் இப்படி வருகிறது.. Politicus Bharatus Janatus Indicus veni grandus est vingtus unus centurus - Congressus oublium est ... Politicus Bharatus Janatus Indicus veni grandus est para Indus cognisant Indica tum est..." இதன் தமிழ் அர்த்தம்.. 21வது நூற்றாண்டில் பாரதிய ஜனதாக் கட்சி இந்தியாவை ஆதிக்கம் செலுத்தும். காங்கிரஸ் மெதுவாக மாயமாகிவிடும்.

 

"வாஜ்பாயம்.. அத்வானம்.. நரேந்திரம் மோடம்..."

இன்னொரு கணிப்பில் இப்படிச் சொல்லப்பட்டுள்ளது...Politicus Bharatus Janatus Indicus tri pillarus est, Vajpayum, Advanum persistum est et Narendrum Modum. Vajpayum emergum est..." அதாவது பாஜகவில் மூன்று தூண்கள் இருப்பார்கள்.. ஏபி வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி. இதில் வாஜ்பாய் நாளடைவில் தீவிர அரசியலிலிருந்து போய் விடுவார். அத்வானி நிலைத்திருப்பார். நரேந்திர மோடி உருவெடுப்பார்.

 

தேசியத் தலைவராக உருவெடுப்பார் 'மோடம்'...!

இன்னொரு கணிப்பில், Narendrum Modum supremus chefum, ironus manus est et economicum grandum est என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, நரேந்திர மோடி தேசிய அளவில் தலைவராக உருவெடுப்பார். அவர் இரும்புக் கரம் கொண்ட தலைவராக இருப்பார். தனது மாநிலத்தை பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைய வைப்பார் என்று இதற்கு அர்த்தமாம்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

 

நான் வாசித்ததை.... பதிந்துள்ளேன். நம்புறதும், நம்பாததும் உங்கள்   விருப்பம். :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோச்சடையான்..... கூச்சடையான். :D  :lol: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

23-1400821371-10372043-664189280321244-8

 

தேர்தல்களில் ரஜனி வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டினதை மறந்துவிட்டார் போலிருக்கு..

Link to comment
Share on other sites

ஸ்டாலின் இந்த மா.சுப்பிரமணியத்துடன் மணிக் கணக்கில் ஆலோசனை நடத்துவதெல்லாம் பலனளிக்கப் போவதில்லை .... பல இளைஞர்கள் துடிப்புடன் இருக்காங்க ... அவங்களுக்கு எல்லாம் கட்சியில் பொறுப்பு கொடுங்க ... நம்ம டான் அசோக் போன்ற நபர்கள் எல்லாம் உண்மையில் திறமை வாய்ந்தவர் ( ஸ்டாம்பு விவகாரம் தவிர்த்து ) ... அவங்களை எல்லாம் உபயோகிக்கலாமே , சங்கை ரிதுவான் , அப்பறம் இன்னும் நிறைய திறமைசாலிகள் இணையத்திலேயே முடங்கிடறாங்க ,,, விடாதீங்க , பிடிச்சு மேடைஎற்றுங்கள் , அல்லது கட்சிப் பொறுப்பு தாங்க .... ஒரு சராசரி மாவட்டச் செயலாளருக்கு இருக்கும் தாக்கத்தை விட இவர்கள் ஏற்படுத்தும் , ஏற்படுத்தக் கூடிய தாக்கம் அதிகம் .... அது தான் இணையத்தின் பலமே .

அப்பறம் இந்த நயன்தாராவை கட்டிப் பிடித்து போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் உங்க மகனை காதை திருகி , ஆட்சியில் இருக்கும் பொழுது கட்சிக் காரன் படத்துக்கு போஸ்டர் ஒட்ட வேண்டும் , கட்சி பலவீனமா இருக்கும் பொழுது மட்டும் நீ குஜாலா போஸ் கொடுத்துட்டு படம் எடுத்துட்டு இருப்பியான்னு கேளுங்க ... போய் கட்சியின் இளைஞர் அணி பொறுப்பாளர்களுடன் உரையாடச் சொல்லுங்க .... கனிமொழி அண்ட் கோ தான் உங்கள் பலவீனமே , அந்தக் கூட்டத்தை ஓரம் கட்டுங்க , அழகிரியை கூட சேர்த்துக்கலாம் , ஆனால் இந்த ராசாத்தி அண்ட் கோ தான் உங்கள் கட்சியின் மிகப் பெரிய புற்றீசலே ... அதை எல்லாம் ஓரம் கட்டுங்க ....

அம்மையார் அம்மையார் என்று ஓலம் விடுவதை நிறுத்துங்க , மக்கள் முகம் சுளிக்கிறார்கள் ...உங்கள் தந்தையை விட உங்களுக்கு வரலாற்றை யாரும் சொல்லிக் கொடுத்து விட முடியாது , 15 ஜூன் 1977 தேர்தல் முடிவுகள் , தி மு க வின் வரலாற்றில் மிகப் பெரிய அடி , 183 இடங்களை 1972 இல் பெற்றிருந்த தி மு க , வெறும் 48 இடங்களை பெற்றிருந்தது , ஜூன் 30 19777 மக்கள் திலகம் தலைமையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது ... சட்ட மன்றம் கூடிய முதல் நாளே கருணாநிதி எதிர் கட்சி தலைவராக செயல் படத் துவங்கினார் , பழைய உறுப்பினர் ஒருவருக்கு இரங்கல் தெரிவிக்காமல் சபை அலுவலை தொடர்வது முறையல்ல என்று சுட்டிக் காண்பித்து திருத்தினார் ... ஆகஸ்ட் மாதமே போராட்டங்கள் என்று இறங்கினார் ...

இப்படி தொடர்ச்சியாக அவர் பல விஷயங்களை செய்து கட்சியை துடிப்புடன் வைத்திருந்தார் , அதனால் தான் 12 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும் துவண்டு போகாமல் கட்சி இருக்க முடிந்தது ....

இப்படி நீங்கள் முடங்கிப் போனால் , தவறான முடிவுகளையே எடுத்துக் கொண்டிருந்தால் , விஜயகாந்த் போன்ற நபர்களைத் தான் எதிர்கட்சித் தலைவர்களாக வருங்காலத்தில் நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கும் ....

Kishore swamy

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.