Archived

This topic is now archived and is closed to further replies.

ராசவன்னியன்

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?

Recommended Posts

மதவாத சக்திகளுக்கும் இன துரோகிகளுக்கும் மரண அடி கொடுத்த தமிழ் வாக்காளர்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் அதுகுறிகட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததன் மூலமாக மதவாத சக்திகளுக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். ஈழத் துயரங்களுக்குத் தீர்வு கேட்டும் தனித் தமிழீழக் கோரிக்கையை ஆதரித்தும் மூவர் தூக்கு விவகாரத்தில் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தும் தமிழர் நலன் போற்றும் முதல்வராக திகழ்ந்த மாண்புமிகு ஜெயலலிதா அவர்களுக்கு அபரிமிதமான வெற்றியை ஈட்டிக் கொடுத்து வரலாற்றுப் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள் தமிழக மக்கள்.

தமிழகத்தின் தேவைகளை நாடாளுமன்றத்தில் அழுத்தமாக முழங்கவும் தமிழக உரிமைகளைப் பாதுகாக்க உரியபடி போராடவும் அ.தி.மு.க.வே சரியான கட்சி என்பதை மக்கள் திட்டவட்டமாக தீர்மானித்திருக்கிறார்கள்.ஈழ கோரங்களுக்கு துணை போனவர்கள்மூன்றாவது அணி என்கிற பெயரில் பரப்பப்பட்ட பொய்ப் பிரசாரங்களுக்கு இடம் கொடுக்காமல் இனமானப் பிள்ளைகளாக மதவாத சக்திகளை வீழ்த்திக் காட்டி இருக்கிறார்கள் தமிழக மக்கள். ஈழக் கோரங்களை நிகழ்த்திய காங்கிரஸ் கட்சியையும் அதற்குத் துணை போன தி.மு.க.வையும் வேரோடு வீழ்த்திக் காட்டி நம் இனம் பட்ட ரணத்தின் வலியை தமிழக மக்கள் தக்கபடி திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள்.மோடி அலையை ஊதித் தள்ளிய தமிழகம் பாரதீய ஜனதா கூட்டணி அகில இந்திய அளவில் வென்றாலும், தமிழகத்தில் அந்தக் கட்சி தளிர்விட முடியாத நிலையை வாக்காள பெருமக்கள் உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள். பல கட்சிகளை ஒருங்கிணைத்து பிரமாண்ட கூட்டணிபோல் காட்டியும் மோடி அலை என மூச்சடங்கப் பேசியும் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியால் எந்தவிதப் பலனையும் பெற முடியாமல் போய்விட்டது. இந்தியா முழுக்க எழுந்த மோடி அலை தமிழகத்தில் மட்டும் ஊதித்தள்ளப்பட்டதற்கு தமிழக மக்களின் அரசியல் தெளிவும் அறிவுமே காரணம். முதல்வருக்கு வாழ்த்துகள்எந்தக் கட்சியையும் கூட்டணிக்கு அழைக்காமல் மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலைச் சந்தித்த தமிழக முதல்வருக்கு தமிழக மக்கள் நல்ல நம்பிக்கையைப் பரிசளித்திருக்கிறார்கள். இலையை ஆதரித்து தமிழகம் முழுக்க பரப்புரை செய்தபோதே அ.தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என நான் அழுத்தமாக முழங்கி வந்தேன். மாபெரும் வெற்றியை அடைந்திருக்கும் தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழகத்தின் நலன் பேணும் நடவடிக்கைகளை முதல்வர் எந்நாளும் தொடர்வார் என்றும், நாடாளுமன்றத்திலும் மிகுந்த பலத்தோடு தமிழகத்துக்கான‌ உரிமைகளை முழங்க வைப்பார் என்றும் நாம் தமிழர் கட்சி நம்புகிறது. சுயநல திமுகஇதுகாலம் வரை மத்தியில் செல்வாக்கு இருந்தும் பதவி பகட்டுகளுக்காக ஈழம் தொடங்கி தண்ணீர் விவகாரம் வரை சுயநல நோக்கில் மட்டுமே செயல்பட்ட தி.மு.க.வை வீட்டில் உட்கார வைத்து தக்கபடி பதிலடி கொடுத்திருக்கும் தமிழக மக்கள் அறிவிற்சிறந்தவர்களாக தங்களை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். நியாயத்தின் வழி நின்று தக்க தீர்வை அளித்த தமிழக மக்களுக்கும் நாம் தமிழர் கட்சி மனமார்ந்த வாழ்த்துகளைச் சொல்லி மகிழ்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்

http://tamil.oneindia.in/news/tamilnadu/seeman-s-statement-on-election-results-lse-201134.html

Share this post


Link to post
Share on other sites

ஏம்ப்பா வாங்குன காசுக்கு கூவுனேன் இது ஒரு தப்பா....தொழில் தர்மம்னு ஒன்னு இருக்கா இல்லையா...

10367745_675688212468547_759818267811974

 

யாருங்க இது? :(

 

Share this post


Link to post
Share on other sites

மேற்கு வங்கம் திரிணாமுல் 33 இடங்களில் முன்னிலை

Share this post


Link to post
Share on other sites

யாருங்க இது? :(

 

திமுக பிரச்சார பீரங்கி..Manushya puthiran :D

 

முகநூலில ஒரு சவுன்டையும் காணோம் :D

Share this post


Link to post
Share on other sites

கேரளாவில்  காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலை
பா ஜ க இரண்டாம் இடத்தில்

Share this post


Link to post
Share on other sites

வைகோ வெற்றி பெறவில்லை என்பது வருத்தமாயிருக்கிறது.காங்கிரசும்,திமுகவும் தோற்றது மகிழ்சியளிக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

கார்த்திக் சிதம்பரம் டூ ப சிதம்பரம் :-)) டேய் தகப்பா.. டெப்பாசிட் கூட தேறாதுன்னு தெரிஞ்சே என்னை சிக்க வைச்சுக்க நீ..

10363807_254405998078074_193778726170799

Share this post


Link to post
Share on other sites

தேசிய அளவில் பா ஜ க 338
காங்கிரஸ்                            59
மற்றயவை                        149

 

தொகுதிகளில் முன்னிலை
 

Share this post


Link to post
Share on other sites

தோல்வியால் இந்திய அரசியலில் இருந்து காங்கிரசு ஒதுங்காது - ஞாதேசிகன்

தமிழக அரசியலில் இருந்து ஒதுங்கலாம் தானே?

Share this post


Link to post
Share on other sites
 

இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும்: மோடி பேட்டி

Share this post


Link to post
Share on other sites

தோல்வியால் இந்திய அரசியலில் இருந்து காங்கிரசு ஒதுங்காது - ஞாதேசிகன்

தமிழக அரசியலில் இருந்து ஒதுங்கலாம் தானே?

 

காங்கிரஸுக்கு சூடு சொரணை இருந்தா.. அது தலைவி சோனியா தலைமையில்.. எல்லோரையும் கட்சியை விட்டு நிரந்தரமா விலக்கனும்..!  அப்படிச் செய்யாத வரை எனிக் காங்கிரஸுக்கு மீட்சி இல்லை. மோடி அலை வடக்கில் வீசி இருக்கலாம். தமிழகத்தில் இல்லை. அதற்கு நாம் தமிழர் என்ற உணர்வெழுச்சியும் ஒரு காரணம்..! :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

தமிழ் நாட்டின் பல தொகுதிகளில் எதிர்க் கட்சிகளான காங்கிரஸும் திமுகவும் எடுத்த வாக்குகளைக் கூட்டினாலும் அதிமுகவை வெல்ல முடியாத நிலை  தான் உள்ளது

Share this post


Link to post
Share on other sites

டெல்லியின் 7 தொகுதிகளிலும் பா ஜ க முன்னிலை

Share this post


Link to post
Share on other sites

காங்கிரசின் முன்னிலை தொகுதிகள் 45 இக்கும் 60 இக்கும் இடையில் ஊசல் ஆடிக் கொண்டு இருக்கிறது. அரைச்சதம் அடிப்பாங்களா? மாட்டாங்களா?

Share this post


Link to post
Share on other sites

... அதற்கு நாம் தமிழர் என்ற உணர்வெழுச்சியும் ஒரு காரணம்..! :icon_idea:

 

நீங்கள் குறிப்பது நாம் தமிழர் என்ற கட்சியையா? இல்லை, நாங்களெல்லாம் ஓரளவாவது "உணர்வுள்ள தமிழர்கள்" என இத்தேர்தலில் நிரூபித்த மக்களையா?

 

Share this post


Link to post
Share on other sites

திமுக தோல்வி: ட்விட்டரில் தயாநிதி அழகிரி கொண்டாட்டம்

"திமுகவின் தோல்விக்கு யாராவது பொறுப்பேற்க வேண்டும். யாராவது தயாராக இருக்கிறார்களா.. அப்படி என்றால் அது யார்? திமுகவில் ஏதாவது நீக்கம் இருக்குமா? இது வரை வெளியான தேர்தல் முடிவுகளில் திமுக சந்தித்துள்ள மிகவும் தர்ம்சங்கடமான தோல்வி இதுதான். திமுக நிலைமை மிகவும் மோசமாக உள்ளது" 

10290603_1488224668074906_40778963451460

Share this post


Link to post
Share on other sites

கேரளாவில்  காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலை
பா ஜ க 1  தொகுதி முன்னிலை


பா.ஜனதா கூட்டணி 340 தொகுதிகளில் முன்னிலை: காங்கிரஸ் 59 தொகுதிகளில் முன்னிலை


ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் 7.000 வாக்குகளால் முன்னிலையில் உள்ளார்

Share this post


Link to post
Share on other sites

ஆமா விளக்குமாத்தோட  ஒருத்தர் திரிஞ்சாரே  அவர்  என்ன ஆனார்  :D  :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

ஆமா விளக்குமாத்தோட  ஒருத்தர் திரிஞ்சாரே  அவர்  என்ன ஆனார்  :D  :icon_idea:

 

அவர்கள் கட்சி பஞ்சாப்பில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டது! :o

 

Share this post


Link to post
Share on other sites

கொஞ்சம் பொறுங்க எங்க கிளம்பியிடிங்க? இன்னும் முடிய இல்லை

sonia_gandi.jpg

Share this post


Link to post
Share on other sites
லோக்சபாவில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 10% இடங்களைப் பெறும் கட்சிதான் எதிர்க்கட்சியாக அமர முடியும்.
 
அதாவது 54 இடங்களைப் பெறக் கூடிய கட்சிதான் எதிர்க்கட்சியாக அமர முடியும். ஆனால் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 46 இடங்களில்தான் முன்னிலையில் இருக்கிறது. 50 இடங்களைக் கூட தொட முடியாமல் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கிடைக்குமா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.
 
Thatstamil.

Share this post


Link to post
Share on other sites

மோடி தலைமையில் கூட்டணி ஆட்சியே அமையும்: நிர்மலா சீதாராமன்

நடந்து முடிந்திருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு தனியாகவே அறுதிப்பெரும்பான்மை கிடைத்தாலும் நரேந்திர மோடி தலைமையில் அமையவிருக்கும் ஆட்சியில் தேர்தலுக்கு முன்னரே அமைத்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாக அதை அமைக்கவே பாஜக தன்னால் இயன்ற அளவு முயலும் என்றும் பாஜகவின் பேச்சாளர் நிர்மலா சீதாராமன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமையுமா, அதிமுகவை பாஜக கூட்டணி அரசில் சேர்த்துக்கொள்வீர்களா என்கிற கேள்விக்கு அது பற்றி இப்போதைக்கு ஒன்றும் கூறமுடியாது என்றும் அப்படி ஒரு சூழல் உருவானால், அப்போது அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றும், இன்றைய நிலையில் பாஜகவுடன் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்தவர்களை அரவணைத்துச் செல்வதிலேயே பாஜகவின் முதன்மையான கவனம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

BBC

இந்திய நேரம் மதியம் 2.15 மணி நிலவரம்

140513110449_sonia_gandi_rahul_gandhi_30

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவரது மகனும் அக்கட்சியின் துணைத் தலவருமான ராகுல் காந்தி அமேதி தொகுதியில் முன்னணியில் உள்ளார்.

 

பாஜகவின் ஒரு மூத்த தலைவர் அருண் ஜேட்லி அமிர்தசரஸ் தொகுதியில் தோல்வி. அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான அம்ரீந்தர் சிங் வெற்றி.

மத்திய அமைச்சர் கபில் சிபல் டில்லியில் சாந்தினி சவுக் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி ஈட்டியுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாளை-சனிக்கிழமை மன்மோகன் சிங் பதவி விலகுவதாகவும் அறிவிப்பு.

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • கவியும் விரியும் பெயர் முதலை அகற்றினால் விலங்கு இடையை அசைத்து ஊதிப் பாரு
  • சுத்தி வளைச்சுப் போட்டாலும் மூன்று எழுத்தென்பதால் இலகுவாக இருக்கு! இன்னும் சுத்தத்தான் இருக்கு😁
  • மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட......!  😁
  • 'கொரோனாவை தடுக்க பூனையை வீட்டுக்குள்ளே வைத்திருங்கள்' லண்டன்: கொரோனா அறிகுறியுடன் உடையவர்கள் அல்லது சுயமாக தனிமைப்படுத்தி கொண்டவர்கள் வளர்ப்பு பிராணியான பூனையை வீட்டுக்குள்ளே வைத்திருக்குமாறு பிரிட்டனை சேர்ந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. விலங்குகள் தொற்று நோயை பரப்பும் காரணியாக செயல்படும் என்பதால் , விலங்குகளின் ரோமங்கள் வழியாக அதனுடன் கொஞ்சி விளையாடும் நெருங்கியதொடர்புடையவர்களுக்கு வைரஸ் தொற்றை பரப்ப கூடுமென 'தி பிரிட்டிஷ் கால்நடை அசோசியேசன்' தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அல்லது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் தங்களது வளர்ப்பு பிராணியை முடிந்தவரை வீட்டுக்குள் வைத்திருப்பது நலம் எனவும், கொரோனா பாதிப்புள்ளோர் தொடும் கதவுகள், கைப்பிடி போலவே வளர்ப்பு பிராணிகளின் ரோமங்கள் வழியாக பரவ வாய்ப்புள்ளது. முக்கியமாக வளர்ப்பு பிராணி உரிமையாளர்கள் தங்களது கைகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியமெனவும் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து பூனைகளையும் வீட்டிற்குள் அடைத்து வைக்க வேண்டுமென பரிந்துரைக்க வில்லை எனவும், வீட்டிற்குள் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் பூனைகள் வைத்திருப்பதை உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நாய், பூனையை தொடர்ந்து சமீபத்தில் அமெரிக்காவின் ப்ராங்க்ஸ் வனவிலங்கு பூங்காவில் 4 வயது பெண் புலி நாடியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இது போன்ற நிகழ்வுகளில் கூட, மனிதர்களுக்கு விலங்குகள் மூலம் கொரோனா பரவியதாக எந்த ஆதாரமும் இல்லை. மக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகள் குறித்து பீதியடைய தேவையில்லை. விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக எந்த ஆதாரமும் இல்லை. சில சிறிய நிகழ்வுகளில், நாய்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதில்லை. ஆனால் பூனைகளுக்கு தொற்று குறித்து அறிகுறிகள் இருக்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வளர்ப்பு பிராணியான பூனையை வீட்டை விட்டு வெளியே விடுவதால், அந்நியர்களால் தாக்கும் சூழல் கவலையளிக்கிறது.உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க சமூக விலக்கலை பின்பற்றுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக உரிமையாளர்கள் பலரும் பூனைகளை தெருக்களில் அனாதையாக விட்டு சென்றுள்ளனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில பூனைகள் வீடுகளுக்குள் தங்குவதில்லை. சீனாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பூனைகள் மிக எளிதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட கூடியதாக இருப்பதாகவும், ஒரு பூனையிடம் இருந்து மற்ற பூனைகளுக்கு எவ்வித தொற்று அறிகுறியும் இன்றி பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மரநாய்களும் கொரோனா தொற்றால் எளிதில் பாதிக்கப்பட கூடியது என்றாலும், அதன் பாதிப்பு குறைவாகவே உள்ளது. மறுபுறம், நாய்கள் எளிதில் பாதிக்கப்படவில்லை என்றும், ஐந்து நாய்களின் மலத்தில் இந்த வைரஸ் இருந்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மனிதர்களிடம் இருந்து கொரோனா வளர்ப்பு பிராணிகளுக்கு பரவியிருக்கலாமென்பதை நிபுணர்கள் நிராகரித்து உள்ளனர். வளர்ப்பு பிராணிகள் குறித்து உரிமையாளர்கள் கவலைப்பட தேவையில்லை எனவும் கூறியுள்ளனர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2517540
  • மாடிசன்: அமெரிக்காவில், விஸ்கான்சின் மாகாண மக்கள், கொரோனா பரவல் அச்சமின்றி, ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கான, 'பிரைமரி' தேர்தலில், பல மணிநேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து, ஓட்டுப் போட்டனர். எனினும், மில்வாகீ நகரில்,180 வாக்குச்சாவடிகளில், ஐந்தில் மட்டுமே ஓட்டுப் பதிவு நடைபெற்றது. நுாற்றுக்கணக்கான தேர்தல் பணியாளர்கள், வைரஸ் பாதிப்பிற்கு அஞ்சி, பணிக்கு வருவதை தவிர்த்தனர். இந்த இக்கட்டான இத்தருணத்தில், ஜனாதிபதி தேர்தலை தள்ளி வைக்க, ஜனநாயக கட்சி கோருகிறது. ஆனால், டிரம்பின் குடியரசு கட்சி, திட்டமிட்டபடி, நவம்பரில் தேர்தல் நடத்துவதில் உறுதியாக உள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2517550