Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி கதை சிறப்பாக நகர்கிறது. கூட்டு முயற்சிக்கு வாழ்த்துக்கள். கதையை பலபேர் எழுதினாலும் தொய்வின்றி நகர்கிறது. ஆனால் உரையாடல் பகுதிகளில் ஒவ்வொருவரினதும் வித்தியாசமான ஆற்றல் வெளிப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தீயா வருகைக்கும் கருத்துக்கும்


விழுதல் என்பது எழுகையே
பகுதி 46
எழுதியவர் மாலினி மாலா
தெடர்கிறது

      அவளோடு  பேசிக்  கொண்டிருந்தாலும்  மனம்  அவளோடான  எதிர்காலக்  கனவுகளில்  திளைக்க  மறுத்தது.  அந்த  வித்தியாசம்    ஒரு  நெருக்கமற்ற  உணர்வாய்  அவளை  உறுத்த  அடிக்கடி  வாக்குவாதப் பட்டுக்  கொண்டாள்.  அப்போதும்  அவனால்  தன்னை  மாற்றிக்  கொள்ள  விருப்பமில்லாது  போயிற்று. 

     மனம்  எப்போதும்  உழைப்பு  உயர்வு  என்று    ஓலமிட  ஆரம்பித்தது .   உழைப்பே   உத்வேகமாகையில்  பருவத்துக்கே உரிய    காதல்  கனவுகளின்   ஆக்கிரமிப்பு  குறைந்து  நிஜ  வாழ்வில்  சிறக்க  முயன்று  கொண்டிருந்தான்.   உள்ளங்கையில்  உள்ள  பொருளே  எந்த  நேரத்திலும்  தவறி  விழத்  தயாராக  இருப்பது  போல்இ  கனவுகண்டு   கைக்கெட்டிய  மருத்துவப்  படிப்பே   எதிர்பாராமல்  காவு  போகையில்    அருகே  இல்லாத  இன்னொரு  உள்ளத்தை  நம்பி   அதையே   எண்ணி  அது  கிடைக்கும்  என்ற  காத்திருப்பில்   நிஜத்தில்  உள்ள  கடமைகளைத்  தொலைக்க  அவன்  தயாராக   இல்லை. 

       அவன்  பட்ட  அடிகளும்  இடையில்  பத்மகலாவுடக்ன்  ஏற்பட்ட  பிளவும்  அவனை  நிறையவே  வாழ்க்கையின்  யதார்த்தத்துக்குப்  பதப்படுத்தியிருன்தது.    விரும்பிய  காதலி  கிடைத்தால்  வாழ்க்கை  இனிக்கலாம்  அதற்காக  அதுவே  கதி  என்று  கிடந்து  கிடைக்காமல்  போனால்  மூலையில்  சுருள  அவன்  தயாராக  இல்லை.  அவனை  நம்பி   அவன்  மீது பாசமானவர்கள்  காத்திருக்கிறார்கள்.  அவர்களின்  எதிர்கால  அத்திவாரம்   அவனிடம்  இருக்கிறது.  அதை  செய்து  முடிக்க  வேண்டும்  பிறந்ததின்  அர்த்தத்தை  எழுந்து  நின்று   நிரூபிக்க  வேண்டும். 

      ஓரளவு  டொச்  மொழி  பிடிபட   அவுஸ்பில்டுங்    செய்ய   விரும்பினான்.  மருத்துவப்  படிப்பே  கதி   என்று   அதை  இழந்த   வலியில்  கிட க்காமல்  வாழ்க்கையில்  மேலும்  நடக்க   இன்னொரு  பாதையை  தேர்வு  செய்தான்.  அதே  நிலைப்பாடு  தான்  பத்மகலா   பற்றியும்  அவனின்  மனதில்  உருவாகியிருந்தது. .  ஒருகாலத்தில்  நினைத்தவள்  கிடைத்தால்  சந்தோசம்.  கிடைக்கா விட்டால்   அதிலேயே  துவண்டு  விடாத  மனப்பாங்குக்கு  மனம் பக்குவப்  பட்டிருந்தது.   

     ஜெர்மனி  உலகின்  சிறந்த  கார்களைத்  தயாரிக்கும்  பணக்கார  நிறுவனங்களின்   பணக்கார  நாடு.   முடிந்த  வரை  தன்  மக்களை  பூரண  பொருளாதார   தனிமனித  சுதந்திர   திருப்தியுடன்  வாழவைக்க   முற்படும்  நாடு.  அவன்  இருந்தது   கார்  நிறுவனங்கள் பல  உள்ள   பணக்கார  மாநிலம்.    அந்த  நிறுவனங்களின்  சம்பள  விகிதமும்  அந்த  மாநிலங்களுக்கு  ஏற்ப  அதிகமாகவே  இருக்கும்  என்பது  உணர்ந்து   கார்    தயாரிப்புப்  பொருட்களின்  மெக்கானிக்  வேலையையே  தனது  படிப்பாகத்  தெரிவு  செய்து  படிக்க  ஆரம்பித்தான். 
 

     தொழிலில்  சிறக்கச்  சிறக்க   பணமும்  நேரமும்  இருந்தால்  மேற்கொண்டு  படிக்கலாம்.  என்பது  அவனுக்குப்  பிடித்த  நடைமுறை  வசதி.  ஒருவேளை  தான்  அதிலேயே  மேற்கொண்டு பெரிய   தரத்துக்கு  உயரும்  வாய்ப்புக்கள்  வரலாம்  என்ற   நம்பிக்கையோடு  தொடர  ஆரமித்தான்.  

       இப்போது  எல்லாம்  சீட்டு   போன்ற  போலி  நடவடிக்கைகளில்  அவனுக்கு   நம்பிக்கை  இல்லை.  தன்  மனத்தைக்  கட்டுப்  படுத்தி  தானே  சேர்க்க  முடியும்  போது   இப்படியான  தொந்தரவுகள்  கேவலங்கள்  தேவையில்லை  என்பது  உணர்ந்திருந்ததால்   சிறுகச்  சேமித்த  பணம்  ரொக்கமாகியத்தில்  அக்காவின்  திருமணம்  சிரமமில்லாமல்  நடந்து  முடிந்தது. 

        தன்   கடமைகளை  நிறைவேற்றத்  தொடங்கியுள்ளேன்.  தன்னால்  முடிகிறது.  எந்த  வீழ்ச்சியின்  பின்னும்  எழுந்து  விடலாம்  என்ற  நம்பிக்கை  விதைகள்  அவனுள்  கிளைவிரிக்க   வாழ்க்கை  பசுமை  வீதியில்  பயணிக்கத்  தொடங்கியது. 

      ஒருவனின்  மன  அமைதியை  முதலில்  அவனது  பொருளாதார  நிலைமை  நிர்ணயிக்கிறது.  சீரான  வருமான  சூழல்   அடுத்த   வேலைக்கான  அல்லது  அடுத்த   நாளுக்கான    அடுத்த  மாதத்துக்கான  பயத்திலிருந்து  அவனை  மீட்டு  எடுக்கிறது.    எம்  சொந்த  நாட்டில்  வாழ்ந்ததை  விட   வெளிநாடுகளில்  அந்த  நிலை  மிக  அதிக   அழுத்தத்தைத்   தரும்  ஒரு  விடயம்.  

          ஊரில்  கொட்டிலோஇ  குடிலோ   அனேகமாக  சொந்தமாக   காணித்துண்டு  இருக்கும்.  காற்றும்  தண்ணியும்   இலவசமாகக்  கிடைக்கும்.  கழிவு  தண்ணிக்கும்  மழைத்தண்ணி                 ஓடுவதுக்கும்  கூட  காசு  கட்டும்  அவலம்  இல்லை.  மின்சாரம்  இல்லை  என்றால்  விளக்கோடு  வாழலாம்.  குளிர்  இல்லை  கணப்பு  வசதி  தேவை  இல்லை.  இங்கு  வீட்டு  வாடகையில்  இருந்து   காசு.  குடிக்கும்  நீரில்  இருந்து  கழிவாகும்  சிறுநீர்வரை   பணத்தோடு  சம்பந்தப்  பட்டது  ஆகவே  உழைப்பும்   ஊதியமும்   அவசியம்.  

       இந்த  நாடுகளுக்கு  வந்து  வேலை  அனுமதி   கிடைக்கும்  வரையான   காலப்பகுதிகளின்  செலவுகளை   அரசாங்கள்  எந்தக்  குறையும்  வைக்காமல்  பொறுப்பெடுத்துக்  கவனிக்கும்.    வேலை  அனுமதி  கிடைத்த  பின்  ஒவ்வொரு  சலுகையாக  நிறுத்தி   தன்   கால்  ஊன்றும்  நிலைக்குக்  கொண்டு வரும்.  குழந்தைகள்இ  குழந்தை  உள்ள   தனிமையில்  இருக்கும்  பெண்கள்இ  நோயாளிகள்  தவிர்ந்தவர்களுக்கான  செலவுப்  பொறுப்பை  அரசு  ஏற்பதில்லை.   ஏற்க  வேண்டிய  கட்டாயம்  துளி  கூட   இல்லை.  

      எமது  நாட்டில்  அரசு  எந்தப்  பாதுகாப்பும்  சலுகைகளும்  தராத  ஊழலில்  வளர்ந்து  வாழ்ந்தவர்கள்  நாம் .   இங்கு  இத்தனை  வசதிகளை  அரசு  வழங்கும்  போது  பல  ஆண்களுக்கு  உடம்பு   அசைக்கக்  கசந்து   போகிறது.  நோகாமல்   இருக்கஇ  நேரமற்று   ஊர்  சுற்றி   விடுப்பு  வவிண்ணாணம்  சேகரிக்கஇ  கால நேரமில்லாமல்  தமிழ்  படம்  போட்டுப்  பார்க்கஇ  பார்ட்டிகளில்   அடிபட இ  ஏதாவது  ஒரு  சங்கம்  உருவாக்கி சண்டை  வளர்க்க   என்று  அதிக  நேரம்  தேவைப்  படுவதால்  உழைக்க  நேரமில்லாமல்   சமூக  உதவிக்காக   இல்லாத  நோயெல்லாம்  சொல்லி  முடிந்தவரை  அரசாங்கப் பிச்சையில்  கவுரவமாக  வாழ  நினைக்கிறார்கள்.  

     ஆனால்   சீலன்  நிஜமாகவே  கவுரவமாக   கால்  ஊன்றி  வாழ  நினைத்தான்.  அந்த  முயற்சி   வெற்றியாகி  பொருளாதாரம்  சீரடைந்த  போது  மனதில்  தெளிவு  ஏற்பட்டிருந்தது.  மேற்கொண்டு  நகர  வேண்டிய  பாதை  தெளிவாகி   இருந்தது   விழுந்துஇ  உடைந்துஇ எழுந்துஇ  நிமிர்ந்ததில்  விழாத  திடம்  வந்திருந்தது.  வாழ்க்கையை  கனவுகளற்று  வாழ்க்கையாக  பார்க்கும்  தெளிவு  வந்திருக்க   அதன்  வழியான  நகர்வில்  வாழ்க்கை    சிரமம் அற்று  நகர  ஆரம்பித்தது.  

      வேலை   நேரம்  தவிர்ந்த  மாலை  நேரக்  கல்வி   மெல்ல   மெல்ல  தொழில் வகையிலும்  உயர்த்த   ஆரம்பிக்க இ  அவனது  குடிஇ   புகைஇ  வீண்வம்பு   போன்ற  தீய  பழக்கங்கள்  அற்ற  நடவடிக்கை   புலம்பெயர் மண்ணில்   ஆரம்பகாலங்களில்   குடியேறிய   பலகுடும்பங்களின்  வளர்ந்த  பெண் பிள்ளைகளில்   சிலரையும் இ  கல்யாண வயதில்  பெண் பிள்ளைகளை  வைத்திருந்த   பெற்றோர்கள்  பலரையும்  அவன்பால்  திரும்பிப் பார்க்கவைக்க.....   ஊரில்  வீடு  தேடி   கனத்த  சீதனத்துடன்   கல்யாணம்   பேசிவர....   அம்மா  அடுத்தவளுக்கான   வரதட்சனையை   இவனது  சீதனக் காசில்  எதிர்பார்க்க   .......

      எதுவும்  தெரியாமல்  அவன்  வேலைக்கும்  மாலைநேரக்  கல்விக் கூடத்துக்குமாய்   ஓடி  நேரத்தைத்  துரத்தஇ   எதுகும்  தெரியாத   தூரத்தில்   இருந்து பிரேமகலா   நம்பிக்கைக் கனவுகள்  வளர்த்து   காதலுடன்  தொலைபேசிக் கொண்டிருந்தாள்.

 

 

தொடரும் 47

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விழுதல் என்பது எழுகையே  தொடர்ச்சி 47  

எழுதியவர்: திருமதி.சுபாஜினி ஸ்ரீரஞ்சன்
அறிமுகம் 

பெயர்- திருமதி.சுபாஜினி ஸ்ரீரஞ்சன்  டென்மார்க்
இவர் தமிழையும் கலையையும் அழகுபடுத்த  மிகுந்த கலை அழகுணர்ச்சி கொண்டவர்.. உயர்தர வகுப்பு படிக்கின்ற பொழுதே கவிதைகள் சிறுகதைகள் நாடகங்களை எழுதியவர்.. பல கவிதைகள் (இலங்கை வானொலி யாழ்சேவைக்கு அத்தோடு இசையும் கதையும்இ இப்போது பல இணைய வானொலிகள் மற்றும் முக நூலிலும் எழுதுகின்றவர் மற்றும் டென்மார்க் தமிழ்க் பாடசாலையில் ஆசிரியராகவும். தமிழை அழகாக வளப்படுத்தி பேசும் அழகான குரல் வளம் உண்டு அங்கு நடை பெறும் சில கலை நிகழ்வுகளை தொகுத்து வழங்கிவருகிறார். .இதுவரை 200ற்கும் மேற்பட்ட கவிதைகள் பல தளங்களில் எழுதிஉள்ளார்.
 
 
துன்பங்களை மீறி மனம் துள்ளிக் குதித்துக் கொள்ளும் போது சிறகடித்துப் பறப்பது போன்ற உணர்வு அளவுக்கு மீறிய சந்தோசங்கள் அழ வைத்து விடுமோ என உணர்வுகளை அடக்கிக் கொண்டான் சீலன்.சந்தித்த ஒவ்வொரு நல்ல உள்ளங்களும் புலம் பெயர்ந்த நாட்டில் பட்ட அவலங்கள் அனைத்தையும்  உடைத்து போராடி வெற்றியோடு வாழ்க்கையை தொடர்ந்தவர்கள்
ஒரளவு சிறப்பாக வாழ்கிறார்களே என நினைத்து தன்னைத் தானே ஆற்றுப்படுத்திக் கொண்டான். பல கஸ்ஷ்டங்களை சுமக்கும் சீலனுடைய வாழ்க்கை ஆமை போல் நகர்ந்தது. விடியல்கள் எப்போது என மனம் சலித்துக் கொள்ளும் வேளைகளில் எல்லாவற்றுக்கும்  எங்கள் பிரச்சனையும் இடப்பெயர்வுமே எனப்  பல  முறை எண்ணியுதுண்டு...... இப்பொழுதெல்லாம் அம்மாவின் தொலை பேசி அடிக்கடி வருவதால் ஏதோ ஒரு ஆனந்தம்.
இன்று சனிக்கிழமை விடுமுறை நாள்.
மனதிலுள்ள பல விடயங்களை மீட்டிப் பார்க்கும் நேரம் என நினைத்துக்கொண்டு புரண்டு புரண்டு எழும்ப விருப்பின்றி படுக்கையிலே இருந்தான்.அழகான காலையும் இதமான மெல்லிய குளிரும்
பறவைகளின் ஒலியும் உற்சாகத்தை கொடுத்து சோம்பலை விரட்டிக் கொண்டிருந்தது. அந்த நொடிப் பொழுதில் தொலை பேசி அழைப்பு?!.
ஆயிரம் பட்டாம் பூச்சிகள் அவனது மன வானில்!! பத்மகலாவாக இருக்குமோ என்பது தான் உள்மனதின் எண்ணம்...ஆனாலும் ???, அம்மாவின் குரல் மறு முனையில்!!முதற் கட்டமாக நலம் விசாரிப்பதோடு தொடங்கி பின்னர் ஊர்ப் புதினங்கள். சீலனுக்கு இவற்றை எல்லாம் கேட்கும் போது ஊரிலே நிற்பதுபோன்ற பிரமை ஏற்பட்டது. 
அந்த இடங்களும் காட்சிகளும் அவற்றோடு சம்மந்தப் படுத்தப் பட்ட உறவுகளும் கண்முன்னே காட்சிப் படுத்தின...'தம்பி சீலன் உன்னோடை ஒரு விசயம் பேச வேணும் என இழுத்தாள்''எதுவாக இருந்தாலும் சொல்லுங்கோ அம்மா ' என பதற்றப் பட்டான் சீலன்.
சீலன் வீட்டுக் குலதெய்வமான பக்கத்து அம்மன் கோயிலில் வருடாவருடம் திருவிழா கோலாகலமாகத் தான் நடை பெறுவதுண்டு .இப்போதெல்லாம் மிக குறைவு சனங்களின் இடப்பெயர்வு பொருளாதாரப் பிரச்சனை என வாழ்க்கையோடு தொடர்பு பட்ட விழாக்களும் சந்தேசஷங்களும் குறைந்து போய் விட்டதென்றே கூறலாம்!
அம்மா கூறப் போகின்ற விடயம் திருவிழாவோடு மட்டுமல்ல சீலனோடும் சம்பந்தப்பட்டது.
சீலனின் ஒன்று விட்ட மாமனார் (பொன்னம்பலத்தார்)கொழும்பிலே வசிப்பவர். வருடா வருடம் நடைபெறும் திருவிழாவிற்கு குடும்பத்தோடு வந்துவிடுவார்கள்..
இம்முறையும் வருகின்றார் பெரிய ஒரு விசயத்தையும் சுமந்து கொண்டு,சீலனுடன் பேசுவதற்காக. அரை மணி நேரத்துக்கு மேல் தாயார் தொலைபேசியில் உரையாடினார் எல்லாமே பொன்னம்பல மாமாவின் மகள் பற்றியே!.
சாம்பவி அம்மனுடைய பெயர், பெண் தெய்வத்தின் பெயர் அழகான பெயர். ஒரு வங்கியிலே கணக்காளர் பதவி. சாதுவானவள் அதிகமாக அலட்டிக் கொள்ளாதவள.; அத்தோடு நல்ல சீதனம் வீடு வளவு நகைகள் என்று சொத்துக்களோடு வரும் சீதேவி, நல்ல வடிவும் கூட. எல்லா வழியிலும் சீலனுக்கு பொருத்தமானவளே என பெரிய மனக் கோட்டையை கட்டிக்கொண்டிருந்தாள் சீலனின் தாயார். 
இந்த விசயம் பற்றி பேசவே இந்த திருவிழாவிற்கு வருகின்றார். திருமண புராணம் வாசிக்கப்பட்டது போல் உணர்ந்தான் சீலன்.
'அம்மா இப்ப எதற்கு கலியாணம் கொஞ்சநாள் பொறுத்துக் கொள்ளுங்கோ ' என அதட்டலோடு முடித்தான் .என்னைக்  கேளாமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது எனவும் எச்சரித்தான்.
ஒருமுறை உள் மூச்சை இழுத்து மனக் குழப்பங்களையும் சேர்த்து வெளிவிட்டான். என்னுடைய படிப்பு கனவுகள் குடும்பச்சுமை எல்லாவற்றையும் நினைக்கையிலே இந்த கலியாணம் இப்ப தேவையில்லை என தோன்றுகின்றது. அம்மாவின் சுகத்தைக்கூட கேட்க மறந்து விட்டேன். பிரச்சனை பூதாகரமாகும் போது இயல்புகள் தொலைந்து விடும் என நினைத்து வருந்திக்கொண்டு, அம்மாவை திட்டிவிட்டேனோ 'ச்சே“ என தன்னைத் தானே வெறுத்துக் கொண்டான்.
நான் பேசினாலும் அம்மா ஒரு போதும் என்னை வெறுப்பதில்லை தம்பி தம்பி என என்னைச் சுற்றியே நினைவுகள். வேறு எந்த உலகத்தையும் புரியாத என் தாய். தன் குழந்தைகளே உலகம் என வாழ்ந்தவள் என தாய் மீதான பாசம் பொங்கி வழிந்தது.
கண்முன்னே பத்மகலா நினைவுகளோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். ஏதோ ஒரு சோகம் நெஞ்சைப் பற்றிப் பிடித்து எரிவது போல் உணர்ந்தான்
படிக்கும் காலங்களில் பக்கத்துணையாக இருந்த நல்ல நட்பாய் இருந்த பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்த பத்மகலா ஒரு நாள் குத்திக்கிழித்த வார்த்தை அம்புகள் மாறி மாறி விம்பங்களாக தோன்றின. 
இதயம் துன்பத்தால் அமுக்கப்படும் போது உள்மூச்சை இழுத்து மனதை ஆறுதல் படுத்துவது வழக்கமாகவே கொண்டான் சீலன்.
வாழ்க்கையில் துன்பங்கள் வரும் போது வார்த்தைகளும் தாறு மாறாய் வருவது இயல்பு தான். பத்மகலாவும் எப்படியான துன்பத்தை அனுபவித்தாளோ  இதை சீலன் புரியாதவன் அல்ல. இருந்தாலும் இது காதல் மனசு சம்மந்தப்பட்ட விடயம் இருவரைப்பற்றிய எதிர்காலத்தை இந்தப் பேச்சு எவ்வளவு பாதிக்கும் என ஏன் கலாவுக்கு புரிதல் இல்லாமல் போனது?, என மனவருத்தத்தோடு கோப்ப் பட்டான.;இருந்தும் அடி மனதில் இருக்கும். இதைத் தான் காதல் என சொல்வார்களோ?.
கண்ணீர் முட்டி காத்திருந்தது. இதயத்து வலிகளை சுமந்து கொண்டு மனம் முயன்று முயன்ற அடக்க முற்பட்டது.இதைப்பற்றி எதையும் சிந்திக்க விருப்பின்றி தேனீர் போட தயாராகினான். 
கதையில் கூட கற்பனை செய்து கொள்ள முடியாத அத்தனை விசித்திரமான சம்பவங்களும் எனக்கு நேர்ந்துள்ளதே, இப்படியெல்லாம் நடந்திருக்கும் என கனவிலும் நினைத்ததில்லையே!. என் கதையை எழுதிவிடலாம் போல தோன்றுகிறது என நினைத்தான். கிட்டத்தட்ட தட்ட ஏழு எட்டு வருடங்களுக்கு முன் பாடசாலைகளுக்கு இடையிலான சிறுகதைப் போட்டியில் பங்குபற்றி முதலாம் இடம் கிடைத்து. அது ஒரு உண்மைச்சம்பவம் தான்.
சீலனின் தனிமையில் அவனோடும் பத்மகலாவோடும் தொடர்புடைய பல பழைய நினைவுகள் வந்து போயின.

தொடரும் 48
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விழுதல் என்பது எழுகையே    எழுதியவர்: திருமதி.சுபாஜினி ஸ்ரீரஞ்சன்

தொடர் - 48

தொடர்கிறது

 

நேரம் 11 மணி….,

இளம் சூரியன் பொற்கரம் பரப்பி தன்னொளி பரப்பிக் கொண்டிருந்தான்.

சீலனின் நெஞ்சம் மெல்ல இளம் தொடங்கியது..நினைவுகள் முழுவதும்  பத்மகலாவைப் பற்றியே!! ஒரு முறை பேசினால் ஒரு முடிவுக்கான பாதை திறபடும் என தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த முனைந்தான்.

மறு முனையில் கலா........

'கலா எப்படி இருக்கிறீங்க என தொடங்க முதலே வார்த்தைகள் சிக்கிக்கொண்டது எத்தனையோ விடயங்களை பேச வேண்டும் மனதில் உள்ள அத்தனையையும் கொட்டித் தீர்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டே வந்தவன், முடியாமல்…….,

தவித்தான்.கறுப்புத் திரை ஒன்று கண் முன்னே விழுந்தது போல் உணர்ந்தான் . இருந்தும் தன்னை சுதாகரித்துக் கொண்டு பத்மகலாவோடு உரையாடினான்.

தாயாரின் கல்யாணப் பேச்சை போட்டுடைத்தான். மறுமுனையில் பத்மகலா மயக்கம் போடாத குறையாக வார்த்தைகள் தடுமாற கண்ணில் கண்ணீர் சொரிவதை வார்த்தைகள் மூலம் புரிந்தான்.

இருவருடைய கண்ணீர் ஒரு பெருந் துன்பத்தை விலக்கியது.

பத்மகலா மனம் விட்டுப் பேசினாள்.

'என் மனதில் கணவராக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் எப்படி எப்படி இதை என் மனம் ஏற்றுக் கொள்ளும் ' என விம்மி விம்மி அழுதாள்.

பத்மகலாவிற்கும் வீட்டார் பாரிய அழுத்தத்தை கொடுத்துக்கொண்டே இருந்தனர் அவளுடைய திருமணத்திற்காக ......இப்பொழுது சிலனும் பத்மகலாவும் ஒரே புள்ளிக்குள் வருகின்றனர் .. காதல் ஏற்படுத்திய வலி..இது.

இழந்துவிட்ட கல்வி..... திருமணத்திற்கான பெற்றோரின் அழுத்தங்கள்......

ஒரே வலியை கொண்டிருக்கும் இருவரும் இணைவதில் எவ்வளவு சிக்கல்!! வாழ்க்கை ஒரு போர்க்களம் என மாறியது .................

சீலனுக்கு பத்மகலா மீது அளவு கடந்த பரிதாபமும் இரக்கமும் ஏற்பட்டது.

எந்தப் பெண்ணும் தான் விரும்பியவரை யாரவது மணம் முடிப்பதை தாங்க மாட்டாள் என்பதை சீலன் உணர்ந்து கொண்டான்.சீலன் கிடைக்காது போனால் உயிர் வாழமாட்டேன் எனக்கூறியது சீலனை மிகவும் பாதித்தது. 

சகோதரியுடன் கூடப் பிறந்தவன் தாயை உயிராக மதிப்பவன் இரக்க குணம் கொண்டவன் பத்மகலாவின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இல்லை எனினும் அவள் அள்ளி வீசிய வார்த்தைகள் இடையிடையே வந்து வெறுப்பையும் ஏற்படுத்த தவறியதில்லை. இப்படியான சோகங்களும் பிரிவுகளும் தான் உறவுகளை பலப்படுத்தும் எனவும் உணர்ந்து கொண்டான்.

பாசமும் சோகமும் உடலையும் மனதையும் வாட்டியது !மயிர்க்கணுக்கள் கூச்செறிந்தது!! இந்த சோக உணர்விலும் சுகம் இருந்தது.

வாழ்க்கை என்பது ஒரு அழகான பரிசு 

ஒவ்வொருவருக்கும ;கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி தெரிவு செய்யும் உரிமை இருக்கிறது எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தில் என்னுடைய வாழ்க்கையை தெரிவு செய்ய நான் தானே முன் வர வேண்டும் என தெளிவோடு துணிவு கொண்டான்.

வானம் வெளிப்பாக இருந்தது.வெளியே சென்று எதாவது மரக்கறிகள் வேண்டி சமைக்க வேண்டும் என நினைத்து ஆயத்தமாகினான்.அப்பொழுது வீட்டை தட்டும் சத்தம் கேட்டது, யாராக இருக்கும் என யோசித்தபடி கதவை திறக்க முன் சென்றான்.அங்கே நன்கு பழக்கப்பட்ட முகம் தான்.சீலனோடு மாலைக் கல்விக்கு செல்லும் சக தோழன் நிறையவே வயது வித்தியாசம் கொண்டவர் பெயர் சத்தியநாதன்.

மிகவும் நல்ல பண்புகளை கொண்ட மனிதர் சீலனிடம் நிறையவே மரியாதை கொண்டிருந்தார் சீலனும் அப்படியே .

அவர் வந்த காரணம் தனது மகள் குமுதாவின் 21வது பிறந்தநாளிற்கு அழைப்பதற்கு .சீலன் நாளுக்கு ஒரு தடவையாவது குமுதாவை வழியில் பார்ப்பதுண்டு. மெல்லிய புன்னகை கண்களில் காதலும் ஏக்கமும் நிரம்பி வழிகின்ற சிறு பார்வையில் நாணம் கலந்திருக்கும்.சீலனுக்கு அந்தப் பார்வை பிடித்துப் போய்விடும். 

வாழ்க்கை வெறுக்கின்ற போதெல்லாம் இந்த் சின்னச் சின்ன விசயங்கள் உயிர்ப்பைக் கொடுக்கும். சில வினாடிகள் அந்த நினைவுகளின் சென்று மீண்டு அவரை வழியனுப்பி விட்டான் பிறந்த நாளுக்கு வருவதாகவும் உறுதி கொடுத்தான்.

சீலனுடைய நற்குணங்கள் அறிவு பெரியவர்களை மதிக்கும் பண்பு என்பவை மிகவும் சத்தியநாதனை கவர்ந்தவை இந்த நோக்கம் கருதியோ என்னவோ தனது மகளை சீலனுக்கு கட்டிக் கொடுக்க வேண்டும் என பெரு விருப்பு.

எப்படிச்  சீலனை கேட்பது என திண்டாட்டம். பிறந்த நாள் அழைப்பும் சீலனின் வருகையும் குடும்பத்தில் பிணைப்பை ஏற்படுத்தும் எனவும் தனது உறவினர்களும் சீலனை பழக வாய்ப்பு இருக்கும் எனவும் பல திட்டங்களை வைத்திருந்தார். 

குமுதா மருத்துவ மனையிலே தாதியாக பணி புரிகின்றாள். தொழிலுக்கு ஏற்றது போல பணிவடக்கமும் துணிச்சலும் உள்ளவள்.இவளும் சீலனுக்கு பொருத்தமானவளே.சில வேளைகளில் டொச் பாடத்தில் ஏதாவது சந்தேகங்களையும் தெளிவு படுத்தியிருக்கிறாள்.

சத்தியநாதன் மனதோடு பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.தனது மகளுக்கு சீலன் மணமகனாக வரவேண்டும் எனவும் அவளுடைய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் எனவும் சீலன் போல் ஒரு பொருத்தமான மாப்பிள்ளையை தவறவிட்டு என் மனது தவிப்பதிலும் பார்க்க வெட்கத்தை விட்டு கேட்கவேண்டும் என உள்ளூர நினைத்துக் கொண்டார்.

சீலன் தனது காதலை பலப்படுத்திக் கொள்ள அக்கம் பக்கமெல்லாம் அவனுக்கு பல வரன்கள். அம்மாவின் கனவு அவள் பார்த்து வைத்த சாம்பவி என்ற அழகான உறவுப் பெண் பெரிய சீதனத்தோடு. 

தன் மனதிலே உயிரோடு கலந்து இடம் பிடித்த பத்மகலா சத்தியநாதனின் மகள் குமுதா.

திரும்பத் திரும்ப அதையே யோசித்துக் கொண்டிருந்தான். எத்தனை நாடுகளுக்கு தாவி விட்டேன் எத்தனை மனிதர்களை சந்தித்து விட்டேன் இது விதியா?. இதற்கு மூலத்தை காண்பது எப்படி அவை எல்லாம் தானாகவே வருகிறதா அல்லது நானாகத்தேடிக் கொண்டேனா?

காதலித்தது....... படிப்பு குழம்பியது...... வெளிநாடு வந்தது..............புதிய மனிதர்களை சந்தித்து புதுப் புது உறவுகளை தேடியது?....................

எல்லாவற்றையும் விட்டு விட்டு கண்களை இறுக மூடிக் கொண்டான் .

சீலன் இப்பொழுதெல்லாம் நல்ல சிந்தனையை உருவாக்கி திடமாக மனதை வைத்துக் கொள்ள பழகிவிட்டான்.முன்பெல்லாம் சிறு பிள்ளை போல் அடிக்கடி கண்கலங்கி அழுவதற்கான காரணங்களாக பாசங்களை விட்டுப் பிரிந்த வலி

கல்வியை தொடர முடியாத அவலம் காதலியை பிரிந்த துன்பம் இவை எல்லாவற்றுக்கும் கண்ணீரை மருந்தாக்கி தன்னைத்தானே ஆற்றுப் படுத்திக் கொண்டான்.இருந்தும் வருகின்ற துன்பங்களை எப்படி களைவது என யோசித்து அவதானமாகவே பல முடிவுகளை எடுப்பான். எடுக்கின்ற முடிவுகள் எல்லாம் திருப்தியாக முடிவதும் இல்லை இருந்தும் ஏற்றுக் கொள்ளப்  பழகிவிட்டான்....,,,.....,,.........

வார விடுமுறை பல அலைச்சல்களோடு போய் விட்டது.சீலன் தெரிவு செய்த மெக்கானிக் படிப்பு நன்றாகவே போய்க் கொண்டிருந்தது அது சம்மந்தப்பட்ட மேலதிக கற்கைகளுக்கான வாய்ப்பும் கிடைத்து. எல்லாமே அவனுடைய முயற்சி தொழிலை நேசிக்கும் தன்மையும் நுணுக்கமான அறிவும் துணை நின்றன.வளர்ச்சியடைந்த நாடுகளின் தனிநபர் வருமானம் உயர்ந்ததாகவே இருக்கும் வாழ்க்கைத் தரமும் உயர்வானதாகவே இருக்கும் இவை இயல்பு நிலை பொருளாதார சூழல் என்றே கூறலாம். 

எங்களுடைய நாட்டில் படித்தது மட்டுமே...எங்களுடைய நாடு அபிவிருத்தியடைய எத்தனை காலங்களோ என மனதுக்குள் வேதனைப்பட்டதோடு,தன்னிறைவு காணும் நிலையை உணர்ந்தும் சமூகத்துக்கு பாரமில்லாமல் உழைத்து வாழும் தகுதியை பெற்றுவிட்டதையும் அத்தோடு இந்த நாட்டு சமூகச் சூழலோடு இசைவடைந்து வருவதையும் எண்ணி மகிழ்ச்சியடைந்தான்.

பருவத்தின் உணர்ச்சிகள் சஞ்சலப்படுத்தினாலும் கடந்து வந்த பாதைகள் கற்றுதந்த பாடங்கள் திடமான முடிவை எடுக்க சக்தியளித்தது.ஒரு வாரம் மின்னல் போல் கண்ணிலே வந்து மறைந்தது.

நாளை விடிந்தால் சனிக்கிழமை!!

பொன்னம்பல மாமா கல்யாண விடயமாக என்னோடு பேச வரும் வேளை என்ன பதிலை கூறுவது, அம்மாவின் கனவு சந்தோசம் எல்லாமே என் பதிலில் அடங்கியிருக்கிறது .

"கடவுளே ஒரு பதில் வேண்டும் "

தாய் சொல்லை தட்டாத தனையனா?

பத்மகலாவின் மனம் நிறைந்த காதலனா?..... மனம் குழம்பிக் கொண்டிருந்தான் .

எத்தனை இடத்தில் வீழ்ந்து வீழ்ந்து எழுந்து விட்டேன். இந்தக் காதலுக்கும் கல்யாணப் பேச்சுக்கும் முற்றுப் புள்ளி வைக்க என்னால் முடிய வில்லையே.

கடவுளே...,,,என நினைத்துக் கொண்டு அயர்ந்து தூங்கி விட்டான் .

பொன் மஞ்சள் பூசிக் குளித்த இளம் காலை பறவைகளின் இசையோடு விடிகிறது..இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மாவின் தொலை பேசி அழைப்பு வரப்போகிறது. 

பொன்னம்பல மாமா வராமல் இருக்க வேண்டும் என மனதுக்குள் பிரார்த்தித்துக்கொண்டே இருந்தான். பத்மகலாவும் ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் கதைப்பாள். அத்தோடு குமுதாவின் பிறந்த நாள் மாலை 4மணிக்கு போக வேண்டும். அங்கும் எதிர்கால மருமகனாக வரப்போகும் என்ற ஆசை உணர்வுகளை நிறைத்தபடி வரவேற்க காத்திருப்பு.

இன்று எனது காதலை சொல்லியே தீர வேண்டும். இல்லையேல் என்னுடைய எதிர்காலம் சஞ்சலமாகி விடும் அத்தோடு இன்றைய நாள் எனது வாழ்க்கை சம்மந்தப்பட்ட முடிவை எடுக்கும் நாள். இன்றைய சனிப்பலன் எப்படியோ? சீலன் சஞ்சலப் பட்டுக் கொண்டு இருக்கும் போது தொலை பேசி அழைப்பு மணி அடித்தது.அம்மாவாக இருக்கலாம்,பத்மகலாவாக இருக்கலாம் ,அல்லது வேறு புதுப் பிரச்சனையாக கூட இருக்கலாம்? சீலன் பதற்றத்தோடு

தொலை பேசியை கையில் எடுத்தான்.................!!

தொடரும்  49  எழுதுபவர்: திருமதி.அருண் விஜயராணி,அவுஸ்திரேலியா

 
Link to comment
Share on other sites

சுமே அக்கா................ஏன் இப்படி இடையில நிக்குது........... வாசித்து கொண்டு இருந்தன் பொறுத்த இடத்தில்..... நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பெருந் தொடர்கதை 50வது வாரத்தை நோக்கி...
விழுதல் என்பது எழுகையே தொடர் 49 எழுதியவர் திருமதி.அருண் விஜயராணி  - அவுஸ்திரேலியா

அறிமுகம்
அருண் விஜயராணி 
யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.  1989 முதல் அவுஸ்திரேலியா மெல்பேர்ணில்வசிக்கின்றார்.  அருண். விஜயராணி என்ற பெயரில் எழுதி வருகின்றார்
1972 ஆம் ஆண்டில் இந்து மாணவன் என்ற பாடசாலை மலரில் "அவன் வரும்வரை" என்ற தனது முதலாவது சிறுகதையை  எழுதினார்.  கொழும்பில் வாழ்ந்த காலப்பகுதியில் இலங்கை வானொலியில் இவரது "விசாலாட்சிப்பாட்டி பேசுகின்றாள்" என்ற நகைச்சுவைத்தொடர் 25 வாரங்கள் ஒலிபரப்பாகியது.
இலங்கை வானொலியில் சிறுகதைகள்இ சிந்தனைக்கட்டுரைகள்இ இசையும் கதையும்இ நாடகங்கள்இ தொடர்நாடகங்கள் என்பன இவரது ஆக்கங்களாக ஒலிபரப்பாகியுள்ளன. ”தவறுகள் வீட்டில் ஆரம்பிக்கின்றன" என்ற இவரது வானொலி நாடகம்இ துணை என்ற பெயரில் ரூபவாஹினிதொலைக்காட்சிக்காக பி.விக்னேஸ்வரன்  தொலைக்காட்சி நாடகமாக தயாரித்து ஒளிப்பரப்பினார்.
அவுஸ்திரேலியாவில் தமிழோசை வானொலி மற்றும் வானமுதம் வானொலிஇ இன்பத் தமிழ் ஒலி ஆகியவற்றிலும் பல உரைச்சித்திரங்களை வழங்கியிருக்கிறார்.
அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத்தின் அவுஸ்திரேலிய முரசு இலக்கிய சிற்றிதழின் ஆசிரியராகவும் அருண். விஜயராணி பணியாற்றியுள்ளார். அத்துடன் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்தும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
தகவல் தொகுப்பு
பண்ணாகம் திரு.இக. கிருட்ணமூர்த்தி
திரு.ஏலையா முருகதாசன்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

கதை தொடர்கிறது.
„கலோ .......“
„கலோ நான் பத்மநாதன் மாமா கொழும்பிலையிருந்து கதைக்கிறன்..........“
„மாமா நான் சீலன்தான் ......எப்படியிருக்கிறியள்.......“
„சுகமாக இருக்கிறன் என்று சொல்ல முடியாது.......“
„ஏன் மாமா என்ன பிரச்சினை.......சோர்வாகக் கதைக்கிறியள்....“
„வயதும் போய்க் கொண்டிருக்குது....அதோட நீரழிவு நோயும் வந்திட்டுது“
„யாருக்குத்தான் வருத்தம் இல்லை. இப்பு எல்லாருக்கும் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்யுது.மருந்தைக் கவனமாக எடுங்கள்“
„சீலன்......“
„சொல்லுங்கோ....“
„அம்மா ஏதாவது சொன்னவாவா“
„ம்....“
„அம்மாவிற்கு சாம்பவியை நல்லாய்ப் பிடிச்சிருக்கு“
„......“
„சீலன் நான் என்ன சொல்ல வருகிறன் என்பது உங்களுக்கு விளங்குத்தானே“
„ஓம்...“
„என்ன முடிவெடுத்திருக்கிறியள்“
சாம்பவியை கல்யாணம் செய்யச் சொல்லி அம்மா தொலைபேசியில் சொல்லியிருந்தார். பத்மகலாவும் தானும் ஒருவரையொருவர் காதலிப்பதும்,கனடாவிலிருக்கும் அவள் ஜேர்மனிக்கு வெகுவிரைவில் வரவிருப்பதையும் பத்மநாதன் மாமாவுக்கு எப்படிச் சொல்வது என்று தடுமாறினான்.
துணிவுடன் முடிவுகளைச் சொல்ல வேண்டும் என்று மனம் தீர்மானித்தாலும் அதற்குரிய சந்தர்ப்பம் வரும் போது மனம் தடுமாறத்தான் செய்கிறது. சில விநாடிகள் சீலன் மௌனமாக இருந்தான். எப்படி ஆரம்பிப்பது எனத் தயங்கினான்.
„சீலன் ஏன் மௌனமாக இருக்கிறியள் எதுவாக இருந்தாலும் சொல்லங்கள்“
„மாமா நான் சொல்லுறன் என்று கோவிக்காதையுங்கோ.......உங்கள் விருப்பத்தை என்னால் நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கிறன்“
„.....“
„நான் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்த போது பத்மகலா என்ற பெண்ணும் நானும் ஒருவரையொருவர் விரும்பத் தொடங்கினோம்.அவள் இப்ப கனடாவிலிருக்கிறாள். நாங்களிருவரும் கல்யாணம் செய்யப் போகிறம்.....அதுதான்.........“
„.....“
சில விநாடிகள் பத்மநாதன் எதுவும் பேசவில்லை.. அவர் சீலனிடமிருந்து இப்படி ஒரு பதில் வரும் என எதிர்பார்க்கவில்லையோ தெரியாது அதுதான் காரணமாகவும் இருக்கலாம்.
„மாமா“
அவரிடமிருந்து பெருமூச்சொன்று வெளிவந்தை தொலைபேசி வழியாக சீலனால் கேட்க முடிந்தது.
„மாமா ஏன் மௌனமாக இருக்கிறியள் எதுவாக இருந்தாலும்  சொல்லுங்கள் என்னுடைய நிலமையை மூடிமறைக்காமல் சொன்னதால் கோபமா“
„இல்லை இல்லை நான்  அப்படி நினைக்கவில்லை கோபப்படவும் இல்லை. நீங்கள் எடுத்த முடிவு சரியானதுதான். விரும்பியவளோடு சேர்ந்து வாழ்வதே வாழ்க்கை“
„என்னுடைய நிலையைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி மாமா“
„பரவாயில்லை அது சரி அம்மாவிற்கு தெரியுமா“
„யாழ்ப்பாணத்திலை இருந்த போது பத்மகலா எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறா, அம்மாவுக்கு சாடை மாடையாகத் தெரியும்“
„சரி நான் ரெலிபோனை வைக்கிறன். சாம்பவிக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை. நீங்கள்  ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். உங்களோடு கதைத்ததை அம்மாவிற்குச் சொல்லுறன்“
என்ற சொல்லியபடி பத்மாநாதன் தொடர்பைத் துண்டிக்கிறார். ஒரு பாரத்தை இறக்பகி வைத்தது போல் சீலன் உணர்ந்தேன். ஆனால் அம்மாவிடமிருந்து என்ன மாதிரியான தொலைபேசி வரப்போகிறதோ என அதையும் யோசித்தான்.
நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை, இன்றைக்கு அரைநாள் வேலை. வேலை முடிந்து வந்தவுடன் சத்தியநாதன் மகளின் பிறந்தநாளுக்கு போக வேண்டும் என்று தீர்மானித்தபடி வேலைக்கு கிளம்பினான் சீலன்.
......................
சத்தியநாதன் தனது மகளுக்கு மண்டபம் எடுத்து பிறந்தநாள் விழா செய்து கொண்டிருந்தார். மண்டபத்தின் வாசலில் சீலனைக் கண்டதும் சத்தியநாதனும் மனைவியும் அவனை வரவேற்று கேக் வைத்திருந்த மேசைக்கு முன்னால் இருந்த நாற்காலி வரிசையில் கொண்டு உட்கார வைக்கிறார்கள்.
சத்தியநாதனின் மகளின் இருபத்தியோராவது பிறந்து நாள் இது. பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த அவள் இப்பொழுது ஒரு நிறுவனத்தின் அதிகாரி நிலைப் பணியில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
மண்டபத்திலிருந்த ஒவ்வொருவரிடமும் சென்று உரையாடி நன்றி சொன்ன அவள் முன வரிசையிலிருந்த சீலனிடம் வந்த போது அவள் இதுவரை சீலனைப் பார்க்கவில்லை.
அதனால் இவர் யாராக இருக்கும் என எண்ணியவாறே அவனுக்கு கைலாகு கொடுக்கிறாள். அந்த நேரம் பார்த்து சத்தியநாதனின் நண்பர் கனகலிங்கம் சீலனுக்கு அருகில் வந்து இவர் ஜேர்மனிக்கு புதியவர் வந்து கிட்டத்தட்ட ஆறுமாதங்களாகின்றன. பிஎம்டபுள்யூ கார் கொம்பனியில் பயிற்சி பெறுகிறார் என அவளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறாhர்.
அவள் புன்னகையுடன் அதை கவனித்த அவள் அந்த இடத்தை விட்டு அகலுகிறாள். இரண்டு மீற்றர் போனவள் திரும்பி சீலனைப் பார்க்கிறாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த சீலனும் தன்னை அவள் திரும்பிப் பார்ப்பதைக் கவனிக்கிறாள். மெலிந்த தேகம் அழகான முகம். தலைமயிரை அழகாக சுருட்டி விட்டிருந்தாள். சிவப்பும் வெள்ளையும் கலந்து சாதாரண சேலையைக் கட்டியிருந்தாள்.
கேக் வெட்டி முடிய அவளோடு நின்று எல்லோரும் படம் எடுக்கிறார்கள். சீலனும் சத்தியான் அவர் மனைவி அவரின் மகளுடன் நின்று படம் எடுக்கிறான் .
பிறந்தநாள் விழா விருந்து முடிய அவளிடமும் சத்தியாதன் அவரின் மனைவியிடமும் விடைபெறுகிறான் சீலன். 
„சீலன் கொஞ்சம் நில்லுங்கள், நான் காரிலை கொண்டு போய் விடுகிறன்“ என்று சொல்லியபடி கனகலிங்கம் அவனிடம் வருகிறார்.
தான் பஸ்ஸில் போவதாகச் சீலன் சொல்லியும், அவர் விட்பாடில்லை. தவிர்க்க முடியாமல் சீலன் அவருடன் காரில் போவதற்கு ஒப்புக் கொள்ளுகிறான்.
காரில் ஏறி உட்கார்ந்ததும், கனகலிங்கம் காரை ஸ்டார்ட் செய்யாமலேயே தொண்டையை செருமியபடி“சீலன் உங்களிட்டை ஒரு விசயம் கதைக்க வேணும்“ என்கிறார்.
என்ன என்பது போல் கனகலிங்கத்தை சீலன் பார்க்கிறான்.கனகலிங்கம் தயங்கியபடி“சீலன் இன்றைக்கு பேர்த்டேய் நடந்த பிள்ளைதான் சத்தியநாதனின் மூத்த மகள். அவளுக்கு கல்யாணத்தை செய்து வைக்க வேண்டும் என்று அவரும் மனைவியும்  என்னிடம் சொல்லவிட்டு உங்களைப் பற்றியும் கேட்டார்.......
„..................“
„நேரடியாகக் கேட்பதற்கு குறை நினைக்க வேண்டாம். உங்களுடைய அப்பா அம்மா சகோதரங்கள் இங்கையிருந்திருந்தால் அவையிடம் கேட்டிருக்கலாம்.... தன்ரை குடும்பத்திற்கு உங்களை மருமகனாக எடுக்க அவை விரும்புகினம்......அதுதான் உங்களிடம் கேட்டகச் சொன்னவை“ எனத் தயங்கித் தயங்கி கனகலிங்கம் கேட்க, என்ன சொல்வதென்றே தெரியாமல் தயங்கிய சீலன் ஒருவாறு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு காலையில் பத்மநாதன் மாமாவுக்குச் சொன்ன அதே பதிலைச் சொல்லுகிறான். பத்மகலா இங்கு வரப்போவதையும் சொல்கிறான், இறுதியாக கோபிக்காதையங்கோ என சொல்லி முடிக்கிறான்.
இப்படி நேர்மையாகச் சொன்னதற்காக சீலனை பாராட்டிய கனகலிங்கம் காரை ஸ்டார்ட் செய்து சீலனை அவனின் அறையில் விடுவதற்காக போய்க் கொண்டிருக்கிறார். போகும் போது பிஎம்டபுள்யு நிறுவனத்தில் தொழில் பயிற்சி கிடைத்தது அதிர்ஸ்டம் கவனமாகப் பயிற்சி எடுங்கள் படியுங்கள் பெரிய ஆளாக வரமுடியும் என ஆலோசனை கூறுகிறார்.
சீலனின் வீடு வரவே அவனை இறக்கிவிட்டுச் செல்லுகிறார்.
கதவைத் திறந்து சீலன் உள்ளே போக ரெலிபோனும் அடிக்கிறது. கலாவாகத்தான் இருக்கும் என நினைத்தபடியே ரெலிபோனை எடுக்கிறான். மறுமுனையில் பத்மகலா.
„கலோ“
„பேர்த்டேய் முடிஞ்சு வந்திட்டியளா“
சீலன் திகைத்துப் போய்விட்டான். பத்மகலா கலகலவெனச் சிரித்தாள்.
„நான் பேர்த்டேய்க்குப் போனது உங்களுக்கு எப்படித் தெரியும்“
„உங்கடை நடவடிக்கைகளை கவனிக்க உங்கை ஒரு சிஐடியை வைத்திருக்கிறன்“ மீண்டும் சிரிக்கிறாள் பத்மகலா.
„கலா பகிடிவிடாமல் சொல்லுங்கள் யார் சொன்னதென்று“ சீலன் கேட்க. மட்டக்களப்பில் தங்கள் வீட்டுக்கு பக்கத்திலிருந்த பெண்  ஒரு குடும்பமாக இப்பொழுது ஜேர்மனியில் நீங்களிருக்கும் நகரத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களும் நீங்கள் போன பேர்த்டேக்கு வந்தவை. அந்தப் பெண்தான் ரெலிபோன் செய்து சொன்னவள்.
„என்னைப் பற்றி என்னென்று அவவுக்கு தெரியும்“
„ஏதோ ஒரு விதத்தில் அறிந்திருக்கிறாள். வேறு என்ன புதினம்“
„ஒன்றுமில்லை“
பத்மநாதன் மாமா கேட்டதையும் கனகலிங்கம் கேட்டதையும் சொல்லி ஏன் வில்லங்கத்தை விலைக்கு வாங்குவான் என அவன் மௌனமாக இருக்கிறான்.
பத்மகலா „ நான் வாற வெள்ளியைவிட்டு அடுத்த வெள்ளி ஜேர்மனி பிராங்பேர்ட் எயர்போட்டுக்கு  காலை பத்தரை மணிக்கு வாறன் பிராங்பேர்டிற்கு வாங்கோ“ என அவள் திடுதிப்பென்று அவள் சொல்லியதும் நம்ப முடியாமல் சீலன் திகைத்தாலும் உள்ளுக்குள் ஒரே மகிழ்ச்சி.
„சரி வாறன்“
„நான் ரெலிபோனை வைக்கிறன் „ என்று சொல்லியவாறு பத்மகலா தொடர்பைத் துண்டிக்கிறாள்.
சீலனோ மீண்டும் தானும் பத்மகலாவும் ஒன்று சேரப் போகிறோம் என்ற சந்தோசசத்தில் படுக்கையில் படுத்திருந்தும் நித்திரை வராமல் புரண்டு புரண்டு படுத்தபடி இருக்கிறான். 
தொடரும் பகுதி 50

 


 

 

வருகைக்கு நன்றி புலிக்குரல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆண்டு நிறைவாகிறது!  

’’விழுதல் என்பது எழுகையே’’  

என்ற பெருந் தொடர்கதை  26 எழுத்தாளர்கள் எழுதிய தொடர் வெற்றிகரமாக நிறைவுக்கு வருகிறது . ஒருகதைக்கு 5 முடிவுகள் கொண்டதாக  வித்தியாசமான முறையில் நிறைவுக்கு வரவிருக்கிறது  என்பதையும் மகிழ்வுடன் அறிவிக்கின்றோம்.

 

50 வது தொடர் முடிந்ததும்  முடிவுப்பகுதிகள் 5 ழுத்தாளர்கள் தனித்தனி 5முடிவாக  எழுதி உள்ளார்கள் அவைகள் வெளிவந்ததும் நிறைவுப்பகுதியாக  நிர்வாக இணைப்பாளர்,நிர்வாக பொறுப்பாளர்களின் ஒருவருட அனுபவங்கள் நன்றியறிதல்கள் என்பவற்றுடன் இக்கதை நிறைவு பெறுகிறது  இக்கதையை ஒரு புத்தகமாக வெளியீட இருக்கின்றோம்  அப்போது  தங்கள் இணையப் பெயரும் ,தங்கள் வாழ்த்தும் தாங்கி வெளிவரும்  எனவே  இதுவரை மிக்க ஒத்துழைப்பு நல்கியதுபோல் தொடர்ந்தும் கைகோத்து பயணிப்போம் நன்றி
 
அன்புடன் 
நிர்வாக பெறுப்பாளர்
பண்ணாகம் திரு.இக.கிருஷ்ணமூர்த்தி
நிர்வாக இணைப்பாளர்
திரு.ஏலையா முருகதாசன்
 
விழுதல் என்பது எழுகையே பெருந் தொடரின்
50வது வாரம்
 
விழுதல்  என்பது எழுகையே (அவுஸ்திரேலியா) அருண் விஜயராணி  தொடர்ச்சி பகுதி 50
கதை தொடர்கிறது.

உடம்பு அடித்துப் போட்டால் போல் இருந்தது
இன்றைக்கு வேலைக்குப் போகவேண்டாம் ஆறுதலாக எழும்பி ஆறுதலாகக் கோப்பி குடித்து ஆறுதலாகச் சாப்பிட்டு ஆறுதலாக சுடு தண்ணீரில் ஆசை தீரக் குளித்து வெளிநாட்டுக்கு வந்த நாளில் இருந்து இந்த ஆறுதல் என்ற வார்த்தையே மறந்து விட்டது போல் இருந்தது. சீலன்  எழும்பி வேலைக்கு வரமுடியவில்லை என போன் பண்ணிட்டு  மறுபடியும் கட்டிலில் வந்து  விழுந்தான்.
குமரன் யாழ்ப்பாணம் போவதாக சொல்லி இருந்தான்.
அம்மாவுக்கு ஒரு நல்ல சீலை அப்பாவுக்கு வேட்டி தங்கச்சிக்கு ஒரு நல்ல வடிவான காஞ்சிபுரம் இவ்வளவும் இண்டைக்கு கடைக்குப் போய் வாங்க வேண்டும்.
சீலன் மனதிற்குள்ளயே பட்டியல் போட்டுக்கொண்டான். நேரம் பதினொன்றை                நெருங்கியது. சிட்டுக்குருவி பதினொரு முறை தலையை காட்டிக் காட்டி     விட்டு கூண்டுக்குள் தன்னை இழுத்துக் கொண்டது.
சீலன் கட்டிலை விட்டு எழுந்தான் எல்லாவற்றையுமே ஆறுதலாகச் செய்து விட்டு வீட்டை விட்டு இரண்டு மணி போல் கிளம்பினான் . இந்திய இலங்கை கடைகளில் கூட்டம் அலை மோதியது
ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி தனக்கு பிடித்தமானவற்றை வாங்கிக்கொண்டு வெளியே வந்தான் தனக்கு எதிராக வந்த பெண்னைக் கண்டு திகைத்து விட்டான் 
இது....?  இது... சுபத்திரா அக்கா... அவாவோ நோர்வேக்கு கல்யாணம் கட்டிக் கொண்டு போனவா  எப்படி இங்கை?
அவன் யோசிக்கும் முன்பு வந்த பெண்மணி சடுதியாகத் திரும்பித் தான் வந்த பாதையில் நடக்கத் தொடங்கினாள்.
சீலன் விடவில்லை, „சுபத்திரா அக்கா சுபத்திரா அக்கா“ எனக் கூப்பிட்டுக்கொண்டு விரைவாக முன்னால் சென்று அவளை மறித்தான் அதற்கு மேலும் அவனிடமிருந்து தப்ப முடியாத நிலையில் சுபத்திரா நின்றாள்.
„தம்பி சீலன் எப்ப இங்கை வந்தனீர்.“
„தம்பி எண்டு சொல்லுறீங்கள் பிறகு ஏன் என்னைத் தெரியாத மாதிரி ஓட்டம் பிடித்தனீங்கள“;. 
அவள் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொல வென உதிர்ந்தது .
„வாரும் சீலன் ஒரு கோப்பிக் கடையில் இருந்து கதைப்போம்.“
இருவரும் அருகே உள்ள ஒரு கோப்பிக் கடைக்கு போய் கோப்பியை ஓடர் பண்ணி விட்டு அமர்ந்தார்கள். 
„சொல்லுங்கோ அக்கா நோர்வேக்குப் போனனீங்கள் எப்ப இங்கை வந்தனீங்கள்?“
„ஊரில இருக்கேக்கிள்ளை எவ்வளவு வடிவாக இருந்தனீங்கள் இப்ப கடுமையாகப் பழுதாப் போனீங்கள்,,,
சுபத்திராவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 
„சீலன் என்னுடைய அப்பா வெளிநாட்டு மாப்பிள்ளை வேணுமெண்டு சீதனம் டொனேசன் என அள்ளிக் குடுத்து நோர்வே மாப்பிளையை எடுத்தார் அவருடன் நோர்வேக்கு வந்து இறங்கிய அடுத்த நாளே ஓர் வெள்ளைக் காரி வீட்டுக்கு வந்தாள் எனக்கு முன்னேயே அவரைக் கட்டிப்பிடித்து கொஞ்சினாள் இவரும் நான் வெளியாலபோட்டு வாரன் எனச் சொல்லிப்போட்டு அவளுடன் காரில் ஏறிப் போய் விட்டார்.“
எனக்கு ஒன்றுமே புரியவில்லை அன்று நேரம் கழித்து வந்தவரிடம் யார் அவள் எனக் கேட்டேன,; „அவள் என்னுடைய பெண்சாதியாகப ;போறாள் நாங்கள் இருவரும் ஒன்றாகக் குடும்பம் நடத்துகிறோம்“ என்றார்.
„என்னுடைய அம்மா தங்கச்சி மாரை கரை சேர்க்க வேணும் என்று அழுது கொண்டு கூறியதால் தான் யாழ்ப்பாணம் வந்து உன்னைக் கல்யாணம் கட்டிக் காசை அம்மாவிடம் குடுத்தனான“; என்றார்.
நான் விறைத்துப் போய்விட்டேன்.
„என்னை கைவிட்டு விடாதையுஙகோ, முறையாக என்னை நீங்கள் கல்யாணம் கட்டிக் கொண்டு  வந்தனீங்கள் என்று அவளுக்கு விளங்கப்படுத்துங்கோ“ என்றன்.
என்னுடைய அழுகை அவரை ஒன்றும் செய்யவில்லை என்னைத் தனியே விட்டு விட்டு ஒவ்வொரு நாளும் வேலையால் வந்தவுடன் அவளுடன் வெளிக்கிட்டு விடுவார். ஒரு நாள் இரவு முழுவதும் அழுது சண்டை பிடித்தேன். 
இரண்டு நாட்களின் பின்னர் வா உன்னை வேறு இடத்துக்குக் கூட்டிப்போய் அங்கே நாங்கள் சந்தோசமாக இருப்போம் வெள்ளைக்காரிக்கு எங்கட புது விலாசத்தை குடுக்க மாட்டன் என்றார்.
அடுத்த நாள் புகையிரத்தில் ஏறிப் புறப்பட்டம். அது ஓர் நீண்ட பயணமாக இருந்தது. நான்கு ஸ்ரேசன் கடந்து  இருக்கும் ரொய்லட்டுக்கு போட்டு வாறன் என்று சொல்லிப் போனவர்  திரும்ப வரவேயில்லை. வருவார் வருவார் எனத் திரும்பி பார்த்தபடியே இருந்தன் அவர் வரவில்லை கடைசி ஸ்ரேசனும் வந்து விட்டது.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. படபடப்பும் பயமும் ஏற்பட்டது. இறங்கி ஸ்ரேசனில் இருந்த கதிரையில் இருந்து அழுது கொண்டிருந்தேன்.  
நான் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த ஒரு வெள்ளைக்காரி என்னருகில் வந்து என் தலையை அனுதாபமாக  தடவி ஏதேதோ கேட்டாள். எனக்கு அவளுடைய மொழி புரியவில்லை எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் உரையாடினேன். 
அவள் என்னைத் தன்னோடு அழைத்துச் சென்றாள். ஒரு வாரம் சைகைப் பாசையிலேயே எங்கள் உரையாடல் தொடர்ந்தது. அடுத்த கிழமை அவளைப் போலவே இன்னொரு பெண்மணி வீட்டிற்கு வந்தாள்.
என்னை அழைத்து வந்தாள் புதிய பெண்மணியுடன் என்னைப் போகச் சொன்னாள் . ஏன் என சைகையில் கேட்டேன் புதிய பெண் மணி ஜொப் ஜொப் என்றாள் வேலை செய்யப் போகிறேன் என்ற நம்பிக்கையில் அவளுடன் புறப்பட்டேன் என்னைப் போலவே புதிய பெண்மணிக்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்திருந்தது.
அவளுடைய பெயர் மார்க்கிரட,; அழகாக இருந்தாள். ஆனால் மார்க்கிர்ட்டின் வீட்டிற்கு வந்த பிறகுதான் நான் பிழையான இடத்திற்கு வந்து விட்டேன் என்று புரிந்தது.அது ஓர் விபச்சார இல்லம்.
கொஞ்சம் பெண்களை வைத்து வியாபாரம் நடாத்திக்கொண்டிருந்தார்கள். மார்க்கிரட் வெளியே மசாச் செய்யும் இடம் என பெயருக்கு பலகை ஒன்று மாட்டப்பட்டிருந்தது . நான் எவ்வளவோ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியும் அவள் கேட்கவில்லை.
சம்மதிக்காவிட்டால் என்னை வெளியே துரத்திப் போடுவன்  எனப் பயப்படுத்தினாள்.சீலன் தற்கொலை செய்பவர்கள் கோழை என்கிறார்கள். இல்லை உண்மையிலே அவர்கள் தைரியசாலிகள் என்னால் தற்கொலை செய்யக் கூட முடியவில்லை. உயிரற்ற உடலாக அவளது கட்டளைக்குப் பணிந்தேன் இரண்டு மாதம்  சென்றிருக்கும்  அந்த வீட்டிற்கு எங்கள் ஊர்க்காரர் ஒருவர் வந்தார் அவர் பெயர் மணியம்.
அவருடைய காலில் விழுந்து கதறிக் கதறி அழுதேன் என்னை  இந்த நகரத்திலிருந்து கூட்டிக் கொண்டு போங்களே எனக் கெஞ்சினேன். வந்தவர் நல்லவர்.
முப்பத்து எட்டு வயதாகியும் தன்னுடைய திருமணத்தைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காத அம்மா தன்னை பணம் தரும் மெசினாக எண்ணுவதைச் சொல்லி கவலைப்பட்டார். அப்படி ஒரு விரத்தியான நேரத்திலேயே தன்னுடைய சினேகிதன் இங்கு அழைத்து வந்ததாகக் கூறினார்.
அன்று இரவு முழுவதும் என்னுடைய கவலையை அவரும் அவரது கவலையை நானும் கேட்டு பதில் கழிந்தது. அடுத்த நாள் தொட்டு என்னைத் தேடி வருவதாக மணியம் அந்த விடுதிக்கு வந்து வந்து போனார். 
ஒரு நாள் மார்க்கிரட்டை மசாஜ் என்ற லைசன்சை வைத்துக்கொண்டு தவறான் தொழில் நடத்துவதாக பொலிசாரிடம் கூறப்போவதாக மிரட்டி என்னை அந்த நகரத்திலிருந்து இருந்து மீட்டுக் கொண்டு வந்தார்.
பொலிஸ் ஸ்ரேசனுக்கு என்னை அழைத்துச் சென்று என்னுடைய நிலபரத்தை எடுத்துச் சொன்னார். இங்குள்ள அரசாங்க அலுவலகங்கள் உதவும் மகளீர் மன்றங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்றார். ஒரு வாரத்தின் பின்னர் பொலிசார் என்னுடைய கணவர் சபேசன் அந்த விலாசத்தில் இல்லையென்று கூறி தாம் இன்னமும் தேடுவதாகச் சொன்னார்கள்.
என்னைக் கை கழுவி விட்ட உடனேயே இருவரும் இடம் மாறிப் போயிருக்க வேண்டும் என நினைக்கின்றேன். அவளது கண்ணீரை ஓர் சகோதர வாஞ்சையுடன் எட்டித் துடைத்தான் சீலன்.
அழாதேங்கோ அக்கா எங்கட அப்பாவும் வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற ஆசையில செய்யேல்லை. நாட்டு நிலவரத்தால உங்களைப் போல வடிவான பிள்ளைகளை  வைச்சிருக்கப் பயந்தும் இருக்கலாம்.
அதுக்காக ஒருவரையும் தெரியாத நோர்வே நாட்டுக்குப் புரோக்கரிண்ட பேச்சை நம்பி கல்யாணம் செய்து அனுப்பினதே தன்னுடைய மகளுக்கு என்ன நடக்கும் என்றே தெரியாத அப்பா. என்னை ஊரிலேயே கட்டிக் குடுத்திருந்தால் என்னுடைய நன்மை தீமைக்கு அழ வந்திருப்பார். 
தான் வெளிநாட்டுக்கு அனுப்பிய மகள் ஓர் விபச்சாரியாக நகரத்தில் உழைத்திருக்கின்றாள் என அறிந்தாள் அவர் உயிரோடு இருப்பாரா . அக்கா நீங்கள் போய் நாலாவது மாசமே உங்களைக் காணவில்லை என்று சபேசன் அறிவித்து விட்டார். செத்த வீடு கொண்டாடி விட்டு இருக்கினம். அதுதான் உங்களை இங்கை கண்டு திகைத்துப் போனன், அப்ப இப்ப சீவியத்திற்கு என்ன செய்யிறீங்கள். 
என்னை ஒரு பிளாஸ்டிக் செய்கிற பெக்றரி ஒன்றில சேர்ந்து விட்டிருக்கிறார். கொஞ்சம் சம்பளம் தான் சீவியம். டிக்கட் காசைச் சேர்த்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு போற நாலை என்ணிக் கொண்டிருக்கிறேன் என்னுடைய பாஸ்போட் கூட சபேசனிடம் தான். 
மணியந்தான் எனக்கு பாஸ் போட் எடுக்கவும் ஓடித்திரிகிறார். எனக்கு இவ்வளவு உதவி செய்த மணியத்திற்கு நான் என்னைக் காணிக்கை ஆக்கியுள்ளேன். தாலி கட்டாத மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். 
மகன் குடும்பப் பொறுப்பானவன் ஒழுக்கமானவன் என்பதுக்காக உரிய வயதில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்காமல் பல அம்மாக்கள் பிழை விடுகிறார்கள். எப்ப மணியம் கல்யாணம் கட்டிகிறரோ அப்ப நான் கண்ணியமாக விலகி விடுவன் சீலன்.
சீலனுக்கு ஆச்சரியமாக இருந்தது, „அக்கா நான் மணியம் அண்ணாவை சந்திக்கவேணும்“ என்ற சீலனிடம் சுபத்திரா „ இந்தாரும் என்னுடைய போன் நம்பர் அடிக்கடி அவர் வரமாட்டார். விடுமுறை நாட்களில் மட்டுமே வருவார்“ எனச் சொல்லியபடியே தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்தாள்.
அக்கா நானும் உங்களை இலங்கைக்கு அனுப்ப என்னாலான முயற்சிகளைச் செய்கிறேன் என்றான்.
நெகிழ்ந்து போன அவள் அவனது கைகளைப் பற்றி கண்ணில் ஒற்றிக்கொண்டாள் கைகளின் நடுக்கத்தில் அவளது வலியை அவன்  புரிந்து கொண்டான்.
சீலனின் கையிலிருந்த ஜேர்மன் பத்திரிகையை பார்த்த சுபத்திரா“ ஜேர்மன் பேப்பர் வைத்திருக்கிறியள் ஏதாவது முக்கியமான செய்தியா“ என சுபத்திரா கேட்க, „ உலக நாடுகளில் நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றிய கருத்தரங்கம் நடக்கவிருக்கு, நான் போகிறன் நீங்களும் வருகிறீர்களா“ என சுபத்திராவிடம் கேட்கிறான் „ பார்ப்பம்“ என அவள் பதில் சொல்லுகிறாள்.
சீலன் அவளிடம் விடைபெற்றுச் செல்லுகிறான்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

„விழுதல் என்பது எழுகையே'
(நிறைவுப்  பகுதி 1, எழுதியவர்: திருமதி.தேனம்மை லக்ஸ்மணன், இந்தியா)

பெண் என்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப்பீழை இருக்குதடி தங்கமே. என்று பாரதியார் பாடியது சும்மாவா.
பத்மகலாவின் வருகைக்காக சீலன் பிராங்போர்ட் ஏர்போர்ட்டில் வெளியேறுவார் கதவிற்கு முன்னால்  படபடப்புடன் காத்திருந்தான். விமானத்தை விட்டிறங்கி பாஸ்போட் பரிசோதனை முடிந்து வெளியே வரும் கதவுக்கூடாக  ஒவ்வொரு பயணியும் வரும் போதும் கதவு திறப்பதும் வருவது பத்மகலாவா என ஆவலுடன் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
சில விநாடி இடைவெளிகளுக்குள் மூடித்திறக்கும் கதவிடுக்குள் ஊடாக பத்மகலாவின் உருவம் தெரிகிறதா என அவனின் கண்கள் தேடின.
இதோ ப்ராங்க்ஃபர்ட் ஏர்ப்போர்ட்டில் பீடு நடைபோட்டு தன்னருகே வரும் பத்மகலாவைப் பார்த்துப் பெருமிதமாக இருந்தது சீலனுக்கு.
சீலன் தனக்காக ஒற்றைச் சிவப்பு ரோஜாவுடன் கண்களில் அவலும் பரசவமும் மின்ன காத்திருப்பதைக் கண்டதும் அவனை நோக்கி வேகமாக நடந்து வர அவனும் அவளை நோக்கி நடந்தான்.
சில விநாடிகள்தான், தாயிடம் சேய் பாய்ந்து சென்று அணைத்துக் கொள்வது போல் இருவரும் ஒருவரை அணைத்துக் கொண்டனர்.
பத்மகலா சீலனின் தோள்மீது சாயந்து அவனை இறுக்கி அணைத்தவாறு குலுங்கி குலுங்கி அழுது ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள்.
அவளின் கண்ணீர் சீலனின் சேர்ட்டையையும் பனியனையும் தாண்டி அவனின் முதுகைச் சுட்டது. சீலன் அவள் முதுகை ஆதரவாக வருடியவாறு தனது கண்களையும் துடைத்துக் கொண்டான்.
„சீலன் உன்னோடு சேருவேன் என எதிர்பார்க்கவேயில்லை'
குலுங்கி குலுங்கி அழுதாள்.அது காதலில் தோய்ந்து வந்த அழுகை.
அவர்கள் இருவரும் பொது இடம் என்றும் கவனிக்காது அணைத்துக் கொண்டு  நின்றதை வெள்ளைக்காரர்கள் வியப்புடன் பார்த்தார்கள். ஏனென்றால் தமிழ்க் காதலர்கள் பொது இடங்களில் கட்டிப்பிடித்து அணைப்பது அரிது அதனால் அவர்கள் வியப்புடன் பார்த்தார்கள் சிலர் அவர்களிருவரையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டே சென்றார்கள்.
அணைப்பிலிருந்து விடுபட்டனர் இருவரும்.
சீலன் தனது காதலியை அழைத்துச் சென்று வாங்கொன்றில் உட்கார வைத்துவிட்டு „இருங்கோ இங்கே ஒரு கோப்பி குடிச்சுப் போட்டுப் போவோம் என்றான் சீலன். அதனருகே ஒரு மக்டொனால்ட்ஸ் கடை இருந்தது. இருங்கோ வாரேன் என்று ஸ்டார்பக்ஸ் காஃபியை வாங்கிக் கொண்டு  மக்டொனால்ட்ஸில்  இரண்டு பர்கர் ஆர்டர் செய்து எடுத்துவந்தான்.
முன்சனுக்கு செல்லும் புகையிரதத்தில்  திரும்பி வீட்டிற்கு வரும்போது சுடச் சுட பர்கரும் காஃபியும் சாப்பிட்டபடி வந்தார்கள். அவனது நெடுநாளைக்கு முன்னான கனவு ஞாபகம் வந்தது. குழந்தைத்தனமான கனவு.. பத்மகலாவுடன் பர்கரும் ஐஸ்க்ரீமும் சாப்பிடுவதான கனவு. அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
அது விரைவுப் புகையிரதம், பெரிதாகப் பயணிகள் இல்லை. பத்மகலா அவனின் தோளில் சாய்வதும் தலைநிமிர்த்தி பர்கரை சாப்பிடுவதும் கோப்பி குடிப்பதும் பிறகு தோளில் சாய்வதுமாக இருந்தாள்.
கனடாவிலிருந்து புறப்படும் போது தலைக்குத் தேய்த்துக் குளித்த சாம்பூவின் வாசனையும் அவளின் உடலிலிருந்த வாசனையும் அவனைக் கிறங்கடித்தது.
அவனை அவள் உற்று என்ன என்பது போல் பார்த்த அவள் கண்கள் கலங்கி இருந்தன. பதறிவிட்டான் சீலன். முன்பு எப்போதோ கோபித்ததை நினைத்து அழுகிறாளோ. இல்லை அவள் பட்டென்று போட்டுடைத்தாள். அவனுடன் இனி சேர்வோமோ என்ற நிலையிலிருந்து இன்று கண்டடைந்த நிலை வரை அவள் மனக்கண்ணில் ஓடி இருந்தது.
„சீலன்.. சீலன் என்று குழந்தை போலத் தேம்பியபடி. இந்தப் பொறாமைதான் எவ்வளவு பெரிய விடயம்;..பானு அக்காவைப் போய் சந்தேகப்பட்டேனே மன்னிச்சிருங்கோ' என்றாள்.
„அதெல்லாம் விடு.. உன் மனக்குழப்பம் அப்பிடிப் பேச வைத்தது. ஆனால் நீ கொடுத்து வைத்தவள் கலா. நம்மட பெண்கள் இங்கே படும் பாட்டை அறிந்தால் வருந்துவாய். நீ பாக்யசாலி என்பேன';.
'என் அம்மா. என் அம்மாவைப்போல எத்தனை அம்மாக்கள். தங்கட குஞ்சுகளை வெளிநாட்டுக்கு அனுப்புவித்து தப்பிச்சு வாழ்ந்தா போதுமெண்டு தங்கள் சொத்துசுகம் எல்லாத்தையும் வித்து தியாகியாக் கிடக்குறாங்க. தன் ரத்தத்தைப் பாலாக் கொடுத்து தன் சேமிப்பையும் வழிச்சுக் கொடுத்து என்னென்ன துயரத்தோட வாழ்ந்து வர்றாங்க. படிப்பு ஒண்டே தன்னை உயர்த்தும் என்று படிக்க வந்து பணத்தட்டுப்பாடாலும் உடல் நிலையாலும் பாதிப்படிப்போடு கல்யாணம் கட்டிப்போன என் தங்கச்சி, இங்கே தங்கட தாய்நாட்டை விட்டுத் தனியா உபத்ரவம் செய்யும், சந்தேக குணம் கொண்ட புருசனோட சின்னஞ்சிறு பிள்ளைகளோடும்  ஊர் ஏக்கத்துல வாழ்ந்து வர்ற பானு அக்கா, குடிப்பழக்கத்தாலயும் மற்ற பழக்கங்களாலயும் புருஷன் அழைக்காம இருந்தாலும் வந்து அவனுக்குப் பணிவிடை செஞ்சு அவனுக்குப் பின்னே அநாதரவா ஆன பிரான்சில் வாழும் கமலா அக்கா, அடுத்தவங்களுக்கு உதவி வர்ற வவா அன்ரி, டேவிட் அங்கிள் மனைவி, தன்னோட வாழ்க்கையை தந்தைக்குப் பயந்து ஒளிச்சு பின்னே ஓடிப்போய்த் திருமணம் செய்த நிரோஜா.. ஹ்ம்ம் பெண்களுக்கு எங்கேயும் அதிகாரம் இல்லை. முடிவெடுக்க முடிவதில்லை. .'
உணர்ச்சி வசப்பட்ட மனநிலையில்  பேசிக்கொண்டிருந்தான் சீலன். மனம் கட்டறுந்த நிலை.. 'இன்னும் சிலபேரைப் பத்திச் சொன்னா உன் மனசு துடிக்கும் கலா .. என்னைத் தன் சகோதரனாய் வரிச்ச சாந்தி தன்னோட கணவனைக் காண பூஜைக்கு வந்த புஸ்பம் போல இருந்தா. ஆனா இந்த கண்டம் விட்டுக் கண்டம் மாறும் வித்தையில  விசாவுக்கு ஏற்பாடு செய்த ஒரு காடையனால  தன்னோட உடல் மாசடைஞ்சிருச்சின்னு சொல்லி ஏழாவது மாடிலேருந்து உயிர்துறந்த சாந்தி.. அதை விடக் கொடுமை. நல்ல சீர் செனத்தியோட அப்பா அம்மா கட்டி வைச்ச பவித்ரா அக்கா இங்கே இப்போ என்று சொல்லும்போது குலுங்கிக் குலுங்கி அழுதுவிட்டான்'.
பதறிப்போன கலா.. 'சீலன் சீலன்.. என்னாச்சு ? ' என்றாள். அவங்க காரியம் முடிஞ்சு போச்சுன்னு அங்கே அவங்க அப்பா அம்மா எல்லாம் கர்மா பண்ணிட்டாங்க. ஆனா அவங்க இங்கே இங்கே ஒரு சீரழிவைச் சந்திச்சு இப்போ அதிலிருந்து மீள முடியாம இருக்காங்க.. பெண்களை போகப் பொருளா உலகமெங்கும் பயன்படுத்துறாங்க. அதுக்கு ஜெர்மனியும் விதி விலக்கில்ல. ஐரோப்பாவோட மையமா இது திகழுதுன்னு சொல்றாங்க.
திருமணம் செய்து கூட்டி வந்து புருசனால கைவிடப்பட்டவங்க., கள்ளவிசாவில வந்தவங்க தாங்கள்  ஜீவிக்க வேண்டி ஒரு வேலை தேடிப் போகும்போதும் அந்த அலுவலகங்கள்ல பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகுறாங்க. யாதும் ஊரே யாவரும் கேளீர்னு இதுல ஈடுபட்டவங்க போதை அடிமையாவும் ஆகிடுறாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு நாம் ஏதும் உதவி செய்யணும் கலா என்றான்.' அவனுடைய நெகிழ்வும் தீவிரமும் அவளிடமும் தொற்றிக் கொண்டது.
இந்தப் பேப்பரைப் பார். இதுல அடுத்த கிழமை பிராங்பேர்ட்டிலபெண்களுக்கு நேரும் குடும்ப வன்கொடுமைகள் குறித்தும் பாலியல் பலாத்காரத்தை எதிர்த்தும் பேரணி நடக்க இருக்கு. அந்தப் பேரணியும் கருத்தரங்கும் அனைத்துலகப் பெண்கள் அமைப்பினால் நடத்தப்படவிருக்கின்றது.
உலக  நாடுகள் அனைத்திலுமிருந்து அந்ததந்த நாடுகளிலிரக்கம் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள்அ கலந்து கொள்ளுகிறார்கள்.
அதன் முடிவுல நடக்கப் போற கருத்தரங்கத்துல மதுரைப் பல்கலைக்கழக பேராசிரியை  மங்கையர்க்கரசியாரும், டென்மார்க்கிலிருக்கும் பேராசிரியர்;  குமாரவேலுவும்  அவர்களும்  பேசுறாகிறார்கள். ஜேர்மனிய பெண்கள் அமைப்பு அவர்களை அழைத்திருக்கிறார்கள்.
„அவர்கள் இருவரும் உன்னுடன் தொடர்பு கொண்டார்களா'
„ஓம் நான் அவர்களின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர்கள் வருவதாகச் சொன்னார்கள். அவர்களிருவரும் பிராங்பேர்ட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கப் போகிறார்கள். அவர்களுக்கான செலவை ஜேர்மனிய பெண்கள் அமைப்பு பொறுப்பேற்றுளளது'
„அது சரி கலா நீ இங்கை என்ன படிக்கப் போகிறாய் கனடாவிலை மூன்று மாதம் டொக்ரருக்குப் படித்தாயே'
„பெண்ணியம் சம்பந்தப்பட்ட படிப்பையும் ஜேர்னலிசமும் படிக்கப் போகிறன் „
„அப்ப டொக்ரர் படிப்பு'
„அதைவிட எனக்கு இதிலைதான் விருப்பம். படிப்புக்கு எல்லையும் இல்லை வயதும் இல்லை. யோசிப்பம்'என்றாள் பத்மகலா.
„அருமையான முடிவு. கனடாவிலை பெண்களுக்கான டொக்ரர் படிப்பை படித்தனி. அதை இங்கை தொடர முடியும். பெண்ணியம் சம்பந்தப்பட்ட படிப்பையும்  ஜேர்சனலிசத்தையம் படித்தாள் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளதாயும் இருக்கின்றது, இது முடியுமா உன்னால்....' என்று வாய் மூடமுன்,
„முடியும் சாதித்துக் காட்டிறன்' என்றாள் உறுதியாக.
புகையிரதத்தில் பேசியபடியே வந்த  பத்மகலா சீலனின் தோளில் தூங்கிவிட்டாள். முன்சன்  புகையிரத நிலையத்தை புகையிரதம் வந்தடைந்தது.
தனது தோளில் தலைசாய்த்துத்  தூங்கிக் கொண்டிருந்த பத்மகலாவின் தலையை மெதுவாகத் தூக்கிய சீலன் „கலா நாங்கள் இறங்க வேண்டிய ஸ்ரேசன் வந்துவிட்டது, இறங்குவம்' என அவளை எழுப்புகிறான்.
புகையிரதத்தை விட்டு முதலில் இறங்கிய பத்மகலா, கனடாவிலிருந்து கொண்டுவந்து சூட்கேசை சீலனிடமிருந்து வாங்குகிறாள்.
„கலா இனி வீட்டை போய் சமைக்க ஏலாது, இங்கேயே உருளைக்கிழங்கு பொரியலை வாங்கிக் கொண்டு போய் வீட்டிலை வைத்துச் சாப்பிடுவம் „ என்ற சொல்லியவாறு பத்மகலாவை அழைத்துக் கொண்டு புகையிரத நிலையத்திற்க எதிரேயிருந்த உணவு விடுதியில் உருளைக்கிழங்குப் பொரியலை பாரசல் செய்து வாங்குகிறான்.
பத்மகலா விமானப் பிரயாணம், புகையிரதப் பிரயாணம் என சோர்ந்து போயிருந்தாள்.தனது வீட்டுக்கு பஸ்ஸில் அவள் இருக்கும் கூட்டிக் கொண்டு போக முடியாது என புரிந்து கொண்ட சீலன் ராக்சியில் அவளைக் கூட்டிக் கொண்டு போனான்.
அவனது வீடு மாடியில் இருந்தது.
ஒரு கூடம் கூடத்தோடு திறந்த சமையலறை,ஒரு படுக்கையறை மலசலகூடம் இவ்வளவுதான் அவனது வீடு.
கூடத்திலிருந்த சோபாவில் இருவரும் அமர்ந்தார்கள். மேலே பார்த்தபடி இருந்த பத்மகலாவின் கண்களிலிருந்து மெல்லக் கண்ணீர் கசிந்தது.
சீலன் அவளை ஆதரவாக அணைத்தபடி „இப்ப எதற்கு அழுகிறாய்.......எதை நினைத்து அழுகிறாய்....அழாதை'என்கிறான்
அப்படியே அவன் மடியில் தலை வைத்தவள் குலுங்கி குலுங்கி அழுதாள்.
„முடியேலை சீலன் முடியேலை அழாமலிருக்க  முடியேலை...சீலன்  நான் கனடாவிலிருந்த போது உனக்கும் எனக்கும் இனிச் சரிவராது எனக்குச் சமனாக உன்னால் முடியாது என்று சொன்னேன். அதைக் கேட்ட நீ எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாய் என்பதை உணர்ந்தேன். அன்றிரவு நித்திரை இல்லாமல் அழுதேன். அக்காவிற்கும் அத்தானுக்கும் நான் இங்கு வருவதில் விருப்பம் இல்லை. ஆனால் பிடிவாதமாக இருந்தேன்.அவர்களுடன் தினம் தினம் வாக்குவாதப்படுவதால் ஏதோ கோபத்தில் அப்படிச் சொன்னேன். நீ எவ்வளவு நல்லவன். எதையும் மனதில் வைத்திருக்காமல் இருக்கிறாய். என்னை மன்னித்துவிடு சீலன்' என அவனிடம் மன்னிப்புக் கேட்டாள்.
சீலன் அவளை ஒரு குழந்தையை மடியில் படுக்க வைத்து தலையை வருடிக் கொடுப்பது போல் அவளின் தலையை வருடிக் கொடுத்தபடியே „கலா அழுகையை நிறுத்து. நான் ஒன்றுமே நினைக்கேலை அழாதை „ அவளின் கண்ணீரைத் துடைத்துவிடுகிறான்.
கலா ஜேர்மனிக்கு வரப் போகிறாள் என்று அவள் சொன்னவுடன் சீலன்  வீட்டுக்கு லாண்டலைன் தொலைபேசி இணைப்பை எற்படுத்தியிருந்தான்.
தாய்க்கும் சுவிஸிலிருந்த தவம்,டேவிட் அங்கிள், பானுவுக்கும் டென்மார்க்கில் ஆனந்தருக்கும் பேராசிரியர் குமாரவேலுவுக்கும் மதுரைப் பேராசிரியர் மங்கையற்கரசிக்கும் தனது தொலைபேசி இலக்கங்களைக் கொடுத்திருந்தான்.
நேற்று மங்கையற்கரசியும் குமாரவேலுவும் அடுத்த கிழமை பிராங்பேர்ட்டில் நடக்கவிருக்கும் சர்வதேசப் பெண்கள் பேரணியிலும் கரத்தரங்கிலும்  கலந்து கொள்ள வருவதாக அறிவித்துவிட்டார்கள்.
முகம் கழுவிவிட்டு வருகிறேன் என பத்மகலா எழவும் தொலைபேசி மணி அடித்தது. பத்மகலா தொலைபேசியை எடுத்து „கலோ' என குரல் கொடுக்க, மறுமுனையில் இரண்டு விநாடிகள் சத்தம் வரவில்லை.மறுபடியும் „கலோ' என்கிறாள் கலா.
மறுமுனையில் „கலோ நான் பானு பேசுகிறன் சுவிஸிலிருந்து இது சீலனின் வீடுதானே......நீங்கள்....
„நான் பத்மகலா' அவள் சொல்லி முடிக்குமுன்,
„பத்மகலாவா' உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் பானுவின் குரல் தொலைபேசிக்கூடாக அதிர்கிறது. தொடர்ந்து பானு „எப்ப வந்தனீங்கள்' என்கிறாள் பானு, „இன்றைக்குத்தான் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரந்தான் ஆகுது' என பத்மகலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே சீலன் எழுந்து தொலைபேசியிலிருந்த ஒலிபெருக்கியை அமத்த மறுமுனையில் பானு „ எனக்கு சரியான சந்தோசம் பத்மகலா நீங்கள் சீலனுடன் வந்து சேர்ந்தது, சீலனுடன் பேசமுடியுமா என அவள் கேட்க' சொல்லுங்கள் பானு அக்கா நான் கேட்டுக் கொண்டிருக்கிறன் „ எனச் சீலன் சொல்கிறான்.
„சீலன்! வருகிற சனிக்கிழமை பிராங்பேர்ட்டிலை நடக்கிற சர்வதேச பெண்கள் பேரணியில் கலந்து கொள்ள நானும் சுவிஸ் பெண்கள் ஐந்து பேரும் வருகிறம். பிராங்பேர்ட்டில் விடுதியில் தங்குவதற்கு ஒழுங்கு செய்திருக்கிறார்கள், உங்கள் இருவரையும் சந்திக்க வேண்டும் என்று விருப்பம்.....' என்று பானு சொல்ல,
„நானும் கலாவும் அந்தப் பேரணியில் கலந்துகொள்ள வருகிறோம். உங்களை அங்கு சந்திக்க முடியும்'
„அப்படியா சந்தோசம் நான் வேலை செய்கிற இடத்திலையிருந்துதான் ரெலிபோன் எடுத்தனான், சரி சந்திப்பம் ரெலிபோனை வைக்கிறன்' . மறுமுனையில் பானு தொலைபேசியை துண்டிக்கிறாள்.
உருளைக்கிழங்கு பொரியலை இருவரும் சாப்பிட்டு தேநீரும் போட்டுக் குடிக்கின்றனர். சீலன் சோபாவில் காலை நீட்டி படுக்க ஆயத்தமாக அவனின் தலைமாடடில் உட்கார்ந்த கலா அவனின் தலையை தனது மடியில் வைக்கிறாள்.
சீலன் மெதுவாகக் கண்ணயர்கிறான். என்னதான் அக்காவுடனும் அத்தானுடனும் வாக்குவாதப்பட்டு தான விரும்பிய காதலைத் தேடி ஜேர்மனிக்கு வந்துவிட்டாலும், என்னதான் இருந்தாலும் அவள் என் அக்கா என எண்ணிய பத்மகலா தொலைபேசியை எடுத்து எண்களை அமத்தி காதில் வைக்கிறாள்.
சில விநாடிகளில் தொடர்பு கிடைக்க „அக்கா நான் வந்து சேர்ந்துவிட்டன் சரி வைக்கிறன்' எனச் சொல்லி தொடர்பைத் துண்டிக்கிறாள்.
அவள் தொலைபேசியை வைக்க தொலைபேசி மணி அடிக்க எடுத்து காதில் வைத்து கலோ சொல்ல முன்பு „சீலா ராசா நான் அம்மா பேசுகிறன்' சீலனின் தாயின் குரல் வர பத்மகலா தடுமாறுகிறாள், சில விநாடிகள் எதுவும் பேசாமல் இருக்கிறாள்.
சீலனின் குரலைக் கேட்காத  தாயார்'சீலா நான் பேசுவது கேட்கவில்லையா சீலா' என பணரிதவிப்புடன் கேட்க' கலோ „ பத்மகலா குரல் கொடுக்க, ஒரு பெண்ணில் குரல் வர தாய் பலவாறாக யோசித்து „சீலன் இல்லையா நீங்கள்..............?'
„நான் பத்....ம...கலா'
„ஓ'.....
„சீலனிடம் கொடுக்கவா'
„இல்லை உங்களோடைதான் கதைக்க வேண்டும்' என சீலனின் தாய் சொன்னதும் பத்மகலா என்ன ஏதுவோ என  பயப்படுகிறாள்.
„பிள்ளை பயப்படாதை நீங்கள் கனடாவிலையிருந்து வரப்போவதாகச் சீலன் சொல்லியிருந்தான்'
பத்மகலாவிற்கு வியப்பும் பயமும் வந்து கொண்டிருந்து. இதற்கிடையில் சீலன் கண்முழித்து எழுந்து யார் என சைகையால் கேட்கிறான். உங்கள் அம்மா என சத்தம் வராமல் சொல்கிறாள்.
„சீலனிடம் கொடுக்கவா' என பத்மகலா மீண்டும்  கேட்க „வேண்டாம்  உங்களுக்கு கொஞ்சம் புத்திமதி  சொல்லுறன், கவனமாக கேள் பிள்ளை'
„சொல்லுங்கள்'
„நீங்கள் இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகிறியள்  எண்டு நீங்கள் யாழ்ப்பாணத்தில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்த போதே கண்டுபிடித்துவிட்டன்'
„....................'
„ அது ஒண்டும் பிரச்சினை இல்லை, இப்ப நீதான் கழுத்திலை தாலி ஏறும் வரை கவனமாக இருக்க வேண்டும், இல்லாட்டி பதிவுத்திருமணம் முடியும் வரையுமாவது கவனமா இருக்க வேண்டும், நான் என்ன சொல்லுகிறன் எதற்காகச் சொல்லுகிறன் என்பது புரியுதுதானே'
„ம்'
„பிள்ளை தாலி பவுணிலைதான் கட்ட வேண்டும் என்றில்லை, மஞ்சள் கொடியிலை ஒரு மஞ்சளை கட்டி அதை தாலியாக கட்டினாலே போதும்'
„அதுவரை.....'
„புரியுது'
„சீலன் கட்டுப்பாடுடையவன்தான், ஆனால் சூழ்நிலைதான் எல்லாத்துக்கும்  காரணம், நீங்கள் பெண் கவனமாக இருக்க வேண்டும் என்ரை பிள்ளை என்பதற்காக முழுசாக நம்ப முடியாது'
„நீங்கள் பயப்படாதையுங்கோ பிழை ஒன்றும் நடக்காது என்னை நீங்கள்  நீங்கள் என்று கூப்பிடாதையுங்கோ, நீ என்றே கூப்பிடுங்கோ' என பத்மகலா சொல்ல'
„என்னை மாமி என்று சொல்லிப் பேசலாந்தானே' என்கிறாள் சீலனின் தாய்.
„சரி மாமி'
„சீலனிடம் ரலிபோனை குடு பிள்ளை'
பத்மகலா தொலைபேசியை சீலனிடம் கொடுக்கிறாள். பத்மகலாவிற்கு சொன்னதையே அவனுக்கும் தாய் சொல்கிறாள்.
„சரி அம்மா, நீங்கள் சொன்ன மாதிரியே நடக்கிறம்' என சீலன் பதில் சொல்கிறான்.
இரவு எட்டு மணியாகியது. நாளைக்கும் எங்கேயாவது கடையிலை சாப்பிடுவோமா என சீலன் கேட்க இலலை சமைத்துச் சாப்பிடுவம் என பதமகலா சொல்கிறாள்.
இரவுச் சாப்பாடாக பாணை ஜாமுடன் சாப்பிட்டவுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேச்சின் நடுவில் புங்குடுதீவில் வித்தியாவிற்கு நடந்த கொடுமை பற்றி பத்மகலா கடுங்கோபத்தடனும் குமுறலுடனும் கதைக்கிறாள். நான் பெண்ணியம் பற்றியும் ஜேர்சனலிஸம் பற்றியும் படிக்க வேண்டும் என்ற ஒரு பிடிவாதம் வந்ததற்கு எங்கள் நாட்டில் நடைபெறும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறையும் ஒரு காரணம் என்கிறாள்.
பத்மகலாவைப் பெருமையுடன் பார்க்கிறான் சீலன். நித்திரை இருவரையும் ஆட்கொள்ள „கலா போய் அறைக்குள் படு' என்கிறான் சீலன். அவள் எழுந்து போகிறாள் சீலன் சோபாவில் படுக்க வசதியாக படுக்கையறையிலிருந்த தலையணையை பத்மகலா கொண்டு வந்து கொடுக்கிறாள்.
மஞ்சல் கயிற்றிலாவது தாலி அல்லது பதிவுத்திருமணம் என்ற காவலரண் இருவரையும் தடுத்து வைக்கிறது. எல்லாவற்றையும்விட  சீலனின் தாய் தங்களில் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என இருவரும் நினைக்கின்றனர்.
அடுத்த நாள் முன்சனில் உள்ள தமிழ்க்  கடைக்குப் போன சீலனும் பத்மகலாவும் பொருட்களுடன் மஞ்சல் கயிறொன்றை வாங்குகின்றனர. கடைக்காரர் சிரித்துக் கொண்டே மஞ்சல் கயிறை கொடுக்கும் போது வெற்றிலையில் வைத்துக் கொடுக்கிறார்.
வீட்டுக்கு வந்த சீலனும் பதமகலாவும் விவேக் அங்கிளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிற வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வர முடியுமா எனக் கேட்டு உங்கள் முன்னிiயில் பத்மகலாவிற்கு தாலி கட்ட இருப்பதைச் சொல்கிறார்கள்.
அவர்களும் மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறார்கள். தாலி கட்டுவதுடன் பதிவுத்திருமணம் மிக முக்கியம் என விவேக் அங்கிள்  புத்தி சொல்ல, அதற்கான விண்ணப்பத்தை கொடுக்கவிருப்பதாக சீலன் பதில் சொல்கிறான்.
தீவிரமான சிந்தனை ரேகைகள் ஓடுகின்றன கலாவின் மனதிலும். இப்போது அவளும் சீலனும் தனித்தனி இல்லை. இணைந்த கைகள் இணைந்து செயல்பட்டால் எதிலும் வெற்றி நிச்சயம்.
சீலன் பிஎம் டபுள்யு கார் தயாரிக்கும் நிறுவனத்தில் பயிற்சிப் படிப்பு படிக்கிறான். பத்மலாவும் படிக்கப் போகிறாள்.
ஆனால் தம்மைப்போல இங்கே பாடுபட்டு ஓடிவந்த தம் மக்களுக்காக இதுவரை என்ன செய்தோம் இனி என்னென்ன செய்யலாம் என்ற எண்ணங்கள் இருவரின் மனதிலும் எழும்பத்தொடங்கின. மென்மேலும் செய்யவேண்டியவை பற்றி இருவரும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
விழுதல் யார் வாழ்க்கையிலும் நிகழலாம். ஆனால் அதன் பின் எப்படி எழுந்தார்கள் என்பதே சரித்திரம் ஆகிறது. தோல்விக்குப் பின் வரும் வெற்றியைச் சரித்திரம் குறித்துக்கொள்கிறது. இங்கே அகதிகளாய் வந்த ஒவ்வொரு பெண்ணுக்காகவும் ஏன் இம்மண்ணில் பிறந்த பெண்களுக்காவும் குரல் கொடுப்பது தமது தர்மம் என்பதை உணர்ந்தார்கள். தாங்கள் பணிபுரியும் இடங்களிலும் மற்ற நிறுவனங்களிலும் விமன்ஸ் செக்சுவல் ஹரேஸ்மெண்ட்  ஆரம்பிக்க எண்ணம் கொண்டார்கள்.
மறுநாள் மாலை. ப்ராங்க்பர்ட் நகரத் தெருக்களில் பல்வேறு பண்பாட்டைச் சார்ந்த பெண்களின் பேரணி. அதில் முதல் வரிசையில் சுபத்ரா, பானு, பத்மகலாவும் அவளுடன் சீலனும் பேராசிரியர்கள் மங்கையர்க்கரசியும் குமாரவேல் சாரும் நடந்து வந்தார்கள். பத்மகலாவின் கழுத்தில் மஞ்சள் கயிறு தாலியாக தொங்க கமபீரமாக அவள் நடப்பதை பெருமிதமாக பார்க்கிறாள் பானு. கையில் பிடித்திருந்த பதாகைகள் அவர்களது கொள்கைகளை அழுத்தம் திருத்தமாக அறிவித்தன.
'ஆக்கும் சக்தி பெண். அழிவுச் சக்தி ஆக்காதீர். '
'போதைப் பொருளல்ல பெண்
போகப் பொருளல்ல பெண்.
சக மனுசி பெண்.'
'சிகரங்களைத் தொட
கடந்தவைகளை மற.
விழுதல் இயற்கையென்றால்
எழுதலும் இயற்கையே '
தர்மசீலனையும் பத்மகலாவையும் பெருமிதமாய்ப் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார்கள் மங்கையர்க்கரசியாரும், குமாரவேல் சாரும். அவர்கள் பின்னே பிரளயத்தைக் கொண்டுவந்து பூமியைச் சுத்தம் செய்யும் ஆழிப்பேரலை போல பெண்கள் வெள்ளம் தொடர்ந்து சென்று கொண்டிருந்து.
பேரணி முடிவில் மாபெரும் மண்டபத்தில் கருத்தரங்கிற்கு ஏற்பாடாகியிருந்தது. பேச்சாளராக மேடையில் பல்வேறு நாடுகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆண்களும் பெண்களும் உட்கார்ந்திருந்தார்கள்.
பல நாட்டுப் பெண்களுடன் ஆங்காங்கே அந்த மண்டபத்தில் ஆண்களும் கேட்போராக உட்கார்ந்திருக்கிறார்கள். பானு, சீலன்லு சுபத்திரா, பத்மகலாவும் உட்கார்ந்திருக்கிறார்கள்.
பெண்களக்கெதிரான கொடுமைகள் பன்முக நிலையில் நடைபெறுகின்றன என பேச்சாளர்கள் ஒருவர் மாறி ஒருவர் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் இந்தக் கொடுமைகள் இடம்பெறுகின்றன என்பதை அந்தந்த நாட்டிலிருந்து வந்த பெண்கள் கோபத்துடனும் குமுறலுடனும் சொல்கிறார்கள்.
மேடையில் இருந்த நான்கு ஆண்களில் டென்மார்க்கில் இருந்து வந்த பேராசிரியர் குமாரவேலுவும் ஒருவர்.
அவர் பேச எழுந்ததும் ஒரு வேண்டுகோளை ஏற்பாட்டாளர்களிடம் முன் வைக்கிறார். இலங்கையை தாயகமாக கொண்ட பெண்ணியம் படிக்கப் போகிற பத்மகலா என்பவர் இங்கே கேட்போராக இருக்கிறார். அவரைப் பேச அழைக்கலாமா, அவரின் ஆங்கிலப் பேச்சை அவரின் காதல் கணவனே ஜேர்மன் மொழியில் மொழிபெயர்ப்பார் என அனுமதி கேட்க பத்மகலாவிற்கு அனுமதி கிடைக்கிறது.
பத்மகலாவும் சீலனும் மேடையை நோக்கி எழுந்து போகிறார்கள். பத்மகலாவும் சீலனும் 'எழுகையே' என்பது போல கம்பீரமாக நடந்து போவதை எல்லாரும் கைதட்டி வரவேற்கிறார்கள்.
ஒலிவாங்கி முன்னாள் நின்ற பெண்களுக்கெதிராக உலக நாடுகள் எங்கும் இடம்பெறும் பாலியல் வன்முறை நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறிய அவள் அண்மை நாட்களில் இலங்கையில் புங்குடுதீவு என்ற இடத்தில் ஒரு மாணவி மீது மேற்கொண்ட குழுப்பாலியல் வன்முறையை விபரித்து இவற்றுக்கு காரணியாக போதைப்பொருள் விற்பனையும் இருப்பதால் போதைப் பொருளுக்கெதிராகவும் பெண்கள் போராட வேண்டும் என சரளமாக ஆங்கிலத்தில் பேச அதைச் சரளமாக சீலன் மொழிபெயர்த்தான்.
நாடு நாடாக அலைந்து படாத கஸ்டங்களை அவமானங்களை தாங்கி இன்று ஜேர்மனியின் முகம் ஆகிய நகரொன்றின் முக்கிய நிகழ்வொன்றில் மொழி வல்லோனாக அந்த மொழி அறிவுக்கூட துறைசார் கல்வி எதனையும் கற்று சாதிக்க முடியும் விழுந்தாலும் எழுந்து நிமர முடியும் என்பதை சீலனும் எத்தனை தடை வந்தாலும் இலட்சியத்தையும் இலக்கையும் காதiலையும் அடைவதற்கு விடாமுயற்சியே காரணம்; என தெளிவுபட உறுதிபட காதல் ஜோடி இருவரும் உதாரணமாக அந்த மேடையில் நின்றனர்.
முற்றும்.  
முற்றைய 3 முடிவுகள் தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'விழுதல் என்பது எழுகையே' தொடர்கதையின் நிறைவுப்பகுதி (2)
எழுதியவர்: திரு. சசிகரன் பசுபதி(புனைபெயர்: பசுந்திராசசி) இலண்டன்
------------------------------------------------

கனடாவில் இருந்து ஜேர்மனிக்கு வந்த கலாவை ( பத்மகலா ) சீலன் காரில் பிராங்பேர்ட் விமானநிலையம் சென்று ஏற்றி வந்து கொண்டிருந்தான் .
முரளியும் கலாவின் அக்கா மல்லிகாவும் இணைந்து ஏதாவது சதி செய்து தனது திருமணத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் இன்னும் அவனை விட்டு போகவில்லை .
நேரம் இரவு 7 மணியாகிக்கொண்டிருந்தது. மழை தூறிக்கொண்டிருந்தது. ஏனோ கலாவுக்கு முகம் சரி இல்லை . அவள் பேச்சு பசுமை இன்றி வெறும் சம்பிரதாயச் சொற்களாக இருந்தது.
ஒருவேளை தான் பிராங்பேர்ட்டுக்கு வர தாமதமாகியதுதான் காரணமோ என எண்ணினான் . ஆனாலும் அவள் முகம் செம்ஜம்பு பழம் போல சிவந்திருந்தது.
அவள் சீலனை எதிர்பார்த்து விமான நிலையத்தில் ஒவ்வொரு இடமாக இருந்து இருந்து எழும்பி அலுத்து விட்டாள் . ' இதோ வந்துகொண்டிருக்கிறேன், இந்தா இன்னும் அரை மணித்தியாலத்தில் வந்துவிடுவேன்' என்ற சீலனை ஒரு மணித்தியாலம் ஆகியும் காணவில்லை என எண்ணிக் கொண்டிருக்கையில்தான் முரளி போன் பண்ணினான் , „என்ன கலா இப்ப எங்க நிக்கிறீங்கள்' என்றவனிடம் , நான் சீலனை பார்த்துக்கொண்டு எயாப்போட்டில் நிற்கிறேன் என கூற முரளி ஐந்து நிமிடத்தில் வந்து அருகில் உள்ள உணவகத்திற்கு அழைத்து சென்றுவிட்டான்.
பின் தான் தங்கி இருந்த நண்பனின் வீட்டுக்கு கூட்டிச்சென்றான். அந்த விலாசத்திற்கு சீலனை வருமாறு கலா மூலமாக கேட்டுக்கொண்டான். முரளி- சீலன் இருவரும் பேசுவதில்லை. எல்லாம் கலாவை யார் திருமணம் செய்வது என்ற போட்டியால் வந்த சர்ச்சை .
கார் விரைவுப் பாதையில் ஓடிக்கொண்டிருந்தது. ஓரிரு வாகனங்கள் அவ்வப்போது பின்னால் இருந்து வந்து கடந்து போனது. இன்னும் மழை விட வில்லை. மெதுவாக தூறிக்கொண்டு இருந்தது.
வண்டி தண்ணீரில் மிதப்பதுபோல ஆனால் வேகமாக சென்றுகொண்டிருந்தது. ஜேர்மனிய வெள்ளைக்கார நண்பர் ஜோசப் காரை லாவகமாக அதேவேளை நிதானமாக ஓட்டிக்கொண்டிருந்தார் .
கலாவுக்கு பயண அலுப்பு சீற்றில் சாந்தபடி தூங்கிவிட்டாள். காரினுள் இருந்த இருட்டு எல்லோரையும் போர்த்தியிருந்தது. அந்தப் பயணச்சூழல் நல்ல இதமான கதகதப்பான அனுபவமாக இருந்தபோதும் அவை ஒன்றிலும் சீலனின் புலன் லயிக்க வில்லை.
அவனின் மனம் கடந்து வந்த பாதையையும் , சந்தித்தவர்களையும் , சம்பவங்களையும் மாறி மாறி சுற்றி வந்துகொண்டிருந்தது.
முதல் முதல் வெளிநாடு வந்தபோது இருந்த மனநிலை இப்போது துண்டற மாறி இருந்தது. யாழ் பல்கலைக்கழகத்தில் படையினரால் கைது செய்யப்பட்டபோது கருக்கொண்ட இந்த வெளிநாட்டுப்பயண எண்ணம் முதற்கட்டத்திலேயே எதுவும் பிடிக்காமல் பைத்தியம் மட்டும் பிடிக்கும் நிலையில் இருந்தது.
அன்று சுவிசில் அந்த வெள்ளைக்காரார் இறங்கசொன்ன இடத்தில் கால் வைத்து ஆரம்பித்த ஐரோப்பிய வாழ்க்கைப்பயணம், உயிரை உறையவைக்கும் பல தருணங்களை தனித்தே கடந்து நாளை முதல் சுமுகமாக இன்னொருவரின் துணையுடன் வேறொரு இன்பப் பாதையில் பயணிக்க இருக்கிறது .
எனக்கும் கலாவுக்கும் நாளை திருமணம் என நினைக்கையில் மனம் விரிந்து உடல் பூரித்தது . கிழக்கிலங்கை பெண்ணுடனான வாழ்வை இந்த மேற்கத்தேய திசையில் கட்டி முடிக்க உதவியவர்களை நன்றியோடு எண்ணிப்பார்த்தான்.
சுவிஸ் கோப்பிக்கடையில் கண்ட முதல் ஐரோப்பிய வாழ் தமிழ் மகன் , முதல் முதல் தனது தமிழை பிறமொழியாக்கிய மொழிபெயர்ப்பாளர் இராஜேஸ்வரன் , கூட குடியிருந்த தவத்தார் , முதல் முதல் அம்மாவிடம் பேசிய சுவிஸ் கட்டணத் தொலைபேசி, அருகிலே கண்ட முத்தமிடும் பூங்கா காதலர்கள் , முத்தம் என்றதும் தான் ஏன் நானும் ஒருமுறை கலாவை கொஞ்சினால் என்ன ..? பின் சீற்றில்தானே இருக்கிறாள். களவின்பத்தை ஒருமுறை கண்டுவிட்டால் என்ன...? நாளை கட்ட போறவள் தானே ; சீச்சீ......- ' தொடுகையற்ற தமிழ்க்காதல் ; உணர்வுகளால் மீண்டும் , மீண்டும் உயிர்ப்புடன் துளிர்க்கும் ' என ஞாபகம் வரவே இன்னும் ஒரு நாள் தானே - நாளை பார்க்கலாம் - என அவ் எண்ணத்தை விட்டுவிட்டான். ஆனாலும் கலா - இப்போதும் சீலனே கணவன் - என்ற நினைப்பில் வாழ்பவள் என நினைக்கும் போது எங்கோ ஏதோ செய்தது. கூடவே அவளை இறுதியாக ஊரில் கண்டது நினைவில் வந்தது.
சுதந்திரதினத்திற்கு கறுப்புக்கொடி கட்டியமை , முரளி காட்டிக்கொடுத்தது . ' மருத்துவர் பத்மகலாவாகத்தான் பார்க்க வேண்டும்' என்று விட்டு காதலி கலாவிடம் இருந்து விடைபெற்றது , ' முடிந்தவரை உழைத்துக்கொண்டு ஊருக்கு திரும்பு ' என்று பேசிய அவுஸ்ரேலிய குணரட்ணம் வரை நினைத்தான் , பழையவையே தன்னை இங்கே கொண்டுவந்த பாலங்கள் . அந்த ஏணிப்பாலங்களை எண்ணுகையில் நன்றியுணர்வு பெருக மனம் அமைதி அடைந்தது.

மக்டொனால் வேலை எடுத்து தந்த டானியல் அண்ணன் , கூட வேலை செய்த நண்பன் மகேந்தி , அவன் சொன்ன - போடர் கடக்கும்போது- கூட பயணித்த செல்வம் என்பவன் பனியாற்றில் புதைந்து செத்த கதை , புருசோத்தை குளிர் கொன்ற - அவலக்கதை , விமானத்தையே வாடகைக்கமர்த்தி உறவுகளை இக்கரையில் சேர்த்த ஏஜென்சிகளின் சாகசக்கதை , உயிர்வாழ படகேறிய உறவுகளின் உயிர் பறித்து உடல் கரைத்த அவுஸ்ரேலிய கடல்கதை , பேரவலத்தின் பிறிதொரு சொல்லான முள்ளிவாய்க்கால் என வரிசைய் எண்ணத் திரையில் வர மனம் நடுங்கியது .

தான் இங்கு வர உதவிய முகம் , பெயர் , ஊர் தெரியாதவர்கட்கும் உதடுகளுக்குள்ளே நன்றி நினைத்தான். சக சிங்களவர்கள் கூட அதிலிருந்தார்கள். என்னே ஒரு அவலப் பெரும் பயணம் .
தமிழா...... !
சுதந்திரம் அவ்வளவு சுலபமானதல்ல.
பட்டதை சொல்லி
கட்டி அழுவதை விட்டு
முட்டி மோது....
விழ விழ எழு ....,
விதை விழாது முளை ஏது ....,?
விழுதலே எழுதலின் முதற்படி அல்லவா ?
- விழுதல் என்பது - அதுவே
என மனத்திரையில் ஒரு பெரு வெடிப்பு தோன்றி மறைய உடல் சிலுர்த்தது.
வலியாகவும், ஏமாற்றமாகவும் தமிழராய் இங்குள்ள எல்லோர் குரலின் அடியிலும் சொல்லாத சொற்களாக படிந்திருப்பது சோகமே......
சொற்கள் என்றதும் அதன் முதல் சொந்தக்காரர் அம்மா நினைவுக்கு வந்தார். அம்மாவை கொழும்புக்கு மாற்றி பின் யாழுக்கே அழைத்ததையும் , அதற்காக கடனாக தன்னை நம்பி முதல் முதல் மூன்று லட்சத்தை தந்துதவிய பானுவும் வந்துபோனாள் .
யாழ் பல்கலைக்கழகத்தில் துளிர்த்த நட்பை மறக்காமல் இங்கும் வந்து பார்த்து சென்ற தொப்புள் கொடி உறவு பேராசிரியை மங்கயற்கரசியும் மனதில் நின்றார்.
கண்ணால் இப்புற தேச உலகை காண முன்; செய்தித்தாள் மூலம் படித்து அறியும் வகை செய்த அம்மையா பிரக்கராசி கந்தவடிவேலரைதான் விட்டுவிட முடியுமா , டென்மார்க்கில் மாரிமுத்து வடிவில் இருந்த சீலனை கண்டுகொண்ட மொழிபெயர்ப்பாளன் சாந்தனின் உதவி, காந்தன் அண்ணா மூலம் கிடைத்த புடவைக்கடை வேலை, அதன் தங்க மனசுக்கார முதலாளி ஆனந்தர், வழிப்பறியில் எல்லாவற்றையும் இழந்து இன்னுமொருமுறை விழுந்து நொந்த போது - என்னைப்பற்றிக்கொண்டு எழுந்து வாடா சீலா.... ! என நான் காருக்குள் நித்திரையில் இருக்கும் போதே மன்றொரு போடரை கடந்து வந்த விவேக் அண்ணனை , எல்லாம் இழந்த யோசனையால் வந்த தலையிடியை எதை மறக்கமுடியும்.
நல்லவர் மட்டுமா பாதையில் வந்தார் தங்கையின் திருமணத்திற்காக சேர்த்த உழைப்பை சீட்டு என்ற பெயரில் சுறுட்டிக்கொண்ட சிவம், ' இன்னொருவன் மனைவி பானுவோட சுத்துறியாம் ' என்ற கலாவின் சுடு சொல.; பின், அருகில் அக்கா மல்லிகா நின்றதால்தான் அப்படி கேட்டேன் என நீரூற்றி அணைக்கப்பட்டமை, இவற்றின் பின்னுள்ள சூத்திரதாரி முரளி, மன்னித்தாலும் இவற்றை மறக்கமுடியுமா... ?-
சங்கம் வளர்த்து சண்டை பிடிக்கும் கூட்டமும் அவன் எண்ண திரையில் வந்து போனது.
துன்ப சங்கட நிலை ஓரளவுக்கு முடிவுக்கு வர சந்தோச சங்கம் பிறந்தது. விசாவுடன் வேலை வந்ததும் மாமா பத்மநாதன் மகள் சாம்பவியை சீலனுக்கு மனைவியாக்க விரும்பினார். சத்தியநாதன் அண்ணனின் மகள் குமுதாவை கட்டிவைக்க லண்டோவ் நகர் நல்லுள்ளங்கள் முயன்றன . பல வரன் தேடி வந்ததை நினைக்க,தேடி வந்து கட்டி கைவிட்ட சுபத்திரா மனதில் நிழலாடினாள்.
வெளிநாட்டு மாப்பிள்ளைத ;திருமணம் என்ற பந்தத்தில் சுக்குநூறாகி விட்ட சுபத்திராவை விபச்சாரத்தில் தள்ளிவிட்டதை எண்ணும்போது மனம் புண்ணாகியது.
இன்றும் வெளியில் சொல்ல முடியாது உள்ளே புளுங்கி தினமும் நசிந்து பிள்ளைக்காகவும், குடும்ப பேருக்காகவும் வாழ்வை தாங்கி பயணிக்கும் பெண்ணினத்தை எண்ணுகையில் ஏக்கமே மிஞ்சியது. .
ஆஸ்திரியாவில் கணவனிடம் போக வந்த சாந்தி ஏஜென்சியால் கசக்கி மணக்கப்பட்டதையும் பின் அவனையே குத்தி கொன்றுவிட்டு ஏழாம் மாடியில் இருந்து - என்னை மன்னித்துவிடுங்கோ அண்ணா - என ஆறுதல் சொன்ன சீலனிடம் கூறியபடி குதித்து இறந்தவளை நினைக்க ஒரு பெரு மூச்சு வந்துபோனது.
கார் வண்டியோ இது எதையும் காதில் வாங்காதது போல லண்டோவ் நகரை நோக்கி நெடுஞ்சாலை ஏ 65 ( அவுட்டபான் - யு 65 ) இல் ஓடிக்கொண்டு இருந்தது.
மழை இப்போது விட்டிருந்தது. வயிறு தானும் அவனுடன் பயணிப்பதாக கிள்ளி காட்டியது. மனம் உணவை நாடவில்லையாயினும் வயிறு பசிக்கவே செய்தது.
முதல் முதல் ராமலிங்கத்தாருடன் தவம் வீட்டில் சப்பிட்ட ஊர் சாப்பாடு நினைவை நிரப்பியது . கூடவே ஊரில் இருந்து பேசி வந்த மாப்பிள்ளை முரளி - காலை கட்டிய தாலியோடு - இரவு ஆபிரிக்க காதலனுடன் ஒடிய நிரோஜா , மைத்துனன் குணாவின் குடி மரணம், தொடர்ந்து கிடைத்த சுவிஸ் அகதி அனுமதி, கனடாவில் இருந்து ' உங்கள் பத்மகலா ' என முதல் முதலாய் அழைத்த காதலி கலாவின் குரல் , முரளி கலாவை அடைய காதல்வாழ்வில் குறுக்கிட்டு முடியாமல் போக - இருவரையும் பிரிக்க முயன்றது - என கடந்து வந்த நெடிய பாதையை ஒரு மின்னல் ஒளியில் கருமுகிலை காண்பது போல கண்டு மீண்டான் சீலன். வண்டி ஒரு பெரு வளைவில் திரும்பி ஓடிக்கொண்டு இருந்தது.
கனடாவில் இருந்து வந்ததில் இருந்து கலா இன்னும் சரியாக பேசவே இல்லை . முரளியோடு அவள் நின்றதை அவளே சொல்ல கேட்டதில் இருந்து சீலனின் மனம் ரணமாக வெந்துகொண்டிருப்பது என்னவோ உண்மைதான்.
ஆனால் பலத்த மழை காரணமாக ஒரு விபத்து நடந்து செடுஞ்சாலை மூடி விட்டிருந்தார்கள். வேறு மாற்று வழி ஊடாக போய் அழைக்க தாமதமாகிவிட்டது.
அதற்குள் முரளி வந்து விட்டான் . அவனுக்கு நம்பர் கொடுத்தது கலாவின் அக்கா மல்லிகாவாகத்தான் இருக்கும் என எண்ணினான் . மல்லிகா ஒன்றும் கனடாவில் இருந்து இந்த காரியத்தை செய்யவில்லை .
கலா - சீலன் திருமணத்தை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு முன்னரே லண்டோவ் வந்து . இப்போது விவேக் அண்ணனின் வீட்டின் பின்னால் பிரத்தியேகமாக போடப்பட்ட குசினிப்பந்தலில் பலகாரம் சுடும் சுற்றத்துப் பெண்களுடன் இருந்தே இதை செய்திருந்தார்.

தான் தாமதித்ததை எண்ணியே கலா மனம் நோகுறாள் என பேசாமல் வந்தான் சீலன். அவளோ தான் முரளியிடம் பேசியது இவனை புண்படுத்தி இருக்கும் அதுதான் பேசாமல் வருகிறான் என நினைத்தாள்.
நீண்ட கால இடைவெளிக்கு பின் ஒருவரை ஒருவர் கண்ட கதலர்கள் என்றோ அல்லது நாளையே திருமணமாகி தம்பதியராகப் போகும் இருவர் என்றோ இல்லாமல் எந்த வித ஆரவாரங்களும் இன்றி இருந்தார்கள்.
உண்மையான பாசமுள்ளவர்கள் மத்தியில் இப்படி அடிக்கடி பிரச்சனை நடக்கும் . பின் எந்த சமரசமும் இன்றி மறு கணம் கட்டிப்புரளுவார்கள் என்பது போல இருந்து இவர்கள் இருவரினதும் நடவடிக்கை .
கலாவுக்கு கனடா - ஜேர்மனி நீண்ட விமான பயணம். , பின் காத்திருப்பு , கார் பயணம் என தொடர் பயணத்தால் வயிறு குமட்டி கொண்டு வந்தது . மென்மை அதிகமான பெண்மை அவள். அவள் அதை மறைத்தாலும் ஓங்காளிப்பு குமட்டலை காட்டிக்கொடுத்தது.
இதனை அவதானித்த சீலன் முதல் வரும் தேனீர் அருந்தும் இழைப்பாறிடத்தில் காரை நிறுத்துமாறு ஜோசேப்பிடம் கேட்டுக்கொண்டான்.
இடைத்தரிப்பிடம் வந்ததும் அவளுக்குக் கழுவுமிடம் ( பாத்றூம் ) இருக்கும் இடத்தை காட்டி விட்டான் . அழைத்து வந்த அவனின் முன்னாள் முதலாளியும் நண்பருமான காரோட்டி ஜோசப் மூவருக்கும் தேனீர் வாங்கி வந்தார். கலா ' தனக்கு வேண்டாம் வயிறு சரியில்லை இப்போதுதான் முரளியுடன் குடித்தேன் ' என்றுவிட்டாள் .
கலாவுக்கு லீவு தாமதமாகவே கிடைத்திருந்தது ஆனால் ஒருமாத லீவு . திருமணத்தின் பின் என்ன செய்வதென்பது இருவரும் கூடி பேசிதான் முடிவு பண்ணவேண்டும்.
நாளைய திருமணத்தில் மணப்பெண்ணாக மணவறையில் இருப்பதை தவிர தான் எந்த உதவியும் செய்ய முடியாமையை எண்ணி உள்ளூர வருந்தவே செய்தாள் கலா . மணப்பெண் முக அலங்கார வேலைகள் ஆரம்பித்தால் வேறு எந்த வேலையும் செய்யவும் முடியாது .
மீண்டும் இடைத்தரிப்பிடத்தை நீங்கி வண்டியை ஓட்ட ஆயத்தமானார் ஜோசப் . சீலன் இம்முறை கலாவுடன் பின் சீற்றில் இருந்தான் . கலாவோ சற்று நேரத்திலெல்லாம் சீற்றில் சோர்ந்து சய்ந்து தூங்கிவிட்டாள்.
பெண்வீட்டாருக்கு என டேவிட் அங்கிள் விவேக் அண்ணன் மூலமாக ஒழுங்கு செய்த சஹானி வீட்டிற்கு வரும் வரை கலா தூக்கத்திலேயே இருந்தாள் . லண்டோவ் பகுதி வீடுகளும் யாழ்ப்பாணத்தைபோல் தனித்தனியே வெட்டி வீதியாக இருந்தன . மணமகன் வீடும் மணமகள் வீடும் ஒரே ஒழுங்கையில் ஐந்து வீடு தள்ளி தள்ளியே இருந்தது.

0000

எங்கிருந்து தான் கொண்டு வந்தார்களோ மணப்பந்தலில் செவ்விளநீர் கட்டிய கதலிக்குலையுடன் வாழைகள் இரண்டு அழகாக கட்டப்பட்டிருந்தது. ஒழுங்கையோர வாசல் மேசையில் கம்பளம் விரித்து நெல்லு பரப்பி வைத்த கும்பமும் , இரவு தூறலில் நனைந்த மெல்லிய ஈர நிலமும் வீதியோர பச்சைப்புல்லும் ஒருகணம் ஊரை நினைவூட்டியது.
ஏனோ ஊரை நினைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியும் பின் சிறு மனவருத்தமும் வந்தே போகிறது . எமதூராய் இருந்தாலும் அது எமக்கில்லை. எம் பிள்ளைகளுக்கானதும் இல்லை . இனி அது எமது கனவுக்கு மட்டுமே சொந்தமானது என்ற மனவருத்தம் அது.
மண்டபம் எடுத்து குறித்த மணிநேரந்துக்குள் முண்டி விழுங்கி விட்டு , பின் அவரவர் வண்டியில் கிண்டி கிழம்பி காணாமல் போகும்.; ஒரு நண்டு திருமணமாக இல்லாமல் இப்படி வீட்டில் நடாத்த முடிவெடுத்தவரை கட்டி அணைத்தொரு முத்தமிட தோன்றியது.

மணப்பந்தல் சோடனை பூக்கள் காற்றிலாடி மின்னின. நீள பந்தலை நீலநிற கதிரைகள் இரண்டாக பிரித்திருந்தன . திருமணத்திற்கே கட்டிய வீடு போல் விவேக் அண்ணனின் வீடு கம்பீரமாக நின்றது. கண்ணாடியில் பட்டு தெறித்த ஒளி போல் காலை வெய்யில் மஞ்சளும் சூடும் குறைவாக இருந்தது.
சூரியகாந்தி பூவில் பறக்கும் வண்ணத்திப்பூச்சிகள் போல புத்தாடை அணிந்த இளவயதினர் குறுக்கும் நெடுக்குமாக ஒருவரை ஒருவர் கலைத்துக்கொண்டு காலை ஒளிக்குள் ஓடிவந்து போய்க்கொண்டிருந்தார்கள் . அவர்கள் பின் குட்டி பூனையளவு நாய் ஒன்றும் ஓடித்திரிந்தது. வாசனை படர்ந்த பட்டு சேலைகளுடன் கலியாணவீட்டிற்கு வந்து கொண்டிருந்த பெண்கள் அச்சுற்றத்தை ரம்மியமாக்கினார்கள்.
அது எப்படியோ தெரியவில்லை பட்டு சேலையில் பருமனான பெண்களும் பனங்கிழங்கு போலவே இருந்துவிடுகிறார்கள். பட்டு வேட்டியில் பட்டு தெறித்த சிறு கீற்றொளி ஆங்காங்கே தூர மின்னல் போல கண்ணை கூசியது ' அடடா.... என்னே ஓரு இதமான தமிழ் பண்பாட்டுச் சூழல் ' என ஜேர்மனியர்கள் கூடி நின்று ரசித்துக்கொண்டிருந்தார்கள்.
வாழ்த்த வந்தவர்களால் மணப்பந்தல் நிறைந்திருந்தது , மாதுளம்பூ நிறத்தில் இருந்த மணவறையில் ஓமசாலை முன் இருந்த இரு அந்தணர்களுக்கு அருகில் சீலன் மாப்பிள்ளை கோலத்தில் எடுப்புடன் வீற்றிருந்தான் . அவனின் பார்வை பந்தலோரம் சுற்றிவந்தது. அவனை தோள் கொடுத்து தாங்கிய பல நல் உள்ளங்கள் நெடு மையில் கடந்து வந்திருந்தார்கள்.
குமாரவேல் பேராசிரியர் மனைவியுடன் முன் வரிசையில் இருந்தார். மக்டொனால்ட் மகேந்தியும் பானுவின் கணவரும் புடவைக்கடை முதலாளி ஆனந்தரும் வெற்றிலை போட்டபடி ஏதோ பந்தலை காட்டி பேசிக்கொண்டிருந்தார்கள் , சுபத்திரா தலையில் கனகாம்பர பூச்சரத்துடன் ஓரமாக இருந்து சீலனை பார்த்து மெல்ல நகைத்தாள் .
அக்கால தமிழ் மரபு ஒன்று எல்லாவற்றையும் கவிதையாக பாடி விடுவது . அது காலம் கடந்தும் பாடலாக வாழ்ந்துகொண்டிருக்கும் . அவ்வாறு நெடுந்தீவில் ஒரு திருமண பந்தலில் வீற்றிருந்தவர்களை பாடிய பாடல் ஒன்று சீலனுக்கு நினைவில் வந்தது . பழைய காலத்தில் பெயரிலும் பட்ட பெயரே அதிகம் பயன்படுத்தப்படும். நெடுந்தீவு தேசத்தில் ஒரு துடிப்பான பெண்ணின் திருமணத்தில்
' ஆரார் கொலுவிருந்தார் ஆனசிங்கி பந்தலிலே .....
வீணானவாயர் வெறுவாயர் அங்கிருந்தார்
வேறார் கொலுவிருந்தார் ஆனசிங்கி பந்தலிலே .....
உப்பு சிரட்டையோடு உவல்பேத்தை அங்கிருந்தார்.
ஆரார் கொலுவிருந்தார் ஆனசிங்கி பந்தலிலே .....
கூடம் இறுக்கவென்று கும்பகுடம் அங்கிருந்தார்.

சீட்டு சிவத்தின் வீட்டில் இருந்த நண்பன் சிறிராமச்சந்திரன் அனுமான் என செல்லமாக அழைக்கப்பட்டானே அவன் கூட மூலையில் இருந்து சீலனை பார்த்து சிரித்தான். சிவத்தைபற்றி அவனிடம் கேட்க வேண்டும் என நினைத்தான் சீலன் . தனது 20 ஆயிரம் பிராங் பணத்தை என்ன செய்தான் ? உள்ளேயா வெளியேயா , இறுதி வரை அவன் எனக்கு கடனாளியாவேதான் இருக்க போகிறானா.... என சிந்தனை ஓடியது.
மறுபுறம் பொம்பிள பகுதி வீட்டில் பத்மகாலவுக்கு மணமகள் அலங்காரம் நடந்துகொண்டு இருக்கவேண்டும். ஆனால் அது இன்னமும் ஆரம்பிக்கவும் இல்லை.
குமுதா அவள்தான் சத்தியநாதன் அண்ணனின் மகள். அதாவது சீலனுக்கு கனகலிங்கம் மூலம் சம்மந்தம் பேசப்பட்டவள் மிக அழகான புளியம்பூ வண்ண சேலையில் கடற்கன்னி போல வலம் வந்தாள். பார்க்க பொறாமையாக இருந்தது. அவளின் தந்தையின் முகத்தில் தான் ஒரு சோகம் படர்ந்திருந்தது . டேவிட் அங்கிள் காலில் சில்லு பூட்டி இருக்கிறாரா என கூட்டத்தின் ஊடே கூர்ந்து தேடும்படி அங்குமிங்கும் ஓட்டிக்கொண்டிருந்தார் . அவரே இவ் நிகழ்வின் அச்சாணி. மனைவி மெற்றில்டா அக்கா பெண்வீட்டை இயக்கிக்கொண்டிருந்தார். மகள் சாலினியும் பல்கலைக்கழக விடுமுறை என்பதால் வந்திருந்தாள்.
பானு பலகாரப்பகுதியை பொறுப்பெடுத்திருந்தாள். விவேக் அண்ணனின் மனைவி வவா அக்கா கலியாண சமையலை கவனித்தார் . சுவிஸ் தவம் அண்ணர் மேளம், ஐயர், மணவறை, போன்ற வெளி அலுவல்களை கட்டி மேய்த்தார். ஒலி, ஒளி, வீடியோ, போட்டோ விவேக் அண்ணனின் ஏற்பாடு.
எவற்றிலும் பொறுப்பின்றி எல்லாவற்றிலும் மூக்கு நுழைத்து குறை பிடித்துக்கொண்டு இருந்தார் கலாவின் அக்கா மல்லிகா . அவருக்கு இந்த திருமணத்தில் பூரண சம்மதம் இல்லை ஒரு பொழுது போக்கு சம்மதமே . டொக்ரருக்கு படித்துக்கொண்டு இருக்கும் முரளியை கட்டிக்கொடுப்பதே அவரின் எண்ணமாக இருந்து. அது சாத்தியமாகாமல் போகவே ஏனோ தானோ என இங்கு வந்திருக்கிறார்.
எல்லா துறையையும் ஒன்றிணைத்து நெறிப்படுத்தும் டேவிட் அங்கிளுக்கு உதவியாக அவரின் மகள் சாலினி முன்னும் பின்னும் நடந்துகொண்டிருந்தாள். ஆனால் அவளின் நடை பார்ப்பதற்கு ஒரு அழகிய வண்ண மெல்லிய திரை சீலை அசைவது போலவே இருந்தது. அவள் பேச்சில் வல்லின எழுத்தே இல்லாமல் இருப்பது போல இருந்தது. டொச்சு மொழி நாவில் நனைந்து வந்த தமிழை கேட்க அழகாகதான் இருந்தது. அவள் இங்கு பிறந்த பெண்.

00000

பெண்வீட்டில் மணப்பெண் கலாவுக்கு வயிறு இன்னும் சரி வர இல்லை .
நேற்றில் இருந்து 7 , 8 தடவைக்கு மேல் வயிற்றாலை போய்விட்டது .
பனிநிலவு மல்லிகை மொட்டு போல இருந்தவள் மத்தியான கீரைப்பிடி போல வாடி இருந்தாள் . ஏனோ நேற்றில் இருந்து அவளுக்கு சாப்பிடதெல்லாம் உடனே சத்தி வந்தது.
அடிக்கடி பாத்ரூம் போய்வந்ததால் முக , சிகை , நக அலங்காரம் எதுவும் செய்ய முடியாமல் இருந்தது . ' என்ன நடந்தது இவளுக்கு... ? இப்ப என்ன செய்வது ..? மத்தியானம் 11 மணிக்கு தாலி கட்டு விடிய ஏழு மணிக்கே இப்படி சீலைத்துணி மாதிரி கிடக்கிறாள் ' என வவா அக்கா கலாவின் அக்கா மல்லிகாவை கேட்டபடியே இருந்தார். ' இன்னும் கொஞ்சம் பாப்பம் சரி வந்திடும் ' என்பதையே திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தார் கலாவின் கட்டிலருகில் இருந்த மல்லிகா . இந்த இருவரை தவிர கதை இன்னும் வெளியில் கசியவில்லை . என்ன சாப்பிட்டாய் கலா என கேட்டதற்கு ' விமானத்தில் சானட்;விச் சாபிட்டேன் . பின் முரளியுடன் ரீ குடித்தேன் ' என்றாள் கலா.
கதை வவா அக்காவின் கணவர் விவேக் அண்ணன் ஊடாக சீலனுக்கு வந்தது. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை . இந்த திருமணத்தில் கலாவின் அக்கா மல்லிகாவிற்கு இன்னும் விருப்பமில்லை அவர்தான் நாடகமாடுகிறாரா ? முரளி நேற்று ஏதேனும் சொல்லி கலாவின் மனதை மாற்றி விட்டானா..? மனதை மாற்றினால் வயிறு ஏன் குளறுபடி செய்ய வேண்டும், கலாவுக்கும் இத்திருமணத்தில் விருப்பமில்லையா....? . இத்தனை தடைகளை தாண்டி வந்தும் இந்த நேரத்திலா இப்படி நடக்க வேண்டும் .
மேலும் ஒரு சிறு ஆனால் பாரதூரமான சொல்லக் கூசும் செய்தி இம்முறை மெற்றில்டா அக்காவின் கணவர் டேவிட் அங்கிள் ஊடாக சீலனை வந்தடைந்தது . பொதுவாக இரகசிய அந்தரங்கங்கள் பரவுவது எவ்வாறோ அவ்வாறுதான் இந்த செய்தியும் வந்தது .
கலாவின் உடுப்பில் இரத்தமும் இருந்ததாம் . சீலன் என்ன என ஏங்கி முகம் கலவரமடைந்தாலும் மறுகணம் விடையம் அறிந்து ' இது எல்லாம் ஒரு பிரச்சனையா மாதா மாதம் வருவதுதானே ' என்றான் . வைத்தியம் படிக்க சென்ற அவனுக்கு இது தெரியாதா என்ன .
' ஆனாலும் இதனையும் பார்த்துத்தானே திருமணத்திற்கு நாள் குறிக்கவேண்டும் என்பது கூட ஏன் பெண்வீட்டாருக்கு தெரியாமல் போனது ' என விவேக் அண்ணன் கேட்டார் .
' இதை எல்லம் சொல்லவா முடியும் ' என டேவிட் அங்கிள் வாதாடினார் .

' சாமத்தியப்பட்டு பிள்ளையே அதை வெளிய சொல்ல வெக்கப்பட்டு இருக்கும் போது கண்டுபிடித்து பறை அடித்து ஊருக்கே சொல்லுவினம் , இப்படி சொல்ல வேண்டிய சந்தர்ப்பத்தில் சொன்னா மட்டும் வெக்கக்கேடா... ?' என்று ஒரு போடு போட்டார் விவேக் அண்ணன் . அவருக்கு தன் வீட்டில் நடக்கும் ஒரு நல்ல காரியம் கெட்டுப் போகக்கூடாது என்ற பரிதவிப்பு.
சீலனுக்கு எதிராக இயற்கையும் காய் நகர்த்தியது .
இது எதுவும் தெரியாத சபை கலகலவென இருந்தது . பாட்டுப் பெட்டி பாட்டு வேற பாடி மகிழ்த்திக்கொண்டிருந்தது. இனியும் கலாவுடன் நேருக்கு நேர் பேசாது பிரச்சினையை தீர்க்க முடியாது என மணவறையை விட்டு எழுந்தான் சீலன் .
' தம்பி பொண்ணு வந்து தாலி கட்டி முடியும் வரை மாப்பிளை மணவறையை விட்டு எழும்பக்கூடாது ' என்றார் உருத்திராச்ச மாலை போட்டு குடும்பி வைத்த சுவிஸ் ஐயர் .
அங்கிருந்தவாறே ஒருவரை தேடினான். பந்தலில் இருந்த நண்பன் அனுமான் „என்ன' என கண்ணால் கேட்டான் . தூது போக உகந்தவன் அனுமானே என தன் சீதையிடம் அவனை அனுப்ப கண்ணை காட்டி அழைத்தான் . அவன் எழுந்து எல்லோர் முன்னும் வர வெட்கப்பட்டு பின் சட்டை பொத்தானை துணைக்கு பிடித்துக்கொண்டு ஒருவாறு வந்து சீலனின் முகமருகே குனிந்து என்ன என்றான்.
' வலப்பக்க அறை மேசையில் என் போன் சாச் போட்டபடி கிடக்கு எடுத்து வா மச்சான் ' என்றான் . போன் கைக்கு வந்ததும் சமையலில் நின்ற வவா அக்காவுக்கு போன் பண்ணி ' போனை கலாவிடம் கொடுங்கள் பேசவேண்டும் ' என்றான் .
பாயாசக்கறண்டியுடன் நின்ற வவா அக்கா போனை அருகில் நின்ற மல்லிகாவிடம் கொடுத்து கலாவிடம் கொடுக்க சொன்னார். கலாவின் போன் ஏனோ பதிலின்றி றிங் பண்ணிக்கொண்டே இருந்தது . அருகில் மாப்பிள்ளை தோழன் , முன்னால் சபையோர் என எல்லோரும் அவனையே பார்த்திருந்ததால் வெளிப்படையாக பேச முடியவில்லை . குறுந்தகவல் அனுப்பினான் . செய்தி சென்று பதில் வந்துகொண்டிருந்தது.
' உடனுக்குடன் இந்த தகவல்களை அழித்துவிடும் கலா . இன்னொருவரின் போன். உமது போனுக்கும் அடித்தேன் ஏன் பதில் இல்லை . என்ன நடக்குது அங்க ? அக்கா மல்லிகாவுக்கு இந்த கலியாணத்தில விருப்பமில்லை என எனக்கு முதலே தெரியும்.
„அவா இன்னும் மனம் திருந்த இல்லையா... ? ஏதோ ஏதோ எல்லாம் கதை வருகுது. உமக்கு என்னை கட்ட விருப்பமா ..? இல்லையா....? விருப்பம் இல்லாட்டி நேர சொல்ல வேண்டியது தானே . அதை விட்டிட்டு . நேற்று என்னோட கதைக்காம உம் எண்டு கொண்டு வந்தீர். இண்டைக்கு என்னடா எண்டால் வயித்தாலை , சத்தி, ரத்தம் என்கிறீர்'
„இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் . ஒரு சாறியை சுத்திக்கொண்டு பக்கத்தில வந்திருக்க ஏலாத அளவுக்கு வருத்தமா... ? கலியாணம் நிண்டு போனால் நாளைக்கு கனடா போயிடுவீர் . நான் இங்க இருக்கிறவன் , வந்திருக்கிறது முழுக்க என் நண்பர்கள். உமக்கென்ன நட்டம். முரளிக்கு நான் அழைப்பு கொடுக்கவே இல்லை. மல்லிகா அக்கா காட் கொடுத்து அவன் வந்து உங்க பலகார சட்டிக்கு முன்னால காவல் இருக்கிறானாமே. எனக்கொண்டும் விளங்கேல்ல ... . தாலி கட்டும் மட்டும் சமாளியும் எவ்வளவு பிரச்னையை கடந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறம் எண்டு கொஞ்சம் யோசியும். '
இது சீலனின் தகவல் . சற்று காரமாகவே கேட்டு விட்டான். கோவம் வராதா பின்ன.
„பேசவே முடியாம இருக்கிறவளை பிடிச்சு ரைப் பண்ண சொல்லுறீர்.... வருத்தம் எண்டு ஆரும் ஆசைப்பட்டு வேணுமெண்டு சொல்லுதுகளே.....அதுவும் இந்த நேரத்தில் சொல்லுவினமோ....'
„நடக்கிறதுதான் நடக்கும். தாலி கட்டி மனைவியாக முன்னமே இப்படி உறுக்கிறீர். எங்கிட சொந்தக்காரன் எண்டு முரளி ஒரே ஒரு ஆள் கலியாணத்திற்கு வந்ததே உமக்கு பொறுக்கவில்லை . நான் உம்மை பற்றி பெருசா நினைச்சேன் . இவ்வளவு தானா நீர். ஏன் கதைக்க மாட்டீர்'. „உமக்குதான் குமுதா......, சாம்பவி..... பானு இன்னும் ஆர் ஆரோ.... வருசையில் இருக்கிகேக்க கதைப்பீர் தானே.....'
இது கலாவின் தகவல் அல்ல அவளுக்கு தெரியாமல் அக்கா மல்லிகா அனுப்பிய செய்தி.
சீலனுக்கு வாசிக்க வாசிக்க கைநடுங்கியது . வாக்கியங்கள் எண்ணைச் சட்டியில் பிளிந்த முறுக்கு போல பொரிந்து கொண்டிருந்தது. செஞ்சு உலங்குவானவூர்தி காத்தாடி சத்தம் போல படபடத்தது. என்னாச்சு கலாவுக்கு. இப்படி வேண்டா வெறுப்பாக எழுதியிருக்கிறாள். போனில் காதலொழுக பேசினாளே...
முடிவெடுத்தான் . ' இண்டைக்கு தாலி கட்டுறது கட்டுறதுதான்', யாருக்கு என்பதே கேள்வி . ஆனால் அதற்கு முன் இந்த கண்ணாமூச்சி விளையாட்டுக்கு யார் காரணம் என கண்டு பிடிக்க வேண்டும் .
இந்த கதை மெல்ல சத்தியநாதன் அண்ணனுக்கு எட்டவே மகள் குமுதாவை கூப்பிட்டு சாறியை மாத்தி பட்டு சேலை கட்டிக்கொண்டு வா என அனுப்பினார். அவள் அப்பாக்கு மூளைகழண்டுட்டுதா.... என மனதில் கறுவிக்கொண்டு ஏன் என்று புரியாமலே சாறி மாற்றச் சென்றாள்.
மனம் கேட்கவில்லை வவா அக்காவை அனுப்பி கலாவிடம் பேசினான். ' என்னண்டு தெரியேல்ல சாபிட்டது உடனயே சத்தி வருகுது . வயிற்றை உளைஞ்சுகொண்டு வயிற்றாலை போகுது ரண்டு நாள் ஆகுது சாபிட்டு . கடைசியா கனடாவில் கொஞ்சம் புட்டு சாப்பிட்டது - எண்டு சொல்லுறாள் அவளால போன் கதைக்கவும் பலம் இல்லை.' என்றார் வவா அக்கா.
மணவறையில் இருந்த சீலனின் மனம். தோற்றுவிட கூடாது என போராடியது. இது அவனுக்கு இயற்கை கொடுத்த வரம். சிவம் பணத்தை சூறையாடியபின்னும், குத்துவேண்டியவரை காப்பாற்ற முயன்று கொலைப்பழி விழுந்தபோதும் , பெயரை மாற்றி மாரிமுத்து என ஆனபோது இருந்த உறுதி இப்போதும் கை கொடுத்தது.
கொழும்பு பத்மநாதன் மாமாவின் மகள் சாம்பவியை கட்டவேண்டும் என ஒரு மனம் சொன்னது. அம்மாவின் விருப்பமும் அதுவே. இரண்டாவது முறையாவது அம்மா வெற்றி அடையட்டும் என எண்ண முற்பட்டான். மொத்தத்தில் அவன் குழம்பி இருந்தான்.
வந்தவர்களுக்கு என்ன பதில் சொல்லி அனுப்புவது. இந்த வாழ்வை சமைத்து தந்த நல்லுங்களை ஏமாற்றுவதா..?. குமுதாவைவே கட்டிவிடலாமா.... ? தெரியாமலே தயாராக வந்திருக்ருக்கிறாள் . கலாவை ஏமாற்றிவிட்டோமா...?. இல்லை கலா என்னை ஏமாற்றிக்கொண்டிருக்கிறாளா....?. என் முன்னாலே நாடகமாடி நம்ப வைக்கிறாளா...?. இனியும் இந்த வருத்தம் வருமா...? இருக்கக்கூட முடியாத பொண்ணுக்கு தாலி கட்ட அம்மா இங்கிருந்தால் சம்மதிப்பாரா...? கட்டிய பின் வருத்தம் வந்தால் பார்ப்பதில்லையா....? யாருக்கு இந்த கேள்விகளுக்கு பதில் தெரியும். பதில் கேட்டு முன்னால் இருக்கும் சபை ஆரவாரிக்க முன் . அவன் பதில் தேட வேண்டும்'
ஒருவேளை உண்மையிலேயே அவளுக்கு என்னை பிடிக்காமலிருக்கலாம் , முன்னர் கல்லூரி இளைஞன் , இன்றோ கடின உழைப்பாளி, அவளின் கண்ணுக்கு உடல் கறுத்து மெலிந்து இருப்பதாக தெரியலாம் . உள்ளதை உள்ளவாறு ஏற்க ஏன் மறுக்கிறாய் மனமே...
இதற்காக உயிரை விட்டுவதா... இல்லை பித்து பிடித்து வீதியில் திரியப்போகிறாயா...? இவ்வளவு தேசம் தாண்டி வந்தது இதற்காகவா....?. கிட்டாதாயின் வெட்டென மற...
தாலி கட்டியபிறகும் ஆபிரிக்க காரனோட ஓடி போனாளே நிரோஜா அதை விட மோசமான ஒன்றையா நான் செய்ய போகிறேன். திருமணத்தை தானே நிறுத்தப்போகிறேன். எதையும் தாங்கும் சக்தி கொள் மனமே. உன்னை விரும்பியவள் இப்போது உன்னை காதலிக்க வில்லை . விரும்பாவிடில் மறந்து விடு மனமே....
மற்றவரை கொண்டு வாருங்கள் அவளும் பின்னின்றால் விரும்பி முன் வரும் யாரையாவது மனைவியாக்கி வாழ்ந்து காட்டுகிறேன்.
எனக்கு என் நண்பர்கள் இன்று என் திருணமத்தை கண்டு போக வேண்டும் அவ்வளவுதான். எந்த பெண்ணுடனும் நான் வாழத் தயார். என்னோடு யார் வாழத் தயார்.....?
எல்லா பெண்ணும் நல்ல பெண்தான் . சில கல்லுமன ஆண்களால் கறுப்பு, வெள்ளை ,உயரம் ,கட்டை ,மெல்லிசு குண்டு என வெளிப்பார்வையை கொண்டு தவிர்கப்பட்ட பெண்களே நல்ல கணவனை அடைந்து நிறைவாக வாழ்பவர்கள். எல்லாவற்றுக்கும் மனமே காரணம். முடிவெடுக்க தயாரானான் சீலன். எவ்வளவு காசை செலவழித்து இந்த திருமண ஏற்பாடு செய்திருக்கிறோம் வெறுமானே கனடாவில் இருந்து முதல் நாள் வந்த அவையளுக்கு என்ன தெரியப்போகிறது.
மணவறையில் மயங்கி விழுந்தான் மணமகன். முறை மச்சானுக்கு மலை சூடினாள் மணப்பெண். குடியில் மணவறைக்கு வந்தவனை முடிக்க மறுத்த பெண்ணால் நின்றுபோனது திருமணம் . கேள்விப்பட்டதில்லையா அவற்றுள் இதுவும் ஒன்று என எண்ணினான்.

தான் ஒருத்தி கழுத்தில் தாலி கட்ட முன் முரளி கலா திருமணத்தை தானே இதே மேடையிலேயே நடாத்தி வைக்க தயாரானான். அதுவே கலாவின் விருப்பம் என்றால் , இதுவே மல்லிகாவுக்கு மன மகிழ்ச்சியை தரும் என்றால் , காதலை முறித்து கலாவை அடைவதே முரளிக்கு இன்பம் தரும் என்றால், இங்கேயே இப்போதே கலாவின் கழுத்தில் முரளி எனது தாலியையே கட்ட நான் பூத்தூவி வாழ்த்திவிடத் தயார்.
ஒன்றல்ல இரண்டு திருமணங்களை கண்டு போகட்டும் என் சபையோர். திடம் பூண்டான். விழுதல் எல்லாம் எழுவதற்கே , எழுவது உறுதியானால் விழுவதெல்லாம் தற்காலிகமானதே... '.
நேரம் ஆக ஆக நிலைமை மோசமானது. எவ்வாறு சிந்தித்த போதிலும் பந்தலுக்கு முரளி வந்த போது சீலனுக்கு அவன் மேல் இருந்த சந்தேகமும் கோவமும் வலுக்கவே செய்தது. முரளி தான் ரீயில் எதையோ நேற்று கலந்திருக்கிறான். இது தெரியாத மல்லிகா உண்மையான உடல் வருத்தம் என நம்பிக்கொண்டிருக்கிறார்.
ஆனாலும் இதை வைத்து திருமணம் குழம்பினால் தன் விருப்பம்போல் முரளிக்கே கலாவை கட்டி வைக்கலாம் என நினைக்கிறார் . இதை கலாவுக்கு சொன்னால் அவள் நம்ப மாட்டாள் அக்கா பாசம் , முரளிமேல் அவ்வளவு நல்ல அபிப்பிராயம் என சிந்தித்த போது டேவிட் அங்கிள் வந்தார்.
இந்த ஐரோப்பிய வாழ்வின் கடவுள் போன்ற மனிதன் அவர். உறுதியோடு அருகில் வந்து .
' சீலன் இது நான் அவசரத்தில எடுத்த முடிவில்லை . நான் , என் மனைவி , மகள் சாலினி மூவரும் பேசி எடுத்த முடிவு . கலாவின் அக்கா ஏதோ மனதில் வைத்துக்கொண்டு பிடிபடாம பேசுறா.... கலாவுக்கு அது தெரியேல்ல. கலாவை மறக்கிறதுதான் உனக்கு நல்லது. நான் சொல்லுறதை வடிவா கேட்டு யோசித்து பதில் சொல்லு சீலன். தாலி கட்டும் நேரத்திற்கு இன்னும் ஒரு மணித்தியாலம் தான் இருக்கு'.
„நானும் மெற்றில்டாவும் முறைப்படி உன்னை எங்கள் மகள் சாலினிக்கு யாழ்ப்பாணத்திற்கு போன் பண்ணி உன் அம்மாவிடமே கட்டி தர விருப்பமா எண்டு கேட்டு அம்மாவும் ஓம் எண்டு சொல்லி விட்டார். இப்பதான் பேசினனாங்கள். இனி உன் விருப்பம். யோசித்து முடிவு சொல்லு ' என கேட்டு விட்டு யாரையோ வரவேற்று பன்னீர் தெளிக்க போய்விட்டார். அவர் செய்த உதவியை மறக்க முடியாது. மகள் சாலினி அருமையான பிள்ளை அம்மாவை வேறு கேட்டுவிட்டார்கள்' என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது தான் அந்த செய்தி வந்தது .
கலா மயங்கிவிட்டாள் அம்புலன்சுக்கு அடித்து கொண்டுபோய் வாட்டில் மறித்து விடார்கள். மயக்கம் தெளிந்தால் தான் முடிவு தெரியும் என்றார் விவேக் அண்ணன். சீலனால் அந்த செய்தியை கேட்டபின்னும் மணவறையில் இருக்க முடியவில்லை.
'கலா ..... , கலா ..... ' என்று கத்தி விழித்து விட்டான் . என்ன ஆச்சரியம் கலாவின் மடியில் அவன் படுத்திருந்தான். அவன் கட்டிய தாலி அவள் மார்பில் ஆடியது. எல்லாம் கனவு....., கண்ட கனவை ஒன்று விடாமல் கலாவுக்கு சொன்னான்
' ஆனாலும் உன் கனவு ரொம்ப மோசம் , அலுப்பாய் இருக்கிறாய் என கொஞ்சம் தூங்க விட்டால் இப்படியா கனவு காண்பாய். சீரோடு சிறப்பாக நடந்த திருமணத்தை இப்படி நாதாரித்தனமா அல்லவா கண்டிருக்கிறாய் .' என்றாள் தன் தலை சோடனையை கழற்றியபடி பத்மகலா.
' சக்கரைப்புக்கையில் புதைத்து வைத்த வாழைப்பழம்போல் நல்ல இனிப்பான கதகதப்பாய் மடி இருந்தால் நித்திரை வராதா என்ன ' என்றான் சீலன் அவளை அண்ணாந்து பார்த்து .
'முதலிரவை கனவு காண்பவர்கள் மத்தியில் முதலிரவில் கனவுகண்ட ஒரே ஆள் நீதானடா....சீலா.... கனவில் கடைசியில யாருக்குத்தான் தாலி கட்டினாய் ' என்றாள் கலையாத கூறைபட்டின் கரையை பார்த்தபடி.
' அதுதான் இடையில் முழிச்சிட்டனே மீதியையும் காண இன்னொருக்கா தூங்கவா...?' . என்றான் அவள் பின்னலில் இருந்த குஞ்சத்தை அவிட்டபடி . அவள் அவனின் காதை ஊண்டி திருகினாள். அவளிள் கன்னத்தில் பட்டு தெறித்த மின் விளக்கு ஒளியில் வெட்கமும் கலந்திருந்தது.

சுபம்
பசுந்திரா சசி.

Sasikaran Pasupathy

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழுதல் என்பது எழுகையே திடரை எழுதியவர்கள்

 

11008517_10203516478226173_8995574734081

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திருமதி.நிவேதா உதயராயன்
„விழுதல் என்பது எழுகையே' நிறைவுப் பகுதி (3)


'விழுதல் என்பது எழுகையே' தொடரின் நிறைவுப்பகுதி (3)
எழுதியவர்: திருமதி. நிவேதா உதயராயன் அவர்கள், இலண்டன்.


அன்றைய பொழுதின் விடியல் சீலனுக்கு மிக மகிழ்வாக இருந்தது. தன் வாழ்வில் இத்தனை காலம் பட்ட துன்பத்துக்கு முதல் முறையாக சஞ்சலங்கள் எதுவுமற்று, கவலைகளே இன்றி மகிழ்வு கொண்டு மனம் துள்ளிக் குதிப்பது இன்றுதான். அவனுக்கே அம்மகிழ்வைத் தாங்க முடியாது மனது கனத்தது.
துன்பங்கள் வருவது கூட நல்லதுதான். அப்பொழுதுதான் நாம் இழந்தவைகளும் பெறுமதி மிக்கவைகளும் எம் கண்ணுக்குத் தெரிகின்றது. இறைவன் தெரிந்தேதான் இரண்டையும் மனிதவாழ்வில் வைத்துள்ளான் என்று எண்ணியவனுக்கு சிரிப்பு வந்தது. எத்தனை இலகுவாகிவிட்டது மனம். வாற வெள்ளிக்கிழமை கலா வந்தால் எப்படி எப்படிச் செய்யவேண்டும், என்ன முதலில் கதைக்கவேண்டும் என்று மனதுள் பட்டியல் இட்டுக்கொண்டான். அவளுக்கு என்ன வாங்கலாம் என்று யோசித்தவன் உடனேயே அந்த எண்ணத்தைக் கைவிட்டான். பத்மகலா வந்த பிறகு அவளைக் கடைக்குக் கூட்டிக்கொண்டு போய் வாங்கிக் கொடுப்பதுதான் நல்லது என முடிவெடுத்தவன், பாடல் ஒன்றை மகிழ்வாக விசிலடித்தபடி எழுந்து குளியலறைக்குச் சென்றான்.

வெள்ளிக்கிழமை பிராங்பேர்டிற்குப் போறதுக்கு கார் வேணும் ஆரிட்டைக் கேட்கலாம்? என யோசித்தவனுக்கு சத்தியநாதன் தான் உடனே நினைவில் வந்தார். அவர் வேண்டாம். அவர் மகளை மறுத்துவிட்டு அவரிடமே உதவி கேட்பது ஏதோபோல் இருக்க, எதுக்கும் வேலை செய்யும் இடத்தில் மாக்கிடம் கேட்டுப் பார்ப்போம். அவன் ஏதும் ஐடியா சொல்வான் என எண்ணி மனதை அமைதிப்படுத்தியபடி வேலைக்குச் செல்ல ஆயத்தமானான் சீலன்.
மதியம் உணவு வேளையின் போது எயர்ப்போட் விடயம் பற்றி மாக்கிடம் கதைத்தபோது அவனொரு யோசனை சொன்னான். 'எயாப்போட் போகும்போது நீ இங்கிருந்து ரெயினில் போய்விடு. உன் நண்பி வந்தபின் அங்கேயே ஒரு டாக்ஸி பிடித்து அழைத்து வா. ஒரு 150 யூரோ வரும் ' என. ஆனால் அது நல்ல யோசனையாகச் சீலனுக்குப் படவில்லை. அவன் பணத்தில் குளிப்பவன் அல்லவே இத்தனை பணம் செலவழிக்க. பத்மகலா என்ன இரண்டு மூன்று சூட்கேசா கொண்டுவரப் போகிறாள். ஒன்றுதானே. அவளையும் ரெயினிலேயே கூட்டி வந்துவிடலாம் என மனதில் நினைத்தாலும் மாக்கிடம் சொல்லவில்லை. கலா ஏதும் நினைப்பாளோ என்று ஒரு நிமிடம் எண்ணியவன், இயல்பாக இருப்பதே எல்லாதுக்கும் நல்லது. இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசை கொள்வதுதான் தவறு என எண்ணியபடி தன் வேலையில் மூழ்கிப்போனான் சீலன்.

இரண்டாவது வெள்ளி விடிந்தபோது மனதில் எதுவோ பிசைவதாக உணர்ந்தவுடன் ஏன் இப்படி இருக்கிறது. இன்று கலாவைப் பார்க்கும் சந்தோசத்தில் இருக்கிறேன். அம்மா தங்கச்சிக்கு ஏதும் வருத்தமோ என் எண்ணியவன் உடனேயே அவர்களுக்குத் தொலைபேசி எடுத்தான். தாயின் குரலைக் கேட்டவுடன் தான் மனம் நின்மதியானது. தங்கச்சி சுகமோ என்று அவன் கேட்காமலேயே தாய் அவள் டியூசனுக்குப் போட்டாள் என்று கூற, சீலனின் மனம் அமைதி கொண்டது.
கடவுளே பத்மகலா எந்தத் தடையும் இல்லாமல் வந்து சேர்ந்திடவேணும் என்று மனம் வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிப் பிரார்த்திக்க, கட்டாயம் அவள் தன்னிடம் வருவாள் என்று மனம் சொல்ல, சில நேரம் தன்னை அறியாமலே ஏற்பட்ட மன அழுத்தத்தில் தான் நெஞ்சு பிசைந்ததாக்கும் எனத் தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டான். காலையில் எழுந்தவுடனேயே ஏழு மணிக்கு எல்லாம் காலை உணவை உண்பவனுக்கு இன்று பசியே எடுக்கவில்லை.
இதுவரை போடாமல் வைத்திருந்த ஒரு சேர்ட்டை எடுத்துப் போட்டுக்கொண்டான். நல்ல காலம் இப்ப சமர்.அல்லது என்ன தான் அழகா ஆடை அணிந்தாலும் மேலே யக்கற்றைப் போட எல்லாம் உள்ளே மறைத்துவிடும் என எண்ணியவனாக ரெயின் டிக்கற் தனதும் கலாவினதும் சரியாக இருக்கிறதா எனச் சரிபார்த்து பேர்சுக்குள் வைத்து காற்சட்டைப் பையினுள் வைத்துவிட்டு கதவைப் பூட்டியபடி இறங்கினான்.
நடக்கும்போது ஏனோ அந்தரமாக இருந்தது. என்ன இது ஒருநாள் கூட இப்படி இருக்கவில்லையே என்னும் எண்ணம் மீண்டும் வர, எனக்குப் பதட்டம் அதிகமாகிவிட்டது எனத் தனக்குச் சமாதானம் சொன்னவன் பத்து நிமிடத்தில் பஸ்தரிப்பிடம் வந்து சேர்ந்தான். தரிப்பிடம் வந்தவன்,பஸ்சுக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு ஓரிடத்தில் நிற்காமல் இருக்காமல் அங்கும் இங்கும் நடந்தான். எத்தனை தரம் என்று நடப்பது என எண்ணியபடி ஒரு பக்கமாகப் போய் நின்றவனில் கண்ணில் விளம்பரத்துக்கும் அப்பால் அவனது உருவம் தெரிந்தது.

„ம்...' நல்ல சிமாட் ஆகத்தான் இருக்கிறன் என பெருமிதம் ஏற்பட்ட அடுத்த நிமிடமே ஆயாசமும் ஏற்பட கீழே குனிந்து பார்த்தான். சப்பாத்தைப் போட மறந்து வீட்டில் போடும் செருப்புடன் வந்துவிட்டிருப்பது தெரிய, அய்யோ இப்ப திரும்பிப் போகவேணுமே. இன்னும் மூன்று நிமிடத்தில் பஸ்ஸைப் பிடிக்க முடியாது. வந்துவிட்டுத் திரும்பிப் போவது சரியில்லையே என நினைத்தவன், இப்படியே போக முடியுமா ? நல்ல காலம் இப்பவாவது கண்டேனே. இதுவே எயர்ப்போடில் அல்லது ரெயினுக்கை ஏறின பிறகு கண்டால் என்ன செய்யிறது என்று மனதைச் சமாதானப்படுத்தியபடி மீண்டும் வீட்டுக்கு விரைந்து நடந்தான்.
-------------------------------------------------------------------------------

கிறங்கிப் போய் அவன் தோழில் சாய்ந்தபடி பத்மகலா விட்ட நிம்மதிப் பெருமூச்சு இப்பகூட அவன் காதில் கேட்கிறது. கண்களில் கண்ணீர் வழிந்தோட அதைத் துடைக்க மறந்து வெளியே பார்த்தபடி நிற்கிறான் சீலன். அதுதான் எங்கள் விதியென முன்பே எழுதப்பட்டிருக்கு. அதை மாற்ற முடியாதுதான். வாழ்வு பூராவும் இந்தக் குற்ற உணர்வே என்னை சிறிது சிறிதாகக் கொல்லப்போகிறது. என்னால் இன்னொருத்தியுடன் வாழவும் முடியப்போவதில்லை. ஆனாலும் நான் அதற்காக மனமொடிந்து வீழ்ந்து போய் விடமாட்டேன்.
எத்தனை அழிவின் பின்னும் எம் மக்கள் போராடிக்கொண்டே இருக்கிறார்களே மீண்டும் எழுந்து நிற்க. நானும் அப்படித்தான் எத்தனை முறை வீந்தாலும் எழுவேன். என் உயிர் உள்ளவரை. காதல் வாழ்வின் ஒரு பகுதியே அன்றி காதல் இன்றி வாழ்வு முடிந்துவிடுவதில்லை. என்னை இறைவன் இப்படி நிற்க வைத்துள்ளான் என்றால் ஏதோ என்னால் என் சமூகத்துக்கு ஆகவேண்டியது இன்னும் இருக்கிறது. காரண காரியமின்றி எதுவுமே உலகில் எதுவும் நடப்பதில்லை. என் எழுகையை யாரும் தடுக்கவே முடியாது என எண்ணியபடி தூரத்தில் தெரியும் காட்சிகளைப் பார்க்கத் தொடங்கினான் சீலன்.
இன்றுடன் மூன்று மாதங்கள் ஆகின்றன. எத்தனை தடவை நான் கீழே விழுந்தாலும் தடுமாறித் தடுமாறி எழுகிறேனே. அப்படி இருந்தும் கடவுள் என்னைச் சோதிக்கிறானே. இந்தப் பிறப்பில் என் மனமறிந்து நான் யாருக்கும் எந்தப் பாவமும் செய்யவில்லையே என சீலன் எத்தனையாவது தடவைகள் எண்ணியிருப்பான் என்று அவனுக்கே தெரியவில்லை. அத்தனைக்கு அவன் மனதில் விரக்தி ஏற்பட்டிருந்தது. எத்தனை ஆசைகள் கோட்டைகள் எல்லாம் கட்டி அவன் பத்மகலாவின் வருகைக்காகக் காத்திருந்தான். கடவுளும் பாராபட்சம் பாக்கிற ஆள்தானோ? அல்லது எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கவேண்டும். உள்ளுக்குள் கடவுள் மேல் கோபம் வந்தாலும் அடுத்த நிமிடமே கடவுளே என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தான் எங்களைக் காப்பாற்ற வேணும் என மனதினுள் மன்றாடியவனுக்கு கண்கள் நிரம்பி கண்ணீர் எட்டிப் பார்த்தது.
எத்தனை போராட்டத்தின் பின் பத்மகலாவைத் தன்னுடன் வைத்திருக்கிறேன். தடாலடியாக வந்திறங்கிய மல்லிகா உடனேயே தங்கையை கனடாவுக்குக் கூட்டிக்கொண்டு போக ஒற்றைக் காலில் நின்றதுவும் இவன் அவளின் காலில் விழாத குறையாகக் கெஞ்சி மன்றாடியும் கூட அவள் இறங்கி வரவில்லை. சத்தியநாதன் அண்ணை தான் கடைசியில் மல்லிகாவுக்கு சீலனைப் பற்றிச் சொன்னார். தன் மகள் உட்பட எத்தனை திருமணம் அவனுக்கு வந்தது என்றும் கலாவைத் தவிர யாரையும் கட்டச் சீலன் மறுத்து விட்டதையும் சொன்னபின் தான் மல்லிகா ஒருவாறு இறங்கி வந்தாள். அத்துடன் கலாவின் நிலை இன்றும் மாறலாம் அல்லது மாதங்களோ வருடங்களோ கூட எடுக்கலாம் என்பதும் இந்த நேரத்தில் கலாவை கூட்டிக்கொண்டு செல்வது நல்லதும் அல்ல என வைத்தியர்கள் கூறியதும் மல்லிகா ஒருவாறு இறங்கிவந்து கலாவை இங்கேயே விட்டுவிட்டுப் போகச் சம்மதித்தாள்.

சீலனின் மனம் அப்பப்ப கிடந்தது அல்லாடும். ஆனாலும் அவன் மனதைத் தளரவிடவில்லை. தனக்கும் பத்மகலாவுக்கும் கட்டாயம் ஒருநாள் திருமணம் நடக்கும். ஆனால் எப்போது என்பது தான் தெரியவில்லை. முன்பெல்லாம் கடவுள் மேல் நம்பிக்கையற்றிருந்தவன் அவன். பத்மகலா தன்னுடன் கதைத்தால் கம் அம்மனுக்கு அபிசேகம் செய்வதாகவும், பழனிக்கு வந்து மொட்டை போடுவதாகவும் கூட வேண்டியுள்ளான். என்ன செய்வது மற்றைய துன்பங்களைத் தாங்கிக் கொண்ட எனக்கு இதைத் தாங்க முடியவில்லையே என எண்ணியபடி வைத்தியசாளைக்குச் சென்று பத்மகலாவின் கட்டிலின் முன் கதிரையை எடுத்துப் போட்டு அவள் கைகளை தன் கைகளில் எடுத்து வைத்துக்கொண்டான்.
-----------------------------------------------------------------------

சப்பாத்தை மாற்றிவிட்டு மீண்டும் பஸ் தரிப்பிடம் வந்த சீலன், எதுக்கும் விமானம் வெள்ளன வந்தாலும் என எண்ணிக்கொண்டே இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் விமான நிலையம் சென்று காத்திருக்க ஆரம்பித்தான்.
நூற்றி இருபது நிமிடங்கள் நூறாகி ஐம்பதாகி முப்பதாக பிரயாணிகள் வெளியே வரும் பாதைக்கு அருகே சென்று கம்பிகளில் கையை வைத்தபடி வெளியே வருவோரைப் பார்க்கத் தொடங்கினான். அவனுக்கே தெரிந்ததுதான் நாட்டுக்குள் புதிதாக வரும் அவள் எப்படியும் வெளியே வர ஒரு மணி நேரமாவது செல்லும். ஆனாலும் காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கவே செய்கிறதுதான். இந்த ஐந்து ஆண்டுகளில் எப்படி இருப்பாள். அப்படியே தானோ என பலதும் நினைக்க முகம் சந்தோசத்தில் பூரித்தது. அவனறியாமலே சிரிப்பு எட்டிப் பார்க்க தனக்குள்ளேயே கூச்சப்பட்டவனாக அருகில் இருந்த கதிரையில் அமர்ந்து விழியை வழிமேல் வைத்துக் காத்திருந்தான்.

அதோ அவள்தான். அவன் முகம் அவளைக் கண்டதும் எப்படி மகிழ்வு கொண்டதோ அப்படியே அவள் முகமும் பிரகாசிக்க தூரத்திலேயே இவனைக் கண்ட மகிழ்வில் சிரித்தபடியே வந்து சீலன் என்று வாஞ்சையுடன் அவன் கைகளைப் பற்றினாள். பத்மகலா இவ்வளவு அழகியா? வெளிநாட்டுக் காற்று அவளை நன்கு பளபளப்பாக்கி என்ன அழகாக இருக்கிறாள் என மனதில் நினைத்தாலும் வெளியே சொல்லவில்லை. அவளைக் அணைக்க வேண்டும் என்று எழுந்த ஆவலைக் கட்டுப்படுத்தியபடி „பிரயாணம் எல்லாம் எப்பிடி' என்றன்.
'சீலன் நீங்கள் இப்ப எவ்வளவு வடிவாவிட்டியள். முகமும் நல்ல குளிர்மையா வந்திட்டுது' என்று பத்மகலா கூற, 'நீரும் தான்' என்று மட்டும் கூறிவிட்டு நிறுத்திக்கொண்டான். அவளைக் கண்டவுடன் அணைத்து முத்தமிடுவது பற்றி தான் எப்படியெல்லாம் கற்பனை செய்து வைத்திருந்தும் அவள் வந்தவுடன் ஏன் தன்னால் அப்படிச் செய்யமுடியாமல் போனது என்று மனதுள்ளே எண்ணியவன், அதுதான் தமிழ் பண்பாடு எனப் பெருமையாக உணர்ந்தான். வீட்டுக்குத் தானே வருகிறாள். அவளுக்கும் ஆசை இருக்கும் தானே. ஆசைதீர அணைப்போம் என எண்ணிக்கொண்டு அவளது சூட்கேசை இழுத்தபடிவாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினான். அவனின் பற்றிய கையை அவள் விடவில்லை.

வாசலை அண்மித்தபோது எதிரே கனகலிங்கம். சத்தியநாதன் வீட்டு பிறந்த தினத்தில் சந்தித்தவர். சீலனை சத்தியநாதனின் மகளுக்காக திருமணத்துக்குக் கேட்டவர் என அவனுக்கு ஞாபகம் வந்தது.
இவனும் அவரைப் பார்த்து „வணக்கம் அண்ணை' என்றான். அவரும் வணக்கம் சொல்லிவிட்டு „என்ன தம்பி இந்தப்பக்கம்' என்றவரின் பார்வை பத்மகலாவின் மேல் விழுந்தது. „இவதான் கலா நான் கலியாணம் செய்யப் போறவ'. „நீங்கள் எங்கே இந்தப் பக்கம்' எனக் கேட்க „எனது நண்பன் சிறிலங்கா போறான் அவனை விட வந்தனான். நீங்கள் ஆற்றேன் காரிலையோ .... „என அவர் இழுக்க, „இல்லை அண்ணை ரெயினில தான் போகப்போறம்' என்று சீலன் கூற, „என்னோட வாங்கோ நான் தனியாத்தான் போகப்போறன'; என்று கூறியபடி அவர் கார் தரிப்பிடம் நோக்கி நடக்கத் தொடங்கினார்.
முதலில் மறுப்போமா என எண்ணிய சீலன், சரி காரில் என்றால் கொஞ்சம் வேகமாகப் போகலாம். தானாகக் கேட்டவரை ஏன் மறுப்பான் என எண்ணிக்கொண்டு கலாவுடன் அவர் பின்னே நடந்தான். கார் டிக்கியைத் திறந்து கலாவின் சூட்கேசை வாங்கி வைத்தவர், „சீலன் நீங்களும் அவவுடன் பின்னுக்கு இருங்கோ' என்று சொல்ல நன்றியுடன் அவரைப் பார்த்துவிட்டுக் கலாவுடன் ஏறி நெருங்கி அமர்ந்தான். தனக்கும் கலாவுக்கும் சீற் பெல்டை மறக்காமல் போட்டுக் கொண்டான்.கனகலிங்கத்துக்குத் தெரியாதா இளசுகள் மனம் எப்படி என்று. அவரும் தனக்குள் சிரித்துக்கொண்டார்.

கார் விரைவுப் பாதையில் செல்லவாரம்பிக்க மழையும் சோவென ஆரம்பித்தது. புதிய இடத்தை வடிவாப் பார்ப்போம் என எண்ணிய கலாவுக்கு மழையின் வேகத்தில் கண்ணாடியின் பின் எதுவுமே தெரியாது தலையும் சுற்ற ஆரம்பிக்க, „தலை சுத்துது சீலன்' என்றாள். „மெதுவாக என்ர தோளிலை சாய்ந்து கொள்ளும் வாரும்' என்று உரிமையோடு அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான் சீலன். அவனுக்கு மட்டுமல்ல அவளுக்கும் அவனின் அணைப்பு நெகிழ்வைத் தந்தது. அனாலும் இன்னொருவரும் இருக்கிறார் என்னும் எண்ணம் இருவரையும் கட்டியும் போட, கண்களை மூடியபடி அவனின் தொடுகையில் கிளர்வு கொண்டு லயித்துப்போய் கிடந்தாள் கலா. அவனுக்கும் அவள் உணர்வு புரிந்திருக்க வேண்டும அவள் உச்சியில் அவசரமாக ஒரு முத்தம் பதித்துவிட்டு சூழ்நிலையை மாற்ற கனகலிங்கத்தாருடன் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான் சீலன். தோளில் வசதியாக சாய்ந்து கொள்வதற்கு சீற் பெல்ட் இடைஞ்சலாக இருக்க ஒருமாதிரி கைகளால் துலாவி அதை விடுவித்தபின் தான் அவளுக்கு நின்மதியாக இருந்தது.

----------------------------------------------------------------
கண் மூடிக் கருத்தழிந்து எந்தவித உணர்வுகளின் பிரதிபலிப்பும் இன்றி வைத்தியசாலையில் படுத்தபடுக்கையாகக் கிடக்கும் பத்மகலாவை வைத்தகண் வாங்காது பார்த்துக் கொண்டு இருந்தான் சீலன்.
அவளது அழகிய முகம் கருமைபடர்ந்து கண்கள் குழிவிழுந்து உயிருடன் இருக்கிறாள் என்பதற்;குச் சாட்சியாக சுவாசம் மட்டுமேயாக கடந்த மூன்று மாதங்களாக இதே நிலைதான்.அவளின் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தான். அவன் கண்களில் நிரம்பிய கண்ணீர் அணை உடைந்தது போல் தழும்பி அவள் நெற்றியில் உதிர, அவள் வழி அசைந்தது மூடிய இமைககளுக்குள். அவசரமாக நெற்றியில் விழுந்த கண்ணீரைத் துடைத்தான். குமுறி வரும் தனது அழுகையை தன்னிதழை உள்ளிழுத்து அடக்கினான்.
சீலனும் ஒவ்வொரு நாளும் வேலை முடிய ஆவலுடன் வந்து அவளைப் பார்ப்பதும் அவளுடன் பழைய கதைகள் சொல்லி தானே தனக்குள் சிரித்தபடி அழுவதுமாக. ஆனால் நம்பிக்கையை மட்டும் அவன் கைவிடவே இல்லை.
கனகலிங்கம் நன்றாகக் கார் ஓட்டக் கூடியவர். கன காலம் கார் வைத்திருக்கிறார். மழைக்குள்ளும் லாவகமாக அவர் கார் ஓட்டுவதை சீலன் பார்த்துக்கொண்டு இருந்தான். பிராங்க்பேர்ட்டிலிருந்து காகன் செல்ல இரண்டு மணிநேரம் செல்லும். யேர்மனியின் மற்றைய விரைவுப் பாதைகள் எல்லாம் நேரானவை இந்தப் பாதை மட்டும் தான் சீலன் ஒரே வளைவு எனச் சொல்லியபடி கனகலிங்கம் வீதியைப் பார்க்க, ஐயோ அண்ணை உந்த லொறி சிக்னல் போடாமல் எடுக்கிறான் என்று சீலன் கத்தியது மட்டும் தான் சீலனுக்கு நினைவில் இருந்தது.
கார் லொறியுடன் மோதி உருண்டு கேடர் ஒன்றுடன் அடிபட்டுத்தான் நின்றது. அதிக வாகனங்கள் இல்லாததால் இவர்கள் உயிர் தப்பியதாக பொலிஸ் கூறியதைக் கேட்டதும் சீலன் கடவுளுக்கு நன்றி சொன்னான்.
கனகலிங்கமும் சீலனும் சிறு காயங்களுடன் தப்ப, பெல்ட் போடாமல் இருந்ததனால் பத்மகலா அதிக பாதிப்புக்குள்ளாகி கோமா நிலைக்குப் போய்விட, இப்போதும் அனைத்தையும் மனக்கண்ணில் பார்த்தபடி பத்மகலாவுக்கு முன்னால் அமர்ந்திருக்கிறான் சீலன்.
நிட்சயாய் கலா எனக்காக எழுந்து வருவாள். அவளுக்காக நான் காத்திருப்பன் என எண்ணியபடி வீட்டுக்குச் செல்ல எழுந்தவனின் கைகளுள் கலாவின் கை அசைந்தது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

- ஒருவருட நெடுந்தொடரின் பயணம் நிறைவு பெறுகின்றது-

'விழுதல் என்பது எழுகையே' என்ற நெடுந்தொடரின் இறுதி நிறைவுப் பகுதி (4)

எழுதியவர்: திரு.நோர்வே நக்கீரா( திலீபன் திருச்செல்வம் ) நோர்வே

ஜேர்மனியின் சர்வதேச பிராங்பேட் விமான நிலையத்தில் விமானங்கள் மேலெழுவதும் தரையிறங்குவதுமாக பறந்து கொண்டிருக்கிறன.

விமானங்கள் பறப்பதை விட மக்கள் அதிவேகமாக அங்குமிங்குமாக ஓடுபாதையின்றி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சர்வதேசவிமான நிலையம் என்பதால் உலகமே அங்கு திரண்டிருந்தது. மக்கள் காலில் சிறகு கட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்கள்

தன்தேவதையை, இலங்கையில் விட்டுவிட்டு வந்த தேவதையை மீண்டும் ஜேர்மனியில் காணத்துடித்துக்கொண்டிருந்தான் சீலன்.

தாயை, தாய்நாட்டை, தங்கையை, தன் இதயராணி பத்மகலாவை விட்டு கடைசியாக அவன் இலங்கையில் விமானம் ஏறும் போது கண்டகாட்சிகள் மீண்டும் மீண்டும் மனத்திரையில் காணொளிகளாகக் கோலம் போட்டுக்கொண்டிருந்தன.

தன்னையே தொலைத்து வி;டுவாள் தாய். இனியெப்போ காண்போம் என்பதுபோல் தங்கை. வரம்புடைத்து கண்ணீர் முத்துக்கள் மாலையாக அசையா அணங்காக வைத்த கண்வாங்காது காதலில் கசிந்து கொண்டிருந்த பத்மகலாவின் முகம் காட்சிப்படிமமாக அவன் கண்களில் தீட்சண்யமாகத் துலங்குகிறது.

சீலன் அழைத்துவந்து நண்பன் ஓடிவந்தான்

'சீலா! விமானம் சொன்ன நேரத்துக்கு தரையிறங்கிவிட்டது. உன் பத்மகலா வந்துவிட்டாள். தேவதை வனத்தில் சீ...சீ வானத்தில் இருந்து பூமிக்கு வந்துவிட்டது'

துள்ளியது இதயம் அதை அள்ளியது ஆசை. எப்படி அவளை எதிர்கொள்வது? எப்படி அவள் இருப்பாள்? மாறியிருப்பாளோ? முழங்கால் முட்டி தட்டி நிற்கும் நீளமான கத்தையான கூந்தலைத் தாங்காது தள்ளாடும் துடியிடை துடிக்கும் அழகைக்காணத் தவித்தான், துடித்தான்.

அடந்த கார் மேகக் கூந்தலினுள் சந்திரவதனம் காதல் கணையெறிந்து கொல்லும் காட்சிகளை இதயம் தேடுகிறது. இக்காட்சிகள் அவன் நெஞ்சில் ஓடிக்கொண்டிருந்ததால் நண்பன் சொன்னது எதுவுமே அவனுக்குக் கேட்க வில்லை.

'டேய் நான் சொன்னதேதும் கேட்டதாடா. என்ன கற்பனையோ....நிஜமாகவே அவள் வந்திட்டாளடா' திடுக்கிட்டவன் தன்னைச் சுதாரகரித்துக் கொண்டு

'எங்கேயடா வந்திட்டாளா? எங்கே... எங்கே'

'அங்கே பார் கொம்பியூட்டர் என்ன சொல்லுது என்று பார்'

கடிகாரத்தையும், கணினியையும் மாறிமாறிப்பார்த்தவன் இப்போது தான் பூமிக்கு வந்தான்.

'ஆம் பத்மகலா லாணட்பண்ணிவிட்டாள். நான்தான் இன்னும் லாண்ட் பண்ணவில்லை'

'எப்படியும் 15நிமிடத்துக்கு மேலாவது செல்லும். எயப்போட்டுக்குள்ளேயே பெரிய தேசம் சுத்திவந்து பொதிகளை கிளியர் பண்ணிவர குறைந்தது 15நிமிடமாவது செல்லுமெல்லோ'.

'ம் ம்... அந்த அளவுக்கு எனக்குப் பொறுமையில்லை மச்சி'

'என்னடா வந்தவுடனை வன்புணர்வாயோ...?'

'நீ காதலித்துப் பிரிந்திருந்துபார் அதன் வேதனையும் வலியும் தெரியும்.

'ஆமாம் எங்களுக்குக் காதல் தெரியாது....நாங்கள் காதலிச்சுக் களட்டி விட்டுவிட்டு வந்தவங்கள். உன்னைமாதிரி இல்லை'

'அதோ பாரடா அங்கே பாரடா என் பத்மகாலா'.

தூரத்தில் கண்ணாடிகள் ஊடாக அவள் வருவதைக் கண்டுவிட்டான் சீலன். காற்றில் அலைந்த அந்த நீளக்கூந்தல் அவளை அடையாளம் காட்டியது. கனடா உணவு தடிக்குச்சியாக இருந்தவளை மெருகேற்றி யிருந்தது. சினிமாத்தாரகைகள் போல் சீலனின் தேவதை கண்ணாடிகளூடாக கண்விழித்தாள்.

உதயம் இதயத்தில் எழுந்து நின்று ஆடத்தொடங்கியது. இதயம் தொண்டை வரை துள்ளியது.

'மச்சி அவசரப்படாதை நீ கண்ணாடியை உடைத்துக் கொண்டு போக ஏலாது. எல்லாம் கிளியர் பண்ணிவர ரைம் எடுக்கும். ரிலாக்ஸ் மச்சி ரிலாக்ஸ்'

நண்பன் சீலனின் ஆர்வத்துக்கு அணைபோட்டு விடுகிறான்.

ஆக்கப்பொறுத்தவன் ஆறப்பொறுக்கமாட்டான் என்பது இதைத்தானோ? மீண்டும் காதலியின் நினைவில் மூழ்கத் தொடங்கிவிட்டான்.

கணங்கள் ஒவ்வொன்றும் கற்பனைகளாக விரிய நாடி, நாளங்கள் புடைப்பேறிச் சிலிர்க்க எப்படி... எப்படி அவளை எதிர்கொள்வது என்ற எண்ணம் மனதை ஆளத்தொடங்கியது. மீளமுடியாமல் தவித்தான். வெட்கமும் அவனை சிலவேளைகளில் வெருட்டிக் கொண்டிருந்தது.

நிமிடங்கள் 30தாண்டியும் அவளைக் காணவில்லை. பயங்கரவாதத்தடை பொலிஸ் பிரிவினர் அவளை அவளின் பொதிகளுடன் அழைத்துச் சொல்வதைத் தூரத்தே கண்டுவிடுகிறான். என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை.

தகவல் நிலையத்துக்கு ஓடினான். அங்கே போதிய தகவல்கள் கிடைக்கவில்லை.

அவள் என்ன பயங்கரவாதியா? யாராவது பொய்த் தகவல் கொடுத்தார்;களா? அவளின் பொதிகளில் ஏதாவது துப்பாக்கி, போதைவஸ்துப் போன்றன கண்டெடுக்கப்பட்டதா? உலகம் ஒருகணம் சுற்றிச் சிதறியது. தன் தலைவிதியை நொந்து கொண்டான்.

'மச்சி யோசிக்காதை எல்லாம் நல்லபடியாகவே முடியும்' நண்பன் சீலனைத் தேற்றிக் கொண்டான்.

'என் வாழ்க்கையில் எல்லாமே கைக்கெட்டியது வாய்க்;கெட்டா நிலைதான்'.

ஏதோ தீர்மானத்துக்கு வந்தவனாக தொலைபேசியை எடுத்து பத்மகலாவின் தோழிக்கு தொடர்பு கொண்டான். அவளும் தயங்கித்தயங்கியே,

'கலோ......' என்றாள்

'நான் சீலன் கதைக்கிறன். பத்மகாலாவை பயங்கரவாத்தடைப்பிரிவு பொலிஸ் அழைத்துப் போகிறது. ஏதாவது ஏறுக்குமாறாக கொண்டு வந்தாளா? அல்லது அவளின் பொதிக்குள் சட்டவிரோதிகள் எதையாவது வைத்து விட்டார்களா? பொலிஸ் எதற்கு அவளை.....' கொட்டித்தள்ளினான்

'சீலன் இங்கே பெரிய அல்லோல கல்லோலம் நடக்குது. பத்மகாலா ஜேர்மனிக்கு வந்தது அவளின் உறவினர் எவருக்கும் தெரியாது.

அவள் கனடாவில் இருந்து முழுமையாகவே லீவ் பண்ணிவிட்டாள். டிக்கெட் போட்டது, பயணமானது எதுவுமே என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அனைவரும் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்குமோ தெரியவில்லை. இனி அவள் கனடாவுக்குத் திரும்பும் நோக்கம் இல்லை. செத்தாலும் கெட்டாலும் உங்களுடன் வாழ்வது என முடிவெடுக்துக் கொண்டு வந்துவிட்டாள்'

'என்ன சொல்லுறீங்கள். கலா இங்கேயே தங்கப்போகிறாளா? அவள் படித்துமுடித்த டாக்டர் படிப்பு.. தொழில்? இதற்கான தயார்படுத்தல் ஒன்றையும் நான் செய்யவில்லையே.

என் இறுதிப்பரீட்சை முடிந்துவிட்டது ஒரேயடியாக வந்து கனடாவில் செற்ரிள் ஆகிறது என்று அல்லவோ நான் யோசித்துக் கொண்டிருக்கிறன். இவள் அதற்குள் எதுக்கோ முந்தின எதுவோ ஆக....? இதைப்பற்றி பேந்து யோசிக்காலாம். எதற்காக அவளைப் பொலிஸ் கொண்டு போகிறது என்று தெரியவில்லை. ஏதாவது ஐடியா இருக்கா பிளீஸ்?'

'சிலவேளை அவளின் உறவினர்கள் எதாவது தகவல் கொடுத்திருப்பார்களோ'

'இருக்காலாம்.....ஆம் இருக்காலாம்.....ஓகே நான் உங்களுடன் பின்னர் கதைக்கிறேன்' பேசிக்கொண்டிருக்கவோ யோசிக்கவோ நேரமின்றி தொலைபேசித் தொடர்பை வெட்டினான்.

பத்மாகலாவுக்கு மீண்டும் தொலைத்தொடர்பு கொண்டான் தொலைபேசி மூடியே கிடந்தது. செய்வதறியாது துடித்தான். அவள் வந்த விமானநிறுவத்திடம் ஓடிச்சென்றான்.

நாய்குட்டிபோல் அவன் நண்பனும் தொடர்ந்தான். எள்ளுக்காய்கிறது...எண்ணெய்க்காக, ஆனால் எலிப்புழுக்கை எதற்காக....நண்பனாகச் சேர்ந்த குற்றத்துக்காக.

வுpமானநிலையத் தகவல்படி பத்மகாலா வந்து இறங்கி பொதிகளையும் பெற்றுக்கொண்டாள். பொதிகளைப் பெற்ற பின்னரும் சந்தேகப்பட்டதால் பொலிஸ் அவர்களை அழைத்துச் சென்று விசாரிக்கும் நடைமுறையும் அங்கு உண்டு என்பதை அறிந்து கொண்டான்.

மீண்டும் கலாவுக்குத் தொலைபேச எடுத்தான் தொலைபேசி திறந்திருந்தது.

'கலோ சீலனா'

'ஆமாம் என்ன நடந்தது. எதற்காக பொலிஸ் அழைத்துப்போனது. நீ என்ன பண்ணினாய். நான் தனியனாய ; என்னாலை ஒன்றும் செய்ய முடியவில்லையடி. என்ன நடக்கிறது என்று சொல்லு'

'ஒன்றுக்கும் யோசிக்காதைங்கோ. இன்னும் ஐந்து நிமிடத்திலை வெளியிலை வருவன். என்னை ஒண்டும் பண்ண இயலாது. வீ ஆ றிவ்யூயி பட் நொட் கிறிமினல். (நாங்கள் அகதிகள் தான். சட்டவிரோதிகள் அல்ல. பயப்படாதைங்கோ நான் வைக்கிறன்'

ஏன் அதைமட்டும் ஆங்கிலத்தில் சொன்னாள் என்பது புரியாத புதிராகவே இருந்தது. ஓ... பொலிசார் விளங்கிக் கொள்ளட்டும் என்பதற்காகவோ???

அதிர்ந்து போனான் இது கலாவா? இரண்டு சொல்லுக் கதைக்கவே நாலு நிமிடம் எடுக்கும் அந்தக் கலாவா இவள்? பெண்களே புதிர்தான் என்றபடி தலையைச் சொறிந்து கொள்கிறான். கனடா இவளை எப்படி எல்லாம் மாற்றிவிட்டது.

'இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவாளாம்' நண்பனிடம் கூறியபடி வெளியேறும் வாசலுக்கு வருகிறான்.

அவளுடைய பெட்டி படுக்கையுடன் கூடிய பொதிகளை பொலிஸ்காரர்களும் சேர்ந்து இழுந்து வந்தார்கள். சீலனைக் கண்டதும் அந்த தோகை மயில் சிரித்தபடி சுரிதார் சிறகில் பறக்கத் தொடங்கியது.

இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைக்க ஓடினார்கள். ஆனால் நாலு மீற்றர் இடைவெளியில் ஏதோ எண்ணிக்கொண்டவர்கள் ஓட்டத்தை நிறுத்தி ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் நின்றனர்.

ஆம் ஐரோப்பிய வாழ்வுக்குப் பழக்கப்பட்ட காதலர்கள் கட்டிப்பிடிப்பதும் முத்தம் கொடுப்பதும் இங்கே இயற்கையானது.

இருந்தாலும் எம் தமிழ்க் கலாச்சாரம் இதயத்தில் வேரூன்றியதால் இதயக் கதவுகள் ஒருதடவை தட்டப்பட்டிருக்க வேண்டும். நாணம் நிலத்தில் கோலம்போட்டது. பாவையின் பார்வை அந்த லாசர்கண் காதலை கக்கியது. எதிர்கொள்ள முடியாதவன் தலைகுனிந்தான். மீண்டும் சுதாரித்துக் கொண்டு,

'காலா என்னை கலங்கப்பண்ணி விட்டாயடி.....' என்று ஆணின் பாணியில் கதையை எடுத்தான். அதற்கிடையில் அவளின் பொதியை இழுத்து வந்த பொலிசாரும் அருகில் வந்துவிட்டனர்.

'எல்லாவற்றையும் விபரமாக கதைக்கலாம். முதலில் வீட்டை போவம்.'

'எங்கே கனடாவுக்கா?'

'உங்களுக்கு இப்பவும் அந்த லொள்ளு போகேல்லை'

அருகே வந்த பொலிசார்ரிடம் பத்மகலா, 'இவர்தான் எனது காதலன். நாங்கள் இங்கே திருமணம் செய்யப்போகிறோம்' என ஆங்கிலத்தில் சீலனை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

இவ்வளவு நட்புடன் பொலிசார் நடப்பதைப் பார்த்தால் இலங்கையில் ஆச்சரியமாகவே இருக்கும். பொலிசைக் கண்டாலே வயிறு கலக்கும் காலத்தில் வெளிக்கிட்டவர்கள் இவர்கள்.

'ஸ்பிறேகன்சி டொச்' (நீ டொச் கதைப்பாயா)' எனப் பொலிசார் சீலனைப் பார்த்துக் கேட்டார்கள்

'யா (ஆம்)'

பொலிஸ் டொச் மொழியில் பத்மகலாவின் பிரச்சனையை சீலனுக்கு விளங்கப் படுத்தினார்கள். தமக்கு கனடாவில் இருந்து வந்த தொலைத்தொடர்பால் நாம் பத்மகலாவை விசாரணைக்கு உட்படுத்தினோம்.

இவள் ஒரு பயங்கரவாதி என்றும் போதை வஸ்துக்களுடன் யேர்மனிக்குள் நுழைகிறாள் என்றும் அனாமதேயச் செய்திகள் கிடைத்தன.

மேலும் இவள் நாடுகடத்தப்படுகிறாள் என்றும், உளவாளி என்றும் செய்திகள் கிடைத்தன. விசாரணையில் இவை அனைத்தும் சதி என்பது தெரியவருகிறது. உங்கள் திருமணவாழ்வு நலமாக அமைய வாழ்த்துக்கள் என்று பொதிகளை சீலனிடம் ஒப்படைத்துவிட்டு கைகளைக் காட்டிவிட்டுச் சென்றனர் பொலிசார்.

திருப்பிப்பார்த்தால் நண்பனைக் காணவில்லை. இனி இவன் பாவியைத் தடவ வேணுமா? என்றபடி திருப்பிப்பார்த்தால் பதுங்கிப் பதுங்கி கள்வனைப்போல் சீலனை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

' கலா ஓ அவனுக்கு விசா இல்லை. கள்ளமாக வேலை செய்து கொண்டு இருக்கிறான். மனைவி பிள்ளைகளுக்கு விசா இருக்கு இவனுக்கு இல்லை. சொல்கிற பொய்யை ஒழுங்காகச் சொல்லாததால் வந்த வினை'

நண்பனை அறிமுகம் செய்து வைத்துவிட்டு பொதிளை எடுத்துக் கொண்டு வந்த வானில் ஏற்றிப் புறப்பட்டனர்.

பத்மகலா அதிகம் பேசவே இல்லை. சீலனைப் பார்த்தபடி அவன் வாகனம் செலுத்தும் அழகை இரசித்த வண்ணம் இருந்தாள். இடைக்கிடை எட்டி அவன் தோள்களில் மறந்து போய் கையைப் போட்டவள் நண்பனைப் பார்த்துவிட்டு கையை எடுத்துக் கொள்வாள்.

சிவபூசைக்குள் கரடி மாதிரியாக பாவம் நண்பன். அவனும் தன்மனைவியிடம் கள்ளக்காதலன் போலவே போய் வருகிறான். அகதி விண்ணப்பத்தில் சொல்லுற பொய்களையும் சரியாகச் சொல்லாவிட்டாள் மனைவி கள்ளக்காதலிதான்.

சீலனின் வீடு வந்துவிட்டது பொதிகள் இறக்கப்பட்டு வீட்டுக்குள் அனுப்பப்பட்டுவிட்டன. தபால்பெட்டியைத் திறந்து கடிதங்களை எடுத்து வந்தவன் கலாவை மறந்தவனாக ஒரு முக்கிய கடிதத்தை உடைத்தான்.

கலாவுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. என்னை விட முக்கியமான கடிதமா? என எண்ணிக் கொண்டாள்

'கலா ரீ குடிக்கிறாயா சாப்பிடுகிறாயா?'

'ஒண்டும் வேண்டாம்'

'நீ இன்னும் மாறவே இல்லை. என்ன பிளைட்டில் (விமானத்தில்) ஏதாவது சாப்பிட்டாயோ'

'ஓம்...முதலிலை உந்தக்கடிதத்தில் என்ன இருக்கு என்று சொல்லுங்கோ' சீலனின் அவசரம் அவளின் ஆர்வத்தைத் தூண்டியது.

'இது எனக்கு வந்து கடிதம். உனக்க எதற்கு'
'இன்றில் இருந்து உனக்கு எனக்கு எண்டு ஒன்றும் கிடையாது. எல்லாம் எமதே'

'இவளிட்டைக ;கேட்டால் ஒன்றும் நடக்காது மச்சி மூன்று ரீ போடு. பிட்சா ஓடர் பண்ணியிருக்கிறன் அதுவும் வந்துவிடும்'

நண்பன் தேனீர்போட சீலன் கடிதத்தை உடைத்து வாசிக்கத் தொடங்கினான். கடித்தை தூக்கி எறிந்து விட்டு மகிழ்ச்சியில் கத்திக் கொண்டு கலாவை எட்டிக் கட்டிப்பிடிக்கப் பாய்ந்தான். அவள் விலத்திக் கொண்டாள்.

'இது எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு.......'

மௌனித்து நின்ற சீலனின் தலையை எட்டித் தடவி விட்டபடி

'உங்களின் மகிழ்ச்சியைக் கெடுத்துவிட்டேன் சொல்லுங்கள் அது என்ன செய்தி'

நாம தொட்டால் குற்றம் அவங்கள் தொட்டாக் குற்றமில்லையாக்கும் என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

'சொல்லுங்கள் சீலன். அதில் அப்படி என்ன செய்தி இருந்தது'

'நீ வந்த பலனடி நான் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளேன் வருகிற வெள்ளி பட்டமளிப்பு விழா. நீயும் என்னுடன் வரப்போகிறாய்' என்றபடி அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.

மகிழ்ச்சிக் களிப்பில் அவள் தானாகவே சீலனைத் தாவி அணைத்துக் கொண்டாள்;. நண்பன் மூன்று ரீயுடன் வெட்கப்பட்டபடி அவர்கள் அருகின் நின்றதைக் கண்டதும் சீலன்

'இதெல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு' என்றான்.

'ஓ அப்படியா' சீலனின் காதில் காற்றாக சொன்னாள்.

ரீ குடித்துக் கொண்டிருக்கும் போது பிட்சாவும் வந்தது மூவரும் ரீயையும் குடித்து பிட்சாவையும் சாப்பிட்ட பின் நண்பன் விடைபெற்றுக் கொண்டான்.

சீலன் வீட்டைச் சுற்றிக்காட்டினான். படுக்கை அறைக்கு வந்ததும்.

'இதுதான் எமது படுக்கை அறை' என்றான்
'எமதா? உமதா...எனதா?..... எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகுதான்'

'உனது எனது என்று எதுவும் இல்லை எல்லாமே எமது என்றாயே. உடனை மாற்றுகிறாயே விரட்டுகிறாயேடி'

'அதுவேறை இது வேறை முடியாததுக்கெல்லாம் முடிச்சுப்போடக்கூடாது'
சிரித்தபடி சீலன்

'நீ மேலை நான் கீழே'

கலாவும் சிரித்தபடி ' எல்லாம் இங்கே தலை கீழாக்கும்' என்றாள்.

'இல்லையடி கண்ணே நீ மேலை படுக்கிறாய் நான் நிலத்தில் கீழே படுக்கிறேன் என்றேன்'

'அதைத்தான் மேலை கீழை என்றீர்களோ பாவம் பால் குடிக்காத பூனை' என்றாள் கலா
'பெண்களின் வாயில் அம்பிட்டாள் சப்பித் துப்பிவிடுவார்கள்' என்றவன் பூராயம் விசாரிக்கத் தொடங்கினான்.

அன்று அவர்களுக்கு சிவராத்திரி அடுத்தநாள் சனிக்கிழமை என்பதால் பதட்டப்பட வேண்டியதில்லை.
-----------------------------------------------

நாட்கள் உருண்டது பட்டமளிப்பு விழாவுக்கு போவதற்கு முன்னர் கலாவும் சீலனும் எதைப்பற்றியோ கடுமையாகக் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

வாழ்க்கையின் முக்கியமான விடயங்கள் கதைக்கப்படுகின்றன என்பது மட்டும் புரியக்கூடியதாக இருக்கிறது. இறுதியில் அவள் இணங்குவது போல் தோன்றுகிறது. அவசர அவசரமாக வெளிக்கிட்டு மண்டபத்தை வந்தடைந்தனர்.

ஜேர்மன்மக்களால் நிறைந்திருந்த மண்டபம் விழாக்கோலம் பூண்டிருந்தது. சீலனின் பட்டமளிப்பு விழாவைப் பார்ப்பதற்காக வந்த நண்பர்கள், நண்பர்களின் குடும்பத்தினர் அனைவருக்குமாக இரண்டு வரிசைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

கலாவை தமிழர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினான் சீலன். சீலனுடன் பல்கலைக் கழகத்தில் படித்த பெண் ஆண்கள் அனைவரும் சீலனை வாழ்த்தினார்கள். அவர்களுக்கும் தன்காதலி எதிர்கால மனைவி என்று அவளை அறிமுகப்படுத்தினான்.

ஜேர்மனியப் பெண்கள் அவளையும் கன்னத்தில் கன்னம் வைத்து கொஞ்சிய பின் கலாவின் அழகை வர்ணித்தார்கள். அவனிள் நீள் கூந்தலை தொட்டு தடவிப்பார்த்து இரசித்தார்கள். சீலன் நீ கொடுத்து வைத்தவன் என்று நேராவும் சொல்லிக் கொண்டார்கள்.

பெண்கள் கன்னத்தில் கன்னம் வைத்து கட்டியணைப்பது வாழ்த்துவது இங்கு வழமையான விடயம். அப்படி ஜேர்மனியப் பெண்கள் சீலனைக் கொஞ்சுவது பத்மகலாவின் உணர்வுகளை உரசத்தான் செய்தது.

கனடா நாட்டில் இருந்து வந்தாலும் தன் காதலன் முழுமையாகத் தனக்கே என்ற உடமை உணர்வு பொறாமையாக வெளிப்படத் தொடங்கிறது.

சீலன் அதைக் கவனித்தும் கவனிக்காதது போல் தனது காதலியை தெரிந்த அனைவருக்கும் அறிமுகப்படுத்தினான். கலாவுக்கு அது பெருமையாக இருந்தாலும் யாராவது பெண்கள் சீலனை உற்றோ, குறுகுறு என்றோ பார்க்கிறார்களா? என்பதையும் கவனித்தாள். இது பெண்களுக்கு உரிய இயற்கையான குணம் இவளை மட்டும் விட்டுவிடுமா என்ன?
இவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பிரபல்யங்கள் இருக்கையில் அமர்ந்தவண்ணம் தனது பொறாமை மூட்டைகளை கொட்டத் தொடங்குகிறாள்

'அந்த வெள்ளைகாரப் பெட்டையள் எல்லாம் பாய்ந்து பாய்ந்து இறுகக்கட்டிப்பிடித்துக் கொஞ்சுதுகள் இவரும் சிரிச்சுக் கொண்டு கட்டிப்பிடிப்பாராக்கும்' பொருமிக் கொள்கிறாள்

'கலா இது மேற்குலகம் நாங்கள் கும்பிடுவது போல் இங்கே கக் பண்ணுவார்கள் கனடாவில் இருந்து வந்த உனக்கு இது கூடத் தெரியவில்லையா'

'அதுக்கு நான் ஒருத்தி காதலி பக்கத்திலை இருக்கிறன் எண்டு நீங்களாவது...'

'அடி.. நீ என்னடி சிறீலங்காவில் இருந்து வந்த பெண்கள் மாதிரி இருக்கிறாய்'

'என்ன மாதிரியானாலும் நான் சிறீலங்கா தமிழ்பெண் தான். இதை எந்தக்காலமும் மாத்த முடியாது. மாறவும் மாட்டன். இதுக்கெல்லாம் ஒரு முடிவு வரத்தானே போகுது' இரைந்து கொள்கிறாள்

விழா ஆரம்பமாகிறது. ஆட்டம் பாட்டும் கொண்டாட்டமாக மணிகள் ஓடத்தொடங்கியன. பட்டமளிக்கும் வேளை ஆரம்பமானது சீலனும் அழைக்கப்பட்டான். கறுப்புகோட்டு சூட்டுடன் அத்தனை பத்து ஜேர்மனிய மாணவர்களுடன் சீலன் சிரித்த முகத்துடன் நின்ற காட்சி பத்மகலாவை பெருமிதப்படுத்தியது.

வெள்ளை டாக்டர் உடையுடன் கழுத்தில் ரெதஸ்கோப்புடன் இருவதும் அன்று தம்மைப்பற்றிக் கண்ட கனவுகளை எண்ணிப்பார்க்கிறாள்.

சீலன் டாக்டராக வரக்கூடாது என்பதற்காக எத்தனை திட்டங்களைப் போட்டு என்னவனை இவ்வளவு நாடுகள் துரத்தி டாக்டர் எண்ணத்தை மறக்கடித்து இன்று இஞ்சினியராக்கி இருக்கிறது விதி. இதன் பின்னாலும் இறைவன் சூட்சுமம் என்னவோ?

பட்டமளிப்பு விழாக்களில் சில நிறுவனங்கள் தாமாகவே முன்வந்த திறமையாகச் சித்தியடைந்தவர்களை தெரிவு செய்து வேலை கொடுத்து உறுதிப்பத்திரமும் வழங்குவார்கள்.

சீலன் பகுதி நேரமாக வேலைசெய்யும் பி எம் டபிள்யூ கார் கொம்பனியும் வந்திருந்தது. பட்டமளிப்பு முடிந்தவுடன் அவர்கள் முன்வந்து தாம் யார் யாரை தெரிவு செய்திருக்கிறோம் என்பதை அறிவிப்பார்கள். பி எம் டபிள்யூ கொம்பனி சீலனைத் தெரிவு செய்திருந்தது.

சீலன் உரையாற்றும் நேரம் வந்தது. பத்மகலா பரபரப்பானாள். இனம் புரியாத தவிப்பு ஏக்கம் எதிர்பார்ப்பு என உணர்வுகளின் போராட்டம். அப்படி என்ன பேசப்போகிறான் இவள் எதற்காக இப்படி அரக்கப்பறக்கிறாள். சீலன் தனது உரையை நிதானமாக ஜேர்மன் மொழியில் தொடங்குகிறான்.

நான் ஈழத்தில் இருந்து வந்த ஏதிலி....அகதி. என் தாய்மண்ணில் என்னால் என்மக்களுடன் வாழமுடியாத துர்ப்பாகியசாலி. குண்டுகளுக்கும், தோட்டாக்களுக்கும் பயந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போக்கிடம் அற்று இறுதியில் நான் வந்தடைந்தது என்னைக் இருகரம் நீட்டி அழைத்த என் சின்னத்தாய் ஜேர்மனியிடந்தான்.

என் சின்னத்தாய் முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் எப்படியெல்லாம் காயப்பட்டாள் என்பதை அவள் உணர்ந்திருந்ததால் என் துயரையும் அவள் புரிந்துகொண்டாள்.

என் சின்னத் தாயான ஜேர்மன் நாட்டுக்கும் இந்நாட்டு மக்களுக்கும் நான் என் உயிருள்ளவரை நன்றியுணர்வுடன் இருக்கக் கடமைப்பட்டவன்.

கரகோசம் வானைப் பிளந்தது. கண்களில் கண்ணீர் ததும்பியது. பலர் எழுந்து நின்றே கைதட்டினார்கள். சீலன் தொடர்ந்தான்.........

என்னை இவ்வளவு காலமும் மெக்கானிக்காக வேலை செய்யவும், பின் என்னை நிரந்த பொறியியலாளனாக ஏற்ற பி எம் டபிள்யூ கொம்பனிக்கு என் நன்றிகளைத் தெரிவிப்பதுடன் என்னால் உங்கள் கொம்பனியில் தொடர்ந்து வேலை செய்யமுடியாத நிலையில் உள்ளேன் என்பதை மிகக் கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சபை ஒருகணம் அமைதியானது.

வேலை எடுப்பதே எட்டாப்பழமாக உள்ளபோது கிடைத்த பெரிய வேலையையே உதறித் தள்ளுகிறானே இந்த மடைப்பயல் என்று எண்ணினார்;களோ என்னவோ? இவன் என்ன பைத்தியமா? என்று வினாவுவது போல் ஆச்சரியத்துடன் காத்திருந்தனர்.

கொம்பனி முதலாளியின் முகத்தில் ஈ கூட ஆடவில்லை. ஆச்சரியமும் வேதனையும் எதிர்பார்ப்பும் நிறைந்த முகத்துடன் அமர்ந்திருந்தார், சீலன் தொடர்ந்தான்........

என் உடல், பொருள், ஆவி அனைத்தும் என் தாய்க்குச் சொந்தமானது. என்தாய் நாட்டுக்குச் சொந்தமானது. கற்றகல்வி, பெற்ற செல்வம், என் வியர்வை, இரத்தம் அனைத்தும் என்மண்ணைச் சேரவேண்டியது. நாம் குழந்தையாக இருந்தபோது தொட்டு நக்கியது எம் மண்ணைத்தான்.

இது இன்றும் என்னுடலில் உதிரமாக உள்ளத்தில் உணர்வுடன் உறைந்து கிடக்கிறது. இந்த ஜேர்மன் நாடு எனக்குக் கற்றுத் தந்தவற்றை நினைவுபடுத்துகிறேன்.

முதலாவது உலகயுத்தத்தில் ஜேர்மன் மீது அதியுயர் போர்க் குற்றவரி விதிக்கப்பட்டு வறுமையில் அல்லாடியபோது இவர்கள் நாட்டை விட்டு ஓடியிருந்தால் இன்று ஜேர்மன் என்ற ஒரு வல்லரசை உலகம் கண்டிருக்காது. நாம் ஜேருமனியர்கள் என்று பெருமைப்பட ஒருபிடி மண் இருந்திருக்காது. கிட்லர் என்ற ஒரு தனிமனிதனால் இரண்டாவது உலகயுத்தம் முடிந்தபின்னரும் இந்நாடு வெறுக்கப்பட்டது. இதையே நான் எனது நாட்டுடன் இணைத்துப் பார்க்கிறேன். தவறுகள் செய்யா மனிதர்களும் இல்லை சமூகங்களும் இல்லை. மீள எழுவோம்...மீண்டு வருவோம்.

என் மண், மரங்கள், நிலவு,சூரியன், ஆடு மாடு கோழி எவையுமே போருக்குப்பயந்து நாட்டை விட்டு ஓடவில்லை.

மரங்கள் கூட என் மண்ணைப் பற்றிக்கொண்டு இன்றும் நிற்கிறன. ஒரு சின்னச்செடிக்கு மண்மேல் உள்ள பற்று எமக்கு இல்லை என்றால் எப்படி?.

ஏன் மண் என்று பெருமைப்படும் நான் போருக்குப் பயந்து கோழையாக என்மக்களைப் பிரிந்து, ஏதிலியாக எத்தனை ஐரோப்பிய மண்ணில் பிச்சை எடுத்தேன்.

 

என்று என் மண்ணை விட்டு நீங்கினோமோ அன்றிலிருந்து நாம் அன்னியர்தான். எம்மண்ணுக்கும் அந்நியர்கள். உலக மக்களுக்கும் அன்னியர்கள். இன்று நாம் உணர்வுகளால், உள்ளத்தால், கலாசாரத்தால் எம்பிள்ளைகளிடம் இருந்தும் அன்னியப்பட்டே நிற்கிறோம்.

நான் இந்தப் பெருமேடையில் பி எம் டபியூ கொம்பனியிடம் அன்பாக வேண்டிக் கொள்வது இதுதான். எமது நாடு விவசாயநாடு. உலகத்துக்கே உணவளிக்கும் வளம்கொண்ட நாடு. அங்கே அது கண்ணி வெடிகள் விதைக்கப்பட்டு, கந்தக்காற்றால் நிரப்பப்பட்டும் கிடக்கிறது.

என் தாய் நிலம் அன்னியன் காலடியில் இறுதி மூச்சுக்காகச் சேடம் இழுத்துக் கொண்டிருக்கிறது. அவளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு.

எமக்கு உங்கள் கொம்பனி போன்ற பெரிய கொம்பனிகளின் உதவி தேவை. எனது திட்டப்படி மலிவான விலையில் உழவு இயந்திரங்களையும், முச்சக்கரவண்டிகளையும் அங்கேயே தயாரித்து மலிந்த விலையில் விற்பனை செய்வதுடன், மேலதிகமான தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யவும் விரும்புகிறேன்.

உங்கள் உதவியுடன், உங்கள் பெயரில், தொழிற்சாலைகளை நான் உருவாக்க விரும்புகிறேன். அதற்கான அனுமதியையும் உதவியையும் தந்துதவ ஆவன செய்வீர்களா?

கொம்பனி முதலாளி தனிய எழுந்து நின்று அவனை ஆமதிப்பதுபோல தன் கைகளை உயர்த்தி தட்டினார்.

அவரைத் தொடர்ந்து அனைவரும் எழுத்து நின்று கைகளைத் தட்டினார்கள். சீலன் பத்மகாலாவை அடிக்கடி பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தான். அவள் கண்கலங்கி பூரித்துப்போய் இருந்தாள். கைக்குட்டை கண்ணீர் குட்டையானது.

நான் எனது நெடுநாள் காதலியும் என் எதிர்கால மனைவியுமான டாக்டர் பத்மகலாவை மேடைக்கு அழைக்கிறேன்.

என்றபடி தமிழில் அவளை வருமாறு அழைத்தாள். அவளும் தன்னை அழகாக அலங்கரித்து சொர்க்கத்துத் தேவதைபோல் மேடைநோக்கிப் பறந்து கொண்டிருந்தாள். மேடையில் நிற்கும் போது சோடிப் பொருத்தும் பிரமாதமாகவே இருந்தது.

எம்மிருவருடைய கனவும், கற்பனையும் டாக்டராகி எம்மக்களைப் காத்து, உதவவேண்டும் என்றே எண்ணினோம். விதி என்னை விரட்டி விரட்டி பொறியிலாளன் ஆக்கியது.

இந்த மேடையில் என் சின்னம்மா நிலத்தில் என் ஜேர்மனியச் சகோதரங்களின் முன்னிலையில் எனது காதலியான என் பத்மகலாவை என் மனைவியா வரிந்து நாம் மோதிரத்தை மாற்றிக் கொள்கிறோம்.

அவர்கள் மோதிரத்தை மாற்றும்போது சபை எழுந்து நின்ற வாழ்த்தியது. சிலர் யேர்மனிய தேசியகீதத்தை பாடுவது கேட்கிறது.

ஆம் ஒருதேசிய உணர்வு இன்னொரு தேசியத்தைத் தட்டி எழுப்புகிறது. பத்மகலா தாவிப் பாய்ந்து கட்டியணைத்து அவன் கன்னங்களின் முத்தமாரி பொழிந்தாள். ஆம்...அந்தத் தமிழ் தந்த நாணம் எங்கே போனது? முத்தங்களை ஏற்றுக்கொண்டவன் மெதுவாக அவள் காதுகளில் ' இதுகள் எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு' என்றான்.

அவள் அவன் காதில் கடித்து ஜேர்மன் பெட்டைகள் கட்டிப்பிடித்துக் கொஞ்சினால் மட்டும் ஏற்றுக் கொள்வீர்களோ என்று காதுள் கிசுகிசுத்தாள்.

சீலன் தற்போது தன் துணைவியின் கரங்களைப் பற்றியபடி மீண்டும் பேச ஆரம்பித்தான். திரைகடலோயும் திரவியம் தேடு என்றார்கள் நாம் திரவியம் மட்டுமல்ல கல்விச் சொல்வத்தையும் பெற்று அறிவு வளங்களை எம்நாட்டுக்குக் கொண்டு செல்கிறோம்.

நான் வெறும் டாக்டராக படித்து முடித்திருந்தால் மற்றைய டாக்கர்கள் போல் யாரோ ஒருவருக்குக் கீழ் வேலை செய்பவனாக இருப்பேன்.

ஆனால் நான் என்மக்களுக்கு வேலை வாய்பையும், வாழ்வாதாரத்தையும், சுயதொழிலையும் கொடுக்க விரும்புகிறேன். சுயதொழிலுக்கு ஊக்குவிக்க விளைகிறேன்.

என்மக்களை தன் காலில் தன்னிறைவுடன் நிற்கும் மனிதர்களாக்க விரும்புகிறேன். இந்தப்பலத்தையும் மனவுறுதியையும் தந்தது நான் அடிபட்டு மிதிபட்டு எழுந்த இந்த அகதி வாழ்க்கைதான்.

நாம் ஏதிலிகள் அல்ல உலகிற்கே முதன் முதலில் நாகரீகத்தைக் கற்றுத்தந்தவர்கள். மானத்தை மறைக்க பருத்தி பயிரிட்டு நூல் நூற்று ஆடை பின்னியவர்கள். முதன் முதலில் மரவுரி களைந்தவர்களும் தமிழர்களே என்பதை இங்கே அடக்கத்துடன் சொல்வதில் பெருமை கொள்கிறேன்.

எனது என்மனைவியின் அறிவும் எம்மக்களுக்கே பயன்படும். அங்கே மருத்துவ நிலையங்களை நிறுவி எம்மக்களுக்கு இலவசமாக அல்லது மிகக் குறைந்த செலவில் வைத்தியம் செய்ய விரும்புகிறோம்.

அன்று முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் நாடு நாடாக, ஊர் ஊராக, குருதியும் கண்ணீருமாக தெருத் தெருவாகக் கத்தினோம் எங்களைக் காப்பாற்றுங்கள், எம்மக்களை மீட்டுத்தாருங்கள் என்று.

எமது குரல்கள் எந்த ஐரோப்பிய, அமெரிக்க ஏன் ....? உலகநாடுகளின் செவிப்பறைகளைத் தட்டவே இல்லை. நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது வல்லவர்களாக, எமது மூதாதையரின் மரபணுக்களை உயிர்ப்பித்து திறமைசாலிகளாக, கல்வி கேள்விகளில் வல்லவர்களாக, பொருளாதார நிறைவுள்ளவர்களாக நாம் நிமிரும் போது எங்கள் சிணுங்கல்கள் கூட உலகின் செவிப்பறைகளில் வெடித்துச் சிதறும்.

நான் வல்வவர்களாக நிமிரும் வரை எனது எமது போராட்டம் தொடரும். இதுவும் ஒரு தன்நிறைவுப் போரே. எமது குரல்கள் நாளை ஓங்கி ஒலிக்கும். எமக்கு என் சின்னம்மா தேசத்தின், என் ஜேர்மனியச் சகோதரர்களின் உதவியும், ஆசியும், வாழ்த்துக்களுடனும் நாம் நிமிர்வோம்.

எதிர்வரும் புதன்கிழமை நான் என் சின்னம்மா மண்ணில் என்காதலியைப் பதிவுத் திருமணம் செய்தபின், வரும் வெள்ளியன்று காலை 10மணிக்கு நாடு திருப்புகிறோம்.

எமது திருமணம் எம் தாய் மண்ணில், என் தாய் முன்பாக நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக் கொண்டு என்னுரையை முடிக்கிறேன்.

அன்றைய விழாவின் கதாநாயகனாக சீலனே இருந்தான். அன்று சீலனைப்பற்றி பேச்சுக்களே அதிகமாக இருந்தது. தமிழர்கள் பலர் ஏன் தம்பி இப்படி ஒரு முடிவை எடுத்தீர்கள்? என்றும் விசனப்பட்டுக் கொண்டனர்.
--------------------------------------------

வெள்ளிக்கிழமை சீலன் பத்மகலா இருவதும் நாட்டுக்குப் பயணமாகிறார்கள் அவர்களை அனுப்ப சீலனின் நண்பர்கள், பாடசாலை மாணவர்கள், பேராசிரியர்கள் கூடிவிட்டார்கள். பிஎம்டபிளயூ நிறுவனத்து முதலாளி சீலனை அழைத்து

'நான் எனது பெரிய தலைமையகத்துடன் கதைத்து உனக்குத் தேவையான பொருள்கள் பணம், அனைத்து உதவிகளையும் எமது கொம்பனியூடாகச் செய்துள்ளேன்.

நீ எத்தனை நிறுவனத்தையும் அங்கே நிறுவி நடத்தும் பொறுப்பையும் உன்னிடம் ஒப்படைக்கிறோம். நான் முதலிடும் பணமானது மூன்றாம் உலக நாடுகளுக்கு வழங்கும் உதவி நிதியாகக் கருதுகிறோம்.

அவற்றை நாம் திருப்பி எதிர்பார்க்கவில்லை. ஆனால் நீ எமது நிறுவனத்தின் நிரந்தர தலைமைப் பொறியலாளன் என்பதை எழுத்து மூலமாக உறுதி செய்யவேண்டும்.'

சீலனும் தலையசைத்துக் கொண்டான். பத்திரங்கள் கைச்சாத்திடப்பட்டு கைமாறிக்கொண்டன. பறப்புக்கான நேரம் சரியாக இருந்தது.

அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு பத்மகலாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் துணையாக விமானத்தை நோக்கி நடக்கிறார்கள்.

கருவுற்ற நட்பின் கண்கள் கலங்கி நின்றன. விமானத்தினுள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் ஜேர்மன் மண்ணை தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறான். அவனது மனம்
'எனக்கு அடைக்கலம் தந்து போற்றிக் காத்தவளே உன்னை நான் என்று நேசிக்கிறேன்.' என்றது

பரந்து விரிந்து நிற்கும் அந்த பிரமாண்டமான பிராங்பேட் விமான நிலையம் வெறிச்சோடிக்கிடந்தது போல் இருந்தது.

என்னை இவ்வளவுகாலமும் வைத்துக் காத்து கல்விமானாக்கிய என் தாயே நான் மீண்டும் உன்னை மடியை மிதிப்பேனா? தெரியாது. நான் எங்கு வாழ்ந்தாலும் நானும் உன்பிள்ளைதான்' என்று மனம் துடித்துக் கொள்கிறது.

விமானத்தில் காலடி எழுத்து வைக்கும் போது கூட அந்த ஜேர்மன் மண்ணையும் விமான நிலையத்தையும் திரும்பத் திரும்பப் பார்க்கிறான். நன்றி கண்களால் உப்பு உவர்ப்புடன் வழிந்து கொண்டிருந்தது.

எம் நாட்டுச் சிட்டுக்கள் இரண்டு சோடியாக அலுமீனியப் பறவையின் வயிற்றினுள் புகுந்து பதுங்கிக் கொண்டன.

புலம்பெயர் தமிழர்களின் மனங்களில் ஓடி, உதைத்து எழுந்தது விமானம் அண்டவெளியில், நாம் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில், எம் கண்ணுக்கெட்டா தூரத்தில், பறக்கத் தொடங்கி விட்டனர்;. புலத்துத்தமிழர்;களாகிய நாம் நிலத்தில் நின்றபடி அகதிகள், அன்னியர்கள், வந்தேறிகள், நிலமற்றவர்;கள், ஏதிலியாக வந்தவர்கள் என்ற அடையாளப் பெயருடன் அவர்களை அண்ணாந்தே பார்க்கிறோம்.

எங்கள் கண்ணுக்கெட்டாத் தூரம் வரை, எங்கள் கண்களில் இருந்து வானத்தில் விமானம் மறைந்து கொள்கிறது. தம் ஆத்மாவில் இருந்து ஒருபகுதி பிரிந்துபோன உணர்வுகளுடன், தூக்கிய கைகளை இறக்காது, வைத்த கண்வாங்காது சீலனும் பத்மகலாவும் பறந்தபாதையிலே வழியனுப்பவந்த நண்பர்களுடன் நாங்களும்....!!!

Link to comment
Share on other sites

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழுதல் என்பது எழுகையே ஒரு பெரும் எழுத்தாளர் குழுமமாகக் கதையெழுதியமை பாராட்டிற்குரியது. இந்த நெடுந்தொடரில் புலம்பெயரும்போது ஏற்படும் அவலங்கள் இன்னல்கள் இழப்புகள் என்று பதிவாகியுள்ளவை பலரது அனுபவங்கள் என்பதே உண்மை.  நதியைக் கடக்கும் அனுபவம் ஒரு உயிர் திரும்புதலே. கோடை தொடங்கிய காலமொன்றில் ஒரு ஆற்றைக் கடந்த அனுபவம். எவளவு துன்பத்தைத் தமிழினம் அகதியாவதற்கு இன்றுவரை  அனுபவிக்கின்றது என்பது வேதனை. இந்த நெடுந்தொடர் புத்தகமாகித் தமிழில் மட்டுமன்றி யேர்மன் ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் வருவது புலம்பெயர் வளரிளம் தமிழருக்கு எமது கதைகளின் சில பகுதிகளையாவது அறிய வாய்ப்பாக இருக்கும். 

நிறைவுப்பகுதி நான்குவிதமாக இருந்தாலும் ஒன்றையொன்று ஆங்காங்கே வெட்டியும் நெருங்கியும் நகர்கிறது. அதிலும் நோர்வே நக்கீரா தேசியத்தின் எதிர்பார்பின் உந்துதலை  ஏக்கத்தை பதிவுசெய்தள்ளமை பொருந்திப் போகிறது. அங்கே சீலனின் உரை சிறப்பு. அகதியாக வந்த இருவர் தமது இலக்குகளை தொட்டபோதும் தேசத்திற்கான கடமை குறித்த சிந்தனை என்றதொரு முடிவு . புலத்திலே நாற்றாய் நிமிரும் வளரிளம் தமிழரது சிந்தனையும் இப்படி அமையுமா?  

திருமதி.தேனம்மை லக்ஸ்மணன் அவர்களது முடிவும் புரட்சிகரமானது. பெண்ணியம்  மீதான அக்கறை என்று ஒரு சிறந்த முடிவாகவேயுள்ளது.  

60கிலோமீற்றர் நீளமேயுடைய 65ஆம் இலக்க நெடுஞ்சாலையும் இந்தக் கதையிலே  வருகிறது.   திரு பசுந்தரா சசி  அவர்கள் யேர்மனியில் இருந்தவர்போல் இருக்கிறது. அவரது நிறைவுப்பகுதி இன்னொரு வடிவுக்கரசி போல் ஒரு அக்கா உதவும் உள்ளங்கள்திருமணத்தில்  அணிவகுப்பு என்று பல்வேறு விடயங்களை ஒரு எதிர்பார்ப்போடு நகர்த்துகின்றார். திருமதி.நிவேதா உதயராயன்அவர்களின் நிறைவுப் பகுதியும் ஒரு பரபரப்பான நிலைக்குள் அழைத்துச் சென்று முடிகிறது. 


எல்லோருக்கும் தனித்துவமான முடிவுகளானபோதும் அவை ஒவ்வொருவிதமான செய்திகளை சொல்வதில் பின்னிற்கவில்லை.

அவை விழுதல் என்பது எழுதல் என்பதற்காக என்பதை புலம்பெயர்வு  காதல் பிரிவு தேடல் சோகம் சேர்தல் நகர்தல் என்று எல்லோரும்  இணைந்து நகர்த்தி வந்தமை நன்று. அனைத்து எழுத்தாளர்களுக்கும் பாராட்டுகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை நூலாக வெளியிடத் தயார் செய்கிறோம். அதில் சிலப்பகுதிகளை எடுக்கவே நான் மேலே கொண்டுவந்தேன்.நன்றி நொச்சி வாசித்துக் கருத்திட்டமைக்கு. இதுபோல் யாழ் உறவுகளும் சேர்ந்து தொடர் ஒன்றை எழுதியிருந்தோம். அதையும் நூலாக்க வேண்டும். அதற்கு இன்னும் காலம் வரவில்லை.

இதில் நிவேதா உதயராயன் என்பது நான் தான் நொச்சி 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.