Jump to content

Recommended Posts

எங்க பாத்தாலும் சனம் சூடாத்தான் நிக்கினம். இதைப்பாத்தாவது சிரிக்கினமோ பாப்பம் :D

"நம்ம பக்கத்து வீட்டு கஞ்சன்கிட்ட 100 ரூபா கடன் கேட்டேன்.. இல்லைன்னுட்டான்"

"அப்புறம் என்ன செஞ்சீங்க?"

"நம்ம பெட்டியிலிருந்துதான் எடுத்து செலவு செஞ்சேன்."

- சந்தியூர் கோவிந்தன்

--------------------------------------------------------------------------------

பேங்க் மேனேஜர்: ஏன் ஜன்னலில் தொங்கும் திரையை கழற்றுகிறாய்?

பியூன்: 'விண்டோ டிரஸ்ஸிங்' பண்ணக் கூடாது என்று சர்க்குலர் வந்திருக்கே சார்.

- எஸ்.மோகன்

--------------------------------------------------------------------------------

"ராத்திரி ரொம்ப நேரம் காலிங்பெல்லை அழுத்தினேனே? திருடன்னு பயந்து கதவைத் திறக்கலியா?

"நீங்கன்னு தெரிஞ்சுதான் திறக்கல."

- அ.நாகராஜன்

--------------------------------------------------------------------------------

"கண் இல்லாத கபோதிம்மா!.. தர்மம் பண்ணுங்க!"

"நாளைக்கு வாப்பா!"

"நாளைக்கு ஊமையாதான் வருவேன். பரவாயில்லையா?"

- என்.கிருஷ்ணன்

--------------------------------------------------------------------------------

"பால்காரர் வந்துட்டுப் போயிட்டாரா அத்தே?"

"படுக்கையில இருந்து எழுந்து வாம்மா... தபால்காரரே வந்தாச்சு!"

- அ.நாகராஜன்

--------------------------------------------------------------------------------

"கிளாஸ்லே ஒரு பையனை மரமண்டைன்னு திட்டினீங்களா சார்!"

"ஆமாம். என்ன ஆச்சு?"

"அவங்கப்பா வந்திருக்காரு. அது என்ன மரம்? டீக் வுட்டா? ரோஸ் வுட்டா? நாட்டு மரமான்னு உங்களையே பார்த்துச் சொல்லிடச் சொல்றாரு!"

- பர்வதவர்த்தினி

--------------------------------------------------------------------------------

'பெண்: நேற்றுதான் என் கையால் அடி வாங்கினீர்கள். இன்று மறுபடியும் வருகிறீர்களே?

ஆண்: அடிக்கிற கைதான் அணைக்கும் என்பார்களே!

--------------------------------------------------------------------------------

"ஏன் வெளிமாநிலக் காதலர்கள் எல்லாம் இங்கே வருகிறார்கள்?"

"தமிழ்நாடு ஒரு அமைதிப் பூங்காவாமே"

- எஸ்.மோகன்

--------------------------------------------------------------------------------

அடிச்சாலும் புடிச்சாலும் அவன்தான் புருசன்னு என் சம்சாரம் அடிக்கடி சொல்றா!"

"சும்மா அவகிட்ட அடிவாங்கிட்டு நின்னா வேற எப்படிச் சொல்வா!"

- பர்வதவர்த்தினி

--------------------------------------------------------------------------------

அப்பா: பீச்சில் ஒரு ஆளுடன் சுண்டல் சாப்பிடுகிறாயாமே.. இது நல்லா இருக்கா?

மகள்: சிலநேரம் ரொம்ப காரமா இருக்கு அப்பா..

--------------------------------------------------------------------------------

பெண் 1: என் மருமகள் கோயில் சிலை மாதிரி இருப்பாள்.

பெண் 2: அவ்வளவு அழகா?

பெண் 1: அவ்வளவு கறுப்பு.

- எஸ்.மோகன்

--------------------------------------------------------------------------------

"வேலைக்காரியை விட்டுத் தெருவுல கோலம் போடச் சொல்லாதே"

"ஏங்க?"

"நாலு மாசமா சம்பளம் பாக்கின்னு கோலத்தைச் சுத்தி எழுதி வெச்சிருக்கா!"

- என். கிருஷ்ணன்

--------------------------------------------------------------------------------

பேஷண்ட்: "நர்ஸ் நளினாவை நான் ரொம்ப விரும்பறேன் டாக்டர்!"

டாக்டர்: "உங்களுக்கு இருக்கிற நோய்கள் பத்தாதா இது வேறயா? இனி உங்களை கடவுள் நினைச்சாலும் காப்பாத்த முடியாது!"

--------------------------------------------------------------------------------

வந்த பெண்: "பச்சை காய்கறிகள் சாப்பிடணும்னு என் கணவர்கிட்ட சொன்னீங்களா டாக்டர்?

டாக்டர்: "ஆமா, அதனாலென்ன?"

வந்த பெண்: "முள்ளங்கி, காரட்டுக்கெல்லாம் பச்சை பெயிண்ட் அடிச்சிட்டு சாப்பிடறாரு".

-கமுதி எஸ்.சேதுராமன்

--------------------------------------------------------------------------------

அவர்: "அந்த 'மெகா சீரியலுக்கு' திடீர்னு மௌசு கூடிருச்சு!"

இவர்: "எப்படி?"

அவர்: 'கண்ணீருக்கு நாங்க கியாரண்டி'ன்னு, உத்திரவாதம் அளிச்சிருக்காங்களே?"

- அ. சுஹைல் ரஹ்மான்

--------------------------------------------------------------------------------

"உங்க கணவருக்கு ஞாபக மறதி வியாதி எவ்வளவு நாளா இருக்கு?"

"ஞாபகமில்லை டாக்டர்!"

- பா.ஜெயக்குமார்

--------------------------------------------------------------------------------

பேய் 1: "என்னை ஏன் வீட்டுக்குள்ளே போகச் சொல்றே...?"

பேய் 2: "மனுசங்க உலா வர நேரமாயிட்டதனாலேதான்!"

-விசாலாட்சி

--------------------------------------------------------------------------------

டாக்டர்: "நான் கொடுக்கிற மருந்து மாத்திரைகளாலே சைடு எஃபெக்ட் ஏற்படுதுனு சொல்றாங்களேனு நினைச்சு இசையால பேஷண்ட்களை குணப்படுத்தலாம்னு ஆரம்பிச்சேன்!"

வந்தவர்: "ஏன் என்னாச்சு?"

டாக்டர்: "என் இசையைக் கேட்டு சைடு எஃபெக்ட்டா காது வலி வருதுன்னு சொல்றாங்களே!"

- எஸ்.சேதுராமன்

--------------------------------------------------------------------------------

"ஜன்னலுக்கு புதுசா நெட்லான் போட்டிருக்கியா?"

"கேலி பண்ணாதீங்க. அது ஒட்டடை!"

- அ.நாகராஜன்

--------------------------------------------------------------------------------

ஒருவர்: "என்னது... ஆகாயத்துல இருக்கிற மேகங்களுக்குப் பாதுகாப்பா?"

மற்றவர்: "ஆமாம். மேகத்துல இருக்கிற தண்ணியை கடத்தப்போறதா சி.பி.ஐ.க்குத் தகவல் வந்திருக்காம்."

ஒருவர்: ?!...?!...?!...

- ஜீ.வி.சுபாஷ்

--------------------------------------------------------------------------------

அம்பலம்.கொம்

Link to comment
Share on other sites

"யார்டா உன்னை அடித்தது...?"

"மூக்கில்லாதவன்"

"என்னது மூக்கில்லாதவனா?"

"ஆமாம், அவன் என்னை அடித்ததால் அவன் மூக்கை கடித்து துப்பி விட்டேன்..."

--------------------------------------------------------------------------------

"என்னங்க என்னோட படத்தைப் பார்த்து விமர்சனம் பண்ணுங்கன்னு சொன்னா, பாதியில தூங்கறீங்க...."

"இது என்னோட விமர்சனம். தூக்கமில்லை."

"......!?......!?.......1?"

--------------------------------------------------------------------------------

"எங்க அம்மா தொடர்ந்து சித்தி பார்த்துக்கிட்டே எதையும் கண்டுக்காம இருந்தாங்க. எங்கப்பாவுக்கு கோபம் வந்திடுச்சு"

"அப்புறம்?"

"நாங்க பார்க்கறதுக்கு புது சித்தியை கூட்டிகிட்டு வந்துட்டார்."

- இரா.கமலக்கண்ணன்

--------------------------------------------------------------------------------

அவள்: "உங்க பையன் வேலைக்கு உதவியா கராத்தே-குங்ஃபூ கத்துக்கிறானா? ஏன்?

இவள்: "என் பையன் பத்திரிகைல வேலை செய்யறானே!"

- அ. சுஹைல் ரஹ்மான்

--------------------------------------------------------------------------------

"உங்களுக்கு நான் செய்யக்கூடிய எல்லா வைத்தியமும் செய்துட்டேன். இனிமே கடவுள்தான் காப்பாத்தணும்."

"அவருக்கு எவ்வளவு கன்சல்டிங் பீஸ் தரணும் டாக்டர்?"

--------------------------------------------------------------------------------

"உங்களுக்கு ரெண்டு மூணு கிரகம் ஆதரவா இல்லே தலைவரே!"

"பதவி ஏதாவது கொடுத்து நம்ம பக்கமா இழுக்க முடியுமான்னு பார்த்துச் சொல்லுங்க ஜோசியரே!"

- அ.நாகராஜன்

--------------------------------------------------------------------------------

"விளம்பரம் பண்ணிப் பார்த்தோம் பாஸ் கொடுத்துப் பார்த்தோம். கச்சேரிக்கு கூட்டமே வரல."

"பேசாம காசு கொடுத்துப் பாருங்களேன். வந்தாலும் வந்துடுவாங்க!"

- என்.கிருஷ்ணன்

--------------------------------------------------------------------------------

"தொலைக்காட்சியில் நீங்க செய்து காட்டின ஸ்வீட்டை வீட்ல நான் செய்தபோது ஆயிரம் ரூபா செலவாயிட்டுது.."

"அதெப்படி ஆகும்?"

"நீங்க கட்டியிருந்த மாதிரி சேலை வாங்கவே 800 ரூபா ஆயிட்டுதே!"

--------------------------------------------------------------------------------

"எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அக்கா தங்கையாதான் பார்க்கிறேன்!"

"அப்புறம் எதுக்காக என் வயசைக் கேட்டீங்க?"

"நீங்க அக்காவா, தங்கையான்னு முடிவு செய்யத்தான்!"

- பர்வதவர்த்தினி

--------------------------------------------------------------------------------

அவர்: "அந்த, "மெகாசீரியலுக்கு" உலகம் எங்கும் ரசிகர்கள் இருக்காங்களா? எப்படி?

இவர்: "மருந்துக்குக் கூட விளம்பரங்களே இல்லாமல், சீரியலை ஒலிபரப்பறாங்களே!"

--------------------------------------------------------------------------------

"என்ன, இது? தலைவர் "காக்கி டிரஸ்"ஸை போட்டுகிட்டு வந்து மேடையில் பேசறார்?"

"எதிர்க்கட்சி தலைவரை திட்டறதுக்கு "மூடு" வரும்னு யாரோ சொன்னாங்களாம்"

- அ.சுஹைல்ரஹ்மான்

--------------------------------------------------------------------------------

"எப்படி உன் மாமியார் தலைல அடிபட்டது?"

"இனிமேல் அடிக்கமாட்டேன்னு அவங்க தலையில அடிச்சு சத்தியம் பண்ணேன்."

- பா.ஜெயக்குமார்

--------------------------------------------------------------------------------

"சுயம்வர மண்டபத்தில் என்ன கலாட்டா?"

"இளவரசி கையில் இருந்த மாலையை வாங்கிய பட்டத்து யானை அதை அவ கழுத்திலேயே போட்டுடுத்தாம்!

--------------------------------------------------------------------------------

"உங்க எலும்பு எப்படி முறிந்தது?

"என் மனைவி வெளியே போகட்டும். அப்புறம் விவரமா சொல்றேன் டாக்டர்!"

--------------------------------------------------------------------------------

நகையைப் பறிகொடுத்தவர்: "இன்ஸ்பெக்டர், திருடனுங்கள்ளாம் கத்தியைக் காட்டி, "மரியாதையாகப் போட்டிருக்கிற எல்லாத்தையும் கழற்று"னு தானே சொல்றாங்க அது என்ன "மரியாதையாக"ன்னா?"

இன்ஸ்பெக்டர்: "யோவ்.. திருடனிடம் நகையைப் பறிகொடுத்தவன் மாதிரியா நீ பேசற?"

- எம்.அசோக்ராஜா

--------------------------------------------------------------------------------

"டி.வி.யை விட ரேடியோவே மேல்ன்னு சொல்றீங்களே எப்படி"

"ரேடியோவுல நாடகத்தில் வர்ற டயலாக்கை கேட்டு மட்டும்தான் சகிச்சுக்கிறோம். டி.வி.யில நாடகத்துல நடிக்கற நடிகையோட மூஞ்சியையும் பாத்து சகிச்சிக்கணுமே"

--------------------------------------------------------------------------------

மனைவி: "நான் இங்க ஒருத்தி நாயா கத்திக்கிட்டு இருக்கேன். நீங்க எங்க போய்ட்டு வர்றீங்க"

கணவன்: உனக்குத்தாண்டி டீயும், பண்ணும் வாங்கிட்டு வர போனேன்."

--------------------------------------------------------------------------------

"நீ புதுசா வாங்கின நாய் நல்லா கடிக்குமா"

"எங்க வீட்டுக்கு வாயேன் செக் பண்ணி பார்த்துக்கலாம்."

--------------------------------------------------------------------------------

பேஷண்ட்: "ஏன் நர்ஸ், என்னை நேரா போஸ்ட்மார்ட்டம் ரூமுக்கு கொண்டு போறீங்க?"

நர்ஸ்: "ஆபரேஷன் பண்ணிக்க சம்மதமா?னு டாக்டர் கேட்டதுக்கு நீங்க "மூச்சுவிடாம" இருந்தீங்களாமே அதான்"

- எஸ்.சேதுராமன்

--------------------------------------------------------------------------------

"ஜாக்கெட்ல கண்ணாடி வச்சி தைக்க சொன்னது தப்பாப் போச்சு"

"ஏன்? என்னாச்சு?""

"முகம் பார்க்கறதுக்கு என் பின்னாலேயே நிறையபேர் வர்றாங்க?"

- ஏ.கோவிந்தன்

--------------------------------------------------------------------------------

அம்பலம்.கொம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நகைச்சுவைகள். எனக்கு பிடித்தது இதுதான்

.பெண் 1: என் மருமகள் கோயில் சிலை மாதிரி இருப்பாள்.

பெண் 2: அவ்வளவு அழகா?

பெண் 1: அவ்வளவு கறுப்பு.

Link to comment
Share on other sites

நல்ல நகைச்சுவைகள். எனக்கு பிடித்தது இதுதான்

.பெண் 1: என் மருமகள் கோயில் சிலை மாதிரி இருப்பாள்.

பெண் 2: அவ்வளவு அழகா?

பெண் 1: அவ்வளவு கறுப்பு.

கறுப்பி அக்காவிற்கு எப்பவும் தன்னைப் பற்றி எழுதினாப் பிடிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி அக்காவிற்கு எப்பவும் தன்னைப் பற்றி எழுதினாப் பிடிக்கும்

:P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தந்தை தனது 5 வயது மகனிடம்...

தந்தை: செல்லம் ! உனக்கு தம்பி பாப்பா வேனுமா? இல்ல தங்கச்சிப் பாப்பாவேணுமா?

மகன்: ஒண்ணும் வேணாம்ணா நீ என்ன சும்மாவா இருக்கப்போற?....

தகப்பன்: :?: :?: :roll: :roll:

Link to comment
Share on other sites

கறுப்பி அக்காவிற்கு எப்பவும் தன்னைப் பற்றி எழுதினாப் பிடிக்கும்

:):):(:lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தந்தை தனது 5 வயது மகனிடம்...

தந்தை: செல்லம் ! உனக்கு தம்பி பாப்பா வேனுமா? இல்ல தங்கச்சிப் பாப்பாவேணுமா?

மகன்: ஒண்ணும் வேணாம்ணா நீ என்ன சும்மாவா இருக்கப்போற?....

தகப்பன்: :?: :?: :roll: :roll:

:shock: :roll: :lol::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.