Jump to content

ஈழத்தமிழர் வரலாற்றில் முதல் முழுநீளத் திரைப்படம்


Recommended Posts

ஏன் சுண்டல்தான் விநயோகிஸ்த்தரா அவர் சுண்டல் மட்டும் தான் விநயோகிப்பார் :lol::lol:

சுண்டல் தான் மெயின் சப்லை அப்ப அப்ப இப்படி எல்லாம் என்னவும் செய்வார்,இருந்து விட்டு மைக்கையும் தூக்குவார்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • Replies 113
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் சுண்டல்தான் விநயோகிஸ்த்தரா அவர் சுண்டல் மட்டும் தான் விநயோகிப்பார் :lol::lol:

இம்முறை சுண்டல் வாணிபம் மந்தமாகப் போவதனால் அதனை ஊக்குவிக்கும் முகமாக திரைப்படத்தினை திரையிட்டு அத்திரையரங்குகளில் சுண்டல் விற்பனை செய்து வாணிபத்தினை முன்னேற்ற முன்னேற்பாடு நடைபெறுவதாக ஒற்றர்கள் மூலம் அறிக்கூடியதாக உள்ளது. :wink:

Link to comment
Share on other sites

இம்முறை சுண்டல் வாணிபம் மந்தமாகப் போவதனால் அதனை ஊக்குவிக்கும் முகமாக திரைப்படத்தினை திரையிட்டு அத்திரையரங்குகளில் சுண்டல் விற்பனை செய்து வாணிபத்தினை முன்னேற்ற முன்னேற்பாடு நடைபெறுவதாக ஒற்றர்கள் மூலம் அறிக்கூடியதாக உள்ளது. :wink:

சுண்டலின் அறிவோ அறிவு தான்

:wink: :wink:

Link to comment
Share on other sites

இத்திரைப்படம் தொடர்பான விரிவான விமர்சன பார்வை ஒன்று பார்வையிட

http://www.orupaper.com/issue55/pages_K__42.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரைப்படம் தொடர்பான விரிவான விமர்சன பார்வை ஒன்று பார்வையிட

http://www.orupaper.com/issue55/pages_K__42.pdf

இது உங்கட இணையப்பக்கமா சாத்திரி சார்

தப்பா கேட்டுட்டேனா சாத்திரி சார்

Link to comment
Share on other sites

சாத்திரியார் ஒரு பேப்பர் விமர்சனத்தில் பாடல்கள் கவிஞர் முத்து குமார் எண்று போட்டிருக்கே...???

அந்த முத்துகுமார் யாழ்களத்தின் உறுப்பினராக இருந்தாரே..! அருமையான கவிகள் தந்த அவரா..??

:roll: :roll: :roll:

"தீபங்கள் பேசும்" எண்ற கவிதை நூலை வெளிக்கொண்டுவர இருந்தார்...!

:

http://www.yarl.com/forum/search.php?searc...or=Muthukumaran

பாடல்களை இன்னும் கேட்க்க கிடைக்கவில்லை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்பட இயக்குனர் திரு பாரதிராஜா அவர்களின் கிளிநொச்சி அனுபவங்களிலிருந்து......

நான் ஈழத்திற்கு சென்ற போது எனக்குள் ஏற்ப்பட்ட மாற்றங்களை திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த போது சுவிஸ் பிரபா அவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு அண்ணா நான் ஒரு படத்தை எடுப்பதற்க்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டோம் நீங்கள் வந்து இப்படத்தை ஆரம்பித்து வையுங்கள் என்று அன்பு கட்டளையிட்டார். நான் தான் ஈழத்தமிழர்களுக்காக முதலாவது திரைப்படத்தை எடுக்க முடியாவிடினும் நான் ஆரம்பித்து வைப்பதில் எனக்கு மிகுந்த திருப்தியாக இருந்தது.

திரைப்பட ஆரம்ப நிகழ்வுகள் மிகவும் எளிமையாக இருந்ததுடன் திரைப்பட உருவாக்கத்திலும் ஈழத்தமிழர்கள் வித்தியாசமான நடைமுறைகளையே கையாண்டது என்னை வியக்க வைத்தது. நாம் இந்தியாவில் ஒரு படத்தை எடுப்பதற்க்கு ஒவ்வொன்றிக்கும் பணம் தான் முண்ணனியில் இருக்கும் ஆனால் ஆணிவேர் படப்பிடிப்பில் குறிப்பிட தக்க சில விடயங்களை தவிர ஏனைய அனைத்தையும் பொதுமக்களே தாமாக முன்வந்து வாகன வசதிகள், உணவு வசதிகள், என ஒரு வரலாற்றை பதிவு செய்யும் திரைப்படத்தில் தாமும் ஒரு வரலாற்றுப்பதிவாகிவிட்டார்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணிவேர் பற்றி இவர்கள் என்ன சொல்கின்றார்கள்......

திரு. வைரமுத்து - கவிஞர்

ஆணிவேர் எனக்கு ஓர் திரைப்படமாக தெரியவில்லை நான் ஆணிவேரை ஓர் புதிய வடிவமாகவே காண்கின்றேன் சர்வதேச தரத்தில் ஓர் தமிழ் படம் இது ஈழத்தமிழர்கள் உருவாக்கிய முதல் படம்.

திரு. வை. கோபாலசாமி, ம.தி.மு.க

நான் மீண்டும் தமிழீழம் சென்று வந்த உணர்வுகள் , என்னை அறியாமலே என் மனத்தையும் கண்களையும் உருகவைத்த உண்மைக்காவியம்.

திரு. செல்வபாரதி – திரைப்பட இயக்குனர் ( விஜய் நடித்த 5 படங்கள் உட்ப்பட ஏனைய பல வெற்றிப்படங்களை உருவாக்கியவர் )

எனக்கும் ஈழத்திற்க்கும் உள்ள தொடர்பு எனது கல்லூரிக்காலங்களிலேய பல கவிதை வடிவங்களாக எனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தேன்இ எனினும் எனது தொழில் ரீதியாக ஈழத்தமிழ்ர்கள் பற்றி நான் பல கதைகளை உருவாக்கிவைத்திருந்த நேரத்தில் ஆணிவேர் எனும் படத்தை பார்ப்பதற்குரிய சந்தர்ப்பத்தை இப்படத்தின் தயாரிப்பாளர் சுவிஸ் பிராபா அவர்கள் எனக்கு உருவாக்கி தந்தார் ஆணிவேர் எனும் ஆழமான சரித்திரத்தை பார்த்தபின் எனக்குள் ஏற்ப்பட்ட மாற்றங்கள் பல எனினும் உடனடியாகவே நான் ஈழத்தமிழர்களுக்குரிய எனது தொழில் ரீதியான சேவையை வழங்க வேண்டும் என முடிவெடுத்து அதற்க்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.

(இவர் அண்மையில் செஞ்சோலை வளகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.)

திரு. நாகா - இந்தி திரைப்பட இயக்குனர் (சன் ரீவியில் ஒளிபரப்பாகிய சிதம்பர ரகசியம் என்ற வரலாற்று தொடரை இயக்கியவர்)

சினிமா எனும் அற்புதமான கலையை விலைக்கு விற்க்கமுடியாது என்ற கொள்கையுடன் இருக்கும் எனக்கு அண்மையில் எனது நண்பர் பிரபா மூலமாக இலங்கையில் தயாரித்த ஆணிவேர் எனும் படத்தை பார்கும் வாய்ப்பு கிடைத்தது இப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே தமிழ் சினிமாவின் எந்த தடையங்களும் இல்லாமல் கதைகளும் காட்ச்சிகளும் நகர்ந்து கொண்டிருந்தது இப்படத்தின் ஆணிவேராக ஒளிப்பதிவு மிகவும் உறுதியாக இருந்ததுடன் இம்மண்னை நாம் சென்று பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளை ஊட்டிய அற்புதமான படைப்பாகும்.

திரு. சீமான் - திரைப்படஇயக்குனர்

தமிழ் சினிமாவின் புதிய புரட்சியாக தமிழிழத்தில் இருந்து வெளிவந்துள்ள ஆணிவேர் இன்னும் பல புதிய வேர்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை

திரு. ரமேஸ் - திரைப்பட இயக்குனர் (சைனைட்)

நான் இயக்கிய சைனைட் எனும் ரஜீவ்காந்தி கொலை தொடர்பான திரைப்படத்தை சென்னையில் வெளியிடுவதற்க்கான முயற்சிகளில் இருந்தபோது எனது நண்பர் ஒருவர் மூலமாக ஈழத்தமிழர்கள் எடுத்த படம் ஒன்று வெளியிடுவதற்க்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக அறிந்து இப்படத்தை (ஆணிவேர்) எடுத்த தயாரிப்பாளரை சந்தித்து எனது படத்தை வெளிநாடுகளில் வெளியிடுவது தொடர்பாக கலந்துரையாட விரும்பி எனது நண்பர் மூலமாக ஆணிவேர் படத்தின் தயாரிப்பாளர் சுவிஸ் பிரபா அவர்களை சந்தித்த போது ஆணிவேர் எனும் இலங்கைத்தமிழர்களின் திரப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

உண்மையிலேயே என்னை மிகவும் பாதிக்க வைத்த படம் ஆணிவேர் போர் நடந்த தேசத்தில் உருவாக்கப்பட்ட படம் என எந்த தொழில்நுட்ப்ப குறைகளையுமு; என்னால் காணமுடியவில்லை, பார்வையாளர்களின் மனங்களில் பாரிய மாற்றங்களை உருவாக்கவல்ல ஓர் திரைப்படம் ஆணிவேர் என்பது எனது அசைக்க முடியாத கருத்தாகும்.

திரு. காசி ஆனந்தன் - தாயக கவிஞர்

தாயக கலைப்படைப்பாளிகளின் அன்பான வேண்டுகோள் இது. ஆம் என்னை தொலைபோசியில் தொடர்பு கொண்டு அண்ணா நாம் தயாரித்துள்ள ஓர் முழு நீளத்திரைப்படத்திற்க்கு நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும் என அன்பான வேண்டுகோள், நானும் சம்மதம் தெரிவித்து பல நாட்களில் பின் என்னால் தெரிவு செய்யப்பட்ட பெயர் தான் ஆணிவேர் நான் பெயர் வைக்கும் போதுகூட இவ்வளவு தத்துருபாமாக ஆணிவேர் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை சாதாரணமாக என்னிடம் பலர் பாடல்களை எழுதித்தரும்படி கேட்பார்கள் நானும் அவர்களுக்கு பாடல்கள் எழுதிக்கொடுப்பேன் எனினும் நான் எழுதிய அனைத்துப்பாடல்களுமே வெளிவந்ததாக அறிவேன் எனினும் என்னால் அந்தப்படல்களளை கேட்க முடிவதில்லை அதே போலத்தான் இந்த ஆணிவேர் திரைப்படமும் என்னை வந்தடையாது என்று இருந்து விட்டேன் எனினும் ஒரு நாள் மாலை நேரம் எனது வீட்டின் முன்னால் ஓர் வண்டி வந்து நின்றுது வண்டியில் இருந்து ஓவியர் புகழ் அவர்களும் இன்னுமொரு நண்பரும் இறங்கி வந்து அண்ணா உங்களுக்கு ஆணிவேர் படத்தை காண்பிக்க வந்துள்ளதாக இப்படத்தை தயாரித்த சுவிஸ் பிரா அவர்கள் கூறினார். என்னால் நம்பமுடியவில்லை நான் பார்க்கமலே பெயர் சூட்டிய குழந்தை என்மடிகளில் தவழ்வது என்பது எப்படி இருக்கும் உற்சாகத்துடன் ஆணிவேரைப் பார்தேன். என்னால் நம்பமுடியவில்லை எங்களது பையங்களா இப்படி ஒரு படத்தை உருவாக்கியுள்ளார்கள் காட்சிகள் ஒவ்வொன்றும் என்னை எண்மன்னுக்கு கூட்டிச்சென்ற உணர்வுகள் என்னை நெகிழ வைத்தது. மிகத்தரமாக உருவாக்கப்பட்ட ஆணிவேர் தழிழீழ திரைப்பட வரலாற்றின் புதிய பாலமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழப்பதிந்திருக்கிறது ஆணிவேர்

ஈழத்தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு இரண்டு ஆதங்கங்கள் இருக்கின்றன. ஒன்று, நாற்பது வருடங்களுக்கு முன்னர் பிறப்பெடுத்த நம்மவர் திரைப்படத்துறை சர்வதேச தரத்துக்கு இல்லாவிட்டாலும் சிங்கள திரைப்படங்களின் தரத்திலாவது ஒரு படத்தை தராதா? மற்றயது, வியட்நாம் போரை, கம்பூச்சிய உள்நாட்டு யுத்தத்தை, அங்கு மக்கள் பட்ட அவலங்களை திரைப்படங்கள் மூலம் வெளியுலகுக்கு தெரியப்படுத்தியது போல் கலைப்படைப்புக்களின் வாயிலாக எம்மக்களின் துயரங்களை உலகமக்கள் அறிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டாதா? என்பது. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றில்லை. எனினும் காத்திரமான படைப்பு எதுவும் இதுநாள்வரை வரவில்லை. திரைப்படத்துறை வளர்ச்சி பெற்றுள்ள இந்தியாவிலிருந்து எமது அவலங்களை கருப்பொருளாய் எடுத்து நிசத்தை சிதைத்து வியாபார திரைப்படங்கள் மட்டுமே வெளிவந்தன.

தமிழ்த்திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சர்வதேசத் தரத்தில் ஒரு திரைப்படம் ஈழத்திலிருந்து வெளிவந்திருக்கிறது. திரைப்படத்தின் தலைப்பு “ஆணி வேர்”. குறித்துக் கொள்ளுங்கள் இது தமிழத்; திரைப்படத்துறையில் ஒரு பெரும் பாய்ச்சல்.

கடந்த வார இறுதியில் லண்டலிலுள்ள சோகோ திரையரங்கில் இத்திரைப்படத்தின் பிரத்தியேக காட்சி, ஊடகவியலாளருக்கு காண்பிக்கப்பட்டது. முழுக்க முழுக்க வன்னி பெருநிலப்பரப்பில் படமாக்கப்பட்டுள்ள இந்த முழுநீளத்திரைப்படத்தை “உதிரிப்பூக்கள்”, “நெஞ்சத்தை கிள்ளாதே” போன்ற பிரபலமான திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மகேந்திரனின் புதல்வர்; ஜோன் மகேந்திரன் இயக்கியுள்ளார். நந்தா, மதுமிதா, நீலிமா ஆகிய தமிழகக் கலைஞர்கள் முக்கிய பாத்திரமேற்று ஈழத்து கலைஞர்களுடன் இணைந்து திறம்பட நடித்துள்ளனர்.

இதுவும் ஒரு காதல் கதை தான். தமிழகத்தை சேர்ந்த பெண்பத்திரிகையாளர் சந்தியா (மதுமிதா) தனது பத்திரிகைக்கு செய்தி சேகரிக்க யாழப்பாணத்துக்கு வருகிறாள். அங்கு கடமையே கண்ணாக மக்களுக்கு சேவை செய்யும் கோபக்கார இளம் மருத்துவர் நந்தாவை சந்திக்கிறாள், நட்புக் கொள்கிறாள். போரினால்; மக்கள் படும் அவலங்கள் அவளையும் பாதிக்கிறது. அந்த மக்களுடன் ஒன்றிப்போகிறாள். வரலாற்று பதிவாகிவிட்ட யாழ்ப்பாண இடப்பெயர்வு அவர்களையும் பிரித்து விடுகிறது. அவள் தாயகம் செல்கிறாள். மீளவும் அவனைத் தேடியபடி வன்னிக்கு வருகிறாள். திரைப்படத்தின் பெரும் பகுதி பின்னோக்கிய கதையாக நகருகிறது.

பாடசாலை மாணவி கிருசாந்தி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் உட்பட தமிழர் வரலாற்றின் பல துன்பியல் நிகழ்வுகள்;, அன்றாடம் மக்கள் படும் இன்னல்கள் என்பன எந்த பொய்மைக்கும் இடமில்லாமல் படமாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண இடப்பெயர்வு காட்சிக்கு இருபத்திஐந்தாயிரம் பேர் பயன்படுத்தப்பட்டு அந்த நிகழ்வு மிகவும் தத்துரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எங்கள் தேசம் இத்தனை வனப்பு மிக்கதா எனப் பிரமித்துப் போகிறோம். ஒவ்வொரு காட்சியையும் அழகியல் உணர்வுடன் படச்சட்டங்களுக்குள் அடக்கியுள்ளார் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சஞ்சை. தமிழக கவிஞர் முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்கு குரல் கொடுத்துள்ளார் சின்னக்குயில் சித்திரா. இசையமைத்திருப்பவர் சதீஸ்.

நடைமுறை வாழ்வில் கலந்துள்ள அரசியல் தவிர பிரச்சார நோக்கம் எதுமின்றி படத்தை நெறிப்படுத்தியுள்ளார் JOHN மகேந்திரன். முற்றிலும் வன்னியில் படமாக்கப்பட்டுள்ளபோதும் புலி என்ற சொல் ஒரிரு தடவைகள்தான் பாவிக்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

கதாநாயகன் நந்தாவும், நாயகி மதுமிதாவும் ஏற்கனவே சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்த போதும்; இந்த திரைப்படத்தில புதுப்பிறப்பெடுத்துள்ளார்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Global release for Sri Lanka love story

Rants + Raves Print Email

Friday, August 4th, 2006

New Delhi - An Indian Tamil movie that reveals Sri Lanka’s Tamil saga on the strength of a love story is set for international release Sep 1, but the director is not sure if it can get past the censor in India.

‘Ani Ver’ (Taproot) is a 90-minute film about an Indian woman journalist who falls in love with a Sri Lankan Tamil doctor while attempting a cover story on the mass exodus of Tamils from Jaffna before government troops seized the town and its environs from the Tamil Tigers in 1995.

Director John Roshan, 38, says the movie, which also has an English version called ‘Exodus’, turned out to be ‘very exciting’ with shooting done mostly in villages close to Colombo. It has just one song.

‘For an upcoming filmmaker like me, it was very exciting,’ John, as he is popularly known, told IANS in a telephonic interview from Chennai. Madhumita and Nanda play the lead roles.

‘It is about the consequences of war,’ John explained, speaking in English and Tamil. ‘I suddenly felt I was doing this for a cause, that a huge responsibility had been thrust on me.

‘But we are not passing any judgement in the movie,’ he said, in apparent reference to the Liberation Tigers of Tamil Eelam (LTTE), which is outlawed in India. ‘It is a plain love story. I did not want it to look like a docudrama.’

John says he was ignorant of the Sri Lankan Tamil story until he decided to direct the movie, on the suggestion of a Sri Lankan Tamil man living in Europe whose name was incidentally Prabhakaran.

‘Prabhakaran has a TV network and said he was keen to do a movie on the Jaffna exodus. One day he flew down to Chennai to discuss the project.

‘I must be very honest. My knowledge of the Sri Lankan situation was very poor. He gave me lots of books, both non-fiction and short stories. Things then began to fall in place.’

The movie begins with a shot of Madhumita, who plays an Indian journalist, enquiring at a police station in Jaffna how she could re-establish contact with a Tamil doctor whom she met when tens of thousands of Tamils left Jaffna in 1995 on LTTE’s advice.

The story takes several twists and turns until she finally teams up with the doctor, with whom she has fallen in love, during a street protest when security forces fire at Tamils demanding the right to get back to their homes.

There is a happy ending as they meet but in the backdrop of distant bomb blasts and screams, showing there is no end to the Tamil separatist campaign.

John said the movie had got the censor certificate in Britain and was in the process of winning one in Switzerland and other countries where thousands of Sri Lankan Tamils live. Many of them support the LTTE.

‘The movie is mainly for an international audience. We were not sure if it would be released in India. There could be censor problems,’ he said, adding that it was most likely to have its international debut Sep 1.

John, whose first and only movie to date ‘Sachin’ (2005) did not fare well, said the latest film was backed by ‘various small, small funds’ and that he and the actors agreed to accept ‘meagre payments’. ‘After all it was for a purpose.’

He said he was pleas

antly surprised to meet many Sri Lankan Tamils living in Europe who told him that they were keen to get back to Jaffna where their parents and forefathers lived.

‘I was taken aback,’ John said. ‘If I were to settle down in a beautiful country like Switzerland, I don’t think I would return (to India). It was marvellous the way they thought.’

http://indiaenews.com/2006-08/17274-global...e-sri-lanka.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று லண்டனில் ஹவுஸ்புல் காட்சியாக விசேடகாட்சி காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் அதைபற்றி கதைத்துக் கொண்டிருக்கிறார்கள் .. அந்தளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Link to comment
Share on other sites

படம் பார்த்தவர்கள் காட்ச்சி அமைப்புக்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது பற்றி சொல்லுங்கப்பா...!

என்னாலை இந்த வாரம் படம் பார்க்க போகலாம் போல இல்லை... அடுத்த கிழமைதான்...!

விஜய்யின் சச்சினை இயக்கியவர் இயக்கி இருக்கிறார்... உணர்வு பூர்வமாக இருக்கும் எண்டு நம்புறன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழரின் திரைப்படத்துறையில் புதிய பரிணாமத்தையும் தமிழீழ தேசத்தின் உண்மைச் சம்பவங்களையும்தொகுத்து ஆணிவேர் வெளிவந்துள்ளது. இதில் குறிப்பிடும்படியாக கிருஷாந்தி குமாரசாமிக்கு நடந்த கொடுமைகள், மற்றும் யாழ்ப்பாண இடப்பெயர்வின் அவலங்கள், சிறீலங்கா இராணுவத்தால் தமிழ்மக்களுக்கு ஏற்படும் இழப்புக்கள் என்பவற்றை மிகவும் லாவகமாகவெளிப்படுத்தியுள்ளன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் அதிர்வலைகளை ஏற்படுத்திய "ஆணிவேர்" திரைப்படம்

தமிழீழத்தின் முதல் வெண்திரைக் காவியமான "ஆணிவேர்" திரைப்படம் கடந்த சனிக்கிழமை (24.09.06) லண்டன் திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டது.

சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் திரையிடப்பட்ட காட்சிகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இத்திரைப்படத்தை பார்வையிட்டுள்ளதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை காலமும் தமிழ்த் திரைப்படங்களை பார்வையிட்ட தொகையை விட இத்தொகை அதிகமாகும்.

கடந்த சனிக்கிழமை திரையிடப்பட்ட முதலாவது காட்சிக்கு திரைப்படத்தின் நடிகர் நந்தா, நடிகை மதுமித ஆகியோர் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்தனர்.

இத்திரைப்படத்தின் காட்சிகளை பார்வையிட்ட பின்னர் பிரான்சிலிருந்து ஒளிபரப்பாகும் தமிழ்த் தொலைக்காட்சி இணையமான ரிரிஎன் னுக்கு திரைப்படம் தந்த அதிர்வலைகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

ஐரோப்பிய நாடுகளிலும், கனடா மற்றும் அவுஸ்திரேலியாவிலும் எதிர்வரும் மாதங்களில் இத்திரைப்படம் வெளியிடப்பட உள்ளது. இங்கிலாந்தின் பல நகரங்களிலும் இத்திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

-புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆணிவேர் திரைப்பட முதல்காட்சிக்கு இந்தியாவிலிருந்து நந்தா மதுமிதா போன்றோர் லண்டனுக்கு வரவில்லை. இவர்கள் வருவதாக விளம்பரப்படுத்தப்பட்டபோதும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணிவேர் படம் போட்டபோது வேலையால் வர பிந்திட்டுது பார்க்க முடியாமல் போட்டுது இனிஎப்போ போடுவினம்

Link to comment
Share on other sites

'ஆணிவேர்" திரைப்பட இயக்குநர் ஜோன் மகேந்திரன் வழங்கிய நேர்காணல்

2-1.jpg

இப்பவும் சென்னையில் ஈழம் பற்றி செய்தியை பார்க்கும் போது மனசு பதறுது... இலங்கை ராணுவம் குண்டு வீச்சு என்று செய்தி கேட்டால்... ‘‘ஐய்யோ நம்மளோட ஆணிவேர் படத்தில் நடிச்ச அந்த பாட்டி உயிரோட இருப்பாங்களா? அசிஸ்டென்டாக வேலை பார்த்த அந்த பொடியன் உயிரோட இருப்பானோண்ணுதான் இப்பவும் மனசு பதறுது’’ உடனே போன் போட்டு அவங்களை பிடிச்சு நாலு வார்த்தையாவது பேசிவிடுவேன்’’ என்கிறார் ஆணிவேர் படத்தின் இயக்குநர் ஜாண். இயக்குநர் மகேந்திரனின் மகன். மனைவி மகன் மற்றும் மகளோடு சென்னை தி.நகரில் வசிக்கிறார்

3-2.jpg

.கேள்வி: ஆணிவேர் முயற்சியின் தொடக்கம் பற்றி...

பதில்: ‘‘நான் சச்சின் படம் பண்ணி முடித்து அது தியேட்டரில் ஒடிக்கொண்டிருந்த போது சுவிட்சர்லாந்தில் 'தமிழ் லீவிங் மீடியா நெட் வொர்க்' நிறுவனத்தை நடத்திவரும் பிரபாகரன் அவர்கள் சச்சின் பார்த்துவிட்டு என்னை அழைத்து விஷ் பண்னினார். அப்புறம் என்னிடம் ஈழத் தமிழர்களுக்காக ஒரு படம் பண்ணித்தர முடியுமா என்று கேட்டார். ஒரு பிலிம் மேக்கரா எனக்கு இலங்கையில் உள்நாட்டு பிரச்சனை தமிழ் சிங்கள இனங்களுக்கிடையில் இருக்குண்ணு தெரியும், ஆனா அதோட அரசியலோ கடந்த காலம் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் ஈழ மண்ணில் யுத்தம் நிகழ்த்தியிருக்கும் கோர தாண்டவம் பற்றியோ எனக்கு தெரியாது.. ஆனால் ஒரு யுத்த பின்னணியை வைத்து ஒரு சினிமா பண்ணவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. பிரபாகரன் நிறைய புத்தகங்கள், வி.சி.டி என கடந்த கால வரலாற்று ஆவணங்களை கொடுத்தார். முதன் முதலாக ஈழத்தமிழர்கள் அடைந்த துயரங்களை பார்த்தேன். படம் எடுப்பதற்கு முன்னால் ஈழப்பகுதிகளுக்கு போகவேண்டும் என்று சொன்னேன். அங்கே போய் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து மக்களை சந்தித்தேன். ஒவ்வொரு கதைகளும் ஒரு ஈழ சினிமாதான். நிறைய பேரை சந்தித்தேன். நீண்ட நேரம் பலமான அவர்களின் கதையை, வாழ்க்கையை வீடியோவில் பதிவு செய்தேன். நான் பதிவு பண்னின மொத்த விஷவலையும் வெச்சு இரண்டு வருஷத்துக்கு ஒரு மெகா சீரியலே பண்ணலாம். அங்கே ஈழத்தில் இரண்டு விதமான மக்கள் வாழ்கிறார்கள். ஒன்று யுத்தத்தின் நெருக்குவாரத்தை சந்தித்து தினம் தினம் மரணத்தோடு இன்னும் சொந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இன்னொரு புறம் புலம் பெயர்ந்து உலகெங்கிலும் தாயகம் பற்றிய கனவுகளோடு வாழ்பவர்கள். ஐம்பதுகளில் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் இவளவு கொடூரம் நடந்தும் இன்னும் இது சரியாக வெளியுலகத்துக்கு வரவில்லை என்கிற ஏக்கமும் கோபமும் அவங்ககிட்டே இருக்கு. இரண்டு சமூகங்கள் ஒரு பிரச்சனை காரணமாக மோதி அதில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டா அதுக்கு பேர் கலவரம். ஆனா இலங்கையில் காலம் காலமா தமிழர்கள்தானே பாதிக்கப்படுறாங்க. ஆனா இன்றைக்கு வரைக்கும் இலங்கையில் தமிழர்கள் மேல் நடத்தப்படுகிற தாக்குதலை கலவரமாகத்தான உலக மீடியாக்கள் பார்க்குது. இப்படிபட்ட வருத்தங்கள் அவங்களுக்கு இருக்கு. அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களோட இரண்டாவது ஆயுதமாக சினிமாவை கையிலெடுத்திருக்காங்கண்னு நினைக்கிறேன்.

4dgd.jpg

கேள்வி: ஆணிவேர் படம் எடுப்பதற்க்காக நீங்கள் ஈழத்தில் எவளவு காலம் தங்கியிருந்தீர்கள்? அந்த அனுபவம் எப்படியிருந்தது?

பதில்: கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் தங்கியிருந்தேன்.சென்னையில் இருந்து கொழும்புக்கு போய் இறங்கிய போது ஒரு தமிழ் நாளிதழை வாங்கி பார்த்தேன் ‘‘கொல்லப்படுபவர்கள் எல்லாம் புலிகள்’’ என்று தலைப்பு செய்தி போட்டிருந்தார்கள். ஈழத்தில் உள்ள போராளிகளாக உள்ள பொது நிலையினரின் வாழ்க்கையை அந்த தலைப்பு எனக்கு உணர்த்தியது. ஏகப்பட்ட பரிசோதனைகள் கொழும்பில் உலவுகிற ஒவ்வொரு மனிதனும் ஆயுதங்களோடு கண்காணிக்கப்படுகிறான். புல்லட் நிரப்பப்பட்ட ஒப்பன் செய்யப்பட்ட ஏகே 47 நவீன ரக துப்பாக்கிகள் வழியாக ஊர்ந்துதான் கடுமையான கெடுபிடிகளை தாண்டி ஈழத்துக்குள் பிரேவசிக்க முடிந்தது. என்னை அழைத்து வந்த காரோட்டி சொன்னார் ‘‘சார் கை தவறுதலாக பட்டால் கூட அந்த துப்பாக்கியின் குண்டுக்கு யாரோ ஒருத்தர் பலியாக நேரிடும்’’ என்றார். அப்புறம் ஈழத்துக்கு போய் என்னோட பணிகளை கவனித்தேன். அங்கு வாழ்கிற ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் தமிழ் பெண்ணுக்கும் ஒரு கதை இருக்கிறது. அது யுத்தத்தோடு தொடர்புடைய கதை. ஒவ்வொரு மனிதனும் சகோதரியையோ,தாயையோ.உறவுகளையோ இழந்த கதைகள் ஏராளமாக இருக்கிறது. ஒரு கலைஞனாகவோ மனிதனாகவோ இதற்க்கெல்லாம் எப்படி ரியாக்ட் பண்ணுவதென்று எனக்கு தெரியவில்லை. ஒரு தாயை சந்தித்தேன் அவங்களோட மகனை சில வருடங்களாகவே காணவில்லை. பின்னர் செம்மணி புதை குழி மர்மங்கள் வெளிபட்ட போது அதில் அவங்களோட மகனும் கொலை செய்யப்பட்டாராம். அதே மாதிரி இன்னொருத்தங்க ஒரு கதை சொன்னாங்க. ஒரு நாள் ஆர்மிக்காரன் வருகிறான் என்று எல்லோரும் ஒடியிருக்காங்க அப்படி ஒடினபிறகு பார்த்தா அவங்களோட குழந்தையை மிஸ் பண்னிட்டாங்க பதறிப்போய் பார்க்கும் போது அந்த குழந்தையை எரிந்து கொண்டிருந்த தீயில் போட்டிருக்காங்க. அதே மாதிரி தன்னோட தாய் இறந்து போயிட்டாங்க எனபது கூட தெரியாமல் தாயோட மார்பில் பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தையின் கதை ஒன்றை ஒரு டாக்டர் சொன்னாங்க. அவங்க அந்த சமூகத்தோட மனச்சாட்சி மாதிரி ஏண்ணா?அவங்கதானே யுத்தத்தால பாதிக்கப்பட்ட மக்களை நேரடியா பார்க்கிறாங்க மருத்துவம் செய்றாங்க. ஒரு நாள் ஷெல் அடிக்கும் போது குழந்தையோட பதுங்கின தாய்க்கு தோளில் நல்ல காயம் ஏற்ப்பட்டிருக்கு அந்தம்மாவுக்கு அவசரமா ஒரு ஆப்பரேஷன் பண்ணவேண்டும் அவங்ககிட்டே மயக்க மருந்து எடுத்துக்கோங்க கிட்டத்தட்ட நான்கு மணிநேரமாவது ஆகும என்று டாக்டர் சொன்னபோது ‘‘வேணாம் அவளவு நேரம் குழந்தை பால் குடிக்காம இருக்க முடியாது.மயக்க மருந்து இல்லாமலே பண்ணுங்க’’ எனறு சொல்லி மயக்க மருந்து இல்லாமலே அந்த அறுவை சிகிச்சை நடந்திருக்கு இதை மனத்தைரியமா எடுத்துக்கறதா?இல்லை போர் இப்படி ஒரு மன இறுக்கத்தை அந்த மக்களிடம் ஏற்ப்படுத்தியிருக்குண்னு நினைக்கிறதாண்னு தோணலை...தர்ஷினி கொலை செய்யப்பட்டது பற்றி ஒரு ஆசிரியரிடம் பேசினேன் அவங்க சொன்னதும் நான் பார்த்ததும் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது காரணம் மாணவிகள் பள்ளிக்கு செல்லும் போது அவங்களோட ஒவ்வொரு அடியும் இராணுவத்தால் கண்காணிக்கப்படுவதும் பரிசோதனை என்கிற பெயரில் கொடூரமான வக்கிரமான வதைகளுக்கு ஆட்படுவதும் இன்றும் தொடர்கிறது.அதை நேரில் என்னால் பார்க்க முடிந்தது.

34.jpg

கேள்வி: இத்தகைய கொடுமைகளை ஒரு ஆவணப்படமாகவோ, இல்லை ஒரு கட்டுரையாகவோ எழுதிவிட முடியும் ஆனால் புனைவுகள் கொண்ட ஒரு சினிமாவாக இதை எப்படி எடுக்க முடியும்?

பதில்: ஆணிவேர் படத்தை புனைவு என்று என்னால் பார்க்க முடியவில்லை. காரணம் நடந்தெல்லாம் உண்மையாக இருக்க எப்படி புனைவாகிவிடும்? நிகழ்ந்த சம்பவங்களை புனைவு என்கிற ஒரு வடிவத்துக்குள் கொண்டு வந்திருகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் ஆணிவேரை புனைவு என்று சொலவதே வேதனையாகத்தான் இருக்க முடியும். தலைமுறை தலைமுறையாக கொல்லப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகிற மக்களின் நிஜமான கதைகளை அப்படி புனைவு என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு போக முடியாது. இது உண்மைக்கதை.

433.jpg

கேள்வி: பெரும்பாலான பாத்திரங்களாக ஈழத்தமிழர்களே நடித்திருக்கிறார்கள். ஆனால் மதுமிதாவையும்,நந்தாவையும் தமிழகத்திலிருந்து அழைத்து போய் ஏன் நடிக்க வைத்தீர்கள்? அதிலும் ஈழத்தமிழர்களே நடித்திருந்தால் இன்னும் இயல்பாக இருந்திருக்குமே?

பதில்: ஆணிவேர் படத்தை ஒரு பட்ஜெட் படமென்றோ பட்ஜெட் இல்லாத படமென்றோ சொல்லிவிட முடியாது. தவிரவும் இந்த படத்தை எடுக்கும் போதே இதை இந்தியாவில் ரிலீஸ் பண்ணமுடியாது என்று தோன்றியது. புலம் பெயர்ந்து அய்ரோப்பிய நாடுகளில் வாழும் மக்களும் இதை பார்ப்பாங்களா என்று அப்போ தெரியவில்லை. அதனால் பார்வையாளர்களை முதலில் தியேட்டருக்கு அழைத்துவரும் ஒரு முயற்சியாகத்தான் தெரிந்த முகமாக இருக்கட்டுமே என்றுதான் மதுமிதாவை அதில் நடிக்க தேர்ந்தெடுத்தேன். ஒரு நாள் நந்தாவே என்னை தேடி வந்தார் ‘‘நீங்க ஈழத்தமிழர்கள் பற்றி ஒரு படம் பண்றீங்களாமே அதில் எனக்கும் ஒரு ரோல் வேணும் என்றார்’’ அதனாலதான் ஆர்வமாக இருந்த அவரை இதில் நடிக்க வைத்தேன். மதுமிதாவும் நந்தாவும் இந்த படத்துக்கு கொடுத்த ஒத்துழைப்பை நான் நினைக்கும் போது உண்மையிலே மகிழ்ச்சியாக இருக்கு. காரணம் மதுமிதா தெலுங்கு காரங்க... ஈழ மக்களோட கஷ்டங்களை தெரிஞ்சி புரிஞ்சுக்கிட்டு நடிச்சாங்க, நானும் சரி கேமிராமேன் சஞ்சயையும் சரி நடிகர்களும் சரி யாருமே சம்பளம் பேசிட்டு வேலை பார்க்கவில்லை. அவங்க கொடுத்ததை வாங்கிட்டோம். முதன் முதலா யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்குண்னுதான் நினைக்கிறேன். அப்புறம் ஆணிவேர் படத்தில் நடிச்ச மற்ற நடிகர்களின் நடிப்பை சொல்லியாகணும். கையில்லாதவங்க...ஊனமானவங்க...என

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேர்காணல் இணைப்பிற்கு நன்றிகள் ஈழவன்85.

வாசிக்க வாசிக்க படத்தினை உடனே பார்க்கவேண்டும் போலத் தோன்றுகிறதே. லண்டனில் இருந்தால் பார்த்திருக்கலாம். சிட்னியில இனி எப்ப வருமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றய இரவுக் காட்சியும் ஹவுஸ் புல் ஆக இருந்தது என அறியக்கிடைத்தது. (600 பார்வையாளர்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த காட்சிகள்:

29-9 வெள்ளி 23.30 ஓடியன் - ஸ்ரெதம்

29-9 வெள்ளி 23.00 ஷபாரி - ஹரோ

30-9 சனி 23.30 ஓடியன் - ஸ்ரெதம்

30-9 சனி 17.00 ஷபாரி - ஹரோ

01-10 ஞாயிறு 13.45 ஷபாரி - ஹரோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.