• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நிலாமதி

அப்பா எங்க?...

Recommended Posts

Share this post


Link to post
Share on other sites

இந்தப்படம்

புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் நாவலர்விருது தெரிவுக்கு வந்திருந்தது

ஏனெய  படங்களின் சிறப்பால் எந்த பரிசையும் பெறமுடியாது போனது...

 

ஒரு சிறு குழப்பம்

புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் நாவலர்விருது தெரிவுக்கு வந்திருந்த

24  படங்களில் கிட்டத்தட்ட அரைவாசிப்படங்களில்

கார் விபத்தால் இறத்தல் இடம்  பெற்றிருந்தது....... :(  :(  :(

 

Share this post


Link to post
Share on other sites

வாழ்க்கை மிகவும் கொடியது...!

 

சில பிரச்சனைகளுக்கு, நாமே 'சட்டத்தை' எமது கைகளில் எடுத்துக்கொள்ளும் 'பழக்கத்தை' விட்டு விடுவதே நல்லது!

 

கடுமையாக உழைத்து, அந்தப்பணத்தில் வாங்கிய 'தொலைபேசி' என்பதையும் புரிந்துகொள்கிறேன்!

 

நன்றிகள்,  நிலாமதியக்கா!

Share this post


Link to post
Share on other sites

குறும்படம் , கொடுமையான சோகம்...!

Share this post


Link to post
Share on other sites

பொருட்களை இழந்தால்  எப்போதும் சம்பாதிக்கலாம்
ஆனால் உயிரை எப்படி ....  இழந்தால் இழந்தது தான்
இணைப்பிற்கு நன்றி

Share this post


Link to post
Share on other sites

எனக்குப் படம் பார்க்க முடியுதில்;ஐ

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • அமெரிக்காவின் பிரபல நடன நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலுக்கு நடனமாடிய இந்தியக் குழுவினர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளனர். பல பிரம்மாண்டமான நடனங்கள் அரங்கேறும் ‘America’s Got Talent’ எனும் நடன நிகழ்ச்சி அமெரிக்காவில் மிகப் பிரபலமாகும். அதன் 14வது சீசனில் கலந்து கொண்ட இந்தியாவை சேர்ந்த நடனக் குழுவினர், இறுதிச் சுற்று போட்டியில் நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலுக்கு அபாரமாக நடனமாடினர். அந்த வீடியோக்கள் ஏற்கனவே வைரலான நிலையில், போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் இந்திய குழு சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. https://www.polimernews.com/dnews/101057/அமெரிக்க-நடன-நிகழ்ச்சியில்சாம்பியன்-பட்டத்தை-தட்டிச்சென்ற-இந்திய-குழுவினர்  
    • இதென்ன இது? சேர்த்திட்டா போச்சு. மண் தின்னுறதை மனிசன் திண்டால் எண்ட பொலிற்ரிக்ஸ் இப்ப எல்ல இடமும் வேலை செய்யுதெல்லோ...
    • அம்மா இருக்கும்போது செய்யவேண்டியவை.    இவற்றைத்தான் அம்மா இருக்கும் போது செய்ய வேண்டியவை/ செய்திருக்க வேண்டியவை என்று என்னால் பட்டியலிட முடியுமா என்று எனக்கு தோன்றவில்லை. இதை அம்மா இருக்கும்போதும் எழுதிவிட முடியாது. அம்மாவை இழந்த வலியின் விளிம்பில் இருந்து இன்னொருவரின் அம்மாவுக்கு நடந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் வேணும் என்றால் இதை எழுதலாம் என்று தோணுகிறது.    உலகில் எல்லா அம்மாக்களுக்கும் தங்களின் பிள்ளைகள் ஒரு நல்ல நிலையில் நன்றாக வாழவேண்டும் என்று ஒரு ஆசை சில வேளைகளில் பேராசையாக கூட இருக்கலாம். ஆனால் அது அம்மாக்களால் மட்டுமே முடியும். தங்களின் கனவுகளை பிள்ளைகள் மூலம் நிறைவேற்றிவிடலாம் என்ற ஒரு ஆதங்கதிலுமே பெரும்பாலும் வாழுவார்கள். சிறு வயதில் கல்வி முதல், வளர்ந்த வயதுகளில் பொருளாதாரம், நற்குடும்ப வாழ்க்கை, பேரன்கள்/பேத்திகள் என அவர்களின் கனவுகள் நீண்டுகொண்டே போகும். பிள்ளைகளின் மகிழ்ச்சியே தங்களின் மகிழ்ச்சி என்று வாழ பழகிக்கொள்வார்கள். பிள்ளைகள் கூட உலகில் யாரிடமும் கொட்டித்தீர்க்க முடியாத பிரச்சனைகளை அம்மவிடம் சொல்லி ஆறுதலடையகூடிய மைய்யப்புள்ளியாக அம்மா இருப்பா.    அம்மாவின் கனவுகளை/ஆசைகளை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளே அம்மவையும் பிள்ளையையும் இணைக்கும் ஒரு ஒற்றைப்புள்ளி. அதை நிறைவேற்றினாலே பாதி அம்மாக்களை மகிழ்ச்சியாக வாழவைக்க முடியும். தன் பிள்ளை கஷ்டப்படாமல் வாழுகிறான் என்ற வசனமே அம்மாவுக்கு நிறை உணவாக இருக்கும்.     சரி எனக்கு உலகத்து அம்மாக்களை விட என் அம்மாவைத்தான் அதிகம் தெரியும். அவவின் கல்விகனவுகளை நான் பெரும்பாலும் நிறைவேற்றி இருக்கிறேன். நற்பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து இருக்கிறேன். ரீச்சரின் பிள்ளைகள் என்றால் யார் என்ற அடிப்படை நியமங்களை ஒரளவுக்கேனும் உருவாக்கி இருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் அம்மா எனக்கு விதித்த நியம உயரங்களை எல்லாம் தாண்டி அவவுக்கு பெருமை சேர்த்து இருக்கிறேன். அந்த அடிப்படை அஸ்திவாரங்களை வைத்து அம்மா கட்டிய கோட்டையை என்னால் முழுமையாக பூரணபடுத்த முடியவில்லை. இருப்பினும் கோட்டையை கட்டும் அளவுக்கு அம்மாவை தயார்படுத்தினேன் என்ற திருப்தி எனக்கு எப்பவும் உண்டு. வாத்தியார் பிள்ளைகள் மக்கு என்ற அடிபடை நியமவிதிகளை என் அம்மாவின் பிள்ளைகள் உடைத்தெறிந்து காலங்கள் ஆகிவிட்டன.    அம்மாவின் ஆசைகள் வரையறைகுட்பட்டன அல்ல. அவை காலத்துடனும் சூழ்நிலைகளுடனும் வேரூன்றி விருட்சமாக வளரகூடியன. அம்மாவின் வயசுடன் ஆசைகள் மாறிப்போகும். அறுபது வயதில் கொழும்பில் வீடு வாங்க ஆசைப்பட்ட அம்மா, சாகும்போது பழைய வீட்டில் பலாமரம் நட ஆசைப்பட்டா. இது தான் அம்மா. இது தான் நியதி. என்னால் முடிந்தவற்றை எந்தவித மனகோணலும் இல்லாமல், அதற்கு ஒரு படி மேலே ஆழ்மன திருப்தியுடனே நான் நிறைவேற்ற முயற்சி செய்தேன். இது எந்த வித கண்ணீரும் இல்லாமல் இப்போ இதை எழுத்வதற்காகினும் எனக்கு உதவுகிறது.    தன் பிள்ளைகள் தன் முதுமைக்காலத்தில் தன்னுடன் அல்லது தனக்கு அருகில் இருக்கவேண்டும் என்பது அம்மாக்களின் நியமவிதி. இதில் என் அம்மா விதி விலக்கல்ல. எழுதமுடியாக்காரணங்களுக்காக அம்மாவின் பிள்ளைகள் தூரவே இருந்தாலும் இன்றைய தொழினுட்ப உதவியுடன் அம்மா ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் தன் நடுங்கும் கைகளால், ஏதோ ஒரு வகையில் ஐபோனை இயக்கி தொடர்பெடுக்கும் அம்மவுக்கு ஒரு திருப்தி.    நாங்களே எடுக்காவிட்டாலும், வரும் அழைப்பை நேரமின்மை என்ற ஒற்றை வார்த்தைமூலம் தட்டி கழிக்கும் தருணங்களே அதிகமாகிப்போய்விட்ட காலத்தில் உங்களுக்காக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அம்மாவின் அழைப்பை மட்டும் எடுக்காது விடாதீர்கள் அது அவவின் கடைசி அழைப்பாக கூட இருக்கலாம்.  அப்படியே அந்த அழைப்பை எடுத்தாலும் உங்களின் உணர்வுகளை அதில் காட்டிவிடாதீர்கள். அன்பாக ஆறுதலாக தூரத்தில் இருந்தாலும் அன்பை காட்டும் ஒரே ஊடகமாக அதனை பாவியுங்கள். இல்லையேல் இந்த குற்ற உணர்ச்சியே உங்களை மெல்ல கொன்றுவிடும்.    உங்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப அடிக்கடி அம்மாவைப்போய் பாருங்கள். நான் வருகிறேன் என்று கேட்டபோது தனக்கு ஆசை தான், ஆனால் நீ வரவேண்டாம் என்று தடுக்கும் உள்ளம் அம்மாவைத்தவிர யாருக்கும் வரமுடியாது.    அம்மா ஆசைப்படும் இடங்களை/ வாழ்ந்த இடங்களை கொண்டு சென்று காட்டுங்கள். அம்மா ஆசைப்படும் உணவுகளை ஒரு தடவையேனும் வாங்கி கொடுங்கள். ஒரு முறையேனும் அம்மாவுடன் சேர்ந்து சாப்பிடுங்கள், தன் தட்டில் இருந்து உங்கள் தட்டுக்கு அம்மாபோடும் அப்பளத்திற்கு இருக்கும் சுவை உலகில் நீங்கள் எங்கு சாப்பிட்டாலும் கிடைக்காது. ஒரு முறையேனும் அம்மாவுக்கு அருகில் படுத்து உறங்குங்கள். உங்களுக்கு வியர்க்கும்போது அம்மா மட்டை எடுத்து விசுக்கும் வரம் ஒருவருக்கும் கிடைக்காது. காலையில் ஒரு முறையேனும் பல் துலக்கிவிடுங்கள், முகம் கழுவி விடுங்கள். அவ காட்டும் சாமிக்கு பூப்பறித்து வையுங்கள்.(இவையெல்லாம் நாங்கள் சிறுவயதில் இருக்கும் போது அம்மா நாள் தோறும் செய்தவை.)    அம்மா விரும்பும் பாடல்களை, படங்களை அவவுக்கு போட்டு காட்டுங்கள், அவற்றை பார்க்கும் போது அம்மாவின் முகத்தில் வரும் மலர்ச்சி உங்களின் வாழ்க்கையில் வரலாறாக பதியும்.  அம்மாவை திரும்பி எழும்பி நடக்கவைக்கும் சாத்தியங்கள் இல்லை என்று எனக்கு தெரிந்தாலும், அம்மாவின் நம்பிக்கையை எப்போதுமே உடைக்க விரும்பியதில்லை.     என் அம்மா தன் சாவுக்கு கூட நான் வந்தால் எனக்கு பிரச்சனை ஆகும் என்று வராமல் தடுக்கும் அளவுக்கு என் மீது பாசம் கொண்டவ. என் வாழ்க்கையின் மகிழ்ச்சியே தனது மகிழ்ச்சி என பல முறை சொல்லி இருக்கிறா. நான் செய்யும் வேலை என் உடலை வருத்துமா என்று அடிக்கடி கேட்பா. என்னை கஷ்டபடுத்த கூடாது என்று யாழ் சென்று வாழ நினைத்தவ. எனக்கு வேலை இல்லை என்றாலும் என் கஷ்டத்தை அம்மாவுக்கு காட்டினால் எங்கே ஒழுங்கான சாப்பாடு சாப்பிடாமல் விட்டுவிடுவா என்று கடன் வாங்கித்தான் கடந்த சில மாதங்களாக காசு அனுப்புவேன். காசு திரும்ப எப்பவும் உழைச்சு கொள்ளலாம், ஆனால் காட்டவேண்டிய அன்பை அரவணைப்பை சரியான நேரத்தில் காட்டவில்லை என்றால் எதை எப்பவும் மீளளிக்கமுடியாது.    என்னை பார்க்க ஐரோப்பா வரும்போதும் அண்ணாவை பார்க்க அவுஸ்ரேலியா போகும் போதும், அதற்கு ஆறுமாதங்களுக்கு முன்னமே அம்மாவின் தயார்படுத்தல்கள் தொடங்கிவிடும். அம்மாவின் உற்சாகத்துக்கு அளவிருக்காது. இது நாடு பார்க்கும் ஆசை அல்ல. மகன்களை / பேரப்பிள்ளைகளை பார்க்கும் ஆசை. அம்மாக்களுக்கு மட்டுமே வரும் ஆசை. தயவு செய்து தவறவிட்டுவிடாதீர்கள்.    நீங்கள் பிறந்து வளர்ந்த வீட்டில் ஒரு நாளாவது அம்மாவுடன் தங்குங்கள். அம்மாவின் கையால் ஒரு முறையேனும் ஒரு வாய் சோறேனும் சாப்பிடுங்கள். வாழ்வில் ஒரு முறையேனும் தாயை வீழ்ந்து வணங்குங்கள். அம்மா எப்பவுமே தான் பெற்ற பிள்ளைகளை சமனாகத்தான் பார்ப்பா. கம்முயூனஸம் என்றால் என்ன என்பதை அம்மாவிடம் கற்று தெரிந்து கொள்ளுங்கள்.     சாவு யாரையும் விட்டுவைப்பதில்லை. அது உங்கள் அம்மா என்று தனிப்பட்ட பரிவு காட்டப்போவதுமில்லை. பெற்ற பிள்ளைகள் நாங்கள் இருக்கும்போது பரிவுகாட்டச்சொல்லி கேட்பதில் நியாயமும் இல்லை. பரிவும் அன்பும் பாசமும் அரவணைப்பும் இன்னும் தமிழில் நிகர் சொற்களுண்டோ அனைத்தையும் அம்மா வாழும்போதே காட்ட வேண்டிய அனைத்து கடைப்பாடுகளும் எங்களுக்கே உண்டு.    “கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. நான் கண் உள்ளபோதே சூரிய வணக்கம் செய்தவன் என்ற தார்மீக உரிமையில் கேட்கிறேன். “அம்மாவை கவனியுங்கள்.” எங்கோ ஒரு ஓரத்தில் உங்களை மட்டுமே தினமும் நினைத்துருகும் ஒரு சுயனலமற்ற உயிர் உள்ளது என்றால் அது அம்மாவின் இதயதுடிப்பு மட்டும் தான்.    “தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை” “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.” “அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே” “தாய் – கடவுளின் மனித உருவம்”   இன்னும் எத்தனையோ தாய் புகழ்பாடும் குறள்களும், பாடல்களும், பழமொழிகளும் வந்தாலும், அம்மா இருக்கும்போது செய்யவேண்டியவை என்று இன்றும் எழுத வேண்டிவருகிறது என்றால் எங்கோ என்னமோ நாங்கள் பிழைவிடுகிறோம் என்று தானே அர்த்தம். எங்கள் பிழைகளை நாங்கள் மட்டுமே திருத்த முடியும் என்பது உலகறிந்த தத்துவம்.     நான் சொன்னவையெல்லாம், நான் செய்தவை இதை எல்லாம் நீங்கள் செய்யவேண்டும் என்ற கட்டளையை இடும் தார்மீக உரிமை எனக்கு இல்லை. இருந்தாலும் செய்யாமல் விடுவதால் உங்களுக்கு ஏற்படும் குற்ற உணர்ச்சிக்கு விலக்களிக்க இந்த உலகில் யாருக்குமே வலிமை இல்லை என்பது தான் மறுக்கமுடியாத உண்மை.   நான் சொன்னவையெல்லாம், நான் செய்தவை இதை எல்லாம் நீங்கள் செய்யவேண்டும் என்ற கட்டளையை இடும் தார்மீக உரிமை எனக்கு இல்லை. இருந்தாலும் செய்யாமல் விடுவதால் உங்களுக்கு ஏற்படும் குற்ற உணர்ச்சிக்கு விலக்களிக்க இந்த உலகில் யாருக்குமே வலிமை இல்லை என்பது தான் மறுக்கமுடியாத உண்மை.