Jump to content

நம்மவர் களம்: Boottu பாட்டு


Recommended Posts

Namvar_kalam-001_0.jpg
-இராமானுஜம் நிர்ஷன்-
 
காதலைப் பற்றிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் அளவுக்கு காதல் தோல்வியைப் பற்றிய பாடல்களும் அதிகமான வரவேற்பை பெறுகின்றன.
001_1.jpg
காதலியை நாசுக்காக கிண்டல் செய்வதும் காதல் தோல்வியின் விளைவுகளை ரசிக்கும்படியாகச் சொல்வதும் பாடல்களை மெருகேற்றச் செய்வதை பல சந்தர்ப்பங்களில் நாம் பார்த்து வருகிறோம்.
 
காதல் தோல்வி, வலிகளை வார்த்தைகளுக்குள் அடக்கி அதற்குப் பொருத்தமான இசையும் காட்சியமைப்புகளும் சிறப்பாக அமையும் பட்சத்தில் நிச்சயமாக அப்பாடல் வெற்றியடையும் என்பது திண்ணம்.
002_1.jpg
அந்த வகையில் காதல் தோல்வியை மையமாகக் கொண்டு நம்நாட்டுக் கலைஞர்களால் அண்மையில் வெளியிடப்பட்டு வெற்றிநடை போடும் பாடல் பற்றிய குறிப்பை இவ்வார நம்மவர் களம் பகுதியினூடாக தருகிறோம்.
003_1.jpg
வி.பிரஜீவ் இன் தயாரிப்பிலும் இசையிலும் வருண் துஷியந்தனின் வரிகளிலும் Boottu பாட்டு என்ற தலைப்போடு காதலர் தினத்தில் வெளியாகிய பாடல் இசை ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளது.
 
"சிங்கிள் ஆக வாழ்ந்தேன் மச்சி தொல்லை ஏதும் இல்ல
மிங்கிள் ஆக பார்த்தேன் மச்சி வச்சிபுட்டா பில்ல.."
 
என்று ஆரம்பமாகும் பாடல் அசத்தலான வரிகளுடன் தொடர்கிறது.
 
"சம்சாரி வாழ்க்க வேணாம் டா வேணாம்
ஒரு மாசம் கூட நாம தாங்க மாட்டோம்.." 
004_0.jpg
என்ற வரிகள் காதல் மீதான வெறுப்பை எடுத்துச் சொல்லும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன்
 
.."இது பூட்டுப் பாட்டு
அத நீங்க கேட்டு- அட
யூடியூப், பேஸ்புக் லைக்க தட்டு.." 
 
என்ற வரிகள் நடைமுறைச் சூழலில் சமூக ஊடகங்கள் படைப்பாக்கங்கள் மீது செலுத்தும் ஆதிக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
 
தெஹிவளை கடற்கரைப் பகுதியில் ஒரே நாளில் இரவு வேளையில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
 
மதுபான நிலையமொன்றில் போதையுடன் தங்களது காதல் தோல்வி பற்றிய அனுபங்களை நண்பர்களிடையே பகிர்ந்துகொள்ளும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
005.jpg
காட்சிக்கு ஏற்றாற்போல வர்ணங்களை இணைக்கும் முகமாக பின்புலங்கள் நேர்த்தியாக கலை இயக்கம் செய்யப்பட்டுள்ளது.
 
"வாந்தி எடுக்காதீர்"என்ற வாசகம் அடங்கிய பதாகை பாடலின் கருவோடு ஒத்துப்போகிறது.
ஒளிப்பதிவும் நடன இயக்கமும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. குழுவாக சேர்ந்து நடனமாடும் அனைத்து சந்தர்ப்பங்களும் காத்திரமாக படமாக்கப்பட்டுள்ளதை வரவேற்கலாம்.
 
இருப்பினும் பாடலின் இடையில் சிறுவர்கள் இருவர் இணைந்து நடித்து பாடும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது ஏனோ என்ற கேள்வி எழுகிறது.
 
இலங்கையின் முன்னணி பாடகர்களான கிருஷான் மகேஷன், சுஹைல் ஆகியோர் சிறப்பு பாடகர்களாக காட்சிகளில் தோன்றியுள்ளனர்.
 

இந்த பாடல் உருவாக்கத்தில் மொத்தமாக 55 கலைஞர்கள் பங்கேற்றுள்ளதுடன் அவர்கள் அனைவருமே தங்களுடைய பங்கினை சிறப்பாக நிறைவேற்றியருக்கிறார்கள்.

 
 
உண்மையில் இந்தப் பாடலை பார்க்கும்போது நம்நாட்டு படைப்புகள் காத்திரமானதொரு பரிணாமத்தோடு பயணிக்கத் தொடங்கியிருக்கிறது என்ற நம்பிக்கை மிளிர்கிறது.
 
தயாரிப்பு, இசை: வி.பிரஜீவ்
பாடல் வரிகள்: வருண் துஷியந்தன்
பாடியோர்: வி.பிரஜீவ், எஸ்.பிரதீப், வருண் துஷியந்தன்
நாதஸ்வரம்: குமரன் பஞ்சமூர்த்தி
சிறப்புத் தோற்றம்: கிருஷான் மஹேஷன், சுஹைல்
இயக்கம்: பாலா சுப்பிரமணியம்
கலை இயக்கம்: எஸ்.கோகுல், கோபி ரமணன்
எடிட்டிங்: எஞ்சலோ ஜோன்ஸ்
நடன அமைப்பு: ஜோயெல் கிறிஸ், நரேஷ் நாகேந்திரன்
உதவி இயக்கம்: மாதவன் மகேஸ்வரன்
ஒப்பனை:டி.திசாநாயக்க
நடனக் கலைஞர்கள்: நிஷாகரன், ரொஷான், லெனுஜன், கார்த்திகேயன், ஐசாக், சுதர்ஷன், தினுஷன், முருகப்பன் தயாளன், ஜெராட், ஜெகன் பிரதீப், பிரணவன், பிரசாத், தனுஷன், கௌஷல் பிரயா, சௌமியா, சிந்துஜா, சிந்துமதி, விவேகா.

 

http://virakesari.lk/articles/2014/03/04/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-boottu-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.