• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

அஞ்சரன்

சொல்லணும் போல தோணிச்சு ..!

Recommended Posts

1996 இடம் பெயர்வு தொடர்ச்சியா இரண்டு தரம் யாழில் இருந்து வந்து சில மாதம் ஆகவில்லை மீண்டும் கிளிநொச்சியில் இருந்து ஸ்கந்தபுரம் ஊடா மல்லாவி என்று வாழ்க்கை பயணம் போகுது அப்ப எல்லாம் அந்த வயதில் எமக்கு அவைகள் ஒரு விளையாட்டு போல புதுசா ஒரு இடத்துக்கு போறம் என்கிற நினைப்பு தவிர அதன் வலிகளை அப்பொழுது புரிய எமக்கான வயதும் அனுபவனும் போதாது தான் ...வளர்த்த நாயை கிளி வரை கொண்டுவந்து சேர்த்த எனக்கு மீண்டும் வேறிடம் கொண்டு சொல்ல முடியவில்லை மனுஷர் போக வழியை கானம் இவன் வேற நாயை கொண்டு திரியுறான் என்று அப்பா பேசிய போது அப்பொழுது வந்த கோபம் இப்ப நினைத்தால் மனம் வலிக்குது பாவம் அப்பா அன்று நான் கோவப்பட்டு இருக்க கூடாது என்று ..எம்மை காப்பதில் தான் அவரின் முழு கவனமும் இருக்கு என்று அப்பொழுது விளங்காமல் போனது வயதால் இருக்கலாம் ...

 

சரி அப்படி வந்து ஊரில தெரிந்த ஆக்கள் என்று பெயர் சொல்லி முகவரி கேட்டு எதோ ஒரு யுனிட்டாம் அங்க அவரின்  பெயர் சொன்னா தெரியாத சனம் இல்லையாம் என்று மல்லாவி சந்தியில் தேனீர் கடை வந்து இருக்கும் ஒரு கண்டி தமிழ் ஐயா சொல்ல அப்படியே இங்கினியா நேராயிட்டு போயி ஒரு உசக்க வரும் அப்புறம் அப்டியே ஒரு மதவு யிருக்கு அதுக்கு நாலாவது வுஉடு அவாறு வுஉடுதான் ...என்று சொல்லியபடி ஒரு தேனீர் கொடுத்திட்டு காசை வாங்காமல் இல்லை இல்லை மண்ணை விட்டு வாரிங்க உங்கக்கிட பணம் வாங்கினா நல்லவா இருக்கும் என்று சொன்ன அந்த மனிதன் பின்னாளில் எனது முதல் நண்பர் ஆகியது தனிக்கதை ....

 

நேரா அங்க போய் வாசலில் இறங்கி நின்று அப்பா பெயர் சொல்லி அழைக்க அவரின் மகள் தான் வந்தா அப்பா தோட்டம் போயிட்டார் நீங்க யாரு வாங்கோ இருங்கோ எல்லாம் இறக்கி வையுங்கோ அப்பா வந்திடுவார் என்று சொன்னவள் என் வயதுடன் ஒன்றி இருப்பாள் போலும் எண்ணெய் தேய்ந்த முகம் ...சீவி இழுக்காத தலை முடி நெற்றியில் கீறிய வீபூதி குறி என்று லையிட்டா ஒரு பார்வை பார்த்திட்டு பால் வைக்கிறன் இப்ப குடியுங்க அம்மா வரட்டும் முட்டை காசு வாங்க போயிட்டா என்றபடி குசினி நோக்கி போனாள் ...

 

நமக்கு என்ன இழவு இது ஒரு பெடியளும் இல்லை போல என்ன பண்ணுறது என்கிற நினைப்பு ....ஆனால் அப்பா அம்மாக்கு என்ன சொல்லுவினமோ ...இங்க கொட்டில் போடலாமா இல்லை என்றால் எங்க போறது என்கிற பிரச்சினை அவர்களின் கதையில் தெரியுது சரி பார்ப்பம் எப்ப சாமான் எல்லாம் இறக்கி வைத்து அவிட்டு எடுத்து என்னுடைய விளையாட்டு பொருள்களை எப்ப வெளியில் எடுப்பன் என்கிற நோக்கம் வேற மனதில் ஓட வெளி கதவு திறக்கும் சத்தம் ...யா யா கீர்ர் ..கீர்ர்  ம்ம் ...........இங்கின...... இங்கின........ வா ..........வா...... என்று தனது வண்டில் மாட்டுடன் கதைத்தபடி உள்ளே வந்தார் சிறி அண்ணை .பார்த்து இருந்த மகள் ஓடி சென்று வாளியில் தண்ணி நிரப்பி எடுத்து வர வண்டிலை குத்து கட்டையில் நிறுத்தி விட்டு மாட்டை அவிட்டு மகளிடம் கொடுத்து தவிடு வை என்று சொல்லியபடி யாரு பிள்ளை வீட்டில் என்று கேட்டுக்கொண்டு தோளில் இருந்த துண்டால் முகத்தை துடைத்தபடி உள்ளே வந்தார் சிறி அண்ணை ..

 

அப்பாவை கண்டவுடன் அடையலாம் பிடித்த அவர் அண்ணே என்று வேகமா வந்து கட்டி அனைத்து நின்றபோது அந்த கணம் சிரிப்பை வரவழைத்து இருந்தாலும் இப்பொழுது நினைத்தால் மனம் வெம்பி அழும் எனக்கு உறவின் பிரிவும் அதன் அருமையும் அருகில் இருக்கும்போது தெரிவதில்லை எமக்கு ...என்ன அண்ணே பிரச்சனை என்று தெரியும் யாரு நினைத்து நீங்க இங்க வருவியள் என்று ஏன் பெடியள் வெளிநாடு தானே உங்களுக்கு அப்படியே வவுனியா போயிட்டு உள்ள போகலாம் தானே ஏன் இங்க சிரமபட்டு கொண்டு இருக்குறியல் என்று சொன்னவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனக்கு நேர மூத்த அண்ணன் போராளி என்று ...இல்லை சிறி மூணாவது அவங்களோட விட்டுட்டு எப்படி போறது என்று அப்பா சொன்னபின்தான் ஆ அப்படியா கனகாலமா என்றபடி எங்கையும் போகவேணாம் இங்க இருங்கோ என்று சொல்லிக்கொண்டு பாலை தந்தார் கையில் குடியிட்டு குளியுங்கோ பின்னாடி வாய்க்கள் ஓடுது கிணறும் இருக்கு கொஞ்சம் நடந்து போனா குளம் எங்கையும் குளிக்கலாம் என்று சொன்னபோது என் மனம் எங்கும் குளம் ஆகா போயிடவேண்டியது தான் என்று சிறகடிப்பு ..

 

 

பின்னேரம் சாப்பிட்டு இருக்க அப்பா பேச்சு கொடுத்தார் எங்க ஒரு சின்ன மூலையில் ஒரு கொட்டில் போட்டு இருக்கலாம் என்று இடம் கிடைக்குமா என்பது போல ..என் வீடு என் ஏக்கர் காணி என்று இறுமாப்பா வாழ்த்த மனிதன் குறுகி நிப்பது அப்பொழுது தேவை ஆகிட்டு என்ன செய்வது அகதி வாழ்க்கை கொடுமை என்பது ஒரு பக்குவ வயதில் தான் புரிந்து போனது எமக்கு ....என்னண்ணை கதை எதுக்கு கொட்டில் மூணு பேர் இருக்க வீட்டில ஒரு அறையில் இருங்கோ அது ஒண்டும் பிரச்சினை இல்லை என்கிறார் கொலனி வீடு என்பது இரண்டு அறை ஒரு வரவேற்ப்பை கொண்டது .....அப்பா மறுக்கிறார் இல்லை அவன் பெடியன் இரவுகளில் எங்காவது போய் வரும்போது வந்து போவான் உங்களுக்கு கரைச்சல் தர விருப்ப வில்லை சிறி பெண்பிள்ளை வேற இருக்கு நாங்க எங்களுக்கு என்று ஒரு கொட்டில் போட்டால் நல்லம் அதுதான் ....சரி அப்படி போடவேணாம் இந்த மிசின் நிக்கும் கொட்டில் இருக்கு இப்ப இருங்கோ பிறகு பார்ப்பம் என்று தனது உழவு இயத்திரத்தை வெளியில் விட்டு எமக்கு இடம் தருகிறார் அந்த மனிதர் ஐந்து வருடம் அங்கேயே இருப்பம் என்று அப்பொழுது நினைக்க வில்லை கொஞ்சநாள் படுத்து எழும்ப ஒரு இடம் என்னும் மனநிலையில் தான் இருந்தோம் திரும்பி போய்விடுவம் என்று ..

 

பொழுதுகள் விடிய தனிமை அண்ணன் வந்தால் வேக்கியில் பாவிக்காத பற்ரி தருவான் ஏப் எம் கேட்க அவனுக்கும் தெரியாது  எங்க இருக்கிறம் என்று அப்பா அரசியல் துறையில் முகவரி மாற்றி கொடுங்கோ என்று விடிய நான் சொல்லிக்கொண்டு இருக்க அம்மா சொன்னா முதல் பள்ளிக்கூடம் எங்க கிட்ட இருக்கு என்று பார்த்து வாங்க இவனை சேர்க்க என்று நமக்கு உள் மனதில் இப்ப இது முக்கியம் படிப்பு இருக்க இடம் இல்லை என்று நினைத்தபடி இருக்க அந்த பிள்ளை அன்ரி என்றபடி உள்ள வருகுது ....என்ன சமையல் என்று அம்மா கேட்டவா சமான் ஒன்றும்  வாங்க வேணாம் எல்லாம் வீட்டுக்கு பின்னுக்கு உள்ள கொட்டிலில் இருக்கு எடுத்து சமைக்க சொன்னவா விதானை வீடுக்கு போயிட்டா உரம் கொடுக்கிறாங்க பதிய என்று ஒரு முச்சில சொல்லிட்டு போக எங்க அம்மா ஒரு கொஞ்ச வெங்காயம் இவனிடம் கொடுத்து விடு பிள்ளை என்று போடா போய் வாங்கிவா என்று அனுப்ப நானும் பூட்டாமல் கிடந்த சேட் தேறியை ஒருக்கா சரிபார்த்து பூட்டிக்கொண்டு போகிறேன் பின்னாடி ...

 

அங்கின போனா எல்லா இடமும் மரக்கறி வெங்காயம் கட்டி தொங்குது ...இரண்டு கரையும் நெல்லு மூடை ..வத்தல் அது இது என்று ஒரு சந்தை போல இருக்கு உங்களுகு மட்டுமா இவ்வளவும் என்று முதல் பேச்சை கொடுக்கிறேன் ஓம் என்றபடி ஒரு வெங்காய தொகுதியில் இருந்து ஒரு பிடியை அறுத்து எடுக்கிறாள் கிட்ட தட்ட மூணு கிலோ வரும் அதுதான் கொஞ்ச வெங்காயமாம் இந்த பிடியும் என்று ஒரு மரியாதையை கலந்த குரலில் சொல்கிறாள் நமக்கு அழகி படம் மனத்திரையில் ஓடுது அப்ப அல்ல இப்ப நினைத்தால் ;) ..அப்படியே பின்னாளில் இடம்பெயர்வு வர வர ஓவரு குடும்பமா வந்து வந்து 13 குடும்பம் நாலு ஏக்கர் காணியில் கொட்டில் போட்டு ஒரு முகாம் போல ஆகிட்டு அங்க நான் மட்டுமே சின்னவன் மிகுத்து குடும்பம் எல்லாம் பெரியவர்கள் பெரும்பாலும் பெண் பிள்ளைகள் பின்னேரம் ஆனால் கிளிகோடு ...தாயம் ...காஸ்ட் ...ஒளிச்சு பிடிச்சது ..பேணிப்பந்து என்று கலோபரமே நடக்கும் அந்த கணியில் காலையில் எழும்பி யாரு முதல் நித்திரை கொள்பவர்களுக்கு தண்ணி ஊற்றி எழுப்புவது என்று தொடங்கும் சகோதர யுத்தங்கள் அக்காவா ..தம்பியா ..அண்ணனா ..தோழியா ...நண்பனா என்று பல உறவு ஒரு கூட்டு கிளிகளா வீட்டில் சாப்பிட வேணும் என்கிற நினைப்பு இல்லை எங்க நிக்கிறமோ அங்க சாப்பிட்டு வளர்த்த காலம் அது ...

 

பின்னாளில் தாண்டிக்குளம் பதை திறப்பு எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமா போக தொடங்க பிரிதல் ..அழுகை ..சோகம் ..மீண்டும் பிள்ளைகள் வாழவேனும் அங்கால போனா கலியாணம் எதாவது கட்டி வைத்து விடலாம் இங்க இருந்து என்ன பண்ணுறது உழைப்பு பிழைப்பு இல்லாமல் என்கிற வசனமே அதிகமா கதையில் இருக்கும் ..அப்பத்தான் வானம் பாடி என்று ஒரு ரோடியோ இருந்தது உமா சந்திரன் சிவலோகநாதன் என்று ஒரு ஆள் மொக்கை போட்டுகொண்டு இருப்பா கலையில் தொடங்கும் ''வெள்ளி சிறகடிக்கும் வெண்புறாவே இன்னும் நீ வரவில்லையோ வெண்புறாவே''' என்கிற பாட்டு வவுனியாவில் இருந்து ஒரு மாற்று இயக்கம் நடத்திய வானொலி அது அதில்தான் இரவு நேரம் வவுனியாக்கு உள்ளே போன ஆக்கள் எல்லாம் வந்து சேர்த்திட்டம் என்று தொலைபேசி தகவல் சொல்லுவினாம் பாட்டுக்கு இடையில் இந்த கூத்து நடக்கும் நிங்கள் என்ன சொல்ல நினைக்கிறியள் என்று கேட்டல் அங்க போனவுடன் அவர்கள் உடனம் வாயில இங்கிலிஸ் வந்திடும் வன்னியில் ஐயா அம்மா என்று கதைத்தவ போனில் கதைக்கும்போது .....மாறிடும் எல்லாம் ..

 

நான் அகிலா பேசுறன் நாங்க சுகமா வந்து சேர்த்திட்டம் உள்ள அங்கிள் வந்து கூட்டிக்கொண்டு போனவர் ஊரில இருக்கும் பெரியம்மா சித்தி மச்சாள் அனைவருக்கும் இதை தெரிய படுத்துறன் நான் பிறகு லெட்டர் போடுறன் எங்க நிவு அட்ட்ராஸ் ஓகே ...சோ நாங்க இப்ப ஓகே நிங்களும் முடித்தா வர ரைபன்னுங்கோ இங்க ஒரு பிரச்சினையும் இல்லை (ஒரு ஐந்து கிலோமிட்டர் கடந்து நின்று கொண்டு போடுற அலைப்பரை அளவே இல்லை எதோ ஐரோப்பா வந்தது போல போனை போட்டு அலட்டுங்கள் ) ஒ அகிலாக்கா பேசுறா எங்களை பற்றி எதாவது சொல்லுவா என்றால் அது நடக்காது இவ்வளவு நாள் அன்பா நேச பாசமா இருந்த மனிதர்கள் தங்களுக்கான பாதுகாப்பு கிடைத்தவுடன் மாறி விடுவது இயல்புதானே ...பின்னாளில் அவர் வானம்பாடி முழுநேர நேயரா மாறி இருப்பா அது வேற கதை ...

 

இப்படி போராட்ட வாழ்வியலில் தங்களை தங்கள் குடும்பத்தை விட்டு தப்பி பிழைக்க வெளியில் வந்தோரும் உண்டு.. உயிர் போனாலும் இங்கின போகட்டும் அவன் பக்கம் போறது இல்லை என்று பிடிவாதமா இருந்தவர்களும் உண்டு இப்படி ஒரு பல கோணங்கள் உள்ளடங்கிய கூட்டு இனமா இருந்த நாம் எல்லாம் முள்ளிவாய்க்கால் முடிந்து இனி என்ன அப்பாடா என்று இருந்தவர்கள் எல்லாம் ஒரு இழப்பின் வலியும் ..உப்பு இல்லாத அருமையும் வருடங்கள் கடந்து விளங்கி இப்பொழுது ஒருமித்து குரல் கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளோம் என்றால் எதுக்கு போராடினம் என்பது வானம்பாடியில் பாட்டு கேட்கும் போது புரியவில்லை தப்பி எப்படியாவது இங்கின வாங்க என்று சொல்லும்போது புரியவில்லை இப்பொழுது தன் மகளை ஆமி பார்த்து கண்ணடிக்கிறான் என்றவுடன் வன்னியை தேடுது ஆனால் வன்னி அதே பழைய வன்னியா இல்லை என்பது புரியாத மனது . :(:(

 

Share this post


Link to post
Share on other sites
அஞ்சரன் அருமையான ஒரு மீளும் நினைவு. பலவற்றை நாம் இழந்து போனோம். இடப்பெயர்விலும் எத்தனையோ அனுபவங்கள் இனிமையான நினைவுகள். இழப்பதற்கு எதுவுமற்ற போதும் உறவுகளின் ஆறுதலில் வாழ்ந்த காலங்கள் எல்லாம் நினைவு வருகிறது. உங்கள் எழுத்தின் ஆழுமை இந்த பகிர்வில் மேலும் வலிமையாக இருக்கிறது. 
 
பழைய வன்னி இனி எப்போதும் எங்களது தலைமுறையில் திரும்ப கிடைக்கப்போவதில்லை. எனினும் பழைய நினைவுகள் மீண்டும் வன்னித் தெருக்களில் நடந்து போக வைக்கிறது.
 
ஒளியிலே தெரிந்த தேவதையையும் ஒருக்கா நினைச்சுப் பாத்திட்டியள் :lol: .(வீட்டில மச்சினி தாற அடிக்கு நான் பொறுப்பில்லை :icon_idea: )

Share this post


Link to post
Share on other sites

நன்றி உறவுகள் உங்கள் வரவுக்கும் விருப்புக்கும் ..

 

கண்டிப்பா சாந்தியக்கா அப்படி ஒரு காலம் இனி கிடைக்க போறது இல்லை தான்  :(  :(

 

வாழ்க்கையில் சில அடிகள் விழுவது சாதாரணம் அக்கோ  :D  :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

வாழ்க்கையில் சில அடிகள் விழுவது சாதாரணம் அக்கோ  :D  :icon_idea:

அடி றெம்பப்பலமோ ராசா ? :lol:

Share this post


Link to post
Share on other sites

அடி றெம்பப்பலமோ ராசா ? :lol:

சரி விடுங்க இருந்திட்டு போகுது அக்கோ . :D

Share this post


Link to post
Share on other sites

நான் பார்த்த வன்னி 1976 க்கு முன்னரானது.
காடுகளும் அரை மைலுக்கு ஒரு வீடும் மரங்களில் குரங்குகளும்..
இரவுகளில் யானை வரும்போது அடிக்கும் மணிச் சத்தமும்..
அதிகாலையில் முறிந்து கிடக்கும் வாழைமரங்களும்..

புதுக்குடியிருப்புச் சந்தையும்.. 

காட்டு மரங்களை வெட்டிக் களவாக ஏற்றிச் செல்லும் பார ஊர்திகளின் சத்தமும்..

தாமரை குளத்தில் குளிக்கும் காட்சியும்...

மண் வீதிகளும் அதிலே ஊர்ந்து செல்லும் பேரூந்துகளும்.. 

தான் வன்னியென்றால் எனது கண்முன் வந்துபோகும்.
பகிர்விற்கு நன்றி அஞ்சரன்

Share this post


Link to post
Share on other sites

நான் பார்த்த வன்னி 1976 க்கு முன்னரானது.

காடுகளும் அரை மைலுக்கு ஒரு வீடும் மரங்களில் குரங்குகளும்..

இரவுகளில் யானை வரும்போது அடிக்கும் மணிச் சத்தமும்..

அதிகாலையில் முறிந்து கிடக்கும் வாழைமரங்களும்..

புதுக்குடியிருப்புச் சந்தையும்.. 

காட்டு மரங்களை வெட்டிக் களவாக ஏற்றிச் செல்லும் பார ஊர்திகளின் சத்தமும்..

தாமரை குளத்தில் குளிக்கும் காட்சியும்...

மண் வீதிகளும் அதிலே ஊர்ந்து செல்லும் பேரூந்துகளும்.. 

தான் வன்னியென்றால் எனது கண்முன் வந்துபோகும்.

பகிர்விற்கு நன்றி அஞ்சரன்

அதன் பின்னர்ரான வன்னி உறவு பிணைப்புக்களால் ஆனது வாத்தியார் ...நன்றி வரவுக்கு கருத்துக்கு .

Share this post


Link to post
Share on other sites

வன்னி மண்ணையும் மக்களையும் கண் முன்னே கொண்டுவந்த அஞ்சரனுக்கு நன்றிகள்.

அந்த மக்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். அன்பையும் உறவையும் பிரதிபலன் எதிர்பார்க்காமலே காட்டக்கூடிய உன்னத உலகம் அது.

அங்கே இருந்து வெளியில் வந்த பிறகு தான் தெரிகிறது. இந்த உலகம் எவ்வளவு கேடு கெட்டது என்று.

ஒருமுறை முக்கியமான ஒரு சந்திப்புக்காக தர்மபுரம் உழவனூர் செல்ல வேண்டி இருந்தது. வழி முழுவதும் புழுதி பாதை. முன்னால் சென்ற லொறிக்காரன் வேற எனக்கு புழுதியை வாரி இறைத்துவிட்டு போனான்.

யார் என்றே தெரியாத ஒரு வீட்டில் (குடிசையிலே) போய் முகம் கழுவ முடியுமா என்று கேட்டேன். அவர்களும் கிணத்தடியை காட்ட, சீருடையை கழட்டி ஒரு மரகொப்பிலே கொழுவி விட்டு போனேன்.

முகம் கழுவிவிட்டு நன்றி சொல்ல வந்த போது, தேநீரை நீட்டினார் ஒரு அம்மா, கூடவே ஒரு ஐயாவும். பருகும் வரை மகிழ்வோடு பாத்திருந்தார்கள்.

சந்திப்பு முடிந்து, எனது குறிப்பு ஒன்றை சீருடை பையினுள் வைக்கும் போது தான் பார்த்தேன் ஒரு 1000 ரூபாய் தாள் உள்ளே இருந்தது.

ஓரளவு ஊகித்து, நான் முகம் கழுவ சென்ற வீடுக்கு சென்றபோது, அவர்கள் வளர்த்த ஒரே ஆட்டை வித்து அந்த பணத்தை எனக்கு தந்திருந்தது தெரிந்தது.

தம்பி உங்களுக்கு பிடிச்சதை வேண்டி சாப்பிடுங்கள் என்று அந்த பெரியவரும் அம்மாவம் சொன்னபோது உண்மையான அன்பு அந்த முகங்களில் தெரிந்தது.

Share this post


Link to post
Share on other sites

வன்னிமண்ணின் மகிமைக்கு நன்றிகள்

Share this post


Link to post
Share on other sites

உங்கள் அனுபவப்பகிர்வை வாசிக்கும் போது, 'ஏக்கம்' மட்டுமே மிஞ்சி நிற்கின்றது!

 

எவ்வளவை, இழந்து விட்டோம் என்பது, வெறும் நாணயத் தாள்களைக் கொண்டு அளந்து விட இயலாதது!

 

உறவுகள், நட்புகள், அவர்களின் தனித்துவமான பாரம்பரிய குணாதிசயங்கள், என்பவை எல்லோரது உள்ளங்களிலும், நினைவுகளாக வாழ்ந்திருந்து, ஒரு நாளில் உயிர்த்தெழும் எனும் நம்பிக்கை இன்னும் உள்ளது!

 

நன்றிகள், அஞ்சரன்! 

Share this post


Link to post
Share on other sites

வாத்தியார் சொன்ன அந்த வன்னிதான் என் கண் முன்னாலும் நிக்குது !

 

நான் முள்ளியவளையில் இருந்த காலம் , முல்லைத்தீவில்  வேலை . காலையில் அத்தானுடன் மோட்டார் சைக்கிளில் செல்வேன். மாலையில் பஸ்ஸில் வருவேன். ஒருமுறை பஸ்சோ வேரு வாகனங்களோ கிடைக்கவில்லை. அதனால் அந்த பஸ் தரிப்பிடத்திலிருந்து எங்கள் வீடுவரை நடந்து வந்தேன். நடக்கும் அடி எண்ணிக்கொன்டு. (10893 அடிகள்). மறக்கவில்லை. வழியில் கடலேரியில் நிரையப் பறவைகள். கொக்கு, நாரை, கூழக்கடா என்று. பின் தண்ணீரூற்று தாண்டி பெரிய தாட்டன் குரங்கு ஒன்று விட்டுத் திரத்தியது...!

 

நன்றி அஞ்சரன்...!! :)

Share this post


Link to post
Share on other sites

புத்தன் ..புங்கையுரான் ...சுவி அண்ணே அனைவருக்கும் நன்றிகள் வரவுக்கு கருத்துக்கும் ...

 

என்ன செய்வது இரை மீட்டவே முடியுது கடந்த காலங்களை  :(  :(

Share this post


Link to post
Share on other sites