Jump to content

வேட்டையாடு விளையாடு Block Buster ஹிட்டா?


Recommended Posts

சமீபத்தில் பல தடைகளைத் தாண்டி ரிலீஸ் செய்யப்பட்ட "வேட்டையாடு விளையாடு" திரைப்படம் கமல்ஹாசனே எதிர்பார்க்காத அபார வெற்றியை அவருக்குத் தந்திருப்பதாகத் தெரிகிறது....

படத்துக்கு இருந்த மிகப்பெரும் எதிர்பார்ப்பால் ஓபனிங் கலெக்சனில் சந்திரமுகி, அந்நியன் திரைப்படங்களில் ரெகார்டை உடைத்த வேட்டையாடு விளையாடு இரண்டாவது வாரத்தில் கடுமையான சரிவைச் சந்தித்தது.... படம் ஆவரேஜ் ஹிட் எனப்படும் வகையில் தான் இருந்தது....

ஆனால் மூன்றாவது வாரத்தில் திடீரென Gear போட்டு கிளம்பி பட்டையைக் கிளப்பி வருகிறது.... இதுவரை சென்னை தியேட்டர்கள் கற்பனை கூட செய்துப் பார்க்காத அளவில் வசூலை வாரி குவிக்கத் தொடங்கியிருக்கிறது.... ஆகஸ்ட் 25 அன்று வெளியான இந்த திரைப்படம் செப்டம்பர் 6 வரை சென்னை தியேட்டர்களில் மட்டும் சுமார் ஒண்ணேமுக்கால் கோடி வரை வசூலித்து அபார சாதனை புரிந்திருக்கிறது.... இதற்கு முன் சாதனை செய்த சந்திரமுகி, அந்நியன், கஜினி திரைப்படங்களின் வசூல் சாதனையை அநாயசமாக அடித்து நொறுக்கியிருக்கிறது.... கமலோ அல்லது படத்தின் தயாரிப்பாளரோ (அவருக்கு பட்டை நாமம் தானாம்) படத்தை விநியோகம் செய்த ஆஸ்கர் பிலிம்ஸோ கூட கனவில் கூட இந்த சாதனையை நினைத்துப் பார்த்திருக்க முடியாது....

கமல் படங்களுக்கு வழக்கம் போல இருக்கும் டல்லான B & C ஓபனிங் தான் இந்தப் படத்துக்கும் இருந்தது.... இப்போது அந்த சென்டர்களிலும் கூட பட்டையைக் கிளப்பி வருகிறதாம்... குறிப்பாக மதுரை, ராமநாதபுரம் மற்றும் கோவை ஏரியாக்களில் படம் 3வது வார வசூலில் சிகரம் கண்டிருக்கிறது....

டிக்கெட்டு விலை எவரெஸ்ட் உயரத்தில் இருந்தாலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் வேட்டையாடு விளையாடு தமிழக அரசின் கேளிக்கை வரி சலுகையால் விநியோகஸ்தர்களுக்கு "லம்பான" லாபத்தை கொடுத்திருக்கக் கூடும்....

நிச்சயமாக இது பிளாக் பஸ்டர் ஹிட் தான்....

இந்தப் படத்தின் அபார வெற்றியால் சென்ற வாரம் வெளியான சில்லென்று ஒரு காதல் மற்றும் எம்(டன்) மகன் திரைப்படங்களின் வசூல் பாதிக்கப்பட்டிருக்கிறது...

3 வாரமாக இந்தப் படத்தைப் பார்க்க திரையரங்கை முற்றுகையிட்டு டிக்கெட் கிடைக்காமல் நொந்துப் போய் வருகிறேன்.... எப்படியும் இந்த வாரம் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுகிறேன்....

(http://madippakkam.blogspot.com)

Link to comment
Share on other sites

நான் பார்த்து விட்டேன் எண்டு சொல்லும் அளவுக்கு விலம்பரங்களிலேயே முக்கால வாசிபடைதையும் காட்டி விட்டார்கள்....!

கதை ஓரளவுக்கு தெரியும் என்பதால் (கமல் படம் பிடிக்காது) என்பதாலும் பிறகு பாக்கலாம் எண்டு தள்ளி வச்சாச்சு...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்து விட்டேன் எண்டு சொல்லும் அளவுக்கு விலம்பரங்களிலேயே முக்கால வாசிபடைதையும் காட்டி விட்டார்கள்....!

கதை ஓரளவுக்கு தெரியும் என்பதால் (கமல் படம் பிடிக்காது) என்பதாலும் பிறகு பாக்கலாம் எண்டு தள்ளி வச்சாச்சு...!

நல்ல கொள்கை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.