• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

சிறு பொறி .....

Recommended Posts

காமாட்சி அம்மா,  பேரன் விளையாடி கொண்டு இருப்ப தை பார்த்து கொண்டு அருகில் இருந்த  படிக்கட்டில் இருந்தார்.  பக்கத்து வீட்டு   பொபி .. பேரன்  சங்கர் ...முன் வீட்டு மைக் ...இவர்கள்  விளையாட  ஆரம்பித்தால் பொழுதுபோவதே தெரியாமல் விளையாடுவார்கள் .கால  நிலை நன்றாக் இருந்தால் மட்டு இது  நடக்கும்  இடையிடையே பேரன் சங்கர் ... அம்மம்மா  ஜூஸ் என்றும் சிப்ஸ் என்றும் உள்ளே வந்துபோவான். குளிர் காலங்களில் கம்புட்டர்  கேம்  என்று ... கூப்பிடுவதும் கேட்காமல்  வி ளை யாடுவார்கள்.

 

 

அன்று வழக்கம்போலவே    விளையாடி விட்டு . குளிக்க செல்லும்போது அம்மாம்மா எனக்கு முட்டையும் பானும் தாங்கோ என்றான். ஓம் ராசா என்றவள் ..இவள் வேணி யையும் இன்னும் காணவில்லை மணி  ஏழாகி விட்டது பேரனுக்கு பசி  போலும் என்று .. முட்டை  பொரிக்க  ஆயத்தமானார்.  தேவையான வெங்காயம்  பாதி  பச்சை  மிளகாய் .சிறு டெலி மீட்  துண்டுகள் என்று ... பேரனுக்கு  விருப்ப  மான  முறையில்  ஆயத்தப் படுத்தினாள் . முதலில்   முன்னிருந்த அடுப்பை போட்டவள்   அது உள்ளே இருந் சமையல்  நுனிக்கைகளினால்   புகைக்க ஆரம்பித்த து ... உடனே அணைத்து விட்டு .. மறு  அடுப்பை போட்டு  பொரிக்க  ஆரம்பித்தாள் . . . இரண்டுமுட்டை களை உடைத்து  ஊற்றினாள்  முட்டை பெட்டியை ..ஏற்கனவே  அணைத்த  அடுப்பின் மீது வைத்தாள்   ...முட்டை யை பொரித்து கொண்டு இருக்கும்போது ஒரு வாசனை...... பேப்பர் எரிவது போல..அட டா.. முட்டை பெட்டியில்  புகை வந்துவிட்டதே  என  ..அதை ஊதி அனைத்து விட்டு  மீண்டும் பிரிட்ஜ்  இனுள் வைத்து விட்டாள் . 

 

 

முட்டை பொரி த்து  பாணும் முட்டை யும்  சாப் பிட்டு  விட்டு பேரன்  விட் டுப் பாடம் செய்வதில் மும்முரமாக் இருந்தான்.  இடையில்  அடுப்பில்  ஏதும்  சமைக்கிரீங்க்க்ளா  அம்மம்மா  எனக் கேட்டான். இல்லை யே எல் லாம் முடிந்து கழுவி வைத்துவிட் டேன் என்றாள் 

.

 

ஒரு அரைமணி நேரத்தில் வேணி யும் கணவனும்  வந்துவிட் டார்கள். ...அம்மா ஏதும் சமைத்தீர்களா?..எதோ மணக்கிறதே என்றாள்    வேணி ...  இல்லை பிள்ளை இவனுக்கு முட்டை    பொரித்து சா ப்பாடு கொடுத்தேன்..என்றார்.. தங்களுக்கு தேநீர்  போட பால் எடுக்க திறந்த வேணி புகைமூட்ட த்தால் இருமினாள் ... முட்டை  பெட்டி புகைந்து கொண்டு இருந்தது ..... அப்பா அப்பா......... பிரிஜ் ...எல்லாம் ஒரே  புகை.    என்னம்மா செய்தீர்கள்    ஒரே கத்தல்.....அப்போது தான்  விழித்துக்  கொண்டார் அம்மா ...

 

 

ஒரு தடவை அணைத்த அடுப்பின் பின் மீது   வைத்த முட்டைபெட்டி நினைவு  வந்தது.   நடந்தததை  சொன்னார்... உடனே மருமகன் பிரிஜை  நிறுத்தி ...(ஆப்) ...எல்லாம்  வெளியே  எடுத்து .. துப்புரவு  செய்தும்  மண ம்போகவில்லை. ,,,ஏற்கனவே மாமியாருடன் கொஞ்சம்  அப்படி இப்படி .. ....நான் சொன்னேன்   கேட்டாயா .... அம்மாவை அடுப்பு போட  விடாதே என்று ...வேணியும் அவள் பாட்டுக்கு எல்லாம் இருக்கு தானே அம்மா ஏன் சமைக்கக்  வெளிக்கிட்ட  நீங்கள்... என்று அவள்  பாட்டுக்கு சத்தமிட்டாள் ... வீடு அல்லோல கல்லோலப்பட்டது ..... அம்மம்மா தன்  விதியை நொந்தார்....பின்பு ஊது பத்தி கொளுத்தி .. நீரும்  வினிகரும் சேர்த்து   கொதிக்க் வைத்து .. காற்றாடியை நன்கு சுழல விட்டு ஒருவாறு ஓய்ந்தது ...

.மற்றவர்களுக்கு இது ஒருபாடமாக  அமையட்டும் பெரும் விபத்துக்கள் நடப்பது ... பெரும்பாலும் தீயினால். ...வீட் டுக்கு தீ அலாரமும் முக்கியம் இங்கு கனடாவில் கண்டிப்பாக் பொருத்த வேண்டும்  இல்லா ட்டால் தண்ட பணம்   கட்ட  வேண்டும்  .நம்மவர் சமையலுக்கு...... பொரிப்பது   வெங்காயம்  வதக்கு வது   ச மையல்செய் யும்   போது   வரும் தொலைபேசி ..... மிக மிக அவதானம் தேவை ......

இது ஒரு சம்பவம் மட்டுமே  விழிப்பு னர்வுகாக் பதிய பட் ட உண்மைக்கதை .

Share this post


Link to post
Share on other sites

நன்றி  பாட்டி

 

Share this post


Link to post
Share on other sites

நன்றி நிலாக்கா பகிர்வுக்கு.. சமையலறையில் ஒரு தீ அணைப்பு பொறியை வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துவார்கள் எமது அலுவலகத்தில். 

Share this post


Link to post
Share on other sites

அது மட்டுமல்ல , அதிகமான பெண்கள் சமைக்கும்போது தொள தொள கவுனுடன் முன்னெ இருக்கும் அடுப்பின் அருகே நின்றும் சமைப்பார்கள் , கையில் போனும் இருந்தால் வயிறு சுடுமட்டும் எதுவும் தெரியாது...!

 

பகிர்வுக்கு நன்றி சகோதரி...!!

Share this post


Link to post
Share on other sites