Jump to content

40வது சதத்தை அடித்த சச்சின் டெண்டுல்கர்


Recommended Posts

லாலம்பூர்:

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக கோலாலம்பூரில் இன்று நடந்து வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்தார். இது அவருக்கு 40வது ஒரு நாள் சதமாகும்.

இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, மேற்கு இந்திய தீவுகள் அணியை அபாரமாக தோற்கடித்தது.

இன்று இந்தியாவுக்கும்,மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டிராவிடும், சச்சின் டெண்டுல்கரும் களம் இறங்கினர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சச்சின் களம் இறங்கியதால் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதை பொய்யாக்காத விதத்தில் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆட ஆரம்பித்தார் சச்சின்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்த சச்சின் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடி வந்த சச்சின் தனது சதத்தை எடுத்தார்.

உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்து வந்த சச்சினுக்கு இந்த சதம் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. அத்தோடு தனது ஆட்டத் திறன் குறித்து நிலவி வந்த சர்ச்சைகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

107 ரன்களுடன் சச்சின் தொடர்ந்து ஆடி வருகிறார். அவருடன் சுரேஷ் ரெய்னா ஆடி வருகிறார். இந்திய அணி 43.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்துள்ளது.

சச்சினுக்கு இது 40வது ஒரு நாள் சதமாகும். ஒரு நாள் போட்டிகளில் 16,500 ரன்களை சச்சின் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 35 சதங்கள் எடுத்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2006/09.../14/sachin.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இவர் தமிழன் தானே எங்கன்ட ஆள் தானே அப்ப இவர் யாழ்பாணம் எவ்விடம் பார்க்க என்னோட விளையாடின மாதிரி தான் இருக்கு இவனின்ட பெயர் சச்சிதானந்தன் சச்சின் என்று மாற்றி இருக்கிறான் உது தான் தமிழனின்ட வேளை

:roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

தம்பி இவர் தமிழன் தானே எங்கன்ட ஆள் தானே அப்ப இவர் யாழ்பாணம் எவ்விடம் பார்க்க என்னோட விளையாடின மாதிரி தான் இருக்கு இவனின்ட பெயர் சச்சிதானந்தன் சச்சின் என்று மாற்றி இருக்கிறான் உது தான் தமிழனின்ட வேளை

:roll: :roll: :roll: :roll:

இது தங்களுக்கே ஓவரா தெரியவில்லையா

:roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையாவது ஓவரோ :?: முதலாவது ஓவர் தான்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.