Jump to content

முதலாம் கூகிள் பேரரசு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதலாம் கூகிள் பேரரசு

google-office.jpg

ரோமாபுரிப் பேரரசு, பிரிட்டிஷ் பேரரசு என்று உலகைப் பல பேரரசுகள் ஆட்டிப்படைத்துள்ளன. படை பலம், ஆயுத பலம், கடல் பரப்பை ஆளும் திறன், அறிவியல் திறன் ஆகியவற்றோடு அரசியல் தந்திரத்தையும் இணைத்து இந்தப் பேரரசுகள் மற்ற நாடுகளையும் பிற இன மக்களையும் ஆட்கொண்டு அடிமைப்படுத்தின. இது வரலாறு நமக்குச் சொல்லும் பாடம். இன்னாள் வல்லரசுகளுக்குப் படை பலம், ஆயுத பலம் ஆகியவற்றோடு தகவல் தொழில்நுட்பப் பலமும் புதிய வியாபார உத்திகளும் தேவைப்படுகின்றன. அந்த வகையில், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், கூகிள், ஆகியவற்றை இன்றைய வல்லரசுகள் என்று அழைக்கமுடியும். இவர்களுடைய முக்கிய அடையாளங்கள் :

1.உலகின் பல நாடுகளில் இவர்களுடைய வர்த்தகம் நடைபெறுகிறது.

2.சந்தையில் புதிய சேவைகள் அல்லது பொருள்கள் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.

3.தனிமனிதர்களின் தகவல் பரிமாற்றத் தேவைகளைப் பூர்த்திசெய்கிறார்கள்.

4.தனிநபர்களுக்கு மிகக் குறைந்த கட்டணம் அல்லது முற்றிலும் இலவச சேவை.

5.பங்குச் சந்தையில் நல்ல பெயர்; நல்ல பங்கு விலை.

சில வருடம் முன்பு ஆப்பிள் கம்பெனியின் ரொக்க கையிருப்பு வல்லரசான அமெரிக்க அரசாங்கத்தைவிடவும் அதிகம் என்ற செய்தி நம்மை ஆச்சரியப்பட வைத்தது. ஆப்பிள் மாக், ஆப்பிள் ஐபாட், ஆப்பிள் ஐபேட் ஆகியவற்றின் மூலம் ஆப்பிள் கம்பெனியும் வின்டோஸ் போன்ற மென்பொருள்கள் மூலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஒரு வல்லரசுக்கு நிகராக வளர்ச்சியடைந்தன.

கூகிள் : ஒரு வெற்றிக் கதை

ஒப்பீட்டளவில் மொத்த வருமானம் என்று பார்த்தால் முதலில் வருவது ஆப்பிள் (171 பில்லியன் டாலர்), பிறகு மைக்ரோசாஃப்ட் (77 பில்லியன் டாலர்). மூன்றாவதாக நெருக்கமாக கூகிள் (59.8 பில்லியன் டாலர்). இருந்தும் இந்த இரண்டையும் விட்டுவிட்டு கூகிளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதற்குக் காரணம் ஆப்பிள் வருமானத்தை கூகிள் முந்தும் காலம் தொலைவில் இல்லை என்பதுதான். காரணம் பதினைந்தே ஆண்டுகளில் கூகிள் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளது.

கூகிளோடு ஒப்பிடும்போது ஷெல், எக்ஸான் போன்ற தனியார் நிறுவனங்களும்கூட வல்லரசு போன்றவைதான் என்றாலும் கூகிள் அளவுக்கு நம் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் சக்தி அவற்றுக்கு இல்லை.

கூகிள் ஒரு வல்லரசாக உயர்ந்து நிற்பதற்கு என்ன காரணம் என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். ரிஸர்ச் அண்ட் டெவலப்மெண்ட் பிரிவு, ஆராய்ச்சியாளர்கள் குழு, புதிய தொழில் நுட்பம், பணம் பண்ணும் உத்திகள் ஆகியவையே கூகிள் நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. அனைத்துக்கும் மேலாக அதன் மிகப் பெரும் பலம், ரெஸ்பான்ஸ் டைம் என்று சொல்லப்படும் தேடும் பொருளைக் கண்சிமிட்டும் நேரத்தில் கொண்டு வந்து தரும் ஆற்றல். உங்கள் தேடல் என்னவாக இருந்தாலும் ஆயிரக்கணக்கான பக்கங்களை கூகிளால் உடனே உடனே கொண்டுவந்து உங்கள் முன்னால் கொட்டமுடியும். யாஹூ, பிங் போன்றவர்களால் கூகிளுக்கு அருகில்கூட நெருங்க முடியாது. கடந்த முப்பதாண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றம் கூகிளின் பயன்பாட்டைப் பல மடங்கு பெருக்கியிருக்கிறது.

இன்றைய உலகில் தகவல் தான் செல்வம். இதைத் திறமையாகப் பயன்படுத்திக்கொண்ட அமெரிக்க நிறுவனங்களில் ஒன்று கூகிள். 1997&98 வாக்கில் முதன் முதலில் கூகிள் தொடங்கப்பட்டபோது தேடும் கருவியாக மட்டுமே அது உருவானது. யாஹூ, ஆல்டாவிஸ்தா போன்ற தேடல் பொறிகளோடு ஒப்பிடும்போது புதிதாக வந்த கூகிள் பல வகையில் மிகச் சிறப்பாக இருந்தது. உதாரணமாக நீங்கள் ‘சிவாஜி’ என்ற சொல்லை கூகிளில் தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். கூகிள் தரும் முடிவுகள் (எண்ணிக்கையில்) 70 லட்சம் வலை தளங்கள்! யாஹூ தருவது 25 லட்சம் மட்டுமே. இத்தனை லட்சம் முடிவுகளைத் தருவது மட்டுமல்ல கூகிளின் சிறப்பு. எந்தெந்த வலைத்தளங்களை முதல் பக்கத்தில் காண்பிக்கவேண்டும், எந்த அடிப்படையில் வரிசைப்படுத்தவேண்டும் போன்ற நுணுக்கமான விஷயங்களிலும் கூகிள் முன்னணியில் இருக்கிறது.

கூகிளின் வெற்றிக்கு மற்றொரு முக்கியக் காரணம் தகவல்களைச் சேமிக்கும் வசதி பெருகியதும், அதற்கான செலவினம் குறைந்ததும்தான். கணினி சேமிப்பு (டிஸ்க்) விலை முந்தைய காலங்களில் எப்படி இருந்து இப்போது எப்படி உள்ளது என்பதைப் பார்த்தால் இதைப் புரிந்துகொள்ளமுடியும்.

1980: 1 டாலர். 293 பைட் சேமிக்கலாம். அதாவது, 10 வரிகள் அல்லது கால் பக்கம்.

2000: 1 டாலர். 171 மெகா பைட். (எம்.ஜி)

2013: 1 டாலர். 25,000 எம்.ஜி. சுமார் 3 லட்சம் புத்தகங்கள் சேமிக்கலாம். (ஒரு புத்தகம் = 250 பக்கம்). அல்லது சுமார் 15 திரைப்படங்களைச் சேமிக்கலாம்.

இதுபோக மேலும் சில காரணங்களையும் குறிப்பிட முடியும்.

கோடிக்கணக்கான வலைத்தளங்களுக்குள் புகுந்து அவை பற்றிய சுருக்கமான விவரங்களைச் சேகரித்தல்.

தனக்குச் சொந்தமான சர்வர்களில் விவரங்களைச் சேமித்தல்.

ஒரு நூலகம் போல் செயல்பட்டு தேவைப்படும்போது மின்னல் வேகத்தில் விவரங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் தொழில்நுட்பம்.

ஸ்மார்ட்ஃபோன் அல்லது கணினியில் இருந்து தொலைப்பேச குறைந்த கட்டணத்தில் சேவை.

ஈ மெயிலில் இருந்தபடி நண்பர்களை அழைக்க, ஒலிப்பதிவு செய்ய, குறைந்த கட்டணத்தில் வெளி நாட்டு அழைப்புகள்.

தனி நபர்களுக்கு இலவசச்சேவைகள். நிறுவனங்களுக்குக் குறைந்த கட்டணம்.

தேடலும் வருமானமும்

இப்படி பல வசதிகளை அளித்தாலும் கூகிளின் அடிப்படை ஒன்றுதான். தேடல். நீங்கள் கூகிளில் தேடும்போது உங்கள் ஐபி அட்ரஸ்தான் உங்கள் விலாசம் அல்லது அடையாளம். உதாரணமாக பிஎஸ்என்எல் உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு கொடுக்கிறது என்றும் அதற்கு உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஐபி அட்ரஸ் 111.222.333.444 என்றும் வைத்துக்கொள்வோம். இதைப் பயன்படுத்தி நீங்கள் என்னென்ன தகவல்களைத் தேடுகிறீர்கள், எத்தனை முறை தேடுகிறீர்கள், எந்த நேரத்தில், உங்கள் விருப்பங்கள் என்ன (பிசினஸ், படிப்பு, உணவு) போன்ற விவரங்கள் மென்பொருள்மூலம் தொகுக்கப்பட்டு ஆராயப்படுகின்றன. இதன் அடிப்படையில் உங்களுடைய விருப்பம் என்ன என்பதை கூகிள் முடிவு செய்கிறது. அதற்கேற்றாற்போல் உங்கள் கணிணிக்கு விளம்பரங்களை அனுப்புகிறது.

உதாரணத்துக்கு, விடுமுறைக்குக் கொடைக்கானல் போக விருப்பப்பட்டு நீங்கள் ரயில் நேரத்தைத் தேடினால் உடனே அந்த விவரத்தை கூகிள் குறித்துக்கொள்கிறது. உங்கள் தேடலுக்கு ஏற்ப கொடைக்கானல் விடுதிகள், பஸ் டிக்கெட் போன்ற கூடுதல் விளம்பரங்களை கூகிள் உங்கள் திரைக்கு அனுப்பிவைக்கிறது.

சென்னையில் இருக்கும் நீங்கள் துபாய்க்குப் பயணம் மேற்கொண்டால் உங்கள் ஐபி நம்பரில் இருந்து கூகிள் அறிந்துகொள்கிறது. துபாயில் இருக்கும் உணவு விடுதி, பார்க்க வேண்டிய இடங்கள், விமான டிக்கெட் விலை போன்ற விளம்பரங்களை உங்களுக்கு அனுப்பி உதவி செய்கிறார்கள். நீங்கள் எந்த வலைத்தளத்துக்குச் சென்று பார்வையிட்டாலும், இந்த துபாய் சம்பந்தமான விளம்பரங்கள் ஆங்காங்கே பளிச்சிட்டுக்கொண்டே இருக்கும்.

கூகிள் வருமானம் ஈட்டும் முக்கிய இடம் இதுதான். விளம்பரம்மூலம் 2013ல் மட்டும் கூகிளின் வருமானம் 50 பில்லியன் டாலர். மொத்த வருமானத்தில் இது 80 சதவிகிதத்துக்கும் மேல்!

கவலைகள், அச்சங்கள்

ஓர் இலவச தேடுதல் இயந்திரத்தால் அப்படி என்ன கவலைகளும் அச்சங்களும் தோன்றிவிடும்? இதோ ஓர் உதாரணம். சற்று முன் பார்த்தபடி, நீங்கள் மலேசியா செல்ல விமானம், விடுதி, உணவகம் என்று இணையத்தில் தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது மலேசியா தொடர்புடைய வேறு விளம்பரங்கள் உங்கள் திரையில் தோன்றுகிறது. அவற்றில் ஒன்றைத் தட்டி நீங்கள் அந்த வலைத்தளத்துக்குச் சென்றால் அந்தத் தளம் கூகிளுக்கு கட்டணம் செலுத்தும்.

இதன் பொருள் கூகிள் உங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டால்தான் அதன் வருமானம் அதிகமாகும். எனவே உங்கள் ஜிமெயிலை அது வாசிக்கிறது. (இப்போதைக்கு ஆங்கிலத்தில் எழுதப்படும் மெயில்கள் மட்டுமே). நீங்கள் உலாவும் தளங்கள், நீங்கள் அனுப்பும் மெயில்களில் இடம்பெறும் வார்ததைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் விருப்பத்தை அது தெரிந்துகொள்கிறது. உங்களுக்குப் புதிய கருவிகள், மென்பொருள்கள் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம் என்று தெரியவந்தால், அவை தொடர்பான விளம்பரங்கள் அதிகம் உங்கள் கணிணியில் தோன்றும்.

நீங்கள் தினமும் சுமார் 60 முதல் 120 நிமிடங்கள் இணையத்தில் கூகிள் குரோம் பயன்படுத்தி தேடல், வாசித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டால் உங்கள் ரசனை, தேவைகள், ஆர்வங்கள் அனைத்தும் கூகிளால் சேமிக்கப்படுகின்றன. இங்கேதான் சிக்கல். கூகிள் சர்வர் இருப்பது நம் நாட்டுக்கு வெளியே என்பதால் உங்களைப் பற்றிய இந்தத் தகவல்களை அவர்கள் எப்போது அழிப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது.

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் இயங்கிக்கொண்டிருந்தால் நீங்கள் எந்த ஊருக்குச் செல்கிறீர்கள் என்பது கூகிளுக்குத் தெரிந்துவிடும். ஜிபிஎஸ் வசதி உங்கள் போனில் இருந்தால், நீங்கள் எந்தத் தெருவில் இருக்கிறீர்கள், எந்தத் திசையில் சென்றுகொண்டிருக்கிறீர்கள் அனைத்தும் தெரிந்துவிடும்.

கூகிள் கிளாஸ் அணிந்து நீங்கள் ரயிலில் ஒரு சக பயணியை முதன்முறையாக பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவரை அப்படியே படம் எடுத்து கூகிள் இமேஜ் சர்ச் மூலம் அவர் பெயர், வேலை, சொந்த ஊர் என்று இணையத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்வது சாத்தியம்.

நாம் கூகிளைப் பயன்படுத்திக்கொள்வதைப் போல் கூகிள் நம்மைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது என்று கருதினால் நாம் சில விஷயங்களைச் செய்தாகவேண்டும். கூகிள் நம்மைப் பற்றிய என்னென்ன தகவல்களைச் சேமிக்கலாம், என்னென்ன தகவல்களை விற்கலாம் என்பதை நாம்தான் தீர்மானிக்கவேண்டும். ஒரு தனியார் நிறுவனத்தின் கையில் நம்மைப் பற்றி அனைத்தையும் அள்ளிக்கொடுத்துவிடுவது சரியா?

நாட்டுக்கு நாடு வேறுபடும் சட்டங்களால் கூகிளைக் கட்டுப்படுத்தமுடியுமா? பிற நாடுகளைப் பற்றி கூகிள் சேகரிக்கும் தகவல்களை அமெரிக்கா கையாள்கிறதா? அமெரிக்க நாட்டின் எல்லைக்குள் சேகரிக்கப்பட்டு வைத்திருக்கும் இந்தத் தகவல்கள் பாதுகாப்பான கரங்களில்தான் இருக்கிறது என்று எப்படி நம்பமுடியும்?

இந்தக் கவலைகள் எழுவதற்குக் காரணம் தனி நபர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும் சரி பார்க்கவும் பல தனியார் துப்பறியும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எல்லா நாடுகளில் இத்தகைய நிறுவனங்கள் உள்ளன என்னும் நிலையில் இவை யாவும் தகல்களுக்காகச் சந்தையில் போட்டிப்போட்டுக் கொள்கின்றன.

இணையம் என்பது புதிய உலகம். இந்த உலகில் எல்லைகள் இல்லை. நாடுகள் இல்லை. இன்றைய தேதியில் கூகிள் இந்த உலகின் வல்லரசு. மனிதர்களை மட்டுமல்ல அரசுகளையும்கூட இந்த வல்லரசால் கட்டுப்படுத்தமுடியும். அல்லது நாடுகள் கூகிளைப் பயன்படுத்திக் கொள்வதும்கூட சாத்தியம்தான். எது எப்படி இருந்தாலும் பாதிக்கப்படப்போவது தனி மனிதர்களின் சுதந்தரம்தான். எனவே நாம்தான் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். நம்முடைய அந்தரங்கத்தை நாம்தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் பல வருடங்களாக கூகிளில் என்னென்ன தேடினீர்கள், எப்போது தேடினீர்கள் என்ற விவரம் வரிசைப்படுத்தப்பட்டு கூகிளால் சேமிக்கப்படுகிறது.

இன்றைய சமூக அமைப்பில் அந்தரங்க தகவல் என்று எதுவும் இல்லை. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கெர்பர்க் சொன்னது.

சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு திடீர் என்று நண்பரின் தொலைபேசி எண்ணுக்கு மர்ம அழைப்புகள், எஸ்எம்எஸ் வரத் தொடங்கின. கூடவே ஈமெயிலும். பொறுமையாக ஆராய்ந்தபோது, இணையம்தான் இதற்குக் காரணம் என்பது தெரியவந்தது. கூகிளைப் பயன்படுத்தி நண்பரின் பெயர் அவருடைய மொபைல் எண் இரண்டையும் தனித்தனியே தேடியபோது பல வலைத்தளங்களில் இவை இடம்பெற்றிருப்பது தெரியவந்தது. எல்லாவற்றையும் ‘சுத்தம்‘ செய்ய 3 வாரங்கள் ஆயின.

‘தகவலை எப்படி வேண்டுமாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். (சட்டத்துக்குப் புறம்பானது தவிர). தனி நபர்கள் குறித்த தகவலை பிற நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்வது தவறில்லை.’ இது ஓர் அமெரிக்கச் சட்டம்.

http://www.aazham.in/?p=3942

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்களுடன் கூடிய இணைப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சரியமான தகவல்களடங்கிய இணைப்பு!

 

இவ்வளவு ரகசியங்கள் , கூகுளுக்குள் புதைந்து கிடப்பது, இன்று தான் தெரியும்!

 

நன்றிகள், கிருபன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.