Jump to content

யார் இந்த குசந்தன் மாஸ்ரர்? முழுமையான தகவல்கள்!


Recommended Posts

 
KAW053114-181x300_zps582afacb.jpg

குசந்தன்

அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று விடுதலைப்புலிகளும் நாடு கடத்தப்பட்டிருந்தது தெரிந்ததே. இதில் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் இருந்த குசந்தன் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இவர்தான் சிலின் ரக விமானங்களை தாக்குதல் விமானங்களாக மாற்றியதாக கூறப்படுகின்றது.

தென்மராட்சியின் மீசாலையை சேர்ந்த சுந்தரலிங்கம் குசந்தன் என்ற இவர் 1994இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பில் குசந்தன் மாஸ்ரர், முல்லைசசெல்வன் உள்ளிட்ட பெயர்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் சரத்பாபு 6 பயிற்சிமுகாமில் பயிற்சிபெற்று இம்ரான் பாண்டியன் படையணியில் இணைந்தபோதும், சில மாதங்களிலேயே விமானப்படையில் இணைக்கப்பட்டிருந்தார்.

KAS053114-600x451_zpsbc036d0c.jpg

அச்சுதன் மற்றும் கேணல் சங்கருடன் குசந்தன்

கேணல் சங்கரின் தலைமையில் இயங்கி விமானப்படையிணில் மிக விரைவிலேயே தேர்ச்சி பெற்ற விமானியாக அவர் உருவாகிவிட்டார். மேலதிக பயிற்சிகளிற்காக மலேசியா சென்று விமான ஓட்டுனர் பயிற்சியை பெற்றவர், அடுத்து கனடாவில் விமானப்பொறியியல் படிப்பை நிறைவு செய்தார். இதன்பின்னர் 1998 இல் இலங்கைக்கு திரும்பியுள்ளார். இதன்பின்னர்தான் விடுதலைப்புலிகளின் வான்படை துரித வளர்ச்சி பெற்றுள்ளது. அதுவரை சிறிய சிலின் ரக விமானங்களை வைத்து பறப்பு முயற்சிகளில் மட்டும் ஈடுபட்டு வந்த புலிகள், குசந்தனின் வரவின் பின்னர் வேறு வடித்திற்கு மாறியுள்ளனர். சிலின் ரக விமானங்களை உள்ளூர்வளங்களை மட்டும் பாவித்து தாக்குதல் விமானங்களாக மாற்றினார். இந்த விமானங்களையே இறுதிவரை விடுதலைப்புலிகள் பயன்படுத்தினார்கள். முல்லைத்தீவின் கேப்பாப்புலவு மற்றும் கிளிநொச்சியின் இரணைமடு பகுதிகளிலேயே இந்த பணிகள் தீவிரமாக நடந்தன. மற்றொரு முக்கிய வான்புலியாகிய அச்சுதனும் இதில் தீவிர பங்காற்றியிருக்கிறார்.

KA053114A-300x197_zpsc2d27e16.jpg

விமானப்பறப்பு முயற்சி ஒன்றில் குசந்தனும் அச்சுதனும்

குசந்தன் விடுதலைப்புலிகளின் விமானியாக தீவிர பணியாற்றியது தொடர்பான தகவல்களை தாம் ஏற்கனவே வைத்திருந்ததாக இராணுவப்புலனாய்வுத்துறை கூறுகிறது. இதற்கான புகைப்பட ஆதாரங்கள் இறுதி யுத்தகாலத்தில் கிடைத்ததாகவும் கூறியது.

MA053114A-600x336_zpsc224422e.jpg

குசந்தனின் திருமண நிகழ்வில் விடுதலைப்புலிகளின் தலைவர் தனது மனைவியுடன்

 

http://pagetamil.com/?p=5685

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப் போட்டுக் கொடுத்தவர் நந்தவனத்தில் இருந்தவராம். அவரைப் போட்டுக் கொடுத்தவர்களும் அவரது நண்பர்களாம். எல்லோரையும் எல்லோரும் போட்டுக் கொடுக்கும் போராட்டம்தான் இப்போது நடக்கின்றது.

Link to comment
Share on other sites

இவரைப் போட்டுக் கொடுத்தவர் நந்தவனத்தில் இருந்தவராம். அவரைப் போட்டுக் கொடுத்தவர்களும் அவரது நண்பர்களாம். எல்லோரையும் எல்லோரும் போட்டுக் கொடுக்கும் போராட்டம்தான் இப்போது நடக்கின்றது.

 

"ஈழத் தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து செல்லடா'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக் கொடுக்கிறது எல்லா போராட்ட வரலாறிலும் உள்ள ஒன்று தான். யாழ் இப்படியான செய்திகளுக்கு இடம் வழங்கி தானும் அதை செய்ய வேண்டுமா? இப்படியா ஊடகச் செய்திகளை வெளியிடுவதிலும் உள்நோக்கங்கள் இருக்கலாம் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எங்கு எவர் தலைமையை ஏற்று நடக்கிறோமோ அவருக்கு எதிரான மற்றத் தலைமைகளால் காட்டிக்கொடுப்புகள் நடாத்தப்பட்டவண்ணம்தான் இருக்கின்றன... இதுதான் இப்போதைய நிலவரம் மீளும் நிலையை அடைய சாத்தியம் உள்ளதா என்றால் கேள்விக்குறி மட்டுமே மிஞ்சி கிடக்கிறது.

Link to comment
Share on other sites

காட்டிக் கொடுக்கிறது எல்லா போராட்ட வரலாறிலும் உள்ள ஒன்று தான். யாழ் இப்படியான செய்திகளுக்கு இடம் வழங்கி தானும் அதை செய்ய வேண்டுமா? இப்படியா ஊடகச் செய்திகளை வெளியிடுவதிலும் உள்நோக்கங்கள் இருக்கலாம் இல்லையா?

 

குசந்தன் கைது செய்யப்பட்டதும், அது காட்டிக் கொடுப்பு நிகழ்ந்து இருக்காவிடின் நடந்து இருக்காது என்பதும் நிதர்சனமான உண்மைகள் எனும் போது யாழுக்கு மட்டும் அதனை மறைக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.

 

நாம் மட்டும் மறைப்பது வான்கோழி தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொளவது போன்றதுதான்.

Link to comment
Share on other sites

குசந்தன் கைது முதலில் அவர் அகதி என்னும் விசாவுடன் இருந்ததாகவும் பின்னர் அதை மாற்ற இலங்கை புத்தகம் தேவை படுவதால் அவர் அங்கு உள்ள இலங்கை தூதரம் ஊடாக பாஸ்போர்ட்  கேட்டு இருந்தார் அதை கவனித்தே அவர் மலேசியாவில் இருப்பது உறுதிபடுத்தபட்டதாக தகவல் ..

 

அவனுக்கே வெளிச்சம் ... :(  :(

Link to comment
Share on other sites

LTTE Air Wing Deputy Chief “Kushanthan” is Prize Catch Among Three Tigers Arrested and Deported From Malaysia

By D.B.S.Jeyaraj

It was in April this year that I exclusively reported about how Subramaniam Kapilan alias Nanthagopan had been deported on March 6th 2014 to Sri Lanka from Malaysia with the assistance of law enforcement authorities in Iran and Malaysia.The 45 year old deputy leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) “Nediyavan” faction had been stopped on his way to Europe at the Teheran airport and sent back to Kuala Lumpur...

http://dbsjeyaraj.com/dbsj/archives/30260

Link to comment
Share on other sites

எனக்கொரு சந்தேகம்.  எத்தனையோ போராளிகள் வெளிநாடுகளுக்குத் தப்பி வந்திருக்கிறார்கள்.  இவர் கனடாவுக்கு வேறு வந்து படித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.   அதனால் ஓரளவிற்கேனும் ஆங்கில அறிவு கூடுதலாக இருக்கும்.  வெளிநாட்டு நடைமுறைகளும் அத்துப்படியாக இருந்திருந்கும்.  இத்தனை திறமைகள் உள்ள இவர்கள் தங்களது திறமைகள் எதிர்காலத்திலேனும் தமிழீழத்திற்குப் பயன்பட வேண்டுமென நினைத்திருந்தால் ஏதாவதொரு நாட்டிற்குச் சென்றிருக்கலாமே?    மாறாக, இவர் ஏன் இதுவரை போராளிகள் பிடிபடும் மலேசியாவிலிருந்தார்?   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.