Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கொஞ்ச நாட்களாக நான் நின்மதியாக இருக்கிறேன். முன்பென்றால் எந்த நாள் என்றாலும் என் மனம் பதைபதைக்கத் தொடங்கிவிடும். கதைக்க ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டாது தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் என்னை அப்படியே விட்டுவிடுவாள். எப்போதடா இவள் கதைப்பதை நிறுத்துவாள் என ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்தபடி நான் வேறொன்றும் செய்ய முடியாது பார்த்துக்கொண்டே இருப்பேன். 
 
ஆரம்பத்தில் எல்லாம் அவள் பேசுவது எனக்கு சந்தோசமாகத்தான் இருந்தது. போகப் போக எனக்கே சலித்துப்போய் விட்டது. யார் தான் தொலைபேசியை அதுவும் கைத் தொலைபேசியைக் கண்டு பிடித்தானோ என்று அவன் மேல் எரிச்சல் எரிச்சலாக வரும். அவன் கண்டு பிடித்தது நல்ல நோக்கத்துக்குத்தான். ஆனால் இவளைப் போன்ற பலர் அதை பயன்படுத்தத் தெரியாமல் துர்ப்பிரயோகம் செய்வதுதான் எரிச்சலைக் கொடுக்கிறது எனக்கு.
 
இப்படித் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருந்தால் இவளுக்கு நாளாக ஆக காதே கேட்காது விட்டுவிடும். அதை அவளிடம் கூறுவோம் என நினைத்தும் அவள் என்ன நினைக்கிறாளோ என எண்ணி இதுவரை கூறவே இல்லை. என்னதான் கதைக்கிறாள் என ஓட்டுக்கேட்போமா என ஒவ்வொரு தடவையும் எண்ணுவதுதான். பின்னும் எதற்காக மற்றவர் விடயத்தில் தலையிடுவது என்னும் நாகரிகம் கருதி கேட்பதே இல்லை.
 
திருமணமாகிக் குழந்தை குட்டி எல்லாம் கூட இருக்கிறது. முன்பு சில நாள் மாலையில் சமையல் செய்தபடி எல்லாம் கதைத்துக்கொண்டிருப்பாள். பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு கறி அடிப்பிடிக்கப் போகிறதே என்று பதைப்பாக இருக்கும். ஆனால் இப்பொழுது மாலையில் சமைத்து நான் பார்த்ததில்லை. அதிகாலையில் சமைக்கிறாளோ??? அல்லது கடைச் சாப்பாடுதானோ தினமும் நானறியேன். காலை எழு மணிக்கு வேலைக்குச் செல்ல தயாராகும் போதுதான் நான் அவளைப் பார்ப்பேன். அதன்பின் இரவு ஒன்பது பத்து வரை அவளுடனேயே இருப்பது.

கணவனுக்கு முன்னாள் அவள் ஒருநாளும் தொலை பேசியில் யாருடனும் அரட்டை அடித்ததில்லை. தப்பித்தவறி யாராவது போன் செய்தால் ஒன்றில் போனை எடுக்காது விட்டுவிடுவாள். அல்லது எடுத்து நான் பிசியாக இருக்கிறன். பிறகு கதைப்பமோ என நல்ல பிள்ளையாகச் சொல்லிவிட்டு போனை வைத்துவிடுவாள். பார்த்துக்கொண்டு இருக்கும் எனக்குச் சிரிப்பு வரும் தான் ஆனால் சிரிக்கவே மாட்டேன்.
 
ஒருநாள் கூட என்னை மறந்து அவள் விட்டுவிட்டுச் சென்றதே இல்லை. ஒருமுறை மறந்துவிட்டாள் தான். எனக்கு மனதின் மகிழ்ச்சி சொல்லி முடியாமல் இருந்தது. ஆனாலும் எல்லாம் சொற்ப நேரம் தான். போனவள் பத்து நிமிடத்தில் மீண்டும் வந்துவிட்டாதனால் என் அற்ப சந்தோசம் அழிந்துபோனது.

தொலைபேசியில் கதைத்துக்கொண்டு வாகனங்களை ஓட்டக் கூடாது என்று என்னதான் சட்டம் போட்டாலும் இவள் மட்டுமல்ல இன்னும் பலரும் தொலையபேசியில் பேசாது வாகனத்க்தைச் செலுத்துவதே இல்லை. அப்படியிருந்தும் ஒரு தடவை போலீஸ் மறித்து அறுபது பவுன்ஸ் அறவிட்டுவிட்டதுதான். ஒரு வாரம் காருக்குள் அவள் தொலைபேசியை எடுக்கவே இல்லை. நானும் சந்தோசம் கொண்டேன். இனிமேல் இவள் காருக்குள் கதைக்கும் தொல்லை இல்லை என்று. அடுத்த வாரம் மீண்டும் தொணதொணப்பு ஆரம்பித்துவிட்டது.

நான் இவளிடம் வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. இதற்கு முன் யாரோ தெரியவில்லை. இன்னும் ஒரு ஆண்டு இவளின் சித்திரவதைகளைத் தாங்கிக் கொண்டு நான் இருக்கவேண்டித்தான் இருக்கும். அதன் பின் என்னை என்ன செய்வாள். தூரப் போட்டுவிட்டு புதிதாக ஒன்றை வாங்கிவிடுவாளோ என்று என்னும்போதே எனக்கு வலித்தது. என்னதான் துன்பம் என்றாலும் அவளுடன் கூட இருந்தே பழகிவிட்டது. அவள் குரலும் கேட்க இனிமைதான். அதனால் அடிமனதில் ஆவலுடன் தொடர்ந்து இருக்கும் ஆசை ஓட்டிக்கொண்டே இருக்கிறது. பார்ப்போம் என்ன செய்கிறாள் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை புரியாமல் ஆதங்கப்படுகிறேன் :D கதைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்லமாய் சிணுங்கும் செல்பேசியை பற்றி  சொல்ல வருகிறீர்கள்.  சமயத்தில் அது உதவியாகவும்  சில சமயம் நேரகாலம்தெரியாமல்     ஒலித்து  சங்கடத்தையும் தரும்  .சற்று  தெளிவாக்  எழுதி இருக்கலாம்   வாசிக்க ஒருவித தடுமாற்றம் தெரிகிறது ...இருப்பினும் உங்கள்முயற்சிக்கு பாராட்டுக்கள். எல்லோர் கையிலும்தவளும்   செல்லக்குழந்தை  அவள் . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.. இரண்டாண்டுக்கு ஒரு கைபேசி பாவிக்கிறீங்கள்...!

ஸ்ஸ்ஸ்ஸ்.இங்க  ஆண்டு ஆறாச்சுது ...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையைப் படிக்கும் போது தான் எனது சகோதரன் ஒருவர் என் தொலைபேசியைப் பார்த்துட்டு என்னை திட்டி விட்டுப் போனது நினைவுக்கு வருகிறது..காரணம் நான் எனக்காக பெரிதும் செலவளிப்பதில்லை......மாதத்தில் அனாவசிய  செலவுகள் எத்தனை செய்கிறாய்........ ஒரு ஒழுங்கான போண் வாங்கி வைத்திருக்க தெரியாதா......... என்று குத்தி உடைக்காத குறையாக பேசினார்..

அவசர தேவைகள் என்பதையும் தாண்டி சிலவேளைகளில் தொலைபேசி பேச்சுக்களாலயே  புரிந்துணர் இல்லாது உறவுகளுக்கிடையில் விரிசல் வந்த கதையும் உண்டு...அதன் தாக்கமோ என்னமோ தெரியவில்லை..போண் பாவனை மிகவும் குறைந்து விட்டது....புரியாத விதத்தில் ஒன்றைப் பற்றி சொல்லி இருக்கிறீங்கள்..பகிர்வுக்கு நன்றி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போனுக்கு 2 வருசத்திற்கு 200 டொலர்கள்தானே முடியும்.  வாங்கலாம்தானே?  அதிலேயே நீங்கள் நிறைய விசயங்களைச் செய்யலாம்.  முந்தித்தர் போன் கதைப்பதற்கு மட்டும் பாவித்தார்கள்.  இப்ப பிசினசே போன்லதான் செய்யினம்.  உங்களிடம் நல்ல பொன் இருந்தால் மற்றவர்களுடன் கதைப்பதற்கே நேரம் இருக்காது.  போனில் விளையாடுவதிலேயே நேரம் போய் விடும்.  தனிமையாகவும் உணர மாட்டீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொலைபேசி தன்ட ஆதங்கத்தை சொல்கின்ற மாதிரி எழுதினது வித்தியாசமாக இருந்தது.ஆனால் தலைப்பு கதைக்கு பொருத்தமில்லாமல் பட்டது.

Link to comment
Share on other sites

நான் இவளிடம் வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. இதற்கு முன் யாரோ தெரியவில்லை. இன்னும் ஒரு ஆண்டு இவளின் சித்திரவதைகளைத் தாங்கிக் கொண்டு நான் இருக்கவேண்டித்தான் இருக்கும்.

ம்... இன்னும் ஒரு ஆண்டுக்குள் நல்ல சுடுதண்ணியாலோ அல்லது கடும் குளிர் தண்ணியாலோ உங்களை குளிப்பாட்டுவா... அப்ப தெரியும் அம்மணியின் குணம். எதுக்கும் பக்கத்தில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியிடம் கொஞ்சம் அட்வைஸ் கேட்டு இருக்கலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த உறவுகள் நன்றி புத்தன்,நிலமதி அக்கா, சுவி அண்ணா, அலைமகள்,யாயினி, போக்கிரி, ரதி, நிழலி ஆகிய உறவுகளுக்கு நன்றி.

தொலைபேசி தன ஆதங்கத்தைச் சொல்வது போலத்தான் எழுதினேன். உண்மையில் ரதி சொன்னதுபோல் என்ன தலைப்பு வைப்பது என்று புரியாமல் பொருத்தமற்ற தலைப்பை வைத்துவிட்டேன். ஆனால் எல்லோரும் புரிந்து கொண்டீர்கள் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செயற்பாட்டு ப்பொருள் தொலைபேசி

எழுவாய் சுமே யோ.....?? :lol:  :D

வாழ்த்துக்கள்

தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போனுக்கு 2 வருசத்திற்கு 200 டொலர்கள்தானே முடியும்.  வாங்கலாம்தானே?  அதிலேயே நீங்கள் நிறைய விசயங்களைச் செய்யலாம்.  முந்தித்தர் போன் கதைப்பதற்கு மட்டும் பாவித்தார்கள்.  இப்ப பிசினசே போன்லதான் செய்யினம்.  உங்களிடம் நல்ல பொன் இருந்தால் மற்றவர்களுடன் கதைப்பதற்கே நேரம் இருக்காது.  போனில் விளையாடுவதிலேயே நேரம் போய் விடும்.  தனிமையாகவும் உணர மாட்டீர்கள். 

போணினால் ஏற்படும் வலிகளை பக்கம்,பக்கமாக எழுதலாம்.நாங்கள் மற்றவர்கள் மீது வைக்கும் வைத்திருக்கும் அதிக நம்பிக்கையும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விட்டுட்டும் இந்த தொலைபேசி..ஆனால் எங்கள் பிரச்சனைகளை பொதுவெளியில் கொட்டுவதனால் எந்த விதமான இலாபமும் இல்லை..ஆகவே எப்போதுதும் ஒரு சில விடையங்களோடையே எந்த பிரச்சனையையும் எழுதி முடிச்சுட்டுப் போவது என் பழக்கம்..போணில் வியாபாரம் எல்லாம் செய்யீனம் தான் இல்லை என்று சொல்லவில்லை...அதே போண் சில வேளைகளில் வாழ்வு முழுக்க நினைத்து,நினைத்து கவலைப்பட்டு எங்களை வருத்திக் கொள்ளும் அளவுக்கு அவப் பெயரையும் எடுத்து தந்துடும்..

என்னைப் பொறுத்த மட்டில் வீட்டில் இருப்பவர்களுக்கு நான் இந்த இடத்தில் நிக்கிறன்,இந்த நேரம் வீட்டை வருவேன்..இன்று இந்த இடத்திற்கு போக போறன் போன்ற விடையங்களை தான் பகிர்ந்து கொள்வது வழக்கம்..அதையும் மீறி யாராச்சும் உறவினர்கள் கண்டிப்பாக போணில் அழைத்து ஏதாச்சும் பேச தொடங்கினால் ஒரு சில வார்த்தைகளோடு  மறுமுறை என் போணுக்கு எடுக்க மாட்டார்கள்...எப்போதும் என் போண் தூங்கிக் கொண்டே கிடக்கும்..றிங் சத்தம் கேட்டபது அரிது.அதற்கு ஒரு 200 டொலர்களை கொட்டி போண் வாங்கனும் என்று தோன்றவில்லை..கேம்ஸ் விளையாடி நேரத்தை வீண் அடிப்பதில் எல்லாம் எனக்கு ஆர்வம் இல்லை.யாயினி ரொம்ப கஞ்சல் தனம் என்று நினைத்து விடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் எல்லாம் அவள் பேசுவது எனக்கு சந்தோசமாகத்தான் இருந்தது. போகப் போக எனக்கே சலித்துப்போய் விட்டது. யார் தான் தொலைபேசியை அதுவும் கைத் தொலைபேசியைக் கண்டு பிடித்தானோ என்று அவன் மேல் எரிச்சல் எரிச்சலாக வரும். அவன் கண்டு பிடித்தது நல்ல நோக்கத்துக்குத்தான். ஆனால் இவளைப் போன்ற பலர் அதை பயன்படுத்தத் தெரியாமல் துர்ப்பிரயோகம் செய்வதுதான் எரிச்சலைக் கொடுக்கிறது எனக்கு.
 
இந்த  இடத்தில்  தடுமாற்றம் அதனால் எங்களுக்கும் ஆதங்கம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை முகப் புத்தகத்திலும் போட்டேன். பலர் தனிமடலில் வேறுவிதமாக எல்லாம் சந்தேகம் கேட்டிருந்தார்கள். சிலர் தான் உடனேயே விளங்கிக் கொண்டனர். 

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 07/06/2014 at 7:37 PM, யாயினி said:

போணினால் ஏற்படும் வலிகளை பக்கம்,பக்கமாக எழுதலாம்.நாங்கள் மற்றவர்கள் மீது வைக்கும் வைத்திருக்கும் அதிக நம்பிக்கையும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விட்டுட்டும் இந்த தொலைபேசி..ஆனால் எங்கள் பிரச்சனைகளை பொதுவெளியில் கொட்டுவதனால் எந்த விதமான இலாபமும் இல்லை..ஆகவே எப்போதுதும் ஒரு சில விடையங்களோடையே எந்த பிரச்சனையையும் எழுதி முடிச்சுட்டுப் போவது என் பழக்கம்..போணில் வியாபாரம் எல்லாம் செய்யீனம் தான் இல்லை என்று சொல்லவில்லை...அதே போண் சில வேளைகளில் வாழ்வு முழுக்க நினைத்து,நினைத்து கவலைப்பட்டு எங்களை வருத்திக் கொள்ளும் அளவுக்கு அவப் பெயரையும் எடுத்து தந்துடும்..

என்னைப் பொறுத்த மட்டில் வீட்டில் இருப்பவர்களுக்கு நான் இந்த இடத்தில் நிக்கிறன்,இந்த நேரம் வீட்டை வருவேன்..இன்று இந்த இடத்திற்கு போக போறன் போன்ற விடையங்களை தான் பகிர்ந்து கொள்வது வழக்கம்..அதையும் மீறி யாராச்சும் உறவினர்கள் கண்டிப்பாக போணில் அழைத்து ஏதாச்சும் பேச தொடங்கினால் ஒரு சில வார்த்தைகளோடு  மறுமுறை என் போணுக்கு எடுக்க மாட்டார்கள்...எப்போதும் என் போண் தூங்கிக் கொண்டே கிடக்கும்..றிங் சத்தம் கேட்டபது அரிது.அதற்கு ஒரு 200 டொலர்களை கொட்டி போண் வாங்கனும் என்று தோன்றவில்லை..கேம்ஸ் விளையாடி நேரத்தை வீண் அடிப்பதில் எல்லாம் எனக்கு ஆர்வம் இல்லை.யாயினி ரொம்ப கஞ்சல் தனம் என்று நினைத்து விடாதீர்கள்.

மன்னியுங்கள் யாயினி உங்களதும் புத்தனதும் கருத்துக்களைக் கவனியாது விட்டுவிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும் தவறு தவறுதானே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.