Jump to content

எப்படி எழுதுகிறார்கள்?


Recommended Posts

B824199166Z_1_2014_1937994h.jpg
பூமணி - கி.ராஜநாராயணன் - வண்ணநிலவன்

எண்பதுகளின் தொடக்கத்தில் இலக்கியக் கோட்டி பிடித்து எழுத்தாளராவதைத் தவிர வேறு மார்க்கமேயில்லை என்று நாங்கள் (நான், நாறும்பூநாதன், சாரதி, திடவைபொன்னுச்சாமி, அப்பணசாமி) கோவில்பட்டியில் உள்ள காந்தி மைதானத்தின் பொட்டல் வெயிலில் சத்தியம் செய்திருந்தோம்.

புத்தகங்களைத் தின்று தீர்த்தோம். அதுவரை தெரிந்த உலகமே இப்போது வேறொன்றாய்த் தெரிந்தது. உலக, இந்திய, தமிழ், எழுத்தாளர்களோடு ஏற்பட்ட பரிச்சயம் எங்கள் நடையையே மாற்றிவிட்டது. தரையில் கால் பாவியதாக நினைவில்லை. நாங்கள் வேறு பிறவிகள் என்ற நினைப்பு.

பாரதி, புதுமைப்பித்தன், மௌனி, கு. அழகிரிசாமி, கு.ப.ரா., சுந்தர ராமசாமி, கு. சின்னப்ப பாரதி, டி. செல்வராஜ், கி. ராஜநாராயணன், வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி என்று வாசித்துத் தீரவில்லை. வாசிக்கும்போதும் வாசித்து முடித்த பிறகும் எங்களுக்குத் தோன்றும் முதல் கேள்வி “எப்டிரா எழுதறாங்க..?” என்பதுதான். எழுத்தாளர்களை அதிசயப் பிறவிகளாக எண்ணி மணிக்கணக்காக அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம்.

எழுத்தாளர்களைச் சந்திக்க நேர்ந்தால் கண்களில் பக்தியுணர்வு தோன்றிவிடும். அவர்களுடைய நடையுடை பாவனைகளை, அவர்கள் பேசும் முறையை, அவர்கள் சிரிப்பதை, அவர்கள் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையையும் மிக உன்னிப்பாகக் கவனிப்போம். அவர்களுடன் இருக்கும் நேரம் முழுவதும் ஒரு பணிவு எங்களிடம் இருக்கும்.

எல்லா எழுத்தாளர்களிடமும் தவறாமல் கேட்கிற கேள்வி “நீங்க எப்ப சார் எழுதுவீங்க?” அவர்கள் சொல்கிற பதிலில்தான் எங்கள் எதிர்கால எழுத்துலகமே இருப்பதைப் போல அவர்கள் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்போம். மாக்சிம் கார்க்கியின் ‘எப்படி எழுதுவது?’ அலெக்ஸி டால்ஸ்டாயின் ‘எழுதும் கலை’ என்று எழுதுவதைப் பற்றிய வியாக்கியானங்களை வேறு படித்திருந்தோம்.

நாங்கள் சந்தித்த எழுத்தாளர்களையும் அந்தச் சந்தேகங்களின் கொடுக்குகளால் கொட்டிக்கொண்டிருந்தோம். அவர்கள் என்ன சொன்னாலும் எங்களுக்குத் திருப்தியில்லை. எதையோ மறைக்கிறார்கள் என்று பின்னர் பேசிக்கொண்டிருப்போம். ஏனெனில் நாங்கள் அப்போது வேலையின்றிச் சுற்றிக்கொண்டிருந்ததால் எப்போது வேண்டுமானாலும் எழுதிப்பார்க்கும் சுதந்திரம் இருந்தது. ஆனால் எழுதினால் எழுத்துதான் வரவில்லை. அதனால்தான் எழுத்தாளர்களின் நடவடிக்கைகளை உற்றுக் கவனித்து ரகசியத்தைக் கண்டுபிடிக்க முயன்றோம்.

இடைசெவல் போய் கி.ரா.வைப் பார்த்தால் அப்படி ஒரு ஒழுங்கு. சுத்தம். நறுவிசு. குடிக்கிற செய்யது பீடியைக்கூடத் தேர்வு செய்து, அதன் முனையை, அருகிலேயே வைத்திருக்கும் கத்தரிக்கோலை வைத்துக் கத்தரித்துப் பற்றவைப்பார். அவருடைய நடையுடை பாவனைகளில் இருக்கும் நேர்த்தி யாரையும் கவர்ந்துவிடும். பூமணியிடம் பேசிக்கொண்டிருந்தால் தினமும் அதிகாலை எழுந்து எழுதுவேன் என்று சொல்லுவார்.

சுந்தர ராமசாமி டைப்ரைட்டரில் தான் கதை எழுதுவார் என்று கேள்விப்பட்டிருந்தோம். கலை எழுச்சி வர வேண்டும். அருள் வந்த மாதிரி, காய்ச்சல் வந்த மாதிரி உடம்பு சூடு ஏற வேண்டும். கைகளில் ஒரு நடுக்கம். இனி எழுதாமலிருக்க முடியாது என்கிற மாதிரி ஒரு வெறி. இடம், பொருள், காலம் பற்றிய பிரக்ஞை (அப்போது இந்த வார்த்தையைப் பயன்படுத்தாத இலக்கிய உரையாடல்களே கிடையாது) இருக்கக் கூடாது. இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருப்போம். என்ன வேப்பிலையடிச்சாலும் எங்களுக்கு அருள் வரவில்லை.

ஆனாலும் விடுவோமா? ஒவ்வொருவரும் தினசரி ஒரு கதை எழுதிக் கொண்டுவர வேண்டும் என்று எங்கள் சபையில் முடிவு செய்தோம். ஒரு பக்கமாக இருந்தாலும் சரி. எழுத வேண்டும். எப்படியாவது கலாமோகினியின் கடைக் கண் பார்வையை எங்கள் பக்கம் திருப்பிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டோம். கலை எழுச்சி அல்லது கலை அருள் வருவதற்கு வேறு வெளி உபகரணங்களைப் பயன்படுத்தவும் யோசித்தோம். நிறைய டீ குடித்தோம். பீடி பிடித்துப் பார்த்தோம்.

காசு இருந்தால் அல்லது ஓசியென்றால் வில்ஸ் ஃபில்டர் வாங்கிக் குடித்தோம். பாரதி கஞ்சா அடித்துவிட்டுத்தான் கவிதை எழுதுவானாமே என்று ஒரு நண்பர் சொல்ல எப்படியோ கஷ்டப்பட்டு கஞ்சாவைச் சம்பாதித்து அதை சிகரெட்டிலோ பீடியிலோ அடைக்கத் தெரியாததால் சூடான டீயில் கலந்து குடித்துப் பார்த்தோம். சிரிசிரியென்று சிரித்து உருண்டதும், நடை நடையென்று ஒரே தெருவில் நடந்துகொண்டேயிருந்ததும் தான் மிச்சம். கலாமோகினி எங்கே போனாள் என்றே தெரியவில்லை.

தினமும் எழுதிக் கொண்டுவர வேண்டும் என்ற எங்கள் முடிவு ஒரு வாரத்தில் காலமாகிவிட்டது. சிலசமயம் வண்ண தாசனின் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ சிறுகதைத் தொகுப்பைப் படித்துவிட்டு அதன் அதிர்வுகளிலிருந்து மீளுமுன்னே கதை எழுதிப் பார்ப்பதுண்டு. அப்படியே வண்ணதாசன் கதை மாதிரியே இருக்கும்.

பல சமயம் எழுதிக் கையெழுத்துப் பிரதியாக நண்பர்களிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி அவர்கள் படித்து முடிக்கும்வரை இருக்கும் பாருங்க ஒரு அமைதி. ஆளையே காலி பண்ணிவிடும். படித்து முடித்ததும் நண்பர் மேலும் கீழும் ஒரு பார்வை பார்ப்பார். பின்னர் திரும்ப ஒரு தடவை எழுதிய தாள்களைப் புரட்டுவார். லேசாகத் தொண்டையைச் செருமிக்கொள்வார். அவர் வாயையே பார்த்துக்கொண்டிருக்கும்போது பொன்னம்போல மெல்ல உதடுகளை அசைப்பார்.

“ஒரு டீ சொல்லேன். அப்படியே ஒரு வில்ஸ் ஃபில்டரும் வாங்கிரு..” என்ற வார்த்தைகளைச் சிந்தி அடக்குவார். எல்லாம் நேரம்டா நேரம் என்று மனசுக்குள் கறுவிக்கொண்டே அவர் கேட்டதை வாங்கிக் கொடுத்த பிறகும் நீண்ட புகைமேகங்களை அனுப்பிக்கொண்டே ஏராளமான வெளிநாட்டு உள்நாட்டு, தமிழ்நாட்டு, உள்ளூர் எழுத்தாளர்களின் கதைகளைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையெல்லாம் வாசிப்பார். அதில் இல்லாதது பொல்லாததும் இருக்கும். பல்லைக் கடித்துக்கொண்டு அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். அப்படியே ஒரு இரண்டு மணிநேரம் கழியும். இனி பொறுக்க முடியாது தற்கொலைதான் வழி.

விழும்போது அவரையும் சேர்த்துத் தள்ளிர வேண்டியதான் என்ற முடிவின் வாசல் கதவைத் திறக்கும்போது “உன்னோட இந்தக் கதை..” என்று ஆரம்பித்து உலகச் சிறுகதைகளை ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்து சுற்றி வளைப்பார். கடைசியில் “கதை சரியில்லை” என்பதைத்தான் அவ்வளவு நேரமாகச் சொல்லியிருப்பார்.

எப்படியிருக்கும்? ஏதோ இந்த ஒரு கதையிலதான் என்னோட உயிரே இருக்கிற மாதிரி துடிக்கிற துடிப்பு கடைசியில் அடங்கிவிடும். முகம் தொங்கிப்போக, சரிதான் நமக்கு எழுத வராதுபோல என்ற எண்ணம் தோன்றிவிடும். இது வரை நான் எழுதிக் கையெழுத்துப் பிரதியில் படிக்கக் கொடுத்த கதைகளில் ஒரு கதையைக்கூட நல்லாருக்குன்னு ஒருத்தர்கூடச் சொன்னதில்லை.

எழுத்தாளர்களுக்கு உள்ளுக்குள் ஒரு பொறாமை நதி ஓடிக்கொண்டிருக்கும் போல. மற்றவர்கள் பிரதிகளைப் படிக்கும்போது அந்த நதியில் முங்கி முங்கி எழுவார்கள்போல. ஆனால் இப்படிப் பொத்தாம் பொதுவாய்ச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. பல சமயம் இந்த மாதிரி விமர்சனங்கள் நம்மைப் புடம் போடவும் செய்யும். நம்மைச் செப்பனிட, செழுமைப்படுத்த, இன்னும் தீவிரமாய் எழுதத் தூண்டும்.

இப்பவும் அந்தக் கேள்வி இருக்கத்தான் செய்கிறது. அதுவும் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் முக்கியமான எழுத்தாளர்களான வண்ணதாசன், கோணங்கி, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், ஜாகீர்ராஜா, இன்னும் பலரிடமும் இப்பவும் கேட்க நினைக்கிற கேள்வி இதுதான். “எப்படி எழுதுறீங்க?”.

அருள் வந்தோ, கலாமோகினியின் கடைக்கண் பார்வை பட்டோ, தியானம் செய்தோ, பிரக்ஞை விழிப்பு நிலையினாலோ, பிறவித் திறமையாலோ, கடின உழைப்பாலோ, கடுமையான முயற்சியாலோ, தீவிரப் பயிற்சியாலோ எப்படியோ எழுத்தாளராகிவிட வேண்டும் என்று நாங்கள் செய்த, யோசித்த, மேற்சொன்ன விஷயங்களால் நான் அல்லது நாங்கள் எழுத்தாளராகவில்லை, அது வேறு விஷயம். ஆனால் அந்த வேறு விஷயம்தான் என்னவென்று தெரியவில்லை.

- உதயசங்கர், எழுத்தாளர் 

 

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6091935.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஆதவன்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
    • க‌னிமொழி போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் விர‌ட்டி அடிக்கின‌ம் ஆனால் அவா முன் நிலையில்................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.