Jump to content

மரணத்தின் வாசலை நெருங்கியிருக்கும் வீரத்தாய் (இது கதையில்லை)


Recommended Posts

மரணத்தின் வாசலை நெருங்கியிருக்கும் வீரத்தாய் (இது கதையில்லை)

 
mother-of-eelam.jpg

ஈழவிடுதலை வரலாறு எத்தனையோ வீரத்தாய்களையும் அவர்களது வீரக்குழந்தைகளின் வரலாறுகளையும் சேமித்து வைத்திருக்கிறது. ஈழக்கனவு கலைந்ததாய் நம்பப்படுகிற இந்நாட்களிலும் இன்னும் அந்தக் கனவின் நனவுக்காய் வாழ்கிற ஆயிரமாயிரம் அம்மாக்களின் வரிசையில் தனது பிள்ளைகளை தமிழீழக்கனவுக்காய் ஈந்த அம்மா பெயரைப்போல அழகான அம்மா. தனது குடும்பத்தின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளென 10 உறுப்பினர்கள் வரை நாட்டுக்குத் தந்த வீரத்தாய்.

வயது 90ஐத் தாண்டும். கண்பார்வையும் குறைந்து காதும் கொஞ்சம் கேட்காது. ஆனால் குரலை வைத்தும் நிழலை வைத்தும் ஆட்களை அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய திறனை இன்னும் இழக்கவில்லை.

இன்றும் இடையறாத மாவீரர் நினைவும் அந்த மனிதர்களின் புனிதமும் அம்மாவால்  ஞாபகம் கொள்ளப்படும் பொழுதுகளில் அம்மாவின் ஆற்றாமையும் துயரமும் கண்ணீராகிக் கரைந்து கதைக்கிற நொடிகளையெல்லாம் சிதிலமாக்கிவிடும்.

ஒரு காலம் அம்மாவின் வீட்டில் போராளிகளின் வருகையும் அவர்களுக்கான விருந்தும் ஆரவாரமுமே அதிகமான நாட்களவை. பிள்ளைகள் ஒவ்வொன்றும் வித்துடல்களாய் வீழ வீழ அம்மாவோ ஈழவிடியலின் நாளைத்தான் எண்ணிக் கொண்டிருந்தா. அம்மாவின் நம்பிக்கையும் கனவும் அவரது பிள்ளைகளின் கனவுபோல தமிழீழமாகவேயிருந்தது.

தனது பிள்ளைகள் விதைக்கப்பட்ட ஊருக்குள்ளேயே தானும் இறுதிவரை உயிர்வாழ்ந்து முடிந்துவிடும் கனவோடிருந்த அம்மாவின் கனவுகளும் தகர்ந்து சிதைந்து போய் இன்று ஒரு அனாதை போல அம்மா....! வருமானம் எதுவுமில்லை யாரும் கொடுக்கிறதை வாங்கி நிறைவடைகிற அம்மாவாக தனது வாழ்வின் முடிவின் நாட்களை எண்ணிக் கொண்டு நிறைவேறாத கனவின் நிறைவேறும் நாளை நம்பியபடி....!

இடைக்கிடை அம்மாவின் ஊர் தாண்டுகிற போதெல்லாம் அம்மாவை எட்டிப்பார்த்துவிட்டே அவன் தனது பணிகளைச் செய்திருக்கிறான். யாரை அடையாளம் தெரிகிறதோ இல்லையோ அவனது குரலும் முகமும் அம்மாவுக்கு எப்படியோ அவனை அடையாளப்படுத்துகிறது.

மண்குடிசை முற்றத்தில் அம்மா ஒரு பிளாஸ்டிக் கதிரையில் தான் இருப்பா. அவனது மோட்டார் வாகனம் வீட்டுவாசலை அடைகிற அம்மா அவனுக்காக ஆயிரக்கணக்கில் கதைகள் சொல்ல வைத்திருப்பா. போகிற நேரங்களில் தன்னால் இயன்றதை அம்மாவுக்கு கொடுத்து அவவுடன் கொஞ்ச நேரம் செலவளித்து விட்டு வெளியேறும் போது மீண்டும் கனவுகள் அவனுள்ளும் துளிர்க்கும்.

தலைவர் வருவர் மோன....பாரன் தலைவர் கட்டாயம் வருவர்....அம்மா அவனுக்கு அடிக்கடி சொல்லிக்கொள்வா. தலைவன் வரவை அவன் நம்புகிறானோ இல்லையோ அம்மா சொல்லும் போது அவனும் „'ஓமம்மா வருவர்.....'ழூ எனத்தான் சொல்லிக் கொள்வான்.

அம்மாவை பிரத்தியேகமாய் தலைவர் சந்தித்த கதைகளையெல்லாம் அம்மா சொல்லத் தொடங்கினால் அவன் அப்படியே உறைந்துவிடுவான். வுpழவிழ வீரக்குழந்தைகளைத் தந்த அம்மாவை அம்மாவின் விடுதலையின் மீதான பற்றுதலை மதிக்கும் பொருட்டு தலைவர் அம்மாவை பலமுறை சந்தித்திருக்கிறார். தனது மகன்களின் பாசத்தை தலைவனின் கவனிப்பில் அனுபவித்தா அம்மா.

அம்மா தனக்காக தனது குடும்பத்துக்காக ஒன்றையும் சேர்க்கவுமில்லை சேர்க்க ஆசைப்பட்டதுமில்லை. நாடு கிடைத்தால் தன் வீடும் விடியும் எனவே நம்பினா.

அம்மாவின் நம்பிக்கையும் நிறைவாகாமல் 2009 மேமாதம் உலகின் ஆணவமெல்லாம் அணிதிரண்டு தமிழர்களின் கனவுகள் மீது காலூன்றி மிதித்து ஆயிரக்கணக்கில் உயிர்களை அள்ளி விழுங்கியது.

முள்ளிவாய்க்கால் என்ற பெயரை உலகத்தில் ஒவ்வொருவரும் அழிவு தின்ற நகராக அறிந்து கொண்டார்கள். அம்மாவின் குழந்தைகள் உறங்கிய துயிலிடங்களை இடித்தளித்து அம்மாவினதும் ஆயிரக்கணக்கான அம்மாக்களின் பிள்ளைகள் துயின்ற துயிலிடங்கள் அடையாளமற்றுப் போனது. அம்மா விளக்கேற்றி வீரப்பாட்டிசைத்த வெளிகளெல்லாம் வெறிச்சோடிப்போனது.

11.06.2014 இன்றைக்கு மதியம் அம்மாவின் ஊரைத்தாண்டும் போது அம்மாவின் நினைவு வந்தவனாய் அம்மாவிடம் போனான் அவன். அம்மாவின் வாழ்வுக்காலம் முடியப்போகிறதென காலம் அம்மாவின் உற்சாகத்தையும் ஓட்டத்தையும் முறித்துப் போட்டிருக்கிறது. அம்மாவின் நாட்கள் இன்னும் நெடுப்பயணமில்லை முடிவுரைக்காக காத்திருக்கும் தருணம் இது.

இன்று வரையும் அம்மா எதையும் முடிந்து போனதாய் நினைப்பதில்லை எல்லாம் எல்லோரும் வாழ்கிறார்கள் என்றுதான் நம்புகிறா. ஞாபகங்கள் தவறிப்போன இன்றைய நாளிலும் அம்மா „'தலைவர் வருவார் தமிழீழம் வரும்' எனச்சொல்லிக் கொண்டே படுத்திருக்கிறாள்.

வறுமையின் நிறம் என்னவென்பதனை அடையாளம் சொல்ல அம்மா ஒருத்தியே போதும். அந்தளவுக்கு அம்மாவை வறுமையும் நோயும் முடக்கிப்போட்டுள்ளது. அம்மாவுக்கு விருப்பமான பாக்கு வெற்றிலை வாங்கவும் பத்துரூபாய் ஆராவது கொடுத்தால் தான்.

அம்மாவைப் பார்க்கப் போனவனுக்கு எதிர்பாராத அதிர்ச்சி. மோன பாக்குவெத்திலை வேணுமடா...! இன்னும் அவனது குரலையும் அவனது நிழலையும் நினைவு வைத்து அவனிடம் கேட்டாள் அம்மா. கையில் இருந்த 500ரூபாவைத்தான் அம்மாவிடம் கொடுத்தான்.

வரும் வழி முழுவதும் அம்மாவின் நினைவுதான் அவனைச் சுற்றிக் கொண்டிருந்தது. எப்படியிருந்த அம்மா இன்று ஒரு நல்ல உணவைக்கூட தனது இறுதிக்காலத்தில் தனது இறுதி நாட்களிலேனும் சாப்பிடக்கூட கொடுக்க அந்த வீட்டில் வசதியில்லை. அன்றாடம் கூலிவேலை செய்தே வாழ்வை ஓட்டும் மகளிடம் அம்மாவுக்கு பெரிதாய் எதையும் செய்ய முடியாது.

அம்மாவுக்காக மாதம் ஒரு 2ஆயிரம் ரூபா கொடுத்தாலும் உதவியா இருக்கும் அக்கா !  நேசக்கரத்தின் ஒரு பணியாளரான அவன் சில மாதங்கள் முன்னர் அம்மாவிடம் போய் வந்த போது சொன்னது வேலைகள் உதவிகளின் பல்வேறுபட்ட வேண்டுதல்களுடன் மறந்து போனது.

இன்றைக்கு அவன் கொண்டு வந்த விபரம் அறிக்கைகளோடு அம்மாவின் கதையையும் சொல்லிக் கொண்டிருந்தான். அம்மாவின் நிழற்படத்தையும் தந்திருக்கிறான். ஏதாவது செய்யோணும் அக்கா. சாப்பாட்டுச் சாமான்கள் கொஞ்சம் வாங்கி குடுப்பமோ ? பாவம் கண்ணும் முந்திமாதிரி பார்வையில்லை , காது ஏற்கனவே கேட்காது கிட்டப்போயிருந்து சொன்னாத்தான் கொஞ்சம் விளங்குது. பாவமாயிருக்கு எப்பிடி வாழ்ந்த மனிசி....

ஒரு சந்ததியையே நாட்டுக்குத் தந்த மனிசீன்ரை நிலமையைப் பாருங்கோ....! அவ சாகப்போறாவாம்.... அவன் சொல்லச் சொல்ல ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே வலுக்கிறது. அம்மாவுக்கான கடமையை மறந்து போனதற்காக மீண்டும் காலமே மன்னித்துக் கொள். யாரையென்று நினைக்க யாரையென்று மறக்க ?

தாயே உனக்காய் கடைசி அஞ்சலியை எங்காவது அல்லது ஏதாவது ஒரு ஊடகம் எங்கோவொரு மூலையில் போட்டு அழக்கூடும். அல்லது உனது மரணத்தின் பின்னால் உனது மரணம் வறுமையில் முடிந்ததென்று கட்டுரைகள் ஏதும் வரையலாம். ஆனால்  வாழும் போது உனக்கான வழியைத் தராத எங்களை மன்னித்துக் கொள் தாயே.

11.06.2014

சாந்தி ரமேஷ் வவுனியன் 

 

http://mullaimann.blogspot.de/2014/06/blog-post.html

 

Link to comment
Share on other sites

மனிதம் மரித்துவிடவில்லை. மரணத்தின் வாசலில் நிற்கும் அம்மாவை வாழும் காலம்வரையும் தாங்க கள உறவு மணிவாசகன் முன்வந்துள்ளார். முதல் 15ஆயிரம் ரூபா அனுப்ப முன்வந்ததோடு மாதம் 3ஆயிரம் ரூபாய் வழங்கவும் முன்வந்துள்ளார்.
 
முகநூல் மூலம் கனடாவிலிருந்து கஜீபன் அவர்கள் ஒருமுறைக்கான ஒரு தொகையை தர முன்வந்து வங்கிவிபரங்களை பெற்றுள்ளார். அதுபோல தனது பெயரைக்குறிப்பிடாது தொடர்ந்து உதவும் உறவொன்று 100பிரித்தானியா பவுண்களை அனுப்பி வைத்துள்ளார். 
 
மருத்துவர்கள் அம்மாவின் வாழ்நாள் முடியப்போவதாக சொல்லியுள்ளார்கள். ஆனால் அம்மா வாழும் நாட்கள் வரையும் அம்மாவிற்கு மருத்துவத்தையும் சிறந்த உணவையும் கொடுக்க உதவிகளை தர முன்வந்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.