Jump to content

சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன் – 01 0


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஹிருத்திக் நிஹாலே

download4_zpsec663c8a.jpgவிடுதலைப்புலிகள் அமைப்பென்றதும் அதன் தலைவரை தவிர்த்து, சட்டென நினைவில் வரும் பெயர்கள்- இயக்கத்தை உரிமை கோரவல்லவையாக இருந்த தனி மனிதர்கள் என்றால் மிகச்சிலதான். குறிப்பிட்ட காலங்களில் சில பெயர்கள் அடிபட்டு பின்னர் காணாமல் போன கதைகள் நிறைய இருந்தன. நீண்டகாலத்திற்கு இந்த அந்தஸ்துடன் இருந்த பெயர்கள் மிகஅரிதானவை. பொட்டம்மான், பால்ராஜ், சொர்ணம் என மிகச்சிறிய பட்டியல் அது.

 

சொர்ணம் எப்படி இந்த பட்டியலில் வந்தார் என்பது சற்று வியப்பிற்குரியது. சிந்தனைக்குரியது. ஏனெனில் இந்த பட்டியலில் உள்ளவர்கள் அளவில் அவர் எந்த காலத்திலும் பிரகாசித்து கொண்டிருந்தவர் அல்ல. அந்த அமைப்பில் இருந்து மிகமோசமான வீழ்ச்சியை சந்தித்த ஒரு தளபதியாகவும் அவர்தான் இருந்தார். எனினும் ஈழத்தமிழர்கள் மத்தியில் அவர் பற்றிய ஒரு மிகையான மதிப்பீடு இருந்து கொண்டேயிருந்தது. உண்மையைச் சொன்னால், அமைப்பிற்கு வெளியிலிருந்த தமிழர்களிடம் மட்டும்தான் அப்படியான அபிப்பிராயம் இருந்ததென்பதல்ல. அமைப்பிற்குள்ளிருந்தவர்கள் மத்தியிலேயே அவர் பற்றியதொரு அதீதமான பிரதிமை இருந்தது. இத்தனைக்கும் அவர் பற்றிய மதிப்பீடுகளளவிற்கு அவரது களச்செயற்பாடுகள் இருந்ததென்று கூற முடியாது. இப்படி சொல்வது பலரை சினமூட்டலாம். ஆயினும் அவர் பற்றிய ஒரு மதிப்பீட்டின் அவசியத்திற்காக இதனையும் பேசவேண்டியுள்ளது.

 

சொர்ணத்தின் ஆரம்ப நாட்கள்

 

1964ம் ஆண்டு  பிறந்த சொர்ணம், திருகோணமலையில்த்தான் வளர்ந்தார். அவரது பிறப்பு யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் என்றபோதும், திருகோணமலையின் அரசடிதான் அவரது வளர்ந்த இடம். தந்தை யோசெப். தாய் திரேசம்மா.  திருகோணமலையின் புனித சூசையப்பர் கல்லூரியில் கல்வி கற்றவர், 1982ம் ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து 1983ம் ஆண்டில்- தனது 19வது வயதில்- பயிற்சிக்காக இந்தியா சென்றார். தமிழ்நாட்டின் சிறுமலையில் நடந்த 3வது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றார். இவரது பயிற்சிமுகாம் கூட்டாளிகளில் ஒருவர்தான் கருணா.

பயிற்சி முடிந்ததும் யாழ்ப்பாணம் வந்து சில மாதங்கள் நின்றார். அதன்பின்னர் மீண்டும் இந்தியா அழைக்கப்பட்டார். அவரை இந்தியாவிற்கு அழைத்தது விக்ரர். காரணம், பிறிதொரு பயிற்சிக்காக. அந்த சமயத்தில் இலங்கைத்தீவில் ஆர்.பி.ஜி என்றொரு ஆயுதமே பாவனையில் இருக்கவில்லை. இந்தியாவில் வைத்து சொர்ணம், தேவன் உள்ளிட்ட சிலரிற்கு பயிற்சி வழங்கப்பட்டது. (பின்னர் 1985இல் யாழ்ப்பாணத்தில் பண்டிதரின் முகாம் சுற்றிவளைப்பில்த்தான் இலங்கை படையினர் அதனை முதன்முதலாக கைப்பற்றி கண்கொண்டு பார்த்தனர்)

 

இந்தியாவில் பயிற்சி பெற்ற சமயத்தில் அமைப்பின் தலைவரின் பாதுகாவலர் அணியில் தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்வு விக்ரரினால்த்தான் நடத்தப்பட்டது. அவரது உயர்ந்த தோற்றமும், இயல்பான கறார்த்தன்மையும் விரைவிலேயே அவரை தனித்தன்மைமிக்கவராக அடையாளம் கட்டியது. அவர் எவ்வளவு திறைமைகள்  மிகுந்தவராக இருந்திருப்பினும், அவர் வேறு பணிகளில் இருந்திருந்தால் அவ்வளவு விரைவில் அடையாளம் காணப்பட்டிருக்கமாட்டார். அமைப்பின் தலைவரின் மெய்ப்பாதுகாவலராக இருந்தமை என்பது அவரை விரைவிலேயே ஏணிப்படிகளில் ஏற்றிவிட்டது. பின்னாட்களில் குமரன், வேலவன், இரட்ணம் என எண்ணற்ற உதாரணங்களை கூறமுடிந்தாலும் விடுதலைப்புலிகளின் தலைவரின் மெய்ப்பாதுகவலர்களாக இருப்பதால், விரைவிலேயே அடையாளம் காணப்பட்டு நட்சத்திரமான முதலாமவர் சொர்ணம்தான்.

 

images9_zpsd7833efa.jpg?t=1402589502

தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்களுடன்

 

ஆரம்பநாள் தொட்டு அவர் ஒரு தீவிரம்மிக்க போர்வீரனாக இருந்தார். ஒரு தீவிரம்மிக்க போராளி அவர். செயலின் இரண்டாம் விளைவுகளை சிந்திப்பவராக இருக்கவில்லை. இன்னும் விளக்கமாக சொன்னால், மூர்க்கத்தனமாக மேடையில் மோதிக்கொள்ளும் மல்யுத்தவீரனின் இயல்பைக் கொண்டிருந்தார். இதனைவிட மேலதிகமாக, அவர் தனது தலைமையை தீவிரமாக நேசிப்பவராக இருந்தார். அந்த விசுவாசம் பற்றி இரண்டாவது கேள்வியை எவருமே கேட்க முடியாது. அதனை தனது வரலாற்றின் மூலம் நிரூபித்தும் விட்டார். ஏனெனில் அவர் மரணித்தபோது, இறுதியாக சொன்ன வாசகங்களில் ஒன்று, தலைவர் மரணிப்பதை தன்னால் கண்கொண்டு பார்க்க முடியாது. அதற்கு முன்பாக மரணித்து விட வேண்டும் என்பதே. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியை சகித்து கொள்ள முடியாமல் மரணமான முதலாவது உயிரும் அவர்தான்.

 

அவர் களத்தில் கொண்டிருந்த தீவிரத்திற்கும், அமைப்பில் கொண்டிருந்த விசுவாசத்திற்கும் இவற்றை உதாரணமாக சொல்லலாம்.

கெரில்லாக்களாக வாழ்ந்த விடுதலைப்புலிகளின் ஆரம்பநாட்களில் அவர் ஒரு முன்னுதாரணம் மிக்கவராக விளங்கினார். எல்லாக் காரியங்களும் தீவிரமான உறுதியினாலும், விடாமுயற்சியினாலுமே சாதிக்க முடிபவையாக இருந்தன. உணவில்லாமல் இருக்க வேண்டுமா, இருந்தார். காட்டிற்குள் பதுங்கியிருக்க வேண்டுமா, பதுங்கியிருந்தார். பதுங்கியிருந்து ஒரு தாக்குதலை நடத்த வேண்டுமா, நடத்தினார். நேருக்குநேராக நின்று மோத வேண்டுமா, மோதினார். ஒருதரமும் இமைக்காமல் தனது தலைவரை பாதுகாக்க வேண்டுமா, பாதுகாத்தார்.

 

இவையெல்லாம் சேர்ந்து அவரை பிறிதெல்லாரையும் விட தனித்துவமானவராக அவரது தலைவரிடம் அடையாளம் காட்டியது. விடுதலைப்புலிகள் அமைப்பில் பராய வித்தியாசமில்லாமல் பிரபாகரனிடம் ஆத்மார்த்தமான பிணைப்பு கொண்டிருந்தவர்கள் பலர்.  வயதில் மூத்த அன்ரன் பாலசிங்கத்தில் தொடங்கி 30 வயதில் இறந்த சிலம்பரசன் வரை எண்ணற்ற உதாரணங்களை இதற்கு சாட்சியாக கூற முடியும். இவற்றில் யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர் என்ற பகுப்பை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் அவர் மதகில் இருந்து அரட்டையடித்து கொண்டிருக்கவில்லை. அப்படிவெட்டியாக இருந்தால்தான்  எல்லா நண்பர்களும் ஒன்று சேரவும், யார் முதன்மையானவர் என்ற அபிப்பிராய பேதங்களும் எழும். அவர் தீவிரமான கெரில்லா போராளியாக இரந்தார். அதுதவிர, அவர் தனிப்பட்ட நட்பிற்கும் கடமைக்குமிடையிலான இடைவெளியை பேணினார். இன்னும் துலக்கமாக சொன்னால், தன்னுடன் ஆத்மார்த்தமான நட்புடன் இருப்பவர்களும் தூயவர்களாக இருக்க வேண்டும் என நினைத்தார். 

அவர்கள் பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் கறைகளை சந்தித்தால், அவர்களை தள்ளி வைக்கத் தயங்கியதில்லை. தான் நம்பிய நிலைப்பாட்டிற்கு அப்பால் சிந்தித்தார் என்பதற்காக அன்ரன் பாலசிங்கத்தை ஒதுக்கி வைக்கவும், தனது எதிர்பார்ப்பபை நிறைவேற்றவில்லை என்பதற்காக சொர்ணத்தை தள்ளிவைக்கவும் தயங்கியவரல்ல.

 

தன்னுடன் ஆத்மார்த்த பிணைப்பை கொண்டிருந்தவர்கள் சரியாக செயற்படவில்லை என்றபோது ஒதுக்கி வைத்தாலும், மிக நெருக்கடியான மனநிம்மதி வேண்டிய சமயங்களில் அவர்களை அழைத்து தனிமையை போக்கிய இரண்டு சம்பவங்கள் உள்ளன. முதலாவது கடாபி தொடர்புடையது. விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா விலக்கப்பட்டபோது எழுந்த நெருக்கடி நிலையின்போது ஒருநாள் கடாபியை அழைத்து நீண்டநேரம் தன்னுடன் உட்கார வைத்திருந்தார். கடாபியும் அவரும் கொண்டிருந்த நெருக்கம் பரகசியமானதல்ல. ஆனாலும், இதற்கு சில மாதங்களின் முன்னர்தான் அவரை கண்டபடி திட்டி தனது கண்ணில் விழிக்க வேண்டாம் என அனுப்பியிருந்தார். இரண்டாவது சொர்ணம் சம்மந்தமானது. அது யுத்தத்தின் இறுதி சமயத்துடன் தொடர்பானது. அதனை இறுதியில் பார்க்கலாம்.

 

3800ac08-f811-4b48-b641-8477bd77861b_zps

பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக

 

விடுதலைப்புலிகளின் தலைவரின் மெய்ப்பாதுகவலராக இருந்த சமயத்தில் சொர்ணம் பல சாகச நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். ஒருமுறை இந்திய இராணுவத்தின் முற்றுகைக்குள் அவர் சிக்கியபோது, சொர்ணம் அவரை காப்பாற்றியிருந்தார். எனினும் இந்த நடவடிக்கையில் சொர்ணத்தின் பங்கு பேசப்படுமளவிற்கு, அதில் முக்கிய பங்கு வகித்த நவத்தின் பங்கு பேசப்படுவதில்லை. நவத்தின் சாதுரியமும், சொர்ணத்தின் மூர்க்கத்தனமாக போராற்றலும் இணைந்து சீக்கிய ரெஜிமென்றின் முற்றுகையிலிருந்து பிரபாகரன் தப்பிக்க உதவியது.

 

இதற்கு உடன் பதிலடி கொடுக்க புலிகள் விரும்பினார்கள். கல்கட் இலக்கு வைக்கப்பட்டார். மணலாற்றின் நித்தியவெட்டையில் உலங்குவானூர்தியில் வந்திங்கியவர் மீது தாக்குதல் நடந்தது. ஹெலிமீது ஆர்பிஜி அடிக்கப்பட்டது. அடித்தது சொர்ணம். முதலாவது அடி மிஸ். அதற்குள் கல்கட் சுதாரித்து அருகிலிருந்த பதுங்குகுழிக்கள் பாய்ந்து விட்டார். இரண்டாவது அடியில் ஹெலி காலி. இந்தியபடைகளின் கட்டளைத்தளபதிக்கு மரணத்தின்வாசனையை முகரச் செய்தார் சொர்ணம்.

 

இந்த சமயத்தில் விடுதலைப்புலிகளில் பல நட்சத்திரங்கள் மேற்கிளம்பினார்கள். எனினும் அவர்களில் உயர்மட்டத்தில் இருந்தவர்கள் இறந்துபோய்விட்டனர்.

 

உயர்மட்டநட்சத்திரங்களாக எஞ்சியவர்களில் சொர்ணம் ஒருவர். மற்றவர் பால்ராஜ். இவர்கள் இருவரும்தான் இரண்டாம் கட்ட ஈழப்போரின் வடக்கு நாயகர்கள். இவர்கள் இருவரையும் மையப்படுத்தித்தான் இரண்டாம்கட்ட ஈழப்போரின் அத்தனை நடவடிக்கைகளும் அமைந்தன.

 

இந்திய படைகளின் வெளியேற்றத்தின் பின்னர், விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பண்புமாற்றங்கள் ஏற்பட்டன. அதுவரை சிறிய கெரில்லா அணிகளாக இருந்தவர்கள் படையணிகளை அமைத்தார்கள். மகளிர்படையணி தவிர்த்து, ஆண்கள் படையணி இரண்டு உருவாக்கப்பட்டன. ஒன்று சாள்ஸ் அன்ரனி படையணி. அதன் தளபதி பால்ராஜ். மற்றது இம்ரான் பாண்டியன் படையணி. இதற்கு சொர்ணம் தளபதி.

 

அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்ட வளலாய் தொடர் காவலரண் தகர்ப்பை அவர்தான் செய்தார். அது பெரிய படைத்துறை அதிசயத்தை ஏற்படுத்திய தாக்குதல் அல்ல. புலிகளிற்கும் பெரிய இராணுவ அனுகூலங்களை ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆனாலும், ஒரு கெரில்லா இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி காலத்தில், அவை நம்பிக்கை ஏற்படுத்திய தாக்குதல்கள்.

 

அவரது தலையாய படைத்துறை சாதனையாக குறிப்பிடத்தக்கது 1992இல் நடந்த கட்டைக்காடு முகாம் தாக்குதல். அந்த சமயத்தில் விடுதலைப்புலிகள் மிக நெருக்கடியை சந்தித்திருந்தார்கள். ஆயுதங்களிற்கு மிகப்பெரிய தட்டுப்பாடு. வெளிநாட்டு விநியோகம் ஒர் ஒழுங்கிற்கு வரவில்லை. அதுவரை கவனித்த பிரேமதாசாவும் கைவிட்டுவிட்டார். மரபுபடையணிகளை உருவாக்கிவிட்டாயிற்று. ஆனால் ஆயுதங்கள் இல்லை. குறிப்பாக ரவைகள் இல்லை. இராணுவம் ஒரு முன்னகர்வை செய்தால் தாக்கு பிடிக்க முடியாதென்ற நிலை. இயக்கத்தின் நிலைமையை உணர்ந்த சொர்ணம், கட்டைக்காடு முகாமை இலக்கு வைத்தார். அதுதான் ஆனையிறவு பெருந்தளத்தில் ஆயுதசாலை. கடல்மார்க்கமாக வந்த ஆயுதங்கள் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்தன. தனது இம்ரான் பாண்டியன் படையணியை வைத்து அவர் அந்த தாக்குதலை மேற்கொண்டார். சில மணிநேரங்களிலேயே முகாமை வழித்து துடைத்து கொண்டு வந்துவிட்டார்கள். மரபுப்படையணியாக மாற்றமடைந்தாலும் அதன் சாவல்களை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்த சமயத்தில் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் அவகாசத்தை அவர்தான் ஏற்படுத்தினார்.

 

6b5328e8-8b5c-40d2-860b-5c329c0b868a_zps

புலிப்பாய்ச்சல் நடவடிக்கை திட்டமிடலின் போது

 

இதன் பின்னர் குடாநாடு வீழ்ச்சியடையும் வரை வடக்கில் நடந்த தாக்குதல்களை ஒன்றில் அவர் வழிநடத்தினார். அல்லது பால்ராஜ் வழிநடத்தினார். தனது சமதையானவர்கள் அல்லது கீழானவர்கள் என யாருடனும் ஒரு இங்கிதமாக நடந்து கொள்ளும் இயல்பை பால்ராஜூம், அதற்கு நேர்மாறான இயல்பை சொர்ணமும் கொண்டிருந்தனர். இதனால் பின்னாட்களில் இருவரும் இணைந்து தாக்குதல்களை செய்ய முடியாமல் போனது. மிகநெருக்கடியான கட்டம் என்றபோது மாத்திரம் புலிப்பாய்ச்சலில் இருவரும் ஒன்றாக களத்தை வழிநடத்தினார்கள்.

 

சொர்ணத்தின் யுத்த முறை மிகச்சாதாரணமானது. பழைய இதிகாசபுராணங்களில் வருவதற்கொப்பானது. புதிய புதிய உத்திகளோ அதிர்ச்சிகளோ அற்றது. ஒரு வரியில் சொன்னால், போவார்கள் அடிப்பார்கள் வருவார்கள். மாட்டுவண்டி சவாரியின் வண்டியோட்டி வெறிகொண்டு, மாட்டை குத்தி விரட்டுவதைப்போல அவர் களத்தை வழிநடத்தினார். அவரது யுத்தமுறையில் இரண்டு தெரிவுகள் இருக்கவில்லை. எவ்வளவிற்கெவ்வளவு யுத்ததந்திரங்களில் நம்பிக்கை வைக்கிறானோ அந்த தளபதியின் படையணி காப்பாற்றப்படும். உயிர்களில் நம்பிக்கை வைக்கும் தளபதியின் இலக்கு நிறைவேறுமே தவிர, படையணி காப்பாறப்படுவதில்லை. சொர்ணம் இரண்டாம் வகை. அவரது தாக்குதல்கள் அனைத்துமே அதீதமான உயிரிழப்புக்களை ஏற்படுத்தியவை. தவளை, கட்டைக்காடு, புலோப்பளை என இரண்டாம் கட்ட ஈழப்போரில் பல உதாரணங்கள் உள்ளன. மண்டைதீவு மட்டும்தான் விதிவிலக்கு.

 

இந்த காலப்பகுதியில் இராணுவமும் அதீத போர்த்தந்திரங்களை கைக்கொண்டிருக்கவில்லை. முதலில் எறிகணை வீச்சு. பின்னர் துப்பாக்கி வேட்டு. பிறகு நகர்வு என்பதைபோல் மேலோட்டமான தந்திரங்களைத்தான் பாவித்தார்கள். இந்த சமயத்தில் மூர்க்கத்தனமாக தாக்கும் இயல்பு கொண்ட சொர்ணம் போதுமானவராக இருந்தார்.

 

இராணுவத்தின் நடவடிக்கைகளில் தந்திரோபாயமான மாற்றத்தை யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தியவர் மேஜர் ஜெனரல் ஜானகபெரேரா. அவரது வழிநடத்தலில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட சூரியக்கதிர் முன்னரெப்போதும் புலிகள் சந்தித்திராத உத்தியிலான நகர்வு. இதன் பின்னர்தான் இலங்கை போரரங்கு இராணுவ உத்திகளிற்கு முக்கியத்துவம் வழங்குவதாக மாறியது. இந்த நகர்வை விடுதலைப்புலிகளினால் எதிர்கொள்ள முடியவில்லை. வன்னிக்கு பின்னகர்ந்தனர். யாழ்ப்பாணத்தின் வீழ்ச்சியென்பது இன்னொரு அர்த்தத்தில் சொர்ணத்தின் வீழ்ச்சியாக இருந்தது. அவரது போருத்திகள் கடுமையான விமர்சனங்களிற்கு உட்பட்டன.

 

அவர் தனது போர்வாழ்க்கையில் முதலாவது சறுக்கலை சந்தித்தார். திருகோணமலை பொறுப்பாளராக அனுப்பப்பட்டார். திருகோணமலை பொறுப்பாளரென்பது, மூதூர் காடுகளில் ஓரிரு நூறுபோராளிகளை வழிநடத்தும் பொறுப்பு.

 

இதன் பின்னர், விடுதலைப்புலிகளின் புதிய தளபதிகள் விரைவாக மேலெழ தொடங்கினார்கள். குறிப்பாக தீபனின் வளர்ச்சி அசுரத்தனமானதாக இருந்தது. அதீத இராணுவ யுக்திகளை பிரயோகிக்கும் களத்திற்கு பால்ராஜினால் சட்டென மாறிக் கொள்ள முடிந்தாலும், தீபன் போன்றவர்களின் அதீத தேர்ச்சியின் முன் ஈடுகொடுக்க முடியவில்லை. இது முதல் தலைமுறையினரை ஒருவித அசௌகரியப்படுத்தியது.

 

sornam-2_zps62f6722a.jpg?t=1402589513

ஓயாத அலைகள் 03 இன் நான்காம் கட்டத்தில்

 

ஒரு மூத்த தளபதி என்பதன் அடிப்படையில் சொர்ணத்தை விடுதலைப்புலிகள் கைவிடவில்லை. அவ்வப்போது சந்தர்ப்பங்கள் கொடுத்தபடியிருந்தனர். துரதிஸ்ரவசமாக அவரால் ஒருமுறைகூட பிரகாசிக்க முடியாமல் போய்விட்டது. நவீன களங்களில் கறார்த்ன்மைக்கும், செய் அல்லது செத்து மடி பாணிக்கும் இடமில்லை. அமைப்பின் கெரில்லா போராட்டகால மனநிலையும், நிழல்அரசுக்கால மனநிலையும் வேறானவை. ஒரேமனநிலையுடன் இரண்டையும் அணுக முடியாது. இந்த யதார்த்தம் கடைசிவரை புரியாதவராகவே அவர் இருந்தார். இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். கருணாவின் பிரிவின் பின்னர், திருகோணமலையை பொறுப்பேற்க இரண்டாவது தடவையாக அவர் அனுப்பப்பட்ட சமயத்தில் அவரது வாகன சாரதியாக இம்ரான் பாண்டியன் படையணியிலிருந்து ஒருவன் அனுப்பப்பட்டான். மன்னாரை சேர்ந்த அவன் சற்றே துடுக்குத்தனம் மிக்கவன். சம்பூரில் வாகனம் பயணித்து கொண்டிருந்தது. வீதி மோசமானதாக இருந்ததால், குலுங்கியது. குலுங்காமல் செலுத்த சொல்லி சொர்ணம் சொன்னார். அவன் மெதுவாக வாகனத்தை செலுத்தினான். கூட்டம் ஒன்றிற்கு சென்று கொண்டிருந்ததால், விரைவாக செலுத்த சொல்லியிருக்கிறார். அவன் விரைவாக செலுத்த மீண்டும் வாகனம் குலுங்கியது. முன்னிருக்கையில் இருந்தவர், சாரதியின் தலையில் அடித்திருக்கிறார். அவன் சட்டென வாகனத்தை நிறுத்திவிட்டான். எதுவும் பேசாமல் வாகனத்தில் இருந்து இறங்கினான். நிதானமாக வாகன சாவியை எடுத்து சொர்ணத்தின் மடியில் போட்டுவிட்டு நடந்தே முகாம் போய்விட்டான். இப்படியொரு சம்பவத்தை இரண்டாம் கட்ட ஈழப்போர் காலத்தில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

 

http://pagetamil.com/?p=6305

(தொடரும்)

  • Like 3
Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலை புலிகள் 2006 ஆம் ஆண்டு 8 மணி நேரத்திற்குள் மூதூர் கைப்பற்றப்பட்ட .. Commander sornam.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன்- 02

ஹிருத்திக் நிஹாலே

thamilchelvan_sampoor_01_zps2557a10f.jpg

தமிழ்ச்செல்வனுடன் சம்பூரில்

இரண்டாம் ஈழப்போர்க்காலத்தில் அப்படியொரு சம்பவத்தை கற்பனை செய்தே பார்த்திருக்க முடியாது. அந்தக் காலத்தில் சொர்ணம் சர்வ வல்லமை பொருந்திய ஒருவராக இருந்தார். அவர் அப்படியிருந்ததற்கு காரணமுமிருந்தது. விடுதலைப்புலிகளின் தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியின் பொறுப்பாளராக இருந்தமை மற்ற எல்லோரையும் விட, அவரை தலைமைக்கு நெருக்கமானவராக காண்பித்தது. விடுதலைப்புலிகள் அமைப்பில் இப்படியானதொரு மரபு இருந்து வந்தது. மெய்ப்பாதுகாவலர் அணியின் பொறுப்பாளர்கள் இயக்கத்தின் சக்தி மிக்கநபர்களாக இருந்ததற்கு சொர்ணம் மட்டுமே உதாரணம் என்றில்லை. கடாபி, இரட்ணம் என அவரின் தொடர்ச்சிகள் எல்லோருமே அப்படித்தான் இருந்தார்கள். மெய்ப்பாதுகாவலர் அணியினர், மற்ற எல்லா படையணியினரையும் விடவும் மிகவும் மதிப்பு வாய்ந்தவர்களாகவும், கௌரவம்மிக்கவர்களாகவும் அணுகப்பட்டனர். கிட்டத்தட்ட தமிழ் சமூகத்தில் நிலவும் சாதியப்படிமுறையை ஓரளவுக்கு ஒப்பிடலாம்.

மிக நீண்ட காலமாக தனது தலைமைக்கு விசுவாசம் மிக்கவராகவும், குறிப்பிடத்தக்கதொரு தளபதியாகவும் உருவெடுத்தபின்னர், அவர் ஒரு போர்ப்பிரபுவைப் போலவே இருந்தார். சட்டென்ற முன்கோபம், எதையும் எடுத்தெறிந்து அணுகும் மனோபாவம் என்பன அவரைப்பற்றிய விதவிதமான பிம்பங்களை போராளிகள் மத்தியில் உருவாக்கியிருந்தது. இரண்டாம்…ஈழப்போர்க்காலத்தில் அவரின் முன்பாக வெகு இயல்பாக நின்று கதைக்க முடிந்தவன் ஆயிரத்தில் ஒருவனாகத்தான் இருந்திருப்பான்.

மூன்றாம் ஈழப்போர்க்காலத்தில் அவரது வாகனத்தை நடுவீதியில் நிறுத்திவிட்டு, வாகனச்சாவியை கழற்றிப் போட்டுவிட்டு போராளியொருவன் சென்றான். அப்பொழுது அவர், பல்லிழந்த அல்லது கூண்டில் அடைப்பட்ட சிங்கம். எனினும் அவர் நினைவில் காடுள்ள மிருகமாகவே இறுதிவரை இருந்தார். இன்னும் விளக்கமாக சொன்னால், நரேந்திரமோடியை வட்டச்செயலாளராக நியமிப்பதை போல. அவர் நடந்தால் திசைகள் அதிருமாப் போலவும், எதிரிகள் கிலி கொள்வதைப்போலவும் உருவாகியிருந்த பிம்பங்களிற்கும், அவரது யதார்த்தத்திற்குமிடையில் எதிரெதிரான போக்குத்தான் அவரது வாழ்வின் இறுதியில் இருந்தது.

Balraj-with-Sornam-and-Thamilchelvan-in-

தமிழ்ச்செல்வன், பால்ராஜ், பராவுடன் முகமாலையில்

1990களில் ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளில் இருந்த அதிகபட்ச இராணுவப்படிநிலை கேணல். 1993 இல் கிட்டுவிற்கு வழங்கப்பட்டது. அந்த சமயத்திலேயே போராளிகள் மத்தியில் சொர்ணத்திற்கு பேச்சுவழக்கில் இராணுவப்படிநிலை வழங்கப்பட்டாயிற்று. பிரிகேடியர் சொர்ணம். இது சாதாரணமாக உருவானதில்லை. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த படையினர் தமக்கிடையிலான தொலைத் தொடர்பு உரையாடல்களில் அப்படியொரு சொல்லை பாவிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் இதனை ஒருவிதமான பரவசத்துடன் மட்டுமே தொலைத்தொடர்பு கண்காணிப்பு பிரிவினர் கேட்டுக் கொண்டிருந்தனர். விரைவிலேயே, போராளிகள் மத்தியிலும் அது ஒரு வழக்கமாகிவிட்டது.

இரண்டாம் காலத்தில் அவர் எப்படியிருந்தார் என்பதற்கு சில உதாரணங்கள் சொல்லலாம். 1990 களின் முற்பகுதி. இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர், தனது அமைப்பில் இருந்த மூத்தவர்களிற்கு விடுதலைப்புலிகள் படிப்படியாக திருமணம் செய்து வைத்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஒருநாள், பிரபாகரன் சொர்ணத்தை அழைத்தார்.

அவரிற்கும் வயதாகிவிட்டதால் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். சொர்ணம் இதனை எதிர்பார்க்கவில்லை. பார்க்கலாம் என்றிருக்கிறார். அவரது பார்க்கலாம் என்பது பிரபாகரனிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யாரையாவது காதலித்து, அல்லது மனதில் விருப்பத்துடன் இருக்கிறாரா என பிரபாகரன் கேட்டிருக்கிறார். சொர்ணம் அதனை மறுத்து விட்டார். இதன் பின்னர் இருவரும் அது பற்றி பேசிக் கொள்ளவில்லை. இராணுவச்சிந்தனைகளுடனேயே இருக்கும் இருவர், எப்பொழுதும் பொது விடயங்களில் குறிப்பிட்ட எல்லைகளிற்கு மேல் செல்வதில்லை. அப்படி பேசுவதை கௌரவக்குறைவாக நினைக்கலாம். அல்லது ஆர்வம் இல்லாமலுமிருக்கலாம்.

இந்த தொடரின் முதல்ப்பகுதியில் சொர்ணம் குறித்து, அவரது குண இயல்புகள் குறித்து பேசும்போது, சொல்லாமல் விட்ட விடயமொன்றுண்டு. எதையும் தீவிரமாக சிந்திப்பவர், இரண்டாவது தெரிவுகள் அற்றவர் என சில இயல்புகளை குறிப்பிடப்பட்டிருந்தேன். இந்த இயல்புடைய இன்னொருவரை விடுதலைப்புலிகள் அமைப்பில் தேடினால், அது அதன் தலைவர் பிரபாகரன்தான். பிரபாகரன் களத்தில் இந்தவிதமான செயற்பாடற்றவர். எப்பொழுதும் அதீத தந்திரோபாயங்களிற்கு முக்கியத்துவம் அளிப்பவர். தனது அமைப்பில் மிகக்குறைந்த போராளிகள்தான் இருக்கிறார்கள் என்ற பிரக்ஞை எப்பொழுதும் அவரிடம் இருந்து கொண்டேயிருந்தது. அதனால்த்தான், அவர் பெரும் உயிரிழப்புக்களை குறைக்கும் விதமான இராணுவத் தந்திரங்களில் ஆர்வம் காட்டினார். கரும்புலிகள் அணியின் உருவாக்கம்கூட இந்தவிதமான எண்ணத்தினால் உருவானதுதான். ஆனால் சொர்ணம் அதற்கு நேர்மாறானவர். அவரிடம் உயிரிழப்புக்கள் பற்றிய அக்கறை இருந்ததில்லை. அவர் அர்ச்சுனன் மாதிரி. கிளியின் தலைதான் தெரியும். எந்த இலக்குடன் புறப்பட்டோம் என்பது மட்டும்தான் அவரது நினைவில் இருந்தது. இருந்த போதிலும்,சில உபஇயல்புகள் இப்படி வேறுபட்டாலும், காரியத்தில் தீவிரமாக இருப்பதென்பதில் இருவரும் ஒத்த அலைவரிசையுடையவர்கள். முன்னவரின் தம்பி பின்னவர் எனலாம்.

20-prabhakaran-and-familypsd__zpsc4993cc

பிரபாகரன் குடும்பத்துடன், சொர்ணம், பானு, ஜெயம், சுமன், வெள்ளை

உண்மையில் அதுவரை சொர்ணத்திற்கு காதல் கத்தரிக்காய் என்ற எதுவுமே ஏற்பட்டிருக்கவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைவதற்கு முன்னர் நடந்தவை பற்றி இந்த தொடர் கவனம் கொள்ளவில்லை. இதில் குறிப்பிடப்படுபவை அனைத்தும், சொர்ணம் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்ததன் பின்னர்தான்.

அவர் இயக்கத்தில் இருந்த நாட்களில் நினைத்தார், தான் இயக்கத்தில் இருப்பது தலைவரை விசுவாசித்து கொண்டிருக்கவே என்று. அதனையும் மீறி ஒன்றென்றால், இயக்கத்தை விசுவாசித்து கொண்டிருந்தார். அவரளவில் இரண்டும் ஒரே அர்த்தமுடையவைதான்.

ஒருவன் விடுதலைப்புலிகளில் இணைந்து விட்டாலே அவன் அனைத்து ஆசாபாசங்களையும் துறந்து விட வேண்டும் என அவர் நினைத்தார். அப்படித்தான் அவரது இயக்க வாழ்க்கை முழுக்க இருந்தது. அவர் பிரபாகரன் மேல் கொண்டிருந்தது அளவிட முடியாத விசுவாசம். இதனை இந்த சம்பவம் புலப்படுத்தும் என நினைக்கிறேன்.

விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் மாத்தையா விவகாரம் உருவானது. அதுவரை விடயத்தை மிக இரகசியமாக கையாண்டு வந்த பொட்டம்மான், ஒரு கட்டத்தில் செயலில் இறங்குகிறார். அதுவரை விடயம் யாருக்கும் வெளிப்படுத்தப்படவில்லை. பிரபாகரனும், பொட்டம்மானும் மட்டுமே விடயங்களை கையாண்டு கொண்டிருக்கின்றனர். மாத்தையா மீதான சந்தேகம், மற்றும் அதை தொடர்ந்து உருவான பதற்ற நிலைகளின் போது, பிரபாகரன் இந்த விடயத்தில் விட்டுப்பிடிக்கும் முடிவுடன்தான் இருந்தார். மாத்தையா எல்லைமீறிச் செல்ல திராணியற்ற ஒரு விசுவாசியென்பதுதான் அவரது கணக்கு. அவர் அப்படி நினைத்ததற்கு காரணமிருந்தது.

இந்தியப்படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்த சமயத்தில், பிரபாகரன் மணலாற்று காட்டிற்குள் இருந்தார். மாத்தையா வன்னியில் இருந்தார். அந்த சமயத்தில் இந்திய புலனாய்வு அமைபபான றோ அவரை தொடர்பு கொள்ள முயன்றது. கிளிநொச்சியிலிருந்த ஓய்வுபெற்ற தபாலதிபர் ஒருவரின் மூலம்தான் இதன் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நடந்தன. தபாலதிபரின் குடும்பத்துடன், மாத்தையாவிற்கு நெருங்கிய உறவிருந்தது. இந்திய புலனாய்வு அமைப்பு ஏற்படுத்திய தொடர்பை மாத்தையாவும் சங்கடமின்றி ஏற்றுக் கொண்டார். அவர் அந்த தொடர்பை என்ன நோக்கத்துடன் எற்படுத்தினார் என்பதை இந்த கட்டுரையாசிரியரால் உறுதி செய்து கொள்ள முடியவில்லை. பொதுவாக, விடுதலைப்புலிகள் இவ்வாறான உத்தியை கையாள்வது வழக்கம். எதிர்த்தரப்பு தொடர்பு கொள்ள முயன்ற சமயங்களிலெல்லாம், அவர்களுடன் உடன்பட்டு செல்வதைப்போல பாவனை பண்ணி, பலனடைந்து கொள்வதற்கு விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாறு முழுக்க நிறைந்த உதாரணங்கள் இருந்தன.

31ph20_zps7729a1e3.jpg

மாத்தையாவும் சுயமாக முடிவெடுக்க வல்ல ஒரு மூத்த தளபதியென்பதாலும், அந்த சமயத்தில் பிரபாகரனை அடிக்கடி சந்திக்க முடியாததால் அதனை அவரிடம் சொல்லாமலும் இருந்திருக்கலாம். எனினும், அந்த சமயத்தில் விடுதலைப்புலிகளிற்கு எதிராக நடந்து கொள்ளும் எந்த எண்ணமும் அவரிடம் இருந்திருக்கவில்லையென்பதை உறுதியாக நம்பலாம் என்பதே இந்த கட்டுரையாசிரியரின் முடிவும்.

எனினும், அந்த சமயத்தில் கிளிநொச்சியில் இருந்த லெப்.கேணல் சந்திரன் இதனை தெரிந்து கொண்டதும், பிரபாகரனின் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட வேண்டும் என முடிவு செய்தார். அந்த சமயத்தில் முத்துஐயன்கட்டு பிரதேசம் விடுதலைப்புலிகளின் இரகசிய சந்திப்பிடம், மறைவிடம், மருத்துவ பிரதேசமாக இருந்தது. கிளிநொச்சியிலிருந்து அங்கு சென்ற சந்திரன், மணலாற்றிலிருந்த தலைவரிடம் மிக அரகசியமாக இந்த தகவலை சேர்ப்பிக்குமாறு அன்புவிடம் சொல்லியனுப்பினார். (லெப்.கேணல் அன்பு. மணலாறு மாவட்ட தளபதியாக இருந்த சமயத்தில் 1993 இல் ஒப்ரேசன் தவளை நடவடிக்கையில் வீரச்சாவடைந்தார்) அன்பு முத்துஐயன்கட்டிலிருந்து மருந்துப் பொருட்களுடன் மணலாறு திரும்பி சென்றதும், விடயத்தை பிரபாரனிடம் கூறினார்.

உடனடியாக பிரபாகரன் மாத்தையாவை மணலாற்றிற்கு வந்துவிட்டு செல்லுமாறு அழைத்தார். இந்த அழைப்பை அவர் ஏற்றுக் கொள்வாரா இல்லையா என்பதில், அந்த சமயத்தில் பிரபாகரனிற்கு குழப்பமிருந்தது. ஆனால் மாத்தையாவிடம் அந்த குழப்பமிருக்கவில்லை. இரண்டு நாளின் பின்னர் அவர் மணலாற்றில் நின்றார்.

பிரபாகரன் விடயத்தை நேரடியாகவே மாத்தையாவிடம் கேட்டார். “இந்திய புலனாய்வு அமைப்புடன் உனக்கு தொடர்புள்ளதாக அறிந்தேன். உண்மையா” என்ற பிரபாகரனின் கேள்வியில் மாத்தையா நிலைகுலையவில்லை. ஒரு கணமும் தாமதிக்காமல் ஒத்துக் கொண்டார். அவர்களிடமிருந்து எதையாவது பெற்றுக் கொள்ளலாமா எனப் பார்ப்பதாக அவர் கூறினார்.

ஆனாலும், இந்த விவகாரத்தில் பிரபாகரனிற்கு அவ்வளவு உடன்பாடு இருக்கவில்லை. எதிர்த்தரப்பை கையாளும் கத்திமேல் நடக்கும் விளையாட்டுக்களை, பொதுவாகவே அமைப்பின தலைமைகள் தமது நேரடி கண்காணிப்பில் நடத்தவே விரும்புவார்கள். ஏனெனில், எதிர்த்தரப்பு கச்சிதமாக நடந்து, தமது பக்கத்திலிருந்து ஆட்களை இழுத்து எடுத்து விடுவார்கள் என்ற முன்னெச்சரிக்கை தலைவர்களிடம் இருப்பது வழக்கம்தானே.

இந்த தொடர்பை நிறுத்திவிடும்படி பிரபாரன் கூறி, மாத்தையாவை அனுப்பினார்.

இதன் பின்னர்தான் மாத்தையா விடுதலைப்புலிகளின் பிரதித்தலைவரானார். சொன்னால் எதையும் கேட்கும் நம்பிக்கைக்குரிய விசுவாசி மாத்தையா என்பது பிரபாகரனின் ஆரம்ப கால கணிப்பு. ரெலோ அமைப்பிலிருந்து மாத்தையா பிரபாகரனின் பக்கம் வந்த பின்னர், அவரது தன்னடக்கமான செயற்பாட்டை இந்தியாவில் நடந்த பயிற்சி முகாமொன்றில் நடந்த குழப்பத்தின் போதும் பிரபாகரன் குறிப்பிட்டு சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், மாத்தையா விவகாரத்தில் ஆபத்தான விளைவுகள் இருக்கலாமென விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை எச்சரித்ததை தொடர்ந்தும், மாத்தையாவின் உண்ணாவிரதத்தை தொடர்ந்தும் அவரை கைது செய்யலாமென பிரபாகரன் முடிவு செய்தார். அதற்கான அனுமதி கிடைத்ததும், பொட்டம்மானின் அணி வேட்டையில் இறங்கியது.

இதில் அதிர்ச்சியளிக்கத்தக்க விடயம் என்னவென்றால், மாத்தையாவின் நெருக்கமானவர்களாக இருந்ததில் பலர், பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இருந்தவர்கள்தான். பிரபாகரனின் தனிப்பட்ட செய்தித் தொடர்பாளர் முருகன், சாரதி செங்கமலன், நிர்வாக பொறுப்பாளர் ஜெரி என பலரை பிரபாகரனின் கொக்குவில் முகாமில் வைத்து அடுத்தடுத்து பொட்டம்மான் நேரடியாக வந்து கைது செய்தார். இந்த கைதுகள் நடக்கும் வரை இப்படியொரு சதித்திட்டம் நடப்பதையே சொர்ணம் அறிந்திருக்கவில்லை. ஆனாலும், அவர்தான் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியின் தளபதி. புலனாய்வுப்பிரிவு பொறுப்பாளர் பொட்டம்மான் பாதுகாப்பு விவகாரங்களில் ஆலோசனைகள் சொல்வாரே தவிர, வேறு விடயங்களில் நேரடியாக தலையிடுவதில்லை. அனைத்தும் பாதுகாப்பு பிரிவு தளபதியின் கையில்த்தான் உள்ளது. பிரபாகரனின் உதவியாளர்கள், உள்ளக பாதுகாப்பு பொறுப்பாளர்கள், தொடர்பாளர்கள், செயலர்கள் என அனைத்தும் பாதுகாப்பு பிரிவு தளபதியின் பொறுப்புத்தான். மாற்றங்கள் நிகழும் சமயத்தில் எப்பொழுதுதாவதுதான் அதற்கான காரணத்தை பிரபாகரன் கேட்பார்.

மாத்தையா விவகாரம் மற்றும், தான் நியமித்த நம்பிக்கைக்குரிய ஆட்களின் சதிச் செய்தி என்பன சொர்ணத்தை ஆடிப் போகச் செய்துவிட்டது. பிரபாகரனின் பாதுகாப்பில் தான் குறை ஏற்படுத்திவிட்டதாக கருதினார். அவரால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. என்ன செய்வதென குழப்பத்துடன் இருந்தவர், இறுதியில் ஒரு முடிவிற்கு வந்தார்.

தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு, இணுவிலில் இருந்த பொட்டம்மானின் முகாமிற்கு சென்றார். ஒரு காலைப்பொழுதில் தனது முகாமின் வரவேற்பு பகுதியில் உட்கார்ந்து பொட்டம்மான் காலைத்தினசரிகளை புரட்டிக் கொண்டிருந்த சமயத்தில் திடுதிப்பென சொர்ணம் முகாமிற்குள் நுழைந்தார். சொர்ணத்தின் திடீர் வரவு காவலர்களிற்கும் ஆச்சர்யம்தான். எனினும், அவரை யாரும் எங்கும் அந்த காலத்தில் மறிப்பதில்லை. நேராக உள்ளே சென்றார். பொட்டம்மானும் ஆச்சரியமாக பார்க்க, யாரும் எதிர்பாராத விதமாக பொட்டம்மானின் காலடியில் உட்கார்ந்து விட்டார். அவரது கால்களில் தனது தலையைப் புதைத்துக் கொண்டு குலுங்கிக்குலுங்கி அழத் தொடங்கிவிட்டார்.

ஒரு மலை சரிந்து விழுந்ததை அன்றுதான் பலரும் பார்த்தார்கள்.

299_zps043606bf.jpg

பிரபாகரனின் பாதுகாப்பில் தான் சரியான முறையில் நடந்து கொள்ளவில்லையென்றும், தற்போதைய சூழலில் எப்பொழுது என்ன நடக்குமென தெரியாமல் உள்ளதால், பிரச்சனையாகும் முன் தலைவரை பாதுகாக்கும்படியும், அவரை உடனடியாக பொட்டம்மானின் பொறுப்பில் எடுக்குமாறும் சொன்னார்.

சொர்ணத்தை ஆறுதப்படுத்தி அனுப்பி வைக்க பொட்டம்மானிற்கு போதும்போதுமென்றாகியிருக்கும். இந்த கோபமும், ஆற்றாமையும், ஆத்திரமும் மாத்தையா கைதின் போது சொர்ணத்திடம் பகிரங்கமாகவே வெளிப்பட்டது.

மாத்தையாவின் சதித் திட்டத்துடன் தொடர்புபட்டவர்கள் என கருதிய பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியிலிருந்தவர்களை கைது செய்ததன் பின்னர், மாத்தையாவை கைது செய்வதென பிரபாகரன் முடிவு செய்தார். இந்த நடவடிக்கைக்கு யாரைப் பொறுப்பாக நியமிக்கலாம் என்ற இரண்டு தெரிவு பிரபாகரனிடம் இருக்கவில்லை. ஒரேயொரு தெரிவுதான். சொர்ணம்.

சொர்ணம் தனது படையணியினருடன் நடவடிக்கைக்கு கிளம்பினார். சொர்ணத்தின் அணியுடன் ஒரு பா்வையாளரைப் போல பொட்டம்மானும் சென்றார். எனினும், இந்த நடவடிக்கையை முற்றுமுழுதாக சொர்ணமே வழிநடத்தினார்.

ஏற்கனவே பிரபாகரனிற்கு எதிரான சதியில் ஈடுபட்டார் என கடுமையான அதிருப்தி மாத்தையா மேல் இருந்தது. அன்று ஒரு துப்பாக்கி மோதலிற்கு தயாராகவே போராளிகள் சென்றனர். மாத்தையாவின் முகாம் வாயிலில், காவல்க்கடமை பலமாக இருந்தது. சில சமயங்களில் அவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தலாம் என்றும் சொர்ணம் தரப்பு நினைத்தது. எனினும், எந்த தயக்கமும் இல்லாமல் வாகனத்தில் இருந்து இறங்கி சொர்ணம், யாரையும் எதிர்பாராமல் முகாம் வாயிலை நோக்கி சென்றார்.

(தொடரும்)

http://pagetamil.com/?p=7454

Link to comment
Share on other sites

சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன்- 03!  0

dcp56544654876_zpsf25a165a.pngமாத்தையா கைதின் முழுமையான பொறுப்பும் சொர்ணத்திடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பிரபாரன் மீது வைத்திருந்த விசுவாசம், தனது பொறுப்பிலிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊடுருவி மாத்தையாவின் சதிக்கரங்கள் ஊள்நுழைந்ததாக அவர் நம்பியது என இரண்டும் சேர்ந்து அவரை ஒரு வெறி கொண்ட வேங்கையாகத்தான் மாத்தையாவின் முகாமிற்கு கொண்டு சென்றது.

தனது வாகனத்திலிருந்த விறுவிறுவென இறங்கிய சொர்ணம், நேராக வாயிலுக்கு சென்றார். அங்கு மாத்தையாவின் அணியின் இரண்டு போராளிகள் காவல்கடமையில் நின்றனர்.

இதை படிக்கும் உங்களிற்கும், சொர்ணத்தின் அணியிலிருந்தவர்களிற்கும்தான் அந்த சமயத்தில் ஒருவித பதட்டம் நிலவியது என நினைக்கிறேன். வாயில்கடமையில் நின்ற போராளிகளிற்கு சொர்ணம் வந்ததன் காரணமோ, நடந்த, நடக்கவுள்ள விபரீதமோ எதுவும் தெரிந்திருக்கவில்லை. குறைந்தபட்சம் ஒரு மோதலிற்கான ஏற்பாட்டுடன் கூட அவர்கள் நிற்கவில்லை. மாத்தையா விவகாரத்தில் தீராத மர்மத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விடயங்களில் ஒன்று இது. மாத்தையா விவகாரம் திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. தன்மீதான வலை இறுகுவது மாத்தையாவிற்கு ஏற்கனவே தெரிந்ததுதான். அதனால்த்தான் யாழ்ப்பாணம் அரியாலையிலிருந்த அன்ரன் பாலசிங்கம் வீட்டிற்கு சென்று உண்ணாவிரதம் இருந்தார். அந்த சமயத்தில் அன்ரன் பாலசிங்கமும் மாத்தையாவின் சதி பற்றிய தகவல்களை நம்பியிருக்க வேண்டும். அதனால்த்தான் இந்த விடயத்தில் அவர் அக்கறை காட்டவில்லை. தனது வீட்டில் வந்து உண்ணாவிரதம் இருந்த மாத்தையாவை பார்த்து, “எதற்காக இங்கு வந்து உண்ணாவிரதம் இருக்கிறாய்? உனக்கு ஏதாவது பிரச்சனையென்றால் ஏதாவது கோயில்ல போய் இரு. நாலு சனத்திற்காவது விசயம் தெரியவரும்” என கூறி அனுப்பி விட்டார்.

சொர்ணம் நேராக அந்த காவலர்களிடம் சென்று கேட்டது ஒரேயொரு கேள்விதான். அவர்கள் ஆயுதங்களை கீழே வைத்து விட்டார்கள். “நீங்கள் பிரபாகரனின் இயக்கமா? மாத்தையாவின் இயக்கமா?” இதுதான் சொர்ணம் கேட்ட ஒரே கேள்வி. இதொரு கேள்வியா? அவர்கள் பிரபாகரன் இயக்கம் என்றார்கள். அப்படியாயின் ஆயுதங்களை கீழே வைக்கச் சொன்னார். அவர்கள் வைத்து விட்டார்கள். நேராக சொர்ணம் உள்ளே சென்றார். அவரைத் தொடர்ந்து அணி உள்நுழைந்தது. நல்ல வேளையாக மாத்தையாவின் வலது கரமான ஒற்றைக்கை சுரேஷ் அன்று முகாமில் தங்கியிருக்கில்லை. அவர் நின்றிருந்தால், நிச்சயம் மோதலொன்று வெடித்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. அல்லது அதுவுமொரு ஊகமோ தெரியவில்லை.

முகாமின் மையத்திலிருந்த வீட்டில்த்தான் மாத்தையா தங்கியிருந்தார். சொர்ணம் தலைமையில் அணியொன்று வருவதை கண்டதும் அவர் விபரீதத்தை உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். முன் விறாந்தையில் உட்கார்ந்திருந்தவர், எழுந்து உள்பக்கமாக ஓடி கழிவறைக்குள் நுழைந்து விட்டார். பின்னாலேயே ஓடிச் சென்ற சொர்ணமும் அணியினரும் அறைக்கதவை உடைத்து திறந்தனர். உள்ளே நுழைந்த சொர்ணம், அதுவரை மிக மரியாதையாக அணுகிவந்த தனது பிரதித்தலைவரை தூசண வார்த்தைகளை உபயோகித்து மிரட்டினார். மாத்தையாவும் எந்த எதிர்ப்பிலும் ஈடுபடவில்லையென்பதுதான் ஆச்சரியமான விடயம்.images29_zps48b88cb7.jpg

வழக்கமாக எந்த கோபமான சமயத்திலும் இரண்டொரு தூசண வார்த்தைகள் சொர்ணத்தின் நுனி நாக்கில் வந்துவிடும். மிக ஆக்ரோசமாக சமயங்களில் தூசண வார்த்தைகள் உபயோகிப்பது அந்த அமைப்பில் ஆச்சரியமான சங்கதியல்ல. குறிப்பாக மிக இறுக்கமான களங்களில் ரவைகளிற்கு சமமான தூசண வார்த்தைகளும் வரும். இதுவும் அப்படியொரு களஇறுக்கத்திற்கு சமமான நிலைதானே.

மாத்தையா அந்த சமயத்தில் செய்வதற்கு எதுவுமிருக்கவில்லை. அவர் பேயறைந்தவர் போல நின்றார். தூசண வார்த்தைகள் மற்றும் தனது ஆளுமையினால் சூழலை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த சொர்ணம், அப்படியே துரிதமாக செயற்பட்டு, மாத்தையாவின் கையை மடக்கி பின்னால் கொண்டு வந்து கைதியாக்கினார். பின்னாளில் மிகப்பெரும் ஆவலைத் தூண்டும் விடயமாக மாறிய, மாத்தையா விவகாரத்தில் நேரயாக பங்குபற்றி அவரை கைதியாக்கியவர் சொர்ணம்.

மாத்தையாவை கைது செய்ததன் மூலம், தனது தலைவரை பாதுகாத்துக் கொண்டு விட்டேன் என உணர்ந்ததன் பின்னர்தான் அவர் நிம்மதியடைந்தார். இந்த சமயத்தில் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிபூர்வமான விசுவாசமும், இயக்கம் மீதான பற்றும் பிரபாகரனை நிச்சயம் மனம் நெகிழச் செய்திருக்கும் என நினைக்கிறேன். நீண்ட காலமாக அவர், தனது தலைவரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தமையினால் பிரபாகரன் குடும்பத்திலும் அவர் ஒரு அங்கத்தவராக இருந்தார். பிரபாகரன் மீது அவர் கொண்டிருந்த கேள்விக்கிடமற்ற விசுவாசமும், பற்றுதலும் இது போன்ற எண்ணற்ற சம்பவங்களை இயக்க வரலாறு முழுவதும் எழுதிச் சென்றுள்ளது. இதனாலேயே இறுதிநாட்கள் வரை பிரபாகரனின் முதலாவது நம்பிக்கைக்குரிய விசுவாசியாக அவரிருந்தார்.

அவரது திருமண விவகாரத்தில், அவர் எவ்வளவு விசுவாசியாகவும், இயக்கத்திற்கு அப்பால் எதனையும் சிந்திக்காதவராகவும் இருந்தார் என்பதும் வெளிப்பட்டது.

அவரை திருமணம் செய்யுமாறு பிரபாகரன் கூறிவிட்டார். அவர் இந்த விடயத்தை பிரபாகரனின் மனைவி மதிவதனியடம் சொல்லியிருக்கிறார். பிரபாகரனிடம் நேரடியாக தொடர்பு கொள்ளவல்ல, மற்றும் அவரை சூழ்ந்திருக்கும் படையணியினர் எல்லோருக்கும் ஒரு தாயாராக மதிவதனி இருந்தார். சிலரைவிட ஓரிரு வயதுகள் மூத்தவராக இருந்தார். பலருக்கு தாயாரின் வயதில் இருந்தார். எனினும், அனைவரிற்கும் தாயாராக இருக்கும் பக்குவம் அவரிடமிருந்தது. சொர்ணம் வந்து விடயத்தை சொன்னபோது, அந்த பொறுப்பை மதிவதனியே எடுத்துக் கொண்டு விட்டார்.

அப்பொழுது மகளிர்படையணி தளபதிகள் ஒருவராக ஜனனி இருந்தார். 1993 இல் புலிகள் நடத்திய ஒப்ரேசன் தவளை நடவடிக்கையின் கட்டளைத்தளபதிகளில் ஒருவராக சொர்ணம் இருந்தார். அவரின் கீழ் செயற்பட்ட அணிகளில், மகளிர்படையணியும் ஒன்று. தவளை நடவடிக்கையில் ஈடுபட்ட மகளிர்படையணியின் பிரிவொன்றை ஜனனி வழிநடத்தினார். அந்த சமயத்தில் இரண்டு பேரிற்குமிடையில் ஒருவித அந்நியோன்யம் இருந்ததாக அப்பொழுதே களத்தில் நின்ற போராளிகள் பேசிக் கொண்டனர். அல்லது அவர்கள் பேசும் விதத்தில் அந்த அந்நியோன்யம் இருந்தது.

ஏற்கனவே சொர்ணத்தின் யுத்த முறை பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். யுத்தகளங்களில் அவர் கட்டளை வழங்கினால் பத்து சொல்லில் இரண்டு சொல்தான் யுத்தகள கட்டளைகள். மிகுதி எட்டும் முரட்டுத்தனமான வார்த்தைகள் (அவற்றில் தூசணங்களும் அடக்கம்). இதுதான் அவர் சூழலை கட்டுக்குள் கொண்டுவரும் விதம்.

sasa_zps1432a4c4.jpgஆனால் ஜனனி விடயத்தில் அவரால் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை. அது பொதுவான மனித இயல்புதான். காதலியுடன் பேச நிறைய தயார்படுத்தல்களுடன் போவதும், அவளுடன் பேசும்போது தடுமாறுவதும் பற்றித்தானே முழு தென்னிந்திய திரைப்படங்களும் வருகின்றன. பாடல்களும் வருகின்றன. சிகண்டியின் முன்னால் நின்ற பீஷ்மரைப்போலத்தான், அவர் சமயங்களில் ஜனனியின் முன்னால் நின்றார். ஆனாலும், அந்த சூழ்நிலையை காதலாக அல்லது மனதிற்கு நெருக்கமான உரையாடல் பொழுதாக மாற்றும் கலை அவரிடம் இருக்கவில்லை. அவர்தான் மிகத்தீவிரமான இராணுவ வீரனாயிற்றே. அல்லது அதற்கான பொழுதிருக்கவில்லை.

பூநகரி களத்திற்கு விடுதலைப்புலிகளின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் ஆட்கள் சென்றனர். பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியான இம்ரான் பாண்டியன் படையணியிலிருந்தும் போராளிகள் சென்றிருந்தனர். அந்த அணியிலிருந்த போராளியொருவன், நிலவரத்தை அவதானித்திருக்கிறான். பின்னர், அந்த சண்டை முடிந்து போராளிகள் முகாம் திரும்பி விட்டனர். கள விடயங்கள் பற்றி மதிவதனி போராளிகளுடன் பேசிய சமயத்தில், அவர்கள் இந்த விடயத்தை சொல்லிவிட்டனர்.

இதேபோல, பெண்கள் அணியிலும் இது அவதானிக்கப்பட்டிருந்தது. அது மகளிர் தளபதிகளில் ஒருவரான ஜெயாவின் காதுகளிற்கும் சென்றிருந்தது. அவர் ஒருநாள் விடயத்தை அடேல் பாலசிங்கத்தின் காதில் போட்டிருக்கிறார். அடேல் அதனை எடுத்தக் கொண்டு மதிவதனியிடம் வந்தார். அடேல் ஆச்சரியப்படும் விதத்தில் மதிவதனி ஏற்கனவே அந்த தகவலை வைத்திருக்கிறார்.

அதன் பின்னர் ஜனனியுடனும் பேசி அந்த திருமணத்தை மதிவதனி முடித்து வைத்தார். திருமணத்தின் பின்னரும், அந்த குடும்பங்கள் மிக நெருக்கமாக இருந்தன. விடுமுறைகளில், அல்லது குறிப்பிட்ட காலஇடைவெளிக்கொருமுறை இரண்டு குடும்பத்தினரும் ஒன்றாக பொழுதைக் கழித்து கொண்டார்கள். துவாராகாவை விடவும், வயதில் மிக இளையவராக இருந்தபோதும், சொரண்ணத்தின் மகளும் துவாரகாவும் மிக நெருங்கிய நண்பிகளாக இருந்தனர். யுத்தம் முடிவதற்கு முந்தைய சில வருடங்களில், இருவரும் சகோதரிகளைப் போலவே ஒட்டித் திரிந்தனர். வாகனம் ஓடப்பழகுகிறோம் பேர்வழி என இருவரும் ரக்ரரில் ஏறி புதுக்குடியிருப்பின் ஒதுக்குப்புற தெருக்களை அதகளப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அல்லது பரதநாட்டியம் பழக கிளிநொச்சிக்கு போய் வந்து கொண்டிருந்தார்கள்.

மாத்தையாவின் விவகாரத்தின் பின்னர், பல உயர்மட்ட தலைகள் உருண்டன. சில திரும்பி வந்தன. சில வரவில்லை. பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியிலிருந்தும் பலர் தூக்கப்பட்டனர். இதனால் மெய்ப்பாதுகாவலர் அணி ஆட்டம் கண்டது. இந்த சமயத்தில் சொர்ணம் ஒரு வித்தியாசமான முடிவு எடுத்தார். தான் இல்லாத ஒரு மெய்ப்பாதுகாவலர் அணியை உருவாக்குவது பற்றி பிரபாகரனிடம் கூறினார். அவர் இயக்கத்தில் சேர்ந்த இரண்டாவது வருடத்தில் இருந்து, இந்த சம்பவம் நடக்கும் 1994 வரையும் பிரபாகரனின் நிழலாக இருந்தார். விடுதலைப்புலிகளின் மிகத்தீர்க்கமான இந்த காலகட்டத்தில் அவர் இல்லாத பிரபாகரனை காண்பது அரிதான சம்பவமாக இருந்தது. இப்டியொரு சூழலிலத்தான் அவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். இதனை பிரபாகரனும் ஏற்றுக் கொண்டார்.

சொர்ணம் இல்லாவிட்டால் யார் என்ற சிக்கல்கள் எதுவும் படையணிக்குள் இருக்கவில்லை. விடுதலைப்புலிகளின் images27_zps482ecc16.jpg?t=1404722892படையணிகளிற்குள்ளேயே இம்ரான் பாண்டியன் படையணிதான் ஒரு விசித்திரமான சிக்கலை எதிர்கொண்டபடியிருந்தது.

மற்றைய படையணிகளில் உள்ள ஒருவரிற்கு படிமுறையான வளர்ச்சி இருந்து கொண்டேயிருக்கும். அங்கு தொடர்ந்து வெற்றிடங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கும். ஏனெனில், அது தொடரந்து களத்தில் நிற்கும் படையணிகள். மரணம் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இது தவிர, ஒருபடையணியில் உள்ளவர், உள் முரண்பாடு காரணமாகவோ அல்லது, தேவை நிமித்தமாகவோ வேறு ஒரு பிரிவிற்கு செல்ல முடிந்தது.

இந்த இடமாற்றம் இம்ரான் பாண்டியன் படையணியில் கிடையவே கிடையாது. பாதுகாப்பு கடமைகளில் உள்ளவர்கள் வெளியில் சென்றால், இரகசிய கசிவு ஏற்படலாம் என்பதால் அந்த ஏற்பாடு. தவிரவும், அந்த படையணி தொடர்ந்தும் யுத்தகளத்தில் நிற்கும் படையணியல்ல. அதனால் ஒப்பீட்டளவில் உயிரிழப்பு வீதம் குறைவானது. இதனால், இரண்டாம் மட்டதளபதிகள் அந்த படையணியில் ஏராளமாக இருந்தார்கள்.

அதனால் சொர்ணத்தின் மாற்றத்தில் சிக்கல்கள் இருக்கவில்லை. அற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அவரது விசுவாசத்தை நிரூபிக்கவோ என்னவோ அவர் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டிருந்த சமயங்களில்த்தான், மிக ஆபத்தான நெருக்கடிகளை பிரபாகரன் எதிர்கொண்டார். இப்படித்தான், அடுத்தவரிடம் பொறுப்பை ஒப்படைக்கலாம் என தயாரானபோது, இன்னொரு பெரிய நெருக்கடி ஏற்பட்டது. ஏற்கனவே நடந்த மாத்தையா விவகாரத்தைவிட மிகத் தீவிரமானதாக இது அப்பொழுது நோக்கப்பட்டது. மாத்தையா விவகாரம் வெளித்தெரிந்த ஆபத்து. இது மிக நுணுக்கமாக, திட்டமிடப்பட்ட ரீதியில் நடந்தது.

ஒருநாள் பிரபாகரன் குடிக்கும் நீரில் சயனைட் கலக்கப்பட்டிருந்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தையா கைதின் முழுமையான பொறுப்பும் சொர்ணத்திடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பிரபாரன் மீது வைத்திருந்த விசுவாசம், தனது பொறுப்பிலிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊடுருவி மாத்தையாவின் சதிக்கரங்கள் ஊள்நுழைந்ததாக அவர் நம்பியது என இரண்டும் சேர்ந்து அவரை ஒரு வெறி கொண்ட வேங்கையாகத்தான் மாத்தையாவின் முகாமிற்கு கொண்டு சென்றது.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

இதில் அவர் விரும்பி திருமணம் செய்தவர் விசாலி அக்கா என்று நினைக்கிறேன் அவர் பூநகரி தாக்குதலுக்கு ஒரு படையணி தளபதியா சென்றார் அப்பொழுது எல்லோரும் சாக்கு தொப்பி அணிய வேண்டும் என்று கட்டாயம் இருந்ததாம் ஆனால் விசாலி அக்கா அதை அணியாது போனபோது அதை கண்ணுற்ற தளபதி சொர்ணம் கூப்பிட்டு எங்கோ உங்கள் தொப்பி என்று கேட்டு இருக்கிறார் அவர் அது தனது பாதுகாப்பு அரணில் இருபதாக கூற இங்கிருந்தது வாத்து நடையில் சென்று தொப்பியை எடுத்து வரும்படி கட்டளை இட்டார் ....

பின்னாளில் அவரையே திருமணமும் செய்தார் ஒரு கண்டிப்பான தளபதி .

 

ஒரு முறை தலைவரை சாவகச்சேரி பகுதியில் உள்ள முகாமில் சந்திப்பதிக்கு தளபதி ஜனா அவர்கள் பிக் கப் வாகனத்தில் சென்றார் சொர்ணம் அண்ணையின் பாதுகாப்பு பிரிவு போராளி அவரை வாசலில் மறித்து சோதனை இடவேண்டும் என்று கூற கோவம் கொண்ட ஜெனா நான் ஒரு தளபதி என்னை சோதனை இடவேண்டிய தேவை இல்லை என்று கூறி விட்டு கடந்து போக போராளி தனது ஏகேயால் வாகன டையரை நோக்கி சுட்டு நிறுத்தினான் ....

 

 

அவனின் இந்த செயலுக்கு தளபதி சொர்ணம்  பாராட்டு தெரிவித்து இருந்தாராம் யாரா இருந்தாலும் கட்டளை ஒன்று என்று சொன்னார் இப்படி தலைவரின் பாதுகாப்பில் தூங்காமல் இருந்த ஒரு தளபதி .

 

இவை பழைய போராளிகள் சொல்ல கேட்ட கதைகள் .

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன்- 04

images43_zpsca0f093d.jpg

1994களின் முற்பகுதி. அப்பொழுதுதான் மாத்தையா விவகாரம் முடிந்திருந்தது. பாதுகாப்பு அணியிலும் தலைகீழ் மாற்றங்கள் எல்லாம் நடந்து முடிந்து விட்டன.

அப்பொழுது பிரபாகரனின் முகாம் யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்திருந்தது. பிரபாகரன் ஒரு நடைப்பிரியர். மிக நீண்ட தூரங்களிற்கும் விறுவிறுவென நடந்து செல்வார். இலேசில் களைப்படைவதில்லை. கொக்குவிலின் உள்வீதிகளினால் நடப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

ஒருநாள் இப்படி நடந்துவிட்டு, முகாமிற்கு வந்தவர் காலைத்தினசரியுடன் தனது வீட்டின் முன்கூடத்தில் வந்தமர்ந்தார். தினமும் நடைப்பயிற்சி முடிந்ததும் நிறைய தண்ணீர் அருந்துவது அவரது வாடிக்கை. அன்றும், வழக்கம் போலவே எல்லாம் நடந்தது. உட்கார்ந்ததும், தண்ணீர்க்குடுவையை எடுத்துவரும்படி ஒரு போராளிக்கு சொன்னார். வீட்டின் உட்பகுதியில் இருந்து அவர் தண்ணீர்க்குடுவையை கொண்டு வந்தார். அப்பொழுது, பாதுகாப்பு அணிப்பொறுப்பாளராக இருந்த செல்லக்கிளி அந்தப் போராளியை கூப்பிட்டு, தண்ணீரை வாங்கினார். அப்பொழுது அவர்தான் பாதுகாப்பு அணி பொறுப்பாளர். தண்ணீரை பரிசீலித்து பார்க்கப் போவதாக சொன்னார்.

அந்தக்காலப்பகுதியில், பிரபாகரனின் உணவுகளை பரிசீலித்து பார்ப்பதும் பாதுகாப்பு அணித்தலைவர்தான். ஆனால் அந்த பரிசீலனை ஒரு கிரமமானதாக இருந்ததில்லை. பாதுகாப்பு அணித்தலைவர்கள் எப்பொழுதாவது திடீர்திடீர் என பரிசோதித்து பார்த்தார்கள். அப்பொழுது பிரபாகரனை நெருங்கி, பெரும் அபாயங்கள் ஏற்படுமென யாரும் எதிர்பார்க்கவில்லை. மாத்தையா விவகாரம், மற்றும் இதில் குறிப்பிடப்படும் விவகாரங்களின் பின்னர்தான் பிரபாகரனின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கனமான நடைமுறைகள் உருவாக்கப்பட்டன. பின்னாளில், அவரது உணவுப்பரிசோதனையை, அவரது தனிப்பட்ட மருத்துவப்போராளியே கவனித்தார். ஒவ்வொருவேளை உண்பதையும் பரிசோதித்தார். மருத்துவப்போராளி பரிசோதித்த, பன்னிரண்டாவது நிமிடத்தின் பின்னர்தான் பிரபாகரனிடம் உண்ணக் கொடுப்பதை பாதுகாப்பு அணியினர் வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்த சம்பவம் நடந்த சமயத்தில் அப்படியான ஏற்பாடுகள் இருக்கவில்லை. தண்ணீர் கொண்டுபோன போராளியை இடைமறித்து செல்லக்கிளி தண்ணீரை வாங்கி சிறிது குடித்தார். அப்பொழுதுதான் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. தண்ணீர் குடித்ததுமே, வாந்தி எடுத்தபடி செல்லக்கிளி நிலத்தில் விழுந்தார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. தண்ணீரில்த்தான் ஏதோ பிரச்சனையென நினைத்தார்கள். உடனடியாக செல்லக்கிளி யாழ்ப்பாண பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிரபாகரனிற்கும் தண்ணீர் அந்த தண்ணீர் வழங்கப்படவில்லை. தண்ணீர்க்குடுவையும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

தண்ணீர்க்குடுவையை பரிசீலித்ததில் அதற்குள் சயனைட் கலந்திருந்தது தெரியவந்தது. அது பாதுகாப்பு வட்டாரங்களையே அதிர்ச்சியடைய வைத்தது. சொர்ணம் இரண்டாவது தடவையாக நிலைகுலைந்து போனார். தனது பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அணியில் இவ்வளவு ஓட்டைகள் என்றதும், உணர்ச்சிவசப்பட்டு என்ன செய்வதென தெரியாமல் திண்டாடினார். கடந்தமுறையைப்போல, இந்தமுறையும் பொட்டம்மான் தான் அவரை நிலைப்படுத்தினார்.

இம்முறை விசாரணைகளை பொட்டம்மான் நேரடியாக கவனித்தார். இரண்டாம்நாளே, சயனைட் மர்மம் உடைந்தது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த செல்லக்கிளி சிகிச்சை முடிவில் கைது செய்யப்பட்டார். விசாரணைகளில் சயனைட் கலந்ததை அவர் ஒப்பும் கொண்டார். அவரது ஒப்புதல்வாக்குமூலம், சொர்ணத்தின் தெரிவொன்றை சிதைத்தது என்பது இன்னொரு விடயம்.

download8_zpsa2beb463.jpg

அப்பொழுது பாதுகாப்பு அணியில், சொர்ணத்திற்கு அடுத்த நிலையில் கடாபி இருந்தார். கடாபியும் மிகப்பல வருடங்களாகவே, பிரபாரனின் நிழலாக வாழ்ந்து வந்தவர்தான். சொர்ணம், தனது பொறுப்பிலிருந்து மாற்றம்பெற்று செல்வதென்றால், அடுத்து யார் என்ற கேள்வி வந்தது. இது பல தெரிவுகளை கொண்டதல்ல. பலரிற்கு ஒரே தெரிவு. அது கடாபி. சிலருக்கு இரண்டு தெரிவுகள். கடாபி, செல்லக்கிளி. சொர்ணம் இரண்டாம் வகை. இருவரில் ஒருவரை நியமிக்கலாம் என சொர்ணம் ஆலோசனை முன்வைத்தார். தற்போது பிரித்தானியாவில் வசிக்கும் செல்லக்கிளி மட்டக்களப்பை சேர்ந்தவர். 1985இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து, 1987 முதல் பிரபாகரனின் பாதுகாப்பு அணியில் கடமையாற்றி வந்தார். பாதுகாப்பு அணியில் இருவருமே செல்வாக்க மிக்கவர்களாக இருந்தனர். பிரபாகரனுடன் நெருக்கமாக உள்ள முதல்வட்ட பாதுகாப்பு அணியின் பொறுப்பாளராக செல்லக்கிளி இருந்தார்.

எனினும், கடாபி இந்த போட்டியில் எப்பொழுதும் ஒருபடி முன்னால் இருந்து கொண்டிருந்தார். தானும் போட்டியில் உள்ளேன் என்பதை அறிந்ததும், செல்லக்கிளி அதனை குறுக்குவழியில் எட்ட முடிவு செய்தார்.

பிரபாகரன் அருந்தும் நீரில் மிகச்சிறிதளவு சயனைட்தூளை கலந்து விடுவதென அவர் முடிவு செய்தார். பின்னர், அந்த நீரை தானே பருகுவதென்றும் முடிவு செய்தார். அதனை பருகியதும், நடந்த அத்தனை விடயங்களையும் செல்லக்கிளி முன்கூட்டியே அனுமானித்திருந்தார். இதன்மூலம், பிரபாகரனிடம் தன்பற்றிய அபிப்பிராயத்தையும், அனுதாபத்தையும் பெற்றுக் கொண்டு விடலாமென அவர் கருதினார். அவர் நினைத்ததனைத்தும் நடந்தன. அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அன்று இரவு, பிரபாகரன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு நேரே சென்று செல்லக்கிளியை பார்த்தார். செல்லக்கிளியில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை கைது செய்து விசாரணை செய்ய வேண்டுமென பொட்டம்மான் கூறிய போது, அதனையும் கடுமையாக ஆட்சேபித்தார். எனினும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு, குற்றத்தையும் ஒப்புக் கொண்டார். இந்த காலப்பகுதியில் இம்ரான்-பாண்டியன் படையணியின் தளபதியாக கடாபி நியமிக்கப்பட்டார். அளவிற்கதிகமாக விசுவாசம் கொண்டிருந்த தனது தலைவனை பாதுகாக்கும் பணியில் இரந்து சொர்ணம் வெளியேறினார். இதனை இன்னொரு விதத்தில் சொன்னால், சொர்ணம் தனது வீழ்ச்சிகளை நோக்கி நடக்கத் தொடங்கினார் என்றும் கூறலாம்.

அதன் பின்னர், அவர் முழுக்க முழுக்க ஒர களத்தளபதிதான். களத்தில் சிறப்பாக செயற்பட்டால் மாத்திரமே ஜொலிக்க முடியும். ஆனால் அது சொர்த்தினால் முடியாமல் போனது. அவரது யுத்தமுறை நவீனயுத்தமுறைகளிற்கு பொருந்தாமல் போனது. எனினும், ஈழப்போர்க்களங்களில் அவரது போரியல் அணுகுமுறைக்கு இரண்டு சிறந்த உதாரணங்கள் உள்ளன.

முதலாவது எற்கனவே கறிப்பிட்டபடி FNC சண்டை என்று அழைக்கப்பட்ட கட்டைக்காடு அயுதக்களஞ்சியத் தாக்குதல். அந்த சண்டையில் அவர் ஒரு புதிய போருத்தியை ஈழக்களங்களில் அறிமுகப்படுத்தினார். எதிரியின் தளத்திற்குள் இரகசியமாக ஊடுரவிச் சென்று, எதிரியின் பின்னால் நிலையெடுத்துவிட்டு, எதிரியின் பிடறியில் அடித்து அதிர்ச்சியடைய வைப்பது. ஈழக்களங்களில் அதனை நடைமுறைப்படுத்திக் காட்டியவர் அவர்.

இன்னொன்று, பலாலி கிழக்கு காவலரண்கள் தகர்த்தது. ஆயுதங்களை கடலிற்குள்ளால் நகர்த்தி சென்று, எதிரியின் பிரதேசத்திற்குள் சேமித்து, அங்கிருந்தபடியே தயாராகி தாக்குவது.

இம்ரான்-பாண்டியன் படையணியிலிருந்து விடுவித்து கொண்டதும், அவருக்கு இன்னொரு பணி காத்திருந்தது. அப்பொழுதுதான் விடுதலைப்புலிகள் கூட்டுப்படை தலைமையகம் என்ற ஒரு கட்டமைப்பை ஆரம்பித்தார்கள். அதன் முதலாவது தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். அவர் சிறந்த போர்த்தளபதியாக இருந்தபோதும், பரந்தபட்டளவில் ஆளுமை செலுத்தும் தளபதியாக ஜொலிக்க முடியாமல் போனது. கூட்டுப்படை தலைமையகத்தின் தளபதியாக அவர் நியமிக்கப்பட்ட பின்னரும், அவர் முன்னர் வகித்த வன்னிமாவட்ட தளபதி அல்லது சாள்ஸ் அன்ரணி படையணி தளபதியாகவே அவர் செயற்படுகின்றார் என்ற விமர்சனம் அவர்மேல் வைக்கப்பட்டது. அவர் தனது அத்தனை நடவடிக்கைகளிற்கும் மேற்படி இரண்டு அணிகளையுமே நம்பியிருந்தார். அல்லது அவர்களை வைத்தே திட்டமிட்டு, காரியமாற்றினார்.

images42_zpsb4a90cb4.jpg

இந்த விமர்சனங்களையடுத்து சொர்ணம் கூட்டுப்படை தளபதியாக நியமிக்கப்பட்டார். அவரது காலத்தில்த்தான் யாழ்ப்பாணத்தின் மீது இராணுவம், சூரியக்கதிர் நடவடிக்கையை ஆரம்பித்தது. சூரியக்கதிர் போன்ற ஒரு பிரமாண்டமான நடவடிக்கையை புலிகள் அதற்கு முன்னர் எதிர்கொண்டயிருக்கவில்லை. அதனை சமாளிக்கும் வல்லமையும் அவர்களிடம் இருக்கவில்லை. அதனால் அந்தப் பின்வாங்கலிற்கு தனிப்பட்ட யாரையும் காரணமாக கூற முடியுமென நினைக்கவில்லை. எனினும், அந்த பிரமாண்டமான நடவடிக்கையின் சின்னச்சின்ன முனைகளில் நடந்த தவறுகளிற்கும், தோல்விகளிற்கும் சிலர் காரணமாக இருந்திருக்கலாம். அப்படி இந்த தோல்விகளின் பழியை ஏற்றவர்கள் மூவர்.

முதலாமவர் களத்திலேயே மரணமடைந்தார். மணலாறு தளபதியாக இருந்த மேஜர் வெள்ளை. புத்தூரில் பெருமளவு போராளிகளுடன் மரணமானார். அந்த களத்தில் பெருமளவான போராளிகள் மரணமானதற்கு வெள்ளையின் போர்த்தந்திரங்களின் குறைபாடு காரணமாக கூறப்பட்டது. இத்தனைக்கும் அவர் தலைசிறந்த சண்டைக்காரனாக அறியப்பட்டிருக்கவில்லை. நிர்வாகத்திறன் மிக்கவராகத்தான் அறியப்பட்டிருந்தார். அவர் முக்கிய பங்காற்றிய களங்களின் சரிவிற்கு ஏற்கனவேயும் உதாரணங்கள் இருந்தன. அதனால் அவரிற்கு மரணத்தின் பின் மேஜர் படிநிலையே வழங்கப்பட்டது. மிகச்சாதாரணமாகவே அவரிற்கு லெப்.கேணல் தரநிலை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த அதிர்ச்சியை அவர் தளபதியாக இருந்த மணலாற்று மக்கள் வெளிப்படுத்தினார்கள். சிறிய அதிருப்தி கூட்டமொன்று நடத்தப்பட்டது.

இன்னொருவர் ரவி. வலிகாமம் முழுமையாக விடுபட்ட பின்னர், அவர்தான் யாழ் களநடவடிக்கைகளை களத்தில் வழிநடத்தினார். சூரியக்கதிர் நடவடிக்கை ஆரம்பித்தபோது, அவ்வளவு பிரபல்யமில்லாதவராக இருந்தவர், சில வாரங்களிலேயே நடச்த்திரமாகி, களமுனை பொறுப்பை எடுத்துக் கொண்டார். தென்மராட்சி நோக்கி படையினர் நகர்ந்தபோது, அவர்களை எதிர்கொள்ள போராளிகள் இருக்கவில்லை. மிக இலகுவாக இரவுநகர்வில் படையினர் உள்நுழைந்தனர். இத்தனைக்கும், படையினர் உள்நுழைந்த பகுதிகளை பாதுகாக்க ரவியிடம் தாக்குதலணிகள் வழங்கப்பட்டிருந்தன. அவர் உரிய இடத்தில் அவர்களை நிறுத்தவில்லை. தனக்க வழங்கப்பட்ட மகளிர்படையணியை மேலதிக அணியாக பின்தளத்தில் நிறுத்தி வைத்திருந்தார். இது படையினருக்கு வாய்ப்பாகி, மிகச்சுலபமாக சாவகச்சேரிக்குள் நுழைந்தனர். வன்னிக்கு புலிகள் பின்வாங்கிய பின்னர், இதற்கான தண்டனை ரவிக்கு வழங்கப்பட்டது. அவர் ஏழுபேர் கொண்ட அணியில் ஒருவராக இருக்க கணிக்கப்பட்டார்.

மூன்றாமவர், சொர்ணம். அவர்தான் யாழ்க்களத்தை ஒட்டுமொத்தமாக கவனித்தவர். அவரது முதலாவது வீழ்ச்சி இங்குதான் ஆரம்பித்தது. அவர் திருகோணமலை தளபதியாக அனுப்பப்பட்டார். இதன் பின்னர் அவரது வாழ்வில் ஏறுமுகமே இருக்கவில்லை. ஒவ்வொரு களத்திலும், ஒவ்வொரு பருவத்திலும் அவர் வீழ்ச்சியடைந்து கொண்டேயிருந்தார். ஒரு யுத்தப்பிரவுவைப் போல நடமாடியவரை, அவரது யுத்தமுறைகளை நகைச்சுவைக்குரிய ஒன்றாக போராளிகள் மத்தியில் ஆக்கியது. ஒரு பக்கம் அவர் வழிநடத்திய களங்களின் தொடர் தோல்விகள்.. மறுபுறம் அவரது தலைவனில் கொண்டிருந்த அளவற்ற விசுவாசத்தின் பலாபலன்கள் என இருதுரும்புகளிற்கிடையில் அவர் தத்தளித்து கொண்டிருந்தார்.

http://pagetamil.com/?p=9241

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது எற்கனவே கறிப்பிட்டபடி FNC சண்டை என்று அழைக்கப்பட்ட கட்டைக்காடு அயுதக்களஞ்சியத் தாக்குதல். அந்த சண்டையில் அவர் ஒரு புதிய போருத்தியை ஈழக்களங்களில் அறிமுகப்படுத்தினார். எதிரியின் தளத்திற்குள் இரகசியமாக ஊடுரவிச் சென்று, எதிரியின் பின்னால் நிலையெடுத்துவிட்டு, எதிரியின் பிடறியில் அடித்து அதிர்ச்சியடைய வைப்பது. ஈழக்களங்களில் அதனை நடைமுறைப்படுத்திக் காட்டியவர் அவர்.

http://pagetamil.com/?p=9241

 

யாருப்பா அது Pagetamil.com ? சும்மா மேலோட்டமா வாசித்த எனக்கு இவ்வளவு எழுத்துபிழை  :icon_idea:

எழுதினதை ஒருக்கா மீளாய்வு செய்திட்டு வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் (பகுதி 2லும் இதே நிலை தான்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருப்பா அது Pagetamil.com ? சும்மா மேலோட்டமா வாசித்த எனக்கு இவ்வளவு எழுத்துபிழை  :icon_idea:

எழுதினதை ஒருக்கா மீளாய்வு செய்திட்டு வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் (பகுதி 2லும் இதே நிலை தான்).

எழுத்துப் பிழைகளைத் திருத்தினால் தமது காப்புரிமையை மீறிவிட்டதாக வழக்குப் போட்டாலும் போடக்கூடும் என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்!
Link to comment
Share on other sites

 

எழுத்துப் பிழைகளைத் திருத்தினால் தமது காப்புரிமையை மீறிவிட்டதாக வழக்குப் போட்டாலும் போடக்கூடும் என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்!

படிக்கிறவர்களே எழுத்துப் பிழைகளை திருத்தி படிப்பார்கள் எண்டு எழுதியவர் நினைத்திருக்கலாம் :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன்- 05

ஹிருத்திக் நிஹாலே

மிகப்பல வருடங்களாக பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்த சொர்ணம், யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர் அவரை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றார். அதன் பின்னான காலகட்டத்தில் எப்பொழுதாவது மிகச்சிறிய நாட்கள் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பம் வாய்த்ததே தவிர, மற்றும்படி இருவரும் ஆளுக்கொரு திசையில் இருந்தனர்.

அதுவரையான காலகட்டத்தில் பிரபாகரனை நிழலாக தொடர்ந்ததால், பிரபாகரனது குடும்பத்திற்கும் சொர்ணத்திற்கும் எப்படியான உறவு இருந்தது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்தது.

யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர், சொர்ணம் திருமலைக்கு அனுப்பப்ட்டு விட்டார். அந்த நாட்களில் பிரபாகரனது மூத்த புதல்வர் சாள்ஸ் அன்ரனிக்கு 10 வயதுகள் இருந்தது. அவர் சொர்ணத்தை அடிக்கடி கேட்டிருக்க வேண்டும். அதற்கு குடும்பத்தினர் ஏதோ தற்காலிக சமாதானம் சொல்லியிருக்க வேண்டும்.

1996 இல், இம்ரான் பாண்டியன் படையணியின் நிகழ்வொன்று நடந்தது. அதற்கு பிரபாகரன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். அந்த நிகழ்வில் சொர்ணத்தை சந்திப்பேன் என சாள்ஸ் அன்ரனி நினைத்திருந்தார். ஆனால் எல்லா தளபதிகளும் வந்த நிகழ்வில் சொர்ணம் மட்டும் இல்லை. சொர்ணம் மாமாவை காணவில்லை, எங்கே அவர் என சாள்ஸ் அன்ரனி பகிரங்கமாகவே தந்தையாரிடம் கேட்டார்.

“அவருக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு இங்கே வரமாட்டார். அவர் கொஞ்சநாள் அங்கால இருக்கத்தான் வேணும்” என தந்தையார் பதிலளித்தார்.

அதற்கடுத்த நான்கு வருடங்களில் ஈழப்போரியலின் மிகப்பெரிய பண்புமாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்தன. அதுவரை நினைத்தே பார்த்திருக்காத பெரும் போர்க்களங்கள் எல்லாம் நடந்தன. இந்த சமயத்தில்த்தான் விடுதலைப்புலிகள் மிகப்பெரிய காவலரண் வரிசையை அமைத்தார்கள். பலநூறு கிலோமீற்றர்கள் நீளத்திற்கு மன்னார் கடற்கரையிலிருந்து, மறு அந்தத்தில் இருந்த மணலாற்றின் நாயாற்று கடற்கரைவரை தொடர் காவலரண் அமைத்து தெளிவான எல்லைக்கோடு வகுத்து போரிட்டார்கள். இருதரப்பும் யுத்த டாங்கிகள், ஆட்லறிகள் கொண்டு மோதிக் கொண்டிருந்தன. அதாவது ஒரு மரபுப்போரின் அத்தனை அம்சங்களுடனுமான போர்.

இந்த சமயத்தில் சொர்ணம், திருகோணமலை காடுகளில் மறைந்திருந்து கெரில்லா வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் இயக்கத்தில் இணைந்த காலப்பகுதில் எப்படியான போர் உத்திகளை பாவித்தாரோ, அதே உத்திகளுடனான ஒரு போர்க்களத்தில் வாழ்ந்தார். அது கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நீடித்தது.

lttepiraba-300x225_zps9f06c360.jpg

இந்த சமயத்தில் தமிழீழ போர்க்களம் நினைத்து பார்க்க முடியாத மாற்றங்களை சந்தித்தது. இந்த மாற்றங்கள் எதிலும் சொர்ணத்தை பங்கு கொள்ள வைக்காமல், தொலைவில் இருந்து பார்க்க வைத்து காலம் ஒரு விசித்திர கதையெழுதியது. புதிய புதிய தளபதிகள் உருவானார்கள். சொர்ணத்தின் முன்பாக மூக்குச்சளி ஒழுகத் திரிந்தவர்கள் எல்லாம், சொர்ணம் திரும்பி வந்தபோது, அவரிற்கு நிகராக களங்களை வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். இந்த மாற்றங்களில் அவர் பங்கு கொள்ளாததாலோ என்னவோ, மீண்டும் களமுனைக்கு திரும்பியவரால் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

அதன் பின்னர், விடுதலைப்புலிகள் ஓயாத அலைகள் மூன்று களத்தை திறந்தார்கள். மிகப் பெரியவளங்களையும், ஆளணியையும், போரியல் உத்திகளையும் அந்தக்களம் புலிகளிடம் கோரியது. அவர்களும் சமாளித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் ஆயுதப் பஞ்சம் புலிகளிடம் இருக்கவில்லை. மிகப்பெரிய ஆளணிப் பஞ்சமும் ஏற்பட்டது. கிராமியப்படை, எல்லைப்படை என ஆட்களை திரட்டி சமாளித்து கொண்டிருந்தார்கள்.

இதே காலப்பகதியில் இன்னொரு தட்டுப்பாடும் அவர்களிடம் ஏற்பட்டது. யுத்தகளத்தை வழிநடத்தும் கட்டளைத்தளபதியொருவரை புலிகள் தேடினார்கள். என்னதான் புதிய நட்சத்திரங்கள் தோன்றினாலும், முழுக்களங்களையும் வழிநடத்தும் திறமை மற்றும் பிரபாகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமான தன்மை என்பனவற்றை கொண்டவரும், அதேசமயத்தில் மூத்த தளபதியாகவும் இருக்கும் ஒருவரை புலிகள் தேடினார்கள்.

இதுவரை அந்த பாத்திரத்தை வகித்து வந்த கருணா பற்றிய பல கசப்புக்கள் இயக்கத்திற்குள் உருவாகியிருந்தது. குறிப்பாக களமுனைகளில் அவர் சப்தகி முதலான சில பெண்போராளிகளுடன் கொண்டிருந்த பகிரங்க பாலியல் உறவு களமுனையிலிருந்த எல்லா போராளிகளின் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. முறைதவறிய பாலியல் உறவிற்கு விடுதலைப்புலிகள் மன்னிப்பிற்கிடமில்லாத மரணதண்டனை வழங்கினார்கள். எனினும், ஜெயசிக்குறு களம் தீவிரம் பெற்றபின்னர், ஆட்பஞ்சம் நிலவியதாலும், வருடக்கணக்கில் போராளிகள் காடுகளில் அடைந்து கிடப்பதாலும் இந்த விவகாரத்தில் சற்று மேம்போக்கான கொள்கைகளை கடைப்பிடித்தார்கள். எனினும் நடைமுறைகள் ஒரு மரபாக உருவாவதைப் போல, திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவென்பது தண்டனைக்குரிய அல்லது மனித நடத்தைக்கு முரணான விடயம் என்பதைப் போன்ற ஒரு மனப்பிரதிமை பெரும்பாலான போராளிகளிடம் படிந்திருந்தது. இந்த சூழலில் போராளிகளின் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒரு தளபதியின் நடத்தை விடுதலைப்புலிகளை சங்கடப்படுத்தியது. அதற்காக அவரை தண்டனைக்குட்படுத்தவும் முடியவில்லை. ஜெயசிக்குறு களமுனையின் கட்ளைத்தளபதி அவர்தான். மற்ற மூத்ததளபதிகள் கள அனுபவமற்றிருந்தனர்.

பொட்டம்மான் விடுதலைப்புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் பிரபாகரனுடன் இணைந்து நடத்திக் கொண்டிருந்தார். அவர் களமுனையை வழிநடத்தும் நிலைக்கு அப்பால் சென்று விட்டார். மற்ற மூத்தவர்களில் ராயு, கடாபி, சூசை, பதுமன் போன்றவர்கள் தரைக்களமுனை செயற்பாடுகளில் ஈடுபாடு கொள்ளவில்லை. எதோவொரு துறைசார் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். பானு, தமிழ்ச்செல்வன், நடேசன் போன்றவர்கள் கட்டளைத்தளபதிகளாக தங்களை நிரூபிக்காதவர்கள்.

இப்பொழுதுதான் தீபன் புதிய நட்சத்திரமாக உருவாகியிருந்தார். எனினும், அவரிடம் உடனடியாக பொறுப்புக்களை ஒப்படைக்கும் மனநிலையில் பிரபாகரன் இருக்கவில்லை.

எஞ்சியவர் சொர்ணம். அவர் கிழக்கில்.

Sornim_Ltte_zps724b3c74.jpg

ஒரு மனிதர் எவ்வளவுதான் அதிதீவிர திறமை கொண்டவர் எனினும், ஒழுக்கம், முன்னுதாரணம், அமைப்பு விசுவாசத்தில் சறுக்கினாலும் பிரபாகரன் அவருடன் சமாளித்துக் கொள்வதில்லை என்பதற்கு அந்த சமயத்தில் இரண்டு உதாரணங்கள் இருந்தன. ஒன்ற கருணா. மற்றது பால்ராஜ். நான் குறிப்பிட்ட இந்த மூத்தளபதிகள் பட்டியலில் பால்ராஜ் இருக்கவில்லை. அவர் இந்த சமயத்தில் ஒதுங்கியிருந்து விட்டு, மெதுமெதுவாக மீண்டும் அரங்கிற்கு வரத் தொடங்கியிருந்தார். 1998இல் ஆனையிறவு மீது புலிகள் ஒரு தாக்குதல் நடத்தினார்கள். பெருமளவு ஆட்லறிகளை கைப்பற்றிய பின்னரும், அதனை பத்திரமாக கொண்டு வரும் பாதை கைப்பற்றப்படாததால் அவை அங்கேயே வெடிவைத்து தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதல் வெற்றியடையவில்லை. இந்த தாக்குதலை வழிநடத்திய பால்ராஜ் அதன்பின், பலகாலம் முகாமில் சும்மா உட்கார வைக்கப்பட்டிருந்தார். (பால்ராஜ் தொடர்பில் பின்னர் விரிவாக பார்க்கலாம்).

ஆனையிறவிற்கு அப்பாலான களமுனைகளில் முதற்கட்ட மாற்றம் செய்ய பிரபாகரன் நினைத்து அந்த பகுதிகளில் பால்ராஜ் கட்டளை வழங்கினார். எனினும், அங்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சில இளநிலை கட்டளைத்தளபதிகள் குழப்பம் விளைவித்தனர். இதனால் கோபமடைந்த பிரபாகரன், கருணாவை அழைத்து கடுமையாக கடிந்து கொண்டதுடன், கிழக்கு அணியை கிழக்கிற்கே அனுப்பி வைத்தார்.

மீண்டும் சொர்ணத்தை அழைத்தார் பிரபாகரன். யாழ்ப்பாணத்திற்கான சண்டையை வடக்கிலுள்ளவர்களே பிடிக்க வேண்டும் என்பதும் பிரபாகரனின் நிலைப்பாடாக இருக்கலாம் என இந்த கட்டுரையாளர் ஊகிக்கிறார். அந்த சமயத்தில் வன்னியில் தங்கிய கிழக்கு படையணிகள் பின்தள பணிகளிலேயே ஈடுபட்டன.

மாலதி படையணி, சோதியா படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, அரசியல்த்துறை தாக்குதலனி, சாள்ஸ் அன்ரனி படையணி என்பன களத்தில் இருந்தன. தென்மராட்சியின் பெரும்பகுதி புலிகளிடம் இருந்தது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயில் வரை சென்றிருந்த புலிகள் சில கிலோமிற்றர்கள் பின்வாங்கி பாதுகாப்பான பகுதிகளில் நிலைகளையமைத்து கொண்டனர். இந்த களம் சொர்ணத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மீதான புலிகளின் நடவடிக்கைகளினால் நிலைகுலைந்து இராணுவமும் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தது. இராணுவத்தரப்பிலும் அவசர மாற்றங்கள் செய்யப்பட்டன. மேஜர் ஜெனரல்கள் ஜானக பெரேரா, சரத் பொன்சேகா போன்றவர்கள் அவசரமாக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டனர். சில நாட்கள் இடைவெளி எடுத்து இருதரப்பும் தங்களை மீள் ஒழுங்கு செய்தன. இந்த அவகாசம் இந்திய தலையீட்டால் உருவானதென இராஜதந்திர வட்டாரங்களுடன் தொடர்புடையவர்கள் பல சமயங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

இராணுவம் தங்களை மீள் ஒழுங்கு செய்ததன் பின்னர், தென்மராட்சி மீதான தாக்குதலை ஆரம்பித்தது. இந்த சமயத்தில் ஜானகபெரேராவின் இராணுவ நுட்பங்கள் புலப்பட்டன. அவற்றை எதிர்கொள்ள சொர்ணத்திடம் எந்த உத்தியும் இருக்கவில்லை. அதுவரை மிகப்பெரும் போர்க்கள அதிசயங்களையெல்லாம் நிகழ்த்திக் கொண்டு வந்த படையணிகளிற்கு என்ன நடந்ததென்பது யாருக்கும் புரியவில்லை.

இதற்கு சில வாரங்களின் முன்னர்தான் புலிகள் இத்தாவிலில் ஒரு பெட்டித் தாக்குதல் நடத்தி ஆனையிறவை வீழத்தி தென்மராட்சிக்குள் நுழைந்தார்கள். அதே பெட்டியை ஜானகபெரேராவும் கையிலெடுத்தார். சில நாள் இடைவெளியில் அடுத்தடுத்து, தென்மராட்சியில் படையினர் பெட்டித்தாக்குதல்களை நடத்தினார்கள். இதில் நூற்றுக்கணக்கான போராளிகள் மரணமாகிக் கொண்டிருந்தார்கள். மாலதி மற்றம் சோதியா படையணி போராளிகள்தான் அதிகளவில் இறந்தனர். போராளிகள் மரணமானதுடன், ஒவ்வொரு இடமாகவும் பறிபோய்க் கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் ஆளணி இழப்பில்லாத யுத்தம் பற்றி பிரபாகரன் தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்த சமயம். அவரது சிந்தனைக்கு நேர் எதிரான யதார்த்தம் தென்மராட்சியில் நிலவியது.

இந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் நவீன ஆயுதமொன்றையும் இறக்குமதி செய்திருந்தனர். 14.5 mm ரகத்தை சேர்ந்த கனரக பீரங்கியது. அந்த ஆயுதத்தை ஏனைய போராளிகளே அறியாமல்த்தான இரகசியமாக வைத்திரந்தார்கள். அதற்கு “ஆமை”யென்ற சங்கேதப் பெயரும் வைத்தார்கள். அந்த யுத்தத்தில் இராணுவத்தால் முதன்முதலில் அந்த ஆயுதமொன்றும் கைப்பற்றப்பட்டது.

மேலதிகமாக ஆட்களை இழக்க கூடாதென்பதற்காக விடுதலைப்புலிகள் தங்கள் படையணிகளை முகமாலைவரை பின்வாங்கிக் கொண்டார்கள். சொர்ணத்திற்கு மீண்டும் வழங்கப்பட்ட வாய்ப்பு, பயனற்றது. அவர் பற்றி மேலும் மோசமான அப்பிராயம் பிரபாகரனிடம் ஏற்பட்டது. அவர் தரையுத்தமுறைக்கே ஏற்றவர் அல்லவென நினைத்தாரோ, அல்லது அளவிற்கதிகமாக அவரை குற்றவுணர்ச்சி கொள்ள வைக்க நினைத்தாரோ தெரியவில்லை, அவரிற்கு மிகப்பெரிய தண்டனை வழங்கினார். அவர் கடற்புலிகளிற்கு மாற்றம் செய்யப்பட்டார். சூசை தலைமையில் இயங்கிய கடற்புலிகளில், மன்னார் பிரதேசத்திற்கு பொறுப்பாக சொர்ணம் நியமிக்கப்பட்டார்.

விடுதலைப்புலிகள் அடுத்த நெருக்கடியை சந்திக்கும் வரை அவர் அந்த பொறுப்பிலேயே இருந்தார். கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிளவை சரி செய்ய வேண்டியிருந்தது. “கிழக்கு குழப்பக்காரர்களை” கட்டுப்படுத்த பிரபாகரன் தேர்வு செய்தது சொர்ணத்தை. ஏற்கனவே மாத்தையா விவகாரத்தையும் அவர்தான் கையாண்டார். என்னதான் களமுனை செயற்பாடுகளில் அதிருப்தியிருந்தபோதும், அவர் பற்றிய நம்பிக்கை பிரபாகரனிடம் குறைந்து விடவில்லை என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

கிழக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பின்னர், சொர்ணம் மீண்டும் திருகோணமலை பொறுப்பாளராகினார்.

திருகோணமலையின் மாவிலாற்று பகுதியில் போராளிகளின் தற்காலிக காவல்மையம் இருந்தது. இரவில் ஆற்றைக்கடக்கும் முன்னர் போராளிகள் ஆற்றின் நீரை மறித்துவிட்டு செல்வதும், மறுநாள் திரும்பும் போது திறந்து விட்டு வருவதும் வழக்கம்.

ஒருநாள் இந்த நடைமுறை தவறிவிட்டது. காவல்க்கடமைக்கு சென்ற அணி திரும்பி வரும்போது ஆற்றை திறந்துவிட மறந்து விட்டனர். ஆற்றுநீர் வராததையடுத்து, சிங்கள விவசாயிகள் நினைத்தார்கள், விடுதலைப்புலிகள் திட்டமிட்டு ஆற்றுநீரை மறித்துள்ளார்கள் என. விவசாயிகள் தரப்பில், திருகோணமலை அரசியல்த்துறை பொறுப்பாளர் எழிலனுடன் ஒரு சமரசப் பேச்சு நடத்தப்பட்டது. விடுதலைப்புலிகளிற்கு ஒரு தொகை பெற்றோல் உள்ளிட்ட பொருட்களை வழங்க சிங்கள விவசாயிகள் தாமாக முன்வந்தார்கள். தானாக வருவதை ஏன் விட வேண்டும் என எழிலன் நினைத்தார். அதனை சொர்ணத்திடமும் சொல்லி, ஆற்றுநீர் திறந்து விட வேண்டுமெனில் சற்று அதிகமாக பொருட்கள் புலிகளால் கோரப்பட்டது. இதன் பின்னர் நடந்தவை வரலாறு.

சொர்ணம் தலைமையில் மூதூர் மீது ஒரு படைநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் விடுதலைப்புலிகளின் மீது மிகை மதிப்பீடு உலகளாவிய அளவில் இருந்தது. ஏன், விடுதலைப்புலிகளிடமும் இருந்தது. அந்த நடவடிக்கையின் முடிவில், முழு திருகோணமலையையும் விட்டு புலிகள் பின்வாங்கி வந்தனர்.

சொர்ணம் வன்னி வந்ததன் பின்னர், இந்த கட்டுரையாளர் உள்ளிட்ட சில நண்பர்கள் கூடியிருந்த சமயம் ஒன்றில் சொர்ணத்தை எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்தது. அதில் ஒருவர், திருகோணமலையில் என்ன நடந்ததென கேட்டார். சொர்ணம் தனது வழக்கமான பாணியில் சிரிப்புடன் பதில் சொன்னார். “எடேய்.. எங்கடயாக்களின்ர கோமணம் எந்தளவில இருக்குதென்டு பார்க்க, ஒரு ரெஸ்ற் நடத்தின்னான். எனக்கு எல்லாம் விளங்கிவிட்டுது. தொங்கல் வரை ஓட நீங்களும் ரெடியாக இருங்கோ” என்றுவிட்டு போனார்.

இதன் பின்னர் யுத்தம் வன்னிக்கு வந்தது. மன்னாரில் ஆரம்பித்த யுத்தத்தை எதிர்கொள்ள புலிகள் ஒவ்வொரு தளபதிகளாக மாற்றிமாற்றி பார்த்தனர். அதனால் பலன் ஒன்றும் கிட்டவில்லை. சிலர் சற்று கூடுதல் காலம் தாக்குப்பிடித்தார்கள் அவ்வளவுதான். தீபன் மல்லாவியில் சில காலம் தாக்குப் பிடித்தார். வேலவன், ஜெயபுரத்தில் தாக்குப்பிடித்தார். ஆனாலும் படையினர் கையாண்ட நீர்பரவுவதைப் போன்ற உத்திக்கு, அகன்ற களத்தில் ஒரு இடத்தில் பலவீனம் தென்பட்டாலே போதும். இதற்குள்ளால் படையினர் நுழைந்து விடுவார்கள். மல்லாவியும் வீழ்ந்ததன் பின்னர், மீண்டும் சொர்ணம் களமிறக்கப்பட்டார். ஒவ்வொரு சிறு பட்டினங்களும் ஒவ்வொரு தளபதியின் பொறுப்பில் இருந்தது. மாங்குளம் சொர்ணத்திடம் வந்தது. போர்க்களத்தில் அவரைத் துரத்திய துரதிஸ்டம் அங்கும் வந்தது.

அந்த சமயத்தில் ஆழ ஊடுருவும் படையணியின் தாக்குதல் தீவிரம் பெற்றிருந்தது. தளபதிகள் குறிவைக்கப்படாமல் இருக்க, களமுனைகளிற்கும், மூத்ததளபதிகளிற்கும் இரும்புக்கவசமிட்ட பவள் கவசவாகனங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. மாங்குளத்தில் நடந்ததை அந்த சமயத்தில் போராளிகள் பகிடியாக இப்படி சொல்வார்கள். மாங்குளம் களத்திற்கு சொர்ணம் பவள் கவசவாகனத்தில் சென்றார். சில நாளிலேயே நடந்து பின்வாங்கி வந்தார். ஏனெனில், இராணுவத்திடம் அவரது பவள் கவசவாகனமும் சிக்கிக் கொண்டது.

இதன் பின்னர் புலிகளிற்கு தெரிவுகள் இருக்கவில்லை. எல்லாப்பக்கத்தாலும் யுத்தம் அவர்களை சூழ்ந்து விட்டது. பிரபாகரன் மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களில் சொர்ணத்தை ஏற்கனவே இரண்டுமுறை தனக்கு துணையாக அழைத்திருந்ததை பார்த்திருந்தோம். இபபொழுது மூன்றாவது முறையாகவும் அழைத்தார். யுத்தம் புதுக்குடியிருப்பிற்கு வந்து விட்டது. இந்த சமயத்தில் சிதறியிருக்கும் விடுதலைப்புலிகளின் வளங்களையும், ஆளணியையும் ஒருங்கிணைக்க பாதுகாப்பு செயலர் என்ற ஒரு பதவிநிலையை புலிகளும் ஏற்படுத்தினார்கள். அவர்களின் முதலாவது பாதுகாப்பு செயலர் தமிழேந்தியப்பா. அந்த சமயத்தில் புலிகள் கேப்பாப்பிலவின் மீது ஒரு தாக்குதல் நடத்தினார்கள். நான்காம் கட்ட ஈழப்போரில் புலிகள் செய்த குறிப்பிடும்படியான ஒரேயொரு வெற்றிகரமான தாக்குதல் அதுதான். அவர் கணக்கில் புலி. அது மாதிரி எந்த தளபதியிடம் எத்தனை போராளிகள் உள்ளனர் என்பதை பார்த்து, பொறுக்கியெடுப்பதிலும் கில்லாடி. ஆனால், இந்த திறமை மட்டும் போதவில்லை போலும். மற்றும் இன்னதென இந்த கட்டுரையாளரால் தெளிவாக குறிப்பிட முடியாத காரணங்களினால் அவர் மாற்றப்பட்டு, சொர்ணம் அந்த பொறுப்பை எடுத்தார்.

ஆனந்தபுரம் சண்டையும் முடிந்ததன் பின்னர், புலிகள் தவிர்க்கவே முடியாத ஒரு வலிந்த தாக்குதலை நடத்தினார்கள். இந்த தாக்குதலின் தளபதிகள் இருவர். ஒருவர் சொர்ணம். மற்றவர் சாள்ஸ் அன்ரனி. முள்ளிவாய்க்கால், மாத்தளன், சாலை உள்ளிட்ட நிலப்பிரப்பை பிரிக்கும் சிறுகடலை கடந்து தேவிபுரம் பகுதியில் ஏறுவதுதான் திட்டம். அதன் பின்னர், சுதந்திரபுரம் பகுதிவரை பக்கவாட்டாக பரவி, பரந்தன் முல்லைத்தீவு வீதியில் ஏறுவது. இராணுவத்தின் பின்தளத்தை குழப்புவது இதுதான் திட்டம். கட்டாயமாக பிடிக்கப்பட்டவர்கள், இரண்டு மூன்றுநாள் பயிற்சி பெற்றவர்கள் உள்ளிட்ட சுமார் 800 போராளிகள் இந்த நடவடிக்கையில் களமிறக்கப்பட்டனர்.

இந்த சமயத்தில் விடுதலைப்புலிகளில் ஏற்பட்டிருந்த இன்னொரு மாற்றத்தையும் குறிப்பிட்டேயாக வேண்டும். பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி அமைப்பிற்குள் குறிப்பிடும்படியான நிலைக்கு முன்னகர்த்தப்பட்டார். ஆரம்பத்தில் அவரிடம் கனிணி பிரிவுதான் ஒப்படைக்கப்பட்டது. அது ஒரு நிர்வாக அலகு என்பதற்கு அப்பால், தனியான இயக்கத்தைப் போல ஆளணி மற்றும் பௌதீக வளங்கள் வழங்கப்பட்டன. இதனால் போராளிகள், நீ பிரபாகரனின் இயக்கமா, சாள்ஸின் இயக்கமாக என பகிடியாக கேட்கும் நிலையும் ஏற்பட்டிருந்தது.

சாள்ஸ் ஒரு சிறந்த தொழில்நுட்பவியலாளன். மோசமான தலைவன். அவரது நிர்வாக நடைமுறைகள், போர்க்களக்கதைகள் பற்றிய நகைச்சுவை சம்பவங்களை ஒருபெரும் திரட்டாகவே தயார் செய்யலாம். அவரை போராளிகள் இரகசியமாக புலிகேசியென அழைத்து வந்தனர். (இம்சையரசன் 23ம் புலிகேசி மன்னனை ஒத்த செயற்பாடுகளை குறிக்க அந்த பெயர் பயன்படுத்தப்பட்டது)

சாள்ஸின் வரவு தளபதிகளிற்குள் என்னவிதமாக எண்ணத்தை ஏற்படுத்தியது என்பதை யாராலும் தெளிவாக குறிப்பிட முடியாதென்றுதான் நினைக்கிறேன். ஏனெனில், அப்படியான சம்பவங்கள் பரவலாக பதிவு செய்யப்படவில்லை. பல தளபதிகள் சாள்ஸை அரவணைத்து செல்லவே விரும்பினார்கள். இவர்களில் பானு முன்னிலையில் இருந்தார். இதனால், பானு எது சொன்னாலும் சரியாக இருக்குமென சாள்ஸ் நம்பினார். சாள்ஸ் தொடர்பான எதிர்மறையான இரண்டு சம்பவங்கள்தான் பதிவாகியுள்ளன. கடற்புலிகளின் தளபதி சூசை சாள்ஸின் முன்னிலைக்கெதிரான அதிருப்தியை பல சந்தர்ப்பத்திலும் காட்டினார். சாள்ஸ் நடத்திய பல கூட்டங்களில் அவர் கலந்து கொள்வதில்லை. யுத்தத்தின் இறுதி சமயத்தில் அவர் இரண்டு விதமாக சாள்ஸை பேசியிருக்கிறார்.

ஒருமுறை, “கொப்பர் உருவாக்கினதெல்லாததையும் அழிக்கிறதுக்கென்டே பிறந்திருக்கிறாய்” என பல போராளிகளின் மத்தியில் மாத்தளனில் பேசினார். மற்றது இன்னும் கடுமையானது. தமிழுணர்வாளர்களை அதிர்ச்சியடைய வைப்பது. அதனை சூசை பற்றிய பகுதியில் பார்க்கலாம்.

தேவிபுரத்திற்குள் புலிகளின் படையணிகள் நுழைந்ததும், படையினர் வேவுவிமானங்களின் உதவியுடன் அந்த சாவலை எதிர் கொண்டனர். அணிகள் நகர்வதை வேவுவிமானங்களினால் அவதானித்து, தரை நகர்வு மற்றும் செல் தாக்குதல்கள் நடத்தினார்கள். இந்த சண்டை மிகமோசமான தோல்வியில் முடிந்தது.

சண்டையின் இரண்டாம் நாளே சொர்ணம் மிக மோசமாக காயமடைந்தார். அவரது கால்த் தொடை எலும்பொன்று உடைந்தது. சாள்ஸ் அன்ரணியும் காயமடைந்தார். இதனையடுத்து அணிகள் பின்வாங்கத் தொடங்கின.

இந்த சமயத்தில் தேவிபுரத்தில் 75 பேரைக் கொண்ட பெண்கள் அணியொன்று படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. அவர்கள் அத்தனைபேரும் இரண்டொருநாள் இராணுவப்பயிற்சி பெற்றவர்கள். இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டதும், அவர்கள் ஒரு தோட்டாவைத்தானும் சுடாமல் கைகளை உயர்த்தி விட்டனர்.

அவர்கள் முன்னரங்க நிலைகளில் இருந்த படையினரின் உடற்தேவைக்காக பகிர்ந்து வழங்கப்பட்டார்கள். பின்னர், மாத்தளன் வைத்தியசாலைக்கும், சாலைப்பகுதிக்கும் இடையில் இருந்த படையினரின் முன்னரங்க மண்ணரனில் நிர்வாணமாக ஏற்றிவிட்டனர்.

அந்த யுத்தகளத்தில் எதிர்த்தரப்பை கோபமடைய வைக்க இப்படியான நிறைய வேலைகள் நடந்தன. பின்னர், விடுதலைப்புலிகளின் தொலைத்தொடர்பு வழிகளிற்குள் நுழைந்த படையினர் அந்த பெண்கள் பற்றிய கிண்டல்களை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

தங்களிற்கு எதிர்முனையில் தமது சகபோராளிகளான பெண்கள் நிர்வாணமாக நிறுத்தப்பட்டிருந்தது, முன்னரணில் இருந்த போராளிகளிற்கு அதிர்ச்சியாக இருந்தது. அது அவர்களின் உளவுரணை சிதைக்கவல்லது. காலையில் ஏற்றப்பட்டவர்கள். விடயம் சாள்ஸ்சின் ஆலோசனையில் இருந்து, பின்னர் அவர் தனது தந்தையுடன் ஆலோசித்தார். அந்தப்பெண்களின் கைகளில் துவக்கு கொடுக்கப்பட்டிருந்ததுதானே. இனி நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை. இப்படியே வைத்து பார்த்துக் கொண்டிருக்க முடியாதென முடிவு செய்யப்பட்டது. உடனடியாக சினைப்பர் அணி அந்தப்பகுதிக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் மண்ணரனில் நின்றவர்களை சுட்டார்கள். அது தவிர, எறிகணைத்தாக்குதலும் நடத்தப்பட்டது.

இதன் பின்னர், சொர்ணம் படுத்த படுக்கையாகவே இருந்தார். படுத்த படுக்கையாக இருந்தே களத்தை வழிநடத்தினார். அவர்தான் முழு களத்தையும் கவனித்து கொண்டிருந்தார்.

இதே சமயத்தில் அவர் தன்னுடனிருந்த போராளிகளிடம் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தை சொல்லிக் கொண்டிருந்தார். “அண்ணைக்கு ஏதும் நடக்க முதல் நான் செத்திடுவன்” என அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் ஆளணி தட்டுப்பாடு, ஆயுதத்தட்டுப்பாடு அதிகமாக நிலவியது. இதனால் களமுனைகளை கட்டுப்படுத்த முடியாமல் சொர்ணம் திண்டாடிக் கொண்டிருந்தார். அந்த தட்டுப்பாடுகள் பல சந்தர்ப்பத்தில் அவரை விரக்தியடைய வைத்தது. தொலைத் தொடர்பு கருவியிலேயே அனைவரும் அனைத்தையும் பேசிக் கொண்டனர். பின்தளங்களிற்கு வந்து சந்திக்க பொழுதும் இடமும் இருக்கவில்லை. இந்த கட்டுரையாளர் சொர்ணத்தின் கட்டளைகளையும், விரக்தி பேச்சுக்களையும் தொடர்ந்து தொலைத்தொடர்பு வழிகளில் கேட்டுக் கொண்டிருந்தார்.

download13_zps2009aa1e.jpg

2009 மே 14ம் திகதி அன்று காலையில் கட்டளைத்தளபதி வேலவனுடன் சொர்ணம் ஏதோ தர்க்கப்பட்டு கொண்டிருந்தார். ஆளணி பற்றாக்குறையையடுத்து, வேலவனின் உதவியாளர்களையும் களமுனைக்கு அனுப்பும்படி சொர்ணம் சொல்ல, வேலவன் ஏதோ அதிருப்தி தெரிவித்துக் கொண்டிருந்தார்.

இது நடந்து ஒரு அரைமணித்தியாலத்திற்குள்- காலை சுமார் 10 மணியிருக்கும், அவர் இறந்து விட்டார் என்ற தகவல் வந்தது. அவருக்கு மிக அருகில் எறிகணையொன்று விழுந்தது. அதன் சிதறலில், ஏற்கனவே பாதிக்கப்பட்ட காலைவிட மற்றக்காலிலும் காயமடைந்து விட்டார். அவரிற்கு அனைத்தும் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். அவரது உதவியாளர்களும் சுதாகரிக்க முன்னர், தனது கழுத்தில் இருந்த சயனைட் வில்லையை உட்கொண்டு மரணமானார். அவரது உடலத்தை அந்த முகாமிலேயே (வெள்ளாமுள்ளிவாய்க்கால்) போராளிகள் புதைத்தனர்.

(அவர் 2009.05. 14 அன்று மரணமானபோதும், அவர் 15ம் திகதி இறந்ததாகவே தற்போது குறிப்பிடப்பட்டு வருகின்றது)

http://pagetamil.com/?p=9941

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.