Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

புலத்தில் புதிய மதம்


putthan

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கனபேர் வானத்தில இருந்து சூலத்தோட கழுத்தில பாம்போட நெத்தியில பிறையோட இல்லாட்டி வேலோட மயில் வாகனத்தில இல்லாட்டி எலி வாகனத்தில எண்டு ஏதோ ஒரு விதமா ஏகப்பட்ட தலையோடையும் காலோடையும் கையளோடையும் தான் கடவுள் வருவார் எண்டு எண்ணிக்கொண்டிருக்கிறாங்க.

அதாலதான் ஆராவது தன்னைக் கடவுளெண்டால் சீ சீ இவர் கடவுளில்ல எண்டுறாங்க.

சாயிபாபா நான்மட்டும் கடவுளில்ல நீங்களும் கடவுள்தான் உணர்ந்து பாருங்க தெரியுமெண்டிறார்.

நாம எங்க இதெல்லாம் உணருறது எல்லாம் கடவுளுக்குத்தான் தெரியுமெண்டிற்று இருக்கவேண்டியதுதான்.

ஒரு நாளைக்கு எப்பிடியும் கடவுள் வரத்தானே வேணும். வராம விடவா போறார்.

செவ்வாய்க் கிரகத்திலயும் தண்ணி இருக்குதாம். சிலவேளை அங்க இருந்து திடீரெண்டு ஒருநாளைக்கு இறங்கினாலும் இறங்குவார்.

Link to post
Share on other sites
 • Replies 118
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாயிபாபா நான்மட்டும் கடவுளில்ல நீங்களும் கடவுள்தான் உணர்ந்து பாருங்க தெரியுமெண்டிறார்.

நாம எங்க இதெல்லாம் உணருறது எல்லாம் கடவுளுக்குத்தான் தெரியுமெண்டிற்று இருக்கவேண்டியதுதான்.

நானும் கடவுளா நல்லா இருகுதே அப்ப என்ட வாயில இருந்து ஒன்றும் வரவில்லை ஏன்??

:(

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நானும் கடவுளா நல்லா இருகுதே அப்ப என்ட வாயில இருந்து ஒன்றும் வரவில்லை ஏன்??

வாயிருக்குது எண்டதால கடவுளாகலாமோ தெரியாது. வாயில்லாம என்ன இருக்குது? எல்லாத்துக்கும் வாயிருக்குது. என்னென்னமோவெல்லாம் கக்குப்படுகுது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முதற் தமிழ்ச்சங்க காலத்தில் தமிழின் முதன் நிலைப் புலவர்களாக சிவபெருமான் முருகப்பெருமான் போன்றோர் இருந்ததாக கடைச்சங்கத்தில் எஞ்சிய அவணங்களை ஆதாரம் காட்டி சொல்லப்படுகின்றது. முதற்சங்கம் ஈழத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட இடம் எனவும் கடல் கோளால் அடித்து செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இது ஒரு பக்கம்.

சிவன் முருகன் என்ற பதங்களுக்கு தமிழ்ச் சித்தர்கள் கொண்ட விளக்கமும் குறிப்புகளும் மருத்தவத்துடனும் உடல் பிணிகளை தீர்க்கும் வழிமுறை சார்ந்த தாக இருப்பினும் தமிழ் மொழியுடன் சொல்லப்பட்ட கருத்துக்களுடன் முரண்படவில்லை.

அடுத்து வரும் காலங்களில் வைணவம் சமஸ்கிருதத்துடனும் வடநாட்டு ஆரிய கடவுள்களுடனும,; சைவம் தமிழுடனும் தென்னாட்டு கடவுள்களுடனும் நீண்ட காலம் முரண்பட்டு நகர்ந்துள்ளது. வரலாற்று குறிப்புகள் ஆவணங்களின் படி தென்னாட்டு கோயில்களில் வடநாட்டு விக்கிரகங்கள் வன்முறையுடன் நிறுவப்பட்ட சான்றுகளும் உண்டு. பெயர் மாற்றங்கள். (திரு என்பது சிறி ஆக மாறியதும். வள்ளி இருக்க தெய்வானை செருகப்பட்டதும். கந்தன் ஸ்கந்தன் சோமஸ்கந்தன் என்றும். பல நூறு வகைகளும். தமிழ் சார்ந்த குட முழுக்கு எல்லாம் மாறி கும்பாபிசேகமாகியதும் என்று பல நுழைவுகள்)

இவ்வாறு வைணவம் பெரிது சைவம் பெரிது என்று பின் இரண்டும் சமம் என்றும் பிறகு இரண்டும் ஒன்று என்றும் நகர்ந்து பின்பு இரண்டும் இந்து என்ற ஒன்றாகி நிற்கின்றது.

இந்த நிலையில் சாமியார்கள் பாபாக்கள்என்று தற்போதைய காலம் உள்ளது.

எங்கோ நாம் தொலைத்த அரும் பொருட்களை, எம் அடிக்கொடிகள் மூதாதையரின் அரும்பெரும் பொருட்களை எல்லம் பறிகொடுத்து இன்றளவில் அது பற்றிய சிந்தனை இன்றி மதத்தில் மதம் பிடித்தும் குறளிவித்தை காட்டுபவனை எல்லாம் கடவுள் என்று ஏற்கும் அளவுக்கு வந்து விட்டோம்.

தமிழனுக்கெண்டு ஒரு நாடு வேண்டும். அதில் தமிழர்கள் தடையின்றி மானுடவியல் ஆய்விலும் எமது புராதன வரலாற்றாய்விலும் ஈடுபட வேண்டும். தவிர நாம் இந்த விசயத்தில் பல ஆயிரம் ஆண்டுகாலம் மூடத்தனத்தில் சென்றுகொண்டிருப்பதுக்கு விமோசனம் இல்லை.

உணர்வுள்ள சிலரின் ஆய்வுகள் கூட தற்போது கணனி உதவியுடன் சிதைக்கப்பட்டு மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஏனெனில் உண்மையான வரலாறுகள் கூட அதிகாரத்தில் உள்ளவர்களால் மாற்றப்படுகின்றது என்பதே உண்மை. தமிழனுக்கென்று ஒரு தனித்துவமான அதிகாரம் மூலமே நாம் இழந்து கொண்டிருப்பதை தடுக்கவும் இது வரை இழந்ததை மீளப்பெறவும் முடியும்.

Link to post
Share on other sites

தமிழனுக்கெண்டு ஒரு நாடு வேண்டும். அதில் தமிழர்கள் தடையின்றி மானுடவியல் ஆய்விலும் எமது புராதன வரலாற்றாய்விலும் ஈடுபட வேண்டும். தவிர நாம் இந்த விசயத்தில் பல ஆயிரம் ஆண்டுகாலம் மூடத்தனத்தில் சென்றுகொண்டிருப்பதுக்கு விமோசனம் இல்லை.

உணர்வுள்ள சிலரின் ஆய்வுகள் கூட தற்போது கணனி உதவியுடன் சிதைக்கப்பட்டு மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஏனெனில் உண்மையான வரலாறுகள் கூட அதிகாரத்தில் உள்ளவர்களால் மாற்றப்படுகின்றது என்பதே உண்மை. தமிழனுக்கென்று ஒரு தனித்துவமான அதிகாரம் மூலமே நாம் இழந்து கொண்டிருப்பதை தடுக்கவும் இது வரை இழந்ததை மீளப்பெறவும் முடியும்.

அருமையான கருத்து. முயற்சிப்போம். வெற்றி பெறுவோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிவனும் முருகனும் தென் லெமூரியாவில் வாழ்ந்த சங்கப் புலவர்களென்ற கூற்றை இன்று யார் கருத்திலெடுக்கிறார்கள். இருக்கு வேதகாலத்து அல்லது அதற்கும் முந்திய ஆரிய மன்னர்களில் பலபேரை அந்த வேதமே கடவுளர்களாக்கி விட்டது. இன்றுவரை பகுத்தறிவோடு சிந்தித்து மக்கள் அந்தச் சமயப் பிடியிலிருந்து விடுபடவில்லை. இராமன் போன்ற ஆரிய மன்னர்கள் இதிகாச நாயகர்களாக்கப்பட்டுப் பின்னர் கடவுளர்களாக்பட்டனர். வடநாட்டில் ராம நாம ஜெபம் செய்துகொண்டே முஸ்லீம்களுக்கெதிராக அநியாயங்கள் செய்கிறார்கள். ஆண்டாண்டு காலமாகத் தொடரும் இந்த மூட நம்பிக்கைகளை உடைத்தெறிவதற்கு முடியவில்லை. நாம் புதிதாக ஆய்வு செய்வதற்கு இந்த விடயத்தில் எதுவுமில்லை. மக்களின் மனது ஒருவகைச் சரணாகதிக் கோட்பாட்டில் ஊறிப்போய்விட்டது. சமயம்- குறிப்பாக இந்துக்கள் காலம் காலமாகத் தங்கள் நிம்மதியை இந்த வழியிலேயே பெற்று இன்று அதுவே உண்மை வழி என்று ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

சாயிபாபா போன்றவர்கள் சமயங்களைப் புறக்கணிக்காவிட்டாலும் ஓரளவுக்கேனும் சர்வமத சமரசத்தையும் அதனால் கிடைக்கப்பெறும் அமைதி சமாதானத்தையும் வலியுறுத்துகின்றனர். அதற்காகத் தனக்குத் தெரிந்த குறளிவித்தையை பாபா பயன்படுத்துகிறார். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி மக்களிடமே வசூலித்து மக்களுக்கு நல்லதையே செய்கிறார். எடுத்த எடுப்பில் நிராகரித்து விடுமளவுக்கு அவர் மிக மோசமானவராக இருந்திருந்தால் இன்று வரை அவரால் தாக்குப் பிடித்திருக்கவே முடியாது. மக்கள் அவரைத் தூக்கியெறிந்திருப்பார்கள். சிறிய எதிர்ப்புகளை மட்டுமே அவர் இன்றுவரை சந்திக்கிறார். ஆனால் ராமனோ, சிவனோ அப்படி எறியப்பட, எதிர்க்கப்பட முடியாதவர்கள். ஏனென்றால் அவர்கள் கற்பனைப் பாத்திரங்கள். சிறிய எதிர்ப்புக் கூட இல்லாமல் நிலை நிற்கிறார்கள். புத்தி ஜீவிகளுக்கு அவர்களின் அருகில் போகவே பயம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க சுரிச்ல ஒருத்தன் காலலூயாவோ (வாயுக்குள்ள நுழையுதல்லை) அதுக்கு மாறினவன். கொஞ்ச நாளைக்கு முதல் ஒரு போர்சே (Porsche Jeep) வாங்கினவன். அதின்ர விலை SFR. 150'000 . என்ர வாழ்க்கை முடியிற வரைக்கும் உழைச்சாலும் என்னால இவ்வளவு சேர்க்க முடியா. எப்டி தான் வாங்கினாங்களோ....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாயிபாபா போன்றவர்கள் சமயங்களைப் புறக்கணிக்காவிட்டாலும் ஓரளவுக்கேனும் சர்வமத சமரசத்தையும் அதனால் கிடைக்கப்பெறும் அமைதி சமாதானத்தையும் வலியுறுத்துகின்றனர். அதற்காகத் தனக்குத் தெரிந்த குறளிவித்தையை பாபா பயன்படுத்துகிறார். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி மக்களிடமே வசூலித்து மக்களுக்கு நல்லதையே செய்கிறார். எடுத்த எடுப்பில் நிராகரித்து விடுமளவுக்கு அவர் மிக மோசமானவராக இருந்திருந்தால் இன்று வரை அவரால் தாக்குப் பிடித்திருக்கவே முடியாது. மக்கள் அவரைத் தூக்கியெறிந்திருப்பார்கள். சிறிய எதிர்ப்புகளை மட்டுமே அவர் இன்றுவரை சந்திக்கிறார். ஆனால் ராமனோ, சிவனோ அப்படி எறியப்பட, எதிர்க்கப்பட முடியாதவர்கள். ஏனென்றால் அவர்கள் கற்பனைப் பாத்திரங்கள். சிறிய எதிர்ப்புக் கூட இல்லாமல் நிலை நிற்கிறார்கள். புத்தி ஜீவிகளுக்கு அவர்களின் அருகில் போகவே பயம்.

ஆக குற்றம் செய்யலாம் ஒரளவு நல்லது செய்து கொண்டு என்று சொல்லுறீங்களா??அவ்வாறாயின் உலகத்தில இருகிற எல்லாரும் குற்றம் செய்ய தொடங்கிவிடூவீனம்.........இதனால் சர்வமதம் வளர்கிறது என்று ஏற்று கொள்ள முடியாத வாதம்..................இதனால் ஒரு புதிய மதம் உருவாகிறது பிற்காலத்தில் இது பாரிய பிரசினைகளுக்கு இட்டு செல்லும்.......இன்றைய காலத்தில் மதம் என்று ஒன்று தேவையா????அவன் அவன் தங்களின் வேலையில் கவனமா ஈடுபட்டால் மதம் என்று வார்த்தை கூட தேவையில்லை..........மதம் என்று வரும் போது தான் பல பிரச்சினைகள் உருவாகிறது............

மக்கள் ஒன்றில் மூழ்கிவிடார்கள் என்றால் அதில் இருந்து மீள வருகிறது ஏலாத காரியம் பிரேன்வோஸ் நல்லா நடைபெற்றிருக்கும் அவர்கள் அவரின் பின்னாலே செல்வார்கள் இதை யாரும் தடுக்க முடியாது அது தான் இவர்களின் வெற்றியே தங்கியுள்ளது

:)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

DELETE IT BY NITHARSAN

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இங்க சுரிச்ல ஒருத்தன் காலலூயாவோ (வாயுக்குள்ள நுழையுதல்லை) அதுக்கு மாறினவன். கொஞ்ச நாளைக்கு முதல் ஒரு போர்சே (Porsche Jeep) வாங்கினவன். அதின்ர விலை SFR. 150'000 . என்ர வாழ்க்கை முடியிற வரைக்கும் உழைச்சாலும் என்னால இவ்வளவு சேர்க்க முடியா. எப்டி தான் வாங்கினாங்களோ....

வாழத்தெரியாத மனிதப்புழுவில் நீங்களும் ஒன்று.செல்லுங்கள்.அவர்களின் ஜோதியில் ஒன்றாக சேருங்கள்.அதன் பின் உல்லாசவாழ்க்கை உங்களை தேடி வரும்.(பெயரிலைமட்டுந்தான் 007 அங்காலை கோதாரியுமில்லை. :angry: ) :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழத்தெரியாத மனிதப்புழுவில் நீங்களும் ஒன்று.செல்லுங்கள்.அவர்களின் ஜோதியில் ஒன்றாக சேருங்கள்.அதன் பின் உல்லாசவாழ்க்கை உங்களை தேடி வரும்.(பெயரிலைமட்டுந்தான் 007 அங்காலை கோதாரியுமில்லை. :angry: ) :D

நானும் ஜோதியில் ஒன்று சேருவோ!!!!!!!!

:)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அது சரி! சும்மா அல்லேலூயா கோசம் போட்டுக்கொண்டு பின்னால திரிஞ்சால் போர்ச் ஜீப்பெல்லாம் வாங்கலாமெண்டால் முடிஞ்சவங்க வாங்குறதுதானே. நாங்கள் அரோகராதான் போடுவமெண்டு புத்தி ஜீவத்தனமாக நடக்கிறதில என்ன வரப்போகுது. எல்லாம் ஒண்டுதான் பாருங்கோ! ஒண்டுக்கொண்டு குறைஞ்சதில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கண்ணா............!!! பன்னி தான் கூட்டமா வரும் டைகர்(ஜம்மு) எப்பவும் சிங்கிளா தான் வரும்!!! சும்மா அதிருதில்லலல..........ஊழழடு

அப்ப ஏன் டபிளா வருகுது

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழத்தெரியாத மனிதப்புழுவில் நீங்களும் ஒன்று.செல்லுங்கள்.அவர்களின் ஜோதியில் ஒன்றாக சேருங்கள்.அதன் பின் உல்லாசவாழ்க்கை உங்களை தேடி வரும்.(பெயரிலைமட்டுந்தான் 007 அங்காலை கோதாரியுமில்லை. :angry: ) <_<

மானத்தையும் மதத்தையும் வித்து பிழைக்கிறது ஒரு வாழ்க்கையா? இப்ப தெரியுதா ஏன் எப்ப பாத்தாலும் அடுத்தவன் எங்கடை ஆக்களை மதம் மாத்திறதில குறியா இருக்கிறாங்கள் என்டு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மானத்தையும் மதத்தையும் வித்து பிழைக்கிறது ஒரு வாழ்க்கையா? இப்ப தெரியுதா ஏன் எப்ப பாத்தாலும் அடுத்தவன் எங்கடை ஆக்களை மதம் மாத்திறதில குறியா இருக்கிறாங்கள் என்டு.

ஓஹோ! நீங்க அப்பிடி வாறீங்களா! அதாவது உங்க சொந்த சமயத்தைத் தூக்கிப் பிடிக்கிறீங்களா! நான் நினைச்சன் ஏதோ புத்தி ஜீவித்தனமாச் சொல் வாறீங்களாக்குமெண்டு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓஹோ! நீங்க அப்பிடி வாறீங்களா! அதாவது உங்க சொந்த சமயத்தைத் தூக்கிப் பிடிக்கிறீங்களா! நான் நினைச்சன் ஏதோ புத்தி ஜீவித்தனமாச் சொல் வாறீங்களாக்குமெண்டு.

நான் எந்த மதத்தையும் தூக்கிப்பிடிக்கிறதில்லை. காசுக்காக தமிழன் பெத்த தாயையும் ...... கொடுப்பான் என்ட நிலமையை உருவாக்காதேங்கோ.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அது சரி! சும்மா அல்லேலூயா கோசம் போட்டுக்கொண்டு பின்னால திரிஞ்சால் போர்ச் ஜீப்பெல்லாம் வாங்கலாமெண்டால் முடிஞ்சவங்க வாங்குறதுதானே. நாங்கள் அரோகராதான் போடுவமெண்டு புத்தி ஜீவத்தனமாக நடக்கிறதில என்ன வரப்போகுது. எல்லாம் ஒண்டுதான் பாருங்கோ! ஒண்டுக்கொண்டு குறைஞ்சதில்லை.

உண்மையில நான் சொல்ல வந்த பதிலையே கரு சார் சொல்லிவிட்டார். சைவ சமையதிலை இருந்து சாதிக முடியாததை வேதத்தில் போய் சாதிக்கலாம் என்ற்ரு வடிவேல் சார் நீங்கள் கண்டால் போய் ஆசைப்பட்டதுகளை சாதிக வேண்டியது தானே

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மானத்தையும் மதத்தையும் வித்து பிழைக்கிறது ஒரு வாழ்க்கையா? இப்ப தெரியுதா ஏன் எப்ப பாத்தாலும் அடுத்தவன் எங்கடை ஆக்களை மதம் மாத்திறதில குறியா இருக்கிறாங்கள் என்டு.

ஓஹோ! நீங்க அப்பிடி வாறீங்களா! அதாவது உங்க சொந்த சமயத்தைத் தூக்கிப் பிடிக்கிறீங்களா! நான் நினைச்சன் ஏதோ புத்தி ஜீவித்தனமாச் சொல் வாறீங்களாக்குமெண்டு.

மதம் என்ற ஒரு மூடதனம் அவசியம் என்று நினைகிறீங்களா..............இப்படியான ஒரு விஞ்ஞான யுகத்தில மதம் என்ற வீணற்ற செயல் தேவை என்று நினைகிறீங்களா???இதனால் நாங்கள் சாதித்தது என்ன சாதிக்க போவது தான் என்ன?

:(

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திரு வடிவேல்:

நான் எந்த மதத்தையும் தூக்கிப்பிடிக்கிறதில்லை. காசுக்காக தமிழன் பெத்த தாயையும் ...... கொடுப்பான் என்ட நிலமையை உருவாக்காதேங்கோ.

கரு: தயவு செய்து மதத்தைப் பெற்றதாயாக்காதீர்கள். அது கீப். மொழி எமது தாய்க்குச் சமன். மண் எமது தாய். ஆனால் மதம் அப்படியில்லை. கண்ணுக்குத் தெரியாத கடவுளைப் பற்றிய வெறித்தனமான கோட்பாடுகள் சிலருக்கு வேண்டுமானால் பிரிய முடியாதவையாயிருக்கலாம். ஆனால் எல்லோரும் நம்மைப் போன்றே இருப்பார்களென்றில்லை. மதத்தை மாகஸ் அபின் என்றார். நான் கீப் என்கிறேன் - நீங்கள் தாயோடு ஒப்பிடப் புகுந்ததால். மதம் வேண்டுவதெல்லாம் எம்மிடமிருந்து பணம் பணம் பணம்தான். கீப்பும் அப்படித்தான். யார் எந்த நம்பிக்கையைப் பற்றிக்கொண்டால் நமக்கென்ன! அவர்கள் சமூகத்துக்கும் இனத்திற்கும் மண்ணிற்கும் எதுவித தீங்கும் செய்யாதவரை அவர்களை அவர்கள் பாட்டில் விட்டுவிடலாம்தானே. ஒவ்வொருவருக்கும் அவரது நம்பிக்கை பெரியது அதனால் வரும் சாந்தியும் சமாதானமும் அவசியமானது. அதைப்போய் நாம் கெடுப்பானேன். அதாவது பன்முகத் தன்மை கொண்ட சமயக் கோட்பாடுகளை நாம் எதிர்க்காதிருப்பது எமது சமுதாயத்தின் எதிர்காலச் சிந்தனை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. தக்கன பிழைத்தலும் தகாதன அழிதலும் இயற்கை நியதி. சமுதாயம் ஏற்கவேண்டியதை ஏற்கட்டும் தேவையற்றதை விட்டுவிட்டும். இதிலே வீணான தலையீட்டைச் செய்யவேண்டிய அவசியம் என்ன இப்போது ஏற்பட்டிருக்கிறது. யாருக்கு என்ன கெடுதல் இப்போது ஏற்பட்டுவிட்டது?

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அங்கே அவர்கள் அப்போது    சொன்ன படியே சகலதும் நலமே நடக்கின்றது. இதில் மாற்றுக்கருத்து மைனர்களுக்கு எனோ கவலைகளும் நடுக்கங்களும்.......???
  • மரடோனா, குடிசை வாழ்வில் நீ மனிதத்தை வென்றாய்- உலக கால்பந்தை வென்றாய் - உலகை வென்றாய் போதையைிடம் தோற்றாயா? தோற்கடிக்கப்பட்டாயா?   "இந்தக் கால்பந்து மந்திரவாதி யார்?, சர்வதேச கால்பந்தின் இந்தப் பாலியல் துப்பாக்கி (Sex Pistol) யார்?, பாதிக்கப்பட்டவராக, வீழ்ச்சி அடைந்தவராக, ஆரவாரம் அற்ற பலவீனமான தோற்றமளிப்பதற்கு காரணமான கொக்கெயின் போதைக்கு அடிமையாகக் காரணமாக இருந்தவர் யார்? “இந்த மனிதன் (மரடோனா) யார்? என்று என்னை நான் கேட்பதுண்டு” அன்டி வோல் - Andy Warhol (American artist, film director, and producer who was a leading figure in the visual art movement known as pop art) இன்னும் உயிருடன் இருந்திருந்தால், அவர் நிச்சயமாக மரடோனாவை மர்லின் மன்றோவுடனோ அல்லது மாவோ சே-துங்குடனோ இணைத்து பார்த்திருப்பார். மரடோனா ஒரு கால்பந்து வீரராக இல்லாதிருந்தால், நிட்சயமாக அவர் ஒரு புரட்சியாளராகியிருப்பார் என நான் நம்புகிறேன்.” என திரைப்பட இயக்குனர் எமிர் கஸ்துரிகா தனது பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தார். (Emir Kusturica, film director)   ஆம் மரடோனா, அர்ஜென்டினாவில் புதிய தாராளவாதத்தை முன்னெடுத்த ஜனாதிபதி கார்லோஸ் மெனெம் (Carlos Menem) மற்றும் அவரது நண்பரான ஹார்வர்ட் பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் டொமிங்கோ கேவல்லோ(Domingo Cavallo) ஆகியோருக்கு ஆதரவாக குரல் கொடுத்த மரடோனா இடதுசாரி சித்தாந்தங்களின்பால் ஈர்க்கப்பட்ட மனிதரானார்.   இவர் கியூபாவில் சிகிச்சை பெற்றபோது கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோவுடன் நெருங்கிய நட்பை ஏற்படுத்திக்கொண்டார். மரடொனா பற்றிய தனது குறிப்பொன்றில் "டியாகோ ஒரு சிறந்த நண்பர், மிகவும் உன்னதமானவர், அவர் ஒரு அற்புதமான விளையாட்டு வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, கியூபாவுடன் மிகச் சிறந்த நட்பை பேணும் அவர் தனது தனிப்பட்ட நலன்களுக்கு அதனைப் பயன்படுத்தவில்லை” என காஸ்ட்ரோ குறிப்பிடுகிறார்.   மரடோனா, காஸ்ட்ரோவின் உருவப்படத்தை தனது இடது காலிலும், பிடலின் நெருங்கிய சக தளபதியான அர்ஜென்டினாவின் சே குவேராவின் உருவத்தை, தனது வலது கையிலும்(பச்சை குத்தி- tattooed) தாங்கியுள்ளார். “எல் டியாகோ” என்ற தனது சுயசரிதை நூலை காஸ்ட்ரோவுக்கும் தன்னை ஈர்த்த மக்களுக்கும் அர்ப்பணித்தார். அதில், "பிடல் காஸ்ட்ரோவிற்கும், , அனைத்து கியூப மக்களுக்கும் அர்ப்பணம்." “"To Fidel Castro and, through him, all the Cuban people." எனக் குறிப்பிட்டள்ளார்.   மரடோனா வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸின் ஆதரவாளராகவும் இருந்தார். 2005 ஆம் ஆண்டில், அவர் வெனிசுலாவுக்கு சென்று சாவேஸை சந்தித்தார், அவரை சாவேஸ் மிராஃப்ளோரஸ் அரண்மனையில்(Miraflores Palace) வரவேற்றார். இந்த சந்திப்பிற்குப் பின், ஒரு "பெரும் மனிதரை" (ஸ்பானிஷ் மொழியில் "அன் கிராண்டே" ("un grande" in Spanish), சந்திப்பதற்காக வெனிசுலாவிற்கு பயணித்ததாகவும், ஆனால் அதற்கு அப்பாலும் தான் எதிர்பார்த்ததை விடவும் “பிரம்மாண்டமான மனிதரை”(ஸ்பானிஷ் மொழியில் "அன் ஜிகாண்டே "un gigante") சந்தித்ததாகவும் குறிப்பிட்டார். அத்துடன் "நான் சாவேஸை நம்புகிறேன், நான் ஒரு சாவிஸ்டா. பிடல் செய்யும் அனைத்தும், சாவேஸ் செய்யும் அனைத்தும், எனக்கு மிகப் பிடித்தமானவையே." எனக் கூறினார். 2007ல் வெனிகூலாவில் இடம்பெற்ற கோபா அமெரிக்க விளையாட்டுப் போட்டியின் தொடக்க நாள் ஆட்டத்தில், சாவேஸின் கௌரவ விருந்தினராக மராவோனா கௌரவிக்கப்பட்டார்.   ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களை ஆதரித்த மரடோனா ஏகாதிபத்திய அடையாளங்களுக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டு வந்தார். குறிப்பாக 2005 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவின் மார் டெல் பிளாட்டாவில் (2005 Summit of the Americas in Mar del Plata, Argentina.) இடம்பெற்ற அமெரிக்க உச்சி மாநாட்டில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கலந்துகொண்டதை எதிர்த்தார், "ஸ்ரொப் புஷ்" ("STOP BUSH") எனப் பெயரிடப்பட்ட ரீ- ஷேர்ட்டை அணிந்திருந்ததுடன் புஷ்ஷை "மனித குப்பை" ("human garbage) எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து2007 ஓகஸ்ட் இல், சாவேஸின் வாராந்திர தொலைக்காட்சி நிகழ்ச்சியான அலோ பிரசிடேனில் தோன்றிய மரடோனா, "அமெரிக்காவிலிருந்து வரும் அனைத்தையும் நான் வெறுக்கிறேன், என் முழு பலத்தினாலும் அதை நான் வெறுக்கிறேன்" என்று கூறினார். இருப்பினும், 2008 டிசம்பர்ல், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பராக் ஒபாமாவை மரடோனா பாராட்டியதுடன் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தார்.   தனது நகரத்தின் ஏழ்மையான மக்களின் குடிசை வாழ்வோடு இணைந்திருந்த மரடோனா அங்கிருந்து தனக்கான ஆளுமையையும் வளர்த்தார்.   1987 ஆம் ஆண்டில் வத்திக்கானில் போப் இரண்டாம் ஜோன் போல் உடனான சந்திப்பின் போது, செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு குறித்த கருத்தாடலில் போப்புடன் முரண்பட்டார். அது குறித்து மரடோனா கூறுகையில், " வத்திக்கானில் காணப்பட்ட தங்க கூரைகள் அனைத்தையும் பார்த்தேன், ஏழைக் குழந்தைகளின் நலனைப் பற்றி தேவாலயம் (Church) கவலைப்படுவதாக போப் கூறுகிறார். உங்கள் தங்கக் கூரைகளை விற்று ஏழைக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்யுங்கள் என நான் வத்திக்கானில் போப்புடன் வாதிட்டேன்” எனக் கூறினார்.   செப்டம்பர்2014 இல், மரடோனா ரோமில் போப் பிரான்சிஸைச் சந்தித்தார், பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரோமிற்கு பயணிப்பதற்கான தூண்டுதலை போப் பிரான்சிஸிஸ் ஏற்படுத்தியதாகக் கூறினார். அத்துடன் "நாம் அனைவரும் போப் பிரான்சிஸைப் பின்பற்றி . ஒவ்வொருவரும் மற்றயோருக்கு ஏதாவது கொடுப்பதன் மூலம், உலகில் யாரும் பட்டினி கிடக்காமல் பாதுகாத்திடமுடியும் எனக் கூறினார்.   டிசம்பர்2007 இல், மரடோனா ஈரான் மக்களுக்கு ஆதரவான செய்தியுடன் கையொப்பமிடப்பட்ட ரீ ஷேர்ட் ஒன்றை வழங்கினார்: இது ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2013 இல், மரடோனா ஹ்யூகோ சாவேஸின் கல்லறைக்குச் சென்று, வெனிசுலாவின் மறைந்த தலைவரின் நியமிக்கப்பட்ட வாரிசான நிக்கோலஸ் மதுரோவை சோசலிச தலைவரின் பாரம்பரியத்தைத் தொடரத் தேர்ந்தெடுக்குமாறு வலியுறுத்தினார்"போராட்டத்தைத் தொடருங்கள்" என்று மரடோனா தொலைக்காட்சியில் கூறினார். கராகஸில் நடந்த மதுரோவின் இறுதி தேர்தல் பிரச்சார பேரணியில் மரடோனா கலந்து கொண்டார், கால்பந்துகளில் கையெழுத்திட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொடுத்தார், மேலும் மதுரோவின் உருவத்தை அர்ஜென்டினாவின் ஜெர்சியில் பதித்து வழங்கினார். மரடோனாவுடன் சாவேஸின் கல்லறைக்குச் சென்ற மதுரோ, "மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் டியாகோவுடன் பேசுவதாகவும், ஏனெனில் தளபதி சாவேஸும் அவரை மிகவும் நேசித்தார்."  மரடோனா உனது மக்கள் நேயமும், மனித நேயமும், உனது புரட்சியும், கால்பந்தில் உன் உச்சமும் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.                     
  • பிரபாகரனை கடைசி வரை நம்பிய ஈழத்தமிழர்கள் | பத்திரிகையாளர் ப்ரியம்வதா உருக்கம்    
  • Today, 26 November, is the 66th birth anniversary of Velupillai Pirapakaran [and tomorrow is Maha Veerar Naal]. I was moved to revisit ‘Reflections of the Leader - Quotes by Veluppillai Pirapakaran’, published by Uppasala University, Sweden in 2007. Some quotes that have stayed with me during the past several years….. “…இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி..Nature is my friend. Life is my teacher. History is my guide - History is not a divine force outside man. It is not the meaning of an aphorism that determines the fate of man. History is an expression of the dynamism of man. Man creates history. Man also determines his own fate; - Simplicity is born as the highest fruit of wisdom; simplicity appears devoid of selfishness and pride. This simplicity makes one a handsome man; a cultured man; - நாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும் போரட்டமே எமது வாழ்க்கையாகவும், வாழ்க்கையே எமது போரட்டமாகவும் மாறிவிட்டது.Whether we like it or not, (our) struggle has become our life and (our) life has become our struggle; - சமாதானத்தை நான் ஆத்மபூர்வமாக விரும்புகின்றேன். எனது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, கௌரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம்.Peace I wish from the depths of my soul. My spiritual aim is that my people should have calmness, peace and honour in their lives… "நாம் இனத்துவேஷிகள் அல்லர். போர் வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருத வில்லை. சிங்கள பண்பாட்டை கெளரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை. நாம் எமது வரலாற்று தாயத்தில் ஒரு தேசிய மக்கள் இனம் என்ற அந்தஸ்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கொரவத்துடன் வாழ விரும்புகிறோம். "We are not chauvinists. Neither are we lovers of violence enchanted with war. We do not regard the Sinhala people as our opponents or as our enemies. We recognise the Sinhala nation. We accord a place of dignity for the culture and heritage of the Sinhala people. We have no desire to interfere in any way with the national life of the Sinhala people or with their freedom and independence. We, the Tamil people, desire to live in our own historic homeland as an independent nation, in peace, in freedom and with dignity." அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு….. ” I am reminded again of the words of N Barney Pityana, Vice Chancellor. University of South Africa, in The Martin Luther King, Jr Memorial Lecture, 2004 "...Movements for justice throughout the world and throughout history always begin with and are sustained by a moral statement, a value idea...Movements are sustained when there are enough people whose imagination is captivated by a vision that lifts them beyond wherever they may be and which encourages them to have a better idea of themselves and their history into what they might or could become...Values are the essential principles of life without which life would be without meaning things would fall apart, and the centre cannot hold. They are agents of social cohesion... in (Martin Luther King's) words 'people cannot devote themselves to a great cause without finding someone who becomes the personification of the cause'..." Ten years after his death in 2009, Velupillai Pirapakaran continues to remain as the personification of the Tamil Eelam struggle for freedom. https://tamilnation.org/.../schalk_reflections_of_a_leader also in Tamil - https://tamilnation.org/ltte/vp/quotes.htm            
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.