Jump to content

தமிழக ஊடகங்களும் மாற்றத்துக்குக் காரணம் ஆட்சி மாற்றமா?


Recommended Posts

அனால்...... ஒரே ஒரு கவலை எங்களுக்கு ...... அது "இன்று வரை மு.க.ஸ்ராலின், எமக்காக ஒரு அறிக்கை தானும் விடாதது!!!!!!

உண்மையே. ஆனால், மு.க. ஸ்டாலின் இதுபற்றி மட்டுமல்ல எது பற்றியுமே அறிக்கை விடமாட்டார். :lol: அவருடைய பத்திரிகைத் தொடர்பு அந்த லட்சணத்தில் இருக்கிறது.

மேடைகளில் பேசும்போது மட்டும் ஈழத்தமிழர் பிரச்சினையைப் பேசுவார். துரதிருஷ்டவசமாக அவர் மேடைகளில் பேசுவது எந்த ஊடகங்களிலும் வருவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா! "தயக்கம் ஏன்?" "மௌனம் ஏன்" "புறக்கணிப்பு ஏன்" "ஆதரவு எங்கே?" என்று ஆதங்கத்துடன் கேட்கும் என்னை "கலைஞர் மீதான வெறுப்பை ஈழத்தமிழர் மத்தியில் உருவாக்க வேண்டும்" என குற்றவாளியாக்கி பல உண்மைகளை மறைக்கப் பார்க்கிறீர் போலும்! அந்த கலைஞர் எனும் இந்திய மலையெங்கே இந்த கீரிமலை எங்கெ?

பேச்சு சுதந்திரம், மொழிச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் இல்லாவிட்டால் இந்தியாவில் எந்த மூலையிலும் வன்முறை வெடிக்கலாம். வெடித்தும் இருக்கிறது, பேச்சாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக பேசினால் சட்டமூலமாக நீதிமன்றங்கள் தீர்ப்பு கூறலாம்! ஒரு வாததிற்கு பிரதிவாதமுறையில் அதை எதிர்ப்பு கொள்ளவேண்டும். அதைவிட்டு விட்டு ஒரு சிலர் அப்படி பேசுவார், இப்படி பேசுவார், அல்லது இப்படித்தான் தமிழர் பேசவேண்டும் என்று ஒரு பக்கத் தடையை, ஆட்சியிலிருப்பவர்க்கு "சங்கடங்களை" (உங்கள் கூற்று)உண்டு பண்ணுமே என்றதற்காக ஏற்படுத்துவது எந்த முறையில் ஆட்சி தர்மமாகும்? கேரளாவில், ஆந்திராவில், தடையில்லாமல் நடந்தபோது எப்படி தமிழ் நாட்டில் நாம் பேசப்போவதென்ன என்று முன்கூட்டியே தெரியும். அப்படியானால், உளவாளிகள் தமிழரை நன்றாக கண்காணிக்கிறார்கள் போலும்! "ஒவ்வொரு முறையும் உயர்நீதிமன்றம் சென்றுதான் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை இனியாவது மாற வேண்டும்" என்று தமிழர் விரும்புவதில் யதார்த்தமில்லையா? அப்போ செயலலிதாவுக்கும், கலைஞர் ஆட்சிக்கும் எங்கே வித்தியாசம்? கட்சி பேதங்களினாலேயே இந்த தடை வந்தது என்று ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கும் விளங்கும். இந்தக் கட்சி வேறுபாட்டில் இருந்து விடுபட்டு ஒரு குரலாக தமிழகம் எமக்கு ஆதரவு குரல் கொடுக்கவேண்டும். எமக்கு தனிநபர் ஆதரவிலும் விட ஒட்டுமொத்த இந்திய தலவர்களின் ஆதரவு வேண்டும்.

எம்முடைய (நீர் கூறிய) "துரதிஷ்டம்" தமிழகத்தில், அரசியல்வாதிகள் ஈழத்தமிழர் விடயத்தில் கட்சி பேதமை காட்டுவதே! கலைஞரின் ஆதரவு எமக்கு ஒர் ஊன்றுகோலாக இருக்குமே ஒழிய "துரதிஷ்டம்" "அதிஷ்டம்" என்று நான் நம்பவில்லை. இவைகளை காட்டி தமிழகத்தில் ஒரு சிலரை பூச்சாண்டி காட்டுங்கள். எங்களுக்கு உங்கள் முழு ஆதரவை தாருங்கள். எங்கள் வாதத்தை "வெறுப்பு" என்று தள்ளி விடாதீர்கள்.

Link to comment
Share on other sites

மேற்கண்ட அல்லிகாவின் வாதம் யாருக்காவது புரிந்தால் தயவுசெய்து எனக்கு மொழிபெயர்த்துச் சொல்லுங்களேன்..... :lol::lol::lol:

முடியலை....... மண்டை காயுது..... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

இந்தியபிரதமரும் சந்திக்கவில்லை.நாராயணன் சொன்னாராம் புலி வேறு தமிழர் வேறு எண்டு.ஆனால் புலிகள் ஒவ்வொரு தமிழனினும் உயிர்.பிரபாகரன் தமிழனின் கடவுள்.உயிர் இல்லாம யாராவது வாழமுடியுமோ புலி இல்லாத தீர்வுத்திட்டமும் வேண்டாம் பிரபாகரன் இல்லாத நாடும் எமக்கு வேண்டாம்.அது உங்களுக்கே தெரிந்திருக்கும்

ஆக நாராயணன் எண்ட பெயரை வைச்சுக்கொண்டு நாரதர் வேலை பார்க்கிறார் போல நாராயணன்.

என்னையா நீங்கள் வேறுபடுத்திற்து இவ்வளவு காலமும் எங்களுக்காய் நீங்களா போராடினீங்கள் அல்லது உங்களை உயிரைகொடுத்து எங்களை காப்பாத்தினீங்களா இப்ப வேறுபடுத்தி பார்க்க நிக்கிறியல்.ஆமாம் உயிரை கொடுத்தனீங்கள் எமக்கு கேடு விளைவிக்கநினைத்து எம்மை இந்திய படைகளிலும் இருந்து காத்தவர்கள் புலிகள்தான் இப்போ இலங்கை நாய்களிடமிருந்து காப்பவரும் புலிகள்தான்.13 இராணுவம் செத்ததுக்கு கலவரம் உருவாக்கியவர்கள் எங்கே இப்ப உருவாக்கட்டும் பாப்பம்.அன்று இந்தியா உதவும் எண்டவர்களை முதுகில் குத்தியது பாரதம்.ஆனால் எமக்கு எண்டு ஒரு படை இன்று உண்டு.

இலங்கையில் பாக்கிஸ்த்தானுடனான ரஜதந்திரத்தில் தோதுப்போன இந்தியா இப்ப வேறுபடுத்தீனமாம்.இப்ப வேறுபடுத்தி எம்மை காக்க என்ன உங்க படயனுப்ப போகிறீர்களா.போங்கய்யா உங்கள் வேருபடுத்தல்களும் ராசதந்திரங்களும் இம்சை அரசனில் வடிவேல் சொல்லும் ராசட்ஜந்திரம்தான் உங்கட :shock: :shock: :shock: :evil: :evil: :?: :?: :!: :!:

Link to comment
Share on other sites

இந்திய பிரதமருக்கு டைம் இல்லையாம் பாப்பம் மத்திய அரசின் முடிவுதான் தன் முடிவு என்று சொன்ன மச்சள் துண்டு மைனருக்கு டைம் இருக்கா என்று. :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்கோள்:

"கலைஞர் மீதான வெறுப்பை ஈழத்தமிழர் மத்தியில் உருவாக்க வேண்டும், செயலால் காட்டுகிறவர்கள்! ("தானாடாவிட்டாலும் சதையாடும்" என்றும் "உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு" என்றும் மேடைகளில் கூறுபவர்கள் அல்ல, செய் அல்லது செய்து மடி என்று செயலில் காட்டுபவர்கள் ஈழத்தவர்). இவர்கள் என் கருத்துக்களால் கருணா நிதி மேல் "வெறுப்பு" கொள்ளமாட்டார்கள். அது அவரின் செயலிலேயே அடங்கியிருக்கிறது!

2. "ஒவ்வொரு முறையும் உயர்நீதிமன்றம் சென்றுதான் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை இனியாவது மாற வேண்டும்" (பழ. நெடுமாறன்) என்று தமிழர் விரும்புவதில் யதார்த்தமில்லையா? அப்போ செயலலிதாவுக்கும், கலைஞர் ஆட்சிக்கும் எங்கே வித்தியாசம்? கட்சி பேதங்களினாலேயே இந்த தடை வந்தது என்று ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கும் விளங்கும். இதற்கென்னய்யா வேறு விளக்கம்!

உலகத் தமிழர்கள் ஒன்றுகூடுவதற்கான தடைகள் இனியாவது தமிழ்நாட்டில் மாற வேண்டும்: பழ.நெடுமாறன்

Saturday, 12 August 2006

உலகத் தமிழர்கள் ஒன்றுகூடுவதற்கான தடைகள் இனியாவது தமிழ்நாட்டில் மாற வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும் தமிழர் தேசிய இயக்கத் தலைவருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று சனிக்கிழமை உலகத் தமிழர் பேரமைப்பு மாநாடு நடைபெறுகிறது. இதற்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது. இதையடுத்து தமிழ்நாடு தலைமை நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெறப்பட்டுள்ளது.

இது குறித்து பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலகின் பல நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகளை ஒருங்கிணைத்து உலகத் தமிழர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உலகத் தமிழர் பேரமைப்பு உருவாக்கப்பட்டது.

உலகத் தமிழருக்கான கொடி, தேசியப் பண், தேசிய உடை ஆகியவை முதன் முறையாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன. பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் அமைப்புகள் உலகத் தமிழர் பேரமைப்பின் கீழ் அணி திரண்டன. கட்சி சாதி மதம் பேதமில்லாத வகையில் உலகத் தமிழர் பேரமைப்பு செயற்பட்டு வருகிறது.

உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் அறிஞர்கள் கலைஞர்கள், தலைவர்கள், இந்த அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கடந்த 4 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாநாடுகள் நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அரசியல் கலப்பு ஒருசிறிதும் இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.

உலகத் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களின் நலனுக்காக குரல் கொடுத்து வரும் அமைப்பு இதுவாகும்.

உலகத் தமிழர் பேரமைப்பு கடந்த 4 ஆண்டுகால நடவடிக்கைகளை யாராலும் குறைகூற முடியாத அளவுக்கு அமைந்திருந்தன. தமிழ்நாட்டிலோ இந்தியாவின் பிற மாநிலங்களிலோ உள்ளுர் அரசியல் பிரச்சனைகளில் இந்த அமைப்பு ஒருபோதும் தலையிட்டது இல்லை.

தமிழ்நாட்டிலோ இந்தியாவின் பிற மாநிலங்களிலோ அல்லது பிற நாடுகளிலோ இந்த அமைப்பினால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாகவோ அமைதிக்கு பங்கம் ஏற்பட்டதாகவோ இதுவரை சிறு புகார் கூட எழுந்ததில்லை.

கர்நாடக மாநில தலைநகரமான பெங்களுரிலும் புதுவை மாநிலத்திலும் நடத்தப்பட்ட மாநாடுகள் அந்த மாநில மக்களின் பேராதரவோடு அமைதியாக நடந்து முடிந்திருக்கின்றன.

ஆனால் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியின்போது முதல் மாநாட்டிற்குத் தடை போடப்பட்டு உயர்நீதிமன்ற தலையிட்டின் பேரில் தடை தகர்க்கப்பட்டு மாநாடு சிறப்பாக நடந்தது. இப்போது தி.மு.க. ஆட்சியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர்கள் கூடுவதை தாய் தமிழகமே தடுக்குமானால் அவர்கள் எங்கு கூடுவார்கள்?

மிகுந்த பொருட்செலவில் பல மாதங்கள் நடைபெற்ற முயற்சிகள் விரைவடைந்து மாநாடு கூடவிருக்கும் கட்டத்தில் தடை விதிக்கப்பட்டது மூலம் பொருள் நட்டமும் பெரும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பேராளர்கள் வந்து பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகும் சூழ்நிலை உருவாகியது.

உலகத் தமிழர்கள் ஒன்று கூடி தங்களது பிரச்சiனாக்ள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளும் சுதந்திரம் தமிழ்நாட்டில் இல்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். மாநாடு போடுவதற்கு ஒவ்வொரு முறையும் உயர்நீதிமன்றம் சென்றுதான் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை இனியாவது மாற வேண்டும் என்று பழ. நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://www.tamiloosai.com/index.php?option...=3415&Itemid=26

3. எங்கள் "அதிஷ்டம்" எங்கள் தமிழர் தலைவர் பிரபாகரனே! இன்று கருணாநிதியும் ஒரு தமிழர் என்று பன்னாடுகளுக்கு தெரிய வந்ததும் எம் தலவரால் தான்! "தமிழர்" என்றால் யார் என்று தெரியாமல் இருந்த வெளிநாட்டவர்களுக்கு தமிழ் என்றதும் முதல் தமிழீழத்தைப் பற்றிய விசாரணையாக இருக்கும். மற்றப்படி "கருணாநிதி" அல்ல! புலத்தில் வாழும் அநேகமான தமிழரின் அனுபவம் இப்படி இருந்திருக்கும்!

காஷ்மீர் போல தமிழகம் வெடிக்க வைகோவின் பேச்சு அவசியம் அல்ல.

கீழே இந்தியாவில் அனுஜ் சோப்ரா எழுதிய கட்டுரையில் ஒரு பாகம்! "Recent reports suggest that this rural insurgency is slowly, yet inexorably, spreading into four more states, with what analysts see is a long-term plan to extend their red corridor - called the "Compact Revolutionary Zone" - throughout India. Their ultimate stated goal is to capture India's cities and overthrow Parliament. In an interview last year with The Telegraph newspaper, a national daily, a member of the Maoist Central Committee named "Comrade Dhruba" said, "Our mass base is getting ready. After five years, we will launch our strikes." By Anuj Chopra August 22, 2006

இப்போ விழங்குகிறதா நீங்கள் யாரைக் குற்றம் சாட்டவேண்டும் என்று. ஈழத்தமிழரை ஆதரிப்பவர்களையல்ல!

மேலும் கடந்த தேர்தலின் போது தமிழக பத்திரிகைகளின் நடுநிலமை பற்றி அறியவேண்டுமென்றால் இங்கே "மீடியாவை ஆட்கொண்ட கருணாநிதி" என்ற தலைப்பில் உள்ளது!

http://tnmediawatch.blogspot.com/2006/04/b...og-post_21.html

இன்றைய செய்திகளின் பின் அனைவருக்கும் தெரிந்திருக்கும் வரும் உள்ளூராட்சித் தேர்தல்கள் எப்படி ஈழத்தமிழரைப் பாதித்திருக்கின்றன!

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பர்களே

சில யாழ்கள உரவுகள் கேட்டுக்கொண்டதுக்கிணங்க தியாகதீபத்தின் பெயரை சர்ச்சைகளுக்குள் சிக்கும் வகையில் நான் எழுதவில்லை ஆனால் சில கருத்துக்களை இன்று முன்வைக்க விழைகின்றேன்

லக்கி அவர்களே

நீங்கள் தி.மு.க அனுதாபி அல்லதி அந்த கட்ட்சியை சேர்ந்தவர்.ஆக நீங்கள் தி.மு.க வை விட்டு கொடுக்க்கமாட்டீர்கள்

ஆனால் ஒன்றை ஒத்துக்கொள்ளவேண்டும் MGR அவர்கள் செய்த செயல்களில் ஒரு தூசு கூட அவர் செய்யவில்லை அவர் செய்யப்போவதுமில்லை.அவர் ஒரு சுய விளம்பர அரசியல் வாதி.நீங்கள் வைக்கோவை பற்றி குறை சொல்கிறீர் வைக்கோ செய்தவைக்கும் முட்டுக்கட்டை போட்டார் அன்றி அவர் ஒன்றும் செய்யவில்லை.நாம் அவரிடம் எதிர்பார்க்கப்போவதுமில்லை.ஏ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.