Jump to content

பிரபாகரன் இருந்தால் நாம் தாக்கப்பட்டிருப்போமா? முஸ்லிம் தாயின் அங்கலாய்ப்பு!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரனுடன் கருனா,கே.பி போன்றோர் சேர்ந்திருந்தனர்,பொன்சேகாவுடன் மகிந்தா குடும்பம் சேர்ந்திருந்தனர்,கூட்டமைப்புடன் மறைந்த அஸ்ரப் சேர்ந்திருந்தார்,சிங்கள அரசியல் வாதிகளுடன் முஸ்லீம் அரசியல்வாதிகள் சேர்ந்திருந்தனர் ,சிங்கள அரசியல் வாதிகளுடன் தமிழரசியல்வாதிகள் சேர்ந்திருந்தனர் ,சேர்ந்திருக்கின்றனர்......முன்னாள் புலித்தலைவர்கள் அரசுடன் சேர்ந்திருக்கின்றனர்......60 வருடமாக அந்த தீவில் அமைதியில்லை.....உணர்ச்சி மிக்க அரசியல் மற்றும் மதவாதிகளின் தலிவர்களின் ஒழுங்குப்படிதான் அந்த நாடு சென்றுகொண்டிருக்கிறது இனிமேலும் செல்லும்...வடக்குகிழக்கு பகுதியில் இராணுவம் குவிக்கப்படமுதல் இந்து,முஸ்லீம்,கிறிஸ்தவ மதத்தை சார்ந்த தமிழ் பேசும் ம்க்கள் போராடியிருந்தால் சிலசமயம் நன்மைகள் கிடைத்திருக்கும்.,ஆனால் இன்று அதற்குறிய கதவுகள் அடைபட்டுவிட்டன.உணர்ச்சிமிக்க தனிமனிதர்களினால் தான் சமுகத்தின் தலைவிதி தீர்மானிப்படுகின்றது.........

Link to post
Share on other sites
 • Replies 137
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் கவிஞர்களும், எழுத்தாளர்களும் எங்கள் ஆதரவு தேவை என்று முழங்குவார்களாம். ஆனால் அவர்களது தலைமைகள் நாங்கள் சந்தோசமாக சிங்களத்துடன் ஒண்டுக்கு இருக்கிறோம் என்பார்களாம். ஏன் இந்த இரட்டை நிலை?

உங்கள் தலைமைகளின் சந்தர்ப்பவாத அரசியலை முதலில் எதிர்த்துப் போராட முஸ்லீம்களே.. நீங்கள் தயாரா??

தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கிறோம் என்று சொல்ல.. முஸ்லீம்களே நீங்கள் தயாரா??

Colombo-Muslim-05.jpg

அலுத்தகமையின் கலவரத்தை

தாண்டவக்கோனே!-இந்த

அகிலமெலாம் எதிர்க்கிறதே

தாண்டவக்கோனே...!

அரசின் வாலைப்பிடிப்பவர்கள்

தாண்டவக்கோனே..!-வெறும்

அறிக்கையுடன் நிறுத்தினரே

தாண்டவக்கோனே...!

கேடுகெட்ட ஆசைகளால்

தாண்டவக்கோனே-மனிதன்

கேவலமாய் மாறிவிட்டான்

தாண்டவக்கோனே

பாடுபட்டு சேர்த்தெல்லாம்

தாண்டவக்கோனே-நாம்

பார்த்திருக்க அழிந்தனவே

தாண்டவக்கோனே..

வீடு வாசல் இழந்து விட்டோம்

தாண்டவக்கோனே-இன்று

வீதியிலே உண்ணுகிறோம்

தாண்டவக்கோனே..!

நாடுபோகும் போக்கினைப்பார்

தாண்டவக்கோனே-எலும்பு

கூடுதானே மிஞ்சி நிற்கும்

தாண்டவக்கோனே...!

ஆடுமாடாய் நடத்துகிறார்

தாண்டவக்கோனே-அதனால்

ஆளவழி தேடுகிறோம்

தாண்டவக்கோனே-'பேய்'

ஆடுகின்ற ஆட்டத்தைப்பார்

தாண்டவக்கோனே அதை

அடக்கிவிட ஆளனுப்பு

தாண்டவக்கோனே...!

நாட்டில் வாழும் வாழ்வை விட

தாண்டவக்கோனே-நாம்

நடுக்கடலில் வீழ்ந்திடலாம்

தாண்டவக்கோனே...!

ஓட்டுவாங்கி போனதெல்லாம்

தாண்டவக்கோனே-இங்கு

'ஒன்பது'போல் நிற்குதுபார்

தாண்டவக்கோனே...!!

- கவிஞர் அஸ்மின்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓட்டுவாங்கி போனதெல்லாம்
தாண்டவக்கோனே-இங்கு
'ஒன்பது'போல் நிற்குதுபார்
தாண்டவக்கோனே...!!

 

:)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் அஸ்மின் புலம்பெயர்ந்து வாழ்கின்றாரா......உள்நாட்டில் வாழ்கின்றாரா.....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியர்கள் மீதான வன்முறை கிழக்கிற்கும் பரவப் போகின்றதா? – நிராஜ் டேவிட்

... கிழக்கில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை சில தமிழ் வன்முறையாளர்களைக்கொண்டு மேற்கொள்ளுவதற்கு சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டு வருவதாகவும், இதன் மூலம் தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு சிறிலங்கா இராணுவத்தின் ஒரு பிரிவு திட்டமிட்டு வருவதாகவும் தமிழர் தரப்பு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிடம் தெரிவித்திருந்தது.
இந்தச் சதி நடவடிக்கைக்காக சிறிலங்கா அரச படைகளுடன் இணைந்து செயற்பட்டுவரும் சில முஸ்லிம் இளைஞர்களும், தமிழ் ஆயுதக் குழுவான பிள்ளையான் குழு உறுப்பினர்கள் சிலரும் தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த இரகசியத் தகவலில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

...தென் இலங்கையில் இருந்து வெளியேற்றப்படும் முஸ்லிம்கள் கிழக்கிற்குத்தான் முதலில் வருவார்கள். சிங்களவர்கள் மீது மிகவும் காழ்ப்புணர்வு கொண்ட மனநிலையில் வரும் தென் இலங்கை முஸ்லிம்களை அங்குள்ள தமிழ் மக்களுடன் இணையவிடுவது சிறிலங்கா தேசத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்படியாக அமைந்துவிடும்.
அதுமாத்திரமல்ல, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்பது இன்றைய மோடி அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 2.3 சரத்தின்படி வடக்கு கிழக்கு இணைவு தொடர்பான ஒரு சர்வஜன வாக்கெடுப்பு கிழக்கில் மேற்கொள்ளப்படவேண்டும். கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஏதோ ஒரு புள்ளியில் மன ஒருமைப்பாடு காணும் நிலை ஏற்பட்டுவிட்டால், வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாகவே இணைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுவிடும். இது சிங்கள தேசத்தின் எதிர்கால இருப்புக்கு நல்லதல்ல.

...அடுத்ததாக கிழக்கில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த இருப்பது சிறிலங்காப் படைகள் அல்ல. தமிழர் தரப்பினைக் கொண்டுதான் கிழக்கில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட இருக்கின்றன. முஸ்லிம்கள் திருப்பித்தாக்கும் பொழுது தமிழர் தரப்பிற்கு ஏற்படும் தாக்கம் மாத்திரம்தான்; புலம்பெயர் தமிழர்களால், அவர்களுக்கு இன்று சர்வதேச மட்டத்தில் இருக்கும் தொடர்புகளைப் பாவித்து சர்வதேச நாடுகளுக்கு வழங்கப்படும். புலம்பெயர் தமிழர்களின் வாக்குவங்கியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மேற்குலகம் நிச்சயம் தமிழர் பக்கமாகத்தான் நிற்குமே தவிர முஸ்லிம்கள் மீது சிங்கள தேசத்தினால் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட வன்முறையை ஒரு அளவிற்கு மேல் கண்டுகொள்ள விரும்பாது.
அப்படியானால் எமது அரசியல் தலைவர்கள்??

முஸ்லிம் அரசியல் தலைவர்களில் பலருடைய குடும்பிகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் சிங்கள ஆட்சியாளர்களின் கரங்களில் அகப்பட்டுக் கிடக்கின்றது. சில அரசியல் தலைவர்களின் அந்தரங்கங்கள் சிறிலங்காப் புலனாய்வளர்களால் வீடியோப் படமெடுக்கப்பட்டு சிங்கள ஆட்சியாளர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட அந்தத் தலைவர்கள் தொலைக்காட்சியின் முன்பு அழலாம். வரையறுக்கப்பட்ட அளவில் அறிக்கைகள் விடலாம். அமைச்சுப் பதவிகளைத் துறப்போம் என்று மிரட்டல் விடலாம். ஆனால் நடைமுறையில் அவர்கள் காலைக்கடனைக் கழிப்பதானால் கூட பாவம் சிங்களத் தலைமையிடம் அனுமதிபெற்றுத்தான் அதனைச் செய்தாகவேண்டும்.


http://www.nirajdavid.com/இஸ்லாமியர்கள்-மீதான-வன்ம/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் படித்த பாடம் மிகவும் பெரிதும் வலிமையானதும்

ஆம், நாங்கள் படித்த பாடம் மிகவும் பெரிதும் வலிமையானதும் ஆகும்.

 

அதன் அடிப்படையில் தான் நாங்கள் கருத்து கூறுகின்றோம்.

இல்லை, நீங்கள் படித்த வலிமையான, வலிகள் நிறைந்த, பெரிய பாடத்தில் இருந்து கருத்து கூறவில்லை. உணர்ச்சி வசப்பட்டு, ஆத்திரத்தில், வெறுப்பில், கடந்த காலத்தில் செய்த அதே தவறை - முஸ்லிம்களை வெளியேற்றிய அதே தவறை - செய்கிறீர்கள். முஸ்லிம்கள் இலங்கை அரசோடு பக்க பலமாக நின்று தமிழ் மக்களை அழித்தார்கள். அதனால் ஆத்திரப்படுகிறீர்கள் - நியாயமான ஆத்திரம். ஆனால் அது எதிர்காலத்துக்கு பயனுள்ளதா என்பது கேள்விக்குறி.

 

நாங்கள் ஒரு தனி இனம் எங்கள் பிரச்சனைகளை நாங்கள் தனியே கையாள்வோம். அதுக்கும் சொநிகளை தயவு செய்து இழுத்துவர வேண்டாம்.

தனி இனம். தனித்து நின்று போராடுவோம். இது தான் கடந்தகால மாபெரும் தவறு.
 • இது தவறு என்பது தான் நாம் பெரும் இழப்புகளுடன், துயரங்களுன் கற்றுக்கொண்ட பாடம்.
 • இது தவறு. தனித்து நின்று வெற்றி பெற முடியாது. முள்ளிவாய்க்கால் கற்றுத்தந்த பாடம் அது.
 • எம்மை வெற்றி கொண்டவர்கள் எல்லோருடனும் சேர்ந்து எம்மை அழித்தார்கள்.
 • நாம் தனி இனம், தனித்து நின்றோம் - தோற்றுப்போனோம். அழிந்து போனோம்.
 • தொடர்ந்து தனித்து நின்றால் மேலும் அழிந்து போவோம்.

தலைவர் பிரபாகரனுடன் கருனா,கே.பி போன்றோர் சேர்ந்திருந்தனர்,பொன்சேகாவுடன் மகிந்தா குடும்பம் சேர்ந்திருந்தனர்,கூட்டமைப்புடன் மறைந்த அஸ்ரப் சேர்ந்திருந்தார்,சிங்கள அரசியல் வாதிகளுடன் முஸ்லீம் அரசியல்வாதிகள் சேர்ந்திருந்தனர் ,சிங்கள அரசியல் வாதிகளுடன் தமிழரசியல்வாதிகள் சேர்ந்திருந்தனர் ,சேர்ந்திருக்கின்றனர்......முன்னாள் புலித்தலைவர்கள் அரசுடன் சேர்ந்திருக்கின்றனர்......60 வருடமாக அந்த தீவில் அமைதியில்லை.....உணர்ச்சி மிக்க அரசியல் மற்றும் மதவாதிகளின் தலிவர்களின் ஒழுங்குப்படிதான் அந்த நாடு சென்றுகொண்டிருக்கிறது இனிமேலும் செல்லும்...வடக்குகிழக்கு பகுதியில் இராணுவம் குவிக்கப்படமுதல் இந்து,முஸ்லீம்,கிறிஸ்தவ மதத்தை சார்ந்த தமிழ் பேசும் ம்க்கள் போராடியிருந்தால் சிலசமயம் நன்மைகள் கிடைத்திருக்கும்.,ஆனால் இன்று அதற்குறிய கதவுகள் அடைபட்டுவிட்டன.உணர்ச்சிமிக்க தனிமனிதர்களினால் தான் சமுகத்தின் தலைவிதி தீர்மானிப்படுகின்றது.........

சிந்திக்க தூண்டும் உண்மையான கருத்து. நன்றி.

 

இந்த விவாதம் சரியான திசையில் போகவில்லை. இப்படியான விடயங்களை வெறும் உணர்ச்சிகரமான வார்த்தைகளால் தான் விவாதிக்கின்றீர்களே அன்றி, அதன் பலாபலன்கள் பற்றி ஆராய்வதாகத் தெரியவில்லை. முஸ்லீம் -தமிழர் உறவின் தேவை, தேவையின்மை,. அல்லது இதில் நாங்கள் ஒதுங்கியிருப்பதால் என்ன பலன்கள், சேர்ந்து போராடுவதில் என்ன பலன்கள் என்ற விதத்தில் ஆராயும்போது தான் ஆக்கபூர்வமானதாக அமையும்..

 

 இந்த விவாதத்தை சரியான திசைக்கு திருப்பிய தூயவனுக்கு நன்றி. முஸ்லிம் தமிழ் உறவு மட்டுமல்ல, எமது மக்களை வாழவைக்க அனைவரதும் கூட்டுறவு தேவை. இதற்கு எங்கள் உண்மையான எதிரி யார் என்பதை அடையாளம் காண வேண்டும். சாதாரண சிங்கள மக்கள் கூட எங்கள் எதிரிகள் இல்லை. விடுதலை புலிகளே இதனை பிற்காலத்தில் சொல்லிலும் செயலிலும் காட்டினார்கள். விமான நிலைய தாக்குதலிலும், லேக் ஹவுஸ் தாக்குதலிலும் சிங்கள மக்களில் ஒருவரையும் தாக்காது, தாம் பிடிக்கப்படக்கூடிய நிலையில் மக்களை பணையம் வைத்து தம்மை பாதுக்காக முயலாமல், தற்கொலை செய்து கொண்டார்கள். மக்கள் எதிரிகள் அல்ல. அவர்கள் எம்மை போல சாதாரண மனிதர்கள். சக்தியற்றவர்கள்.இலகுவாக உணர்ச்சி வசப்படகூடிய, ஏமாற கூடிய சாதாரண மக்கள்.

எமது எதிரி, கொலைகாரரையும் கொள்ளையரையும் ஆட்சியில் அமர்த்தும் இலங்கையின் அரச கட்டமைப்பு ஆகும். மக்களுக்கு தம்மை தாமே ஆளும் அதிகாரத்தை மறுக்கும் வன்முறை ஆட்சி கட்டமைப்பு இன்று உள்ளது. இதனை மாற்றி ,உண்மையான மக்களாட்சி உருவாக எல்லா மக்களும் சர்வதேச சக்திகளும் இணைந்து செயற்படுவதே இன்றைய தேவை. உண்மையான மக்களாட்சியில், தமிழ் பேசும் மக்கள் தம்மை தாமே ஆள, தமிழ் பேசும் சுயாட்சி அமைப்பை உருவாக்கி கொள்ளும் உரிமையையும் பாதுகாப்பையும் கொண்டிருப்பர்.

சாத்தியமற்ற கனவுகளை விட்டு, மக்கள் மேலும் அழிந்து போக முன்னர், நேச சக்திகளை அடையாளம் கண்டு ஒன்றிணைவதே பயனுள்ளது. கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ ஐ.நா.வில் முஸ்லிம்களுக்காக இன்று பேசி இருக்கிறார். தமிழர்களுக்காக பேசும் சில சிங்களவரில் இவர் முக்கியமானவர். இவர்கள் நேச சக்திகள். இவர்களுடன் ஒன்றிணைய, இவர்கள் எதற்க்காக போராடுகிறார்கள் என்று சரியாக அடையாளம் கண்டு அந்த பொதுவான தேவைகளுடன் உடன்பட்டு ஒன்றிணைந்து வெற்றி பெற முயலுவதே வெற்றிக்கு வழியாகும்.

 

 

முஸ்லீம் கவிஞர்களும், எழுத்தாளர்களும் எங்கள் ஆதரவு தேவை என்று முழங்குவார்களாம். ஆனால் அவர்களது தலைமைகள் நாங்கள் சந்தோசமாக சிங்களத்துடன் ஒண்டுக்கு இருக்கிறோம் என்பார்களாம். ஏன் இந்த இரட்டை நிலை?

 

முஸ்லிம்கள் தமது தலைமைகள் பற்றி மிகவும் கவலை அடைந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு தலைமை இல்லை. அவர்களை என்ன செய்ய சொல்கிறீர்கள்? இந்த தலைமையை விரும்பாதவர்கள் யு.என்.பி.யை ஆதரிக்கிறார்கள். அவர்கள் வேறு என்ன செய்ய முடியும்?

Link to post
Share on other sites

தூயவன் இவர்களோடு இணைவதால் நாம் இரு பெரும் ஆபத்த்குக்களில் சிக்குவோம்

1) மீண்டும் ஒருதரம் பயங்கரவாதி (ஜிகாத்) பட்டம் கட்டி நாம் காயடிக்கப் படுவோம்.

2) போராட்டமும் முசுலீம்களும் வடக்கு நோக்கி இடம் பெயர நாம் எம் நிலத்தை இழப்பதோடு, மேலும் ராணுவ பிரசன்னம் எம் நிலத்தில் வலுப்பட்டு, இன்னொரு ரத்த ஆறு எம் நிலத்தில் ஓடும். இப்போ இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியும் எம் மக்களுக்கு பறிபோகும்.

நன்மை - எதுவுமில்லை. இவர்கள் வெண்டால் நாம் ஆயுத முனையில் இரண்டு வருடத்தில் இசுலாமியராக்கப் படுவோம்.

இவர்கள் தோற்றால் மேலும் பெரும்பான்மையால் பழிவாங்கப் படுவோம்.

Status quo வை வைத்திருப்பதே நம் முன் உள்ள தெரிவு.

 

வழமையாகப் புலிகளைப் பற்றி அவதூறாக எழுதுவீர்கள். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லீம்- தமிழ் இணைவு பற்றி அச்சப்பட்டு எழுதுவது போலுள்ளளே... எதுவாக இருக்கட்டும்... முஸ்லீம்களோடு நல்லுறவு என்று சொல்லவரவில்லை. ஆனால் எதிராக எழுதுவது விமர்சிப்பது தப்பு என்பது தான் என் எண்ணம். குறைந்தபட்சம் ஆதரவு வார்த்தையை இரு தரப்புக்குமோ, அல்லது அமைதியான மௌனம் காத்தலையாவது செய்யலாம்.

முஸ்லீம்களை நாங்கள் இப்போது எதிர்ப்பதால், அவர்களுக்கு கிடைக்கின்ற அழிவுகளைப் சிலர் சந்தோசப்படுவது என்பது எல்லாம் என்ன விளைவு தரும். அவர்கள் திரும்பவும் சிங்களவர்களோடு ஐக்கியப்படவே செய்வார்கள். அவர்களுக்கு வேறு தெரிவே கிடையாது. ஒரு காலத்தில் லண்டனின் கருணா தஞ்சம் அடைந்தான். அவனைச் சிலர் பிடித்துக் கொடுத்து நாடு கடத்த வைத்தார்கள். பிற்பாடு என்ன ஆச்சு. அவன் சிறிலங்கா வந்தான். அவன் புலிகளின் இறதிப் போரில் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தான். தன் உறுப்பினர்களை வைத்து விடுதலைப் போராட்டத்தை அழிக்கத் துணை புரிந்தான். இன்றைய நம்மர்களின் சிலரின் செயற்பாடும் அவ்வாறே உள்ளது. உங்களின் எதிர்ப்பு என்பது அவர்களைச் சிங்கள அரசையே மீளமீள நாட வைக்கும். அது சிங்களத் தரப்பின் பலத்தினை, அவர்கள் பற்றிய வெளியுலகப் பார்தவையை மாற்ற வைக்காது...

தமிழீழத்தின் தேவை என்பது சிங்கள அரசில் இருந்து பெறுவதாகவே உள்ளது. அது முஸ்லீம்களிடம் இருந்தல்ல. அப்போ எவ்வளவு தூரம் சிங்கள அரசின் செயற்பாடுகள் குறித்து சர்வதேசம், ஐநா இப்படி ஏதாவது வெறுப்புக் கொள்கின்றனவோ அப்போது தான் தமிழீழத்துக்கான கதவுகள் திறக்கப்பட வாய்ப்புக்களை உருவாக்கும். எனி ஒரு ஆயுதப் போராட்டமும் சாத்தியமில்லை. இங்கே வீரம் கதைப்பவர்களும் போராடப் போவதே இல்லை. அப்படியாயின் கிடைக்கின்ற வழிகளைச் சாதகமாகப் பாவிக்க வேண்டிய அடிப்படை சிந்தனை கூடவா இல்லை. இப்படியான சந்தர்ப்பங்களைப் பாவிக்கமாட்டீர்கள் என்றால் எதைப் பாவித்துக் கிழிக்கப் போகின்றீர்கள்.

இங்கே முஸ்லீம்கள் என்பது ஒரு அடையாளம். நாளைக்கு இதே இனவாதம் தமிழர் பொருளாதாரங்களைக் குறி வைக்காது என்பது என்ன நிச்சயம். கொழும்பில் தமிழர்களின் சொத்துக்களும் நிறையவே உள்ளன. இனவாதம் அங்கே சுடாது என்பது என்ன உத்தரவாதம்.

எமக்கும் முஸ்லீம்களுக்கும் நிறையப் போர்களும், மனக்கசப்புக்களையும் கொண்டுள்ளோம் என்பது எவ்வளவு உண்மையோ. அதே அவ்வாறே முஸ்லீம்கள் சிங்களத்துக்கு உதவிய அளவு தமிழில் எதிரிக்கு உதவிய நிறையப் பேர் உள்ளனர். அதற்காக என்ன செய்யப் போகின்றீர்கள்.

மற்றது உலகம் இஸ்லாமியருக்கு எதிரானது என்று சொல்வது எல்லாம் சமாளிப்புக்களே. ஏன் எம் போராட்டத்தையும் தான் பயங்கரவாதப் பட்டியலில் வைத்துள்ளது. அப்படி இருக்கும்போது எம் போராட்டத்துக்கு உதவவேண்டும் என்று எதர்பார்ப்பது எப்படி?

என் தனிப்பட்ட கருத்து என்பது ஒரு போராட்டத்தின் அழிவைப் பார்க்காதவர்கள் முஸ்லீம்கள். அதனால் அவர்களுக்கு எம் வலி தெரியவில்லை. இழப்பு என்னவென்றால் இப்போது தான் உணர்கின்றனர். ஆனால் இழப்பின் வலி தெரிந்தவர்களாக இங்கு எழுதுபவர்களும் இல்லை போலுள்ளது. அதனால் தான் முஸ்லீம்கள் செய்த அதே தப்பினை இவர்களும் செய்கின்றார்கள்...

Link to post
Share on other sites

என்னுமொரு விடயம். இதற்காக முஸ்லீம்களிடம் நாங்கள் அடிவாங்க வேண்டும் என்ற அர்த்தம் அல்ல.

Link to post
Share on other sites

நாரதர்.. மிகவும் கீழ்த்தரமான தரவுகளுடன் எழுதப்பட்ட கட்டுரையாக உள்ளது.

புலிகள் முஸ்லீம் சமுதாயத்தை சந்தேகத்துடன் அணுகினார்கள். நடவடிக்கை எடுத்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை. ஆனால் வாயில் விரல் வைத்து சூப்பிக்கொண்டிருந்த சமுதாயத்தை இவர்கள் வதைத்தார்கள் என்பதாக எழுதப்பட்ட விதம் உங்களுக்கு விளங்கவில்லையா?

புலிகள் தாங்கள் வளர்ந்துவரும் காலத்தில் நிகழ்த்தப்பட்ட சில செயல்களுக்காக வருந்தி மீள அழைத்துக்கொண்டார்கள். முஸ்லீம்கள் ஊர்காவல்படை என்கிற பெயரிலும், புலனாய்வுத் துறையில் சேர்ந்தும் போராட்டத்துக்கும், தமிழ் மக்களுக்கு இழைத்த கொடூரங்களை வெளிப்படுத்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.

Link to post
Share on other sites

“[...] report from April 2008 identified police, Muslim

Home Guard, and Special Task Force members as

the likely perpetrators and corresponded in large

part with the conclusions of the IIGEP6 and other

Embassy contacts”. 7

http://actioncontrelafaim.ca/wp-files/uploads/2013/12/Muttur-Report.pdf

மூதூர் பணியாளர்களின் படுகொலையில் முஸ்லீம் ஊர்காவல்படையின் பங்கு.. இதைச் சொல்வது மூன்றாம் தரப்பு அல்ல.. அந்த தொண்டு நிறுவனத்தின் அறிக்கையில் உள்ளது.

இதெல்லாம் முஸ்லீம்கள் தமிழருக்கு எதிராக நின்றார்கள் என்பதற்கான ஆதாரங்கள். சும்மா இணையத்தில் எழுதிய ஆதாரங்கள் அல்ல. இதெல்லாம் யாழ்ப்பாண முஸ்லிம் கட்டுரையாளருக்கு தெரியாதா, நாரதர் அவர்களே..? :blink:

Link to post
Share on other sites

தூயவன்,

புலிகளை நான் தூற்றுவதில்லை. அவர்கள் விட்ட பிழைகளை சுட்டிக்காட்டுவேன். அவர்களை போற்றுதலுக்கு உரியவராக்கி அதன் மூலம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவராக்கி அதன் மூலம் பேரழிவுக்கு வழி கோலிய துதிபாடிகளை வியாபரிகளை தூற்றுவேன். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரியாவிட்டால் நான் என்ன செய்வது.

எவ்வித புரிந்துணர்வும் இல்லாத முசுலீம்களுடன் நாம் இணைந்து போராடுவது என்பது யானை தலையில் மண்போடும் செயல். முதலில் ஒரு முஸ்லிம் நகரசபை உறுப்பினரையாவது உங்கள் தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவு தரச்செய்யுங்கள். மிகுதியை பின்பு பார்க்கலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர்.. மிகவும் கீழ்த்தரமான தரவுகளுடன் எழுதப்பட்ட கட்டுரையாக உள்ளது.

புலிகள் முஸ்லீம் சமுதாயத்தை சந்தேகத்துடன் அணுகினார்கள். நடவடிக்கை எடுத்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை. ஆனால் வாயில் விரல் வைத்து சூப்பிக்கொண்டிருந்த சமுதாயத்தை இவர்கள் வதைத்தார்கள் என்பதாக எழுதப்பட்ட விதம் உங்களுக்கு விளங்கவில்லையா?

புலிகள் தாங்கள் வளர்ந்துவரும் காலத்தில் நிகழ்த்தப்பட்ட சில செயல்களுக்காக வருந்தி மீள அழைத்துக்கொண்டார்கள். முஸ்லீம்கள் ஊர்காவல்படை என்கிற பெயரிலும், புலனாய்வுத் துறையில் சேர்ந்தும் போராட்டத்துக்கும், தமிழ் மக்களுக்கு இழைத்த கொடூரங்களை வெளிப்படுத்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.

கடந்த காலத்தில் இசுலாமியரும் தவறு இழைத்து உள்ளார்கள், தமிழரும் தவறு இழைத்து உள்ளார்கள். தமிழரினதும் இசுலாமியத் தமிழரினதும் எதிர்கால நலன்கள் இணைந்த போராட்டத்தின் மூலமே சாத்தியப்படும். கடந்த கால நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்று தமிழரும் இசுலாமியரும் எதிர்காலத்தை எதிர் கொள்ளாவிட்டால் இரு இனமும் சிறிலங்காவில் அழிக்கப்படும். இதுவே இலங்கைத் தீவின் அரசியல் யதார்த்தாம். இதை விட்டு விட்டு புலத்தில் இருந்து உணர்ச்சி வசப்படுவதால் இலங்கைத் தீவில் இருக்கும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு விமோசனம் இல்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம் கடந்த ஞானம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

 இசுலாமியத் தமிழரை , தமிழர்களிடம் இருந்தும் ஒதுக்கும் அரசியலை ஆரம்பித்து வைத்தவர்கள் தமிழருசுக் கட்சியினர். அதனால் இணைவையும் தமிழர்களே ஆரம்பிக்க வேண்டும்.

இனி நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும், இசுலாமிய மக்களும் இனிச் சிந்திப்பார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் வெட்டொண்டு துண்டு இரண்டாக எழுதுகிறேன் .எனது வயதையும் ,கடந்த கால அனுபவத்தை வைத்தும் ..இலங்கையில் வாழும் முஸ்லிம்களை நான் எபோதும் ,எந்தக்காலத்திலும் நம்பத்தயார் இல்லை ..இரக்க குணம் எனக்கு தெரியாது .நன்றி வணக்கம்  :)  :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்றிருக்கும் தமிருக்கும் முஸ்லீம்களுக்குமிடையிலான முரண்பாடு என்பதே தமிழ் அரசியவாதிகளாலும், முஸ்லீம் அரசியல்வாதிகளாலும் ஆரம்பிக்கப்பட்டு சிங்களப் பேரினவாதத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரு திட்டமிட்ட சதி. அஷ்ரப் தமிழரசுக் கட்சியில் இருந்தார் என்பதும், அவர் ஏன் தனியாகச் சென்று முஸ்லீம் காங்கிரஸை ஆரம்பித்தார் என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய விடயம்.

 

ஒரு சிறுபான்மையினத்தை அழித்து ஒடுக்க இன்னொரு சிறுபான்மையினத்தை ஒரு பேரினவாதம் வளைத்துப் போடுகிறதென்பதை நாம் ஏன் இதுவரை விளங்கிக்கொள்ளவில்லை? தமிழர்களை ஒடுக்கும் வரை சிங்களவனுக்கு முஸ்லீம்களது உதவி தேவைப்பட்டது. அதற்காக அவர்களை பட்டுக் குஞ்சத்தில் இருத்தி வைத்து அழகுபார்த்தான். தனது சதித்திட்டத்திற்கு ஒத்துப்போகக் கூடிய மதவெறி பிடித்த முஸ்லீம் அரசியல்வாதிகளை இலகுவாக இனம் கான தமிழர் தரப்பின் அசட்டுத்தனமான முடிவுகள் சிங்களவனுக்கு உதவின. இன்னும் சொல்லப்போனால் முஸ்லீம்களைச் சிங்களவனை நோக்கித் தள்ளிய பெருமையும் எங்களையே சாரும். ஏட்டிக்குப் போட்டியாக தமிழரும் முஸ்லீம்களும் செய்த வேலைகள் இன்னுமின்னும் இந்த இரு இனங்களுக்குமிடையிலான விரிசலை அதிகப்படுத்தியதே அல்லாமல், குறைக்கவில்லை. இதில் முற்றான லாபத்தைச் சம்பாதித்துக்கொண்டது சிங்களப் பெரும்தேசியவாதம். அஷ்ரப், பதிர்தீன், அஸ்வர் போன்ற அரசியல்வாதிகள் ஒன்றில் சுயநலமிகள் அல்லது இஸ்லாமிய இனவாதிகள். இதில் பதிருதீன் என்பவன் புலிகளால் மன்னார் மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்பட்டவன். தமிழர் மேல் அதீத பகையுனர்வு கொண்டவன். என்னுடன் படிக்கும் காலத்தில் தீவிர இனவாதம் கக்கி வந்தவன். அவன் இப்போது நடந்துகொள்ளும் முறைய விலங்கிக் கொள்வதில் எனக்குச் சிரமம் இருக்கவில்லை. அவனுக்கு பக்க பலமாக சிங்களப் பெநெரினவாத இயந்திரம் இருக்கிறது. அதை வைத்துக்கொன்டு இன்று அவன் வன்னியில் ஆட்டம் போடுகிறான். ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும், மன்னாரில் கடற்படை முகாமை விஸ்த்தரிக்கவென சிங்களம்ளாபகரித்த பொதுமக்கள் காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களை அவன் வில்பத்து சரணாலயத்தை அண்டிய காணிகளில் குடியேற்ற முற்பட்டபோது சிங்கலப் பேரினவாடஹ்ம் அவனைத் தடுத்து நிறுத்திவிட்டதென்பதையும் கவனிக்கவேண்டும். ஆகவே தமிழருக்கெதிராக அவன் செய்யும் ஆக்கிரமிப்புக்களுக்கு மட்டும்தான் அவனுக்கு அரச் ஆதரவு. இதுவும் ஒரு பிரித்தாளும் தந்திரம்தான்.

 

புலிகளிருக்கும்வரை முஸ்லீம்களது அவசியம் தமிழருக்கு இல்லாதிருந்தது. அதேபோல புலிகளிருக்கும்வரை தமிழரின் தேவை மூஸ்லீம்களுக்கும் இல்லாமலிருந்தது, ஏனென்றால், எந்தவிதத்திலும் முஸ்லீம்கள் தமிழரிடம் மீண்டும் போய்ச் சேராமல் சிங்களப் பேரினவாதம் பார்த்துக்கொண்டது. ஒரே நேரத்தில் இரு சிறுபான்மையினங்களுடன் மோதுவதைக் காட்டிலும், ஒன்றை வளைத்துப்போட்டு மற்றையதை அழிக்கலாம், பின்னர் மிஞ்சியிருப்பதை அழிக்கலாம் என்று சிங்களம் கணக்குப் போட்டது. அதன்படி முள்ளிவாய்க்காலில் தமிழரின் போராட்டத்தை அடித்து முடித்தது. இதற்கு முஸ்லீம் சந்தர்ப்பவாத சுயநல அரசியல் வாதிகள் உதவி நல்கினர்.

 

இப்போது முஸ்லீம்களின் நேரம். அவரகளை அழிக்கச் சிங்களம் கணக்குப் போட்டிருக்கிறது. தமிழருக்கு நடந்ததைப் போல முஸ்லீம்களுக்கும் ஒரு பாடத்தை படிப்பிக்க அது முயல்கிறது.

 

இப்போதிருக்கும் சிங்கள முஸ்லீம் முறுகளை நிரந்தர விரிசலாக்குவதில்தான் தமிழரின் வெற்றி தங்கியிருக்கிறது. ஆகவே முஸ்லீம்கள் இப்போது தமிழரின் ஆதரவை நாடி வருகிறார்கள் என்றால், நிச்சயம் உதவுவதில் தவறில்லை.

 

தனிப்பட்ட ரீதியில் நான் இன்னும் முஸ்லீம்களை நம்பவில்லை. இந்த நம்பிக்கையீனம் களையக் காலமெடுக்கும். ஆனால், அரசியல் என்றுவரும்போது, எமக்கு நன்மையிருப்பின் அவர்களை ஆதரிப்பதில் தவறில்லை என்பதுதான் எனது எண்ணம். இல்லை, அவர்களை ஆதரிக்கக் கூடாது, நம்பிப் பயனில்லை என்றால் எமக்கு அதில் என்ன நன்மையிருக்கிறது என்பதும் தெரியவில்லை.

 

வரும் ஆதரவுக் கரங்கலளை வேண்டாம் என்று ஒதுக்குவதற்கு தற்போது எம்மிடம் பல தெரிவுகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தூயவன்,

புலிகளை நான் தூற்றுவதில்லை. அவர்கள் விட்ட பிழைகளை சுட்டிக்காட்டுவேன். அவர்களை போற்றுதலுக்கு உரியவராக்கி அதன் மூலம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவராக்கி அதன் மூலம் பேரழிவுக்கு வழி கோலிய துதிபாடிகளை வியாபரிகளை தூற்றுவேன். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரியாவிட்டால் நான் என்ன செய்வது.

எவ்வித புரிந்துணர்வும் இல்லாத முசுலீம்களுடன் நாம் இணைந்து போராடுவது என்பது யானை தலையில் மண்போடும் செயல். முதலில் ஒரு முஸ்லிம் நகரசபை உறுப்பினரையாவது உங்கள் தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவு தரச்செய்யுங்கள். மிகுதியை பின்பு பார்க்கலாம்.

 

கோஷான்,

 

நீங்கள் கூறியதும் நடக்கும். அதாவது, இன்றுவரை தமிழினத்துக்கு எதிராக இயங்கிவரும் முஸ்லீம்கள் நிச்சயம் ஒருநாள் சிங்கள முகாமை விட்டு வெளியேறுவார்கள். ஏனென்றால், அதற்கான காரியங்களை சிங்கலம் செய்ய ஆரம்பித்து விட்டது. 

அவர்களை இன்றுவரை சிங்கள முகாமில் தங்க வைத்திருப்பது அவர்களுக்கெதிராக நாம் செய்த தவறுகள்தான் என்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா? அப்படியிருக்கிறதென்றால், என்னவென்று கூறுங்கள். இன்றுவரை தமிழரினால் முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட இழப்புகளைக் காட்டிலும் சிங்களவர் முஸ்லீம்களுக்கு அதிகம் செய்யவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். தராசு எப்போது எமக்குச் சார்பாக மாறுகிறதோ அப்போது முஸ்லீம்கள் எம்மை நோக்கி வருவார்கள். அது இப்போதே சிறிது சிறிதாக நடக்கத் தொடங்கிவிட்டது.

 

உங்களிடம் ஒரு கேள்வி, தன்னிலும் பலமான ஒரு சகோதர இனம் தன்னை அடக்கியாள எத்தனிக்கும்போது அந்த இனத்தைக் காட்டிலும் பலமான , அந்த இனத்திற்கெதிரான ஒரு இனத்திடம் அந்த சிறிய சிறுபான்மை இனம் சென்று அடைக்கலம் தேடுவதில் என்ன தவறிருக்க முடியும்? இதில், இன்னொருவகையில் பார்த்தால் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் பொறுந்தியிருக்கும். இதைவிட வேறு என்ன தெரிவை தமிழர்கள் முஸ்லீம்களுக்கு விட்டு வைத்தார்கள் ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
நல்லது.
 
முஸ்லீம்களை ஆதரிப்பதால் எங்களுக்கு என்ன நன்மைகள் என்ப்பதை சுருக்கமாக  பட்டியல் இட முடியுமா ரகுநாதன்.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

நல்லது.
 
முஸ்லீம்களை ஆதரிப்பதால் எங்களுக்கு என்ன நன்மைகள் என்ப்பதை சுருக்கமாக  பட்டியல் இட முடியுமா ரகுநாதன்.

 

 

எனக்குத் தெரிந்தளவில் பட்டியலிட முயல்கிறேன்,

 

1. முதலில் எமக்குள் இருக்கும் வேற்றுமைகள் களையப்படும்.

2. சிங்களப் பொது எதிரிக்கு எதிரான எமது ஒன்றிணைந்த போராட்டம் வலுவடையும்

3. எமக்கெதிரான சிங்களப் பொது எதிரியின் சர்வதேச பிரச்சாரம் பலமிழந்து போகும்

4. இன்றுவரை சிங்களப் பேரினவாதத்தை சர்வதேச அரங்கில் தூக்கி நிறுத்த உதவிசெய்யும் முஸ்லீம் உலகின் நிலைப்பாடு எமது ஒன்றிணைந்த இரு இனங்களுக்கு ஆதரவாக மாறலாம்

5. பிரித்தாளும் தந்திரம் அழிக்கப்பட்டு தமிழர் தாயகம் மீதான திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்பும், பிரதிநித்துதுவமும் குறைந்து போகும்

6. அரசியல் ரீதியாக தமிழ்பேசும் மக்களினது பலம் (பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில்) அதிகரிக்கும்.

7. சர்வதேச ரீதியில் எமது இரு இனங்களினதும் வேன்டுகோளிற்கு செவிசாய்த்தல் அதிகரிக்கும்.

8. சிங்களம் சர்வதேசத்தில் மேலும் மேலும் தனிமைப்படுத்தப்படும்.

 

இவையெல்லாம் நாம் கொள்கை ரீதியிலும், அரசியல் ரீதியிலும் ஒன்றுபட்டாலே சாத்தியம். அது விரவிவாக நடந்தால் நல்லது.

இங்கே சோனகரை விடவும் பொது பல சேனா பரவாயில்லை, ஆகவே அவர்களுடன் சேர்ந்தாலும் சேருவோமோ ஒழிய சோனகருடன் சேரமாட்டோம் என்று அதி புத்திசாலித்தனாமன கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவ்வாறனவர்களிடம் ஒரு கேள்வி, முள்ளிவாய்க்காலில் சிங்களவன் செய்ததைவிட அதிகமாகவா சோனகன் உங்களுக்குச் செய்துவிட்டான் ?

 

சோனகன் இதுவரையிலும் சிங்களவனுக்குக் காவடி தூக்க யார் காரணம் ? நாம் செய்த செயல்களும், சிங்களவனின் பிரித்தாளும் தந்திரமுந்தான் என்பதை ஏன் உணர்கிறீர்களில்லை ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சரியாக இல்லாமல் மற்றவர்களை திட்டுவதே எமது அரசியலாகிவிட்டது .

பொறுப்பில் பதவியில் அதிகாரத்தில் இருப்பவனுக்கு கொடி பிடிக்க நாமும் ஒன்றும் குறைத்தவர்கள் இல்லை .

அவனவன் தவறு  விடும் போது சொல்லாமல் தாளம் போட்டுவிட்டு அழிவின் எல்லையில் தாளம் போட்டதற்கு ஒரு சப்பு கொட்டுவினம் பாருங்கோ அதுதான் சுயநலத்தின் அதி உச்சம் .(யாழில் முக்கால்வாசி ஆட்கள் இதே இதே ) 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சரியாக இல்லாமல் மற்றவர்களை திட்டுவதே எமது அரசியலாகிவிட்டது .

பொறுப்பில் பதவியில் அதிகாரத்தில் இருப்பவனுக்கு கொடி பிடிக்க நாமும் ஒன்றும் குறைத்தவர்கள் இல்லை .

அவனவன் தவறு  விடும் போது சொல்லாமல் தாளம் போட்டுவிட்டு அழிவின் எல்லையில் தாளம் போட்டதற்கு ஒரு சப்பு கொட்டுவினம் பாருங்கோ அதுதான் சுயநலத்தின் அதி உச்சம் .(யாழில் முக்கால்வாசி ஆட்கள் இதே இதே ) 

 

நீங்கள் என்னதான் சொல்கிறீர்கள்?

 

புலிகளை ஆதரித்தாலும் ஏசுகிறீர்கள். விமர்சித்தாலும் திட்டுகிறீர்கள். 

 

நாங்கள் எதுவுமே எழுதக் கூடாது என்கிறீர்களா?? :(

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் புலிகளை விமர்ச்சிக்கிறதே சிலருக்கு வேலையாப் போச்சு. புலிகளை விட முஸ்லீம்களோடு அதிகம் பிரச்சனைப்பட்டதும் வளர்த்ததும் ஒட்டுக்குழுக்கள். அதைவிட சும்மா இருக்க முடியாம.. பிரச்சனைக்குப் போனது முஸ்லீம் குழுக்கள். அவற்றையும் விமர்சியுங்கோ.

 

நீங்கள் இப்படியே விமர்ச்சிச்சுக்கிட்டு.. வெளிநாட்டுக்கு ஓடிக்கிட்டே இருங்கோ.. அவங்கள் நல்லா நாடகம் போட்டு.. ஊரை விழுங்கட்டும்..! :lol::D:icon_idea:

Link to post
Share on other sites

ரகு,

நீங்கள் ஒன்றை கவனிக்க தவறுகிறீர்கள். அதுதான் எல்லா "காபீர்கள்" மீதுமான முசுலீம்க ளின் பார்வை.

அவர்களை பொறுத்தவரை தமிழ் காபீரும், சிங்கள காபீரும் ஒன்றே.

அழிக்கப் பட வேண்டியவர்கள். அவர்களின் மதம் போதிக்கிறது, முஸ்லீம் அல்லாதவன் உலகில் வாழத்தகுதியில்லாதவன் என்று.

இதனால் தான் அவர்கள் தமிழன் அழிந்த போதோ சிங்களவன் அழிந்த போதோ அலட்டிக்கொள்ளவில்லை. அல்லாஹவின் விதிப்படி என்றோ முழு இலங்கையும் இசுலாமியமயமாகும் என்று நம்புகிறார்கள். எப்படி 48இல் தமிழ் பெரும்பான்மை மாகாணமாக இருந்த கிழக்கு இப்போ முஸ்லீம் பெரும்பான்மை மாகாணமோ அப்படி முழுநாட்டுக்கும் நடக்க அல்லா வழிசமைப்பான். அதுவரை தமிழ்-சிங்கள காபீர்கள்ளுக்கு போக்கு காட்டி நீக்கு போக்காக நடந்து கொண்டால் போதும். இதுதான் இலங்கையின் இஸ்லாமிய வாதத்தின் தூர நோக்கு. இதை நான் காழ்ப்புணர்சியிலோ, இனமதவாததிலோ சொல்லவில்லை. இதுதான் யதார்த்தம்.

நீங்கள் அவர்களை தங்க தட்டில் வைத்து தாங்கி இருந்தாலும், தமிழ் காபிர்கள் முள்ளிவாய்காலில் அழிகிறார்கள் அவர்களுக்கு துவா கேளுங்கள் எண்டு எந்த மெளளவியும் சொல்லியிருக்கப் போவதில்லை. ஆனால் சோமாலியாவில் ஒரு முஸ்லீம் அடிவாங்கினால், அமெரிக்கன் எம்பசிக்கு முன்னால் கூடுவார்கள்.

இதுதான் அவர்களின் குழுமனநிலை. இந்த யதார்த்தம் புரியாமல் அவர்களும் நாமும் சேர்ந்து போராடலாம் என்பது சிறுபிள்ளைத்தனமான எதிர்பார்ப்பு. தேவையில்லாமல் நாம் மீண்டும் ஒருமுறை சிங்களவரிடம் வாங்கி கட்டவே இது வழிகோலும்.

முஸ்லீம்கள் மீது எனக்கு எந்த பகையும் இல்லை. அவர்கள் அடிவாங்குவதை பார்க்க மனம் வலிக்கவே செய்கிறது. ஆனால் எம்மை பாதுகாகவே வலுவற்ற நாம் எதை நம்பி இன்னொரு நெருப்பாற்றில் இறங்க முடியும்?

புலிகள் தவறு முசுலீம்களுக்கு இழைத்தது உண்மை. ஆனால் தமிழரசுக் கட்சியில் அப்படி என்ன துரோகம் நடந்தது அஷ்ரப்புக்கு? தனிக்கட்சி தொடங்குமளவுக்கு? புலிகள் அழிந்த பின்பும் ஏன் கிழக்கில் இந்து ஆலயங்கள் அழிக்கப்படுகிறன? விக்கிரகங்கள் ராவோடு ராவாக உடைக்கப் படுகிறன? தமிழ் மக்கள் பொதுபலசேனாவை வரவேற்க்கும், கிளைதிறக்கும் படி வே ண்டுமளவுக்கு அளவுக்கு கல்முனையில் என்ன நடக்கிறது?

Link to post
Share on other sites

அர்ஜூன்,

இன்னமும் பழைய நினைப்பில் காலை கால ஆட்டுற தமிழ்நெற் கேசுகளை விட, ரகுபோன்ற சுயவிமர்சனம், கடந்த காலத்தின் படிப்பினைகளை கிரகிக்க கூடிய ஆற்றல் உள்ளவர்கள் எவ்வளவோ மேல்.

எம்மக்கள் மத்தியில், அட்லீஸ்ட் யாழ் களத்திலாவது ஒரு கருத்து மறுமலர்ச்சி வருவது நல்ல விடயம் தானே.

உங்கள் எனர்ஜியை தமிழ் நெற் வகையறாக்களிடம் காட்டுங்கள். அவர்களுக்கு உங்கள் " கருத்து புனர்வாழ்வு" அதிகம் தேவைப்படுகிறது..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச ஒரு சிலருக்கு தாங்க புரட்சி செய்யினமாம் என்ற நினைப்பு. செம்மறி ஆடு.. தலைய சிலிப்பிக்கிட்டு நினைக்குமாம் தான் தான் சிங்கமுன்னு..! :lol::D

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • குமாரசாமி அவர்கள் அதிக புள்ளிகள் எடுத்து முதலாமிடத்தில் இருக்கின்றார்....😎 புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு.
  • சிலருக்கு வாய் நிறைய சோறு வேணுமெண்டால் பூனையையும் புலியாக்கி  பிழைத்துக்கொள்வார்கள்.
  • #CSKvsDC சிஎஸ்கேவை அசால்ட்டா ஊதித்தள்ளிய பிரித்வி ஷா, தவான்..! டெல்லி கேபிடள்ஸ் அபார வெற்றி ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதின. மும்பையில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, சுரேஷ் ரெய்னாவின் அதிரடி அரைசதம் மற்றும் சாம் கரன், ஜடேஜாவின் கடைசி நேர அதிரடியால் 20 ஓவரில் 188 ரன்களை அடித்தது சிஎஸ்கே. சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டுப்ளெசிஸ் ரன்னே அடிக்காமல் ஆவேஷ் கானின் பந்தில் 2வது ஓவரில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே ருதுராஜ் கெய்க்வாட்டை கிறிஸ் வோக்ஸ் 5 ரன்னில் வீழ்த்த, 7 ரன்னுக்கே சிஎஸ்கே அணி 2 விக்கெட்டை இழந்தது. கடந்த சீசனில் ஆடாமல், இந்த சீசனில் கம்பேக் கொடுத்த ரெய்னா, அதிரடியாக ஆடி செம கம்பேக் கொடுத்தார். ரெய்னாவும் மொயின் அலியும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். அஷ்வின் மற்றும் மிஷ்ராவின் ஸ்பின் பவுலிங்கை ரெய்னாவும் மொயின் அலியும் இணைந்து அடித்து நொறுக்கினர்.  பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 3வது விக்கெட்டுக்கு 53 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய மொயின் அலி, அஷ்வின் பந்தில் 36 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த ராயுடுவும் ரெய்னாவுடன் இணைந்து அடித்து ஆடினார். ஆனால் அவரும் நிலைக்கவில்லை. அதிரடியாக ஆடிய ரெய்னா அரைசதம் அடித்து சிஎஸ்கே அணியில் செம கம்பேக் கொடுத்த வேளையில், ராயுடு 23 ரன்னில் ஆட்டமிழந்தார். ராயுடு விக்கெட்டுக்கு பின், ஜடேஜா ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். 16வது ஓவரின் முதல் பந்தை ஜடேஜா ஆட, அதற்கு 2வது ரன் ஓட முயன்றபோது ஜடேஜா, பவுலர் ஆவேஷ் கான் மீது மோதியதால் 2வது ரன்னை ஓட முடியாமல் திரும்ப, பாதி பிட்ச்சுக்கு ஓடிவந்த ரெய்னாவால் க்ரீஸுக்கு திரும்ப முடியவில்லை. எனவே 54 ரன்னில் ஆட்டமிழந்தார். தோனி, அதேஓவரில் ஆவேஷ் கானின் பந்தில் டக் அவுட்டானார். இதையடுத்து டெத் ஓவர்களில் சாம் கரன் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினர். சாம் கரன் 15 பந்தில் 34 ரன்களும், ஜடேஜா 17 பந்தில் 26 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 188 ரன்கள் அடித்தது. இதையடுத்து 189 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷாவும் ஷிகர் தவானும் அந்த இலக்கை எளிதானதாக்கினர். தொடக்கம் முதலே பிரித்வி ஷாவும் தவானும் அடித்து ஆடினர். தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், சாம் கரன் ஆகிய அனைவரின் பவுலிங்கையும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி, பவர்ப்ளேயிலேயே 66 ரன்களை குவித்துவிட்டனர். அதன்பின்னர் மிடில் ஒவர்களிலும் அதிரடியாக ஆடினர். ரன் வேகம் கொஞ்சம் கூட குறையாமல் அபாரமாக அடித்து ஆடினர். பிரித்வி ஷா 27 பந்தில் அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து தவானும் அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு பிரித்வி ஷாவும் தவானும் இணைந்து 13.3 ஓவரில் 138 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா, 38 பந்தில் 72 ரன்கள் அடித்து பிராவோவின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னரும் அதிரடியை தொடர்ந்த தவான்,  85 ரன்கள் அடித்த நிலையில், ஷர்துல் தாகூரின் பந்தில் தவான் ஆட்டமிழந்தார். தவான் 53 பந்தில் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பிரித்வி ஷாவும் தவானும் இணைந்து வெற்றியை உறுதியாக்கிவிட்டதால், 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.   https://tamil.asianetnews.com/sports-cricket/delhi-capitals-beat-csk-in-ipl-2021-qrczrr  
  • தாட்டான் வைட்டமின் டி அதிகம்  எடுக்கிறதாலை வேற லெவல்....
  • ஐயா குணா, நீங்கள் குறிப்பிடும் தரம் 1 உணவகங்கள் ஏற்கனவே கழிவறை வசதிகளுடன் தான் இயங்குகின்றன.  இங்கு பிரித்தானியாவில் council களால் எத்தனை பொதுக் கழிப்பிடங்கள் பராமரிக்கப்படுகின்றன ?  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.