Jump to content

சென்னையில் பிரசன்ன விதானகே படத்துக்கு தடை - சரியா தமிழ்த்தேசியவாதிகளின் செயல்?


Recommended Posts

சென்னையில் பிரசன்ன விதானகே படத்துக்கு தடை - சரியா தமிழ்த்தேசியவாதிகளின் செயல்?

ஜேபிஆர் 

சனி, 21 ஜூன் 2014 (21:08 IST)

 

சிங்கள திரைப்பட இயக்குனர் பிரசன்ன விதானகேயின் வித் யூ விதவுட் யூ திரைப்படம் சென்னையின் இரு மல்டிபிளக்ஸ்களில் திரையிட்டிருப்பதாக அறிந்த தமிழ்த்தேசியவாதிகள் சிலர் அந்தத் திரையரங்குகளை முற்றுகையிட்டு படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களின் செயல் சினிமா குறித்தும், கலை குறித்தும் முக்கியமாக பிரசன்ன விதானகே என்ற திரைப்பட கலைஞன் குறித்தும் எந்தப் புரிதலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறது.
1403365854-2086.jpg
சிங்கள பேரினவாத அரசை ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி சிங்கள மக்களில் குறிப்பிடத்தகுந்த பகுதியினரும் எதிர்த்து வருகிறார்கள். இனப்போருக்கு எதிரான கருத்துக்களை தீவிரமாக முன்வைத்த காரணத்தால் சிங்கள அரசால் கொல்லப்பட்ட சிங்கள பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். போருக்கு எதிராக சிங்கள ராணுவத்தையும், அரசையும் எதிர்த்து சிங்கள - தமிழ் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சிங்கள அறிவுஜீவிகள் பலரில் பிரசன்ன விதானகேயும் ஒருவர். வடகிழக்கு பகுதியில் உள்ள தமிழர்களுக்கு திரைப்பட கலை குறித்த பட்டறைகளை நடத்தியவர் விதானகே. 
 
பிரசன்ன விதானகே உலகம் அறியப்படும் சிறந்த இயக்குனர்களில் ஒருவர். அவரது சமீபத்திய வித் யூ விதவுட் யூ திரைப்படத்தையும் சேர்த்து ஏழு திரைப்படங்கள் இயக்கியுள்ளார். 2008 -ல் இயக்கிய Flowers of the Sky  படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டபோது அதில் விதானகே கலந்து கொண்டதுடன் பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். இனப்போர் குறித்த விதானகேயின் கருத்தையும், அவரது திரைப்படங்கள் எந்த மனோநிலையின் பின்புலத்தில் இயக்கம் கொள்கிறது என்பதையும் அறிந்து கொள்ள அவரது திரைப்படங்களே சிறந்த தரவுகள்.

 

விதானகே இயக்கிய ஏழு திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் திரைப்படங்களில் ஒன்று 1997 -ல் வெளியான புரகந்த களுவரா. ஆங்கிலத்தில் Death on a Full Moon Day.
 
இந்தப் படத்தில் ராணுவ வீரனான பண்டாரா என்ற இளைஞன் போரில் இறந்துவிட்டதாகக்கூறி அவனது உடலை ராணுவ அதிகாரிகள் அவனது கிராமத்துக்கு கொண்டு வருகிறார்கள். பண்டாராவின் தந்தை வன்னிஹாமி சரியாக கண் தெரியாத வயோதிகர். அவரது மகள் - பண்டாராவின் சகோதரி - கடைசியாக தனது தம்பியின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள். சவப்பெட்டி ராணுவ முத்திரையுடன் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதால் திறக்க முடியாது என அதிகாரிகள் மறுத்துவிடுகின்றனர். 
 
கிழவர் வன்னிஹாமி தனது மகன் எங்கோ உயிருடன் இருக்கிறான் என்றே நம்புகிறார். சவ அடக்கம் முடிந்த சில தினங்களில் மகனிடமிருந்து அவருக்கு, விரைவில் வீட்டிற்கு வருகிறேன் என எழுதியிருக்கும் கடிதம் வந்து சேர்கிறது. அது கிழவரின் நம்பிக்கையை அதிகரிக்கிறது. பண்டாரா இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் அது என்று மகள்கள் விளக்கியும் அவர் நம்பத் தயாராக இல்லை. இந்நிலையில் பண்டாராவின் சக வீரர்கள் சிலர் அவனது மூன்றாவது மாத ஈமச்சடங்குக்காக கொஞ்சம் பணம் சேகரித்து வன்னிஹாமியிடம் தருகிறார்கள். இது கிழவரின் ஆக்ரோஷத்தை தூண்டிவிடுகிறது. தனது மகன் இறக்கவில்லை என்று அவனது உடல் புதைக்கப்பட்டிருக்கும் இடத்தை தோண்ட ஆரம்பிக்கிறார். மற்றவர்கள் எதிர்த்தாலும் கிழவரின் உறுதியை கண்டு சவப்பெட்டியை தோண்டி எடுத்து சீலை உடைத்து திறக்கிறார்கள். அதன் உள்ளே கல்லும், காய்ந்துபோன வாழைத்தண்டும் மட்டும் இருப்பதைக் கண்டு திகைத்துப் போகிறார்கள்.

 

சிங்கள ராணுவம் தனது இனத்திடமே எப்படி நடந்து கொள்கிறது என்பதை அலட்டலில்லாமல் கலையமைதியுடன் இந்தப் படத்தில் விதானகே சொல்லியிருப்பார். படத்தில் வரும் கிராமத்தவர்களில் புத்த பிட்சு ஒருவர் தவிர்த்து மற்ற அனைவரும் போர் குறித்த அதிருப்தியுடன் இருப்பதையும் காணலாம். போரில் இறந்ததாக சொல்லப்பட்ட சிங்கள் ராணுவ வீரனின் சவப்பெட்டியை திறந்து பார்த்த போது அதன் உள்ளே கல்லும் மாட்டிறைச்சியும் இருந்ததாக வந்த பத்திரிகை செய்தியை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை விதானகே உருவாக்கினார். இந்தியாவைவிட கெடுபிடி நிறைந்த இலங்கையில் அதன் ராணுவத்தை விமர்சித்து இப்படியொரு படம் எடுக்கும் துணிச்சல் விதானகேயிடம் இருந்தது. இந்திய ராணுவத்தின் சவப்பெட்டி ஊழலை கோடிட்டுக் காட்டி ஒரு படம் எடுக்கும் துணிச்சல் நம் இயக்குனர்கள் யாருக்கேனும் உள்ளதா? சிங்கள ராணுவத்தை நமது படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் விமர்சித்ததைவிடவும் மிகக்கடுமையாகவும், நேர்மையாகவும் விமர்சித்த படைப்பு புரகந்த களுவரா. அதனால் இலங்கை அரசு படத்தை தடை செய்தது. ஒருவருடகாலம் தொடர் போராட்டத்தை நடத்தி நீதிமன்றத்தின் வழியாகவே தனது படத்தை இலங்கையில் திரையிடும் அனுமதியை விதானகே பெற்றார்.
 
அவரது பிற படங்களிலும் சிங்கள - தமிழ் நல்லுறவுக்கான பிரயாசையை காணலாம். விதானகே போன்ற சிங்கள தரப்பிலிருந்து நீளும் நட்புக்கான கரங்களை வன்மத்துடன் ஒதுக்கித் தள்ளுவது ஈழத்தமிழர்களின் நலன்களுக்கெதிரான செயல். இனவிரோத சிங்கள அரசை தமிழர்கள் மட்டுமின்றி விதானகே போன்ற சிங்களவர்களும் எதிர்க்கிறார்கள் என்பதனை உணராத, உணர விரும்பாதவர்களின் செயல்தான் சென்னையில் நடத்தப்பட்ட போராட்டம். 
 
எந்தவொரு இனத்தையும், சாதியையும், மதத்தையும் ஒட்டு மொத்தமாக முத்திரைக்குத்தி ஒதுக்குவதும், ஆதரிப்பதும் நியாயமான எந்த முடிவையும் தருவதில்லை. தூய சிங்களதேசியத்தைப் போலவே தூய தமிழ்த்தேசியமும் ஆபத்தானது. இனத்தூய்மை என்பது சுயஅடையாளத்தில் ஆரம்பித்து வெறுப்பில் கட்டப்பட்டு வன்முறையால் நிலைநிறுத்தப்படும் அதிகாரத்தின் செல்லப்பிள்ளை. 
 
எந்தவொரு படைப்பையும் வன்முறையால் தடை செய்வதன் மூலம் இன்றுவரை உலகில் யாரும் எதையும் அறுவடை செய்ததில்லை. விதானகேயின் படத்தை தடை செய்ததன் மூலம் தமிழ்த்தேசியவாதிகள் கலையை உணருவதற்கான தங்களின் அகவிழியை மேலும் இறுக்கமாக மூடிக் கொண்டிருக்கிறார்கள்.
 

http://tamil.webdunia.com/article/special-film-articles/prasanna-vithanage-srilankan-director-with-you-without-you-tamil-nationalists-protest-chennai-114062100037_2.html

 

 

Link to comment
Share on other sites

நீங்கள் இந்த திரைபடத்தை தடை செய்ய கூடாது என்று சொன்னால் உங்களை துரோகி என்று சொல்வார்கள்

Link to comment
Share on other sites

தோழர் திருமுருகன் காந்தி தனது முகநூலில் இது தொடர்பாக தற்போது வெளியிட்டிருக்கும் குறிப்பு

தேவையில்லாமல் ஒரு பிரச்சனையைக் கிளப்பி எல்லோருடைய நேரத்தினையும் வீணாக்கியதுதான் மிச்சம். எத்தனையோ பிரச்சனைகளைப் பற்றி எழுதாத பத்திரிக்கைகள் இந்தப் படத்தின் மீதான தடை , மிரட்டல் என எழுதி தீர்த்திருக்கின்றன. எந்த ஒரு பத்திரிக்கையும் எந்த இயக்கம் இதைச் செய்தது என்று எழுதவில்லை.
கார்ப்பரேட் சொல்வதை நம்பிக்கொண்டு எழுதுவது எந்தவகையில் பத்திரிக்கை நேர்மை என்று தெரியவில்லை. பல இயக்கங்கள் அவ்வாறு எதிர்க்கவில்லை என்று சொன்னபிறகும் இப்படி எழுதுவது அயோக்கியத்தனம்.

இதை வைத்துக்கொண்டு தமிழ்த்தேசியவாதிகள் மீது சேறு வீசி விளம்பரம் தேடும் இலக்கியவகையாறாக்கள் அமைதி காப்பது நன்றாக இருக்கும்.

முயற்சி எடுத்து உண்மையை வெளிக்கொணர்ந்த தோழர் Saravanan Kumaresanஅவருக்கு நன்றி . அவர் வெளியிட்டிருக்கும் செய்தி; 
:

With You Without You படத்தின் இயக்குனருடன் சற்று முன்பு தொலைப்பேயில் பேசினேன். படத்தை திரையிட்ட பிவிஆர் சினிமாஸ்க்கு "சில அடையாளம் தெரியாத" நபர்களிடம் இருந்து அழைப்புகள் வந்ததாகவும் அதனால் அவர்கள் படத்தின் திரையிடலை நிறுத்தியதாகவும் அவரிடம் தெரிவித்துள்ளனர். அந்த அடையாளம் தெரியாத நபர்கள் பற்றி பிவிஆர் சினிமாஸ் நிறுவனத்தினர் இதுவரை காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கவில்லை என்பது மிக முக்கியமானது. இதை இயக்குனரும் உறுதிப்படுத்தினார். மேலும் நாளை திரைத்துறையினருக்காக சிறப்பு திரையிடலை நிகழ்த்தப்போவதாக சொன்ன அவரிடம், தமிழ்நாட்டில் உள்ள தமிழ்தேசிய இயக்கங்கள்/கட்சிகளுக்கும் நீங்கள் அழைப்பு விடுக்கலாம் என்று கூறியபோது, அதை ஆமோதித்த அவர் அவர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக கூறினார்.
இது தான் பிரச்சனை. ஆனால் இப்பிரச்சனையில் "லீனா மணிமேகலை" போன்ற Anti Tamil National Fringe Elements தமிழ் தேசிய இயக்கங்கள் தான் படத்திற்கு தடை விதிக்க கோரினர் அவர்களால் தான் படம் தடை பட்டது என்பது போன்ற வதந்திகளை ஏன் பரப்புகின்றனர் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
Just Spoke to the director ( Prasanna Vithanage) of "With You Without You". According to him, as per the statement from PVR cinemas which screened the movie got some anynomous calls. So they stopped the screening. PVR cinemas has not yet logded any complaint so far about the anonymous calls. The director also confirmed that. I learned from the director that, the film crew is planning to arrange a special screening for the film faternity tomorrow at PVR Cinemas. He accepted my suggestion to invite the Tamil nationalists from Tamil nadu for special screening.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்து தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவாளர்களின் முகத்தில் கரியைப் பூசிவிடாமல் இந்த விடயத்தில் பொறுத்திருந்து பார்ப்பதே நல்லது.  கட்டுரையாசிரியர் வேறொரு படத்தின் கதையையே தந்திருக்கிறார்.  தடைசெய்யப்பட்ட படத்தைப் பற்றி எதுவும் தெரியாது. சிறப்புத் திரையிடலின் பின்னான தமிழ்த் தேசிய வாதிகளின் கருத்து என்ன என்பதை அறிந்த பின்பே இந்தப்படத்திற்கான ஆதரவைத் தமிழினம் வழங்கவேண்டும்.

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ்தேசியவாதிகளின் அறிவுபற்றி சொல்லதேவையில்லை.கடந்த கால அவர்களின் பல செயற்பாடுகள் அதற்கு சாட்சி .

 

சிலவேளை உந்த படத்தை பார்த்தால் தமிழ்நாட்டில்  இருந்தும்  நல்ல படங்கள் வர தொடங்கிவிடும் என்று பயப்பிடுகின்றார்களோ தெரியவில்லை .

 

நான் உந்த படத்தை கனடாவில் திரையிட்ட போது பார்த்தேன் .கதை சற்று மெதுவாக நகர்ந்தாலும் அருமையானதொரு அழகிய படைப்பு .

படம் முடிய பிரசன்ன விதனகே ஒரு சிறு கலந்துரையாடல் வைத்தார் அதில் அவர் சொன்ன பல கருத்துக்கள் அவரில் இன்னும் பல மடங்கு மதிப்பை கூட்டியது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அந்தப் படத்தை கனடாவில் பார்த்திருந்தால் ஏன் அந்தக் கதையை விட்டுவிட்டு வேறோரு படத்தின் கதையை விபரித்தீர்கள்.  இது வாசகர்களைக் குழப்பும் வேலையல்லவா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.